Advanced Gtk+ Sequencerஎனும் பயன்பாடு

 

AGS என சுருக்கமாக அழைக்கப்பெறும் மேம்பட்ட GTK+ வரிசைமுறை எனும் பயன்பாடானது இசை அமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பியானோ ரோல் ,synth, அணிகளின்பதிப்பாளர், தட்டும் இயந்திரம், ஒலிஎழுத்து2 இசைப்பான், கலவையானதும் வெளயீடுமான பலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது மிகவும் கட்டமைக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன் விளைவுச்சங்கிலியில் விரும்பினால் நாம் நம்முடைய விளைவுகளைச் சேர்க்கலாம், ஒலிஅலைவரிசைகள்/அட்டைகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். நாம் விரும்பினால் இந்த இயந்திரங்களின் முழு செயல்பாட்டு வலைபின்னல்களை அமைக்கலாம், எனவே ஒலிப்பாதைகளை இணைப் பதற்கான இணைப்பு பதிப்பாளர் இதில் உள்ளது. இதற்காக நிகழ்நேர உருவாக்கமையம், alsa ஆகிய ஆதரவு தேவையாகும். பல இழைகளை ஒத்திசைவில் வைத்திருக்க இந்த AGSஎனும் பயன்பாடானது நிபந்தனை பூட்டுகளைப் பயன்படுத்துகிறது, அதனால்தான் நமக்கு குறைந்த பட்சம் ஒரு முன்கூட்டியே உருவாக்க மையம் தேவையாகும்.
இது LADSPA, DSSI , Lv2 ஆகிய செருகுநிரல் வடிவமைப்பை ஆதரிக்கின்ற விரிவான இழைகளைப் பயன்படுத்துகிறது.
மேம்பட்ட GTK+ வரிசைமுறை எனும் பயன்பாட்டில்  பல அலைவரிசைகளை திருத்தம் செய்யும் திறன் கொண்டது, இது ஒரு தானியங்கியான பதிப்பாளரைக் கொண்டுள்ளது மேலும் ஒலி கோப்புகளுக்கு நேரடி பதிவேற்றம் செய்திட  விரும்பினாலும் அதன்படி செயற்படுத்திடலாம். இதில் வரிசைமுறை இயந்திரங்களும் முழு வசதியுடனான குறிப்பெழுத்து பதிப்பாளரும் உள்ளன. இதுநகலெடுத்து ஒட்டுதல், ஒலி அலைவரிசைகளை மறுஅளவிடுதல் அல்லது உள்ளீடு வெளியீடு அட்டைகளை சீரமைத்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
ALSA மூலம் GSequencer இன் GNU/Linux இல் ஒலியை வெளியீடு செய்கிறது. இதில் Arts,,esd அல்லது துடிக்கும் ஒலி போன்ற ALSA இல் கூடுதல் அடுக்குகளைத் தவிர்த்திடுக. ஒலி அட்டைக்கான வெளியீடு பொதுவாக AgsPanel  sink மூலம் செய்யப்படுகிறது. ஒலிகள் AgsDrum, AgsMatrix, ஒரே மாதிரியான வரிசைமுறைகளால் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய ஆதாரங்களை AgsMixer மூலம் தொகுக்கலாம் , இறுதியாக Ags Play Channel Run recal மூலம் வன்பொருளுக்கு எழுதலாம்
முக்கிய வசதிவாய்ப்புகள்
    XPath ஆதரவுடன் இந்த மேம்பட்ட GTK+ வரிசைமுறை எனும் பயன்பாடானது XML கோப்புகளைச் சேமிக்கவும் அல்லது திறக்கவும் செய் கின்றது.   சரிசெய்யக்கூடிய ஒலி அலைவரிசைகளை, அட்டைகளுடன் ஒலி இயந்திரங்களைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும் செய்யலாம் propertyஎனும் உரையாடல் பெட்டியுடன் அலைவரிசைகளை இணைக்கலாம் . WAV, FLAC, OGG போன்ற பிறவற்றிற்கு பதிவேற்றம் செய்யலாம் நகலெடுத்தல் & ஒட்டுதல் வசதி கொண்ட அலை படிவ பதிப்பாளர் வசதி கொண்டது .  AgsAudiorec இயந்திரம் மூலம் ஒலியைப் பிடிக்கலாம் .இதில்  MIDI கருவி உள்ளீடு கொண்டது.இது  நிலையான MIDI கோப்புகளுக்கு பதிவிறக்கம்/பதிவேற்றும் வசதி கொண்டது OSC உள்ளடக்க வடிவமைப்பு ஆதரவு, தொலைநிலை  கட்டுபாடு கண் காணிப்புக்கான OSC சேவையாளர் வசதி ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டது

இந்த Advanced GTK+ Sequencer எனும் திறமூல பயன்பாடானது(GPLv3)எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும்   http://www.nongnu.org/gsequencer/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

PaddlePaddle எனும்இணையாக விநியோகிக்கப்படும் ஆழ்கற்றல்: இயந்திர கற்றல் சட்டகம்

துடுப்பு துடுப்பு(PaddlePaddle) என்பதுசீனாவில் உள்ள சுதந்திரமான R&D ஆழ்கற்றல் தளமாக, 2016 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை சமூகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது முக்கிய ஆழ்கற்றல் கட்டமைப்புகள், அடிப்படை மாதிரி நூலகங்கள்,, இறுதி-மேம்பட்ட தொழில் நுட்பங்கள்  அதிக வசதிகளை உள்ளடக்கிய ஒரு தொழில்துறை தளமாகும். இரு முடிவுகளுக்கு இடையில்end-to-end மேம்படுத்திடும் கருவிகள், கருவிகளும் & கூறுகளும் , சேவை தளங்கள் ஆகிய பலவற்றையும், மாறும்வரைபடங்கள்  நிலையான வரைபடங்கள் ஆகியவற்றிற்கான ஆதரவுகளை உள்ளடக்கியது. இது தொழில்மயமாக்கலுக்கான அர்ப்பணிப்பும் அர்ப்பணிப்புகளுடனான தொழில் துறை நடைமுறைகளிலிருந்து உருவானது. இது2.3 மில்லியனுக்கும் அதிகமான மேம்படுத்துநர்களுக்கு சேவை செய்யும் அதே வேளையில், உற்பத்தி, வேளாண்மை, நிறுவன சேவை போன்ற பல துறைகளில்  இதனுடைய சேவை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நன்மைகளுடன், இது அதிக எண்ணிக்கையிலான கூட்டாளிகளுக்கு AI ஐ வணிகமயமாக்க உதவியுள்ளது.
இது ஒரு திற மூல ஆழ்கற்றல் தொழில்துறை தளமாகும், இது மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் , புதுமையாக , ஆழ்கற்றலின் பயன்பாட்டை எளிதாக்கும் பல வசதிகளைக் கொண்டுள்ளது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
தொழில்துறை வளர்ச்சிக்கான சுறுசுறுப்பான ஆழ்ந்தநரம்புபின்னல்போன்ற வலைபின்னல்களின் கட்டமைப்பு கொண்டது உயர் அதியுயர்அளவு Ultra-Large-Scale பயிற்சிக்கு ஆழ்ந்தநரம்புபின்னல்போன்ற வலைபின்னல்களின் ஆதரவு கொண்டது. எங்கும் நிறைந்த வரிசைப்படுத்துதல்கள் மீது துரிதப்படுத்தப்பட்ட உயர் செயல்திறன் அனுமானம் கொண்டது.தொழில் சார்ந்த மாதிரிகள் , திறமூலக் களஞ்சியங்கள் கொண்ட நூலகங்களை கொண்டது இது பின்வரும் நான்கு முன்னணி தொழில்நுட்பங்களை கொண்டது
1.தொழில்துறை வளர்ச்சிக்கான சுறுசுறுப்பான ஆழ்ந்தநரம்புபின்னல்போன்றவலைபின்னல்களின் கட்டமைப்பு கொண்டது
இதனுடைய ஆழ்கற்றல் கட்டமைப்பானது, நரம்புபின்னல்போன்ற வலை பின்னல்களை உருவாக்குவதற்கு நிரல்படுத்தக்கூடிய செயல்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப சுமையை குறைக்கும் அதே வேளையில் வளர்ச்சியை எளிதாக்குகிறது. இது மேம்படுத்துதல் நெகிழ்வுதன்மை உயர் இயக்கநேர செயல்திறன் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட்ட அறிவிப்பு நிரலாக்கம் கட்டாய நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. நரம்புபின்னல்போன்ற கட்டமைப்புகள் மனித நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டதை விட சிறந்த செயல்திறன் கொண்ட தருக்கங்களால் தானாகவே வடிவமைத்திட உதவகின்றது 2.இது தீவிர-பெரிய அளவிலான ஆழமான நரம்புபின்னல் போன்ற வலைபின்னல்களின் பயிற்சியில் முன்னேற்றங்களைச் செய்துள்ளது. நூற்றுக்கணக்கான முனைமங்களில் விநியோகிக்கப்பட்ட தரவு மூலங்களைப் பயன்படுத்தி 100 பில்லியன் கணக்கிலான வசதிகளும் டிரில்லியன் கணக்கிலான அளவுருக்கள் கொண்ட ஆழ்ந்த வலைபின்னல்களின் பயிற்சியை ஆதரிக்கின்ற உலகின் முதல் பெரிய அளவிலான திறமூல பயிற்சி தளத்தை இது அறிமுகப் படுத்தியது. இது தீவிர பெரிய அளவிலான ஆழ்கற்றல் மாதிரிகளுக்கான இணையத்தின் ஆழ்கற்றல் சவால்களை முறியடிக்கிறது, மேலும் 1 டிரில்லி யனுக்கும் அதிகமான அளவுருக்கள் கொண்ட நிகழ்நேர மாதிரி புதுப்பிப்பை மேலும் சாதித்துள்ளது 3.விரிவான வரிசைப்படுத்தல் சூழல்களுக்கான உயர்-செயல்திறன் அனுமான இயந்திரங்கள் இது மூன்றாம் தரப்பு திறமூல கட்டமைப்பில் பயிற்சியளிக்கப்பட்ட மாதிரிகளுடன் இணக்கமாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு தயாரிப்பு காட்சிகளுக்கான முழுமையான அனுமான தயாரிப்பு களையும் வழங்குகிறது. அனுமான தயாரிப்பு வரிசையில் இதனுடைய அனுமானமும் அடங்கும்: உயர் செயல்திறன் சேவையாளர் ,மேககணினி அனுமானத்திற்கான சொந்த அனுமான நூலகம்; இதனுடையப்பு சேவை: விநியோகிக்கப்பட்ட , குழாய்வழிபாதை தயாரிப்புகளுக்கு ஏற்ற சேவை சார்ந்த கட்டமைப்பு கொண்டது; இதனுடைய இலகுரக தன்மையானது : கைபேசி ,IoT சூழல்களுக்கான மீச்சிறுஎடை அனுமான இயந்திரம்;இணையஉலாவி, மீச்சிறு பயன்பாடுகளுக்கான ஒரு முன்நிலை அனுமான இயந்திரமாக அமைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் முன்னணி வன்பொருளுடன் சிறந்த அளவு மேம்படுத்தல் மூலம், துடுப்பு அனுமானம் இயந்திரங்கள் மற்ற முக்கிய கட்டமைப்புகளை விட சிறப்பாக செயல்படுகின்றன.
4.தொழில் சார்ந்த மாதிரிகளும் திறமூலக் களஞ்சியங்கள் கொண்ட நூலகங்கள் இது, தொழில்துறையில் நீண்ட காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு மெருகூட்டப்பட்ட 100 க்கும் மேற்பட்ட முக்கிய மாதிரிகளை உள்ளடக்கி பராமரிக்கின்றது. இந்த மாதிரிகளில் சில முக்கிய சர்வதேச போட்டிகளில் இருந்து பெரிய பரிசுகளை வென்றுள்ளன. இதற்கிடையில், தொழில்துறை பயன்பாடுகளின் விரைவான வளர்ச்சியை எளிதாக்குவதற்கு இது மேலும் 200 க்கும் மேற்பட்ட முன் மாதிரிபயிற்சிகளைக் கொண்டுள்ளது (அவற்றில் சில மூலக் குறிமுறைவரிகளுடன்).

