சிறு வணிகநிறுவனங்களுக்கான மேககணினியில் டேலி எனும்வசதி

       

தற்போது பெரும்பாலான வணிகநிறுவனங்கள் Tally accounting எனும் மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. தற்போதைய சூழ்நிலையில் சிறு வணிக நிறுவனங்களுக்கு இந்த Tally accounting எனும்பயன்பாடு மிகவும் அவசியமாகும். ஏனெனில்கணக்கியல் பதிவுகளை பயன்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் இது மிகவும் வசதியானதாக திகழ்கின்றது.
பெரிய நிறுவனமாக வளர்ச்சியை எதிர்நோக்குபவர்கள், சிறிய முதல் நடுத்தர வணிகநிறுவனங்கள் வரை இநத Tally கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மென்பொருளைகொண்டு வரி மேலாண்மை, கணக்கியல், கொள்முதல் மேலாண்மை, சரக்கு மேலாண்மை, விலைப்பட்டியல், விற்பனை மேலாண்மை, பணியாளர்களின் ஊதியம் போன்ற பலவற்றைக் கையாள முடியும்
மேலும் மேகக்கணியுடன் இணந்து செயல்படும் இதனுடைய கூடுதல் வசதிகளையும் பெறலாம்.அனைத்து வகையான வணிகநிறுவனங்களுக்கும் மேககணினி தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள தொழில்நுட்ப தீர்வாகும்.
இந்த தொழில்நுட்பம் வலைபின்னல், தரநிலை அணுகல், சேமிப்பகத்திற்கான தனித்துவமான தீர்வுகளுடன் வணிகநிறுவனங்களின் பணிகளை எளிதாக்கியுள்ளது. மேககணினி தொழில்நுட்பம் திறமையான மெய்நிகர் சூழலை உருவாக்கியுள்ளது, அதில் பயனாளாளர்கள் தங்கள் தரவை எந்த இடத்திலிருந்தும் எளிதாக அணுக முடியுமாறு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான தற்போதை சூழலில், மேககணினியில்டேலி( Tally on cloud) எனும்புதிய வசதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது இரண்டு இறுதி கருவிகளின் கலவையாகும். மென்பொருளோ வன்பொருளோ இல்லாமல் மேககணினி தொழில்நுட்பம் வழியாக மேககணினியில் உள்ள டேலி கணக்குப் பதிவியல் எனும் மென்பொருளைப் பயன்படுத்தி கொள்ளமுடியும். இதற்காக நல்ல இணைய இணைப்புடன் கூடிய எளிய சாதனம் மட்டுமே நமக்குபோதுமானதாகும்.
மேககணினியில் ஏன் Tally ERP?
பல்வேறு கணக்கியல் நோக்கங்களுக்காக TallyERP மிகபயனுள்ளதாக இருக்கின்றது. மேககணினியில்டேலி( Tally on cloud) ஆனது SAAS எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திகொள்கிறது, இது கணக்கியல் மென்பொருளையும் அதன் ஆதாரங்களையும் மேககணினியில் எளிதாக்குகிறது.
மேககணினியில்டேலி ( Tally on cloud) எனும் பதிப்பு ஆனது வணிகநிறுவனங்கள் தங்களுடைய எல்லா தரவையும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அணுக அனுமதிக்கிறது. Tally கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்த எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தலாம்,அதில் சேமித்துவைத்துள்ள தரவை அணுகலாம்.
மேககணினியில் டேலி( Tally on cloud) -அடிப்படையிலான பதிப்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறுவனங்களின் கணக்கு பதிவியலை பராமரிக்க சிறந்த சிக்கனமான வழியாகும்.
மேககணினியில் டேலி( Tally on cloud) பதிப்பின் முக்கிய நன்மைகள் அனைத்து வகையான வணிகநிறுவனங்களுக்கும் கிடைக்கின்றன. மேகக்கணியில்நாம் பெறும் பலன்கள் வணிகநிறுவனங்கள் தங்களுடைய அலுவலககணினியில் Tally ERP9 என்பதை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்வதை விட மிகச் சிறந்தவை. பொதுவாக, மேககணினி பதிப்பு நம்முடைய தரவை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கக்கூடிய சிறந்த பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதனைபயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறான நண்மைகளை அனுபவிக்கலாம்:

வலுவான பாதுகாப்பு
Tally ERP 9க்கான மேககணினியின் வலுவான தரவு பாதுகாப்பை வழங்குகிறது. ERP செய்யும் முக்கியமான பணி என்னவென்றால், வணிகத் தரவு தானியங்கி காப்புப் பிரதிகளைப் பெற முடியும். மேககணினியின் சமீபத்திய நச்சுயிர் தடுப்பு வசதியைக் கொண்டுள்ளது, இது முக்கியமாக மேககணினிக்கான ERP9யின் சிறந்த பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியது. மேககணினியில்டேலியின் தரவை RDP மூலம் அணுகலாம்.

எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எந்த சாதனத்திலிரு்நதும் அனுகுதல்
கணக்கியல், வணிக மேலாண்மைக்கு Tally சிறந்த தேர்வாகும். சிறு வணிகநிறுவனங்கள் Tallycloud hub எனும் மையத்திலிருந்து மேககணினியில் டேலியைப்( Tally on cloud) பயன்படுத்தி மேசைக்கணினி மட்டுமல்லாது பயனாளர் பயன்படுத்தி கொள்ளும் எந்தவொருச் சாதனத்திலிருந்தும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எளிதாக அணுகி தங்களுடைய கணக்குபதிவியல் பணிகளை செய்து முடித்தி கொள்ளலாம்.

செலவு குறைந்தது
மேககணினியில் டேலி( Tally on cloud) ஆனது Tally ERP 9 ஐ அதன் சேவையாளரிலிருந்து எடுத்து TallyCloud hub எனும் மையத்தில் வைக்கலாம். அந்த நேரத்தில், சேவையகத்தை பராமரிப்பதற்கான அனைத்து செலவுகளையும் புரவலர் ஏற்றுக்கொள்வார்.

தனிப்பயனாக்கக்கூடியது & அளவிடக்கூடியது
மேககணினி செயல்திட்டத்தில் உள்ளமைவுகள், தனிப்பயனாக்கங்களைச் செய்வதற்கான சுதந்திரம், மேககணினி கணக்கின் மூலம் நாம் பெறும் மிகவும் பயனுள்ள செயல்முறையாகும். ஒரு சிறு வணிகநிறுவனம், அளவிடக்கூடிய தேவைகள் கொண்டால், மேககணினியில் டேலியின்( Tally on cloud) மூலம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

நிகழ்வு நேர தரவு
தற்போதைய சூழலில் நிகழ்நேர ஒத்திசைக்கப்பட்ட தரவு அவசியம்; எனவே, சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கலாம் அறிக்கைகள் தயார் செய்யலாம். மேககணினியில் டேலி( Tally on cloud)ஆனது தரவு வணிக உற்பத்தித்திறனை அதிகரிக்கும். அதிக கிளைகளைக் கொண்ட வணிகநிறுவனங்கள், நிதித் தரவு, அறிக்கைகளுடன் இணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கிளைகளை வைத்திருக்க, மேககணினியில் டேலி( Tally on cloud)ஆனது சிறந்த தேர்வாகும்.

தரவின் நம்பகத்தன்மை
மேககணினியில் டேலி( Tally on cloud)சிறந்த சேவை, எந்த சந்தேகமும் இல்லாமல். எந்தவொரு வணிகத்திற்கும் மேககணினியில் உள்ள அனைத்து தரவு வகைகளின் பாதுகாப்பான, காப்புப்பிரதியை இது உறுதி செய்கிறது. கணினி இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகும் அல்லது மறுதொடக்கம் செய்த பின்னரும் தரவின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். Tally தரவுத்தளமானது தரமான தரவு ஒருமைப்பாட்டை சீரான இடைவெளியில் இயக்க முடியும்.

அடையக்கூடிய தன்மை
கணக்குப்பதிவியலின்மேலாண் வணிக மேலாண்மை ஆகிய இரண்டிற்கும் Tally ERP9 பயனுள்ளதாக இருக்கின்றது. மேககணினியில் உள்ள Tally ERP 9 பாரம்பரியமான அல்லது முன்மாதிரி மென்பொருளாகும். டேலியின் செயல்பாடுகளை மேகக்கணியில் உள்ள ERP9 மூலம் முழுமையாக மாற்றலாம். டேலி பயன்பாட்டை வெளியிட, RDP நெறிமுறையைப் பயன்படுத்தலாம். எந்த இடத்திலிருந்தும் கணக்கின் அணுகி பயன் பெறலாம்.

