ஃபயர்பேஸ்-தொடர்- 12- ஃபயர் பேஸின் தொலைநிலை கட்டமைவு(Remote Config)

ஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவு என்பதொரு மேககணினி சேவையாகும் இது நம்முடைய பயன்பாடுகளை அவ்வப்போதுசமீபத்திய மேம்படுத்துதல்களை பதிவிறக்கம் செய்து நிகழ்நிலை படுத்துதவதற்கு பதிலாகஅதன் தோற்றத்தையும் நடத்தையையும் (behavior) மாற்றியமைத்து கொள்கின்றது இதனுடையதொலைநிலை கட்டமைவு என்ற வசதியை பயன்படுத்தி பயன்பாட்டில் இயல்புநிலை மதிப்பாக(in-app default) உருவாக்கி-னால் அது நம்முடைய பயன்பாட்டின் தோற்றத்தையும் நடத்தையையும் கட்டுபடுத்திடு-கின்றது பின்னர் அனைத்து பயனாளர்களுக்காக அல்லது பயன்படுத்துபவரின் அடிப்படை-யிலான தொகுப்பிற்காக பயன்பாட்டில் இயல்புநிலை மதிப்பாக மேலெழுதிவிடுவதற்கு நாம் ஒரு ஃபயர்பேஸ் முகப்புத்திரையை அல்லதுதொலைநிலை கட்டமைவின்REST API யை மட்டும் பயன்படுத்திகொள்ளலாம் நம்முடைய பயன்பாட்டின் கட்டுபாடுகளானவை நிகழ்நிலை படுத்துதலை செயல்படுத்திடும்போதே குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சரிபார்த்து கொள்ளமுடியும் மேலும் அவ்வாறு செயல்படுத்துவதால் அதனுடைய செயல்திறன் மாறுதல் எதுவும் அதிகஅளவு ஆகாதவாறு சரிசெய்து கொள்ளும். இதனுடைய தொலைநிலை கட்டமைவை செயல்படுத்திடுவதற்குமுன் நடைமுறையில் உள்ள ஒரு சிறிய எடுத்துகாட்டினை பார்த்திடுவோம்
இன்ஸ்டாகிராம் எனும் சமுதாய பயன்பாட்டின் APIயை பயன்படுத்தி ஒரு சில பயனாளி-களின் தரவுகளை பெற்று திரையில்காண்பிப்பதற்காக நாம் ஒரு பயன்பாட்டினை வைத்துள்ளதாக கொள்க இதனுடைய திறன் நன்றாக அமைந்துள்ளதால் இந்த பயன்-பாட்டினை தினமும் பயன்படுத்துபவர்களின் எண்ணக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது நேர்மறையான ஆய்வுகளும் ஏராளமான அளவில் வந்து கொண்டேயுள்ளன ஆனால் ஒருநாள்மட்டும் தங்களுடைய பயன்பாட்டில் மாறுதல்கள் செய்து கொள்ளவிருப்பதால் தயவுசெய்து நம்முடையASAP ஐயும் அதற்கேற்ப நிகழ்நிலை படுத்தி கொள்க என இன்ஸ்டாகிராமிலிருந்து ஒரு மின்னஞ்சல் அறிவிப்புவருகின்றது அவ்வாறான மின்னஞ்சல் குறிப்பிடும் காலக்கெடுவிற்குள் நம்முடைய குறிமுறைவரிகளை மாறுதல்கள் செய்திட-வேண்டும் அதற்காக ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவை செயல்படச்செய்து இன்ஸ்டாகிராம்API யை அதில் வைத்து ஒப்புதலளிக்கப்பட்ட APK ஐஒன்றை உருவாக்கி பயனாளர்கள் தேவையெனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கூகுள் ப்ளேஸ்டோரில் மேலேற்றிவிட்டோம்.அதனைதொடர்ந்து நாமும்அத்துடன் பிரச்சினை முடிந்ததுஅனைத்தும் சரியாக உள்ளது நம்முடைய பயன்பாடும் நன்றாக செயல்படுகின்றது என நம்பிக்கையுடன் வேறு பணியை செய்து கொண்டிருப்போம் .இந்நிலையில் நாம்மாறுதல் செய்தவாறு நம்முடைய பயன்பாடு செயல்படவில்லை நம்முடைய பயன்பாடே சரியில்லை என்ற பயனாளி ஒருவரின் எதிர்மறைகருத்துடன் கூகுள்ப்ளேஸ்டோரிலிருந்து அறிவிப்பு ஒன்று வந்து சேருகின்றது நாமும் தலைமுதல் கால்வரை அனைத்தையும் மிகச்சரியாக இருக்கின்றதா சரியாக செயல்படுகின்றதா வென மிகத்துல்லியமாக சரிபார்த்துதான் கூகுள்ப்ளேஸ்டோருக்கு பதிவேற்றம் செய்தோம் ஆயினும் அதன்பின்னர் எவ்வாறு அந்த பயனாளர் குறைகூறமுடியும் என நமக்கு பெரிய ஆச்சரியமும் அதனை தொடர்ந்த இந்த பின்னடைவு ஏற்பட்டுவிட்டதை நம்மால் ஏற்றுகொள்ளவும் முடியவில்லை சரி அந்த பயனாளருக்கு எவ்வாறு இந்த குறைபாடு ஏற்பட்டது எனதீர ஆய்வுசெய்திடும்போது அந்த பயனாளர் நம்முடைய பயன்பாட்டின் பழைய பதிப்பை பயன்படுத்தி வந்ததும் அதில் இன்ஸ்டாகிராமின் API யை பயன்படுத்தி வந்ததும் தெரியவருகின்றது அதனால் இன்ஸ்டாகிராமின் புதிய API இல் நம்முடைய பழைய பயன்பாடு செயல்படாது என தெரிய-வருகின்றது இந்நிலையில் இவ்வாறு ஒவ்வொரு பயனாளரையும் இன்ஸ்டாகிராமின் புதிய API இல் செயல்படுவதற்கேற்ப நாம் நிகழ்நிலைபடுத்திமாறுதல்செய்துகூகுள் ப்ளேஸ்டோரில் பதிவேற்றம் செய்த புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க என எவ்வாறு அறிவிப்பது அதனை பயனாளர்களும் எவ்வாறு பின்பற்றி செயல்படுத்தி பயன்பெறுவது என தலையில் கைவைத்து கொண்டு நாள்முழுவதும் உட்கார்ந்துவிடுவோம் நிற்க.
ஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவுஎனும் வாய்ப்பு நமக்கு கைகொடுக்க தயாராக இருக்கும்போது நாம் ஏன் அவ்வாறு கவலைப்படுவேண்டும் அதுமட்டுமல்லாது மற்ற பல்வேறு வசதிகளையும் இது நமக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது என்ற தகவலையும் மனதில் கொண்டு தொடர்க
இதற்காக நாம்ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்குள் இந்த ஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவுஎனும் வாய்ப்பினை செயல்படுத்திடவேண்டும் இந்த பலகத்தில் சமீபத்திய பதிப்பின் குறிமுறைவரிகளை சேமித்திடவேண்டும் நடப்பு செயலைவிட கூடுதலான செயலின் பயன்பாட்டினைஇந்த நிகழ்நிலைபடுத்திய பயன்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பன போன்ற செயல்களனைத்தும் சரியாக இருக்கின்றதாவென இறுதியாக நாம் சரிபார்த்திடவேண்டும்
இதற்கானபுதிய செயல்திட்டத்தினை ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் உருவாக்குவதற்காக
ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவை செயல்படச்செய்து திரையில் தோன்றச்செய்திடுக அடுத்து Start a new Projectஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதற்கு Firebase Remote ConfigSK என்றவாறு ஒரு பெயரிடுக androidsk.comஎன்றவாறு நிறுவனத்தின் டோமைன் பெயரை உள்ளீடு செய்திடுக அவ்வாறே நிறுவனத்தின் இடஅமைவை உள்ளீடு செய்திடுக மிகுதி இயல்புநிலை மதிப்புகளை ஏற்று இந்த வழிகாட்டித்திரையை சேமித்து முடிவிற்கு கொண்டுவருக இவ்வாறு சேமித்த செயல்திட்டத்தின் பெயரானது com.androidsk.firebaseRemoteConfigSK என்றவாறு இருப்பதாக கொள்க

