கணினியின் மென்பொருளிற்கான காப்புரிமைகளின் வகை

பொதுவாக எந்தவொரு மென்பொருளிற்குமான மூலக்குறிமுறைகளை வழங்குவதாலேயே அந்த மென்பொருளானது திறமூலமென்பொருள் எனகுறிப்பிடமுடியாது.அதற்காக பின்வரும்நிபந்தனைகள் பூர்த்தியாகவேண்டும்

1 அனைவருக்கும் வழங்கிட தயாராக இருக்கவேண்டும்

2 மூலக்குறிமுறைகள் விற்பனையாக இல்லாமல் இலவசமாக வழங்கபடவேண்டும்

3 இந்த குறிமுறைகளுக்கான அனுமதியானது மூலக்குறிமுறைகளிலிருந்து பெறுபவர் விரும்பியவாறு மாறுதல் செய்து இதே பொது அனுமதியின் கீழ் வழங்கிட அனுமதிப்பதாக இருக்கவேண்டும்

4 மூலக்குறிமுறைகளின் ஆசிரியரின் குறிமுறைகளோடு ஒருங்கிணைந்ததாக இருந்திட வேண்டும்

5 ஒரு குழுவிற்குள் மட்டும் அல்லது குறி்ப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் இந்த மூலக்குறிமுறைகள் இலவசமாக வழங்கபடும் என்ற எந்தவித கட்டுப்பாடும் விதிப்பதாக இருக்ககூடாது

6 குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு மட்டும்தான் இந்த மூலக்குறிமுறைகளை பயன்படுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அல்லது கட்டுபாடு விதிக்ககூடாது

7 இதற்கான அனுமதியானது மூலக்குறிமுறைகளை மேம்படுத்தி மறுவெளியீடு செய்திடும்போது குறிப்பிட்ட தனியான அனுமதிவேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் முதலில் எந்தவகையில் அனுமதி அளிக்கபட்டதோஅதே அனுமதியை மறுவிநியோகத்திலும் இருக்கவேண்டும்

8 ஒரே வகை கணினியின் அமைவில் மட்டுமே பயன்படுத்திகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை இருக்ககூடாது

9 மென்பொருளானது வழக்கமான தொழில்நுட்பத்தை சார்ந்ததாக இருக்கவேண்டும்

இவ்வாறான மேற்காணும் நிபந்தனைகளை தொடர்ந்துஇப்போதுஇந்த நிபந்தனைகளின் அடிப்படையில் மிகப்பிரபலமான மென்பொருட்களின் அனுமதியை பற்றி இப்போது காணலாம் அதற்குமுன் Copyleft license என்னவென தெரிந்துகொள்வோம் மென்பொருளை தாம்விரும்பியவாறு மாறுதல் செய்து அல்லது விரிவாக்கம் செய்து மேம்படுத்தி சுதந்திரமாக மறுவிநியோகம் செய்வதையே Copyleft license என அழைப்பார்கள் GPL , LGPL போன்ற அனுமதி இந்த Copyleft license வகையை சேர்ந்ததாகும்

7.1

7-1

1 General Public License (GPL) இது மிகப்பிரபலமான பெரும்பாலானவர்களால் அனுமதிக்கபடும் பொதுஅனுமதிகாப்புரிமையாகும் இதனுடைய GPL 3 என்பது சமீபத்திய பொதுஅனுமதி பதிப்பாகும் ஒரு GPL அனுமதிபெற்ற மென்பொருளிலிருந்து உருவாக்கி வெளியீடு செய்யபடும் புதிய மென்பொருளும் இதே GPL காப்புரிமையில் வழங்கபடவேண்டும் நம்முடைய மென்பொருளுடனேயே சேர்த்துஇந்த GPL காப்புரிமையை வழங்கபடவேண்டும் நகலெடுத்தல் மாறுதல் செய்தல் விநியோகம் செய்தல் ஆகிய அனைத்துவகை காப்புரிமையும் இந்த GPL ஒரு மென்பொருளிற்கான உரிமை வழங்குகின்றது

Lesser General Public License (LGPL) ஒரு அனுமதிபெற்ற மென்பொருளிலிருந்து உருவாக்கி வெளியீடு செய்யபடும் புதிய மென்பொருளிற்கான உரிமையை அதை உருவாக்குபவர் விரும்பினால் அனுமதி பெற்று இயக்குமாறும் அல்லது LGPL காப்புரிமையுடனும் விநியோகிக்கலாம்

Berkeley Software Distribution License என்பதை சுருக்கமாக (BSDLicense )என அழைப்பார்கள் பொதுவாக இந்த BSDLicense ஆனது நான்கு ஒப்பந்த பிரிவு காப்புரிமையாகும் ஆனால் நடைமுறையில் New BSDLicense என்ற மூன்று ஒப்பந்த பிரிவு காப்புரிமையும் Simplified BSDLicense என்ற இரண்டு ஒப்பந்த பிரிவு காப்புரிமையும் (இந்த வகையில் மூன்றாவது நான்காவது பிரிவு தவிர்க்கபட்டு முதலிரண்டு பிரிவுமட்டும் கைகொள்ளபடுகின்றன) கொண்டதாக வகைபடுத்தபட்டுள்ளன

