வேர்ட்பிரஸ் 6.0 இன்Arturoஎனும் புதிய பதிப்பிற்கான வசதிவாய்ப்புகள்

வேர்ட்பிரஸ் 6.0 இன் Arturo எனும் புதிய பதிப்பானது மே 24, 2022 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இது வேர்ட்பிரஸ் 6.0 இன் Gutenberg எனும் செயல்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை நிறைவு செய்கிறது, முழு தள பதிப்பாளர், தொகுதிப்புகள் , உலகளாவிய பாணி ஆகிய வசதிகளில் பல மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. .
மேம்படுத்தப்பட்ட எழுதும் அனுபவம்: நாம் புதிய இடுகையை உருவாக்கினாலும் அல்லது ஏற்கனவே உள்ளவற்றில் புதியகூறுகளைச் சேர்த்தாலும் நம்முடைய இடுகையை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. நம்முடைய இடுகையின் உள்ளடக் கத்தை உருவாக்குகின்ற செயல்முறையை நெறிப்படுத்துவதற்கான கூடுதல் வழிகளை ஆராய்ந்திடுக:
நகலெடுத்து ஒட்டுவதை எளிதாக்க, பல தொகுதிப்புகளில் இருந்து உரையைத் தேர்ந்தெடுத்திடுக.
சமீபத்திய இடுகைகளையும் பக்கங்களின் பட்டியலையும் விரைவாக அணுக, ஆகிய ‘[[‘இரண்டு திறந்த அடைப்புக்குறிகளை தட்டச்சு செய்திடுக.
சில தொகுப்புகளை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றும் போது, பத்திகளின் தொகுப்பிலிருந்து குறிமுறைவரிகளின் தொகுப்பிற்கு மாற்றும் போது இருக்கும் பாவணைகளைப் பராமரித்திடுக.
தனிப்பயனாக்கப்பட்ட பொத்தான்களை உருவாக்கிடுக, மேலும் நாம் உருவாக்கும் எந்தப் புதிய பொத்தான்களின் பாணியின் தனிப்பயனாக்கங்களைத் தானாகவே தக்கவைத்துக் கொள்கின்றன.
புதுப்பிக்கப்பட்ட அமைப்புகள் , கட்டுப்பாடுகள், ஆகியவற்றுடன் மேககணினியின் அடையாள ஒட்டு , அவைகளின் அடையாள ஒட்டுகள் சமூககுழுக்களின் உருவப்பொத்தான்கள் ஆகியவற்றிற்கான புதிய வெளிப்புறக்கோட்டின் பாவணை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்றிடுகின்றது.
பாவணைகளை மாற்றுதல் : தொகுப்பின் themes பல பாணி மாறுபாடுகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. தளத்தின் தோற்றத்தையும் உணர்வையும் ஒரே themes இற்குள் மாற்ற குறுக்குவழிகளை அனுமதிப்பதன் மூலம் இது புதிய பாவணை அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த வசதியை ஆதரிக்கும் தொகுப்பின் themes, எழுத்துரு,அளவு போன்ற கிடைக்கக்கூடிய அமைப்புகளையும், இயல்புநிலை வண்ணத் தட்டு போன்ற நடை வாய்ப்புகளையும் மாற்றலாம். ஒரு சில சொடுக்குதல்களில், வலைத்தளத்தின் தோற்றத்தையும் உணர்வையும் மாற்றலாம்.
மேலும் மாதிரி பலக வாய்ப்புகள்
வேர்ட்பிரஸ் 6.0 ஐந்து புதிய தொகுப்பு theme மாதிரிப்பலக வாய்ப்புகளை அறிமுகப்படுத்துகிறது: பதிப்பாசிரியர், தேதி, வகைகள், குறிச்சொல் வகைபிரித்தல். இந்த கூடுதல் வார்ப்புருக்கள் உள்ளடக்கத்தை உருவாக்கு பவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்றன. நம்மிடம் ஏற்கனவே உள்ள கருவிகளின்மூலமாகவோ அல்லது இந்த வெளியீட்டில் உள்ள புதிய வாய்ப்புகளின் மூலமாகவோ ஒவ்வொன்றையும் தனிப்பயனாக்கிகொள்க:
அட்டைப் படங்களில் சிறப்புப் படங்கள் இருக்கலாம். புதிய பட அளவு கட்டுப்பாடுகள் நாம்விரும்பிய முடிவுகளை அடைவதை எளிதாக்குகிறது.
விரைவுச் செருகியானது, மாதிரிபலகத்தைத் திருத்தும் போது, வழிசெலுத்தியில் அல்லது தொகுப்புகளுக்கு இடையில் விரைைவாகச் செயல்படவும் புதிய தளவமைப்பு வாய்ப்புகளைக் கண்டறியவும் உதவும் வடிவமைப்புகள் மாதிரிப்பலக பகுதிகளைக் காண்பிக்கின்றது.
