அசைவூட்டு படங்களாக அமைத்திட உதவும் Cliplets எனும் வசதி

c.

மைக்ரோ சாப்ட் எனும் நிறுவனத்தின் Cliplets எனும் வசதியானது திரைபடங்கள், ஒலிஒளிபடங்கள் ஆகியவற்றிஸ் உள்ளவாறு இயங்கிடும் காட்சியை அதாவது அசைவூட்டுபடங்களைபோன்று இயற்கையான காட்சியமைப்புகளை உருவபடங்களிலும் படங்களிலும் கொண்டுவருவதற்கு பயன்படுகின்றது சாதாரண படத்தைவிட இது பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது படத்தில் உள்ளவாறு தண்ணீர் குழாயில் தண்னீர் கொட்டுவதுபோன்றும் மனிதர்கள் நடந்து செல்வது போன்றும் காட்சிகளை சாதாரண படங்களில் அமைப்பதற்கு இந்த Cliplets எனும் வசதி பயன்படுகின்றது மேலும் இதனை பயன்படுத்திடும் போது எழும் எந்தவொரு சந்தேகங்களையும் http://social.microsoft.com/Forums/en-US/cliplets  என்ற தளத்திற்கு சென்று நிவர்த்தி செய்துகொள்க

லினக்ஸ் விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளுக்கிடையேயான கோப்பு பரிமாற்ற சிக்கல்

தற்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திடும் கணினியானது லினக்ஸும் விண்டோவும் சேர்ந்தே இயங்கும் வகையில் இருக்கின்றன. அதனால் பயனாளர்கள் கோப்புகளையும் தரவுகளையும் இரண்டு இயக்கமுறைமைகளுக்குள் பரிமாறி கொள்ள வேண்டிய தேவை கட்டாயமாகின்றது. லினக்ஸ் இயக்க முறைமையில் இயல்புநிலையில் விண்டோவின் கோப்பு அமைப்பான NTFS, FAT ஆகியவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அமைக்கபட்டுள்ளது ஆனால் விண்டோ இயக்கமுறைமையானது அவ்வாறே லின்க்ஸின் இயக்கமுறைமை கோப்பு அமைப்பை பயன்படுத்தி கொள்ளாது என்பதுதான் கோப்பு பரிமாற்ற செயலில் எழும் சிக்கலாகும். அதனால் மூன்றாம் நபரால் உருவாக்கபடும் பயனஅபாட்டு மென்பொருளை கொண்டு இந்த சிக்கல் தீர்வு செய்யபடுகின்றது. விண்டோ இயக்கமுறைமைகளில் FAT(FAT 12, FAT 16 ,FAT32) ,NTFSஎன்பன போன்றவகை கோப்பு அமைவு இருக்கின்றன அதிலும் புதிய சமீபத்திய விண்டோ இயக்க முறைமைகள் NTFSஎன்ற கோப்பமைவில் மட்டுமே உள்ளன. லினக்ஸ் இயக்கமுறைமைகளில் Ex2,Ext3,Ext4,XFS,JFS ஆகிய கோப்பு அமைப்புகள் செயல்படுத்தபடுகின்றன. பெரும்பாலான லினக்ஸ் இயக்கமுறைமைகள் இந்த Ext3 கோப்பு அமைவு மட்டுமே பயன்படுத்திகொள்ளபடுகின்றன. விண்டோவில் வன்தட்டின் நினைவகமானது பயனாளர் வழங்கும் பெயர்களுக்கு ஏற்ப உதாரணமாக Local disc(C ) , Local disc(D) , Local disc(E ) என்பன போன்ற எழுத்துகளுடன் இயக்ககங்களின் பெயராக ஏன் குறுவட்டு நெகிழ்வட்டு யூஎஸ்பி இயக்ககங்களுக்குகூட Removable disc DVD(F) Removable Disc cd (G) USB (H) என்றவாறு ஏதோவொரு பெயருடன் மட்டுமே பயன்படுத்தபடுகின்றன ஆனால் லினக்ஸில் அவ்வாறு காலி நினைவகத்திற்கு இயக்ககங்களின் பெயர் எதுவும் குறிப்பிடபடுவதில்லை. ஆயினும் அனைத்துகோப்புகளும் ( / )என்ற வாறு மூல இயக்ககங்களாக அதாவது /dev/sda , /dev/cdrom என்றவாறு மட்டுமே குறிப்பிடபடுகின்றன. விண்டோ இயக்கமுறைமைகளில் sk.txt ,SK.txt என்றவாறு சிறிய அல்லது பெரிய எழுத்துகளில் கோப்புகளின் பெயரை எப்படி குறிப்பிட்டாலும் ஒரே கோப்பகத்தில் அப்பெயரில் உள்ள ஒரே கோப்பினை மட்டுமே அவை குறிப்பிடுவதாக அமையும் ஆனால் லினக்ஸில் ஒரே எழுத்தில் அமையும் sk.txt என்றவாறு சிறிய எழுத்தாக இருந்தால் ஒருகோப்பினையும் SK.txt என்றவாறு பெரியஎழுத்தாக இருந்தால் மற்றொரு கோப்பாகவும் அடையாளம் காண்பிக்கும். விண்டோவில் இயங்கிடும் பயன்பாடுகளானது அப்பயன்பாட்டிற்கான கோப்பினை அப்பயன்பாட்டில் இயங்குவதற்கு திறந்த பின் அந்த கோப்பினை நீக்கம் செய்திடவோ பெயர்மாற்றம் செய்திடவோ முயன்றால் திரையில் பிழையான செயல் எனும் எச்சரிக்கை செய்தியை காண்பித்து அந்த செயலை செயல்படுத்தாது ஆனால் லினக்ஸில் அவ்வாறான தடுப்பு எதுவும் இல்லை உதாரணமாக இசைகோப்பினை விண்டோ இயக்கமுறைமையின் விஎல்சி பயன்பாட்டின் மூலம் செயல்படுத்தி கேட்டபின்னர் அந்த கோப்பினை பெயர்மாறுதல் செய்திடவோ நீக்கம் செய்திடவோ முயன்றால் பிழையான செயல் என எச்சரிக்கை செய்தியை மட்டும் காண்பித்து அந்த செயலை செயற்படுத்தாது ஆனால் விஎல்சி பயன்பாட்டின் இயக்கத்தை மூடிவிட்டு அதன்பின் அந்த இசைகோப்பில் நாம் விரும்பிய பெயர் மாறுதல் செய்தல் கோப்பினையே நீக்கம் செய்தல் ஆகிய செயலை செய்திடமுடியும் லினக்ஸில்அவ்வாறாக அவ்வாறு பயன்பாடு செயலில் இருக்கும்போது பயன்படுத்தபட்ட கோப்பில் நம்முடைய செயலை செய்துகொள்ளலாம். இவ்வாறு ஏராளமான வேறுபாடுகள் இவ்விரு இயக்கமுறைகளில் பயன்படுத்தபடும் கோப்புகளில் இருப்பதால் விண்டோ இயக்கமுறைமையிலிருந்து லினக்ஸ் இயக்கமுறைமை கோப்பினை அனுகி கையாளுவதற்கு படிக்கமட்டும் அல்லது படிக்கவு எழுதவும் என இருவகையில் கருவிகள் கிடைக்கின்றன Ext2Fsd*,Ext2IFS இவ்விரண்டு கருவிகளும் லினக்ஸின் Ex2,Ext3 ஆகிய வகை கோப்புகளை அனுகி கையாள பயன்படுகின்றன . Explore2fsஎனும் கருவியானது Ex2,Ext3,Ext4 ஆகிய வகை கோப்புகளை படிக்கமட்டும் செய்கின்றது. இம்மூன்று கருவிகளும் சமீபத்திய லினக்ஸ் இயக்கமுறைமைகளின் கோப்பு வகைகளைகூட கையாளும் திறன்வாய்ந்தவையாக உள்ளன மற்றவை சமீபத்திய லினக்ஸ் இயக்கமுறைமைகளின் கோப்புகளை கையாளும் திறன்அற்றவையாகும். இந்த கருவிகளை http://sourceforge.net/projects/extfsd/ என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

