துவக்க நிலையாளர்களுக்கான சங்கிலி தொகுப்பு தொழில்நுட்ப வழிகாட்டி-1

இன்றைய நவீன காலகட்டத்தில் சங்கிலி தொகுப்பு (Blockchain) தொழில்நுட்பம் என்பதுதான் இணையத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாது பெரும்பாலானவர்களின் மத்தியில் விவாதிக்கப்படும் முதன்மையான செய்தியாகும் அதிலும் தற்போதுசங்கிலி தொகுப்பு தொழில்நுட்பமும் , மறையாக்கபணங்களும் (crypto-currencies) இணையான தளங்களாக மாறிவிட்டதால் பொதுமக்கள் தங்களுடைய நிலையான செந்தரமான பணபரிவர்த்தனைகளைஇவ்விரண்டிலும் செயற்படுத்திட துவங்கிவிட்டனர்..பொதுவாக பழைய அமைப்பில் ஏதேனும் ஒருசில பிரச்சினைகள் ஏற்படுகின்றபோதுதான் யாரும் அதிலிருந்து புதிய அமைப்பிற்கு மாறிடுவார்கள்அல்லவா !தற்போது நடைமுறையில் பணபரிவர்த்தனை நடிவடிக்கைகளை நிருவகிப்பதற்காக பல்வேறு வங்கிகள் இருக்கும்போது இந்த புதிய சங்கிலி தொகுப்பு தொழில்நுட்பத்திற்கு ஏன்மாறிடவேண்டும் ? என்ற வினா நம்மனைவரின் மனதிலும் எழுமன்றோ !.அதனால், முதலில் தற்போது புழக்கத்திலுள்ள பழைய வங்கி அமைப்பில் எழுகின்ற அவ்வாறான சிக்கல்கள். யாவையென நாம் அறிந்து கொண்டால் மட்டுமே அவைகளை தீர்வு செய்வதற்காகத்தான் புதிய நடைமுறைக்கு மக்கள்மாறுவதற்காக தயாராகி விட்டார்கள் என தெளிவாக புரிந்துகொள்ளமுடியுமல்லவா!
தற்போதைய நிலையில் ‘அ ‘என்பவர் ‘ஆ’ என்பவருக்கு தொகைரூ.1000/-ஐஅனுப்பினால் இதற்கான பணபரிமாற்ற கட்டணமாக 0.2 சதவிகிததொகையை அனுப்புபவர் அல்லது பெறுபவர் கணக்கிலிருந்து அதாவதுரூ.2/-ஐ மட்டும் பரிமாற்ற கட்டணமாக தொடர்புடைய வங்கி எடுத்து கொள்கின்றது மேலும் நாம் அனுப்பிடும் தொகையானது எவ்வளவு உயருகின்றதோ அதற்கேற்ப இந்த கட்டணத்தொகையை உ யர்த்தி அனுப்புபவர் அல்லது பெறுபவர் கணக்கிலிருந்து கூடுதலாக தொகையை தொடர்புடைய வங்கியானது எடுத்து கொள்கின்றது இவ்வாறான வங்கி பணபரிமாற்ற கட்டணம் மட்டுமே கோடிகணக்கில் வங்கிகளுக்கு கிடைக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க.
அடுத்து 2016 ஆம்ஆண்டில் மட்டும் இந்தியாவில் ATM/கடனட்டைகள், இணையவங்கி ஆகியவை தொடர்பாக 14,824 மோசடி நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன அவற்றில் ஏற்பட்ட மொத்த இழப்பு தொகையானது ரு.77.79 கோடியாகும் அவற்றுள் ரூ.21 கோடி இணைய வங்கிகணக்கு நடவடிக்கைகளிலும் ரூ.56.79 கோடிதொகைATM/கடனட்டைகள் நடவடிக்கைகளிலும் பொதுமக்களாகிய நமக்குஇழப்பு ஏற்பட்டது
மூன்றாவதாக ‘அ’ என்பவர் தன்னுடைய இணையவங்கிகணக்கில் தொகைரூ 5000/-ஐ மட்டுமே வைத்துள்ளார் எனக்௧ொள்க ஆனால் ‘அ’ என்பவர் ரூ 4000/- ஐ ‘ஆ’ என்பவருக்கும் மற்றொரு நடவடிக்கையாக ரூ 5000 /-ஐ ‘இ’ என்பவருக்கும் தற்போதைய இணையவங்கி நடைமுறையில் பணபரிமாற்ற செயலை செயல்படுத்திடமுடியும் இந்த நடவடிக்கையை Double Spending என அழைப்பார்கள்
நான்காவதாக பொதுமக்கள் தங்களுடைய கடுமையான உழைப்பில் ஈட்டிய பணத்தினை சேமிப்பாக வங்கிகளில் இட்டுவைப்பாக வைத்திட்ட தொகையை எடுத்து முதலீட்டு நிறுவனங்களானவை subprime mortgages கடனாக வழங்கிய தொகையானது 2007-08 ஆம் ஆண்டில் உருவான கடுமையான நிதிநெருக்கடியினால் ஏறத்தாழ $11 டிரில்லியன் டாலர் அதாவது$11,000,000,000,000/- தொகை வசூலிக்கமுடியாமல் பொதுமக்களாகிய நமக்குஇழப்பு ஏற்பட்டது
