கணினியை முதலில் செயல்படுத்திட உதவும் GRUB ஐபற்றி அறிந்துகொள்வோம்

எந்தவொரு கணினியை இயக்கத்துவங்கியவுடன்boot loader எனும் முதல் மென்பொருளே இயக்கதுவங்கும் இந்த boot loader ஆனது செயல்படத்துவங்கியதும் Kernalஐ மேலேற்றுதல் செய்திடும் அதனைதொடர்ந்து இந்த Kernal ஆனது செயல்படத்துவங்கி இயக்குமுறைமையே மேலேற்றிடும் பின்னர் இயக்கமுறைமை செயல்படத்துவங்கி கணினியை நாம் பயன்படுத்த அனுமதிக்கும் இந்த கணினியின் துவக்க இயக்கத்தை செயல்படுத்திடும் boot loader ஆக GNU GRUPஎன்பதையே பிரபலமான இயக்கமுறைமைகள் பயன்படுத்தி கொள்கின்றன இது பயன்படுத்துவதற்கு எளிய உற்ற நன்பனாக பல்லடுக்கு துவக்கத்திற்கு நமக்கு உதவுகின்றது இந்த GRUPஆனது முதன்முதல் 1995 இல் எரிச் பூலியன் என்பவரால் உருவாக்கபட்டது பின்னர் 1999இல் சிறிது மேம்படுத்தபட்டது தெளிவானதாகவும் பாதுகாப்பானதாகவும் திறனுள்ளதாகவும் 2002 ஆம் ஆண்டு மேம்படுத்தபட்டது இறுதியாக நாம் அனைவரும் பயன்படுத்திடும் GRUP இயல்புநிலையில் இயக்கமுறையுடன் சேர்ந்து பயன்படுத்திகொள்ளுமாறு செய்யப்பட்டு நாம் தற்போது பயன்படுத்திவருகின்றோம் இந்த கணினியின் துவக்க இயக்கமானது பல்லடுக்குகளை ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்த அடுக்குகளை கொண்டதாகும்

BIOS என்பது முதல்அடுக்கு இயக்கமாகும் அடிப்படைஉள்ளீடு வெளியீடு அமைவு (Basic InputOutput System)சுருக்கமாக BIOS சரிபார்த்தல் செயலாகும் இந்த BIOS மென்பொருளானது தாய்ப்பலகையிலுள்ள ROMஎனும் சிப்பில் தேக்கிவைக்கபட்டிருக்கும் இது செயல்பட்டு சரிபார்ப்பதை மின்னினைப்பை வழங்கியதும் சுயபரிசோதனை Power on Self Test (POST) ஆக அனைத்து வன்பொருட்களும் சரியாக உள்ளனவா அவைகளுக்கு போதுமானஅளவு மின்சாரம் செல்கின்றதா என சரிபார்ப்பு செய்திடும்

அடுத்ததாக boot loader ஆன GRUP boot loader எனும் பல்லடுக்கு துவக்க இயக்கமேலேற்றி செயல்படத்துவங்கும் இது கணினியின் அடிப்படையான Kernalஐ மேலேற்றுதல் செய்து கணினியின் இயக்க கட்டுபாட்டினை கெர்னலிற்கு மாற்றிவிடும்

மூன்றாவதாக இந்த Kernal ஆனது இடைநிலை படியாக மென்பொருளிற்கும் வன்பொருளிற்கும் இடைமுகமுகவராக செயல்படத்துவங்கிடும் இ்நத கெர்னல்லானது I/Oகோரிக்கைய நிருவகித்தல் செயல்களை படிமுறையாக செயல்படுத்துதல் கணினியின் நினைவகத்தை நிருவகித்தல் ஆகிய கணினியின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பான முகவராக செயல்படுகின்றது initசெயல்கள் துவங்கசெய்கின்றது

நான்காவதாக நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யபட்டுள்ள இயக்கமுறையானது initசெயல்களின் தொடர்ச்சியாக செயல்படதுவங்குகின்றது அனைத்து கோப்பமைவுகள் அமைவுகளின் பண்பியல்புகள் வன்பொருளின் ஒத்தியங்கும தன்மை ஆகியவை சரியாக உள்ளதாவென சரிபார்த்தவுடன் நாம் இந்த இயக்கமுறைமையின்மீது செயல்படும் பயன்பாடுகளை நம்மை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது

இந்த GRUP ஐ நம்முடைய கணினி முழுவதும் அதாவது ஒரேயொரு இயக்கமுறைமையாக பயன்படுத்திடுவதற்கும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கமுறைமையாக பயன்படுத்திகொள்வதற்கும் என இருவழிகளில் நிறுவகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த GRUP இல் பிரச்சினை எனில்Boot -repairஎன்ற மென்பொருள் கைகொடுக்கின்றது இந்த Boot -repairஎன்ற மென்பொருளும் Recommended repair , Advanced options ஆகிய இருவகையான வாய்ப்புகளில் பயன்படுமாறு இருக்கின்றது

  உரையான உள்ளடக்கங்களை ஒலியாக கேட்டிடAudiofy எனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

