நிறுவனங்களின் எக்ஸ்பிஆர்எல் ஆவணங்களை இணையத்தின்மூலம் சமர்ப்பித்தல்

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொருவகையான கணக்குபதிவியலுக்கான மென்பொருளை பயன்படுத்தி வருவார்கள் அதனால் நிறுமவிவகாரத்துறை அமைச்சகத்தில்(Ministry of Corporate Affairs(MCA))  தத்தமது ஆண்டிறுதி கணக்குகளையும் அறிக்கைகளையும் இந்நிறுவனங்களை மின்ஆவணமாக சமர்ப்பிக்குமாறு ஆணையிடும்போது இவர்கள் வெவ்வேறுவகையில் சமர்ப்பித்துவிடுவார்கள் அதனால் இந்த நிறுவனங்களின் ஆயிரகணக்கான மின் ஆவணங்களை இந்த அமைச்சகத்தால் ஆய்வுசெய்வதில் சிரமம் ஏற்படும் இதனைதவிர்த்து அனைத்து நிறுவனங்களும் ஒரேமாதிரியான ஆவணமாக  சமர்ப்பிப்பதற்காக ஏற்படுத்தபட்டதுதான இந்த  எக்ஸ்பிஆர்எல் என சுருக்கமாக அழைக்கபடும் நீட்டிக்கபட்ட வியாபாரஅறிக்கை மொழிeXtensible Business Reporting Language (XBRL) யாகும்

ஒரு ஆண்டிற்கு ரூபாய் நூறு கோடி விற்பனை வருமானம் அல்லது ரூபாய் ஐந்து கோடி முதலீடு உடைய அனைத்து நிறுவனங்களும் 31.03.2011 முடிய உள்ள ஆண்டிறுதி கணக்குகளையும் அறிக்கைகளையும் 30.09.2011க்குள்ளும் அதன்பின் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த ஆறுமாதத்திற்குள்ளும் இந்த  எக்ஸ்பிஆர்எல் ஆவணமாக மட்டுமே  இணையத்தின் மூலம் சமர்ப்பிக்கவேண்டும் என  இந்திய அரசின் நிறுமவிவகாரத்துறை அமைச்சகம்(Ministry of Corporate Affairs(MCA)) உத்திரவிட்டுள்ளது

இந்த எக்ஸ்பிஆர்எல் ஆவணங்களை இணையத்தின்மூலம் சமர்ப்பித்த லுக்கான படிமுறைகள் பின்வருமாறு

படிமுறை1.எக்ஸ்பிஆர்எல் சான்றாவணங்களை உருவாக்குதல்

படிமுறை2  எக்ஸ்பிஆர்எல் ஏற்புடையதாகஆக்குதல் கருவியை பதிவிறக்கம் செய்தல்

படிமுறை3 ஏற்புடையதாகஆக்குதல் கருவிக்குள் சான்றாவணங்களை மேலேற்றுதல்

படிமுறை4 சான்றாவணங்களைஏற்புடையதாகஆக்குதல்

படிமுறை5சான்றாவணங்களை சமர்ப்பித்தலுக்கு முந்தைய ஆய்வுசெய்தல்

படிமுறை6 சான்றாவணங்களின் உள்ளடக்கங்கள் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கையடக்க ஆவணமாக உருமாற்றுதல் (pdf)

படிமுறை7  23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களுடன் சான்றாவணங்களை  இணைத்தல்

படிமுறை8சான்றாவணங்களுடன் இணைக்கபட்ட 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களை  நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் சமர்ப்பித்தல்

படிமுறை1.எக்ஸ்பிஆர்எல் சான்றாவணங்களை உருவாக்குதல்

 1.நிதிநிலைஅறிக்கைகளின் உறுப்புகளுக்கு சமமான ஒருங்குகுறி பெயர்களுக்கு(Taxonomy)  பொருத்தமாக ஒதுக்கீடுசெய்தல்

ஒவ்வொருநிறுவனமும் தம்முடைய எக்ஸ்பிஆர்எல்  ஆவணங்களை தாமேமுயன்று உருவாக்கி கொள்ளலாம் அல்லது  தம்முடைய நிறுவனத்தின் நிதியறிக்கைகளை எக்ஸ்பிஆர்எல்  ஆவணங்களாக உருமாற்றம் செய்வதற்காக வேறுஒருநபரை பயன்படுத்தி கொள்ளலாம்