இவ்வாறான பல்வேறு சிக்கல்கள் தற்போதைய வங்கி நடவடிக்கைகளில் உருவாகி பொதுமக்களுக்கு பேரிழப்புகள் ஏற்படுகின்றன அதனால் இவ்வாறான பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் உருவாகாத புதிய பணபரிவர்த்தனை நடைமுறைக்காக கைகொடுக்கவருவதுதான் இந்தசங்கிலி தொகுப்பு தொழில்நுட்பமாகும் இந்நிலையில் சங்கிலி தொகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் கண்டிப்பாக எழும் நிற்க. பல்வேறுதகவல்களைக் கொண்ட சங்கிலி போன்ற தொகுப்பினையே சங்கிலி தொகுப்பு (Blockchain) என அழைக்கப்படும் என மிகஎளிமையான சொற்களில் வரையறுக்கப்படுகின்றது.இந்த தொழில்நுட்பமானது மின்னனு ஆவணங்களில் நேர முத்திரையிடுவதை(timestamp) நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் அவ்வாறான பல்வேறுதகவல்களைக் கொண்ட சங்கிலி போன்ற தொகுப்பு நடவடிக்கைகளில் முந்தைய தேதியாக மாற்றம் செய்யவோ அல்லது அவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தம்செய்யவோ முடியாது. அதன்பயனாக பணப்பரிமாற்றம், சொத்துக்களின் பரிமாற்றம், ஒப்பந்த நடவடிக்கைகள் என்பன போன்றவற்றை பாதுகாப்பாக செயல்படுத்திடுவதற்காக இந்த சங்கிலி தொகுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. அதிலும் இவ்வாறான நடவடிக்கைகளில் வங்கி அல்லது அரசு என்பன போன்ற மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களின் தலையீடு எதுவுமின்றி எளிதாக பாதுகாப்பாக விரைவாக நடைபெற்று பயன்படுத்துபவர்களுக்கு போதுமான பாதுகாப்பான நடவடிக்கைகளின் பயன்கள் கிடைக்கின்றன. இந்த நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவிரும்பும் எந்தவொரு நபரும் ஒரு சங்கிலி தொகுப்பிற்குள் தான்விரும்பும் ஒரு தரவினை பதிவுசெய்தால் அதன்பிறகு, அதை மாற்றுவது என்பது மிகவும் கடினமான செயலாகும்.இந்த சங்கிலி தொகுப்புஎன்பது மின்னஞ்சலுக்கான SMTP போன்றஒரு மென்பொருள் ஒழுங்கு நெறி- முறையாகும் . ஆயினும், இணையஇணைப்பில்லாமல் இந்த சங்கிலி தொகுப்பினைசெயற்படுத்திட முடியாது. இது மற்ற தொழில்நுட்பங்களை பாதிக்கும் என்பதால் இது மிகப்பரிய (meta)தொழில்நுட்பம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு தரவுத்தளம், பயன்பாட்டுமென்பொருள் , இணையத்தால் இணைக்கப்பட்ட கணினிகள் ஆகிய பல்வேறு பகுதிளைக் கொண்டு இந்த சங்கிலி தொகுப்பானது செயல்படுத்தப்படுகின்றது .
மிகமுக்கியமாக நாம் கவணிக்கவேண்டிய தும்கருத்தில் கொள்ளவேண்டியதுமான செய்தி என்னவெனில் ஒருசில நேரங்களில் பிட்காயின் பிளாக்செயின் , எத்தேரியம் பிளாக்செயின் ஆகியவற்றில் இந்த பிளாக்செயின் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றதே இவ்விரண்டும் ஒன்றா ?என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழும் மேலும் வேறுசில நேரங்களில் இது மற்ற மெய்நிகர் நாணயங்கள் அல்லது மின்னனு அனுமதிசீட்டுகள் என்றும் பயன்படுத்தப் படுகின்றனவே ஏன் அவ்வாறு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது ?என பிரிதொரு சந்தேகம் உடனடியாக எழும். எது எவ்வாறு இருப்பினும், அவையனைத்தும் விநியோகிக்கப்பட்ட பேரேடுகளைப் பற்றியே குறிப்பிடப்படுகின்றது என்ற அடிப்படையான செய்தியை மட்டும் மனதில் கொள்க ஆயினும் இந்த சங்கிலிதொகுப்ப என்பது மின்நாணயம் அன்று ஆனால் சங்கிலிதொகுப்பானது மின்நாணயத்தின்()Bitcoin) பின்புல தொழில்நுட்பமாகும் என்ற கூடுதலான அடிப்படை தகவலை மனதில் கொள்க மேலும் மின்நாணயம் என்பது மின்னனு அனுமதிசீட்டாகும் இந்த மின்னனு அனுமதிசீட்டுகளை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதைக் கண்காணிக்கும் பேரேடே சங்கிலிதொகுப்ப ஆகும். பொதுவாக இந்த சங்கிலிதொகுப்பு இல்லாமல் மின்நாணயத்தை வைத்திருக்க முடியாது, ஆனால் மின்நாணயம் இல்லாமல் சங்கிலிதொகுப்பினை வைத்திருக்க முடியும் என்ற கூடுதல் செய்திகளையும் மனதில் கொள்க

