Deno எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

Denoஎன்பது ‘பாதுகாப்பும் எளிமையையும் மையமாகக் கொண்டதொரு நவீன ஜாவாஸ்கிரிப்ட் / டைப்ஸ்கிரிப்ட் சேவையாளர் இயக்க நேரமாகும்’ என்று விவரிக்கப்படுகிறது, மேலும் இது மேம்பாட்டு பிரிவில் உள்ள ஒரு பயன்பாடாகும். இது ஜாவாஸ்கிரிப்டுக்கும் TypeScriptஇற்குமான எளிய, நவீன பாதுகாப்பான இயக்க நேரமாகும் மேலும்இது V8 ஐப் பயன்படுத்திகொள்கிறது அதுமட்டுமல்லாது இது Rust இல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1. இயல்பாகவே பாதுகாப்பானது. வெளிப்படையாக இயக்கப்பட்டால் தவிர, கோப்பு, பிணையம் அல்லது சுற்றுச்சூழல் அணுகல் இல்லை. 2. பயன்பாட்டிற்கு வெளியேTypeScriptஐ ஆதரிக்கிறது. 3. ஒரு இயங்கக்கூடிய கோப்பை மட்டுமே அனுப்புகிறது. 4. சார்பு ஆய்வாளர் ( deno தகவல்) , குறிமுறைவரிகளின் வடிவமைப்பாளர் ( deno fmt) போன்ற உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகள் இதில் உள்ளன. 5. denoஎன்பதுடன் இணைந்து பணியாற்ற உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதிப்பாய்வு செய்யப்பட்ட (தணிக்கை செய்யப்பட்ட) நிலையான தகவமைவுகள் இதில்உள்ளன.இதனை deno.land/std எனும் முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்ளலாம்
எந்தவொரு சார்புகளும் இல்லாத தனித்து சுதந்திரமாக இயங்கக்கூடியதாக deno பதிவேற்றமாகின்றது. கீழே உள்ள நிறுவிகளைப் பயன்படுத்தி அதை நிறுவுகைசெய்திடலாம் அல்லது வெளியீடுகள் பக்கத்திலிருந்து வெளியீட்டு இருமவரிகளைப் பதிவிறக்கம் செய்திடலாம்.
Shell (மேக், லினக்ஸ்)ஆகிய இயக்கமுறைமைகளில் நிறுவுகை செய்வதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
curl -fsSL https://deno.land/x/install/install.sh | sh
PowerShell (விண்டோஸ்இற்கான கட்டளைவரிகள்):
iwr https://deno.land/x/install/install.ps1 -useb | iex
Chocolatey (Windows)இற்கான கட்டளைவரிகள்:
choco install deno
Scoop (Windows)இற்கான கட்டளைவரிகள்:
scoop install deno
Cargo களைப் பயன்படுத்தி இதனுடைய மூலத்திலிருந்து உருவாக்கி நிறுவுகைசெய்திடலாம் அதற்கான கட்டளைவரி:
cargo install deno –locked
இதனை செயல்படுத்த துவங்குதல்
அதற்காக பின்வருகின்ற எளிய நிரலை இயக்க முயற்சித்திடுக:
deno run https://deno.land/std/examples/welcome.ts
Or a more complex one:
import { serve } from “https://deno.land/std@0.98.0/http/server.ts”;
const s = serve({ port: 8000 });
console.log(“http://localhost:8000/”);
for await (const req of s) {
req.respond({ body: “Hello World\n” });
}
இதனுடைய வழிகாட்டி கையேடானது ஆழமான அறிமுகத்துடனும், எடுத்துக்காட்டுகளும் சூழல் அமைவும் நமக்கு நல்ல வழி காட்டிகளாக அமைகின்றன
இதற்கான அடிப்படை இயக்க நேர ஆவணங்களையும் இதனுடைய இணையமுகவரியில் காணலாம். இதுஒரு வழிகாட்டி கையேட்டுடன் வருகிறது, இந்த கையேட்டில் இயக்க நேரத்தின் மிகவும் சிக்கலான செயலிகள், இதில் கட்டமைக்கப் பட்ட கருத்துகள் பற்றிய அறிமுகம், இதனுடைய உள்ளமைவு பற்றிய விவரங்கள், நம்முடைய சொந்த பயன்பாட்டில் இதனை( deno )எவ்வாறு உட்பொதிப்பது, Rustஎன்பதன் செருகுநிரல்களைப் பயன்படுத்திஎவ்வாறு நீட்டிப்பது ஆகியவை பற்றிய ஆழமான விளக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தகையேட்டில் deno வழங்கும் உள்ளமைக்கப்பட்ட கருவிகள் பற்றிய தகவல்களும் உள்ளன. denoஇன் இயக்க நேரத்திற்கு அடுத்து, இதனுடைய தணிக்கை செய்யப்பட்ட நிலையான தகவமைவுகளின் பட்டியலையும் வழங்குகிறது, அவை deno பராமரிப்பாளர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன மேலும் குறிப்பிட்ட deno வின் பதிப்பில் பணி செய்ய உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. இவை denoland/denoஎனும் களஞ்சியத்தில் இதனுடைய மூலக் குறிமுறைவரிகளுடன்சேர்ந்து வருகின்றன. இந்த நிலையான தகவமைவுகள் புரவலராக வெளியீடு செய்யப் படுகின்றன, மேலும் அவை deno உடன் இணக்கமான மற்ற அனைத்து ES தகவமைவுகள் போன்ற இணையதள முகவரிகள் (URL) வழியாக விநியோகிக்கப்படுகின்றன. இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற மேக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் பயன்பாடாகும் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://deno.land/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

