விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் யூஎஸ்பி வாயிலை பூட்டிவைத்தல்

நாம் இல்லாதபோது நம்முடைய விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் யூஎஸ்பி வாயில் வழியாக வேறுநபர்யாராவது உள்நுழைவுசெய்து நமமுடைய கணினியின் முக்கியமான ஆவணங்களை நகலெடுத்திடாமல் தடுத்திடுவதற்காக இந்த யூஎஸ்பி வாயிலையே நம்மையறியாமல் யாரும் உள்நுழைவு செய்திடாமல் இருக்குமாறு பூட்டிவைத்திடலாம் இதற்காகபின்வரும்படிமுறைகளை பின்பற்றிடுக முதலில் விண்டோ இயக்கமுறைமையின் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Start எனும் துவக்கபட்டியலை விரியச்செய்திடுக பின்னர் அவ்வாறு விரியும் துவக்கபட்டியலில் Run எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேடிடும் பெட்டியில் Runஎன தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை (Enter) அழுத்துக அதன்பின்னர் விரியும் திரையில regedit என தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் Registry Editor என்பது திரையில் விரியும் அதில் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\usbstor எனும்பகுதிக்கு செல்க பின்னர் இதனுடைய பணிப்பகுதியில் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க பின்னர் விரியும் திரையின் Value Data எனும் பெட்டியில் 4 என தட்டச்சுசெய்து கொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் இந்த Registry Editor எனும் திரையில் Closeஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து மூடிவெளியேறுக பின்னர் கணினியின் திரையை refresh செய்திடுக
இவ்வாறு முடக்கம் செய்த கணினியின் யூஎஸ்பி வாயிலை பழையவாறு அனுகுவதற்கு இயலுமை செய்வதற்காக இதே Registry Editor எனும் திரையில் Value Data எனும் பெட்டியில் 3 என தட்டச்சுசெய்து கொண்டுமிகுதி படிமுறையை அப்படியே பின்பற்றிடுக

YouTube எனும் இணையதளத்தில் நாம் விரும்பும் கானொளியைஎவ்வாறு மீண்டும் இயங்கச்செய்து repeat காண்பது

இந்த YouTube எனும் இணையதளத்தில் நமக்கு பிடித்தமான கானொளி காட்சிகளை பார்த்து முடிந்தவுடன் மீண்டும் அதனை இயங்கசெய்துகாணவிழைவோம் இவ்வாறான நிலையில் நாம் மீண்டும் காணவிழையும் கானொளி காட்சியின் இணையமுகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்திடுக இதன்பின்னர் இந்த இணையமுகவரியில் youtubeஎன்பதற்கு முன்பு https://www என்றவாறு உள்ள அனைத்து எழுத்துகளையும் நீக்கம் செய்திடுக பின்னர் மிகுதியாகஉள்ள இணையமுகவரியில்உள்ள இந்த youtubeஎன்ற சொற்களுக்கு பின்புறம் repeat என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை (Enter) அழுத்துக இது பின்வருமாறு இருக்கும்

youtuberepeat.com/watch/?v=dD40VXFkusw

இதன்பின்னர் நம்முடைய இணையஉலாவியின் முகவரிபட்டையில்பின்வருமாறு முகவரி தோன்றிடும் http://www.listenonrepeat.com/watch/?v=dD40VXFkusw
அதனை தொடர்ந்து நாம் இந்த இணையபக்கத்தை மூடிடும்வரை மீண்டும்மீண்டும் இதே கானொளி காட்சி திரையில் ஓடிக்கொண்டேயிருக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க மேலும் எத்தனைமுறை திரும்ப திரும்ப இந்த கானொளிகாட்சி காணபிக்கப்பட்டது என்ற எண்ணிக்கையையும் திரையில் காண்பிக்கும்

YouTube எனும் இணையதளத்தில் நாம் விரும்பும் கானொளியை எவ்வாறு நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்வது

