Tuesday JS கட்டணமற்ற கட்டற்ற பயன்பாடு(இயந்திரம்) ஒரு அறிமுகம்

Tuesday JS என்பது காட்சிகளின் வாயிலான நாவல்கள், ஊடாடும் கதைகள், உரை அடிப்படையிலான சாகச விளையாட்டுகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான கட்டணமற்ற கட்டற்ற பயன்பாடாகும்(இயந்திரமாகும்) . இது எந்தவொரு மூன்றாம் தரப்பு நூலகங்களையும் பயன்படுத்தாமல் ஜாவாஸ்கிரிப்டில் எழுதப்பட்டதாகும். சொந்த அலைபேசி, கணினி ஆகியவற்றிற்கான பயன்பாடுகளை உருவாக்குவதற்கான அப்பாச்சி கோர்டோவா வரைச்சட்ட கட்டமைப்பிற்கு ஆதரவு இதில் உள்ளது. இந்த இயந்திரமானது நிலையான HTML ஆவண கூறுகளான div , img ஆகியவற்றைப் பயன்படுத்திகொள்கின்றது, இது இணைய உலாவிகளால் ஆதரிக்கப்படும் கிட்டத்தட்ட எந்தவொரு ஊடக வடிவமைப்பையும் அனுமதிக்கின்றது, இதில் svg வடிவத்தில் திசையன் வரைகலை, gif அசைவூட்டம், CSS பாணிகள் ஆகியவை உள்ளன. அனைத்து கூறுகளையும் கொண்ட கதையின் உரைநிரல்களானவை JSON வடிவமைப்பு கட்டமைப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை வேறு எந்த நிரலாக்க மொழி அல்லது இயந்திரத்தின்வாயிலாக படிக்க முடியும்.உரைநிரல்களை வேறொரு இயந்திரத்திற்கு அல்லது இயங்குதளத்திற்கு அனுப்பு கின்ற பணியை இது எளிதாகவும் விரைவாகவும் செல்படுத்திடுகின்றது. உரை பதிப்பாளருக்கு JSON உடன் நேரடியாக பணி செய்வதற்கான உள்ளமைக்கப்பட்ட கருவி ஒன்றும் இதில் உள்ளது, நாம் முழு உரைநிரல்களையும் அல்லது அதன் ஒரு பகுதியை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட elemenஇலிருந்து திருத்தம் செய்திடமுடியும் அலை பேசியின் இணைய உலாவி விளையாட்டுகள் துருவமுனைப்பைப் பெறத் துவங்குகின்றன, அதே நேரத்தில் காட்சிவடிவிலான நாவல் வகையின் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்குகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில்ஜப்பானுக்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் பெரிதும் வளர்ந்து வருகின்றது. நிரலாக்க ம் பற்றி ஒன்றும் தெரியாத துவக்கநிலையாளர்கள் கூட ஒரு வரைகலை அல்லது இயக்க நாவலை உருவாக்குவதற்காக இதனுடைய visual editorஎனும் காட்சி பதிப்பாளர் நம்மை அனுமதிக்கிறது. தேவைப்பட்டால், ஜாவாஸ்கிரிப்ட் , CSS ஆகியவற்றைப் பயன்படுத்தி அடிப்படை செயல்பாட்டை விரிவாக்க முடியும்.

காட்சிப்படுத்தல் உரையாடல் விருப்பங்கள் , தேர்வுகளின் விளைவுகள் போன்ற அனைத்து கூறுகளையும் கொண்ட உரைநிரலின் கட்டமைப்பை இந்த பதிப்பாளர் முழுமையாகக் காண்பிப்பார். இது உரைநிரலை வழிநடத்தவும் உரைநிரலைத் திருத்தம் செய்திடவும் எளிதாக்குகிறது.

வளாகமயமாக்கல் வரலாற்றை பிற மொழிகளில் வளாகமயமாக்குவதற்கான விரிவான சாத்தியங்கள்இதில் உள்ளன. கதையின் எந்தவொரு உறுப்பிற்கும் உரை , வரைகலை ஆகிய இரண்டிற்கும் தேவையெனில் மொழிபெயர்ப்பை அமைக்கலாம். முன்னோட்ட செயல்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியின் செயல் திட்டத்தை இயக்க நம்மை அனுமதிக்கிறது. எல்லா நூல்களையும் மற்றொரு பதிப்பாளரில் வளாக மயமாக்கலைத் திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் ஒரு அட்டவணை csv எனும் வடிவமைப்பு கோப்பில் பதிவேற்றும் செய்யலாம்.

JSON அனைத்து கூறுகளையும் கொண்ட கதை உரைநிரலான JSON வடிவமைப்பு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை வேறு எந்த நிரலாக்க மொழி அல்லது இயந்திரத்திலும் படிக்கலாம். இப்போது இந்த tuesday.js என்பது பீட்டா பதிப்பில் உள்ளது, பிழைகள் சரி செய்யப்படுகின்றன, செயல்பாடு மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் நம்மிடம் ஏற்கனவே உள்ள நம்முடைய சொந்த கதைகளை இதன் வாயிலாக உருவாக்கலாம்.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://kirill-live.itch.io/t Tuesday-js எனும் இணையதளமுகவரிக்கு செல்க

JSTool எனும் கருவி ஒரு அறிமுகம்

இது ஒரு விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளுக்கான ஜாவாஸ்கிரிப்ட் கருவியாகும். 2M + இலிருந்து வாயிலின்நோட்பேட் ++ க்கான ஜாவாஸ்கிரிப்ட் கருவியைப் பதிவிறக்கம்செய்கின்றது. இதனுடைய குறிமுறைவரிகளை மிகவும் குறைவாக செய்வதற்காகக Douglas Crockford’s JSMin எனும் தருக்க வழிமுறையை பயன்படுத்தி கொள்கின்றது. ஜாவாஸ்கிரிப்ட் குறிமுறைவரிகளை வடிவமைக்க தனது சொந்த வழிமுறையை இதுகொண்டுள்ளது. இது ஒரு JSON மரப்பார்வையாளராக திகழ்கின்றது. விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளில் ஜாவாஸ்கிரிப்ட் குறிமுறைவரிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதைப் பயன்படுத்த எளிதானது. இது GPL 2.0.எனும் உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது

இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்: ஜாவாஸ்கிரிப்ட் டின் மீச்சிறு வடிவமைப்பாக அமைந்துள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் / JSON வடிவமைப்பை கொண்டுள்ளது. JSON தரவுகளை அகர வரிசைப்படி வரிசைப்படுத்தஅனுமதிக்கின்ரது. இது JSON மர பார்வையாளராக அமைந்துள்ளது

இதனை (JSTool)நிறுவுகை செய்தல் : 1. முதலில்விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளை செயல்படுத்திடுக. 2. பின்னர் விரியும் திரையின் Activity Bar எனும் செயல்பாட்டு பட்டியில் இருந்து "Extensions" என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதனை திரையில் தோன்றிடு செய்திடுக. 3. உடன் விரியும் திரையில்"jstool" என்பது எங்கு உள்ளது எனத் தேடிபிடித்திடுக 4. அதுகிடைத்தவுடன் "Install" எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பயன்பாட்டினை நிறுவுகை செய்திடும் பணி துவங்கி நடைபெறும் இந்த நிறுவுகைச செய்திடும்பணி முடிவடைந்ததும், "Reload" என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது JSTool ஐ கைமுறையாக நிறுவுகை செய்திடுக,

JSTool ஐ கைமுறையாக நிறுவுகைசெய்தல் 1. https://marketplace.visualstudio.com/items?itemName=sunjw.jstool எனும்முகவரியில் உள்ள விஷுவல் ஸ்டுடியோ சந்தையில் JSTool எனும் பக்கத்தைதேடிபிடித்திடுக. 2. பின்னர் அதன்வலது பக்கத்தில் "Download Extension " என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. 3. அதன்பின்னர் விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளை செயல்படுத்திடுக. 4. நீட்டிப்புகளைக் காணும் கட்டளை வரியின் கீழிறங்கு பட்டியிலில் "Install from VSIX. ..." எனும் கட்டளையைப் பயன்படுத்துதலின் அல்லது கட்டளைத் தட்டில் உள்ள "Extensions: Install from VSIX..." எனும் கட்டளையைப் பயன்படுத்துதலின் வாயிலாக செயல்படுத்திடுக. 5. இப்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட sunjw.jstool-x.y.z.vsix என்பதைத் தெரிவுசெய்து சொடுக்குக.