LogicalDOC எனும் ஆவண மேலாண்மை

ஆவண மேலாண்மை தீர்வுகளுக்கு LogicalDOC என்பதுசிறந்த தேர்வாகும். இது ஒரு உள்ளுணர்வுடன்கூடிய இடைமுகத்தைக் கொண்டுள்ளது, இது பயன்படுத்த மிகவும் எளிதானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காவென தனியாக பயிற்சி எதுவும் நமக்குத் தேவையில்லை. இது நம்முடைய கணினியுடன் ஆக்கிரமிப்பு அல்லாத ஒருங்கிணைப்பை எளிதாக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச தரங்களையும் பயன்படுத்தி கொள்கிறது. நம்முடைய அனைத்து ஆவண மேலாண்மை தேவைகளையும் இந்த LogicalDOC ஆனது தீர்வுசெய்கின்றது. சரியாக ஒழுங்கமைக்கப்பட்ட செய்திகள் அழகாக இருப்பது மட்டு மல்லாமல், நம்முடைய பணியை எளிதாகவும் தொந்தரவில்லாமலும் செய்கிறது. ஆவண மேலாண்மை அமைப்பு போன்ற மென்பொருள் தகவல்களை மீட்டெடுக்கும் நேரத்தை பல மணிநேரங்களுக்குபதிலாக ஒருசிலவிநாடிகளாக குறைக்கிறது. இதில்திறமையான ஆவண மேலாண்மை மென்பொருள் குழு உறுப்பினர்கள் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைக்க அனுமதிக்கிறது. ஒன்றிற்குமேற்பட்ட பயனாளர்கள் ஆவணங்களில் பணியாற்ற லாம் மேலும் அவர்களின் திருத்தம் செய்தல் / மறு ஆய்வுதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும். ஒருசில ஆவணங்களுக்கான இணக்கத் தேவைகள் மிகவும் சிக்கலானவை. ஆவண மேலாண்மை அமைப்பு அவ்வாறு இணங்காத அபாயத்தை குறைக்கிறது. பதிவுகளை வைத்திருத்தல் அட்டவணைகள் தானியங்கியாக செய்யப்படலாம், மேலும் புதிய ஆவணங்களை எளிதில் வகைப்படுத்தி சேமிக்க முடியும். இணையபடிவங்கள், மின்னணு கையொப்ப கருவிகளை உள்ளடக்கிய ஆவண மேலாண்மை தீர்வுடன் கூடுதலாக காகிதபயன்பாட்டினைத் தவிர்க்க முடியும். வேலும் எந்தவொரு பணியாளரும் காகிதம் இல்லாமல் மேககணினியிலிருந்து படிவங்களைத் திருத்தலாம், தம்முடைய பணியைசெய்து முடிக்கலாம் அதுமட்டு மல்லாது சட்டப்பூர்வமாக கையொப்பமிடலாம், இது நடுத்தர அளவிலான நிறுவனங்கள் , பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அந்நிறுவனங்களின் ஆவண நிருவாகத்திற்கான சக்தியை வழங்குகிறது. குழுவிற்கு எத்தனை ஆவணங்களையும் உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. இது ஒரு ஆவண மேலாண்மை ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இம்மென்பொருள் பல்வேறு செயலிகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது மேலும் எந்தவொரு நிறுவனத்திற்கும் தனிநபருக்கும் முக்கியமான வணிக ஆவணங்களை பாதுகாத்திடவும் பாதுகாப்பாக ஒழுங்கமைத்தல், குறியாக்கம் செய்தல், மீட்டெடுத்தல், கட்டுப்படுத்துதல் விநியோகித்தல் ஆகிய பணிகளை அனுமதிக்கிறது. காகித ஆவணங்களில் அச்சிடுதல், அஞ்சலிடுதல், கையேடு சமர்ப்பித்தல் போன்ற காகித அடிப்படையிலான செயல்முறைகளை நிறுவனங்கள் பயன்படுத்திய நாட்கள் முடிந்துவிட்டன; அதற்குபதிலாக இந்த ஆவண மேலாண்மை அமைப்பு இவை அனைத்தையும் மின்னணு நடைமுறைகளுடன் மாற்றுகிறது, இது நம்முடைய நிறுவனத்தின் செலவுகளை கணிசமாகக் குறைக்க அனுமதிக்கிறது. இதனுடைய வடிவமைப்பு நம்பகமான DMS தளத்தை வழங்குவதற்காக சிறந்த ஜாவா தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. இதனுடைய முக்கிய இடைமுகம் இணைய அடிப்படையிலானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென நாம் நம்மமுடைய கணினியில் வேறு எதையும் நிறுவுகை செய்யத் தேவையில்லை; பயனாளர்கள் தங்களுடைய இணைய உலாவி மூலம் கணினியை அணுகலாம்.இந்த LogicalDOC ஆனது 100% கட்டணமற்ற கட்டற்ற தரவுத்தளத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது; இது அனைத்து முக்கிய DBMS ஐயும் ஆதரிக்கின்றது இதன் மேம்படுத்துநர்கள் இன்னும் மேம்படுத்தி கொள்வதற்காக MySQL ஐ பரிந்துரைக்கின்றனர்.
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்: இணைய அடிப்படையிலான ஆவண மேலாண்மை அமைப்பு, ஆவண உள்ளடக்கம் பேரளவுதரவுகள் முழுவதும் முழு உரை தேடல், விரிவாக்கக்கூடிய பேரளவுதரவுகளின்மாதிரி, ஆவணங்களின் முன்னோட்டம், தரநிலைகள் சார்ந்தAPI (CMIS) தனிப்பயன் முன் முனைமங்களை உருவாக்குதல் ஆகியவற்றை எளிதாக்குகிறது, சுருக்கப்பட்ட (.ZIP) காப்பகங்க ளிலிருந்து பதிவிறக்கும் செய்தல், ஆவண பதிப்பு , ஆவண பதிப்பு கட்டுப்பாடு, இணையசேவைக்கான API, ஆவண களஞ்சிய புள்ளிவிவரங்கள், பேரளவுதரவுகளின் ஒப்பீட்டுடன் முழுமையான ஆவண வரலாறு, கைபேசி பயன்பாடுகள் (ஐபாட், ஐபோன், ஆண்ட்ராய்டு), ஜூம்லா கோப்பு-உலாவி நீட்டிப்பு, டிராப்பாக்ஸ் ஒருங்கிணைப்பு, ஆவணங்களில் குறிப்புகள், குறிப்புகளின் ஆவணங்கள்,ஆகியவை கொண்டுள்ளது
இணையDAV இடைமுகம், : குறுக்குதள செயல்பாடு விண்டோ, லினக்ஸ் , மேக் ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்கது. ஒவ்வொரு புதிய பதிப்பும் ஒவ்வொரு வெளியீட்டின் தரத்தையும் உறுதிப்படுத்த விரிவான சோதனைக்கு உட்பட்டது. தன்னாட்சி: இதனுடைய இடைமுகம் மிகவும் உள்ளுணர்வுடையது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக பயிற்சிஎதுவும் தேவையில்லை. கோப்புகளை இழுத்து விடுதல் மட்டும் செய்தால் போதுமானதாகும்.
கட்டணமற்றது: இது நம்முடைய வணிகக் கோப்புகள் அனைத்தையும் தானாகவே பதிவிறக்கும் செய்து, அவற்றை எங்கும் கிடைக்கச் செய்கிறது
பாதுகாப்பானது: எந்தவொரு அளவு ஆவணத்தையும் அல்லது ஆவணங்களின் குழுவையும் பாதுகாப்பான, மைய களஞ்சியத்தின் மூலம் சேமிக்கமுடியும்.
செயல்திறன்: தருக்க ஆவணங்களை அகற்ற, மதிப்புமிக்க சேமிப்பிடத்தை விடுவிக்க இதுநம்மை அனுமதிக்கிறது.
உயர் பெயர்வுத்திறன்: இதுஒரு பரந்த அளவிலான வன்பொருள் , மென்பொருள் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறது.
. இது LGPLv3 எனும் அனுமதியின்அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.மேலும் அறிய https://www.logicaldoc.com எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Joplin எனும் குறிப்பு எடுக்க உதவிடும் பயன்பாடு