அனுமதி பெற்ற மென்பொருளிலிருந்து உருவாக்கபடும் மென்பொருளானது அதை உருவாக்குபவரின் முன்அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்திட முடியும் என்ற உரிமையை உருவாக்குபவருக்கு இந்த BSDLicense வழங்குகின்றது

Appache License இது BSDLicense போன்று இதன் உரிமையாளர் விரும்பினால் முன்அனுமதிபெற்ற பின்னரே பயன்படுத்திட முடியும் என மட்டறுக்கலாம் அல்லது யார்வேண்டுமானாலும் முன்அனுமதி பெறாமல்பயன்படுத்தி கொள்ளலாம் என பொது அனுமதி வழங்கும் உரிமையை இந்த காப்புரிமை வழங்குகின்றது இந்த வகைகாப்புரிமையில் ஒரு மென்பொருள் கோப்பின் பதிப்புரிமை ,தனிக்காப்பு, வியாபார சின்னம் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கபடுகின்றன இந்த அப்பாச்சி காப்புரிமையானது எல்லாநட்டிற்கும் பொதுவான காப்புரிமையாகும்

Creqtive Common License (CCL) இது ஒரு பொது பதிப்பு காப்புரிமையாகும் வடிவமைப்பு இசை கலை இலக்கியம் போன்றவைகளில் இந்த CCL காப்புரிமை வழங்கபடுகின்றது

ஃபயர்வால் பில்டரின் மூலம் நம்முடைய வலைபின்னல் அமைப்பை பாதுகாப்போம்

தேவையற்ற மென்பொருளை நீக்குதல் ,தேவையற்ற உள்நுழைவை தடுத்தல், தேவையற்ற சேவையை நீக்குதல் என்பன போன்ற பணிகளின்மூலம் நம்முடைய கணினியின் வளங்கள் பாதுகாக்கபடுகின்றன . மேலும் வலைபின்னலின் நுழைவு வாயிலை மூடுதல், நெருப்பு சுவர்(Firewall) பாதுகாப்ப அளித்தல் என்பன போன்ற வேறுவகையிலும் கணினியின் வளங்கள் பாதுகாக்கபடுகின்றன. ஒரு தனியான வலைபின்னலை மற்றொரு வலைபின்னலின் தாக்குதலிலிருந்து இந்த நெருப்புசுவர்(Firewall)பாதுகாப்பு சிறந்த அரனாக திகழ்கின்றது . சேவையாளர் பகுதியல் தேக்கிவைக்கபட்டுள்ள தகவல்களையும் தரவுகளையும் தேவையற்ற புதிய நபர் அத்துமீறி உள்நுழைவு செய்து அபகரித்திடாமல் இந்த நெருப்புசுவர்(Firewall) பாதுகாப்பு அளிக்கின்றது.

இவ்வாறான பாதுகாபபினை அளித்திடும் இந்த ஃபயர்வால் பில்டர் ஆனது ஒரு திறமூல பயன்பாடாகும் இது குறிப்பிட்ட பாதுக்காப்பு கட்டளையை உருவாக்குகின்றது

இது Hrசேவையாளரின் முகவராக செயல்படும் ஐபி முகவரியை உருவாக்கிட அனுமதிக்கின்றது. குழுவான இலக்குகளை(objects) உருவாக்கி அதன்மூலம் நெருப்புசுவருக்கான விதியை உருவாக்கிட அனுமதிக்கின்றது

இவ்வாறு உருவாக்கபட்ட இலக்குகள்(objects) எங்கு பயன்படுத்தபடுகின்றன என சுலபமாக இதில் அறிந்து கொள்ளமுடியும்

நெருப்புசுவருக்கான(Firewall) விதியானது முன்கூட்டியே வடிவமைக்கபட்ட மாதிரி படிமமாக தயார்நிலையில் இதில் உள்ளது

இது ஓப்பன் பிஎஸ்டி, ஃப்ரி பிஎஸ்டி , லினக்ஸ் ஆகிய தளங்களை ஆதரிக்கின்றது இது ஒரு இலக்குகளை(objects) அடிப்படை கருத்தமைவாக கொண்டதாகும் வலைபின்னலின் ஐபி ,ஐபி முகவரி போன்றவையே இதனுடைய இலக்காகும்(object) இவையே ஃபயர்வாலின் விதியை உருவாக்க பயன்படுகின்றது. இலக்குகள்(objects) நூலகத்தில் தேக்கிவைக்கபடுகின்றன

fwbuilder-5.1.0.3599.exe என்ற கோப்பினை http://www.fwbuilder.org/என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் இந்த கோப்பினை தெரிவுசெய்து இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கியவுடன் தோன்றிடும் வழிகாட்டியினுடைய படிப்படியான கட்டளையின்மூலம் இதனை நிறுவி பயன்படுத்தி கொள்க

8.1

8.1

 

மின்னோபோர்டு எனும் கணினிக்கான திறமூல வன்பொருள்

 

