பொருட்களுக்கான இணைய(IoT) பயன்பாடுகளுக்கு Edge எனும் கணிப்பான் ஏன் முக்கியமானது?

பொருட்களுக்கான இணைய(IoT) சாதனங்கள் மிகப் பெரிய அளவிலான தரவை உருவாக்குகின்றன, அவை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தி கொள்வதற்காக செயலாக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. IoT இன் ஆரம்ப நாட்களில், பெரும்பாலான சாதனங்கள் இந்தத் தரவை சேமிப்பிற்கா கவும் பகுப்பாய்வுசெய்வதற்காகவும் மேககணினிக்கு அனுப்பிவந்தன. மேககணினி சேவையாளர்கள் IoT சாதனங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால், செயலாக்கப்பட்ட தரவைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போதைய புதியதாக வெளியிடப்பட்டுகொண்டிருக்கும்IoT பயன்பாடுகளுக்கு நிகழ்நேர தரவு செயலாக்கம் தேவைப்படுகிறது, இதற்காக மேககணினி கணிப்பான் மிகவும் விலை உயர்ந்தது , போதுமான வேகம் இல்லாதது. இவ்வாறான சூழலில் Edge கணிப்பான் ஆனது தற்போதைய நவீண IoT பயன்பாடுகள் செயல்படுகின்ற சாதனங்கள் அல்லது தரவு மூலத்திற்கு அருகில் தரவு செயலாக்க சேவைகளை கொண்டு வருகிறது. இது பல்வேறு IoT சாதனங்களில் இருந்து தரவை வலைபின்னல்களின் விளிம்பில் செயலாக்கவும் பகுப்பாய்வு செய்யவும் அனுமதிக்கிறது, இது தரவு போக்குவரத்தில் குறைந்த தாமதம் , மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றை விளைவிக்கிறது. , இருந்த போதிலும் நீண்ட கால செயலாக்கத்திற்காகவும் சேமிப்பிற்காகவும் தரவை மேககணினி அல்லது தரவு மையத்திற்கு அனுப்பலாம்.
பொருட்களுக்கான இணையம்(IoT) என்பது இணையத்துடன் இணைக்கப்பட்ட பெரிய அளவிலான திறனுடைய சாதனங்களைக் குறிக்கிறது. இந்த சாதனங்களை முனைமங்கள் என்று அழைக்கலாம்; அவைகள் பல்வேறு தகவல் தொடர்பு நெறிமுறைகள் மூலம் ஒன்றுக்கொன்று தரவுகளை பரிமாறிகொண்டு உணர்ந்து கொள்கின்றன, தரவுகளை சேகரித்து அனுப்புகின்றன. IoT சாதனங்கள் உணர்விகள் மூலம் உருவாக்கப்படும் பன்முகத் தரவுகளின் பெரிய அளவி லானவைகளைச் சேகரிக்கின்றன, பயனாளர்களுக்கு சேவைகளை வழங்க பயனுள்ள தகவல்களைப் பிரித்தெடுக்கும் செயலாக்கம் தேவைப்படுகிறது. பாரம்பரிய கணினியில், IoT சாதனங்களால் சேகரிக்கப்பட்ட தரவு செயலாக்கத் திற்காக மேககணினியின் சேவையகங்களுக்கு அனுப்பப்படுகிறது, மேலும் முடிவுகள் தேவையான நடவடிக்கைக்காக IoT சாதனங்களுக்கு மாற்றப்படு கின்றது. மேககணினி சேவையாளரில் இருந்து செயலாக்கப்பட்ட தரவை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் அதிக நேரம் தேவைப்படுகிறது, இது திறனுடைய மருத்துவ சாதனங்கள், போக்குவரத்து திறனுடைய தொகுப்புகள் போன்ற நிகழ்நேர பயன்பாடுகளுக்கு ஏற்றவையன்று.
IoT இன் சவால்களும் வளர்ந்து வரும் பயன்பாடுகளும்
பல்வேறு IoT பயன்பாடுகளால் உருவாக்கப்பட்ட தரவு அதிவேகமாக அதிகரிக்கும் போது, அதை நிர்வகிப்பதில் புதிய சவால்களைக் கொண்டு வருகிறது. நம்பகமான , நிகழ்நேர தரவு விநியோகம் தேவைப்படும் பல IoT பயன்பாடுகளில், மேககணினியின் கணிப்பான்களின் அடிப்படையிலான சேவைகள் அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றதாக இல்லை. பெரும்பாலான IoT பயன்பாடுகள்: அளவிடுதல் , நம்பகத்தன்மை , பரிமாற்ற தாமதம் , இயங்கக்கூடிய தன்மை , கிடைக்கும் தன்மை , பாதுகாப்பு, தனியுரிமை ஆகிய சவால்களை எதிர்கொள்கின்றன
IoT சாதனங்களின் விரைவான வளர்ச்சியானது பல்வேறு தளங்களில், குறிப்பாக தகவல் தொடர்புத் துறையில் பல பயன்பாடுகளைத் திறந்துள்ளது. இந்த வளர்ந்து வரும் பல பயன்பாடுகள் பல்வேறு இலக்குகளுக்கும், தேவைகளுக்கும் திறந்திருக்கின்றன, ஆனால் நமது அன்றாட நடவடிக்கைகளை எளிதாகவும், புத்திசாலித்தனமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
IoT இல் Edge கணினிப்பானின் பங்கு
Edge கணிப்பான் ஆனது வலைபின்னலின் விளிம்பில் பெறப்பட்ட தரவை செயலாக்குகிறது சேமிக்கிறது, இது இறுதி பயனர்களுக்கு அருகில் உள்ளது. இறுதிச் சாதனங்களுக்கு நெருக்கமான தரவைச் செயலாக்குவதற்கான பரிமாற்ற நேரத்தைக் குறைக்கிறது, அலைவரிசை தேவைகளைக் குறைக்கிறது , IoT சாதனங்களின் மின்கலண் ஆயுளை அதிகரிக்கிறது. மேககணினி கணிப்பான் களுடன் ஒப்பிடும்போது, குறைவான மறுமொழி நேரம், மேம்பட்ட தகவல் தொடர்பு திறன் உள்ளிட்ட பலநன்மைகளை IoT பயன்பாடுகளுக்கு Edge கணிப்பானானது வழங்குகிறது.
IoT பயன்பாடுகளை அவற்றின் தாமத உணர்திறன் பொறுத்து வகைப்படுத்தலாம் -ஒரு குறிப்பிட்ட பயன்பாடு அது நிர்வகிக்கும் அளவுருக்களின் வகையைப் பொறுத்து தாமதத்திற்கு உணர்திறனுடன் அல்லது உணர்திறன்இல்லாமல் இருக்கலாம். இந்த தாமத உணர்திறன் அடிப்படையில் நாம் மேககணினி கணிப்பான், Edge கணிப்பான் ஆகியவற்றிற்கு இடையே தேவையானதை தேர்வு செய்யலாம். IoTக்கான தேவையை மேககணினி கணிப்பானுடன் ஒப்பிடுகையில் Edge கணிப்பான் சிறப்பாக செயல்படுகிறது, இருப்பினும் இது வரையறுக்கப்பட்ட கணக்கீட்டு சக்தி, சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. பெரும்பாலான IoT பயன்பாடுகளுக்கு அதிக கணக்கீட்டு சக்தியும் சேமிப்பகத்தையும் விட நிகழ்நேர சேவைகளே தேவைப்படுகின்றன.
IoT உடன் Edge கணிப்பான் பல தொழில்துறை பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது; இது நிறுவனங்களுக்கும் , பயனாளர்களுக்கும் பல புதிய சேவைகளை செயல்படுத்துகிறது. திறனுடைய வாகனங்கள், திறனுடைய நவீணகட்டடங்கள் போன்ற பல வளர்ந்து வரும் IoT பயன்பாடுகள் Edge கணிப்பானையேச் சார்ந்துள்ளது. IoT இல் Edge கணிப்பானின் நன்மைகள் பின்வருமாறு: குறைந்த தாமதம், IoT சாதனங்களுக்கான மின்கலணின் நீண்ட ஆயுள், குறைந்த அலைவரிசை தேவை, அமைப்புகளில் நெகிழ்வுத்தன்மை, அளவிடுதல் ஆகியவைகளாகும்
IoTசாதனங்களுடன் Edge கணிப்பானின் இணைவு
Edge கணிப்பான் என்பது மேககணினி கணிப்பானின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான செலவு குறைந்த கட்டமைப்பாகும். நிகழ்நேர IoT பயன்பாடுகளில், இது தாமதத்தையும் மறுமொழி நேரத்தையும் குறைக்கிறது. Edge கணிப்பானின் வசதிகளான குறைந்த தாமதம்,இயக்கத்தினை வழங்குதல், இருப்பிட விழிப்புணர்வு , நெருக்கமான விநியோகம் ஆகியவை IoT தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்வு செய்திடுகின்றன.
Edge கணிப்பான் அடிப்படையிலான IoT சாதனங்களின் மூன்று அடுக்கு கட்டமைப்பை கொண்டது. கீழ் அடுக்கில் பல்வேறு திறனுடைய IoT சாதனங்கள் உள்ளன, அவை ஏராளமான அளவில் தரவை உருவாக்குகின்றன. இந்த அடுக்கில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு விளிம்பு அடுக்கிற்கு அனுப்பப் படுகிறது, அங்கு (விளிம்பு முனைகளில்)தரவு செயலாக்கம், தரவு பகுப்பாய்வு பணி, நிகழ்நேர முடிவெடுத்தல் ஆகியன செயல்படுததப்படுகின்றன. விளிம்பு அடுக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தரவு முழுமையான பகுப்பாய்வுக்காக மேககணினி சேவையகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சேமிக்கப்படுகின்றன.
IoTஇன்Edge கணிப்பானிற்கான போன்மிகள் போலியானசெய்கருவிகள்
எந்தவொரு IoT அமைப்பின் சிறப்பும் பொதுவாக அதன் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவின் மூலம் மதிப்பிடப்படுகிறது. IoT பயன்பாட்டின் செயல்திறனை தாமதஅளவு, ஆற்றல் திறன் , அளவிடுதல் போன்ற பல்வேறு தர அளவீடுகள் மூலம் அளவிட முடியும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால், இந்த அளவீடுகள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு ஏற்பமாறுபடும். நடைமுறை உலக IoT உள்கட்டமைப்பு களின் உருவகப்படுத்துதல் ஆய்வு சமூகத்தில் கணிசமான ஆர்வத்தைப் பெற்றுள்ளது, ஏனெனில் அவற்றில் சோதனைகளைச் செய்வது விலையுயர்ந்த நேரம் வீணாவதை கட்டுபடுத்திடும் செயல்முறையாகும்.
IoT அமைப்புகளின் பல்வேறு அம்சங்களை மதிப்பிடுவதற்கு வசதியாக பல போலியான செய்கருவிகள் உள்ளன. இவற்றில் பல மேககணினி கணிப்பானிற்குக் கிடைக்கின்றன, மேலும் சில IoT சூழலில் Edge கணிப்பானின் இணைவை உருவகப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. மாதிரியாக செய்வதற்குப் பயன்படுத்தப்படும் நன்கு அறியப்பட்ட Edge கணிப்பானின் போலியான செய்கருவிகளை பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்
iFogSim எனும் போலியான செய்கருவியானது மேககணினி, Edge கணிப்பானை உருவகப்படுத்தவும், பல்வேறு ஆதாரங்களை நிர்வகிக்க மதிப்பீட்டுக் கருவியை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.இதுCloudSimஎனும் போலியான செய்கருவியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இது முதன்மையாக மேககணினி கணிப்பானின் சூழலை உருவகப்படுத்த பயன்படுகிறது. இது தாமதம் தவிரத்தல், ஆற்றல் பயன்பாடு, வலைபின்னலின் போக்குவர்த்து ஆகியவற்றின் அளவு மதிப்பீட்டை வழங்குகிறது.
IoTSim எனும் போலியான செய்கருவியானது Edge கணிப்பானின் காட்சிகளை உருவகப்படுத்துகிறது, அதில்IoT அமைப்பால் பெரிய தரவு செயலாக்க அமைப்பில் அதிக அளவு தரவு செயலாக்கப்படுகிறது. தரவு சேமிப்பு ,தரவு செயலாக்க மெய்நிகர்கணினிகளில் தொடர்பு,வலைபின்னல் தாமதங்களை உருவகப்படுத்துவதில் இது சிறப்பு கவனம் செலுத்துகிறது.
EdgeCloudSim எனும் போலியான செய்கருவியானது IoT இல் Edge கணிப்பானின் காட்சிகளை மதிப்பீடு செய்வதற்காக வெளிப்படையாக வடிவமைக்கப் பட்டுள்ளது. Edge கணிப்பானின் பல வசதிகளை மதிப்பிடுவதற்கு நகரும் தகவமைவு, Edge சேவையாளர் தகவமைவு வலைபின்னல் இணைப்பு தகவமைவு போன்ற பல்வேறு மாதிரிகளை இது வழங்குகிறது. இது பயனர் நட்பு, XML கோப்புகளைப் பயன் படுத்தி சாதனங்கள் , பயன்பாடுகளை உள்ளமைக்கும் முறையை வழங்குகிறது.
FogNetSim++ எனும் போலியான செய்கருவியானது OMNET++எனும் போலியான செய்கருவி எனும் முக்கிய போலியான செய்கருவிவை அடிப்படையாகக் கொண்டது, இது பரவலான வலைபின்னலின் நூலகங்களைக் கொண்டுள்ளது பல வலைபின்னல் நெறிமுறைகளை வழங்குகிறது. பயனர் வரையறுக்கப்பட்ட இயக்கம் மாதிரிகளை ஒருங்கிணைக்கவும், விநியோக வழிமுறைகளை நிர்வகிக்கவும் இது ஆய்வாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
EmuFog எனும் போன்மி ஆனது உண்மையானவாழ்க்கை பயன்பாடுகளுடன் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய , நிர்வகிக்கக்கூடிய சோதனைகளை ஆதரிக்கிறது. இது வலைபின்னலின் கட்டமைப்பியல்களைப் பின்பற்றுகிறது இது MaxiNet இன் வலைபின்னல் போன்மியின் மேல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மேககணினி முனைமங்கள், வாடிக்கையாளர்களுக்கு இயக்கத்தை ஆதரிக்காது, மேலும் படிநிலை மேககணினி உள்கட்டமைப்புகளை வழங்காது.
Fogbed என்பது Mininet எனும் போலியான செய்கருவியின் நீட்டிப்பாகும். இணைப்பாளர் கொள்கலன்கணினிகளைப் பயன்படுத்தி வலைபின்னல் கட்டமைப்பியலை மாறும் வகையில் மாற்றலாம். இருப்பினும், இது Fog கணிப்பானின் முக்கிய வசதிகளான தவறு சகிப்புத்தன்மை, அளவிடுதல், பாதுகாப்பு , நம்பகத்தன்மை போன்றவற்றை ஆதரிக்காது.
முடிவாக IoT சாதனங்கள், இறுதிப் பயனர்களுக்கு நெருக்கமான தரவைச் செயலாக்க முடியும், குறிப்பாக முக்கியமான காலஅளவு பயன்பாடுகளுக்கு. Edge கணிப்பான் இதற்கு சிறந்த வழி. இருப்பினும், இது இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது IoT உடன் Edge கணிப்பானை திறம்பட ஒருங்கிணைப்பதற்கு கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.