இந்த PaddlePaddle எனும் திறமூல பயன்பாடானதுApache License V2.0எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் GitHub com/ PaddlePaddle// எனும் இணையதளமுகவரிக்கு செல்க


	

Videohash எனும் பைதான் நூலகம்

கானொளிநிலைத்தகாட்சிVideohash என்பது கிட்டத்தட்ட நகல் கானொளி காட்சிகளைக் கண்டறிவதற்கான பைதான் நூலகமாகும் (நிலைத்த கானொளிகாட்சியை துண்டாடுதல்). இந்தத் தொகுப்புடன் 64-பிட்டிற்கு சமமான நிலைத்த காட்சி hash மதிப்பை உருவாக்க எந்தவொரு கானொளிகாட்சியின் உள்ளீட்டையும் பயன்படுத்தலாம்.
ஒரே மாதிரியான அல்லது கிட்டத்தட்ட நகல் கானொளி காட்சிகளுக்கான கானொளியின் நிலைத்தகாட்சி மதிப்புகள் ஒரே மாதிரியானவை அல்லது ஒருநிலையிளானவை, அதாவது கானொளிகாட்சியின் அளவு மாற்றப்பட்டால் (அதிகப்படுத்துத/குறைக்கப்படுதல்), குறியீடுமாறுதல் செய்யப்பட்டால், தாள் அடையாளம் சேர்க்கப்பட்டது/அகற்றப்பட்டது, நிலைப்படுத்தப்பட்டது, நிறம் மாற்றப்பட்டது, காட்சி வீதம் மாற்றப்பட்டது, வசதி மாற்றப்பட்டது விகிதம், சிறிது செதுக்கப்பட்டது, கருப்பு பட்டைகள் சேர்க்கப்பட்டது அல்லது அகற்றப்பட்டது, ஆகிய கானொளி காட்சியின் அனைத்திலும் நிலைத்தகாட்சி-மதிப்பு மாறாமல் இருக்க வேண்டும் அல்லது கணிசமாக வேறுபடக்கூடாது.
இந்நிலையில்கானொளியில் நிலைத்த காட்சி மதிப்புகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன எனும் கேள்வி மனதில் எழும் நிற்க
ஒவ்வொரு நொடியும், உள்ளீட்டு கானொளிகாட்சியில் இருந்து ஒரு சட்டகம் பிரித்தெடுக்கப்படுகிறது, சட்டகங்கள் 144x144 பிக்சல் சதுரமாக சுருங்குகிறது, பின்னர் ஒரு படத்தொகுப்பு உருவாக்கப்படுகிறது, அதில் அனைத்து அளவு மாற்றப்பட்டசட்டகங்கள் (சதுர வடிவிலானவை), அசல் உள்ளீட்டு கானொளி காட்சிக்கு படத்தொகுப்பில் சிற்றலையின் கானொளி காட்சி நிலைத்தகாட்சி மதிப்பைக் கொண்டுள்ளது .இந்த Videohash எனும் பயன்பாட்டினை எப்போது பயன்படுத்தக்கூடாது
எனும் இரண்டாவதாக ஒருகேள்வி மனதில் எழும் நிற்க ஒரு கானொளி காட்சியானது மற்றொன்றின் பாகமா என்பதைச் சரிபார்க்க இந்த Videohashஎனும் பயன்பாட்டினைப் பயன்படுத்த முடியாது (கானொளி காட்சியின் கைரேகை). கானொளி காட்சி கணிசமான கோணத்தில் (10 டிகிரிக்கு மேல்) தலைகீழாக மாற்றப்பட்டால் அல்லது சுழற்றப்பட்டால், இந்த பயன்பாடானது அதே அல்லது ஒத்த நிலைத்த காட்சிமுடிவை வழங்காது, ஆனால் எப்போதும் கானொளி காட்சியை கைமுறையாக மாற்றியமைக்கலாம் தலைகீழ் கானொளி காட்சிக்கு நிலைத்த காட்சிமதிப்பை உருவாக்கலாம்.
முக்கிய வசதிவாய்ப்புகள்
கானொளிகாட்சியின் இணையமுகவரிURL அல்லது அதன் பாதையில் இருந்து நேரடியாக கானொளி காட்சி நிலைத்த காட்சியை உருவாக்கலாம். இரண்டாம் படி கானொளி காட்சியை மீட்டெடுப்பிற்கு அருகில் அளவிடக்கூடியதை செயல்படுத்த பயன்படுத்தலாம். இறுதிப் பயனாளர் கானொளி காட்சியின் படப் பிரதிநிதித்துவத்தை (படத்தொகுப்பு) அணுகலாம்.இதனுடைய நிகழ்வை 64-பிட் சேமிக்கப்பட்ட நிலைத்த காட்சி, அதன் அறுகோணம்hex பிரதிநிதித்துவம், எண்ம பட்டி, பிற கானொளிகாட்சி நிலைத்தகாட்சி நிகழ்வுகளுடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு சட்டகத்தையும் தனித்தனியாக ஒப்பிடும் பழைய முறையை விட வேகமானது. இது குறிப்பிடத்தக்க அளவு தரவுத்தள இடத்தை சேமிக்கிறது. மேலும் தேவையான ஒப்பீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது.

மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் https://github.com/akamhy/videohash எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

ஒத்திசைவு( Syncthing)எனும் திறமூல பயன்பாடு

ஒத்திசைவு( Syncthing) என்பது தொடர்ச்சியான கோப்பு ஒத்திசைவிற்கான ஒரு திறமூல  பயன்பாடாகும், இது நிகழ்நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளுக்கு இடையில் கோப்புகளை ஒத்திசைவுசெய்வதன் மூலம் செயல்படுகிறது. இது பயனாளர்களின் தரவைப் பாதுகாப்பாகவும், தரவு இழப்புக்கு எதிராகவும், இந்தத் தரவை சட்டவிரோதமாக  அணுகிடும் தாக்குதலுக்கு எதிராகவும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய கணினிகளைத் தவிர வேறு எங்கும் தரவைச் சேமிக்காது , நம்முடைய எல்லா தரவையும் பாதுகாக்க மறையாக்கத்தைப் பயன்படுத்து கிறது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது, குறுக்கு-தளமாகவும் தானியங்கி யாகவும் செயல்படும் திறன்மிக்கது. எனவே, இது மிகவும் பயனாளர் நட்புடன் கூடிய பாதுகாப்பான , பயன்படுத்த எளிதான கோப்பு ஒத்திசைவு தீர்வைத் தேடுகின்ற அனைத்து பயனர்களுக்கும் ஏற்றதாக திகழ்கின்றது.
இந்த பயன்பாடானது கோப்பு பதிப்பினை சரிபார்த்தல், இடைமாற்றீடுசெய்தல், கோப்புகளை புறக்கணித்தல் போன்ற பலவற்றை ஆதரிக்கிறது. பயனாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு கட்டமைப்புகள் வெவ்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றது.
ஒத்திசைவு Syncthing என்பது பின்வருவனவற்றிற்கு பயனுள்ளதாகும்:
1. தரவு இழப்பிலிருந்து பாதுகாப்பானது பயனாளரின் தரவைப் பாதுகாப்பது மிக முக்கியமான பணியாகும். பயனரின் கோப்புகள் சிதைவதைத் தவிர்ப்பதற்கு இது நியாயமான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கின்றது.
2. தாக்குதல் தொடுப்பவர்களுக்கு எதிராக பாதுகாப்பு , பயனாளரின் தரவைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என மீண்டும் அறிவிக்கின்றது. இதனுடைய மற்ற இலக்குகளைப் பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்படாத தரப்பினரால் ஒட்டுக்கேட்டல் அல்லது மாற்றியமைத்தல் போன்றவற்றுக்கு பயனாளரின் தரவை ஒருபோதும் அனுமதிக்காது.
3. பயன்படுத்த எளிதானது இந்த பயன்பாடு எளிதாக அணுகக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் , உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது.
4. தானியங்கி செயல் முற்றிலும் தேவைப்படும் போது மட்டுமே பயனாளர் தொடர்பு கொண்டு செயல்படுத்திடுமாறும் மற்றநேரத்தில்தானியங்கியாக செயல்படுமாறும் செய்யப்பட்டுள்ளது.
5. உலகளாவிய அளவில் கிடைத்தல் பொதுவான ஒவ்வொரு கணினியிலும் இந்த பயன்பாடு இயங்குகின்ற திறன்மிக்கது. எந்தவொரு தனிநபருக்கும் சமீபத்திய தொழில்நுட்பம் எப்போதும் கிடைக்காது என்பதை நினைவில் கொண்டு செய்ல்படுகின்றது.
6. தனிநபர்களுக்கு இது முதன்மையாக தனிப்பட்ட பயனாளருக்கு பாதுகாப்பான, பயன்படுத்த எளிதான கோப்பு ஒத்திசைவு மூலம் மேம்படுத்துதல் செய்கின்றது.
7. மற்றவை மேலே பட்டியலில் இடம் பெறாத பல செய்திகள் இதனிடம் உள்ளன. மேலே கூறப்பட்ட இலக்குகளுடன் முரண்படாத வரை, இந்த மதிப்புகளை மேம்படுத்துவது நல்லது.
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்
இதுதனித்து செயல்படக்கூடியது பாதுகாப்பானது -நம்முடைய கணினிகளில் மட்டுமே கோப்புகளை சேமிக்கும் தன்மை கொண்டது தரவைப் பாதுகாக்க மறையாக்கம் செய்கின்றது.மறையாக்க வரைகலை சான்றிதழ் மூலம் முனைம அங்கீகாரம் கொண்டது. நமக்குத் தேவையான பல கோப்புறைகளை ஒத்திசைவாக செயல்படுத்திடுகின்றது. அனைத்து இயக்கமுறைகளிலும் குறுக்குதளத்துடனும் செயல்படுகின்ற திறன்மிக்கது .வளாகபிணையம் , இணையம் ஆகியவற்றின் வழியாக செயல்படுகின்ற திறன்மிக்கது

இந்த Syncthing எனும் திறமூல பயன்பாடானது (MPL 2.0)எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் https://github.com/syncthing/syncthing எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

Metabase எனும் திறமூல பயன்பாடு

எந்தவொரு நிறுவனத்திலுமுள்ள அனைவருக்கும் வணிக நுண்ணறிவுடன் பகுப்பாய்வுகளைப் பெறுவதற்கான எளிய, விரைவான வழியாகவும், வெளிநபர் அனைவரும் வணிகத் தரவு , பகுப்பாய்வுகளை அணுகவும், அதிலிருந்து கற்றுக் கொள்ளவும், கேள்விகளைக் கேட்பதற்கும் எளிதான வழியாகவும் நம்முடைய நிறுவனத்தின் உள்ள மீப்பெரும்தரவுதளMetabase திகழ்கின்றது. நமக்கோ அல்லது நம்முடைய சக ஊழியர்களுக்கோ SQL இல் அனுபவம் இல்லா விட்டாலும், பரவாயில்லை இதனை கொண்டு தரவை எளிதாக சுருக்கி, காட்சிப்படுத்தலாம், அதைப் பகிரலாம் குழுவில் அதனைப் பற்றி கேள்விகளைக் கேட்கலாம்.
இதுஅழகான வரைபடங்களையும் , விளக்கப்படங்களையும் உருவாக்க உதவுகிறது, பயன்படுத்த எளிதான முகப்புபக்கத்துடன், அனைவரும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்ட இதனை கொண்டு தேவையான தரவை எளிதாக உருவாக்கலாம், ஒழுங்கமைக்கலாம் , பகிர்ந்துகொள்ளலாம். இது Postgres, MySQL, Druid, MongoDB, SQLite ,போன்ற பலவற்றை உள்ளடக்கிய ஏராளமான தரவுத் தளங்களை ஆதரிக்கிறது. இதனை பயன்படுத்தி கொள்வதற்கான அமைவு செய்வது உண்மையில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.

முக்கியவசதிவாய்ப்புகள். பயன்படுத்த எளிமையான விரைவான அமைப்பினை கொண்டது .SQL பற்றிய தெரியாதவர்கள் கூட இதனுடைய உதவியுடன் அனைவரையும் கேள்விகள் கேட்கலாம். தானாக புதுப்பித்தல் திறன்கொண்ட,முழுத்திரை வாய்ப்புடன் கூடிய மீப்பெரும் முகப்புதிரைளை கொண்டுள்ளது. ஆய்வாளர்களுக்கும் , தரவு சாதகங்களுக்குமான SQL பயன்முறையை கொண்டுள்ளது இதன்மூலம் நியமன பிரிவுகளையும் அளவீடுகளையும் எளிதாக உருவாக்கலாம். அட்டவணை , மின்னஞ்சல் அல்லது அடுக்கு Slackமூலம் விளக்கப்படங்கள் அல்லது முடிவுகளை அனுப்பமுடியும். அடுக்கில்Slack எந்த நேரத்திலும் தரவைப் பார்க்க இதனுடைய Metabot என்பது நம்மை அனுமதிக்கிறது .இது தரவை மனிதமயமாக்குவதற்கான வாய்ப்புடையது விழிப்பூட்டல்களின் வாயிலாகநம்முடைய தரவுகளில் ஏற்பட்ட மாற்றங்களைக் காண இதுஉதவுகிறது
Docker
வழியாக இதனை இயக்கி பயன்படுத்தி கொள்வதற்காக, பின்வருமாறு கட்டளைவரியை தட்டச்சு செய்திடுக
docker run -d -p 3000:3000 --name metabase metabase/metabase
ஒரு JAR கோப்பு வழியாக இதனை இயக்குவதற்காக, நம்முடைய கணினியில் Java Runtime Environment நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
HotSpot JVM , x64
கட்டமைப்புடன் AdoptOpenJDK இலிருந்து JRE இன் சமீபத்திய LTS பதிப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது, ஆனால் பிற ஜாவா பதிப்புகளும் செயல்படக்கூடும்.
இதனுடைய பதிவிறக்கப் பக்கத்திற்குச் சென்று சமீபத்திய வெளியீட்டைப் பதிவிறக்கம்செய்திடுக. பதிவிறக்கம் செய்யப்பட்ட JAR கோப்பை இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென புதிதாக உருவாக்கப்பட்ட கோப்பகத்தில் வைத்திடுக (து இயங்கும் போது சில கோப்புகளை உருவாக்கும்), பின்வரும் கட்டளையுடன் அதை இயக்கிடுக:

java -jar metabase.jar
இப்போது, ஒரு இணைய உலாவியைத் திறந்து, http://localhost:3000 க்குச் செல்க, ஒரு பயனாளர் கணக்கை அமைக்கின்ற கேள்விகளின் தொகுப்பு நம்மிடம் கேட்கப்படும், பின்னர்  ஒரு தரவுத்தள இணைப்பைச் சேர்க்கலாம். இது செயல்படுவதற்காக, நாம் எந்த தரவுத்தளத்துடன் இணைக்க விரும்புகின்றோம் என்பது பற்றிய சில தகவல்களைப் கூ வேண்டும், அதாவது புரவலரின் பெயர் அது இயங்கும் வாயில், தரவுத்தளத்தின் பெயர் , நாம் பயன்படுத்தவிருக்கின்ற பயனாளரின் பெயர், கடவுச்சொல் ஆகியவைகளாகும்.
இந்த இணைப்பைச் சேர்த்தவுடன், பயன்பாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவோம், மேலும் நம்முடைய முதல் கேள்வியைக் கேட்க நாம் தயாராகிவிடலாம்.மேலும் விரிவான ஒத்திகைக்கு, இந்த பயன்பாட்டினை துவங்குவதற்கான வழிகாட்டியைப் பார்வையிடுக. ,

இந்த Metabase எனும் திறமூல பயன்பாடானது (GPLv3)எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் https://github.com/metabase/metabaseஎனும் இணையதளமுகவரிக்கு செல்க.


