நெகிழ்வுதன்மையுடனான தேடுதல் (Elastic Search)என்றால் என்ன?

தற்போது ஒவ்வொரு நொடியும் ஏறத்தாழ மில்லியன் கணக்கான கிகாபைட் அளவிற்கு தரவுகள் பல்வேறுவடிவங்களில் உருவாக்கப்பட்டு கொண்டே உள்ளன அதனால் நாம் இந்த தரவுகளின் கடல்மீது நீந்தி செல்லும் நிலையில் உள்ளோம் தொடர்ந்து நாம் இந்த தரவுகளை வெவ்வேறு வகையாக உருவாக்கி சேமிப்பதில் மட்டுமே நம்முடைய கவணத்தை செலுத்துகின்றோம்
ஆயினும் அவைகளை மிகச்சரியாக ஆய்வுசெய்து பார்வையாளனின் உற்ற நண்பனாக காட்சிபடுத்தாவிட்டால் இவ்வாறான மில்லியன் கணக்கான கிகாபைட் அளவு தரவுகளினால் நம் அனைவருக்கும் பயனேதும்இல்லை எனலாம்
ஆயிரகணக்கான சொற்கள் சேர்ந்து புரியவைக்கும் செய்தியை விட ஒரேயொரு காட்சியான படமானது எளிதாக பார்வையாளர்களுக்கு பல்வேறு செய்திகளை தருகின்றது என்ற மூதுரையின்படி இந்த தரவுகளை ஆய்வுசெய்து பார்வையாளர்களுக்கு காட்சி படமாக அமைப்பதே நெகிழ்வுதன்மையுடனான தேடுதல்(Elastic Search) ஆகும்
தொடர்ந்து முகநூல், மைக்ரோசாப்ட், ஈ-பே, விக்கிபீடியா, அடோப் போன்ற பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு வழிகளில் தங்களுடைய தரவுகளை பார்வையாளர்களுக்கு காட்சி படுத்துவதற்காக இந்த நெகிழ்வு தன்மையுடனான தேடுதலை(Elastic Search) பயன்படுத்தி கொள்கின்றன
இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://www.elastic.co/downloads/elasticsearch/ எனும் தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்க
பின்னர் நோட்பேடு அல்லது வேறு உரைபதிப்பானில் இந்த கோப்பினை திறந்து கொள்க தோன்றிடும் திரையில் Cluster name: என்பதில் my-application என்றவாறு உள்ள# என்ற குறியீட்டைமட்டும் நீக்கம் செய்துகொண்டு நாம் விரும்பும் பெயராக மாற்றியமைத்து கொள்க அவ்வாறே node.name என்பதில் உள்ள# என்ற குறியீட்டை மடடும் நீக்கம் செய்துகொண்டு node-1 என்றவாறு அமைத்து கொள்க மேலும் network.kost என்பதில் 192.168.0.1என்றவாறு உள்ளதில் # என்ற குறியீட்டை மட்டும் நீக்கம் செய்துகொண்டு நாம்விரும்பியவாறு முகவரியை உள்ளீடு செய்துகொள்க இறுதியாக இதனை சேமித்து வெளியேறுக
பின்னர் elasticsearch.batஎனும் செயலிகோப்பை செயல்படுத்திடுக அதனை தொடர்ந்து அனுபவமிக்கவர்கள் எனில் curl.exe என்பதையும் புதியவர்கள் எனில் Kibana என்பதையும் https://www.elastic.co/downloads/Kibana/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ElasticSearchRESTfulAPIs உடன் சேர்த்து பயன்படுத்தி கொள்க
நாம் தேடிடும் தரவுகளை Kibana என்பதிலுள்ள PUTஎனும் கட்டளையை செயல்படுத்தி சேமித்துகொள்க பின்னர் வினா எழுப்பவும் ஆய்வுசெய்திடவும் GET எனும் கட்டளையை செயல்படுத்தி கொள்க இறுதியாக காட்சியாக காண்பதற்காக Kibana என்பதிலுள்ள Create எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து இந்த திரையிலுள்ள Visualisation எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் விரியும் திரையிலுள்ள Pie Chart என்பன போன்றவைகளில் நமக்குத் தேவையான படத்திற்கான வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு அதனுடைய துனைவாய்ப்புகளையும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து காட்சியாக திரையில் காண்க

