பேட்டரியை புத்தாக்கம் செய்யும் படிமுறை

லேப்டாப் எனும் மடிக்கணினி வாங்கி மிகப்பழையதாக ஆகும்போது அதன் தொடக்க இயக்கம் மெதுவாகவும் மற்றபயன்பாடுகளின் இயக்கமும் நத்தைபோன்று மிகமெதுவாகவே நடைபெறுகின்றது உடன் மின்சாரம் வழங்கும் பேட்டரியை மாற்றினால் சரியாகிவிடும் என ஆயிரகணக்கான பயனாளர்கள் கைவசமிருக்கும் பேட்டரியை தூக்கிஎறிந்துவிட்டு புதிய பேட்டரியை கொள்முதல் செய்து பொருத்திகொள்வார்கள் அவ்வாறு செய்யாமல் இந்த பேட்டரியைபின்வரும் படிமுறைகளை பின்பற்றி புத்தாக்கம் செய்து புதிய பேட்டரியை போன்றே மடிக்கணினியை பயன்படுத்தி கொள்ளமுடியும்


1.மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம்செய்க.
2.பின்னர் மின்தொடர்பை துண்டித்துவிட்டு மடிக்கணினியை பேட்டரியின் மின்சாரமுழுவதுமாக காலியாகும்வரை பயன்படுத்துக பேட்டரியின் மின்சாரம் முழுவதும் காலியாகும் நிலையில் நாம் செய்துவந்த செயல்களை சேமித்துகொண்டு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்க

3.இதேநிலையில் சுமார் 5 அல்லது ஆறுமணிநேரம் அதிகபட்சம் ஒரு இரவுமுழுவதும் மடிக்கணினியை ியக்காமலேயே வைத்திருந்து மீண்டும் மடிக்கணினியின் பேட்டரியை 100% மின்னேற்றம்செய்க.
இப்போது மடிக்கணினியை இயங்கசெய்து வழக்கமா்ன நம்முடைய செயலை செய்துவருக இதன்மூலம் மடிக்கணினியின் பேட்டரியின் திறன் புத்தாக்கம் பெறுகின்றது இவ்வாறான செயலை அவ்வப்போது செய்து பேட்டரியின் வாழ்நாளை கூடுதலாக்கி பயன்படுத்தமுடியும்

ஒரு இணைய பக்கத்தை நாமே மிக எளிதாக உருவாக்கமுடியும்

ஏதேனுமொரு கல்லூரிக்கோ பயிலகத்திற்கோ நேரடியாக சென்று பயிற்சி பெறாமலேயே இந்த கட்டுரையை படித்துமுடித்து இதில் கூறியுள்ள படிமுறையை கடைபிடித்து நாமாகவே ஒரு இணைய பக்கத்தை உருவாக்கும் திறன் பெற்றிடுவோம் என்பது திண்ணம்

1.

கணினியின் திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியலில் newஎன்பதையும் பின்னர் விரியும் பட்டியில் Tex documents என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக

உடன் வழக்கமான ஒரு நோட்பேடில் .txt என்றவாறு பின்னொட்டுடன் காலியான உரைகோப்பு ஒன்று உருவாகிவிடும் அதன்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கு உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் rename என்ற கட்டளையை செயற்படுத்தியபின்னர் தோன்றும் திரையில் இதனுடைய பெயரை இணைய பக்கத்திற்கான பெயராக skinternet-web-page.html என்றவாறு மாற்றியமைத்து கொள்க.

இவ்வாறு அனுமதிக்கபட்ட இணையபக்கத்தின் பெயரை உருாக்கிய பின் இந்த கோப்பினை திறந்து ஒருசில தகவல்களை உள்ளீடு செய்யவேண்டும் அதற்காக start என்ற பொத்தானை சொடுக்குக விரியும் start என்ற பட்டியில் Run என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக

 2.

பின்னர் தோன்றிடும் Runஎன்ற சிறு உரையாடல் பெட்டியின் காலி உரைபெட்டியில் notepad என தட்டச்சு செய்து OK என்ற பொத்தானை சொடுக்குக:

3.

அதன்பின்னர் வழக்கமான Notepad போன்றே இணையபக்க உருவாக்கும் திரை தோன்றிடும் இங்கு இந்த Notepad ன் முதலெழுத்து பெரிய N எழுத்தாக இருக்கும்

இதன் மேல்பகுதியில் உள்ள file=>open=> என்றவாரு கட்டளைகளை செயற்படுத்தி விரியும் திரையில் நாம்உருவாக்கி வைத்துள்ள internet-web-page.html என்ற கோப்பினை தெரிவுசெய்து சொடுக்கி திறந்துகொள்க

குறிப்பு :பொதுவாக கணினியின் நிரல்தொடரைகொண்டு ஒரு இணைய பக்கத்தை உருவாக்குவது மிகசிரமமான செயலாக இருந்தாலும் இந்த படிமுறை நம்முடைய செயலை எளிமை படுத்துகின்றது

பின்னர் பின்வரும் வரிகளை மிகச்சரியாக தட்டச்சு செய்க

<PRE>
</PRE>

இது என்னுடைய முதல் இணையபக்கம் இதில் என்னுடைய விருப்பமான பூவின் படத்தை இணைத்துள்ளேன்என இந்த<PRE> </PRE> ஆகிய இரண்டு வரிகளுக்கிடையே தட்டச்சு செய்க

4.

தொடர்ந்து <IMG Tulips.jpg> என்ற வரியை இதே <PRE> </PRE> ஆகிய இரு வரிகளுக்கிடையே தவறில்லாமல் உள்ளீடு செய்க இங்கு நம்முடைய படம் இருக்கும் கோப்பின் பெயர் Tulips.jpg என்றிருப்பதாக கொள்க

பின்னர் இணையத்தில் இதுசரியாக தோன்றுமா என சரிபார்ப்பதற்கு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின்e என்ற எழுத்துடன் உள்ள உலாவி பயன்பாட்டை தெரிவுசெய்து சொடுக்கி இணைய ணைப்பு ஏற்படுத்துக உடன் இணைய சாளரம் திரையில் பின்வருமாறு தோன்றிடும்

5.

இதன் மேல்பகுதியில்உள்ள file=>open=> என்றவாரு கட்டளைகளை செயற்படுத்தி விரியும் திரையில் நாம்உருவாக்கி வைத்துள்ள internet-web-page.html என்ற கோப்பினை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக உடன் பின்வருமாறு திரைதோற்றம் அமையும்

இது ஒரு முழுமையான AOL and Hotmailபோன்ற இணைய பக்கங்கள் போன்று தோன்றுவதற்கு மேலும் ஒருசில கட்டளை வரிகளை பின்வரும் படத்திலுள்ளவாறு உள்ளீடு செய்க

6.

இந்த வரிகளை A HREF என Eh, Harreff என்றவாறு உச்சரிப்புடன் அழைப்பார்கள் ”.

இவ்வாறு மாற்றம் செய்யபட்டசெயலை நம்முடைய இணைய பக்கத்தில் நிகழ்நிலை படுத்திட வேண்டுமல்லவா அதற்காக மேலே கட்டளைபட்டியிலுள்ள refresh என்ற பொத்தானை அல்லது விசப்பலகையிலுள்ள F5செயலிவிசையை சொடுக்குக

இப்போது நம்முடைய இணையபக்கமும் பட்டியலிடப்படும் பார்வையாளர்கள் hotlinks என்பதை சொடுக்கி நம்முடைய இணைய பக்கத்தை பார்வையிடமுடியும்

7.

நாம் உருவாக்கிய இணையபக்கத்தின் முகவரி Address என்ற முகவரி பெட்டியில் C:\Desktop\internet-web-page.html என்றவாறு இருக்கும் அதனை தெரிவுசெய்து CTRL+ C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி நகலெடுத்து கொள்க பின்னர் www.hotmail.com போன்ற மின்னஞ்சல் தளத்திற்கு சென்று நம்முடைய மின்னஞ்சல் பெட்டியை திரந்து நம்முடைய நண்பர்களுக்கு இந்த இணைய பக்கத்தின் விவரத்தை அறிவிப்பதற்காக மின்னஞ்சல் ஒன்றை உருவாக்கி அதில் நம்முடைய இணையபக்க முகவரியை அறிவிப்பு செய்க

மேலும் இந்த கோப்பினையும் படத்தையும் இந்த மின்னஞ்சல் உருவாக்கும் திரையில் Attachments என்ற பொத்தானை சொடுக்கி இணைத்து Send என்ற பொத்தானை சொடுக்கி மின்னஞ்சலை நண்பர்களுக்கு அனுப்பிவைத்திடுக

8.

  இந்த இணைய பக்கத்தை Lycos and Alta Vistaஎன்பனபோன்ற தேடுபொறிகள் ஆதரித்து தேடுவதற்கு ஏதுவாக இதில் Regis and Kathie Lee அல்லது Golden Girls என்பன போன்ற திறவுசொற்களை உடனிணைத்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

 

விண்டோ7-ன் பாதுகாப்பான இயக்கத்திற்க யூஎஸ்பி திறவுகோளை உருவாக்கி பயன்படுத்தமுடியும்

SAM எனசுருக்கமாக அழைக்கப்படும் பாதுகாப்பு கணக்கு மேலாளர் (Security Accounts Manager)மூலம் தரவுகளை திறவுகோளுடன் மறையாக்கம் செய்து பாதுகாப்பாக கணினிக்கு வெளியே யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது தம்ப் ட்ரைவ்ல் தேக்கி வைத்து கொண்டு தேவையானபோது இந்த திறவுகோளின் உதவியால் மட்டும் மைக்ரோசாப்ட் விண்டோ7 இன் தொடக்க இயக்கம் அமையுமாறு செய்யமுடியும் அதற்காக (http://thecustomizewindows.com/tag/microsoft/) என்ற இணைய தளம் நமக்கு உதவதயாரராக இருக்கின்றது இதற்கான படிமுறை பின்வருமாறு.

எச்சரிக்கை: இவ்வாறு செயற்படுத்தியபின் இந்த யூஎஸ்பி திறவுகோள் இல்லாமல் அந்த கணினியில் எந்தவொரு நபரும் விண்டோ7 ஐ இயங்க செய்யமுடியாது

படிமுறை 1: இந்த பயன்பாடு திறவுகோளிற்கான மறையாக்கம் செய்யும் தரவுகளை பழைய ஃபிளாப்பி ஏ ட்ரைவிற்குள் மட்டுமே தேக்கி வைத்திடுமாறு செயல்படுகின்றது அதனால் இந்த யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது தம்ப் ட்ரைவ்இன் பெயரை ஏ ட்ரைவ் என மாற்றம் செய்திடவேண்டும்அதற்காக யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது தம்ப் ட்ரைவ்ஐ யூஎஸ்பி வாயிலிற்குள் பொருத்துக.பின்னர் Start என்ற பட்டியலில் உள்ள Computer என்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானைசொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியலில் Manage என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

1.

பின்னர் தோன்றிடும் Computer Managementஎன்றதிரையில் Disk Management என்பதை தெரிவு செய்து சொடுக்குக

2.

யூஎஸ்பி பென்ட்ரைவ் என்பதுH என்ற பெயரில் உள்ளதாக கொள்வோம் அவ்வாறு வலதுபுற பலகத்தில் உள்ள இதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியலில் select Change Drive Letter and paths என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

3.

