Sambaஎனும் திறமூல கருவி மூலம் கோப்பு பகிர்வினை எளிதாக கையாளுக

       

Samba என்றால் பகிர்ந்துகொள்ளுதல் என பொருளாகும்.Samba எனும் கருவியானது கோப்புகளை பகிர்ந்துகொள்வதை எளிதாக்குகிறது. பயனாளர்களின் குழுக் களுக்கான பொதுவான கோப்புறைகள், உள்வரும் கோப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் உள்வருகை பெட்டிகள் நமக்குத் தேவையானவை உட்பட பகிரப்பட்ட இருப்பிடங்களை உருவாக்க, Samba இல் உள்ள பல செயல்திட்டங்களைப் பயன் படுத்திகொள்ளலாம். இந்த திறமூல கருவியானது, நெகிழ்வானது, மேலும் இது நம்முடைய நிறுவனத்தில் இயங்கக்கூடிய அனைத்து வெவ்வேறு தளங்களையும் ஒருங்கிணைக்கிறது.
இந்த கருவியானது ஜிபிஎல் உரிமத்துடன்வெளியிட பெற்றள்ளது, இது பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களில் பரவலாகக் கிடைக்கிறது. இது(Samba) சிறந்த ஆவணங்களைக் கொண்டுள்ளது,
லினக்ஸில் சம்பாவை நிறுவுகைசெய்தல்
நம்முடைய பல்வேறு லினக்ஸ் விநியோகங்களின் தொகுப்பு மேலாளரைப் பயன்படுத்தி மிகஎளிதாக இதனை(Samba)நிறுவுகைசெய்திடலாம்.
Fedora, CentOS, RHEL, Mageia போன்றவைகளின் கட்டளைவரிபின்வருமாறு:
$ sudo dnf install samba
Debian, Linux Mint போன்றவைகளின் கட்டளைவரிபின்வருமாறு:
$ sudo apt install samba
Samba உடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புறையை உருவாக்கிடுக
ஒரு எளிய பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புறையை பின்வரும் ஐந்து படிமுறைகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கிடுக.
படிமுறை1.நம்முடைய லினக்ஸ் சேவையாளரில் ஒரு கோப்பகத்தை உருவாக்கிடுக, அங்கு பயனாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புகளைச் சேமிக்க முடியும். இந்த கோப்பகம் சேவையாளரில் எங்கும் இருக்கலாம்: /home இல் அல்லது /opt இல் அல்லது எந்தஇடம் நமக்குச் சிறப்பாகச் செயல்படும் என எண்ணுகின்றோமோ அந்த இடத்தில் இந்த கோப்பகம் இருக்கலாம். home எனும் கோப்புறையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்புறையை sambashare என்றபெயரில் வைத்திடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ mkdir /home/don/sambashare
குறிப்பு Fedora, SELinux ஆகியவற்றில் இயங்கும் பிற விநியோகங்களில், இந்த பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்பகத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்க வேண்டும் அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
$ sudo semanage fcontext –add –type “samba_share_t” ~/sambashare
$ sudo restorecon -R ~/sambashare

படிமுறை2. Nano அல்லது நமக்கு விருப்பமான உரைபதிப்பாளரைக்( text editor) கொண்டு சம்பா உள்ளமைவு கோப்பைத் திருத்தம் செய்திடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு.
$ sudo nano /etc/samba/smb.conf
இதை smb.conf எனும் கோப்பின் கீழ்ப்பகுதியில் சேர்த்திடுக, இந்த எடுத்துகாட்டுப் பாதையான /home/don/sambashare என்பதை நம்முடைய சொந்த பகிர்ந்து கொள்ளப்பட்ட கோப்பகத்தின் இருப்பிடத்துடன் மாற்றியமைத்திடுக அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
[sambashare]
comment = Samba on Linux
path = /home/don/sambashare
read only = no
browsable = yes
நானோவைப் பயன்படுத்துகின்றோம் எனில், Ctrl-O ஆகிய விசைகளை சேர்த்து அழுத்திசேமித்த, பின்னர் திரும்பிடுக தொடர்ந்து Ctrl-X ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி வெளியேறிடுக.
படிமுறை3. நம்முடைய லினக்ஸ் விநியோகத்தைப் பொறுத்து, இந்த சம்பா எனும் கருவியை சேவையைத் தொடங்கிடுக அல்லது மறுதொடக்கம் செய்திடுக.
Fedora போன்றவற்றில், நம்முடைய வெளிப்படையான அனுமதியின்றி சேவைகள் தொடங்கப்படாது, எனவே இப்போதுSamba வின் செயலை தொடங்குவதற்காக, பின்வரும் கட்டளைவரியுடன் மறுதுவக்கம் செய்திடுக:
$ sudo systemctl enable –now smb.conf
Debian போன்றவற்றில், Samba இயல்பாக நிறுவுகைசெய்தபின் தொடங்குகிறது, எனவே அதை இப்போது பின்வரும் கட்டளைவரியுடன் மறுதொடக்கம் செய்திடுக:
$ sudo service smbd restart

படிமுறை4. தற்போது Samba பகிர்வினை அணுகுவதற்கு அனுமதிப்பதற்காக நம்முடடைய ஃபயர்வால் விதிகளைப் புதுப்பித்திடுக. இதை எப்படி செய்வது என்பது நம்முடைய கணினி பயன்படுத்தும் ஃபயர்வாலைப் பொறுத்தது.நாம் firewalld இயக்குகின்றோம் எனில் பின்வருமாறான கட்டளைவரிகளை உள்ளிடுக:
$ sudo firewall-cmd –permanent –add-service=samba
$ sudo firewall-cmd –reload
நாம் UFW ஐ இயக்குகின்றோம் எனில்பின்வருமாறான கட்டளைவரியைஉள்ளிடுக :
$ sudo ufw allow samba

படிமுறை5. இப்போது நம்மமுடைய Sambaவின் பகிர்வை அணுக கடவுச்சொல்லை அமைக்க வேண்டும். பயனாளர்பெயர் (sk எடுத்துக்காட்டில்) கணினியில் உள்ள கணக்கிற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.
$ sudo smbpasswd -a sk
ஒவ்வொரு Samba பகிர்விலும் ஒரு எளிய README கோப்பை வைத்திடுக, அதனால் கோப்பகம் சேவையாளரில் உள்ளது என்பதையும், வீட்டிலிருந்து அதை அணுக VPN இல் இருக்க வேண்டும் என்பதையும் பயனாளர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
விண்டோ, இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலிருந்து சம்பாவை அணுகுதல்
விண்டோ செயல்படும் கணினியில், கோப்பு மேலாளரைத் (Windows Explorer) திறந்து, \ip-address-of-the-Linux-computer\sambashareஎன்றவாறு கோப்பினை அனுகுவதற்கான பாதையைத் திருத்திடுக. Sambaவின் பகிர்வு கடவுச்சொல்லைக் வழங்கும்படி நம்மிடம் கோரும், பின்னர் sambasharedirectory இல் உள்ள கோப்புகள் மேசைக்கணினியில் வளாக கணினியில் இருப்பது போன்று நம்முடைய கோப்பு மேலாளரின் சாளரத்தில் தோன்றும். இதன்பின்னர் நம்முடைய வலைபின்னலில் உள்ள இந்தப் புதிய பகிர்ந்துகொள்ளப்பட்ட கோப்பகத்தில் நம்முடைய கோப்புகளைச் சேமிக்கத் தொடங்கலாம்.

NETGENஎனும்தானியங்கி முப்பரிமான tetrahedral வலைக்கன்னி உருவாக்கி

      