HTML5ஆனது கைபேசிகளின் பயன்பாடுகளை மேம்படுத்துவதில் ஒரு திறனுள்ள கருவியாகும்

ஆண்ட்ராய்டும் ஐஓஎஸ்ஸும் கைபேசிகளின் இயக்கமுறைமைகளில் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. ஆயினும் விண்டோ பிளாக்பெர்ரி போன்ற இயக்க முறைமைகளும் அதற்காக போராடிவருகின்றன.தற்போதைய வியாபாரஉலகில் இணையபயன்பாடு கைபேசி பயன்பாடு ஆகிய இரண்டும் தேவையா என்பதே இங்கு கேள்வியாகும் ஆயினும் தற்போதைய சூழலிற்கு தக்கவாறு தகவமைத்து கொள்வதற்காக ஏராளமான புதியகண்டுபிடிப்புகளும் புதிய தொழில்நுட்பங்களும் பெரிதும் பங்காற்றுகின்றன அவற்றுள் HTML5ஆனது இவ்வாறான புதிய தொழில்நுட்பங்களை நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் ஏராளமான வசதிகளை கொண்டதொரு கருவியாக விளங்குகின்றது இது தற்போதைய நவீண உலகிற்கு ஏற்ப இணைய பயன்பாடுகளையும் கைபேசிபயன்பாடுகளையும் உருவாக்கி மேம்படுத்திட உதவுகின்றது அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் இந்த HTML5ஐ பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் செயல்படும் கைபேசி பயன்பாடுகளை குறைந்த செலவில் மேம்படுத்துவதற்காக உபயோகபடுத்தி கொள்கின்றன. இந்த HTML5ஆனது அப்பாச்சியின் கோர்டோவா போன்ற அனைத்து தளங்களிலும் செயல்படும் கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதில் முன்னனியில் உள்ளது . இந்த கருவிகளை கொண்டு கைபேசியில் GPS,Camera,Location,Contacts போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்கிடமுடியும் மேலும் இந்த HTML5ஆனது கைபேசிஇணையம் மட்டுமல்லாது கைபேசிஇயக்க முறைமையின்மீதும் செயல்படுகின்ற கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதில் மிக முக்கிய பங்காற்றுகின்றது பொதுவாக ஒரு HTML5இன் கைபேசிபயன்பாடானது செந்தர இணைய உள்ளடக்கங்களையும் வடிவமைப்பு-களையும் கொண்ட கைக்கணி அல்லது மடிக்கணினி (டேப்ளெட் அல்லது ஸ்மார்ட் ஃபோன்) ஆகிய சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டதொரு இணைய பயன்பாடாகும் இவ்வாறுட உருவாக்கப்படும் கைபேசி இணைய பயன்பாடானது ஆண்ட்ராய்டு,ஐபோன்,விண்டோ ஆகிய தளங்களில் செயல்படும் திறன்மிக்கதாகும் இதன் வசதிகள்பின்வருமாறு
1.Offlinesupport இது தற்காலிக நினைவகம், இணையத்தில் சேமித்தல், தரவுதளங்களை வரிசைபடுத்துதல் போன்றவைகளை ஹெச்டிஎம்எல், ஜாவாஸ்கிரிப்ட், சிஎஸ்எஸ் ஆகியவடிவமைப்புகளில் ஆதரிக்கின்றது
2.multimedia ஒலி ,கானொளி படம், வரைகலை ஆகியவற்றை கையாளுதல் அசைவூட்டுபடங்களை கையாளுதல் ஆகிய வசதிகளை கொண்டதாகும்
3.Geolocation கைபேசி சாதனம் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளும் வசதிகொண்டது இந்தHTML5 எனும் கருவியில் கைபேசி இணைய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக பின்வரும் வரைச்சட்டங்கள் உள்ளன இதனுடைய JqueryMobile, SenchaTouch, SproutCore, JQT(JQTouch), Viziapps ஆகியவற்றை பயன்படுத்தி அனைத்து கைபேசி இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்ட சிறந்த தொரு கைபேசி இணைய பயன்பாடுகளை உருவாக்கிகொள்க

MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளிற்கு மாற்றான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

கணிதம் ,இயற்பியல், பொறியியல் ,பொருளாதாரம் ,கணினிஅறிவியல் போன்ற துறைகளில் பயிலும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அதிகஅளவு கணக்கீடுகளை செய்திட வேண்டியிருக்கும் அதற்காக இவர்களின் பேராசிரியர்கள் MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி கொள்க என பரிந்துரை செய்திருப்பார்கள்
இது கல்லூரி மாணவர்களுக்கு நல்லதொரு கற்பிக்கும் கருவியாக விளங்குகின்றது ஆயினும் இது ஒரு தனியுடைமை பயன்பாடாகும் அதனால் இதிலுள்ள வசதிகளை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் அதில் நாம் விரும்புகின்றவாறு கூடுதலான வசதிகளை கொண்டுவரமுடியாது இந்நிலையில் மூலக்குறிமுறைவரிகளை திருத்தம் செய்து வாடிக்கையாளர் விரும்பும் வசதி வாய்ப்புகளை கொண்டுவருவதற்காக இந்த MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளிற்கு மாற்றான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் பல உள்ளன
1.GNU Octaveஎனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் GPL எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள மிகச்சிறந்த MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளிற்கு மாற்றானதாக விளங்குகின்றது
2.Scilabஎனும் அடுத்த கட்டற்ற பயன்பாடானது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் CeCILL எனும் GPL இக்கு ஒத்தியங்கும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள மிகச்சிறந்த MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளிற்கு மாற்றானதாக விளங்குகின்றது
3.SageMathஎனும் மூன்றாவது கட்டற்ற பயன்பாடானது விண்டோ லினக்ஸ் மேக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் GPL எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள மிகச்சிறந்த MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளிற்கு மாற்றானதாக விளங்குகின்றது
4. அதேபோன்று Genius Mathematic Tool,FreeMat என்பன போன்ற பல்வேறு கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள் இந்த MATLAB எனும் தனியுடைமை பயன்பாட்டு மென்பொருளிற்கு மாற்றானதாக கிடைக்கின்றன இவைகளுள் நமக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க எனபரிந்துரைக்கப் படுகின்றது

பெரிய அளவுள்ள கோப்புகளை கணினி அல்லது செல்லிடத்து பேசியில் எவ்வாறு அனுப்புவது

. நம்முடைய கணினியிலுள்ள பெரிய அளவு கோப்புகளை மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிடும்போது உடன் சுவற்றில் அடித்த பந்து போன்று அவைகளை தம்மால் கொண்டு செல்ல முடியவில்லை என மின்னஞ்சல் வசதியானது நம்மிடமே திருப்பிவிடும். ஆனாலும்அவ்வாறான பெரிய அளவு கோப்புகளை எவ்வாறு அனுப்பி வைப்பது என நாம் தடுமாறி நிற்போம் கவலையை விடுக DropSendஎனும் வசதி நமக்கு ஆபத்து உதவியாக தயாராக இருக்கின்றது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக நம்முடைய கணினியில் புதியதாக பயன்பாட்டு மென்பொருள் எதையும் நிறுவுகை செய்திடத்தேவையில்லை மேலும் இந்த வசதிக்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை இது எளிய நடைமுறையில் மிகபாதுகாப்பாக அதாவது 256-bit AES எனும் பாதுகாப்புடன் JPGs, PFs, MP3s போன்ற எந்தவடிவமைப்பு கோப்பாக இருந்தாலும் 8 ஜிபி வரையுள்ள கோப்புகளை மிகவிரைவாக அனுப்பி வைக்கஉதவுகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதற்கான படிவத்தில் நம்முடைய மின்னஞ்சல் முகவரி, பெறுபவரின் முகவரி ,மின்னஞ்சல் அனுப்பும் பொருள் , அனுப்பும் செய்தி போன்ற விவரங்களை மட்டும் உள்ளீடு செய்து கொண்டு இந்த திரையில் உள்ள Select a File எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நாம் அனுப்பவிரும்பும் பெரிய அளவு கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் பச்சைவண்ண Send Your File எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிவைக்க விரும்பும் பெரிய அளவு கோப்பு பெறுபவருக்கு சென்று சேர்ந்துவிடும் ஏதேனும் இது தொடர்பான சந்தேகம் எழுந்தால் FAQஎனும் கேள்விபதில் பகுதியிலும் உதவி தேவையெனில் Helpஎனும் பக்கத்திற்கும் சென்று தீர்வுசெய்து கொள்க மேலும் விவரங்களுக்கும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளவும் http://www.dropsend.com/எனும் இணைய பக்கத்திற்கு செல்க
8

