லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-21

 ஆவணத்தில் பக்கஎண்களை புதியதாக தொடங்குதல்

ஒரு ஆவணத்தில் பக்கஎண்களை அவ்வப்போது 1 இலிருந்து தொடங்கிடுமாறு செய்திட விரும்பும் நிலையில் உதாரணமாக ஆவணத்தின் தலைப்பு பக்கம் அல்லது உள்ளடக்கங்களின் அட்டவணைகள் ஆகியவற்றை தொடர்ந்து புதிய பக்க எண்களை 1இலிருந்து தொடங்கிடுமாறு செய்திடுதல் கூடுதலாக பல ஆவணங்கள் , உள்ளடக்கங்களின் அட்டவணைகள் என்பன போன்ற முன்பகுதியின் தகவல்கள் ரோமன் எண்களுடனும் முக்கிய பகுதியானது 1 இலிருந்து அராபிக் எண்களுடன் தொடங்கி இருக்கும்

அதனால் ஆவணங்களில் புதிய பகுதிகளை புதிய எண்களுடன் தொடங்கவேண்டியுள்ளது இதற்காக இரண்டுவழிமுறைகள் உள்ளன

வழிமுறை1

1 முதலில் புதிய பக்கத்தின் முதல் பத்தியில் இடம்சுட்டியை வைத்திடுக

2 பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்துFormat=>Paragraph=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

3உடன் விரியும் Paragraph எனும் உரையாடல் பெட்டியின் Text Flowஎனும் தாவியின் திரையில் Breaksஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க

4 அதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியில் Insert என்ற வாய்ப்பினையும் பின்னர் With Page Style என்ற வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு நாம் தெரிவுசெய்திட விரும்புவது எந்தவகையான பக்கபாணி என்பதை அதற்கான கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தெரிவுசெய்து கொள்க அவ்வாறே பக்கஎண்கள் எந்த எண்ணிலிருந்து தொடங்கவேண்டும் எனவும் குறிப்பிடுக

5 இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

ஆலோசனை வழிமுறை1 பக்கஎண்கள் 1 ஐவிட பெரியதாக இருக்கும் நிலையில் ஆவணத்தின் முதல்பக்கத்தில் தொடங்கிடுமாறு செய்தல் பயனுள்ளதாக இருக்கும் உதாரணமாக புத்தகம் ஒன்றில் பல அத்தியாயங்களுடன் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி கோப்பாக இருக்கும் நிலையில் முதல் அத்தியாயம் பக்கம்1 இலிருந்தும் இரண்டாவது அத்தியாயம் பக்கஎண் 10 இலிருந்தும் மூன்றாவது அத்தியாயம் பக்கஎண்20இலிருந்தும் தொடங்குமாறு செய்வது

வழிமுறை2

1முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Manual break=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக

2உடன் விரியும்Insert break எனும் உரையாடல் பெட்டியில் type என்பதன்கீழ் Page break என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருப்பதை உறுதி செய்துகொள்க

3 பின்னர் style என்பதன் கீழ் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பாணியை தெரிவுசெய்து கொள்க

4 அதன்பின்னர் Change page number என்ற வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க

5 பின்னர் அதனுடைய கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான தொடங்கிடும் பக்க எண்ணை குறிப்பிடுக

6 இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

21.1

21.1

 பக்கஎண் மறுதுவக்கம் செய்தலின் எடுத்துக்காட்டு : புத்தக முன்னுரை
எந்தவொரு புத்தகத்திலும் ஒரு செந்தர நிலையான முன்னுரையானது பின்வரும் பண்புகளை கொண்டிருக்கும்:
1 முன்னுரையின் பக்கஎண்கள் (I, II, III, IV, …) என்றவாறு ரோமன் எண்களால் காட்டப்படும் .
2முன்னுரைக்கு பின் ஆவணமானது இயல்புநிலை பக்க எண்களுடன் தொடங்கும்

3அதாவது பக்கஎண் ஆனது1 என மறுஅமைவுசெய்யப்பட்டு அரபு எண்களின் வடிவமாக (1, 2, 3, 4, …) என்றவாறு மாறியமையும்.

4 இவ்வாறான பக்கஎண்களை மறுதொடக்கம் செய்திட பக்கஇடைவெளி தேவைப்படும்.
இவ்வாறான முன்னுரை பாணியில் பூர்வாங்க பணியை செய்வதற்காக:
1) முதலில் ஒரு புதிய பக்கபாணியை உருவாக்கிடுக பின்னர் அதற்கான பெயராக முன்னுரை(Preface) என அமைத்திடுக.

2) பொதுவாக முன்னுரையானது பல பக்கங்களில் பரவியிருக்கும் அதனால் முன்னுரைக்கு(Preface) அடுத்துள்ள பாணி (Next Style)யைஅமைக்கவும்.