எம் எஸ் ஆஃபிஸ் -2010- தொடர்-9-எக்செல்-2010- தொடர்ச்சி

புதிய தாள் , நெடுவரிசை அல்லது கிடைவரிசையை இணைத்தல் 

m8.1

9.1
எக்செல்லின் பணித்தாளில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கூடுதலான column அல்லது row சேர்த்திட விரும்புவோம் இந்நிலையில் தேவையான column அல்லது row இன் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு விண்டோவின் மேல் பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவி பட்டியின் திரையில் cells என்ற குழுவிலுள்ள insert என்ற கீழிறங்கு பட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் விரியும் insert இன் கீழிறங்கு பட்டியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றானinsert sheet column s என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குதல்செய்தால் column என்று கூடுதலாக உள்ளினைந்துவிடும் .அவ்வாறே insert sheet row s என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் row என்று கூடுதலாக உள்ளினைந்து விடும் insert sheet என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குதல்செய்தால் worksheet என்று கூடுதலாக உள்ளினைந்து விடும்

m8.2

9.2
இதே insert இன் கீழிறங்கு பட்டியில் insert cells என்பதைதெரிவுசெய்து சொடுக்குக.உடன் insert என்ற உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றிடும் அதில் shift cell right ,shift cell down ஆகியஇரண்டில் ஒன்றினை தெரிவு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய செல் ஒன்று உள்ளிணைந்துவிடும் .அவ்வாறே இதே உரையாடல் பெட்டியின் மூலம் entire row ,entire column ஆகிய வற்றிலொன்றை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குதல்செய்வதன் வாயிலாக புதிய column அல்லது row ஐ சேர்த்து இணைத்து கொள்ளும்.
இதற்கு பதிலாக column அல்லது row இன் தலைப்புபகுதியில் இடம்சுட்டியை வைத்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் insert என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் புதிய column அல்லது row உள்ளிணைந்து விடும். அவ்வாறே sheet தாவியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் insert என்ற வாய்ப்பை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் insert என்ற உரையாடல் பெட்டியின் இயல்புநிலையில் worksheet என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும் இதனை ஏற்று ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . உடன் புதிய worksheet உள்ளிணைந்துவிடும்.

m8.3

9.3

எக்செல் பணித்தாளில் இருக்கும் column அல்லது row இன் அகலத்தை அல்லது உயரத்தை மாற்றி யமைக்க முடியும் அவ்வாறு விரும்பும் column அல்லது row இன் தலைப்புபகுதியில் இடம்சுட்டியை வைத்து தெரிவுசெய்து கொள்க. பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் column width அல்லது row height என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் column அல்லது row இன் அகலத்தை அல்லது உயரத்தை மாற்றி யமைப்பதற்கான column width அல்லது row height என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் தேவையான அளவை தட்டச்சு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

m8.4

9.4
வேறு வழியாக இரண்டு column அல்லது row இணையும் தலைப்புபகுதியில் இடம்சுட்டியை வைத்து தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியின் தோற்றம் சிறிய மெல்லிய கூட்டல் குறி போன்று தோன்றும் சுட்டியின் பொத்தானை பிடித்து தேவையான அளவிற்கு இழுத்து சென்று பிடித்திருந்தததை விட்டிடுக.

m8.5

9.5
அதற்கு பதிலாக விண்டோவின் மேல் பகுதியில் இருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவி பட்டியின் திரையில் cells என்ற குழுவிலுள்ளformat என்ற கீழிறங்குபட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் format இன் கீழிறங்கு பட்டியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றான fit column width என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் நாம் உள்ளீடு செய்யும் தரவிற்கேற்ப column width மாறி யமைந்து கொள்ளும் .அவ்வாறே auto fit row height என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் நாம் உள்ளீடு செய்யும் தரவிற்கேற்ப row height மாறி யமைந்து கொள்ளும் இதே கீழிறங்கு பட்டியில் column width அல்லது row height என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் column அல்லது row இன் அகலத்தை அல்லது உயரத்தை மாற்றி யமைப்பதற் கான column width அல்லது row height என்ற உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றும் அதில் தேவையான அளவை தட்டச்சு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அட்டவணையின் கிடை வரிசையிலும் நெடுவரிசையிலும் உள்ள தலைப்பை நிலையாக பார்வையிடுவதற்கு column அல்லது row இல் இடம்சுட்டியை வைத்து கொண்டு விண்டோவின் மேல்பகுதியிலுள்ள view என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் view என்ற தாவி பட்டியின் திரையில் window என்ற குழுவிலுள்ளfreeze pane என்ற கீழிறங்கு பட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் freeze pane இன் கீழிறங்கு பட்டியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றான freeze panes என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் கிடை வரிசையிலும் நெடுவரிசையிலும் உள்ள தலைப்பை பார்வையிடுவதற்காக நிலையாக இருக்கும் இதே freeze pane இன் கீழிறங்கு பட்டியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றான unfreeze panes என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் பழைய நிலைக்கு மாறிவிடும்.

m8.6

9.6

இதே freeze pane இன் கீழிறங்கு பட்டியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றான freeze top row என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் தலைப்பு கிடை வரிசையும் freeze first column என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் முதல் நெடுவரிசையும் நிலையாக இருக்கும்
செல் அல்லது குழுவான செல்களுக்கு பெயரிடுதல்
ஒருசெல் அல்லது ஒருகுழுவான செல்களுக்கு ஒருபெயரிட்டால் வாய்ப்பாட்டிற்கு இந்த பெயரினை பயன்படுத்தி கையாளுவதற்கு சுலபமாக இருக்கும் படத்தில் பெயரிடபடாத பெயரிடப் பட்ட இரண்டு வாய்ப்பாடு(formula) வகை கொடுக்கபட்டுள்ளன

m8.7

9.7அதற்காக முதலில் பெயரிடவிரும்பும் செல் அல்லது குழுவான செல்களை தெரிவு செய்துகொள்க. பின்னர் . விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் formulas என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் formulas என்ற தாவி பட்டியின் திரையில் defined names என்ற குழுவிலுள்ளdefine name என்ற கீழிறங்கு பட்டியில் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் define name என்ற கீழிறங்கு பட்டியில் define name என்ற வாய்ப்பை சொடுக்குக.

m8.8

9.8

உடன் new name என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் name என்பதில் இதற்கு ஒரு பெயரை உள்ளீடு செய்து refers to என்பதில் பெயரிடப்படவேண்டிய செல் அல்லது குழுவான செல்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளதாவென உறுதி செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.உடன் இந்த பெயர் நாம் தெரிவுசெய்த செல் அல்து குழுவான செல்களுக்கு ஒதுக்கப் பட்டு விடும். இந்த பெயரானது எழுத்து , எண், அடிக்கோடு போன்றவைகளால் மட்டுமே ஆரம்பிக்க வேண்டும். காலி யிடம் மற்ற குறியீடுகள் கண்டிப்பாக ஆரம்பத்திலோ, இடையிலோ இருக்கக்கூடாது

m8.9

9.9
பெயரிடப் பட்ட பகுதிக்கு இடம்சுட்டி நேரடியாக செல்வதற்கு
Formula பட்டையிலுள்ள name என்ற கீழிறங்கு பட்டியில் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் . name என்ற கீழிறங்கு பட்டியில் தேவையான பெயரை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் அந்த பெயர் ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிக்கு நேரடியாக இடம்சுட்டி சென்று நிற்கும்.
செல்லில் இருக்கும் தரவை நீக்கம் செய்தல்
நீக்கம் செய்யவேண்டிய தரவு இருக்கும் செல் அல்லது குழுவான செல்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் Delete என்ற விசையை அழுத்துக .உடன் இதில் இருக்கும் தரவுகள் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.
வேறுவழியில் நீக்கம் செய்யவேண்டிய செல் அல்லது குழுவான செல்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலுள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் விரியும் home என்ற தாவி பட்டியின் திரையில் cells என்ற குழுவிலுள்ள Delete Cellsஎன்ற கீழிறங்கு பட்டியில் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் Delete Cellsஎன்ற கீழிறங்கு பட்டியில் உள்ள Delete Cells என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குதல்செய்தால் செல் அல்லது குழுவான செல்கள் நீக்கம் செய்யப்பட்டுவிடும். இதே கீழிறங்கு பட்டியில் உள்ள Delete sheet row என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் தெரிவுசெய்யப்பட்ட கிடைவரிசை முழுவதும் நீக்கப்பட்டுவிடும். இதே கீழிறங்கு பட்டியில் உள்ள Delete sheet column என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் தெரிவுசெய்யப்பட்ட நெடுவரிசை முழுவதும் நீக்கப்பட்டுவிடும் இதே கீழிறங்கு பட்டியில் உள்ள Delete sheet என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் இந்த பணித்தாள் முழுவதும் நீக்கப்பட்டுவிடும்.