நிறுவுகை செய்த JSTool ஐ நீக்குதல் 1. முதலில் விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளை செயல் படுத்திடுக. 2. பின்னர் விரியும் திரையின் Activity Bar எனும் செயல்பாட்டு பட்டியில்லிருந்து"Extensions" என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதனை திரையில் தோன்றிடு செய்திடுக.. 3. அதன் பின்னர் "Enabled" எனும் பிரிவின் கீழ்உள்ள, "JSTool" என்பதைத் தெரிவுசெய்திடுக. 4.பின்னர் "Uninstall" எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இந்தJSTool ஐ எவ்வாறு பயன்படுத்தி பயன்பெறுவது

மூலக் குறிமுறைவரிகளை குறைத்தல்: 1. முதலில் விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளில் ஜாவாஸ்கிரிப்ட் மூல குறிமுறைவரிகளின் கோப்பைத் திறந்திடுக. 2.பின்னர் கட்டளை தட்டில் "Minimize JavaScript" எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக. 3. "Minimize JavaScript (New file)" என்ற கட்டளைவரியைப் பயன்படுத்தி, ஒரு புதிய கோப்பில் குறைக்கப்பட்ட மூலக் குறிமுறைவரிகளை வைக்க விரும்பினால். அனைத்து குறியீடுகளையும் மூல குறிமுறைவரிகளின் கோப்பில் வடிவமைத்திடுக: 4. ஜாவாஸ்கிரிப்ட் மூல குறிமுறைவரிகளின் கோப்பை நோட்பேட் ++ இல் திறந்திடுக. 5. கட்டளை தட்டில் "Format JavaScript (JSON)" எனும் கட்டளை வரியைப் பயன்படுத்தி. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிமுறைவரிகளை மூல குறிமுறைவரிகளின் கோப்பில் வடிவமைத்திடுக: 6. நோட்பேட் ++ இல் ஜாவாஸ்கிரிப்ட் மூல குறிமுறைவரிகளின் கோப்பைத் திறந்திடுக. 7. வடிவமைக்க விரும்பும் மூல குறிமுறை வரிகளைத் தெரிவுசெய்திடுக. 8. கட்டளை தட்டில் " Format JavaScript (JSON)" எனும் கட்டளைவரியைப் பயன்படுத்தி JSON தரவை அகர வரிசைப்படி வரிசைப்படுத்திடுக: 9. விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளில் நம்முடைய JSON தரவுக் கோப்பைத் திறந்திடுக. 10. கட்டளை தட்டில் "JSON Sort" எனும் கட்டளைவரியைப் பயன்படுத்திடுக. 11. "JSON Sort (New file)" எனும் கட்டளை வரியைப் பயன்படுத்தி, வரிசைப்படுத்தப்பட்ட JSON தரவை புதிய கோப்பில் வைக்க விரும்பினால். JSON மரக் காட்சியைக் காண்பித்திடுவதற்கு அதனை புதுப்பித்தல் செய்திடுக: 12. விஷுவல் ஸ்டுடியோ குறிமுறைவரிகளில் நம்முடைய JSON தரவுக் கோப்பைத் திறந்திடுக. 13. கட்டளைத் தட்டில் "Refresh JSON Tree View" எனும் கட்டளைவரியைப் பயன்படுத்திடுக. 14. அல்லது "JSTool: JSON Tree" இல் மூல முனைமுனைமத்தில் இடம்சுட்டியை வைத்து வலது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் , சூழ்நிலை பட்டியில் "Refresh" என்பதை தெரிநவுசெய்து சொடுக்குக.

.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.sunjw.us/jstool/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

புதிர் விளையாட்டு

கொரானா முடிந்து தமிழகத்தில் தங்களுடைய உறவினர்களை பார்த்து செல்வதற்காக ஒரு நிரலாளரரும் ஒரு மென்பொருள் பொறியாளரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு மிக நீண்ட தூர பயனம் செய்து கொண்டிருந்தனர். மிக நீண்டநேர பயனம் என்பதால் பொழுதுபேக்காக ஏதாவது செய்யலாமே என நிரலாளர் அருகில் அமர்ந்திருந்த மென்பொருள் பொறியாளரின் பக்கம் திரும்பி, “ஐயா பொழுதுபோக்காக வேடிக்கையான விளையாட்டு ஒன்றினை நாமிருவரும் விளையாடிடுவோமா?” என வினவினார். மென்பொருள் பொறியாளர் ஒரு சிறுகுட்டி தூக்கம் போட விரும்பினார், எனவே அவர் பணிவுடன் “ஐயா மிகவும் களைப்பாக இருக்கின்றது அதனால் நான் தூங்கபோகின்றேன்” என மறுத்துகூறிவிட்டு அடுத்த பக்கம் சாய்ந்து கொண்டார் . ஆயினும் நிரலாளர்தொடர்ந்து “இந்த விளையாட்டு உண்மையில் மிக எளிதானது மிகவும் வேடிக்கையானது” என்று கூறி தொந்திரவு செய்து கொண்டேயிருந்தார்.மேலும் , “அதாவது நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்பேன், உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு 10டாலர் கொடுக்கவேண்டும். பிறகு நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும், எனக்கு பதில் தெரியாவிட்டால், நான் உங்களுக்கு 10 டாலர் தருவேன். இதுதான் அந்த விளையாட்டு ” என அந்த விளையாட்டு பற்றி விளக்கமளித்தார் மீண்டும், மென் பொருள் பொறியாளர் பணிவுடன் “ஐயா நன் எந்தவொரு விளையாட்டையும் விளையாட விரும்ப வில்லை” என மீண்டும் மறுத்துகூறிவிட்டு தூங்க முயற்சித்தார். அதனை தொடர்ந்து மனம் தளராத விக்கிரமாதித்தன் போன்று மீண்டும் அந்த நிரலாளர், இப்போது , “சரி,ஐயா உங்களுக்குத் பதில் தெரியாவிட்டால் நீங்கள் எனக்கு ரூ 10 கொடுக்கவேண்டும் , எனக்கு பதில் தெரியாவிட்டால், நான் உங்களுக்கு 100 டாலர் தருகிறேன்!” என தூண்டில் போட்டார் இவ்வாறு பத்து டாலருக்கு பதில் நூறுடாலர் கொடுப்பதாக கூறியது மென்பொருள் பொறியாளரின் கவனத்தை ஈர்த்தது, மேலும் நிரலாளரோடு அந்த விளையாட்டினை விளையாடாமல் நம்மை நிரலாளர் தூங்க விடமாட்டார் அதனால் இந்த விளையாட்டினை விளையாடிதான் பார்ப்போமே என மென்பொருள் பொறியாளர் அந்த விளையாட்டினை விளையாடுவதற்கு ஒப்புக் கொண்டார். மென்பொருள் பொறியாளருக்கும் நிரலாளரருக்குமான அந்த விளையாட்டு துவங்கியது முதலில் நிரலாளர் . “பூமியிலிருந்து சந்திரனுக்கு எவ்வளவு தூரம்?” என தன்னுடைய முதல் கேள்வியைக் கேட்டார் மென்பொருள் பொறியாளர் அந்த கேள்விக்கு பதிலேதும் பேசாமல் தன்னுடைய பணப்பையிலிருந்து, ஒரு பத்து டாலரை மட்டும் வெளியிலெடுத்து நிரலாளரிடம் ஒப்படைத்தார். இப்போது, மென்பொருள் பொறியாளரின் முறை. அவர் நிரலாளரிடம் ” ஒரு மலையில் மேலேஏறி செல்லும்போது மூன்று கால்களைக் கொண்டிருந்த ஒன்று அம்மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது நான்கு கால்களுடன் வந்து சேர்ந்தது அது என்ன?” என கேள்வி கேட்டுவிட்டு தூங்கசென்று விட்டார் இந்த கேள்விக்கான பதில் தெரியாமல் நிரலாளர்ஒரே குழப்பத்துடன் அலைபாய்ந்து கொண்டிருந்தார். அதனால் முதலில் தனது மடிக்கணினி கணினியை எடுத்து அ்தில் வைத்திருந்து தனது குறிப்புகள் அனைத்தையும் தேடினார்.அந்த கேள்விக்கான விடைமட்டும் அவரால் அவைகளிலிருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை .இருந்தபோதிலும் தன்னுடைய கைபேசியில் இணையத்திலும், முகநூலிலும், தமிழ்கோராவிலும் ,இறுதியாக விக்கிபக்கத்திலும் தேடினார் எங்கு தேடியும் அந்த கேள்விக்கான பதில் மட்டும் நிரலாளருக்கு கிடைக்கவில்லை. விரக்தியடைந்த நிரலாளர் தகவல் தொழில் நுட்பதுறையில் பணிபுரியும் தனது சக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அந்த கேள்விக்கான விடையை கூறிடுமாறு கோரினார். அவருடைய நண்பர்களிடமிருந்தும் அதற்கான விடை மட்டும் கிடைக்கவில்லை சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அவர் மென்பொருள் பொறியாளரை எழுப்பி “ஐயா என்னால் உங்களுடைய கேள்விக்கான பதிலை கூறமுடியவில்லை இந்தாருங்கள்” என 100டாலரை அவரிடம் கொடுத்தார். மென்பொருள் பொறியாளர் பணிவுடன் “பரவாயில்லை ஐயா” எனக் கூறி அந்த 100டாலரை வாங்கி தன்னுடைய சட்டை பையில் வைத்து மீண்டும் தூங்க ஆரம்பித்தார். நிரலாளர், மிக மெதுவாக மென்பொருள் பொறியாளரை அசைத்து அவருடைய தூக்கத்திலிருந்து விழித்து எழச்செய்து , “சரி, ஐயா அந்த கேள்விக்கான பதில் என்ன? என எனக்கு கூறிவிட்டு நீங்கள் தூங்க செல்லுங்கள்” என வேண்டி கொண்டார் அதனை தொடர்ந்து மென்பொருள் பொறியாளர் வேறு ஒன்றும் பேசாமல், “எனக்கு அந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை ஐயா இந்த விளையாட்டு ஒப்பந்தபடி இந்தாருங்கள்” என தனது சட்டைபையில் இருந்து நிரலாளர் கொடுத்த 100 டாலரிலிருந்து 10டாலரைமட்டும் எடுத்து நிரலாளரிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் தூங்குவதற்கு சென்றுவிட்டார். என்ன வாசகரே நீங்களாவது மலையில் ஏறும்போது மூன்றுகால்களுடனும் மலையைவிட்டு இறங்கி வரும்போது நான்கு கால்களுடனும் வருவது எதுவாக இருக்கும் என அந்த கேள்விக்கான பதிலை நிரலாளருக்கு கூறி அவருடைய சந்தேகத்தினை தீர்வு செய்திடுங்களேன்