சான்றாவனமாக செய்வதற்காக முதலில் நிறுவனத்தின் பராமரிக்கபடும் பல்வேறு தலைப்பிலுள்ள கணக்கின் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் சமமான நிறுமவிவகாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடபட்ட ஒருங்குகுறி பெயர்களுக்கு ஒதுக்கீடுசெய்து உருமாற்றுவதற்கான குறியீடாக்குதல்   இவ்வாறாக கணக்குதகவலை   ஒருங்குகுறி பெயருக்கு(Taxonomy) சமமாக ஒதுக்கீடுசெய்து உருமாற்றம் செய்வதால் ஒருநிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை எளிதாக எக்ஸ்பிஆர்எல் படிவமாக உருமாற்றமுடியும்

பின்னர் நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்க உறுப்புகளின் பெயர்கள் ஒருங்குகுறி பெயருக்கு(Taxonomy)  மிகச்சரியாக பொருத்தமாகஇருப்பதை  ஒதுக்கீடுசெய்க அவ்வாறு ஒப்பீடுசெய்யும்போது ஏதேனும் உறுப்புகள் பொருத்தமாக இல்லையெனில் ஏறத்தாழ பொருத்தமாக இருக்கின்றதாவென சரிபார்த்து  அதற்கேற்றவாறு ஒதுக்கீடுசெய்க அல்லது இதர இனங்களின் கீழ் ஒதுக்கீடுசெய்து  ஒரு அடிக்குறிப்பில் விவரத்தை இதற்காக குறிப்பிட்டுவிடுக. இதனை ஒருங்குகுறிபெயரிலும்(Taxonomy) விவரமாக குறியீடாக்கிவிடுக.

2.நிறுவனத்தின் இருப்புநிலைகுறிப்பிற்கும் இலாபநட்ட கணக்கிற்குமான சான்றாவனத்தை உருவாக்குதல்

நிறுமவிவகாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடபட்ட ஒருங்குகுறிபெயராக(Taxonomy)  நிதிநிலை அறிக்கையின் உறுப்பு பெயர்களை பொருத்தமாக ஒதுக்கீடு செய்யபட்டபின்னர் அதிலிருந்து  நிதிநிலை வியாபார அறிக்கைகளடங்கியஎக்ஸ்எம்எல்  கோப்பில் சானறாவணமாக உருவாக்க வேண்டும்  இந்நிலையில் ஒருங்குகுறி பெயருக்கு(Taxonomy) விரிவாக்கம் எதுவும் அனுமதிக்கபடமாட்டாது என்பதை கவணத்தில் கொள்க

3.பின்வரும் தனித்தனியான சான்றாவணங்கள் உருவாக்கபடவேண்டும்

1.ஒவ்வொரு நிறுவனத்தின் தனிப்பட்ட இருப்புநிலை குறிப்பு

2.ஒவ்வொரு நிறுவனத்தின் தனிப்பட்ட இலாபநட்டகணக்கு

3.அந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இருப்புநிலை குறிப்பு

4.அந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இலாபநட்டகணக்கு

ஒருசான்றாவனத்தின் நிதிநிலைதகவல்கள் நடப்பாண்டையும் முந்தைய ஆண்டையும குறிப்பிடுமாறு உருவாக்கபடவேண்டும் ஒருநிறுவனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட துனைநிறுவனங்கள் இருந்தால் மட்டுமே  ஒருங்கிணைந்த அறிக்கைகள் உருவாக்கபடவேண்டும் பின்னர் சான்றாவணங்கள் பொருத்தாமாக உள்ளதாவென உறுதிசெய்துகொள்க

4.சான்றாவணத்திற்கான விளக்ககுறிப்பு வழங்குதல்

தொழில்நுட்ப விளக்ககுறிப்புகள்

http://www.mca.gov.in/XBRL/2011/08/27/Taxonomy/CnI/ci/in-gaap-ci-2011-03-31.xsd.