NETGEN என்பது ஒரு தானியங்கி முப்பரிமான(3d) tetrahedral வலைக்கன்னி(mesh) உருவாக்கியாகும். இது STL கோப்பு வடிவத்தில் இருந்து ஆக்கபூர்வமான திட வடிவியல் (CSG) அல்லது எல்லை பிரதிநிதித்துவத்திலிருந்து(BRep) உள்ளீட்டை ஏற்றுக்கொள்கிறது. இதுவடிவியல் உருவாக்கமையத்திற்கான இணைப்பு IGES , STEP ஆகிய கோப்புகளைக் கையாள அனுமதிக்கிறது. NETGEN ஆனது கண்ணி மேம்படுத்தல் , படிநிலை வலைக்கன்னி(mesh) சுத்திகரிப்புக்கான தொகுதிக் கூறுகளைக் கொண்டுள்ளது.Netgen/NGSolve என்பது உயர் செயல்திறன் கொண்ட பல்இயற்பியல் வரையறுக்கப்பட்ட உறுப்பு மென்பொருளாகும்.இதனை பரவலாக திட இயக்கவியல், திரவ இயக்கவியல் , மின்காந்தவியல் ஆகியவற்றிலிருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்திகொள்ளப்படுகிறது. அதன் நெகிழ்வான பைதான் இடைமுகம் காரணமாக புதிய இயற்பியல் சமன்பாடுகள் , தீர்வு வழிமுறைகளை எளிதாக செயல்படுத்த முடியும்.. இது Unix/Linux , Windows ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது.
முக்கிய வசதிவாய்ப்புகள்: இருபரிமாண முப்பரிமாண மேற்பரப்பு வலைக்கன்னி (meshing), முப்பரிமாண பரிமான meshing, Delaunay, சமீபத்திய முன் கண்ணி தலைமுறை வழிமுறைகள், ஆக்கபூர்வமான திட வடிவியல், அல்லது எல்லை பிரதிநிதித்துவம், வலைக்கன்னி (meshi)சுத்திகரிப்பு வழிமுறைகள், உயர் வரிசை வளைவு கூறுகள் ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டது
அனைத்தும் சேர்ந்த ஒன்று:Netgen/NGSolve ஆனது வரையறுக்கப்பட்ட உறுப்பு உருவகப்படுத்துதலின் முழுப் பணிப்பாய்வுகளை வழங்குகிறது. ஆக்கபூர்வமான திட வடிவியல் தொகுதி வடிவியல் மாதிரியை ஆதரிக்கிறது. மாற்றாக, வடிவியல் மாதிரிகள் வெவ்வேறு வடிவங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இது தானாகவே உயர்தர tetrahedal வலைக்கன்னிகளை(meshi) உருவாக்குகிறது. NGSolve வரையறுக்கப்பட்ட உறுப்பு நூலகம் பல இயற்பியல் மாதிரிகளை வேறுபடுத்து கிறது, மேலும் சமன்பாடுகளின் எழும் அமைப்புகளை திறமையாக தீர்வுசெய்கிறது. உள்ளமைக்கப்பட்ட காட்சிப்படுத்தல் நூலகம் தீர்வின் விரைவான ஊடாடும் காட்சிப்படுத்தலை அனுமதிக்கிறது.
தழுவல் உருவகப்படுத்துதலில், கண்ணி சுத்திகரிப்பு வழக்கத்திற்கு வடிவியல் மாதிரியை அணுக வேண்டும். இங்கே, NGSolve இன் பிழை மதிப்பீட்டாளர்கள் சுத்திகரிப்புக்கான உறுப்புகளைக் குறிக்கின்றன, மேலும் Netgen வடிவியலுக்கு ஏற்ற கண்ணி சுத்திகரிப்பு செய்கிறது. வலைக்கன்னி (mesh) படிநிலை பராமரிக்கப் படுகிறது , விரைவான பன்முனைதொகுப்பு(multigrid) தீர்வுகளில் பயன்படுத்தப் படுகிறது. உயர் வரிசை வடிவியலின் தோராயத்திற்கு Netgen, NGSolve ஆகியன ஒன்றாக செயல்படுகின்றன: Netgen வளைவு கூறுகளை உருவாக்குகிறது, மேலும் NGSolve க்கு தேவையான ஒருங்கிணைப்பு புள்ளிகளில் Jacobiansஐ கணக்கிடுகிறது.
நெகிழ்வானது: முன்பக்க பைதான் ஆன NGS-Py என்பது பல்வேறு இயற்பியல் மாதிரிகளை அமைப்பதற்கும் ஒன்றிணைப்பதற்கும் ஒரு நெகிழ்வான வழியை வழங்குகிறது. உள்ளீட்டு மாறுபாடு சூத்திரங்களின் இயற்கையான கணித மொழியில் வழங்கப்படுகிறது, அங்கு சோதனை, சோதனை செயல்பாடுகள்ஆகிய அனைத்தும் வழக்கமான செயல்பாட்டு இடைவெளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஒரு மாதிரியின் தீர்வு புலங்களை அடுத்தடுத்த உருவகப்படுத்துதல் களுக்கு உள்ளீடாகப் பயன்படுத்தலாம். தானியங்கி வேறுபாடு நேரியல் அல்லாத சமன்பாடுகள் , தேர்வுமுறை சிக்கல்கள் ஆகியவற்றின் தீர்வை ஆதரிக்கிறது.
நிரல் ஓட்டமானது பைதானின் உரைநிரலால் வரையறுக்கப்படுகிறது. ஒரு அளவுரு ஆக்கபூர்வமான திட வடிவியல் ஒரு பைதான் நிரலாக்கத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் கண்ணி உருவாக்கம் உரைநிரலால் கட்டுப்படுத்தப்படுகிறது. முன் வரையறுக்கப்பட்ட தீர்வுகளை அழைக்கலாம் அல்லது சிக்கலைத் தழுவிய நேரியல் அல்லாத தீர்வுகளை உயர் மட்டத்தில் திட்டமிடலாம்.
துல்லியமானது: NGSolve பொதுவான இயற்பியல் புலங்களுக்கு சரியான வரையறுக்கப்பட்ட உறுப்பு இடைவெளிகளை வழங்குகிறது. வழக்கமான அளவீடு (scalar) செயலிகளின் இடைவெளிகளைத் தவிர, NGSolve ஆனது மின்காந்த புலங்களுக்கான Nedelec வகையின் திசையன் வரையறுக்கப்பட்ட கூறுகளையும், காந்தபுலங் களுக்கான(fluxes) Raviart-Thomas அல்லது Brezzi-Douglas-Marini கூறுகளையும் கொண்டுள்ளது. இடைவிடாத Galerki (DG) , அதன் கலப்பின பதிப்பு (HDG) ஆகியவை NGSolve இல் ஆதரிக்கப்படுகின்றன. இதற்காக, தனிமங்களுக்கு இடையே உள்ள அம்சங்களில் வரையறுக்கப்பட்ட உறுப்பு இடைவெளிகள் உள்ளன. பொறியியல்அழுத்தநீட்டிப்பு களுக்கான(mechanical stress tensors) சமச்சீர் அணி-மதிப்பு வரையறுக்கப்பட்ட கூறுகள்அல்லது தட்டு அல்லது உறைபொதி(shell) மாதிரிகளுக்கான தருண நீட்டிப்புகள் கிடைக்கின்றன. இந்த வகைகளின் செயலி களின் இடைவெளிகள் அனைத்து பொதுவான கலண் வகைகளுக்கும் (segm, trig, quad, tet, prism, pyramid, hex) கிடைக்கின்றன, மேலும் அவை தன்னிச்சையான வரிசைகளுக்குக் கிடைக்கின்றன. hp-ஏற்புகை போன்மகளை(adaptive simulations) ஆதரிக்கின்ற கண்ணியின் ஒவ்வொரு விளிம்பு, முகம் , கலணிற்கும் வரிசைகளை தனித்தனியாக மாற்றியமைக்க முடியும். Netgen/NGSolve தன்னிச்சையான வரிசைகளின் வளைவு கூறுகளை ஆதரிக்கிறது, இது அதிக துல்லியத்தை அடைய முக்கியமானது.
செயல்திறன்மிக்கது: பொதுவாக, வரையறுக்கப்பட்ட உறுப்பு உருவகப்படுத்துதலின் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்ற பகுதிகள் சமன்பாடு தீர்வுசெய்திடுபவைகளாகும். பெரிய அளவிலான சிக்கல்களுக்கு, விரைவான முன்நிபந்தனைகளுடன் கூடிய மறுசீரமைப்பு தீர்வுகள் தேவை. NGSolve இன் multigrid அல்லது கள சிதைவு முறைகள் போன்ற திறமையான முன்நிபந்தனைகளை வழங்குகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய முன்நிபந்தனை நுட்பங்களில் கவனம் செலுத்துகின்றது. உயர் வரிசை முறைகளுக்கு NGSolve இன் வலிமை முன்நிபந்தனைகளாகும்: உயர் வரிசை அடிப்படை செயல்பாட்டிற்கு உள்ளூர் மென்மையாக்கம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய நடத்தையானது குறைந்த-வரிசை அடிப்படையிலான செயல்பாடுகளின் துணை அமைப்பால் நடத்தப்படுகிறது, இது ஒரு விரைவான நேரடி தீர்வு மூலம் தீர்க்கப்படலாம் அல்லது வடிவியல் அல்லது இயற்கணித multigrid முறையால் முன்நிபந்தனை செய்யப்படலாம். இந்த உயர்-வரிசை/குறைந்த-வரிசை செயல்தந்திர multigrid முன்நிபந்தனை அல்லது BDDC-வகையின் உறுப்பு-நிலை கள சிதைவு முறைக்குள் பயன்படுத்தப்படலாம். சிக்கல் குறிப்பிட்ட முன்நிபந்தனைகள் அல்லது வெளிப்புற தீர்வு தொகுப்புகள் செருகுநிரல் தொகுதிகளாக சேர்க்கப்படலாம்.
உயர் செயல்திறன்: NGSolve இணையான கணினியின் பல்வேறு நிலைகளைப் பயன்படுத்துகிறது: அனைத்து கணினி தீவிர செயல்பாடுகளும் பணிக்கு இணையானவை. செயல்படும் செயலிகள் கணினியின் உருவாக்கமையங்களாக ஒழுங்கமைக்கப்படுகின்றன, அவை கிடைக்கக்கூடிய திரிளுக்கு பணி மேலாளரால் விநியோகிக்கப்படுகின்றன. Netgen/NGSolve ஆனது விநியோகிக்கப்பட்ட நினைவக இணையான கணினிக்காக உருவாக்கப்படலாம், அங்கு நம்முடையபன்முனை தொகுப்பில்(multigrid)கண்ணி விநியோகிக்கின்றது. பைதான் இடைமுகத்திற்குப் பின்னால் அனைத்து இணைமயமாக்கலும் நிகழ்கிறது. அதே உரைநிரல்கள் வரிசை முறை, பகிரப்பட்ட நினைவகம், விநியோகிக்கப்பட்ட நினைவக பயன்முறையில் இயங்குகின்றன. வரையறுக்கப்பட்ட உறுப்பு செயல்பாடுகள் AVX வழிமுறைகள் போன்ற நவீன திசையன் செயலிகளிலிருந்தும் இலாபத்தைப் பெறுகின்றன. இங்கே, நான்கு புள்ளிகளில் வடிவ செயலிகள் ஒரே நேரத்தில் செயலாக்கப்படுகின்றன, இது கிட்டத்தட்ட நான்கு முறை வேகத்திற்கு வழிவகுக்கிறது. இது அடுத்த தலைமுறை மேசைக்கணினி செயலிகளுக்கும் தயாராக இருக்கின்றது, இது இணையாக எட்டு இரட்டை செயலிகளின் திசையன் வழிமுறைகளை ஆதரிக்கின்றது.
செயல்படுத்துதல்:Netgen/NGSolveஆனது LGPL எனும்திறமூல உரிமத்தின் அடிப்படையில் கட்டணமில்லா பயன்பாடாக விநியோகிக்கப்படுகிறது. கல்வி , வணிக சூழல்களில் இதைப் பயன்படுத்த இது நம்மைஅனுமதிக்கிறது. Netgen/NGSolve வரையறுக்கப்பட்ட உறுப்புக் கருவிக்கான நீட்டிப்பு தொகுதிகளை உருவாக்க அழைக்கப்படுகின்றது.நாம் விரும்பினால் C++ இல் புதிய வரையறுக்கப்பட்ட உறுப்பு செயல்பாட்டு இடைவெளிகளை செயல்படுத்தலாம், மேலும் அவற்றை NGS-Py மொழியில் இயற்கையாகப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட உறுப்பு செயலிகள் அல்லது மேம்படுத்தப்பட்ட , சிறப்பு முன்நிபந்தனைகளை C++ க்குள் நிரலாக்கம் செய்யலாம். சில உயர் மட்ட தொகுப்புகளை உருவாக்கினால் (நேரியல் அல்லாத தீர்வுகள், மாதிரி ஒழுங்கு குறைப்பு அல்லது இடவியல் தேர்வுமுறை தருககபடிமுறைகள் போன்றவை), அதை பைத்தானில் நிரலாக்கம் செய்ய விரும்பலாம். இதுநம்முடைய தொகுப்பை சமூககுழுவடன் பகிர்வதை எளிதாக்குகிறது.

இந்த பயன்பாடானது (LGPLv2)எனும் உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது

மேலும் விவரங்களுக்கு https://www.ngsolve.org/எனும் இணையதள முகவரிக்கு செல்க

தீம்பொருள்பெட்டிகளின்(MalwareBoxes) வாயிலான தீம்பொருள் பகுப்பாய்வு மிகவும்எளிதாகும்

       

‘நீங்கள் லாட்டரியை வென்றுள்ளீர்கள்’ அல்லது ‘விருது பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்’ போன்ற செய்திகளை மின்னஞ்சல் மூலம் பெறுவதை கற்பனை செய்து பார்த்திடுக. ஆனால் இவ்வாறான நம்முடைய பேராசையை தூண்டிடும் மின்னஞ்சலை திறந்தவுடன், நம்முடைய முக்கியமான அத்தியாவசியகோப்புகள் அனைத்தும் மறையாக்கம் செய்யப் பட்டிருப்பதை உணர்ந்து, அவற்றை மீண்டும் நாம் திரும்பப் பெற 1,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் அதை மீட்பதற்கான தொகை நம்மிடம் கோரப்படுகிறது. மே 12, 2017 அன்று முதலில் தோன்றிய உலகளாவிய ransomware எனும் தாக்குதலான WanaCrypt0r என்பதால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இதுதான் நடந்தது.
இத்தகைய தீங்கிழைக்கும் கோப்புகளின் தன்மையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானசெயலாகும். இவ்வாறான தீம்பொருளை பகுப்பாய்வு செய்வதுஎன்பது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதைப் போன்றது, ஏனெனில் கணினி பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற அல்லது உளவு பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தீம்பொருள் மென்பொருளை சிதைப்பது , புரிந்து கொள்வது ஆகியவை இதன் இலக்காகும். பகுப்பாய்வை கடினமாக்குவதற்கு இந்த தீம்பொருளின் நிரல்ஆனது அடிக்கடி குழப்பமடையச் செய்கிறது (அதாவது, கட்டமைப்பு முழுமையாக்க பட்டதாக்கு கின்றது).
தீம்பொருள் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றினை அல்லது அனைத்தையும் செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
பொருத்துதலின் payload அல்லது மாறுபாடுகள்:தீம்பொருள் துறையில், இது பாதிக்கப்பட்டவரின் கணினியை தாக்க வடிவமைக்கப்பட்ட நச்சுயிர், worm, அல்லது Trojan ஆகியவற்றினை செருகுவதைக் குறிக்கிறது.
தீம்பொருள் நடத்தை, குறியீடு தெளிவற்றது:தீம்பொருள் தெளிவின்மை என்பது உரைவடிவிலான ,இருமஎண்(binary) வடிவிலான தரவுகளை புரிந்துகொள்வதை கடினமாக்கு கின்ற ஒரு தொழில்நுட்பமாகும். நச்சுயிர் தடுப்பு அதைக் கண்டறிவதை கடின மாக்குவதற்கும், குறைவான தீம்பொருளை வடிகட்டுவதற்கும் தாக்குபவர்கள் இத்தகைய முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இயக்கநேரபல்லுருப்பபெறல்(polymorphism):இது தீம்பொருளின் நிலையான இருமஎண் குறியீட்டை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியாக்க முறையாகும்.
உளவாளி(Spyware): இது பயனாளர் தன்னுடைய செயலி சரியாக செயல் படுகின்றதாவெனக் கவனித்துகொண்டிருக்கும் போது, பயனாளருக்குத் தெரியாமல், அவருடைய சாதனத்தைபற்றியும் பயனாளரைப் பற்றியுமான தகவலையும் தரவுகளையும் சேகரிக்கிறது.
திறவுகோளைமுடக்குதல் (Keylogging): மின்னஞ்சல்கள், அணுகப்பட்ட இணையதளங்கள், பயன்பாடுகள் விசை அழுத்தங்கள் உட்பட பயனாளரின் ஒவ்வொரு செயல்பாடும் கண்காணிக்கப்படுகின்றது.
தீம்பொருள் பகுப்பாய்வின் தேவை
தீம்பொருளின் எந்தவொரு நிகழ்வையும்பற்றி முழுமையாக தீரவிசாரித்து அறிந்துகொள்வதற்காக தீம்பொருள் பகுப்பாய்வு முக்கியமானதாகும். இது நிலையான பகுப்பாய்வு இயக்கநேர பகுப்பாய்வுஆகிய இரண்டு வெவ்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது – .
நிலையான பகுப்பாய்வு: இது எந்தவொரு இருமஎண் கோப்பையும் (இயக்கக்கூடியது) செயல்படுத்தாமல் பிரிப்பதற்கான எளிய வழியாகும்.
இயக்கநேர பகுப்பாய்வு: இது உண்மையான உருவாக்கும் சூழலில் இருந்து பிரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் (sandbox) தீம்பொருளை செயல்படுத்துவதை உள்ளடக்கியது.
நிலையான பகுப்பாய்வு மூலம் தீம்பொருளை எளிதாகக் கண்டறியலாம். எனவே இன்றையசூழலில் கணினியில் தாக்குதல் செய்பவர்கள் குறிமுறை வரிகளை மழுங்கடிக்க மேம்பட்ட நுட்பங்களையும், நிலையான கண்டறிதல் நுட்பங்களைக் கடந்து இயங்கக் கூடியவற்றையும் பயன்படுத்துகின்றனர், இது இயக்கநேரக் பகுப்பாய்வைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.
நம்முடைய நிறுவனம் தீம்பொருளால் தாக்கப்படுவதை தவிர்த்திடுவதற்காக, ஒரு நல்ல பாதுகாப்பு ஆலோசகரை பணியமர்த்துவதன் மூலம் அவ்வச்சுறுத்தல் நீக்கப்பட்டால், மற்றொரு தாக்குதலைத் தவிர்க்க பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்:
கணினியில் rootkit அல்லது Trojan பொருத்துதலின் நிகழ்தகவு எவ்வாறு உள்ளது
அவச்சுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டதா?
நம்முடைய கணினியை தாக்குதல் செய்பவர் கணினியில் என்னென்ன மாற்றங்களைச் செய்தார்?
தாக்குதல் செய்பவர் கணினியின் பின்புலத்தினை எவ்வாறு அணுகினார்?
தீம்பொருள்பெட்டிகள்(Malboxes)
தீம்பொருள்பெட்டிகள்(Malboxes)என்பவை எந்தவொரு பயனாளரின் தலையீடும் இல்லாமலேயே விண்டோஇயக்கமுறைமையில் மெய்நிகர் இயந்திரங்களை (VMs) உருவாக்கும் ஒரு பயன்பாடாகும். தீம்பொருள் பகுப்பாய்வு கருவிகளுக்கான, VMகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள் தீம்பொருள் பற்றி ஆய்விற்காக அமைக்கப் பட்டுள்ளன.இவை தீம்பொருள் பகுப்பாய்விற்காக பாதுகாப்பானதும் சிறப்பானதுமான வசதிகளுடன் கூடிய விண்டோ செயல்படும் கணினிகளை உருவாக்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகவும் குறிப்பிடப் படுகின்றன. இந்தக் கருவியை யாராலும் பயன்படுத்த முடியாது என்பது மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த உரிமம் நம்மிடம் இல்லையென்றால், விண்டோவின் சோதனைப் பதிப்புகளிலும் இது நன்கு செயல்படும் திறன்மிக்கது.
Malboxes Windows 10 Enterprise மதிப்பீட்டிற்கான ஒரு மெய்நிகர் இயந்திர (VM) மாதிரிபலகத்தினை உருவாக்கி அதன் நகலை VM இன் மேசைக்கணினியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தற்போதைய கோப்புறையுடன் தொடங்குகின்றது. இது அதன் மெய்நிகர் இயந்திரத்தில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பான தீம்பொருள் பகுப்பாய்வுக்கான கருவிகளின் தொகுப்புடன் வருகிறது.
தீம்பொருள்பெட்டியின் கட்டமைப்பு
தீம்பொருள்பெட்டிகள்ஆனவை பின்வரும் கூறுகளை ஒன்றாக இணைக்கின்றன:
ஒரு packer கட்டமைப்பு, விண்டோவில் கவனிக்கப்படாத நிறுவுகை கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை முடக்க PowerShell recipes (Defender, auto-updates, firewall, போன்றவை).Windows தொகுப்பு மேலாளர் Chocolatey ஐப் பயன்படுத்தி நிறுவப்பட்ட தீம்பொருள் பகுப்பாய்வு ,மையப்படுத்தப்பட்ட கருவிகளின் தொகுப்பு .நாடோடி (Vagrant) எனும் ஒரு கோப்பினை உருவாக்குபவர், இதனால் VMகளை நாடோடி(Vagrant) மூலம் நிர்வகிக்க முடியும்
மேலும் தீம்பொருள் பெட்டிகளான VM உடன் பின்வரும் கருவிகள் உருவாக்க செயல்முறையின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ளன.
WinDBG:விண்டோவின் பிழைத்திருத்தத்திற்கான நன்கு அறியப்பட்ட பெயர், இது வழக்கமான புதுப்பிப்புகளும் ,செயல்பாடுகளும் இணையத்தின்நேரடி ஆதரவை வழங்கு கிறது.இது ஒரு வரைகலை பயனாளர் இடைமுகத்தை (GUI) கொண்டுள்ளது, இது பிழைத்திருத்த வெளியீட்டையும், அடுக்குகளையும் பதிவுகளையும் காட்டுகிறது. உருவாக்கமையம் பயனாளரின் பயன்முறையில் நினைவக திணித்தல்களை ஆய்வு செய்ய பயன்படுகிறது.
முழுவதுமானஉள்ளகஅமைவு(Complete Sys internal)தொகுப்பு:இந்தக் கருவிகளின் தொகுப்பு Microsoft Technet இன் Sysinternals பகுதியில் இருந்து கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்யக்கூடிய Windows பயன்பாடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் கையடக்கமானவை, அதாவது அவை Flash drive இல் வைக்கப் பட்டு எந்த கணினியிலிருந்தும் பயன்படுத்திகொள்ளலாம், இதனை நிறுவுகை செய்திடுவதற்காக கணினியில் தேவையானவற்றை நீக்கம்செய்திடுகின்றது
Fiddler:கணினி இணைய சேவையகம்/கள் ஆகியவற்றிடையே HTTP , HTTPS போக்குவரத்தினை பதிவுசெய்தல், பகுப்பாய்வு செய்தல் மாற்ற அனுமதிக்கும் பிழைத்திருத்த பதிலாள் சேவையாளர் கருவியாக இதுதிகழ்கின்றது.
NPcap உடன் Wireshark (Windows 10 இணக்கமான winpcap மாற்றீடு):NPcap என்பது libpcapஎனும் நூலகத்தின் விண்டோவினுடைய பதிப்பாகும், இதில் கையடக்கமான பதிவு செய்திடும் இயக்கி உள்ளது. இந்த நூலகத்தை Windows இல் Wireshark நேரலை வலைபின்னலின் தரவைப் பதிவுசெய்ய பயன்படுத்திகொள்ளலாம்.
IDA எனும்முன்கூட்டியே Pro remote பபிழைதிருததி (புரவலர் IDA Pro நிறுவப்பட்டிருந்தால்): ‘பிழைத்திருத்த சேவையகம்’ என்பது பிழைத்திருத்த பயன்பாட்டை இயக்குகின்ற கணினியாகும். நச்சுயிர்கள், ட்ரோஜான்கள், தீம்பொருட்களை பிழைத்திருத்தம் செய்ய, பிழைத்திருத்தி வாடிக்கையாளருடன் சமரசம் செய்யப்பட்ட கணினியிலிருந்து சாத்தியமான தூரத்தில் வைக்கப்படுகிறது.
விருந்தினர் இயக்க முறைமையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
தானியங்கி புதுப்பிப்புகள் முடக்கப்பட்டுள்ளன
விண்டோவினுடைய Defender முடக்கப்பட்டுள்ளது
தீம்பொருள் பெட்டிகள்(Malboxes) ஏன்தேவைப்படுகின்றன?
பாதுகாப்பான சூழலில் தீம்பொருளை பகுப்பாய்வு செய்வது முக்கியமாகும். தீம்பொருள் பெட்டிகள், அதன் கருவிகளுடன், அதைச் செய்ய நமக்கு உதவுகிறது.
தீம்பொருள் பெட்டிகளின்பகுப்பாய்வு கருவித்தொகுப்பில் தேவையான அனைத்தையும் பின்வரும் வழியில் உருவாக்குகிறது:

  1. பகுப்பாய்வுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கி ஒதுக்குகிறது
  2. உற்பத்தி சூழலில் இருந்து கணினியை Sandboxes செய்கிறது
  3. behaviour ,code ஆகிய பகுப்பாய்வு கருவிகளை நிறுவுகைசெய்கிறது
    தவறான தீம்பொருள் பகுப்பாய்வு விளைவுகளைச் சமாளிக்க இந்த தீம்பொருள் பெட்டிகள் நமக்குஉதவுகின்றன, இவை உள்ளக தகவல், தயாரிப்புகள் அல்லது உரிமங்களின் கசிவு முதல் நிறுவனத்தின் IP முகவரிகளை அடையாளம் காண்பது முதல் பாதிக்கப்பட்ட கணினியிலிருந்து அழிக்கப்படுவது வரை இருக்கலாம்.
    தீம்பொருள் பெட்டியில் Chocolatey உள்ளதால், பெரிய Chocolatey எனும் மென்பொருள் தொகுப்பு மேடையிலிருந்து எதையும் நிறுவுகைசெய்திடுவதற்காக ஒற்றையானக் கட்டளையைப் பயன்படுத்தலாம். தீம்பொருள் பெட்டிகளின் உள்ளமைவு கோப்பில், நிறுவுகைசெய்யப்பட்ட தொகுப்புகளின் இயல்புநிலை பட்டியலை தேவையெனில் மாற்றியமைத்திடலாம்.
    தீம்பொருள் பெட்டிகளின் கருவிகளை முன்கூட்டியேபதிவேற்றி(preloaded) வருவதன் நன்மையை வழங்குகிறது சில கட்டளைகளின் உதவியுடன் இவைகளை பயன்படுத்தி கொள்ளலாம், தனித்தனியாக இவற்றை நிறுவுகை செய்வதில் பல மணிநேர முயற்சியைத் தவிர்க்கலாம். தீம்பொருள் பெட்டிகள் பைதான் 3 ஐச் சுற்றி கட்டமைக்கப் பட்டுள்ளது மேலும் இவை Windows, Mac , Linux ஆகிய இயக்க முறைமைகளை ஆதரிக்கின்றன.
    விண்டோ இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியில் நிறுவுகைசெய்வதற்கான படிமுறைகள்
    தேவைகள்:பைதான் 3.3+,Packer,நாடோடி(Vagrant) ,மெய்நிகர்பெட்டி(VirtualBox) அல்லது ஒரு vSphere/ESXi எனும் சேவையாளர் ஆகியவை அடிப்படையாக தேவைகளாகும்
    இயந்திரகட்டமைப்பிற்கான குறைந்தபட்ச விவரக்குறிப்புகள் : குறைந்தபட்சம் 5ஜிபி ரேம் ,VT-X நீட்டிப்புகள் ஆகியவைகடுமையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன
    மெய்நிகர்பெட்டியை(VirtualBox) நிறுவுகைசெய்தல்: மெய்நிகர்பெட்டி(VirtualBox) என்பது நிறுவனத்திற்கும் வீட்டு உபயோகத்திற்குமான ஒரு சக்திவாய்ந்த x86ம் , AMD64/Intel64 உம் ஆன மெய்நிகராக்க தயாரிப்பு ஆகும். இது (Malboxes) இங்கே மெய்நிகர் இயந்திரம் இயங்குவதற்கு மீவுரையாளரை (hypervsor) வழங்குவதற்காக பயன்படுத்தப் படுகிறது. இங்கு மெய்நிகர்பெட்டி(VirtualBox) என்பது நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான வசதி கொண்ட, உயர் செயல்திறன் கொண்ட தயாரிப்பு மட்டுமல்லாது,(GPL) பதிப்பு 2 இன் விதிமுறைகளின் கீழ் திறமூல மென்பொருளாக கட்டணமில்லாமல் கிடைக்கும் ஒரே தீர்வாக அமைகின்றது.
    Git , Python3:Git என்பது ஒரு கட்டணமற்ற, திறமூலமான விநியோகிக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பாகும், இது சிறியசெயல்திட்டங்கள்முதல் மிகப்பெரிய செயல்திட்டங்கள் வரையில் விரைவாகவும் செயல்திறனுடனுடம் கையாளு வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. GitHub களஞ்சியத்திலிருந்து தீம்பொருள் பெட்டிகள் எனும் செயல்திட்டத்தை நகல்செய்ய இது பயன்படுகிறது. துனைபதிப்புகள், CVS ,Perforce போன்ற SCM கருவிகளை மிஞ்சும் வகையிலான மின்னல்வேக செயல்திறனுடன் செயல்படுகின்ற இதனை கற்றுக்கொள்வது எளிதானது , இதுசிறிய காலடி தடம்போன்றுள்ளது.
    பைதான்3 என்பது ஒரு உயர்-நிலை பொது-நோக்கு நிரலாக்க மொழியாகும், இது உருவாக்குவது மட்டுமல்லாமல், சிறியஅளவிலானதுமுதல் பெரிய அளவிலானது வரையிலான செயல்திட்டங்களுக்கான தெளிவான, தருக்கக் குறிமுறைவரிகளை அதன் பொருள் சார்ந்த அணுகுமுறையுடன் எழுதுவதற்கு நிலாளர்ர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. Pip3 என்பது Pythonஇற்கான தொகுப்பு நிறுவுகைசெயலியாகும், இது Python தொகுப்பு அட்டவணையிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் தொகுப்புகளை நிறுவுகைசெய்திட பயன்படுகிறது. இது பைத்தானின் சமீபத்திய பதிப்போடு வருகிறது. ‘setuptools’ , ‘git install malboxes’ போன்ற தேவையான சார்புகளை நிறுவுகைசெய்திடுவதற்காக Pip3 பயன் படுத்திடுக Pip3 ஆனது ‘apt-get’ உடன் அதை விட புதிய பதிப்பைப் பெறுகிறது. மேலும், ‘virtualenv’ உடன் இணைந்து, சார்புகளை ஒரே கோப்பகத்தில் நிறுவுகை செய்திட அனுமதிக்கிறது.
    நாடோடியை(Vagrant) நிறுவுகைசெய்தல்:நாடோடி(Vagrant) என்பது ஒரு மெய்நிகர் இயந்திரம் சார்ந்த சூழல் மேலாண்மை கருவியாகும். நாடோடி பெட்டிகள்(agrant Boxes) ஆனவை ஆரம்பப் புள்ளியாகப் பயன்படுத்தக்கூடிய முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட அடிப்படைப் படிமங்கள்(images) ஆகும் தீம்பொருளைச் சோதிக்க, தீம்பொருள்பெட்டிகளின் படிமத்தினை(image) உருவாக்க இதைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நாடோடியானது(Vagrant) Mac, Linux, Windows போன்ற பல்வேறு இயக்கமுறைகளில் செயல்படுகின்றதிறன்மிக்கது. தொலைதூர மேம்படுத்திடும் சூழல்கள் பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பதிப்பாளர்கள் , நிரலாக்கங்களை கைவிடும்படி கட்டாயப்படுத்துகிறது. ஏற்கனவே நன்கு அறிந்த கருவிகளைக் கொண்டு நம்முடைய வளாக அமைப்பில் நாடோடியானது(Vagrant)செயலபடுகிறது.
    Packer 1.2.3 ஐ நிறுவுகைசெய்து சூழல் மாறிகளில் சேர்த்தல்:Packer என்பது எந்த வடிவத்திலும் இயந்திரப் படிமங்களைத் தானாகத் தயாரிக்கும் ஒரு நிரலாகும். நவீன உள்ளமைவு நிர்வாகத்தைத் தழுவி, இது(Packer) உருவாக்கிய படிமங் களுக்குள் மென்பொருளை நிறுவுகைசெய்திடவும் கட்டமைத்திடவும், Chef அல்லது Puppet போன்ற கட்டமைப்பைப் பயன்படுத்திகொள்ள பயனாளர்களை ஊக்குவிக்கிறது. இதனுடைய(Packer) படிமங்கள் முழுமையாக நினைவகத்தில் ஏற்றப்பட்ட உள்ளமைக்கப்பட்ட இயந்திரங்களை சிலநொடிகளில் தொடங்க அனுமதிக்கின்றன. அவைகளைகொண்டு AWS இல் பயன்பாட்டின் செயல்பாட்டினை இயக்கலாம், OpenStack போன்ற ஒரு தனியார் மேககணினியில் staging/QA , மேசைக்கணினி மெய்நிகராக்க தீர்வுகளை VMware அல்லது VirtualBox இல் உருவாக்கலாம், ஏனெனில் அவை பல தளங்களுக்கு ஒரே மாதிரியான படிமங்களை உருவாக்குகின்றன. Packer 1.2.3 ஐ நிறுவுகைசெய்திடும் போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட exe கோப்பை மேம்பட்ட கணினி அமைப்புகளில் சூழல் மாறிகளில் சேர்த்திடுக.
    CLI மூலம் தீம்பொருள்பெட்டிகளையும்நிறுவுகைகருவிகளையும்(setuptools) நிறுவுகைசெய்தல்:Setuptools என்பது Python distutils இன் மேம்பாடுகளின் தொகுப்பாகும். இது மேம்படுத்துநர்களுக்கு, குறிப்பாக பிற தொகுப்புகளை நம்பியிருக்கும் பைத்தானை உருவாக்குவதையும் எளிதாக்குகிறது. தீம்பொருள் பெட்டிகள் சார்புகளைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சரியாக நிறுவுகை செய்வதற்காக நிறுவுகை செய்வதற்கான கருவிகளைப் பயன்படுத்திகொள்ளலாம். தீம்பொருள் பெட்டிகள் விண்டோவினுடைய மெய்நிகர் கணினிகளில் தீம்பொருள் பகுப்பாய்வை உருவாக்குகிறது, தீம்பொருளைச் சோதிக்கும் சூழலை வழங்குகிறது. கட்டளை வரியில் உள்ளிட வேண்டிய கட்டளைகளை படம்1 காட்டுகிறது.

