துவக்கநிலையாளர்கள் எளிதாக ஜாவாவை கற்பதற்கு உதவிடும் BlueJ

துவக்கநிலையாளர்கள் ஜாவா எனும் நிரலாக்க மொழியை கற்பதற்கு துவங்கிடுவதற்காக BlueJ ஆனது ஒரு எளிய IDE சூழலை வழங்குகின்றது
பொதுவாக எந்தவொரு புதியநபரும் ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்பதற்காக துவங்கிடும் போதெல்லாம், அனைத்து உரைகளையும் மனப்பாடம் செய்கின்ற செயலை விமர்சிப்பது எளிதான பணியாகும். ஒரு செயல் திட்டத்தைத் துவங்குவதற்கு வசதியாக இருப்பதற்கு முன், கோட்பாட்டில், அவை பொதுவாக ஒப்பீட்டளவில் குறுகியதாகவும் திரும்பத் திரும்ப செயல்படுவதாகவும் இருப்பதால் நினைவில் கொள்வது எளிது. நடைமுறையில்,உரைகளை மனப்பாடம் செய்தபின்னர் எளிதான பழக்கமாக மாற மிகவும் தெளிவற்று தடுமாறு வேண்டியுள்ளது, ஆனாலும் ஒரு நிரலை இயக்குவது அத்தியாவசிய தேவையாகும்.
ஒருசில நேரங்களில் அவ்வாறான உரையானது ஒரேயொர வரி மட்டுமே இருக்கும். எடுத்துக்காட்டாக, ஷெல் ஸ்கிரிப்ட்யில் “shebang” என்பதுடன் திறப்பது எளிய செயலாகும்:
#!/bin/sh
மற்ற நேரங்களில், அறிமுக உரை மிகவும் சிக்கலானது. உதாரணமாக, ஜாவா இனமானது பெரும்பாலும் பின்வருவதைபோன்றதாக அமைந்திருக்கும்:
mport java.io.Foo;