பின்னர் விரியும் ட்ரைவ்களின் பெயர்பட்டியலில்A என்பதை தெரிவுசெய்துகொள்க

4.

அதன் பின்னர் பாதுகாப்புதொடர்பான நடைமுறையை செயற்படுத்தும்படி கோரும் அதனை ஏற்றுகொள்க உடன் ஒருசிலநிமிடங்களில் நாம் தெரிவுசெய்த ட்ரைவின் பெயரானது ஏ என மாறிவிடும் இவ்வாறு மாறியதை Computer Management Console , My Computer. ஆகியஇரண்டிலும் காணலாம்

5.

பின்னர் Computer Management என்ற திரையை மூடிவிடுக.

படிமுறை 2: அதன் பின்னர் Start என்ற பொத்தானின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Properties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Taskbar and start menu properties என்ற உரையாடல் பெட்டியின் Start Menu என்ற தாவியின் திரையில் Customize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் customize atart menu என்ற உரையாடல் பெட்டியில்Run commandஎன்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக:

6.

இந்நிலையில் Run என்ற கட்டளையானது start என்ற பட்டியலுக்குள் சேர்ந்துவிடும்.

படிமுறை 3: Startஎன்ற பட்டியலை திரையில் தோன்றசெய்து அதில் நாம் சேர்த்திருந்த Run என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக; பின்னர் தோன்றிடும் Runஎன்ற உரையாடல் பெட்டியில் உள்ள காலி உரைபெட்டியில் Syskey என தட்டச்சுசெய்து Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் Securing Windows account database என்ற உரையாடல் பெட்டியில் Update என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7.

பின்னர் Start up key என்ற உரையாடல் பெட்டியில் System generated password என்ற வானொலி பொத்தானையும் அதன்கீழ் உள்ள Store startup key on floppy disk என்ற வானொலி பொத்தானையும் தெரிவுசெய்துகொண்டு ஒவ்வொரு உரையாடல் பெட்டியிலும் Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இவைகளை மூடிவிடுக :

8.

எச்சரிக்கைகுறிப்பு: இவ்வாறு செயற்படுத்தியவுடன் syskey.key என்றஒரு கோப்பு உருவாகும் இதனை ஏதோவொரு கோப்புஎன நீக்கம் செய்திடவேண்டாம் தவறுதலாக அவ்வாறு நீக்கம் செய்துவிட்டால் கணினயை ஃபார்மெட் செய்தால் மட்டுமே மீண்டும் கணினியை வழக்கமான நிலைக்கு திரும்பசெயற்படுமாறு செய்யமுடியும்

பின்னர் கணினியை இயக்கதொடங்கினால் This computer is configured to use a floppy disk during startup. Please insert the disk and click OK என்ற செய்தி திரையில் தோன்றிடும் உடன் நம்முடைய யூஎஸ்பி ட்ரைவை அதற்கான வாயிலில் பொருத்தி Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் விண்டோ 7 ன் வழக்கமான தொடக்க இயக்கதிரை தோன்றும்

இவ்வாறு யூஎஸ்பி திறவுகோள்வழியாக விண்டோ 7 ஐ தொடங்குமாறு செய்தபின்னர் அவ்வாறெல்லாம் தேவையில்லை எப்போதும் போல வழக்கமான விண்டோ7 தொடக்க இயக்கம் அமைந்தால் போதும் என மனமாறிடும் நிலையில் படிமுறை 3 –ல் Start up key என்ற உரையாடல் பெட்டியில் System generated password என்ற வானொலி பொத்தானின்கீழ் உள்ள Save the startup key locallyஎன்ற வானொலி பெத்தானை தெரிவு செய்துகொண்டு ஒவ்வொரு உரையாடல் பெட்டியிலும் Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 

வாகண ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களிடம் 8 போட சொல்லும் கணினி

     வாகண ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு பக்கத்தில் போக்குவரத்துதுறை அதிகாரிகள் இருந்து அவர்கள் சரியாக 8 போடுகின்றார்களா என கண்காணித்து குறிப்பிட்ட நபருக்கு ஓட்டுநர் உரிமம் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய தேவையில்லை. இனி அந்த வேலையை கணினியே இருக்கும் இடத்திலிருந்து பார்த்துகொள்ளும்.
       புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த வல்லுனர்கள் கணினி மூலம் வாகண ஓட்டுநர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோ பிரிகுயன்ஸி ஐடன்டிகேசன்என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம்ஆனது சென்சார்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. போக்குவரத்துதுறை அலுவலங்களில் இருக்கும் பரிசோதனை சாலைகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் இந்த சென்சார்கள் பொருத்தப்பட்டு அலுவலங்களில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
வாகண ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர் பரிசோதனை சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது, அவர்களின் செயலை இந்த சென்சார்கள் கன்காணித்து அலுவலக கணினிகளில் பதிவு செய்யும். போக்குவரத்து விதிமுறைகளுக்குட்பட்டு அவ்விண்ணப்பதாரர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கலாமா வேண்டாமா என்பதை இந்த கணினியே முடிவை கூறிவிடும்.
ஆந்திர மாநிலத்திலுள்ள நாகோல், உப்பல், கொந்தாப்பூர், மேட்சல் ஆகிய நகரங்களில் உள்ள போக்குவரத்துதுறை அலுவலங்களில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கானபரிசோதனை சாலைகளில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தபட்டு சரிபார்க்கபடுகின்றது.
இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான பரிசோதனை சாலைகளிலும் இந்த புதிய தொழில்நுட்பம் செயற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்மூலம், விரைவாக ஓட்டுநர் உரிமம் வழங்கமுடியும் என்பதைவிட முறைகேடுகளும் பெருமளவில் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவருடைய அவாவாகும்

ஓப்பன் ஆஃபிஸ்-கால்க்-47-ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கை ஒரு சாதாரண தரவுதளமாகவும் பயன்படுத்தி கொள்ளமுடியும்

      கிடைவரிசையும் நெடுவரிசையும் கொண்டு கட்டமைக்கபட்ட கால்க்கின் ஒரு அட்டவணையானது தரவுதளத்தின் அட்டவணைக்கும் கால்க் அட்டவணையின் கிடைவரிசையானது தரவுதளத்தின் ஒருஆவணத்திற்கும், கால்க்கினுடையஒவ்வொரு செல்லும் தரவுதளத்தின் புலத்திற்கும் சமமானதாக இருக்கின்றன. மேலும் ஏராளமான செயலிகளை(Function) இந்த ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கானது தன்னகத்தே கொண்டு பயனாளிகளின் தேவைகளனைத்தை யும் பூர்த்திசெய்ய கூடிய மிகச்சிறந்த தரவுதளமாக இது விளங்குகின்றது.
படம்-1-
   படம்-1-ல் ஒருவகுப்பில் உள்ள மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ,சராசரி மதிப்பெண், அவர்களின் தரம் ஆகியவை ஒப்பன்ஆபிஸ் கால்க்கின் விரிதாளில் ஒரு அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இதன் தோற்றமும் செயலியும் சேர்ந்து இது ஒரு தரவுதளமாகவும் பயன்படுவதாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒரு தரவுதளத்திற்குள் ஏராளமான செயலிகள்(Function) பயன்படுத்தபட்டு மற்ற ஆவனங்களுடன் வேறுபடுகின்றது அதைபோன்றே கால்க்கின் செயலிகள் இதன் விரிதாளை பயனாளர் ஒருவர் தரவுதளமாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது பொதுவாக AVEREAGE ,AVERAGEA, COUNT,COUNTIF என்பன போன்ற கால்க்கின் செயலிகள் (Function) தரவுதளத்திலும் பயன்படுத்தபடுகின்றன
.மேலும் Edit => Find & Replace=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் தவறான தரவுகளை தேவையான இடத்திற்கு இடம்சுட்டியை கொண்டு சென்று மாற்றி யமைக்க முடியம் அவ்வாறே Data => Filter=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இடம் சுட்டியை கொண்டுசெல்லாமலேயே தேவையான தரவுகளை திரையில் பிரதிபலிக்க செய்யமுடியும்
    அதுமட்டுமல்லாது VLOOKUP, HLOOKUP,MATCH, OFFSET,INDEXஎன்பனபோன்ற செயலிகளை (Function) பயன்படுத்தி தரவுதளத்தை போன்றே கால்க்கில் தரவுகளை கையாளமுடியும்
படம்-1-ல் உள்ள அட்டவணையின் பெயர்கள், அவர்களின் சராசரி மதிப்பெண் ,தரம் ஆகிய மூன்றை மட்டும் தனியானதொரு அட்டவணையாக தெரிவிக்க வேண்டும் என்ற தேவையெழும்போது தரவுதளத்தில் அதற்காக ஒரு வினா(query)எழுப்பினால் அதற்கேற்ற அட்டவணை யொன்று திரையில் பிரதிபலிக்கும் .கால்க்கில் கூட அவ்வாறான தேவையின்போது முந்தை பத்தி.யில் கொடுத்துள்ள செயலிகளை (Function) கொண்டு அவ்வாறான புதிய அட்டவணையை உருவாக்கிபயன்படுத்தி கொள்ளமுடியும்
ஒரு கால்க்கின் தாள்1ல் இந்த அட்டவணை இருப்பதாக கொள்வோம் தாள்2-ல் இந்த VLOOKUP என்ற செயலியை(Function) பயன்படுத்தி தேவையான அட்டவணையொன்றை உருவாக்கமுடியும் இதன் அமைப்பு பின்வருமாறு இருக்கும்
VLOOKUP(search_value; search_range; return_column_index; sort_order)
=VLOOKUP(A2;Sheet1.A4:H8;8)
     இதில் பிறை அடைப்புக்குள்ளிருக்கும் முதல் மதிப்பு நாம் தேடவேண்டிய தரவை குறிப்பிடுகின்றது அதாவது search_value; என்பதற்கு A2வின் மதிப்பையே எடுத்து கொள்ளும்படி கொடுத்துள்ளோம்
    இரண்டாவதாக இருப்பது எந்த இடத்திலுள்ள அட்டவணை என்றதகவலுடன் அதன் வீச்செல்லையும் சேர்த்து குறிப்பிடவேண்டும் search_range; என்பதற்கு இங்கு நாம் Sheet1.A4: என்றவாறு முதல் அட்டவணையின் இருப்பிடத்தை குறிப்பிட்டுள்ளோம்
மூன்றாவதாக அந்த அட்டவணையின் எந்த நெடுவரிசை மதிப்பு நம்முடைய அட்டவணைக்கு தேவையென்று குறிப்பிடவேண்டும் return_column_index; என்பதற்கு சராசரி மதிப்பென் மட்டும் தேவையென்பதால் 7 என குறிப்பிடவேண்டும் மாணவனின் தரம் தெரியவேண்டும் வேண்டுமென்பதால் நெடுவரிசையின் எண்ணிக்கை 8 என கொடுத்துள்ளோம்.
நான்காவது விருப்ப வாய்ப்பாகும் sort_order இதற்கு நாம் மதிப்பெதுவும் வழங்கவில்லை இந்த ஃபார்முலாவின்படி சரியாக இருந்தால் தாள்-1-லிருந்து பொருத்தமான தரவையும் இல்லையெனில் #N/A என்றும் படம்-2-ல் உள்ளவாறு அட்டவணையொன்று திரையில்பிரதிபலிக்கும்.
  படம்-2-
    OFFSET, என்ற மற்றொரு செயலியை(Function) உதாரணத்துடன் பார்ப்போம் .இவ்வகுப்பிலுள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் காண Average என்ற செயலி (Function) பயன்படும்
ஆனால் ஒருசில மாணவர்களின் மதிப்பெண்களையே இந்த அட்டவணையில் ஏதேனுமொரு சமயத்தில் பதிவுசெய்யாமல் விடுபட்டுவிட்டது என்றுதெரியவந்து அவர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து அட்டவணைய புதுப்பித்தல் செய்து விரிவாக்கம் செய்திடும் போது இந்த Average என்ற செயலி(Function) சரியான விடையை காண்பிக்காது அவ்வாறான நிலையில் இதனுடன் OFFSET, என்ற மற்றொரு செயலி (Function) உதவிக்குவருகின்றது இதன் அமைப்பு பின்வருமாறு இருக்கும்.
OFFSET(reference; rows; columns; height; width)
=AVERAGE(OFFSET(B2:F6;-1;4;5))
   இதில் பிறை அடைப்புக்குள்ளிருக்கும் முதல் மதிப்பு நாம் மேற்கோள்காட்டவேண்டிய அல்லது பார்வையிட வேண்டிய இடத்தை குறிப்பிடுகின்றது அதாவது reference; என்பதற்கு மதிப்பு ஒன்றையும் கொடுக்கவில்லை.
    இரண்டாவதாக rows; என்பதற்கு B2: என்றும் மூன்றாவதாக columns; என்பதற்கு F6; என்றும் அட்டவணையில் தரவு இருக்கும் பகுதியை சரியாக குறிப்பிட நான்காவதாக -1; என்றும் height; என்பதற்கு கிடைவரிசை 4;என்றும் width என்பதற்கு நெடுவரிடை 5 என்றும் மதிப்பினை இந்த ஃபார்முலாவில் கொடுத்துள்ளோம் உடன் இவ்வகுப்பு மாணவர்களின் ஒட்டு மொத்தசராசரி மதிப்பெண் 82.475என்று படம்-3-ல்உள்ளவாறு பிரதிபலிக்கின்றது
  படம்-3
   DAVERAGE,DSUM,DCOUNT என்பனபோன்ற தரவுதளத்திற்கு மட்டுமே பயன் படக்கூடிய ஒருசில சிறப்பு செயலிகளையும் கால்க்கில் செயல்படுத்தி அதன்விளைவை தரவு தளம் போன்றே கால்க்கிலும் காணமுடியும் ,
   மேலும் கால்க்கில் அடிக்கடி பயன்படுத்தாத OFFSET,INDEXஎன்பனபோன்ற செயலிகளை பயன்படுத்தி கால்க்கையும் பெரும்பாலனவர்களின் தேவைகளை போதுமான அளவிற்கு நிறைவுசெய்யும்பொருட்டு இதனை ஒரு தரவுதளமாக பயன்படுத்தி கொள்ளமுடியும் என்று அறிந்துகொள்க 