m8.10

9.10
மற்றொரு வழியில் நீக்கம் செய்யவேண்டிய தரவு இருக்கும் செல் அல்லது குழுவான செல்களை தெரிவு செய்து கொள்க பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் குறுக்குவழி பட்டியில் Delete என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் Delete என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். இதில் shift cells left என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தால் இடப்புறமும் shift cells up என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தால் மேல்புறமும் entire row என்ற வாய்ப்பினை தெரிவு செய்தால் கிடைவரிசை முழுவதும் entire column என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தால் இடப்புறமும் நெடுவரிசை முழுவதும் நீக்கம் செய்திடுவதற்காக தெரிவுசெய்யபட்டுவிடும் உடன் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

விண்டோ-7-தொடர்-9-இயக்கமுறைமை-பின்காப்பும் மீட்டாக்கமும்

இது கோப்புகளையும் இயக்கமுறைமையின் உருவகோப்பையும் பின்காப்பு செய்வதற்கும் மீட்டாக்கம் செய்வதற்குமான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது.
கோப்புகளை பின்காப்பு செய்தல்
திரையின் கீழே இடதுபுறம் மூலையில் உள்ள ஸ்டார்ட் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் ஸ்டார்ட் என்ற பட்டியின் காலியான தேடிடும் பெட்டியில் backup என (படம்-1)தட்டச்சு செய்க

1

(படம்-1)

உடன்இந்த ஸ்டார்ட் என்ற பட்டியல் திரையில் தோன்றிடும் அதில் backup and restore என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Control panel இன் backup and restore என்ற(படம்-2) சாளரத்தின் திரையில் set up backup என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக. உடன் set up backup என்ற சாளரமானதுStarting windows backup என்ற(படம்-2) செய்தியுடன் கணினியிலுள்ள கோப்புகளை பின்காப்பு செய்வதற்கு தயார்படுத்தும்.

2

(படம்-2)

அதன்பிறகு தோன்றும் set up backup என்ற திரையில் save back up on என்பதன்கீழ்(படம்-3) பின்காப்பு செய்து சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவுசெய்துகொண்டு next .என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3

(படம்-3)

பிறகு தோன்றும் set up backup என்ற திரையில் What do you want to backup ? என்பதன்கீழ் உள்ள இரண்டு வாய்ப்புகளில் Let me choose என்பதை(படம்-4) மட்டும் தெரிவுசெய்து கொண்டு next .என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

4

(படம்-4)

பிறகு விரியும்திரையில் Data file என்பதன்கீழ் (படம்-5)எந்தெந்த கோப்புகளை பின்காப்பு செய்ய விழைகின்றோம் என தெரிவுசெய்க.தேவையானால் இதனுடன் Computer என்பதன் கீழ் சி எனும் இயக்ககத்தில் உள்ள இயக்கமுறைமையின் உருவகோப்பையும் சேர்த்து தெரிவுசெய்து கொண்டுnext .என்ற பொத்தானை தெரிவுசய்து சொடுக்குக..

5

(படம்-5)
பின்னர் பின்காப்பு அமைப்பு அனைத்தும் (படம்-6)சரியாக உள்ளதாவென ஒருமீள்பார்வையாக சரிபார்த்து கொள்க.

6

(படம்-6)

அதன்பின்னர் How often do you want to back up ? என்பதற்கு எவ்வளவு காலஇடைவெளியில் இவ்வாறு பின்காப்பு செய்யவேண்டும் என அமைத்துகொண்டு next .என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் சாளரமானது நாம் குறிப்பிட்ட இடத்தில் பின்காப்பு செய்துவிடும்
பின்காப்புசெய்த கோப்புகளை மீட்டாக்கம்செய்தல்
இவ்வாறு பின்காப்பு செய்த கோப்புகளை ஆபத்துகாலத்தில் மீளப்பெறுவதற்காக
திரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ள ஸ்டார்ட் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் ஸ்டார்ட் என்ற பட்டியின் காலியான தேடிடும் பெட்டியில் backup என தட்டச்சு செய்க
உடன் ஸ்டார்ட் என்ற பட்டியல் திரையில் தோன்றிடும் அதில் Restore Data, file or Computer from backup என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. . பின்னர் விரியும் திரையில் எந்த இடத்தில் பின்காப்பு செய்து வைத்துள்ளோம் என்ற இடத்தை அல்லது கோப்பகத்தை தெரிவுசெய்துகொண்டு சாளரம்கூறும் அறிவுரை களுக்கேற்ப செயல்பட்டு கோப்புகளை மீளப்பெற்றுகொள்க.
.அமைப்பு மீட்டாக்க வட்டுகை உருவாக்குதல்
கணினியின் இயக்கம் தொங்கலாக நின்றுவிடும்போது உடனடியாக பிரச்சினை என்னவென ஆய்வுசெய்து சரிசெய்து வழக்கமான நடைமுறை இயக்கத்திற்கு கொண்டுவர விழைவோம் இவ்வாறான நிலையில் இந்த அமைப்பு மீட்டாக்க வட்டு ஆபத்தில் காப்பானாக பயன்படுகின்றது.ஆயினும் இந்த அமைப்பு மீட்டாக்க வட்டின் வாயிலாக ஒரு கணினியில் விண்டோ7 ஐ புதியதாக நிறுவிட முடியாது என்பதை மட்டும் மனதில் கொள்க அவ்வாறான தொரு அமைப்பு மீட்டாக்க வட்டினை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்
திரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ள ஸ்டார்ட் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் ஸ்டார்ட் என்ற பட்டியின் காலியான தேடிடும் பெட்டியில் backup என தட்டச்சு செய்க
உடன் ஸ்டார்ட் என்ற பட்டியல் திரையில் தோன்றிடும் அதில் backup and restore என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Control panel இன் backup and restore என்ற சாளரத்தின் திரையில் இடதுபுற பலகத்தில் உள்ள create a system repair disc என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் நெகிழ்வட்டு இயக்ககத்தில் காலியான நெகிழ்வட்டை பொருத்துக.பிறகு தோன்றும் Create a system repair disc என்ற வழிகாட்டியின் திரையில் Select a CD/DVD drive and insert a blank disc into the drive என்பதன் கீழுள்ள drive என்பதில் (படம்-7) நாம் உருவாக்கப்போகும் நெகிழ்வட்டினை தெரிவுசெய்துகொண்டு create disc என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7

(படம்-7)
உடன் திரையில்Creating disc என்ற செய்தியுடன் அமைப்பு மீட்டாக்க வட்டு உருவாக்கிடும் பணி ஆரம்பித்து சிறிது நேரத்தில் system repair disc complete என்ற செய்தியுடன் இந்த பணிமுடிவுபெற்றதாக நமக்கு அறிவிக்கும்
இந்த அமைப்பு மீட்டாக்க வட்டு சரியாக செயல்படுகின்றதாவென பரிசோதித்து பார்ப்பதற்காக கணினியை இந்த வட்டு வாயிலாக மறுதொடக்கம்செய்க. உடன் கணினியின் தொடக்க இயக்கம் சரியாக அமைந்தால் இந்த அமைப்பு மீட்டாக்க வட்டு மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளதுஎன அறிந்துகொள்ளலாம்.

இணயத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் – தொடர்-9

புதியவர்கள்கூட ஒரு இணைய பக்கத்தை HTML இன் குறிமுறை துனை இல்லாமலேயே உருவாக்கலாம்.
Power Website Builder என்ற புதிய கருவியின் துனைகொண்டு HTML இன் குறிமுறையை எப்படி எழுதுவது என்று தெரியாத அறிந்துகொள்ளாத புதியவர்கள் கூட மிக எளிதாக தம்முடைய சொந்த இணைய பக்கத்தை உருவாக்கலாம். இதனை ஒரு வழக்கமான சாதாரண செயலைபோன்று நம்முடைய விருப்பமான வடிவமைப்பிலும் வண்ணத்திலும் எழுத்துரு விலும் நம்முடைய சொந்த இணைய பக்கத்தை உருவாக்கி அதில் web album, web calendar, web diary என்பனபோன்றவைகளை உள்ளினைத்து in-built publisher என்பதை பயன்படுத்தி இணையத்தில் வெளியிடலாம்
இதற்காக முதலில் http://www.mediafir e.com/?9nioggykl zm என்ற இணைய தளத்திற்கு சென்று இந்த கருவியை பதிவிறக்கம் செய்துகொள்க. பின்னர் சுருக்கி கட்டப்பட்ட நிலையிலுள்ள இவற்றின் கோப்புகளை winrar என்பதன் துனைகொண்டு விரித்து வெளியில் பிரித்தெடுத்துகொள்க.அதன்பின்னர் PWB.exeஎன்ற இதனுடைய இயக்க கோப்பினை செயல்படுத்தி இந்த கருவியை உங்களுடைய கணினியில் நிறுவுசெய்து செய்து கொள்க. பிறகு இதனை எவ்வாறு செயற்படுத்துவதுஎன்று வழிகாட்டி உதவிகுறிப்பான READMEஎன்பதை படித்து நன்கு விவரம் அறிந்துகொண்டு இந்த கருவியின் துனையுடன் உங்களுடைய சொந்த இணைய பக்கத்தை உருவாக்கி மகிழுங்கள்

s.