PDF இலிருந்து Word ஆக உருமாற்றம் செய்தல்

PDF to Word converter எனும்இணைய பயன்பாடானது வழக்கமான அல்லது வருடப்பட்ட PDF கோப்புகளை திருத்தம் செய்யக்கூடிய வேர்டு ஆவணங்களாக மாற்றுகிறது. நாம் செய்ய வேண்டியது வழக்கமான PDF அல்லது வருடுதல் செய்யப்பட்ட PDF ஐ பதிவேற்றம் செய்வதுமட்டுமேயாகும் மாற்றப்பட்ட கோப்பை .docx வடிவத்தில் பதிவிறக்கம் செய்து MS Word இல் தொடர்ந்து பணியாற்றலாம் .இது கட்டணமற்றது, எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாதது. அநாமதேயமானது மிகவும்பாதுகாப்பானது.அதாவது இந்த PDF to Word converter என்பது இணைய அடிப்படையிலான கருவியாகும், அதைப் பயன்படுத்த இணைய இணைப்பு வைத்திருக்க வேண்டும். பதிவேற்றிய கோப்புகள் சேவையகங்களுக்கு அனுப்பப்பட்டு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கப்படும். கோப்பு மாற்றப்பட்டதும் அதை நேரடியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். PDF ஆவணங்களை வேர்டு ஆவணங்களாக மாற்றுவதற்கு நம்முடைய மின்னஞ்சல் முகவரி அல்லது வேறு தனிப்பட்ட தகவல் எதுவும் இந்த பணியை செய்வதற்காக வழங்கத் தேவையில்லை. இவ்வாறான மாற்றம் நேரடியாக இணையதளப்பக்கத்தில் செய்யப்படுகிறது. மாற்றம் செய்யவிரும்பும் PDF கோப்பினை பதிவேற்றம் செய்திடுக பின்னர் வேர்டுஆக மாற்றப்பட்ட கோப்பினை பதிவிறக்கம் செய்திடுக. இவ்வாறாக மாற்றப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அனைத்து கோப்புகளும் இந்த சேவையகங்களிலிருந்து அறவே நீக்கம் செய்யப்படும். இவ்வாறு மாற்றம் செய்கின்ற செயல்பாட்டின் எந்த கட்டத்திலும் நம்முடைய கோப்புகளை அணுகி நம்முடைய தகவல்களை அபகரித்தல் செய்திடாது மேலும் கோப்பு அளவிற்கு வரம்புகள் எதுவும் இல்லை அதாவது மாற்றக்கூடிய PDF களின் எண்ணிக்கை அல்லது கொள்அளவு ஆகியவற்றிகு வரம்புஎதுவும் இல்லை நமக்குத் தேவைப்பட்டால் மிகப் பெரிய கோப்புகளைகூட வேர்டு ஆவணமாக மாற்றம் செய்து கொள்ள முடியும். அவ்வாறே நாம் விரும்பும் போதெல்லாம் நாம் விரும்புகின்ற ஒன்று மேற்பட்ட கோப்புகளையும் வேர்டு ஆவணமாக மாற்றம் செய்துகொள்ளமுடியும். இது மிக விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்திடுகின்றதுது, PDF ஐ ஒரே நேரத்தில் உரையாக(சொற்களாக) மாற்றவும்: இணையத்தில் நேரடியாக செயல்படுத்தபடும் PDFஇலிருந்து வேர்டு ஆவணமாக மாற்றம் செய்திடும் கருவியானது அவ்வாறான கோப்பினை பதிவேற்றம் செய்ததும் உடனடியாக PDF கோப்புகளிலிருந்து உரைகளாலும் படங்களாலும் வடிவமைக்கப்பட்ட வேர்டு ஆவணங்களாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றம் செய்வதற்காக நாம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை - அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட வேர்டு கோப்பு ஆனது ஒரு நொடிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளத் தயாராகிவிடும். வருடுதல் செய்யப்பட்ட PDF ஆவணங்களை இதனுடைய OCR எனும் மேம்பட்ட, உள்ளமைக்கப்பட்ட OCR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி PDF ஆவணத்திலிருந்து உரைகளையும் தரவுகளையும் பிரித்தெடுக்க முடியும் மேலும் உருவப்பட அடிப்படையிலான PDF கோப்பில் சேமிக்கப்பட்ட எல்லா தரவுகளையும் துல்லியமாக திருத்தக்கூடிய DOCX கோப்பாக இது மாற்றிவிடும். .

இதனுடைய .செயல்முறைகள்: 1.முதலில் நம்முடைய கணினி அல்லது மேககணினியிலிருந்து ஒரு PDFகோப்பினை இந்த தளத்திற்கு பதிவேற்றம்செய்திடுக. 2. உடன் இந்த PDFஇலிருந்து வேர்டு ஆவணமாக மாற்றம் செய்திடும் கருவியானது தன்னுடைய பணியை தானாகவே துவங்கிவிடும். 3.இவ்வாறு மாற்றம் செய்திடும் பணிமுடிவடையும் வரை காத்திருந்திடுக. 4 பின்னர் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட வேர்டு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்க

. இரண்டு எளிய வழிமுறைகளில் இந்த இணையத்தின் நேரடியான கருவி மூலம் PDF வடிவிலான கோப்பினை வேர்டு வடிவிலான கோப்பாக மாற்றலாம்: 1. நம்முடைய கணினியிலிருந்து ஒரு PDF ஆவணத்தினைத் தெரிவுசெய்திடுக பின்னர் இதிலுள்ளUpload எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. நம்முடைய PDF ஐ மேகக்கணினியில் வைத்திருந்தால், நாம் மாற்றம் செய்யவிரும்பும் PDF கோப்பை தேடிக் கண்டுபிடிக்க Google Drive, OneDrive and Dropbox ஆகிய கிடைக்கக்கூடிய மூன்று உருவப்பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. 2. PDF கோப்பு பதிவேற்றம் செய்யப்பட்டதும் வேர்டாக மாற்றும் செயல்முறை தானாகவே தொடங்கும். அவ்வாறு PDF கோப்பினை வேர்டாக மாற்றம்செய்திடும் பணிமுடியும் வரை சிறிது காத்திருக்கவும்.