 

விண்டோவில் தொகுதி கோப்பை (batch file) எவ்வாறு உருவாக்குவது

பழைய டாஸ் இயக்கமுறைமையில் திரும்ப திரும்ப இயக்கப்படும் பயன்பாடுகளை இயக்குவதற்கான கட்டளை சொற்களை கோப்பு ஒன்றில் தட்டச்சு செய்து அதனை .bat என்ற பின்னொட்டுடன்  தொகுதி கோப்பு ஒன்று உருவாக்கப்பட்டது,அதன் பின்னர் இந்த தொகுதி கோப்பினை இயக்கி தேவையான பயன்பாடுகளை இயக்கும் செயல் எளிமை படுத்தப்பட்டது. இந்த வசதி இப்போது விண்டோவில் இல்லை என தயங்க வேண்டாம்.

இணைய இணைப்பில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது இடையில் மின்சாரம்தடைபடுதல்,கணிப்பொறிஇயங்காது நின்றுபோதல் குறிப்பிட்ட இணையதளத்துடன் தொடர்புகொண்டிருக்கும்போது தொங்கலாக நின்றுவிடுதல் ,என்பன போன்ற ஏதேனும் காரணங்களினால் மீண்டும் கணிப்பொறியை இயங்கச்செய்து இணைய இணைப்பு ஏற்படுத்த பல்வேறு படிமுறைகளில் செய்த செயலையேமீண்டும்மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் இதற்குபதிலாக இந்த செயல்களின் கட்டளைகளை ஒருதொகுதி கோப்பாக உருவாக்கி செயல்படுத்தினால்  தானாகவே அகல்கற்றை இணைப்பின்மூலம் விரைவாகவும் எளிமையாகவும் இணையத்தில் உலாவரலாம் இதனை ஏற்படுத்துவதற்கான  தொகுதிகோப்பினை உருவாக்குவதற்கு. start=>control panel => net work connection=>  என்றவாறு செயல்படுத்தவும் நோட்பேடை திறந்து RASDIAL=> connection name <user name> இணையத்தின்  பெயரை மிகச்சரியாக தட்டச்சுய்க.  பின்னர் Ctrl + S ஆகிய விசைகளை சேர்த்து தட்டுக.  பின்னர் விரியும் திரையில் இதற்கு ஒரு பெயரை <filename=kuppans>.bat என்றவாறு தட்டச்சு செய்திடுக. அதன் பின்னர் start=> control panel => scheduled tasks => Add scheduled Tasks=> என்றவாறு தெரிவு செய்து next என்ற பொத்தானை சொடுக்குக  பின்னர்browse என்ற பொத்தானை சொடுக்கி Bat file இருக்கும் மடிப்பகத்தைவழிகாட்டி தெரிவு செய்து கொள்க.

அதன் பின்னர் Daily என்பதை தெரிவு செய்து next என்ற பொத்தானை சொடுக்குக பின்னர் starting time என்பன போன்ற விவரங்களை தட்ச்சு செய்து இந்த செயலை முடிவுக்கு கொண்டுவருக. குறிப்பிட்ட செயலில் வலதுபுறம் சொடுக்குக விரியும் பட்டியில் properties என்பதை சொடுக்குக விரியும் பண்பியல்பு பெட்டியில் shedule எனும் தாவிபொத்தானை சொடுக்குக

பின்னர் Advanced எனும் பொத்தானை சொடுக்குக Repeate Tasks என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.

உள்ளடக்க மேலாண்மை அமைவு(Content Management System)

Yahoo போன்ற வலைதளங்களை உருவாக்கி பராமரிப்பது CMS எனப்படும்Content Management Systemஆகும் இவ்வாறான செயலிற்காக ஒருவருக்கு  இந்த CMSஅடிப்படையில் நிருவகிக்கப்படும் இணையதளங்களை உருவாக்குவதற்கான நிரல்தொடர்களை எழுதும் அளவிற்கு ஆழ்ந்த அறிவு தேவையில்லை. ஆனால் வேர்டில் பணிபுரியக்கூடிய அளவு திறன் இருந்தால் மட்டும் போதும் ,ஆயினும் நிரல்தொடர்களை எழுதும் திறன் இருந்தால் கூடுதலான தகுதியாக கொள்ளப்படும். நாம் விரும்பியவாறு இந்த CMS மூலம் இணையதளங்களை உருவாக்கி பராமரிக்கலாம் ஏன் சாதாரனமாக உயர்நிலைபள்ளியில் பயிலும் மாணவர்கள் கூட ஒரு இணையதளத்தை இந்த CMS  மூலம் உருவாக்கி  பராமரிக்க முடியும் என்றளவிற்கு மிக எளிமையானது மற்றும் சுலபமானதும் கூட.

CMS  என்றால் என்ன? .  இது ஒரு இணைய பயன்பாடாகும். இது  இணைய தளங்களின் உள்ளடக்கங்களை எளிதாக கட்டமைத்து நிருவகிக்கின்றது. ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட், இமெஜ் போன்றவை இதன் உள்ளடக்கங்கள் ஆகும்

இது markup language  மற்றும் அதனுடைய குறியொட்டுகள் இல்லாமலேயே மிகவிரைவாக  இணையதளங்களை உருவாக்குதல்  பதிப்பித்தல், வெளியிடுதல் போன்ற செயல்களை இந்த உள்ளடக்கங்களுக்குள் செய்து தளநிருவாகியின் வாழ்வை வெகு சுலபமாக கட்டுபடுத்துகின்றது.   ஆனால் இந்த CMS ஐ  எவரும் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை இலவசமாக ஏராளமான வகையில் இந்த CMSஆனது  வலைளத்தில் கிடைக்கின்றன அவற்றுள் நம்முடைய தேவைக்கேற்றவாறு  ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்,இது பொருத்தமாக இருக்கின்றதா என சரிபார்த்து தெரிவு செய்ய நிறைய நேரமாகும். அதற்கு பதிலாக ஒப்பீடு செய்து பார்க்கலாம்

CMS- இன் சிறப்புகள் .

1,1,நிறுவன இணையதளங்கள்

1,2,நேரடி விற்பனை நிலையம்

1,3,சமுதாய இணையதளங்கள்

1,4,செய்தி இணையதளங்கள்

1,5,வலைபூ ஆகியவற்றில்ஒன்றைநிறுவி பராமரிக்கலாம்

2.உங்களுடைய விருப்பமான உலாவி மூலம் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் நாம் உருவாக்கிய நம்முடைய இணையதளத்தை கட்டுப்படுத்தலாம்.

3)இது பயன்பாட்டு தொழில் நுட்பம் தெரியாத சாதாரன (பாமரன்)மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது அதனால் இதனை எவரும் எளிதாக செயல்படுத்தமுடியும்.

4)அனுமதிக்கப்படாத எவரும்¢ இந்த இணையதளங்களை மாற்றியமைக்க முடியாது.

5)இது இதன் உள்ளடக்கங்களின் வடிவமைப்பிலிருந்து  வேறுபட்டதாகும்.  தேவையானால் இதன்உள்ளடக்கங்களை பற்றி கவலைப்படாமல் வடிவமைப்யை மாறுதல் செய்ய முடியும்.

6)இதில் வழிகாட்டி எனும் பட்டி(navigation) தானாகவே உருவிகிவிடும்.

7)இதன் அனைத்து உள்ளடக்கங்களும் தரவுதளத்தில் உள்ளவையாகும் .

8)இதில் இதன் உள்ளடக்கங்களின் வெளியீட்டு நேரத்தை குறிப்பிட முடியும்.

9)இந்த இணையதளங்களை இலவசமாகவோ அல்லது கட்டணத்துடன் உள்ள படிமஅச்சு (tenplate)களின் மூலமாகவோ நம்முடைய தளத்தின் தோற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.

10)ஒருவருக்குHTML,CSS,XHTML,PHP போன்றவற்றை பற்றிய அடிப்படை அறிவு சிறிது ஏதும் இல்லாமலேயே  இதன்மூலம் தம்முடைய இணையதளத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்க முடியும்.

11)    இதன் பயனால் உங்களுடைய இணையதளத்தை நிருவகிப்பதற்கு வாடிக்கையாளர் வலைப்பக்கத்தின் பயன்பாட்டை நிறுவத் தேவையில்லை.  உலாவி மூலமே நிருவகிக்க முடியும்.