பொதுவாக நாம் இதுவரை கணினியின் மென்பொருளிற்கு மட்டுமே திறமூல மென்பொருட்கள் உள்ளன என தவறாக எண்ணிஇருந்து வருகின்றோம் ஆனால் தற்போது கணினியினுடைய வன்பொருட்களில் கூட திறமூல வன்பொருட்கள் உள்ளன மின்னோபோர்டு என்பதும் இவ்வாறானதொரு கணினியினுடைய திறமூல வன்பொருள் ஆகும் .இது இன்டெல்X86இன் கட்டமைப்பை அடிப்படையாக கொண்டதாகும் இது yacto projectஇலிருந்து உருவாக்கபட்ட ஒரு திறமூல வன்பொருளாகும் இந்த மின்னோபோர்டு ஆனது நம்முடைய சொந்த லினக்ஸ் உட்பொதிந்த வழங்குநரை நாமே உருவாக்கிட அனுமதிக்கின்றது இதில் luresஎன்ற கூடுதல் இணைப்பின்மூலம் இந்த மின்னோபோர்உருவாக்கிடும் பணியை பூர்த்தி செய்து முடிவிற்கு கொண்டுவரமுடியும் இதன் மூலம் இந்த lures ஆனது மின்னோபோர்டின் செயல்களை கூடுதலாக உயர்த்துகின்றது. இந்த மின்னோபோர்டில் உள்ள துனைஉறுப்புகள் பின்வருமாறு

செயலி

1GHz Intel Atom E640 processor,

1GB DDR2 RAM

இணைப்பான்

SPI,GPIO,I2C,CAN,SATA,SDIO,PCI Express Micro SD card slot,DVI

Gigabit Ethernet

USB host(x2)

மென்பொருள்

4GBmicro Sd card உடன் உட்பொதிந்த லினக்ஸ் இயக்கமுறைமையான AngstomOS

இதன் அளவு

    1. X 10.66 (4.2” x 4.2”)

இந்த மின்னோபோர்டை செயல்படுத்திடும்போது ஏற்படும் சந்தேகங்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று தீர்வுசெய்து கொள்க

http://www.elinux.org/Minnowboard/ , http://www.minowboard.org/

இந்த மின்னோபோர்டை ஆதரிக்கும் இயக்கமுறைமையாக தற்போது AngstomOS என்பது உள்ளது ஆயினும் இது ஆண்ட்ராய்டு ,உபுண்டு ஆகிய லினக்ஸ் இயக்கமுறைமைகளையும் ஆதரிக்கின்றது

இதனை 199 யூஎஸ் டாலரில் உலகமெலாம் கடைவிரித்துள்ள Mouser,DigitKey,Element14,Special Computing ஆகிய விநியோகஸ்தர்களின் மூலம் பெறமுடியும்

இந்த மின்னோபோர்டினுடைய செயலை lures எனும் கூடுதல் இணைப்பின் வாயிலாக விரிவாக்கம் செய்திடமுடியும் என கண்டோம் இந்த மின்னோபோர்டில் BreakoutBoard (BOB),trainer lure,beacon lure ஆகிய luresஇன் வகைகளில் ஒன்றை பயன்படுத்தி கூடுதல் இணைப்பை பெற்றிடுக

இந்த lures ஐ பற்றி மேலும் அறிந்த கொள்ள http://www.elinux.org/Minnoboard:Lures_Specificationஎன்ற இணைய தளத்திற்கு செல்க

இந்த மின்னோபோர்டினை கொள்முதல் செய்திடும்போது ஒரு மின்னோபோர்டு ,ஒரு யூஎஸ்பி கேபில் ,4 ஜீபி மைக்ரோஎஸ்டி கார்டு, பவர்அடாப்டர் ஆகியன வழங்கபடுகின்றதாவென சரிபார்த்திடுக .

மேலும் விவரங்களுக்கு http://www.minowboard.org/என்ற இணைய தளத்திற்கு செல்க

9.1

9.1

ஓப்பன் எஸ்எஸ் ஹெச்சின் பயன்கள்

ஓப்பன் எஸ்எஸ் ஹெச் என்பது இலவசபாதுகாப்பான உறைபொதி மென்பொருளாகும் (Free Secure Shell software) இது மரபொழுங்கை (Protocol)அடிப்படையாக கொண்ட இணைப்பு, பாதுகாப்பு ஆகிய மிகப்பெரிய சேவைகளை வழங்குகின்றது டெல்நெட், ஆர்லாகின் போன்ற பயன்பாட்டிற்கு மாற்றாக அமைகின்றது இது டெல்நெட்டினை போன்று நெறிமுறைகூட்டு தொகுப்பினை(protocol stack) அமைத்து டெமியான் சேவையாளர் போன்று லினக்ஸ் சேவையாளரில் இயங்கசெய்து அதன்வாயிலாக நமக்கு தேவையான சேவையை வழங்குகின்றது வாடிக்கையாளர் புட்டி(putty) என்ற பயன்பாட்டின் வாயிலாக இந்த ஓப்பன் எஸ்எஸ் ஹெச் சேவையாளருடன் இணைப்பை ஏற்படுத்தி கொள்ளமுடியும் இது யுனிக்ஸ் விண்டோ தளங்களில் லினக்ஸின் உள்கட்டமைப்புடன் தன்னுடைய சேவையை எப்போதும் வழங்க தயாராக உள்ளது இயல்புநிலையில் டிசிப்பி 22 வாயிலின்(TCP 22 port) வழியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கின்றது இது டெல்நெட்டின் மரபொழுங்கினை(protocol) பின்பற்றினாலும் தரவுகளின் பாதுகாப்பினை இது முதலில் உறுதி செய்கின்றது. தரவுகளை மற்றவர்களுக்கு மாற்றி அனுப்பிடும்போது மறைக்குறியீடாக்குதலை(cryptography) பயன்படுத்தி அங்கீகாரம்பெற்றவர்கள்மட்டுமே(authenticated) அந்த தரவுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு உறுதிசெய்கின்றது அதன்மூலம் கம்பி வழியாக அனுப்பபடும் தரவுகளை ஒருங்கிணைத்தல் பாதுகாத்தல் உரியவருக்கு கொண்டு சேர்த்தல் ஆகியபணிகளை உறுதிசெய்கின்றது. வாடிக்கையாளர் சேவையாளர் கைகொடுத்தல் (Client -server handshake),அங்கீகாரம்பெறுதல் (authentication), பாதுகாப்பாக தரவுகளை பரிமாறிகொள்ளுதல் (secure data exchange) ஆகிய மூன்று அடிப்படை படிமுறைகள் பின்பற்றபடுகின்றன