1
ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் மேலும் தொடர்வதற்கு முன்ஃபயர்பேஸ் செயல்திட்டத்தினை கட்டமைவுசெய்து கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் செயல்படுத்திடவேண்டும்
அதற்காக ஃபயர்பேஸின் முகப்புத்திரையை தோன்றிடச்செய்க அதில் firebaseRemoteConfigSK என்றவாறான பெயருடன் ஒரு புதிய செயல்திட்டத்தினை உருவாக்கிடுக உடன்ஏற்கனவே ஒரு செயல்திட்டம் முடிவுபெறாமல் இருப்பதாக நமக்கு அறிவிப்பு ஒன்று வந்து நம்மை எச்சரிக்கும் இருந்தாலும் TOSஎனும் சரிபார்ப்பு பெட்டியை சரிபார்த்து கொண்டு Create Project என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்துAdd Firebase to your Android App என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து இந்த செயல்திட்டத்தின் பெயராக com.androidsk.firebaseRemoteConfigSK என்றவாறு உள்ளீடுசெய்து கொள்க பின்னர் இந்த பயன்பாட்டின் சுருக்கு பெயராக Remote Config App என்றவாறு உள்ளீடுசெய்து கொள்க அடுத்து Register appஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து SHA-1 என்பதை காலியாக விட்டிடுக தற்போது இந்த விவரம் தேவையில்லை பின்னர்google-service.json எனும் கோப்பினை நேரடியாக நம்முடைய செயல்திட்டத்திற்குள் பதிவிறக்கம் செய்து கொண்டு Nextஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் வழிகாட்டியவாறு dependenciesஎன்பதை நகலெடுத்து ஒட்டிடுக பிறகு இந்த செயல்திட்டத்தினை ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவிற்குள் கொண்டுவந்து சேர்ப்பதற்காக Syncஎன்பதை தெரிவுசெய்து கொண்டு Nextஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக முடிவாக நம்முடைய பயன்பாட்டினை முன்மாதிரி சாதனத்தில்அல்லது உண்மையான கைபேசி சாதனத்தில் செயல்படச்செய்திடுக
குறிப்பு ஃபயர்பேஸானது நாம் புதியதாக சேர்த்த பயன்பாடு சரியாக செயல்படுகின்றதா-வென சரிபார்ப்பதற்காக இந்த படிமுறை தேவையாகும் இந்த படிமுறையை தவிர்த்து அடுத்த படிமுறைக்கு செல்லலாம் இருந்தபோதிலும் இந்தபடிமுறையை தவிர்த்திட-வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகின்றது
இந்நிலையில்நம்முடைய பயன்பாட்டினை நிறுவுகை செய்து இயக்கியபிறகு நம்முடைய ஃபயர்பேஸின் முகப்புத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க
ஃபயர் பேஸின்தொலைநிலை கட்டமைவை ஆண்ட்ராய்டில் செயல்படுத்துவதற்காக
முதலில் நம்முடைய ஆண்ட்ராய்டு செயல்திட்டத்தில் Firebase Remote Config dependencyஐ சேர்ப்பதற்காகdependenciesஎனும் பகுதியின் கீழ் build.gradle(app)என்பதில் பின்வரும் குறிமுறைவரிகளை நகலெடுத்து ஒட்டிடுக
implementation ‘com.google.firebase:firebase-config:16.0.1’
எச்சரிக்கை https://firebase.google.com/docs/remote-config/use-config-android எனும் முகவரியில் சமீபத்திய குறிமுறைவரிகளை நகலெடுத்துவந்து ஒட்டிக்கொள்க
தொடர்ந்து ஃபயர்பேஸின்முகப்புத் திரையில் நம்முடைய செயல்திட்டத்தினை திறந்து கொள்கஅதன் இடதுபுற பலகத்தின்Grow என்ற பகுதியின் கீழ் Remote Configஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
2
உடன் இந்த பலகமானது Add your first Parameterஎனும் பொத்தானுடன் தோன்றுவதை காணலாம் அதனை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் விரியும் திரையில்Parameter Key என்பதற்குlatest_app_version என்றும் Default value எனும்இயல்புநிலை மதிப்பிற்கு nullஎன்றும் உள்ளீடுசெய்து கொண்டு மேலே வலது-புறத்தில் உள்ள Add value for Conditionஎனும்பெயரிலுள்ள கீழிறங்கு பட்டியை விரியச்-செய்திடுக அதில் Define New Conditionஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

3
உடன்விரியும் உரையாடல் பெட்டியில் நிபந்தனையின் பெயராக Remote Config App Onlyஎன்றவாறு உள்ளீடுசெய்து கொள்க தொடர்ந்த வண்ணங்கள் போன்றவைகளை நாம் விரும்பியவாறு தெரிவுசெய்து கொள்க பின்னர் கீழிறங்கு பட்டியின் பயன்பாட்டினை தெரிவுசெய்து கொண்டு அதன் வலதுபுறம் அதே கட்டுகளின்பெயரினை தெரிவுசெய்து கொண்டு Create.என்ற பொத்தானை தெரிவுசய்து சொடுக்குக இவ்வாறுநிபந்தனையை உருவாக்கிய பின்னர் Value for Remote Config AppOnly எனும் தலைப்புடன் கோப்பு ஒன்றினை காணலாம் அதிலுள்ள புலத்திற்கு 2 என உள்ளீடுசெய்து கொண்டுAdd Parameterஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக Publish Changesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