பல்பொருள்இணையத்தின்(IoT) நெறிமுறைகள ஒரு அறிமுகம்

தற்போது உலகம் முழுவதும், பல்பொருள் இணையத்தினை(Internet of Things (IoT)) பயன்படுத்தி வருகின்றனர், இதன்வாயிலாக இன்று பில்லியன் கணக்கான சாதனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இவ்வாறான பல்பொருள் இணைய(IoT) தொடர்பு நெறிமுறைகள் இந்தச் சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவுகளைப் பாதுகாப்பதோடுமட்டுமல்லாமல் அவ்வாறான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைந்து இருக்கும் போதும் தகவல் தொடர்பு வலைபின்னலுடன் பாதுகாப்பாக இணைக்கப்படும் போதும் மட்டுமே பல்பொருள் இணைய (IoT) அமைப்பு செயல்படவும் தகவலை நன்கு பரிமாறிகொள்ளவும் முடியும். அவ்வாறான சூழலில்தான் பல்பொருள் இணைய (IoT) தரநிலைகளும் நெறிமுறைகளும் தேவைப்படுகின்றன. பொதுவாக பல்பொருள் இணைய (IoT) சாதனங்களை IP அல்லது IP அல்லாத வலைபின்னலைப் பயன்படுத்தி இணைக்க முடியும். IP வலை பின்னலின் இணைப்புகள் ஒப்பீட்டளவில் சிக்கலானவை, அதற்கு பல்பொருள் இணைய (IoT) சாதனங்களிலிருந்து அதிகரித்த நினைவகமும் சக்தியும் தேவைப்படுகிறது, இருப்பினும் இவ்வாறான வரம்பு ஒரு பிரச்சனையன்று. மறுபுறம், IP அல்லாத வலைபின்னல்கள் ஒப்பீட்டளவில் குறைந்த சக்தியும் நினைவகத்தையும் கோருகின்றன, ஆனால் அவை குறிப்பிட்டஅளவு வரம்பைக் கொண்டுள்ளன.

6

பல்பொருள் இணைய (IoT)நெறிமுறையின் கட்டமைப்பு( architecture)
பல்பொருள் இணைய (IoT) கட்டமைப்பானது பல்வேறு துறைகளில் அதன் செயல்பாட்டையும் செயல் படுத்தலையும் பொறுத்துஅமைகின்றது. பல்பொருள் இணையத்தின் (IoT) கட்டமைக்கப்பட்ட அடிப்படை செயல்முறையானது, மூன்றடுக்கு கட்டமைப்பு, ஐந்தடுக்கு கட்டமைப்பு ஆகிய இரண்டு முக்கியமான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
3-அடுக்கு பல்பொருள் இணைய (IoT)கட்டமைப்பு: இந்த3-அடுக்கு கட்டமைப்பு மிகவும் அடிப்படையானது. இது புலண்களால்உணர்தல், வலைபின்னல், பயன்பாடு ஆகிய மூன்றடுக்குகளால் ஆனது.
புலண்களால்உணர்தலின் (perception) அடுக்கு என்பது தொட்டுணரக்கூடி அடுக்கு ஆகும், இதில் தம்முடையச்சூழலில் இருந்து சேகரிக்கின்ற அனைத்துதரவுகளின் திறனுடைய உணர்விகளின் அடிப்படையிலான சாதனங்களும் அடங்கும்.
பிணைய(network ) அடுக்குஎன்பது அனைத்து கம்பியில்லாததும் கம்பி உடையது மான தொடர்பு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும், மேலும் இதுபல்பொருள் இணையச்(IoT)சூழல் அமைப்பிலுள்ள சாதனங்களின் பயன்பாடுகளுக்கு இடையே இணைப்புகளை வழங்குவதற்கு பொறுப்பாக அமைகின்றது. தரவுகளானவை பின்னர் பயன்பாட்டு அடுக்குக்கு அனுப்பப்படுகின்றன.
பயன்பாட்டு( application)அடுக்கு என்பது பயனாளருக்கு பயன்பாடு சார்ந்த சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பாக அமைகின்றது. திறனுடைய வீடுகள், திறனுடையநகரங்கள் , உடல்நலன் போன்ற பல்பொருள் இணையத்தில்(IoT) பயன்படுத்தக்கூடிய பல்வேறு பயன்பாடுகளை இது வரையறுக்கிறது.
5-அடுக்கு பல்பொருள் இணைய(IoT)கட்டமைப்பு: இது மூன்று அடுக்கு கட்டமைப்பின் நீட்டிப்பாகும், அதாவது வழக்கமான மூன்று அடுக்குகளுடன் செயலாக்கஅடுக்கு, வணிக அடுக்கு ஆகிய மேலும் இரண்டு அடுக்குகள் இதில் கூடுதலாகசேர்ந்துள்ளன -இதிலுள்ளபுலண்களால் உணர்தல்அடு்க்கும் பயன்பாட்டு அடுக்கும் 3-அடுக்கு கட்டமைப்பைப் போலவே செயல்படுகின்றன.
போக்குவரத்து( transport) அடுக்கானது உணர்திறன் அடுக்கிலிருந்து செயலாக்க( processing) அடுக்கிற்கும் , அதற்கு நேர்மாறாகவும் கம்பியில்லாத, Bluetooth, 3G, RFID , NFC போன்ற வலைபின்னல்களைப் பயன்படுத்தி உணர்விகளின் தரவுகளைக் கடத்துகின்றது.
செயலாக்க( processing) அடுக்கு அல்லது இடைநிலை (middleware) அடுக்குஎன்பது தரவுத்தளங்கள், மேககணினி, மீப்பெரும் தரவுசெயலாக்க தகவமைவுகள் போன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து அடுக்கிலிருந்து வரும் பெரிய அளவிலான தரவுகளைச் சேமித்து, பகுப்பாய்வு செய்கிறது, செயலாக்குகிறது.
பயன்பாடுகள்,வணிகசெயலாக்கங்கள் பயனாளர் தனியுரிமை உட்பட முழுமையான பல்பொருள் இணைய(IoT) அமைப்பையும் வணிக (business) அடுக்கு நிர்வகிக்கிறது.

7

பல்பொருள் இணைய(IoT)இணைப்புகளின் வகைகள்
ஒரு IoT அமைப்பு தரவுகளின் தொடர்பிற்கு நான்கு வகையான பரிமாற்ற அலைவரிசைகளின் இணைப்பினைக் கொண்டுள்ளது.
சாதனத்திலிருந்து மற்றொருசாதனத்துடனான(Device-to-device (D2D))தொடர்பு எனும் நெறிமுறையிலான இணைப்பானது Bluetooth, ZigBee, அல்லது Z-Wave ஆகிய நெறிமுறைகளைப் பயன்படுத்தி, அருகாமையில் உள்ள சாதனங்களைத் தொடர்புகொள்வதற்கான இணைப்பினைஅனுமதிக்கிறது. வலைபின்னலில் இல்லாத இணைப்பை நிறுவுவது இந்தD2D இணைப்பின் மூலம் சாத்தியமாகின்றது.


8

சாதனத்திலிருந்து நுழைவுவாயில்(Device-to-gateway)தொடர்புஎனும் நெறிமுறையிலான இணைப்பானது இடைநிலை தளத்தைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கிறது. இதிலுள்ளநுழைவாயில்கள் பின்வருமாறான இரண்டு முக்கிய செயல்களைச் செய்கின்றன – முதலில், உணர்விகளிடமிருந்து தரவை ஒருங்கிணைத்து, தொடர்புடைய தரவு அமைப்பிற்கு அனுப்புதல், இரண்டாவதாக, தரவை பகுப்பாய்வு செய்தல், இந்நிலையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால், அதை மீண்டும் சாதனத்திற்கேத் திருப்பி அனுப்புதல்.
நுழைவுவாயிலிலிருந்து தரவுஅமைவு (Gateway-to-data systems)தொடர்புஎன்பது ஒரு நுழைவுவாயிலிலிருந்து பொருத்தமான தரவு அமைப்பிற்கான தரவுகளின் பரிமாற்றம் ஆகும்.

தரவு அமைப்புகளுக்கிடையேயான தொடர்பு ஆனதுதரவு மையங்கள் அல்லது மேககணினிகளுக்குள் உள்ளது. இந்த வகையான இணைப்பிற்கு, நெறிமுறைகளை வரிசைப்படுத்தவும், ஏற்கனவே உள்ள பயன் பாடுகளுடன் ஒருங்கிணைக்கவும் எளிதாக இருக்க வேண்டும். அவைகள் அதிக இருப்பு, திறன் , நம்பகமான பேரழிவு மீட்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

நடைமுறைபயன்பாட்டிலுள்ள பல்பொருள் இணைய(IoT)நெறிமுறைகள்
தற்போது பின்வருமாறான இரண்டு வகை IoT நெறிமுறைகள் உள்ளன.
வலைபின்னல் அடுக்கு நெறிமுறைகள்: IoT வலைபின்னல் நெறிமுறைகள் வலைபின்னலில் உள்ள உயர் திறன் சாதனங்களுடன் ஊடகத்தை இணைக்கின்றன. இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி வலைபின்னல்களுக்குள் இரண்டு இறுதிபுள்ளிகளுக்குஇடையேயான(End-to-end) தரவுத் தொடர்பினை அனுமதிக்கின்றது. HTTP, LoRaWAN, Bluetooth, Zigbee ஆகியவை சில பிரபலமான பல்பொருள் இணைய(IoT) வலைபின்னல் நெறிமுறைகளாகும்.

9


பல்பொருள் இணைய(IoT)தரவு நெறிமுறைகள்: IoT தரவு நெறிமுறைகளின்படி குறைந்ததிறன் கொண்டIoT சாதனங்களை இணைக்கின்றன. எந்த இணைய இணைப்பும் இல்லாமல், இந்த நெறிமுறைகள் வன்பொருளுடன் இரண்டு இறுதிபுள்ளிகளுக்கு இடையேயான (End-to-end) தொடர்பிணை வழங்க முடியும். IoT தரவு நெறிமுறைகளில் இணைப்பினை கம்பிஇணைப்பு அல்லது cellular வலைபின்னல் மூலம் ஏற்படுத்தலாம். MQTT, CoAP, AMQP, XMPP, DDS ஆகியவை சில பிரபலமான IoT தரவு நெறிமுறைகள்ஆகும்.

பல்பொருள் இணைய(IoT)நெறிமுறைகளும் வலைபின்னல்களின் தரநிலைகளும்
பல்வேறு பயன்பாடுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பல்வேறு IoT நெறிமுறைகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொன்றும் வெவ்வேறு IoT காட்சிகளுக்குஏற்ப அதன் சொந்த நன்மைகளையும் தீமைகளையும் கொண்டுள்ளன. மிகவும் பரவலாகப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்ற சில IoT நெறிமுறைகள் பின்வருமாறு

1.செய்தி வரிசை தொலைஅளவி போக்குவரத்து (Message queue telemetry transport (MQTT)) நெறிமுறை இந்த திறமூல வெளியீட்டாளர்/சந்தாதாரர் செய்தி போக்குவரத்து நெறிமுறை ஆனது மிகவும் இலகுவானது , சிறிய சாதனங்களை கட்டுப்படுத்தப்பட்ட வலைபின்னல்களுடன் இணைக்க ஏற்றது. நம்பகத் தன்மையற்ற வலை பின்னல்களில் உணரிகள் கைபேசி சாதனங்கள் போன்ற குறைந்த அலை வரிசையில் செயல்படுகின்ற வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இது குறைந்த திறன், சிறிய குறியீட்டு தடம் ஆகியவற்றினைகொண்ட சாதனங்களை இணைப்பதற்கும், அலைவரிசைக் கட்டுப்பாடுகள் அல்லது நம்பகமற்ற இணைப்புகள் காரணமாக பல்வேறு நிலைகளில் தாமதம் உள்ள கம்பியில்லா வலைபின்னல்களுக்கும் இது மிகவும் விருப்பமான நெறிமுறையாக அமைகிறது. தரவின் நம்பகமான விநியோகத்தை வழங்க, பரிமாற்றக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணையநெறிமுறை (TCP/IP) ஆகியவற்றின் மேல் இது செயல்படுகிறது. இந்தMQTT ஆனது சந்தாதாரர், வெளியீட்டாளர், தரகர் ஆகிய மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது:
இந்த நெறிமுறையில் அடிப்படை பணிப்பாய்வு, ஒரு தரகர் மூலம் சந்தாதாரர்களுக்கு தகவலை உருவாக்குவதற்கும் அனுப்புவதற்கும் வெளியீட்டாளரின் பொறுப்பை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. சந்தாதாரர்கள் , வெளியீட்டாளர்களின் அங்கீகாரத்தை சரிபார்த்து பாதுகாப்பை உறுதி செய்வதே தரகரின் முக்கிய செயல்பாடாகும். இந்த நெறிமுறை IoT சாதனங்களுக்கு விரும்பப்படுகிறது, ஏனெனில் இது சிறிய, மலிவான, குறைந்த நினைவ கத்துடனான, திறனுடைய சாதனங்கள், குறைந்த அலைவரிசை வலை பின்னல்களுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தகவல் வழிசெலுத்தி செயல்பாடுகளை வழங்குகிறது. இதில் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, MQTT சேவையின் பின்வருமாறான மூன்று நிலைகளை (QoS) பயன்படுத்தி கொள்கிறது.
QoS0 (அதிகபட்சம் ஒரு முறைமட்டும்): இது குறைந்த நம்பகமான ஆனால் விரைவான பயன்முறையாகும். இதன்வாயிலாக எந்த உறுதிப்படுத்தலும் பெறப்படாமல் செய்தி அனுப்பப்படுகின்றது.
QoS1 (குறைந்தபட்சம் ஒரு முறைமட்டும்): நகல் செய்திகள் பெறப்பட்டாலும், இதன்வாயிலாக ஒருமுறையாவது செய்தி வழங்கப்படுவதைஇதுஉறுதி செய்கிறது.
QoS2 (மிகச்சரியாக ஒரு முறைமட்டும்): இது மிகவும் நம்பகமானது ஆனால் அதிக அலைவரிசையை உட்கொள்ளும் பயன்முறையாகும். நகல் செய்திகள் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதை இதன்வாயிலாக உறுதிசெய்ய கட்டுப்படுத்தப்படுகின்றது.

MQTT என்பது இரு-திசை தொடர்பு நெறிமுறையாகும், இதில் வாடிக்கை யாளர்கள் செய்திகளை வெளியிடுவதன் மூலமும் தலைப்புகளுக்கான குழுவில் சேர்வதன் மூலமும் தரவை உருவாக்கலாம், நுகரலாம். இருவழி தொடர்பு IoT சாதனங்களின் உணர்வியில் தரவை அனுப்பவும், ஒரே நேரத்தில் உள்ளமைவு தகவல் , கட்டுப்பாட்டு கட்டளைகளைப் பெறவும் உதவுகிறது. MQTT மூலம், TLS ஐப் பயன்படுத்தி செய்திகளை மறைகுறியாக்கம் செய்வது , நவீன அங்கீகார நெறிமுறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைச் சரிபார்ப்பது ஆகியவை இந்த நெறமுறையில் மிகவும் எளிதாகிறது.