12)இதனுள் பாதுகாப்பு நிலையை குறிப்பிட்டு சில பக்கங்களை மட்டும் பொது மக்கள் பார்வையிட அனுமதித்தும் எஞ்சியவற்றை தடுத்தும் நிருவகிக்க முடியும்.

13)தேடுபொரியின் மிக எளிதான தேடுதலுக்காக உங்களுடைய வலைதளங்களை இதன்மூலம் திட்டமிட்டு செயல்படுத்திடமுடியும்.

CMS-இன் முக்கிய நன்மைகள்

1)சற்றுமுன் கிடைத்த செய்தியை திரையில் பிரதிபலிப்பதை போன்று அவ்வப்போது இணையதளங்களை இயக்க நேர தகவல் ஊடகமாக  மாற்றியமைக்க முடியும்  .

2)பாதுகாப்பான உள்நுழைவி (log in),கடவுச்சொல் (password) மூலம் உள்ளடக்கங்களை அவ்வப்போது தொடர்ந்து நிகழ்நிலைபடுத்தி மேம்படுத்தி கொள்ள முடியும்.

3)பல்வேறு செயலிகளுக்காக கூடுதலான தகவமைவு(module)களை உருவாக்கிட முடியும்.

4)பல்வேறு தேடுபொறிகள் CMS ஐ வெகு சுலபமாக அடையாளம் காண்கின்றன.

5)     நிறுவனத்தின் வழிமுறைகள், செயல்பாடுகள், கையேடு, போன்ற தகவல்களை ஊழியர்கள், நிருவாகிகள் , வாடிக்கையாளர்கள் ஆகியோர் பயன்படுத்திக்கொள்ளும்படி ஒரு இணையதளத்தின் உள்ளடக்கமாக அமையுமாறு உருவாக்கிட முடியும்.

6)ஊழியர்கள், நிருவாகிகள், வாடிக்கையாளர்கள் ஆகியோருடன் விவாத குழுக்களை உருவாக்கிட முடியும்.

ஒரு இணையதளத்தினை சொந்தமாக உருவாக்கிடும்போது கீழ்கானும் கருத்துக்களையும் கவணத்தில் கொள்க:

1)     இணையதளம்டானது யாரைச் சென்றடைய வேண்டும். இதன் குறிக்கோள் என்ன என்பதை முதலில் முடிவு செய்க.

2)     எந்த வகையான கோப்புவடிவமைப்புகளை CMSஆதரிக்க கூடியது?

3)     இணையதளத்தின் உள்ளடக்கங்கள் தரவுதளத்திலா அல்லது வேறு வகை கோப்பிலா எதில் தேக்கி வைக்கப்படுகின்றது?.

4)     இந்தCMS ஆனது குழுக்களுக்கானதா அவ்வாறாயின் அதன் முக்கியத்துவம் யாது.?

5)     எத்தனை முறை இதனை பதிவிறக்கம்  செய்ய முடியும?

6)     இந்த பயன்பாட்டை நிறுவவும் சுலபமாக இயக்கவதற்கும் என்ன வகையான வன்பொருள் மற்றும் மென்பொருட்கள் தேவை?.

7)     இந்த CMS பற்றிய பொதுவான கருத்துக்கள் செய்திகள் விவரங்கள்  கிடைக்கப்பெற்றுள்ளதா?.

8)     இந்த CMS பயன்படுத்தி இதுவரையில் எத்தனை இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?.

9)     இந்த CMS மென்பொருளை  நிறுவுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ளும்? .

10)    இதற்கான நேரடி ஆவணங்கள் உள்ளனவா? ஆம்எனில் எவ்வாறு எந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு எங்கு பராமரிக்கப்படுகின்றது?.

11)    இதில் கூடுதலாக எத்தனை இலவசAdd onஉள்ளன?.

12)    நடப்பு CMS-ன் திறன் எவ்வளவு?

என்பது போன்ற CMS பற்றிய அனைத்து விவரங்களையும் www.Opensourcecms.com  என்ற CMS-ன் வலைதளத்திற்கு சென்று  இலவச செயல்விளக்ககாட்சியை செயல்படுத்தி  பார்த்து அறிந்து கொள்க.

joomala,Drupal,Mambo,Plone போன்றவை இவ்வாறான இலவச திறமூல  CMSகள் ஆகும்.

Mambo:இது மிக சாதாரணமாக ஒரு இணையதளத்தினை உருவாக்க பயன்படுத்துவதுதால் இதனை அமைவு செய்வது மிக சுலபமாகும் பதிப்பித்தல் செய்து வெளியிடுவது அதைவிட சுலபமாகும் வித்தகரில் next , next என்றவாறு  பொத்தான்களை சொடுக்குதல் மூலம் ஒரு இணைய உலாவியிலிருந்து மிகஎளிதாக நிறுவ முடியும்.  அதற்கு முன்பு கணிப்பொறியில் My SQL  நிறுவியிருக்க வேண்டும்.  இது மிக சிறந்த இணையதளத்தினை தனியாக நிருவகிக்கும் திறனுடையது, முகப்புதிரையையும்  பின்புலத்தையும் இது தனித்தனியாக பிரிக்கின்றது.  மேலிருந்து கீழ்வரை ஒவ்வொன்றாக இதன் உள்ளடக்கங்களை  வெகு சுலபமாக  உருவாக்கி திரையில் பிரதிபலிக்க செய்ய முடியும்.  இதன் உதவி துளிகள் மிகவும் திறன் வாய்ந்தாகும் . இதுஒரு மிக சிறந்த இலவச மென்பொருள் செயல்திட்டமாகும்.

இதில் தேவையான  குறி முறைகளை மென்பொருட்களை  இறக்கமதி செய்து வெட்டி ஒட்டி ஒரு இணையதளத்தினை  உருவாக்க பயன்படுத்திகொள்ளலாம்.

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-9 படிவங்கள்உருவாக்குவதற்கான கட்டுப்பாடு கருவிகள் (Control Tools)

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-9 படிவங்கள்உருவாக்குவதற்கான கட்டுப்பாடு கருவிகள் (Control Tools)

கட்டுப்பாடு(Control ) என்பது படிவம் அறிக்கை ஆகியவற்றில் பயன்படும்  முகப்பு பெயர் (Lable) அல்லது உரை பெட்டி (Text Box) போன்ற ஒரு பொருள் ஆகும்.

இயக்குவிசைகளின் வகைகள்

.எண்

 

 

1.

அடிப்படை இயக்குவிசை

உரைப்பெட்டி (Text Box) முகப்பு பெயரில் உரையாக பிரதி பலிப்பது

2.

மேம்படுத்தப்பட்ட தரவு உள்ளீடு சரிபார்க்கும் இயக்குவிசை.

  அ) விருப்பக்குழு(Option Group) பல விருப்பத்தேர்வுகள், தேர்வு செய் பெட்டிகள், நிலைமாற்று பொத்தான்கள் சேர்ந்தது
  ஆ) நிலைமாற்று பொத்தான் (Toggle Button) மேலே(up), கீழே(down) என்ற இரு நிலைகளை மாற்ற பயன்படுவது
  இ) விருப்ப பொத்தான்     (Option Button) இதனை வானொலி பொத்தான்கள் என்றும்அழைப்பர். ஓரு வட்டமும் வட்டத்தின் மையத்தில் புள்ளியும்/ வைத்தால் செயல் நிலையிலும் புள்ளி இல்லையெனில் செயலற்ற நிலையிலும் இருக்கும் என படிவத்தை வடிவமைப்பு செய்வது.
  ஈ) தேர்வு செய் பெட்டி(Check box) இதுவும் மற்றொரு இரு நிலை மாற்றியாகும். மையத்தில் குறியிருந்தால் செயல் நிலையிலும், குறியில்லை எனில் செயலற்ற நிலையிலும் இருக்கும் என படிவத்தை வடிவமைப்பு செய்வது.
  உ) சேர்மான பெட்டி(Combo Box) உள்ளீடு செய்ய தேவையான இடத்தில் மேல் மீட்பு பட்டியை(Pop up list ) காண்பித்து அவற்றில்ஓன்றை தெரிவு செய்யும்படி கோருவது.
  எ) பட்டி பெட்டி(List Box) படிவங்களிலும், அறிக்கைகளிலும் பட்டியலின் மதிப்பை பிரதிபலிக்க செய்வது.
  ஏ) கட்டளை பொத்தான்(Command Button) இதனை தள்ளும் பொத்தான் என்றும்  அழைப்பர் .ஒரு செயலை தானாகவே செய்வதற்காக செயலியை செயல் நிரலை அழைக்கஇது பயன்படுகிறது.
  ஐ) உள் படிவகட்டுப்பாடு     (Sub Form Control) ஓரு படிவத்திற்குள் மற்றொரு வடிவம் உருவாக்கப் பயன்படுவது
  ஒ) தாவல் இயக்குவிசை    (Tab Control) இதன்மூலம் பல பக்கங்களை பிரதிபலிக்க செய்யலாம்.
3. படம் வரைபடம் இயக்குவிசை (Graphics And Picture Control)
  அ)கட்டுபாடற்ற பொருள் சட்டம் (Unbound Object Frame) உள்ளிணைந்த ஓலி, ஓளி, படம், வரைபடம் ஆகியவைகள் இணைக்கப்படாத சட்டம்
  ஆ)கட்டுபாடுடைய பொருள் சட்டம்(Bound Object Frame) உள்ளிணைந்த ஓலி, ஓளி, படம், வரைபடம் ஆகியவைகள் ஓருங்கிணைக்கப்பட்ட சட்டம்
  இ) கோடு(Line) ஓரே ஓரு கோடு பல்வேறு தடிமனில், நிறத்தில் புலங்களை பிரிப்பதற்கு பயன்படுவது.
  உ) செவ்வகம்(Rectangle) பல்வேறு நிறங்களிலும், அளவுகளிலும் காலி இடங்களை நிரப்புவதற்கு பயன்படுவது
  உ) பக்கம் பிரித்தல் (Page Break) தேவைப்படும் பகுதியோடு பக்கம் முடிவடை கின்றது என குறிப்பிட பயன்படுவது
 
 
 

முகப்பு பெயர் இயக்குவிசை (Label Control)

இது படிவம், அறிக்கை போன்றவற்றில் தலைப்பு, தலைப்பின்கீழ் பெயர், அறிவுரை போன்று விவர உரையாக பிரதிபலிக்க செய்வது.  முகப்பு பெயர் தனியாகவும் இயக்குவிசையாகவும் ஆக்க முடியும்.

இதனை ஓரு கோடு அல்லது பல கோடுகளிலும் பிரதிபலிக்க செய்யலாம். இது ஒரு கட்டுபாடற்ற இயக்குவிசையாகும். இது உள்ளீடு எதனையும் ஏற்காது. இது ஒரு ஒருவழி செய்தியாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

உரைபெட்டி இயக்குவிசை

இது பயனாளர் உள்ளீடு செய்யும் அல்லது மாறுதல் செய்யும் தரவுகளை பிரதிபலிக்க செய்வதாகும். இது ஓரு அதிகப்படியாக பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் இயக்குவிசையாகும்.

ஓவ்வொரு உரைப்பெட்டியும் என்ன குறிக்கோளுக்காக உருவாக்கப்பட்டது என்ற ஓரு முகப்பு பெயருடன் உருவாக்கப்பட்டு காணப்படும்.