இந்த இணையபயன்பாட்டு கருவி மூலம் நம்முடைய கைபேசி சாதனத்தில்கூட PDF ஐ வேர்டாக மாற்றுவது எளிது. இதற்கான செயல்முறை : 1. நம்முடைய கைபேசியின் உலாவியில் PDFtoWordConverter.org எனும் இணையதளபக்கத்திற்கு செல்க 2.நாம் மாற்றசெய்திட விரும்பும் PDF ஐ பதிவேற்றம் செய்திடுக 3. மாற்றப்பட்ட வேர்ட் கோப்பை உங்கள் iOS அல்லது Android சாதனத்தில் பதிவிறக்கம் செய்திடுக ..மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.pdftowordconverter.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

IntraMessenger எனும் பயன்பாடு

IntraMessenger எனும் பயன்பாட்டின் வாயிலாக நம்முடைய சொந்த உடனடி செய்தியாளர் சமூக குழுக்களை உருவாக்கிடமுடியும்! நம்முடைய நிர்வாகியின் கட்டுப்பாட்டின் கீழ் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது முழுமையாக மையப்படுத்தப்பட்டது புதுமையானது. சேவையகம் (திறமூல PHP / MySQL) வெளிப்புற மூன்றாம் தரப்பு அங்கீகார சாத்தியமான (.கா.: மன்றம்(forum), CMS, வலைப்பதிவு, PGI, CMR ...) உள்ளிட்ட சிறந்த நெகிழ்வுத்தன்மையை இது வழங்குகிறது. இது நிறுவனங்கள் / சமூககுழுக்கள் (நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள் ...) மற்றும் பரந்துபட்ட பல்வேறு பணிக்குழுக்கள் தங்களுடைய சொந்த உடனடி ஒத்துழைப்பு செய்தியாளர்களின் வலையமைப்பை உருவாக்கவும் கட்டுப்படுத்திடவும் அனுமதிக்கிறது. நம்முடைய வளாக பிணையத்தில் (lan) அல்லது இணையத்தில் இதனஉடைய சேவையகத்தை நிறுவ முடியும் (பகிரப்பட்ட புரவலராக செய்யப்பட்ட சேவையகம் போதுமானது). சமீபத்திய பெரிய பதிப்பு, பயனர்கள் கோப்புகள் காப்புப்பிரதி, நம்முடைய சொந்த dropbox/SkyDrive/hubic/ .. ஆகியவற்றை பயன்படுத்திகொள்ளலாம் . இறுதியாக: நாம் விண்டோஇயக்கமுறைமைகளுடன் ஒரு தனியார் உடனடி செய்தி (IM ) வலைபின்னலை உருவாக்க விரும்புகின்ற வணிகமாக இருந்தால் இது நம்முடைய பயன்பாடாகும்.

இதனுடை சிறந்த வசதிவாய்ப்புகள் (பிற தீர்வுகளுடன் ஒப்பிடும்போது):

இது ஒரு கட்டணமற்ற திற மூல சேவையகமாகும் (PHP / MySQL). இது விண்டோ, லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில்செயல்படும் திறன்மிக்கது.

இது மூன்றாவது தரப்பு ஒருங்கிணைப்பு வாய்ப்பினை வழங்குகின்றது. : இதில் நிலையான, திறந்த சமூகம் , குழுக்கள் சமூகம் ஆகிய மூன்று முறைகள் உள்ளன . இதன்வாயிலாக கோப்பு பரிமாற்றபணியையும் வெளியீடுதலையும் எளிதாக செய்திடலாம். இது தனிப்பயனாக்கக்கூடியது ( சேவையகத்திலிருந்து). குறைந்த அலைவரிசை பயன்பாடுகொண்டது . .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://www.intramessenger.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

தற்போதைய நிலையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து கட்டற்ற கருவிகள் இல்லாமல் நம்மால்வாழ முடியாது

சில காலங்களுக்கு முன்பு, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கட்டற்றகருவிகள் இல்லாமல் வாழ முடியாத ஐந்தினை மட்டும் தேர்ந்தெடுந்திடுக. என்ற விவாதம் ஒன்று எழுந்தது, அது தொழில்நுட்ப வல்லுநர்களிடையே மிகவேகமாக பரவியது. ஆயினும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படும் ஐந்து கட்டற்ற கருவிகளை தேர்ந்தெடுப்பது என்பது எளிதானது அன்று இருந்தபோதிலும் தற்போதைய நம்முடைய வாழ்க்கைசூழலில் பின்வரும் ஐந்து கட்டற்ற கருவிகள் இல்லாமல் நம்மால் வாழமுடியாது என உறுதி கூறுகின்றேன்

1.tmate என்பது நன்கு அறியப்பட்ட tmux எனும் முனைமத்தின் பன்முககணினியின் ஒரு முட்கரண்டி ஆகும், இது ஒரு tmux அமர்வைத் தொடங்கவும், அதை SSH இல் பகிரவும் அனுமதிக்கிறது. இரட்டையான நிரலாக்கத்திற்காக அல்லது தொலைதூர கட்டுப் பாட்டிற்காக இதனை பயன்படுத்தி கொள்ளலாம். குழு உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து நிரலாக்கம் செய்வதற்கு எளிதான, வெளியீடுகளின்-அஞ்ஞான, கட்டற்ற வழியை விரும்பினால் (மற்றும் முனைம அணுகலைப் பகிர்வது நமக்குப் போதுமானது), இது நிச்சயமாக பட்டியலில் சேர்க்க வேண்டிய ஒன்றாகும். மேலும் கூடுதல் தகவலைப் பெறுவதற்கு https://tmate.io/எனும் இணையதளத்திற்கு செல்க .


2.ix இது ஒரு கட்டளை வரிகளை ஒட்டிடுவதற்கான கருவிகளின் கூடையாகும்.இதை பயன்படுத்தி கொள்வதற்காகவென எதையும் நிறுவுகை செய்யத் தேவையில்லை; இந்த தளத்திற்குள் செல்வதன் மூலம் புதிய ஒட்டுகளை உருவாக்கலாம். உதாரணமாக, "அனைவருக்கும் வணக்கம்" எனும நிரலாக்கத்தை எதிரொலிக்க செய்வதற்கு -F 'f: 1 = <-' என்றவாறு கட்டளைவரியை உள்ளீடு செய்தால் போதும் உடன் ix.io எனும் இந்த தளமானது ix.io க்கு ஒரு இணைப்பை வழங்கும், அங்கு "அனைவருக்கும் வணக்கம்" எனும் செய்தி ஒட்டப்படுகிறது. பிழைத்திருத்த நோக்கங்களுக்காக பதிவுகளைப் பகிர விரும்பினால் அல்லது மேசைக்கணினி சூழல் இல்லாத சேவையகங்களில் உள்ளமைவு கோப்புகளை சேமிக்க விரும்பும் போது இது மிகவும் வசதியானது. ஒரு தீங்கு என்ன வென்றால், நம்முடைய மூலக் குறிமுறைவரிகள் கட்டணமற்றாதாகவும் கட்டற்ற தாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தாலும் அது இன்னும் வெளியிடப் படவில்லை. நிரலாளராக இருந்து இந்த இடுகையைப் படிக்கின்றோம் எனில், தயவு செய்து ஏதேனும் நிரலாக்க குறிமுறைவரிகளை இதில் சேர்த்து நம்முடைய பங்கை யளித்திடுக, இதனால் இந்த தளத்தின் பயன்பாட்டிற்கான மெருகூட்டல் செயல் முறைக்கு நம்மாலும் பங்களிக்க முடியும். மேலும் கூடுதல் தகவலைப் பெறுவதற்கு https://github.com/xero/ix.io-syntax/ எனும் இணையதளத்திற்கு செல்க


3.asciinema இது மற்றொரு முனைம கருவியாகும். நம்முடைய முனைமத்தை பதிவு செய்ய இது நம்மை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன, ஆனால் விளக்கக்காட்சிகளுக்கு மாதிரி செயல்முறைகளை உருவாக்க பொதுவாக இதைப் பயன்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது, மேலும் பல்வேறு லினக்ஸ் விநியோகங்களும் பிற தளங்களுக்கான தொகுப்புகளும் இதில்உள்ளன.இது எவ்வாறு இயங்குகிறது என்பதை இதுனுடைய அருமையான மாதிரி காட்சியைப் பார்த்திடுக. இதனை பற்றிய கூடுதல் தகவலைப் பெறுவதற்கு
https://asciinema.org/ எனும் இணையதளத்திற்கு செல்க,

4.GNOME Pomodoro இது அடிப்படையில் ஒரு நேர மேலாண்மை கருவியாக. இது ஒரு தக்காளி வடிவ கடிகாரத்தைப் பயன்படுத்து கிறது, இது பணி நேரத்தை பல்வேறு பணித்துண்டுகளாகவும் இடைவெளிகளாகவும் பிரிக்க உதவுகிறது (முன்னிருப்பாக, 25 நிமிட பணி, ஐந்து நிமிட இடைவெளிகளைத் தொடர்ந்து). மேலும், ஒவ்வொரு நான்கு pomodoros களுக்கும் பிறகு, நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்ளமுடியும் (இயல்பாக 15 நிமிடங்கள்). இதன் பயன் என்னவென்றால், நாம் நம்முடை பணிநேரத்தில் நம்முடைய பணியில் மட்டும் அதிக கவனம் செலுத்திடலாம், மேலும் இடைவெளிகளில் நீட்டித்து ஓய்வெடுக்கலாம்.இது பயன்படுத்த மிகவும் எளிமையானது, வாழ்க்கையை கட்டுப்படுத்த ஒரு தக்காளி வடிவ கடிகாரத்தை அனுமதிக்க நாம் தயங்கக்கூடும், ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களில் கவனம் செலுத்த முயற்சிக்கும்போது சிறப்பாக ஒழுங்கமைக்கவும் சோர்வைத் தவிர்க்கவும்இது பேருதவியாக விளங்கும்.
நம்முடைய பங்கு என்னவாக இருந்தாலும், இந்த நடைமுறையை பயன்படுத்தி கொள்ளுமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது. அதை செயல்படுத்தும் பல்வேறு கருவிகளில், GNOME Pomodoro எனும் பயன்பாட்டை பரிந்துரைக்கப்படுகின்றது. இது முக்கிய குனு / லினக்ஸ் வெளியீடுகளில் கிடைக்கிறது, எனவே இதனுடைய மேசைக்கணினி சூழலைப் பயன்படுத்திகொள்க (இது அதன் எதிர்மறையாக இருக்கலாம்). இதனை பற்றிய கூடுதல் தகவலைப் பெறுவதற்கு
https://gnomepomodoro.org/ எனும் இணையதளத்திற்கு செல்க,


