சீரழிந்து போன எக்செல் பணித்தாளை பழையநிலையில் மீட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்

   நாம் பயன்படுத்திடும் எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் பணித்தாளானது ஏதோவொரு காரணத்தினால் நம்மால் பயன்படுத்துமுடியாமல் சீரழிந்து போனநிலையில் பிற்காப்பு வழிமுறையில் ஏற்கனவே சேமித்துவைத்திருந்த கோப்பினை திறந்து பயன்படுத்த முனைந்தால் சமீபத்திய நிகழ்வுகள் எதுவும் சேமிக்கபடாமல் நிகழ்நிலை படுத்தபடாத கோப்பாக இருக்கும் இவ்வாறான நிலையில் பின்வரும் வழிமுறைகளில் நம்முடைய எக்செல் பணித்தாளை பழையநிலையில் மீட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்

1 நாமே முயன்று அவ்வாறான எக்செல் பணித்தாளை மீட்டாக்கம் செய்திடலாம் அதற்காக எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File =>Open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பின் பெயரை தெரிவுசெய்துகொண்டு Open என்பதன் கீழிறங்கு பட்டியலிலுள்ள Open And Repair என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் microsoft Excellஎனும் சிறுஉரையாடல் பெட்டியில் Repair என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்

11.1

2 எக்செல் பணித்தாளினை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இவ்வாற கோப்பு சீரழிந்துபோனால் உடன் எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் File=> Open =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பின் பெயரை தெரிவு செய்து கொண்டு Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்

3 எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File=>Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் excel optionsஎனும் உரையாடல் பெட்டியில் இடதுபுறமுள்ள Formula என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் வலதுபுறபகுதியில் calculation options என்பதன் கீழுள்ள வாய்ப்பகளில் manual என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு OK. எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக இதன் பின்னர் தேவையான எக்செல் கோப்பினை திறந்திடுக

4 திரையின் கீழே உள்ள நிலைபட்டையின் இடதுபுறமூலையிலுள்ள Start =>All Programs => Microsoft Office =>Microsoft Office Tools => Microsoft Office Application Recovery => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Microsoft Office Application Recovery எனும் உரையாடல் பெட்டியில் Microsoft Office Excel எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்
11.4

5 இவ்வாறு சீரழிந்த எக்செல் கோப்பினை வேறு கோப்பகத்திற்கு நகர்த்தி சென்று அங்கு திறந்தால் ஒருசில நேரங்களில் சரியாக திறந்துகொள்ளும்

6 லிபர் ஆஃபிஸ் அல்லது ஓப்பன் ஆஃபிஸ் ஆகிய கட்டற்ற பயன்பாடுகளின் வாயிலாக இந்த சீரழிந்த எக்செல் கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்

7 எம்எஸ் ஆஃபிஸின் மற்ற பயன்பாடுகளான வேர்டுபேடு அல்லது வேர்டில் ஆகிய பயன்பாட்டின் வாயிலாக இந்த சீரழிந்த எக்செல் கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்

8 புதிய எக்செல் கோப்பினை திறந்து சீரழிந்த எக்செல் கோப்பின் பணித்தாளினை ஒவ்வொரு பணித்தாளின் முகவரியை இட்டு அதன்மூவலம் குறிப்பிட்ட கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்

9 சீரழிந்த எக்செல் கோப்பின் ஒவ்வொரு பணித்தாளையும் திறந்து கொண்டு எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File=>Save As=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Save As எனும் உரையாடல் பெட்டியின்Save As Type என்பதன் கீழிறங்கு பட்டியிலிலிருந்து SYLK எனும் கோப்புஅமைவை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் சிறுஉரையாடல் பெட்டியில்Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின் .slkஎனும்வடிவமைப்பில் சேமிக்கபட்டுள்ள கோப்பு ஒவ்வொன்றையும் திறந்து .xls எனும் வடிவமைப்பாக சேமித்துகொள்க

10 மேலேகூறிய வழிமுறைகளில் எக்செல் பணித்தாளின் தரவுகளை மட்டுமே மீட்டாக்கம் செய்யமுடியும் எக்செல் பணித்தாளில் தானியங்கியாக செயல்படும் மேக்ரோ கட்டளைகளை மீட்டாக்கம் செய்திடமுடியாது ஆனால் மேக்ரோக்களையும் மீட்டாக்கம் செய்திட