 உரையான உள்ளடக்கங்களை படிப்பதற்கு பதிலாக ஒலியாக கேட்டிட இந்த Audiofy எனும் பயன்பாடு பெரிதும் உதவுகின்றது  அதிலும் நம்மிடம் iOS எனும் சாதனம் மட்டுமே உள்ளது ஆனாலும் உரையான உள்ளடக்கங்களை ஒலியாக கேட்டிட இந்த Audiofy எனும் பயன்பாடு பேருதவியாக விளங்குகின்றது இந்த பயன்பாடானது கட்டணமில்லாத கட்டணத்துடன் கூடிய ஆகியஇருவகைகளில் கிடைக்கின்றது குரோம் , சபாரி  ஆகியவற்றின் வசதிகளால் ஆதரிக்கபடுகின்ற எந்தவொரு பயன்பாடுகளின் உள்ளடக்கங்களையும் ஒலியாக கேட்கமுடியும் இதனை செயற்படுத்திடுவதற்காக இந்த தளத்தின் முதன்மை பக்கத்திற்கு வந்தவுடன் இதிலுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிடலாம் இதில் உள்ள  ஒவ்வொரு பகுதியிலுமுள்ள உள்ளடக்கங்களின் துனுக்குகளை கேட்டிடமுடியும் அவைகளின் மூலம் நமக்கு எந்த ஒலி பொருத்தமாக இருக்கும் என தெரிவுசெய்துகொள்ள வசதியாக இருக்கும்  பின்னர் நாம்விரும்புவதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க இதன்பின்னர் தேவையான உரை உள்ளடக்கங்களை கேட்டு மகிழலாம் எந்தவொரு உரையையும் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தநேரத்திலும் இந்த பயன்பாட்டின் மூலம் நம்முடைய iOS எனும் சாதனத்தில் கேட்டிடமுடியும் மேலும் விவரங்களுக்கு http://audiofyapp.com/என்ற இணைய முகவரிக்கு செல்க

11

சாதனங்களுக்கிடையே தொடர்பு கொள்வதற்காக Sayable என்பதை பயன்படுத்திகொள்க

  மற்ற சாதனங்களுக்கு தொடர்பு இணைய முகவரியை அனுப்பவிரும்புகின்றோம் ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியையோ அல்லது சமூக வலைதள முகவரியையோ உள்ளீடு செய்திட விரும்பவில்லை  இந்நிலையில் கையடக்க சாதனத்திலிருந்து கணினிக்கு அல்லது கணினியிலிருந்து சாதனத்திற்கு இணைப்பு முகவரியை அனுப்பிட முனையும் போது உதவவருவதுதான் இந்த  Sayable எனும் தளமாகும்  குறிப்பிட்ட எந்தவொரு இணையபக்கம் உள்நுழைவு செய்யமுடியாமல் நாம் தடுக்கபட்டாலும்  இது மிகப்பெரும் உதவியாக நமக்கு அமைகின்றது  இதிலுள்ள what is this எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் மேல்மீட்பு செய்திபட்டியாக விரிந்து எவ்வாறு இது பணிசெய்கின்றது என விவரிக்கின்றது இதில் உள்ள உரைபெட்டியில் சரியான இணைப்பு யூஆர்எல் முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் மூன்றுசொற்கள் திரையில் பிரிபலிக்கும் அதனை நகலெடுத்து ஒட்டிகொண்டால் போதும்  பின்னர் இணைப்பு முகவரி தேவைப்படும்போது பழைய மூன்று சொற்களை உள்ளீடு செய்தால் அதற்கான இணைப்பு யூஆர்எல்முகவரி  கிடைக்கபெறும்   அதனை தொடர்ந்து இந்த யூஆர்எல் முகவரியை நம்முடைய மின்னஞ்சல் முகவரியையோ அல்லது சமூகவலைதளமுகவரியையோ உள்ளீடு செய்திடாமல் சாதனங்களுக்கு இடையை அனுப்பலாம்  இன்றே  https://sayable.co/ எனு ம்    இதனுடைய  தளத்திற்கு சென்று இதனுடைய சேவையை பயன்படுத்தி கொள்க

11.

கணிதத்தை விளையாட்டாக மாணவர்கள் பயின்றிடMath Is Fun எனும் தளத்தை பயன்படுத்திகொள்க

கணக்கு என்றாலே ஒருசில மாணவர்களுக்கு  பிணக்குதான்  உடனடியாக காததூரம் ஓடிவிடுவார்கள்  அவ்வாறானவர்களும் விரும்பி  எளிதாக , விளையாட்டாக கற்க  உதவுவதுதான் Maths Is Fun எனும் தளமாகும்  இந்த தளமானது மூன்று வயதுமுதல் 12 வயதுவரையுள்ள பிள்ளைகள் சுலபமாக கணிதத்தை கற்க உதவுகின்றது  கணிதத்தில் விற்பன்னர்கள் அனைவரும் இந்த தளத்தினை ஆய்வுசெய்து மிகச்சிறந்தது என சான்றளித்துள்ளனர்  இந்த தளத்தினை Rod Pierce DipCE BEngஎன்றநிறுவனமும் இதரகொடையாளிகளும் சேர்ந்து நடத்திவருகின்றனர்  இந்த தளத்தில் கணிதத்தினை கற்பதற்காக அதற்கென தனியாக பணித்தாளை வழங்கியுள்ளனர் அதில்  கூட்டல், கழித்தல் ,பெருக்கல் ,நீண்ட பெருக்கல் வகுத்தல் நீண்டவகுத்தல்  பின்ன எண்கள், சதவிகிதம்   போன்றவைகளில்  நாம் பயிற்சிபெறவிரும்புவதை தெரிவுசெய்து பயிற்சி பெறலாம் இந்த கணக்குகளுக்கான விடையை உடனுக்குடன்  இந்த பணித்தாளிலேயே அல்லது நேரடியாக விடையை அச்சிடசெய்வது ஆகியவழிகளில் சரிபார்த்துகொள்ளலாம் வாருங்கள் வந்து உங்களுடைய பிள்ளைகள் எளிதாக கணக்கில் நன்கு பயிற்சிபெற https://www.mathsisfun.com/ எனும்இந்த தளத்தினை பயன்படுத்திகொள்ளுங்கள்.

