பிளேஸ் எனும் திறமூல மென்பொருள்

பிளேஸ் என்பது விண்டோவில் பல்வேறு பணிகளை செய்திடும் ஒரு திறமூல கருவிபயன்பாடாகும். ஒருமனிதன் கணினியில் தான் செய்திடவிரும்பும் பல்வேறு பணிகளையும் அதற்கென தனித்தனியான பயன்பாடுகளை செயல்படச்செய்து பயன்படுத்தி முடிப்பதற்குபதிலாக ஒரு கருவியின்பாட்டினைமட்டும் கொண்டு கணினியில் அனைத்துவகை பணிகளையும் செய்திடஇது உதவுகின்றது இது மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதைவிட மிகச்சிறப்பாகசெய்திட உதவும் ஒரு பொது அனுமதி பயன்பாடாகும் இது அனைத்துவகை போட்டியாளர்களின் சவால்களையும் வெற்றிகொண்டு மிகச்சிறப்பாக தற்போதுவளர்ந்து வருகின்றது. இதனை http://blaze-wins.sourceforge.net/index.php?page=downloadsஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தி கொள்ளமுடியும்

இதன்மூலம் கோப்பினுடைய பெயரின் ஒருசில எழுத்துகளை மட்டும் உள்ளீடு செய்து மிகவிரைவாக நாம் விரும்பிடும் கோப்பினை தேடிபெற்றிடமுடியும் அவ்வாறே கணினிக்குள் மட்டுமல்லாது இணையத்திலும் யாகூ, விக்கிபீடியா, யூட்யூப் போன்று நாம் விரும்பியதை தேடிபிடிக்கமுடியும்

இதில் இணைய முகவரியை உள்ளீடு செய்தால் குறிப்பிட்ட இணையபக்கத்தினை உடன் திரையில் திறந்து விடும். இதிலுள்ள SOLVE என்ற கட்டளைமூலம் பல்வேறு கணக்கீடுகளை செய்து அதன்விடையை காணமுடியும்

vikupficwa@yahoo.co.in “blog URL” “pl send your blog URL “என்றவாறு இந்த பயன்பாட்டிற்குள் தட்டச்சுசெய்தால் மின்னஞ்சல்முகவரி, பொருள்,மின்னஞ்சல் உள்ளடக்கவிவரம் ஆகியவை மிகச்சரியாக அதனதன் இடத்திற்கு சென்றமர்ந்து நம்மை send என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குமாறு கோரும் இதுடாஸ் கட்டளைகளை மிகஎளிதாக கையாளும் திறன்வாய்ந்த்தாகும்

திரும்பதிரும்ப செய்யவேண்டிய பணிகளை அதற்கென தனியான மேக்ரோஒன்றை பைதான் மொழிமூலம் உருவாக்கி தனியானதொரு மடிப்பகத்தில் நாமிடும் பெயரில் அமர்ந்துகொண்டு பின்னர் அதனை செயற்படுத்துவதன்மூலம்குறிப்பிட்ட பணிகளை பல்வேறு பொத்தான்களை தெரிவுசெய்துசொடுக்குவதற்குபதிலாக எளிதாக இது செயல்படுத்துகின்றது

இணையமுகவரி, அலுவலகமுகவரி ,நன்பர்களின் முகவரி போன்ற திரும்ப திரும்ப தட்டச்சு செய்யவேண்டிய உரைகளை நகலெடுத்து ஒட்டுவதற்குபதிலாக அதனை பதிவுசெய்துகொண்டு insert quick text என்பதன் மூலம் மிகவிரைவாக இந்த உரைகளை நாம்விரும்பும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துகொள்ளமுடியும் இதன் திரையில் word wrd wodஎன நாம் தவறாக தட்டச்சுசெய்தாலும் மிகச்சரியாக அதனை யூகித்து நாம்விரும்பும் செயலை செய்யும் திறன்வாய்ந்ததாகும்

இதனை பற்றிய மேலும் விவரம் தேவையெனில் http://blaze-wins.sourceforge.net/index.php?page=documentation என்ற முகவரி சென்றுஅறிந்து பயன்படுத்திகொள்க

 96.2.1

96.2.1

குளோன்ஸில்லா எனும் திறமூல பயன்பாடு

96.3.1

96.3.1

குளோன்ஸில்லா என்பது ட்ரு இமேஜ்,நார்ட்டன் கோஸ்ட் போன்றுகணினியின் நினைவகத்தினை பாகப்பிரிவினை செய்வதற்கும் நினைவகத்தின் கோப்புகளை நகல் செய்வதற்கும் உதவிடும் ஒரு பயன்பாடாகும்

மேலும் இது கணினியின் வளங்களை மிகச்சரியாக ஒதுக்கீடுசெய்திடவும் நினைவகத்தினை பிற்காப்புநகல் செய்திடவும் பயன்படுகின்றது தற்போது குளோன்ஸில்லா லிவ்,குளோன்ஸில்லா எஸ்ஈ (சேவையாளர் பதிப்பு) ஆகிய இருவகையாக கிடைக்கின்றன

இதில்குளோன்ஸில்லா லிவ்ஆனது தனியாக செயல்படும் தனியாள் கணினியில் பிற்காப்புநகல் செய்திடவும் அழிந்த கோப்புகளை மீட்டெடுப்பதற்கும் பொருத்தமானதாகும் குளோன்ஸில்லா எஸ்ஈ(சேவையாளர்பதிப்பு) ஆனது ஒரேநேரத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கணினிகளைகொண்டு பிணையமாக செயல்படுத்தபடும் நிலையில் கணினியின் வளங்களை மிகச்சரியாக ஒதுக்கீடுசெய்திடவும் நினைவகத்தினை பிற்காப்புநகல் செய்திடவும் கோப்புகளை மீட்டெடுப்பதற்கும் பயன்படுகின்றது இது ஒரேநேரத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கணினிகளில்5.6 ஜிபி நினைவக கோப்புகளை பத்தே நிமிடங்களில் நகல் செய்திடும் பணியை செய்து முடிக்கின்றது