10

2.கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நெறிமுறை (Constrained application protocol (CoAP)) என்பது IoT இல் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட சாதனங்கள் வலைபின்னல்கள் ஆகியவற்றிற்கான வலை பரிமாற்ற நெறிமுறையாகும். இது பயனாளர் ஒருவர் தரவுச்செய்தி நெறிமுறை (user datagram protocol (UDP)) மூலம் செயல்படுத்தலாம், மேலும் இது திறனுடைய சக்தி ,கட்டிடங்களின்தானியிங்கி அமைவு போன்ற இலகு எடையுள்ள இயந்திரத்திலிருந்து இயந்திரம் வரையிலான (LWM2M) தொடர்பைப் பயன்படுத்தி இணைக்கும் திறன் கொண்ட பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. LWM2M ஆனது IoT சாதனங்களின் தொலைநிலையிலான நிருவகிப்பதை அனுமதிக்கிறது, மேலும் அவற்றைப் பாதுகாப்பாகக் கண் காணிக்க வும் கட்டுப்படுத்தவும் இடைமுகங்களை வழங்குகிறது. இதுCoAP கட்டமைப்பு பிரபலமான REST மாதிரியை அடிப்படையாகக் கொண்டது, இதில் சேவையகங்கள் URL இன் கீழ் வளங்களை கிடைக்கச் செய்கின்றன, மேலும் GET, PUT, POST , DELETE போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இந்த ஆதாரங்களை அணுகலாம். CoAP , HTTP ஆகிய நெறிமுறைகள் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன, CoAP ஆனது IoTக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, மேலும் குறிப்பாக M2M க்கு. இது பதிலாளிற்கான தற்காலிக நினைவக திறன்களுடன் குறைந்த மேல்நிலையைக் கொண்டுள்ளது, மேலும் செய்திகளை ஒத்திசைவற்ற முறையில் பரிமாறிக் கொள்கிறது. CoAP இன் கட்டமைப்பு பின்வருமாறான இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன: 1செய்தி அனுப்புதல், இது செய்திகளின் நம்பகத்தன்மை , நகல்கள்ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்; 2.கோரிக்கை / பதில், இது தகவல்தொடர்புக்கு பொறுப்பாகும்.

செய்தி அடுக்குஆனது UDPஇற்கு மேல் உள்ளது, மேலும் IoT சாதனங்களுக்கும் இணையத்திற்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பொறுப்பாக அமைகின்றது. CoAP ஆனது உறுதிப்படுத்தக்கூடிய(confirmable message (CON)), உறுதிப்படுத்த முடியாத(non-confirmable message(NON)) , ஒப்புகைசெய்தி(acknowledge message (ACK)) , மீட்டமைவுசெய்தி(reset message (RST)) ஆகிய நான்கு வெவ்வேறு வகைகளான செய்திகளைக் கொண்டுள்ளது – 1.உறுதிப்படுத்தக்கூடிய செய்தி(CON) என்பது இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு(End-to-end) இடையில் பரிமாறப்படும் போது நம்பகமான செய்தியாகும். மறுமுனையில் ஒப்புகைச் செய்தியை (ACK) அனுப்பும் வரை அது மீண்டும் மீண்டும் அனுப்பப்படும். 2.ACK எனும் ஒப்புகைச்செய்தியில் CON இன் செய்தி சுட்டி உள்ளது. உள்வரும் கோரிக்கையை நிர்வகிப்பதில் சேவையகம் சிக்கலை எதிர்கொண்டால், அது ACKக்கு பதிலாக மீட்டமைவு செய்தியை (RST) திருப்பி அனுப்பலாம். முக்கியமான செய்திகளை பரிமாறிக்கொள்ள, நம்பகமற்ற NON செய்திகளைப் பயன்படுத்தலாம், அங்கு சேவையாளர் செய்தியை அங்கீகரிப்பதில்லை. நகல் செய்திகளைக் கண்டறிய NON செய்திகளுக்கு செய்தி சுட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோரிக்கை/பதில் என்பது CoAPஎனும் சுருக்க அடுக்கின் இரண்டாவது அடுக்கு ஆகும், இது கோரிக்கைகளை அனுப்ப CON அல்லது NON செய்திகளைப் பயன்படுத்தி கொள்கிறது. ஒரு சேவையகம் உடனடியாக பதிலளிக்கக்கூடிய சூழ்நிலைகளில், ஒரு கோரிக்கை ஒரு CON செய்தியைப் பயன்படுத்தி அனுப்பப் படுகின்றது, அதில் ஒரு ACK செய்தி பதிலைக் கொண்டிருக்கின்றது அல்லது பிழைக் குறியீடு சேவையகத்தால் திருப்பி அனுப்பப்படுகின்றது. கோரிக்கை, பதில் ஆகிய இரண்டும் ஒரே அனுமதிச்சீட்டுகளைக் கொண்டுள்ளன, செய்தி சுட்டியிலிருந்து வேறுபட்டது. சேவையகம் உடனடியாக பதிலளிக்க முடியாத இடங்களில், எந்த உள்ளடக்கமும் இல்லாமல் ACK செய்தியை அனுப்புகிறது. பதில் தயாரானதும், பதிலைக் கொண்ட புதிய CON செய்தி வாடிக்கையாளருக்கு திருப்பி அனுப்பப்படுகின்றது, மேலும் வாடிக்கையாளர் ஆனவர் தன்னால்பெறப்பட்ட பதிலை ஒப்புக்கொள்கிறார்.

3.மேம்பட்ட செய்தி வரிசை நெறிமுறை (Advanced message queuing protocol (AMQP)) என்பது ஒரு திறந்த நிலையான பயன்பாட்டு அடுக்கு நெறிமுறையாகும், இது உயர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எளிதாக வழங்குதல் இயங்கக்கூடிய தன்மை ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இணைப்பு-சார்ந்த நெறிமுறையாகும், அதாவது வாடிக்கையாளர் ,தரகர் ஆகியோர் தரவை மாற்றுவதற்கு முன் இணைப்பை நிறுவுகைச்செய்திட வேண்டும், ஏனெனில் TCP ஒரு போக்குவரத்து நெறிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. AMQP ஆனது நம்பகமான செய்தி விநியோகத்திற்காக 1.அமைதியற்ற வடிவம் (MQTT என்பதன் QoS0 போன்றது) , 2.தீர்வு வடிவம் (MQTTஎன்பதன் QoS1 போன்றது) ஆகிய QoS இன் இரண்டு நிலைகளை வழங்குகிறது . AMQP , MQTT ஆகிய தரநிலைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், AMQP இல் தரகர் ஆனவர் பரிமாற்றம், வரிசைகள் ஆகிய இரண்டு முக்கிய கூறுகளாகப் பிரிக்கப்படுகிறார் – . வெளியீட்டாளர் செய்திகளைப் பெறுவதற்கும் அவற்றை வரிசைகளில் பரிமாறிக் கொள்வதற்கும்(Exchange) பொறுப்பாகின்றார். சந்தாதாரர்கள் அந்த வரிசைகளுடன் இணைகிறார்கள், அவை அடிப்படையில் தலைப்புகளைக் குறிக்கின்றன, மேலும் அவை கிடைக்கும்போதெல்லாம் உணர்விகளின் தரவைப் பெறுகின்றன.

11

4.தரவு விநியோக சேவை (Data Distribution Service (DDS)) என்பது பொருட்களின் நிருவாக குழுவிலிருந்து தரவு மையப்படுத்தப்பட்ட இணைப்பிற்கான ஒரு இடைநிலை நெறிமுறையாகும், இது குறைந்த தாமதம், தரவு இணைப்பு, தீவிர நம்பகத்தன்மை, வணிகப்பணி ஆகிய-முக்கியமான IoT பயன்பாடுகளுக்கான அளவிடக்கூடிய கட்டமைப்பை வழங்குகிறது. இந்த நெறிமுறை தரவு பரிமாற்றத்தில் பல்முனைபரப்பல்(multicasting) நுட்பங்களை ஆதரிக்கிறது , சிறிய நினைவக தடம் சாதனங்களிலும் பயன்பாடுகளிலும் உயர்தர QoS கொண்டுள்ளன. இதிலுள்ள செய்தியிடல் மாதிரியானது தரவு மையப்படுத்தப்பட்ட, வெளியிடுதல்-சந்தா (DCPS), தரவு உள்ளூர், மறுகட்டமைப்பு அடுக்கு (DLRL) ஆகியஇரண்டு இடைமுக அடுக்குகளைக் கொண்டுள்ளது . இதனுடையDCPS அடுக்கு, வெளியீட்டாளர் / சந்தாதாரர் செயல்முறையின் போது ஒரு பயன்பாட்டிற்குள் தரவு பொருட்களின் மதிப்புகளை பிணைப்பதற்கு பொறுப்பாகின்றது. DLRL என்பது பயன்பாட்டு மட்டத்தில் DDS ஐ ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு விருப்ப அடுக்கு ஆகும்.

1 2
DCPS இல் – DataWriter உடன் வெளியீட்டாளர் , DataReader உடன் சந்தாதாரர் ஆகிய இரண்டு முக்கிய கட்டமைப்புகள் உள்ளன . ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட தரவு வகைக்கும் தரவு பொருட்களின் மதிப்புகளை பிணைக்க ஒரு வெளியீட்டாளர் DataWriter ஐப் பயன்படுத்துகிறார். QoSஇன் கொள்கைகள் ஏதேனும் இருந்தால், அவற்றைப் பின்பற்றும் போது தரவு விநியோகத்திற்கு இது பொறுப்பாகும். தரவுஎழுதுபவர், ஒரு பயன்பாட்டிற்கு தரவுப் பொருட்களுடன் தொடர்புடைய தரவை எழுத வேண்டியிருக்கும் போது வெளியிட வேண்டிய தரவை விவரிக்கின்றார். ஒரு பயன்பாட்டிலிருந்து முன் வரையறுக்கப்பட்ட QoS கொள்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவைப் பெறுகிறார். latteஇலிருந்து தரவை மீட்டெடுக்க, சந்தாதாரருடன் இணைக்கப்பட்ட தரவுபடிப்பாளரை ஒரு பயன்பாடு பயன்படுத்திகொள்கிறது. இது தரவுபடிப்பாளரால் விவரிக்கப்பட்ட தரவுக்கு சந்தா செலுத்துகிறது, இது அறியப்பட்ட சந்தாதாரரால் வழங்கப்படுகிறது. தலைப்புகளைப் பயன்படுத்தி தரவுப் பொருட்களை வெளியிடுவதும் சந்தா செலுத்துவதும் செய்யப்படுகிறது. ஒரு தலைப்பு ஒரு பெயர், தரவு வகை , தரவு தொடர்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட QoS கொள்கைகளுடன் தொடர்புடையது. செய்தியிடல் மாதிரியில் தரவு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை நிர்வகிக்க QoS கொள்கைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு, ஆயுள், நம்பகத்தன்மை போன்ற பல அம்சங்களுடன் 23 வெவ்வேறு QoS நிலைகளை DDS வழங்குகிறது. , DDS இல் உள்ள DCPS அடுக்கின் தகவல்தொடர்பு மாதிரியின் உயர்மட்ட கண்ணோட்டத்தை அளிக்கிறது


இன்று இருக்கும் பல IoT செய்தியிடல் நெறிமுறைகளுக்கு இடையே உள்ள அடிப்படை ஒற்றுமைகளான IoT அமைப்புகளின் வடிவமைப்பு , வரிசைப்படுத்தல் முழுவதும் அவை இணைந்து செயல்படும் திறனைக் கொண்டுள்ளன என்று கூறுகின்றன. IoT சாதன வகைகள், அவை ஆதரிக்கக்கூடிய நெறிமுறைகளின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, IoT அமைப்புகள் IoT தரவு பரிமாற்றத்திற்காக பல நெறிமுறைகளைப் பயன்படுத்துவது அரிதானது அன்று. IoT சாதனங்களின் இணைப்பிற்கு செய்தியிடல் நெறிமுறைகள் முக்கிய கூறுகளாக இருப்பதால், பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் பலத்தையும் பலவீனங்களையும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

பொருட்களுக்கான இணையத்தின் (IoT) கிடைமட்ட தளங்கள்: ஒரு கண்ணோட்டம்

.

பொதுவாக IoT என சுருக்கமாக அழைக்கப்பெறும் பொருட்களுக்கான இணையத்திற்கு இணைப்பு ( connectivity) என்பதுதான் முதுகெலும்பாகும் .எனவே, ஒரு IoT இயங்குதளமானது  மென்பொருள் உள்கட்டமைப்பைப் போல எளிமையானதாக இருக்கும், இது தொட்டுணரும் பொருட்களுக்கு இடையேயான இணைப்பைக் கையாளுகிறது. இணைக்கப்பட்ட இறுதிப் புள்ளிகள், திறனுடைய சாதனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையின் அதிகரிப்பு காரணமாக, IoTஇன் சந்தையானது  இயந்திரங்களுக்கு இடையிலான தொடர்பு, தொழிலக  பயன்பாடுகளுக்கு இடையிலான குறுக்குதள தொடர்பு, ஒன்றிற்கு மேற்பட்ட விற்பனையாளர்களின் இயங்கும்தன்மை , துவக்கமுதல்  இறுதிவரையிலான (End to End)முழுமையான பாதுகாப்பு. ஆகியவற்றை  இதனுடை நிகழ்வுநேர நுண்ணறிவுவழங்குகின்றது. எனவே, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் , வளர்ந்த யதார்த்தம்( augmented reality) போன்ற நிறுவனங்களுடன்  இணைந்து தேவையான வசதிகளை இந்த தளமானது வழங்கமுடியும்.பொதுவாக  IoTதளமானது அடிப்படையில் பின்வரும் கட்டுமானத் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.
 இணைப்பு(Connectivity): அனைத்து  IoT இயங்குதளங்களும் ஒரு இணைப்பு அடுக்கைக் கொண்டுள்ளன, இது தரவுகளை கையகப்படுத்தல், தொலைநிலை அணுகல், கட்டுப்பாடு ஆகிய செயலிற்கு ஒரு குழாயை( duct) வழங்குகிறது.
 சாதன மேலாண்மை: வழங்குதல் பணிகள், சாதன பதிவு, சாதன அடையாளம், சாதன மாதிரி, தொலைநிலை நிருவாகம், மென்பொருள் புதுப்பித்தல், மேககணினியின் / பின்புலதளத்தின் அங்கீகாரம், மையப்படுத்தப் பட்ட பதிவின் சேகரிப்பும் மேலாண்மையும், தவறு சகிப்புத்தன்மை, சரிசெய்தல், கண்டறிதல்,  தொலைநிலை மறுத்துவக்கம் ஆகியவை அனைத்து வகையிலான  கையாளப்படும் பணிகளையும் இந்த சாதன மேலாண்மை தொகுப்பின் மூலம் செயற்படுத்தலாம்.
 தரவு மேலாண்மை: தரவு மேலாண்மை தொகுப்பு என்பது தரவு மற்றும் தகவல் சொத்துக்களின் மதிப்பைக் கட்டுப்படுத்துதல், பாதுகாத்தல், வழங்குதலுக்கும் மேம்படுத்துதலுக்குமான கட்டமைப்புகள், மென்பொருள் துறைகளுக்கும்  இதரதுறைகளுக்குமான விரிவாக்கம், ஆகியவற்றின் செயல்படுத்தலையும் நிருவாகத்தையும்  குறிக்கிறது.
பயன்பாட்டு செயலாக்கம்: இது விதிகளை விளக்குவதற்கு செயல் நிர்வாகத்தை வழங்குகிறது, மேலும் பணிகள் சேவைகள் ஆகியவற்றின் தானியக்க செயல்களை செயல்படுத்துகிறது.
மேககணினியின் பின்புலம்: இது விரிவான தரவைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது  மேலும் வளாக உள்கட்டமைப்புகளுடன் ஒப்பிடுகையில் இதுமிகவும்செலவு குறைந்ததாகும். வணிக IoT இன் முக்கிய பகுதியாக மேககணினி  கருதப்படுகிறது.
 பாதுகாப்பு: இறுதிநிலை சாதனங்கள், வலைபின்னல், மேகக்கணி  ஆகியவற்றினுடைய IoT தளங்களில்  நிறைய பாதுகாப்பு, நம்பிக்கை, தனியுரிமை , அடையாள நிர்வாகத்தை வழங்குகின்றது. இவ்வாறான பணிகள்பாதுகாப்புத் தொகுப்பால் செய்யப்படுகிறது.
IoT தளங்களின் வகைகள்
இறுதி பயனாளர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான சேவைகளின் அடிப்படையில் IoT தளங்களை வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தலாம். திறனுடைய அணியக்கூடியதும் வீட்டு தானியங்கி செயல்களுக்குமான தளங்கள் நுகர்வோர் சந்தையை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் ஒரே திசையில், தரவுகளுக்கு-மேகக்கணியுடனான இணைப்பு. மறுபுறம், இராணுவம், உற்பத்தி, எரிசக்தி, தானியங்கி செயல்கள், வேளாண்மை, விண்வெளி , வங்கி போன்ற துறைகளைச் சேர்ந்த தொழில்துறையின் பொருட்களுக்கான இணைய (IIoT) வாடிக்கையாளர்கள் ,உட்பொதிக்கப்பட்ட மென்பொருள், வடிவமைக்கப் பட்ட பயன்பாடுகள், சாதன மேலாண்மை, தரவு மேலாண்மை, இயங்கும்தன்மை,பாதுகாப்பு, நம்பகத்தன்மை மறுமொழி  உயர் அதிர்வெண், இரு திசை இணைப்பு, முதலியன.
வணிக IoT தளங்கள் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