முதலில் இந்த வாடிக்கையாளர் சேவையாளர் கைகொடுத்தல் (Client -server handshake), படிமுறையில் வாடிக்கையாளருக்கும் சேவையாளருக்கும் இடைய இணைப்பை ஏற்படுத்தி ஓப்பன் எஸ்எஸ் ஹெச்சின் பதிப்பு மறையெழுத்த தருக்க படிமுறை பின்பற்றபடுகின்றதாவென சரிபார்த்து உறுதி செய்யபடுகின்றது அதன்பின் அங்கீகாரம்பெறுதல் (authentication) என்ற இரண்டாவது படிமுறையில் தரவுகளை பெறுவதற்காக தொடர்பு கொல்பவர் அங்கிகாரம் பெற்றநபரா என அவருடைய கட்டைவிரல் ரேகை பதிவு அல்லது வேறுநம்பத்தகுந்த வகையில் உறுதி செய்யபடுகின்றது அதன்பின் இறுதியாக தரவுகள் மறைகுறியீடாக்குதல் மூலம் அனுப்பபடுகின்றது ஓப்பன் எஸ்எஸ் ஹெச் ஆனது தனிப்பட்ட பயன்பாடு அன்று sshd,ssh,sftp,scp,ssh-keygen ஆகியவை சேர்ந்ததே இந்த ஓப்பன் எஸ்எஸ் ஹெச் பயன்பாடாகும் என அறிநதுகொள்க இந்த OpenSSH பற்றி மேலும அறிந்துகொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://openssh.com/என்ற இணைய தளத்திற்கு செல்க

கோ எனும் புதிய நிரல்தொடர் எழுதுவதற்கான மொழி

கணினியில் மென்பொருள் உருவாக்குவதற்காக ஏராளமான அளவில்    ஜாவா சி,சி++,பைத்தான் ,கோபால், போர்ட்ரான் என்பனபோன்ற மொழிகள் இருந்தாலும் அவ்வப்போது புதிய புதிய மொழிகள் உருவாகி வளர்ந்து கொண்டே உள்ளன அந்த வகையில் புதியதாக கோ எனும் மொழி  2007 ஆம் ஆண்டு கூகுளின் செயல்திட்டத்தின் மூலம் உருவாக்கபட்டாலும் 2009 ஆண்டு முதல்தான்  திறமூல மென்பொருள் மொழியாக மாறியது

இந்த கோ எனும் மொழியானது மென்பொருள் உருவாக்கிடும் பணியை ஒரு இனிய பொழுதுபோக்காக ஆக்குகின்றது

இதனுடைய குறிமுறைவரிகள் மிகஎளிமையானதும் தெளிவானதும் ஆகஉள்ளது . இது வழிமுறை கட்டளைத்தொடரையும்,  பொருள்நோக்கு கட்டளைத்தொடரையும்  ஆதரிக்கின்றது ,  இது பிழைகளை சேகரித்து சரிசெய்திட அனுமதிக்கின்றது .இது UTF-8ஐ குறிமுறை எழுதவதற்காக  ஒருங்குகுறிமுறையில் எழுதும் மொழியின் எழுத்துகளை பயன்படுத்திட அனுமதிக்கின்றது

இது குறிமுறைகளை ஒரு மிகவிரைவான இயந்திர மொழிக்கு மாற்றிடும் திறன்கொண்டது  இது வகைபாதுகாப்பும் நினைவக பாதுகாப்பும் கொண்டது .இணைய சேவையாளர் போன்ற அமைவு மொழியாக இது உள்ளதால் ஒரு மென்பொருளை மிக எளிதாக உருவாக்கிட அனுமதிக்கின்றது

. இதனுடைய இலக்கணமானது பழமையான சி மொழியை போன்றுள்ளது  இதில் குறிமுறை அட்டவணையில்லாமல்  ஒருசில திறவுச்சொற்களையே கட்டளைத்தொடரில் இடைமுறிப்பாக பயன்படுத்தி கொள்கின்றது  இது Orthogonalஎனும் கருத்தமைவை கொண்டது

இது    ஜாவா ,சி++ ஆகிய மொழிக்கு மாற்றீடாக விளங்குகின்றது . உரைநிரல் மொழி (scripting language) பயன்படுத்திடும் இடங்களில் இந்த கோ எனும் மொழி அவைகளுக்கு மாற்றாக பயன்படுகின்றது

பின்வருமாறு கோ மொழியின் நம்முடைய முதல் கட்டளைவரிகளை உருவாக்கி  hello.go என்ற கோப்பாக சேமித்திடுக

package main

import “fmt”

func main() {

fmt.printin(“Hello, World !”)