வேலை தேடுபவர்களுக்கு உதவிடும் செல்லிடத்து பேசி பயன்பாடுகள்

தற்போது நாம் வாழும் இன்றைய சமுதாய சூழலில் இளஞர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் வேலே தேடுவதுதான் தலையாய பிரச்சினையாக உள்ளது மனித நாகரிகம் அடையந்தொடங்கியவுடன் அனைருக்கும் கல்வி கற்கவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு கல்வியை கற்று முடித்தவுடன் முதலில் தான் வாழுவதற்காக வேலை தேடுவதே மிகமுக்கிய பெரிய பிரச்சினையாக உள்ளது இந்நிலையில் வேலேதேடும் ஒருவர் தமக்கு பொருத்தமான பணி எதுவென தேடிபெறவிழையும் வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காகவே தற்போது அனைவருடைய கைகளிலும் புழங்கும் செல்லிடத்து பேசியில் பல பயன்பாடுகள் தயாராக உள்ளன அவையாவன
1.பெரும்பாலான நிறுவனங்கள் தம்மிடம் வரும் வேலைவேண்டி வரும் விண்ணப்பங்களில் தேவையற்ற அனாவசியமான தகவல்கள் அதிகஅளவில் இருப்பதை விரும்புவதில்லை சுருக்கமாக அதேநேரத்தில்அனைத்து தகவல்களும் இருக்கவேண்டும் என விரும்பவார்கள் இவ்வாறான சுருக்கமான அனைத்து தகவலையும் தருவதற்காக Pocket Resumeஎன்ற செல்லிடத்து பேசி பயன்பாடு உதவுகின்றது
2.விண்ணப்பிபவரகள் இருமொழியறிந்த திறமையுடைவர்கள் யார்யார் என நிறுவனங்களுக்கு பட்டியலாக தயார்செய்வதற்கு DuoLingo எனும் செல்லிடத்து பேசி பயன்பாடு பெரிதும் உதவுகின்றது
3. இணையமில்லாத பணி எதுவுமேஇல்லை என்ற தற்போதைய நிலையில் வேலை தேடுபவர்களுக்கு DuoLingoஎனும் செல்லிடத்து பேசி பயன்பாடுபேருதவியாக உள்ளது
4 வேலை தேடுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு செல்லும்போது அங்கு எவ்வாறான கேள்வி கேட்பார்கள் நாம் அதற்கு எவ்வாறு பதில் கூறுவது என தயங்குவார்கள் அல்லது தடுமாறுவார்கள் அவ்வாறானவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு உதவுவதுதான் Interview Proஎனும் செல்லிடத்து பேசி பயன்பாடாகும்
5.நாம் பணிபுரிய விருக்கும் இடத்தின் சூழ்நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக Glassdoorஎனும் செல்லிடத்து பேசி பயன்பாடு உதவுகின்றது
6நேர்முகததேர்வு முடிந்தபின்னர் நமக்கு பணிஉத்திரவு கிடைப்பதற்கான தொடர்நடவடிக்கை எடுத்திடFelt எனும் செல்லிடத்து பேசி பயன்பாடு உதவுகின்றது
6