இந்த குளோன்ஸில்லா எனும் பயன்பாடானது கணினியின் வன்தட்டில் பயன்படுத்தபட்ட நினைவகத்தின் கோப்புகளை மட்டும் பிற்காப்புநகல் செய்திடவும் மீட்டெடுப்பதற்கும் பயன்படுகின்றது இது ஒரு பொதுஅனுமதிபெற்ற (1) ext2, ext3, ext4, reiserfs, reiser4, xfs, jfs, btrfs of GNU/Linux, (2) FAT12, FAT16, FAT32, NTFS of MS Windows, (3) HFS+ of Mac OS, (4) UFS of FreeBSD, NetBSD, and OpenBSD, (5) minix of Minix, and (6) VMFS3 and VMFS5 of VMWare ESX. ESX, ஆகியவகை கோப்புகளையும் GNU/Linux, MS windows, Intel-based Mac OS, FreeBSD, NetBSD, OpenBSD, Minix and VMWare ஆகிய இயக்கமுறைமைகளையும் 32-bit (x86) or 64-bit (x86-64)ஆகிய கோப்புஅமைப்புகளையும் ஆதரிக்ககூடியதாகும்

இதுபல்வேறு படிமுறைகளையும் கட்டளைகள் வாய்ப்புகளின் பொத்தான்களின் வாயிலாக செயல்படுத்திகொள்கின்றது நகலெடுத்திடும் உருவககோப்பினை local disk, ssh server, samba server, or NFS server ஆகிய இடங்களில் சேமித்து வைத்துகொள்கின்றது வன்தட்டின் பாகபிரிப்பு பகுதிமட்டுமல்லாது வன்தட்டுமுழுவதையும் மீட்டெடுத்திடும் திறன் இதற்குஉண்டு இது இயங்குவதற்கு குறைந்தபட்சம் X86 or x86-64 செயலியும் 196 MB அளவு ரேமும், CD/DVD Drive, USB port, PXE, or hard drive ஆகிய கணினியின் தொடக்க சாதனங்களும் தேவையாகும் மேலும் விவரம் அறிந்துகொள்ள http://clonezilla.org/create_clonezilla_live_from_scratch.phpஎன்ற இணையதளத்திற்கு செல்க

கோடு பிளாக் எனும் திறமூல மென்பொருள்

நாம் கற்பனையில் கண்ட காட்சிகளைநூற்றுகணக்கான கட்டளைவரிகளை வாயிலாக நடப்பில் கொண்டுவர உதவும் ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழலை(Integrated development Environment) சுருக்கமாக ஐடிஇ(IDE) என அழைப்பார்கள் இந்த ஐடிஇ(IDE) ஆனது பொதுவாக ஒருமொழிமாற்றி(compiler),குறிமுறை தொகுப்பி(code editor),பிழைதிருத்தி(debugger) ஆகியமூன்றும் சேர்ந்ததாகும்

இதுஒரு சிறந்த அறிவார்ந்த வேலைக்காரனாக செயல்படுகின்றது அதாவது நாம் ஏதேனும் ஒரு எழுத்தினை தட்டச்சுசெய்தவுடன் அதனைதொடர்ந்து இந்த சொற்களைத்தான் நாம் தட்டச்சு செய்யவிருக்கின்றோம் என யூகித்து தன்னிடமுள்ள சொற்களஞ்சியத்திலிருந்து மிகுதிஎழுத்துகளை பூர்த்தி செய்து கொள்கின்றது இதன்மூலம் எழுத்துபிழைகளை தவிர்த்து அடுத்த பணியை நாம் தொய்வின்றி தொடர்ச்சியாக செய்யமுடியும்

முதன்முதல் இந்த ஐடிஇ(IDE) ஆனது 1975 –ல் பேஸிக்கில் உருவாக்கபட்டு 1980 வரை இருந்தது தற்போது இணையத்தில் ஏராளமான வகையில் ஐடிஇ(IDE) கிடைக்கின்றன அவற்றுள் நமக்கு பொருத்தமானதை செய்வதுதான் மிகச்சிரமான செயலாகும் இருந்தபோதிலும் இங்கு கோடு::பிளாக் என்ற இலவச திறமூல ஐடிஇ(IDE) யை பற்றிய விவரங்களை கூறவிருக்கின்றேன்

இது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய அனைத்துவகை இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டதாகும் தற்போது கோடு::பிளாக்12.11 என்ற பதிப்பு கிடைக்கின்றது இதுவிசுவல் சி++ , போர்லேண்ட் சி++ , இண்டெல் சி++ ஆகியவற்றின் மொழிமாற்றியை ஆதரிக்ககூடியதாகும் இதனை http://www.code::blocks.org/downloads/26#windows/என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம்

முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் பின்வரும் நான்குவகையான கட்டுகள் நமக்காக தயாராக இருக்கின்றன அவற்றுள் நமக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்க