10.1

டேலி ஈஆர்பி9 இன் சமீ பத்திய ஜூனோ என்ற வெளியீட்டின் புதிய வசதிவாய்ப்புகள்

Tally on Mobile என்ற வசதியை JUNO என்ற பெயரில் Tally.ERP 9 என்ற கணக்கு பதிவியலின் மென்பொருளில் வெளியிட்டுள்ளனர் இந்த வசதியானது அதாவது தலைமை நிருவாகியும் மற்ற முதன்மை நிருவாக அலுவலர்களாகிய நாம் எங்கிருந்தாலும் எப்போதும் நம்முடைய செல்லிடத்து பேசியின் வாயிலாகவே இந்த Tally.ERP 9 ஐ அனுகி நம்முடைய நிறுவனத்தின் தற்போதைய நிகழ்நிலை படுத்தபட்ட தகவல்களை பாதுகாப்பாக அறிந்துகொள்ளமுடியும் அலுவலகத்தில் இருந்து மட்டுமல்லாது பயனத்தின்போதுகூட முக்கியமான அலுவலக கூட்டங்களில் கலந்து கொண்டு அதில் அவசியமான முடிவுகளை தேர்ந்தெடுத்து செயல்படுத்திடமுடியும் இதற்காக நமக்கு அங்கிகரிக்கபட்ட TALLY .NET ID உம் நேரடி இணைய இணைப்பமட்டுமே தேவையாகும் இந்த வசதியானது ஆண்ட்ராய்டு பயன்படுத்தபடும செல்லிடத்து பேசி அல்லது ஐஃபோன், அல்லது செம்பியான், ப்ளாக்பெர்ரி ஆகிய எந்தவகையாக இருந்தாலும் அதன்மூலம் TALLY .NET ID துனையுடன் தொடர்புகொண்டு கடனாளர்களிடமிருந்து நமக்கு வரவேண்டிய தொகைகளை கணக்கிடுது , கடனாளிகளுக்கு நாம் கொடுக்கு வேண்டிய தொகைகளை கணக்கிடுவது ,வாடிக்கையாளர் கோரும் விவரங்களை வழங்குவது ஆகிய பணிகளை எளிதாக செயல்படுத்திடமுடியும் இவ்வாறு பயனத்தின் போது நம்முடைய நிறுவனத்தின் தரவுகளை அனுகுவதால் பாதுகாப்பற்று இருக்குமே என கவலைபடாதீர்ள் தரவுகள் அனைத்தும் சேவையாளர் கணினியில் மட்டுமே தேக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நாம் கோருகின்ற தகவல்களைமட்டும் நம்முடைய செல்லிடத்து பேசியில் கொண்டு வந்து காண்பிக்கும் பொதுவாக டேலியில் தரவுகளானது encrypted செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதை போன்றே இந்த JUNO உம் தரவுகளை encrypted செய்து பாதுகாப்பாக வைக்கின்றது அவ்வாறே அவரவர்களுக்கு அனுமதிக்கபட்ட நிலைவரைமட்டுமே இந்த தரவுகளை அனுக அனுமதிக்கின்றது மேலும் இந்த JUNO வை பயன்படுத்துவதற்காக டேலியில் அனைத்தும் தெரிந்த வல்லுனராக இருக்கவேண்டிய அவசியமில்லை சாதாரணமாக ஒரு வியாபாரத்தின் அடிப்படையான ஒருசில நடவடிக்கைகளை மட்டும் தெரிந்திருந்தால் போதுமானது முக்கியமான சிக்கலான முடிவெடுக்கும் தகவல்களை அனுகி எளிதாக தீர்வுசெய்திட பயனாளரின் உற்ற நன்பனாக அனுமதிக்கின்றது .Tally.ERP 9 இல் உள்ள Sales order, delivery note, invoice, payment receipt ,GRN ஆகிய அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் இந்த JUNO இல் செயல்படுத்திட அனுமதிக்கின்றது

சிறுநிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை நிருவகிக்க சார்ளி என்ற இணைய தளத்தின் சேவையை பயன்படுத்திகொள்க