(i) துவக்கமுதல் முடிவுவரையிலான(End-to-end ) பொருட்களுக்கான இணைய( IoT)  இயங்குதளங்கள்: இவை இணைப்பு, நெறிமுறை இயங்கும்தன்மை, தரவு-கட்டமைப்பு இயங்கக்கூடிய தன்மை, சாதன மேலாண்மை, சாதன நிலைபொருள் / மென்பொருள் மேம்படுத்தல் மேலாண்மை, விதிகளின் இயந்திரம், செயல்களின் இயந்திரம், சீட்டுகள்வழங்குதலின் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் செய்கின்ற முழு அடுக்கு தளங்கள். , தரவு காட்சிப்படுத்தல், பகுப்பாய்வு, பல்வேறு பயன்பாடுகள், கணக்குகள், பயன்பாடுகள் வார்ப்புருக்கள், பயன்பாடுகள் ,மறுபயன்பாட்டு  நகல், பயனாளர் மேலாண்மை, முகப்பத்திரை கட்மைப்பு, தனிப்பயனாக்கம், அறிக்கைகள், வெளிப்புற இடைமுகங்கள், பாதுகாப்பு , தரவு சேமிப்பு ஆகியவைகளாகும்.
(ii) இணைப்பு மேலாண்மை தளங்கள்: இவை அடிப்படை IoT இயங்குதளங்களாகும், அவை இணைப்பு orchestration, இணைப்பு மேலாண்மை , இணைக்கப்பட்ட  IoT சாதனங்களுக்கான தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான தீர்வுகளை வழங்குகின்றன.
(iii) மேககணினி சேமிப்பக தளங்கள்: மேககணினி  அடிப்படையிலான IoT இயங்குதளங்கள்  IoT பயன்பாடுகளின் தரவு நிர்வாகத்திற்கான அளவிடக்கூடிய நிறுவன தரத்தின் பின்புலமாகும்.
(v) பகுப்பாய்வு தளங்கள்: பகுப்பாய்வு உள்கட்டமைப்பு பகுப்பாய்வு பயன்பாடுகள், மீப்பெரும் தரவுகளின் செயலாக்கம், சூழ்நிலை சுரங்க கற்றல், இயந்திர கற்றல் வழிமுறைகளை இயக்குகிறது. கட்டமைக்கப்பட்ட, கட்டமைக்கப்படாதவை ஆகிய தரவுகளிலிருந்து மதிப்புமிக்க தகவல்களைப் பெற இந்த பகுப்பாய்வு தளங்கள் புள்ளிவிவர , தேர்வுமுறை கருவிகளை வழங்குகின்றன.
அமேசான் AWS IoT,  கூகுளின்மேககணினி IoT, மைக்ரோசாஃப்ட்டின் Azure IoT, ஆரக்கிளின் IoT மேககணினி , ஐபிஎம்இன்  Watson IoT ஆகியவை ஒருசில பிரபலமான IoT தளங்களாகும்
கட்டற்ற தரநிலைகளும் கிடைமட்ட கட்டமைப்பும்
கட்டற்ற வழிகாட்டுதல்களை உருவாக்குவதன்வாயிலாக IoT ஏற்பாடு வழங்குநர்களுக்கும் , பொருட்கள் வழங்குநர்களுக்கும்  விரிவாக்க கிடைமட்ட கட்டமைப்பை செயல்படுத்துகிறது. ஏற்பாடு வழங்குநர்கள், தகவல்தொழில்நுட்ப சங்கங்கள், பொருட்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோர் ஏற்பாடுகளை உருவாக்கி உண்மையானதாக்கும் போது வழக்கமான முன்நிபந்தனைகளை எதிர்பார்க்கலாம் என்பதால் ஒரு நிலையான, IoT தொழில்துறை வடிவமைப்பானது வடிவமைப்பு ஒற்றுமை , துவக்கத்திலிருந்து முடிவுவரையிலான ஒருங்கிணைப்பினை வழங்குகின்றது.

கிடைமட்ட கட்டமைப்பானது  கட்டற்ற இணைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு, அளவிடுதல் , நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இது இரு முடிவுகளுக்கு இடையிலான(end-to-end ) ஒருங்கிணைப்பு, கூடுதல் தீர்வுகள் (அதாவது, இயல்பாக்கம், பகுப்பாய்வு பாய்வு), சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை , உயர் தரத்திலும் குறைந்த செலவிலும் வழங்குகிறது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக, நிறுவன  IoT செயலாக்கங்களின் மையத்தில் உள்ளன, மேலும் தரநிலைகளை அடிப்படையாகக் கொண்ட கிடைமட்ட கட்டமைப்பிற்கு மாற்றுவதற்கு இது உதவுக்கூடும்.
நடப்பு பயன்பாட்டிலுள்ள வெவ்வேறு கிடைமட்ட தளங்கள்
விதானம்(Canopy)
IoT சாதனங்கள்  பயன்பாடுகளுக்கு இடையில் மேககணினியானது  தொடரோட்டமாக செயல்படுவதன் மூலம் இது IoT மேககணினியின் செயலை எளிதாக்குகிறது. இது நுகர்வோர், வணிக மற்றும் தொழில்துறை சந்தைகளுக்கான IoT தீர்வுகளின் விரைவான வளர்ச்சியை செயல்படுத்துகிறது. இந்த Canopy  என்பது மேககணினியால் இயக்கப்பட்ட தயாரிப்புகளின்(cloud-enabled product ) வளர்ச்சியை எளிதாக்குகின்ற மென்பொருள் கருவிகளின் நூலகங்களின் தொகுப்பாகும். மேலும் இந்த cloud-enabled product என்பதன் மூலம், இணையத்துடன் இணைக்கக்கூடிய எந்தவொரு தொட்டுனரக்கூடிய சாதனத்தையும் இணையத்தில் கண்காணிக்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் முடியும். இத்தகைய தயாரிப்புகளில் நுகர்வோர் உபகரணங்கள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் பிற IoT சாதனங்களாக இருக்கலாம். மேககணினியால்-இயக்கப்பட்ட தயாரிப்பிற்கு பல்வேறு இடங்களில் இயங்குவதற்கு மென்பொருள் தேவையாகும் .சாதனத்தில், மேகக்கணி  வாடிக்கையாளர் பக்க பயன்பாடுகளுக்குள். இவை ஒவ்வொன்றிற்கும் துணைத் திட்டங்கள் உள்ளன:
  இது உட்பொதிக்கப்பட்ட மேம்பாட்டு கருவிகளின்பை (EDK) எனும்மென்பொருள் சாதனத்தில் இயங்குகிறது.
இது மேககணினி சேவை (CCS) எனும்மென்பொருள் சேவையக பக்கத்தில் இயங்குகிறது.
 இது பயன்பாட்டு மேம்பாட்டு கருவிகளின்பை (ADK) எனும்மென்பொருள் ஒரு பயன்பாட்டிற்குள் இயங்குகிறது – எடுத்துக்காட்டாக,  திறன்பேசியில் அல்லது இணைய உலாவியில்.
Chimera IoT
இது அநாமதேயப்படுத்தப்பட்ட தரவு, கூட்டத்தின் மூல தீர்வு, அதிநவீன விதிகள் அடிப்படையிலான பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி IoTஇன் மூலம் நாம் வாழும் இந்த உலகிற்கு உண்மையான மதிப்பை வழங்குகின்றது, இது செநி(AI) உடன் ஒருங்கிணைக்கப்பட்டு மனித பின்னூட்ட வளையத்தின் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இது HTML5, கூகுள் அனலிட்டிக்ஸ் , கூகிள் எழுத்துருக்கள் உள்ளிட்ட ஆறு தொழில்நுட்ப தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துகிறது. இந்த ஆறு தொழில்நுட்பங்களையும் அமேசான், கூகுள் , Sectigo SSL ஆகியவை அதன் இணையதளத்திற்கு பயன்படுத்திகொள்கின்றன .
DeviceHive
இது ஒரு கட்டணமற்றகட்டற்ற மென்பொருளாகும், இது திறனுடைய பொருட்களின் தொடர்பிற்கும் அதன் நிருவாகத்திற்கும் உதவுகிறது. இது பல்வேறு தள நூலகங்களுடன் தகவல்தொடர்பு அடுக்கு மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருளைக் கொண்டுள்ளது, இது பயனாளர்கள் திறனுடைய ஆற்றல், இயந்திர மனிதனாக்கம், தொலைதூர உணர்வு, தொலைதூரகட்டுப்பாடு, telemetry மற்றும் பலவற்றை மேம்படுத்த அனுமதிக்கிறது. இது முன்னிருப்பாக REST, இயல்புநிலையாக MQTT API ,இணையஉறையாக API ஆகியவை களையும்   ஒரு கூடுதல் சொருகிபோன்று வழங்குகின்றது. இவற்றில் அனைத்து தகவல்தொடர்புகளும் JSON எனும் செய்திகளின் மூலம் செய்யப்படுகின்றன.

Nimbits
இது ஒரு கலப்பின மேககணினி சேவையகமாகும். இந்த கிடைமட்ட தளமானது  IoT தொடர்பான சேவைகளை பரிந்துரைப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட உட்பொதிக்கப்பட்ட கணினிகளில் கட்டமைக்கபட்டுள்ளது. இது அமேசானின் EC2, கூகுளின் App Engine, உபுண்டு லினக்ஸின்  KVM  அடிப்படையிலான மெய்நிகர் இயந்திரம், Jetty (அதாவது, J2EE இன் வலை சேவையகம்) அடிப்படையிலான  கட்டமைப்பு ஆகியவற்றில் இயங்க முடியும். வரைபடத்தில் பயன்படுத்த கூகுளின் தரவு அட்டவணை வடிவமைப்பு போன்ற கட்டற்ற தரவு அட்டவணை சேவைகளை இது ஏற்றுக்கொள்கிறது, மேலும் அவற்றை விரிதாள்களிலும் மூன்றாம் தரப்பு பகுப்பாய்வு கருவிகளிலும் உள்ளடக்குகிறது.
கட்டற்ற பொருட்களுக்கான இணையம் (OSIOT)
இது ஒரு கட்டற்றகட்டணமற்ற மென்பொருள் நூலகமாகும், இது திறந்த, இயங்கக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒரு இடைமுகத்தை வைத்திருப்பதன் மூலம்  IoT பொருட்களின் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
இந்த OSIoT நூலகமானது சாதன பக்கத்தை வழங்குகிறது (எடுத்துக்காட்டாக,oneM2M  சொற்களஞ்சியத்தில் பயன்பாட்டு நிறுவனம்) அடிப்படை oneM2M  வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்குகிறது. oneM2M  வலைபின்னலிற்கான உதவியை இந்த நூலகம் வழங்குகிறது, மேலும் நெறிமுறை செயல்பாடுகள் பயன்பாட்டு மேம்படுத்துநர்களை வளங்கள்-சார்ந்த API மூலம் கணினியுடன் ஒத்துழைக்க அனுமதிக்கின்றன.
prpl அறக்கட்டளை
இது ஒரு திறந்த மூல தளமாகும். இது ஒரு பிணையத்தால் இயக்கப்படும், சமூகம் சார்ந்த மற்றும் பயனுள்ள நிறுவனமாகும், இது உட்பொதிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு மற்றும் இயங்குதளத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது.
RabbitMQ
இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் திறமூல செய்தி தரகராகும். இது இலகுரக மற்றும் வளாகத்திலும் மேகத்திலும் அனுப்ப எளிதானது. விநியோகிக்கப்பட்ட , கூட்டமைக்கப்பட்ட உள்ளமைவுகளில் பயன்படுத்துவதன் மூலம் இது உயர்-அளவிலான, உயர்-அணுகல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
SiteWhere
இது பொருட்களுக்கானஇணையத்திற்கான ஒரு தொழில்துறையின் வலிமையுடைய திறமூல பயன்பாடாக இயக்கப்பட்ட தளமாகும். இது பல குத்தகைதாரர் மீச்சிறு சேவை அடிப்படையிலான உள்கட்டமைப்பை வழங்குகிறது, இது  IoT பயன்பாடுகள் கட்டமைக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதற்கும் தேவையான முக்கிய வசதிகளைக் கொண்டுள்ளது.
Webinos
இது இணைய அடிப்படையிலான ஒரு பயன்பாட்டு தளமாகும். இது ஒரு மேம்படுத்துநருக்கு ஜாவாஸ்கிரிப்ட் API களின் மூலம் சொந்தபயன்பாடு போன்ற திறனை அணுக உதவுகிறது. கூடுதலாக, இது ஒரு சாதனத்தை மற்றொரு சாதனத்தின் சேவைகளை தொலைவிலிருந்து அணுகவும் பயன்படுத்தவும் அனுமதிக்கின்ற இயங்கக்கூடிய நெறிமுறைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

Yaler
இது ஒரு தொடரோட்ட சேவையாகும், இது எளிமையானதும், திறமூலமானதும் அளவிடக்கூடியதுமாகும். இது ஒரு திசைவி அல்லது ஃபயர்வால் அமைப்புக்கு அப்பாற்பட்ட இணையத்துடன் இணைக்கப்பட்ட உட்பொதிக்கப்பட்ட கட்டமைப்புகளையும் IoT பொருட்களுக்கு பாதுகாப்பான வெளிப்புற அணுகலைலும் வழங்குகிறது.
   முடிவாக உலகில் தற்போது IoT ஐ அடிப்படையாகக் கொண்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளையும் தயாரிப்புகளையும் நிறுவுகைசெய்திடும் போது  ஃபயர்வால்கள் , வலைபின்னல் முகவரி மொழி பெயர்ப்பாளர்கள் (NAT ) மூலம் இணைப்பு சிக்கல்களைத் தூண்டலாம். கிடைமட்ட அணுகுமுறை பல சேவை வழங்குநர்களை ஒரே மேடையில் பணி செய்ய அனுமதிப்பதன் மூலம் வணிகங்களில் விரைவான வளர்ச்சியையும் புதுமையையும் செயல்படுத்த முடியும். இருப்பினும், இது இன்னும் குறிப்பிடத்தக்க மேம்படுத்துலைப் பெற வேண்டியுள்ளது.