பார்வையாளர்களை கவரும் வண்ணம் விட்டு விட்டு ஒளிரும் தன்மையுடன் நாமே ஒரு இணையபக்கத்தை உருவாக்கிடமுடியும்
நம்மில் பெரும்பாலானவர்கள் சொந்தமாக இணையபக்கம் ஒன்றை உருவாக்கி பராமரித்து வருவோம் அவை பார்வையாளர்களை மேலும் கவரும் வண்ணம் விட்டு விட்டு ஒளிரும் தன்மையுடனும் அமைப்புடனும் இருந்தால் நல்லது என எண்ணிடு வோம்.அதற்காக flash objects மறறும் tools ஆகியவற்றை http://www.wix.com என்ற இணைய தளம் வழங்குகின்றது. இவற்றை பயன்படுத்திடுமுன் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் Login/signup என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் படம் -1 இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பின்வருங் காலங்களில் இந்த இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்காக பயன்படக்கூடிய பயனாளரின் பெயர் கடவுச்சொல் போன்ற விவரங்களை தட்டச்சு செய்துSignup என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

1

படம் -1
பின்னர் படம் -2 இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் My Account என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் விரியும் திரையில் Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின்னர் மின்னஞ்சல் முகவரி பயனாளரின் பெயர் கடவுச்சொல் போன்ற விவரங்களை தேவையானால் மாறுதல் செய்துகொண்டு Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2

படம் -2
அதன்பின்னர் படம் -3 இல் உள்ளவாறு தோன்றிடும் create என்ற திரையில் ஏராளமான இணையபக்கஙகளின் மாதிரி படிமஙகள்(templates) உள்ளன .அவற்றுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து கொள்க.இவை எதுவும் பொருத்தமாக அமையவில்லை யெனில் காலியான படிமத்தை (Blank template) தெரிவுசெய்து கொள்க

3

படம் -3
தற்போது இந்த காலியான மாதிரிபடிமத்தில் நாம் விரும்பியவாறு தோற்றத்தை மாற்றியமைப்பதற்காக திரையின் இடதுபுறபலகத்தில் உள்ள Page parts என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில் Background என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் படம் -4 இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் Animated என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்த பின்னர் விரியும் திரையின் இடதுபுற பலகத்தில் தேவையான பின்புலத்தை தெரிவுசெய்து கொள்க.

4

படம் -4
பின்னர் இந்த இணையபக்கத்திற்கு ஒரு தலைப்பு பெயரிடவேண்டும் அதற்காக Text என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில்(படம் -5) Title என்ற பொத்தானையும் தொடர்ந்துஇந்த இணைய பக்கத்திற்குள் உரைத்தொகுப்பினை உள்ளீடுசெய்வதற்காக paragraph என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக.அதன்பின்னர் விரியும் அடுத்த திரையில் Simple என்ற தாவியின் பொத்தானைதெரிவுசெய்த பிறகு விரியும் திரையில் பொருத்தமான தொரு மாதிரி படிமத்தை தெரிவுசெய்து இடம்சுட்டியைவைத்து சுட்டியால் பிடித்து இழுத்து வந்து காலியான இடத்தில் விட்டிடுக. பின்னர் இந்த பத்தி பெட்டியை சரியான அளவிற்கு சரிசெய்து அமைத்திடுக.

5

படம் -5
அதன்பின்னர் இந்த இணையபக்கத்திற்குள் ஒலிஒளி படங்களை இணைப்பதற்காக Media/Video என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில்(படம் -6) Video என்ற பொத்தானை தெரிவு செய்தவுடன் தொடர்ந்து விரியும் You Tube போன்ற இணையதளத்திற்குள் உள்ள படங்களின் தொகுப்பில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து Embedded Url என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் இந்த இணைய இணைப்பு முகவரியை நாம் உருவாக்கிய உரைபெட்டிக்குள் ஒட்டி Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6

படம் -6
அதன்பின்னர் இந்த இணையபக்கத்திற்குள் படங்களை இணைப்பதற்காக Media/Video என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளைகளினுடைய பொத்தான்களின் பட்டியலில் (படம் -7 ) Pics என்ற பொத்தானை தெரிவு செய்தவுடன் தொடர்ந்து விரியும் Flickr போன்ற இணையதளத்திற்குள் உள்ள படங்களின் தொகுப்பில் தேவையானதை தெரிவுசெய்து From Url என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது நாம் கணினியில் சேமித்து வைத்துள்ளவை எனில் அவை இருக்கும் கோப்பகத்தை தெரிவுசெய்து Upload என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

7

படம் -7
இவைகள் போதுமான அளவில் இல்லையெனில் பரவாயில்லை இந்த wix.com என்ற இணையதளத்தில் சேமித்துவைத்துள்ள படங்களை பயன்படுத்திகொள்ளலாம். அதற்காகClib art என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளை களினுடைய பொத்தான்களின் பட்டியலில் (படம் -8) Shapes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் தொடர்ந்து விரியும்மூன்று தாவிகளில் உள்ள வெவ்வேறு வகையான வடிவங்களின் (Shapes) தொகுப்பில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து இடம்சுட்டியை வைத்து சுட்டியால் பிடித்து இழுத்து வந்து காலியான இடத்தில் விட்டிடுக. பின்னர் இந்த வடிவத்தை சரியான அளவிற்கு சரிசெய்து அமைத்திடுக

8

படம் -8
இவ்வாறு நம்முடைய இணையபக்கத்தில் இணைக்கப்பட்ட படங்கள் அங்கிங்குமென நகர்ந்துகொண்டேயிருக்குமாறுசெய்தால் நன்றாக இருக்குமென எண்ணிடுவோம் .அதற்காக Clibart என்ற தாவியின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்க உடன் விரியும் பல்வேறு கட்டளை களினுடைய பொத்தான்களின் பட்டியலில் (படம் -9) Animations என்ற பொத்தானை தெரிவு செய்தவுடன் தொடர்ந்து விரியும் உள்ள வெவ்வேறு வகையான இயக்கங்களின் தொகுப்பில் தேவையானதை தெரிவுசெய்து இடம்சுட்டியை வைத்து சுட்டியால் பிடித்து இழுத்து வந்து விட்டிடுக. பின்னர் இதனை சரியான அளவிற்கு சரிசெய்து அமைத்திடுக

9

படம் -9
அதன்பின்னர் இந்த இணையபக்கத்தின் சுற்றுபுற அளவை சரிசெய்து அமைப்பதற்காக Arrange => Ruler என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி சரி செய்து கொள்க. அவ்வாறே நம்மால் உருவாக்கப்பட்ட இணையபக்கத்திற்கு ஒரு பொருத்தமான பெயரிட்டு File => Save as என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி நம்முடைய கணினியில் சேமித்துகொள்க.
இறுதியாக இதனை இணையத்தில் வெளியிடுவதற்காக மேலே வலதுபுற மூலையில் உள்ள Publish என்ற பட்டானை தெரிவுசெய்து சொடுக்குக .பின்னர் படம் – 10 இல் உள்ளவாறு விரியும் திரையில் Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் Apply என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் அடுத்த திரையில் wix.com என்ற பொத்தானையும் தொடர்ந்து Next என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இறுதியாகவிரியும் திரையில் Publish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

10

படம் – 10

கணினியினை  பயன்படுத்திடும் போதான சில ஆலோசனை குறிப்புகள்

 

மைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாடான எம்எஸ்வேர்டில் பணிபுரிந்தபின் நாம் உருவாக்கிய கோப்பினை சேமித்தபின்னர்  அந்த கோப்பு எப்போது திருத்தபட்டது  என அறிந்துகொள்ள கோப்பில் நாமாக அன்றைய நாளையும் நேரத்தையும் உள்ளீடு செய்திடவேண்டும்  அதற்குபதிலாக  விசைப்பலகையிலுள்ள விசைகளில் பின்வருமாறு ஒருசிலவிசைகளை சேர்த்து அழுத்தி தானாகவே இதனை  கோப்பில் பதியுமாறுசெய்திடமுடியும்

Alt-Shift-Dஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி – 24-08-2014  நாளையும்

Alt-Shift-T ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி 6:55 PM  நேரத்தையும்

உரையில் இதனை பதிந்துகொள்ளுமாறு செய்து கொள்க  இதன்பின்னர் ஒவ்வொருமுறை கோப்பினை திருத்தம் செய்திடவும் அச்சிடவும் திறக்கும்போது அப்போதைய நாளினையும் நேரத்தினையும் கணினியானது தானகாவே மாற்றியமைத்துகொள்ளும்.