சின்னஞ்சிறு நிறுவனங்களுக்கு பணியாளர் நிருவாகம் என்பது மிகச்சவாலான செயலாகும் ஏனெனில் சின்னஞ்சிறுநிறுவனங்களானது மூலப்பொருட்களை கொள்முதல் செய்து அதனை முடிவுப்பொருளாக உருவாக்கி விற்பணைசெய்வது என்பதே மிகப்பெரிய பணியாகும் அதனை கவணிக்கவே முடியாமல் தினறும் சூழலில் பணியாளர்களை நிருவகிப்பது மிகவும் சிரமமான பணிச்சுமையாக மாறிவிடும் இந்த சூழலில் இவ்வாறான சின்னஞ்சிறு நிறுவனங்களின் பணியாளர் நிருவகிப்பதற்காகவே உதவிக்கு வருவதுதான் Charlie எனும் இணைய தளமாகும் இதுஒரு கட்டணமற்ற சேவைதளமாகும் இதனை https://www.charliehr.com/ என்ற இணைய முகவரியில் சென்றடையலாம் இதனுடைய முதன்மை பக்கமானது நம்முடைய பணியாளர் நிருவாகத்தில் தன்னால் உதவுமுடியும் என இந்த தளம் கூறுகின்றது தொடர்ந்து அதனுடைய நடுப்பகுதியில் Tour எனும் பொத்தான் உள்ளது அதனை சொடுக்குதல் செய்தால் இதிலுள்ள வசதிவாய்ப்புகள் யாவை அவைகளை கொண்டு என்னென்ன பணிகளை செய்து கொள்ளலாம் என அறிந்துகொள்ளமுடியும் இவையனைத்தும் நமக்கு திருப்தியுற்றால் இதிலுள்ள Sign Upஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நம்முடைய நிறுவனத்தின் பெயரை உள்ளீடு செய்துகொண்டு இந்த தளத்தின் சேவைக்கான சட்டதிட்டங்களையும் நிபந்தனைகளையும் படித்தறிந்து கொண்டபின்னர் Set Up My Company எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனைதொடர்ந்து நம்முடைய நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்கள் போன்றவிவரங்களை உள்ளீடு செய்துகொண்டு Get Started எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து நிறுவனத்தின் சின்னம் நமக்கு ஒதுக்கபட்ட சர்லிஅட்டை ,குழுஉறுப்பினர்கள் விவரம் ,முகப்பு பக்கம் போன்ற விவரங்களை உள்ளீடுசெய்துகொள்க இந்தபகுதியில் தேவையில்லை எனும் விவரங்களை உள்ளீடு செய்திடாமல் தாண்டிசெல்க இந்த தளமானது நம்முடைய நிறுவனத்தின் ஊழியர்களை எளிதாக எங்கிருந்தாலும் எப்போதும் கணினி,, செல்லிடத்து பேசி ,டேப்ளெட் , ஆகியவற்றின் வாயிலாக தொடர்புகொண்டு சரியாக நிருவகிக்கின்றது .

விண்டோவின் முந்தைய இயக்கமுறைமையின் கோப்புகளை எவ்வாறு நீக்கம் செய்வது

விண்டோ 7 அல்லது விண்டோ 8.1 இயக்கமுறைமையிலிருந்து விண்டோ 10 இற்கு கணினியை மேம்படுத்தியபிறகு பழைய இயக்கமுறைமையில் உருவாக்கபட்ட கோப்புகளை தெரிவுசெய்து Del எனும் விசையை அழுத்தினால் பிழைசெய்தியைமட்டுமே காண்பிக்கும் கோப்புகளை நீக்கம் செய்திடாது இந்நிலையில் இதற்காக விண்டோ10 இயக்கமுறைமை திரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ள start என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் உள்ள தேடிடும் பெட்டியில் Disk Cleanup என தட்டச்சு செய்துகொண்டு உள்ளீட்டு விசையைஅழுத்துக உடன் Disk Cleanup எனும் சாளரம் திரையில் தோன்றிடும் அதில் கீழ்பக்கம் நகர்த்தி சென்றுபட்டியலாக இருப்பவைகளில் Previous Windows installation(s) என்பதன் தேர்வுசெய் பெட்டியானது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென சரிபார்த்து தெரிவுசெய்துகொள்க பிறகு இதே உரையாடல் பெட்டியில் OK. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் முந்தைய இயக்கமுறைமையில் உருவாக்கபட்டதேவையற்ற கோப்புகள் அனைத்தும் நீக்கம் செய்யபட்டுவிடும்

7

நம்முடைய செயல்திட்டத்தினை கட்டுபடுத்திட ட்ரில்லோ என்ற இணையசேவையை பயன்படுத்திகொள்க  

   6

எந்தவொரு பதிய செயலிற்குமான பதிய செயல்திட்ட அட்டைகளை பயன்படுத்தி  அடுத்தடுத்து என்னசெய்யவேண்டும் என நமக்கும் நம்முடைய குழுவிற்கும் வழிகாட்டி உதவதயாராக இருக்கும்  Trello என்பதொரு மிகச்சிறந்த  ஆச்சரியமான திறனுள்ள இணையதள கருவியாக திகழ்கின்றது

மேலும் இதுஒரு கட்டணமற்ற நெகிழ்வுதன்மையுடனான செயல்வழிகாட்சியாக யார்வேண்டுமானாலும் எந்த செயலைவேண்டுமானாலும் எப்போது வேண்டு-மானாலும் செய்யஉதவிடும் ஒரு  பரவசமூட்டிடும் இணைய தள கருவியாகும்