பொருட்களுக்கான இணையத்(IoT)தின் சிக்கலிற்கு தீர்வுகளை உருவாக்குவதற்கான Mainflux எனும் பயன்பாடு

Mainflux என்பது  IoT இன் சிக்கலிற்கு தீர்வுகளை உருவாக்குவதற்கான IoT இன் இடைநிலையாளராக பயன்படுத்தப்படுகிறது. இது சாதனங்களை இணைக்க தெற்குநோக்கிய API, பயன்பாடுகளை இணைக்க வடநோக்கிய API ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது, பின்னர் அவற்றுக்கிடையிலான  செய்திகளின் வழிசெலுத்தியை அனுமதிக்கிறது. துவக்கமுதல் முடிவு வரையிலான தொகுக்கப்பட்ட முழு அமைப்பையும் அதாவது சாதனம், Mainflux இயங்குதளம் , பயன்பாடுஆகியவற்றை  ஒன்றாக தொகுத்து ‘செங்குத்து தீர்வு(‘vertical solution)’ என்று அழைக்கப்படுகிறது.
, இது பெரியஅளவிலான துமான ஏராளமான அளவிலானதுமான பணிகளையும் எளிதாக செய்கிறது. தயாரிப்பாளர்களையும் வடிவமைப்பாளர்களையும் இணைக்கப்பட்ட சாதனங்கள் (தொட்டுனரக்கூடிய வடிவமைப்பு, நிலைச்சாதனம் போன்றவை) , இறுதி பயனாளர் பயன்பாடு (சாதனத்தை கட்டுப்படுத்தும் GUI) ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் Mainflux தொகுப்பு மீண்டும் பயன்படுத்திகொள்ளலாம். இணைக்கப்பட்ட சாதனங்களுக்கும், பயன்பாடுகளுக்கும் இடையில் இது மிகவும் பாதுகாப்பான முறையில் செய்திகளை அனுப்புகிறது, மேலும் இந்த சாதனங்களுக்கும் பயன்பாடுகளுக்கும் தேவையான பல்வேறு சேவை களையும் வழங்குகிறது. இது விநியோகிக்கப்பட்ட நேர-வரிசை தரவு சேமிப்பகத்துடன் பல-நெறிமுறை சாதனம்-அஞ்ஞான செய்தி தொடரோட்டம் , பல பயனாளர், பல குத்தகைதாரர் சாதனம் , பயன்பாட்டு மேலாண்மை இடைநிலைபயன்பாடு ஆகியவற்றை வழங்குகிறது.
இதனுடைய கட்டமைப்பு(Architecture)
இது ஒரு இடைநிலைபயன்பாடாக செயல்படுகிறது, அதாவது IoT பயன்பாடுகளை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயலிகளையும் சேவைகளை யும் வழங்குகின்ற சேவையகங்களின் தொகுப்பை இது பயன்படுத்துகிறது.
இதனுடைய வசதி வாய்ப்புகள்:
செய்திகளின் பாளமான (HTTP அனுப்புநர், MQTT , WS, CoAP) சாதனங்கள் , பயன்பாடுகள் ஆகியவற்றிற்கு இடையில் செய்திகளை கொண்டுசெல்கின்றது
கணினி மேலாளர் (மேலாளர்)
சாதன மேலாளர் (சாதனம்) இதன் தென்பகுதி இடைமுகத்தில் சாதன இணைப்புகளை ஏற்றுக்கொள்கிறது
பயன்பாட்டு மேலாளர் (App) இதன் வடபகுதி இடைமுகத்தில் பயன்பாட்டு இணைப்புகளை ஏற்றுக்கொள்கிறது
பயனாளர் மேலாளர் ( Mainfluxபயனாளர்இடைமுகம்(UI), Mainflux வாடிக்கையாளர் இடைமுகம்(CLI)) - பயன்பாடுகளுக்கான பயனாளர் நிர்வாகத்தை வழங்குகிறது
நேர-தொடர் சேமிப்பக இயந்திரம் (செய்தி வாசகர், செய்தி எழுத்தாளர், Cassandra) - நேர-தொடர் வடிவத்தில் அளவீட்டு தரவு புள்ளிகளை சேமித்து வினவுகிறது
சிக்கலான நிகழ்வு செயலாக்கம் (கணினி நிகழ்வு bus NATS ஐப் பயன்படுத்துகிறது) உள்வரும் நேர-தொடர் ஓட்டங்களைக் கணக்கிடுகிறது, மேலும் கட்டமைக்கக்கூடிய விதிகளின் அடிப்படையில் தூண்டுதல்களையும் செயல்களையும் தானியக்கமாக்கலாம்.
செய்தியிடல் தவிர, இந்த Mainfluxஆனது user, thing, channel ஆகிய மூன்று முக்கிய களங்களைக் கொண்டுள்ளது
பயனாளர் (user ) என்பது கணினியின் உண்மையான பயனாளரைக் குறிக்கின்றது. அணுகல் சீட்டு மூலம் ஒரு பயனாளர் தளத்தை அணுகலாம், இது மின்னஞ்சல்பெட்டியின் சுட்டி, கடவுச்சொல் ஆகியவற்றின் வழியாக பெறப்படலாம். உள்வுநுழைவுசெய்ததும், பயனர்கள் CRUD செயல்பாடுகளால் வளங்களை ( thing, channel) அணுகலாம் அல்லது நிர்வகிக்கலாம், மேலும் அவற்றை இணைப்பதன் மூலம் அணுகல் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வரையறுக்கலாம். thingஎன்பது இதனுடன் இணைக்கப்பட்ட பயன்பாடுகள் அல்லது சாதனங்களை குறிக்கின்றது, இது மற்றொரு சாதனத்துடன் செய்தி பரிமாற்றத்திற்கான தளத்தைப் பயன்படுத்துகிறது.
channelஎன்பது ஒரு செய்தி அனுப்பப்படும் வழியைக் குறிக்கிறது. எளிமையாக கூறவேண்டுமெனில், இது ஒரு தகவல் தொடர்பு அலைவரிசை(channel) என்று கூறலாம்.
நிறுவுகைசெய்தல்
இதனை நிறுவுகைசெய்வதற்குமுன்,Docker , Docker Compose ஆகிய முன்நிபந்தனை கூறுகளை நிறுவுகைசெய்திடுக
மேலே கூறிய கூறுகள் வெற்றிகரமாக நிறுவுகைசெய்யப்பட்டதும், அடுத்த பணி இதனுடைய மூலக். குறிமுறைவரிகளை பதிவிறக்கம் செய்வதாகும். Git கருவி அல்லது அது இல்லாமல் இதை இரண்டு வழிகளில் செய்யலாம். Git கருவி மூலம் இதைபதிவிறக்கம்செய்வதுநல்லது , ஏனெனில் இது அனைத்து மூலக் குறிமுறைவரிகளையும் அவைகளுக்கு பொருத்தமான கோப்புறைகளில் பதிவிறக்கம்செய்துவிடும். ஆனால் Git கருவி இல்லாமல் இதைச் செய்தால், GitHub களஞ்சியத்திலிருந்து சுருக்கி கட்டப்பட்ட( Zip) கோப்புகளை பதிவிறக்கம் செய்து, நம்முடைய கணினியில் உள்ள இலக்கு கோப்பகத்தில் மூலக் குறிமுறிகளை தனித்தனியாக பிரித்தெடுக்க வேண்டும். இந்தபணி முடிந்ததும், நாம்அடுத்த கட்டத்திற்கு தயாராக உள்ளோம்
தொடர்ந்து Mainflux மூலக் குறிமுறைவரிகளை பதிவிறக்கம் செய்த அல்லது பிரித்தெடுத்த கோப்புறையில் செல்ல இப்போது முனைமத்தைப் பயன்படுத்திடுக. எடுத்துக்காட்டாக, / home / user / என்றவாறு அடைவைப் பயன்படுத்தியிருந்தால். முந்தைய கட்டத்தில் Git கருவி பயன்படுத்தப்பட்டால், / home / user / mainflux என்றவாறு பாதையின் அடைவு இருக்க வேண்டும் . இல்லையெனில், சுருக்கி கட்டப்பட்ட( Zip) கோப்பைப் பயன்படுத்தி அதை நம்முடைய கணினியில் பிரித்தெடுத்திருந்தால், mainflux-master என்ற பெயருடன் ஒரு கோப்புறை உருவாக்கப்படலாம். அந்த மூல குறியீடு கோப்பகத்திற்கு செல்க. அடுத்த கட்டமாக கட்டளையை இயக்குவதன் மூலம் Mainflux core சேவைகளைத் தொடங்க வேண்டும்:

docker-compose -f docker/docker-compose.yml up -d

மேலே உள்ள கட்டளை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது என்று கருதி, Mainflux IoT இயங்கு தளத்தினை இயக்குக .
இந்நிலையில்நாம்கவனிக்க வேண்டிய ஒருசில செய்திகள்
நம்முடையசெயல் திட்டமானது
root/docker/docker-compose.yml fileஎன்பதன்கீழ் Docker இன் கலவையாக வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப இந்த கோப்பை தனிப்பயனாக்கலாம்.
தளங்களின் மோதல்கள் தான் பெரும்பாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளாகும். நம்முடைய பயன்பாடுகளில் ஏதேனும் Mainflux சேவைகளை இயக்கத் தேவையான ஒரு தளத்தின் வாயிலைப் பயன்படுத்துகின்றோம் என்றால், நாம் அந்த தளத்தின் வாயிலை விடுவிக்க வேண்டும் அல்லது
docker-compose.yml. இலிருந்து இயல்புநிலை தளத்தின் வாயிலிற்கு மாற்ற வேண்டும். ஃபயர்வால் உள்ளமைவில் உள்ள அனைத்து தளத்தின் வாயில்களையும் அனுமதிக்கத் தவறியது மற்றொரு பொதுவான சிக்கலாகும்.
Mainflux ஐ பயன்படுத்துதல்
இது அடிப்படையில் செய்திகளைப் பற்றியது, இதற்காக Dashflux எனப்படும் எளிய பயனாளர் இடைமுக (UI) வாடிக்கையாளரை இது வழங்குகிறது. முன்பு கூறியது போல், முதல் முறையாக உள்நுழைவுசெய்திட நாம் ஒரு சரியான பயனாளர் பெயர் , கடவுச்சொல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பதிவு செய்ய வேண்டும். கணினியில் உள்நுழைவுசெய்ததும், CRUD (உருவாக்குதல், படித்தல், புதுப்பித்தல் நீக்குதல்(create, read, update , delete)) செயலிகளின் உதவியுடன் வளங்களை நிர்வகிக்கலாம், மேலும் அணுகல் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வரையறுக்கலாம். உள்நுழைவுசெய்த பிறகு, பயனாளர் முகப்பு பக்கத்திற்கு திருப்பி விடப்படுவார்
Dashfluxஇன் முகப்பு பக்கத்தில் மேலே வலதுபுற மூலையில் மூன்று பொத்தான்களைக் காணலாம்.
Things எனும் பொத்தானை Things எனும்முகப்புதிரைக்கு செல்லவும், Channels எனும் பொத்தானை Channels எனும்முகப்புத்திரைக்குசெல்லவும் Logout எனும் பொத்தானை நம்மை வெளியேற்றுதல் செய்யவும் பயன்படுகின்றன. கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் புதிய Things அல்லது Channels ஐச் சேர்ப்பதற்கான உரையாடல் பெட்டி திறக்கும். ஒரு Channel உருவாக்கப்பட்டதும், பயனாளர் அதைத் திருத்தலாம் , சாதனங்களை இணைக்கலாம் அல்லது துண்டிக்கலாம்.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
Channels உடன் இணைக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்க, நேர்மாறாக இணைப்பினை துண்டிக்கலாம். இது Rest APIஐ பயன்படுத்துகிறது - பல்வேறு கட்டளை வரி கருவிகள் அல்லது எந்த HTTP API மேம்பாட்டு கருவியையும் பயன்படுத்தி அனைத்து செயல்பாடுகளையும் செய்யலாம்.
Core தள கூறுகள், வாய்ப்புகள் என்றவாறு இரண்டுகூறுகளாக பிரிக்கலாம் . முக்கிய இயங்குதள கூறுகள் (NATS), நெறிமுறை ஏற்பாளர்கள்( protocol adaptors) , இயல்பாக்குபவர்(normalizer ). எழுத்தாளர் (Writer), தரவுத்தளம்( database) ஆகிய வாய்ப்புகள் உள்ளன. இங்கே, ‘thing’ என்பது செய்தி பரிமாற்றத்திற்கு இது பயன்படுத்திகொள்கின்ற ஒரு பயன்பாடு அல்லது சாதனத்தைக் குறிக்கிறது. இந்த பயன்படுத்த வேண்டிய அவசியம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வித்தியாசமாக இருப்பதால், MQTT, WebSocket, HTTP போன்ற பல்வேறு வகையான நெறிமுறைகளை ஆதரிக்க நெறிமுறை ஏற்பாளர் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நெறிமுறையிலும், அதனுடன் தொடர்புடைய நெறிமுறை ஏற்பாளர் உள்ளது. ஒரு நெறிமுறை-குறிப்பிட்ட செய்தியை பொருத்தமான வடிவமைப்பிற்கு மாற்றுவதே ஏற்பாளரின் பணியாகும், அதாவது இது
Mainflux இன் செய்தியாகும் . பின்னர் ஒரு திறமூல அளவிடக்கூடிய செய்தியிடல் அமைப்பான NATS வருகிறது, ஒரு தளத்திற்குள் செய்தி பரிமாற்றத்திற்கு மெயின்ப்ளக்ஸ் பயன்படுத்துகிறது. NATS க்கு வெளியிடப்பட்டதும், செய்தி இயல்பான சேவைக்கு மாற்றப்படும். செய்தியை SenML ( Sensor Markup மொழி) வடிவத்திற்கு மாற்றுவதே வழக்கப்படுத்துபவரின் பணியாகும். வழக்கப்படுத்துபவர் பின்னர் மாற்றப்பட்ட செய்தியை மேலும் செயலாக்கத்திற்காக NATS க்கு அனுப்புகின்றார், இது SenML இல் உள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க. தரவுத்தளத்தில் SenML வடிவமைக்கப்பட்ட செய்திகள் மட்டுமே எழுதப்படும்.