}

பின்னர் இதனை பின்வரும் கட்டளை வரிகள் மூலம் இயக்குக

$ go run hello.go

உடன்   Hello,World !    என்றவாறு அதன் வெளியீடு இருக்கும்

இதனை http://golang.org/ என்ற தளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

6.1

 

6.1

நிரல் தொடர்மொழிகளை உருவாக்கிடும்போது உதவிடும் கருவிகள்

தற்போது நம்முடைய வாழ்வில் என்னற்ற சவால்களையும் ,பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றோம்  அவைகளனைத்தும் புதிய கண்டுபிடிப்பின் வாயிலாகவும் ஆய்வின்வாயிலாகவும் வெற்றிகொள்ளபட்டு நம்முடைய வாழ்வு சுலபமாக ஆக்கபடுகின்றது. பொதுவாக நம்முடைய குறிக்கோளினை அடைய தற்போது ஏராளமான கருவிகளும் கண்டுபிடிப்புகளும் பயன்படுகின்றன. உதாரணமாக காலையில் நம்மை துயிலெழுப்பவதிலிருந்து தொடங்கி இரவு உறங்க செல்வதுவரை  இவ்வாறான கருவிகளின் நம்முடைய வாழ்வில் பிரிக்கமுடியாததொரு அங்கமாக மாறிவிடுகின்றன அதனால் அந்த கருவிகள் இல்லையெனில் நம்முடைய வாழ்வேஇல்லை யெனும் நிலையில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்

எந்தவொரு கணினியிலும் ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழலானது(Integrated Development Environment)   ஒருசிறந்த திறன்வாய்ந்த கருவியாக அதாவது ஒற்றைவாயிலின் வழியாகவே புதிய மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி ஒருங்கிணைத்து கட்டமைக்கபட்டு செயல்படுத்தி பார்த்து பிழைஏதும் இருந்தால்அதனை களைந்து சரிசெய்வதுவரை  அனைத்து செயல்களையும் செயல்படுத்திடும் வல்லமை கொண்டதாக இது திகழ்கின்றது  இந்த அனைத்து செயல்களும் குறிப்பிட்ட நிரல் தொடர்மொழிகளில் உருவாக்கபட்ட கருவிகளாக உள்ளன அவ்வாறானவைகளில் ஒருசில பின்வருமாறு

wxWidgets இது விண்டோ,லினக்ஸ்,செல்லிடத்து பேசி போன்ற அனைத்து இயக்கமுறைமை தளத்திலும் செயல்படும் கருவிகளின் நூலகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது  இது மிகபிரபலமான பைத்தான்,பியர்ல்,ரூபி போன்ற மொழிகளுடன் கட்டபட்டது ஆகும் .கூகுளின்டெக்ஸ்டாப் வாடிக்கையாளர் பிரிவு இந்த wxpython  ஐ பயன்படுத்தி கொள்கின்றது

Tcl/Tk  கருவி வழிகட்டளைமொழியானது(Tool Command Language)சுருக்கமாக Tclஎன அழைக்கபடும். இது ஒவ்வொரு செயலையும் ஒரு கட்டளைவாயிலாக விவரிக்கும் ஒருகுறிமுறை மொழியாகும் . கருவி பெட்டியானது(Tool kit)  சுருக்கமாக Tk என அழைக்கபடும்  இது வழக்கமாக எந்த ஒரு பயன்பாட்டிலும் உரையாடல் பெட்டி ,அதன் சுற்றெல்லை , பட்டி, பொத்தான், பட்டியல் போன்றவைகளை  உருவாக்கிட தேவையான நூலகத்தை அனைத்து இயக்கமுறைமை  தளத்திலும் செயல்படும் வண்ணம் வழங்குகின்றது  மேலும் இது லினக்ஸ் மேக்ஸ், விண்டோ போன்ற இயக்கமுறைமைகளில் செயல்படுகின்றது அதுமட்டுமின்றி இது வரைகலை பயனாளர் இடைமுகத்தை உருவாக்கிட பயன்படுகின்றது

Eclipse  என்பது ஜாவா சி,சி++,பைத்தான் ,கோபால், போர்ட்ரான் என்பனபோன்ற மொழிகளில் பயன்பாடுகளை உருவாக்கிடும்போது கூடுதல் இணைப்பு கருவியாக பயன்படுத்தி கொள்ளபடுகின்றது

5.1

5.1

 