3) இந்த முன்னுரையில்(Preface) முன்னுரைக்கான தலைப்பை(Header) சேர்த்திடுக பின்னர் அதில் பக்கஎண் புலத்தை(Page Number field) உள்நுழைத்திடுக அதன்பின்னர் (I, II, III, IV, …) என்றவாறு பக்க எண்களை ரோமன் எண்களாக உருவாக்கிடுக.இந்நிலையில்

3.அ) பக்கபாணி சாளரத்தை இந்த முன்னுரைக்காக திறக்கவும் (ஏற்கனவே இது திறக்கவில்லை என்றால்) பின்னர் தலைப்பு (Header) எனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் தலைப்பு (Header) எனும் தாவியின் திரையில் தலைப்பிற்கு (Header) கீழ் உள்ள தலைப்பு (Header) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3.ஆ) அதன்பின்னர்பக்கம்(page) எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பக்கம்(page) எனும் தாவியின் திரையில் பக்கஅமைப்பு அமைவுகளின் கீழ், வடிவமைப்பு(format) எனும் கீழிறங்கு பட்டியலில் I,II, III, …. என அமைத்திட்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

21.2

21.2

இவ்வாறு முன்னுரையானது உருவாக்கப்பட்ட பிறகு, தற்போது நாம் முக்கிய உரைகளடங்கிய பகுதியில் அரபு எண்களில் பக்கஎண்களை மறுதொடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம் .இதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

1) முதலில் முன்னுரையில் இறுதிபகுதியில் ஒரு காலியான வெற்று பத்தியை உருவாக்கிடுக .
2) பின்னர் காலியான வரியின் மீது இடம்சுட்டியை வைத்திடுக.

3) அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Manual Break=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக .
4) உடன் விரியும் Insert Break எனும் திரையில் Page break என்பதை தெரிவுசெய்துகொண்டு இயல்புநிலை பாணியை (Default style)தெரிவு செய்திடுக.

5) பின்னர் Change page number எனும் வாய்ப்பை தெரிவு செய்துகொண்டு புதிய மதிப்பை 1 என அமைத்துOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

21.3

21.3

குறிப்பு..வலதுபுற பக்கங்களுக்கு இரட்டைபடை எண்களை ஒதுக்கீடு செய்திட வேண்டாம் அவ்வாறே இடதுபுற பக்கங்களுக்கு ஒற்றைபடை எண்களையும் ஒதுக்கீடு செய்திடவேண்டாம் .ஏனெனில் லிபர் ஆஃபிஸானது வலதுபுற பக்கங்களுக்கு இரட்டை படை எண்களுடனும் இடதுபுற பக்கங்களுக்கு ஒற்றைபடை எண்களுடன் ஆவணமானது அமைந்திடுமாறான வழக்கத்தை மிககடுமையாக பின்பற்றுகின்றது

மேலும் அவ்வப்போது நிகழும் இந்த மாற்றமானது நிலை பட்டியில் சரியாக பிரதிபலிக்கின்றது. இந்த ஆவணத்தின் நிலை பட்டியில் உள்ள பக்கப்பிரிவில் இப்போது இந்த பக்கஎண், வரிசை எண் , மொத்த பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வரிசை கிரமமாக காட்டுகிறது (வரைகலையானது   பக்கம் 1இல் ஆறுபக்கங்களில் மூன்றாம் பக்கத்தில் தற்போது இடம்சுட்டி இருக்கின்றது என காண்பிக்கின்றது) .

21.4

21.4
பக்கஎண்களை மீண்டும் தொடங்குவதில்ஏற்படும் சிக்கல்கள்

பக்கஎண்களை மீண்டும் தொடங்குவதில் இருவகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
1லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து (File => Properties => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் விரியும் ஆவணத்தின் Properties எனும் திரையின் புள்ளிவிவர பக்கமானது எப்போதும் அந்த ஆவணத்தின் மொத்த பக்கஎண்களை காட்டுகிறது இது நாம் பக்கங்களை கணக்கிட்டு காணும் புலத்தில் (Page Count field) உள்ளதைபோன்று இருக்காது

2பக்கஎண்கள் மறுதொடக்கம் ஆகும்போது , எப்போதும் லிபர் ஆஃபிஸானது பக்க எண்களை வலதுபுற பக்கங்களுக்கு இரட்டை படை எண்களுடனும் இடதுபுற பக்கங்களுக்கு ஒற்றைபடை எண்களுடன் ஆவணமானது அமைந்திடுமாறான வழக்கத்தை பின்பற்றுகின்றது . இந்த செயலை ஒரு வெற்று பக்கத்தை சேர்ப்பதன் மூலம் செய்கிறது., மேலும் தேவைப்பட்டால். சில நேரங்களில் இந்த வெற்று பக்கம் வரவேண்டாம் என நாம் விரும்பும்போது , குறிப்பாக கையடக்க ஆவணங்களை உருவாக்கிடும்போது, அல்லது ஒற்றை பக்க அச்சிடும் போது. இந்த செயலை அனுமதித்திடுக

பக்கஎண்ணிக்கை சிக்கல்களைத் தீர்வுசெய்தல்

பக்கஎண்ணிக்கையில் எத்தனை பக்கங்களை சேர்க்காமல் விடுபட்டுள்ளது எனமிகச்சரியாக தெரிந்து கொள்ளவிரும்பினால் . (பின்வரும் எடுத்துகாட்டில் பக்கஎண்ணிக்கையின்போது ஒரு பக்கம் மட்டும் விடுபடுமாறு அமைக்கபட்டுள்ளது)

பக்கஎண்களை கணக்கீடு செய்திடும் புலத்தினை உள்நுழைப்பதற்கு பதிலாக நாம் பின்வரும் செய்முறைகளின் மூலம் அதேமுடிவை அடைய முடியும்:

1) முதலில் பக்கஎண்களின் கணக்கீடு தோன்றவேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்திடுக.
2) பின்னர் F2 எனும் செயலிவிசையை அழுத்தி வாய்ப்பாட்டு பட்டையை (formula bar) லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் முதன்மை சாளரத்தில் கிடைமட்ட வரைகோலிற்கு சிறிது மேல்பகுதியில் தோன்றசெய்க

21.5

21.5

3) அதன்பின்னர் வாய்ப்பாட்டு பட்டையிலுள்ள சமக்குறிக்குபிறகு, page–1 என தட்டச்சுசெய்திடுக ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்க எண்களை தவிர்க்க விரும்பினால் வாய்ப்பாடு பட்டையில் தவிர்க்க விரும்பும் பக்கங்களின் எண்களை இதில் உள்ளீடு செய்திடுக.

4) பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்தி இந்த வாய்ப்பாட்டு பட்டையை மூடிடுக அதன்பின்னர் ஆவணத்திற்குள் இந்த விளைவு புலத்தை உள்நுழைத்திடுக

நமக்கு முன்கூட்டியே பக்கங்களின் எண்ணிக்கை தெரிய வேண்டாம் என விரும்பினால், கடைசியான பக்கத்தில் புத்தக அடையாளகுறியீடு(bookmark)செய்த பின்னர் அதை ஒரு குறுக்கு மேற்பார்வை(cross reference) பகுதியில் உள்நுழைத்திடும் அணுகுமுறையை பின்பற்றிடுக.
கடைசி பக்கத்தில் ஒரு புத்தகஅடையாளகுறியீட்டினை(bookmark) உருவாக்கிடுவதற்காக:

1) முதலில் விசைப்பலகையிலுள்ள Ctrl + End ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக ஆவணத்தின் கடைசி பக்கத்திற்கு செல்க.

2) பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Bookmark=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

3) உடன் விரியும் Insert Bookmark எனும் உரையாடல் பெட்டியில் Bookmark என்பதன்கீழ் LastPage என பெயரை உள்ளீடு செய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

21.6

21.6

ஒரு ஆவணத்தின் கடைசி பக்கத்தில் உள்ள தலைப்பு அல்லது அடிப்பகுதியில்ஒரு குறுக்கு வழிமேற்கோளை உள்நுழைவுசெய்திடும் பகுதியில் பக்கங்களின் எண்ணிக்கையை குறிக்க விரும்பினால்:

1) விரும்பிய இடத்தில் இடம்சுட்டியை நிலைநிறுத்துக உதாரணமாக தலைப்பு அல்லது முடிவுபகுதியில் of எனும் சொல்லிற்கு பிறகு காலியான இடைவெளிவிட்டு page xx of yy.என்றவாறு விட்டிடுக

2) பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள முதன்மை பட்டியிலிருந்து Insert => Cross-reference=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
3) உடன் விரியும் Fields எனும் உரையாடல்பெட்டியின் Cross-referencesஎனும் தாவியின் பக்கத்தில் Type என்ற நெடுவரிசை பகுதியில் Bookmarks என்பதை தெரிவுசெய்திடுக தொடர்ந்து Selectionஎன்ற நெடுவரிசை பகுதியில் LastPage என்பதை தெரிவுசெய்திடுக. இப்போது LastPage என்பது Nameஎனும் பெயர்பெட்டியில் தோன்றிடும்

4) பின்னர் Insert Reference எனும் பெட்டியில் As page style என்பதை தெரிவுசெய்து கொண்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

21.7

21.7

குறிப்பு.ஆவணத்தின் இறுதிபகுதியில் புத்தககுறியீட்டை நீக்கம்செய்ய வேண்டாம். அவ்வாறு இறுதிபகுதியில் புத்தககுறியீட்டை நீக்கம்செய்தால் crossreference எனும் வாய்ப்பு வேலை செய்யாது. crossreference போன்றதொரு புலமானது தானாகவே புதுப்பிக்காதிருந்தால், அத்தகைய புலத்தை F9எனும் செயலி விசையை அழுத்தி புதுப்பிக்குமாறு செய்து கொள்க .
எல்லைகளையும் பின்புலத்தையும் வரையறுத்தல்

லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் பல்வேறு உறுப்புகளுக்கும் எல்லைகளையும் பின்புலத்தையும் செயற்படுத்திட முடியும். பத்திகள், பக்கங்கள், சட்டகங்கள்,பிரிவுகள், பக்கபாணிகள், பத்தி பாணிகள், சட்டக வடிவங்கள் ஆகிவற்றில் எல்லைகளையும் பின்புலத்தையும் உள்ளிணைக்க முடியும் ; எழுத்துரு பாணிகள், உள்ளடக்க அட்டவணைகள், சுட்டுவரிசைகள் ஆகியவற்றை பின்புலத்தில் மட்டும் உள்ளிணைக்க முடியும்.

எல்லைகளும் பின்புலமும் (boundaries and background) எனும் உரையாடல் பெட்டியின் பக்கங்கள் ஒவ்வொன்றும் வழக்கம் போன்றே இருக்கும். அவற்றின் பயன்பாட்டினை விளக்குவதற்காக, ஒரு உரை சட்டகத்தை எல்லையிலும் பின்பலத்திலும் வரையறுக்கலாம்.

குறிப்பு.   விளிம்புபகுதிக்குள் மட்டும்   பக்கபின்புலத்தை தலைப்பு அல்லது முடிவு (ஏதாவது இருந்தால்) சேர்த்து நிரப்பலாம். பின்புல வண்ணத்தை அல்லது வரைகலையை விளிம்பிற்குள் விரிவாக்கம் செய்வதற்கு, நாம் சரியான அளவையும் நிலையையும் உடைய சட்டகத்தை வரையறுக்க வேண்டும் ஒரு பக்கத்திற்குள் அல்லது பத்திக்குள் அதை தொகுத்திடவேண்டும் பின்னர் பின்புலமாக சேர்த்து அனுப்ப வேண்டும்.