Joplin என்பது குறிப்பு எடுப்பதற்காகஉதவுகின்ற ஒருகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும், இது குறிப்பேடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏராளமான குறிப்புகளைக் கையாளக்கூடியது. குறிப்புகள் தேடக்கூடியவை, பயன்பாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது நம்முடைய சொந்த உரை பதிப்பாளரிடமிருந்தோ நகலெடுக்கலாம், குறியிடலாம், மாற்றலாம். இதில் குறிப்புகள் Markdown வடிவத்தில் உள்ளன. வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் (இது Markdown இற்கு மாற்றப்படுகிறது), வளங்கள் (படங்கள், இணைப்புகள் போன்றவை) , முழுமையான பேரளவுதரவுகள் (புவி இருப்பிடம், புதுப்பிக்கப்பட்ட நேரம், உருவாக்கப்பட்ட நேரம் போன்றவை) உள்ளிட்ட .enex வடிவ கோப்புகள் வழியாக. . எளிய Markdown கோப்புகளையும் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்புகளை நெக்ஸ்ட் கிளவுட், டிராப்பாக்ஸ், ஒன்ட்ரைவ், WebDAV அல்லது கோப்பு முறைமை (எடுத்துக்காட்டாக பிணைய கோப்பகத்துடன்) உள்ளிட்ட பல்வேறு மேககணினி சேவைகளுடன் ஒத்திசைவு செய்துகொள்ளலாம். குறிப்புகளை ஒத்திசைவு செய்திடும்போது, ​​குறிப்பேடுகள், குறிச்சொற்கள் , பிற பேரளவுதரவுகள் ஆகியவை எளிய உரை கோப்புகளில் சேமிக்கப்படுகின்றன, அவை எளிதில் ஆய்வு செய்யமுடியும், காப்புப் பிரதி எடுக்கவும் முடியும். இந்த பயன்பாடானது விண்டோ, லினக்ஸ், மேக், ஆண்ட்ராய்டு , iOS ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறனுடன் கிடைக்கிறது (இதனுடைய முனைம பயன்பாடானது FreeBSDஇலும் செயல்படுகிறது). நம்முடைய இணைய உலாவியில் இருந்து இணையப்பக்கங்கள் ,திரைபடப்பிடிப்புகளைச் சேமிக்க ஒருஇணைய இணைப்ப(Clipper) , ஃபயர்பாக்ஸ் , குரோம் ஆகியவற்றிலும் செயல்படுமாறு கிடைக்கிறது. இது மேசைக்கணினிக்கு (விண்டோ, மேக், லினக்ஸ்), கைபேசிக்கு (ஆண்ட்ராய்டு , iOS) , முனைமத்திற்கு (விண்டோ, மேக், லினக்ஸ் , FreeBSD). ஆகிய மூன்று வகையாக கிடைக்கின்றது ஆயினும் இவை அனைத்தும் ஒத்த பயனஆளர் இடைமுகங்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக செயற்படுத்தலாம். அல்லது கையடக்க பதிப்பாக கூட பெறமுடியும்
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்: துவக்கமுதல் முடிவுவரை மறை குறியாக்கம் செய்யப்பட்டது . JEX வடிவ கோப்புகளாகவும், மூல கோப்புகளாகவும் பதிவேற்றம் செய்யலாம். நாம்செய்ய வேண்டியவைகளுக்கும், குறிச்சொற்களுக்கும் ஆதரவு அளிக்கின்றது . முதலில் இணைய இணைப்பில்லாமல் செயல்படுவதால், இணைய இணைப்பு இல்லாமல் கூட முழு தரவுகளும் சாதனத்தில் எப்போதும் கிடைக்கின்றது. கோப்பு இணைப்பு ஆதரிக்கின்றது தேடுதல் செயலியை கொண்டது. புவி இருப்பிட ஆதரவு கொண்டது .நாம் பேசும் பல்வேறு மொழிகளை ஆதரிக்கிறது வெளிப்புற பதிப்பாளரை ஆதரிக்கின்றது – இதில் ஒரே சொடுக்குதலில் நமக்கு பிடித்த வெளிப்புற பதிப்பாளரில் குறிப்புகளைத் திறக்கமுடியும். மேலும் விவரங்களுக்கு https://joplinapp.org/எனும் இணையதள முகவரிக்கு செல்க

குறிப்புகள் எடுப்பதற்காக உதவிடும் புதியNotally எனும் பயன்பாடு

தற்போது குறிப்புஎடுப்பதற்காக பல்வேறுபயன்பாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் அருவருப்பானவையாகவும், தடுமாற்றம் கொண்டவையாகவும், தரம்குறைந்த வையாகவும் அல்லது இவைமூன்று சேர்ந்தவையாகவும் உள்ளன. இவைகளில் பயனாளர் இடைமுகத்தை மிகவும் தரந்ததாழ்ந்த வடிவமைப்பாளர்களின் அரங்காக வளர்த்து வருவதாக கருதுகின்றனர். . அதற்கு பதிலாக இவையெதுவும் இல்லாத சிறந்த ஒன்றாக புதியதான இந்த Notally என்பது ஒரு அழகானதாக திகழ்கின்றது. இது மிகவும் ஒளிமிகுந்த, மிகச்சிறிய, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது . இதில்குறிமுறைவரிகளின் குறைந்தபட்ச சார்புகளும் வரிகளும் உள்ளன. (அனைத்தும் படிப்பதில் சமரசம் செய்யாமல்) மேலும் இது குறிப்பிடத்தக்க பொருள் வடிவமைப்பு, சக்திவாய்ந்த வசதிகளுடன் கூடிய மிகச்சிறிய குறிப்பு எடுக்கும் பயன்பாடு ஆகும். குறிப்பாக ‘ஒரு சிறிய குறிப்புகளுக்கான பயன்பாடு’ என்று விவரிக்கப்படுகிறது. இது அலுவலகபயன்பாடுகளில் உற்பத்தித்திறன் பிரிவில் உள்ள ஒரு பயன்பாடாகும். தனித்தனி பகுதி , ஊடுருவல் கூறு , கட்டமைப்பு கூறுகள் (நேரடி தரவுகாட்டி ) ஆகியவை இதில் பயன்படுத்தப்படும் கூறுகளாகும்
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள் தானாக சேமித்தல், இருண்ட பயன்முறை பொருள் வடிவமைப்புஆகிய வசதிகளைகொண்டது , இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாகஅனுமதி எதுவும் தேவையில்லை பட்டியல்களை உருவாக்கவும் Lollipop சாதனங்களுக்கான ஆதரவும் அதற்கான குறிப்புகளை எப்போதும் மேலே வைத்திருப்பதற்கான இணைப்பு வசதியும் கொண்டது , APK அளவு 1.5 MB (1.9 MB சுருக்கப்படாதது) விரைவான அமைப்புக்கு குறிப்புகளில் பட்டிகளைச் சேர்த்தல் அவற்றைச் சுற்றிலும் வைத்திருக்கின்ற வசதி கொண்டது குறிப்புகளைக் காப்பகப்படுத்துதல், வடிவமைப்போடு குறிப்புகளை எளிய உரையாகவும், HTML அல்லது PDF கோப்புகளாக பதிவேற்றம் செய்தல் mono space , strike-through ஆகியவற்றுக்கான ஆதரவுடன் மீப்பெரும்உரை குறிப்புகளை உருவாக்குதல் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் , இணையமுகவரி(URL)களுக்கான ஆதரவுடன் குறிப்புகளில் சொடுக்குதல் செய்யக்கூடிய இணைப்புகளைச் சேர்த்தல் ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது. இது GPL-3.0 License ,எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/OmGodse/Notally எனும் இணையதள முகவரிக்கு செல்க

Python-இற்கான இணைய வாடிக்கையாளரான httpx ஐ எவ்வாறு பயன்படுத்திகொள்வது

httpx தொகுப்பானது Pythonஇற்கான ஒரு அதிநவீன இணைய வாடிக்கை யாளராகும். அதை நிறுவியவுடன்,இணையதளங்களிலிருந்து தரவைப் பெற இதைப் பயன்படுத்தலாம். வழக்கம் போல், இதை நிறுவுகைசெய்திட எளிதான வழி pipஎனும் பயன்பாட்டு நிரலியை பயன்படுத்திகொள்வதுதான் அதற்கான கட்டளைவரி:
$ python -m pip install httpx –user
இதைப் பயன்படுத்திகொள்வதற்காக இதை ஒரு பைதான் உரைநிரலில் பதிவிறக்கம் செய்த பின்னர் தரவைப் பெற, get எனும் செயலியைப் பயன்படுத்தி கொள்க:
importhttpx
result=httpx.get(“https://httpbin.org/get?hello=world”)
result.json()[“args”]
Here’s the output from that simple script:
{‘hello’: ‘world’}
HTTP இன் பதில்செயல்
இயல்பாக, httpx ஆனது 200 அல்லாத நிலையில் பிழைகளை எழுப்பாது. அதனால் பின்வருமாறான குறிமுறைவரிகளை முயற்சித்திடுக:
result=httpx.get(“https://httpbin.org/status/404”)
result
இதன் முடிவு பின்வருமாறு::