5.Jitsi தொலைதூரத்தில் அதாவது , உலகளவில் நாம் எங்கிருந்தாலும் ஏதாவது ஒரு குழுவில் இணைந்து பணிபுரியும் போது, அவ்வாறு குழுஉறுப்பினர்களுடன் இணைவதற்கு நமக்கு வழியொன்று தேவைப்படுகின்றது. உடனக்குடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு சில நேரங்களில் குழுஉறுப்பினர்களுடன் நேருக்கு நேர் அவ்வாறான செய்திகளைப் பற்றி விவாதிக்கவேண்டியுள்ள நிலையில் (நன்றாக, ஒருவருக்கொருவர் குழுஉறுப்பினர்களின் முகங்களைப் பார்த்து விவாதிப்பது). இதற்காக கானொளி காட்சி கூட்டம் நடத்துவதற்கான கருவிகள் ஏராளமான அளவில் உள்ளன, அவற்றுள் Jitsi.எனும் கருவி மிகவும பயனுள்ளதாகும். இதுகட்டணமற்றதாகவும் கட்டற்றதாகவும் இருப்பதால் மட்டுமல்லாமல், இது ஒரு தெளிவான, செயல்பாட்டு இடைமுகத்தை வழங்குகிறது மேலும் இதனை நம்முடைய சொந்த கானொளிகாட்சி கூட்டத்திற்கான சேவையகத்தை நாமே அமைக்கமுடியும் (வணிக நோக்கங்களுக்காக), ஆனால் இதனுடைய வலைத்தளத்திற்குச் செல்வதன் மூலம்இதனுடைய மாதிரியையும் முயற்சி செய்யலாம்.இந்த வகையான சந்திப்பை அமைப்பதற்கான ஒரு நல்ல நடைமுறை: நம்முடைய மனதில் தெளிவான நிகழ்ச்சி நிரல் இருக்கும்போது மட்டுமே அதைப் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்ப்படுகின்றது. இதனை பற்றிய கூடுதல் தகவலைப் பெறுவதற்கு
https://jitsi.org/ எனும் இணையதளத்திற்கு செல்க,

Jupyter எனும் பயன்பாட்டினை நம்முடைய எதிர்பாராத செயல்களுக்குகூட பயன்படுத்தி கொள்ளமுடியும்

பொதுவாக தரவு பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்படுகின்ற   ஒரு மென்பொருளாக Jupyterஎன்பது இதுவரையில் இருந்து வருகின்றது   ஆயினும் இது  தரவு பகுப்பாய்வு கருவியை விட மிகச்சிறந்ததாக அமைந்துள்ளது. ஆனால் இதனை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாததும்   ஜூபிட்டரின்சமூககுழுவினால் எதிர்பார்க்கததுமான எத்தனையோ செயல்களை இதன்வாயிலாக செய்யமுடியும்  இந்த ஜூபிட்டரைப் பயன்படுத்திடுகின்ற  எதிர்பாராததும் ஆக்கபூர்வமானதுமான முதன்மையான ஐந்துசெயல்கள் பின்வருமாறு

 1. உருவப்படங்களை கையாளுதல் :உருவப்படங்களில் திருத்தம் செய்வதற்காகவும்  அவற்றை கையாளுவதற்காகவும் இதில் சிறந்த பல்வேறு கட்டற்ற கருவிகள் உள்ளன – Photoshop இன் போட்டியாளர்களிடமிருந்து Glimpse இன் பரிசோதனை பணிவரைஉள்ள எல்லா வாய்ப்புகளுடனும் கூட, ஒருசில நேரங்களில் நாம் பைத்தான் உலகத்தை விட்டு வெளியேற விரும்புவதில்லை. அதிர்ஷ்டவசமாக, ஒளி பட கையாளுதலுக்கு இந்த ஜூபிட்டர் எனும் பயன்பாடு ஒரு சிறந்த மாற்று வழியாக திகழ்கின்றது . இந்த  Jupyterஎனும் பயன்பாடு நேரடியாக தலையணை போன்ற பொருட்களை சுருக்கி சிறிய படங்களாகக் காட்டுகிறது என்ற உண்மையைப் பயன்படுத்தி, நாம் விரும்பும் அளவுக்கு படங்களை பரிசோதிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஒரு வண்ணமயமான புத்தகத்தை உருவாக்க இதைப் பயன்படுத்திகொள்ளமுடியும்

 2. தொலைதூர கட்டுபாட்டிற்காக ஒரு SSH jumpbox  உருவாக்குதல்:  கோப்புகளை பதிவேற்றவும் பதிவிறக்கவும், கோப்புகளைத் திருத்தவும், முனைமங்களை இயக்கவும் இதனுடைய JupyterLab நம்மை அனுமதிப்பதால், இது ஒரு SSH jumpbox சூழலை உருவாக்க தேவையான அனைத்து பகுதிகளையும் கொண்டுள்ளது. ஒருசில SSH- பகிர்தல் எனும் மந்திரத்தால், ஃபயர்வாலின் மறுபுறத்தில் ஜூபிட்டரை  தொலை தூர முகப்புத்திரையாக மாற்றலாம்.

  3. இணைய பயன்பாடுகளை உருவாக்குதல் : இந்த ஜூபிட்டரைப் பயன்படுத்திடு வதற்கான நமக்கு பிடித்த வழிகளில் ஒன்று எதிர்பாராத வகையான மென்பொருள் மேம்பாடாகும். இதனுடைய Jupyter notebook பயன்படுத்தி நிகழ்வுநேரத்தில் ஒரு இணைய பயன்பாட்டை உருவாக்கிடமுடியும் அவ்வாறு இணைய பயன்பாடு உருவாக்குகின்ற  இடத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டத்து அவ்விவாதத்தில் XSS-, CSS ஆகிய இரண்டும் இணையபயன்பாடு உருவாக்குவதில் மிகவும் – ஒரு எளிய வடிவத்துடளும்  பாதுகாப்பான தாகவும் ஒரு சில ஒளி சேவையக பக்க கணக்கீடுகளையும் உள்ளடக்கியதாகவும்  உள்ளன  என்றும் தெரியவருகின்றது . ஆ.யினும் இதனுடைய Jupyter notebook  ஒரு சிறந்த இணைய பயன்பாடு உருவாக்கிடும் திறனுடன் விளங்குகின்றது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத செய்தியாகும் ஆனாலும்  அன்றாட ஜூபிடர் பயனாளர் ஒருவரின்  ஒருசிறந்தஇணையமேம்பாட்டு சூழலாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது, இருந்தபோதிலும் அவ்வாறானபணிக்கு இது குறிப்பிடத்தக்க சக்திவாய்ந்த ஒன்றாகும்.

 4. நமக்கு பிடித்த சேவைகளிலிருந்து அறிக்கைகளை உருவாக்குதல் :   JupyterLabஇல் தரவு பகுப்பாய்வு என்பது ஒரு பொதுவான பயன்பாடாகும், ஆனாலும் அதற்குஅப்பால் இதனை பயன்படுத்திடமுடியும்  அதாவது நம்முடையதினசரி நாட்காட்டியை பகுப்பாய்வு செய்ய இதனை பயன்படுத்தலாம். அதனோடு நமக்கு பிடித்த சேவைகள் API ஐ பதிவேற்றம் செய்ய அனுமதித்தால், அல்லது ஒரு CSV ஐ பதிவேற்றும் செய்ய அனுமதித்தால், நம்முடைய நாட்காட்டிக்கு எதிரானவற்றை நாம் தொடர்புபடுத்தமுடியும். இன்று நாம்  நம்முடைய மேலாளருடனான சந்திப்பில் இருக்க வேண்டும் என்று நாட்காட்டி  கூறுகின்றபோது நாம் சமூக ஊடகங்களில் இடுகையிடுகின்ற பணியில் ஈடுபட்டுள்ளோம்  என கண்டறிந்தால், இது நமக்கு அதனை திருத்தி நம்முடைய மேலாளருடனான சந்திப்பை மேற்கொள்ள உதவுகின்றது! 