http://www.mca.gov.in/CIN

ஆகிய இரு இணைய தளங்களில் உள்ளவாறு தொழில்நுட்ப விளக்ககுறிப்புகளை பின்பற்றுக

எக்ஸ்பிஆர்எல் உள்ளடக்கத்தில் கண்டுள்ளவாறு சான்றாவண உரைவிவர தகவல்களை வழங்கிடுக

வியாபார விளக்ககுறிப்புகள்

www.mca.gov.in/XBRL என்ற நிறுமவிவகாரத்துறைஅமைச்சக இணையதளத்தில் குறிப்பிடபட்டுள்ள விவரங்கள் தவறாமல் சரியாக வழங்கபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொள்க

படிமுறை2  எக்ஸ்பிஆர்எல் ஏற்புடையதாகஆக்குதல் கருவியை பதிவிறக்கம் செய்தல்

இதன்பின்னர்  நாம் உருவாக்கிய ஒருநிறுவனத்தின் இலாபநட்ட கணக்கு இருப்பு நிலைகுறிப்பு ஆகிய சான்றாவனங்கள் சரியாக உள்ளதாவென பரிசோதிப்பதற்காக www.mca.gov.in/XBRL என்ற நிறுமவிவகாரத்துறைஅமைச்சக இணையதளத்திலிருந்து  XBRL validation tool என்ற கருவியை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்க

படிமுறை3 ஏற்புடையதாகஆக்குதல் கருவிக்குள் சான்றாவணங்களை மேலேற்றுதல்

பிறகு கணினியில் நிறுவபட்ட இந்த XBRL validation tool என்ற கருவியைஇயங்கசெய்து அதன் கட்டளைபட்டியில் open என்ற கட்டளை செயற்படுத்தி நாம் உருவாக்கிய சான்றாவணத்தை கணினித்திரையில் திறந்திடுக

படிமுறை4 சான்றாவணங்களைஏற்புடையதாகஆக்குதல்

1.அடுத்ததாக சமீபத்திய மிகச்சரியான நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட ஒருங்குகுறிபெயர்களுக்கு(taxonomy) ஏற்புடையதாக(validation) நாம் உருவாக்கிய சான்றாவணம் உள்ளதாவென சரிபார்த்திடுக

2.ஒரு ஆவணத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டிய நிதிநிலஅறிக்கையின் தகவல்உறுப்புகள் அனைத்தும் நம்முடைய சான்றாவணத்தில் உள்ளதாவென சரபார்த்திடுக

3.நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட மற்ற வியார விதிகள் பின்பற்றுட்டுள்ளதாவென சரிபார்த்திடுக

4.மற்ற ஏற்புத்தகுதிகள்(Validation) ஒருங்குகுறிபெயர்களுக்கு(Taxonomy0 ஏற்றவாறு உள்ளதாவென சரிபார்த்திடுக

இந்த கருவியை கொண்டு மேற்கண்ட ஆய்வைசெய்திடும்போது ஏற்படும் பிழைகளை அவ்வப்போது சரிசெய்துவிடுக

படிமுறை5சான்றாவணங்களை சமர்ப்பித்தலுக்கு முந்தைய ஆய்வுசெய்தல்

XBRL validation tool என்ற இந்த கருவியை கொண்டு மீண்டும் மற்றொருமுறை மேற்கண்ட ஏற்புடையதாக்குதல் ஆய்வை இணைய இணைப்பில் நேரடியாக நிறுமவிவகாரத்துறை அமைச்சக இணையதளத்துடன் இணைத்து செய்திடுக

படிமுறை6 சான்றாவணங்களின் உள்ளடக்கங்கள் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்து கையடக்க ஆவணமாக(pdf) உருமாற்றுதல்

 (இந்த படிமுறை சான்றாவணத்தில் உள்ளீடு செய்யபட்ட உரை தகவல்கள் சரியாக இருக்கின்றதாவென சரிபார்த்திட உதவுகின்றது)

இதன்பின்னர்  XBRL validation tool என்ற கருவியிலுள்ளExport to pdf என்ற கட்டளையை பயன்படுத்தி இந்த ஏற்புடையதாக்கபட்ட சானறாவணத்தை எங்கும் எடுத்துசென்று கையாளதக்கவகையில் கையடக்கஆவணமாக (pdf) உருமாற்றம் செய்துகொள்க

இதன்மூலம் நாம்உருவாக்கிய சான்றாவணம் ,உரைத்தகவல்கள் சரியானதுதானா என நம்முடைய நிறுவனத்தின் நிதிநிலைஅறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்திட வசதியாக இருக்கும்