கூகுள் எனும் தேடுபொறியில் நாம் பயன்படுத்தாத பல்வேறு வசதிகளை பயன்படுத்திகொள்க

.நாம் விரும்பும் எந்தவொன்றையும் தேடிப்பிடித்திட கூகுளானது மிகப்பிரபலமாக உள்ளது
எனும் செய்தி அனைவரும் அறிந்ததே.தொடர்ந்து இதுமிகவிரைவாகவும் எளிதாகவும் தேடிப்பிடிப்பதற்கான நண்பனாக விளங்குகின்றது ஆயினும் நாமனைவரும் இந்த தேடுபொறியின் இரண்டுமூன்று பக்கங்களின் விவரங்களை மட்டுமே நாம் அறிந்து தெரிந்துகொள்கின்றோம் அவைகளுக்குமேல் இதில் உள்ள ஏராளமான சிறப்பு தொழில் நுனுக்கங்கள் எதையும் நாம் தெரிந்து பயன்படுத்தி கொள்வதே இல்லை .
உதாரணமாக

1.நாம் bread recipes என்பதை நாம் அறி்ந்து கொள்ள விரும்புகின்றோம் ஆனால் நமக்கு yeast என்பதை பற்றிய விவரம் தேவையில்லை எனும்போது bread recipes – yeast என்றவாறு தேடுபொறியில் உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

2. ஒருசொல்லிற்கு தொடர்புடைய சொற்களையும் அதே அர்த்தமுடைய சொற்களையும் தேடிபிடித்திடுவதற்காக விசைப்பலகையில் இடதுபுறம் இரண்டாவதுவரிசையின் முதல் விசைக்குறியீட்டினை நாம் தேடிடும் சொற்களின் பின்புறம் ~ என்றவாறு தேடுபொறியில் உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

3. ஒரு சொல்லிற்கான வரையறைஅல்லது விளக்கத்தை அறிந்துகொள்வதற்காக குறிப்பிட்ட சொல்லை தேடுபொறியில் உள்ளீடு செய்தபின் define என தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

4. குறிப்பிட்ட சொல் அல்லது சொல்தொடர் மட்டுமே நமக்கு தெரியும் மிகுதியை அறிந்து கொள்ள தேடுபொறியில் மேற்கோள்குறியீட்டிற்குள் நமக்கு தெரிந்தசொல் அல்லது சொல்தொடரை மட்டும் உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

5. செல்லிடத்து பேசி ஒன்று வாங்க விரும்புகின்றோம் ஆனால் குறப்பிட்ட விலைவிகிதத்தில் மட்டும் என விரும்பிடும்போது cell Phone 100$..200$.என்றவாறு தேடுபொறியில் உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

6. GIFஎனும் அசைவூட்டு படங்களை தேடிபிடித்திட கூகுளின் Google Images எனும் பகுதிக்கு செல்க அங்கு “Search tools” and “Type” என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் கீழிறங்கு பட்டியலில் Animated என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

7. நாம் தேடுபொறியில்தேடிக்கொண்டிருக்கும்போது மற்ற முக்கியபணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவேண்டும் என்பதையை மறந்துவிடுவோம் அவ்வாறான நிலையில் set timer for என தட்டச்சு செய்தபின்தோன்றிடும் திரையில் நமக்கு நினைவூட்டவேண்டிய மணி நிமிடம் நொடி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

8. சாதாரண கணிப்பான் போன்று நாம் கணக்கிடவேண்டியதை =என்ற குறிக்கு பின் உள்ளீடு செய்தால் போதும் உடன் கணக்கிட்ட விடை கிடைக்கும்

9. நாம் வெளிநாடு செல்லவிரும்பும்போது நம்முடைய நாட்டு பணத்திற்கு சமமாக குறிப்பிட்ட நாட்டின் பணத்தின் மதிப்பு எவ்வளவு அதனுடைய பெயர் என்னவென இந்த தேடுபொறியின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்

10. குறிப்பிட்ட சொல்லின் அல்லது சொற்தொடரின் முழுவடிவும் நமக்குத்தெரியவில்லை ஆனால் அவற்றுள் ஒருசில எழுத்துகள்மட்டும் தெரியும் என்ற நிலையில் தெரிந்ததை மட்டும்உள்ளீடு செய்த பின்னர் (*)என்ற குறியீட்டை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

11. குறிப்பிட்ட பெயரில் குறிப்பிட்ட கோப்பமைவில் தேடிபிடித்திட தேடுபொறியில் அதனுடைய பெயரை தட்டச்சு செய்தபின்னர் .ppt , .doc ,, pdf என்றவாறு கோப்பின் அமைவை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