விண்டோ-7அல்லது -8- இயக்கமுறைமைகளில் ஆலோசனை குறிப்புகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ7 அல்லது 8 இயக்கமுறைமைகளில் எம்எஸ் வேர்டு எம்எஸ்எக்செல் ஆகிய பயன்பாடுகளில் பணிபுரியும் போது நாம் பணிபுரியும் கோப்பினை ஒரேசமயத்தில் பல்வேறு இடங்களில் சேமித்திடுமாறு செய்திடமுடியும் இதற்காக தனியான தொரு கட்டளைவரியெதுவும் உருவாக்கிட தேவையில்லை இதற்காக எம்எஸ் வேர்டு திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Options=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் Word optionsஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதன் இடதுபுறபலகத்தில்  உள்ள customize Ribbon  என்ற கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் வலதுபுறபலகத்தில் choose commands from என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் Main Tabs  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அதற்கு கீழே விரியும் Main Tabs என்பதில்  Developer =>Code=>  Macro Security =>என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் வலதுபுறபலகத்தில் தோன்றிடும் Add  எனும்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  எச்சரிக்கை செய்தியுடன் விரியும் திரையில் New group என்பதை தெரிவுசெய்து கொண்டு  macro commands என்றவாறு அதற்கு பெயரிட்டு கொள்க அதன்பின்  இந்த குழுவிற்கு Macro security ஐ சேர்த்துகொண்டு  Record macros ,  Macros  ஆகியவற்றையும் இதே குழுவிற்கு சேர்த்துகொள்க. இப்போது திரையின் மேல்பகுதியில் பார்த்தால் இந்த குழுவான பொத்தான்கள் தோன்றுவதை காணலாம் அதன்பின் Macro Security என்பதை இந்த ஆவணத்தில் இயலுமை செய்திடவேண்டும்  அதற்காக Macro Security என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் trust center என்ற உரையாடல் பெட்டியில் இடதுபுற பலகத்தில் Macro settings  என்பதையும் வலதுபுறபலகத்தில் Enable all macros என்ற வாய்ப்பையும் தெரிவுசெய்துகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக    இதன்பின் Record macro   என்ற பொத்தானை தெரிவுசெய்த சொடுக்கு  உடன்விரியும் Record macro   என்ற  உரையாடல் பெட்டியில் macros name   என்பதற்கு  பொருத்தமான பெயரையும் shortcut key  என்பதில் சரியான சுருக்குவழி விசைகளையும் description என்பதில் இந்த கட்டளை எதற்கானது என்ற விவரத்தையும் உள்ளீடு செய்து கொண்டு ok   என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர்  நாம் சேமிக்க விரும்பும் கோப்பின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Record macro என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நாம் விரும்பும்  கணினிக்குள்ளே இருக்கும் கோப்பகம் வெளியில் USB இல் உள்ள கோப்பகத்தில் தெரிவுசெய்து சேமித்துகொண்டு   Stop Recording  Macros  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த  பதிவுசெய்திடும் செயலை நிறுத்தம் செய்துகொள்க அதன்பின்னர்  Macros  என்ற உருவ பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  Macros  என்ற  உரையாடல் பெட்டியில் நாம்  சேமித்த கட்டளையின் பெயரை தெரிவுசெய்து கொண்டு Runஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் பணிபுரியும் கோப்பானது நாம்விரும்பும்  பலஇடங்களில் தானாகவே சேமிக்கபடும்

4

விண்டோ-7-தொடர்-8

ஒரு கணினியை லேன் நெட்வொர்க்கில் இணைப்பதற்கு

இதற்கு முன் பின்வரும் மூன்றுவகை இணைப்பை (படம்-2.12.1) பற்றி அறிந்துகொள்க.

1ஹோம் நெட்வொர்க்=வீட்டிற்குள் இருக்கும் கணினிகளை இணைப்பது, 2.வொர்க்நெட்வொர்க்=நாம்பணிபுரியும் இடத்திலுள்ள கணினிகளை இணைப்பது, 3.பப்ளிக்நெட்வொர்க் =விமானநிலையம் இரயில்நிலையம் என்பனபோன்ற பொது இடங்களில் இருந்து இன்டெர்நெட்டுடன் இணைப்பது இந்த மூன்றில் எந்த வகைநமக்கு தேவையென முடிவுசெய்துகொள்க.

2.12.1

படம்-2.12.1

ஒரு கணினியை லேன் நெட்வொர்க்கில் இணைப்பதற்கு ஈதர்நெட் அடாப்டர் (கணினிக்குள் பொருத்துவது), நெட்வொர்க் கேபிள்,ரூட்டர், ஸ்விட்ச் ,ஹப், ஆகிய ஹார்டுவேர்கள் தேவையான வையாகும்.இவைகளை கம்பியுடைய இணைப்பிற்காக கணினிகளுக்கிடையே பொருத்தி இணைத்துவிடுக. கம்பியல்லா இணைப்பிற்கு நெட்வொர்க் கேபிள் ஸ்விட்ச் ,ஹப், ஆகிய ஹார்டுவேர்கள் தேவைப்படாது, கம்பியுடைய இணைப்பில் இரண்டு கணினிகளுக்குமேல் எனில் ரூட்டர், ஸ்விட்ச் ,ஹப், ஆகியவை அவசியம் தேவையாகும்.

2.12.2

படம்-2.12.2

பின்னர் ஒரு கணினியை நெட்வொர்க்கில் இணைப்பதற்கு கான்ஃபிகர் செய்யவேண்டும். அதற்காக Star=>Control panel=>network and sharing center=> என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக அல்லதுசெயல்பட்டையில் இதனுடைய.உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் சிறுபட்டியல்வில open network and sharing centerஎன்ற (படம்-2.12.2) கட்டளையை தெரிவுசெய்து ரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் தோன்றும் network sharing center என்ற சாளரத்தில் change your network setting என்பதன்கீழ்

1.setup a new connection or network -புதிய இனைப்பிற்கு

2.Connect to a network-ஏற்கனவே இருப்பதுடன் இணைப்பது

3.choose home group and sharing center-வீட்டுகுழுவிற்குள்பகிர்ந்துகொள்வதற்கு

4.Troubleshoot problems-இணைப்பின்போது பிரச்சினையெனில் சரிசெயவதற்கு

ஆகிய நான்கு வாய்ப்புகள் உள்ளன. இவற்றுள் setup a new connection or network என்ற (படம்-2.12.3)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

 

2.12.3

படம்-2.12.3

உடன்  setup a network connectionஎன்ற வழிகாட்டி திரையில் தோன்றும் அதில் choose a connection option என்பதன் கீழ்

  1. Connect to internet-இன்டெர்நெட்டுடன் இணைப்பதற்கு
  1. setup a new network-புதிய இணைப்பிற்கு
  2. mannually connect to a wireless network -நாமாக கம்பியில்லாஇணைப்பில் இணைப்பதற்கு
  3. connect to a work place-பணிபுரியும் இடத்திலுள்ள டயல்அப்அல்லது விபிஎன் இணைப்பிற்கு
  4. setup a wireless adhoc from computer to computer network-தற்காலிகமான கம்பியில்லா இணைப்பிற்கு

ஆகிய வாய்ப்புகள் உள்ளன இப்போதுதான் முதன்முதலில் புதியநெட்வொர்க் இணைப்பு கொடுப்பதாயின் setup a new network என்பதை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

setup a network என்ற(படம்-2.12.4) உரையாடல் பெட்டி Choose  the wireless routerr or access point you want to configure  ஓன்ற தலைப்புடன் திரையில் தோன்றும் அதில்   தேவையானதை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் புதிய நெட்வொர்க் உருவாகும்.

 

2.12.4

படம்-2.12.4

இந்த setup a network connectionஎன்ற வழிகாட்டியின் திரையில்  choose a connection option என்பதன் கீழ் உள்ள வாய்ப்புகளில்  உள்ள  Connect to internet  என்பதை(படம்-2.12.5)இன்டெர் நெட்டுடன் இணைப்பதற்காக தெரிவு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2.12.5

படம்-2.12.5

உடன் Connect to internet என்ற வழிகாட்டி (படம்-2.12.6)தோன்றும் அதில்how do you want to connect? என்பதன்கீழ்wireless , Broadband(pope),Dial-up,ஆகிய மூன்று வாய்ப்பகள்உள்ளன அவற்றுள் wireless என்பதை தெரிவுசெய்துதெரிவுசெய்து சொடுக்குக..