விணைமுறைத்திறனுடனான வணிக திட்டமிடல்
வணிகநிறுவனங்கள் பதிவுகளையும் தரவையும் பின்னர் நிர்வகிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் மேககணினியில் டேலி( Tally on cloud) எனும் மென்பொருள் உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும்போது வணிகநிறுவனங்கள் அவற்றை பகுப்பாய்வு செய்யலாம். அந்த நேரத்தில், வணிகநிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளையும் திட்டங்களையும் எடுக்கலாம். இந்த மென்பொருளின் மூலம், வணிகத் திட்டமிடல் எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் மாறும்.

பேரிடர் மீட்பு
பொதுவாக, தரவுகள் அனைத்தையும் மேககணினியில் சேமிக்க முடியும் என்பதால், பேரிடர் மீட்பு பணியை மேககணினியில் டேலி( Tally on cloud) மூலம் சமாளிக்க முடியும். எனவே எந்த நேரத்திலும் மேககணினியில் இருந்து வணிகத்தை மீட்டெடுக்கலாம். அலுவலக சொத்துக்களை சேதப்படுத்தும் எந்தவொரு இயற்கை பேரழிவின் போதும் இதைப் பயன்படுத்தலாம்.

தீவிர நெகிழ்வுத்தன்மை
பணியில் அதீத நெகிழ்வுத்தன்மை என்பது ஊழியர்கள், முதலாளிகள் இருவருக்கும் ஒரு வெற்றி-வெற்றி கூட்டனியாக திகழ்கின்றது. இதில் அலுவலகபணி நேரத்துக்குப் பிறகும் தரவை அணுகலாம், மேககணினியின்கணக்கின் மூலம் இது சாத்தியமாகும். ஓய்வில்லாமல் 24/7 என்ப்தன் அடிப்படையில் பணி அணுகுதலின் வாயிலாக அதிக பணிகளை செய்ய முடியும் பணியாளர்களை சிறந்த செயல்திறனுடன் பணி செய்ய அனுமதிக்கும். எந்தச் சாதனத்திலிருந்தும், இணைய இணப்பில்லாத டேலி அல்லது அலுவலககணினியின் டேலி மூலம் கூட இதில் எளிதாக பணி செய்யலாம்.

மேககணினியில் டேலி( Tally on cloud) கட்டணமற்ற மாதிரிசெயல்முறை
சேவை வழங்குநரிடமிருந்து மேககணினியின் செயல்முறையில் டேலியை கட்டணமின்ற பரிசோதனை பதிப்பைப் பயன்படுத்தலாம். அதன் முழு வசதிகளையும் புரிந்து கொள்ள இது நமக்குபேருதவியாக இருக்கும். அது நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைகூட நாம்சரிபார்த்திடலாம். சேவையைப் பற்றி மேலும் அறிய இந்த மாதிரி செயல்முறை நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அனைத்து Tally பதிப்புகளுக்கும் உதவி
இதில்நாம் தேர்வு செய்த அனைத்து வசதிகளையும் காணலாம், பின்னர் எந்த ஒரு மென்பொருளின் பதிப்புகளையும் பயன்படுத்தலாம். Tally GST மென்பொருள் இதில் உள்ளடங்கியதாகும். சேவை வழங்குநரிடமிருந்து உடனடி உதவியைப் பயன்படுத்தி, மேலும் தொடர்ந்திடுக. ஏதேனும் பெரிய சிக்கல்களைச் சமாளிப்பதற்கு உடனடி உதவி தேவைப்படும்போது அதற்கான ஆதரவுக் குழுவையும் தொடர்பு கொள்ளலாம்.
முடிவுரை
Tallycloudhub இலிருந்து Tally on cloudஇன் பல நன்மைகளும் அசாதாரண வசதிகளும் உள்ளன. .எந்தவொரு வணிகநிறுவனமும் எளிதாகப் பயன்படுத்த முடியும் எந்த அளவிலான வணிகநிறுவனங்களும் தயக்கமின்றி Tallyதொலைநிலை அணுகலுடன் செல்லலாம். ; Tally on Cloud தீர்வு மிகவும் செலவு குறைந்த , மிகவும் பாதுகாப்பானது. சிறு வணிகநிறுவனத்திற்கான மேககணினி கணக்கியல் மென்பொருளை வெவ்வேறு இடங்களில் இருந்து பயன்படுத்திகொள்ள உதவும் மிகச்சிறன்த பயன்பாடாகும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.