கடினமான நடையிலுள்ள ஆங்கில கட்டுரைகளை எளிதாக புரிந்துகொள்ள உதவும் இணையதளம்

ஆங்கிலமொழியை அறிந்து கொள்ளவேண்டும் என விரும்பும் புதியவர்கள், ஆங்கிலமொழியை கற்றறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்,ஆங்கில மொழியில் உள்ள மிகக்கடினமான பகுதியை மட்டும் படித்துவுடன் எளிதாகஅறிந்து கொள்ள விரும்புவோர்கள், ஆங்கில மொழியை தம்முடைய மாணவர்களுக்கு எளிதாக கற்றுகொடுக்கு விரும்பும் ஆசிரியர்கள் என அனைத்துதரப்பினர்களுக்கும் https://rewordify.com/ எனும் தளம் மிகபயனுள்ளதாக விளங்குகின்றது முதன்முதல் இந்த தளத்தில் உள்நுழைபவர்கள் https://rewordify.com/index.php?demo=Y எனும் இணைய முகவரியில் செயல்படும் மாதிரி செயல்முறைகாட்சியை ஐந்துநிமிடத்திற்கு கண்டபின் பயன்படுத்தி கொள்வது குறித்து முடிவுசெய்துகொள்க அதன்பின்னர் இந்த இணையதள பக்கத்தை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பதற்காக https://rewordify.com/helpfirstuser.php?n=y எனும் இணைய முகவரியில் உள்ள படிப்படியானவழிகாட்டி பெரிதும் உதவுகின்றது மூன்றாவாதாக ஆங்கில மொழியில் உள்ள கட்டுரைகளில் குறிப்பிட்ட பத்திகளை படித்தால் எளிதில் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்பவர்களுக்கு ஆபத்துக்குதவும் நண்பனாக இந்த தளம் விளங்குகின்றது இதற்கென தனியாக அருஞ்சொற்பொருள் பேரகராதி எதையும் பயன்படுத்திகொள்ளாமல் எளிதாக புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் இது உதவுகின்றது நான்காவதாக https://rewordify.com/helpeducen.php எனும் இணைய முகவரியின் உதவியுடன் சிக்கலான கடினமானஆங்கில மொழியறிவை தம்முடைய மாணவர்களுக்கு எளிதாக எவ்வாறு புரியமாறு பாடங்களை நடத்தி மாணவர்களை புரிந்து கொள்ளுமாறும் அறிந்துகொள்ளுமாறும் செய்வது என உதவிக்கு வர இந்த இணையதளபக்கம் தயாராக உள்ளது இதனை பயன்படுத்திகொள்வதற்காக நம்முடைய கணினியில் புதியபயன்பாட்டு மென்பொருள் எதையும் நிறுவுகைசெய்திடதேவையில்லை இணையத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த தளத்தினை பயன்படுத்திகொள்வற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை இந்த இணைய பக்கத்தை கணினியில் மட்டுமே பயன்படுத்திடமுடியும் என்ற நிபந்தனை எதுவுமில்லை நம்மிடம் கைக்கணி அல்லது மடிக்கணினி (டேப்ளெட் அல்லது ஸ்மார்ட் ஃபோன்) ஆகிய எதுவிருந்தாலும் அதன்மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் இந்த தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்காக நம்முடைய தனிப்பட்ட தகவல் எதுவும் அதிகம் தரத்தேவையில்லை வழக்கமான பயனாளர் பெயர் ,கடவுச்சொற்கள் போன்ற சாதாரண தகவலுடன் நமக்கென்று தனியாக கணக்கு ஒன்றினை மட்டும் ஆரம்பித்தால் போதுமானதாகும் மாணவர்களுக்கு என தனி கணக்கினை ஆரம்பித்தபின் அவர்கள்படிப்பதையும் கற்பதையும் ஆசிரியர்கள் எளிதாக கண்காணித்திடமுடியும் என்ற அறிமுகத்துடன் வாருங்கள் இன்றே இந்த இணயதளத்தை பயன்படுத்தி எளிதாக கடினமான ஆங்கிலமொழியின் கட்டுரைகளை புரிந்து அறிந்துகொள்ளுங்கள்
5

Previous Older Entries