முதலில் ஏதேனுமொரு எக்செல் பணித்தாளை திறந்துகொள்க பின்னர் வழிமுறை 3 இல் கூறியவாறு calculation options என்பதன் கீழுள்ள வாய்ப்பகளில் manual என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து அதனை செயலில் கொண்டுவருக அதன்பின்னர் File=>options=> என்றவாறு கட்டளைகளை செரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் Excel options எனும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் Trust center என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில்Trust center settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் Macro settings என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில் Disable All Macros without Notificationஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Trust center என்ற உரையாடல் பெட்டியில் Ok எனும் பொத்தானையும் Excel optionsஎனும் உரையாடல் பெட்டியில் Ok எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பிறகு சீரழிந்த எக்செல் கோப்பின் பணித்தாளினை திறந்து விசைப்பலகையில் [Alt]+[F11] ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி திரையில் isual Basic Editor (VBE).ஐ தோன்றிடசெய்திடுக பின்னர் விசைப்பலகையில் [Ctrl]+R) ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி திரையில் Project Explorerஎன்பதை திறந்துகொண்டு அதில் தேவையான module இல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Exportன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதற்கு ஒரு பெயரிட்டு சேமித்திடுக இந்த படிமுறையை பின்பற்றி தேவையான மேக்ரோக்களின் module களை மேலேற்றம் செய்தபின்இறுதியாக திரையையும் எக்செல் திரையையும் மூடிவெளியேறுக பிறகு தரவுகள் மீட்டாக்கம் செய்யபட்ட எக்செல்பணித்தாளில் இந்த module களை கீழிறக்கம் செய்து சேமித்துகொள்க

OSஎனும் இயக்கமுறைமைகள் பற்றிய பொதுவான விவரங்களை அறிந்துகொள்வோம்

பொதுவாக கணினியை செயல்படுத்தி பயன்படுத்த விழையும் புதியவர்கள் அனைவரும் முதலில் OSஎன்றால் என்னவென தெரிந்துகொண்டு கணினியை பயன்படுத்திகொள்வது நல்லது என பரி்ந்துரைக்கபடுகின்றது

OSஎன்றால் இயக்கமுறைமை (Operating System) எனும் சொற்களின் முதலெழுத்தினை கொண்ட குறும்பெயராகும் இ்ந்த இயக்கமுறைமையே கணினியின் அடிப்படையான செயலியாகும் இது கணினியின் அனைத்து வன்பொருட்களின் இயக்கத்தையும் கட்டுபடுத்தி நாம்விரும்புவதற்கேற்ப அல்லது கட்டளையிடுவதற்கேற்ப அந்தந்த வன்பொருட்களை செயல்படுத்துகின்றது இந்த இயக்கமுறைமையின் மீதுதான் நாம் பயன்படுத்திடும் அனைத்து பயன்பாடுகளும் செயல்படுகின்றன என்ற அடிப்படை உண்மையை மனதில்கொள்க மேலும் நம்மில் பெரும்பாலானவர்கள் விண்டோ எக்ஸ்பி , விண்டோ 7 போன்ற தனியுடைமை இயக்கமுறைமையை பயன்படுத்திவருகின்றோம் அடுத்ததாக ஆப்பிள்இயக்கமுறையை பயன்படுத்துகின்றனர் மூன்றாவதாக மேக் இயக்கமுறைமையை பயன்படுத்துகின்றனர் இவையனைத்தும் தனியுடைமை இயக்கமுறைமைகளாகும் நான்காவாதாக மிகபிரபலமான கட்டற்ற லினக்ஸ் எனும் இயக்கமுறைமையாகும் இதில் நூற்றுக்கும் அதிகமான வகையில் லினக்ஸ் இயக்கமுறைமைகள் பயன்படுத்துவதற்காக ஏதுவாக கிடைக்கின்றன அதற்கடுத்து ஐந்தாவதாக கையடக்க சாதனங்களான ஸ்மார்ட் ஃபோன் டேப்ளெட் போன்றவைகளிலும் இயக்கமுறைமைகள் செயல்படுத்தபடுகின்றன அவற்றுள் ஆண்ட்ராய்டு என்பது மிகபிரபலமான இயக்கமுறைமையாகும் ஆறாவாதாக ஐஃபோன் ,ஐபேடு, ஐபாட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கெனஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஓஸ் என்பது இந்த சாதனங்களை செயல்படுத்துவதற்கான மிகச்சிறந்த இயக்கமுறைமையாக விளங்குகின்றது ஆறாவதாக மடிக்கணினிக்காகவே குரோம்புக் எனும் இயக்கமுறைமை உள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க இதுபோன்று ஏராளமானவகையில் இயக்கமுறைமைகள் இருந்தாலும் நாம் பயன்படுத்தவிழையும் பயன்பாட்டு மென்பொருளானது எந்தெந்த இயக்கமுறைமைகளில் மிகச்சரியாக செயல்படும்என தெரிந்து பொருத்தமானவற்றை தெரவுசெய்து பயன்படுத்தினால் மட்டுமே நாம் பயன்படுத்த விழையும் பயன்பாடானது மிகச்சரியாக செயல்பட்டு நமக்கு பயனளிக்கு

ம்9

கவணத்தை திசைதிருப்பி கணினியிலுள்ள மிகமுக்கியமான தரவுகளை அபகரித்திடும் விளம்பரங்களை தவிர்த்திடுக