1 code::blocks-12.11-setup.exe
ஏற்கனவே வேறுமொழிமாற்றியை(compiler) பயன்படுத்தி கொண்டிரு்ப்பவர்கள் குறிமுறை எழுதமட்டும் போதுமென எண்ணுபவர்கள் இந்த வகைஐடிஇ(IDE)யை பயன்படுத்திகொள்ளலாம்

code::blocks-12.11-setup_user.exe இதுமுந்தையதை போன்றதே ஆனால் கணினியில் நிருவாகியாக பயன்படுத்தாதவர்கள் இந்த வகைஐடிஇ(IDE)யை பயன்படுத்திகொள்ளலாம்

code::blocks-12.11-mingw-setup.exe குறிமுறை எழுதவிழையும் புதியவர்கள் முழுமையான மொழிமாற்றி(compiler)யுடன் சேர்ந்துள்ள இந்த வகைஐடிஇ(IDE)யை பயன்படுத்திகொள்ளலாம்

code::blocks-12.11-mingw-setup_user.exe இதுமுந்தையதை போன்றதே ஆனால் கணினியில் நிருவாகியாக பயன்படுத்தாதவர்கள்இந்த வகைஐடிஇ(IDE)யை பயன்படுத்திகொள்ளலாம்

முதலிரண்டு வகையையும் கணினியில் நிறுவியவுடன் தானாகவே கணினியிலுள்ள வேறு ஐடிஇ(IDE) யின்மொழிமாற்றி(compiler)யை தேடிகண்டுபிடித்து அதனுடன் இணைந்த இது செயல்படதயாராகிவிடுகின்றது

புதியதாகவொரு செயல்திட்டத்தை உருவாக்குவதாக கொள்வோம் முதலில் இதனுடைய வரவேற்புதிரையில் உள்ள create new project என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது File=>New=>Projects=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக

உடன்விரியும் ஏராளமான திட்டங்களில் console application என்ற பயன்பாட்டினை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் வழிகாட்டியானது நம்மை சி அல்லதுசி++ ஆகியஇரண்டில் எந்தவகையில் குறிமுறையை எழுதவிருக்கின்றோம், அந்த கோப்பின் பெயர் எந்தஇடத்தில் சேமிக்கவிருக்கின்றோம் என்பனபோன்ற விவரங்களை கோரும் திரையில் நம்முடையவிருப்பப்படி செயல்பட்டபின்னர் management என்ற திரைதோன்றிடும் அதில்

#include<stdio.h>

int main()

{ Printf (“ வருக! வணக்கம் !“);

return 0;

}

என்றவாறு நம்முடைய முதல் குறிமுறையை தவறில்லாமல் உள்ளீடு செய்து விசைப்பலகையிலுள்ள F9என்ற செயலிவிசையை அழுத்துக.

உடன் இந்த குறிமுறையானது மொழிமாற்றம் செய்யபட்டு பிழையேதும் இல்லையெனில் இந்த கட்டளையானது செயற்படுத்தபடும் இலக்கண பிழையேதும் இருந்தால் அவைகளைமட்டும் தனியான வண்ணத்தில் மற்ற ஐடிஇ போன்று மேம்படுத்தி காண்பிக்கும்

இந்த பிழையை திருத்தம் செய்திட menu=>project=>Build options=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும் ஜிடிபி என்ற இடைமுகத்திரைக்கு சென்று திருத்தம் செய்திடுக.

Search =>goto next changed line => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தி மஞ்சள் வண்ண பட்டைக்குள்உள்ள திருத்தம் செய்யவேண்டியவைகளையும் search =>goto=> previous changed line=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தி பச்சைவண்ண பட்டைக்குள் உள்ள ஏற்கனவே மாற்றம் செய்யபட்ட பிழைகளின் வரிகளுக்கும் செல்லமுடியும்

குறிமுறை எழுதியவரின் பெயர் முகவரி போன்ற விவரங்கள் ஒவ்வொரு செயல்திட்டத்திலும் இயல்புநிலையில் வருவதற்காக settings=>Editor=>default code=> என்ற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தி உருவாக்கி சேமித்து வைத்துகொள்க. Auto versioningஎன்ற கூடுதல் கட்டளையின் வாயிலாக செயல்திட்டத்தின் பதிப்பு எண்ணை குறிப்பிடமுடியும்

96.4.1

96.4.1

எளியவர்களும் இணையதளத்தினை உருவாக்க உதவிடும் PaaS எனும் சேவையாளர்

தளமேஒருசேவை (Platform as a service)என்ற கருத்தின் அடிப்படையில் மேககணினியின் சேவையை மாதிரியாக கொண்ட பயன்பாட்டு கட்டமைப்பை வழங்குகின்ற சேவையாளர்கள்பலர் தற்போது உருவாக்கபட்டு தயார்நிலையில் உள்ளனர்

பயன்பாட்டு சேவை, இணையமும் தரவுதளத்திற்குமான சேவை, செய்தியும் ஒருங்கினைந்த சேவை போன்றவைகளை நாம் பயன்படுத்திய அளவிற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என இவை தற்போது கிடைக்கின்றன

வன்பொருளையும் மென்பொருளையும் அதிகசெலவிட்டு ஒருகட்டமைவை உருவாக்கிய பின்னர்தான் நம்மால் இணையதளத்தினை உருவாக்கமுடியும் என்ற நிலை தற்போது உருவாகாமல் இருந்திட இவை உதவுகின்றன

பொதுவாக ஒரு தளத்தினை உருவாக்குவது மிகசிக்கலானதும் அதிக காலவிரையம் ஏற்படுத்திடும் செயலாக உள்ளதால் நம்மில் பெரும்பாலான எளியவர்கள் அதனை கண்டு மலைத்து அப்படியே நின்றுவிடுகி்ன்றனர்

அவ்வாறானவர்களுக்கு உதவுவதே இந்த PaaSஆகும் அவர்கள் தம்முடைய குறைந்த அளவு கட்டமைவை கொண்டு கூடுதல் சேவையாளர் தேவைபற்றியோ மென்பொருளை பயன்படுத்துவதற்கான அனுமதி பெறவேண்டு என்றோ கவலைபடாமல் தங்களிடம் உள்ள குறிமுறைகளை மட்டும் மேலேற்றுதல் செய்து தாம்விரும்பும் பணிகளை இதன்மூலம் முடித்துகொண்டு அதற்கேற்ற கட்டணத்தை மட்டும் வழங்கினால் போதுமானதாகும்