எக்செல்லை திறம்படபயன்படுத்திடுவதற்கான ஆலோசனைகள்

1.எக்செல்லை பயன்படுத்தி நம்முடைய பணியை எளிதாகவும் விரைவாகவும் முடித்திட சூத்திரங்கள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன மிக சிக்கலான தருக்கங்களை அதில் கொண்டுவரும்போது இந்த சூத்திரங்கள் மிகநீண்டதாக அமையும் அதனால் சரியான விடை கிடைக்காதபோது இந்த சூத்திரங்களில் எந்தவிடத்தில் தவறு ஏற்படுகின்றது என கண்டுபிடித்திட முடியாமல் தடுமாறுவோம் அதனால் நீண்ட சூத்திரங்களை ஒவ்வொரு தருக்கம் வரையில் தனித்தனியாக அமைந்திட்டால் குறிப்பிட்ட தருக்கம் சரியாக செயல்படுகின்றதா?-என பரிசோதிக்க ஏதுவாக இருக்குமல்லவா !அதற்காக சூத்திரங்களை உள்ளீடு செய்தபின்னர் அல்லது ஏற்கனவே சூத்திரங்களை உள்ளீடு செய்திருந்தால் அதில் இடம்சுட்டியை வைத்து Alt,Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் அந்த சூத்திரங்களானவை ஒவ்வொரு தருக்கம் முடிந்துவுடன்அடுத்தவரிதுவங்குவதாக மாறியமையும் அதன்பின்னர் எந்த தருக்கத்தால்விடை சரியாகவரவில்லையென சரிபார்த்திடமுடியும்