NetBeans  ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழலில்Integrated Development Environment)   சி,சி++, போன்ற மொழிகளில்  விண்டோ லினக்ஸ் ஆகிய தளங்களில் பயன்பாடுகளை உருவாக்கிட பயன்படுகின்றது  இணைய பயன்பாடு செல்லிடத்து ,பேசிக்கான பயன்பாடுகள் போன்றவைகளை உருவாக்குவதற்கு தேவையான தயார் நிலை கருவிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது

5.2

5.2

 

Qt   இது ஒரு வரைகலை இடைமுகசூழலில் செயல்படும்  பயன்பாடுகளை உருவாக்கிட உதவும் கருவியாக உள்ளது  இது மற்ற  மொழிகளுடனும்  கட்டுண்டு உள்ளது  ஆயினும் இது மிகச்சிறப்பாக  சி++, மொழியில் மட்டும் கூடுதல் கருவியாக செயல்படுகின்றது  இது ஆண்ட்ராய்டு ,பிளாக்பெர்ரி போன்ற பல்வேறு தளங்களில் செயல்படக்கூடியது

மேலே கூறிய கருவிகளை நாம் மென்பொருள் உருவாக்குவதற்காக பயன்படுத்திடும் மொழிகளில் குறிமுறைகளை உருவாக்கிடும்போது பயன்படுத்தி மென்பொருளிற்கான கட்டளைவரி குறிமுறைகள் எழுதும் பணியை விரைவாக முடித்து கொள்க

5.3

5.3

சுமத்திரா பிடிஎஃப் எனும் திறமூல மென்பொருள்

பொதுவாக தற்போது நாம் அனைவரும் பிடிஎஃப் கோப்பினை படிப்பதற்கு அடோப் பிடிஎஃப் ரீடர் என்பதையே பயன்படுத்திவருகின்றோம்  இந்த அடோப் பிடிஎஃப் ரீடருக்கு மாற்றாக  ஃபாக்ஸிட் ரீடர் ,பிடிஎஃப் எக்சேஞ்சர் ,என்பன போன்ற இலவச மென்பொருட்கள் தற்போது நடப்பில் கிடைத்தாலும் இவையனைத்தும் திறமூல மென்பொருட்கள் அன்று இவை இலவச மென்பொருட்கள் மட்டுமேயாகும் ஆனால் சுமத்திரா பிடிஎஃப் என்ற மென்பொருளானது ஒரு திறமூல மென்பொருளாகும்.  இதனை கொண்டு  ஒரு பிடிஎஃப் ஆவனத்தை 6400% மடங்குவரை பெரியதாக்கி படிக்கமுடியும் .ஆவணத்தில் உள்ள ஏதேனுமொரு சொல்லை ஆவண முழுவதும் தேடிபிடித்து தெரிந்து கொள்ளமுடியும்.ஆவணத்தின் பக்கங்களை சுழற்சிமுறையில் பார்க்கமுடியும். நடைமுறையில் உள்ள பல்வேறுமொழிகளிலும் இந்த மென்பொருளை பயனபடுத்தி கொள்ளமுடியும்.  இது மிகச்சாதாரணமானது மட்டுமன்று கையடக்கமானதாகவும் திகழ்கின்றது அதனால் இதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ளமுடியும் 

4.1

4.1

இதனை http://sourceforge.net/projects/sumatrapdf.mirror/ என்ற தளத்திலிருந்து Sumatra PDF 2.2  என்ற  சமீபத்திய இதனுடைய பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

 

 

வெர்ச்சுவல் பாக்ஸ் எனும் திறமூலமென்பொருள்

   இயக்கமுறைமைக்குள் மற்றொரு இயக்கமுறைமையை இயங்கசெய்ய பயன்படுவதே இந்த  மெய்நிகர் கணினி எனும் அமைவாகும் அதாவது கணினிக்குள் மற்றொரு கணினி இயங்குவதை போன்று செயல்படுவதை மெய்நிகர் கணினி என அழைப்பார்கள் இவ்வாறு  ஒரு கணினிக்குள் மற்றொரு மெய்நிகர் கணினியை செயல்படுத்திட VirtualBox எனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது  இதனை சன்மைக்ரோசிஸ்டம்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கி பராமரித்து வருகின்றது  நாம் புதிய இயக்கமுறைமைக்கு மாறுவதால் நம்முடைய கணினியில் கைவசமுள்ள தரவுகள் அழிந்துவிடுமோ என  நம்மில் பலர்  அதிகஅளவிற்கு பயப்படுவோம் அவ்வாறானவர்களின் பயத்தினை போக்கி தாம் செயல்படுத்தும் சூழலிலேயே ஒரு  உரையாடல் பெட்டிபோன்ற அமைவில் புதிய இயக்கமுறைமையை செயல்படுத்தி நன்றாக செயல்படுகின்றது என நம்முடைய மனதில் தைரியம் வந்த பிறகு புதிய இயக்கமுறைமைக்கு நாம் மாறலாம் என தெளிவு படுத்தி கொள்ள இந்த   VirtualBox எனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது.