மிகநீண்டஅளவிற்கு உள்ளீடு செய்யப்படுகின்ற தரவுகள் புலத்தின் எல்லைக்குள் மடங்கி மடங்கி பிரதிபலிக்கும்.

இருநிலை மாற்று பொத்தான், விருப்பப் பொத்தான், தேர்வு செய் பெட்டி (Toggle Button, Option Button, Check Box)

இவைகள் Yes/No, True/False, On/Off ஆகிய  இருநிலை மாற்றிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யப்பட்டு செயலற்றவைகளாகவோ, செயலுள்ளவைகளாகவோ இயக்குவிசை இருக்கும்.

விருப்புகுழு (Option Group)

இந்த குழுவிற்குள் நிலைமாற்று பொத்தான், விருப்ப பொத்தான், தேர்வு செய் பெட்டி ஆகிய மூன்றும் அடங்கிய ஓட்டு மொத்த அமைப்பாக இது இருக்கும். இந்த நிலையில் ஓட்டுமொத்த செயல் இயக்குவதாக மட்டுமே நடைமுறையில் இருக்கும் தனிப்பட்ட பொத்தானின் இயக்குவிசை செயலற்றதாகும்.

பட்டி பெட்டி (List Box)

இது தரவுகளின் பட்டியை திரையில் கீழ் குழு பட்டியல் போன்று பிரதிபலிக்கச் செய்யும். ஆனால் பட்டி பெட்டி மட்டும் திறந்த நிலையில் இருக்கும். இதில் பிரதிபலிக்கும் தரவுகளின் பட்டியலிலிருந்து தேவையானதை இடம் சுட்டியை நகர்த்தி தெரிவு செய்து உள்ளீடு விசையை தட்டினால் போதும் தேர்வாகிவிடும்.

இதில் நெடுக்காகவும், குறுக்காகவும் உருள்பட்டையை பயன்படுத்தி ஆவணங்களை, புலங்களை திரையில் காண முடியும்.

சேர்மான பெட்டி (Combo Box)

குறிப்பிட்ட கிடைவரிசை மட்டும் அம்புக்குறியுடன் திறக்கப்பட்டு பிரதிபலிக்க செய்வது. பட்டியலில் இல்லாத விவரங்களை உள்ளீடு செய்ய பயன்படுகிறது.

தாவல் இயக்குவிசை(Tab Control)

இது பல்வேறு தரவுகளை ஓரே திரையில் பிரதிபலிக்க செய்யும். இந்த இயக்குவிசையை பயன்படுத்துவதன் மூலம் ஓரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு தாவ முடியும்.

புதிய இயக்குவிசையை உருவாக்குதல்

தானாகவே படிவம் உருவாக்கும் வித்தகர்மூலம் படிவங்களை உருவாக்கினாலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட படிவத்தில் மேலும் ஓருசில இயக்குவிசைகளை இணைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவோம்.அவ்வாறு  நாம் விரும்புகின்ற இயக்குவிசைகளை இந்த படிமுறைகளில் சேர்க்க இயலாது. அவ்வாறான நிலையில் கீழ்க்காணும் படிமுறைகளை பின்பற்றினால் நாம் விரும்புகின்றவாறு படிவங்களை உருவாக்க முடியும். மேலும் படிவ வடிவமைப்பு முறையில் படிவங்களை உருவாக்குவது வித்தகர் மூலம் உருவாக்குவதைவிட வித்தியாசமானது ஆகும்.

1.தரவு தள சாளரத்தில் இடப்புறத்தில் உள்ள பொருட்களில் Form என்பதை தெரிவு செய்க.

2.வலப்புறம் உள்ள இரு வாய்ப்புகளில் Create Form in Design View என்பதை தெரிவு செய்க.

3 மேற்பகுதியில் உள்ள புதியது (New)  என்பதை தெரிவு செய்க.

4.தோன்றும்New Formஎன்ற சிறு பெட்டியில் Design view      என்பதை தெரிவு செய்க.

5.காலிபடிவம் உருவாக்கு (create new form)என்பதை தெரிவு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக .

படம்-1

  உடன் படம் 1ல் உள்ளவாறு காலி படிவம் உருவாக்கும் பகுதியில் தேவையானவாறு படிவம் ஒன்று உருவாகி காட்சியளிக்கும்.

படிவ உருவாக்கும் பகுதியின் அளவை மாற்றுதல்

அடர்ந்த சாம்பல் நிறப்பகுதி உள்ளவைதான் படிவம் உருவாக்கும் பகுதியாகும். அதன் அளவை மாற்ற விரும்பினால் எல்லை புறத்தில் எந்த பக்கத்திலும் இடம்சுட்டியை வைத்து பிடித்து அப்படியே இழுத்து சென்று விட்டால் போதும் இவ்வாறு தேவையான அளவிற்கு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ செய்ய முடியும்.

காலியாக உள்ள படிவ பகுதியில் இயக்கு விசையை கொண்டு வருதல்

இதனை இரண்டு வழிகளில் கொண்டு வரலாம்

1புலவரிசை சாளரத்தில் உள்ள ஒரு புலத்தினை இழுத்து வந்து தேவையான இடத்தில் விட்ட பிறகு கட்டுண்ட இயக்கு விசையை அந்த புலத்தில் சேர்க்கலாம்.

2.கருவி பெட்டியில் உள்ள கட்டற்ற இயக்கு விசையில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி புதிய கட்டற்ற இயக்குவிசையை காலி படிவத்தில் சேர்க்கலாம்.

கட்டுண்ட இயக்குவிசையானது அட்டவணையின் புலத்துடன் தொடர்பு கொண்டிருக்கும். கட்டற்ற இயக்குவிசையானது அட்டவணையின் புலத்துடன் தொடர்புகொண்டிருக்காது. கட்டுண்ட இயக்குவிசையுள்ள படிவத்தின் மூலம் தரவுகளை நேரடியாக அட்டவணைகளில் உள்ளீடு செய்ய முடியும்.

புலவரிசை சாளரத்தை பயன்படுத்துதல்

காலிபடிவ வடிவமைப்பு சாளரத்தில் கருவிப்பட்டியில் உள்ள புலவரிசை என்பதை தெரிவு செய்க. கட்டளை சட்டத்தில் உள்ள காட்சி View  என்பதை தெரிவு செய்க. உடன் படம் 2ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Field List என்பதை தெரிவு செய்க. உடன் படம் 2ல் உள்ளவாறு இயக்கு பட்டியுடன் கூடிய புலவரிசையின் பட்டியல் கிடைக்கும்.

 படம்-2

புலவரிசை பட்டியலின் பயன்

1.இதன் மூலம் தேவையானவற்றை புலவரிசை பட்டியலில் இருந்து பிடித்து இழுத்து வந்து விட்டவுடன் தானாகவே புதிய கட்டுண்ட .இயக்குவிசை உருவாகிவிடும்.

2.பண்பியல்புகள், வடிவமைப்பு அளவு, மரபுரிமை, நிலைப்பட்டியின் உரை, தரவு ஏற்கும் விதிகள், செய்திகள் போன்றவை தானாகவே ஏற்படுத்திக்கொள்ளும்.

3.இயக்கு விசையின் முகப்பு, உரை முகப்பு போன்றவைகளின் புலப்பெயரை தானாகவே எடுத்துக்கொள்ளும்.

4.புலஇயக்கு விசையானது இயக்குவிசை முகப்புடன் ஓன்றாக பினைக்கப்பட்டு இருக்கும்.

கருவிப்பெட்டியை பயன்படுத்துதல்

எந்த வகையான இயக்குவிசை எந்த புலத்திற்கு என தெரிவு செய்து பின்னர் பட்டியில் உள்ள புலங்களுடன் தொடர்புபடுத்தி பண்பியல்புகளை உருவாக்கி கட்டுண்ட இயக்குவிசையை மாற்றலாம். கருவி பெட்டியில் உள்ள தேவையான பொத்தான்களை சொடுக்குவதன் மூலம் கட்டற்ற இயக்குவிசையை கொண்டு வரலாம். சிலவகையான இயக்குவிசை கருவிப்பெட்டியில் இருக்காது. அதுபோன்ற சமயத்தில் புலவரிசை பட்டியலை பயன்படுத்தலாம்.

படம்-3

புலவரிசை பட்டியலில் இருந்து இழுத்து வந்துவிடுவதன் மூலம் உருவாக்குதல்

1.படம்3ல்உள்ளவாறு புலவரிசை பட்டியலில் தொடர்ச்சியான புலங்களில் தேவையான வற்றில் மட்டும் நாம் விரும்பியவாறு ஆரம்ப புலத்தில் இடம் சுட்டியை வைத்து சொடுக்குக. Shift விசையை பிடித்துக்கொள்க. இறுதி புலம்வரை தெரிவு செய்து அப்படியே இழுத்துவந்து காலியிடத்தில் விடவும்.

2பல தொடர்ச்சியற்ற புலங்களை தெரிவு செய்ய வேண்டுமெனில் தேவையான புலத்தில் வைத்து Ctrl  விசையை பிடித்துக்கொண்டு இடம் சுட்டியை சொடுக்குக. அப்படியே தேவையான புலங்கள் அனைத்தையும் தெரிவு செய்தபின்னர் இழுத்துவந்து காலியிடத்தில் விடவும்.

3.அட்டவணை /வினா பெயரை இருமுறை சொடுக்குக.தோன்றும் தலைப்பு  பட்டியில் உள்ள புலங்களை தெரிவு செய்துஅப்படியே இழுத்து விடவும்.

கருவிப்பெட்டியின் மூலம் கட்டில்லாத இயக்கு விசையை உருவாக்குதல்.

ஓரு இடத்தில் ஓரு கட்டுண்ட இயக்குவிசையை மட்டுமே உருவாக்கமுடியும். ஓன்றுக்கு மேற்பட்ட இயக்கு விசையை உருவாக்கினால் கட்டில்லாத இயக்குவிசைகள் கொடா நிலை முகப்பு பெயருடன் உருவாகும்.

கீழ்க்கண்ட படிமுறைகளை பின்பற்றி மூன்று வெவ்வேறு வகையான கட்டற்ற இயக்கு விசையை உருவாக்கலாம்.

1.கருவி பெட்டியில் உள்ள உரைப்பெட்டி பொத்தானில் (ab1)இடம் சுட்டியை               வைத்து சொடுக்குக.

2.இடம் சுட்டியை படிவ வடிவமைப்பு சாளரத்தில் நிறுத்துக.

3.எங்கு இயக்குவிசை தேவையோ அங்கு சுட்டியை சொடுக்கி  பிடித்துக்கொள்க. பின்னர் இயக்குவிசையை தேவையான அளவு இழுத்துவிடவும்

1.கருவி பெட்டியில் உள்ள விருப்ப பொத்தானை சொடுக்குக.

2. இடம் சுட்டியை படிவ வடிவமைப்பு சாளரத்தில் கொண்டு வரவும்.

3.எங்கு இயக்கு விசை தேவையோ அவ்விடத்தில் வைத்து சொடுக்கி       பிடித்துக் கொண்டு தேவையானவரை இழுத்துவிடுக.

1.கருவி பட்டியில் உள்ள தேர்வு செய் பெட்டியை சொடுக்குக.