2 பெரிய விற்பணைநிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு வகையான பொருட்களை வெவ்வேறு விற்பணைவிலையில் விற்பணை செய்திடுவார்கள் அந்நிலையில் அன்றாட விற்பணை விவரங்களின் தரவுகளை அட்டவணையாக உருவாக்கி மொத்த விற்பணைதொகையை கணக்கிடுவார்கள் அதிலும் ஒவ்வொரு பொருளின் விற்பணைவிலை ,எத்தனைஎண்ணிக்கை விற்பணைசெய்யப்பட்டன அதன்மொத்தவிற்பணை எவ்வளவு என கணக்கிடுவதற்கான சூத்திரத்தினை தனியான நெடுவரிசையாக சேர்த்து பல்வேறு நெடுவரிசைகளிலும் பொருட்களின் பெயர்வாரியாக அனைத்து பொருட்களின் பெயர்களை கிடைவரிசைகளிலும் என்றவாறு அந்நிறுவனமானது விற்பணைசெய்திடும் அனைத்து பொருட்களின் தரவுகளை நெடுவரிசைகளிலும் கிடைவரிசைகளிலும் உள்ளீடு செய்து இறுதியாக அன்றைய மொத்தவிற்பணைத்தொகை எவ்வளவு என கணக்கிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு கிடைவரிசையிலும் தனித்தனியாக விற்பணைத் தொகையை கணக்கிடாமல் ஒட்டுமொத்தமாக SUMPRODUCT எனும் சூத்திரத்தினை பயன்படுத்தி பொருட்களின் பெயர் ஒருநெடுவரிசையிலும் அவைகளின் ஒவ்வொன்றின் விற்பணைவிலை மற்றொரு நெடுவரிசையிலும் அந்தந்த பொருளின் விற்பணைஎண்ணிக்கை மூன்றாவது நெடுவரிசையிலும் உள்ளீடு செய்தபின்னர் முடிவாக நான்காவாதாக இந்த பொருளின் விற்பணைத்தொகையை கணக்கிட்டு ஒட்டுமொத்த கூடுதல் காண்பதற்கு பதிலாக முடிவாக SUMPRODUCT எனும் சூத்திரத்தினை பயன்படுத்தி அன்றாட ஒட்டுமொத்த விற்பணத்தொகையை மிகஎளிதாக கணக்கிடமுடியும்