உ ங்களுடைய கணினியில் உள்ள ஜாவா பயன்பாட்டினை நிகழ்நிலை படுத்திடவேண்டுமா என்றும், அடோபை நிகழ்நிலை படுத்தவேண்டுமா என்றும் ,உங்களுடைய கணினியில் ஏராளமான பிழைஏற்பட்டுள்ளதால் கணினியானது மெதுவாக இயங்கிடும் நிலை காணப்படுகின்றது அதனால் அவ்வாறான பிழைகளை எங்களுடைய தொழில்நுட்ப ஆதரவுடன்களை சரிசெய்திட எங்களுடைய பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்திடவேண்டுமா என்றும், உங்களுடைய கணினியில் தேவையற்றபயன்பாடுகள் ஏராளமான அளவில் குப்பைபோன்று குவிந்துள்ளன அதனால்தான் உங்களுடைய கணினியின் இயக்கம் மெதுவாகின்றது அதனால் முதலில் உங்களுடைய கணினியின் நினைவகத்தை உடன் சுத்தமாக்கிகொள்க என்றும், சிலநேரங்களில் விண்டோவின் பெயர்களிலேயே நம்மை தவறாக யூகித்திடுமாறு வழிகாட்டும் செயலையும் செய்கின்ற எண்ணற்று விளம்பரங்களை நம்முடைய வழக்கமான பணியை செய்யவிடாமல் தடுத்து நம்முடைய கவணத்தை திசைதிருப்பி தவறான இணைய பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்று நம்முடைய கணினியிலுள்ள மிகமுக்கியமான தரவுகளை அபகரித்திட செய்கின்றன

8

இந்த நிலையை தவிர்த்து பாதுகாப்பாக விண்டோ இயக்கமுறைமையில் நம்முடைய பணியை ஆற்றிட விண்டோவின் இணையஉலாவியான இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திரையை தோன்ற செய்திடுக அதில் மேலே வலதுபுறமூலையிலுள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் திரையில் Safetyஎன்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக பின்னர் Smartscreen Filter என்பதை தெரிவுசெய்து செயலில் இருக்குமாறு செய்துகொள்க இதன்பின்னர் எந்தவொரு பதிவிறக்கம் செயலை செய்தாலும் இந்த கருவியானது தீயநச்சுநிரல் தானாக பதிவிறக்கம் ஆவதை இது வடிகட்டி தடுத்துவிடுகின்றது

 நம்முடைய   கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு அமைத்திட

கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு செய்துகொள்ளமுடியும் இதற்காக நம்முடைய கணினியின் தொடக்கபட்டயின் தேடிடும் பெட்டியில்  Adjust Clear Type textஎன தட்டச்சு செய்தவுடன் பட்டியலில் வரும்  Adjust Clear Type text எனும்  உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக6.1

6.1

 பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில்  Turn on Clear Type எனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொண்டு nextஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக  பின்னர் வரும் திரையில் கணினி திரையின் தெளிவுதிறனை அமோதித்து nextஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக  அதற்கடுத்ததாக தோன்ரிடும் திரைகளில்  தேவையான உரைநடைகளின் சரியான நாம் விரும்பும் நடையை தெரிவுசெய்து கொண்டு ஒவ்வொன்றிலும் nextஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்துகொண்டே வந்து இறுதியாக திருப்தியுற்றால் Finishஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக இதன்பின்னர் நம்முடைய   கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்தறியுமாறு அமையும்

6.2

6.2

இணையவலைபின்னலின் திறவுகோள்( Network Key) என்றால் என்ன? 

  பொதுவாக Freedompop போன்ற இணையவலைபின்னலை பயன்படுத்த தொடங்கியவுடன்   இதற்காக இணையவலைபின்னல் திறவுகோளை(network key ) பயன்படுத்திடுமாறு திரையில் நம்மிடம் கோருகின்றது  இங்கு இணையவலைபின்னல் திறவுகோள்என்பது இணையவலை பின்னலிற்குள் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களாகும்  என்பதைமனதில் கொள்க  இது நம்முடைய வழிசெலுத்தியுடன் உள்ள வழிகாட்டி ஆவணத்துடன் இருக்கும் அல்லது  வழிசெலுத்தியில் ஒரு சிறுசெய்திபெட்டியாக ஒட்டபட்டிருக்கும் இணைய சேவை வழங்குபவர் இந்த வழிசெலுத்தியை அமைவுசெய்திடும்போது நமக்கு இதற்கான கடவுச் சொற்களை வழங்கிடுவார்கள் அல்லது நாமே கடவுச்சொற்களை தெரிவு செய்து கொள்ளுமாறு கோருவார்கள் ஆயினும் இந்த கடவுச்சொற்களை எப்போதும் கண்டிப்பாக தவறவிட்டுவிடகூடாது  இந்த  Freedompop  ஐ அனுகுவதற்கான  வழிமுறையை இப்போது காண்போம்