இதில்வெளிப்படையாக ஒரு பதிலை எழுப்ப முடியும். அதற்காக விதிவிலக்கு கையாளுபவரைச் சேர்த்திடுக:
try:
result.raise_for_status()
exceptExceptionasexc:
print(“woops”,exc)
இதோ அதற்கான முடிவு:
woops Client error’404 NOT FOUND’forurl’https://httpbin.org/status/404′
மேலும் தகவலுக்கும் சரிபார்க்கவும்: https://httpstatuses.com/404 எனும் இணையதளமுகவரிக்கு செல்க
வழக்கமான வாடிக்கையாளர்
எளிமையான உரைநிரலைத் தவிர வேறு எதற்கும் தனிப்பயன்வாடிக்கையாளரைப் பயன்படுத்திகொள்வது பயனுள்ளதாகும். connection pooling என்பன போன்ற நல்ல செயல்திறன் மேம்பாடுகளைத் தவிர, வாடிக்கையாளரை உள்ளமைக்க இது ஒரு தளமாகும். எடுத்துக்காட்டாக, தனிப்பயன் அடிப்படையிலான URL ஐ பின்வருமாறு அமைக்கலாம்:
client=httpx.Client(base_url=”https://httpbin.org”)
result=client.get(“/get?source=custom-client”)
result.json()[“args”]
Sample output:
{‘source’: ‘custom-client’}
ஒரு குறிப்பிட்ட சேவையகத்துடன் உரையாடுவதற்கு வாடிக்கையாளரைப் பயன்படுத்திகொள்கின்ற வழக்கமான சூழ்நிலைக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, base_url , auth ஆகிய இரண்டையும் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒரு நல்ல சுருக்கமான கருத்தினை உருவாக்கலாம்:
client=httpx.Client(
base_url=”https://httpbin.org”,
auth=(“good_person”,”secret_password”),
)
result=client.get(“/basic-auth/good_person/secret_password”)
result.json()
இதன் முடிவு பின்வருமாறு::
{‘authenticated’: True, ‘user’: ‘good_person’}
இதைப் பயன்படுத்தக்கூடிய சிறந்த செய்திகளில் ஒன்று, வாடிக்கையாளரை ஒரு உயர்மட்ட “main” எனும் செயலியில் உருவாக்கி, அதை அனுப்புவதாகும். இது மற்ற செயலிகளை வாடிக்கையாளரைப் பயன்படுத்திகொள்ள அனுமதிக்கிறது , உள்ளூர் WSGI பயன்பாட்டிற்கு இணைக்கப்பட்ட வாடிக்கையாளருடன் unit-tested ஐ பெற அனுமதிக்கிறது.
defget_user_name(client):
result=client.get(“/basic-auth/good_person/secret_password”)
returnresult.json()[“user”]
get_user_name(client)
‘good_person’
defapplication(environ,start_response):
start_response(‘200 OK’,[(‘Content-Type’,’application/json’)])
return[b'{“user”: “pretty_good_person”}’]
fake_client=httpx.Client(app=application,base_url=”https://fake-server”)
get_user_name(fake_client)
இதன் முடிவு பின்வருமாறு::
‘pretty_good_person’
மேலும் தகவலிற்கும் பயிற்சிகளுக்கும் httpx: python-httpx.org எனும் இணையதள முகவரிக்கு செல்க.