 இதனுடைய சேவையை பெறுவதற்காக https://trello.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க  இந்த தளத்திற்கு வந்தவுடன் மேலே வலதுபுறமூலையில்  நம்முடைய பெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்கள் போன்ற விவரங்களுடன்  New Account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நமக்கென கூகுள் கணக்கு இருந்தால் அதைகூட இந்த தளத்தின் பதிவிற்காக பயன்படுத்திகொள்க உடன் நமக்கு நம்முடைய கணக்கு துவங்கியதற்கான ஆமோதிப்பு மின்னஞ்சல் ஒன்று் வந்துசேரும்  அதன்பின்னர் நம்முடைய செயல்திட்டத்திற்கென தனியான boards and lists  ஐ உருவாக்கிடுக  இந்த ட்ரில்லோவானது நாம் எங்கிருந்தாலும் கணினி, ஆண்ட்ராய்டு பயன்படும் செல்லிடத்து பேசி ,டேப்ளெட் ,ஐபேடு, கிண்டில் ஆகிய எந்த சாதனத்தின் வாயிலாகவும் தொடர்புகொண்டு நம்முடைய செயல்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி கொள்ளமுடியும்  அவ்வாறே நம்முடைய செயல்திட்டத்திற்கான கோப்புகளை நம்முடைய கணினி ,கூகுள்ட்ரைவ், ஒன்ட்ரைவ், ட்ராப்பாக்ஸ் ஆகியவற்றில் எதிலிருந்தும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் . ஒட்டிடும் குறிப்புதாட்கள், விரிதாட்கள், மின்னஞ்சல் , மென்பொருள் ஆகியவற்றை உடனிணைத்து நம்முடைய செயல்திட்டத்தை நிருவகிக்கலாம்   தனிப்பட்ட குடும்ப பணிமுதல்  பெரிய பெரிய பணிகளை முடிப்பதற்கான செயல்திட்டங்கள்வரை அனைத்தையும் இந்த இணைய கருவியை கொண்டு எளிதாக நிருவகிக்கலாம்

லிபர் ஆஃபிஸ்-4 கால்க்-தொடர்-54 கால்க்கில் மாதிரி பலகங்களையும் பாவணைகளையும் (styles) பயன்படுத்துதல் தொடர்ச்சி

 தொடர்ந்து இதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியில் Cell Stylesஎனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி அல்லது Page Styles எனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி ஆகியஇரண்டில் நாம் மாறுதல் செய்திடவிரும்பும் ஒரு பாவணைக்கான உரையாடல் பெட்டியைதோன்றச்செய்து அதில் தேவையான பாவணைகளின் பெயரை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைப்பட்டியலில் Modifyஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான மாறுதல்களை செய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதனை தொடர்ந்து இதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியில் Cell Stylesஎனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி அல்லது Page Styles எனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி ஆகிய இரண்டில் நாம்மாறுதல் செய்த பாவணைக்கான உரையாடல் பெட்டியை தோன்றச்செய்திடுக பின்னர் நிகழ்நிலை படுத்திடவிரும்பும் கலணைஅல்லது குழுவான கலண்களை தெரிவுசெய்து அவைகளிலுள்ள தரவுகளை மேம்படுத்தி காண்பிக்க செய்திடுக அதன்பின்னர் திரையின் மேலே Update Styleஎன்றஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிகழ்நிலைபடுத்திகொள்க

தொடர்ந்துஇதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியில் Cell Stylesஎனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி அல்லது Page Styles எனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி ஆகியஇரண்டில் மறைத்திட விரும்பும் பாவணைக்கான உரையாடல் பெட்டியைதோன்றச்செய்திடுக அதில் மறைத்திட விரும்பும் பாவணைகளை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைப்பட்டியலில் Hideஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக

தொடர்ந்துஇதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியில் Cell Stylesஎனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி அல்லது Page Styles எனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி ஆகியஇரண்டில் மறைந்திருக்கும் பாவணைகளை தோன்ற செய்திடவிரும்பும்உரையாடல் பெட்டியைதோன்றச்செய்திடுக அதில் மறைந்திருக்கும் பாவணைகளை பட்டியலாக தோன்ற செய்திடுக அவைகளில் திரையில் தோன்ற செய்திட விரும்பும் பாவணைகளை மட்டும் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலைப் பட்டியலில் Showஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக

தொடர்ந்துஇதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில்உள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்திடுக அதில் Hierarchical,All Styles ,Hidden Styles,Applied Styles,Custom Styles ஆகிய வகைகளில் ஒன்றினைமட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் நாம் தெரிவுசெய்த பாவணைகளின் வகையானது திரையில் பிரதிபலிக்கும்

கலணின் பாவணைகளை நகலெடுத்து தேவையான கலணில் ஒட்டிடுவதற்காக நகலெடுத்திடவிரும்பும் கலணை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Edit => copy=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் ஒட்டிடவிரும்பும் கலணை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளை பட்டையில் Edit => Paste Special=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்கு இதன் பின்னர் தோன்றிடும் Paste Special எனும் உரையாடல் பெட்டியில் Formats என்ற வாய்ப்பை மட்டும் தெரிவு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

1

1

பொதுவாக நம்மால் உருவாக்கப்பட்ட பாவணைகளை மட்டுமே நாம்நீக்கம் செய்திடமுடியும் அதற்காக இதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியில் Cell Stylesஎனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி அல்லது Page Styles எனும் பாவணைக்கான உரையாடல் பெட்டி ஆகியஇரண்டில் பாவணைகளைநீக்கம் செய்திடவிரும்பும் உரையாடல் பெட்டியைதோன்றச்செய்திடுக அதில் நீக்கம் செய்திடவிரும்பும் பாவணையை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைப்பட்டியலில் Deleteஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் நீக்கம் செய்வதை உறுதிபடுத்திடுவதற்கான எச்சரிக்கை செய்திடும் சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில்தோன்றிடும் அதில் Yes என்ற பொத்தானை மட்டும்தெரிவுசெய்து சொடுக்குக.