நடப்பு இயக்க முறைமையின் சூழலில் புதிய இயக்கமுறைமையும் செயல்படுமாறு செய்திட இந்த  VirtualBox எனும் திறமூல மென்பொருள் உதவிபுரிகின்றது.இது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய இயக்க முறைமைக்குள் செயல்படுகின்றது . இதனை செயல்படுத்தி பார்ப்பதற்காக  http://download.virtualbox.org/virtualbox/UserManual.pdf  என்பதில் கூறப்பட்டுள்ள படிப்படியான வழிமுறையை முதலில் நன்கு கற்றறிந்துகொண்டு அதன்பின் இந்த மெய்நிகர் கணினியை நடைமுறையில் செயல்படுத்தி பார்த்திடுக   http://www.virtualbox.org/wiki/Downloads என்ற இணைய தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க.

3.1

3.1

 

முதலில் இதனை செயல்படுத்துவதற்கான ரேமின் அளவை 75 சதவிகிதமாக இதனை அமைவு செய்திடும்போது குறிப்பிடுக .அதன்மூலம் மற்ற மென்பொருட்களை ஒரேசமயத்தில் இணையாக சிரமமின்றி செயல்படுத்திடமுடியும் . இந்த VirtualBoxஇன்மீது இடம்சுட்டியை வைத்து சொடுக்குவதன் மூலம் நடப்பு இயக்கமுறைமையிலிருந்து மெய்நிகர் கணினியில் செயல்படும் இயக்கமுறைமைக்கு மாறிகொள்ளமுடியும் பின்னர் நடப்பு கணினியின் இயக்கமுறைமைக்கு மாறிட விசைப்பலகையில் வலதுபுறமாக உள்ள Ctrlஎன்ற விசையை தெரிவுசெய்து அழுத்துக உடன்  இடம்சுட்டியானது நடப்பு கணினியின் இயக்கமுறைமைக்கு மாறிவிடும்.

 

நாம் விரும்பும் படத்தினையே ஒரு மடிப்பகத்தின் பின்புலமாக அமைத்திடமுடியும்

நம்முடைய கணினியின் 95_3_1.jpgஎன்ற படம்  நாம் அடிக்கடி பயன்படுத்திடும் மடிப்பக்ததில் இருப்பதாக கொள்வோம்  முதலில் நோட்பேடு எனும் பயன்பாட்டினை செயல்படச்செய்து அதன் திரையில் பின்வரும்வரிகளை தவறில்லாமல் தட்டச்சு செய்திடுக

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

ICONAREA_IMAGE=95_3_1.jpg

ICONAREA_TEXT=255

பின்னர் இதனை  desktop.ini என்ற பெயரில்  ஒரு கோப்பாக சேமித்திடுக அதன்பின்னர்  விசைப்பலகையிலுள்ள F5என்ற செயலி விசையை அழுத்துக உடன் இந்த படமானது நம்முடைய மடிப்பகத்தின் பின்புல தோற்றமாக மாறி அமையும்

2.1

2.1

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-98

 

கிளைபிரிதல்(branching)   ஒரு கட்டளைத்தொடரில் குறிப்பிட்ட நிபந்தனை நிறைவுபெறும்வரை அடுத்த செயல் நடைபெறாமல் கட்டுபடுத்திட இந்த கிளைபிரிதல் எனும் கருத்தமைவு பயன்படுகின்றது

1) If..Then..Else என்பது நிரல்தொடர் எழுதிடும் பெரும்பாலானவர்களால் தம்முடைய கட்டளைவரிகளில் பயன்படுத்திடும் ஒரு கிளைபிரிதல் கட்டளையாகும்

If A>3 Then B=2 Else B=0

என்றவாறு  ஒற்றைவரிக்குள் இந்த If..Then..Else எனும் கிளைபிரிதல் கட்டளையை குறிப்பிட முடியும்  இதில் Aஇன் மதிப்பு 3 இற்கு மேல் இருக்கும் வரை  Bஇன் மதிப்பு  2 இற்கு சமமாக இருக்கும். இல்லையெனில் Bஇன் மதிப்பு 0 ஆகும் .

 

2) Select …Case என்பது மற்றொரு கிளைபிரிதல் கட்டளையாகும்

 

Select Case Var

Case Var >8 And Var <11

‘…Var is 0

Case Else

‘ …all other instances

End Select

இந்த கட்டளைவரித்தொடரில் மாறியின் மதிப்பு  8 இற்கும் 11 இற்கும் இடையிலுள்ளவரை கூற்று உண்மையாகும் இல்லையெனில் அல்லது தவறெனில் அதாவது மாறியின் மதிப்பு 0 ஆகும் .