4
இங்கு Parameter Keyஎன்பது பயன்பாட்டின் மதிப்பை சுட்டிகாட்டுவதாகும் அவ்வாறே default valueஎன்பது நிபந்தனை ஏதும் இல்லாதபோதும் குறிப்பிட்ட பண்பு திறவுகோளின்மதிப்பாகும் மேலும்Value for Remote Config App என்பது நிபந்தனை பூர்த்தியாவதற்காகஅதனுடைய மதிப்பினை அனுப்புவதாகும் .திருப்பபடும் மற்ற எந்தவொரு பயன்பாட்டின் மதிப்பு ஒன்றுமில்லாதபோது latest_app_versionஎன்றும் மதிப்பு 2 என திருப்பும்போது com.androidsk.firebaseRemoteConfigSK என்றும் கொள்கின்றது
ஆண்ட்ராய்டின் Firebase Remote Config இலிருந்து தரவுகளை பெறுவதற்காக
இந்த Firebase Remote Config இற்கான குறிமுறைவரிகளை எழுவதற்குமுன்இது எவ்வாறு செயல்படுகின்றது என்றவிளக்கத்தினை பார்த்திடுவோம்
Remote Config Singleton Objectஎன்பது தேவையாகும் இது in-appஎன்பதன் இயல்புநிலை மதிப்பை சேமித்து வைக்கின்றதுஅது இந்த சேவையிலிருந்து நிகழ்நிலைபடுத்தப்பட்ட அளவுரு மதிப்புகளை பெறுகின்றது தொடர்ந்து அவ்வாறு பெறும் மதிப்புகளை நம்முடைய பயன்பாட்டில் பயன்படுத்த தயாராகஇருக்குமாறு செய்கின்றது அதன்பிறகு Remote Config objectஇல் in-appஇன்இயல்புநிலை மதிப்பை அமைத்திடவேண்டும் ஏனெனில் Remote Config சேவையிலிருந்து மதிப்பினை பெறுவதற்கு முன் நம்முடைய பயன்பாடானது எதிர்பார்த்தவாறு செயல்படவேண்டும் இதற்காக ஒரு இயல்புநிலை Map (https://developer.android.com/reference/java/util/Map ) அல்லதுXML வளங்களின் கோப்புகளிலிருந்து இதனை உருவாக்குவதன் வாயிலாக செயற்படுத்திட முடியும்
நம்முடைய பயன்பாட்டில் பயன்படுத்தி கொள்வதற்காகஅளவுரு மதிப்புகளை பெறுக இதனை ஃபயர்பேஸின் சேவையாளரிடமிருந்து மீளப்பெறமுடியும் அதன்பின் அதனை நம்முடையபயன்பாட்டில் பயன்படுத்தி கொள்ளலாம் இதில் ஏதேனும் தவறாக இருந்தால் இருக்கவே யிருக்கின்றது இயல்புநிலை மதிப்பு அது ஆபத்தில் கைகொடுக்கும் அதனால் கவலைப்படாமல் அடுத்த செயலை தொடர்ந்து செயல்படுத்திடுக தொடர்ந்து ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவில் நம்முடைய குறிமுறைவரிகளை எழுதத்துவங்கிடுவோமா

அபகரிப்போரிடமிருந்து நம்முடையமுகநூல்(Facebook)கணக்கினை பாதுகாப்பதெவ்வாறு

1. முதலாவதாகநம்மில் பெரும்பாலானோர் முகநூல் கணக்கினை வைத்திருக்கின்றோம் அல்லவா தொடர்ந்து அதனை பாதுகாப்பாக வைத்திட அதற்கான கடவுச்சொற்களை மட்டும் சிறிதுவித்தியாசமாக Go to the RailwaySatation by 1 o’clock! என்றவாறான ஒரு சொற்றொடர்களின் முதலெழுத்தினை பயன்படுத்தி Gttrsb1o! என்றவாறு வைத்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும் அல்லது password manager என்ற பயன்பாட்டினை பயன்படுத்தி வித்தியாசமாக அமைத்து கொள்க
2.இரண்டாவதாக நம்முடை மின்னஞ்சல் முகவரியை பயனாளர் பெயராக வைத்திருப்போம் அதனை மறைத்திடுவதற்காக நம்மை பற்றிய விவரங்களை வைத்திருக்கும் About எனும் பக்கத்தினை திறந்து கொள்க அதில் இடதுபுறமுள்ள Contact and basic info என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் நம்முடை மின்னஞ்சல் முகவரிமீது சுட்டியை மேலூர்தல் செய்திடுக அப்போது Edit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து change access to “only me,” என்பதை தெரிவுசெய்து கொண்டு சேமித்து வெளியேறுக
3.மூன்றாவதாக இதன்(Facebook) திரையின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் முக்கோன உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Apps and Websites என்பதை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் மற்றவர்களால் அனுகக்கூடிய நீக்கம் செய்யவிரும்பும்அனைத்து Apps களையும் தெரிவுசெய்து கொண்டு மேலேவலதுபுற மூலையிலுள்ள Removeஎனும் நீலநிற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.நான்காவதாக Get alerts about unrecognized logins.என்ற வாய்ப்பினுடைய தேர்வுசெய்-பெட்டியை தெரிவுசெய்து கொள்க
5.ஐந்தாவதாக இதனுடைய முகப்புத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Privacy => Account Settings => Security and login=> என்றவாறுதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Use Two-factor Authentication என்ற தாவியின் திரையை தோன்றிட செய்திடுக அதி்ல் Use Two-factor Authorization என்ற வாய்ப்பிற்கருகிலுள்ள Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் அந்த திரையில் கூறும் அறிவுரையை பின்பற்றி அமைத்திடுக
6.ஆறாவதாக முகநூல் வாயிலாாக வரும் மின்னஞ்சல் நம்பகமானதா பாதிப்பெதுவும் ஏற்படாதா என சரிபார்த்திடுவதற்காக இதனுடைய முகப்புத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Settings => Security and login=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் திரையில் Encrypted notification emails என்ற வாய்ப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் OpenPGP Public Key எனச்சேர்த்து கொள்கஇதன்பின்னர் மின்னஞ்சல்களை மறையாக்கம் செய்து அனுப்பிடுக
7.ஏழாவதாக நம்முடைய timeline or newsfeed வெளிப்புற இணைப்பு வரும்போது அதனை நம்பகமான இணைப்பா என உறுதிசெய்து கொண்டு இணைப்பினைபின்தொடருக

விண்டோ10இல்Disk Write Cachingஎனும் வசதியைஇயலுமை செய்தல்அல்லதுசெயல்படாமல் முடக்குதல்