மாதிரிபலகங்களை உருவாக்கிடுவதற்காக தேவையான விரிதாளினை திரையில் தோன்றசெய்து அதில் தேவையான அனைத்து உள்ளடக்கங்களையும் சேர்த்துகொள்க பின்னர் திரையின்மேலே கட்டளைபட்டையில் File=> Save as Template=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Shift+F11 ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் Template Managerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் நாம் சேமி்க்கவிரும்பும் கோப்பகத்தை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது new folder என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த கோப்பகத்திற்கு ஒரு பெயரை உள்ளீடு செய்து கொண்டபின்னர் இதே உரையாடல் பெட்டியில் save என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில்okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2

2

ஏற்கனவே இருக்கும் மாதிரிபலகங்களை மாறுதல் செய்வதற்காக முதலில் தேவையான மாதிரிபலகத்தை தெரிவுசெய்துகொள்க பின்னர் திரையின்மேலே கட்டளைபட்டையில் File= > New => Templates=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது லிபர் ஆஃபிஸை திறக்க செய்திடும் உரையாடல் பெட்டியில் Templates என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Template Managerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Spreadsheetsஎன்ற தாவியின் திரையை தோன்ற செய்திடுக அல்லது நாம் சேமித்து வைத்துள்ள நம்முடைய மாதிரி பலகங்கள் உள்ள கோப்பகத்தை தெரிவுசெய்தபின்னர் மாறுதல் செய்திடவிரும்பும் மாதிரி பலகத்தை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் தோன்றிடுசெய்திடுக அதில் Editஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொள்க.இதன்பின்னர்திரையின்மேலே கட்டளைபட்டையில் File => Save=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லதுதிரையின்மேலே கட்டளைபட்டையில் File => Save As Template=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

3

3

மாதிரி பலகங்களிலிருந்து விரிதாளை உருவாக்குவதற்காக திரையின்மேலே கட்டளைபட்டையில் File => New => Templates=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் Template Managerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் Spreadsheetsஎன்ற தாவியின் திரையை தோன்ற செய்திடுக அல்லது நாம் சேமித்து வைத்துள்ள நம்முடைய மாதிரி பலகங்கள் உள்ள கோப்பகத்தை தெரிவுசெய்தபின்னர் தேவையான மாதிரி பலகத்தை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக அல்லதுOpen என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த Template Managerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் மூடப்பட்டு விரிதாள் திரையில் தோன்றிடும் இதன்பின்னர் பின்னர்திரையின்மேலே கட்டளை பட்டையில் File= > Save As=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Ctrl+Shift+Sஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் தோன்றிடும் Save Asஎனும் உரையாடல் பெட்டியில் இதற்கு ஒரு பெயரினைஉள்ளீடு செய்துகொண்டு Save என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

நம்முடைய மாதிரிபலகத்தில் மாறுதல் செய்தால் அம்மாறுதல்கள் உடனுக்குடன் விரிதாளில் நிகழ்நிலை படுத்திகொள்வதற்காக தானாகவே இந்த விரிதாளினை அடுத்தமுறை திறக்கும்போது நம்மிடம் அதனை உறுதிபடுத்திவதற்கான உரையாடல் பெட்டியொன்று கோரி நிற்கும் நாமும் Update Stylesஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிகழ்நிலைபடுத்திகொள்ளலாம் அல்லது Keep Old Styles எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தனித்தனியாக சேமித்துகொள்க

இயல்புநிலை மாதிரிபலகத்தை அமைத்திடுவதற்காக திரையின்மேலே கட்டளைபட்டையில் File => New => Spreadsheet=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் ஏற்கனவே உருவாக்கபட்டு தயாராக இயல்புநிலையில் உள்ள மாதிரிபலக விரிதாள் திரையில் தோன்றிடும் இது நமக்குத்தேவையில்லை ஆனால் நாம் உருவாக்கிடும் மாதிரிபலகம்மட்டுமே இவ்வாறான இயல்புநிலைவிரிதாளாக தோன்றிடவேண்டும் என விரும்பினால் திரையின்மேலே கட்டளைபட்டையில் File => New => Templates=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் Template Managerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில்நாம் உருவாக்கி சேமித்து வைத்துள்ள நம்முடைய மாதிரி பலகங்கள் உள்ள கோப்பகத்தை தெரிவுசெய்த பின்னர் தேவையான மாதிரி பலகத்தை தெரிவுசெய்து கொண்டு Set As Default எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நாம் புதிய விரிதாளினை துவங்கிடும்போது நாம் தெரிவுசெய்த மாதிரிபலகவிரிதாளே திரையில் தோன்றிடும்

இதனை மறுஅமைவு செய்திடுவதற்காக திரையின்மேலே கட்டளைபட்டையில் File => New => Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் Template Managerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில்Action Menu என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் சூழ்நிலை பட்டியை தோன்றிடசெய்து அதில் Reset Default Template => Spreadsheet=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஇதன்பின்னர் நாம் புதிய விரிதாளினை துவங்கிடும்போது நாம் தெரிவுசெய்த மாதிரிபலகவிரிதாளே திரையில் தோன்றிடும்