நம்மிடம் போதுமான எண்ணிக்கையில் சேவையாளர்கள் இல்லையே என வருத்தபடாமல் நாம் வழக்கமான நம்முடைய பணியை செய்துகொண்டிருந்தால் PaaS ஆனது தன்னுடைய பணிச்சுமைக்கேற்ப கூடுதலான சேவையாளர்களை சேர்த்துகொள்ளும் அல்லது விலக்கிகொண்டு நமக்கான சேவையை தொடர்ச்சியாக வழங்குகின்றன

இந்த PaaS ஆனது அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மேம்படுத்திகொள்கின்றன மேலும் ஜாவா,.நெட்,பைதான் போன்ற எந்தவகை மொழியுடனும் இவை ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதாகஉள்ளன

அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட சேவை வழங்குனரிமட்டுமே தொடர்ந்து நம்முடைய பணியை முடிக்கவேண்டுமென்ற கட்டுபாடு எதுவுமின்றி எந்தநேரத்திலும் எந்தநிலையிலும் எந்தவொரு PaaS சேவையாளருக்கும் நாம் எளிதில் மாறிகொள்ளமுடியும்

தற்போது இந்த PaaS சேவையை window Azure, Elastic Beansalk,Google App Engine,Cloudify ,Openshiftஆகியோர்கள் வழங்குகின்றனர்

96.5.1

96.5.1

WAMP எனும் நிரல்தொடர் மேம்படுத்திடும் பயன்பாட்டு தளம்

Linux,Apache,MySQL,PHP ஆகியவை சேர்ந்து ஒருங்கிணைந்து உருவாக்கபட்டLAMP என்பது மிகபிரபலமான திறமூல நிரல்தொடர் மேம்படுத்திடும் பயன்பாடாக விளங்குகின்றது இது லினக்ஸ் இயக்க முறைமையில் செயல்படுகின்றது

அவ்வாறே விண்டோ இயக்கமுறைமையில் செயல்படுக்கூடிய window ,Apache,MySQL,PHP ஆகியவை சேர்ந்து ஒருங்கிணைந்து உருவாக்கபட்டWAMP என்பதும் நிரல்தொடர் மேம்படுத்திடும் பயன்பாடாகும் இதுவும் வியாபார அனுமதிதேவைப்படாத ஒரு திறமூல நிரல்தொடர் மேம்படுத்திடும் பயன்பாடாகும்

இந்த WAMP சேவையாளர் தளமானது ஒருநிரல்தொடரை உண்மையில் நடைமுறைபடுத்தி பயன்படுத்திடும் முன்பு அதனை பரிசோதனை செய்து வெள்ளோட்டம் விட்டு அதன் திறன் எவ்வாறு உள்ளது என பார்ப்பதற்கு பயன்படுகின்றது

இதில் PHPMyAdmin என்பது தரவுதளபொறியாகவும்GUI என்பது இடைமுகமாகவும் கொண்டு LAMP போன்றே இந்த WAMP உம் கட்டமைக்கபட்டுள்ளது www.wamserver.com என்றதளத்திலிருந்து இதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளமுடியும்

நம்முடைய கணினியானது32 பிட் அல்லது 64 பிட் ஆகியவற்றில் எந்தவகையை சார்ந்தது என நிறுவிடுமுன் தெரிவுசெய்துகொள்ளவேண்டும் அவ்வாறு பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவியபின் சரியாக உள்ளதாவென இதனை சரிபார்த்திட முதலில் இது wampஎன்ற மடிப்பகத்திற்குள் உள்ளதா என சரிபார்த்திடுக.

அதனை தொடர்ந்து இந்தwampஎன்ற மடிப்பகத்திற்குள் alias, apps, bin, lang,logs,scripts,tmpஆகிய துனை மடிப்பகம் உள்ளதாவென்றும் சரிபார்த்திடுக மிகமுக்கியமாகநாம் உருவாக்கிடும் செயல்திட்டங்களை இயக்கி பார்த்திடவும் சேமித்திடவும் செய்வதற்கானwww என்ற மடிப்பகம் இதில் உள்ளதாவென சரிபார்த்துகொள்க.

பொதுவாக முதன்முதல் இதனை நிறுவியபின் செயற்படுத்தியவுடன்offline ஆக இது செயல்படத்துவங்கும்ஆயினும் onlineஆக செயல்படாது அதன்பின் startwampserverஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது WAMP serverஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதலின் வாயிலாக நாம் onlineஇற்கு மாறிகொள்ளமுடியும். இதில் நம்மால் உருவாக்கபடும் குறிமுறைகளை phpmyadminஎன்ற இடைமுகத்தின் வாயிலாக பிற்காப்பு செய்து கொள்க இதில் உருவாக்கபடும் கோப்பினை Csv,sql,pdf,zipஆகிய எந்த வகை வடிவமைப்பிலும் ஏற்றுமதி செய்துகொள்ளமுடியும்

LAMP போன்று விண்டோவிற்கான திறமூல குறிமுறை மேம்படுத்தும் பயன்பாட்டு சேவையாளராக இந்த WAMP விளங்குகின்றது இதனை நீங்களும் உங்களுடைய தேவைக்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்

 

96.6.1

96.6.1

அக்சஸ்2007-22- ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாட்டை பயன்படுத்துதல்

  அக்சஸ் 2007 ஆனது இதில் உள்ள படிவங்களிலும் அறிக்கைகளிலும் படங்கள் .வரைபடங்கள்.ஒலி  ஒளிப்படங்கள் போன்றவைகளை தரவுதள பயன்பாடுகளில் சேர்த்து மேம்படுத்தற்காக திறன்மிகுந்த பல்வேறுகருவிகளை வழங்குகிறது. இந்த செயலிற்காக ஆக்டிவ் எக்ஸ் என்ற கட்டுப்பாடு முன்பு அக்சஸில் பயன்பட்டது.இப்போது அக்சஸ் 2007 இலும் இதன் பயன் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து இருந்துவருகின்றது.