படம்1
அடுத்து, Malboxes நிறுவுகையைச் சரிபார்த்து ஒரு பெட்டியை. படம் 2 இல் காட்டப்பட்டுள்ளபடி, உருவாக்கிடுக

படம் 2
இது Windows 10, 64-bit VM ஐ உருவாக்குகின்றது. தேவையெனில்CLI இல் ‘malboxes list’ ஐ உள்ளிட்டு மற்ற VMகளை சரிபார்க்கலாம்.
இப்போது ‘vagrant up’ என தட்டச்சு செய்வதன் மூலம் தீம்பொருள் பகுப்பாய் விற்காக ஒரு நாடோடி(Vagrant) கோப்பை உருவாக்கிடுக.
இந்த கட்டளைவரியானது நம்முடைய நாடோடி(Vagrant) கோப்பின் படி விருந்தினர் இயந்திரங்களை உருவாக்கி கட்டமைக்கிறது. இதிலுள்ள(Vagrant)மிக முக்கியமான கட்டளை இதுவேயாகும் (படம் 3), ஏனெனில் எந்த நாடோடி(Vagrant) இயந்திரமும் இப்படித்தான் உருவாக்கப்படுகிறது.

படம் 3

அடுத்த கட்டநடவடிக்கையாக, மேலே உள்ள தொடரியலை பயன்படுத்தி புதிய VM ஐ சுழற்றி்யமைத்திடுக;

உதாரணமாக: ‘malboxes spin win7_32_analyst newWin32VM’.

புதிய ISO கோப்பில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்வதன் மூலம் ISO கோப்பை மெய்நிகர் பெட்டியில் காணலாம் அல்லது run என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதன் மூலம் அதை இயக்கலாம். VM இப்போது துவக்கப்பட வேண்டியுள்ளது அதனால் போதுமான தற்காலிக நினைவகமும் RAM அமைவு ஆதாரங்களும் VMக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திகொள்க.

மாதிரி தீம்பொருள் பகுப்பாய்வு

விண்டோமெய்நிகர் கணினியில் உள்ளமைக்கப்பட்ட WinDBG இல் உள்ள தீம்பொருள் இயங்கக்கூடிய கோப்பை இப்போது பகுப்பாய்வு செய்வோம். பகுப்பாய்வை மேற்கொள்வதற்கான படிமுறைகள் பின்வருமாறு

மாதிரி தீம்பொருள் கோப்பைப் பதிவிறக்கம் செய்திடுதல்: பல ஆதாரங்களில் இருந்து பகுப்பாய்விற்குத் தகுந்த தீம்பொருள் செயல்படுத்துதல்களைப் பதிவிறக்கம் செய்யலாம், அவற்றில் ஒன்று ‘Malware-Samples by fabricagic72’ எனப்படும் GitHub களஞ்சியமாகும். இந்த மாதிரிகள் பல்வேறு honeypots களைப் பயன்படுத்தி களஞ்சியத்தின் உரிமையாளரால் தொகுக்கப்பட்டன. TekDefense ஆனது, படம் 4 இல் காணப்படுவது போல், இயங்கக்கூடிய தீம்பொருள் மாதிரிகளின் தொகுப்பையும் கொண்டுள்ளது.

படம் 4

Defenderஐ முடக்கி, பகுப்பாய்விற்குத் தயாராகுதல்: கருவிகளின் கீழ் ‘disable_defender’ என்பதைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்திடுக. இது மெய்நிகர் கணினியில் defendeஐ முடக்குகின்றது.

மெய்நிகர் இயந்திரத்துடன் வரும் WinDBG போன்ற பிழைத்திருத்தியைத் திறந்திடுக. இதற்கு ‘x64dbg’ என்று பெயரிடுக.

பிழைத்திருத்தத்தில் இயங்கக்கூடிய கோப்பை இழுத்துகொண்டுவருதல்: தீம்பொருளைப் பகுப்பாய்வு செய்ய, இப்போது ‘show code’ என்பதைக் தெரிவு செய்து சொடுக்குதல் செய்து குறிமுறைவரிகளைப் படித்திடுக. ஒரு சிவப்புக் கொடியானது குறியீடு தெளிவில்லாமல் இருப்பதையும் தீங்கிழைக்கும் நிரலையும் குறிக்கிறது. தீங்கிழைக்கும் நிரல் அதன் வரம்பில் உள்ளது மேலும்இது சாண்ட்பாக்ஸிலிருந்து வெளியேறாது என்பதை இது உறுதிப்படுத்துகிறது, இது பாதுகாப்பான தீம்பொருள் பகுப்பாய்வுக்கிற்கான வசதியை வழங்குகிறது.

படம் 5 இல் காட்டப்பட்டுள்ள துணுக்கு குறிமுறைவரிகள் தீம்பொருள் payloadஇன் ஒரு பகுதியாகும், அங்கு செயலிகளும் பொருட்களும் இடையூறாகவும் முட்டாள்தனமானவையாகவும், குறியீடு தெளிவின்மையையும், தீங்கிழைக்கும் நிரலையும் குறிக்கிறது.

படம் 5

இணையஇணைப்பில்லாத தீம்பொருள் பகுப்பாய்விற்காக தீம்பொருள் பெட்டிகளின் ஆய்வக சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாம் இப்போது கற்றுக்கொண்டோம், மேலும் அதை பரிசோதித்தும் பார்த்துவிட்டோம். தீம்பொருள் இன்று ஒரு VM ஐக் கண்டறியும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றுச்சூழலில் இருந்து புரவலர் கணினியில் செயல்படுமாறு முயற்சி செய்யலாம். எனவே, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தீம்பொருள் பகுப்பாய்வு செய்வது நல்லதுஎன பரிந்துரைக்கப்படுகிறது.

இன்றைய கணினியின் கொள்கலண்களை (containers)இயக்கத் தொடங்குவதற்கான மூன்று படிமுறைகள்

     