	

GenX எனும் கட்டற்ற பயன்பாடு

GenX என்பது, முதன்மையாக, X-ray, நியூட்ரான் பிரதிபலிப்புத் தரவு, சமீபத்தில் மேற்பரப்பு x-rayஇன் வேறுபாட்டுடனான தரவைப் பொருத்துவதற்கான வேறுபட்ட பரிணாம தருக்கத்தைப் பயன்படுத்துகின்ற ஒரு பல்துறை பயன்பாடாகும். வேறுபட்ட பரிணாம தருக்கம் என்பது ஒரு வலுவான தேர்வுமுறை முறையாகும், இது வளாக minima வைத் தவிர்க்கிறது, ஆனால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த GenX ஆனது பைத்தான் எனும் கணினிமொழியால் எழுதப்பட்டுள்ளது , வரைகலை பயனர் இடைமுகத்திற்கு (GUI) இது wxpython எனும் தொகுப்பைப் பயன்படுத்துகிறது. பொருந்தும் மாதிரியான GUI ஆனது செருகுநிரல் மூலமாகவோ அல்லது பைதான் உரைநிரல் மூலமாகவோ வரையறுக்கப்படுகிறது. எல்லாவற்றையும் உரைநிரல் செய்வதற்கான சாத்தியம் முற்றிலும் புதிய பொருத்தியின் மாதிரியை உருவாக்குவதை எளிதாக்குகிறது. மிகவும் தெளிவாக, இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இது மிகவும் பொருத்தமான சிக்கல்களுக்கு மாதிரிகள் செருகுநிரல்களுடன் நிரலை நீட்டிப்பதை சாத்தியமாக்குகிறது. தற்போது இது எக்ஸ்ரே , நியூட்ரான் specular பிரதிபலிப்பு, specular இல்லாத எக்ஸ்ரே பிரதிபலிப்பு, மேற்பரப்பு எக்ஸ்ரே வேறுபாடு ஆகியவற்றிற்கான மாதிரிகளுடன் அனுப்பப்படுகிறது. பழைய பதிப்பின் விரிவான விளக்கம், இதனுடை J.Applல் வெளியிடப்பட்டுள்ளது. . இடதுபுறத்தில் உள்ள இணைப்பை சொடுக்குதல் செய்வதன் மூலம் இந்த பயன்பாட்டினைபதிவிறக்கம் செய்யலாம்.
இதுGenX இரண்டு உதவி வசதிகளைக் கொண்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்க! கீழிறங்குபட்டியலின் Miscக்குச் சென்று, தேவையான உதவியை, தேர்ந்தெடுத்திடுக. உடன் ஒவ்வொரு செயலிக்கும் ஒரு சிறிய அறிமுகத்திற்கான, ஒரு புதிய சாளரம் தோன்றும்.
காந்த அமைப்புகள் (துருவப்படுத்தப்பட்ட நியூட்ரான்கள், அதிர்வு எக்ஸ்-கதிர்கள்). வேறுபட்ட பரிணாம வழிமுறையுடன் உலகளாவிய சுத்திகரிப்பு. தன்னிச்சையான மாதிரி அல்லது பயனாளர் அளவுருக்களைப் பொருத்திடுக. தீவிர நெகிழ்வுத்தன்மைக்கான உரைநிரல்கள். சிக்கலான பல அளவுருக் கட்டுப்பாடுகள்கொண்டது
GenX
எனும் இந்த திறமூல பயன்பாடானது GPLv2) எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் https://aglavic.github.io/genx/index.html எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

வேடிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்ற லினக்ஸின் சில கட்டளைகள்

Linux கட்டளை வரியானது திறனுடைய பயனாளர்கள் , sysadmin ஆகியோர்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்வதாக கட்டமைக்கப்பட்டது என நாம் எண்ணி வருகின்றோம். இருப்பினும், லினக்ஸ் என்பது கடின உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்டது என்பதை விட . கடுமையான பணிச்சுமையை குறைத்து அதனை எளிதாக்கிடும் பொருட்டு வேடிக்கைக்காக சில அன்பர்களால் நகைச்சுவையான கட்டளை வரிகளுடனும் லினக்ஸ் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை நிலவரமாகும்.அதாவது நம்முடைய கடுமையானபணிச்சுமையை குறைத்து ஓய்வாக புன்னகைக்க விரும்பும் போது, இவற்றை வைத்து விளையாட முயற்சித்திடுக.

slஎனும் கட்டளை

எந்த காரணமும் இல்லாமல், இந்தsl எனும் கட்டளையைப் பயன்படுத்தி நம்முடைய முனைமத்தின்திரை முழுவதும் ஒரு நீராவி இயந்திரத்தினை கொண்டு வரலாம். அதாவது தொகுப்பு மேலாளருடன் நீராவி இயந்திரத்தினை நிறுவுகைசெய்திடுக. எடுத்துக்காட்டாக, ஃபெடோராவில் பின்வரும்கட்டளைவரியை பயன்படுத்திடுக:

$ sudo dnf install sl

1

இந்தslஎனும் கட்டளையின் உண்மையான பயன்பாடுயாதுஎனில் எனக்குத் தெரிந்தவரை, உண்மையில் வேடிக்கைக்காக மட்டுமே.

aafire எனும் கட்டளை

aafire எனும்கட்டளையின் வாயிலாக திரையில் தோன்றிடுகின்ற அசைவூட்ட நெருப்பின் மூலம் நம்முடைய இதயத்தையும் முனைமத்தையும் சூடுபடுத்தி கொள்க. தொகுப்பு மேலாளருடன் இந்த aafire ஐ நிறுவுகைசெய்திடலாம். இதற்காக Debian, Mint, Elementary போன்ற பலலினக்ஸ் இயக்கமுறைமைகளில் பின்வருகின்ற கட்டளைவரிகளை பயன்படுத்திகொள்க:

$ sudo apt install libaa-bin

On Fedora, CentOS, and others:

$ sudo dnf install aalib

2

aafireஎனும் கட்டளையின் உண்மையான பயன்பாடுயாதுஎனில்

குழுவிடம் அல்லது முதலாளியிடம் செய்கின்ற பணிஅனைத்தும் புகை மூட்டமாகப் போகின்றது என்பதைத் தெரிவிப்பதற்கான ஒரு நுட்பமான வழியாகும்.

yes எனும் கட்டளை

இந்த yes எனும் கட்டளையானதுCtrl+C ஆகிய குறுக்குவழி விசைகளை செயல்படுத்தி வலுக்கட்டாயமாக நிறுத்தப்படும் வரை, நாம் விரும்புகின்ற உரையை முடிவற்ற தொடராக தொடர்ந்து திரையில் தோன்றிடுமாறு செய்தி டலாம். எடுத்துக்காட்டாக, yes எனும் கட்டளையுடன் Buffalo Billsஎனும் உரையைத் தெரிவுசெய்தால் திரையில் Ctrl+C ஆகிய குறுக்குவழி விசைகளை செயல்படுத்திடும் வரைBuffalo Billsஎனத் முடிவற்ற தொடராக தொடர்ந்து தோன்றிகொண்டே இருக்கின்றன அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:

$ yes Buffalo Bills

3

yes எனும் கட்டளையின் உண்மையான பயன்பாடுயாதுஎனில்உரைநிரல்களுக்கு உறுதிப்படுத்தலைப் பயன்படுத்துவதாகும், இதனால் ஒரு உரைநிரல் இடைநிறுத்தப் படுதலின் உறுதிப்படுத்தலைக் கோரும்போது, அது தானாகவே yes என்று பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, இயங்குகின்ற ஒரு உரைநிரல் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்க, அது நம்மிடம் உறுதிப்படுத்தலை கோர அடிக்கடி நிறுத்தப்படுவதற்காக:

$ foo

நிச்சயமாக இந்த கட்டளையைச் செயற்படுத்திட விரும்புகின்றோமா?

Y/n Y

அதற்காக உண்மையிலேயே உறுதியாக இருக்கின்றோமா?

y/N Y

ஆனால் உண்மையில் செயல்படு்த்திட விரும்புகின்றோமா?

y/N

கட்டளைவரிக்கு yes எனும் கட்டளையைஅனுப்புவதன் மூலம் அத்தகைய செய்திகளை தானாக ஏற்குமாறு செய்திடலாம்:

மாற்றாக, yes எனும் கட்டளையைப் பயன்படுத்தி செய்திகளைத் தானாக மறுக்குமாறு செய்திடலாம் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:

$ yes no | foo

Fortune எனும் கட்டளை

லினக்ஸில் இந்த Fortuneஎனும் கட்டளையை நிறுவுகைசெய்வதன் மூலம் கட்டளை வரியில் அதிர்ஷ்டத்தை சொல்லலாம். உண்மையில் இந்த Fortuneஎனும் கட்டளையானது ஒரு சீரற்ற , அர்த்தமுள்ள செய்தியை அச்சிடுகிறது. தொகுப்பு மேலாளருடன் Fortuneஎனும் கட்டளையை நிறுவுகை செய்வதற்கான கட்டளைவரி பின்வருமாறு:

$ sudo apt install fortune

ஃபெடோராவின்கட்டளைவரி பின்வருமாறு:

$ sudo dnf install fortune-mod

இந்த Fortuneஎனும் கட்டளை பல தரவுத்தொகுப்புகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, இலக்கியம் அல்லது அறிவியல் புனைகதை ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகலிருந்து பிரபலமான மேற்கோள்களைப் பெறலாம் அல்லது Linux பற்றிய நகைச்சுவை துனுக்குகள், குறிப்புகள் போன்ற பலவற்றிலிருந்து தேர்வு செய்யலாம். நாம் பயன்படுத்தி கொண்டுவருகின்ற லினக்ஸ் விநியோகம் என்னென்ன வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை காண களஞ்சியத்தில் $ fortune எனும் கட்டளையை கொண்டுதேடிடுக

கணினியின் இயக்கமுறைமை அமைப்புகள் அவற்றை உருவாக்குகின்ற நிறுவனங்களை ஒத்திருக்கின்றன என்பதை இதுகுறித்த ஜான்சனின் சட்டமாகும்

. $ fortuneஎனும் கட்டளையின் உண்மையான பயன்பாடுயாதுஎனில் ஒரு போலியான சீரற்ற எண்ணை உருவாக்க இந்த Fortune எனும் கட்டளையைப் பயன்படுத்தலாம். மறையாக்கவரைகலையாகப் பாதுகாப்பதற்குப் போதுமான entropy இல்லை, ஆனால் எதிர்பாராத எண் தேவைப்படும்போது, எழுத்துக்கள் அல்லது சொற்களை பின்வருகின்ற கட்டளவரிகளை போன்று எண்ணிக்கை செய்திடலாம்:

$ fortune | wc –chars

38

$ fortune | wc –words

8

$ fortune | wc –chars

169

Lolcat எனும் கட்டளை

இது கோப்புகளை அல்லது செந்தரமான உள்ளீட்டையும் செந்தரமான வெளியீட்டினையும் (பொதுவான cat போன்று) இணைக்கின்ற ஒரு நிரலாகும், மேலும் அதில் வானவில்லின் வண்ணத்தை சேர்க்கிறது. மற்ற கட்டளைகளின் வெளியீட்டை lolcat க்கு வழிசெலுத்தலாம், இது முடிவாக திரையில் வானவில் சாயலை வழங்குகிறது. அதன் உதவி வெளியீட்டிற்கான lolcat -h இன் முடிவுபின்வருமாறு :

4

Figlet , banner எனும் கட்டளைகள்

இவ்விரு கட்டளைகளும் எளிய ASCII உரை பட்டிகைகளை உருவாக்க நம்மை அனுமதிக்கின்றன. CentOS அமைப்பிற்கான உரை பட்டிகையின் (banner ) கட்டளைவரி பின்வருமாறு:

$ figlet centos.com

5

P ipe figlet இன் lolcat இற்கு வண்ணமயமான பட்டிகையின்கட்டளைவரி பின்வருமாறு: :

$ figlet centos.com | lolcat

6

Hello World எனும் பட்டிகையின்கட்டளைவரி பின்வருமாறு:

$ banner Hello World

7

Figlet , bannerஆகிய கட்டளைகளின் உண்மையான பயன்பாடுயாதுஎனில்

இவ்விரண்டும் பயனாளர்கள் எந்த அமைப்பில் உள்நுழைகிறார்கள் என்பதை நினைவூட்டுவதற்கான எளிதான வழிகளாகும், பல இயக்கமுறைமைநிருவாகிகள், வலை வடிவமைப்பாளர்கள் , மேககணினி மேம்படுத்துநர்கள் செய்வது போல, டஜன் கணக்கான சேவையாளர்களுடன் பணிபுரியும் போது இது பேருதவியாக இருக்கின்றது.

Espeak எனும் கட்டளை

லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியில் espeak எனும் கட்டளையை நிறுவுகைசெய்வதன் மூலம் கட்டளை வரியில் வேடிக்கையான பேச்சுத் திறனை சேர்க்கலாம்.. இந்த espeak எனும் கட்டளை நிறுவுகை செய்யப்பட்டதும், கணினியில் ஒலியளவை அதிகரிக்கவும் நம்முடைய கணினியானது நம்முடன் பேசுவதைக் கேட்டு மகிழ்ந்திடுக. Espeak என்பது ஒரு மென்பொருள் பேச்சொலியின்தொகுப்பி( synthesizer) ஆகும், மேலும் சில வேறுபட்ட குரல் நூலகங்கள் உள்ளன.

$ espeak "Linux is the best operating system."

வேடிக்கையான கட்டளைகள்: அனைத்து சாத்தியக்கூறுகளையும் மறு செய்கைகளையும் ஆராய இந்தக் கட்டளைகளின் செயல்விளக்க பக்கங்களை காண்க. பெரும்பாலானவர்களால் விரும்பபடுகின்ற முட்டாள்தனமான கட்டளைகள் எவை, அவை நிஜ உலகப் பயன்பாடுகளை கொண்டிருக்கின்றனவா? என்பன பற்றிய விவரங்களை ஆய்ந்து அறிந்து கொள்க.

SaltStackபற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

SaltStack என்பது பைத்தானில் எழுதப்பட்டதொருகட்டளை வரி கருவியாகும். SaltStackஇன் உள்ளமைவு மேலாண்மை எளிதானது. இது SSH நெறிமுறை மூலம் கட்டளைகளை செயல்படுத்த push மாதிரியைப் பயன்படுத்துகிறது. கட்டமைப்பு YAML, Jinja மாதிரிபடிமங்களை உள்ளடக்கியது. Puppet, Chef ,Ansible ஆகியவற்றுக்கு இணையாக இதுஉள்ளது. வசதி நிறைந்த அமைப்பாக இருப்பதால், வலுவான அங்கீகாரம், அதே போன்ற பாதுகாப்பான, விரைவான, மெய்நிகர் இயந்திர தானியங்கி செயல் உள்கட்டமைப்பு போன்ற பல நன்மைகளை கொண்ட தரவுகளாகும், குறியீடு அன்று.

இந்த SaltStack அல்லது Salt என்பது எந்தவொரு உள்கட்டமைப்பு அல்லது பயன்பாட்டின் மேலாண்மையையும் உள்ளமைவையும் தானியங்கிபடுத்து கின்ற ஒரு திறமூல பயன்பாட்டு மென்பொருள் ஆகும். அனைத்து வலை பின்னலிற்கும் தொலைநிலைசெயல்படுத்துதலைச் சுற்றி திட்டமிடப் பட்டுள்ள ஒருபொறியமைவாகும். இது தொலைநிலை இணைய சேவையாளரிடம் நிலையான வலைப்பக்கத்தைக் காட்டுமாறு கேட்பது போன்ற அடிப்படையாக இருக்கலாம் அல்லது தொலைநிலை சேவையகத்திற்கு உள்ளுணர்வாக கட்டளைகளை வழங்க shell அமர்வைப் பயன்படுத்துவதைப் போல குழப்பமாக இருக்கலாம். கட்டளைகளை தொலைவிலிருந்து இயக்க இந்தகட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இது பயனாளர்களை சந்தேகத்திற்கு இடமின்றி குறிவைத்து நேரடியாக பல இயந்திரங்களுக்கு கட்டளைகளை வழங்க அனுமதிக்கிறது. குறைந்தபட்சம் ஒரு பணியாளரையாவது கட்டுப்படுத்தும் masterஐ இது பயன்படுத்துகிறது. கட்டளைகள் பொதுவாக master இடமிருந்து இலக்கு minions களுக்கு வழங்கப்படு கின்றன, அவை masterஆல் அனுப்பப்பட்ட பணிகளைச் செயல் படுத்துகின்றன, பின்னர் பிந்தையவர்களுக்கு தகவலை அனுப்புகின்றன.

SaltStacஇன்கட்டமைப்பு
இந்த கட்டமைப்பானது வளாக வலைபின்னல்கள் முதல் வெவ்வேறு தரவு மையங்களில் உள்ள பிற வரிசைப்படுத்தல்கள் வரை வெவ்வேறான பல சேவையகங்களுடன் செயல்படுகின்ற திறன்மிக்கது. இது daemonsஇன் எண்ணிம ஏற்பாட்டில் இணைக்கப்பட்ட தேவையான செயலிகளுடன் அடிப்படை சேவையாளர்/வாடிக்கையாளர் மாதிரியை உள்ளடக்கியது.
SaltStack masterஇன் சில முக்கிய கூறுகள்:
SaltMine: இது Salt minionsகளின் நிலைத்தகவலைச் சேகரித்து, முதன்மை யாளரில் சேமித்து, பின்னர் அந்தத் தரவை minionsகளுக்குத் திரும்பக் கிடைக்கச் செய்கிறது. இதுதரவு அடிப்படையில் வலைபின்னர் தடுப்புகள் போன்ற பலவற்றைக் கொண்டுள்ளது.
SaltPillar: SSH திறவுகோளிற்கான, நற்சான்றிதழ் கோப்புகள், கடவுச்சொற்கள் போன்ற நுட்பமான தகவல்களை வைக்க இது பயன்படுகிறது.
அங்கீகார சேவை: கூட்டாளிகளின் தகவல்தொடர்புகளை அங்கீகரிக்க இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.
கோப்பு சேவையகம்: இது ZeroMQ சேவையகம். ZeroMQ கோப்புகளை Salt முதன்மையாளரிடமிருந்து கூட்டாளிகளுக்கு பரிமாறிக்கொள்ளலாம். கோப்பு பணியாளருக்கு பின்புலதளம் தேவையாகும்.
Saltwheel (API): Salt masterஐ நிரலாக்க ரீதியாக பெற இது மேம்படுத்துநர்களை அனுமதிக்கிறது.
Salt cloud: இது மேககணினி புரவலர்களுக்கான சக்திவாய்ந்த இடைமுக மாகும். எனவே, இது Salt master, Salt cloud ஆகிய கணினிகளுக்கு இடையிலான தொடர்பை நமக்கு வழங்குகின்றது