பொதுவாகஇந்த YouTube எனும் இணையதளத்தில் செயல்படும் கானொளி காட்சியானது இந்த இணையபக்கத்தில் மட்டும் இயங்கிடுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆயினும் நாம் மிகஅதிகமாகவிரும்பும் கானொளி படங்களை நம்முடைய கணினியில் பதிவிறக்கம செய்து பொறுமையாக ஓய்வாக இருக்கும்போது பாரத்துகொள்ளலாமே என விழைவோம் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
முதலில் இவ்வாறு விரும்பும் YouTube எனும் இணையதளத்தில் செயல்படும் கானொளி காட்சியின்திரைக்கு செல்க பின்னர் நம்முடைய விசைப்பலகையில் Ctrl+L ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
அதன்பின்னர் இந்த காட்சியின் இணையமுகவரிபட்டையில் உள்ள இணைய முகவரியை தெரிவுசெய்து கொண்டு Ctrl+C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி நகலெடுத்து கொள்க அதன்பின்னர் பின்வருமாறு உள்ள உரைபெட்டியில் நகலெடுத்த கானொளி காட்சியின் இணையமுகவரியை Ctrl+V ஆகிய விசைகளை சேர்தது அழுத்தி ஒட்டிடுக

பிறகு Download Video என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த உரைபெட்டியில் நாம் நகலெடுத்துவந்து ஒட்டிய இணைய முகவரியானது கண்ணிற்குபுலப்படவில்லை அல்லது சொடுக்குதல் செய்திடுமாறு இல்லையெனில் இந்தYouTube address (URL) இணையமுகவரிக்கு முன்பகுதியில் savefrom.netஎன தட்டச்சு செய்து கொள்க அனைத்தும் சரியாக செய்திருந்தோம் எனில் Downloadஎனும் பொத்தான் பச்சைவண்ணமாக தோன்றிடும் கானொளி காட்சி படமானது video எனும் வடிவமைப்பில்Low or Mediumதரத்தில் பதிவிறக்கம் செய்திடுவதற்கு தயாராக இருக்கும் இந்த Downloadஎனும் பொத்தானிற்கு வலதுபுறம் இருக்கும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக அதில் LV, MP43GP, WebMபோன்று பல்வேறு வடிவமைப்புகளில் காண்பிக்கும் நாம் விரும்பும் வடிவமைப்பினை மட்டும் தெரிவுசெய்துகொள்க மேலும் moreஎனும் கீழறங்கு பட்டியலை விரியச்செய்து இந்த கானொளிபடத்திற்கு பொருத்தமான தலைப்பினை தெரிவுசெய்து கொண்டு Downloadஎனும் பொத்தானை சொடுக்குக அவ்வளவுதான் நம்முடைய கணினியில் நாம் விரும்பிய கானொளி படம் நாம் விரும்பிய வடிவமைப்பில் YouTube எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் ஆகிவிடும்

தேவையில்லாத இணையதளபக்கங்களை காண்பிக்காமல் எவ்வாறுமுடக்கம் செய்வது

இதற்காகவெனதனியாக பயன்பாடுகள் எதனையும் நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்திடவேண்டாம் பின்வரும் படிமுறைகளை மட்டும் பின்பற்றிடுக எனபரிந்துரைக்கப்படுகின்றது
முதலில் விண்டோ இயக்கமுறைமையின் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Start எனும் துவக்கபட்டியலை விரியச்செய்திடுக
பின்னர் அவ்வாறு விரியும் துவக்கபட்டியலில் Run எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேடிடும் பெட்டியில் Runஎன தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை (Enter) அழுத்துக அல்லது விண்டோ உருவப்படமுள்ளWinKey + R ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது %windir%\system32\drivers\etc\hostsஎன்பதை நகலெடுத்துஒ்டடுதல்செய்து செயல்படுத்திடுக அல்லது C:\Windows\System32\Drivers\Etc and find the file “hosts”என்றவாறு கட்டளைகளை அழுத்தி இந்த பகுதிக்கு செல்க
பிறகு நோட்பேடினை திறந்து கொள்க இதில் “127.0.0.1localhost”என்றவாறு இருப்பதை காணலாம் இதுஇணைய பக்கத்தை தடுப்பதற்கானதாகும்
பிறகு நாம் காணவிரும்பாத இணையமுகவரியை 127.0.0.1localhost ,127.0.0.2 http://www.youtube.com , 127.0.0.3 http://www.allgovtjobs.in ,என்றவாறு சேர்த்து கொள்க இங்கு 127.0.0.x என்பதில் கடைசியில் உள்ள x என்பது நாம் புதியதாக சேர்த்திடும்போது கூடுதலாக ஆகி மாறிகொணடே இருப்பதை உறுதிசெய்து கொள்க
இதன்பின்னர்இந்த நோட்பேடின் கோப்பினை சேமித்து வெளியேறுக இணையஉலாவி பயன்பாட்டினை நிறுத்தம் செய்து மீண்டும் செயல்படச்செய்தால் நாம் முடக்கிய இணையதளத்தினை நம்முடைய கணினியில் காணஇயலாது