public class Main {

public static void main(String[] args) {}

// some code here

}
கென்ட் பல்கலைக்கழகமானது துவக்கநிலையாளர்களினஅ இந்த துவக்க நிலை போராட்டத்தினை ஆய்வின் வாயிலாக நன்றாக உணர்ந்து கொண்டது, எனவே துவக்கநிலையாளர்கள் எளிதாக ஜாவா கற்பதற்கு ஒரு திறமூல ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலான (IDE) BlueJ எனும் சூழலை உருவாக்கி பராமரிக்கிறது.
அதாவது இந்த பல்கலைகழகமானது ளிதாக ஜாவா கற்பதற்கு ஏதுவாக பல்வேறு BlueJ வார்ப்புருக்களை உருவாக்கி பயன்டுத்தி கொள்வதற்கு தயாராக வைத்துள்ளது
இந்த BlueJ இன்ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலான (IDE) இடைமுகம் சுத்தமாகவும் எளிமையாகவும் உள்ளது, அதன் முதன்மையான செயல்களின் பட்டியில் நான்கு உருப்படிகள் உள்ளன. நாம் ஏதேனும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கும்போது, நம்முடைய ஜாவா கோப்புகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதற்கான “மன வரைபடம்(mind map) ” அல்லது பாய்வு விளக்கப்படத்தைக் (flowchart) இதில் காணலாம்.
நாம் ஒரு புதிய இனத்தை உருவாக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளைக் கொண்ட ஒரு சுத்தமான ஆனால் வலுவான வார்ப்புருவை இந்தBlueJ எனும்சூழல் உருவாக்குகின்றது. வெவ்வேறு குறிமுறைவரிகளின் கூறுகளை ஒன்றோடொன்று தனித்தனியாக வைத்திருக்க இது ஒரு கையடக்கமான வண்ணத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது, எனவே ஒரு முறை அல்லதுஒரு கருத்திலிருந்து ஒரு இனத்தைச் சொல்வது எளிது.
நாம் நிரலாக்கத்திற்கு புதியவர் அல்லது ஜாவாவுக்கு புதியவர் என்றால், மாறிகள், scoping, சுழல்கள் (loops) , நிபந்தனைகள் (conditionals) போன்ற மேம்பட்ட கருத்துகளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகும். நாம் நிரலாக்கமொழியினை கற்றுக் கொள்ளும்போது, நாம் தட்டச்சு செய்யும் பெரும்பாலான குறிமுறைவரிகள் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கின்றன: மேலும் இவை அனைத்தும் தெளிவற்ற அர்த்தமுள்ள, இன்னும் வித்தியாசமாக ஒத்ததாக இருக்கின்றன, அவற்றை நாம் பின்தங்கிய அல்லது முன்னோக்கிய நிலையில் படிக்கின்றோமா என்பதைப் புரிந்துகொள்வதற்காக சொல்வது என்பது . நிரலாக்க மொழியின் ஒரு பகுதியான ஒரு முக்கிய திறவுகோளுடன் மேலும் உள்தள்ளல் பிறையடைப்புகள் அரைப்புள்ளிகளின் உதவி தவிர ஒரு மாறியைக் கூறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும், , இவை அனைத்தும் ஒன்றாக நம்முடைய நினைவிலிருந்து மங்கத் தொடங்குகின்றன.
இந்த குழப்பத்தை நீக்குவதற்காகவே BlueJ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய வண்ண பின்னணியைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் எழுதும் குறிமுறைவரிகளின் கட்டமைப்பைக் காட்சிப்படுத்த BlueJ உதவுகின்றது. ஜாவா நிரலாக்க மொழியின் வழிமுறையில் ஒருகுறிப்பிட்ட இனம் உள் வருவதைக் காண நாம் உள்தள்ளலை நம்ப வேண்டியதில்லை, ஏனெனில் நாம் குறிமுறைவரிகளின் தொகுதிகளை(modules)இதில் காணலாம்.
மிக முக்கியமாக, பிழைகள் அவற்றின் காரணத்தை அறிய BlueJ நமக்கு உதவுகிறது.
உதாரணமாக, ஒரு if அறிக்கையின் உள்ளே foo எனப்படும் மாறியை நாம் வரையறுத்தபின்னர் அந்த அறிக்கைக்கு வெளியே foo ஐக் குறிப்பிட்டால், பிழை இருப்பதாக BlueJ சரியாக எச்சரிக்கிறது. பிழையை எவ்வாறு சரிசெய்வது என்று இது நமக்குச் சொல்லவில்லை, அதை நமக்காக சரிசெய்ய இது முன்வருவதில்லை, ஆனால் பிழை ஏன் இருக்கிறது என்று இது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
காட்சி தளவமைப்பில் ஏராளமான குறிப்புகள் உள்ளன, மேலும் ஆராய்ச்சி அல்லது திடீரென உத்வேகம் அளிப்பதன் மூலம், நம் foo மாறியின் கன்னியின் நோக்கத்திற்குள் “சிக்கியுள்ளது(trapped) ” என்பதை நாம் உணர வேண்டுமானால், நாம் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
BlueJ அனைத்து நோக்கங்களையும் கொண்ட IDEசூழல் அன்று. இது மிகவும் சிறந்த கற்றல் கருவியாகும், மேலும் இது Eclipse அல்லது NetBeans போன்ற முழு IDEசூழலைக் காட்டிலும் குறைவான உதவியாக இருக்கும். இது வேகமான அல்லது திறமையாக தட்டச்சு செய்யாமல், நிரலாக்க மொழியைக் கற்க உதவும் கருவியாகும்.
BlueJ ஐ நிறுவுகை செய்தல்
இந்த BlueJ ஆனது ஜாவாஎனும்நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது, எனவே இதை இயக்க, நாம் முதலில் ஜாவாவை நிறுவுகைசெய்திட வேண்டும். எப்படியும் நிரலாக்கம் செய்ய நமக்கு ஜாவா எனும் கணினிமொழி நமக்கு தேவை, என்பதாலும் நாம் ஏற்கனவே ஜாவாவை நிறுவியிருக்கலாம். என்றாலும் BlueJ ஐ பயன்படுத்திகொள்கின்ற ஜாவாவின் அதே பதிப்பை நாம் கொண்டிருக்க வேண்டும், எனவே BlueJ ஐ ஆதரிக்கின்ற ஜாவா பதிப்பு நம்மிடம் உள்ளதாவெனச் சரிபார்த்திடுக. BlueJ ஐக்கு JavaFX, எனும் பதிப்பு தேவைப்படுகிறது (தனி பதிவிறக்கமாக), எனவே BlueJ தளத்தில் கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்து Java, JavaFX ஆகியவற்றை நிறுவுகை செய்தபின், BlueJ ஐ நிறுவுகை செய்யத் துவங்குக.
BlueJ ஆனது உபுண்டு லினக்ஸ், விண்டோ மேக் ஆகியவற்றிற்கான தரவிறக்கம் செய்யக்கூடிய நிறுவிகளைக் கொண்டுள்ளது. இது ஒரு பொதுவான நிறுவியையும் வழங்குகிறது, இது JAR கோப்பாக வழங்கப்படுகிறது (வழக்கமான ஜாவா வடிவம்). நாம் பொதுவான நிறுவியைப் பயன்படுத்துகின்றோம் என்றால், அதை ஒரு முனைமத்திலிருந்து ஜாவாவுடன் துவங்குக:
$ java -jar ./BlueJ*jar
இது துவங்கப்பட்டதும், அதை நிறுவுகைசெய்திட நாம் பயன்படுத்த விரும்பும் கோப்பகத்தில் சுட்டிக்காட்டிடுக. பொதுவாக $ HOME / .local / bin எனும் கோப்பகத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றது, அது இருந்தால், பொதுவாக இந்த பாதையில் தான் இருக்கும்.
இது நிறுவப்பட்டதும், அதை ஒரு முனைமத்திலிருந்து துவங்கலாம்:
$ bluej
அல்லது நாம் ஒரு .desktop கோப்பை உருவாக்கலாம், எனவே இது நம்முடைய பயன்பாடுகளின் பட்டியில் காண்பிக்கப்படும். இந்த .desktop எனும் கோப்பிற்கு நமக்குத் தேவையானவை:
[Desktop Entry]