5.1

5.1

வொய்ஃபி சாதனங்களின் வாயிலாக இயல்புநிலை கடவுச்சொல்லான  Freedompop  ஐ அல்லது யூஎஸ்பி வாயில்வழியாக  இணையஉலாவியை திறந்து கொள்க அதில் Photon அல்லது  Sleeve பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.1.1”  என்றும்        Freedom Stick பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.14.1”  என்றும்                Freedom Hub Burst பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.15.1”  என்றும்           Overdrive பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.0.1”  என்றும் உள்ளீடு செய்துகொள்க  பிறகு  நம்முடைய கம்பியில்லா சாதனங்களுக்கு ஏற்ப இயல்புநிலை கடவுச் சொற்களானது “admin” அல்லது “password“என்றிருக்கும் அதனை  SSID, password என மாறுதல் செய்துகொண்டு பாதுகாப்பு கட்டமைவையும் மாற்றியமைத்துகொள்க  பின்நர் இயல்புநிலை கடவுச்சொற்களை மாற்றியமைத்துகொள்க  இந்த வழிமுறையை பற்றிய மேல்விவரங்களுக்கு https://www.youtube.com/watch?v=MxGdU765-tI எனும் இணைய பக்கத்தில் கானொளிகாட்சியாக கண்டு தெளிவுபெறுக

5.2 5.2

புதிய ரோபோலினக்ஸ் எனும் இயக்கமுறைமையை விண்டோஇயக்கமுறைமைக்கு மாற்றாக பயன்படுத்திகொள்க

தற்போது ஏராளமான அளவில் கட்டணமற்ற ,கட்டற்ற லினக்ஸ் இயக்க முறைமைகள் அதிலும் புதிய புதிய மேம்படுத்தபட்ட வெளியீடுகள் வெளியிடபட்டு கொண்டே உள்ளன இவைகளுள் ரோபோலினக்ஸ் என்பது சமீபத்திய வெளியீடாகும்  இதில் என்னதான் புதியவசதி அல்லது புதுமை உள்ளன என பார்த்திடுவோம்

இது விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் எளிதாக லினக்ஸ் இயக்கமுறைமைக்கு மாறுவதற்கான மிகச்சிறந்ததாக உள்ளது அதுவும் பயனாளர்களின் உற்றநன்பனாக பல்வேறு வழிகளில் உதவுகின்றது இதனை நச்சுநிரல் எதுவும் தாக்காது மிக பாதுகாப்புகொண்டது. மேலும் இது வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளும் வசதிகொண்டது . கணினியில் இணைந்துள்ள அல்லது இணைக்கபடும் அனைத்து வன்பொருட்களை உடனடியாக தானாகவே செயல்படுத்துவதற்கேதுவாக கட்டமைவு செய்துகொள்கின்றது   ஒளஒலிபடத்தைஇயக்கும சாதனம் ,வொய்ஃபி ,அச்சிடும் சாதனம் ஆகியவற்றை ஓரிரு நிமிடங்களில்  கட்டமைவுசெய்து நிகழ்நிலைபடுத்தி கொள்கின்றது  ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக 30,000 இற்கும் அதிகமான பயன்பாட்டு மென்பொருட்களை நம்முடைய கணினியில் நிறுவகை செய்துகொள்கின்றது மிகமுக்கியமாக விண்டோ எக்ஸிபி முதல் விண்டோ 7 வரையான  இயக்கமுறைமைகளில் இந்த ரோபோலினக்ஸ் இயக்கமுறைமைக்குள் நிறுவுகை செய்து மிக எளிதாக செயல்படுத்திட உதவுகின்றது அல்லது விண்டோஇயக்கமுறைமையில் செயல்படும் பயன்பாடுகளை ஸ்டீல்த்விஎம் (http://www.robolinux.org/lm/c-drive-to-vm/ )எனும் பயன்பாட்டு மென்பொருள்வழியாக மிகஎளிதாக செயல்படுத்திட உதவுகின்றது மேலும் இந்த ஸ்டீல்த்விஎம் எனும் மென்பொருள்வழியாக உபுண்டு லினக்ஸ்,மின்ட்,ஓப்பன்சுசி ஃபெடோரா, டெபியன் போன்ற அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளையும் கூடுதலாக இதில்  செயல்படுத்தி நம்முடைய கணினியை இரட்டை இயக்கமுறைமையாக பயன்படுத்திடமுடியும்  அதுமட்டுமல்லாது விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளையும் இந்த ரோபோலினக்ஸில் செயல்படுத்தி பயன்பெறலாம் மேலும் விவரங்களுக்கு http://www.robolinux.org/ எனும் இணைய முகவரிக்கு காணொளியாக காண https://www.youtube.com/watch?v=kkS6kuLcBQc எனும் இணைய பக்கத்திற்கு செல்க