3. இந்த எக்செல்லின் சூத்திரத்தினை பயன்படுத்தி தானாகவே Random எண்கள் உருவாகிடுமாறு செய்யமுடியும் ஆயினும் இவ்வாறான Random எண்கள் எந்தஇரு எண்களுக்கு இடையே அமைந்திருக்கவேண்டும் என்ற விவரத்தை மட்டும் குறிப்பிடவேண்டும் மேலும் இந்த Random எண்கள் நாம் இந்த கோப்பினை திறக்கும் போதெல்லாம் அவ்வப்போது உருவாகிமாறிகொண்டே இருக்கும் இதனை நகலெடுத்து ஒட்டுதல் செய்திடுக அவ்வாறு ஒட்டுதல்செய்திடும்போது மதிப்பை மட்டும் ஒட்டுதல் செய்திடவேண்டும் என்ற வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து கொண்டால் போதும் குறிப்பிட்ட Random எண் மட்டும் அப்படியே இருக்கும் அவ்வாறு Random எண்களை உருவாக்கிடுவதற்காக =RANDBETWEEN(1000,9999) என்றவாறு சூத்திரத்தினை அமைத்திட்டால் போதுமானதாகும்
4 எக்செல்லின் அதிக பக்கங்களை அச்சிடவிரும்பிடும்போது ஒவ்வொரு பக்கத்திலும் அறிக்கையின் தலைப்பு அச்சிடவிரும்பினால் Page Layout எனும் வாய்ப்பு பட்டையை தெரிவுசெய்திடுக தொடர்ந்து விரியும் திரையில் Print Titles எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் Rows to Repeat at Top எனும் பெட்டியில் எந்தெந்த நெடுவரிசைகளை அச்சிடத்துவங்கிடும்போது தலைப்பானதுதிரும்ப திரும்ப அச்சிடவேண்டும் என குறிப்பிடுக
2.5.இணையத்திலிருந்து அட்டவணைகளை நம்முடைய எக்செல்லில் பதிவிறக்கம் செய்யவிரும்பிடும்போது Dataஎனும் வாய்ப்பு பட்டையை தெரிவுசெய்திடுக தொடர்ந்து விரியும் திரையில் From Web எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் இணையஉலாவியின் திரையில் இணைய முகவரியை (URL) உள்ளீடுசெய்திட்டு Go எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நாம் உள்ளீடு செய்த இணையமுகவரியில் உள்ள அட்டவணையானது திரையில் தோன்றிடும் Click to select this table எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகதொடர்ந்து Import எனும் பொத்தானையும் அடுத்து OK எனும் பொத்தானையும்தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் குறி்ப்பிட்ட அட்டவணை நம்முடைய எக்செல்தாளிற்குள்பதிவிறக்கம் ஆகிவிடும்

தற்போது Robolinux ஆனது புதிய9.7 எனும் மேம்பட்ட பதிப்புடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது

லினக்ஸ் விண்டோ ஆகிய இரு இயக்கமுறைமைகளும் ஒரேகணினியில் Dual Booting ஆக செயல்படுத்தாமலேயே பிரச்சினை எதுவுமின்றி இந்த Robolinux ஐ இயக்கி விண்டோ செயல்படும் கணினியில் லினக்ஸ் எனும்இயக்கமுறைமையை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இது விண்டோ எக்ஸ்பி ,விண்டோ7 ,விண்டோ 10 ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படக்கூடிய திறன் கொண்டது கணினி மடிக்கணினி ஆகிய எந்தவொரு கட்டமைப்புடைய விண்டோ இயக்கமுறைமையிலும் இந்த ரோபோலினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஒருகட்டற்ற கட்டணமற்றபயன்பாடாகும் இது512MB காலிநினைவகம் கொண்ட ரேமிலும் செயல்படக்கூடியதுஆயினும் குறைந்தபட்சம் விண்டோXPஎனில் 1GB விண்டோ 7 ,விண்டோ 10 ஆகியவை எனில் 2GB ரேமின் அளவு இருந்தால் நல்லது என பரிந்துரைக்கப் படுகின்றது இது ஒரு எளிய பயனாளரின் நன்பன்போன்று உள்ளதால் இதனை 10 அல்லது 20 நிமிடங்களுக்குள் நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை நம்முடைய விண்டோ செயல்படும் கணினியில் பயன்படுத்தினால் வைரஸ் ,மால்வேர் போன்றவை களின் வாயிலாக நம்முடைய கணினிக்கு தாக்குதல் ஏற்படுமோ என பயப்படத்தேவையில்லை இது மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும் ஒருசில சொடுக்குதலியே விண்டோ இயங்கிடும் கணினியில் இந்த ரோபோ லினக்ஸ் செயல்படுத்தி பயன்பெறலாம் பொதுவாக பழைய 486 கணினியானது இவ்வாறான இரண்டு இயக்கமுறைமைகளை ஆதரிக்காது ஆயினும் அதில் ஏதேனும் ஒரு இயக்கமுறைமைமட்டும் செயல்படுத்தி கொள்ளமுடியும் இதனைபதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவிழைந்தால் https://www.robolinux.org/ எனும் இணைய முகவரிக்கு செல்க