LyX எனும் LaTeX உடன் இணைந்து செயல்படும் பயன்பாடு

LyX ஆல் பயன்படுத்தப்படும் அணுகுமுறையானது கணித உள்ளடக்கம் (முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சமன்பாடு பதிப்பாளர் மூலம்), கல்விக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள், புத்தகங்கள் போன்ற கட்டமைக்கப்பட்ட ஆவணங்களை உருவாக்குவதற்கான உலகத் தர ஆதரவை விளைவிக்கிறது. கூடுதலாக, குறிப்புப் பட்டியல், குறிமுறைவரிகளின் உருவாக்கம் போன்ற அறிவியல் படைப்பாற்றலின் முதன்மையானவை நிலையானவை. ஆனால் நாம் ஒரு கடிதம் அல்லது நாவல் அல்லது நாடகஉரை அல்லது திரைப்பட உரை உருவாக்க LyX ஐப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் நன்கு தயாரான, வடிவமைக்கப்பட்ட ஆவணத் தளவமைப்புகளின் பரந்த வரிசை கட்டமைக்கப் பட்டுள்ளது.
LyX என்பது பயனபாட்டிற்கு வெளியே, தங்கள் எழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கானது. வடிவமைப்பு விவரங்கள், “finger painting” என்பதன் எழுத்துரு பண்புக்கூறுகள் அல்லது பக்க எல்லைகளுடன் சுற்றித் திரிவது போன்ற முடிவில்லாத ஒட்டுகள்இதில் இல்லை.நாம் எழுதிடும்போது. திரையில், LyX எந்த சொல் செயலியாகத் தெரிகிறது; அதன் அச்சிடப்பட்ட வெளியீடு – அல்லது மிகவும் குறுக்காக-குறிப்பிடப்பட்ட PDF, உடனடியாக தயாரிக்கப்பட்டது போன்ற – வேறு ஒன்றும் இதில்இல்லை.
சில அம்சங்களில் அதன் பயனர் இடைமுகம் வழக்கமான சொல் செயலிகளை (மைக்ரோசாஃப்ட் வேர்டு, லிப்ரே ஆபிஸ் ரைட்டர் போன்றவை) ஒத்திருந்தாலும், LyX அதன் ஆவணங்களைச் செயல்படுத்தவும் இறுதி வெளியீட்டை உருவாக்கவும் LaTeX ஐப் பயன்படுத்திகொள்கிறது. LaTeX ஆவணங்களை எளிதாக எழுதுவதற்கு இதனை பயன்படுத்திகொள்ளலாம்.
LyX ஒரு கட்டணமற்ற கட்டற்ற உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது, இதுLinux/Unix, Windows , Mac ,OS X ஆகிய அனைத்து இயக்கமுறைகளிலும் இயங்குகிறது, மேலும் இது நாம் பேசும் பல்வேறு மொழிகளிலும் கிடைக்கிறது.
முக்கியவசதிவாய்ப்புகள்:
கணிதம்/அறிவியல் வதிகளின் (மாதிரி செயலி) கணித சூத்திர திருத்துதலில் இது எளிதான சிறந்த இனமாகும். LaTeX இன் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி கொள்கிறது.
சமன்பாடுகளை புள்ளி, சொடுக்குதல் இடைமுகம் வழியாக அல்லது LaTeX கட்டளைகளுடன் விசைப்பலகை வழியாக உள்ளிடலாம் (விரும்பினால் தானாக நிறைவு செய்வதன்மூலம்). சூத்திரங்கள் உடனடியாக திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றது.
LaTeX மூலக் குறிமுறைவரிகளுக்கு நகலெடுத்திடலாம்/ஒட்டிடலாம்.
சமன்பாடு வரிசைகள், சமன்பாடு எண்கள், தேற்றங்கள், அணிகள், தருக்கபடிமுறைகள் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டது.
தனிப்பயனாக்கக்கூடிய கணித சிறுகட்டளைவரிகளின் ஆதரவினை கொண்டது.
பல்வேறு கணினி இயற்கணித அமைப்புகளுக்கான அடிப்படை ஆதரவு (CAS) –
கட்டமைக்கப்பட்ட ஆவண உருவாக்கம்
அடையாளசீட்டுகள், குறிப்புகள், அட்டவணை , நூலியல் ஆகியவற்றிற்கான மேம்பட்ட வசதிகள் (மேம்பட்ட BibTeX ஆதரவு உட்பட)
cut/paste, undo/redo, எழுத்துப்பிழை சரிபார்ப்பு (பின்னணியில் aspell அல்லது hunspell ஐப் பயன்படுத்திகொள்கிறது) சொற்களஞ்சியம் , திருத்தம் கண்காணிப்பு போன்ற நிலையான சொல் செயலிகளை கொண்டுள்ளது
வெவ்வேறு உரைஇனங்கள் கடிதங்கள், கட்டுரைகள், புத்தகங்கள், திரைப்பட உரைகள், LinuxDoc, படவில்லைகள், விளக்கக்காட்சிகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கின்றன. AMS, APS, IEEE போன்ற அறிவியல் சமூகங்களுக்கான சில உரை இனங்கள் அல்லது வானியல், வானியற்பியல் போன்ற குறிப்பிட்டவைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிறந்த நோக்கத்திறகான தகவமைவுகூறுகள், குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவையான வசதிகளைச் சேர்ப்பதன் மூலம், உரைஇனத்தின் செயல்பாட்டை மாறும் வகையில் மேம்படுத்த உதவுகின்றன (இறுதிக்குறிப்புகள், மொழியியல் பளபளப்புகள், Noweb/Sweave அல்லது LilyPond ஆதரவு போன்றவை)
எண்ணிடப்பட்ட பிரிவு தலைப்புகள், உள்ளடக்க அட்டவணை ( hypertext செயல்பாட்டுடன்), புள்ளிவிவரங்கள்/அட்டவணைகளின் பட்டியல்கள்
புறவமைப்பு பயன்முறையானது ஆவணத்தில் எளிதாக வழிசெலுத்துவதற்கும், முழு அத்தியாயங்களை பிரிவுகளை நகர்த்துவதற்கும் அல்லது ஒன்றாக சேர்த்து கட்டுவதற்கும் அனுமதிக்கிறது. எழுத்து நடைகள் முழு சொற்பொருள் markupஇற்கான அணுகலை வழங்குகின்றன
வரைகலை/அட்டவனைகள்
பல வரைகலை வடிவங்களுக்கான ஆதரவு (EPS, SVG, XFig, Dia உட்பட) படங்களின் செதுக்குதல், சுழற்சி, அளவிடுதல் ஆகியவற்றுக்கான WYSIWYG
புத்திசாலித்தனமாக மிதக்கும் உருவங்கள், அட்டவணைகளுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவினை கொண்டுள்ளது துணை உருவங்கள், துணை அட்டவணைகள் ,தலைப்புகளுக்கான ஆதரவினை கொண்டுள்ளது மூடப்பட்ட உருவங்கள் , அட்டவணைகளுக்கானஆதரவினை கொண்டுள்ளது ஊடாடும் WYSIWYG அட்டவணைகள் கொண்டுளளது பல உருவங்களுக்கான பகிரப்பட்ட (வடிவியல்) அமைப்புகள் கொண்டுள்ளது
சர்வதேசமயமாக்கல்
உலகின் பல மொழிகளில் ஆவணங்களை எழுதுவதற்கான ஆதரவினை கொண்டுள்ளது.ஹீப்ரு ,அரபு போன்ற வலமிருந்து இடப்புற மொழிகளுக்கு ஆதரவினை கொண்டுள்ளது பல எழுத்து அமைப்புகளுக்கான (CJK உட்பட) ஆதரவினை கொண்டுள்ளது . ஒருங்குகுறி இணக்கத்தின்வாயிலாக, பல மொழிகள் ,உரைகளைக் கொண்ட பன்மொழி ஆவணங்களை எழுதிடும் வசதிகொண்டுள்ளது. பட்டியல்கள், பிழைச் செய்திகள், கையேடுகள் ,முக்கிய பிணைப்புகள் பல மொழிகளில் கிடைக்கின்றன
ஆவண வடிவமைப்புகள்
ஆவணத்தில் எங்கும் எளிய LaTeX குறிமுறைவரிகளைச் செருகும் திறனுடன் அனைத்து LaTeX செயலிகளுக்குமான அணுகல் திறன்மிக்கது பல வடிவங்களுக்கு (LaTeX, PDF, Postscript, DVI, ASCII, HTML, OpenDocument, RTF, MS Word போன்ற) பதிவிறக்கமும் பதிவேற்றமும் செய்துகொள்ளமுடியும். உடனடி LaTeX ,DocBook பார்வைக்கான மூலக் குறிமுறைவரிகள் பார்வையிடலாம். SGML-கருவிகள் (DocBook DTD) ஆதரவினை கொண்டுள்ளது எழுத்தறிவு பெற்ற நிரலாக்க (noweb, Sweave) ஆதரவினை கொண்டுள்ளது PDF அடையாளக்குறியீடுகள் தலைப்பு தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கான ஆதரவினை கொண்டுள்ளது
பயன்பாடு/பயனர் இடைமுகம்
பட்டியல்கள், சுட்டி கட்டமைக்கக்கூடிய விசை பிணைப்புகள் வழியாக அனைத்து செயல்பாடுகளுக்கும் அணுகலை வழங்கும் வரைகலை பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளது ஒரு தொடக்கநிலை பயிற்சி உட்பட விரிவான ஆவணங்கள் பல மொழிகளில் கிடைக்கின்றன . தட்டச்சு செய்திடும்பது அந்த குறிப்பிடட உரையை நிறைவு செய்கின்ற திறன் கொண்டது.பின்புலத்தில் தட்டச்சு செய்திடும் வசதிகொண்டது
ஆவண மேலாண்மை
பின்தொடர்தலை மாற்றிடவும் வெளிப்புற பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு களுக்கான (RCS, CVS, Subversion, Git) ஆதரவினை கொண்டுள்ளது ஆவணத்தின் வெவ்வேறு பதிப்புகளின் ஒப்பீடு செய்திடலாம். ஒரே ஆவணத்தின் வெவ்வேறு பதிப்புகளைக் கொண்டிருப்பதற்கான வசதிகொண்டது மஞ்சள் ஒட்டும் குறிப்புகளை கொண்டுள்ளது ..மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.lyx.org/Home எனும் இணையதளமுகவரிக்கு செல்க