ஒரு எல்லையை சேர்த்தல்

, எல்லையை உருவாக்கிட துவங்குவதற்காக முதலில் சட்டகத்தை தெரிவுசெய்து கொண்டு.சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியலிலிருந்து எல்லைகள்(Borders) எனும் தாவல் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் இந்த எல்லைகளானது எங்கே செல்லவேண்டும்? அவை எவ்வாறு காட்சியாக தோன்றிடவேண்டும்? அதற்கு இடதுபுறமும் சுற்றியும் எவ்வளவு காலிஇடம் விடவேண்டும்? ஆகிய மூன்றுவகையான முக்கிய உறுப்புகளை கொண்டுள்ளது

1வரி ஏற்பாட்டில் எல்லைஎங்கு செல்லவேண்டும் என குறிப்பிடுதல்.லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆனது   இயல்புநிலையில் ஐந்துவகையான ஏற்பாடுகளை வழங்குகிறது ஆனால் நாம் அந்த வரியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து எளிதாக நம்முடையவிருப்பப்படி ஒரு பயனாளர் விரும்பும் பகுதியில் மிகச்சரியாக நாம் என்ன விரும்புகின்றோமோ அவ்வாறே அமைத்திடமுடியும். மேலும் ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக வடிவமைக்க முடியும்.

2வரியின் எல்லைஎவ்வாறு இருக்கவேண்டும எனகுறிப்பிடுதல் இந்த உரையாடல் பெட்டியில் நாம் தெரிவுசெய்வதற்காக ஏராளமான வகையில் பல்வேறு பாணிகளும் வண்ணங்களும் தயார்நிலையில் உள்ளன. இந்த உரையாடல் பெட்டியின் இடதுபுறபகுதியின் பயனாளர் வரையறுத்த வரைபடத்தில் கருப்புவண்ண அம்புகளின் ஜோடி மூலம் உயர்த்தி காட்டபட்ட எல்லையில் வரிபாணியையும் வண்ணத்தையும் செயற்படுத்திடமுடியும்

3 உள்ளடக்கங்களுக்கு இடைவெளியானது எல்லைக்கும் உள்ளடக்க உறுப்புகளுக்கும் இடையே எவ்வளவு இடத்தை விடுவது எனகுறிப்பிடுகிறது

இந்த இடைவெளியானது வலது, இடது, மேலே, கீழே என்றிருக்குமாறு குறிப்பிட முடியும். அதனால் நான்கு பக்கங்களிலும் ஒரே அளவில் இடைவெளி அமைந்துள்ளதாவென ஒத்திசைவு செய்து சரிபார்த்து கொள்க. இந்த இடைவெளியானது ஒரு திணிப்பு போன்று உள்ளது மேலும் இந்த உரை அளவீடுகளை கணக்கிடும் போது ஒரு காரணியாகவும் உள்ளது.

21.8

21.8

நிழல் பாணி பண்பியல்பானது எப்போதும் முழு உறுப்புகளுக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நிழல்பாணியானது எங்கே இருக்கவேண்டும்?, உறுப்புகளிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கவேண்டும்?என்ன நிறத்தில் இருக்கவேண்டும்? ஆகிய மூன்று கூறுகளை கொண்டுள்ளது

பின்புலத்தில் வண்ணத்தை சேர்த்தல்

இந்த சட்டகம்(Frame) எனும் உரையாடல்பெட்டியில், பின்புலம்(Background) எனும் பக்கத்தை தெரிவுசெய்துகொள்க   இதன்வாயிலாக நாம் வண்ணம் அல்லது ஒரு வரைகலையை சேர்க்க முடியும்
பின்புலத்திற்கு வண்ணத்தை சேர்க்க,வண்ண கட்டத்திலிருந்து தேவையான வண்ணத்தை தேர்ந்தெடுத்திடுக. மேலும் வண்ணத்தின் வெளிப்படையான தன்மையை சரிசெய்து எளிதாக உரையை வாசிக்குமாறு செய்ய முடியும்

பின்புலத்திற்கு வரைகலையை சேர்த்தல்

பின்புலத்திற்கு வரைகலையை சேர்க்க:

1) இதே உரையாடல் பெட்டியின் பின்புல(Background)பக்கத்தின்As என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து வரைகலை(Graphic)என்பதை தெரிவுசெய்திடுக
2) பின்னர் Browse எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் Graphicஎனும் உரையாடல்பெட்டி திரையில் தோன்றுவதை காணலாம்.

3) அதன்பின்னர் நாம் விரும்பும் கோப்பை தேடிபிடித்திடுக பின்னர் Openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் வரைகலையை கண்டுபிடிக்க (Find Graphics) எனும் உரையாடல் பெட்டிமூடபட்டு தேர்வு செய்யபட்ட வரைகலையானது பின்புல தாவலின் பக்கத்தில் வலது புறத்தின் முன்னோட்ட பெட்டியில் தோன்றிடும் (நம்மால் வரைகலையை காட்சியாக காண முடியவில்லை என்றால், முன்னோட்டம்( Preview)எனும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.)
4) நம்முடைய ஆவணத்தில் இந்த வரைகலையை உட்பொதிவதற்கு, இணைப்பு (Link எனும் வாய்ப்பு தெரிவுசெய்திருந்தால் அந்த தேர்வை நீக்கிவிடுக. ஆவணத்துடன் வரைகலை இணைத்திருக்கவேண்டும் ஆனால் அது உட்பொதியாமல் இருக்க வேண்டும் எனும் நிலையில் மட்டும், இணைப்பு (Link) எனும் வாய்ப்பினை தேர்ந்தெடுக்கவும்.