நம்முடைய பணியின் ஒரு பகுதியாகவோ, எதிர்கால பணி வாய்ப்பு களுக்காகவோ அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவம் வாய்ந்த அமைவு நிருவாகிகளுக்குக் கூட இன்றைய கணினியின் கொள்கலண்களின் (containers) பயன்பாடு மிகவும் அதிகமானதாகத் தோன்றலாம். இருந்தபோதிலும் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது .எனவே உண்மையில் இந்த கொள்கலண்களை எவ்வாறு செயல்படுத்திட தொடங்குவது? மேலும், ஏன் கொள்கலணிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதற்கான ஒரு பாதை இருக்கிறது? நாம் எதிர்பார்ப்பது போல், இதனை தொடங்குவதற்கான சிறந்த ஆரம்ப இடம் எது? ஆகிய பல்வேறு கேள்விகள் நம்மனதில் எழும் நிற்க. கணினியின்கொள்கலண்களை(containers)இயக்கத் தொடங்குவதற்காக பின்வருகின்ற மூன்று படிமுறைகளை பின்பற்றிடுக என பரிந்துரைக்கபபடுகின்றது.
படிமுறை.1. கணினியின்கொள்கலன்களைப்(containers) புரிந்துகொள்ளுதல்
நம்முடைய இரண்டாவதான சிந்தனையில், ஆரம்பத்தில் தொடங்குவது ஆரம்பகால BSD , அவைகளின் சிறப்பு chroot jails இற்கு முந்தையது, எனவே அதற்குப் பதிலாக நேரடியாக கணினியின்கொள்கலண்களின்நடுப்பகுதிக்குச் செல்க.
மிக நீண்ட காலத்திற்கு முன்பு, லினக்ஸின் உருவாக்கமையாத்திற்கு cgroups ஐ அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஒரு பெயர்இடைவெளி(namespace) எனப்படும் செயல்முறைகளை “tag” செய்ய உதவுகிறது. ஒரு பெயர்இடைவெளியில் ஒன்றாகச் செயலாக்கும்போது, அந்தப் பெயர்இடைவெளிக்கு வெளியே எதுவும் இல்லாதது போல் அந்த செயல்முறைகள் செயல்படும்.அந்த செயல்முறைகளை ஒரு வகையான கணினியின்கொள்கலணில் வைத்தது போல் உள்ளது. நிச்சயமாக, கணினியின்கொள்கலணானது மெய்நிகராக, அது நம்முடைய கணினியில் உள்ளது.மற்ற இயங்குதளம் இயங்குகின்ற அதே உருவாக்கமையம், தற்காலிக நினைவகம் CPU இல் இது இயங்குகிறது, ஆனால்இது அதற்கான செயல் முறைகளைக் மட்டும் கொண்டிருக்கின்றது.
முன்பே தயாரிக்கப்பட்ட கணினியின் கொள்கலண்கள் அதில் உள்ள பயன்பாட்டை இயக்குவதற்குத் தேவையானவற்றுடன் விநியோகிக்கப்படுகின்ற. Podman, Docker அல்லது CRI-O போன்ற ஒரு கொள்கலண் இயந்திரத்துடன், எந்தவொரு பாரம்பரிய அர்த்தத்திலும் நிறுவுகைசெய்திடாமல், கொள்கலண் செய்யப்பட்ட பயன்பாட்டை இயக்கலாம்.கொள்கலண்இயந்திரங்கள் பெரும்பாலும் அனைத்து தளங்களிலும் செயல்படக்கூடியதாகும், எனவே கொள்கலண்கள் லினக்ஸை இயக்கினாலும், லினக்ஸ், மேக் அல்லது விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளில் கணினியின் கொள்கலண்களை செயல்படுமாறு இயக்கத் தொடங்கலாம்.
மிக முக்கியமாக, குறிப்பிட்டஒரே பயன்பாட்டிற்கு அதிக தேவை இருக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட கொள்கலண்களை இயக்கி அவைஒவ்வொன்றிலும் நமக்குத் தேவையான அந்தஒரு பயன்பாட்டினை தனித்தனியாக செயல்படச்செய்து பயன்பெறலாம்.கொள்கலண் என்றால் என்ன என்று இப்போது தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக அந்த கொள்கலண்ஒன்றினை எவ்வாறு இயக்குவது.
படிமுறை.2. ஒரு கொள்கலணை இயக்குதல்
ஒரு கொள்கலணை இயக்குவதற்கு முன், ஒரு கொள்கலணை இயக்குவதற்கு தேவையான ஒரு காரணம் இருக்க வேண்டும். ஒரு காரணத்தை நாமே உருவாக் கலாம், ஆனால் அந்த காரணத்திற்காக நமக்கு ஆர்வம் காட்ட இது பேருதவியாக இருக்கும், எனவே இயக்கும் கொள்கலணை உண்மையில் பயன்படுத்த நாம் உத்வேகம் பெறுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கொள்கலண் இயங்குகிறது, ஆனால் அதுதான் வழங்கும் பயன்பாட்டைமட்டும் பயன்படுத்து வதில்லை, எந்த தோல்வியையும் கவணிப்பதில்லை என்பதை மட்டுமே நிரூபிக்கிறது, ஆனால் கொள்கலணைப் பயன்படுத்துவது அது செயல்படுகிறது என்பதை நிரூபிக்கப்படுகின்றது.
இதற்கான ஒரு தொடக்கமாக வேர்டுபிரஸ் என்பதை பரிந்துரைக்கப்படுகின்றது. இது ஒரு பிரபலமான இணையப் பயன்பாடாகும், இது பயன்படுத்த எளிதானது, எனவே கொள்கலணை இயக்கியவுடன் பயன்பாட்டைச் சோதனை செய்யலாம். ஒரு வேர்டுபிரஸ் கொள்கலனை எளிதாக அமைக்க முடியும் என்றாலும்,இதில் பல உள்ளமைவு வாய்ப்புகளும் உள்ளன,இது கூடுதல் கொள்கலண் வாய்ப்புகளைக் கண்டறிய வழிவகுக்கின்றது(தரவுத்தள கொள்கலனை இயக்குவது போன்றவை) அதனோடு கொள்கலண்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன எனவும் தெரிந்து கொள்ளமுடியும்.
இதற்காக Podmanஎனும் கொள்கலணைப் பயன்படுத்துவதாக கொள்க, இது ஒரு நட்புடன்கூடிய, வசதியான daemon இல்லாத கொள்கலண் இயந்திரமாகும். நம்மிடம் Podman இல்லை என்றால், அதற்கு பதிலாக Docker எனும்கொள்கலணைப் பயன்படுத்தலாம். இவ்விரண்டு திறமூல கொள்கலண் இயந்திரங்களின் தொடரியல்(syntax) ஒரே மாதிரியாக உள்ளது (Podman இற்கு பதிலாக docker என தட்டச்சு செய்திடுக). Podman ஒரு daemonஐ இயக்காததால், அதற்கு dockerஐ விட அதிக கட்டமைப்பு தேவைப்படுகிறது, ஆனால் மூலம் இல்லாத daemonஇல்லாத கொள்கலண்களை இயக்கும் திறன் மதிப்புக்குரியது.
dockerஉடன் செல்கின்றோம் எனில், வேர்ட்பிரஸ் துணைத்தலைப்புக்குச் செல்லலாம். இல்லையெனில், Podman ஐ நிறுவுகைசெய்திடுக கட்டமைக்கவும் ஒரு முனையத்தைத் திறக்கவும் பின்வரும் கட்டளையை செயற்படுத்திடுக:
$sudodnfinstallpodman
கொள்கலண்கள் பல செயல்முறைகளை உருவாக்குகின்றன, மேலும் பொதுவாக மூலபயனருக்கு மட்டுமே ஆயிரக்கணக்கான செயல்முறை சுட்டிகளை உருவாக்க அனுமதி உள்ளது. /etc/subuid எனப்படும் கோப்பை உருவாக்கி, பொருத்தமான அதிக எண்ணிக்கையிலான அனுமதிக்கப்பட்ட PIDகளுடன் பொருத்தமான உயர் தொடக்க UIDயை வரையறுப்பதன் மூலம் பயனாளருக்கு சில கூடுதல் செயல்முறை சுட்டிகளைச் சேர்த்திடுக அதற்கான கட்டளைவரிபின்வருமாறு:
seth:200000:165536
நம்முடைய குழுவிற்கும்/etc/subgid எனப்படும் கோப்பில் இதைச் செய்திடுக. இந்த எடுத்துக்காட்டில், முதன்மை குழு பணியாளர்கள் ( கணினியை எவ்வாறு கட்டமைத்துள்ளோம் என்பதைப் பொறுத்து இது நமக்காக பயனாளர்களாக இருக்கலாம் அல்லது நம்முடைய பயனாளர்பெயராக இருக்கலாம்.)அதற்கான கட்டளைவரிபின்வருமாறு:
staff::200000:165536
இறுதியாக, ஆயிரக்கணக்கான பெயர்இடைவெளிகளை நிருவகிக்க நம்முடைய பயனாளர் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திகொள்கஅதற்கான கட்டளைவரிகள்பின்வருமாறு::
$ sysctl–all–patternuser_namespaces
user.max_user_namespaces =28633
குறைந்தபட்சம் 28,000 பெயர்இடைவெளிகளை நிர்வகிக்க நம்முடைய பயனாளர்களுக்கு அனுமதி இல்லை எனில், /etc/sysctl.d/users.confஎனும்கோப்பை உருவாக்குவதன் மூலம் முதலில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தடுக பின் தேவையான விவரங்களை உள்ளிடுக அதற்கான கட்டளைவரிபின்வருமாறு::
user.max_user_namespaces=28633
வேர்ட்பிரஸ் ஒரு கொள்கலணாக இயங்குதல்
இப்போது, Podman அல்லது Docker ஐப் பயன்படுத்தினாலும், இணையைத்தில் கொள்கலண் பதிவேட்டில் இருந்து WordPress கொள்கலணை இழுத்து வந்து இயக்கலாம். ஒற்றைவரியிலான Podman கட்டளைவரி மூலம் இதையெல்லாம் செய்யலாம் அதற்கான கட்டளைவரிகள்பின்வருமாறு::
$ podman run–namemypress \
-p8080:80-dwordpress
கொள்கலணைக் கண்டுபிடித்து, அதை இணையத்திலிருந்து நகலெடுத்து, அதைத் தொடங்குவதற்காக Podmanஇற்கு சிறிது காலஅவகாசம் கொடுத்திடுக.
முனைமத்திரையைப் பெற்றவுடன் இணையஉலாவியை செயல்படுத்திடத் தொடங்கிடுக to local host:8080 என்பதை வழிசெலுத்திடுக. இப்போது வேர்டுபிரஸ் ஆனது இயங்குகிறது, அதை முழுவதையும்கட்டமைப்பதற்காக காத்திருக்கிறது.
நம்முடைய அடுத்த தடையை அடைய அதிக நேரம் எடுக்காது. வேர்டுபிரஸ் தரவுகளைக் கண்காணிக்க ஒரு தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது, எனவே அதன் தகவலைச் சேமிக்கக்கூடிய தரவுத்தளத்தை வழங்க வேண்டும்.
இதனை தொடர்வதற்கு முன், WordPress கொள்கலனை நிறுத்தி அகற்றிடுக அதற்கான கட்டளைவரிகள்பின்வருமாறு::
$ podman stop mypress
$ podmanrmmypress
படிமுறை.3. ஒரு podஇல் கொள்கலண்களை இயக்குக
கொள்கலன்கள், வடிவமைப்பு, அவற்றின் பெயர் குறிப்பிடுவது போல், தன்னிச்சையானவை. ஒரு கொள்கலணில் இயங்கும் ஒரு பயன்பாடு, அதன் கொள்கலணிற்க்கு வெளியே உள்ள பயன்பாடுகள் அல்லது உள்கட்டமைப்புடன் தொடர்பு கொள்ளக் கூடாது. எனவே ஒரு கொள்கலண் செயல்பட மற்றொரு கொள்கலண் தேவைப்படும்போது, அந்த இரண்டு கொள்கலண்களையும் pod எனப்படும் அதனை ஒருபெரிய கொள்கலணிற்குள் வைப்பது ஒரு தீர்வாகும். ஒரு pod அதன் கொள்கலண்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்காக முக்கியமான பெயர்இடைவெளிகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை உறுதிசெய்கிறது.புதிய pod ஒன்றை உருவாக்கிடுக, podகளை, எந்த வாயில்களை நாம் அணுக விரும்புகின்றோம் என்பதற்கு ஒரு பெயரை வழங்கிடுக அதற்கான கட்டளைவரிகள்பின்வருமாறு:
$ podman pod create \
–namewp_pod \
–publish8080:80
இப்போது pod செயல்பட்டுக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திடுக அதற்கான கட்டளைவரிகள்பின்வருமாறு::
$ podman pod list
POD ID NAME STATUS INFRA ID # OF CONTAINERS
100e138a29bd wp_pod Created 22ace92df3ef 1
தொடர்ந்து ஒரு podஇல் மற்றொரு கொள்கலணைச் சேர்த்திடுக
இப்போது ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் கொள்கலண்களுக்கான ஒருpod ஐ வைத்திருக்கின்றோம், ஒவ்வொரு கொள்கலணும் இயங்குவதற்கு pod ஒன்றைக் குறிப்பிடுவதன் மூலம் அதைத் தொடங்குக.
முதலில்,ஒரு தரவுத்தளத்தை துவக்கிடுக. WordPress இலிருந்து தரவுத்தளத்துடன் இணைக்கும் போது அதே நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தும் வரை நம்முடைய சொந்த நற்சான்றிதழ்களை உருவாக்கலாம் அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:.
$ podman run–detach\
–podwp_pod \
–restart=always \
-eMYSQL_ROOT_PASSWORD=”badpassword0″\
-eMYSQL_DATABASE=”wp_db”\
-eMYSQL_USER=”tux”\
-eMYSQL_PASSWORD=”badpassword1″\
–name=wp_db mariadb
அடுத்து, வேர்டுபிரஸ் கொள்கலணை அதே pod இல் துவக்கிடுகஅதற்கான கட்டளைவரிகள்பின்வருமாறு::
$ podman run–detach\
–restart=always–pod=wp_pod \
-eWORDPRESS_DB_NAME=”wp_db”\
-eWORDPRESS_DB_USER=”tux”\
-eWORDPRESS_DB_PASSWORD=”badpassword1″\
-eWORDPRESS_DB_HOST=”127.0.0.1″\
–namemypress wordpress
இப்போது நமக்குப் பிடித்த இணைய உலாவியைத் துவக்கி, to local host:8080இற்கு செல்க.
இந்த வழிமுறையில், இந்த கட்டமைப்பானது நாம் எதிர்பார்த்தது போல் செல்கிறது. வேர்டுபிரஸ் தரவுத்தளத்துடன் இணைக்கிறது, ஏனெனில் கொள்கலணைத் தொடங்கும் போது அந்த சூழல் மாறிகளை நாம் கடந்துவிட்டோம். ஒரு பயனாளர் கணக்கை உருவாக்கிய பிறகு, நாம் வேர்டுபிரஸ்ஸின் முகப்புபக்கத்தை பார்க்க உள்நுழைவுசெய்திடலாம்.
அடுத்த முடிவானபடிமுறைகள்
இரண்டு கொள்கலண்களை உருவாக்கி, அவற்றை ஒரு pod இல் இயக்கி யுள்ளோம். நம்முடைய சொந்த சேவையாளரில் கொள்கலண்களில் சேவைகளை இயக்குவதற்கு நமக்கு போதுமான அளவு இப்போது தெரியும். மேகக்கணிக்கு செல்ல விரும்பினால், கொள்கலண்கள் நிச்சயமாக அதற்கு மிகவும் பொருத்த மானவைகளாகும். Kubernetes, OpenShift போன்ற கருவிகள் மூலம், ஒரு தொகுதியில் கொள்கலண்கள் , podsஐ தொடங்கும் செயல்முறையை தானியங்கியாக செய்து பயன்படுத்திகொள்ளலாம்.

BOOT-REPAIR ,மீட்பு வட்டினை CDகூட கொண்டிருக்கும்

BOOT-REPAIR பெற்றிடுதல்: நம்முடைய வட்டில் நிறுவப்பட்ட இயக்க முறைமை எதுவாக இருந்தாலும்,
டெபியனிலிருந்து (அல்லது அதனுடைய வழித்தோன்றல்களான: உபுண்டு, லினக்ஸ் மின்ட்…) வட்டினை இயக்கத்துவங்குதல், சாதாரண அமர்வு அல்லது இயக்கநேர குறுவட்டு அல்லது இயக்கநேர-விரலியில் இயக்க துவக்கிடுக. பின்னர் அதில் Boot-Repair ஐ நிறுவுகைசெய்திடுக, Ubuntu/Mint இற்கு PPA , அல்லது Debian இற்கு DEBs.அல்லது: ஒரு Boot-Repair-Disk இல் துவக்கிடுக. இது தானாகவே தொடங்கப்படும்.
Boot-Repairபயன்படுத்திடுதல்:
Boot-Repairஐ துவக்கிடுக பின்னர் விரியும் திரையில்”Recommended repair” எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக. பழுதுபார்ப்பு பணிமுடிந்ததும், காகிதத்தில் தோன்றும் URL (paste.ubuntu.com/XXXXX) ஐக் கவனித்திடுக, பின்னர் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்து, OSகளுக்கான அணுகலானது மீட்டெடுக்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்திடுக. பழுதுபார்ப்பு வெற்றிபெறவில்லை எனில், உதவியைப் பெற boot.repair@gmail.com எனும் மின்னஞ்சல்முகவரிக்கு விவரங்களை அனுப்பிடுக.
எச்சரிக்கை: மேம்பட்ட வாய்ப்புகளின் இயல்புநிலை அமைப்புகளே “Recommended repair” எனும் வாய்ப்பின்மூலம் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை மாற்றுவது பிரச்சனையை மோசமாக்கலாம். ஆலோசனை கேட்பதற்கு முன் அவற்றை மாற்ற வேண்டாம்.
இது(Boot-Repair), நம்முடைய இயக்க முறைமைகளுக்கான அணுகலை மீட்டெடுப்பதற்கான எளிய கருவியாகும் . பயன்படுத்த எளிதானது (ஒரேயொரு சொடுக்குதலில் இயக்கமுறைமையை பழுதுநீக்கும் பணியை செய்து முடித்திட லாம்! ) .கட்டணமற்றது (GPL எனும் திறமூல உரிமத்தின்கீழ்வெளியிடப்பட்டுள்ளது) . உதவிகரமானது (இயக்கமுறைமையின் துவக்க-தகவல் கண்டறிதல் மின்னஞ்சல் அல்லது பிடித்த குழுவில் உதவி பெறுதல்). பாதுகாப்பானது (தானியங்கி காப்புப்பிரதிகள்). நம்பகமானது (வருடத்திற்கு 300.000 பயனர்கள்). Windows (XP, Vista, Windows7, Windows8, Windows10, Windows11) ஆகிய இயக்கமுறைமைகளுக்கான அணுகலை மீட்டெடுக்க முடியும்.. Debian, Ubuntu, Mint, Fedora, OpenSuse, ArchLinux. ஆகிய இயக்கமுறைமைகளுக்கான அணுகலை மீட்டெடுக்க முடியும்…நம்முடைய கணினியில் Debian, Ubuntu, Mint, Fedora, OpenSuse, ArchLinux அல்லது அதன்வழிதோன்றல்கள் இருந்தால், எந்த OSக்கான அணுகலையும் (Windows, MacOS, Linux..) மீட்டெடுக்க முடியும். நம்மிடம் “GRUB Recovery” பிழைச் செய்தி இருக்கும்போது துவக்கத்தை சரிசெய்ய முடியும் GRUB2/GRUB1 என்பதன் bootloader ஐ எளிதாக மீண்டும் நிறுவுகைசெய்வதற்கான வாய்ப்புகள் (இயல்புநிலையாக OS, purge, unhide, kernel ஆகிய வாய்ப்புகள்..) இன்னும் பற்பல ! (UEFI, SecureBoot, RAID, LVM, Wubi, கோப்பு முறைமை பழுது. நீக்கம் செய்தல்..)
இதுதான் நம்முடைய கணினிக்கு அருகில் வைத்திருக்க வேண்டிய மீட்பு வட்டாகும். தொடக்கத்தில் தானாகவே Boot-Repair பழுதுபார்க்கும் கருவி இயங்கும்
இது OS-UninstallerandBoot-Infotools ஆகியவற்றையும் கொண்டுள்ளது. சமீபத்திய (UEFI) கணினிகள் பழைய கணினிகள் துவக்க இயக்கத்தின் பழுதுநீக்குகின்றது
இதனை எவ்வாறு பெற்று பயன்படுத்துவது:
(1) முதலில் Boot-Repair எனும் இந்த கருவியைhttps://sourceforge.net/p/boot-repair/home/Home/ எனும் முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்திடுக,
(2) பின்னர் அதை RufusorUnetbootin வழியாக நேரடியாக-விரலியில்(USB) பதிவுசெய்திடுக. (கணினியானது Windows8/10 உடன் வந்திருந்தால் அதை CD/DVD இல் பதிவுசெய்திட வேண்டாம்)
(3) Boot-Repairஎனும் கருவியை கணினியில் செருகி கணினியை மறுதொடக்கம் செய்திடுக,
(4) உடன்விரியும் திரையில் நாம் பயன்படுத்திடவிரும்பும் மொழியை தேர்ந்தெடுத்திடுக,
(5) முடிந்தால் இணையத்துடன் இணைத்திடுக
(6) உடன்விரியும்திரையில்”Recommended repair” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு.அவ்வளவுதான் இயக்கமுறைமையின் பழுதுநீக்கும் பணி துவங்கிவிடும்
(7) இந்த பணிமுடிவடைந்த்ததும் கணினியை மீண்டும் துவக்கிடுக பெரும்பாலான bootsector/GRUB/MBR பிரச்சனைகளை தீர்க்கிறது

மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://sourceforge.net/p/boot-repair/home/Home/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக் கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்

பொதுவாக திறமூலங்களின் வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் நிரலாக்கத்தினை எளிதாக துவங்கலாம், அதிலும் எந்தவொரு நிரலாக்கத்தினையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடங்கலாம் என்பதே தற்போதைய உண்மை நிலவரமாகும். மேலும் தற்போதுகணினி மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதக் கற்றுக்கொள்வதற்காகவென கணினி அறிவியல் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுதான் லினக்ஸ், திறமூலங்கள் ஆகியவற்றின் தற்போதைய திறனாகும் எவரும் சிறிய அளவில் குறிமுறைவரிகளை எளிதாக எழுத கற்றுக்கொள்ளலாம். எவரும் ஏதேனும்ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினால்,அவ்வாறு தொடங்குவதற்கு ஏராளமான அளவில் சிறந்த வழிகாட்டிகள் பலஉள்ளன. இவை எவருக்கும் எப்போதும் உதவ தயாராக இருக்கின்றன

. நிரலாக்க மொழிகளை ஒப்பிடுதல் பொதுவாக பெரும்பாலான நிரலாக்க மொழிகள் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. ஏதேனும் ஒரு நிரலாக்க மொழியில் ஒரு செயலை எவ்வாறு செய்வது என்பதை அறிந்தவுடன், அடுத்தடுத்த நிரலாக்க மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் ஏனெனில் பெரும்பாலும் அவ்வம்மொழிகளின் தொடரியல்களையும் கட்டமைப்புகளையும் கண்டறிவது மட்டுமேயாகும்.

வெவ்வேறு நிரலாக்க மொழிகள் ஒரே செயலை எவ்வாறு செய்கின்றன புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த வழி, அந்த நிரலாக்க மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்வதற்காக விளையாட்டு போன்ற எளிய சோதனை செயல் திட்டத்திற்கான குறிமுறைவரிகளை எழுதுவதுதான சிறந்த வழியாகும். அடிக்கடி எழுதும் ஒரு மாதிரி நிரல் “guess the number” எனும் ஒரு எளிய விளையாட்டாகும், இதில் கணினி ஒன்று முதல் 100 வரையிலான எண்ணைத் தேர்ந்தெடுத்து அதை யூகிக்கச் சொல்லும். பல நிரலாக்க மொழிகளில் எண்களை யூகிக்கும் விளையாட்டை எவ்வாறு எழுதுவது என்பதை ஆராய்வதற்கான தொடர் கட்டுரைகள் பலவெளியிட்டுள்ளன அந்த கட்டுரைகளின் வாயிலாக வெவ்வேறு நிரலாக்க மொழிகள் . இந்த “guess the number” எனும் விளையாட்டினை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதற்கான முக்கிய படிமுறைகளை அறிந்துகொள்க.

வெவ்வேறு நிரலாக்க மொழிகள் எவ்வாறு தரவுகளைப் படிக்கின்றன எழுதுகின்றன வெவ்வேறு நிரலாக்க மொழிகள் ஒரே உணர்வில் தரவை எவ்வாறு படிக்கின்றன எழுதுகின்றனவென https://opensource.com/users/alansmithee எனும் இணையதளமுகவரியிலுள்ள கட்டுரை ஒப்பிடுகிறது. தரவு உள்ளமைவுக் கோப்பிலிருந்து வந்தாலும் அல்லது பயனாளர் உருவாக்கும் கோப்பிலிருந்து வந்தாலும், சேமிப்பக சாதனத்தில் தரவைச் செயலாக்குவது குறிமுறைவரிகளை எழுதுபவர்களுக்கு பொதுவானது. இதில்C, Java, Groovy போன்ற பல பிரபலமான நிரலாக்க மொழிகளால் எடுக்கப்பட்ட பல்வேறு அணுகுமுறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

புதிய நிரலாக்க மொழியைக் கற்றல் ஒரு புதிய நிரலாக்க மொழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றை ஆராய விரும்பினாலும், நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்வது பற்றிய சிறந்த கட்டுரைகளைOpensource.comஎனும் இணையதளத்தில் காண்க

. WebAssembly இல் ‘Hello World’ எனும் பயன்பாட்டினை எழுதுவது எவ்வாறு WebAssembly என்பது ஒரு இருமநிலைகுறிமுறைவரி வடிவமாகும், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு இணைய உலாவியும் அதன் புரவலர் அமைப்பின் இயந்திரக் குறிமுறை வரிகளில் தொகுக்க முடியும். JavaScript , WebGL உடன், WebAssembly ஆனது இணைய உலாவியில் இயங்குதளத்தின்-சுதந்திரமான பயன்பாட்டிற்கான பயன்பாடுகளை பொருத்துவாயில் செய்வதற்கான தேவையை பூர்த்தி செய்கிறது. WASM-உரையில் வித்தியாசமான Hello Worldஎனும் நிரலை எவ்வாறு உருவாக்குவது என்பதை https://opensource.com/users/hansic99 எனும் இணையதளமுகவரியிலுள்ள கட்டுரை விளக்குகிறது. Go எனும் நிரலாக்க மொழி மூலம் குறுக்கு தொகுத்தல் எளிதாக்கப்பட்டது உரைநிரலை Goஎனும் நிரலாக்க மொழியின் நிரலாக மாற்றுவதன் மூலம் Goவின் குறுக்கு-தொகுப்பு ஆதரவைக் கற்றுக்கொள்வது பற்றி https://opensource.com/users/gkamathe எனும் இணையதள முகவரியிலுள்ள கட்டுரை விளக்குகிறது. நம்முடைய செயல்திட்டத்தை ஒருமுறை எழுதி, குறுக்கு-தொகுப்புடன் மற்றொரு சூழலுக்கு தொகுக்கலாம். உரைநிரலிற்கு D நிரலாக்க மொழியைப் பயன்படுத்தலாம் D நிரலாக்க மொழியானது அதன் நிலையான தட்டச்சு , மீப்பெரும்நிரலாக்க திறன்களின் காரணமாக பெரும்பாலும் கணினி நிரலாக்க மொழியாக கருதப்படுகிறது. இருப்பினும், இது மிகவும் பயனுள்ள உரைநிரல் மொழியாகும். பொதுவான உரைநிரலாக்கத்திற்கு D நிரலாக்க மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி https://opensource.com/users/aberba எனும் இணையதள முகவரியிலுள்ள கட்டுரைவிளக்குகின்றது.

திறமூல சக்தியுடன், நிரலாக்கத்தை எவரும் எளிதாக அணுக முடியும். அதனால் நாம் பணி செய்ய விரும்பும் செயல்திட்டத்தைக் கண்டுபிடித்திடுக, அதுவே நிரலாக்கத்திற்கான நம்முடைய முதல் நுழைவாயிலாக இருக்கட்டும்.

eXo இயங்குதளம் – எண்ம பணியிடம்

eXo இயங்குதளம் என்பது வளர்ந்து வரும் குழுக்கள் , நிறுவனங்களுக்கான ஒரு திற-மூல எண்ம பணியிட தீர்வாகும், இதில் பின்வருவன அடங்கும்:
✅ வளாக தொடர்பு
✅ குழு ஒத்துழைப்பு
✅ அறிவு மேலாண்மை
✅ உற்பத்தித்திறன் , பணியாளர் அங்கீகார பயன்பாட்டு வழக்குகள்.
eXo தனித்துவமாக நிற்றல்:
👍 அதன் நீர்மதன்மையும் ஒருங்கிணைந்த பணியாளர் அனுபவமும், மேசைக்கணினியிலுகைபேசியிலும் செயல்படும் திறன்மிக்கது
👍 இயங்குதளத்தின் எளிமை
👍 புதுமையான பணியாளர் ஈடுபாட்டின் அம்சங்கள்.
eXo இயங்குதளம் திறமூல தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது ,திறமூலதர நிலைகளை ஆதரிக்கிறது. இயங்குதளம் நீட்டிக்கக்கூடியது , இயங்கக்கூடியது, அனைத்து சேவைகளும் REST APIகள் வெளிப்படுத்திடுகின்றது. அதிக உணர்திறன் வாய்ந்த வாடிக்கையாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு திறன்களையும் இந்த eXo இயங்குதளம் வழங்குகிறது. eXo இயங்குதளத்தினை கொண்டு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கூட்டாளிகளை அதன் சமூக, ஈடுபாடு , gamification திறன்களுடன் இணைக்கலாம், ஈடுபடுத்தலாம் ,பரிசு அளிக்கலாம். பொதுமக்களை இதன்மூலம் கருவிகளின் தகவல்களுடன் இணைத்திடலாம்
பணியாளர் மையம்: பயனர்களை மையமாகக் கொண்ட எண்ம பணியிடம், தகவல் தொடர்பு வசதிகளைபணியாளர்களின் விரல் நுனியில் வைத்திடலாம்
பாதுகாப்பானது: பயன்பாடு, உள்கட்டமைப்பு, மென்பொருள் மேம்பாடு , அமைப்புகள் – அனைத்து நிலைகளிலும் நாம் விரும்பிய அளவிலான பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
சுதந்திரம்: மென்பொருள், உள்கட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதன் மூலம் சுதந்திரத்தை தக்கவைத்திருப்பதற்கான அனுமதிக்கும் தீர்வு கொண்டது.
தகவல்தொடர்பு: மேலிருந்து கீழ்நிலைவரைஊடாடும் தகவல்தொடர்புகள், நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட உள்ளடக்கம் , சமூக மேலாண்மை கருவிகள் மூலம் நிறுவன கலாச்சாரத்தை உருவாக்கிடலாம்.
ஒத்துழைப்பு:ஊழியர்கள் விரும்பும் நவீன, பயன்படுத்த எளிதான,ஒத்துழைப்பு டனான கருவிகள் மூலம் நிறுவனம் முழுவதும் பயனுள்ள ஒத்துழைப்பை கொண்டு வரலாம்.
ஈடுபடுத்துதல்: பணியாளர் பங்களிப்புகளை அங்கீகரித்து மதிப்பிடும் புதுமையான வெகுமதி திட்டங்கள் மூலம் ஊழியர்களை நீடித்து ஈடுபடுத்திடலாம்.
அறிவு: நிறுவன அறிவையும் தகவலையும் பணியாளர்களின் விரல் நுனியில் வைப்பதன் மூலம் சிறந்ததைச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளித்திடலாம்.
பணியாளர்கள் திறமையாக பணிசெய்ய வேண்டிய அனைத்தையும் உள்ளடக்கிய முழு வசதியுடனான எண்ம பணியிடம், ஒரு கட்டாயமான பணியாளர் அனுபவத்திற்காக புத்திசாலித்தனமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

இவ்வாறு பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டு இந்த பயன்பாடானது (LGPLv3) எனும் உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இந்த பயன்பாடு குறித்து மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.exoplatform.com/ எனும் இதனுடைய இணையதளமுகவரிக்கு செல்க.