2.இடம் சுட்டியை படிவ அமைப்பு சாளரத்தில் வைத்துக்கொள்க.

3.தேவையான பகுதியில் இடம் சுட்டியை வைத்து பிடித்து தேவையான அளவிற்கேற்ப சுட்டியால் இழுத்துவிடவும்.

இயக்குவிசையை தெரிவு செய்தல்

 படம்-4

ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குவிசையை தெரிவு செய்யவும். உடன் நான்கு முதல் எட்டுவரையுள்ள சிறு சிறு சதுரப்பெட்டியுடன் கூடிய கைப்பிடி போன்று இயக்குவிசையை சுற்றி தோன்றும் இடப்புற தலைப்பில் மேற்பகுதியில் பெரியதாக உள்ள சிறுசதுரம் இயக்குவிசையின் அளவை மாற்றப்பயன்படுவது.

இயக்குவிசையை  தெரிவு செய்தலை தவிர்த்தல்

இயக்குவிசை இல்லாத படிவ வடிவமைப்பு சாளரத்தில் இடம் சுட்டியை வைத்து சொடுக்கினால் தெரிவு செய்த இயக்குவிசை தவிர்க்கப்பட்டு கைப்பிடிகள் மறைந்துவிடும்

ஓரு இயக்குவிசை மட்டும் தெரிவு செய்தல்

தெரிவு செய்யவேண்டிய குறிப்பிட்ட இயக்குவிசையில் இடம் சுட்டியை வைத்து சொடுக்கியவுடன் இயக்குவிசை எல்லையை சுற்றி கைப்பிடியுடன் செயல் நிலைக்கு வந்துவிடும்.

பல இயக்குவிசை தெரிவு செய்தல்

தேவையான இயக்குவிசையில் Shift விசையை வைத்து பிடித்துக்கொண்டு பின்னர் ஓவ்வொரு இயக்குவிசையாக தெரிவு செய்து இடம் சுட்டியால் இழுத்துச்சென்று சேர்க்கவும் உடன் ஓரு சாம்பல் நிற செவ்வகம் தோன்றம்.

இயக்குவிசையின் அளவை மாற்றுதல்

இயக்குவிசையை சுற்றியுள்ள கைப்பிடியை பிடித்து இழுத்துச்சென்று தேவையானவாறு இதன் அளவை மாற்றலாம்.

இயக்குவிசையை நகர்த்துதல்

 படம்-5

 இயக்குவிசையின் இடப்புறம் மேற்பகுதியில் உள்ள கைப்பிடியை பிடித்துஇழுத்து சென்று தேவையான இடத்திற்கு கொண்டு சென்றுவிடவும் முகப்பு பெயரும் உடன் சேர்ந்தாற்போன்று இடம் மாறிவிடும். தவறுதலாக நாம் விரும்பாத இடத்திற்கு நகர்த்தியிருந்தால் கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பிக்க என்பதை தெரிவு செய்து விரியும் பட்டியில் Undo Move அல்லது Undo Sizing என்பதை தெரிவு செய்க.

இயக்குவிசையை சீர் அமைத்தல்

குறிப்பிட்ட இயக்குவிசை எந்த இடத்தில் அமையவேண்டும் அதன் தோற்றம் எவ்வாறு  இருக்கவேண்டும் என்று சரி செய்வதை இயக்குவிசை சீரமைத்தல் என்பர்.கட்டளை சட்டத்தில் உள்ள Format என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் சிறுபட்டியில் Align என்பதை தெரிவு செய்க. இடப்பறம் Left , வலப்புறம் Right, மேற்புறம் Top , கீழ்புறம் Bottom போன்ற விருப்பத்தேர்விலிருந்து நாம் விரும்பியதை தேர்வு செய்ய முடியும்.

 படம்-6

 தொகுப்பு கட்டம் To Grid.. இதனை காட்சியாக காண்பதற்கு கட்டளை சட்டத்தில் உள்ள காட்சி view என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் Grid என்பதை தெரிவு செய்க அல்லது கட்டளை சட்டத்தில் உள்ள format என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் snap to grid என்பதை தெரிவு செய்க. இவ்வாறு செய்வதன் மூலம் புதிய இயக்கு விசையை சீர் அமைக்க முடியும். மற்றொரு வகையில் கட்டளை சட்டத்தில் உள்ள format  என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் horizontal spacing அல்லது    vertical spacing என்பதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து கிடைமட்டமாகவோ நெடுவரிசையாகவோ அளவை மாற்ற முடியும்.

இயக்குவிசையை பொருத்தமான அளவாக்குதல்

 படம்-7

 கட்டளை சட்டத்தில் உள்ள format என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் size என்பதை தெரிவு செய்க. விரியும் சிறு பட்டியில் to grid, to tallest, to narrow, to widest என்றவாறு உள்ள விருப்பத்தேர்வில் நமக்கு தேவையானவற்றை மட்டும்தெரிவு செய்து இயக்குவிசையின் அளவை சரிசெய்துக்கொள்க.

குழுவான இயக்குவிசையை உருவாக்குதல்

 படம்-8

 தேவையான இயக்குவிசைகளை shift விசையை பிடித்துக்கொண்டு தெரிவு செய்க. பின்னர் கட்டளை சட்டத்தில் உள்ள format     என்பதை தெரிவு செய்து விரியும் பட்டியில் group என்பதை தெரிவு செய்க.

இவ்வாறு தெரிவு செய்த குழுவாக இருக்கும் இயக்கு விசைகளில் ஓன்றை தெரிவு செய்தால் குழுவில் உள்ள அனைத்து இயக்கு விசைகளும் செயலுக்கு தயாராக இருக்கும்.

தெரிவு செய்த குழுவை நீக்க மீண்டும் கட்டளை சட்டத்தில் உள்ள format என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் Ungroup என்பதை தெரிவு செய்க. குழுவாக தெரிவு செய்யப்பட்டவை தனித்தனியாகிவிடும்.

இயக்குவிசையை நீக்குதல்

முன்பு உருவாக்கப்பட்ட இயக்குவிசை இப்பொழுது தேவையில்லை எனில் நீக்க வேண்டிய இயக்குவிசையை தெரிவு செய்க. கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பிக்க என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் delete என்பதை தெரிவு செய்க அல்லது cut     என்பதை தெரிவு செய்க அல்லது விசை பெட்டியில்  (key board)   உள்ள Delete    என்ற சாவியை தட்டுக.

இயக்குவிசையை நகலிடுதல்

தேவையான இயக்குவிசையை தெரிவு செய்க. கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பிக்க என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் Copy என்பதை தெரிவு செய்க. தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்து மீண்டும் கட்டளை சட்டத்தில் பதிப்பிக்க என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் Paste என்பதை தெரிவு செய்க.

இயக்குவிசையின் முகப்பை இணைத்தல்

இயக்குவிசையில் முகப்பு பெயரை தவறுதலாக நீக்கி விட்டோமெனில் கீழ்க்கண்ட படிமுறைகளை பயன்படுத்தி மீண்டும் அதனை கொண்டுவரலாம்.

1.கருவிப்பட்டியில் உள்ள முகப்பு பொத்தானை சொடுக்குக.

2.பின்னர் படிவ வடிவமைப்பு சாளரத்தில் இடம்சுட்டியை நிறுத்துக.

3.எங்கு இயக்குவிசை அமையவேண்டுமோ அங்கு இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. இயக்குவிசையைஅப்படியே பிடித்து இழுத்துசென்று  தேவையான அளவிற்கு விடுக.

4.அதன்பின்னர் கட்டளைச் சட்டத்தில் உள்ள பதிப்பிக்க என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் பட்டியில் Cut என்பதை தெரிவு செய்க.

5.பின்னர் தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்து மீண்டும் பதிப்பிக்க என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் விரியும் பட்டியில் Paste என்பதை தெரிவு செய்க. உடன் முகப்பு விசையில் உரை பெட்டி விசை இணைக்கப்பட்டிருக்கும்.

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி- 7 வினா எழுப்ப பயன்படும் செயற்குறிகள்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி- 7 வினா எழுப்ப பயன்படும் செயற்குறிகள்

வினா எழுப்ப தேவையான நிபந்தனைகளை அல்லது வரன் முறைகளை குறிப்பிடும்போது, செயலி அல்லது செயற்குறி பயன்படுத்தி தயார் செய்யலாம்.  இவ்வாறு வினா மட்டுமல்லாது கணக்கீடுகள், ஒப்பீடுகள் செய்வதற்கு பயன்படும் குறிகளை செயலி அல்லது செயற்குறி என்றே அழைப்பர்.

கணித செயற்குறிகள்

இந்த வகையில் அடுக்கக்குறி (square) (^), பெருக்கல் (multiple) (‘), வகுத்தல்(division) (/),  கூட்டல் (addition(+) , கழித்தல் (subtractions)(-), ஆகிய செயற்குறிகள் பயன்படுத்தப் படுகின்றன.

பெருக்கல் செயற்குறி

அட்டவணையில் ஒரு பொருளின் விலை உள்ள புலமும், எத்தனை பொருள் விற்பனை செய்தோம் என்ற புலமும் தெரிகின்றது.  மொத்தம் எவ்வளவு தொகை விற்பனை வருமானம் கிடைத்தது என்பதை காண வேண்டிய நிலையில் விற்பனை தொகை =( பொருளின் விலைX எத்தனை பொருள்) என்றவாறு செயற்குறி பயன்படுத்தினால் நமக்கு விற்பனை  தொகை எவ்வளவு என்று தனிப்புலத்தில் மாய அட்டவணையில் கிடைக்கும்,

கூட்டல் செயற்குறி :

ஒரு பொருளின் விற்பனை விலை தெரிகின்றது, விற்பனை வரியும் தெரிகின்றது.  மொத்த விலை எவ்வளவு என காண வேண்டிய  சூழ்நிலையில் மொத்த விலை = (விற்பனை விலை)+(வரி) என்றவாறு வினா எழுப்பினால் நமக்கு மொத்த விலை விடையாகக் கிடைக்கும் .

கழித்தல் குறி:

ஒரு பொருளின் விற்பனை விலை தெரிகின்றது.  விற்பனைக்கான கழிவுத்தொகை தெரிகின்றது.  நிகர விற்பனை= ( விற்பனை விலை)- (கழிவுத்தோகை) என உள்ளீடு செய்து வினா எழுப்பினால் நிகர விற்பனை தொகை தனி புலத்தில்  விடையாகக் கிடைக்கும்.

வகுத்தல் குறி:

ஒரு ஊரில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய மொத்த தொகை கைவசமுள்ளது. மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்றும் தெரிகின்றது. இந்நிலையில்  ஒவ்வொருவருக்கம் பகிர்ந்தளிக்கும் தொகை =(மொத்தத் தொகை ) / மொத்த மக்கள் தொகை) என உள்ளீடு செய்து வினா எழுப்பினால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை கிடைக்கும். என தெரிந்து கொள்ள முடிகிறது.

முழு எண் வகுத்தல்(integer division)சான்றாக

1009-6=15.28 }    100/6=16.66   என்று சாதாரண வகுத்தல் முறையிலும்

100/6= 16 என்று முழு எண் வகுத்தல் முறையிலும் விடை கிடைக்கிறது.