 

2.12.6

படம்-2.12.6

உடன் கம்பியில்லா நெட்வொர்கிங் பட்டியலை திரையில் காண்பிக்கும் இத்திரையிலுள்ள connect என்ற(படம்-2.12.7) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 

2.12.7

படம்-2.12.7

பின்னர் தோன்றிடும் Connect to a networkஎன்ற பெட்டியில் type the network security keyஎன்று நம்மிடம் கோரும் செய்தியை பிரதிபலிக்கும்அதில்  security key என்பதற்கு (படம்-2.12.8) அருகிலுள்ள உரைபெட்டியில் பாஸ்வேர்டை தட்டச்சு செய்து கொண்டு இந்த எழுத்துகள் மற்றவர் களால் அறிந்த கொள்ள முடியாதவாறு மறைத்து வைப்பதற்கு hide character  என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவு செய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.12.8

படம்-2.12.8

உடன் கம்பியில்லா வழியில் இன்டெர்நெட் இணைப்பை ஏற்படுத்திவிடும். இதன் ஐகான் செயல்பட்டையில் இருப்பதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

நாமாக கம்பியில்லா இணைப்பில் இணைப்பதற்கு

setup a network connectionஎன்ற வழிகாட்டியின் திரையில்  choose a connection option என்பதன் கீழ் உள்ள வாய்ப்புகளில்  mannually connect to a wireless network என்பதை -நாமாக கம்பியில்லா இணைப்பில் இணைப்பதற்கு தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் mannually connect to a wireless network என்ற(படம்-2.12.9) வழிகாட்டிதிரையில்தோன்றும் அதில் Enter information for the wireless network you want to add என்பதன்கீழுள்ளNetwork name என்பதற்கு இணைப்பின் பெயரையும் security type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து என்னவகையான பாதுகாப்பு என்பதையும் அவ்வாறே Encryption type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து என்னவகையான பாதுகாப்பு என்பதையும் Security keyபாதுநகலெடுத்துற்கான கீசொற்களையும் தட்டச்சு செய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான கம்பியில்லா இணைப்பு ஏற்படும்.

 

2.12.9

படம்-2.12.9

பணிபுரியுமிடத்தை லேனில் இணைப்பதற்கு

setup a network connectionஎன்ற வழிகாட்டியின் திரையில்  choose a connection option என்பதன் கீழ் உள்ள வாய்ப்புகளில்  Connect to a work place  என்பதை பணிபுரியும் இடத்திலுள்ள டயல்அப்அல்லது விபிஎன்  இணைப்பிற்காக தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் Connect to a work place  என்ற வழிகாட்டி தோன்றும் அதில்how do you want to connect? என்பதன் (படம்-2.12.10)கீழுள்ள Use my internet connection (VPN) Dial directly  ஆகிய வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து இணைப்பை ஏற்படுத்திகொள்க..

2.12.10

படம்-2.12.10

டயல் அப் இணைப்பு ஏற்படுத்துவதற்கு

setup a network connectionஎன்ற வழிகாட்டியின் திரையில்  choose a connection option என்பதன் கீழ் உள்ள வாய்ப்புகளில் eate a dial up Connection  என்பதை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் Create a dial up Connection என்ற வழிகாட்டிதிரையில்தோன்றும் அதில் Type the information from your internet service provider(ISP) என்பதன் (படம்-2.12.11)கீழுள்ளdial up phone number என்பதற்கு ISP  ஆல் வழங்கப்பட்ட இணைப்பின் போன் நெம்பரையும் User name என்பதற்கு  ISP  ஆல் வழங்கப்பட்ட பயனாளரின் பெயரையும் password என்பதற்கு  ISP  ஆல் வழங்கப்பட்ட பாதுநகலெடுத்துற்கான கீசொற்களையும் Connection name என்பதற்கு  டயல் இணைப்பிற்கான பெயரையும் தட்டச்சு செய்து கொண்டு Connect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான இணைப்பு ஏற்படும்

 

2.12.11

படம்-2.12.11

இன்டெர்நெட்டுடன் இணைப்பதற்காக

மேலே கூறிய வழியில் லேன் இணைப்பில் கணினியை இணைத்தபின் இதனை இன்டெர்நெட்டுடன் இணைப்பதற்காகsetup a network connectionஎன்ற வழிகாட்டியின் திரையில் உள்ள  Connect to internet  என்பதை தெரிவு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் Connect to a work place  என்ற வழிகாட்டி தோன்றும் அதில்how do you want to connect? என்பதன்கீழுள்ள Use my internet connection (VPN) Dial directly  ஆகிய வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து இணைப்பை ஏற்படுத்திகொள்க..

இந்த setup a network connectionஎன்ற வழிகாட்டியின் திரையில்  choose a connection option என்பதன் கீழ் உள்ள வாய்ப்புகளில்  உள்ள  setup an ad hok network  என்பதை  தெரிவு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 

2.12.12

படம்-2.12.12

உடன் setup an ad hok network என்ற வழிகாட்டி set up a wireless ad hok networkஎன்ற (படம்-2.12.12)தலைப்பில் தோன்றும் அதிலுள்ளet next என்ற பொத்தானை மட்டும்தெரிவுசெய்து சொடுக்குக

.

2.12.13

படம்-2.12.13

 

பின்னர் தோன்றிடும் setup an ad hok network என்ற வழிகாட்டியின்(படம்-2.12.13) திரையில் Give your network a name and choose security options என்பதன்கீழுள்ளNetwork name என்பதற்கு இணைப்பின் பெயரையும் security type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து என்னவகையான பாதுகாப்பு என்பதையும் அவ்வாறே Security key என்பதற்கு பாதுநகலெடுத்துற்கான கீசொற்களையும் தட்டச்சு செய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான தற்காலிக இணைப்பு ஏற்படும்.

 

பிராட் பேன்ட் இணைப்பு

இந்த how do you want to connect? என்றதிரையிலுள்ள மூன்று வாய்ப்பகளில்Broadband(pope) என்பதை தெரிவுசெய்துதெரிவுசெய்து சொடுக்குக..

 

                      2.12.14

படம்-2.12.14

பின்னர் தோன்றிடும் connect to  the broadband என்ற வழிகாட்டியின்(படம்-2.12.14) திரையில் type the information from your internet service provider(ISP) என்பதன் கீழ் User name என்பதற்கு  ISP  ஆல் வழங்கப்பட்ட பயனாளரின் பெயரையும் password என்பதற்கு  ISP  ஆல் வழங்கப்பட்ட பாது நகலெடுத்துற்கான சொற்களையும் Connection name என்பதற்கு இணைப்பிற்கான பெயரையும் தட்டச்சு செய்து கொண்டு இதன் பின்னர் பயன்படுத்தும்போது இந்த பாஸ்வேர்டை ஞாபகபடுத்தி கொள்வதற்காக Remember this password என்பதை தெரிவுசெய்துகொண்டு Connect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் தேவையான இணைப்பு ஏற்பட்டு the connection to the internet is ready to  use என்ற (படம்-2.12.15)செய்தியுடன் connect to  the broadbandஎன்றவழிகாட்டியின் திரைதோன்றும் அதில்உள்ள closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதனை மூடிவிடுக.

2.12.15

படம்-2.12.15

 

இன்டெர்நெட் இணைப்பைமேற்கொள்ள

முதலில் உங்களுடைய கணினியுடன் மோடம் வழியாக டயல்அப் அல்லது பிராட்பேண்ட் இணைப்பை ஏற்படுத்திகொள்க.இவ்வாறுநெட்வொர்க் இணைப்பை ஒரு கணினியில் அமைத்தபிறகு கணினியை இன்டெர்நெட்டுடன் இணைப்புஏற்படுத்துவதற்கு கணினியின்  திரையில் அல்லது டாஸ்க்பாரிலுள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றும் திரையில் என்னவகை இணைப்பு என்பதை  டயல்அப் என்றவாறு தெரிவுசெய்க

2.12.16

படம்-2.12.16

 

பின்னர்தோன்றும் Connect dial up connectionஎன்ற உரையாடல் பெட்டியில் dialஎன்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக  பயனாளரின் பெயர் பாஸ்வேர்டு ஆகியவை(படம்-2.12.16) தயார் நிலையில் அதில் பிரதிபலிக்கும்.உடன் இன்டெர்இணைப்பு ஏற்படுத்திகொள்ளும்

இன்டெர்நெட் இணைப்பை துண்டிக்க

2.12.17

படம்-2.12.17

கணினியின்  திரையில் அல்லது டாஸ்க்பாரிலுள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றும் Connect dial up connectionஎன்ற (படம்-2.12.17)உரையாடல் பெட்டியில் disconnect என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக  இன்டெர்நெட் இணைப்பு துண்டிக்க பட்டுவிடும்.