1

வாருங்கள் WhatPulse எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி பயன்பெறுக

WhatPulse எனும் பயன்பாட்டினை உபயோகித்து நாம் நம்முடைய கணினியை பயன்படுத்திடும் செயலை மேற்பார்வையிட்டு கட்டு படுத்திகொள்ளமுடியும் இதற்காக இந்த பயன்பாட்டினை https://whatpulse.org/ எனும் இதனுடைய  இணையபக்கத்திற்கு பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வழியாக அல்லது முகநூல் வழியாக உள்நுழைவுசெய்க பின்னர்  இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து  நிறுவுகை செய்து நாம் நம்முடைய கணினியை பயன்படுத்துவதை மேற்பார்வையிட்டு கட்டுபடுத்திடலாம் அல்லது நேரடியாக இணையத்தின் வாயிலாக நம்முடைய கணினியை பயன்படுத்திடும் செயலை மேற்பார்வையிட்டு கட்டுபடுத்திடலாம்  இந்த பயன்பாட்டின் Overviewஎனும் தாவிபொத்தானின் திரையானது  நம்முடைய கணினியில் என்னென்ன வன்பொருட்கள் இணைக்கபட்டுள்ளன என்ற விவரத்தை அளிக்கின்றன மேலும் இதிலுள்ள Inputஎனும் தாவிபொத்தானின் திரையானது நாம் நம்முடைய கணினியில் உள்ளீடு செய்திடும் அனைத்து தகவல்களையும் தொகுத்து அளிக்கின்றது அதுமட்டுமல்லாது இதிலுள்ள Networkஎனும் தாவிபொத்தானின் திரையானது  நம்மால் நம்முடைய கணினியிலிருந்து பதிவேற்றம் செய்யபட்ட நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்யபட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்துஅளிக்கின்றது  கூடுதலாக இதிலுள்ள Uptimeஎனும் தாவிபொத்தானின் திரையானது எவ்வளவுநேரம் நாம் நம்முடைய கணினியை பயன்படுத்தியுள்ளோம் என்றதகவலையும் தருகின்றது  இதனோடு இதிலுள்ள Settings and Account எனும் தாவிபொத்தானின் திரையானது நாம்விரும்பியவண்ணம் நம்முடைய கணினியில் அமைவுசெய்துகொள்ள அனுமதிக்கின்றது  இவ்வாறு பல்வேறு வசதிகளை வழங்கும் இந்த பயன்பாட்டினை உபயோகித்து நாம் நம்முடைய கணினியை பயன்படுத்துவதை மேற்பார்வையிட்டு கட்டுபடுத்திகொள்வோம் வாருங்கள்

3

ஜிமெயிலை அதிகாரபூர்வமான காரணியை கொண்டு பாதுகாத்திடுக

 பொதுவாக எந்தவொரு தனிநபரும் ஜிமெயிலின் திரைக்கு உள்நுழைவு செய்திடும்போது பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகிய இரண்டையும் மிகச்சரியாக பயன்படுத்திய பின்னரே உள்ளநுழைவுசெய்திட அனுமதிக்கபடும் இதைவிட கூடுதலாக ஜிமெயிலை இரண்டு அதிகாரபூர்வமான காரணியை கொண்டு பாதுகாத்திடுவதற்காக முதலில் கூகுளின் அமைவு (Google’s set-up )திரைக்கு செல்க அங்கு set-up என்பதை செயல்படுத்துக

2.1

பின்னர் பயனாளர் பெயர் கடவுச்சொற்களை உள்ளீடு செய்துநம்முடைய ஜிமெயில் கணக்கில் உள்நுழைவு செய்திடுக அதன்பின்னர் அதிகாரபூர்வ குறியீடுகளை பெறுவதற்கான நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணை குறிப்பிடுக அவ்வாறு குறிப்பிடும்போது உரையாவணமாகவா அல்லது குரல்ஒலிவழியாகவா என்பதில் ஒருவாய்ப்பை தெரிவுசெய்துகொள்க

2.2

உடன் கிடைக்கபெறும் அதிகாரபூர்வ குறியீடுகளை கொண்டு நம்முடைய ஜிமெயில் கணக்கி்ற்குள் உள்நுழைவுசெய்திடுக இவ்வாறான வழிமுறையில் ஜிமெயிலில் மிகபாதுகாப்பாக நம்முடைய மின்னஞ்சல்களை செயல்படுத்தலாம்