109/6.6=14 (இங்கு 6.6 என்பதை முழு எண் 7 ஆக எடுத்துக்கொள்கிறது)

அடுக்குக்குறி  (^)

எண்களின் தலையில் எந்த எண்ணை இட வேண்டுமோ அதற்காக இந்த அடுக்குக் குறி பயன்படுத்தப்படுகிறது.

சான்றாக 4-என்பது 2^2 என்பதற்குச் சமமாகும்.

உறவு செயற்குறி(relational operator)

இந்த வகையில் சமம் (equal)(=), சமமன்று ( not equal ),  சிறியது பின்னை விட(less than)(<),  பெரியது பின்னைவிட(greater than )(>)  ஆகிய செயற்குறிகள் பயன்படுத்தப்படுகிள்றன.

எழுத்து செயற்குறி(String operators)

இந்த வகையில் & ,Like ,Not Like ஆகிய செயற்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தருக்க செயற்குறி(Boolean(logical)Operators)

இந்த வகையில் இல்லைnot, உம்and, அல்லதுor, , சமம்equal ஆகிய செயற்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதர வகை செயற்குறி(Miscellaneous operator)

இந்த வகையில் Between ..and.in,isஆகிய செயற்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்குறி முன்னுரிமை(operator precedence)

பல்வேறு வகையான செயற்குறிகளை ஒரு கணக்கீட்டில் பயன்படுத்தும்போது எந்த செயற்குறி

முதலில் வர வேண்டும் எது அதற்கு பின் வர வேண்டும் என்ற முன்னுரிமைப்படி வரிசைப்படுத்துவதற்கு செயற்குறி முன்னுரிமை என்பர்.

வரன்முறையின்  (Criteria) திறன்

பொதுவான வினாக்கள் ஒரு அட்டவணையின்  ஒரு வரன் முறைக்குள் (criteria) உருவாக்குவது ஆகும்.  ஆனால் பெரும் பாலான வினா ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணை களிலிருந்து சிக்கலான வரன் முறைக்குள் விவரங்களை பெறுவதற்குகாக இவைகள் எழுப்பப்படுகின்றன.  இவ்வாறான சிக்கலான வரன்முறைக்குள் அமையும் வினாவானது நாம் விரும்பும் தரவுகளை நாம் விரும்பும் வரிசை கிராமத்தில் பிரதிபலிக்கும் திறனுடையது ஆகும்.

கணித, எழுத்து வகை செயற்குறிகளை கணக்கீடுக்களுக்கான புலங்களுக்குப் பயன்படுத்தலாம். உறவு, தருக்க செயற்குறிகளை ஒப்பீடு செய்யும் புலங்களுக்கு பயன்படுத்தலாம்.

ஒற்றைப் புலத்துடன் கூடிய வரன் முறை (Single value field criteria)

ஒற்றைப் புலத்தில் உள்ளீடு செய்யப்படுகின்ற குறிப்பிட்ட ஒரு வரன்முறை ஒரு வெளிப்பாடு மட்டும் செயற்படுத்தி காட்டுவது ஆகும்.

எழுத்து வகை உள்ளீடு செய்யும் வரன்முறை

ஒரு அட்டவணையில் எழுத்துகள், சொற்கள் கூடிய புலங்களைத் தெரிவு செய்க.  வினா வடிவமைப்பு தெரிவுசெய்க.  QBE பலகத்தில்criteria என்பதை தெரிவு செய்க.  அதில் தேடுகின்ற எழுத்தை மட்டும் தட்டச்சு செய்க.  தரவுதாள் காட்சி எனும் பொத்தானை தெரிவு செய்க.  உடன் இந்த வினாவிற்கு நாம் தேடிய எழுத்துள்ள விவரங்கள் மட்டும் கூடிய மாய அட்டவணையின் காட்சி திரையில் தெரியும்.

செயற்குறிகளை பயன்படுத்துதல்

நினைவகத்தில் உள்ள அட்டவணையின் புலங்களின் பெயர்களின் எழுத்துகள் முழுவதும் தெரியாது ஆனால் ஒரு பகுதி மட்டுமே தெரியும் என்ற நிலையில் கைகொடுப்பதுதான் இந்த வரம்பிலா உடுக்குறி wild card(?) செயற்குறிகளாகும்.  சான்றாக ஒரு புலத்தின் வார்த்தையின் எழுத்துகள் முழுவதும் தெரியவில்லை ஒரு பகுதி மட்டும் தெரிகின்றது.

தெரிகின்ற பகுதி எழுத்துகளைத் தட்டச்சு செய்து மிகுதி தெரியாத எழுத்திற்கு? கேள்விக்குறி அல்லது உடுக்குறி (wildcard)பயன்படுத்தி வினா எழுப்பலாம்.  இதன் மூலம் புலங்களின் பகுதி எழுத்துக்களைக் கொண்டும் நாம் காண விழையும் விவரங்களை மாய அட்டவணைகளில் வினா முலம் காண முடியும்.

படம்-7.1

     அக்சஸின் சாளர முகப்பு பக்கத்தை படம் 1ல் உள்ளவாறு திறந்து கொள்ளுங்கள் பின்னர் சாளரத்தின் இடப்புறத்தில் உள்ள பொருட்களில் ( objects)  வினா (queries) என்பதை தெரிவு செய்க.  வலப்புறத்தில் உள்ள products என்பதை தெரிவு செய்க.  பின்னர் மேலே உள்ள பணிக்குறிகளில்newஎன்பதை தெரிவு செய்க.

 படம் 2

உடன் படம் 2ல் உள்ளவாறு show tableஎன்ற சிறுபெட்டியுடன் கூடிய சாளர முகப்பு பக்கம் தோன்றும்.  அதில் தேவையான அட்டவணைகளைத் தெரிவு செய்துadd என்பதை சொடுக்குக.  பின்னர் close என்பதைக் சொடுக்கி show tableஎன்ற சிறுபெட்டியை மூடிடுக.

படம் 3

உடன் படம் 3ல் உள்ளவாறு அட்டவணைகளுடன் உள்ள சாளரம் தோன்றும்.  அட்டவணைகளில் தேவையான புலத்தைத் தெரிவு செய்து சுட்டியால்(mouse) பிடித்து இழுத்து வந்து கீழுள்ள பலகத்தில் (pane) விடுக.  பின்னர் கீழுள்ள பலத்தில் வரன்முறை criteria என்பதில் படம் 3ல் உள்ளவாறு உள்ளீடு செய்க.

நாம் உருவாக்கிய வினா காட்சியாகத்  தெரிவதற்காக கட்டளை சட்டத்தில் உள்ள காட்சி (view) என்பதை தேர்வு செய்க.  உடன் விரியும் பட்டியில் தரவுத்தாள் காட்சி (data sheet view) என்பதைத் தெரிவு செய்க.

உடன் நாம் விரும்பியவாறு விவரங்கள் மாய அட்டவணையில்  தோன்றும்.

ஒப்புமை இல்லா மதிப்பை (non-matching value) குறிப்பிடுதல்

இரு அட்டவணைகளிலும் உள்ள  குறிப்பிட்ட வகை தரவுகள் அனைத்தையும் தேர்வு செய்துள்ளோம்.  ஆனால் அந்த அட்டவணையில் நாம் தேர்வு செய்த தரவுகளைத் தவிர மற்றவைகள் மட்டும் கிடைக்க வேண்டுமெனில் இந்த வரன்முறை பயன்படுத்தலாம்.

எண்வகை வரன்முறை

எண்வகை வரன்முறை பயன்படும்போது  சிறியது  பின்னைவிட(less than (<)) பெரியது பின்னைவிட(greater than(>)  சமம்(equal (=) போன்ற குறிகளை பயன்படுத்த வேண்டும்.  குறிகள் ஒன்றும் பயன்படுத்தவில்லை எனில் = சமக்குறியை இயல்பு நிலையில் எடுத்து  கொள்ளும்.  பொதுவாக இந்த செயற்குறிகள் ஒப்பீடு செய்யப் பயன்படுகின்றது.

தருக்க வரன்முறை

புலங்களுக்குள் தருக்க வரன்முறை எழுத்துகளான yes, no ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.  மேலும் இல்லை என்பதற்கு Not, <>ஆகிய செயற்குறிகளை பயன்படுத்தலாம்.

OLE பொருட்கள் உள்ள புலங்களுக்கான வரன்முறை

OLEபொருள் அடங்கிய புலங்களில் படங்கள் இல்லையென நமக்குத் தெரிய வருகின்றது.  அவ்வாறான புலங்களுக்கு வினா எழுப்பும்போது is not null என்ற வரன்முறையை உள்ளீடு செய்யலாம்.

கலப்பு வரன்முறை(Complex criteria)

பல்வேறு வகையான செயற்குறிகளை கொண்டு நம்மால் கலப்பு வரன்முறையுடன் கூடிய வினா ஒன்றை உருவாக்க முடியும்.  அவற்றுள் பெரும்பாலானவர்கள் and, or ஆகிய இரண்டை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துவர்.

தொடக்க நிலை செயலி and ,or இல்லாமலேயே கூட and, or கலப்பு வரன்முறையை உருவாக்க முடியும்.

   படம் 4

     படம் 1,2,3 ல் உள்ளவாறான படிமுறைகளை பின்பற்றிய பின்னர் கீழுள்ள பலகத்தில் வரன்முறை, (criteria) அல்லது (or) ஆகிய பகுதிகளில் படம் 4ல் உள்ளவாறு உள்ளீடு செய்க.

ஒன்றுக்கு மேற்பட்ட வரன்முறையை ஒரே புலத்தில் உள்ளீடு செய்தல்

இதுவரையில் ஒற்றை நிபந்தனையுடன் கூடிய ஒற்றை வரன்முறையை ஒரு புலத்தில் மட்டும் உள்ளீடு செய்வதைப் பார்த்தோம்.  இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட வரன் முறைகளை எவ்வாறு ஒரே புலத்தில் உள்ளீடு செய்வது என்பதை பார்ப்போம்.

நாம் விரும்பிய புலத்தில் and,orஆகிய செயற்குறிகளைப் பயன்படுத்தி வினா எழுப்பினால் புலங்களில் உள்ள அனைத்து விவரங்களும் நமக்கு மாய அட்டவணையில் தெரியும்.

  படம் 5

   படம் 1,2,3 ல் உள்ளவாறான படிமுறைகளைப் பின்பற்றிய பின்னர் கீழுள்ள பலகத்தில் வரன்முறை (criteria) என்பதில் படம் 5ல் உள்ளவாறு உள்ளீடு செய்க.  இரண்டு அட்டவணைகளிலும் உள்ள அனைத்து பதிவேடுகள் தெரிய வேண்டுமெனில் or என்ற செயற்குறி பயன்படுத்தினால் போதும்.

ஒரே புலத்தில் உள்ள பல  மதிப்புகளை செயற்குறிor பயன்படுத்தி காண்பது

 படம் 6

ஒரே புலத்திற்குள் உள்ள வித்தியாசமான அனைத்து பதிவேடுகளையும் இந்த — செயற்குறி பயன்படுத்தி வரன்முறை எழுப்பினால் நம்மால் பல மதிப்புகளை மாய அட்டவணையில் காண முடியும்.  படம் 1,2,3 ல் உள்ளவாறு படி முறைகளை பின்பற்றிய பின்னர் கீழுள்ள பலகத்தில் வரன் முறை (criteria) என்பதில் படம் 6 ல் உள்ளவாறு உள்ளீடு செய்க.