சுற்றுகள் (Loops) இந்த கட்டளையானது நாம் குறிப்பிடும் எண்ணிக்கைவரை திரும்ப திரும்ப  அதே இடத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒருசிலவற்றை கணக்கற்ற நிலையில் சுற்றிடுமாறு செய்திடுவார்கள்

1 For..Next எனும் கூற்று  குறிப்பிட்ட எண்ணிக்கைவரை சுற்றிக்கொண்டே இருக்கமாறு செய்கின்றது

Dim I

For I = 1 to 10  Step 1

If I = 5 Then

Exit For

End IF

‘…. Inner part of loop

Next I

இந்த நிரல் தொடரில் Iஇனுடைய மதிப்பு 1 முதல் 10  வரை ஒவ்வொன்றாக மதிப்பை கூட்டிக்கொண்டே 5 வரை சென்றிடுமாறும் 5 வந்தவுடன் வெளியேறுமாறும் இல்லையெனில் அடுத்த I இன் மதிப்பை கூட்டிகொண்டு சென்றிடுமாறு கட்டளை கொடுக்கபட்டுள்ளது

2    For ..Each  எனும் கூற்று ஆனது  For..Next எனும் கூற்று போன்று வெளிப்படையாக குறிப்பிட்ட எண்ணிக்கைவரை சுற்றிக்கொண்டே இருக்கமாறு செய்யாது ஆயினும் கட்டளையில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றும் வரை சுற்றிகொண்டே இருந்திடுமாறு செய்கின்றது

Const d1 -2

Const d2=3

Const d3=2

Dim 1

Dim a(d1,d2,d3)

For Each I In a()

‘…. Inner part of loop

Next I

இதில்  கொடுத்துள்ள அனைத்து  எண்ணிக்கையும் சேர்த்து 36 முறை சுற்றிடுமாறு செய்கின்றது

3 Do …Loop   எனும் கூற்று ஆனது குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை சுற்றிக்கொண்டே இருக்குமாறு செய்கின்றது

 

Do

‘….some international calculations

If A = 4 Then Exit Do

‘ … other instructions

Loop

இதில் Aஇன் மதிப்பு 4 ஆகும் வரை சுற்றிகொண்டிருக்குமாறும் 4ஆக மாறினால் வெளியேறிடுமாறும் செய்யபட்டுள்ளது

 

4 While ..Wend எனும் கூற்றில் Do While போன்று வெளியேறுவதற்கான கட்டளை இல்லை என்பதே இதனுடைய மிகமுக்கியமான குறைபாடாகும்

 

செயல்முறைகளும் செயலிகளும்(Procedures and Functions)

 

இவை ஒரு சிக்கலான மிகநீண்ட கட்டளை தொடர்வரிகளில் சிறு சிறு செயல்களை தனித்தனியாக பிரித்து செயல்படுத்திடுமாறு செய்கின்றன அதன்பின்முக்கிய தொடருக்கு அதன் முடிவை வழங்கிடுமாறு செய்திட பயன்படுகின்றன

இதில் செயல்முறைகளானது(Procedures) குறிப்பிட்ட செயலை வெளிப்படையாக அதனுடைய மதிப்பை குறிப்பிடாமலேயே செயல்படுமாறு செய்கின்றது

ஆனால் செயலிகளானது(Functions) குறிப்பிட்ட செயலிற்கான தொகுப்பாக  குறிப்பிட்ட செயலை வெளிப்படையாக அதனுடைய மதிப்பை குறிப்பிடச்செய்து செயல்படுமாறு செய்கின்றது

Sub Test

Dim ErrorOccured As Boolean

‘…..

If  ErrorOccured Then

Exit Sub

End If

‘…..

End Sub

இந்த கட்டளை தொடரில் பிழை உருவானால்  செயல்முறையிலிருந்தும் செயலியிலிருந்தும் வெளியேறுமாறு கட்டளையிடபட்டுள்ளது

மறுசுழற்சி (Recursion)  இந்த  மறுசுழற்சி (Recursion) எனும்  செயல்முறை அல்லது செயலியானது  அடிப்படை நிபந்தனை நிறைவேறும்வரை தனக்குதானே அழைத்துகொள்ளும் திறன்கொண்டது

 

 

 

Sub Main

Masgbox CalculateFactorial ( 42 ) ‘ Display 1,4050061175288vE+51

Masgbox CalculateFactorial ( -42 ) ‘ Display “ Invalid number for factorial !”

Masgbox CalculateFactorial ( 3.14 ) ‘ Display “ Invalid number for factorial !”

End Sub

Function   CalculateFactorial( Number)

If Number < 0 or Number <> Int ( Number) Then

CalculateFactorial = “ “ Invalid number for factorial !”

ElseIf Number = 0 Then

CalculateFactorial = 1

Else

‘ This is  the recursive call:

CalculateFactorial = Number *  CalculateFactorial ( Number  1)

EndIf

End function

இதில் 42 இற்கான பின்ன எண்ணை  CalculateFactorial  என்ற செயலியானது    1  வரும்வரை மறு சுழற்சி செய்யுமாறு பணிக்கின்றது

 

பிழைகளை கையாளுதல்(Error Handling) 

1.On Error எனும் கட்டளையானது பிழைஏதும  ஏற்பட்டால் பிழைகளை கையாளுபவரை அழைத்து சரிசெய்து கொள்ளும்படி கட்டளை இடுகின்றது.

2 Resume Next எனும் கட்டளையானது பிழை ஏற்பட்டால் அந்த பிழையை களைந்தபின் பழையபடி தொடர்ந்து செயல்படுமாறு செய்கின்றது

பொதுவாக நிரல் தொடர்முழுவதுமான செயலிற்கு On Error  Resume Next என்ற கட்டளைத்தொடர் பிழைகளை களைந்து தொடர்ந்து செயல்பட சிறந்ததாகும்

Previous Older Entries