படிமுறை23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களுடன் சான்றாவணங்களை  இணைத்தல்

பின்னர் நிறுவனத்தின் இருப்புநிலைகுறிப்பிற்கு நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட  23AC-XBRL என்ற படிவத்தையும் இலாப நட்ட கணக்கிற்கு நிறுமவிவகாரத்துறைஅமைச்சகத்தால் பரிந்துரைக்கபட்ட  23ACA-XBRL என்ற படிவத்தையும் இந்த அமைச்சகத்தின்  www.mca.gov.in/XBRL என்ற இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம்செய்து சரியாக பூர்த்திசெய்துகொள்க தனித்தனிசான்றாவணம் எனில் இந்த படிவங்கள் தனித்தனியாகவும் பின்னர் ஒருங்கிணைந்ததையும் பூர்த்தி செய்தபின்னர்  ஏற்புடையதாக்கிய சான்றாவணத்துடன் இதில் கையொப்பம் சேர்த்து இதனை இணைத்துகொள்க

படிமுறை8சான்றாவணங்களுடன் இணைக்கபட்ட 23AC-XBRL , 23ACA-XBRL ஆகிய இரு படிவங்களை  நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் சமர்ப்பித்தல்

சான்றாவணங்களுடன் இணைக்கபட்ட 23AC-XBRL , 23ACA-XBRL  ஆகிய படிவங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதென உறுதிசெய்துகொண்டு  www.mca.gov.in/XBRL  என்ற நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில்   இதனை பதிவேற்றம் செய்திடுக

இதன்பின்னர் நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA) சான்றளிக்கபட்ட நகல்கள்  நாம்  படிக்கும் வகையில் உருமாற்றம் செய்யபட்டு www.mca.gov.in/XBRL  என்ற நிறுமவிவகார அமைச்சகத்தின்(MCA)இணையதளத்தில் பிரதிபலிக்கும்தயாராக இருக்கும்

நீட்டிக்கப்பட்ட வியாபார அறிக்கையின் மொழிExtensible Business Reporting Language (XBRL)

நீட்டிக்கப்பட்ட வியாபார அறிக்கையின் மொழி இதனை ஆங்கிலத்தில் Extensible Business Reporting Language (XBRL) என்றும் அழைப்பார்கள். இது ஒரு நீட்டிக்கப்பட்ட XML ஆகும்.XBRL என்பது நிறுவனத்தகவல்களை வரையறுப்பதற்காகவும் தரவுகளை ஒப்பிடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும்.  www என்ற கூட்டமைப்பினர் உலகளாவிய இணைய தளத்தில் செந்தரப்படுத்துவதற்காக பிப்ரவரி 1998 இல் இது நிறுவபட்டு இயங்கி வருகின்றது.HTML ஐ உருவாக்கிய அதே கூட்டமைப்புதான் இதனையும் உருவாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்..

பெரும்பாலான வியாபார நிறுவனங்களால் வெளியிடப்படுகின்ற ஆண்டறிக்கைகள், நிதி நிலை அறிக்கைகள் நிலையானதொரு படிவத்தில் வெளியிடுகின்றன. இவைகளில் வழக்கொழிந்து போன முழுமையற்ற, துல்லியமற்ற தரவுகளையும் தகவல்களையும் இட்டு நிரப்புகின்றனர்.மேலும் இவைகள் செலவு அதிகமான கடினமான பண்புடைய அறிக்கை அமைப்பாகும். இதனை பார்க்கின்ற பயனாளர்கள்(stakeholders) அனைவரும் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் அன்று அதனால் அவரவரும் தத்தமது கற்பனைக்கு தகுந்தவாறு இந்த அறிக்கையை பார்த்து புரிந்து கொள்வார்கள். அதனால் இவர்கள் தவறான முடிவெடுக்கும் நிலை ஏற்படுகிறது.

உதாரணமாக ஒரு மிகப்பெரிய நிறுவனம் தம்முடைய ஆண்டறிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் ஓய்வூதிய திட்டதிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என மிகச்சிறிய குறிப்பை கொடுத்துள்ளனர். இந்த குறிப்பை பார்ப்பவர்கள் யாரும் இதன் விவரத்தை உணர மாட்டார்கள்.