பொதுவாக வேர்டின் ஆவணங்கள்.எக்செல்லின் விரிதாள் .வியாபார வரைபடம்.ஒலி , ஒளி படகோப்பகள் போன்றவைகளை உள்ளிணைத்து வழங்குவதற்கான திறனை அக்சஸ் அளிக்கின்றது.அதுமட்டுமல்லாது அறிக்கைகளிலும் படிவங்களிலும்  OLE எனசுருக்கமாக அழைக்கப்படும் பொருட்களை இணைத்து உட்பொதியும் (object  link embedded) தன்மையை அக்சஸ்2007 ஆனது வழங்குகின்றது.இவ்வாறு இவைகளை  அக்சஸில் உட்பொதிந்து பயன்படுத்துவதால் இவைகளை சரிசெய்து நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திடும் வசதி இதில் ஏற்படுகின்றது

அக்சஸின் அட்டவணையில் ஒரு வரைபடம் உட்பொதிந்து சேர்ப்பதாக கொள்வோம் அதற்காக பின்வரும் படிமுறையை பின்பற்றுக.

வடிவமைப்பு காட்சி(Design view) யில் ஒருவரைபடம் வரைவதற்காக Frm product Example start என்ற படிவத்தினை திறந்துகொள்க.பின்னர்  Design எனும் தாவிப்பட்டியின் controls என்ற குழுவின் கீழ் உள்ள  insert chart    என்ற கருவியை தெரிவு செய்துகொண்டு இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அப்படியே பிடித்து இழுத்துவந்து படிவத்தில் ஒரு சதுரம் அல்லது செவ்வக உருவத்தை வரைக உடன் படம் 1 இல் உள்ளவாறு வரைபட வழிகாட்டி (chart wizard) ஒன்று திரையில் தோன்றும்.

 1

படம்-1

2.அதில் இந்த படிவத்தில் வரைய விரும்பும் வரைபடத்திற்கான அட்டவணை அல்லது வினாவை தெரிவுசெய்வதற்கான பட்டியலாக விரியம். அவற்றில் qry chart example என்பதை தெரிவு செய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3. பின்னர் தோன்றிடும் வழிகாட்டியின்(wizard) திரையில்   தேவையான புலங்களை தெரிவுசெய்து கொண்டு >> என்ற குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது நாம்விரும்பும் வரிசைகிரமத்தில் sale date, productId, price என்றவாறு இந்த புலங்களை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை (படம்-2)தெரிவுசெய்து சொடுக்குக.

2

படம்-2

4.பின்னர் எந்தவகையான வரைபடம் வரையவேண்டும் என்பதற்காக நாம் விரும்பும் வரைபடத்தின் வகையை column  chart என்றவாறு (படம் -3 ) தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 3

படம்-3

5. உடன் sale date என்ற புலம் X அச்சிலும் price என்ற புலம் Y அச்சிலும் (படம்-4) அமர்ந்து கொண்டிருக்கும் தேவையானால் இந்த அச்சுகளை பிடித்து இழுத்துசொன்று தேவையானவாறு மாற்றியமைத்து கொள்ளலாம்.

4

படம்-4

6.இந்த முன்காட்சி வரைபடத்தில் (preview chart) இடதுபுறத்தில் sumofprice என்ற புலத்தில் இடம்சுட்டியை  வைத்து சுட்டியின்  பெத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் summarize என்ற உரையாடல் பெட்டி படம் -5 இல் உள்ளவாறு தோன்றிடும்.அவற்றில் தேவையானதை தெரிவுசெய்து  கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

5

படம்-5

இவ்வாறே sale date by month புலத்தில் இடம்சுட்டியை  வைத்து சுட்டியின்   வலதுபுற பொத்தானை இருமுறை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Group  என்ற உரையாடல் பெட்டி படம்-6 இல் உள்ளவாறு தோன்றிடும்.அவற்றில் தேவையானதை Day என்றவாறு தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

6

படம்-6

பின்னர் next  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஇறுதியாக இந்த வரைபடத்திற்கு qrychartsjexample  என்றவாறு பெயரைஉள்ளீடு செய்துகொண்டு Do you want the chart to display a legend என்றகேள்விக்கு No, Don’t display a legend என்றவாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு இறுதியாக (படம்-7) finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7

படம்-7

உடன் படம் -8 இல் உள்ளவாறு பட்டக வரைபடம் இந்த அக்சஸின் படிவத்தில் உள்பொதியப்பட்டுவிடும்.