பாதுகாப்பு
இது மிகவும் பாதுகாப்பான அமைப்பு. அங்கீகாரத்தை அர்ப்பணித்துள்ளது மேலும் அங்கீகரிக்கப்படாத சாதனங்களுக்கும் பயன்பாடுகளுக்குமான அணுகலை அனுமதிக்காது. அனைத்து செய்திகளும் வலைபின்னலின் போக்குவரத்தும் TLS v1.3 போன்ற சமீபத்திய பாதுகாப்பு தரங்களால் குறியாக்கம் செய்யப்படுகின்றன.
இது அப்பாச்சி உரிமம் 2.0 இன் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இது இலகுரக மற்றும் அளவிடக்கூடிய தளமாகும். எல்லா சேவைகளும் Docker கொள்கலனாக பயன்படுத்தப்படுவதால், முழு இயங்குதள அமைப்பும் நிறுவுகைசெய்தலும் மூன்றே படிகள் மட்டுமே எடுத்துகொள்கின்றது. நாம் விரும்பினால் எந்தவொரு சேவையையும் அல்லது வசதியையும் தனிப்பயனாக்கலாம்,

IIoT நுழைவாயில்-22.69.4

மேலும் இதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும் மென்பொருள் விவரங்களும்        https://sourceforge.net/projects/iiot-gateway எனும் இணையமுகவரியில் கிடைக்கின்றன.

IIoT எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறும் தொழில்துறை  பொருட்களுக்கான இணைய (Industrial and Internet of Things (IIoT)) நுழைவுவாயில் என்பது  கட்டற்றது கட்டணமற்றது தொழில்துறையில் கவணம் செலுத்திடுமாறு  உருவாக்கப்பட்டதாகும், . இது தானியங்கி தொழில்நுட்பம் ,மருந்துகள் உற்பத்தி  போன்ற முக்கிய தொழில் துறைகளில் இயந்திர கண்காணிப்பு, தரவுகளை கையகப்படுத்தல் , காட்சிப்படுத்தல் ஆகியவற்றிற்கான பயன்பாடுகளை வடிவமைக்க, வரிசைப்படுத்த , உருவாக்க இந்த இயக்கமுறைமையை (OS) பயன்படுத்தலாம். பைதான், நோட்ஜெஎஸ் , ஜாவா போன்ற உயர் மட்ட கணினி மொழிகளில் உள்ளடக்கிய பயன்பாட்டு வடிவமைப்பு வசதிகளும் இதில் உள்ளன.
IIoTநுழைவுவாயில் என்பது ஒரு இந்திய தயாரிப்பு(‘Made in India’) எனும் அடிப்படையிலான  குனு / லினக்ஸ் வெளியீடாகும், இது தொழில்துறை  பொருட்களுக்கான இணையம்(IIoT) ,பொருட்களுக்கான இணைய ம் (IoT) ஆகிய பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பைக் கொண்டுள்ளது.
Modbus / OPCUA தரவு கையகப்படுத்தலுக்காக, LTE இணைப்பு மற்றும் MQTT தகவல்தொடர்புகளுக்கான சுலபமாக பயன்படுத்தக்கூடிய இணைய பயனாளர் இடைமுகத்தினை( UI ) வழங்குவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம்(IT) , செயல்பாட்டு தொழில்நுட்பம்(OT) ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை  பயனாளர் தேவைகளுக்கு ஏற்ப பயன்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. .IIoT நுழைவாயிலின் அடிப்படையே லினக்ஸ் கெர்னல் ஆகும், இதுவே அனைத்து இயக்கமுறைமைகளுக்கும் இதயமாாக விளங்குகின்றது
இந்த நுழைவாயிலில் உள்ள அனைத்து குறிமுறைவரிகளும் திற மூலமாகும், தேவைப்பட்டால் இறுதி பயனாளர்களுக்கு பயிற்சி அல்லது ஆலோசனை வழங்கப்படுகிறது.  இதில் செயல்படுவதற்கான அடிப்படை பயன்பாடுகளை நிரலாக்க மொழிகளான பைதான் , நோட்ஜெஎஸ் , ஜாவா ஆகிய தளத்தில் உருவாக்க முடியும், ஏனெனில் எல்லாமே முன்பே கட்டமைக்கப்பட்டு துவக்கத்திலிருந்து இறுதி வரை முன்பே நிறுவப்பட்டிருக்கும். IIoT நுழைவாயில் வரம்புகள் அல்லது உரிமங்கள் எதுவும் தேவையில்லை மேலும் இதனை  பயன்படுத்த மற்றும் விநியோகிக்க முற்றிலும் இலவசமாகும்.
ஒரு VM, நிறுவன தரவு சேவையகம் அல்லது  மேசைக்கணினியில் நிறுவப்பட்டுள்ளது.  தற்போதுள்ள பிற அமைப்புகளைப் போலன்றி, பிணைய நிர்வாகத்தையும் தொலைநிலை பயனாளர்களையும் மனதில் வைத்து இந்த இயக்கமுறைமை (OS)யானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பயன்பாடுகளை மேககணினியில் நிறுவுகை செய்யலாம், மேலும் பயனாளர்கள் தங்களுடைய கைபேசிகளில் தொலைதூர தரவை ஆண்ட்ராய்டு பயன்பாட்டைப் பயன்படுத்திகொள்வதன் வாயிலாக  பெறலாம் அல்லது கண்ணால் காணலாம். இந்த பயன்பாடுகளை தொழிற்சாலை வளாகத்தில் உள்ளகபயன்பாடாக இயக்கலாம் அல்லது அமேசான் வலை சேவை (AWS) யின் மேககணினி தளத்தில் நிறுவுகை செய்யலாம்.

தற்போதுள்ள கணினியின் வன்பொருட்களும்  மென்பொருட்களுக்குமான  தீர்வுகள் மிகவும் விலை உயர்ந்தவை, மேலும் பயனளர்களுக்கு விலை உயர்ந்த பயிற்சியும் தேவையாகும்.  புதிய மேம்படுத்துநர்கள் பூர்த்தி செய்ய கடினமான கடுமையான உரிமத் தேவைகளும் உள்ளன. மேலும், தனிப்பயனாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான அவசர ஆதரவைப் பெறுவது மிகவும் கடினம், ஏனெனில் ,பயன்பாடுகள் மற்றும் வடிவமைப்பின் தனியுரிமை தன்மை, தகவல்தொழில்நுட்ப மக்கள் பொதுவாக செய்யக்கூடியது போன்ற பதில்களைத் தேட கூகிள் அல்லது இணையத்தைப் பயன்படுத்த முடியாது. தொழில்துறை பயன்பாடுகளில் எந்தவொரு பிரச்சினைக்கும் உதவியைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால் இறுதி பயனாளர்களுக்கு அதிக நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கிறது, இதையொட்டி அமைப்புகள் ஒருங்கிணைப்பாளருக்கான நற்பெயர் இழப்பு ஏற்டுகின்றது இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக  அதவும் இந்தியசூழலில் மலிவாகவும் எளிமையாகவும் ஆனபயன்பாட்டு மேம்பாட்டுக்கு உதவும் வகையில்இது உருவாக்கப்பட்டுள்ளது

எந்தவொரு இடையூறும் இல்லாமல், தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்துடன் பயனாளர் அதிகாரம் பெற்றது. இது போன்ற உயர் மட்ட மொழிகளில் உள்ளடக்கிய பயன்பாட்டு வடிவமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது
பைதான், நோட்ஜெஎஸ் மற்றும் ஜாவா ஆகியவற்றை அறிந்த. கணினி அறிவியல் பட்டதாரிகள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் தொழில் மாற்றங்களைச் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் வரவிருக்கும் மந்தநிலையை இதன்வாயிலாக கடக்க முயற்சிக்கலாம்.  வாழ்க்கையில் ஒரு தொடக்கத்தைத் துவங்க விலையுயர்ந்த மற்றும் தனியுரிமை மென்பொருள் அல்லது தொழில்நுட்பத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை

IIoT நுழைவாயிலின் நன்மைகள்
திறமூல மாதிரியான  நெகிழ்வுத்தன்மை,  செலவுகளைகுறைக்கும் செயல்திறன், தகவல் பாதுகாப்பு , பிழை திருத்தங்கள் போன்ற பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது   இது  பொதுவாக சிக்கல்களைத் தீர்க்க பல்வேறு வழிகளை வழங்குகிறது. ஒரு விற்பனையாளரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட திறன் கிடைக்காததால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தடுமாறாமல் தடுக்க இது உதவுகிறது. விற்பனையாளர் அந்த திறனை வழங்குவதற்காக காத்திருப்பதற்கு பதிலாக, இதனை செயல்படுத்தி பயன்பெறமுடியும்
திறமூல தீர்வுகள் பொதுவாக மிகவும் மலிவானவை, மேலும் அவை நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான தொடக்கங்களைத் தருகின்றன. ஒருசில பராமரிப்பு செலவுகளை திறம்பட பகிர்ந்து கொள்ளும்போது நிறுவன சிக்கல்களை தீர்க்க முடியும். திறமூலத்தின் ஒரு பெரிய நன்மை சமூக ஈடுபாடு. ஒரு பயன்பாட்டை எழுதுவதற்குப் பதிலாக, அதை நாமே தக்க வைத்துக் கொள்ளாமல், பயன்பாடுகளை பராமரிப்பதற்கும் பராமரிப்பு செலவைப் பகிர்ந்து கொள்ளலாம்

திற மூலத்தில் ஒரு திடமான தகவல் பாதுகாப்பு பதிவு உள்ளது. தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக திறந்த மூல சமூகம் மற்றும் விற்பனையாளர்களின் மறுமொழி மிகவும் சிறப்பாக உள்ளது. கடைசியாக, திறதொழில்நுட்பத்தை சுற்றி ஒரு சமூகத்தை உருவாக்குவது மூடிய மூல மென்பொருளை பராமரிப்பதை விட மிகவும் பயனளிக்கிறது இது ஒரு உண்மையான கணினி அல்லது எந்த மெய்நிகர் கணினியிலும் நிறுவுகைசெய்து  இயக்கி பயன்பெறலாம்

இந்த துறையில் வணிகமானது  OEM கள் , அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர்கள் (SI)ஆகிய  இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது – .பிந்தையது  OEM வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தீர்வுகளுக்கு விற்பனை, சேவை மற்றும் ஆதரவை வழங்க OEM களால் நியமிக்கப்பட்டு   தளம் ஒரு சேவை (PaaS) , மென்பொருளை ஒரு சேவை (SaaS)  ஆகியவற்றை வழங்குவதற்கு  OEM மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர்(SI)  பயன்படுத்துவதன் மூலம் வழங்கப்படுகிறது

  இவ்விரண்டு பணிகளின் மூலம் OEM தொலைநிலை கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் பிற திறனுடைய வசதிகளைச் சேர்க்க IIoT நுழைவயில் தளத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப SI வடிவமைப்பு பயன்பாடுகளை உருவாக்குகிறது. இந்த இரண்டு கூறுகளைத் தவிர, இது திறமூலமாக இருப்பதால் சுதந்திரமான பயனாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த OS ஐ  தங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து  பயன்படுத்தி கொள்ளலாம்.
தனிப்பட்ட மட்டத்தில், தனது சொந்த இயக்கமுறைமை (OS )மற்றும் மேம்பாட்டுக் கருவிகளை வடிவமைப்பது,  மூடிய மூல மென்பொருளைப் பயன்படுத்துவதை விட நம்பிக்கையுடனும் சிறந்த நிபுணராகவும் ஆகமுடியும்

 இது ஒருவரது நிரலாக்க சிக்கல் தீர்க்கும் திறன்களை மேம்படுத்த அனுமதிக்கின்றது மற்றும் மென்பொருள் பொறியியலை நோக்கிய ஒட்டுமொத்த பரந்த பார்வையை ஏற்படுத்திடுகின்றது. ஒரு தொழில்முறை மட்டத்தில், இது கைகொடுக்கின்றது

IoT, IIoT,  IT ஆகிய நிறுவன அளவிலான பயன்பாடுகளை கூட செயல்படுத்துவதற்கும், மேம்படுத்து வதற்கும்,  வரிசைப்படுத்துவதற்கும் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை வழங்குவதோடு, இந்த தயாரிப்பு உலகளாவிய தொழில்நுட்பத்தை இந்தியமயமாக்குவதற்கான ஒரு சிறிய படிமுறையாகும்

மேலும் இதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும் மென்பொருள் விவரங்களும்        https://sourceforge.net/projects/iiot-gateway எனும் இணையமுகவரியில் கிடைக்கின்றன.