Encoding=UTF-8

Version=1.0

Name=BlueJ

Comment=A simple powerful Java IDE

Categories=Application;Development;

Exec=~/.local/bin/bluej/bluej

Icon=~/.local/bin/bluej/icons/bluej-icon-512-embossed.png

Terminal=false

Type=Application
இந்த கோப்பினை bluej.desktop ஆக ~ / .local / share / applications இல் சேமித்திடுக, விரைவில் நம்முடைய பயன்பாட்டு பட்டியில் BlueJ காண்பிக்கப்படும்.
நாம் ஒரு அனுபவமிக்க நிரலாளராஅல்லது புதிய துவக்கநிலையாளரா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜாவாவைக் கற்றுக்கொள்வதை BlueJ நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றே அதனை நிறுவி ஒரு அற்புதமான குறுக்கு-தள நிரலாக்க சாகசத்தைத் துவங்கிடுக!எனபரிந்துரைக்கப்படுகின்றது

மேலும் விவரங்களுக்கு https://www.bluej.org/ எனும் இணையதளத்திற்கு செல்க

GVM என்பதன் துனையுடன் Goஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிருவகிக்கமுடியும்

GVM என சுருக்கமாக அழைக்கப்படும் கோ பதிப்பு மேலாளர் (Go Version Manager)என்பது கோஎனும் கணினிமொழி சூழல்களை நிருவகிப்பதற்கான ஒரு திற மூல கருவியாகும். இது கோஎனும் கணினிமொழியின் பல பதிப்புகளை நிறுவுகை செய்வதையும் ஜி.வி.எம் “pkgsets” ஐப் பயன்படுத்தி ஒரு செயல்திட்டத்திற்கு தொகுப்புகள் நிருவகிப்பதையும் ஆதரிக்கின்றது. ,இது Ruby யின் ஒத்தநிலையினரான, RVM போன்ற எந்தவொரு செயல்திட்டத்திற்கும் அல்லது செயல்திட்டக் குழுக்களுக்கும் ஒரு மேம்பாட்டுச் சூழலை உருவாக்க அனுமதிக்கின்றது, மேலும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்ற பதிப்பு சிக்கல்களைத் தடுக்கின்ற வெவ்வேறு கோ பதிப்புகளையும் தொகுப்பு சார்புகளையும் பிரிக்கின்றது. கோ தொகுப்புகளை நிருவகிக்க கோ 1.11 தொகுப்புகள் உட்பட பல விருப்பங்கள்இதில் உள்ளன. எளிமையானதாக-வும் உள்ளுணர்வுடனும் செயல்படும், இந்தஜி.வி.எம் மைநிறுவுகை செய்திடுவதற்காக.:
bash < <(curl -s -S -L https://raw.githubusercontent.com/moovweb/gvm/master/binscripts/gvm-installer)
என்ற கட்டளைவரியின் வாயிலாக பதிவிறக்கம்செய்திடுக. இந்த நிறுவுகை வழிமுறையை பலரும் பின்பற்றி வருகின்ற போதிலும், நாம் அதைச் செய்வதற்கு முன்பு இது என்ன செய்து கொண்டிருக்கிறது என சரிபார்ப்பது இன்னும் நல்ல நடைமுறையாகும். இதனுடைய நிறுவுகை குறிமுறைவரிகளானது: 1. சில சார்புகளை சரிபார்க்கின்றது, 2. மறுஅமைவை போலியாக செய்கின்றது , 3. இதற்கு ஷெல் ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தி Go எனும் கணினிமொழியை நிறுவுகை செய்தலையும் GOPATH ஐ நிருவகிப்பதையும் நம்முடைய bashrc, zshrc, profile ஆகியவற்றில் கூடுதல் தகவல்களையும் சேர்த்து கொள்ளமுடியும்
ஜி.வி.எம் உடன் கோ பதிப்புகளை நிறுவுகைசெய்தலும் நிருவகித்தலும்
இந்த ஜி.வி.எம்மை நிறுவுகைசெய்யப்பட்டதும், கோவின் வெவ்வேறு பதிப்புகளை நிறுவுகைசெய்வதற்கும் நிருவகிக்கவும் இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
[chris@marvin ]$ gvm listall
$ gvm listall
gvm gos (available)
go1
go1.0.1
go1.0.2
go1.0.3