,

தொலைநிலைவீட்டுஉதவியாளர்(Remote Home Assistant-2)மூலம் பல சாதனங்களைத் தானியங்கி படுத்தி நிர்வகித்திடுக

       

தானியங்கி என்பதே தற்போதையசூழலில் பரபரப்பான தலைப்பாகும். நமது ஒரு நாளைய பணியில் SRE எனப்படும் பணப்பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக முடிந்தவரை மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை தானியிங்கியாக்குவது மிகமுதன்மை யானதாகும். ஆனால் நம்மில் எத்தனை பேர் நம் அன்றாட, வாழ்க்கையில் அதைச் செய்கிறோம்? இந்த ஆண்டு, முக்கியமான செய்திகளில் நாம் கவனம் செலுத்துவதற்காக, உழைப்பை தானியக்கமாக்குவதில் நிரலாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
வீட்டு உதவியாளரை அமைப்பதில் நிறைய வழிகாட்டிகள் உள்ளன, ஆனால் நம்மிடம் பல வீட்டு உதவியாளர் நிறுவுகை இருந்தால்,அவை அனைத்தையும் ஒரே மைய வீட்டு உதவியாளரிடமிருந்து கட்டுப்படுத்த விரும்பினால் என்ன செய்வது?
அதற்காகதொலைநிலைவீட்டு உதவியாளர்( Remote Home Assistant) எனப்படும் ஒரு அற்புதமான திறனேற்றி பயன்பாடுகூட உள்ளது, இது ஒரு முழுமையான ஆற்றலாக மாற்றுகிறது. எந்தவொரு சிக்கலான மென்பொருளையும் அமைக்காமல் செயல்களை நிர்வகிக்கவும் தானியங்குபடுத்தவும் இது உதவுகிறது (கடந்த காலத்தில் MQTT உடன் இதைச் செய்திருந்தாலும் – இது ஒரு சவாலாக இருந்தது).
தொலைநிலைவீட்டு உதவியாளரை அமைப்பதற்கான எளிதான வழி, இரண்டு HASS நிறுவுகைசெய்வதும் வீட்டு உதவியாளர் குழுத்தொகுப்பினை (HACS) நிறுவுகை செய்வதுமாகும். HACS என்பது வீட்டு உதவியாளருக்கான மூன்றாம் தரப்பு துணை நிரல்களின் மிகப்பெரிய தொகுப்பாகும். அறிவுறுத்தல்கள் மிகவும் நேரடியானவை பெரும்பாலான பயன்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது – வீட்டு உதவியாளர் OS (இது மைய முனை), வீட்டு உதவியாளரின்உள்ளகம் (தொலை நிலை முன்மங்களில் ஒன்று) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இது ஒரு புதிய ஒருங்கிணைப்பாக நிறுவுகைசெய்கிறது, எனவேறு எந்தவொரு ஒருங்கிணைப்பை யும் இதனுடைய சேர்க்கலாம். HACS செயல்படுவதற்காக GitHub இல் உள்நுழைய வேண்டும், ஆனால் HACS கட்டமைப்பு ஓட்டத்தின் ஒரு பகுதியாக நம்மை அழைத்துச் செல்லும். இது முடிந்ததும், அறியப்பட்ட அனைத்து திறனேற்றி களஞ்சியங்களையும் பதிவேற்றுகிறது. அதன் நிலையைப் பார்க்க, இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பட்டியில் புதிய HACS வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.
Integrations என்பதை தேர்ந்தெடுத்து, எல்லா தொகுப்புகளின் தகவலையும் பதிவேற்றி முடித்ததும் தொலைநிலை வீட்டு உதவியாளரைத் தேடிடுக. Install எனும் பொத்தானைக் கொண்டு திறனேற்றியை நிறுவுகைசெய்திடுக, Home Assistantஐ மறுதொடக்கம் செய்திடுக. மறுதொடக்கம் முடிந்ததும், நம்மிடம் புதிய தனிப்பயன் ஒருங்கிணைப்பு உள்ளது, இது மற்றதைப் போலவே சேர்க்கலாம்.
தொலைநிலைமுனைமத்தில் (“lizardhaus”), ஒரு நீண்டகால நுழைவுச்சீட்டினை உருவாக்க வேண்டும், பின்னர் தொலைநிலை வீட்டு உதவியாளர் ஒருங்கிணைப்பைச் சேர்க்க வேண்டும். அதற்காக Setup as remote node என்பதை தேர்ந்தெடுத்திடுக, நாம் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.
மைய முனைமத்தில் (“homeassistant”), கட்டமைப்பு ஓட்டம் வேறுபட்டது. முன்பு போலவே integrationஎன்பதை சேர்த்திடுக, ஆனால் அணுகல் நுழைவுச்சீட்டினை உருவாக்க வேண்டாம். Add a remote node என்பதைத் தேர்ந்தெடுத்து Submit. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. தளத்தின் பெயர், முகவரி (இது ஒரு பெயர் அல்லது IP முகவரியாக இருக்கலாம்), தளமும் தொலைநிலை முனைமமும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அணுகல் நுழைவுச்சீட்டினைக் கோரும். உடன் SSL ஐ இயக்கலாம் அல்லது முடக்கலாம் (தொலைநிலையில் SSL இணையத்தில் இருந்தால் அதை அமைத்திடுமாறு கடுமையாக பரிந்துரைக்கப் படுகின்றது ). அதை இணைத்த பிறகு, தொலைநிலைமுனைமத்தில் இருந்து உட்பொருட்களுக்கான முன்னொட்டு ( பின்தொடருவதற்காக “_” எனும் குறியீட்டினை சேர்த்திடுக), எந்தெந்த பொருட்களை எடுக்க வேண்டும், எதைச் சேர்ப்பது, விலக்குவது போன்ற கூடுதல் தகவலுக்கு இது நம்மைத் தூண்டுகிறது. on and off switches செய்வது போன்றதொலைநிலை மூலம் தூண்டக்கூடிய நிகழ்வுகளை பெறலாம்.
அதன் பிறகு, தொலைநிலைப் பொருட்கள் மற்ற பொருட்களைப் போலவே வீட்டு உதவியாளரும் தோன்றும். சரியான தூண்டுதல்கள் , entities ஐச் சேர்க்கும் வரை, அவற்றை அதே வழியில் கட்டுப்படுத்தலாம்.
Bluetooth Low Energy plant sensors போன்ற சாதனங்கள் பிரதான HASS இயந்திரத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தால் தொலைநிலைவீட்டு உதவியாளர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியகங்களுக்கு அருகில் HassOS உடன் ஒரு Raspberry Pi ஐ வைக்கலாம், பின்னர் அவற்றை நம்முடைய மைய முகப்புத்திரையில் வைக்க தொலைநிலைவீட்டு உதவியாளரைப் பயன்படுத்தலாம், மேலும் அவைகளுக்கு உயிர்ப்பு தேவைப்படும்போது எச்சரிக்கையைப் பெறலாம். ஒட்டுமொத்தமாக, பல வீட்டு உதவியாளர் உள்ளமைவுகளை ஒன்றாக இணைப்பது வியக்கத்தக்க வகையில் எளிதானது மிகவும் உதவிகரமாக உள்ளது.

இதுகுறித்து மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் (https://github.com/custom-components/remote_homeassistant) எனும் இதனுடைய இணையதளமுகவரிக்கு செல்க

இராஸ்பெர்ரி பை கருவிkit மூலம் கணினிகளைப் பற்றி அனைத்தையும் அறிக

எனக்கு வரலாறு பிடிக்கும், அதைவிட எனக்கு கணினிகள் மிகவும் பிடிக்கும், அதனால் கணினிகள் அன்றாட வீட்டு உபயோகப் பொருளாக இருப்பதற்கு முன்பு கணினி பற்றிய கதைகளை நான் கேட்டு மகிழ்கிவேன், கணினியானது மிகக் குறைந்த பயனுடனான தனிப்பட்ட கருவியாகும். நீண்ட காலத்திற்கு முன்பு (முந்தைய ஆண்டுகளில்)கணினிகள் அடிப்படையில் எவ்வாறு இருந்தன என்பது பற்றி அடிக்கடி கேட்கும் ஒரு கதையாகும். . அவை மிகவும் அடிப்படை யானவை, உண்மையில், ஆர்வமுள்ள பயனருக்கு ஒரு பயன்பாட்டிற்காக நிரலாக்கம் எவ்வாறு செய்வது என்பது ஒப்பீட்டளவில் அற்பமானது. பொருள் சார்ந்த நிரலாக்க மொழிகள், சிக்கலான வரைகலை பயனாளர்இடைமுக(GUI) கட்டமைப்புகள், வலை பின்னல்கள் ஏபிஐகள், கொள்கலன்கள் போன்ற பலவற்றைக் கொண்ட நவீன கணினிகளைப் பார்க்கும்போது, வர்த்தகத்திற்கு உதவிடும் கணினியின் சில கருவிகளை சிறப்புப் பயிற்சி இல்லாத எவராலும் அணுக முடியாததாகி விட்டதில் எனக்கு உண்மையான கவலை உள்ளது.இவ்வாறான சூழலில் ராஸ்பெர்ரி பை 2012 இல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, அது எப்போதும் ஒரு கல்வித் தளமாகவே கருதப்படுகிறது. பல மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் இதனை துணை நிரல்களுடன் , பயிற்சி கருவிகளுடன் ஆதரிக்கின்றனர், இது கற்பவர்களின் அனைத்து வயதினருக்கும் நிரலாக்கம், கணினி , ஆகியவற்றினை திறமூலத்தை கொண்டு ஆராய உதவுகிறது. இருப்பினும், சமீப காலம் வரை, சந்தையில் உள்ள அனைத்து குறிமுறைவரிகளின் துனுக்குகளும் எவ்வாறு ஒன்றாக பொருந்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் பயனரின் விருப்பமாகும். அவ்வாறான நிலையில் ஒருநாள் எனக்கு CrowPi என்பது கிடைத்தது.

படம்1

CrowPi2 ஒரு அறிமுகம்
CrowPi2 ஆனவை வியக்கத்தக்க வகையில் புத்திசாலித்தனமானவைகளாகும். அவை மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் கொள்கின்றன, அவை தான் கேட்ட ஒலிகளைப் பிரதிபலிக்கின்றன,சிக்கலான புதிர்களைத் தீர்வு செய்கின்றன, மேலும் ஏதேனுமொரு பணியைச் செய்ய அதற்கான கருவிகளைப் பயன்படுத்தி கொள்கின்றன. இவை ஆய்வு, பரிசோதனை, கல்வி,போன்ற எல்லாவற்றிற்கும் மேலாக வேடிக்கைக்கான வாய்ப்புகளால் நிரம்பியிருப்பதால், CrowPi ஆனது அதன் வியாபார முத்திரையாகவும் பெயராகவும் பயன்படுகிறது.
தனுடையவடிவமைப்பு புத்திசாலித்தனமானது: இது ஒரு மடிக்கணினி போன்று தோற்றமளிக்கின்றது, ஆனால் இது அதை விட அதிகம் பயன்மிக்கது. புளூடூத் விசைப்பலைகையை அதன்பெட்டியிலிருந்து உயர்த்தும்போது, அது எல்சிடி திரை, 16 பொத்தான்கள், RFID உணர்வி, proximity உணர்வி, breadboard, ஒலிப்பான்கள், GPIO இணைப்புகள், ஒரு LED வரிசை போன்ற பலவற்றுடன் கூடிய மறைக்கப்பட்ட மின்னணு பட்டறையை வெளிப்படுத்துகிறது. இவையனைத்தும் நிரலாக்கம் செய்யக்கூடியது.
இதனுடைய பெயர் குறிப்பிடுவது போன்று, இந்ததொகுப்பு முற்றிலும் ராஸ்பெர்ரி பை மூலம் இயக்கப்படுகிறது, இதுராஸ்பெர்ரி பைஉடன் அதனுடைய பெட்டியின் அடிப்பகுதியில் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

படம்2

இயல்பாக, மின்னேற்பியுடன் இந்த தொகுப்பினை இயக்க வேண்டும், மேலும் இது பையை நேரடியாக இயக்குவதை விட பெட்டியில் செருகக்கூடிய சுவற்றின் மின்னேற்பியுடன் செயல்படுத்தி கொள்ளப்படுகிறது. இதற்காக வெளிப்புற மீச்சிறு-விரலி(Micro-USB) வாயிலில் செருகப்பட்ட மின்கலண் விநியோகத்தையும் பயன்படுத்தலாம். பெட்டியில் ஒரு இழுவைபகுதி கூட உள்ளது, எனவே மி்ன்கலணின் மின்சாரத்தினை சேமிக்கலாம். இதைச் செய்வதற்காக, மின்கலணின் இழுவைப்பகுதியில் இருந்து caseஎனும் மின்வாயிலின் விரலியில் கம்பி ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றது, எனவே இது ஒரு “சாதாரண” மடிக்க்ணினி என்ற மாயை இல்லை. இருப்பினும், அது போன்ற மிகவும் நாம் விரும்புகின்ற அழகிய சாதணமாகும்!
முதல் துவக்கம்
CrowPi2 ships ஆனது Raspbian உடன் System,எனப்பெயிரிடப்பட்ட ஒரு மீச்சிறு microSD அட்டையில் நிறுவுகைசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இது RetroPie உடன் பதிவேற்றப்பட்ட இரண்டாவது மீச்சிறு எஸ்டி அட்டையையும் உள்ளடக்கியது. ஒரு பொறுப்பான வயது வந்தவர் என்பதால், இயற்கையாகவே RetroPie யை முதலில் துவக்கிடுக.
RetroPie எப்பொழுதும் வேடிக்கையாக இருக்கும், மேலும் CrowPi2 ஆனது இரண்டு SNES-பாணி விளையாட்டு கட்டுப்பாட்டாளர்களுடன் நமக்கு உகந்த Retro விளையாட்டு அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது.
உண்மையான கணினியில் துவக்குவது, ஆச்சரியப்படும் செயலாகும், வேடிக்கையானது , விவாதிக்கக்கூடியது. உள்நுழைவு மேலாளர் என்பது மாதிரி குறிமுறைவரிகளின் செயல்திட்டங்கள், பைதான் , Arduino IDEs, Scratch, மாதிரி பைதான் விளையாட்டுகள், Minecraft போன்ற பலவற்றிற்கான விரைவான இணைப்புகளைக் கொண்ட தனிப்பயன் செயல்திட்ட மையமாகும். செயல்திட்ட மையத்திலிருந்து வெளியேறி மேசைக்கணினையப் பயன்படுத்தவும் தேர்வு செய்யலாம்.