பொருட்களுக்கான முற்போக்கான இணையம்


பொருட்களின் முற்போக்கான இணையம் என்பது முற்போக்கானஇணைய பயன்பாடுகள்(PWA) + பொருட்களுக்கான இணையம்( IoT) ஆகிய இரண்டும் சேர்ந்துதொரு கலவையாகும். இது முற்போக்கான இணையபொருட்களில் உருவாகின்றது. பொதுவாக, பயன்பாட்டு மேம்பாடானது சொந்த(native )பயன்பாடு , இணைய(web)பயன்பாடு ஆகிய இரண்டு வழிகளில் செய்யப்படலாம்: .
சொந்த (native ) பயன்பாடுகள் இந்த சொந்த பயன்பாட்டின் மேம்பாடானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோ போன்ற பல்வேறு தளங்களை கொண்டிருக்கலாம். இருப்பினும், மேம்டுத்துநர்கள் தங்களுடைய பயன்பாடுகளை தனித்தனியாக உருவாக்குவதுஅதிக சிரமமான பணியாகும், இதனால் அவை ஒவ்வொரு தளத்திற்கும் இணக்கமாக இருக்குமாறு செய்யப்பட்டிருக்கும். இதனுடைய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
பயனாளர் அனுபவ ஈடுபாடு (பயனாளர்களுக்கு)
இணையஇணைப்பில்லாதபோதிலும் ஆதரவு (பயனாளர்களுக்கு)
சேமித்தலும் நிறுவுகைசெய்தலும் (பயனாளர்களுக்கு)
சொந்த பயன்பாட்டின் வசதிகளுக்கான ஈடுபாட்டு அணுகல் (மேம்படுத்தநர்களுக்கு)
மேம்பாடுகளை மேம்படுத்தும் உயர் முயற்சிகள் (மேம்படுத்துநர்களுக்கு)
குறைந்த நிறுவுகையையும் பயனாளர்களின் பங்களிப்பையும் குறைத்தல் (மேம்படுத்துநர்களுக்கு)
இணைய(web) பயன்பாடுகள்
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்பின்வருமாறு
நிறுவுகைசெய்தலும் கூடுதல் சேமிப்பிடங்களும் தேவையில்லை (பயனாளர்களுக்கு)
பயனாளர் அனுபவ ஈடுபாடு (பயனாளர்களுக்கு)
இணையஇணைப்பில்லாதபோதிலும் ஆதரவு (பயனாளர்களுக்கு)
குறைந்த முயற்சிகளில் மேம்படுத்துதல்கள் (மேம்படுத்துநர்களுக்கு)
மேலும், சொந்த பயன்பாட்டு வசதிகளுக்கான அணுகல் (மேம்படுத்துநர்களுக்கு)
பொதுவாக சொந்த பயன்பாடுகள் ஒரு சில சாதனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவைகளாகும், ஆனால் இணைய பயன்பாடுகளுக்கு அத்தகைய வரம்பு எதுவும் இல்லை மேலும் இவை URL இன் உதவியுடன் செயல்படும் திறன்மிக்கவைகளாகும்.
முற்போக்கான இணைய பயன்பாடுகள்
சொந்த பயன்பாடுகள் இணைய பயன்பாடுகள்ஆகியவற்றின் சிறந்தவசதிகளை இணைந்து முற்போக்கான இணைய பயன்பாடுகளை வழங்குகிறது.
முற்போக்கான இணைய பயன்பாடுகள் சிறந்த சொந்த அனுபவத்துடன் கூடியஇணைய பயன்பாடுகளாகும்
பின்வருவனபோன்ற ஒரு கலப்பின தொகுப்பு வசதிகளை இவை கொண்டுள்ளன:
கைபேசி போன்ற அனுபவத்தை வழங்குதல்
முற்போக்கான வலை வடிவமைப்பினை வழங்குதல்
அதன் சிறந்த முறையில் மீண்டும் ஈடுபடுதல் (இதனால் நம்முடைய வாடிக்கையாளர்கள் / பயனாளர்கள் எல்லா பயன்பாடுகளையும் நிறுவுகைசெய்திடவேண்டிய சிரமத்தினை அனுபவிக்க வேண்டியதில்லை)
இவை இணையஇணைப்பிலாதுபோதும் (சொந்த பயன்பாடுகள் போலவே) செயல்படும் திறன்மிக்கவை
மேலும், குறிப்பிட்ட கால ஒத்திசைவு, மிகுதி அறிவிப்புகள். ஆகிய பல்வேபு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளன.2020 ஆம் ஆண்டின் முடிவில், IoT சாதனங்களின் எண்ணிக்கை 20 பில்லியனைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இது நாம் வாழும் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரியாக 6 க்கும் மேற்பட்ட IoT சாதனங்களைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.
இந்த IoT கட்டமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது:
(1) புலனுணர்வு அடுக்கு- உணர்விகளையும் தூண்டுதல்களையும் கொண்டது
(2) பிணைய அடுக்குகள் – திசைவிகளையும் நுழைவுவாயில்களையும் கொண்டது
(3) பயன்பாட்டு அடுக்கு- மேககணினி / சேவையகங்களைக் கொண்டது.
IoT உடன் PWA இன் கலவையானது IoT கட்டமைப்பின் பயன்பாட்டு அடுக்கில் நிகழ்கிறது.
ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், தற்போது இந்த புதிய IoT தொழிளானது மேலும் உயர்ந்து வளர்ந்து வருகிறது. அதனோடுஒவ்வொரு நிறுவனமும் தம்முடைய IoT சாதனங்களுக்கான அதன் சொந்த கட்டமைப்பையும் தரத்தையும் உருவாக்குகின்றன. அதனால்,(இணைய பயன்பாடுகளுடன் ஒப்பிடுகையில்) இந்த IoT சாதனங்களுக்கான உலகளாவிய பொதுவான தரநிலைகள் இல்லாததால் , வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் பல்வேறு சாதனங்களும் வெவ்வேறு தரங்களுடன் இருப்பதால் இவைகளை ஒன்றுக்கொன்று இணக்கமாக இணைக்க முடியாத நிலையுள்ளது. இதன் காரணமாக, IoT சாதனங்களின் இணைப்பானது வெகுவாக குறைந்து வருகிறது. இணையத்தினை IoT உடன் இணைப்பதன் மூலம், திறந்த வலையின் அனைத்து நல்ல வசதிகளையும் IoT க்கு கொண்டு வருவதன் மூலம் இந்த சிக்கல்களை தீர்வு செய்திட முடியும். இதன் மூலம், இணையத்தினைப் போன்றே IoT சாதனங்களின் வரம்பையும் அதிகரிக்கலாம்.
நாளுக்குநாள் IoT சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து கொண்டே வருவதால், தரவு களின் சேகரிப்பும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் மேலும் மிக அதிகமாக அதிகரித்து கொண்டேவருகின்றன. ஒரு சிலருக்கு தகவல்களைச் சேகரிப்பதில் ஆழ்ந்த விருப்பங்கள் உள்ளன. உதாரணமாக, சாலைகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் (இவை பொது தரவுகளின் கீழ் வருவதால்) நன்றாக உள்ளன ஆனால் அதே நேரத்தில், உயிரியல்ஆய்வு தரவுகள் போன்ற தனிப்பட்ட சுயவிவரங்களில் தரவுகளை சேகரிப்பது, நிதி பரிமாற்றங்கள் போன்றவை அச்சுறுத்தலாக இருக்கின்றன. முக்கியமான தகவல்கள் உட்பட IoT சாதனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பிட் தரவும் மேகக்கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன்பு, எந்தவொரு நிறுவனமும் திற மூல தளங்களை ஊக்குவிக்கவில்லை, ஆனால் இன்று ஒவ்வொரு நிறுவனமும் திற மூலத்தை ஏற்க முயற்சிக்கின்றது. ஏனெனில் திறமூலமானது தரவுகள் வளர்ந்து வரும் வணிகத்தின் முக்கிய பகுதியாகும். உதாரணமாக, சுமார்10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு, மென்பொருள் உலகின் முக்கிய வணிகம் என்பது தனியுரிமை மென்பொருளை விற்பனை செய்வதாகும். அதனால் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்திய பயனாளர்கள் எந்த வகையான தகவல்களை நிறுவனங்களில் சேகரிக்கின்றார்கள் என்றதகவல்கள் வேறு யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. அந்த நேரத்தில், பயனாளர்கள் இயந்திரங்களை சொந்தமாக வைத்திருந்தனர், ஆனால் அதற்கான குறிமுறைவரிகள் மட்டும் அதனை உருவாக்கி வழங்கிய நிறுவனங்களுக்கு சொந்தமானதாக இருந்துவந்தன
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பயனாளர் சமூகங்கள் திற மூலத்தின் பெயரில் தனியுரிமை நிறுவனங்களுக்கு மாற்று மென்பொருளை உருவாக்கத் தொடங்கின. மேககணினி தொழிற்துறையின் வளர்ச்சியுடன், நிறுவனங்கள் தற்போது இயந்திரங்களை சொந்தமாக்கத் தொடங்கியுள்ளன, அதே நேரத்தில் குறிமுறைவரிகள் பொதுசமூகங்களுடன் இணைந்து உள்ளன. நிறுவனங்கள்தற்போது தங்களுடைய வணிக மாதிரியை ஒருதிறமூல சேவையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன, குறிமுறைவரிகளானவை ஒரு தயாரிப்பு அல்ல, ஆனால் தங்களுடைய வணிகங்களை பெரிதாக்க நிறுவனத்திற்கு உதவும் ஒரு சேவையாகும்.
மேம்படுத்துநர்களுக்கான திற மூல தளம் எனக் கூறும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு GitHub தளமானது சொந்தமானதாகும் அவ்வாறு எனில், GitHub தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், மைக்ரோசாப்ட் மேம்படுத்துநர்களுக்கு தங்களுடைய திற மூல மென்பொருளை உருவாக்க Azureஐ வழங்குவதன் மூலம் தங்களுடைய சேவைகளை மேம்படுத்த முடியும்.வணிக மாதிரி மாறினாலும், தகவல் சேகரிப்பு மாறாது. முன்னதாக, தனியுரிமை மென்பொருளானவை கண்காணிப்பின் முக்கிய அலைவரிசைகளாகப்( channels) பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது திறந்த கண்காணிப்புக்கு மாறிவிட்டன.
மூலக் குறிமுறைவரிகளை பொதுமக்களின் பார்வைக்கு திறந்தவிட்டதன் மூலம், உலகை கற்பனாவாதத்திற்கு கொண்டுசென்றோமா எனில் அவ்வாறெல்லாம் ஒன்றும் இல்லை. மூலக் குறிமுறைவரிகள் திறந்திருக்கும், ஆனால் இன்னும்,நமக்கு பல்வேறு பெரிய போட்டி கள்உள்ளன, அது மையமயமாக்கல். ஃபேஸ்புக்கில் எதிர்வினை கொண்டுள்ளன, கூகிள் Angular ஐயும் மைக்ரோசாப்ட் GitHub ஐயும் கொண்டுள்ளன. இவை அனைத்தும் திறமூலங்கள் ஆனால் அவை மையப்படுத்தப்பட்டவை மேலும் அந்தந்த நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தரவு கண்காணிப்பின் இருண்ட பக்கத்தைப் பார்ப்போம். நம்மிடம் GPS இருப்பிடம்காணும் கருவி அல்லது நம்முடைய கைபேசியில் உள்ள உணர்விகள் மூலம் கண்காணிக்கப்படும் எல்லா தரவுகளும் திறந்த இணையத்திலும், இருண்ட இணையத்திலும் கிடைக்கின்றன. இது எதிர்காலத்தில் குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.எனவே இப்போது, தனியுரிமையை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
பரவலாக்கம் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. திறமூலத்தின்வாயிலாகவும் பரவலாக்கத்தின் உதவியுடனும், தரவுகளை கசிவுகளின் கவலைகள் இல்லாமல் ஒரு பாதுகாப்பான தளத்தை நாம் செயல்படுத்த முடியும்.
பயன்பாட்டு அடுக்கில் உள்ள மேககணினி / சேவையகங்கள் மேககணினி, முனைமகணினி மூடுபனி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றுள் மேககணினி மிகவும் பிரபலமாக இருந்தபோதிலும், முனைமகணினி மூடுபனி பொருட்களுக்கான இணையம்(IoT) ஆகியவற்றையும் ஆய்வுசெய்திட பரிந்துரைக்கப்படுகிறது. அதன் உதவியுடன், பயனாளர்கள் திறனுள்ள அலுவலகங்கள், திறனுள்ள வீடுகள் போன்ற சொந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்க முடியும். இதற்கான இயங்குதளம் மிகவும் எளிதானது, பயனாளர் தங்களுடைய சொந்த சேவையகங்களை மொஸில்லாவின் திற மூலஇணைய மென்பொருளுடன் அமைத்து அதை சாதனங்களுடன் கட்டமைக்க வேண்டும். அவ்வளவுதான்.
பொதுவாக, ஒவ்வொரு IoT சாதனமும் விற்பனையாளர்களின் மையப்படுத்தப்பட்ட சேவையகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையகங்களில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுக, ஒருவர் அவற்றின் சேவையகங்கள், நுழைவாயில்கள்ஆகியவற்றின் வழியாக உள்செல்ல வேண்டும். ஆனால் மொஸில்லாவின் முற்போக்கான பொருட்களுக்கான கட்டமைப்பின் மூலம், ஒரு பரவலாக்கப்பட்ட, சிறிய-சேவையகம் அல்லது ஒரு தனியார் சேவையகத்தை ஒருவர் செயல்படுத்த முடியும், இதனால் நம்முடைய எல்லா தரவுகளும் எந்தவொரு வெளிப்புற சேவையகத்திற்கும் சரணடையாமல் நம்முடையள் வரம்பிற்குள் இருக்கும்.
புதிய இணையத் தரங்களின் வருகையுடன், முகப்புத் திரையில் சேர்ப்பது, கைபேசியில் பதிலளிக்கக்கூடியது PWA இன் வசதிகள் மட்டுமல்லாது. நம்முடைய கைபேசிகளிலில் வெவ்வேறு உணர்விகள் உள்ளன, modern web APIs கள் மூலம் நாம் அவையனைத்தையும் இணைக்கலாம் மேலும்பொருட்களைஇணையத்தின் வழியாக இயக்கலாம். கூடுதலாக, நவீன இணைய உலாவிகள் பிற சாதனங்களுடன் இணைவதற்கான திறன்களை வழங்குகின்றன. PWA இன் சிறந்த பகுதி என்னவென்றால், நாம் ஒரு push அறிவிப்பைப் பெறலாம் என்பதேயாகும். மொஸில்லாவின் பொருட்களுக்கான இணையத்தினை பற்றிய கூடுதல் தகவலைதெரிந்து கொள்ள https://iot.mozilla.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க.

FreeRTOSஎனும் நிகழ்வுநேர இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

FreeRTOS எனசுருக்கமாக அழைக்கப்பெறும் கட்டணமற்றநிகழ்வுநேர இயக்க முறைமையானது(Real Time Operating System) மிகச்சிறிய கட்டுப் பாட்டாளர்களுக்காகவே உலகின் முன்னணி சில்லு நிறுவனங்கள் கூட்டாக ஒன்றிணைந்து 15 வருட கால உழைப்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதொரு கட்டற்ற இயக்கமுறை மையாகும் , தற்போது இதனை ஒவ்வொரு 175 விநாடிகளுக்கு ஒருமுறை பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுகிறது, இது மிகச்சிறிய கட்டுபாட்டாளர்களுக்கும் சிறிய நுண்செயலிகளுக்கும் ஆன முன்னணி சந்தையை கொண்டுள்ளது . இது எம்ஐடி கட்டற்ற உரிமத்தின் கீழ் கட்டணமில்லாமல் விநியோகிக்கப்படுகிறது, இது ஒரு கெர்னலையும் அனைத்து தொழில் துறைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற நூலகங்களின் தொகுப்பையும் உள்ளடக்கியதாகும் . இதில் நம்பகத்தன்மை பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது நம்பகமான கெர்னலைகொண்டுள்ளது இது பல்வேறு கட்டமைப்புகளுக்கும் மேம்பாட்டுக் கருவிகளுக்கும் ஒற்றையான சுதந்திரமான தீர்வை வழங்குகின்றது இது குறைந்தபட்ச ROM, RAM மேம்பட்ட செயலி ஆகியவைளை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு RTOS உருவாக்க மையத்தின் பைனரி இமேஜானது 6K முதல் 12K பைட்டுகள் வரை மட்டுமேயிருக்கும். . இது மிகவும் எளிமையானது – இந்த RTOS உருவாக்க மையமானது 3 சி கோப்புகளில் மட்டுமே உள்ளது. .Zip கோப்பு பதிவிறக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல கோப்புகளில் பெரும்பாலானவை பல மாதிரி பயன்பாடுகளுடன் மட்டுமே தொடர்புடையவை. வணிக பயன்பாடுகளில் பயன்படுத்த உண்மையிலேயே கட்டணமில்லாமல்கிடைக்கின்றது இது வணிக உரிமம், தொழில்முறை ஆதரவு தளசேவைகளின் கூட்டாளரான WITTENSTEIN என்பதும் உயர்நிலை ஒருமைப்பாடு அமைப்புகளிடமிருந்து OPENRTOS வடிவத்திலும் கிடைக்கின்றன. மருத்துவதுறை, வாகன துறை தொழில்துறை ஆகிவற்றிற்கான சான்றிதழ்களை உள்ளடக்கிய இதனுடைய SafeRTOS என்பது வெளியிட தயாராக உள்ளது. இது ஒரு பெரிய எப்போதும் வளர்ந்து வரும் பயனார்களின் தளத்துடன் நன்கு நிறுவப்பட்டுள்ளது. . ஒவ்வொரு துறைக்கும் முன்பே உள்ளமைக்கப்பட்ட உதாரணத்தைக் கொண்டுள்ளது. இதில் ஒரு செயல்திட்டத்தை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டுபிடிக்க தேவையில்லை – ஒரு சிறந்த, கண்காணிக்கப்பட்ட செயலில் இலவச ஆதரவு குழு உள்ளது. இது மிகவும் அளவிடக்கூடியது, எளிமையானது பயன்படுத்த எளிதானது.