ஒரு குறிப்பிட்ட கோ பதிப்பை நிறுவுகைசெய்வது gvm install என்றகட்டளைவரியை போன்று எளிதானதாகும், மேற்கண்ட கட்டளைவரிகளில் gvm listall எனும் கட்டளையால் திருப்பியவற்றில் என்பதும் ஒன்றாகும். கோ பதிப்பு 1.12.8 ஐப் பயன்படுத்தும் செயல்திட்டத்தில் பணிபுரியும்போது அதை gvm install go1.12.8 உடன் நிறுவுகை செய்துகொள்ளலாம்:
[chris@marvin]$ gvm install go1.12.8
Installing go1.12.8…
Compiling…
go1.12.8 successfully installed!
இதில் gvm listஐ உள்ளீடு செய்திடுக,Go version 1.12.8 எனும் பதிப்பானது கணினியின் கோ பதிப்புடன் நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்:

பைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது

பைதான் மொழியில் உருவாக்கப்படும்பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை இயந்திர மொழி குறியீடாக எவ்வாறு உருமாற்றம் செய்து தொகுப்பது என அறியாத தெரியாதபுதியவர்கள்கூட தான்உருவாக்கிய பயன்பாட்டின் குறிமுறைவரிகளை அடுத்தபடிமுறையான இயந்திர மொழி குறியீட்டிற்கு உருமாற்றம் செய்து தொகுத்திடும் செயலை பைத்தான் எனும் கணினிமொழியானது நமக்காக அதனை செய்து கொள்கின்றது ,அதுமட்டுமல்லாமல் நம்முடைய நிரல்களை சில நேரங்களில் உடனடியாகவும், ஒரு வழியில்,நம்முடைய குறிமுறைவரிகளை எழுதும்போது பரிசோதித்து பார்த்திடவும் நம்மை அனுமதிக்கிறது. இந்த பைதான் எனும் கணினிமொழியினை மிகஎளிதாக கற்றுகொள்ளமுடியும் இவ்வாறான வசதிவாய்ப்பினை கொண்ட பைதான்எனும் கணினிமொழியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்வதற்காக https://www.Python.org/ எனும் இணையதளபக்கத்திற்குசென்று downloadஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் இதனுடைய சமீபத்திய பதிப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து பதிவிறக்கம்செய்து கொள்க அதனை தொடர்ந்து இந்த பதிவிறக்கம்செய்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் இயல்புநிலை இடவமைவை ஏற்றுகொள்க உடன் புதிய கோப்பு ஒன்று விண்டோஇயக்கமுறைமையில் நிறுவுகைசெய்யவிருக்கின்றது அனுமதிக்கவா என கோரும் செய்திபெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய ஆமோதிப்பினை தொடர்ந்து பைத்தான் கணினிமொழியானது நம்முடைய விண்டோ செயல்படும் கணினியில் நிறுவுகை செய்திடும் பணியை செயல்படுத்தி முடித்துவிடும் அதுவரைபொறுமையாக காத்திருக்கவும் பொதுவாக கணினிமொழிகளில் குறிமுறைவரிகளை எழுதவதற்காக text editor என்பது தேவையாகும் அதற்கான IDE உடன் ஒருங்கிணைந்த உரைபதிப்பான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பைதான் மொழியில் இதற்காக IDLE 3 , NINJA-IDE ஆகிய இருவாய்ப்புகள் நமக்காக தயாராக இருக்கின்றன