வெவ்வேறான மாதிரிபலகங்களுடன் விரிதாட்கள் ஒத்தியங்கசெய்வதற்காக திரையின்மேலே கட்டளைபட்டையில் File => New => Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலக மேலாளர் எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் நாம் பயன்படுத்திடவிழையும் மாதிரிபலகம் உள்ள கோப்பகத்தை தேடிப்பிடித்திடுக பின்னர் நாம் விரும்பும் மாதிரிபலகத்தை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் புதிய விரிதாள் ஒன்று உருவாகிவிடும் அதன்பின்னர் இந்த மாதிரி பலக விரிதாளுடன் ஒத்தியங்கசெய்திட விரும்பும் விரிதாளினை தி்றந்திடுக பின்னர் திரையின்மேலே கட்டளை பட்டையில் Edit => Select All =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+A ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் விரிதாளின் உள்ளடக்கங்கள் யாவும் தெரிவு செய்யப்பட்டுவிடும் அதன்பின்னர் திரையின்மேலே கட்டளைபட்டையில் Edit => Copy=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் நாம் விரிதாளில் தெரிவுசெய்திருந்த உள்ளடக்கங்கள் நகலெடுக்கப்பட்டுவிடும் இந்த பழைய விரிதாளினை சேமித்திடாமல் மூடிவிட்டுவெளியேறுக புதிய விரிதாளில் இடம்சுட்டியை வைத்திட்டு திரையின்மேலே கட்டளைபட்டையில் Edit => Paste=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+ V ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் நாம் பழையவிரிதாளில் தெரிவுசெய்து நகலெடுத்திருந்த உள்ளடக்கங்கள் புதிய விரிதாளில் ஒட்டப்பட்டுவிடும் இதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் File => Save As=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Shift+Sஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் புதியவிரிதாளானது சேமிக்கப்படும் அப்போது ஏற்கனவே இந்த விரிதாள் உள்ளது மேலெழுதி சேமிக்கவா என கோரும் ஆம் என ஆமோதித்து சேமித்திடுக

லிபர் ஆபிஸ் ஆனது மாதிரிபலக கோப்பகத்தில் உள்ள மாதிரி பலகங்களை மட்டுமே பயன்படுத்தி கொள்ளும் நாம் புதிய மாதிரிபலகத்தை உருவாக்கி தனியான கோப்பகத்தில் வைத்தாலும அதனை லிபர் ஆஃபிஸின் வழக்கமான மாதிரிபலக கோப்பகத்திற்கு பதிவிறக்கம் செய்தால் மட்டுமே அதனையும் லிபர் ஆஃபிஸ் பயன்படுத்தி கொள்ளும். உதாரணமாக விற்பணைக்கென மாதிரிபலகம் என்றும் விற்பணை பட்டியலிற்கென மற்றொரு மாதிரிபலகம் என்றும் தனித்தனி கோப்பகத்தில்உருவாக்கினாலும் அவைகளை வழக்கமானமாதிரிபலக கோப்பகத்திற்கு பதிவிறக்கம் செய்திடவேண்டும் இந்த மாதிரிபலக கோப்பகமானது நம்முடைய கணினியில் செயல்படும் இயக்கமுறைமைக்கு ஏற்ப இடம்மாறி அமையும் அதனை தெரிந்துகொள்வதற்காக திரையின்மேலே உள்ள கட்டளை பட்டையில்Tools => Options => LibreOffice => Paths=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக புதிய மாதிரிபலககோப்பகத்தை உருவாக்குவதற்காக திரையின் மேலே உள்ள கட்டளைபட்டையில் File => New => Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலகமேலாளர் எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் தேவையெனில் அதில் New Folder எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அனைத்து மாதிரிபலகங்களும் அதில்பட்டியலாக விரிந்துதோன்றிடும். பின்னர் New Folder எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்பு உரையாடல் பெட்டியில் புதிய பெயரை உள்ளீடு செய்துகொன்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்பலகங்களின் பட்டியலில் இந்த புதிய மாதிரிபலககோப்பின் பெயரும் இருப்பதை காணலாம்

ஏற்கனவே இருக்கும் மாதிரிபலக கோப்பகத்தை நீக்கம் செய்வதற்காக திரையின் மேலே உள்ள கட்டளைபட்டையில் File= > New => Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலகமேலாளர் எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் நீக்கம் செய்திட விரும்பும் மாதிரிபலக கோப்பகத்தை தெரிவுசெய்துகொண்டு Delete எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த செயலை உறுதிபடுத்திடுவதற்கான சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Yes எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் மாதிரி பலகங்களின் பட்டியலில் நாம் நீக்கம் செய்வதற்காக தெரிவுசெய்திருந்த மாதிரிபலகம் நீக்கம் ஆகிவிடும்

குறிப்பு நம்மால் உருவாக்கபட்ட மாதிரிபலககோப்பகங்களை மட்டுமே இவ்வாறு நீக்கம் செய்திடமுடியும் லிபர் ஆஃபிஸில் ஏற்கனவே உருவாக்கி இயல்புநிலையில் விரிதாள் செயல்படுவதற்காக தயார்நிலையிலுள்ள மாதிரி பலககோப்பினை இவ்வாறான படிமுறையை பின்பற்றி நீக்கம் செய்திடமுடியாது என்ற செய்தியை கவணத்தில் கொள்க