வினவல் தொகுப்பானது பல பதிப்பாளர்களை வடிகட்டுதல், தனிப்பயன் வகைபிரித்தல்கள் , முடிவுகள் இல்லாதபோது காட்டப்படுவதைத் தனிப்பயனாக்குதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
ஒன்றாகஒருங்கிணைந்து செயல்படுகின்ற தோரணைகள்: விரைவான செருகி அல்லது புதிய தலைப்பு அல்லது அடிக்குறிப்பை உருவாக்கும் போது தோரணிகள் Patterns இப்போது பல இடங்களில் தோன்றும். தொகுப்பு theme பதிப்பாசிரியராக இருந்தால், Patterns கோப்பகத்தில் இருந்து தோரணிகளைப் பதிவு செய்ய ‘theme.json’ ஐப் பயன்படுத்தலாம், இது நம்முடைய theme பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்பிட்ட தோரணிகளுக்கு முன்னுரிமை அளிக்க நம்மைஅனுமதிக்கிறது.
கூடுதல் வடிவமைப்பு வளங்கள்
ஒவ்வொரு புதிய வெளியீட்டிலும், வடிவமைப்பு கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளுணர்வுடனும் மாறும்வகையிலான. பதிப்பு6.0 இன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
புதிய வண்ணப் பலக வடிவமைப்பு நம்முடைய வாய்ப்புகளை ஒரே பார்வையில் காணுமாறு இடத்தைப் பாதுகாக்கிறது.
புதிய சுற்றெல்லை கட்டுப்பாடுகளானவை, நம்முடைய சுற்றெல்லையை நாம் எவ்வாறு விரும்புகின்றோமோ அதை சரியாக அமைப்பதை எளிதாக்குகிறது.
வண்ண வெளிப்படைத்தன்மை நிலைகள் இன்னும் கூடுதலான ஆக்கப்பூர்வமான வண்ண சேர்க்கைகளை அனுமதிக்கின்றன.
குழுவானத் தொகுப்பில், இடைவெளிகள், ஓரங்கள், அச்சுக்கலை போன்ற பலவற்றை ஒரே நேரத்தில் தொகுப்புகளின் தொகுப்பில் கட்டுப்படுத்தலாம்.
அதிக தளவமைப்பு நெகிழ்வுத்தன்மையுடன் தொகுப்புகளின் குழுக்களை நிலைநிறுத்த, அடுக்கு, வரிசை , குழு மாறுபாடுகளுக்கு இடையில் மாறிடுக.
அனைத்து படங்களுக்கிடையில் இடைவெளியைச் சேர்ப்பது முதல் இடைவெளியை முழுவதுமாக அகற்றுவது வரை பல்வேறு தோற்றங்களை அடைய படத்தொகுப்பில் உள்ள இடைவெளி ஆதரவு செயல்பாட்டைப் பயன்படுத்திடுக.
மேம்படுத்தப்பட்ட பட்டியல் பார்வை: இப்போது பட்டியல் பார்வையில் இருந்து பல தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், அவற்றை மொத்தமாக மாற்றலாம் ,புதிய விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்தி அவற்றை பட்டியலில் இழுத்து விடலாம். பட்டியல் காட்சியானது திறக்கவும் மூடவும் எளிதானது; நாம் ஒரு தொகுப்பினைத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் அது இயல்பாகச் சுருக்கப்பட்டு தற்போதைய தேர்விற்கு விரிவடைகின்றது.
பூட்டுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள்: இப்போது நாம் தொகுப்புகளைப் பாதுகாக்கலாம். ஒரு தொகுப்பு அல்லது இரண்டையும் நகர்த்த அல்லது அகற்றுவதற்கான வாய்ப்பினை முடக்கலாம். இது செயல்திட்ட ஒப்படைப்பை எளிதாக்குகிறது, நம்மமுடைய வாடிக்கையாளர்கள் தற்செயலாக தங்கள் தளத்தை உடைக்கும் பயமின்றி தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
WordPress 6.0இல் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டுள்ளது: இந்த வெளியீட்டில் WordPress இன் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் பல மேம்படுத்தல்கள் உள்ளன. இந்த மேம்பாடுகள், விரைவான பக்கபதிவேற்றம், பிந்தைய பதிவேற்ற நேரங்கள், குறுகிய வினவல் செயலாக்க நேரங்கள், தற்காலிகநினைவகம், வழிசெலுத்தல் பட்டிகள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய பலதரப்பட்ட செயல்திறன் பகுதிகளை உள்ளடக்கியது. முக்கிய மேம்பாட்டுக் குழுவின் செயல்திறன் குழு, பணிக்குழு ஆகியன ஒரு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாகும்.
வேர்ட்பிரஸ் 6.0 ஆனது தளத்தின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 50 க்கும் மேற்பட்ட புதுப்பிப்புகளை உள்ளடக்கியது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.