விண்டோ 10 இயக்கமுறைமையில் Disk Write Caching எனும் வசதியானது பயன்பாடுகளும் அமைவுகளும் நல்ல திறனுடன் செயல்பட உதவுகின்றது ஆயினும் ஒருசில நேரங்களில் Delayed write failed அல்லது Windows write delay failed எனக்கூறி நம்மை பரிதவிக்கவிடுகின்றது இங்கு Disk Write Caching என்றால் என்னஎன்ற கேள்வி நம்மனைவரின் மனதில் எழும் நிற்க இந்த வசதி நாம் இடும் கட்டளைகளை நினைவகத்திற்கு கொண்டு சென்று செயல்-படுத்திடுவதற்கு பதிலாக தற்காலிக நினைவகமான ரேம் நினைவகத்தில் செயல்படச்-செய்து நம்முடைய தேவையை உடனுக்குடன் நிறைவேற்றுகின்றதுஅதன்பின்னர் இந்த செயலை அவ்வப்போது நிரந்தர நினைவகத்திற்கு கொண்டு சென்று சேர்த்திடுகின்றது அதனால் நாம் இடும் கட்டளையை நினைவகத்திற்கு சென்று செயல்படுத்திடும் வரை நாம் காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக விரைவாக செயல்படுத்திடுவதற்கு இந்த வசதி பயன்படுகின்றது ஆயினும் இவ்வாறான செயல்நடைபெறும்போது திடீரென மின்சார விநியோகம் தடைபடுதல் இயக்கமுறைமை செயல்படாது நின்றுபோதல் குறிப்பிட்ட கருவி செயல்படாது நின்றுபோதல் என்பன போன்ற பிரச்சினைகள் எழும்போது எந்தவொரு செயலையும் திரும்பவும் துவக்கத்திலிருந்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது இவ்வாறான நிலையில் கடைசியாக எந்தெந்தசெயல்கள் எந்தெந்தவிடங்களில்நின்றனவோ அந்தந்தஇடங்களிலிருந்து மீண்டும் செயல்படுமாறு கட்டமைவு செய்துகொள்வது நல்லது மேலும் இந்த Disk Write Caching என்றவசதியை எந்தெந்த பயன்பாட்டிற்கு இயலுமை செய்திடலாம் எதெதற்கு முடக்கிவிடலாம் என அமைத்து கொள்வது நல்லது. இதற்காக Start எனும் பட்டிலை தோன்றிட செய்திடுக அல்லது Power User எனும் பட்டியலை தோன்றிட செய்திடுக அல்லது Win + X ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்துக பின்னர் விரியும் பட்டியில் Device Manager எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் அதனை விரிவுபடுத்தி Disk Drives என்பதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Properties என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும்Properties எனும் உரையாடல்பெட்டியில் Policies எனும் தாவிபொத்தானின் திரைக்கு செல்க அதில் Better performance என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு Enable write caching on the device எனும் வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை இயலுமை செய்யவேண்டுமெனில் தெரிவுசெய்திட்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக முடக்க-வேண்டுமெனில் Quick removal என்ற வானொலி பொத்தானை தெரிவு செய்து கொண்டு Enable write caching on the device எனும் வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தேர்வுசெய்யாது விட்டிட்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் (IOT Gate) என்றால் என்ன

உள்ளூர் உணர்விகள் ,தொலைநிலை பயனாளர்கள் ஆகியோர்களுடன் ஒரு பொருத்தமான மற்ற செயலிகளும் சேர்ந்த தகவல்தொடர்புகளை கையாளுகின்ற பொருட்களுக்கான இணையத்தின் எதிரொளிப்பு உறுப்பினையே பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் என அழைக்கப்படும் பொருட்களுக்கான இணையநுழைவுவாயிலின் எதிரொளிப்பானது பல்வேறு உள்ளுறுப்புகளை அல்லது அடுக்குகளை கொண்டதாகும் இதனுடைய கீழடுக்கானது உணர்விகளும் சாதனங்களும் சேர்ந்து மாறுதலான பாதிப்பையும் அளவீடு செய்திடபயன்படுகின்றது இந்த IoT நுழைவுவாயிலானது உணர்விகளுக்கும் சாதனங்களுக்கும் மேககணினிகளுக்கும் (வலைபின்னல் நிரந்தரமான சேமிப்பக அமைவு ஆகியவற்றின் வாயிலாக ) இடையே ஒரு பாதுகாப்பான இடைமுகமாக செயல்படுகின்றது இதனுடைய மேலடுக்கானது பயன்பாடுகளும் சேர்ந்த நிரந்தர தரவுகளுடனும் சேகரிக்கப்பட்ட ஆய்வுகளுடனும் பொருட்களுக்கான இணையநுழைவுவாயிலின் எதிரொலிப்பு வெளிப்படுத்திடும் மதிப்புகளுடனும் ஒட்டுமொத்தமாக கையாளுவதையும் நிருவகிப்பதையும் செயற்படுத்திடுகின்றது

8.1
இந்த எதிரொளிப்பு நுழைவு வாயிலானது ஒற்றையான உறுப்புகளுக்கு தேவையற்ற-தாகும் ஆயினும் ஒரு வலைபின்னலான நுழைவுவாயிலானது நம்முடைய அனைத்து சாதனங்களை இணைத்திடவும் சாதனங்களின் செயலை அளவிடுவதற்கும் தேவையாகும் உணர்விகளுக்கும் சாதனங்களுக்குமான பாதுகாப்பு, நிருவகிப்பு போன்றவைகளை செயல்படுத்திடும்போது இந்த எதிரொளிப்பு நுழைவு வாயிலானது மிகமுக்கியமாக தேவையாகும் உணர்விகள் ,சாதனங்கள் ,பயன்பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே அவைகளின் மதிப்பையும் அனுகுதலையும் உருவாக்குவதற்கான ஒரு இடைமுகமாக இந்த பொருட்காளுக்கான இணைய நழைவாயில் செயல்படுகின்றது ஒருகுறிப்பிட்ட தேவைக்கான பயன்பாடுகள்தொலைநிலை பயனாளர்கள் சாதனங்கள் ஆகியவற்றிலிருந்து தரவுகளை பாதுகாப்பாக கடத்துவதற்கும் திறனுடன் சேகரிப்பதற்கும் இந்த நுழைவு வாயில் அனுமதிக்கின்றது இதுவே ஒரு நுழைவுவாயிலின் பொதுவான திறனாகும் ஆயினும் ஒரேயொரு காட்சியில் மட்டும் நாம் இதனுடைய முக்கியத்துவத்தை கண்டுபிடித்திடமுடியும்
நம்முடைய பொருட்களுக்கான இணைய பயன்பாடுகளுக்கான மேம்பட்டதொரு தொகுப்பு சேவைகளை வெளிப்படுத்துவதற்காக ஒரு இயக்கமுறைமையும் ஒரு வன்பொருளும் தளமும் சேர்ந்திருக்கவேண்டும் இதுபொருட்களுக்கான இணைய சந்தையின் பயன்களை வழங்கிடுகின்றது மேலும்தொகுப்பான சாதனங்களின்மீதான பார்வையும் கூடுதலான திறன்களையும் இந்த பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் உருவாக்குகின்றது உதாரணமாக இன்டெலின் பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்ப தளமானது இந்ததிறன்களுடன் மற்றபல்வேறு திறன்களையும் கொண்டதாகும்