1
பைதான் எனும் கணினிமொழியில் குறிமுறைவரிகளை எழுதவதற்கான IDE சூழல்தான் IDLE 3 ஆகும் இதில் பைத்தானின் முக்கிய திறவுகோள்சொற்கள்மட்டும் தனியாக மேம்படுத்தி காண்பிக்கும் மேலும் இதிலுள்ள Run எனும் கட்டளையைசெயல்படுத்தினால் உடனுக்குடன் எளிதாகவும் விரைவாகவும் நாம் எழுதிய குறிமுறைவரிகளை சரியாகசெயல்படுமாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளஉதவுகின்றது இதனை செயல்படுத்தி திரையில் தோன்றசெய்வதற்காக Start (or Window) எனும் பட்டியலை தோன்றிடசெய்திடுக அதில் python என்பதை தெரிவுசெய்து சொடுக்குக
NINJA-IDE இன் சூழலில் பைத்தானின் முக்கிய திறவுகோள்சொற்களைமட்டும் தனியாக மேம்படுத்தி காண்பிப்பது மட்டுமல்லாமல் குறிமுறைவரிகளைஎழுதிஉருவாக்கிடும்போது தேவையான இடங்களில் மேற்கோள்கள் ,அடைப்புகுறியீடுகள் ஆகியவற்றை தானாகவே பூர்த்தி செய்து பிழையேதும் வாராமல் பாதுகாத்து கொள்ளஉதவுகின்றது மேலும் இதிலுள்ள Run எனும் கட்டளையைசெயல்படுத்தினால் உடனுக்குடன் எளிதாகவும் விரைவாகவும் நாம் எழுதிய குறிமுறைவரிகளை சரியாகசெயல்படுமாவென பரிசோதித்து சரிபார்த்து கொள்ளஉதவுகின்றது இதனை http://ninja-ide.org/downloads/ எனும் இணையதளபக்கதத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க

2
இதில் print எனும் திறவுகோள் சொல்லானது மேற்கோள்கள் ,அடைப்புகுறியீடுகள் ஆகியவற்றிற்குள் உள்ளவற்றை அச்சிடுவதற்காக பயன்படுகின்றது
import எனும் திறவுகோள் சொல்லானது மேலும் பட்டியலான திறவுகோள் சொற்களை மேலேற்றம் செய்திட பயன்படுகின்றது புதிய கோப்பினை IDLE அல்லது Ninja இல் துவக்கி அதற்கு pen.py என பெயரிட்டிடுக
எச்சரிக்கை : கோப்புகளுக்கு turtle.py எனும் பெயரில்சேமித்திடாதீர்கள் ஏற்கனவேஇந்த turtle.py எனும் பெயருடையகோப்பானது பைதானில் ஒருசில செயலிகளை கட்டுபடித்திடபயன்படுகின்றது அதனால் பைதான் மொழியை எந்தகோப்பினை செயல்படுத்துவது என குழப்பம் செய்துவிடும்
இந்த turtle கோப்பினை பதிவேற்றம் செய்து கொணஂடபின்னர் பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடுசெய்து இயக்குக
turtle.begin_fill()
turtle.forward(100)
turtle.left(90)
turtle.forward(100)
turtle.left(90)
turtle.forward(100)
turtle.left(90)
turtle.forward(100)
turtle.end_fill()
பைதான் சூழலில் turtle.clear()எனும் திறவுகோள் சொற்களானது வரைபடபகுதியை அழித்து நீக்கம் செய்திடபயன்படுகின்றது அதனோடு turtle.color(“blue”) எனும் திறவுகோள் சொற்களானது வரைபடத்தில் நீலவண்ணத்தினை கொண்டுவர பயன்படுகின்றது மேலும்
import turtle as t
import time
t.color(“blue”)
t.begin_fill()
counter = 0
while counter < 4:
t.forward(100)
t.left(90)
counter = counter+1
t.end_fill()
time.sleep(2)
ஆகிய குறிமுறைவரிகள் மிகசிக்கலானநிலையை எளிதாக கடந்து செல்ல உதவுகின்றது