Salt reactor: இது குறிப்பிட்ட நிகழ்வு குறிச்சொல்லுக்கானஇதனுடைய நிகழ்வின் bus ஐ கண்காணிக்கும் ஒரு இடைமுகமாகும்.
Salt engine: இதுநிபுணரின் நீண்ட கால செயல்முறையின் திறனைப் பயன்படுத்தும் வெளிப்புற அமைப்பாகும். இது கட்டமைப்புகள், செயல்படுத்தும் தொகுதிகள் , இயக்கிகளை கட்டுப்படுத்துகிறது. பொறியாளர்கள் நிகழ்வின் bus உடன் தொடர்ந்து தொடர்புடையவை.
Salt SSH: இது உள்ளமைக்கப்பட்ட சேவையாகும், இது SaltஐSalt minions களுக்கு அணுக அனுமதிக்கிறது.
SaltStackகூட்டாளிகளின் minionsகூறுகள்
Salt minions பின்வரும் முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளன, அவை கட்டமைப்பு மேலாண்மை அமைப்பை முழுமையாக்குகின்றன.
Grain: இது ஒரு இடைமுகம், இது Salt mine ஐப் போன்றது. இருப்பினும், இது இயக்க முறைமை, களப்பெயர், IP முகவரி இருமஎண், OS வகை, நினைவகம், வட்டு இடம் போன்றபல கணினி பண்புகள் போன்ற minions இன் நிலையான தரவுகளைக் கொண்டிருக்கின்றது. Salt mine இற்கு மாறாக, Salt minion பற்றிய குறிப்பிட்ட தரவைப் பெற நம்முடை.ய சொந்த தனிப்பயன் Saltgrainஐ உருவாக்கலாம்.
Returner: தரவுகளின்அறிக்கை என்பது Saltmasterஇடமிருந்து Salt minionsகளுக்கு அனுப்பப்பட்ட கட்டளையை செயல்படுத்திய பிறகு திரும்பும் தகவல்களின் தொகுப்பாகும். அறிக்கையாளர் என்பது தருக்க வரைச்சட்டம் அல்லது கட்டுப்பாடடு அமைவு போன்ற எந்தவொரு கட்டமைப்பிற்கும் திரும்பும் தகவலை அனுப்ப அனுமதிக்கின்ற ஒரு இடைமுகமாகும்.
Salt beacon: இது Salt minionsகளின் கண்காணிப்பு அமைப்பாகும். இந்த கலங்கரை விளக்கங்கள்(beacons) முழுமையாக உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு விழிப்பூட்டல் கட்டமைப்பாகும், அவை சிக்கல் அல்லது நிகழ்வைப் பிடிக் கின்றது, மேலும் Salt reactorஐஅதற்கேற்ப தூண்டுவதற்கும் அனுமதிக்கின்றது.
Salt செயற்படுத்துகின்ற தகவமைவு: Salt masterஇன் கட்டளைகளை வழங்கும்போது, Salt minionsகளின் செயற்படுத்துகின்ற தகவமைவுகள் இந்த கட்டளைகளை செயல்படுத்துவதற்கும் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
SaltStack நிறுவுகைசெய்தல்
SaltStack நிறுவுகைசெய்வதற்கு முன், பின்வரும் முன்நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும்: லினக்ஸ் சேவையகம், சேவையகத்திற்கான மூலஅணுகல், SaltStack களஞ்சியம், ஆகியவை அடிப்படைதேவையாகும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையைப் பயன்படுத்தி அனைத்து புதுப்பிப்புகளையும் நிறுவுகைசெய்திடுக:
பின்வருமாறு apt-get கட்டளையைப் பயன்படுத்தி களஞ்சியத்திலிருந்து SaltMaster ஐ நிறுவுகைசெய்திடுக:
sudo apt-get install salt-master
பின்வருமாறு apt-get கட்டளையைப் பயன்படுத்தி களஞ்சியத்திலிருந்து Salt minion ஐ நிறுவுகைசெய்திடுக:
sudo apt-get install salt-minion
பின்வரும் கட்டளையுடன் களஞ்சியத்திலிருந்து salt syndic ஐ நிறுவுகை செய்திடுக:
sudo apt-get install salt-syndic

முதன்மை கட்டமைப்பு
Salt உள்ளமைவு சிக்கலானது அன்று. உள்ளமைவு கோப்புகள் ஏற்கனவே /etc/salt கோப்பகத்தில் நிறுவப்பட்டுள்ளன, மேலும் அவை அந்தந்த பகுதிகளுக்கும் தனித்தனியாக பெயரிடப்பட்டுள்ளன – உதாரணமாக,

/etc/salt/master and/etc/salt/minion:

#interface: 0.0.0.0

interface: <local ip address>

உள்ளமைவு கோப்பைப் புதுப்பித்த பிறகு, கட்டளையைப் பயன்படுத்தி Salt master ஐ மறுதொடக்கம் செய்க:
sudo service salt-master restart
Minionகட்டமைப்பு
SaltMinionஇன் உள்ளமைவு மிகவும் எளிதானது. ஒரு Salt Minionஆனது Salt எனப்படும் DNS உடன் இணைக்க முயற்சிக்கிறது; Minionஆல் அந்த பெயரை வரிசைப்படுத்த முடிந்தால், கட்டமைப்பு தேவையில்லை. minion config எனும் கோப்பில் முதன்மை கட்டளையை (/etc/salt/minion)கீழே காட்டப்பட்டுள்ளபடி மறுவரையறை செய்க:
#master: salt

master: <local ip address>
உள்ளமைவு கோப்பைப் புதுப்பித்த பிறகு, கட்டளையைப் பயன்படுத்தி Salt Minionஐ மறுதொடக்கம் செய்க:
sudo service salt-minion restart
முக்கிய மேலாண்மைசெயல்
master ,minion ஆகிய இரண்டிற்கும் இடையிலான அனைத்து தொடர்புகளுக்கும் Salt ஆனது AES மறையாக்கத்தைப் பயன்படுத்துகிறது. master , the minion ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பு அங்கீகரிக்கப்பட்டு, திறவுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
salt-key -L
மேலே உள்ள கட்டளைக்கான வெளியீடு பின்வருமாறு

Accepted Keys:

Denied Keys:

Unaccepted Keys:

<local system name>

Rejected Keys:

பின்வருமாறான கட்டளையைப் பயன்படுத்தி அனைத்து திறவுகோள்களையும் ஏற்றிடுக:

sudo salt-key -A

மேலே உள்ள கட்டளைக்கான வெளியீடு பின்வருமாறு:

Accepted Keys:

<local system name>

Denied Keys:

Unaccepted Keys:

Rejected Keys:

கட்டளைகளை அனுப்புதல்
கட்டளையை இயக்குவதன் மூலம் master ,minion ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்:
sudo salt ‘*’ test.ping
முந்தைய கட்டளையின் முடிவு படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு Salt master, இரண்டு ,minionகளுடன் எளிய SaltStack சூழலை உருவாக்குதல்: SaltStack சூழலை உருவாக்க, முதலில் VirtualBox சூழலை நிறுவுகை செய்திடுக. https://www.virtualbox.org/wiki/Downloads/ இலிருந்து VirtualBox ஐப் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடுக. இப்போது, மூன்று மெய்நிகர் இயந்திரங்களை உருவாக்கி அவற்றை VirtualBox ஐப் பயன்படுத்தி இயக்கிடுக.
அடுத்து, Vagrant ஐ நிறுவுகைசெய்திடுக. Vagrant ஆனது எளிய ,சிறிய பணிச்சூழல்களை கட்டமைப்பதற்காக வழங்குகிறது. அதை https://www.vagrantup.com./ எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடலாம். Vagrant இன் நிறுவுகைக்குப் பிறகு, அதை நாம் கட்டமைக்க வேண்டும். முதலில், ஒரு கோப்புறையில் Vagrantfile என்ற ஒற்றை கோப்பை உருவாக்கிடுக. பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தி Vagrant ஐ இயக்கிடுக:
vagrant up
இப்போது, Vagrant ஆனது பின்னணியில் உள்ள VirtualBox ஐப் பயன்படுத்தி vagrantfile இல் வரையறுக்கப்பட்ட இயந்திரங்களை உருவாக்கி தன்னுடைய இயக்கத்தை தொடங்குகிறது. இயங்குகின்ற அனைத்து இயந்திரங்களையும் நிறுத்த, பின்வரும் கட்டளையைப் பயன்படுத்திடுக:
vagrant halt
Salt-Cli ஐப் பயன்படுத்தி: இப்போது, கட்டளையைப் பயன்படுத்தி அமைப்பைப் பதிவிறக்கம் செய்திடுக:
cd /cd/to/path
git clone https://github.com/UtahDave/salt-vagrant-demo
கட்டளையைப் பயன்படுத்தி மாதிரி செயலை தொடங்கிடுக:
cd /cd/to/path/salt-vagrant-demo
vagrant up
மேலே உள்ள கட்டளையின் பதில் பின்வருமாறு:
result
SALT MASTERரை இயக்கிடுக.


கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையைப் பயன்படுத்தி, SALT MASTERஇல் உள்நுழைவுசெய்திடுக:
vagrant ssh master
கட்டளையைப் பயன்படுத்தி மூலத்திற்கு நகர்த்திடுக:
sudo su
SALT MASTERஉடன் வெற்றிகரமாக இணைத்துள்ளோம். இப்போது, நாம் SaltStack இல் சில அடிப்படை கட்டளைகளை பரிசோதிப்போம்.அனைத்து விசைகளையும் பட்டியலிடுக: Salt minion இன் இணைப்புகளைச் சரிபார்த்திடுக இணைப்பு நிலையைப் பார்த்திடுக அதற்காக பின்வரும் கட்டளை பயன்படுத்திகொள்க:
salt-key —list-all
முந்தைய கட்டளையின் முடிவு பின்வருமாறு:
A ccepted Keys:

Minion1

Minion2

Denied Keys:

Unaccepted Keys:

Rejected Keys:

Verify Salt Minions

அனைத்து விசைகளையும் பெற்ற பிறகு, Salt minion கேட்கின்றனவா இல்லையா என்பதைச் சரிபார்க்க SALT MASTERடமிருந்து கட்டளையை அனுப்பிடுக:
salt ‘*’ test.ping
இது பின்வரும் வெளியீட்டைக் கொடுக்கின்றது:
Minion1:

True

Minion2:

True
மேலே உள்ள வெளியீட்டில் இருந்து, Minion 1 , Minion 2 ஆகியவற்றை பட்டியலிட்டிடுக, அதாவது Minionகள் சரியாக கேட்கிறார்கள்; இல்லையெனில், Minionகள் சரியாக பதிலளிக்க மாட்டா.SaltStack என்றால் என்ன, அதை எவ்வாறு நிறுவுவது என்பது இப்போது நமக்குத் தெரியும். குறைந்தபட்ச நிறுவவுகை நேரத்துடன் தரவு மையங்களில் சேவையகங்களை அமைப்பதை SaltStack எளிதாக்குகிறது

PlateEditor எனும்கட்டணமற்ற இணைய பயன்பாடு

PlateEditor என்பது தளவமைப்புகளை உருவாக்குவது முதல் தரவு காட்சிப் படுத்தல் , ஒருங்கிணைத்தல் வரை பலஆழ்ந்த தகடுகளுடன் செயல்படு வதற்கான கட்டணமற்றதொரு இணைய பயன்பாடாகும். இது முதன்மையாக உயிரியல் துறையில் பணிபுரியும் அறிவியலறிஞர்களுக்கு தரவு பகுப்பாய்வு செயல் முறையை எளிதாக்குவதற்கும் விரைவுப்படுத்துவதற்கும் உதவும் ஒரு கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் வாடிக்கையாளர் பக்க பயன்பாடாக செயல்படுகின்றது: இதில் உருவாக்கப்படுகின்ற கோப்புகள் சேவையகத்திற்கு மாற்றப் படாது, முழுமையான பாதுகாப்பும் ஆய்வுகளின் தரவுகளின் தனியுரிமையை உறுதி செய்கிறது. இது தாரையோட்டம்-செயல் படுத்தப்பட்ட பாகுபடுத்தும் பயன்பாடுகளால் இயக்கப்படுகிறது.பயனாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக எதனையும் நிறுவுகை செய்திடத் தேவையில்லை.
இந்த பயன்பாட்டின்முக்கிய வசதிவாய்ப்புகள்
இது ஜாவாஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்டதொரு கட்டணமற்ற, இணைய அடிப்படையிலான , வாடிக்கையாளர் பக்க பயன்பாடாகும்
இது பதிவேற்றம் செய்திடவும் ,சேமிக்கவுமான விரைவான தகடு தளவமைப்பின் வடிவமைப்பாகும்,
இதுext, csv, xls,xlsx ஆகிய வடிவமைப்பு கோப்பு தாரையோட்டம் கொண்டது
எக்செல் கோப்புகளுக்கு (.xlsx, .xls), JSZip உள் பாகுபடுத்தும் நூலகங்களால் இயக்கப்படுகிறது (பெரும்பாலான சூழ்நிலைகளில் இவை நன்றாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போதும் செயலில் சரிபார்ப்பில் உள்ளது)

இது Heatmap காட்சிப்படுத்தல் , தரவு ஒருங்கிணைப்பு கொண்டது
இணையஇணைப்பில்லாமல் பணி செய்யத் திட்டமிட்டால், சமீபத்திய பதிப்பினை https://sourceforge.net/projects/plateeditor/ எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தபின்னர் அதனை பிரித்து வெளியிலெடுத்திடுக அதன்பின்னர் நம்முடைய இணைய உலாவியில் ‘Editor.html’ ஐ செயல்படுத்தி திரையில் தோன்றச் செய்திடுக . அனைத்து புதிய செயலிகளையும் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்ய, சமீபத்திய கட்டமைப்பை தவறாமல் மீட்டெடுத்திடுக!மேம்படுத்துநர்களுக்கு, Gulp ஐப் பயன்படுத்தி மூலக் குறிமுறைவரிகளைத் தொகுக்கத் தேவையான சார்புகள் உள்ளன. அவை அனைத்தும் package.json கோப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன மேலும் npm install கட்டளையைப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திடலாம். அதற்கான படிமுறை வழிகாட்டிபின்வருமாறு:
முதலில் நம்முடைய கணினியில் nodeJS நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்திடுக

பின்னர் GitHub எனும் இணையதளத்திலிருந்து மூலக் குறிமுறைவரிகளை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்திடுக (அல்லது நம்முடைய Git ஐப் பயன்படுத்தி களஞ்சியத்தை நகலியாக்கிடுக)
அதன்பின்னர் தேவையான அனைத்து சார்புகளையும் நிறுவுகைசெய்திட, முனைமத்தினை திறந்து, மூலக் கோப்புறைக்குச் சென்று இயக்கிடுக:
npm நிறுவுகைசெய்தல்

பயன்பாட்டிற்குத் தேவையான சிறிய,தொகுக்கப்பட்ட js, cssஆகிய கோப்புகளை உருவாக்க, நம்முடைய முனையத்தில் பின்வரும் கட்டளையை இயக்கிடுக:
npm run compil
இது தேவையான கோப்புகளை ஆதார வரைபடங்களுடன் dist/ அடைவை உருவாக்குகின்றது. மாற்றங்களைச் சோதித்து சரிபார்க்க பயன்பாட்டை (Editor.html) செயல்படுத்தி திரையில் தோன்றச்செய்திடுக. பயன்பாட்டின் தொகுக்கப்பட்ட பதிப்பில் தேவையான அனைத்து கூறுகளையும் கொண்ட .zip கோப்பை உருவாக்க பின்வரும் கட்டளை பயன்படுத்திகொள்க:
npm run release
நிச்சயமாக, gulpfile.js கோப்பை இந்த கட்டளைகளை மாற்ற அல்லது விரும்பியபடி புதியவற்றை உருவாக்க புதுப்பித்திடலாம். இந்த வழக்கில், புதிய உரைநிரல்களை பதிவு செய்ய pack.json கோப்பை திருத்த மறக்க வேண்டாம். தொகுக்கப்பட்ட உரைநிரலை இயக்குவதில் சிக்கல்கள் இருந்தால் (பிழைகள் இல்லாமல் நின்றுவிடுதல்), பின்வரும் கட்டளையை இயக்கிடுக:
npm install --global gulp-cli
மேலும், நாம் இயக்குகின்ற முனைமத்திற்கு நிர்வாகி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திடுக. பிற சிக்கல்களுக்கு, பதிப்பாளரை நேரடியாகத் தொடர்புகொள்க அல்லது இந்த repo இல் சிக்கலைத் திறந்திடுக.

ஒட்டுமொத்த கண்ணோட்டம்
இந்த PlateEditor உடன் வழக்கமான பணிப்பாய்வு பின்வருமாறு மூன்று படிமுறைகளாக பிரிக்கலாம்:
1. நம்முடைய தட்டுக்கான தளவமைப்பை வரையறுத்திடுக அல்லது பதிவேற்றம் செய்திடுக
2. முடிவு கோப்புகளை இணைத்திடுக
3. ஒருங்கிணைக்கப்பட்ட தரவை காட்சிப்படுத்திடுக, பகுப்பாய்வு செய்திடுக பதிவேற்றம் செய்திடுக
தளவமைப்பைத் தயாரித்தல்
PlateEditor ஆனது சிக்கலான தட்டு தளவமைப்புகளை நிமிடங்களில் உருவாக்க நம்மை அனுமதிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய ஏராளமான அளவிலான தட்டுகளில் குறியிடப்படக்கூடிய பகுதிகள் என அழைக்கப்படுவதைப் பயன்படுத்துகிறது , தரவுத் திரட்டலுக்குப் பயன்படுத்தப் படுகின்றது. ஏராளமான தட்டுகளின்தொகுப்புகள் செறிவு தரவுகளுடன் குறியிடலாம். ஒவ்வொரு செறிவுக்கும் புதிய பகுதிகளை வரையறுக்க வேண்டியதில்லை: PlateEditor தானாகவே இணைத்துக்கொள்கின்ற திறன்மிக்கது. எடுத்துக்காட்டாக, வழங்கிடும்மருந்தின்-விளைவுகளை விரைவாகத் தயாரிக்க இது நம்மை அனுமதிக்கிறது. வரையறுக்க பல பகுதிகள் இருந்தால் (பல செல் கோடுகள் அல்லது கலவைகள் அல்லது இரண்டும்இணைந்தது போன்றவை), வரம்புகளைப் பயன்படுத்திடுக. இவை சுய-அதிகரிக்கும் திறன்களைக் கொண்ட சிறப்புப் பகுதிகள். அவற்றின் பொதுவான பெயர்களுடன் (#1, #2, #3…) அவற்றைப் பயன்படுத்தலாம் அல்லது பட்டியலிலிருந்து அவைகளின் பெயர்களை விரைவாக வரையறுக்க, வரையறைகள் என அழைக்கப்படுவதை இணைக்கலாம். ஒரே தொகுப்பில் பல பகுதிகள் ஒன்றுடன் ஒன்று சேருமா? பீதி அடைய வேண்டாம், அங்குதான் அடுக்குகள் பயனுள்ளதாக இருக்கும்: அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்துப் பகுதிகளையும் உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரே தொகுப்பில் ஒன்றுடன் ஒன்று பல பகுதிகளை வரையறுக்க அவை நம்மை அனுமதிக்கின்றன. மீண்டும், இந்த PlateEditor ஆனது நமக்காக இதைச் செய்கின்றது!