8.2
இந்த அடுக்குகளில் இயக்கமுறைமைக்கு மேலேயுள்ள அடுக்கானது பொருட்களுக்கான இணைய பயன்பாட்டிற்காக நுழைவுவாயிலின் திறவுகோள் வசதிகளை வெளிப்படுத்துகின்ற ஒரு சேவையாளரின் பின்வருகின்ற பணிகளை செயல்படுத்திடுகின்றது
3G cellular, Bluetooth®, USB, serial, ZigBee*, Wi-Fi ஆகிய பல்வேறு இடைமுகங்களையும் VPNs, MQTT ஆகிய ஒழுங்குமுறைகளுடனும் தேவையான தொடர்புகளையும் வழங்குகின்றது
சாதனங்களை அபகரிப்பிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாது தொலைநிலையிலுள்ள சாதனங்களுக்கிடையேயான தரவுகளின் பாதுகாப்பான போக்குவரத்திற்கான பாதுகாப்பு வசதிகளை வழங்குகின்றது
நிருவகித்தல் கட்டமைவுசெய்தல் firmwareஐ நிகழ்நிலைபடுத்துதல் ஆகிய வற்றை நிருவகிக்கும் வசதியை இது வழங்குகின்றது
இவைகளே ஒரு பழையஉள்பொதிந்த தளத்தினைவிட பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலின் கூடுதலான மிகமுக்கியவசதிகளாகும் அதைவிட ஒழுங்குமுறைகள், இடைமுகங்கள், firmware வசதிகள் ஆகியவற்றின் பாதுகாப்பும் நிருவகித்தலும் இணைந்து சாதனங்களுக்கான புதிய இனத்தினை உருவாக்குகின்றது அதுவே பொருட்களுக்கான இணைய பயன்பாடுகளின் உகந்த செயலாகும்
இன்டெலின் பொருட்களுக்கான இணையநுழைவுவாயில் தொழில்நுட்பம் ஆதரிக்கின்ற இயக்குமுறைமைக்கும் ஒரு பாதுகாப்பான நம்பகமான தளமாக ஒருங்கிணைந்தஇணைப்பு பாதுகாப்பு நிருவகித்தல் ஆகிய வசதிகளை கொண்ட விண்டோரிவர், லினக்ஸ் இயக்கமுறைகளுக்கும் இடையேயான மற்றொருமுக்கியவேறுபாடாகும்
இறுதியாக மேலடுக்கு நம்முடைய பொருட்களுக்கான இணையபயன்பாடாகும் இது நம்முடைய மதிப்பினை கூட்டிடும் உறுப்பாகும் இதுவே நம்மையும் நம்முடைய சந்தையையும் வேறுபடுத்தி காணபிக்கின்றது இந்த பயன்பாடானது இந்த சூழலின் கட்டுப்பாட்டு காட்சிகள் உணர்விகள் உள்ளூர் சாதனங்கள் ஆகியவற்றிடமிருந்து தரவுகளை இந்த பயன்பாடுகள் சேகரிக்கின்றது
தற்போது இந்த பொருட்களுக்கான இணைய நுழைவு வாயில் என்றால் என்ன என்று தெளிவடைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் தொடர்ந்து ஒரு பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலின்மூலம் நமக்கும் நம்முடைய பயன்பாட்டிற்கும் கிடைக்கும் பல்வேறுபயன்கள் வசதிகள் ஆகியவை பின்வருமாறு
எடுத்துகாட்டு.1.தானியங்கி போக்குவரத்தினை நிருவகித்திடும் பயன்பாடு இந்த சூழலில் ஒரு பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலினை மூன்று முக்கியவசதிகளை வழங்குவதற்கு பயன்படுத்தி கொள்ளப்போகின்றோம் 1.முதலாவதாக வலைபின்னல் கட்டுபாட்டாளர் அல்லது ஆய்வுசெய்தல் போன்ற வாகனங்களின் உள்ளக வலைபின்னலை அனுகிடுதல் 2.இரண்டாவதாக போக்குவரத்து வாகனங்கள் பற்றிய velocity, engine RPMஆகியவற்றை ஒருவரிசையான இடைமுகத்தை பயன்படுத்தி உலகளாவியஅமைவிட சாதனங்களை அனுகுதல் ஆகிய விவரங்களை வழங்குதல் இந்த இரண்டாவது செயலானது வெளிப்புற பயன்பாட்டிலிருந்து கோரிக்கைக்கு பதிலிறுத்து தரவுகளை குறைத்தலுக்கு அல்லது செயல்படுவதற்கு கணக்கிடுவதற்கான ஒரு தளமாகும் 3.இறுதியாக 2ஜி அல்லது 3ஜி அல்லது 4ஜி ஆகிய சேவைகளின் வாயிலாக தொலைநிலை பகுதிகளுடன் தகவல்தொடர்புகளை வழங்குதல் ஆகும் இந்த மூன்று திறன்களையும் கொண்டஇந்த போக்குவரத்துநிருவகித்தல் பயன்பாட்டினை உருவாக்கிடுவதற்குபொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் வழங்குகின்றது
எடுத்துகாட்டு.2.அடுத்து விவசாய பயன்பாடுகளுக்கும் இந்த பொருட்களுக்கான இணைய நுழைவுவாயிலானது இந்த மூன்று தொகுப்பான வசதிகளை வழங்குகின்றது ZigBee என்பதை பயன்படுத்தி நம்முடைய நிலத்தை சுற்றி பல்வேறு உணர்விகளை அமைத்து அவைகளை அனுகுவதன் வாயிலாக அவைகளிடமிருந்து நிலத்திற்கு தேவையான மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றின் பயன்பாடு பற்றிய தகவல்களை சேகரித்திட முதல் வசதி பயன்படுகின்றது இவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இரண்டாவது வசதி கணக்கிடுகின்றது அருகலை(WiFI)இன்மூலம் பயன்பாட்டிற்கும் சாதனங்களுக்கும் இடையே தகவல்களை கடத்துதலின் வாயிலாகதட்வெப்ப சூழலிற்குஏற்ப போதுமான அளவு மின்சாரம் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்வதற்கு பயன்படுகினறது விவசாயத்தில் பொருட்களுக்கான இணையத்தில் இந்த பொருட்களுக்கான இணைய நுழைவு வாயிலானது போதுமான திறன்மிக்க கட்டுபாட்டினை ஒவ்வொரு செயலிற்கும் வழங்குகின்றது
இவ்விரு எடுத்துகாட்டுகளிலும் இன்டெலின் பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்பமானது போதுமானஇடைமுகத்தினையும் ஒழுங்குமுறைகளையும் பயன்பாட்டின் தேவைகளை ஈடுசெய்வதற்கேற்ப வழங்குகின்றது ஆயினும் இதுமட்டுமல்லாது இந்த இன்டெலின்பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்பமானது கூடுதலாக பாதுகாப்பானதும் நிருவகிப்பதுமான வசதிகளை வழங்குகின்றது
இந்த இன்டெல் பொருட்களுக்கான இணைய நுழைவுவாயில் தொழில்நுட்பமானது நம்முடைய பொருட்களுக்கான இணைய பயன்பாட்டினைஒரு பாதுகாப்பான நிருவகித்தல் வழியில் எளிதாக பின்தொடர்ந்து இயக்குவதற்கான சிறந்த தீர்வாக அமைகின்றது