மிகச்சிறியமின்சேமிப்பு கெர்னெல்லை கொண்டுள்ளது இது40+இற்குமேற்பட்ட கட்டமைப்புகளை ஆதரிக்கின்றது இது IoT எனசுருக்கமாக அழைக்கப்படும்பொருட்களுக்கான இணையத்துடன் மேற்கோள் ஒருங்கிணைப்பை கொண்டுள்ளது மேலும் விவரங்களுக்கு https://www.freertos.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

மொஸில்லாவின் இணையபொருட்களின் நுழைவுவாயில்(WebThings Gateway)

மொஸில்லாவின் இணையபொருட்களின் நுழைவுவாயில்(WebThings Gateway) என்பது திறனுடைய வீடுகளின் நுழைவாயில்களுக்கான ஒரு மென்பொருள் விநியோகமாகும், இது பயனாளர்கள் தங்களுடைய திறனுடைய வீட்டை இணையத்தின்வாயிலாக இடைத்தரகர் யாருடைய குறுக்கீடுகளும் இல்லாமல் நேரடியாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது, .
இது திறனுடைய வீட்டின் அனைத்து சாதனங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு இணைய அடிப்படையிலான பயனாளர் இடைமுகமாக விளங்குகின்றது, மேலும் அவ்வாறான திறனுடைய வீட்டின்பொருட்களை தானியக்கமாக்குவதற்கான ஒரு விதிமுறை இயந்திரம் மற்றும் தற்போதுள்ள பரந்த அளவிலான திறனுடைய வீட்டு சாதனங்களுக்கான ஆதரவுடன் நுழைவாயிலை நீட்டிக்க ஒரு துணை அமைப்பு ஆகியவற்றை வழங்குகின்றது.
இது W3C இல் வளர்ந்து வரும் இணையத்தின் பொருட்கள் (Web of Things) தரநிலைகளின் திறமூல செயல்படுத்துதலாக விளங்குகின்றது.
இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் கூறுகளின் தொகுப்பாகும், இது மேம்படுத்துநர்கள் தங்களுடைய சொந்த இணைய பொருட்களை(WebThings ) உருவாக்க உதவுகின்றது, இது இணையபொருட்களின் API ஐ நேரடியாக வெளியிட அனுமதிக்கின்றது.இதில்
1. ராஸ்பெர்ரி பை (Raspberry Pi )இக்காக2. டூரிஸ் ஆம்னியாவுக்காக(Turris Omnia )நம்முடைய சொந்த இணையபொருட்களின் நுழைவுவாயிலை(WebThings Gateway) உருவாக்கிடமுடியும்
இதன் வசதிவாய்ப்புகள் பின்வருமாறு 1. திறனுடைய கைபேசி பயன்பாட்டின் வாயிலாக கட்டுபடுத்திடும் வசதிகொண்டது, 2. நாம் விரும்பிவாறு புதிய திறனுடைய வீட்டு சாதனங்களை இதில் சேர்த்து நிருவகித்திடலாம் , 3.அவைகளை நிருவகிப்பதற்காகவும் வீட்டை தானியக்கமாக்கு வதற்காகவும் தேவையானவாறு விதிகளை உருவாக்கி கொள்ளலாம் : , 4. சாதனங்களின் இருப்பிடத்தை வரைபடம் வாாயிலாக அறிந்து கொள்ளலாம், 5. விரும்பினால் நுழைவாயிலின் திறன்களை விரிவாக்கம் செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு https://iot.mozilla.org/gateway/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பொருட்களுக்கான இணையத்தில் பயன்படும் மிகப்பிரபலமான இயக்கமுறைமைகள் .

தற்போது தகவல், நிதி , சமூக வலைப்பின்னல், பொழுதுபோக்கு என்பன போன்ற இணையத்தில் வாயிலாக நுகரும் பல்வேறு சேவைகளின் எண்ணிக்கை களானவை நாளுக்குநாள் மென்மேலும் உயர்ந்து கொண்டேவருகின்ற காரணத்தால் தற்போதைய நம்முடைய வாழ்க்கையே இணையத்தால்தான் இயங்குகின்றது என கூறுகின்றவாறான நிலைமையில் இன்றைக்கு நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம் . இவ்வாறான இணையத்தில் வழங்கப்படும் சேவைகளின் பட்டியல்மிக நீளமாக வளரும்போது, இணையத்துடன் இணைக்கக்கூடிய சாதனங்களின் வகைகளை நாம் கட்டுப்படுத்துவது கட்டாயமாகின்றது. அவ்வாறான நிலையில் IoT என சுருக்கமாக அழைக்கப் பெறும் பொருட்களுக்கான இணையம் என்பது கைகொடுக்கின்றது இது பல்வேறு வகையான செயல்களையும் அதற்கான பொருட்களையும் அதனுைடய உள்கட்டமைப்புகளுடன் இணையத்தின் வாயிலாக இணைக்க உதவுகின்றது. ஏதேனும் ஒரு சாதனத்தினை அல்லது பொருளை இணையத்துடன் இணைப்பதன் மூலம், இந்த செயல்களை பயனாளருடன் மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளும் தொடர்பு கொள்ளும் திறனைப் பெறுகின்றன.
இந்த IoT உடன் பல்வேறு வகையிலான மிக மாறுபட்ட சாதனங்கள் இணைக்கப்பட்டு திறனுடைய வீடுகள், திறனுடைய நகரங்கள், திறனுடைய விவசாயம், திறனுடைய வாகனங்களின்போக்குவரத்து, திறனுடைய கடைகள் , திறனுடைய மருத்துவமனை போன்றவை IoT அதிகமாகப் பயன்படுத்தப்படும்மிக பிரபலமான ஒருசில களங்களாகும்
இவ்வாறு பயன்பாட்டு களங்கள் மாறுபட்டதாக இருப்பதால், IoT இன்உள்கட்டமைப்பை திறமையாக நிருவகிக்க வேண்டிய தேவையானது கண்டிப்பாக ஏற்படுகின்றது. சாதாரண கணினிகளில் செயல்படும் இயக்க முறைமைகள் வள மேலாண்மை, பயனாளர் தொடர்பு மேலாண்மை என்பன போன்ற முதன்மை செயல்பாடுகளைமட்டுமே செயல்படுத்திடு கின்றன. ஒரு சிறிய நினைவக தடம், ஆற்றல் திறன், இணைப்பு அம்சங்கள், வன்பொருள் செயல்பாடுகள், நிகழ்வுநேர செயலாக்க தேவைகள், பாதுகாப்பு தேவைகள், பயன்பாட்டு மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியமுக்கிய பண்புகள் அல்லது தேவைகள் ஆகியவற்றை கொண்டுள்ள IoT இயக்க முறைமைகளின் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள சாதனங்களின் தன்மை மற்றும் அளவு காரணமாக அவற்றினை கட்டுபடுத்த மிகப்பேருதவியாய் இவைவிளங்குகின்றன அவ்வாறான IoT இயக்க முறைமைகள் பின்வருமாறு
1. Ubuntu Core என்பது குறைந்த கொள்ளளவு கொண்ட மிகப்பிரபலமான பாதுகாப்புதான் முதல் நோக்கம் என்பதன் அடிப்டையில் வடிவமைக்கப்பட்ட தொரு IoT இயக்க முறைமை யாகும் இது பல்வேறு பாதிப்புகளை தாங்கி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடுகள் பல்வேறுமாறுபட்ட மூலங்களிலிருந்து வந்திருக்கலாம் என்பதால், அவற்றின் சொந்த தரவுகளில் மட்டுமே செயல்படுமாறான சலுகைகள் இதில் வழங்கப்படுகின்றன. மோசமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பயன்பாடு முழு கணினியையும் பாதிக்காத வகையில் இது செய்யப் பட்டுள்ளது., மற்ற தேவைகள் இயல்புநிலை இயக்க முறைமையால் ஆதரிக்கப்படுகின்றன. இது secure app store இல் பயன்படுத்தி கொள்ள கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://ubuntu.com/internet-of-things/appstore. எனும் இணையதள முகவரிக்கு செல்க
2.RIOT என்பது பயனாளர்களின் இனிய நண்பனைபோன்ற IoT இயக்க முறைமை யாகும்.பல்வேறு குறைந்த சக்தி கொண்ட IoT சாதனங்களையும் பல்வேறு மைக்ரோகண்ட்ரோலர் கட்டமைப்புகளையும் இதுஆதரிக்கின்றது. செந்தர Cஅலலது C++ போன்ற கணினிமொழிகளை ஆதரிக்கின்றது இதில் 8-bit, 16-bit , 32-bit ஆகியவற்றில் செயல்படுமாறான குறிமுறைவரிகளை உருவாக்கி பயன்படுத்த அனுமதிக்கின்றது CoAP, CBOR, போன்ற வைகளை இது ஆதரிக்கின்றது அதாவது இது மேம்படுத்துநர்களின் நண்பனாகவும் வளங்களின் நண்பனாகவும் திகழ்கின்றது மேலும் விவரங்களுக்கு https://riot-os.org எனும் இணையதள முகவரிக்கு செல்க
3.Contiki என்பது குறைந்த ஆற்றல் கொண்ட சாதனங்களை இணையத்துடன் இணைக்க இது உதவுகின்ற சிறிய, குறைந்த விலை யிலான ஒரு சிறந்த IoT இயக்க முறைமை யாகும் ,இது IPv6 , IPv4 ஆகிய இணைய செந்தரங்களை மட்டுமல்லாமல் 6lowpan, RPL , CoAP ஆகிய குறைந்த மின்நுகர்வு செந்தரங்களையும்ஆதரிக்கின்றது அதைவிடUDP, TCP, HTTP, 6lowpan, RPL, CoAP போன்ற வலைபின்னல் ஒழுங்குமுறைகளையும் இதுஆதரிக்கின்றது மேலும் விவரங்களுக்கு http://www.contiki-os.org எனும் இணையதள முகவரிக்கு செல்க
4.TinyOS என்பது குறைந்த திறன்கொண்ட கம்பியில்லா சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டதொரு கட்டற்ற IoT இயக்க முறைமை யாகும் இதனை உலகமுழுவதும் உள்ள கல்விநிலையங்கள் மட்டுமல்லாமல் தொழிலகங்களிலும் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன ஏறத்தாழ வருடமொன்றிற்கு 35,000 முறை இதனைபதிவிறக்கம்செய்து பயன்படுத்திடுகின்றனர் இது சி எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்டதாகும் மேலும் விவரங்களுக்கு https://github.com/tinyos/tinyos-main. எனும் இணையதள முகவரிக்கு செல்க மிகமுக்கியமாக சி எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட இதனுடைய எளிய குறிமுறைவரிகள் பின்வருமாறு
configuration Led {
provides {
interface LedControl;
}
uses {
interface Gpio;
}
}
implementation {

command void LedControl.turnOn() {
call Gpio.set();
}

command void LedControl.turnOff() {
call Gpio.clear();
}

}
5.Zephyr என்பது ஒரு நிகழ்வுநேர IoT இயக்க முறைமை யாக அமைந்துள்ளது இது பல்வேறு கட்டமைப்பிலுள்ள சாதனங்களையும் 150+ boards. ஐயும்ஆதரிக்கின்றது இதனை சுதந்திரமாகவும் நெகிழ்தன்மையுடனும பயன்படுத்தி கொள்ளலாம் இது மிகச்சிறிய வழித்தட சாதனங்களை எளிதாக கையாளுகின்றது இது மிகப்பாதுகாப்பானது மேலும் விவரங்களுக்குhttps://www.zephyrproject.org எனும் இணையதள முகவரிக்கு செல்க

IoTஎன சுருக்கமாக அழைக்கப்பெறும் பொருட்களுக்கான இணையம் சாதனங்களை உருவாக்கிடும் எளிய வழி

நம்மிடம் Raspberry Pi இருக்கிறதா? ஆம் எனில் இப்போது எதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது? என்ற கேள்விக்கு நம்மில் பெரும்பாலானவர்கள் ஒன்றும் செய்யாமல் ஒரு அலமாரியில் அமர்ந்திருக்கின்றது என்றே பதில் கூறிடுவார்கள் அவ்வாறு சும்மா அலமாரியில் அழகிற்காக அடுக்கி வைத்திருப்பதைவிட விரும்பினால் இதை நம்முடைய வீட்டிற்கான IoT ஆக ஏன் மாற்றக்கூடாது?
மைக்கேல் என்பவர் இந்த ராஸ்பெர்ரி பையில் இயங்கும் EdgeX Foundry IoT எனும் இயங்குதளத்தைப் பெறுவதற்கான எளிதான வழிகாட்டியை வழங்கியுள்ளார். இந்த தளமானது லினக்ஸ் அறக்கட்டளை வழங்கும் IoT சாதனங்களுக்கான ஒருங்கிணைந்த பல்லடுக்கு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அவற்றை மற்ற அமைப்புகளில் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் எளிதாகின்றது. இதற்கான கட்டமைப்பானது , நம்முடைய Raspberry Pi இல் இயங்கும் சாதன சேவைஎன்றும் , மேஜைக்கணினி அல்லது மடிக்கணினியில் இயங்கி நாம் கண்காணிப்பதற்கான மற்றொரு சேவையென்றும் .இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது
Docker ஐ பயன்படுத்தி எளிதாக நிறுவுகை செய்து கணினியிலும் ,Raspberry Pi இலும் சரியாக இயங்குமாறான இரு பகுதிகளையும் எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவருடைய வழிகாட்டி மிகவிரிவாகக் விளக்கமளிக்கின்றது. IoT சாதனத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு நிரலாக்கத்தையும் எழுதாமல் அதை எவ்வாறு கட்டமைப்பது என்பதைக் காட்ட அவர் உள்ளமைக்கப்பட்ட PIR சென்சார் உதாரணத்தைப் அவ்வழிகாட்டியில் பயன்படுத்துகின்றார். சாதனத்தின் சென்சார்களை கண்காணிக்கமுடியும், அதை மேஜைக்கணினியில் இருந்து நேராக Pi இன் GPIO pinகளுடன் இணைக்க முடியும். EdgeX மென்பொருள் லினக்ஸின் எந்தவொரு பதிப்பிலும் இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால், மறந்துபோன ஒற்றை பலகை கணினியைகூட நம்முடைய வீட்டு தானியங்கி அமைப்பினை மீண்டும் உருவாக்கிடும் பணியை இது எளிதாக்குகின்றது
இருப்பினும், நம்முடைய நிரலாக்க திறனில் நம்பிக்கை இருந்தால், ESP8266 போன்ற மீச்சிறு கட்டுபாட்டாளர்களின் குடும்பம் போன்ற மெலிதான ஒன்றை நாமே உருவாக்கிட முடியும் மேலும். அவர்களுடன் எரிசக்தி கட்டுபாட்டாளர் அல்லது புகை கண்டுபிடிப்பாளர் போன்ற செயல்திட்டத்தை நாம் ஏன் முயற்சி செய்யக்கூடாது?

Previous Older Entries