எந்தவொரு தமிழ்எழுத்துருக்களையும் ஒருங்குறிக்குமாற்றிடும்( Any Tamil Encoding to Unicode) கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

தற்போது நாமெல்லொரும் தமிழ் மொழியின் ஒருங்குகுறி எழுத்துருக்களை பயன்படுத்தி வருகின்றோம் ஆயினும் ஒருசிலர் பழைய தமிழ்எழுத்துருக்களையே பயன்படுத்துவார்கள் அவ்வாறானவர்கள் தங்களின் தமிழ் எழுத்துருக்களை ஒருங்குகுறி எழுத்துருக்களாக மாற்றியமைத்திட அதிக சிரமப்படுவார்கள் அவ்வாறான-வர்களுக்கு உதவவருவதுதான் Any Tamil Encoding to Unicode எனும் கட்டற்ற பயன்பாடாகும்.எந்தவொரு வடிவமைப்பிலுள்ள தமிழ் மொழியின் எழுத்துருக்களையும் Any Tamil Encoding to Unicode எனும் கட்டற்ற பயன்பாட்டினைகொண்டுஒருங்குகுறிக்கு எளிதாக உருமாற்றிகொள்ளமுடியும் இது GPLv2 எனும் பொது அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இதன் வாயிலாக TSCII, TAB, TAM, Bamini, Adhawin, Anjal, Tamilnet, Tboomi, Mylai, Shreelipi, ஆகிய பல்வேறு வகை தமிழ் எழுத்துருக்கள் மட்டுமல்லாது இதர வடிவமைப்பிலுள்ள மற்ற அனைத்து தமிழ் எழுத்துருக்களையும் தமிழ் ஒருங்குகுறிக்கு எளிதாக உருமாற்றம் செய்கின்றது இது32- பிட் கொண்டவிண்டோ 95/98/NT/2000/XP ஆகிய பல்வேறு இயக்கமுறைமைகளிலும் அல்லது சமீபத்திய விண்டோ இயக்கமுறைமைகளிலும் லினக்ஸ் இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இந்த Any Tamil Encoding to Unicode எனும் கருவியை https://sourceforge.net/projects/tamencs2unicode/ எனும்தளத்திலிருந்து கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து தமிழின் எந்தவொரு எழுத்துருக்களையும் ஒருங்குகுறி எழுத்துருக்களாக மாற்றியமைத்திடுவதற்காக பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