8

படம்-8

அக்சஸின் அறிக்கையையும்  படிவத்தில் ஆய்ந்தறி அட்டவணையையும் உருவாக்கி உள்ளிணைத்தல்

1.ஏதெனும் ஒரு அட்டவணையை  வடிவமைப்பு காட்சி திரையில் (design view ) திறந்து கொள்க.இதற்காக மேலே design என்ற தாவியின் பட்டியை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியம் design என்ற தாவியின் பட்டியில் views என்ற வினாவில் உள்ள viewஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-9இல் உள்ளவாறு விரியம் பட்டியில் pivot table view  என்பதை தெரிவுசெய்க உடன் pivot table field list என்ற சிறு உரையாடல்  பெட்டி தோன்றிடும் .அதில் Description என்ற புலத்தை தெரிவுசெய்து கொண்டு Drop Column field here என்ற பகுதியில் கொண்டுவந்து சேர்த்திடுக மேலும் Total payments என்ற புலத்தைதெரிவுசெய்துகொண்டு  Drop totals or Detail fields here என்ற பகுதியில் கொண்டுவந்து சேர்த்திடுக . அவ்வாறே Company என்ற புலத்தை தெரிவுசெய்துகொண்டு Drop filter field here  என்ற பகுதியில் கொண்டுவந்து சேர்த்திடுக. மேலும் Sale date by month என்ற புலத்தை தெரிவுசெய்து Drop Column field here என்ற பகுதியில் கொண்டுவந்து சேர்த்திடுக( (படம்-9)

9.

படம்-9

2.நெடுவரிசையிலும் கிடைவரிசையிலும் உள்ள +,- ஆகிய குறியீடுகளை தெரிவுசெய்து கொள்க.இறுதியாக ஆய்ந்தறி அட்டவணையானது படம்-9 இல் உள்ளவாறு இருக்கும்

அதன்பின்னர் design என்ற தாவியின் பட்டியில் views என்ற குழுவில் உள்ள view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-10இல் உள்ளளவாறு விரியும் பட்டியில் pivot chart view  என்பதை தெரிவுசெய்து கொள்க உடன் ஏற்கனவே உள்ள ஆய்ந்தறி அட்டவணைக்கு  ஏற்றவாறு pivot chart ஆனது தோன்றிடும் அதனோடு pivot table field list என்ற சிறு உரையாடல்  பெட்டியும் தோன்றிடும் .அதில் தேவையான புலத்தை இழுத்து சொன்று விடுவதன்மூலம் மாற்றியமைத்து கொள்ளலாம்

10

படம்-10

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-96

நாம் இதுவரையிலும் அதாவது ஓப்பன் ஆஃபிஸ் பற்றிய கடந்த 95 தொடர்களிலும்  இந்த ஓப்பன் ஆஃபிஸ் என்ற பயன்பாட்டிலுள்ள நம்முடைய பல்வேறுபணிகளுக்காகஉதவிடும் பயன்பாடுகளை  மட்டுமே பார்த்து வந்தோம் ஆயினும் விபிஏ போன்று ஒரு நிரல்தொடரை அல்லது கட்டளைகளின் குறிமுறைகளைகூட இந்த ஓப்பன் ஆஃபிஸின் OpenOffice.org Basic என்பதன் மூலம் உருவாக்கிடமுடியும் என்பதை இனிவரும் தொடர்களில் நாம் பார்க்கவிருக்கின்றோம்

விசுவல் பேஸிக் அல்லது விசுவல் பேஸிக் அப்ளிகேசன் ஆகியவற்றை பற்றி அறிமுகம் ஆனவர்கள் மிகஎளிதாக இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை உடனடியாக அறிந்து கொள்ளமுடியும்  புதியவர்கள் மிகவிரைவாக இதனை அறிந்து கொண்டு தங்களின் நிரல்தொடர் எழுதும் திறனை வளர்த்துகொண்டு சிறந்த நிரல்தொடர்வல்லுநராக தங்களை மேம்படுத்திகொள்ளமுடியும்

 

இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது 1. மாறி, செயலி,கண்ணி  ஆகியவற்றை  வரையறுத்திட  The language of OpenOffice.org Basic, 2. எண்களையும் சரங்களையும் தொகுத்திடும் செயலிகளை கொண்ட runtime library, 3.பயன்பாடுகளை மாறுதல் செய்ய, அச்சிட ,சேமித்திட இடைமுகம் செய்திட OpenOffice.org API (Application Programming Interface), 4.கட்டுப்பாடுகளையும் நிகழ்வுகளையும் கையாண்டிட Dialog Editor , ஆகிய நான்கு வகை உட்கட்டமைப்பை கொண்டதாகும்

பொதுவாக விபிஏ ஆனது இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் முதலிரண்டுடன் மட்டும் இடைமுகம் செய்ய அனுமதிக்கின்றது

இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை பயன்படுத்தவிழைபவர்கள் விபிஏபோன்று அதற்கஎன தனியானதொரு பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து அல்லது பணம் கொடுத்து வாங்கி நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்திடவேண்டும் என கட்டுபாடு எதுவுமில்லாமல்   இதிலேயே மேக்ரோவை உருவாக்கி பரிசோதித்து பார்ப்பதற்கு உதவும்  (integrated development environment (IDE)), மேக்ரோவை இயக்கிபார்த்திட மொழிமாற்றி( interpreter),மற்ற ஆவணங்களுடன் இடைமுகம் செய்தல்( interfaces) ஆகிய பணிகளை சுலபமாக செய்திடமுடியும் 

இது ஜாவா,சி++ போன்று சிக்கலானதன்று மிகஎளிதானது என்ற தகவலை மனதில் கொள்க

சிமொழிபேன்று GoTo and GoSub. என்பனபோன்ற தொடக்கநிலை கட்டபாட்டு கட்டமைப்புகள் எதுவும் இதில் இல்லை

பொருள் நோக்கு நிரல்தொடரின் (object-oriented programming) பயனை நாம் இதில் பெறமுடியும்