மறையாக்கநாணயவர்த்தகத்திற்கு உதவிடும்Freqtrade Wallet

அடிக்கடியான வர்த்தகம்(Freqtrade) என்பது பைத்தானில் எழுதப்பட்ட ஒரு கட்டணமற்ற கட்டற்ற மறையாக்கநாணய வர்த்தக துவக்கநிலையாகும்(bot). இது அனைத்து முக்கிய மறையாக்கநாணய பரிமாற்றங்களையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது Telegram அல்லது WebUI மூலம் கட்டுப்படுத்தப்படு கின்றது. இது பின்பரிசோதனை, திட்டமிடல், நிதிமேலாண்மை கருவிகள் இயந்திர கற்றலின் மூலம் உத்தி மேம்படுத்தல் ஆகிய பலவசதிகளைக் கொண்டுள்ளது. Dry-run என்பதில் வர்த்தக bot ஐ இயக்குவதன் மூலம் மறையாக்கநாணய வர்த்தகத்தினை எப்போதுவேண்டுமானாலும் துவங்கிடுக, இது எவ்வாறு செயல்படுகிறது எதிர்பார்க்கும் இலாபம்/நட்டம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன் பணத்தினை கையாளுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம். நமக்கு அடிப்படை குறிமுறைவரிகளின் திறனும் பைதான் பற்றிய அறிமுகமும் இருக்க வேண்டும் என கடுமையாக பரிந்துரைக்கபடுகின்றது. மூலக் குறிமுறைவரிகளைப் படித்து, இந்த botஇன், தருக்கபடிமுறைகளையும் அதில் செயல்படுத்தப்பட்ட நுட்பங்களையும் புரிந்து கொள்ள தயங்க வேண்டாம். pandas ஐப் பயன்படுத்தி வர்த்தக உத்தியை பைத்தானில் எழுதிடுக. உத்வேகத்திற்கான எடுத்துக்காட்டு உத்திகள் இதனுடைய உத்திக்கான களஞ்சியத்தில் உள்ளன. வர்த்தகம் செய்ய விரும்பும் பரிமாற்றத்திற்காக சந்தைகளின் வரலாற்றுத் தரவைப் பதிவிறக்கம் செய்து கொள்க. இயந்திர கற்றல் முறைகளைப் பயன்படுத்தும் hyper optimizationப் பயன்படுத்தி உத்திக்கான சிறந்த அளவுருக்களைக் கண்டறிந்திடுக.
மறுப்பு: இந்த மென்பொருள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. இழக்க பயன்படும் என்பதால் பணத்தை பணயம் வைத்திடவேண்டாம். நம்முடைய சொந்த இடர்எதிர் கொள்ளும் வழிமுறையில் மென்பொருளைப் பயன்படுத்திடுக. வர்த்தக முடிவுகளுக்கு அனைத்து துணை நிறுவனங்களும் எந்தப் பொறுப்பையும் ஏற்காது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
மறையாக்கநாணய வர்த்தக உத்தியை வளர்த்துக் கொள்க: pandas ஐப் பயன்படுத்தி உத்தியை பைத்தானில் எழுதுக. செயல்திறனிற்கான வாங்குதல், விற்றல், இலாபம் (ROI), நிறுத்த-இழப்பு, பின்தங்கிய நிறுத்த-இழப்பு ஆகிய அளவுருக்களை மேம்படுத்திகொள்க.
சந்தைகளைத் தேர்ந்தெடுத்திடுக: நிலையான பட்டியலை உருவாக்கிடுக அல்லது அதிக வர்த்தகம் செய்யப்பட்ட தொகுதிகளையும் /அல்லது விலைகளின் அடிப்படையில் தானியங்கியான ஒன்றையும் பயன்படுத்திகொள்க (பின்பரிசோதனையின் போது கிடைக்காது). வர்த்தகம் செய்ய விரும்பாத சந்தைகளையும் வெளிப்படையாக தடுப்புப்பட்டியலில் சேர்த்திடுக.
இயக்கிடுக: உருவகப்படுத்தப்பட்ட நிதியுடன் ( Dry-Run பயன்முறை) உத்தியை சோதித்திடுக அல்லது உண்மையான நிதியுடன் (நேரடியான வர்த்தக பயன்முறை (Live-Trade )) பயன்படுத்திடுக.
Edge ஐ பயன்படுத்தி இயக்கிடுக (வாய்ப்பு பயன்முறையை): நட்டத்தினை தவிர்த்திட மாறுபாட்டின் அடிப்படையில் சந்தைகள் மூலம் சிறந்த வரலாற்று தரவின் வாயிலாக வணிக எதிர்பார்ப்புஎன்னவென்று கண்டறிந்த பின்னர் சந்தைகளை வர்த்தகம் செய்ய அனுமதிப்பதை/நிராகரிப்பதை.Edge ஐ பயன்படுத்தி இயக்கிடுக. வர்த்தகத்தின் அளவு மூலதனத்தின் சதவீதத்தின் அபாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
கட்டுப்பாடு/கண்காணிப்பு: Telegram அல்லது WebUI ஐப் பயன்படுத்திடுக ( botஐத் துவங்குதல்/நிறுத்துதல், இலாபம்/நட்டம், தினசரி சுருக்க விவரம், தற்போதைய திறந்த வர்த்தக முடிவுகள் போன்றவை).
பகுப்பாய்வு: பின்புல தரவுசரிபார்த்தல் அல்லது Freqtrade வர்த்தக வரலாறு (SQL தரவுத்தளம்), தானியங்யாக நிலையான அடுக்குகள் ஊடாடும் சூழல்களில் தரவை பதிவேற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவற்றில் மேலும் பகுப்பாய்வு செய்திடுக.
ஆதரிக்கப்படும் பரிமாற்ற சந்தை: Binance , Bittrex, TX , Gate.io , Huobi , Kraken , OKX(முன்னாள் OKEX) ஆகியவை களாகும்
வன்பொருள் தேவைகள் இந்த botஐ இயக்க, குறைந்தபட்சம்: , 2ஜிபி ரேம் , 1ஜிபி காலியானவன்தட்டு நினைவகம் , 2vCPU கொண்ட லினக்ஸ் மேககணினி நிகழ்வைப் பரிந்துரைக்கப்படுகின்றது
மென்பொருள் தேவைகள்: Docker (பரிந்துரைக்கப்படுகிறது) ,
மாற்றாக , பைதான் 3.8+ , pip (pip3) , git , TA-Lib ,virtualenv (பரிந்துரைக்கப்படுகிறது)
இது(GPLv3) எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் ,https://www.freqtrade.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