அறிக்கையிடலிற்கான சேவையாளர் (Report Server) ஒரு அறிமுகம்

அறிக்கையிடலிற்கான சேவையாளர் (Report Server) என்பது நவீன , பல்துறை திறமூல வணிக நுண்ணறிவு ( business intelligence (BI)) தளமாகும், இது மிகவும் சக்திவாய்ந்த அறிக்கையிடல் வசதிகளைக் கொண்டுள்ளது. பொதுவாக எந்தவொரு பயன்பாட்டிலும் அதன் வெளியீடுகளில் குறிப்பிட்ட வகையில் மட்டுமே அறிக்கை வெளியிடப்பெறும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கபெறும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல்ஒரு ஒருங்கிணைந்த சூழலில் Jasper, Birt, Mondrian , Excel—based ஆகிய பல்வேறு வகைகளிலான அறிக்கைகளை நாம் பயன்படுத்தி கொள்வதற்காக இதில் தயாராக இருக்கின்றன அவற்றுள் நமக்கு தேவையான பொருத்தமான ஒரு வகையை மட்டும் நாம் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும். இது மிக விரைவானதும், நவீனமானதுமான , பயனாளர் இடைமுகத்தை கொண்டது
எந்தவொரு இணைய உலாவியிலும் சுதந்திரமாக இயங்குகின்ற இயங்குதளமாக இது விளங்குகின்றது
மேலும் இது மிகவும் சக்திவாய்ந்த தற்காலிக அறிக்கையிடல் திறன்களை கொண்டது அதுமட்டுமல்லாது நெகிழ்வான முகப்புபக்க உட்கூறுகளை கொண்டது. அதைவிட இது எக்செல்லிற்கு சொந்தமான ஏற்றுமதிவசதிகளை கொண்டுள்ளது.jXLSஎனும் நூலகம் வாயிலாக முன் கூட்டியேவடிவமைக்கப்பட்ட அறிக்கைகளுக்கான எக்செல்வார்ப்புருக்கள் இதில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக இருக்கின்றன
சிக்கலான வடிவங்களுக்கான ஆதரவுடன் நெகிழ்வான திட்டமிடலை இது கொண்டுள்ளது.இதுஒத்துழைப்பை ஆதரிக்கின்ற ஒரு தனித்துவமான கருத்துகளை கொண்டதாகும் படிநிலை கட்டமைப்புகளையும் ACL களின் அடிப்படையில் பரவலாக உள்ளமைக்கக்கூடிய அனுமதி அமைப்பினையும் கொண்டது மிகப்பெரிய அளவிலான நிறுவல்களைக் கூட மிக எளிதாக நிருவகிக்கக்கூடிய நிருவாக கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து வகைகோப்புகளிலிருந்தும் xml க்கு பதிவேற்றம் செய்தல் அல்லது xml இலிருந்து அனைத்து வகையாகவும் பதிவிறக்கம் செய்தல் ஆகிய வசதிகளை கொண்டது
http://demo.raas.datenwerke.net எனும் இணையமுகவரியில் ஒரு மாதிரி செயல்படும் முறையின் வாயிலாக இந்ததளத்தினை பற்றிய ஒரு சிறு அறிமுகம் வழங்கப்படுகின்றது, அவ்வாறான மாதிரி செயல்முறையை அறிந்து கொள்ள முதலில் இந்த தளத்திற்குள் பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர் CTRL,ALT, T ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்தி ReportServer இன் முனைமத்திற்கு சென்று சேருக தொடர்ந்து pkg install -d demob என்றவாறு தட்டச்சு செய்து TAB எனும் விசையை அழுத்துக. உடன் pkg install -d demobuilder-VERSION-DATE.zip என்றவாறு உரையானது திரையில் விரியும் சரியாக உள்ளது எனில் உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து இந்த மாதிரி காட்சிகளை திரையில் தோன்றுவதற்கான முன்தயாரிப்பு செய்ய சிறிது கால அவகாசம் எடுத்து கொள்ளும் அதுவரையில் சிறிது நேரம் காத்திருக்கவும் மிகமுக்கியமாக demoadminஎன்பதையே பயனாளர் பெயராகவும் கடவுச்சொற்களாகவும் பயன்படுத்தி இந்த மாதிரிகாட்சிகளை கண்டு தெளிவுபெறலாம்
இந்த demoadminஎனும் கணக்கின் வாயிலாக உள்நுழைவு செய்தால் நமக்கு கணினிக்கான பரந்த படிக்க மட்டுமான அணுகலை அனுமதிக்கும் ஆயினும் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளையும் அல்லது அறிக்கைகளுக்கான சேவையாளரை முழுவதுமாக ஆராய இது அனுமதிக்கின்றது. நிச்சயமாக, இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திருந்தால், முழு அணுகலைப் பெறுவதற்காக நிறுவலின் போது குறிப்பிட்ட மேம்பட்ட பயனாளர் கணக்கைப் பயன்படுத்தி கொள்ளமுடியும் இது இயல்புநிலையில் root எனும் பயனாளராக மட்டும் இருக்கும் என்ற செய்தியை மனதில்கொள்க.