மேலும் ஜாவா, சி,சி++ போன்ற மொழிகளில் எழுதப்படும் கட்டளை வரிகளை முதலிலமொழிமாற்றம் செய்தபின் அந்த திரைக்கு வெளியே வந்து இதனை தனியாக இயக்கி சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடவேண்டும் ஆனால் இந்த  ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் அவ்வாறான கட்டுபாடுகள் எதுவுமில்லாமல் கட்டளைவரிகளை மொழிமாற்றம் செய்தவுடன் தானாகவே இதே சாளரத்தில் அவை செயல்படுத்தபட்டால் என்ன விளைவுஏற்படும் என தானாகவே இயங்கிடசெய்து சரிபார்த்திடமுடியும்  இது முதலில் குறிமுறைகளில் ஏதேனும் இலக்கண பிழை உள்ளதாவென சரிபார்த்தபின்னர் வரிவரியாக மொழிமாற்றம் செய்து இயக்கி சரிபார்க்கின்றது

இதில் ஒவ்வொரு வரியும் தனித்தனியானதொரு கட்டளையாக அதாவாது கணித வெளிப்பாடுகள் ,கண்ணிகள் செயலிகள், ஆகிய அனைத்தும் செயல்படுத்தபடுகின்றது

LongExpression = (Expression1 * Expression2) + _(Expression3 * Expression4) + _

(Expression5 * Expression6) + _(Expression7 * Expression8)

ஒரேவரிக்குள் ஒருகட்டளையானது முடிந்திட வேண்டும் என்பதே இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கிற்கும் ஜாவா, சி,சி++ போன்ற மொழிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும்  ஒருவரியில் குறிப்பிட்ட கட்டளை முடியவில்லையெனில் ஒரு சிறு அடிக்கோடுடன் அதேவரியின் கட்டளை அடுத்தவரியிலும் தொடரும் என்பதே இதன் தனித்தன்மையாகும்

இந்த அடிக்கோட்டினை தெடர்ந்து காலியான இடம் அல்லது தாவி,குறிப்புகள் இருக்ககூடாது அவ்வாறு இருந்தால் குறிப்பிட்ட வரியானது பிழையானது என காண்பித்துவிடும்

அந்த ஒரேவரியில் உள்ள பல கணித வெளிப்பாடுகளை முக்காற்புள்ளிகொண்டு பிரித்திடலாம்

 

a = 1 : a = a + 1 : a = a + 1

மேலும் இந்த கட்டளைவரிகளை பற்றிய விளக்ககுறிப்புகளை ஒற்றை மேற்கோள்குறியுடன் குறிப்பிடவேண்டும்

Dim A ‘ This is a comment for variable A

அல்லது Rem என்ற சொற்களுக்கு இடையில் குறிப்பிடவேண்டும்

Rem This comment is introduce by the keyword Rem

இந்த விளக்ககுறிப்புகள் ஒன்றிற்குமேற்பட்ட வரிகளுடன் இருந்தால்  ஒவ்வொரு வரியும் ஒற்றை மேற்கோள்குறியுடன் குறிப்பிடவேண்டும்

Dim B ‘ This comment for variable B is relatively long

‘ and stretches over several lines.

 

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான அடையாளக்குறியீடுகள் உள்ளன

பெரிய எழுத்து சிறியஎழுத்து என்ற வேறுபாடுகள் எதுவும் இதில்  இல்லை அதிகபட்சம் 255 எழுத்துகள் இருக்கலாம் சிறப்பு குறியீடுகள் கொண்டதன்று  இலத்தீன் எண்கள் அடிக்கோடுகள் மட்டுமே  இந்த அடையாளக்குறியீட்டில் இருக்கும்  மாதிரி அடையாளக்குறிகள் பின்வருமாறு

Surname       ‘ Correct

Surname5      ‘ Correct (number 5 is not the first digit)

First Name     ‘ Incorrect (spaces are not permitted)

DejaVu        ‘ Incorrect (letters such as e, a are not permitted)

5Surnames     ‘ Incorrect (the first character must not be a number)

First,Name    ‘ Incorrect (commas and full stops are not permitted)

அடைப்புகுறிக்குள் காலிஇடமும் சிறப்புகுறியீடுகளும் அனுமதிக்கபடும்

Dim [First Name] As String ‘Space accepted in square brackets

Dim [DejaVu] As Integer ‘Special characters in square brackets

 

மாறியை வெளிப்படையாக ஒரு கட்டளை தொடருக்குள் அறிவிப்பது சிறந்தது

Dim MyVar1, MyVar2 As Integer

என்றவாறு பலமாறிகளை ஒரேவரிக்குள் அறிவிப்பு செய்யலாம்

மின்னஞ்சலிற்கான குறிப்புகள்

2-1பொதுவாக நாம் மற்றவர்களுக்கு அனுப்பிடவிரும்பும் கோப்புகளானது அளவில் மிகப்பெரிய கோப்புகளாக இருந்ததெனில் ஜிமெயிலில் இணைத்து அனுப்புவது மிககடினமான பணியாக தற்போது உள்ளது அதனை தவிர்க்க நாம் ஒருவருக்கு அனுப்பிட விரும்பும் மின்னஞ்சலை தயார்செய்திடும் compose எனும் நிலையில் இணைப்பு செய்யவிரும்பும் கோப்பினை இடம்சுட்டியால் பிடித்து இழுத்துசென்றுattache file என்றபகுதியில் விட்டிடுக உடன் அந்தகோப்பு தானாகவே நாம் விரும்பும் மின்னஞ்சலுடன் இணைந்துவிடும்    குறிப்பு: இந்த செயலிற்காக Google Chrome அல்லது Mozilla Firefox 3.6 ஆகியவை நம்முடைய இணைய உலாவியாக இருக்கவேண்டும்