ஒரு கோப்பகத்திலிருந்து மற்றொரு கோப்பகத்திற்கு மாதிரிபலகத்தை இடமாற்றம் செய்திடுவதற்காக திரையின் மேலே உள்ள கட்டளைபட்டையில் File => New= > Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலகமேலாளர் எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் இடமாற்றம் செய்திட விரும்பும் மாதிரிபலககோப்பகத்தை தெரிவுசெய்துகொண்டு Move to folder எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் சென்று சேரவேண்டிய கோப்பகத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலகமானது இடமாறிபுதிய இடத்திற்கு சென்று அமைந்திருக்கும்

புதிய மாதிரிபலகங்களை பதிவிறக்கம் செய்திடுவதற்காக இணைய உலாவியை திறந்துகொண்டு அதில் பதிவிறக்கம் செய்திடவிரும்பும் மாதிரிபலகங்கள் இருக்கும் இணைய பக்கத்தை தேடிபிடித்து கொள்க பொதுவாக இதன்இணைய முகவரி http://templates.libreoffice.org/template-center /என்றவாறு இருக்கும் இதில் நமக்ககு தேவையான மாதிரி பலகங்களை தெரிவுசெய்து நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்க அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் கால்க்கினை திரையில் தோன்ற செய்து அதன்திரையின் மேலே உள்ள கட்டளைபட்டையில் File= > New= > Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலகமேலாளர் எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில்Import எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள மாதிரிபலகம் இருக்கும் கோப்பகத்திற்கு சென்றுஅங்கு பதிவிறக்கம் செய்துவைத்துள்ள மாதிரிபலகத்தை தெரிவுசெய்துகொண்டு Open. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் இந்த மாதிரிபலகமானது லிபர் ஆஃபிஸ் கால்க்கில் திறந்து பணிபுரிந்திட தயாராக இருக்கும்

4.

4

மாதிரிபலக கோப்பகத்திலிருந்து வேறு இடத்திற்கு மாதிரி பலகத்தை பதிவேற்றம் செய்து இடமாற்றம் செய்திடுவதற்கா திரையின் மேலே உள்ள கட்டளைபட்டையில் File => New => Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாதிரிபலகமேலாளர் எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் பதிவேற்றம் செய்திடவிரும்பும் மாதிரி பலகம் இருக்கும் கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு Export எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Save As எனும் உரையாடல் பெட்டியில் புதிய இடத்தை தெரிவுசெய்துகொன்டு Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய இடத்தில் நாம் கொண்டுசென்ற மாதிரிபலகம் வீற்றிருப்பதை காணலாம் தேவையெனில் இதற்கு புதிய பெயரிட்டு கொள்க.

கணினியை பாதுகாப்பாக பராமரித்திடுக

 நாம் கணினியை அதிலும் இந்த கணினியை இணையத்துடன் இணைத்து செயல்பட்டு கொண்டிருக்கும்போது திடீரென மேல்மீட்பு பட்டிஒன்று திரையில் தோன்றி நம்முடைய கணினியானது   நச்சுநிரல்  மால்வேர்  போன்றவைகளால் பாதிக்கபட்டுள்ளது என்றும் உடனடியாக கணினியின் நினைவகத்தை சுத்தம் செய்யவில்லையெனில் கணினியின் இயக்கம் பாதிக்கபடும் என்றும் நமக்கு எச்சரிக்கை விடுக்கும்  உடன்நாமும் பயந்து அந்த மேல்மீட்பு பட்டியின் செயலை ஆமோதித்திடுவோம் உடன் அந்த மேல்மீ்ட்பு பட்டியானது நம்முடைய கணினியின்   நினைவகத்தை சுத்தம் செய்து நச்சுநிரல்  மால்வேர்  போன்றவைகளை அறவே நீக்கம் செய்து கணினியை பாதுகாப்பாக வைத்துவிட்டதாகவும் இதற்காக நானூற டாலர் கட்டணமாகிவிட்டதாக குறிப்பிடும் அதனை தொடர்ந்து நம்முடைய   வங்கியின் சேமிப்பு அட்டை கணக்கிலிருந்து  இந்த தொகையை தானாகவே எடுத்துகொள்ளும்  எச்சரிக்கை  நாம் இணையத்தில் உலாவரும்போது இதைபோன்ற மேல்மீட்பு பட்டி திரையில் தோன்றினால் அதனை ஆமோதித்து அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடாதீர்கள்   நச்சுநிரல்  மால்வேர்  போன்றவைகளால் நம்முடைய கணினி பாதிக்காமல் இருப்பதற்கக AVG, Norton, McAfee போன்ற கட்டணமற்ற பயன் பாடுகளை நம்முடைய  கணினியில்  நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க   கூடுதலாக  Ccleaner  என்ற கட்டணமற்ற நம்பகமான பயன்பாட்டினை பயன்படுத்தி நம்முடைய கணினியின் நினைவகத்தை அவ்வப்போது  சுத்தம்  செய்து நம்முடைய கணினியை   நச்சுநிரல்  மால்வேர்  போன்றவைகளால் பாதிக்கபடாமல் காத்துகொள்க  இதனை http://www.piriform.com/ccleaner  என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

5

Previous Older Entries