2.3

உரை(word) ஆவணத்தை வரைகலை(Jpeg) ஆவணமாக சேமிக்கலாம்

 இவ்வாறு உரை(word) ஆவணத்தை வரைகலை(Jpeg) ஆவணமாக மாற்றியமைத்து சேமித்திடுவதற்காக ஏராளமான வழிகள் உள்ளன ஆனால் அவ்வாறு மாற்றியமைத்திடும்போது அதன்பின்னர் அதில் திருத்தம் செய்திடமுடியாது என்ற செய்தியை மனதில் கொள்க பொதுவாக லிபர் ஆஃபிஸின் உரையாவணத்தை ப்பிடிஎஃப் ஆவணமாக மாற்றி யமைப்பதுதான் சிறந்தவழியாகும் இவ்வாறான ஆவணத்தை தேவையெனில் திருத்தம் செய்திடமுடியும் இவ்வாறு உரையாவணத்தை ப்பிடிஎஃப் ஆவணமாக மாற்றிட லிபர்ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள File=>Save as PDF=> என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக உடன் தோன்றிடும் Save as எனும் உரையாடல் பெட்டியில் இந்த ஆவணகோப்பிற்கு ஒரு பெயரையும் சேமிக்கும் இடத்தையும் உள்ளீடு செய்துகொண்டு Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ப்பிடிஎஃப் ஆவணமாக சேமித்திடுக

மேலும் உரை(word) ஆவணத்தை வரைகலை(Jpeg) ஆவணமாக மாற்றியமைத்திட பின்வரும் வழிமுறையை பின்பற்றிடுக

முதலில் இவ்வாறு மாற்றிட விரும்பும் வேர்டு ஆவணத்தை திரையில் தோன்ற செய்திடுக பின்னர் விசைப்பலகையில் உள்ள Ctrl , PrtSc ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் திரைகாட்சியானது நகலெடுக்கபட்டுவிடும் அதன்பின்னர் பெயின்ட்டிற்கான பயன்பாட்டினை செயல்படுத்தி திரையில் தோன்றசெய்க அவ்வாறு தோன்றிடும் காலியான பெயின்ட்எனும் பயன்பாட்டின் திரையில் விசைப்பலகையிலுள்ள Ctrl+ V ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் முன்பு நம்மால் நகலெடுக்கபட்ட திரைகாட்சியானது பெயின்ட்டில் ஒட்டபட்டுவிடும் பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்காக செயல் படுத்துவதை போன்று திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள File=>Save as => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துகஉடன் தோன்றிடும் Save as எனும் உரையாடல் பெட்டியில் இந்த ஆவணகோப்பிற்கு ஒரு பெயரையும் கோப்பின் வடிவமைப்பிற்கான கீழிறங்கு பட்டியலிலிருந்து Jpeg என்பதையும் தெரிவுசெய்து கொண்டு சேமிக்கும் இடத்தையும் உள்ளீடு செய்து Save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Jpeg ஆவணமாக சேமித்திடுக இது சரியான வழியாக தோன்றவில்லை அதனால்

அடுத்தவழிமுறையை பார்ப்போம் விண்டோ7 அல்லது அதற்கு பிந்தைய இயக்கமுறைமையை பயன்படுத்துபவராக இருந்தால் முதலில் இவ்வாறு மாற்றிட விரும்பும் வேர்டு ஆவணத்தை திரையில் தோன்ற செய்திடுக பின்னர் திரையின் கீழே நிலைபட்டியில் இடதுபுறமூலையிலுள்ள விண்டோவின் தொடக்கபட்டியலை விரியசெய்திடுக அதில் All program=> Accessories=> Snipping Tool=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துகஉடன் திரையில் விரியும் Snipping Tool எனும் சிறு உரையாடல் பெட்டியில் NEWஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நம்முடைய வேர்டுஆவணத்தில் தேவையான பகுதிமுழுவதையும் இடம்சுட்டியை பிடித்து இழுத்துசென்று தெரிவுசெய்துகொண்டு File=>Save as Jpeg=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் கோப்பானது Jpeg ஆவணமாக சேமிக்கபடும்

இவ்விரண்டும் திரையில் தோன்றிடும் பகுதி மட்டுமே Jpeg ஆவணமாக சேமிக்கமுடியும் வேறொருவழிமுறையாக இணையத்தில் நேரடியாக உரை(word) ஆவணத்தை வரைகலை(Jpeg) ஆவணமாக மாற்றியமைத்திட உருமாற்றம் செய்திடும்கட்டணத்துடன் கூடிய அல்லது கட்டணமற்ற Zamzer ,AVS போன்ற பயன்பாடுகளில் ஒன்றை பயன்படுத்தி ஆவணம் முழுவதையும் வரைகலை(Jpeg) ஆவணமாக மாற்றியமைத்துகொள்க

3

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-32-லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு எளிய அட்டவணையை உருவாக்குதல்-தொடர்ச்சி