இணயத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் – தொடர்-8

வலைபூவில் படக்கதைகளை உள்ளிணைக்கலாம்

இன்றைய நாட்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் இணையத்தில் வலைபூக்களையே தம்முடைய கருத்துகளையும் செய்திகளையும் மற்றவர்களுக்கு கூறுவதற்கு பயன்படுத்துகின்றோம்  இதில் நாம் சொல்ல விரும்பும் செய்திகளை பக்கம் பக்கமாக  எழுத்துமூலம் இருப்பதற்கு பதிலாக ஒரு சிறியபடத்தின் வாயிலாக இச்செய்தியை விளக்குவது மிகச்சிறந்த வழிமுறையாகும்.

4.5.3

 ஆனால்  எனக்கு படமெல்லாம் உருவாக்கத்தெரியாதே என ஐயப்படுபவர்கள் கவலைப்படவேண்டாம்  இதற்கான இலவச சேவைகள் இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன

   அவற்றுள் Bitstripsஎன்பதைபயன்படுத்திடமுதலில்  www.bitstrps.com என்ற தளத்திற்கு செல்க. அங்கு Bitstrips … Daily funnies strating YOU என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

4.5.4

பின்னர் விரியும் இந்த சாளரத்தின் மேலே வலதுபுறமூலையிலிருக்கும் join Bitstrips Today என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக.

  அதன்பின்னர்  நம்மைபற்றிய விவரங்களை உள்ளீடுசெய்து இந்த தளத்தின் விதி முறைகளைஆமோதித்து Sign up now என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  பின்னர் நம்முடைய உள்வருகை பெட்டிக்கு சென்று இத்தளத்தினால் அனுப்ப பட்டிருக்கும்  ஆமோதிப்பு மின்னஞ்சலின் இணைப்பை  தெரிவுசெய்து சொடுக்குக.

 அவ்வாறு இத்தளத்திலிருந்து ஆமோதிப்பு மின்னஞ்சலெதுவும் பெறப் படவில்லை யெனில் இத்தளத்திற்கு மீண்டும் சென்று Re send Confirmation என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 அதன்பின்னர்  Designing an avatar என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் சாளரத்தில் நாம் விரும்பியவண்ணம் பல்வேறு கதாபாத்திரங்களை  உருவாக்கிகொள்ளமுடியும் . ஆண்பால் பெண்பால் ஆகியஇரண்டில் எந்தவகை கதாபாத்திர உருவம் உருவாக்கிட விரும்புகின்றோம் எனதெரிவுசெய்துகொள்க.

பின்னர் Advancedஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க மேலும் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பினை தெரிவுசெய்து செயற்படுத்துக.

முதல்மூன்று படவில்லைகளும் ஒருஉருவத்தின் உயரம் அதன் உடல் கட்டமைப்பு தோற்றம் போன்றவைகளை அமைத்திட பயன்படுகின்றன. நான்காவதற்குமுந்தைய  படவில்லையானது  அவ்வுருவத்தின் முகம் கண் ,கண்ணின் புருவம் ,உதடு, மூக்கு ,தலைமுடி   ஆகியவை எவ்வாறு இருந்திடவேண்டும் என அமைத்திட உதவுகின்றது.

 கடைசிக்கு முந்தைய படவில்லையானது அவ்வுருவத்தின் நிறம் தோற்றம் உருவத்திற்கான உடைகள் அதனுடைய வண்ணம் போன்றவைகளை முடிவுசெய்திட உதவுகின்றது.

  இறுதிபடவில்லையானது ஒருஉருவத்தின் உணர்வு, தோற்றம் ஆகியவை எவ்வாறு இருந்திட வேண்டும் என உருவாக்கிட உதவுகின்றது.  இதனை  Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் சேமித்து put yourself in a bit strips  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தொடர்ந்து செல்க

  இவ்வாறே வேறொரு உருவத்தைஉருவாக்கிட design  a friend என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் உருவாக்கிகொள்க.

  இவ்வாறு போதுமான கதாபாத்திர உருவங்களை உருவாக்கியபின்  comic builder என்ற சாளரத்தில்  layout  என்ற தாவியின் திரையில் எத்தனை பலகத்தில் இப்படக்கதையை உருவாக்கிட தேவையானது எனத்தெரிவுசெய்துகொள்க ஒவ்வொரு பலகத்தின் புறஅளவை அதன்ஓரவிளிம்பை இழுத்துசெல்வதன் வாயிலாக அமைத்துகொண்டு new series name  என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க.

பின்னர்  இந்த படக்கதைதொடருக்கு ஒருபெயரை தட்டச்சுசெய்துகொள்க.

அதன் பின்னர் Scenes (பின்புல தோற்றம்),Prop, Furniture(அறையிலமைந்துள்ள மணையணியங்கள்), wall items(அறையின் சுவற்றிலுள்ள பொருட்கள் )effects(அறையின் தோற்றம் )என்பவைகளை இழுத்துவந்து இதில் சேர்ப்பதற்காக Art Library என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க

பின்னர் Text Bubble என்ற தாவியின் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உரைக்குமிழை(Callout) அந்தந்த உருவத்திற்கருகில் கொண்டுவந்து வைத்து அவ்வுரைக்குமிழிற்குள் சென்று தேவையான உரையாடலை உள்ளீடுசெய்துகொள்க.

  அதன் பின்னர் Control  என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.இதன் வாயிலாக  கண்மனியசைதல், கண்ணிமை  துடித்தல் ,உதடு அசைதல், கைகால்களின் அசைவுகளான அமருதல், நடத்தல்,  ஓடுதல் என்பனபோன்ற செயல்களை படவுருவங்களுக்கு ஒவ்வொரு படக்காட்சிகளிலும் செய்யும்படி அமைத்திடலாம்  இதனை  Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் சேமித்து கொள்க.

பின்னர்Tags  என்ற உரைபெட்டிக்குள் படக்கதையை திறந்திட உதவும் திறவுச்சொற்களை தட்டச்சுசெய்து  Save Tags என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் சேமித்து கொள்க

அதன்பின்னர் who  can edit this bit strips  என்பதற்கு nobody but meஎன அமைத்துகொள்க.  பின்னர் publish  என்ற பொத்தானை சொடுக்கி வெளியீடுசெய்க  நம்விருப்பபடி ஒரு இணைப்பை Blog/Post it என்பதிலிருந்து தெரிவுசெய்துநகலெடுத்து நம்முடைய வலைபூவில் ஒட்டிகொள்க preview choice  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்  எந்தெந்த  பலகம் நம்முடைய வலைபூவில் தோன்றவேணடும் என முடிவுசெய்துகொள்க

எம் எஸ் ஆஃபிஸ் -2010- தொடர்-8-

  செல்லிற்குள் டேட்டாவை மடக்கி பிரதிபலிக்கசெய்தல்

 

3.3.8

 

  நாம் ஒருசெல்லின் அகலத்தின் அளவைவிட மிகநீளமான டேட்டாவை தட்டச்சுசெய்தால் அருகிலிருக்கும் செல்களில் டேட்டா எதுவுமில்லாதவரை நீட்டி தெரியும்  டேட்டா ஏதேனு மிருந்தால் செல்லின் அகலத்திற்கு மட்டும் டேட்டாவை  பிரிதி பலிக்கும் மிகுதியை மறைத்து கொள்ளும்  அந்த செல்லில் உள்ள முழு டேட்டாவும் தெரிய வேண்டு மெனில்    விண்டோவின் மேல் பகுதியி லிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ள wrap text  என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் செல்லின் அகல அளவிற்குள்ள எழுத்துகளை தவிர மிகுதியை மடக்கி புதிய  வரியாக செல்லின் உயரத்தைமட்டும் அதிகமாக்கி திரையில் பிரிதிபலிக்கசெய்யும்.

3.3.8.1

   அட்டவணையின் தலைப்பு போன்றவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட செல்களில் நீண்டு பரவியிருக்கும்.மேலும் தலைப்பு மேலேபகுதியில் அமைந்திருக்கும் அவ்வாறு அமைத்திடுவதற்கு முதலில் தலைப்பின் பெயர் நீண்டிருக்கும் செல்களை  தெரிவு செய்து கொள்க. பின்னர் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் விண்டோவின் மேல் பகுதியி லிருக்கும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ளmerge and center   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்த பட்டனிற்கருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ள merge and center   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த செல்களனைத்தும் இணைந்து ஒன்றாகவும் தலைப்பானது மையமாகவும் அமைந்துவிடும்

.