இந்த அறிக்கைகளை இப்போதைய கணிப்பொறி யுகத்தில் எக்செல் விரிதாளில் அல்லது மற்ற கருவிகள் மூலம் அளித்திருக்கின்றோமே என வாதிடுவார்கள்.

தத்தமது நிறுவனத்திலுள்ள மென்பொருள் மூலம் சமர்ப்பிக்கும் இவ்வறிக்கைகள் மற்றொரு மென்பொருளுடன் ஒத்து போகாதவையாகும். அவ்வாறே இவைகளை ஒத்து போகின்றவாறு செய்யவேண்டுமெனில்  இதற்காக மற்றொரு மறு திறவுகோலை உருவாக்க வேண்டும். அவ்வாறே செய்தாலும் அவை செலவு மிக்கதும், பிழை ஏற்படுவதும் ,தகவல்கள் ஏதேனும் விடுபட வாய்ப்புள்ளதும் ஆன செயலாகும்.

இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கொள்முதல் , பொருள் பட்டியல் பரிமாற்றம், பணப்பரிவர்தனை போன்ற நடவடிக்கைகளில் இரு நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான மென்பொருள் இல்லாதபோது தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் அந்நிறுவனங்களின் நிதி நிலை தகவல்களும் ஐயத்திற்கு இடமாகிறது. அதுமட்டுமல்லாது ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ள முடியாத வெவ்வேறு மென் பொருளாக இருந்தால் பிரச்சனை இன்னும் பூதாகரமாகின்றது இதனை தவிர்ப்பதற்காக வெவ்வேறு நிறுவனங்களின் தகவல் தொடர்பிற்கும் நிதிநிலை தகவல்களை பரிமாறி கொள்வதற்கும் பொதுவானதொரு தகவல்தளம் common platform ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் நடப்பில் உள்ள XML மென்பொருளானது மற்றொரு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே  பயன்படுகிறது. அதனால் ஒவ்வொரு நிறுவனமும் கூடுதலாக இடைவெளியை நிரப்புதவற்கான மென்பொருள் ஒன்றை நிறுவ வேண்டியுள்ளது. இது செலவு மிக்கதும் செந்தரமற்றதும் ஆகும்.

பயனாளர்களுக்கு மிகத்திறனுடனும், மிக விரைவாகவும் அதேசமயம் பார்த்தவுடன் அனைவராலும் புரிந்து கொள்ள கூடியதும்ஆனஒரு நிறுவனத்தின் அறிக்கை அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு அனைவரும் உணரக்கூடிய வழிமுறையாக இணையதளம் மூலம் வழங்க கூடிய அறிக்கையே இப்போதைய தேவையாகும்.

அவ்வாறான இணையதளம் மூலம் உருவாக்கப்பட்ட மொழிதான் இந்த XBRL ஆகும்.

கணிப்பொறி அ-வில்                கணிப்பொறி ஆ-வில்

பயன்படுத்தும் மென்பொருட்கள்        பயன்படுத்தும் மென்பொருட்கள்

Tally Tally
SAP SAP
ERP ERP
People Soft People Soft
Oracle Oracle

படத்தில் உள்ள மென்பொருட்கள் தற்போதைய கால கட்டத்தின் நடப்பில் வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துபவையாகும். இந்த மென்பொருட்கள் ஒரு நிறுவனம் போன்றே மற்றொன்று வைத்திருக்காது. அதனால் ஒரே பொருளை உற்பத்தி செய்கின்ற இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை வைத்து ஒப்பிட்டு பார்த்து அதன் அடிப்படையில் இந்நிறுவனங்களில்  மேலும் முதலீடு செய்வதா வேண்டாமா என முடிவு செய்வது மிக சிரமமான பணியாகும்.

Tally XB

R

L

Tally
SAP SAP
ERP ERP
People Soft People Soft
Excel Excel

படத்தில் உள்ளவாறு XBRL ஐ பயன்படுத்தினால் இரண்டு வெவ்வேறு நிறுவனங்கனின் நிதி நிலை அறிக்கைகளை ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு செய்வது மிக சுலபமாக இருக்கும். இது பொதுவானதொரு கட்டமைவை கொண்டு வியாபார நிறுவனங்களின் அறிக்கைகளை பிரிதிபலிக்கின்றது

இதனை செந்தரப்படுத்துவதற்கு (Standardize) உலக அளவில் ஒரு கூட்டமைப்பை (Consortium) உருவாக்கியுள்ளனர். இதன் இணையதள முகவரி http://www.xbrl.org// ஆகும்.இதில் உலகில் உள்ள அனைத்து கணக்கியல் அமைப்புகளும் உறுப்பினராக உள்ளனர். தனிப்பட்ட வியாபார நிறுவனங்கள் கூட இதில் உறுப்பினராக உள்ளனர்.