அட்டவணையின் உரையை வடிவமைத்தல் அடுத்ததாக அட்டவணையின் தனிப்பட்ட கலண்களில் இருக்கும் உரையை இப்போது வடிவமைப்பு செய்திடலாம் முதலில் நாமேமுயன்று பத்திவடிவமைப்பு உதவியுடன் உரையை வடிவமைப்பு செய்திடலாம் ஆயினும் சொந்த பத்தியும் எழுத்துரு பாணியையும் வரையறுத்திடும் செயலானது ஒரேமாதிரியான வடிவமைப்பை பராமரிப்பதற்காக உதவிசெய்திடும் என பரிந்துரைக்கபடுகின்றது இதுமட்டுமல்லாது உரையோட்டம் ,உரையின் இடஅமைவு, உரையின் நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் . கலண்களின் உரையை தனித்தனி கலண்களாகவும் குழுவான கலண்களை தொகுப்பாக ஒரேமாதிரியாகவும் நாம்விரும்பியவாறு வடிவமைப்பு செய்திடலாம்

உரையோட்டடத்தை குறிப்பிடுதல் இதற்காக Table Format எனும் உரையாடல் பெட்டியை பயன்படுத்தி பின்வருமாறு செயற்படுத்தலாம் இந்த உரையாடல் பெட்டியின் Text Flow எனும் தாவிபொத்தானின் பக்ககத்தில் Text Flow என்பதன்கீழ் உள்ள Break என்ற வாய்ப்பையும் அதனோடு Page அல்லது Column , Beforeஅல்லது After ஆகிய வானொலி பொத்தான்களையும் பயன்படுத்தி அட்டவணையின் முன்புறம் அல்லது பின்புறம் பக்கமுறிவு அல்லது நெடுவரிசைமுறிவை உள்ளிணைப்பு செய்திடலாம் . இதில் பக்கமுறிவை பயன்படுத்தினால் அதனோடு With Page Style எனும் வாய்ப்பை தேர்வுசெய்தும் page numberஎன்பதில் புதிய பக்க எண்களை தெரிவுசெய்தும் அமைவுசெய்திடலாம்

அடுத்ததாக Allow table to split across pages and columns எனும் வாய்ப்பினை தெரிவு செய்து அட்டவணையானது அந்த பக்கமுழுவதும் இருக்குமாறு செய்திடலாம் இந்த வாய்ப்பினை தெரிவுசெய்தால் இதற்கடுத்த Allow row to break across pages and columns எனும் வாய்ப்பினை செயலற்றதாக செய்திடுக

Keep with next paragraph எனும் வாய்ப்பானது இதற்கடுத்ததாக வரும் உரையையும் அட்டவணையையும் அடுத்த பத்தியாக பராமரித்திட செய்திடுகின்றது

இதே அட்டவணையானது ஒன்றிற்குமேற்பட்ட பக்கத்திற்கு விரிவடையும்போது அட்டவணையின் தலைப்பை ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற செய்வதற்கு Repeat heading எனும் வாய்ப்பு பயன்படுகின்றது

பொதுவாக உரையோட்டமானது இடதுபக்கத்திலிருந்து வலதுபுற மாக செல்வதுபோல அமைத்திட Text directionஎன்ற உரைபெட்டியிலுள்ள Left to right எனும் வாயப்பை பயன்படுத்தி கொள்க அல்லது அட்டவணைக்கு முன்புறம் உள்ள உரையோட்டத்தை பராமரித்திட Use superordinate object settingsஎனும்வாய்ப்பை பயன்படுத்தி கொள்க

அடுத்ததாக alignment என்பதன்கீழ்உள்ள vertical alignment என்ற உரை பெட்டியின் கீழிறங்கு பட்டியிலிருந்துtop, center ,bottom ஆகிய மூன்றில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க

அல்லது தேவையான கலண்களில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Cell => Center=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் துனைபட்டியில் top, center ,bottom ஆகிய மூன்றில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொள்க

1

1

எண்களை வடிவமைத்தல் அட்டவணை முழுவதையும் அல்லது குழுவான கலண்களில் பின்ன எண்கள் ,நாள் ,ஆகியவறறில் நாம் விரும்பியவாறு எண்களை வடிவமைத்திடலாம் இதற்காக முதலில் Tools => Options => LibreOffice Writer => Table என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்தியபின் விரியும் உரையாடல் பெட்டியில் Number recognition என்றவாய்ப்பையும் Number format recognition என்ற வாய்ப்பையும் இயலுமை செய்திடவேண்டும் அதாவது அட்டவணையில் உள்ளஎண்களை எண்களாக எடுத்து கொள்ள செய்திட வேண்டும் இல்லையெனில் அட்டவணையில் உள்ளஎண்களையும் உரையாகவே கணக்கில் கொள்ளும்

அடுத்ததாக தேவையான கலண்களில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Number Format=>Category list=> என்றவாறு வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் currency, date, or text ஆகிய துனைவாய்ப்புகள் அல்லது Format list எனும் வாய்ப்பு அல்லது Language list எனும் வாய்ப்பு ஆகியவற்றை தெரிவு செய்து கொள்க நாள் வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்தால் உடன் DDMMYYYY. என்றவாறு அதனுடைய வடிவமைப்பானது பிரிதிபலிக்கும் தேவையெனில் மாற்றியமைத்து கொள்ளலாம். எண்களின் வடிவமைப்பில் பொதுவாக எண்களானது ஒருகலணில் கீழே வலதுபுறம் அமையுமாறு இயல்புநிலையில்இருக்கும் தேவையெனில் மாற்றியமைத்துகொள்க