21.9

21.9

5) இதே உரையாடல் பெட்டியின் வகை (Type) எனும் பகுதியில், பின்புல வரைகலை எவ்வாறு தோன்றவேண்டும் என விரும்புவதை தேர்வுசெய்திடுக:

அ) நிலையை(position)ஐ தேர்ந்தெடுக்க, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரைகலையை நிலைப்படுத்த (Position) எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக பின்னர் நிலையின்(Position) கட்டத்தில் விரும்பிய இடத்தை தெரிவுசெய்து சொடுக்குக.

ஆ) வரைகலையை நீட்டித்து பின்புல பகுதிமுழுவதும் நிரப்பிட, Area எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக.
இ) பின்புல பகுதிமுழுவதிலும், வரைகலை நிரப்பும் செயலை மீண்டும் மீண்டும் செய்திடTileஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக.

6) வெளிப்படைத்தன்மை (Transparency) எனும்பகுதியில், வரைகலையின் வெளிப்படை தன்மையை சரிசெய்ய முடியும். திரையில் உள்ள உரையை எளிதாக வாசிக்க இவ்வாறு சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

பின்புலத்திலிருந்து வரைகலை அல்லது வண்ணத்தை நீக்குதல்

பின்புலத்திலிருந்து வரைகலை அல்லது வண்ணத்தை நீக்கம் செய்திட

1) frame எனும் உரையாடல் பெட்டியிலுள்ளAs என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து வரைகலைGraphic என்பதை தெரிவுசெய்திடுக.

2) பின்னர் வண்ண கட்டங்களில் No Fill எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக.

21.10

21.10

இணைய பயன்பாடுகளை அபாயகரமான தாக்குதலிலிருந்து காத்திடுக

 4

இணைய பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்குபவர்கள் தம்முடைய பயன்பாட்டினை பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக வெளியிடுமுன் தாம் உருவாக்கிய பயன்பாட்டு மென்பொருட்களானது எண்ணற்ற அதிபயங்கர தாக்குதலை சமாளித்து செயல்படுமா என முழுவதுமாக ஆய்ந்த சரிபார்த்தபின் வெளியிடுமாறு கேட்டுகொள்ளபடுகின்றார்கள் அவ்வாறு தாக்குதலை சமாளிப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை எவ்வாறு பரிசோதித்து பார்ப்பதுஎன தவிப்பவர்களுக்கு கைகொடுக்க இருப்பதுதான் http://owasp.org/ (Open Web Application Securit Project (OWASP))எனும் இணையதளமாகும் இந்த வலைதளம் இலாப நோக்கமற்ற குழுவால் பராமரிக்கபடுகின்றது.

இணைய பயன்பாடுகளுக்குபின்வரும்வழிகளில் ஏற்படும் தாக்குதல்களை காத்திடுக

1 உட்செலுத்துதல் (injection)பொதுவாக எந்தவொரு இணைய பயன்பாடுகளிலும் காலியான படிவம் ஒன்றை திரையில் பிரதிபலிக்கசெய்து அதில் பயனாளர்கள் தேவையான விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்கும்படி கோருவதாகவே இருக்கும் இந்நிலையே சமூகவிரோதிகள் தங்களின் கைவரிசையை காண்பிக்கும் முதன்மையான வழியாகும் இதனை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட அளவுகோலை வைத்து அதற்கேற்ப உள்ளீடுகள் இருந்தால் மட்டும் ஏற்றுகொள்ளுமாறும் இல்லையெனில் மறுத்திடுமாறும் செய்யலாம் உதாரணமாக எண்களில் உள்ளீடு செய்திடும் புலத்தில் எழுத்துகளை உள்ளீடு செய்வதை மறுத்து ஒதுக்குவது

2 அனுமதியை உடைத்தலும் நிகழ்நிலை நிருவாகமும் அதாவது பயனாளர்கள் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை மாற்றியமைத்திடுவதை நம்பத்தகுந்த ஆதரங்களை கொண்டுமட்டுமே மாற்றியமைத்திட அனுமதித்தல் இணைய பக்கத்தை பயன்படுத்தாமல் அதிகநேரம் திறந்து வைத்தலை தவிர்த்தல் ஆகியவற்றிற்கு இந்த தளத்தின்ISO27001:2013 எனும் செந்தரத்தை பின்பற்றலாம்

3தளங்களுக்கிடையே மாறுவதற்காக தூண்டுவது தாக்குதல் நடத்த விழைபவர்கள் துண்டான ஜாவாகுறிமுறைவரிகளை நம்முடைய வலைதளபக்கத்தில் விட்டுசெல்லுதல் இதனை கண்ணுற்றதும் அதனை செயல்படுத்தவிழையும்போது வேறுஒருதீங்குவிளைவிக்கும் வலைதளத்திற்கு இட்டுசென்று தாக்குதலை நடத்திடும் இதனை தவிர்த்திட குறிமுறைவரிகள் நம்பதகுந்ததா என ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்தும் வேறு வலைதளத்திற்கு அழைத்து செல்வது போன்றிருந்தால் அதனை முடிந்தவரை தவிர்த்திடுமாறும் பரிந்துரைக்கபடுகின்றது