5. விளையாட்டுகளை உருவாக்குதல் :இதனுடைய  ஜூபிட்டர் நோட்புக் எனும் பயன்பாட்டினைகொண்டு நம்முடைய  குழந்தைகளுடன் பொழுதுபோக்குவதற்கான ஒரு விளையாட்டை நாமே உருவாக்கிடமுடியும்.  விளையாட்டு இயக்க வியலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது விளையாட்டு மேம்பாட்டுக்கான இந்த செயல்பாட்டு அணுகுமுறை குறிப்பாக உதவியாக இருக்கும். விளையாட்டிற்கான மாற்றத்தைஅவ்விதிகளின் நடுப்பகுதியில் மாற்ற முடியும்.

இவற்றை  பற்றிய கூடுதல் தகவலைப் பெறுவதற்குhttps://jupyter.org/எனும் இணையதளத்திற்கு செல்க,

சந்தேகத்தை தீர்வுசெய்திடமுடியுமா?

ஒரு தமிழகத்தின் மாணவர் ஒருவர் மனக் கணக்கீட்டில் மிகவும் வல்லவர் .ஆனால் அவ்வாறு மனக் கணக்கீடு செய்யும் போதெல்லாம் அடிக்கடி வானத்தை பார்க்கும் பழக்கம் உள்ளவர். அவர் ஒரு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ஆவார், கணினி அறிவியலில் மிக வல்லவர். அவர் தான் தங்கியுள்ள தனது பல்கலைகழக விடுதிக்கு அருகிலுள்ள ஒரு பல்வேறு பொருட்களை விற்பணை செய்திடும் பெரிய கடையில் பகுதிநேர பணிசெய்து வருகின்றார். அவர் தனது பகுதிநேர பணியின்போது யாரிடமும் அதிகம் பேசமாட்டார், ஆனால் அவர் நேர்மையானவர், கடின உழைப்பாளி, வாடிக்கையாளர்களிடம் நன்கு பழககூடியவர் ஆவார். அதனால் கடை உரிமையாளர் அவரை தன்னுடைய சொந்த மகனைபோன்று அம்மாணவரிடம் மிகஅதிக பற்றும் பாசமும் காட்டிடுவார். ஒரு நாள் அம்மானவர் தனது பணியில் இருந்தபோது, கடையில் வாடிக்கையாளர் ஒருவர் காசாளரிடம் தன்னுடைய கட்டணத்தை செலுத்திகொண்டிருந்தார், அப்போது திடீரென்று அந்த கடையின் காசாசளர் பயன்படுத்திடும் கட்டணத்தை வசூலிக்கின்ற பட்டைகோடு வருடியானது( barcode scanner) செயல்படாமல் நின்றுவிட்டது. அதனால் வாடிக்கையாளர் களிடமிருந்து பொருட்களுக்கான தொகைகளை கணக்கிட்டு வசூலிக்கும் காசாளின் பணி அப்படியே நின்றுவிட்டது அதனை கண்ணற்ற நமது மாணவர் உடன் பட்டைகோடு வருடி அல்லது கணினியின் உதவியின்றி, கணக்கீடுகளில் தனது சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு பொருளிலும் அச்சிடபட்ட பட்டை கோட்டினை சுருக்கமாக கணக்கீடு செய்த பிறகு வாடிக்கையாளரிடமிருந்து பெறவேண்டிய மொத்தத் தொகையை குறிப்பிட்டு கட்டணத்தினை வசூலி்க்கும் பணிக்குஉதவிடும் சேவை செய்ய ஆரம்பித்தார், . கடை உரிமையாளர் அம்மாணவரின் திறனைபார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார் அதாவது அம்மாணவர் பொருட்களில் கட்டப்பட்ட அட்டையில் அச்சிட்டுள்ள பட்டைகோடுகளை விரைவாகப் பார்த்தபின்னர், அரை விநாடி வானத்தை அன்னாந்துப் பார்க்கிறார், அதன்பின்னர் அந்த பொருட்களின் மொத்தத்தொகையை குறிப்பிடுகின்றாரே இது எவ்வாறு சாத்தியமாகின்றது என அவரால் நம்பமுடிய வில்லை: மேலும் அந்த கடை உரிமையாளர் தூரத்தில் தனது பகுதி யிலிருந்தவாறே ஒரு கணக்கிடும் கால்குலேட்டரின் உதவியுடன் அம்மாணவர் கணக்கிட்ட பொருட்களின் தொகைகளை ஒப்பீடு செய்து சரிபார்த்தபோது அப்பொருட்களுக்கானதொகை மிகவும் சரியாக இருந்ததை கண்டு மிகவும் ஆச்சரியபட்டார், அம்மாணவர் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் அவர்கள் கொள்முதல் செய்வதற்காக எடுத்துசென்ற பொருட்களுக்கான தொகை மிகச்சரியாக கணக்கிட்டு வசூலிக்கஉதவியதை சரிபார்த்து. உரிமையாளர் பேராச்சரியம் அடைந்தார். கடைசியாக, ஒரு வாடிக்கையாளர் திருப்தியுடன் வெளியேறிய பிறகு, அந்த கடையின் உரிமையாளர் அம்மாணவரை அணுகி, தன்னுடைய நிச்சயமற்ற குரலில் அம்மாணவரிடம் “நீங்கள் எவ்வாறு பட்டைகோடுகளுக்கான வருடியோ அல்லது கணினியோ இல்லாமல் வானத்தை மட்டும் அன்னாந்து பார்த்து மிகச்சரியாக வாடிக்கையாளர் கொள்முதல் செய்து கொண்டு செல்லும் பொருட்களுக்கான விலையை மிகச்சரியாக கோரி வசூலிக்க உதவுகின்றீர்கள் . உங்களுடைய கணக்கீட்டில் உதவி செய்வதற்காக வானத்தில் , மேககணினி (cloud computing )ஏதேனும் இருக்கின்றதா?” என தன்னுடைய சந்தேகத்தை தீர்வுசெய்வதற்கானகேள்வியை கேட்டார். என்ன வாசகரே! கணினியில் மிகத்திறனுடைய நீங்களாவது அந்த கடையின் உரிமையாளரின் சந்தேகத்தை தீர்வுசெய்திடுங்களேன் .

சங்கிலி தொகுப்பின் தொழில்நுட்ப வழிகாட்டி. 21.சங்கிலியின் மையம்

சங்கிலியின்மையம்(Chain Core) என்பது 2014 ஆம் ஆண்டில் Chain Inc எனும் நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்ட ஒரு சங்கிலிதொகுப்பினை மேலாண்மை செய்திடும் மென்பொருளாகும். அனுமதிக்கப் பட்ட சங்கிலிதொகுப்பின் வலைபின்னல்களை நிருவகிக்க இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சங்கிலியின் மையமானது எந்தவொரு சுதந்திரமான சங்கிலிதொகுப்பினையும் நிருவகிக்கும் திறன்மிக்கது அல்லது வெவ்வேறு அனுமதிக்கப்பட்ட சங்கிலிதொகுப்புகளுக்கான சங்கிலிதொகுப்பின் வாடிக்கையாளராக செயல்படுகிறது. சங்கிலியின்மையமானது பல்வேறு சங்கிலிதொகுப்புகளின் பேரேடுகளின் நகலை வைத்திருக்கிறது மேலும் பரிமாற்றங்களின் சரிபார்ப்பின் போது இந்த பேரேடுகளைப் புதுப்பிக்கின்றது. சங்கிலியின்மையத்தில் உள்ள சரிபார்ப்பும் நிலைத்தன்மையும் சங்கிலித்தொகுப்பின் கூட்டமைப்பால் உறுதி செய்யப்படுகிறது. இங்கே மின்னனு நாணயங்கள், கடனீட்டுஆவணங்கள், கடன்பத்திரங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னனு சொத்தும் பொதுவான வடிவத்தில் வழங்கப் படுகின்றன மேலும் அவை நம்பகமான வழங்குநரால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதிப்பின் குறிப்பிடப்பட்ட எந்தவொரு அலகையும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றன.
இந்த சங்கிலியின் மையமானது கட்டற்றதும் கட்டணமற்றதுமாகம் இது மேம்படுத்துநர் பதிப்பு . நிறுவன பதிப்பு ஆகிய இரண்டு பதிப்புகளாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. மேம்படுத்துநர் பதிப்பை முன்மாதிரிகளை பரிசோதிக்கவும் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படுத்தலாம். ஆயினும் இந்த முன்மாதிரியின் அடிப்படையில் அசல் தயாரிப்பை உருவாக்கிடவும் வரிசைப்படுத்திடவும் நிறுவன பதிப்பு அவசியம் தேவையாகும்.
முன்னணி நிதி சேவை நிறுவனங்களான Visa, Citi போன்றவை இந்த சங்கிலியின் மையத்துடன் இணைந்து தங்களுடைய சங்கிலிதொகுப்பின் உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன.
அடிப்படையில் இந்த மென்பொருளில் மூன்று செயல்பாடுகள்(இயக்கங்கள்) உள்ளன.
1. ஒரு சங்கிலிதொகுப்பினைஉருவாக்குதல்.
இந்த வாய்ப்பு ஒரு புதிய சங்கிலிதொகுப்பினை உருவாக்குவதற்கானது. சங்கிலியின் மையமானது ஒரு தொகுப்பினை உருவாக்குநராகவும், உருவாக்கப்பட்ட பிணையத்தில் ஒரு தொகுப்பு கையொப்பமாகவும் செயல்படுகிறது. இந்த சங்கிலியின்மையம் உருவாக்கிய பிணையத்திற்கு ஒரு இணையதள முகவரியும் (URL) ஒரு சங்கிலிதொகுப்பின் சுட்டியையும்(id) வழங்குகிறது. இந்த வலைபின்னலில் மற்றொரு மையம் இணையும் போது இந்த சுட்டியும் இணையதளமுகவரியும் மிகவும்பயனுள்ளதாக அமையும்