meteor ஒரு அறிமுகம்

meteor என்பது ஒரு நவீன இணைய பயன்பாடுகளையும் கைபேசி பயன்பாடுகளையும் உருவாக்குவதற்கான முழுமையான ஒரு ஜாவாஸ்கிரிப்ட் தளமாகும் பொதுவான ஜாவாஸ்கிரிப்ட், Node.js , கட்டமைக்கப்பட்ட கருவி, வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய பதிலிறு பயன்பாடுகள் ஆகியவை சேர்ந்த தொகுப்பானமுக்கிய சேவைகளை இது வழங்குகின்றது
அதைவிடஇணைய பயன்பாடுகளையும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ஆகியவை செயல்படுகின்ற கைபேசி பயன்பாடுகளையும உருவாக்குவதற்கான தளமாக இது விளங்குகின்றது
இதில் உருவாக்கிடும் குறிமுறைவரிகளை பயன்படுத்திஅனைத்து இணைய உலாவிகளிலும் கைபேசிசாதனங்களிலும் பயன்படுத்தி கொள்ளமுடியும
இதுபெரியஅளவு கட்டுகளாக இருந்தாலும்இதனை எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் அதுமட்டுமல்லாத புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக மேககணினி சேவையை இது வழங்குகின்றது
மேலும் நிரலாளர்கள் இதன்மூலம் சேவையாளர்பக்கங்களுக்கு, பயனாளர் பக்கங்களுக்கு மட்டும் குறிமுறைவரிகளை எழுதினால் போதும்
மிகமுக்கியமாக துவக்கநிலையாளர்களும் எளிதாக குறிமுறைவரிகளை எழுதி-புதியபயன்பாட்டினை உருவாக்கிடமுடியும்
இது இயல்புநிலையில் இணையத்தில் நேரடியாக பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது அதனோடுஅலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பணிநேரத்தினை சேமிக்கசெய்கின்றது
இந்த Meteor ஆனது ஜாவாஸ்கிரப்ட் வரைச்சட்டமாக விளங்குவதால் நிரல்தொடராளர்கள் JavaScript , HTML ஆகியவற்றைபற்றி அடிப்படையாக தெரிந்திருக்கவேண்டும் இதனை பயன்படுத்தி கொள்வதற்கு நம்முடைய கணினியில் NodeJS இன்சூழல் இருக்கவேண்டும் இல்லையெனில்அதனை பதிவிறக்கம் செய்து நிறுவகை செய்து கொள்க தொடர்ந்து https://www.meteor.com/install எனும் இணையதளத்திலிருந்து meteorஎன்பதை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க அதனை தொடர்ந்து நமக்கென கணக்கு ஒன்றினை துவங்கிடுக பின்னர் C:\Users\username>meteor எனும்கட்டளைவரியை உள்ளீடுசெய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் பின்வருமாறு திரைதோன்றிடும்

1
இதில் பயன்பாடு ஒன்றினை உருவாக்கிடும் முதல் படிமுறையாக C:\Users\username\Desktop\Meteor>meteor create meteorApp எனும்கட்டளைவரியை உள்ளீடுசெய்து கொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக அடுத்து இரண்டாவது படிமுறையாக
C:\Users\username\Desktop\meteorApp>meteor எனும்கட்டளைவரியை உள்ளீடுசெய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக உடன்இந்த தளம் பல்வேறு செயல்களை செயற்படுத்தி பின்வருமாறு திரைதோன்றிடும்

2
இறுதியாக இது சரியாகஅமைந்துள்ளதாவென சரிபார்த்திட http://localhost:3000/ என இணையமுகவரியை இணையஉலாவியில் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் பின்வருமாறு தோன்றிடும்

3
மேலும் விவரங்களுக்கு https://www.meteor.com/என்ற இணையமுகவரிக்கு சென்று அறிந்துகொண்டு பயன்படுத்தி கொள்க

லிபர் ஆஃபிஸின் 6.1.2 புதிய பதிப்பின் வசதி வாய்ப்புகள்

தற்போது Colibre எனும் புதிய உருவப்பொத்தானுடன் லிபர் ஆஃபிஸின் 6.1.2 எனும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில் பின்வரும் வசதி வாய்ப்புகள் உள்ளன

நம்முடைய ஆவணத்தினை EPUB எனும் வசதியின் வாயிலாக மின்னனு புத்தகமாக பதிவேற்றம் செய்திடலாம் இதில் பக்கங்களின் கீழ் பகுதியிலும் மேல்பகுதியிலும் பக்க எண்களையும் மொத்த பக்கஎண்களை கணக்கிடுவதையும் அதைவிட 1,3,5 என்றவாறு ஒற்றைபடைஎண்களாகவும் பின்னர் 2,4,6 என்றவாறு இரட்டைபடை எண்களாகவும் ஒருதாளின் இரண்டுபுறமும் அச்சிடுவதற்கேற்ப பக்கஎண்களை கொண்டுவரலாம் கூடுலதாக நம்முடைய கையெழுத்தினைகூட Insert => Signature Line=> எனும் கட்டளையின் வாயிலாக நம்முடைய ஆவணத்தில் கொண்டுவரலாம்
விரிதாளில் உருவப்படங்களை anchor to Cellஎன்ற வசதியின்மூலம் வழக்கமாக , அளவினை சரிசெய்து கொள்ளுமாறு, . பக்கங்களுக்கேற்ப சரிசெய்து கொள்ளுமாறு ஆகிய மூன்றுவழிகளில் கொண்டுவரலாம்