அதே போன்று இந்திய அளவிலும் இதன் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் இதன் இணையதள முகவரி. http://www.xbrl_india.org ஆகும். Tally solution மற்றும் Satyam Computer ஆகிய இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட இதில் உறுப்பினராக உள்ளனர்.

இந்த அமைப்பு உலகளாவிய செந்தரப்படுத்தப்பட்ட அறிக்கைகளின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த XBRL இல் மூன்று உறுப்புகள் மிக முக்கியமானவையாகும்.

1)    குறிப்பீடு(specification)இதில் இலக்கணம்(Syntax),பெயர் இடைவெளி(name space),அமைப்பு முறை(Schema) ஆகியவை அடங்கியது.

2) அறிவியல் பூர்வ கணக்கியல் பயன்பாடு (taxanomies): இதில் Accounting standard( A.S),Inidan Accounting standard ( I.A.S) போன்றவை அடங்கியது

3) சமூக குழுவினர் (community) : இதில் கணக்கியல் வல்லுநர் (Accounting professional) பயனாளர்கள் (users)  ஆகியோர் அடங்கியது.

அனைத்து நிறுவனங்களும் இந்த XBRL  கூட்டமைப்பு வரையறுத்த பொது மொழியில் தத்மது நிறுவனத்தினுடைய தரவுகளை செந்தரமாக்கி அறிக்கைகள தயாரித்து வெளியிடும்போது சாதாரண பயனாளர்கள் கூட படித்தறிந்து வெவ்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளை ஒப்பீடு செய்து நிறுவனங்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.

நிறுவனம் ஏதோ ஓரிடத்தில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் பரந்துபட்டு இருப்பார்கள். இவர்கள் அனைவரும் தாம் முதலீடு செய்த நிறுவனத்தின் நிதி நிலைமை நிறுவனத்தின் உறுதித்தன்மையை இந்த XBRL  கொண்டு மிக சுலபமாக இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளவும்,மேலும் முதலீடு செய்வதா வேண்டாமா என்று முடிவு எடுக்கவும் முடியும்.

மேலும் இந்த XBRL ஆனது ஒரு பொது தளம் ஆகும். அதனால் இதனை எந்த வகையான கணிப்பொறியாயினும், எந்த மென்பொருளாக இருந்தாலும், பயன்படுத்துவது எளிது. எந்த ஒரு நிறுவனமும் தாம் பயன்படுத்தும் எந்த ஒரு மென்பொருளின் மூலம்  வழங்கும் நிதி நிலை தகவலானதுXBRL வடிவமைப்பில் இருக்கும்போது அப்படியே ஏற்க அனுமதிக்கிறது. இந்த அறிக்கையை படித்தறிய வேறு புதிய திறவு கோலும் தேவையில்லை, வேறு வடிவமைப்பில் மாற்ற வேண்டிய தேவையுமில்லை.

XBRL வடிவமைப்பில் தரவுகள் இருந்தால் ஒரு நிறுவனத்தின் தகவல்கள் மற்றொரு நிறுவனத்திற்கு அனுப்பும்போது அல்லது பெறும்போது மனித சக்தியே தேவையில்லாததாகிறது. ஒரு நிறுவனத்தின் கணிப்பொறி உருவாக்கிய இந்த தரவுகள் மற்றொரு நிறுவனத்தின் வேறொரு கணிப்பொறியின் மென்பொருள் மொழி மாற்றியை ஏதும் துணைக்கு பயன்படுத்தாமல் அப்படியே நேரடியாக ஏற்று கொள்கிறது.

கடைசியாக மைக்ரோ சாப்ஃட் நிறுவனம்கூட தமது நிதி நிலை அறிக்கைகளை இந்த XBRL இன் மூலமாகவே சமீபத்தில் வெளியிட்டள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.