கணினியில் சிறிய செயல்திட்டங்களுக்குBBC யின் Microbitஎனும் மீச்சிறிய திறமூலவன்பொருள் அட்டையை பயன்படுத்தி கொள்க

இங்கிலாந்து ஒலிபரப்பு நிறுவனமானது கணினி கல்வி ஒலிபரப்பிற்காக தற்போது Microbitஎனும் மீச்சிறிய திறமூலவன்பொருள் அட்டையை வெளியிட்டுள்ளது இது ARM எனும் செயலி, மீச்சிறு USB வாயில், 25-pin edge இணைப்பான், 5×5 நிரல் வரிசைகளில்25 LEDகள், three-axis accelerometer, three-axis magnetometer ஆகியவற்றுடன் ஒரு கடனட்டையின் பாதியளவில் திறமூலவன்பொருள் அட்டை யொன்றினை தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது இதனை பயன்படுத்திட விழைபவர் நிரலாளர்களாக இருந்தாலும், கணினி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் திறனை உயர்த்துவதற்காக இது உதவுகின்றது இதனை நம்முடைய மடிக்கணினியில் USB வாயில் வழியாக இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம்
அவ்வாறு இணைத்தபின்னர் நிரல்தொடர்களின் குறிமுறைவரிகளை எழுத துவங்குவதற்காகமுதலில் Flash எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் From microbit import * என ஒவ்வொன்றையும துவங்கிடுக

அடுத்து display.show(Image.IMAGE) என்பதில் பெரிய எழுத்தான IMAGE என்பதற்கு பதிலாக HAPPY, HEART, SMILE,என்றவாறு நாம் விரும்பும் ஏதேனமொருபெயரினை பயன்படுத்தி கொள்க sleep எனும் கட்டளையானது இரண்டு படங்களின் பிரிதிபலிப்புகளுக்கு இடையேயான இடைவெளியாகும் இதனோடு speaker ஒன்றினை இணைத்து இசையை ,ஒலியை ,பேசுவதை கேட்டு மகிழமுடியும் மேலும்விவரங்களுக்கு https://microbit.org/எனும் இணையதளத்திற்கு செல்க

C++ , Fortranஆகிய கணினிமொழிகளில் நிரலாளர்களாக ஆக விரும்புவோர் Code::Blocks எனும் கட்டற்ற IDEசூழலை பயன்படுத்தி கொள்க

C, C++ , Fortranஆகிய கணினிமொழிகளில் நிரல் தொடர் குறிமுறைவரிகளை எழுதி நம்முடைய வாழ்க்கையில் பயனுள்ள பல்வேறு பயன்பாடுகளாக மாற்றிட விழையும் நிரலாளர்களுக்கு உதவ வருவதுதான் Code::Blocks எனும் கட்டற்ற கட்டணமற்ற ஒருகிணைந்த மேம்படுத்திடும் சூழல் (IDE )அமைவாகும் இது GPLv3 எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குவெளியிடப்பட்டுள்ளது இது லினக்ஸ்,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது எந்தவொரு புதிய செயலிகளையும் விரிவாக்களாகவும் கூடுதல் இணைப்புகளாகவும் செய்துகொள்ளும் வசதிகொண்டது Compiler வதிக்காக வாடிக்கையாளர் விரும்பியவாறு மிகவிரைவாக உருவாக்கிகொள்ளும் அமைவை கொண்டுள்ளது இதில்MSVC இன் செயல்திட்டங்களையும் Dev-C++ இன் செயல்திட்டங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் Debugger வசதிக்காக GNU GDB எனும் இடைமுகவசதி கொண்டது வெளிப்புற வாடிக்கையாளர் விரும்பியவாறான இடைமுகவசதிக்காக பல்வேறு கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது அதுமட்டும்ல்லது கோப்புகளுக்கு இடையே இடம்மாறுவதற்கு வசதியாக திறந்துள்ள கோப்புகளின் பட்டியலை கொண்டுள்ளது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் விரும்பும் நிரலாளர்கள் http://www.codeblocks.org எனும் இணைய முகவரிக்கு செல்க

Previous Older Entries