2. ஏற்கனவேஉள்ள சங்கிலி தொகுப்பின் வலைபின்னலுடன்இணைத்தல்
இந்த வாய்ப்பானது ஏற்கனவே இருக்கும் வலைபின்னலுடன் இணைப்பதற்கான ஒரு மையத்தை செயல்படுத்துகிறது. பயனாளர்ஒருவருக்கு ஒரு சங்கிலிதொகுப்பின் URL,அந்த சங்கிலிதொகுப்பின் சுட்டி, பரிமாற்றங்கள் மின்னனு சொத்துக்கள் ஆகியவற்றை நிருவகிப்பதற்கான செயலில் அணுகல் அனுமதிசீட்டு ஒன்று ஆகியவை இருக்க வேண்டும்.
3. பரிசோதனை சங்கிலிதொகுப்பின் வலைபின்னலுடன்இணைத்தல்
இந்த வாய்ப்பானது அடிப்படையில் ஆரம்பநிலையை சார்ந்ததாகும். அவை சங்கிலியின் மையத்தில் சங்கலிதொகுப்பின் வலைபின்னலில் சேரலாம் தனக்கென தனியாக கணக்கு ஒன்றினை உருவாக்கிடலாம், பரிமாற்றங்கள், மின்னனு சொத்து மேலாண்மை போன்ற அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் சங்கிலிதொகுப்பின் வலைபின்னலை பரிசோதிக்கலாம்.
மேம்டுத்துதலும்பாதுகாப்பும்
சங்கிலியின் மைய பயன்பாட்டை ஜாவா, node.js அல்லது ரூபி ஆகிய கணினிமொழிகளின் மூலம் உருவாக்கலாம். அந்தந்த தொகுப்புகளும் API களும் அந்தந்த களஞ்சியங்களில் கிடைக்கின்றன. சங்கிலியின் மையமானது ஒரு உற்பத்தி சூழலுக்கு HSM (வன்பொருள் பாதுகாப்பு தொகுதி) ஐப் பயன்படுத்தி கொள்கின்றது. மற்ற தளங்களுடன் ஒப்பிடும்போது இந்த அணுகுமுறையானது மின்னனு சொத்துக்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு தரத்தை வழங்குகிறது. சங்கிலியின் மையானது சொத்துக்களை பூட்டுவதற்கும் திறப்பதற்கும் தனியார்திறுவுகோள், பொதுதிறுவுகோள் ஆகிய இரு இணையான திறுவுகோள்களைப் பயன்படுத்துகிறது. சொத்துக்கள் எப்போதும் ஒரு கட்டுப்பாட்டு நிரலுடன் ஏற்றப்படு கின்றன. இந்த கட்டுப்பாட்டு நிரல்களை தரவுகளுடன் (பொதுதிறுவுகோளை) இயக்கு வதன் மூலம் பரிமாற்றங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இது சரியான முடிவை அளித்தால், பரிமாற்றம் செல்லு படியாகும் என அறிவிக்கப் படுகிறது. பரிமாற்றங்க ளுக்காக ஒன்றிற்கு மேற்பட்ட திறவுகோள் களை பயன் படுத்திகொள்வதன்மூலம் அவ்வாறான பரிமாற்றங்களுக்கான பாதுகாப்பு அளவை மேம்படுத்திடமுடியும்.
Ivyம்Ivyஇன் விளையாட்டுமைதானமும்
Ivy என்பது சங்கிலியின்மையத்தில் திறனுடைய ஒப்பந்தங்களை உருவாக்குவதற்காக இந்த சங்கிலித் தொகுப்பில் உருவாக்கிய உயர் மட்ட நிரலாக்க மொழியாகும். Ivyஇன் விளையாட்டு மைதானம் திறனுடைய ஒப்பந்தத்தை உருவாக்குதல், தொகுத்தல் பதிவேற்றுதல் ஆகியவற்றிற்கான ஒரு கூடுதலான கருவியாகும். சங்கிலிதொகுப்புகளின் எண்ணிக்கை வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப் படுவதால், சங்கலியின் மையம் போன்ற ஒரு கருவியின் முக்கியத்துவம் தெளிவாகிறது. HSM போன்ற பாதுகாப்பு வசதிகள், சங்கலிதொகுப்பின் நிருவாகத்தில் எளிமை ஆகியவை சங்கிலிதொகுப்பின் நிருவாகத்திற்கு சங்கிலியின் மையத்தினை பொருத்தமான வாய்ப்பாக ஆக்குகின்றன

Coco(இரகசியகூட்டமைப்பு) இன்வரைச்சட்ட கட்டமைப்பு

Coco என சுருக்கமாக அழைக்கப்பெறும் இரகசிய கூட்டமைப்பு(Confidential Consortium) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்த ஒரு திற மூல சங்கிலி தொகுப்பின்வரைச்சட்ட கட்டமைப்பாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமானது கடந்த ஆகஸ்ட் 2017 இல் ‘Coco’ ஐ தங்களுடைய ‘Coco வரைச்சட்டத்தின் தொழில்நுட்ப கண்ணோட்டம்’ எனும் திறந்தஅறிவிப்பின் வாயிலாக அறிவித்தது. இது பிட்காயின் அல்லது எத்தேரியம் போன்ற ஒரு முழுமையான சங்கலிதொகுப்பின் நெறிமுறை மட்டுமல்லாமல், கூடுதாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒரு தளத்தையும் வழங்குகிறது. ஏற்கனவே உள்ள எந்தவொரு நெறிமுறைகளையும் பயன்படுத்தி நம்பகமான வலைபின்னல்களை உருவாக்குவதற்கு. நிச்சயமாக, எத்தேரியம் போன்ற எந்தவொரு சங்கிலிதொகுப்பின் நெறிமுறைகளுக்கும் இணக்கமாக செயல்படுமாறு இந்த Cocoஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Coco இன்சிறப்புகள்
மைக்ரோசாப்ட் நிறுவனமானது தங்களுடைய திறந்த அறிவிப்பில், “இருக்கும் அமைப்புகளில் உள்ள ஒருசில சிக்கல்களையும், அவ்வாறான சிக்கல்களை தங்களுடைய Coco ஆனது எவ்வாறு தீர்வுசெய்கின்றது என்பதையும் இது சுட்டிகாட்டுகின்றது”. என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அமைப்புகளில் இந்நிறுவனம் சுட்டிக்காட்டும் முக்கிய குறைபாடுகள்பின்வருமாறு
குறைந்தபரிமாற்றங்களின்செயல்திறன்:பொது Ethereum வலைபின்னலின் சராசரி செயலாக்க வீதம் வினாடிக்கு 20 பரிமாற்றங்கள் மட்டுமே, இது ஒரு நிறுவன சூழலில் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாமல் மிகவும் பின்தங்கி யிருக்கிறது. பிற சங்கிலிதொகுப்புகளின் வலைபின்னல்கள் நிறுவன நிலை பரிமாற்றங்களின் வீதத்தை பூர்த்தி செய்யத் தவறிவிடுகின்றன.
அதிக காலதாமதம்:பொது Ethereumவலைபின்னலின் சராசரி தாமதமானது சுமார் 10-20 வினாடிகள் ஆகும், இது பிட்காயின் வலைபின்னலில் 10-15 நிமிடங்கள் ஆகும். இத்தகைய அதிககால தாமதமானது வணிகச் சூழலில் ஒரு பெரிய இடையூற்றின் விளைவை உருவாக்கும்.
ரகசியத்தன்மைஇல்லாதது:பொது சங்கிலிதொகுப்பின் வலைபின்னல்களில், ஒவ்வொரு பரிமாற்றத்தையும் பார்வையிடுவதற்கு அனைவருக்கும் அனுமதி உண்டு. வணிக சூழலில் இது நிச்சயமாக வரவேற்கத்தக்க செய்தி அன்று, அங்கு பல்வேறு போட்டியாளர்களும் வலைபின்னலின் பல்வேறு பகுதிகளாக இருக்கலாம்