4 பாதுகாப்பற்ற நேரடிமேற்பார்வைசெய்திடும் பொருட்கள் உதாரணமாக <URL>/actnID=1234

என இணைய முகவரியை செயல்படுத்திடும்போது <URL>/actnID= 5678என்றவாறு உருவாகி செயல்படுவதற்காக முனையும்நிலையில் உருவான முகவரி சரியானதுதானா என சரிபார்த்தபின் செயல்படுமாறு பரிந்துரைக்கபடுகின்றது

5 பாதுகாப்பை தவறாக்கட்டமைவுசெய்திடுதல் இணைய சேவையாளர் தரவுதளசேவையாளர் இணைய நிரல்தொடர்சேவையாளர் போன்றவைகளில் இதனை உருவாக்குநர்கள் தவறுதலாக அறியாமல் பாதுகாப்பு கட்டமைவை முடக்கம் செய்தவிட்டிடுகின்றனர் இதனை தவிர்த்திட பாதுகாப்பு வரிகள் ஏதேனும் முடக்கம் செய்துவிட்டோமா என அவ்வப்போது சரிபார்த்து கொள்க.இணைய பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்குநர்கள் தங்களின் குறிமுறைவரிகளில் இவ்வாறான மேலும் பாதுகாப்பான வழிமுறைகளை அறிந்துகொள்ளhttp://owasp.org/ (Open Web Application Securit Project (OWASP))எனும் இணையதளத்திற்கு செல்க.

சிமொழியின் மாறிலியில் சுட்டிகளும் ,மாறிலிக்கு சுட்டிகளும் ஆகியஇரண்டிற்கும் இடையேஉள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்வோம்

சிமொழியை பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு சுட்டிகள் என்பதை புரிந்துகொள்வதற்கு மிககடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும் .அதுமட்டுமல்லாது மாறிலியுடன் இந்த சுட்டிகளையும் சேர்த்து அறிந்து தெரிந்து கொள்வது என்பது இடியாப்ப சிக்கல் போன்று சிக்கலுக்குள் சிக்கலாக மிக அதிக குழப்பத்தையும்   சிமொழியை அறிந்து கொள்ளவே வேண்டாம் என புதியவர்கள் பயந்துகாததூரம் ஓடும் அளவிற்கு அதிகசிக்கல்பிக்கலை உருவாக்கிவிடுகின்றன. அஞ்சற்க இந்த கட்டுரையில் சிறிய நிரல் தொடர்களின் வாயிலாக   மாறிலியின் சுட்டிகளும் ,மாறிலிக்குசுட்டிகளும் ஆகிய இரண்டிற்கும் இடையேஉள்ள வேறுபாடுகளை பற்றிய விளக்கம் அளிக்கபட்டுள்ளது அதனை தெரிந்துகொண்டாலே போதுமானதாகும்

மாறிலிக்கு சுட்டி

பொதுவாக மாறியின் மதிப்பை சுட்டியானது சுட்டிகாட்டுகின்றது அதாவது ஒரு சுட்டியானது சுட்டி காட்டிடும் மாறியின் மதிப்பை யாராலும் மாற்றிடமுடியாத நிலையை மாறிலிக்கு சுட்டி என அறிந்துகொள்க

மேலும் குறிப்பாக தெரிந்து கொள்ளவேண்டுமெனில் இந்த சுட்டியிருக்கும் இடத்தின் முகவரியை மட்டும் மாற்றியமைத்திடலாம் ஆனால் அதனுடைய முகவரியின் மதிப்பை மட்டும் மாற்றமுடியாது அதனையே மாறிலிக்கு சுட்டி எனதெரிந்துகொள்க

நிரல் தொடர்1

#include <stdio.h>

int main()

{

// Definition of the variable

int a = 10;

 

// Definition of pointer to constant

Const int* ptr = &a; //Now, ptr is pointing to the value of the variable ‘a’

 

*ptr = 30; //Error: Since the value is constant

 

Return 0;

}

மேலே கூறிய நிரல்தொடரில் மாறியின் மதிப்பை அதாவது சுட்டிகாட்டிடும் மாறிலிக்கு மாற்றியமைத்திட முயலும்போது பிழை எனும் செய்தியுடன் தோன்ற செய்கின்றது ஏனெனில் இது ஒருமாறிலி எனும் செய்தியை இந்த நிரல் தொடரை இயந்திரமொழியாக மொழிமாற்றம் செய்து இயக்கும்போது திரையில் பிரதிபலிக்க செய்கின்றது.

 

நிரல் தொடர்2

 

#include <stdio.h>

int main()

{

// Definition of the variable

int a = 10;

int b – 20;

 

// Definition of pointer to constant

Const int* ptr = &a; //Now, ptr is pointing to the value of variable ‘a’

 

Ptr = &b; // Works: Since pointer is not constant

Return 0;

}

 

இந்த இரண்டாவது நிரல்தொடரில் சுட்டியின் முகவரியை மாற்றியமைக்கமுடிகின்றது . அதனை தொடர்ந்து இந்த இரண்டு நிரல்தொடர்களின் வாயிலாக சுட்டியின்முகவரியை மாற்றி யமைத்திடலாம் எனவும் சுட்டியானது சுட்டிகாட்டும் மதிப்பை மாற்றமுடியாது எனவும் அறிந்துகொள்க.