லிபர் ஆஃபிஸை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடலாமலேயே TDF, ISPs ஆகிய மேககணினி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இணையத்தின் வாயிலாக நேரடியாக பயன்படுத்தி கொள்ளமுடியும்
நம்முடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் செயல்படும் கைபேசி வாயிலாக கூட லிபர் ஆஃபிஸ் ஆவணங்களை காட்சியாக காணமுடியும் இதற்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அல்லது F-Droid இலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் நம்முடைய திறன்பேசி(smartphone) வாயிலாக தொலைதூரத்திலிருந்தும் லிபர் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் படவில்லை காட்சியை கண்டுகளிக்கமுடியும்

Pandoc எனும் பயன்பாட்டினை கொண்டு புத்தகத்தினை ஒரு இணைய பக்கமாக அல்லது ePub ஆவணமாக மாற்றிடுக

Pandoc என்பது ஒரு கட்டற்ற GPL. எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டதொரு பயன்பாடாகும் ஒருமுறைமட்டும் எழுதிஉருவாக்கிய ஆவணத்தை பின்னர் Pandoc எனும் பயன்பாட்டின் வாயிலாக HTML மொழியிலான Markdown, reStructuredText, textile, HTML, DocBook, LaTeX, MediaWiki markup ஆகியவையாகவும் ePub எனும் ஆவணமாகவும் PDFஆவனமாகவும் உருமாற்றிடலாம் அதைவிட இதனை கொண்டு ஒரு மார்க்அப் மெழியிலிருந்து மற்றொரு மார்க்அப் மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும்

HTML புத்தகமாக வெளியிடுவதற்கான வழிமுறை
இணைய பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருகோப்பாக தனித்தனியாக இருக்கும் அதனை புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணை அறிமுக உரை இந்த புத்தகம் யாருக்கெல்லாம் பயன்படும் எனும் பரிந்துரை அதன்பின்னர் முதன்மை பக்கங்கள் என்றவாறு அமைத்திட-வேண்டும் அதனால் முதலில் HTML meta தகவல்பக்கங்களாக உருவாக்கிடுக இதன்பின்னர் ஒரு Makefile ஐ உருவாக்கி சிறுசிறு பகுதிகளாக செய்திடுக பின்னர் https://pages.github.com/ எனும் இணைய பக்கத்தில் கூறிய வழிமுறைகளை பின்பற்றிGitHub பக்கங்களாக கட்டமைவு செய்திட்டு வெளியிடுக
ePub புத்தகமாக வெளியிடுவதற்கான வழிமுறை
முந்தைய HTML புத்தக வடிவமைப்புமுறையில் உருவாக்கியபகுதிகளை எடுத்துகொள்க புதிய metadata தகவல்பக்கங்களாக உருவாக்கிடுக இதன்பின்னர் ஒரு Makefile ஐ உருவாக்கி சிறுசிறு பகுதிகளாக செய்திடுக பின்னர் https://pages.github.com/ எனும் இணைய பக்கத்தில் கூறிய வழிமுறைகளை பின்பற்றி GitHub பக்கங்களாக கட்டமைவு செய்து வெளியிடுக இதனை நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ள https://pandoc.org/getting-started.html எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

Impala ஒரு அறிமுகம்

Impala என்பது Hadoop cluster இல் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப்பெரியஅளவிலான தரவுகளுக்காக SQL உடன் இணைந்து செயல்படும் மீப்பெரிய இணையான செயலகமாகும் (Massive Parallel Processing(MPP )) இது C++ ,Java ஆகிய கணினி மொழிகளால் உருவாக்கப்பட்ட கட்டற்ற Apache அனுமதியினடிப்படையில் வெளியிடபட்டுள்ள தொருபயன்பாடாகும்
இதில் நாமறிந்து கொண்டுள்ளமுந்தைய SQL பற்றிய விவரங்களைகொண்டு HDFS இல் சேமித்துள்ள தரவுகளை மின்னல் வேகத்தில் செயல்படுத்தி பயன்பெறமுடியும் இது தரவுகளுள்ள HDFS பகுதியிலேயே செயல்களைச் செயல்படச்செய்வதால் தரவுகளின் போக்குவரத்தினை இது தேவையற்றதாக ஆக்குகின்றது. SQL queriesகளின் அடிப்படைகளை தெரிந்தவர்கள் மிகச்சுலபமாக HDFS, HBase, Amazon s3 ஆகிய தரவுகளை ஜாவா பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இதன் மூலம் கையாளமுடியும்
மற்றவியாபார கருவிகளை கொண்டு வினா உருவாக்குவது மிகவும் சிக்கலான extract-transform-load (ETL) cycle வழியாகஇருக்கின்ற நிலையில் சுருக்கவழியில் அதிக காலவிரையம் செய்திடாமல்இது மிக விரைவாக செயல்படுகின்றது இது Parquet கோப்பு வடிவமைப்பை பயன்படுத்தி கொள்வதால் தரவுகளின் கிடங்கிற்குள் பெரிய அளவு தரவுகளை போதுமான வழிமுறையில் கையாளுகின்றது இது தரவுகளின் போக்குவரத்தில்லாமல் நினைவகத்தி-லேயே தரவுகளை கையாளும் வல்லமை கொண்டது இது Tableau, Pentaho, Micro strategy, Zoom data.ஆகிய திறனுடைய வியாபார கருவிகளை ஆதரிக்கின்றது இது LZO, Sequence File, Avro, RCFile, Parquet ஆகிய பல்வேறு வகையான கோப்பு வடிவமைப்புகளை ஆதரிக்-கின்றது இது Apache Hive.என்பதிலிருந்து metadata, ODBC driver, SQL syntax ஆகிய வற்றை பயன்படுத்தி கொள்கின்றது. இந்த Impala வை செயல்படுத்தி பயன்பெறுவதற்கு Cloudera என்பது தேவையாகும் அதனால் http://www.cloudera.com/எனும் தளத்திற்கு சென்று அதில் கூறும் படிமுறைகளின்படி செயல்பட்டு பயன்பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது

வேர்டு பிரஸ்ஸின் ConveyThis எனும் கூடுதல் இணைப்பு(Plugin)

தற்போது இணைய இணைப்பின் வசதியால் உலகமுழுவதும் ஒரேகுடையின் கீழ் என்ற பயனை நாமனைவரும் பெற்றிருக்கின்றோம் ஆயினும் உலகத்தில் வாழும் மக்களனைவரும் வெவ்வேறு மொழிகளை பயன்படுத்தி வருவதால் குறிப்பிட்ட மொழியில் எழுதிவெளியிடபட்ட இணையபக்களிலும் வலைபூக்களிலும் உள்ள கருத்துகளையும்செய்திகளையும்மற்றஅனைவரும் புரிந்து கொள்ள முடியாதவாறான-நிலை உள்ளது இதனை வெற்றிகொள்ள Multilingual content என்பது இருந்தாலும் இதனை உருவாக்குவது உலகளவிலுள்ள திறனுடைய SEO வை நடைமுறை படுத்திடுவது அதற்கான விதிகளை பின்பற்றிடுவது என மிகச்சிக்கலாக்குகின்றன இவ்வாறான சிக்கலை எளிதாக தீர்வு செய்திட கைகொடுப்பதுதான் வேர்டு பிரஸ்ஸின் ConveyThis எனும் கூடுதல் இணைப்பாகும் (Plugin)