கணினிமொழியை மேம்படுத்திடுவதற்குஉதவிடும்Dr Java எனும்IDE சூழல்

DrJavaஎன்பது ஜாவாஎனும் கணினிமொழியில் நிரல்களை எழுதுவதற்கான இலகுரக IDE எனும் கணினிமொழியை மேம்படுத்திடுவதற்குஉதவிடும் ஒரு சூழலாகும் இது ஜாவாவில் நிரல்தொடர் எழுதுவதற்காக கற்க விரும்பும் மாணவர் களுக்காகவே முதன்மையாக வடிவமைக்கப் பட்டதாகும். , இது ஒரு உள்ளுணர்வு இடைமுகத்தையும் ஜாவா குறியீட்டை ஊடாடும் வகையில் மதிப்பிடும் திறனையும் வழங்குகிறது. இது மிகவும் மேம்பட்ட பயனர்களுக்கான சக்திவாய்ந்த பல்வேறு வசதி வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. Dr Java என்பது BSD எனும் பொதுஉரிமத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு Rice எனும் பல்கலைக்கழகத்தில் JavaPLT எனும் குழுவால் உருவாக்கப்பட்டு வெளியிடபட்டதாகும்
கடந்த ஜனவரி 1, 2019 முதல், ஆரக்கிள்நிறுவனமானது Java SE 8 க்கான உரிம விதிமுறைகளை , வணிக நோக்கங்களுக்காக கட்டணமில்லாமல் பயன்படுத்த அனுமதிக்கபடமாட்டாது என மாற்றியது. அதனை தொடர்ந்து இந்த புதிய உரிம விதிமுறைகளின் கீழ் ஜாவாவின் வணிக ரீதியற்றகணினிமொழியை கற்பிக்கும் ஒருசில பயனாளர்கள் கூட இனி ஆரக்கிள்நிறுவனத்தின்Java SE 8.ஐப் பயன்படுத்த முடியாதோ என அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
. அதிர்ஷ்டவசமாக, Java SE 8 இற்கு மாற்றாக OpenJDK 8எனும் ஒரு சிறந்த கட்டற்றபயன்பாடு தயாராக உள்ளது, , ஆனால் இது ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா பதிவிறக்க தளத்தின் மூலம் விநியோகிக்கப் படவில்லை. OpenJDK 8 இன் விநியோகங்களானவை குறிப்பாக அமேசானின் Corretto 8 போன்று பெரிய நிறுவனங்களால் தொழில் ரீதியாக விநியோகிக்கப்படுவதை ஆதரிக்கின்றன,.அதைவிட , OpenJDK 8 என்பது Java 8 இன் நிலையான பதிப்பாகும், இது உபுண்டு எனும் இயக்கமுறைமை போன்ற பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றது. Dr Java இன் சமீபத்திய பீட்டா வெளியீடு அனைத்து தளங்களிலும் OpenJDK 8, OpenJRE 8 ஆகியவற்றுடன் வெளிப்படையாகசெயல்படும் வகையில் அமைந்துள்ளது . ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது , Java 8 இன் எந்தவொரு திறமூல விநியோகமும் போதுமானதாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, அமேசானின் Corretto பதிவிறக்கப் பக்கத்திலிருந்து கிடைக்கும் OpenJDK 8 இனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக Corretto 8என்பதை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்துகொள்ளுங்கள் என முதன்மையாக பரிந்துரைக்கப்படுகின்றது, ஏனெனில் இந்த விநியோகமானது Open Java 8 இன் மிக விரிவானதாகவும் சிறந்த ஆதரவு சூத்திரமாகவும் விளங்குகின்றது.
java -jar drjava-beta-2019-220051 .jar
என்றவாறு குறிமுறைவரியை கட்டளை வரிதிரையில் தட்டச்சு செய்து செயல்படுத்தி Dr Java ஐ இயக்கமுடியும் அல்லது பல்வேறு வரைகலைபயனாளர் இடைமுக திரைகளின் வாயிலாக jar எனும் கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக செயல்படுத்தி இயக்கமுடியும்
அல்லது குறிப்பாக விண்டோ இயக்கமுறைமை யெனில் drjava-beta-2019-220051 .exe எனும் செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நிறுவுகை செய்து கொண்டு செயல்படுத்தி இயக்கமுடியும்
இந்த Dr Java செயல்படுவதற்கு Java 2 v1.4 அல்லது அதற்குப் பிந்தைய மெய்நிகர் இயந்திரம் தேவையாகும். (குறிப்பு: Dr Javaஇல் தொகுப்பிற்கான அனுகலைப் பெற JDK ஐ நிறுவுகை செய்யக்கூடாது அதற்கு பதிலாக , JREKஎன்பது நிறுவுகைசெய்யப்பட வேண்டும்.)
இதற்காக நாம் ஒரு JVM ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனவிரும்பினால், சோலாரிஸ், லினக்ஸ், விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன் கொண்ட Sun’s JDK 5.0 ஐ பதிவிறக்கம் செய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது. பிற பயனர்கள் தங்கள் இயக்க முறைமையுடன் (MacOS X உட்பட) வரும் ஜாவா மெய்நிகர் இயந்திரத்தைப் பயன்படுத்திகொள்க.
மேலும், இந்த Dr Java ஆனது முக்கிய நிரலுக்குஒன்றும், இடைமுகபலகத்திற்கு மற்றொன்றும் என இரண்டு ஜாவா மெய்நிகர் இயந்திரங்களைப் பயன்படுத்திகொள்கின்றது இதனை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள RMIஎன சுருக்கமாகஅழைக்கப்படும் ஜாவாவின் தொலைதூரவேண்டுதல் வழிமுறையை (Remote Method Invocation (RMI)) பயன்படுத்தி கொள்கின்றது. மேலும் இந்த RMI ஆனது TCP / IP எனும் இயல்புநிலை போக்குவரத்து பொறிமுறையைப் பயன்படுத்தி கொள்கின்றது, எனவே அந்த இயக்கிகளை மட்டும் நிறுவியிருக்க வேண்டும்என்ற செய்தியை மனதில் கொள்க . TCP / IP இல்லாமல், DrJava மிகச்சரியாக செயல்படுவதற்கு துவங்கமுடியாது என்ற செய்தியை மட்டும்மனதில் கொள்க.