நிரல்தொடர் 3

 

#include <stdio.h>

int main()

{

// Definition of the variable

int a = 10;

int b – 20;

 

// Definition of pointer to constant

Const int* ptr = &a; //Now, ptr is pointing to the value of variable ‘a’

 

*Ptr = 30; // Works: Since the pointer pointing to the value is not constant

 

Ptr = &b; //Error:Now, ptr is poiting to the value of the variable ‘b’

 

 

Return 0;

}

இந்த மூன்றாவது நிரல் தொடரில் Ptr எனும் சுட்டியின் முகவரியை மாற்ற முயலும்போது பிழைச்செய்தியை காண்பிக்கின்றது ஏனெனில் இதில் முகவரியை வேறொரு மாறிக்கு மாற்றியமைத்திட முயலுகின்றது அதனால்.பிழைச்செய்தியை காண்பிக்கின்றது

 

பொதுவாக சிமொழியிலும் உட்பொதிந்த சிமொழியின் நிரல்தொடரிலும் எழுத்துருக்கள் எத்தனைமுறை பயன்படுத்தபட்டுள்ளன என அறிந்துகொள்ளபயன்படுகின்றது. அதாவது மாறிலிக்கு சுட்டியானது தொடர்சரத்தில் தொடர்சரத்தின் நீளம் எவ்வளவு உள்ளன என அறிந்து கொள்ளபயன்படுகின்றது

பின்வரும் அட்டவணையின் வாயிலாக இவ்விரண்டின் வேறுபாட்டை எளிதல் புரிந்துகொள்ளமுடியும்

 

Example Part Before Asterisk Part After Asterisk Comments
Const char *ptr Const Ptr மாறிலியானது தரவின் வகைக்கேற்ப ஒத்தியங்குவதால் மதிப்பு மாறிலியாக உள்ளது
char Const *ptr char Const ptr மாறிலியானது தரவின் வகைக்கேற்ப ஒத்தியங்குவதால் மதிப்பு மாறிலியாக உள்ளது
char *Const ptr char Const ptr மாறிலியானது சுட்டியுடன் ஒத்தியங்குவதால் சுட்டி மாறிலியாகின்றது
Const char* Const ptr Const char Const ptr மாறிலியானது சுட்டியுடனும் தரவின் வகைக்கேற்பவும் ஒத்தியங்குவதால் இவையிரண்டுமே மாறிலியாக உள்ளன

 

குறிப்பு மாறிலியில் சுட்டிகளும் மாறிலிக்கு சுட்டிகளும் ஆகிய இரண்டையும் ஒற்றையான நிரல்தொடரில் அமைத்திடமுடியுமாவென நாமும் முயன்றுபார்க்கலாமே

 

 

ஃபையர் ஃபாக்ஸ் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்

2.

 

லினக்ஸ் கெர்னெல்லின் அடிப்படையில் உருவாக்கபட்ட ஃபையர் ஃபாக்ஸ் ஓஎஸ் எனும் B2G அல்லது Bott to Geckoஎன அறியபட்ட புதிய இயக்கமுறைமை செல்லிடத்து பேசி சாதனங்களான ஸ்மார்ட் ஃபோன்,டேப்ளெட் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காகவே திறமூல இயக்கமுறைமையாக அறிமுகபடுத்தபட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் ஃபோன்களில் இணையத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்காகவே இந்த ஃபையர் ஃபாக்ஸ் ஓஎஸ் வந்துள்ளது மேலும் இது திறந்த இணைய ஏப்பிஐ,ஹெச்டிஎம்எல்5யின் பயன்பாடுகள், ஜாவா பயன்பாடுகள் போன்றவைகளை செல்லிடத்து பேசிகளிலும் செயல்படுத்தும் திறன்மிக்கதாக இருக்கின்றது இந்த ஃபையர் ஃபாக்ஸ் ஓஎஸ்ஸை செயல்படுத்துமுன் இதுஇயங்குவதற்கு உதவும் தளமான B2G அல்லது Bott to Geckoஎன்பதை உருவாக்கிடவேண்டும் அதற்காக முதலில் 30 ஜிபி வன்தட்டும் 4 ஜிபி ரேமும் 64 பிட் லினக்ஸ் வெளியீடு ஆகியவற்றை கொண்டு B2Gஐ உருவாக்குக அதன்பின்னர் இந்த ஃபையர் ஃபாக்ஸ் ஓஎஸ் அதன்மீது செயல்படசெய்யமுடியும். இந்த ஃபையர் ஃபாக்ஸ் ஓஎஸ் பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்வதற்கு https://developer.mozilla.org/en-US/Firefox_OS/   எனும் தளத்திற்கு செல்க

எம்எஸ் நிறுவனத்திந்.நெட்2015 எனும் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திகொள்க.