95.2.1

2.1

2-2 ஒன்றிற்கும் மேற்பட்ட கோப்பினை மின்னஞ்சலில் இணைத்திட  அவற்றை ஒவ்வொன்றாக இணைப்பதைவிட ஒட்டுமொத்தமாக தொடர்ச்சியான வரிசையில் கோப்புகள் இருந்தால் Shift விசையை அழுத்தி பிடித்துகொண்டு தேவையான கோப்புகள் முழுவதையும் தெரிவுசெய்துகொள்க வரிசை தொடர்ச்சியற்றதெனில்  Ctrl  விசையை அழுத்தி பிடித்துகொண்டு தேவையான கோப்புகள் முழுவதையும் தெரிவுசெய்துகொள்க

2-3 மின்னஞ்சலில் இணைப்பாக வந்த கோப்பினை திறந்து பார்ப்பதற்கான பயன்பாடு நம்மிடம் இல்லையெனில்  மின்னஞ்சலின் கீழ்பகுதியில் இருக்கும் View என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் போதும் மின்னஞ்சலின் இணைப்பு கோப்பினை நேரடியாக இணையத்தின்மூலம் நம்முடைய கணினித்திரையில்திறந்து காண்பிக்கும்

2-4 has:attachment என்பதன்மூலம் நம்முடைய மின்னஞ்சலுடன் வந்த அனைத்து இணைப்புகளையும் has:attachment pdf என்றவாறு குறிப்பிட்டு அந்தவகையான இணைப்பு அல்லது குறிப்பிட்ட நபரிடமிருந்துவந்த இணைப்பு கோப்புகள் என வடிகட்டி பார்த்திடமுடியும்

95.2.2

2.2

நமக்கு போதுமான வருமானத்தினை திறமூல மென்பொருட்களின் மூலம் ஈட்டிடமுடியும்

தற்போது நடைமுறையில் உரிமம் பெற்ற மென்பொருட்களின் வியாபார வருமானத்தினைவிட திறமூலமென்பொருட்களின் வியாபாரவருமானம் ஆனது அதி உயர்வாக இருக்கின்றது  ஆனால் இந்த செய்தியை நம்மில் பெரும்பாலானவர்கள் தெரியாமலும் அறியாலும் இருந்து வருகின்றோம்

எவ்வாறுஎனில் இந்த திறமூலமென்பொருட்களின் வியாபாரம் எனில் பொதுவாக இதற்கான குறிமுறைகளை எழுதுவதுமட்டுமேஎன  நாம் அனைவரும் தவறாக எண்ணியும் இருந்தும் வருகின்றோம்

ஆயினும் இந்த திறமூல பயன்பாட்டு குறிமுறைகளை நடைமுறையில் செயற்படுத்திடும்போது உருவாகும் பிழைகளை சரிசெய்வது, இந்த பயன்பாட்டினை செயற்படுத்துவதற்கான உதவிகுறிப்புகளுக்கான ஆவணங்களை தயார்செய்வது,  இதனை செயற்படுத்திடும் போது எழும் குறிப்பிட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வது என ஏராளமான பகுதிகள் இந்த துறையில் நமக்கு வருவாய் ஈட்டிட தாயராக இருக்கின்றன

அவற்றுள் நம்மால் முடிந்த பகுதியை மட்டும் தெரிவுசெய்து பணிசெய்தால் போதும் நமக்கு போதுமான வருமானத்தினைஇந்த திறமூல மென்பொருட்களின் மூலம் ஈட்டிடமுடியும்

95.3.1

3.1

நேரடியாக இணையதள பக்கத்தினை நம்முடைய பவர்பாயின்ட்டின் படவில்லையில் காட்சியாக இணைத்து காண்பித்திட

நேரடியாக இணையதள பக்கத்தினை நம்முடைய பவர்பாயின்ட்டின்  படவில்லையில் காட்சியாக  இணைத்து காண்பித்திட விரும்பும்வோம் இந்நிலையில் அவ்வாறான இணையதள பக்க காட்சியை எவ்வாறு ஒரு படவில்லையில் இணைப்பது என இப்போது காண்போம்

95.4.1

4.1

இதற்காக முதலில் the LiveWeb add-in  இனுடைய2007/2010 பதிப்பை பதிவிறக்கம் செய்து File=>Options=> Add-Ins=>(Manage:)PowerPoint Add-ins => Go =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக பின்னர் தோன்றிடும்Add-Ins  என்ற உரையாடல் பெட்டியில் Add New என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் Add New PowerPoint Add-ins என்ற உரையாடல் பெட்டியில்  LiveWep.ppam என்பதை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் மேக்ரோ பற்றிய எச்சரிக்கை செய்திபெட்டியில் Enable Macros என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் இந்த  LiveWeb add-in  நம்முடைய கணினியில் நிறுவபட்டுவிடும்

பிறகு எம்எஸ் பவர்பாயின்ட் பயன்பாட்டினை செயற்படுத்தியவுடன் விரியும் திரையில்Insert என்ற தாவியின் திரையை தோன்றசெய்து அதிலLiveWebஎன்ற பகுதியில் உள்ள WebPage என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்  LiveWebஎன்ற  விரைவு வழிகாட்டி திரையில் நமக்கு உதவுவதற்காக தயார்நிலையில் தோன்றிடும்

முதல் திரையில் nextஎன்ற பொத்தானை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் திரையில்  நாம் இணைக்கவிரும்பும் இணையபக்கத்தின் முகவரியை https://vikupficwa.wordpress.com/  என்றவாறு உள்ளீடு செய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் yes,refresh web page automatically(real -tine update)என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் படவில்லையில் இந்த இணைய பக்கத்தின் இடஅமைவு அளவு போன்றவற்றை தெரிவுசெய்துகொண்டு  nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

பணிமுடிவுறும் இறுதி திரையில்   Finishஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் வெற்றிகரமாக இந்த இணையபக்கம் நம்முடைய படவில்லையில் இணைக்கபட்டதாக நமக்கு செய்திபெட்டிமூலம் அறிவிப்பு செய்திடும் .

Previous Older Entries