ஒன்றிற்கு மேற்பட்ட கானொளி காட்சி பட கோப்புகளை (video files) எவ்வாறு ஒரேகோப்பாக சேர்த்து உருவாக்குவது

MPEG, DAT, MPG, mp4, AVI போன்ற வடிவமைப்புகளில் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புகளை ஒரே கானொளி படக்கோப்பாக பின்வரும்படிமுறைகளை பின்பற்றி இதற்கெனதனியாக பயன்பாடுகள் எதனுடை ய துனையும்இல்லாமல் மிகஎளிதாக உருவாக்கலாம்
முதலில் விண்டோ இயக்கமுறைமையின் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Start எனும் துவக்கபட்டியலை விரியச்செய்திடுக
பின்னர் அவ்வாறு விரியும் துவக்கபட்டியலில் Run எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விண்டோ உருவப்படமுள்ளWinKey + R ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
உடன்விரியும் திரையில் cmd என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர்விரியும் கட்டளைவரிகளின் திரையில் நாம் ஒருங்கிணைக்க விரும்பும் கோப்பக இடஅமைவை C: , D: , E என்றவாறு ஒன்றினை தெரிவுசெய்து கொள்க
பின்னர்®Copy /b a + b + c என்றவாறு கட்டளைகளை தட்டுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக இங்கு a , b, cஎன்பது நம்முடைய கானொளி படங்களின் பெயர்களாகும் அல்லது copy/b “C:\File.mp4” + “C:\File1.mp4″என்றவாறுகட்டளைகளை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
உடன் files copied என்ற கட்டளைகளுடன் நாம் செயல்படுத்திய கட்டளையும் சேர்ந்து செயல்படுத்தபடும் இந்த பணிமுடியும் வரை காத்திருக்கவும் இந்த பணிமுடிவுற்றதுஎனில் exit என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி இந்த திரையிலிருந்து வெளியேறிடுக தற்போது நாம் விரும்பியவாறு கானொளி படங்கள் ஒரே கோப்பாக உருவாக்கப்பட்டிருப்பதை காணலாம்

இணைய இணைப்பில்லாமல் Facebook , Twitter ஆகிய வற்றை எவ்வாறு அனுகுவது

தற்போது உலகில் முகநூல் (facebook),கீச்சொலி(twitter) ஆகிய சமூக வலைதளங்-களானவை மிகபிரபலமாக விளங்குகின்றன நம்மில் பெரும்பாலானோர் இவ்விரண்டில் கணக்கு துவங்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு பரவலாக நாம் அனைவரும் நம்முடைய கணினி அல்லது கைபேசி வாயிலாக இவைகளை பயன்படுத்திவருகின்றோம் அவ்வாறான பிரபலமான இவைகளை
இணைய இணைப்பு இருந்தால் மட்டும் அனுகமுடியும் என்ற தவறானகண்ணோட்டத்தை இன்றே விட்டொழியுங்கள் இவைகளை இணைய இணைப்பில்லாமல் கூட பயன்படுத்தி கொள்ளமுடியும்
கீச்சொலி(twitter)இதற்காகமுதலில் http://www.twitter.com எனும் இதனுடைய இணையபக்கத்தில் நாம் ஏற்கனவே நம்மால் உருவாக்கப்பட்டுள்ள நம்முடைய கணக்கிற்கு நம்முடைய கைபேசியின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர்இந்ததிரையின் மேலே தலைப்பில் வலதுபுறமூலையில் பற்சக்கரம் போன்றுள்ள Settingsஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர்விரியும் Settings எனும் பட்டியலில் Mobile என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நம்முடைய கைபேசி எண்ணை உள்ளீடு செய்து இந்த சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரை தெரிவுசெய்து கொண்டு Activate Phone எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . உடன் இந்தசெயல் செயல்படுத்தபட்டு 40404 என்ற குறுஞ்செய்தி நம்முடைய உள்வருகை பெட்டிக்கு வந்துசேரும்