C++ , Fortranஆகிய கணினிமொழிகளில் நிரலாளர்களாக ஆக விரும்புவோர் Code::Blocks எனும் கட்டற்ற IDEசூழலை பயன்படுத்தி கொள்க

C, C++ , Fortranஆகிய கணினிமொழிகளில் நிரல் தொடர் குறிமுறைவரிகளை எழுதி நம்முடைய வாழ்க்கையில் பயனுள்ள பல்வேறு பயன்பாடுகளாக மாற்றிட விழையும் நிரலாளர்களுக்கு உதவ வருவதுதான் Code::Blocks எனும் கட்டற்ற கட்டணமற்ற ஒருகிணைந்த மேம்படுத்திடும் சூழல் (IDE )அமைவாகும் இது GPLv3 எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குவெளியிடப்பட்டுள்ளது இது லினக்ஸ்,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது எந்தவொரு புதிய செயலிகளையும் விரிவாக்களாகவும் கூடுதல் இணைப்புகளாகவும் செய்துகொள்ளும் வசதிகொண்டது Compiler வதிக்காக வாடிக்கையாளர் விரும்பியவாறு மிகவிரைவாக உருவாக்கிகொள்ளும் அமைவை கொண்டுள்ளது இதில்MSVC இன் செயல்திட்டங்களையும் Dev-C++ இன் செயல்திட்டங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் Debugger வசதிக்காக GNU GDB எனும் இடைமுகவசதி கொண்டது வெளிப்புற வாடிக்கையாளர் விரும்பியவாறான இடைமுகவசதிக்காக பல்வேறு கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது அதுமட்டும்ல்லது கோப்புகளுக்கு இடையே இடம்மாறுவதற்கு வசதியாக திறந்துள்ள கோப்புகளின் பட்டியலை கொண்டுள்ளது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் விரும்பும் நிரலாளர்கள் http://www.codeblocks.org எனும் இணைய முகவரிக்கு செல்க

SpyDERஎன சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல் ஆய்விற்கான பைத்தான் மேம்படுத்திடும் சூழல் ஒருஅறிமுகம்