தரவுகளைஇணைத்தல்
இந்த PlateEditor ஆனது நம்முடைய Plate படிப்பான்களிடமிருந்து தரவு கோப்பின் eatmaps பதிவிறக்கம் செய்து காட்சிப்படுத்த நம்மைஅனுமதிக்கிறது. கோப்புகள் சேவையகத்திற்கு அனுப்பப்படாது, அல்லது நினைவகத்தில் பதிவேற்றப்படாது: தேவையான தகவலைப் பிரித்தெடுத்து காண்பிக்க தேவைப்படும் போது மட்டுமே அவை படிக்கப்படும். தாரையோட்டத்தின் மூலம் இது சாத்தியமானது, இந்த செயல்முறையில் கோப்பு வரிசையாக படிக்கப்படுகிறது. , பெரிய கோப்புகளுடன் பணிபுரிவது ஒரு பிரச்சனையல்ல நம்மமுடைய இணைய உலாவியை செயலிழக்கச் செய்யாது. 10 MB அளவுள்ள கோப்புகளை தாரையோட்டம் செய்வது ஓரிரு வினாடிகளில் அடையப்படும். இருப்பினும், மிகப் பெரிய கோப்புகளுக்கு அதிக நேரம் எடுக்கும், எனவே தரவை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, அதை சிறிய துண்டுகளாகப் பிரிக்க மறந்திடாதீர்கள்.
காட்சிப்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும், திரட்டவும், பதிவேற்றம் செய்யவும்
PlateEditor ஆனது நெடுவரிசைகள் அல்லது குழுவாக்கப்பட்டது.ஆகிய இரண்டு சக்திவாய்ந்த தரவுகளின் ஒருங்கிணைப்பு வசதிகளை உள்ளடக்கியது: இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதி/செறிவு சேர்க்கைகளுக்கான அனைத்து நல்ல மதிப்புகளையும் ஒருங்கிணைத்து அவற்றை ஒற்றை (நெடுவரிசை) அல்லது இரட்டை (குழுவாக) உள்ளீடு வரிசைகளாகக் காட்சிப்படுத்துகின்றன. குழுவான பகுப்பாய்விற்கு, வரிசை/நெடுவரிசை உள்ளீடுகளாகப் பார்க்க விரும்பும் தரவைத் தேர்ந்தெடுக்க முடியும். தனிப்பட்ட மதிப்புகள் அல்லது சராசரி / SD ஐப் பார்க்கலாம். விரிதாள்/வரைபட மென்பொருளில் கீழ்நிலைப் பயன்பாட்டிற்கான உரைத் தரவாக கிடைத்த அட்டவணைகளை நகலெடுத்து ஒட்டிடுக அல்லது பதிவேற்றம் செய்திடுக.

இந்த PlateEditorஎனும் பயன்பாடானது MIT உரிமம் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
PlateEditorஎனும்இந்த பயன்பாடானது நாம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காக https://plateeditor.sourceforge.io எனும் முகவரியில் கிடைக்கிறது:

Aegis Authenticatorஎனும் கட்டற்ற பயன்பாடு

Aegis Authenticator என்பது நம்முடைய இணையசேவைகளுக்கான 2-படிமுறை களுடனான சரிபார்ப்பு அனுமதிசீட்டுகளை நிர்வகிக்க Androidக்கான கட்டணமற்ற, பாதுகாப்பான திறமூல பயன்பாடாகும். Aegis என்பது Google Authenticator , Authy போன்ற தனியுரிமை பயன்பாடுகளின் இரண்டு காரணிகள் அங்கீகார பயன்பாடுகளுக்கு மாற்றாகும்.

மறையாக்கம்செய்தல்
நம்முடைய அனைத்து ஒருமுறைமட்டுமான கடவுச்சொற்களும் பெட்டகத்தில் சேமிக்கப்படுகின்றன. மிகவும் பரிந்துரைக்கப்படும் கடவுச்சொல்லை அமைத்திடு மாறு நாம் தெரிவுசெய்தால், பெட்டகமானது AES-256 ஐப் பயன்படுத்தி மறையாக்கம் செய்துவிடுகின்றது. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் யாராவது இந்த பெட்டகத்தின் கோப்பை திறக்கமுயற்சித்தால், கடவுச்சொல் தெரியாமல் உள்ளடக்கங்களை மீட்டெடுப்பது அவர்களுக்கு சாத்தியமில்லை.
கைரேகை திறத்தல்
ஒரு முறைமட்டுமான கடவுச்சொல்லை கொண்டு நம்முடைய கோப்புகளை அணுக வேண்டிய ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை நினைவில் கொண்டுவந்து உள்ளிடுவது சிக்கலானதாக இருக்கும். அதற்குபதிலாக, நம்முடைய சாதனத்தில் கைரேகை வருடி இருந்தால், நம்முடைய கைரேகையை கொண்டு கோப்பினை திறப்பதற்கான வழிமுறையை எளிதாக இயக்கலாம்.
இணக்கத்தன்மை
இந்தபயன்பாடானது HOTP, TOTP கணிமுறைகளை ஆதரிக்கிறது. இந்த இரண்டு கணிமுறைகளும் தொழில்துறை தரமானவை , பரவலாக ஆதரிக்கப்படுவதால் இந்த பயன்பாடு ஆனது ஆயிரக்கணக்கான சேவைகளுடன் இணக்கமாக உள்ளது.Google, GitHub, Dropbox, Facebook , Instagram. ஆகியவை இதற்கான சில எடுத்துக் காட்டுகளாகும்:
இது Google Authenticator உடன் இணக்கமானது. Google Authenticatorக்கான QR குறியீட்டைக் காட்டும் எந்த இணையதளமும் இந்த பயன்பாட்டுடன் இணைந்து செயல்படுகிறது.
குழுக்கள்
காலப்போக்கில், நமக்கான பெட்டகத்தில் பல்லாயிரக்கணக்கான உள்ளீடுகளை குவித்திடுவதால் குறிப்பிட்ட தருணத்தில் நமக்குத் தேவையானதை எளிதாகக் கண்டறிய இந்த பயன்பாட்டிடம் ஏராளமான அமைப்பு வாய்ப்புகள் உள்ளன. ஒரு நுழைவை எளிதாகக் கண்டறிய தனிப்பயன் உருவப்பொத்தானை அமைத்திடுக. கணக்கு பெயர் அல்லது சேவையின் பெயர் மூலம் தேடிடவும். ஏராளமான அளவில் ஒரு முறைமட்டுமான கடவுச்சொற்கள் உள்ளதா? எளிதாக அணுக, தனிப்பயன் குழுக்களில் அவைகளைச் சேர்த்திடுக தனிப்பட்ட, பணி , குழு ஆகிய ஒவ்வொன்றும் தங்களுடைய சொந்த குழுவைப் பெறலாம்.
பிற்காப்புகள்
இணையத்தின் கணக்குகளுக்கான அணுகலை ஒருபோதும் இழக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்த, Aegis Authenticator நாம் தேர்ந்தெடுக்கும் இடத்திற்கு பெட்டகத்தின் தானியங்கி காப்புப்பிரதிகளை உருவாக்க முடியும். அதை நாம் ஒரு புதிய சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.நம்முடைய மேககணினி சேவை வழங்குநர் ஆண்ட்ராய்டின் சேமிப்பக அணுகல் கட்டமைப்பை ஆதரித்தால் ( Nextcloud செய்வது போன்று), அது மேகக்கணிக்கு தானியங்கி காப்புப்பிரதிகளையும் உருவாக்கலாம். பெட்டகத்தின் கைமுறையாக பதிவேற்றம் செய்வதை உருவாக்குவதும் ஆதரிக்கப்படுகிறது., Aegis Authenticator ஆனது AndOTP FreeOTP ஆகிய தரவுத்தளங்களை பதிவிறக்கம் செய்ய நம்மைஅனுமதிக்கிறது, எனவே இந்த பயன்பாட்டிற்கு மாறுவது நமக்கு எளிதான செயலாக இருக்கும்.
இந்த Aegis Authenticator எனும் திறமூல பயன்பாடானது GPL v3 எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது
மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளவும் https://getaegis.app/எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

Previous Older Entries