பயனுள்ளநிருவாகத்தின்பற்றாக்குறை:பொது சங்கிலி தொகுப்பின் வலைபின்னல்கள் பெரும்பாலும் சுதந்திரமாக நிருவகிக்கப் படுகின்றன அல்லது பயனாளர்களால் கூட்டாக நிருவகிக்கப்படுகின்றன. இது பல்வேறு வேறுபட்ட சூழல்களுக்கு குறிப்பாக வணிக நிலை வலைபின்னல்களுக்குபொருந்தாது, .
குறைந்தகணக்கீட்டுதிறன்:வலைபின்னல் மேலும் வளர்ந்து விரிவடையும்போது, சுரங்கத்திற்குத் தேவையான கணக்கீட்டு சக்தியும் வளருகின்றது. இதனால் இதற்கு தேவையான ஆற்றலும் மிகப் பெரியதாக உயர்ந்துவிடுகின்றது. பிட்காயின் வலைபின்னலின் ஆண்டு ஒன்றிற்கான ஆற்றல் நுகர்வு சுமார் 15 TWh ஆகும் !!!. இந்த சிக்கல்களை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் Fabric, Cordaபோன்ற புதிய சங்கலி தொகுப்பிற்கான தளங்களும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் இவற்றில் ஒருசில குறிப்பிட்டதொரு வணிகத்தினுடைய களத்தின் தேவைகளைமட்டுமே பூர்த்தி செய்திடுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளன. இன்னும் சில சங்கிலி தொகுப்புகள் சிக்கலான வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுவன நிலை கட்டுப்பாடு , பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கிவருகின்றன, ஆனால் இவையனைத்தும் செயல்திறனில் சமரசம் செய்து கொள்கின்றனள். மேலும், புதியதாக உருவாக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட ஒரு வசதிக்கு இடமளிக்க நெறிமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது, பயனாளர் தன்னுடைய நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்பத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதனால் இந்த புதிய அமைப்பைப் புரிந்து கொள்வதற்கும் அதில் பணி செய்வதற்கும் சிறிது கால அவகாசம் எடுத்து கொள்ளவேண்டியுள்ளது.
CoCoவின்நன்மைகள்
மைக்ரோசாப்டின் கூற்றுப்படி, இந்த Coco கட்டமைப்பானது தற்போதுள்ள அமைப்புகளின் குறைபாடுகளை நீக்குகின்றது, மேலும் இது பின்வரும் நன்மைகளை யும் கூடுதலாக வழங்குகிறது.

இது நிறுவன தேவைகளை நிறைவுசெய்வதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்திறனை உயர்த்துகின்றது காலதாமதத்தினை குறைக்கின்றது.மிகப்பெரியதாகவும், நெகிழ்வானதாகவும் எளிமையானதாகவும் அமையுமாறு இரகசியத்தன்மை மாதிரிகளை வழங்குகின்றது.பிணைய கொள்கை மேலாண்மையையும் விநியோகிக்கப்பட்ட ஆளுகையும் வழங்குகின்றது.நிர்ணயிக்காத பரிமாற்றங்களுக்குஇது உதவுகின்றது. மேலும் இது ஆற்றல் நுகர்வினை குறைக்கின்றது
இன்டெல்லின் SGX அல்லது விண்டோவின் மெய்நிகர் பாதுகாப்பான பயன்முறை (VSM) போன்ற நம்பகமான செயலாக்க சூழல்களை (TEEs) பயன்படுத்துவதன் மூலம்இந்த Cocoஆனது செயல்திறன் குறியீடுகளை அடைகிறது..இந்த அணுகுமுறை Coco வை நம்பகமான முனைமங்களின் வலைபின்னல்களை உருவாக்க உதவுகிறது மேலும் விநியோகிக்கப்பட்ட பேரேடுகள் இவற்றின் மேல் இயங்குகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனமானது Cocoஇன் வரைச்சட்ட கட்டமைப்பை கட்டற்றதாக அறிமுகப்படுத்துவது சங்கலிதொகுப்பில் ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு கூறியது போல், Coco ஒரு முழுமையான சங்கலிதொகுப்பின் நெறிமுறை அன்று. உண்மையில், இது சங்கிலிதொகுப்பின் வலபின்னல்களை அதன் மேல் அமைப்பதற்கான ஒரு அடித்தளத்தை வழங்குகிறது. இதனால் Coco உடன், எந்தவொரு நெறிமுறையிலும் சங்கலிதொகுப்புகளை உருவாக்க முடியும் அதனோடு நிறுவனங்கள் தங்களுடய வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய ஒரே செயல்திட்டத்தில் வெவ்வேறு சங்கிலி தொகுப்பின் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க முடியும். அதுமட்டுமல்லாது மேம்பாட்டு செயல்முறையை எளிதாக்கவும் மேம்படுத்தவும்இந்த Cocoஆனது பல்வேறு கூடுதல் வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. முடிவாக,தற்போது கிடைக்கும் தகவல்களிலிருந்து இதுவரை, இந்த Cocoஆனது சங்கிலிதொகுப்பின் அடிப்படையிலான நிறுவன பயன்பாடுகளின் தொட்டிலாக இருக்க வாய்ப்புள்ளது என நம்பப்படுகின்றது

தொடரும்

Umami எனும் பயன்பாடு ஒரு அறிமுகம்


Umami என்பது , பயன்படுத்த எளிதான, சுதந்திரமாக நிறுவுகை செய்யப்பட்ட இணைய பகுப்பாய் விற்கான தீர்வாக செயல்படுகின்ற ஒரு கட்டற்றபயன்பாடாகும். இது கூகுள் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு நட்புடன்கூடிய, தனியுரிமையை மையமாகக் கொண்ட கட்டண தீர்வுகளுக்கு மாற்றான கட்டணமற்ற, கட்டற்றதாக வழங்குவதே குறிக்கோளாக கொண்டதொரு எளிய பயன்பாடாகும் இது நாம் விரும்பும் அளவீடுகளை மட்டுமே சேகரிக்கிறது, மேலும் அவையனைத்தை யும் ஒரே பக்கத்தில் பொருந்துமாறு செய்கின்றது நாம் விரும்பும் முக்கியமான அளவீடுகளை எளிதாக பகுப்பாய்வுசெய்கின்றது:, பயன்படுத்தப்படும் சாதனங்கள் எவை , பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள். ஆகிய விவரங்களுடன் நாம் இணையத்தில் எளிதாக உலாவருவதற்கு ஏற்ப இதனுடைய பக்கக் காட்சிகள் ஒரேபக்கத்தில் காட்டப்படுகின்றன. ஒரே நிறுவுகையிலிருந்து வரம்பற்ற வலைத்தளங்களை இதன்வாயிலாக கண்காணிக்க முடியும். துணை செயற்கள பகுதிகள், தவறான URL களைக் கூட இதன்வாயிலாக கண்காணிக்க முடியும்.
இதனை சொந்த செயற்களபகுதியின் கீழ் நிறுவுகை செய்யப்படுவதால், கூகுள் பகுப்பாய்வு போலல்லாமல் இதில் விளம்பரத் தடுப்பாளர்களை கொண்டு தேவையற்ற விளம்பரங்களை தவிர்க்கலாம்.
இது மிகவும் குறைந்த கொள்ளளவு கொண்டது அதாவது இதனுடைய: கண்காணிப்பு நிரலாக்ககோப்பின் அளவுமிகவும் சிறியது (6kb க்கும் குறைவானது) மேலும் IE போன்ற மரபு உலாவிகளை இதுஆதரிக்கிறது.
இதனை சுதந்திரமாக நிறுவுகைசெய்துகொள்ளலாம் என்பதால் எல்லா தரவுகளையும் நாமே வைத்திருக்கலாம்.அதனால் நம்முடைய தரவுகளை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்க தேவையில்லை.
நண்பர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கான தரவுகளை நிறுவுகை செய்ய இதனைப் பயன்படுத்தலாம். இதற்கெனதனியாக கணக்குஒன்றினை உருவாக்கி,சொந்த வலைத்தளங்கலின் வாயிலாக தங்களுடைய சொந்த முகப்புத்திரையில் கண்காணிக்க துவங்கலாம். புள்ளிவிவரங்களை பொதுவில் பகிர விரும்பினால், தனித்துவமாக உருவாக்கப்பட்ட URL உடன் பகிரந்துகொள்ளலாம். இது தனியுரிமை மையமாகக் கொண்டது: இதுதனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலையும் இது சேகரிக்காது மேலும் சேகரிக்கப்பட்ட எல்லா தரவுகளையும் அநாமதேயமாக்குகிறது. இதுஒரு திறமூலபயன்பாடாகும் மேலும்இது MITஎனும்உரிமத்தின் கீழ் வெளியிடபெற்றுள்ளது. இதனுடைய மூல குறிமுறைவரிகளை Github எனும் களஞ்சியத்தில் கிடைக்கின்றது. மேலும் விவரங்களுக்கு https://umami.is/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க