அறிவியல்பூர்வ பைதானின் மேம்படுத்திடும் சூழல்(Scientific Python Development Environment(SPyDER)) என்பது அறிவியல் அறிஞர்களுக்கும், பொறியாளர்களுக்கும் தரவு ஆய்வாளர்களுக்கும் பயன்படுவதற்காக பைதான் மொழியால்உருவாக்கி வடிவமைக்கப்பட்ட தொரு திறன்மிக்க அறிவியல் சூழலாகும்இது உள்ளிணைந்த பல்வேறு வசதி வாய்ப்புகள் மட்டுமல்லாது பைதான் மொழியின் கூடுதல் இணைப்பாகவும் , API ஆகவும் ,அதைவிட PyQt5 எனும் விரிவாக்க நூலமாகவும்-கூட இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் இதன் செயலி, இடைமுகப்புதிரை போன்ற உள்பொதிந்த உள்ளுறுப்புகளை தேவையெனில் நம்முடைய சொந்த பயன்பாடுகளில்நாம் கட்டமைத்து மேம்படுத்தி கொள்வதற்கு இது அனுமதிக்கின்றது
தரவு ஆய்வு, ஊடாடுவதை செயல்படுத்தல், ஆழ்ந்த ஆய்வு, அழகான காட்சிப்படுத்தல் ஆகிய திறன்களுடன் கூடிய விரிவான மேம்படுத்திடும் கருவியாகவும் , திருத்தம் செய்தல், பகுப்பாய்வுசெய்தல், பிழைத்திருத்தம்செய்தல் ஆகிய பல்வேறு வசதி வாய்ப்பகளையும் பயனாளர்களுக்கு வழங்க தயாராக இருக்கும் இதுஒரு அறிவியல் செயலிகளின் தொகுப்பாக விளங்குகின்றது .
பல்வேறு மொழிகளை கையாளும் திறனுடன் நிகழ்வுநேரத்திலேயே குறிமுறைவரிகள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வுசெய்து தானாகவே குறிமுறைவரிகளின் மிகுதி சொற்களை பூரத்தி செய்து கொள்ளும் வசதி வாய்ப்புகளை இது கொண்டுள்ளது அவ்வப்போது நாம் பயன்படுத்திடும் ஆவணத்தை பதிப்புதிரையில் அல்லது முகப்புசாளரத்தில் என்றவாரு தேவையான பகுதியில் காணும் வசதி கொண்டது மேலும் நெகிழ்வுதன்மையுடன் கூடிய முழுமையான வரைகலைஇடைமுகப்பு வசதியை நமக்கு இது வழங்குகின்றது numeric/strings/bools, Python lists/tuples/dictionaries, dates/timedeltas, Numpy arrays, Pandas index/series/dataframes, PIL/Pillow imagesஆகிய பல்வேறு மாறிகளை பயன்படுத்தி கொள்ளவும் ,அவைசரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடும் வசதியையும் இது கொண்டுள்ளது நாம் எழுதிடும் நம்முடைய குறிமுறைவரிகளை static analyzer, trace,debugger என்பன போன்ற இதனுடைய கருவிகளை கொண்டு நம்முடைய பயன்பாட்டினை மேலும் மேம்படுத்தி கொள்ளமுடியும் இந்த Spyder ஆனது பைத்தானின் பதிப்பு 3.3 இற்கு மேல் உள்ள பதிப்பில் மட்டுமே செயல்படும் என்ற கூடுதல்செய்தியை மனதில் கொள்க. இந்த Spyderஐ பதிவிறக்கம்செய்து எளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்த விழைபவர்கள் https://www.anaconda.com/download/ எனும் இணையதளபக்கத்திற்கு சென்று Anaconda வின் கட்டுகளை பயன்படுத்தி கொள்க வேறு எதுவும் தேவையில்லை என பரிந்துரைக்கப்-படுகின்றது இந்நிலையில் நான் விண்டோ இயக்கமுறைமை கணினிதான் வைத்துள்ளேன் நான் எவ்வாறு இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் என அலறுபவர்கள் கவலையே படவேண்டாம் https://winpython.github.io/ எனும் இணையதளபக்கத்திற்கு சென்று மென்பொருள்கட்டுகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்கஎனபரிந்துரைக்கப்படுகின்றது.மேலும் இதனை பயன்படுத்திடும்போது எழும் எந்தவொரு சிக்கலையும் தீ்ர்வுசெய்து கொள்வதற்காக https://github.com/spyder-ide/spyder/wiki/Troubleshooting-Guide-and-FAQ எனும் இணையதள-பக்கத்திற்கு செல்க
அதுமட்டுமல்லாது இந்த Spyder ஐ பற்றிய மேலும்விவரங்களை அறிந்துகொள்ள https://www.spyder-ide.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க