CrowPi hub

படம்3.

மேசைக்கணினிப் பொதுவாக ராஸ்பெர்ரி பை அல்லது லினக்ஸைப் பயன்படுத்தும் எவருக்கும் நன்கு தெரிந்திருக்கும், ஆனால் இது அடிப்படையானது, அதைக் கற்றுக்கொள்வதும் எளிதானது. மேலே இடதுபுறத்தில் பயன்பாட்டு பட்டி, மேசைக்கணினியில் குறுக்குவழி உருவப்பொத்தான்கள்,வலைபின்னல் தேர்வு செய்வதற்கான அமைவுதட்டு, மேலே வலதுபுறத்தில் ஒளிஅளவு கட்டுப்பாடு போன்ற பல உள்ளன.

படம்4.

CrowPi இல் நிறைய உள்ளன, அதை எங்கு தொடங்குவது என்பதை தீர்மானிக்க கடினமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நிரலாக்கம், தொட்டுணரக்கூடிய மின்னணுவியல், லினக்ஸ் ,விளையாட்டு ஆகிய நான்கு பரந்த பிரிவுகள் இதில் உள்ளன.
இந்த பெட்டியில் ஒரு வழிகாட்டி கையேடும் உள்ளது, எனவே அதனா வாயிலாக நாம் எதையெதை எவ்வாறு இணைக்க வேண்டும் எனஎளிதாக அறிந்துகொள்ளலாம் (உதாரணமாக, விசைப்பலகை மின்கலணில் இயங்குகிறது, எனவே இதற்கு சில நேரங்களில் மின்னேற்றம் தேவைப்படுகிறது, மேலும் அதற்கும் இடம்சுட்டிக்கும் எப்போதும் USB dongle தேவைப்படும்). இது ஒரு விரைவான வாசிப்பு, CrowPi குழு ஆவணங்களை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

படம்5.

நிரலாக்கம்
குறிமுறைவரிகளை எழுதுவது எவ்வாறு என அறிய ஆர்வமாக இருந்தால், CrowPi இல் வெற்றிகரமான பல வழிகள் உள்ளன. அதற்காக மிகவும் திருப்திகரமான பாதையில் செல்ல வேண்டும்.
1. Scratch
Scratch என்பது ஒரு எளிய காட்சிக்கான குறிமுறைவரிகளின் பயன்பாடாகும், இது Lego எனும் குறிமுறைவரிகளின்துணுக்குகள் போன்ற ஒன்றாகப் பொருந்தக்கூடிய குறிமுறைவரிகளின் தொகுதிகளைப் பயன்படுத்தி விளையாட்டுகளையும் ஊடாடும் கதைகளையும் உருவாக்க நம்மை அனுமதிக்கிறது. குறிமுறைவரிகளைஎழுதும் முறையைத் தொடங்க இது எளிதான வழியாகும், மேலும் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுடைய சொந்த வடிவமைப்பின் விளையாட்டிற்கான உகந்த தருக்கங்களை பற்றி பல மணிநேரம் குழப்பமடைந்த நின்றுகொண்டிருப்பதை காணலாம். நிச்சயமாக, இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல! பெரியவர்களும் அதை மிகவும் வேடிக்கையாக அனுபவிக்க முடியும். எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? முயற்சி செய்ய Scratchஇற்கான பாடங்கள் செயல் திட்டங்களுடன் 99 பக்க கையேடு (காகிதத்தில் அச்சிடப்பட்டதுகூட) உள்ளது.
2. ஜாவா , Minecraft
Minecraft ஆனது திறமூலமன்று (இருப்பினும் பல திறமூல செயல்திட்டங்கள் இதை மீண்டும் செயல்படுத்துகின்றன), ஆனால் போதுமான ஆதாரங்கள் கிடைக்கின்றன, இது பெரும்பாலும் நிரலாக்கத்தைக் கற்பிக்கப் பயன்படுகிறது. Minecraft ஆனது ஜாவாவில் எழுதப்பட்டது, மேலும் CrowPi ஆனது Minecraft Pi பதிப்பு BlueJ ,Java IDE ஆகிய இரண்டையும் கொண்டு ஜாவாவைக் கற்றுக்கொள்வதை முன்னெப்போதையும் விட எளிதாகவும் வேடிக்கையாகவும் மாற்றுகிறது.
3. பைதான் , PyGame
இவ்விரண்டின் பொறியமைவில் எழுதப்பட்ட CrowPi இல் பல வேடிக்கையான விளையாட்டுகள் உள்ளன. இந்தவிளையாட்டுகளை விளையாடலாம் , விளையாட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய மூலக் குறிமுறைவரிகளைப் பார்வையிடலாம். CrowPi இல் Geany, Thonny,Muபதிப்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன, எனவே இப்போதே பைத்தானில் நிரலாக்கத்தைத் தொடங்கலாம். ஸ்க்ராட்சைப் போலவே, இ்நதபெட்டியிலும் பாடங்களுடன் சிறு வழிகாட்டி புத்தகம்ஒன்றும் உள்ளது, எனவே பைதான் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளலாம்.
4.மின்னணுவியல்
விசைப்பலகையின் கீழே மறைத்து வைக்கப்பட்டுள்ள தொட்டணரக்கூடிய மின்னணுவியல் பட்டறையானது அடிப்படையில் பை Hats இன் வரிசையாகும். முழு செய்தியும் ஆங்கிலம், சீனம் ஆகிய இரண்டு மொழியிலும் ஒரு fold-out வரைபடத்தில் வரைபடமாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அனைத்து கூறுகளையும் அடையாளம் காண முடியும். தொடங்குவதற்கு நிறைய மாதிரி செயல்திட்டங்கள் உள்ளன. அவைகளுள் ஒரு சிறிய பட்டியல்பின்வருமாறு:
CrowPi உடன் “hello”எனப் பேசும்போது LCD திரையில் Hello அச்சிடப்பெறும்
Intrusion அலாரமானதுproximity சென்சார் பயன்படுத்தி அலாரத்தை ஒலிக்கிறது.
CrowPi இல் நிகழ்வுகளைத் தூண்டுவதற்குதொலைநிலைகட்டுப்பாடு(ஆம், இதுவும் பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது) பயன்படுத்த தொலைநிலைகட்டுப்பாடு அனுமதிக்கிறது.
RGB Tetr நாம்LED திரைவெளியீட்டில் இதனை விளையாடிடலாம்.
Voice recognition இயற்கையான மொழி செயலாக்கத்தை நிரூபிக்கிறது.
Ultrasonic musicனது தொலைதூர உணரிகள் , ஒலிப்பான்களைப் பயன்படுத்தி ஒரு அடிப்படை Theraminஐ உருவாக்குகிறது.
இவ்வாறான செயல் திட்டங்கள் ஒரு ஆரம்பம் மட்டுமே, ஏனென்றால் நடப்பு பயன்பாட்டில் இருப்பதை கூடஉருவாக்க முடியும்.இதில் ஆராய்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன, நிச்சயமாக.தொகுப்பு கம்பிகள், மின்தடையங்கள், எல்இடிகள் போன்ற அனைத்து வகையான கூறுகளும் பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் மூலம் நம்முடைய ஓய்வு நேரத்தில் Pi இன் GPIO திறன்களைப் பற்றி அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
ஒரு சிக்கல்: மாதிரி செயல்திட்டங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். மாதிரிகாட்சிகளைக் கண்டறிவது எளிது (அவை CrowPi மையத்தின் திரையில் உள்ளன), ஆனால் மூலக் குறிமுறைவரிகளின் இருப்பிடம் உடனடியாகத் தெரியவில்லை. பெரும்பாலான மாதிரி செயல்திட்டப் பணிகள்/usr/share/code உள்ளதாக மாறிவிடும், அதை கோப்பு மேலாளர் அல்லது முனைமத்தின் மூலம் அடையலாம்.

CrowPi Peripherals

படம்6.

லினக்ஸ்
ராஸ்பெர்ரி பை ஆனது லினக்ஸை இயக்குகிறது. லினக்ஸைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், CrowPi அதற்கும் ஒரு சிறந்த தளமாகும். மேசைக்கணினி, முனமைம், கிட்டத்தட்ட எந்த லினக்ஸ் அல்லது திறமூல பயன்பாடுகளையும் கண்டறியலாம். பல ஆண்டுகளாக திறமூலத்தினைப் பற்றி படித்து, திறமூல OS இல் மூழ்கத் தயாராக இருந்தால், இது அதற்கான தளமாக இருக்கலாம் (மேலும், வெளிப்படையாக).
விளையாட்டு
இந்தபெட்டியில் உள்ள RetroPieSD அட்டை என்றால்,Retro இன் விளையாட்டு பணியகத்தில் மறுதொடக்கம் செய்து பழைய பள்ளி மாணவர்களின் arcade விளையாட்டுகளை எத்தனை வேண்டுமானாலும் விளையாடலாம். இது சரியாக ஒரு நீராவி தளம் அல்ல, ஆனால் இது ஒரு வேடிக்கையான , ஊக்கமளிக்கும் சிறிய விளையாட்டு தளமாகும். இது ஒன்றல்ல இரண்டு விளையாட்டு கட்டுப் பாட்டாளர்களுடன் வருவதால், இது கூட்டுறவுடன் செயல்படுவதற்கு ஏற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, CrowPi இல் விளையாட்டுகளை விளையாடுவது மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த விளையாட்டுகளையும் உருவாக்கலாம்.
Screwdriverசேர்க்கப்பட்டுள்ளது
இது ஒரு சிறிய, அடக்கமான ஸ்க்ரூடிரைவர். இங்கே உத்தரவாத சுவரொட்டிகளின் வெற்றிடமில்லை. CrowPi பற்றவைப்பு செய்ய வேண்டும், செய்திகளைப் பிரித்து எடுக்க வேண்டும், ஆராய வேண்டும் ,கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. இது ஒரு மடிக்கணினி அல்லது ஒரு பை அன்று; இது ஒரு கையடக்க, குறைந்த ஆற்றல் கொண்ட, மாறுபட்ட, திறமூல கற்றல் கருவித்தொகுப்பாகும்.

தொடரும்

Organic Map எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

Organic Map என்பது ஆண்ட்ராய்டு & iOS ஆகியவற்றில் இணைய இணைப்பில்லா்தபோதும் செயல்படும் திறன்மிக்க வரைபட பயன்பாடாகும், இது பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மலையேறுபவர்கள் , சைக்கிள் ஓட்டுபவர்கள் ஆகியோர்களுக்கு உதவக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது , OpenStreetMap தரவை அடிப்படையாகக் , MAPS.ME நிறுவனர்களால் உருவாக்கப்பட்டது.
மற்ற வரைபடங்களில் இல்லாத இடங்களுடன் விரிவான இணையமில்லாத வரைபடங்களை கொண்டது
சைக்கிள் ஓட்டுதலு்ககான பாதைகள், நடைபாதைகள் காண்பிக்கின்றது
விளிம்பு கோடுகள், உயரஅளவுகள் சுயவிவரங்கள், சிகரங்கள் , சரிவுகள் ஆகியவிவரங்களை காண்பிக்கின்றது
குரல் வழிகாட்டுதலுடன் திரும்பத் திரும்ப நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மகிழுந்தவழிசெலுத்தல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
வரைபடம், புக்மார்க்குகளில் விரைவான இணையஇணைப்பில்லா தேடல்ஆகிய வசதிகளை கொண்டுள்ளது கண்களைப் பாதுகாக்க இருண்ட பயன்முறையை கொண்டது.இதுதூய்மையானது , இயற்கையானது, தனியுரிமையை மதிக்கிறது, கைபேசிகளின் மின்கலணின் மின்சாரத்தினைச் சேமிக்கிறது, எதிர்பாராத கைபேசி தரவுகளுக்கான கட்டணங்கள் எதுவும் இதில்இல்லை
இந்த வரைபடம் பின்தொடர்பவர்கள் , பிற மோசமான செயல்களிலிருந்து பாதுகாக்கின்றது

கட்டணமற்றது: இதில் விளம்பரங்கள் எதுவும்இல்லை , கண்காணிப்பு எதுவும் இல்லை , தரவு சேகரிப்பு இல்லை , வீட்டிற்கு கைபேசி வாயிலான அழைப்பு செய்வது இல்லை , எரிச்சலூட்டும் பதிவு இல்லை , கட்டாய பயிற்சிகள் எதவும் இதிலில்லை , குப்பைகளான மின்னஞ்சல் எதுவும் இல்லை , push அறிவிப்புகள் இல்லை , crapware எதுவும்இல்லை , இதில், தனியுரிமை ஒரு அடிப்படை மனித உரிமையாக பராாமரிக்கப்படுகின்றது இது indie எனும் சமூக குழுவால் இயக்கப்படும் திறமூல செயல்திட்டமாகும்Big Tech’இன் துருவியறியும் கண்களிலிருந்து தனியுரிமையைப் பாதுகாக்கின்றது இதன் துனையுடன் நாம் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்கமுடியும் Exodus எனும் தனியுரிமை அறிக்கையின்படி பின்தொடர்பவர்கள் யாரும் இல்லையென கண்டறியப்பட்டன. அதிகப்படியான அனுமதிகள் கோரப்படவில்லை

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://organicmaps.app/ எனும்இணையதலமுகவரிக்கு செல்க.

Previous Older Entries