தரவுவின்  படுக்கைவச நிலையை சரிசெய்தல்

 ஒருசெல்லில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட செல்களில் இருக்கும் டேட்டாக்களின் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றியமைக்கலாம் .அதற்காக அந்த செல்களை தெரிவுசெய்து கொள்க.பின்னர் விண்டோவின்மேல்பகுதியிலிருக்கும்.home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ள Align left   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் டேட்டாக்கள் இடதுபுறமாக தள்ளி அமர்ந்துவிடும். இதே தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Align Center    என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் டேட்டாக்கள் மையத்திற்கு தள்ளி அமர்ந்துவிடும். இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ள Align Right   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் டேட்டாக்கள் வலது புறமாக தள்ளி அமர்ந்து விடும் இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Align justify   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் சரியான நிலைக்கு தள்ளி அமர்ந்துவிடும்..

நெடுக்கை வசமாக நிலையை சரிசெய்தல்

3.3.10

  இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Top Align   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் மேல்புறமாக தள்ளி அமர்ந்துவிடும். இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Middle Align    என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் மைய நிலைக்கு தள்ளி அமர்ந்துவிடும். இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவின் கீழுள்ள Bottom Align   என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் டேட்டாக்கள் கீழ்புறமாக தள்ளி அமர்ந்துவிடும்.

தரவு நிலையின் கோணத்தை மாற்றியமைத்தல்

3.3.11

   மாற்றியமைக்க விரும்பும் செல்களை தெரிவுசெய்க பின்னர் விண்டோவின் மேல்பகுதியில் உள்ள home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் alignment என்ற குழுவிலுள்ளorient என்ற பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ள orient   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்த கோணத்தில் அமர்ந்துவிடும்

எண்களின் வடிவமைப்பு

3.3.12

எக்செல்லில் இருக்கும் டேட்டாக்கள் எவ்வாறான கணக்கீட்டிற்கு தேவையோ அதற்கேற்றவாறு எண்கள் இருக்குமாறு அமைக்கலாம் அப்போதுதான் அந்த எண்கள் ரூபாயாஅல்லது வேறு ஏதேனுமாவென எளிதில் அறிந்து கொள்ள முடியும் இதற்காக தேவையான செல்களை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் number  என்ற குழுவிலுள்ள number format என்ற பட்டனிற்கருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளnumber format   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்தவாறு  அமர்ந்துவிடும்

  தசமபுள்ளியை நிர்ணயம் செய்தல்

3.3.13

  எக்செல்லில் இருக்கும் டேட்டாக்கள் புள்ளிக்கு பிறகு இரண்டு, மூன்று என்றவாறு எண்கள் இருக்குமாறு அமைக்கலாம் அப்போதுதான் ரூபாயின் மதிப்பையும் எடையின் அளவு போன்றவைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும் இதற்காக தேவையான செல்களை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் number  என்ற குழுவிலுள்ள increase Decimal என்ற  பொத்தானை  சொடுக்குக உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்தவாறு புள்ளிக்கு பிறகு கூடுதலாகி அமர்ந்துவிடும் இதேதாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் number  என்ற குழுவிலுள்ள Decrease Decimal என்ற  பொத்தானை  சொடுக்குக உடன் இந்த செல்களில் உள்ள டேட்டாக்கள் நாம் தெரிவுசெய்தவாறு புள்ளிக்கு பிறகு  குறைவாகி அமர்ந்துவிடும்

  செல்லிற்கு சுற்றெல்லை அமைத்தல்

3.3.14

எக்செல்லில் இருக்கும் செல்களை சுற்றி கோடுவரைந்து டேட்டாக்களின் தோற்றத்தை உயர்த்தி காண்பிக்கலாம் இதற்காக தேவையான ஒற்றையான செல்லை அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட செல்களை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் fonts  என்ற குழுவிலுள்ளborder என்ற பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளborder   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவு செய்து சொடுக்குக. உடன் இந்த செல்களை சுற்றி தடிமனான கோடு ஒன்று உருவாகிவிடும்

3.3.14.1

இந்த கீழிறங்கு பட்டியலில் இருப்பது நமக்கு விருப்பமானதாக எதுவுமில்லை எனும்நிலையில் இதே கீழிறங்கு லிஸ்டின் கடைசியலுள்ள more border என்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது இந்த fonts  என்ற குழுவின் கீழே வலதுபுற மூலையில் சிறியதாக உள்ளபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  format cellஎன்ற உரையாடல் பெட்டியின் திரையில் தோன்றும் அதில்  border என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் இந்த டயலாக்பாக்ஸின் border என்ற தாவியின் திரையில் தேவையான வாய்ப்பை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறே இதே உரையாடல் பெட்டியில் number ,fonts, align போன்றவைகளின் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபிறகு தோன்றிடும் சம்பந்தப்பட்ட திரையில் நாம்விரும்பும் வகையை தெரிவுசெய்து  . okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தி கொள்க.

அட்டவணையை வடிவமைத்தல்

3.3.15

 எக்செல்லில் நாம்உருவாக்கும்  அட்டவணையின் தோற்றஅமைவை ,பாணியை(style) மாற்றியமைக்கலாம் அதற்காக நாம் உருவாக்கிய அட்டவணையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் styles  என்ற குழுவில் உள்ள format as  table என்ற பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு லிஸ்ட் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளformat as table   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் format as table என்ற உரையாடல் பெட்டியின் நாம்தெரிவுசெய்த செல்களின் பெயருடன் தோன்றும் சரியாக காண்பிக்கின்றதெனில்  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3.3.15.1

இது போதுமானதாக இல்லையெனில் format as table   இனுடைய கடைசியிலிருக்கும் new table styleஅல்லது  new pivot table style ஆகியவற்றி லொன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  new table quick  style என்ற உரையாடல் பெட்டியின் தோன்றும்  அதில் table element என்பதன் கீழுள்ள ஒவ்வொன்றையும் தெரிவு செய்து Format என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் format cellஎன்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாறு வடிவமைப்பு செய்து  அதனை preview வில் பார்த்து சரியாக இருந்தால்  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்புலதோற்றத்தை மாற்றியமைத்தல்

3.3.16

  எக்செல் தாளின் பின்புலதோற்றத்தை மாற்றி யமைக்கலாம் அதற்காக  விண்டோவின் மேல்பகுதியிலிருக்கும் page layout  என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  page layoutஎன்ற தாவியின் திரையில்   page setupஎன்ற குழுவிலுள்ள  backgroundஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்   background என்ற உரையாடல் பெட்டியில் தேவையான தோற்றத்தை  தெரிவுசெய்து  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

  எச்சரிக்கை நாம் தெரிவுசெய்த பின்புல தோற்றத்தை நம்முடைய எக்செல் தாளில் இருக்கும் டேட்டாக்களை நம்மால் படிக்கமுடியும் வகையில் அமைத்து கொள்க.

செல்லில் நிபந்தனை வடிவமைப்பு செய்தல்

3.3.17

   எக்செல்தாளின் செல்களின் தோற்றத்தை டேட்டாவின் மதிப்பிற்கேற்ப மாறும்படி நிபந்தனையுடன் வடிவமைக்கலாம்.  அவ்வாறு நிபந்தனையுடன் வடிவமைக்க விரும்பும் செல்களை தெரிவுசெய்துகொள்க. பின்னர் விண்டோவின் மேல் பகுதியிலிருக்கும்  home என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் home என்ற தாவியினுடைய பொத்தானின் பட்டியில் திரையில் styles  என்ற குழுவின் கீழுள்ளconditional formatting என்ற பொத்தானை  சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் உள்ளconditional formatting   இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக.

   உதாரணமாக icon sets என்ற வாய்ப்பை சொடுக்குக  உடன் விரியும்  Icon sets இன் பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து முன்னோட்டமாக பார்த்து சரியாக இருந்தால் சொடுக்குக. Higlight cells rules  அல்லது top bootom rules என்பதை தெரிவு செய்வதால் விரியும் துனை வாய்ப்புகளின் நிபந்தனைகளிலொன்றை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் rulesஎன்ற உரையாடல் பெட்டியில் இது சரியாக இருந்தால் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இவ்வாறே Color scheme, data bars போன்ற வாய்ப்பு களையும் தெரிவுசெய்து இவைகளில் விரியும் துனைவாய்ப்புகளில் ஒன்றை தெரிவு செய்து செயல்படுத்திகொள்க.   இவைகள் நம்முடைய விருப்பத்திற்கேற்ப போதுமான தாக இல்லையெனில் new rules அல்லது more என்ற வாய்ப்பை சொடுக்குக பின்னர் தோன்றிடும்new rules என்ற  உரையாடல் பெட்டியில் நம்விருப்பத்திற்கேற்ற புதியவாய்ப்பை தெரிவுசெய்துகொள்க.

Previous Older Entries