ODINஎனும் காந்த அதிர்வு வரிசைகளை உருவாக்குவதற்கான கட்டமைப்பு

ODIN என்பது காந்த அதிர்வு வரிசைகளை உருவாக்குவதற்கும் உருவகப்படுத்து வதற்குமான C++ எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்ட மென்பொருள் கட்டமைப்பாகும். இதில் தற்கால அதிநவீன:காந்த அதிர்வு உருவப்பட நுட்பங்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக, echo-planar உருவப்படம் spiral-உருவப்படத்திற்கான வரிசை தொகுதிகள், GRAPPA புனரமைப்புடன் இணையான உருவப்படம், இரு பரிமாண துடிப்புகள் , புல-வரைபட அடிப்படையிலான சிதைவு திருத்தங்கள் ஆகியவற்றினை கொண்டுள்ளது.
பயன்படுத்த எளிதானது: வரிசைகளைத் தொகுப்பது முதல் அதைத் திட்டமிடுவது அல்லது உருவகப்படுத்துவது வரை அனைத்து பொதுவான படிமுறைகளையும் இதனுடைய வரைகலை பயனர் இடைமுகத்தில் எளிதாகசெய்ய முடியும்.
உண்மையிலேயே பொருள் சார்ந்தது:பொருள் சார்ந்த வடிவமைப்புடன் C++ இல் எழுதப்பட்டது, ODIN மிகவும் தகவமைவானது, நெகிழ்வானது, எழுதுவதற்கு மிகக் குறைந்த குறிமுறைவரிகள் தேவைப்படுகிறது: ODIN உடன் வரும்தொடர்களை புரிந்துகொள்வதும் மாற்றுவதும் எளிது.
திறமூலமானது:ODIN என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற மென்பொருள் கட்டமைப்பாகும். இது அறிவியல் வெளியீடுகளில் ஆவணப்படுத்தப்பட்ட காந்த அதிர்வுகளில் நன்கு நிறுவப்பட்ட நுட்பங்களைக் கொண்டுள்ளது. இதனை யாரும் தடையின்றி பயன்படுத்திகொள்ளலாம் மாற்றியமைத்துகொள்ளலாம்.
ODIN இன் சில சிறப்பம்சங்கள்
வரைகலை பயனர் இடைமுகத்தில் வரிசை நேர பாடத்திட்டத்தின் திட்டமிடல்.
மெய்நிகர் MR சைகையை உருவாக்க மெய்நிகர் phantom ஐப் பயன்படுத்தி வரிசையின் சுழலான-இயற்பியலை உருவகப்படுத்துதல் ( Bloch-Torreyசமன்பாடுகள்). உருவகப்படுத்துதலின் போது கணினியின் குறைபாடுகள் (eddy மின்னேட்டங்கள், B1 nhomogeneity, ஒலி) விருப்பப்படி செயல்படுத்துல்/நிறுத்துதல் செய்யலாம்.
k-space trajectory, b–மதிப்புகள், சுழல் மின்னோட்டங்கள் போன்றவற்றின் காட்சிப்படுத்தல்.மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய, பல-திரிக்கப்பட்ட உருவப்பட மறுகட்டமைப்பு வரைச்சட்டகங்கள்.ஆகியவற்றினை கொண்டுள்ளது
ODIN உறுப்புகள்
ODIN:NMR தொடர்களை உருவாக்குதல், சோதனை செய்தல், காட்சிப்படுத்துதல் , உருவகப்படுத்துதல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு மையமாக இது அமைந்துள்ளது. இது ODIN நூலகங்களுக்கு முன்-இறுதியாக உள்ளது, இது ஊடாடும் திருத்தம், மறுதொகுப்பு , வரிசை தொகுதிகளின் மாறும் இணைப்பு ஆகியவற்றை அனுமதிக்கிறது.
Pulsar: RF துடிப்புகளின் உருவாக்கமும் உருவகப்படுத்துதலுக்கான வரைகலை பயனர் இடைமுகமும் Pulsar நிரலால் வழங்கப்படுகிறது. துடிப்பின் அளவுருக்கள் ஊடாடும் வகையில் திருத்தம் செய்திடலாம் , தொடர்புடைய தூண்டுதல் சுயவிவரம் ஒரே நேரத்தில் காட்டப்படும். அதிகபட்ச நெகிழ்வுத்தன்மைக்கு ஒரு மட்டு அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது: துடிப்பு வடிவம், k-space பாதை, துடிப்பின் வடிகட்டி செயல்பாடு ஆகியவை சுதந்திர செயல்பாடுகளால் உருவாக்கப்படுகின்றன. அவை பல வழிகளில் இணைக்கப்படலாம், எ.கா. ஒரு பெட்டி வடிவ துடிப்பு சுழல் பாதைகள், எந்த வடிகட்டி செயல்பாடுகளையும் பயன்படுத்தி உருவாக்க முடியும். துடிப்பின் செயல்பாடுகள் ஒரு செருகுநிரல் பொறிமுறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன (சுருக்கமாக C++ அடிப்படை இனங்கள், இதில் செயலிகள் பெறப்பட்ட இனங்களில் செயல்படுத்தப் படுகின்றன). இதனால் புதிய துடிப்பு வடிவங்கள், பாதைகள், வடிகட்டி செயல்பாடுகளை புதிய செயலியின் இனங்களை வரையறுப்பதன் மூலம் எளிதாக சேர்க்க முடியும்.
MiView பின்வரும் வடிவங்களை ஆதரிக்கும் கட்டளை வரியில் இயங்கும் தரவு பார்வையாளர்: ASCII இல் பூஜ்ஜியங்கள் அல்லாத 3D-குறிமுறைவரிகள், பேச்சுவழக்குகள்: addval , ASCII, பேச்சுவழக்குகள்: tcourse , Ansoft HFSS ASCII , DICOM, பேச்சுவழக்குகள்: siemens , GNU-க்கான பிற வடிவங்களுக்கான , ISMRMRD படம் , Interfile, dialects: neurostat , Iris3D binary data , JCAMP-DX data sets , Matlab ascii 2D data matrix , Meta Imageஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது

இது(GPLv2) எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://od1n.sourceforge.net/, எனும் இணையதளமுகவரிக்கு செல்க