செயற்குறிகளை சமமாக வரன் முறையை தனியாக பதிவு செய்து காண்பது

ஒரே புலத்தில் பல மதிப்புகளைச் செயற்குறிக்கு பதிலாக அதே வரன் முறையை அனைத்து நுண்ணறைகளில் ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்து or க்கு சமமான மதிப்பை காண முடியும்.

 படம் 7

    படம் 1,2,3 ல் உள்ளவாறான படிமறைகளை பினபற்றிய பின்னர் கீழுள்ள பலகத்தில் வரன்முறை (criteria), அல்லது (or) அதற்கும் கீழுள்ள பகுதிகளில் படம் 7 ல் உள்ளவாறு உள்ளீடு செய்க.

செயற்குறி QBEக்கு orபயன்படுத்தி காண்பது

முன்புறத்தில் or என்பதை உள்ளீடு செய்க.  பின்னர் or இருக்குமிடங்களில் (,) என்பதை  உள்ளீடு செய்து அதே மதிப்பைக் காணமுடியும்.

   படம் 8

   படம் 1,2,3 ல் உள்ளவாறான படிமுறைகளை பின்பற்றிய பின்னர் கீழுள்ள பலகத்தில் வரன்முறை (criteria) என்பதில் படம் 8ல் உள்ளவாறு உள்ளீடு செய்க.

நாம் உருவாக்கிய வினா (view) காட்சியாக தெரவதற்காகச் கட்டளைச் சட்டத்தில் உள்ள காட்சி (view) என்பதைத் தேர்வு செய்க. உடன் விரியும் பட்டியில் தரவுத்தாள் காட்சி (Datasheet view) என்பதை தேர்வு செய்க.

    படம் 9

 உடன் படம் 9ல் உள்ளவாறு நாம் விரும்பியவாறு பட்டம் 6,7,8 ஆகிய மூன்றின் விவரங்களும் ஒரே மாதிரியாக மாய அட்டவணையில்  தோன்றும்.

இரு நிபந்தனைகளுடன் கூடிய வினா எழுப்பும் போது செயலி or பயன்படுத்த வேண்டும்.  அதே இரு நிபந்தனைகளுடன் கூடிய வினாவிற்கு between, and என்ற செயலி பயன்படுத்தியும் விடை காண முடியும்.

செயற்குறிbetween, and ஆகிய இரண்டையும் பயன்படுத்திப் பல புலங்களைச் சேர்த்தாற் போன்று வினா எழுப்பமுடியும்.  இதே போன்று betweenமட்டும் பயன்படுத்தி அல்லது and மட்டும் பயன்படுத்தி அல்லது செயற்குறி between, and சேர்ந்தாற்போன்று பயன்படுத்தியும் வெவ்வேறு புலங்களின் மதிப்புகளைக் காண முடியும்.

ஆவணங்களை உள்ளீடு செய்யும்போது ஒரு புலத்திற்கு தேவையான விவரங்களை உள்ளீடு செய்யாமல் மறந்து விட்டு விடுவோம் அல்லது உள்ளீடு செய்யும்போது தேவையான விவரம் கிடைத்திருக்காது இவ்வாறன நிலையில் அந்த புலத்தில் விவரம் இல்லாமல் காலியாக இருக்கும்.

எந்த புலம் காலியாக இருக்கின்றது எனத் தெரிய வேண்டும் இந்நிலையில் —– என்ற செயற்குறி பயன்படுத்தினால் எந்தெந்த புலங்கள் காலியாக உள்ளன என காண்பிக்கும்.

விங்ஸ் 3D எனும் வரைகலை கருவி

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு கணிப்பொறியில் வரைகலை என்பது மிகப்பெரிய அளவிற்கு மாறுதலாகி இன்றைய 3D நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது.   வியாபார மென்பொருளாக வரைகலை மாறியதால் சாமானிய மனிதனின் கனவாகவே இருந்துவந்தது, இன்று திரமூலத்தின் வளர்ச்சியினால் இந்த வசதி எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் உள்ளது. பிளன்டர் போன்று Wings3D -ம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கக்கூடிய ஒரு 3D உருவப்படகருவியாகும்.  இந்த Wings3D யாரும் எளிதில் மிகச்சுலபமாக பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றது. இதனை http://www.wings3d.com   என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக இறக்கமதி செய்து விண்டோ, மேக்ஸ் மற்றும் லினக்ஸ்  ஆகிய தளங்களில் செயல்படுத்தலாம்.

மேக்ஸ் அல்லது மாயா போன்ற  3D க்கள் போதுமான வசதியுடன் இருந்தாலும்  பயன்பாட்டு மென்பொருள்களுக்கு இடையே நிலை மாறும்போது மட்டும் இவை மிகவும் எரிச்சலூட்டுகின்றன. ஆனால் Wings3D-ல் இவ்வாறு இல்லை,

இந்த Wings3D-ல் கேமராவின் சூழ்ச்சிதிறன் மற்றும் காட்சிதுறை ஆகியவற்றை கையாளும் வழிமுறை பெருமளவு மாற்றம் அடைந்துள்ளது.  இதில் மற்ற3D க்களில் உள்ள குழப்பம் போன்று  எதுவுமில்லாமல்  இயல்பு நிலையில் மிகத் தெளிவாக சுட்டி கட்டுப்பாடு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இயக்கியவுடன் தோன்றும் திரையில் Edit=> preference=> என்ற வாறு தெரிவு செய்து சொடுக்குக. உடன் விரியும் திரையில் Camera தாவிபொத்தான் செயலில் இருக்கின்றதா என சரிபார்க்கவும் பின்னர் Camera mode  என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியலில் விரியச்செய்து அதில் 3d max என்பது போதுமானதாக இருந்தால் தெரிவு செய்து ok என்ற  பொத்தானை சொடுக்குக.

காட்சியை கையாளுவதற்கு 3d யினுடைய விசைப்பலகையையும் சுட்டியையும் அமைவுசெய்து பயன்படுத்துக.

பொதுவாக மூன்றாவது புரவலரின் மென்பொருள் இல்லாமல் wings3d யை செயல்படுத்த முடியாது என்ற தவறான அபிப்பிராயம் பரவலாக உண்டு. ஆனால் இது இயல்பு நிலையில்  பொது அனுமதி அடிப்படையில்  புரவலருடன்  இருக்கின்றது. இதற்காக File=> Render=> OpenGL => என்றவாறு தெரிவு செய்து சொடுக்குக அடுத்து தோன்றும் திரையில் block sign என்பதை சொடுக்குக. வாடிக்கையாளர் விரும்பும் povray என்பதை www.povray.org   என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக இறக்குமதி செய்து நிறுவிக் கொள்க. அதன் பின்னர்File=> Render=> povray=> என்றவாறு கிளிக் செய்து கொள்க.

இதுவும் மற்ற 3d மாதிரி போன்று resources manager  என்பதை கொண்டுள்ளது. ஒரே காட்சியில் அனைத்து பொருட்களையும் சரியான கட்டுபாடுகளுடன் வழங்குகிறது Geometry Graph இதைப் போன்றதே

அனைத்து பொருட்களையும் பட்டியலாக சிறிய சாளரத்தில் தோன்றச் செய்கின்றது. ஒவ்வொரு பொருட்களுக்கும் வலது புறத்தில் மும்மூன்று சிறிய குறும்படங்களாக உள்ளன.  கண்போன்ற குறும்படமானது திரையிலிருந்து மறைப்பதற்கும் திரும்ப தோன்றுவதற்கும் பயன்படுகின்றது.  பூட்டுதல் குறும்படமானது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது பூட்டுதல் அல்லது பூட்டாதிருத்தல் ஆகியவற்றிற்கு பயன்படுகின்றது. மூன்றாவது குறும்படமானது  வலைப்புள்ளி சித்திரக்காட்சிக்கு மாறுவது மற்றும் சாதாரன காட்சியாக இருப்பது ஆகிய இரண்டில் ஒன்றை செயல்படுத்த உதவுகிறது.

பல்வேறு கோணங்களின் பக்க காட்சி போதுமானதாக இந்த விங்ஸ்3டியில் இல்லை என்பதேபெரும் குறைபாடாகும். ஆனால் அதற்கு பதிலாக நமக்கு தேவையானவாறு பல சாளரங்களை உருவாக்குவதற்கு  அனுமதிக்கின்றது.  இவை ஒவ்வொன்றையும் கீழே வலதுபுறத்தில் இழுத்து சென்று அமைத்து ஒவ்வொரு சாளரமும் ஒவ்வொரு கோணத்தின் காட்சியாக அமைக்க முடியும்.  இதற்காக Window=>NewGeometry=> என்றவாறு சொடுக்குக  பின்னர் தோன்றும் திரையில்உள்ள சாளரத்தை இழுத்துசென்று தேவையான இடத்தில் விடுக,அதன்பின்னர் view=>view along=> என்றவாறு தேவையான கோணத்தை கேமராவில் அமைத்திடுக.

மாடலை உருவாக்குவதற்கு முதல்படி முறையாக பொருளை வரைவதற்கான மாடலின் கட்டமைப்புக் கேற்றவாறு மாறுபடும் பகுதியை பிடித்து விரித்திடுக.

உடன் விரிந்திடும் படத்தின் முகப்பை தெரிவு செய்து அருகிலிருக்கும் பல முகங்களில் ஒன்றை சொடுக்குக  பின்னர் அதன்( மாடலின்) மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறம் சொடுக்குக,உடன் விரியும் பட்டியில் UV=> Mapping=> Direct=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக

உடன் தோன்றும் சாளரத்தில்  மீண்டும் தேவையான முகத்தை தெரிவு செய்து சுட்டியின் வலதுபுறம் சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில் Continue=> Unfolding=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக

பல்வேறு வகையான Mapping மாடலுக்கேற்ப விரிப்பதற்கு தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக UV.Mapping சாளரத்தை இடம்சுட்டியால பிடித்து சுட்யின்வலதுபுறம் சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில்Create Texture என்பதை சொடுக்குக  அதன் பின்னர் Window=> outliner => என்றவாறு தெரிவு செய்து இதனை முடக்கி விடுக. outliner சாளரத்தில் மேப் மற்றும் அவற்றின் அவுட்லைனின் பார்வையிடுக. அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறம் சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில் make export என்பதை தெரிவு செய்க,பின்னர் ஏற்றமதி செய்யும் உருவப்படத்தின் பெயரை தட்டச்சு செய்து save பொத்தானை சொடுக்குக

அதன்பின்னர் File=>import image=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கிய வுடன் தேவையான கோப்பினை இறக்குமதி செய்துவிடும் பின்னர் open என்பதை சொடுக்குக இவ்வாறு இறக்குமதி செய்த கோப்புகளை படங்களிலிருந்து தேவையானதை பிடித்து இழுத்து சென்று UV சாளரத்தில் சேர்த்திடுக ஆயிரக்கணக்கான படங்களை ஒளிப்பதிவு செய்வதை போன்றே இதன் தோற்றமும் அமையும்.இவ்வாறு இலவசமாக கிடைக்கும் wings 3d யை உங்களுடைய வரைகலை விருப்பத்திற்ப எளிதான இயக்கத்துடன் பயன்படுத்திகொள்க,

Previous Older Entries