1

இப்போது முதன்முதலாக மைக்ரோசாப்ட் நிறுவனமானது தங்களுக்கு சொந்தமான .நெட் வரைச்சட்டத்தை திறமூலமென்பொருளாக வெளியிடசெய்து ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவாவிற்கு போட்டியாளாராக களத்தில் இறங்கியுள்ளனர் இதன்மூலம் விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ்,மேக் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா போன்று இந்த.நெட் வரைச்சட்டத்தின் திறமூலமென்பொருளும் செயல்படும் வண்ணம் வெளியிடபட்டுள்ளது எந்தவொரு தளங்களிலும் பணிபுரியும் பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்குபவர்களும் இந்த .நெட் வரைசட்டத்தை தங்களுடைய மென்பொருள் மேம்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளுமாறான அழைப்பை இதன்மூலம் மைக்ரோசாப்ட்நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் இதன்மூலம் செல்லிடத்து பேசிகளில் பயன்படும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் பயன்படும் பயன்பாட்டுமென்பொருளை உருவாக்குவதற்கான வாய்ப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது அதாவது..நெட்2015 எனும் இந்த .நெட் வரைச்சட்டத்தை ஒரேகுடையின்கீழ் அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக தற்போது இதனை வெளியிட்டுள்ளனர் இதனை பதிவிறக்கம் செய்திடவும் பயன்படுத்தி கொள்ளவும் எனும் இணையதள முகவரிக்கு செல்க.

ஆப்பிள் ஐ பேடில் இடம்சுட்டி கண்ணிற்கு புலப்படவில்லையெனில் என்னசெய்வது?

1

வழக்கமாக கணினித்திரையில் இடம்சுட்டி தோன்றுவதை போன்று ஆப்பிள் ஐபேடில் இடம்சுட்டி கண்ணிற்கு புலப்படவில்லையெனில் என்னசெய்வது என நம்மில் பலர் தவிப்பவர்கள் உள்ளனர் அஞ்சற்க இந்த ஆப்பிள் ஐபேடிலும் இடம்சுட்டி உள்ளது ஆனால் அதன் தோற்றம் வழக்கமாக கணினித்திரையில் இடம்சுட்டி தோன்றுவதை போன்று இருக்காது என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள்க பொதுவாக ”இடம்சுட்டியென்பது சிலநேரங்களில் விட்டுவிட்டு ஒளிரும் அடுத்து உள்ளீடு செய்யக்கூடிய எழுத்துருவை பிரதிபலிக்கசெய்யம் இடமாகும்”. என டிஸ்னரி காம் பொருள் எனும் இணையதளம் இந்த இடம்சுட்டிக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் தருகின்றது ஐபேடில் இடம்சுட்டி எப்போதும் கணினிபோன்று தயாராக இருக்காது ஏனெனில் நம்முடைய கைவிரல்அல்லது எழுத்தானி ஆகியவை ஐபேடில் இடம்சுட்டி ஆற்றிடும் பணியை செய்கின்றது ஆயினும் ஐபேடின் திரையில் எந்தவொரு இடத்திலாவது தட்டச்சு செய்வதற்கோ அல்லது வேறு எதையேனும் உள்ளீடு செய்வதற்கோ ஐபேடின் திரையை நிறுத்தும் செய்யம்போது உடன் ஐபேடில் இடம்சுட்டி தோன்றிடும் உள்ளீடு செய்யமுனையும்போது மட்டும் இந்த வழிமுறையில் எந்தவொரு ஐபேடிலும் இடம்சுட்டி தோன்றிடும் ஆனால் இது நாம் தட்டச்சு செய்வதற்கான இந்த சுட்டிகாட்டுதலாகும் என்பதை தெரிந்துகொள்க அடிப்படையில் மெய்நிகர் விசைப்பலகை திரையில் தோன்றியவுடன் இடம்சுட்டியும் தோன்றி நாம் உள்ளீடுஅல்லது தட்டச்சு செய்வதற்கு தயாராக இருக்கும் படத்தில் உள்ள நீலவண்ண கோடுபோன்று சொற்களுக்கு அடுத்து உள்ளதே இடம்சுட்டியாகும் 1

பல்வேறு இணையதளங்களிலும் நம்மால் உருவாக்கபட்ட நம்முடைய கணக்கினை எவ்வாறு நீக்கம் செய்வது?

2

Facebook, Skype, Twitterஎன்பனபோன்ற பிரபலமான சமூகவலைதளங்கள் முதல் மிகச் சாதராணமான வலைதளம்வரை உள்ள அனைத்து இணையதளங்களிலும் நாம் உள்நுழைவு செய்திடும்போது முதலில் நமக்கென தனியாக ஒரு கணக்கினை தொடங்கிய பின்னரே உள்நுழைவு செய்திடமுடியும்

இவ்வாறு எந்தவொரு இணைய தளத்திற்குள்ளும் உள்நுழைவு செய்வதற்காக ஏராளமான அளவில் நம்முடைய கணக்கினை தொடங்கியிருப்போம் ஆயினும் அவைகளை   நீக்கம்செய்வது என்பது மிக சிரமமான பணியாகும் முதலில் நீக்கம் செய்திடவிரும்பும் அனைத்து இணையதளத்தினையும் அகரவரிசைபடி வரிசைபடுத்திகொள்க இந்த பட்டியலானது வெண்மை வண்ணம்,சாம்பல் வண்ணம் ,கருமை வண்ணம் என இருக்கும் வெண்மை வண்ணமும்,சாம்பல் வண்ணமும் நீக்குவதற்கு எளிதானது அந்த இணையதள கணக்குகளை நீக்கம் செய்துவிடலாம் கருமை வண்ணத்திலிருக்கும் வகைளைமட்டும் நீக்கம் செய்திடமுடியாது இவ்வாறு நீக்கம் செய்திடவிரும்பும் இணையதளத்தின் கணக்குகளை எளிதாக நீக்கம் செய்திடமுடியும் மேலும் விவரங்களுக்கும், வழிமுறைகளுக்கும் இது தொடர்பான சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கும் http://www.accountkiller.com/en/ என்ற இணைய தளத்திற்கு செல்க

Previous Older Entries