சொடுக்குதலிற்கான இல்லம்(ClickHouse) எனும் திறமூல பயன்பாடு

சொடுக்குதலிற்கான இல்லம்(ClickHouse) என்பது, திறமூல நிரல் சார்ந்த விரைவாக செயல்படுகின்ற தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும், இதனுடைய உதவியுடன் நிகழ்வு நேரத்தில் SQLஇன் வினவல்கள் மூலம் பகுப்பாய்வு தரவு அறிக்கைகளை உருவாக்க முடியும். பல சுதந்திர வரையறைகளின்படி, இது மற்ற ஒப்பிடக்கூடிய நெடுவரிசை சார்ந்த தரவுத்தள மேலாண்மை அமைப்புகளை விட அதிக திறனுடையதாக உள்ளது, மேலும் அவைகளை விட1000 மடங்கு விரைவாக செயல்படுகின்ற திறன்மிக்கது. இதன்வாயிலாக மில்லியன் முதல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கிடைவரிசைகளிலான தரவுகளை ஒரு வினாடிக்கு ஒரு சேவையகத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஜிகாபைட் என்றவாறு தரவுகளை செயலாக்க முடியும். அதன் செயல்படும் வேகத்தைத் தவிர, இது மிகவும் நம்பகமானது தவறுகளை பொறுத்துக் கொள்ளக்கூடியது. இது பல தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் வாய்ப்புகளுடனான multi-masterஉடன் ஒத்திசைவற்ற பிரதிகளை ஆதரிக்கிறது. அனைத்து முனைமங்களும் சமமாக இருந்தால், தோல்வி எனும் புள்ளி எதுவும் இதிலில்லை. ஒரு முனைமத்தின் செயலிழப்பு அல்லது முழு தரவு மையமும் கூட கணினியின் கிடைக்கும் தன்மையை பாதிக்காது. இந்த ClickHouse ஆனது விதிவிலக்கான வன்பொருள் செயல்திறன் வசதி நிறைந்த SQL தரவுத்தளமாகவும், நெறியாக்கம்(vectorized) செய்யப்பட்ட வினவல் செயலாக்கம், நிகழ்நேர வினவல் செயலாக்கம் , தரவு உட்செலுத்துதல் போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல வசதிகளையும் கொண்டுள்ளது.
முக்கியவசதிவாய்ப்புகள்
வியக்கத்தக்க வகையிலான விரைவாக செயல்படக்கூடியது, தவறு-சகிப்புத்தன்மை யுடன் மிகவும் நம்பகமான, வன்பொருள் திறனுடன், நேரியலாக அளவிடக்கூடிய, பயன்படுத்த எளிதானது, உண்மையான நெடுவரிசை சார்ந்த சேமிப்பு, திசையன், இணையான , விநியோகிக்கப்பட்ட வினவல் செயலாக்கம், நிகழ்நேர வினவல் செயலாக்கம் , உள்ளூர் தரவு உட்செலுத்துதல், வன்தட்டின் குறிப்பு , இரண்டாம் நிலை தரவு-தவிர்த்தல் குறிமுறைவரிகள் , தரவு சுருக்கம் , சூடானசேமிப்பு, குளிர் சேமிப்பு ஆகியனவற்றை பிரித்தல் , SQL ஆதரவு , JSON ஆவணங்கள் வினவல் செயல்பாடுகள் , குறுக்கு தரவு மைய பிரதி , ஏற்ககூடிய ஒன்றுசேரும் வழிமுறை , செருகக்கூடிய வெளிப்புற பரிமாண அட்டவணைகள் , OLAP பணிச்சுமைகள் , OLAP பணிச்சுமைகள் மீது கவனம் செலுத்துதல் ஒருங்கிணைப்பு , S3-இணக்கமான பொருள் சேமிப்பக ஆதரவு .போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொன்டுள்ளது!
செயல்திறன் :இதுதொழில்துறை வினவல் செயல்திறனை சிறப்பாக ஆதரிக்கிறது.
அளவிடுதல்: உற்பத்தியில் சோதனை செய்யப்பட்ட ஒற்றை-சேவையக வரிசைப்படுத்தல்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான முனைகளைக் கொண்ட தொகுதிகள் வரை நேரியலாக கிடைமட்ட அளவிடுதல் வசதி கொண்டது
நம்பகத்தன்மை:வரிசைப்படுத்துதல்கள் இனங்கள் கிடைப்பதில் சிறந்த அம்சமாகும். multi-master replicationஐ ஆதரிக்கும் கட்டமைப்பு, பல-புகுதியின் உள்ளமைவுகளில் திறம்பட செயல்படுவதால், தோல்விக்கான ஒற்றை புள்ளி எதுவும் இதில் இல்லை.
பாதுகாப்பு: நிறுவன தர பாதுகாப்பு அம்சங்கள், பயன்பாட்டு பிழைகள் , மனித பிழைகள் ஆகியவற்றிலிருந்து தரவு இழப்பிற்கு எதிராக பாதுகாக்கின்ற தோல்வியை தவிர்த்திடுகினஅற-பாதுகாப்பான வழிமுறைகளுடன் வருகிறது.
பாரம்பரிய அணுகுமுறைகளை விட இதன் செயல்திறன் சந்தையில் கிடைக்கும் ஒப்பிடக்கூடிய நெடுவரிசை சார்ந்த தரவுத்தள மேலாண்மை அமைப்புகளை மீறுகிறது. இது நூற்றுக்கணக்கான மில்லியன்கள் முதல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கிடைவரிசைகள், ஒரு வினாடிக்கு ஒரு சேவையகத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஜிகாபைட் தரவுகளை செயலாக்குகிறது.
சேவையகமற்றது: நிர்வகிக்க உள்கட்டமைப்பு இல்லை, தானியங்கி அளவிடுதல் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பினை கொண்டுள்ளது
விரைவான தொடக்கம்: இதனைப் பதிவிறக்கம் செய்து இயக்கிடவும், தரவுத் தளத்தையும் அட்டவணையையும் உருவாக்கி, தரவைச் செருகவும்எளிதானது
தொழில்நுட்ப குறிப்புகள் :இதுSQL, செயல்பாடுகள், தரவுத்தள இயந்திரங்கள், அட்டவணை இயந்திரங்கள்,செயல்பாடுகள்,பலவற்றிற்கான குறிப்பு வழிகாட்டிகளை கொண்டுள்ளது
இந்த பயன்பாட்டின்பயனர்கள்
Uber 3x தரவு சுருக்கம், 10x செயல்திறன் அதிகரிப்பு , வன்பொருள் விலையில் ½ குறைப்பு ஆகியவற்றைக் காணும் போது Uber ஆனது அதன் பதிவு தளத்தை இந்த பயன்பாட்டின் மேம்படுத்துநர்களி் துனையுடன் தன்னுடைய உற்பத்தித்திறனையும் தளத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் அதிகரித்து கொண்டுள்ளது.
eBay இன் நிகழ்நேர OLAP நிகழ்வுகளுக்கான (பதிவுகள் + அளவீடுகள்) உள்கட்டமைப்பிற்காக இந்த பயன்பாட்டினை ஏற்றுக்கொண்டது. இந்த பயன்பாட்டின் உடனான எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு, அவர்களின் DevOps செயல்பாட்டினையும், சரிசெய்தலையும் குறைக்க அனுமதித்தது, ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை 90% குறைத்தது, மேலும் அவர்கள் காட்சிப்படுத்தலுக்கும் விழிப்பூட்டலுக்காகவும் Grafana, ClickHouse ஆகியவைைகளுடன் வலுவான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளனர்.
Cloudflare இல் CitusDB-அடிப்படையிலான அமைப்பை அளவிடுவதில் சவால்களை எதிர்கொண்டது, இது சிக்கலான கட்டமைப்பு காரணமாக அதிக TCOவும் பராமரிப்பு செலவுகளையும் கொண்டிருந்தது. அவர்களின் HTTP பகுப்பாய்வுத் தரவை இந்த ClickHouse க்கு நகர்த்துவதன் மூலம், அவர்களால் வினாடிக்கு 8M கோரிக்கைகளை அளவிட முடிந்தது, 10 ஆயிரம் கோடி அளவிலான குறிமுறைவரிகளை நீக்கியது, MTTR ஐக் குறைத்தது, மேலும் வாடிக்கையாளர் வினவல்களில் வினாடிக்கு 7x முன்னேற்றத்தைக் கண்டது.
Spotify இன் A/B பரிசோதனைத் தளமானது இந்த பயன்பாட்டுடன் பெட்டாபைட் அளவிலான தரவுத்தொகுப்புகளில் வினாடிக்கு ஆயிரக்கணக்கான துணை வினாடி வினவல்களை வழங்குகிறது. அவை குறைந்த-மாறுபாடு பணிகளின் அளவை ஒரு வரிசையின் மூலம் குறைத்து, தரவுதளத்திற்கான ஒருங்கிணைந்த SQL இடைமுகத்தையும் , பரிசோதனைக்கான தானியங்கி முடிவெடுப்பதற்கான கருவிகளையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், சுய-சேவை நுண்ணறிவு வசதியுடனானக் குழுக்களை செயல்படுத்திடுகின்றது.
Deutsche Bank இல் இது வாடிக்கையாளர்களின் செயல்பாடு இலாபம் பற்றிய தெளிவான பார்வையைவழங்குகின்றது இந்த வங்கியின் அலுவலகத்தின் முகப்புக்கத்திற்கு வழங்கி, அறிக்கையிடல், ஆழ்ந்ததரவு பகுப்பாய்வு,மேம்பட்ட தரவு அறிவியலுக்கான வாடிக்கையாளக் ஆய்வு தளத்திற்கு உதவுகிறது.

இதுApache License V2.0 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் ,https://clickhouse.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Decaleonஎனும் பன்மொழி மொழிபெயர்ப்பாளர்

Decaleonஎன்பது ஒரு பன்மொழி மொழிபெயர்ப்பாளர் ஆகும் ,இது சொல்லகராதி யாகவும், சொல்லகராதி பயிற்சியாளராகவும் திகழ்கின்றது இது XML அடிப்படையில் 12 மொழிகளில் இருந்து சொற்களின் மொழிபெயர்ப்பாளராகVB.NET செயல்திட்டத்திற்கு மொழிபெயர்ப்பு செய்கிறது இது ஒவ்வொரு மொழியிலும் 30,60,000 சொற்களை: ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், போர்டோக் மொழிகளுக்கான விரிவாக்கக்கூடிய சொற்களஞ்சியமாக அமைந்துள்ளது , டேனிஷ், ஸ்வீடிஷ், கிரேக்கம், ரஷியன், போலந்து குரோஷியன் சூழல் ஆகிவற்றுடன்ஒத்த தரவு சொற்பொருள் குழு தகவல் உட்பட. பலவற்றினை கொண்டது
இதில் ஒரு பன்மொழி அகராதிக்கும் சொல்லகராதி பயிற்சியாளருக்கும் (கற்றல் சொற்பொருள் குழுக்கள்) UTF8/Unicode எழுத்துக்களைப் பயன்படுத்திகொள்கிறது; இது உரை, HTML, TeX, PDF கோப்புகளில் பதிவேற்றிடும் வசதிகொண்டது; இதில்பிற சொல்லகராதி பயிற்சி மென்பொருளில் உரை கோப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதனுடைய பதிப்பு 6.0 ஆனது நிலையான சொற்களை ஒரு பெரிய கூடுதல் வசதியாக வழங்குகிறது அதனோடு கூடுதலாக மேலும்23 மொழிகளை ஆதரிக்கிறது; ஆசிய மொழிகளுக்கான ஒரு சிறிய சொற்களஞ்சியமாகவும் இது திகழ்கின்றது.
பயன்பாட்டில் உள்ள Sourceforge Project TEXminer ஆனது Text Miningக்கு அதே XML தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதுடன்.மேம்படுத்துதலில் கூட்டுறவுதன்மை கொண்டுள்ளது. உரையாக்கம் செய்வதற்கான கூடுதலான பல்வேறு வசதிவாய்ப்புகளை தன்னகத்தேகொண்டுள்ளது

Previous Older Entries