முகநூல் (facebook) இதற்காகமுதலில் http://www.Facebook.com எனும் இதனுடைய இணையபக்கத்தில் ஏற்கனவே நம்மால உருவாக்கப்பட்டுள்ள நம்முடைய கணக்கிற்கு நம்முடைய கைபேசியின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர் இந்த திரையில் Account Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர்விரியும் Account Settings எனும் பட்டியலில் Mobile என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Mobile Settings திரையில் Activate textmessaging என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் Activation Facebook Text (Step 1 to 2) எனும் திரையில் நம்முடைய நாடு கைபேசி செயல்படுத்திடும் நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டு Nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அடுத்து விரியும் திரையில் confirmation Code என்பது தோன்றிடும் அதனை குறித்து கொள்க பிறகு நம்முடைய கைபேசியில் உரைவாயிலான குறுஞ்செய்தி பெட்டியை திறந்து அதில் Fஎன தட்டச்சு செய்து கைபேசிநிறுவனத்தாரன் குறியீட்டு எண்ணை உள்ளீடுசெய்து செய்தியை அனுப்பிடுக

நம்முடைய விண்டோ இயக்கமுறைையில் செயல்படும் பயன்பாட்டினை முழுத்திரையிலும் காணலாம்

பொதுவாக விண்டோ இயக்கமுறையில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளும் முழுத்திரைக்குபதிலாக இயல்புநிலையில் வழக்கமான குறைந்த அளவு திரையாக மட்டுமே இருக்கும் நாம்பயன்படுத்திடும் பயன்பாடு முழுத்திரையில் தோன்றிட வேண்டுமெனில் இந்த திரையினுடைய மேல்பகுதியின்வலதுபுறமூலையில் நடுவில் உள்ளபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் முழுத்திரையாக மாறியமையும் நாம் விரும்பும் பயன்பாட்டினை செயல்படுத்திடும் போது ஒவ்வொரு முறையும் இவ்வாறு செயல்படுத்திடும் செயலை நம்மில் பலர் விரும்பமாட்டார்கள் ஆயினும் இந்த செயலை செயல்படுத்திடாமலேயே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பயன்பாடு முழுத்திரையாக மாறியமைந்திட வேண்டும் என விரும்பிடுவோம் இதற்காக முதலில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியில் Properties என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Properties எனும் திரையில் Shortcut எனும் தாவிபொத்தானின் திரைக்கு செல்க அதில் Runஎனும் பகுதியை தேடிபிடித்திடுக அதன்வலதுபுறபகுதியில் உள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக அதனபின்னர் அந்த பட்டியில் Maximized.எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு apply,எனும் பொத்தானையும் பின்னர் ok. எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

யூஎஸ்பி வாயில் வழியாக கணினியின் இயக்கத்தை எவ்வாறு துவங்குவது

பொதுவாக அல்லது வழக்கமாக நம்மில் பலர் குறுவட்டு அல்லது நெகிழ்வட்டு (CD அல்லது DVD )வாயிலாக பெரும்பாலானவர்கள் கணினியின் இயக்கத்தை துவங்கி நாம் விரும்பும் இயக்கமுறைமையை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடுவார்கள் ஒரு சில கணினிகளில் இந்த குறுவட்டு அல்லது நெகிழ்வட்டு (CD அல்லது DVD ) வாயில் இல்லாத நிலையில் யூஎஸ்பி வாயில் வழியாக கணினியின் இயக்கத்தை துவங்கி இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடலாம் எனமுனையும்போது பிழைச்செய்தியை காண்பித்து நமக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்திடும்
இவ்வாறான பிரச்சினை எதுவும் ஏற்படாமல் எளிதாக நிறுவகை செய்வதற்காக முதலில் Windows 7 USB/DVD download tool எனும் கருவியைநம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க
பிறகு இதனை செயல்படசெய்திடுக அதன்பின்னர் விண்டோ இயக்கமுறைமையின் ISO கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்திடுக
அதன்பின்னர் நாம் நிறுவுகை செய்திட விரும்பும் இயக்க முறைமையை எதன்வாயிலாக நிறுவுகை செய்யவிரும்புகின்றோம் என்பதற்கு bootable pendrive. என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க
பின்னர் குறைந்தபட்சம் 4ஜிபி நினைவகத்திறன் கொண்ட pendrive ஐ தெரிவுசெய்துகொண்டு Begin Copying.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
உடன்இந்த கருவியானது bootable Windows 7USB என்பதை Windows 7 ISO எனும் கோப்பிலிருந்து உருவாக்கிடும்
இந்த பணி முடிவடைந்தவுடன் Bootable USB Device created successfully என்ற செய்தி திரையில் தோன்றிடும்
அதனை தொடர்ந்து நம்முடைய கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து இந்த யூஎஸ்பி வாயில் வழியாக நம்முடைய கணினியை இயக்கதுவங்கலாம் தற்போது பிழைச்செய்தி எதவும் திரையில் தோன்றி நம்மை எரிச்சலுற செய்யாது

ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு இணையான கட்டற்ற மி்ன்னஞ்சல்பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்க

நம்மில் பெரும்பாலானோர் இந்த ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டினை பயன்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த செய்தியேயாகும் ஆயினும் இதற்கு மாற்றாக பல்வேறு கட்டற்றஅல்லது திறமூலமின்னஞ்சல் பயன்பாடுகள் கூட ஏராளமான அளவில் உள்ளன அவைகளைகொண்டு சிறிய நிறுவனங்கள் முதல் பெரியநிறுவனங்கள் வரை தமக்கென்ற தனியாக மின்னஞ்சல் சேவையாளரை உருவாக்கி பராமரித்து பயன்பெறமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க.
1.Roundcube என்பது கட்டற்ற GPLv3 எனும் அனுமதியுடனான செந்தர LAMP (Linux, Apache, MySQL, and PHP) கட்டமைவுடன் வெளியிடபட்டதொரு பயன்பாடாகும் இது 70 இற்குமேற்பட்ட மொழிகளின் ஆதரவு , எழுத்து பிழைகளை தானாகவே சரிசெய்தல், மொழிமாற்றம்செய்தல், மின்னஞ்சலிற்கான மாதிரி பலகம் , .மிகக்கட்டுபாடான முகவரிகள் ஒருங்கிணைப்பு, ஏராளமான சாலைவழி படவசதி, பயனாளர் இடைமுகப்பு என்பன போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொணடது
2 Zimbra என்பது webmail வாடிக்கையாளரையும் email சேவையாளரையும் தன்னகத்தே கொண்டது கட்டற்ற GPLv2 எனும் அனுமதியுடன் கிடைக்கின்றது நிறுவனங்கள் தங்களுக்கென்ற தனியானமின்னஞ்சல் சேவையை இந்த Zimbra எனும் கட்டற்றமின்னஞ்சல் பயன்பாட்டினை கொண்டு மின்னஞ்சல் சேவையை எளிதாக பராமரித்திடலாம்
3 SquirrelMailஎன்பது 1999 இல் GPL. எனும் அனுமதியுடன் வெளியிடப்பட்டது இது PHP எனும் கணினி மொழியால் உருவாக்கப்பட்டது இதுவாடிக்கையாளர் பகுதியையும் சேவையாளர்பகுதியையும் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது
4 Rainloop என்பது சமீபத்திய புதிய அல்லது இளைய தலைமுறை மக்களுக்காக வெளியிடபட்டுள்ளது இது Facebook, Twitter, Google, Dropbox ஆகியவற்றின் கணக்குகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மிக்கது இது PHP எனும் கணினி மொழியால் உருவாக்கப்பட்டு AGPLஅனுமதியுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது

இணையத்தில் உலாவந்த வரலாற்றினை அறிந்து கொள்வதற்கான பயன்பாட்டினை பைத்தான் எனும் கணினிமொழியில் நாமே உருவாக்கிடலாம்

மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணையஉலாவியில் நாம்கூடுதல் இணைப்பாக பைத்தான் எனும் கணினி மொழி யில் இதற்கான பயன்பாட்டினை உருவாக்கிடலாம் பொதுவாக மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணையஉலாவியில் தன்னுடைய அனைத்து செயலிற்காகவம் எஸ்கியூலைட் எனும் தரவுதளத்தின பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது அதனால் அதனையே நம்முடைய துனைக்கு வைத்து கொள்ளலாம் இதனை சென்றடைவதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு
data_path = os.path.expanduser(‘~’)+”/.mozilla/firefox/7xov879d.default”
files = os.listdir(data_path)
history_db = os.path.join(data_path, ‘places.sqlite’)
பின்னர் பைத்தானில் இந்த எஸ்கியூஎல்லின் பொருத்தமானசெயலை செய்வதற்காக sqlite3 library ஐ பைத்தானில் பதிவிறக்கம்செய்து செயற்படுத்திடவேண்டும் இதற்காக பின்வரும்குறிமுறைவரிகளை பயன்படுத்தி கொள்க
c = sqlite3.connect(history_db)
cursor = c.cursor()
select_statement = “select moz_places.url, moz_places.visit_count from moz_places;”
cursor.execute(select_statement)
results = cursor.fetchall()
இதில் முதலிரண்டு குறிமுறை வரிகளும் தரவுதளத்துடன் இணைப்பதற்கு ஆனதாகும் அடுத்த இருகுறிமுறை வரிகளும் நாம் தெரிவுசெய்திடும் செயலை செயல்படுத்திடு-வதற்குஆனதாகும் கடைசி வரியானது கிடைக்கும் விளைவை சேமித்து வைப்பதற்கானதாகும்
இதற்கடுத்ததாக நாம் எத்தனை இணையதளத்தினை அனுகினோம் என urlparse libraryஐ துனையுடன் கணக்கிடும் செயலை செயல்படுத்திடவேண்டும் இதற்காக பின்குறிமுறைவரிகள் பயன்படுகின்றன
def parse(url):
try:
parse_url = urlparse(url)
domain = parse_url.netloc
return domain
except IndexError:
print(“URL format error”)
இதன்பின்னர் நாம்உலாவந்தஇணையமுகவரியை பெறுவதற்கு netloc எனும் செயலியும் எத்தனைமுறை உலாவந்தோம் என கணக்கிடுவதற்கு கன்னியும் மேலும் இந்த தகவலை அருஞ்சொற்பொருள் களஞ்சியமாக (dictionary) சேமித்து வைத்திடவேண்டும் இதற்காக பின்குறிமுறைவரிகள் பயன்படுகின்றன
sites_count = {}
for url, count in results:
url = parse(url)
if url in sites_count:
sites_count[url] += 1
else:
sites_count[url] = 1
இவ்வாறு அருஞ்சொற்பொருள் களஞ்சியமாக (dictionary) சேமித்த தகவல்களை OrderedDict எனும் செயலியைகொண்டுவரிசைபடுத்தி அடுக்குவதற்காக பின்வரும்குறிமுறை வரிகள் பயன்படுத்தி கொள்க
sites_count_sorted = OrderedDict(sorted(sites_count.items(), key=operator.itemgetter(1), reverse=True)[:13])
இவ்வாறு வரிசைபடுத்திய தகவல்களை கொண்டு வரைபடமாகவரைந்து முடிவினை காணலாம்இதற்கான குறிமுறைவரிகள்பின்வருமாறு
def analyse(results):
plt.bar(range(len(results)), results.values(), align=’edge’)
plt.xticks(rotation=20)
plt.xticks(range(len(results)), results.keys())
plt.show()
இந்த அனைத்து செயல்களின்முழுமையானகுறிமுறைவரிகள் பின்வருமாறு

import os
import sqlite3
import operator
from collectionsimport OrderedDict
import matplotlib.pyplot as plt
from urlparseimport urlparse

def parse(url):
try:
parse_url= urlparse(url)
domain= parse_url.netloc
return domain
except IndexError:
print(“URL format error”)

def analyse(results):

plt.bar(range(len(results)), results.values(), align=’edge’)
plt.xticks(rotation=20)
plt.xticks(range(len(results)), results.keys())

plt.show()

data_path= os.path.expanduser(‘~’)+”/.mozilla/firefox/7xov879d.default”
files= os.listdir(data_path)
history_db= os.path.join(data_path,’places.sqlite’)

c= sqlite3.connect(history_db)
cursor= c.cursor()
select_statement= “select moz_places.url, moz_places.visit_count from moz_places;”
cursor.execute(select_statement)

results= cursor.fetchall()
sites_count= {}

for url, countin results:
url= parse(url)

if urlin sites_count:
sites_count[url]+= 1
else:
sites_count[url]= 1

sites_count_sorted= OrderedDict(sorted(sites_count.items(), key=operator.itemgetter(1), reverse=True)[:10])

analyse(sites_count_sorted)

Previous Older Entries