இந்த ஒரேயொரு கூடுதல் இணைப்-பினை பயன்படுத்தி நம்முடைய இணைய பக்கம் முழுவதையும் நாம் விரும்பும் மொழிக்கு மொழிமாற்றம் செய்திடும்பணியைஎளிதாக ஆக்குகின்றது இது தற்போது உலகில் பயன்படுத்தப்படும் நூற்றிற்கு மேற்பட்ட உலகமொழிகளை ஆதரிக்கின்றது இதனுடைய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி வரையறையற்ற மாதிரிசெயலை செயல்படுத்திடலாம் விரைவான எளிதான ஒருங்கிணைந்த தயார்நிலை முடிவுகளை அடையலாம் இது அனைத்து கருப்பொருள்களையும் கூடுதல் இணைப்புகளையும் ஒத்தியங்க செய்கின்றது இதுஎளிதான மொழிமாற்ற இடைமுகம் கொண்டது மேலும் அனைத்து வாடிக்கையளர்களையும் ஆதரிக்கின்றது தொழில்முறை மொழிமாற்றம் செய்பவர்களை அனுகிடவும் அனுமதிக்கின்றது இதனை பயன்படுத்தி கொள்ள https://wordpress.org/plugins/conveythis-translate/ எனும் இணயதளத்திலிருந்து இதனை பதி-விறக்கம் செய்து கொண்டு நம்முடைய வேர்டுபிரஸ்ஸின் WP admin இல் உள்ள plugins directory இற்குசென்று இந்த கூடுதல் இணைப்பை நிறுவுகை செய்து இணைத்து கொள்க உடன்கட்டுப்பாட்டு பலகத்தின் மேல்பகுதியில் மேல்மீட்பு பட்டையாக தோன்றிடும்

2
தொடர்ந்து conveythis.com எனும் பக்கத்தில் நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்கி தொடர்ந்து இதில் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நமக்கான API திறவுகோளை பெற்றிடுக

3
பின்னர்நம்முடைய WP admin பக்கத்திற்கு வந்து API பகுதியில் அதற்கான புலத்தில் அதனை உள்ளீடு செய்து கொண்டு எந்த மொழியிலிருந்து (source language) எந்த மொழிக்கு( target language) மொழிமாற்றம் செய்திடவேண்டுமென தெரிவுசெய்து கொண்டால் போதும் உடன் நம்முடைய இணைய பக்கத்தில் எந்தெந்த மொழியேன அதற்கான மொழிமாற்றிபொத்தான்கள் தோன்றியிருப்பதை காணலாம் வேறு மொழிமாற்றும் பணியெதுவும் நாம் செய்யத்தேவையில்லை ஆயினும் தொடர்ந்து செயல்படுவதற்கு முன் ஒருசில வாய்ப்புகளை நாம் விரும்பியவாறு மாற்றி-யமைத்திட வேண்டும் என்ற செய்தியைமட்டும் மனதில் கொள்க

4
அதற்காக settings எனும் பட்டியலை தோன்றிடச்செய்து அதில் show more options எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க மிகமுக்கியமாக Change language flag எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதில் நேரடியாக நாம் விரும்பும் மொழிக்கு மொழிமாற்றம் ஆவதை பார்வையிடலாம் இதிலுள்ள My Translations எனும் பகுதிக்கு சென்று மேலும் என்னென்ன வகையில் மொழிமாற்றியை மேம்படுத்தலாம் என அறிந்து மேம்படுத்தி கொள்க இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதில் கட்டணமற்ற திட்டமும் மூன்று கட்டணத்துடன் கூடிய திட்டங்களும் உள்ளன தேவையெனில் https://www.conveythis.com/account/register/?utm_source=fromdev&utm_campaign=promotion எனும் இணையதள பகுதிக்கு உள்நுழைவுசெய்து பயன்படுத்தி கொள்க

நிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சேவை அவசியம் தேவையாகும்

அறிவியல் புரட்சியினால் தோன்றிய செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence (AI))அமோஸான் நிறுவனத்தின் முகப்புபக்கத்தில் பல்வேறு பயனாளர்களுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதற்கேற்ப விரிவடைந்து வருவதைபோன்று வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றலும் செயற்கை நுண்ணறிவும் கண்டிப்பாக தேவையாகும் கணினியானது ஆங்கில மொழியால் செயல்படும் பயன்பாடுகளை கொண்டது ஆயினும் வங்கியில் வாடிக்கையாளர்கள் பல்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ளும்போது அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு voice responses எனும் வசதியை செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுத்தி வங்கி பணிகளை எளிதாக கையாளலாம் மேலும் மொழிமாற்றியின் தடங்களினால் ஏற்படும் வாடிக்கையாளர்களின் விடுபட்ட கோரிக்கைகளை இதே செயற்கை நுண்ணறிவின் chatbots என்பதை இயலுமைசெய்து வங்கிகளில் advisor finbot ஐ நிறுவுகை செய்து சிறந்த சேவைகளை வழங்கச்செய்யலாம் அதுமட்டுமல்லாது இதே செயற்கை நுண்ணறிவின் bot என்பதை பயன்படுத்தி குறிப்பிட்ட குழுவான விவசாயிகள் சிறுவணிகர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோர்களின் நடைமுறை பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க சேவையை செயற்படுத்திடலாம் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர்களின் குற்ற நடவடிக்கைகளினால் வங்கியானது பாதிப்படையாமல்இருப்பதற்காக இதே செயற்கை நுண்ணறிவின் Risk.net என்பதை பயன்படுத்தி அவ்வாறான வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுத்து-கின்ற குற்ற நடவடிக்கைகளை தவிர்த்திடலாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்-படுத்தி வருங்காலத்தில் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என யூகித்தலை Azure எனும் இயந்திர கற்றலை பயன்படுத்தி துல்லியமாக கணித்து அதற்கேற்ப நிதிநிறுவனங்களின் எதிர்(வருங்)கால நடவடிக்கைகளை திட்டமிடலாம் இந்தAzure எனும் இயந்திர கற்றல் வசதி தற்போது HPE financeஎன்பதன் மேககணினி சேவையிலும் கிடைக்கின்றது

Previous Older Entries