அட்டவணையிலுள்ள கலண்களின் உரையை நாம்விரும்பிய திசையில் 0அல்லது 90 அல்லது 270 ஆகிய கோணங்களில் உரையோட்டம் இருக்குமாறு சுழற்றியமைக்கலாம் இதற்காக அட்டவணையில் தேவையான கலண்களை தெரிவுசெய்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் Format => Character=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Characterஎனும் உரையாடல் பெட்டியின் Positionஎனும் தாவிபொத்தானின் திரையில் Rotation / scalingஎன்றபகுதியின்கீழ் 0அல்லது 90 அல்லது 270 ஆகிய கோணங்களில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2

2

அட்டவணையில் தரவுகளை உள்ளீடு செய்வது திருத்துதல் செய்தல்

இதற்காக முதலில் அட்டவணைக்குள் தேவையான பகுதிக்கு சுட்டியை நகர்த்திசெல்வதற்காக இடம் சுட்டி, சுட்டி விசைய, தாவிவிசை ஆகியவற்றை பயன்படுத்தி அட்டவணைக்குள் கலண்களுக்கிடையே சுட்டியை நகர்த்தி செல்லலாம் . ஒரு அட்டவணையின் முகப்பு பகுதிக்கு செல்வதற்கு Ctrl+Home ஆகிய விசைகளையும்முடிவுபகுதிக்கு செல்வதற்கு Ctrl+End ஆகிய விசைகளையும் சேர்த்து அழுத்துக

அட்டவணையின் தரவுகளை வரிசையாக அடுக்குதல் செய்வதற்காக விரிதாளை போன்றே ரைட்டரின் அட்டவணையின் தரவுகளை நாம் விரும்பியவாறு அதாவது ஏறுவரிசையில் அல்லது இறங்குவரிசையில் அல்லது அகரவசரிசையில் அடுக்கிட அனுமதிக்கின்றது முதலில் இவ்வாறு அடுக்கிடவிரும்பும் அட்டவணையை தெரிவுசெய்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் Table => Sort=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது லிபர்ஆஃபிஸ் திரையின் மேல்பகுதியிலுள்ள அட்டவணைக்கான கருவிகளின் பட்டையில் Sort எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் Sort எனும் உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றிடும்

அதன்பின்னர் இவ்வாறு அடுக்கிடுவது நெடுவரிசையாகவா அல்லது கிடைவரிசையாகவா என்பதை தெரிவுசெய்துகொள்க பொதுவாக இயல்புநிலையில் கிடைவரிசையாகவே வரிசையாக அடுக்கபடும் என்பதை மனதில் கொள்க. பின்னர் சரியான வரிசைபடிஅடுக்குவதற்காக அதிகபட்சம் மூன்றுவிசைகளைமட்டும் தெரிவுசெய்திடலாம் . அதன்பின்னர் எந்த நெடுவரிசையில் அல்லது கிடைவரிசையில் அடுக்குவது என தெரிவுசெய்துகொள்க பின்னர் எண்களை அல்லது எழுத்துகளை, ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை எவ்வாறு அடுக்குவது என குறிப்பிடுக இறுதியாகokஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

மேலும் ஒரு அட்டவணையின் குறிப்பிட்ட நெடுவரிசையிலுள்ள அல்லது கிடைவரிசையிலுள்ள அனைத்து கலண்களையும் சேர்த்து இவ்வாறு வரிசையாக அடுக்குதல் செய்திடலாம்

இதே அட்டவணையில் கணக்கீடு செய்வதற்காக பயன்படுத்தபடும் லிபர் ஆஃபிஸ் கால்க் விரிதாளின் அடிப்படையில்கூட எளிதாக அடுக்குதல் செயல்படுத்திடமுடியும்

பொதுவாக அட்டவணையின் எந்தகலண்களில் சுட்டியிருந்தாலும் உடன் அதனுடைய இடஅமைவை நிலைபட்டியில் C4 அல்லது B3 அல்லது D5 என்றவாறு இடத்திற்கேற்ப காண்பிக்கும் லிபர் ஆஃபிஸ் கால்க்கில் C4 எனும் முழுதான மேற்கோளை $C$4 என்றவாறும் அதையே அட்டவணையில் எனில்<C4> என்றவாறும் காண்பிக்கும் என்ற தகவலை மனதில் கொள்க

உதாரணமாக ஒரு அட்டவணையின் <B1> , <C2>ஆகிய இருகலண்களின் கூடுதலை <A1> எனும் கலணில் பிரதிபலிக்கசெய்திடுவதாக கொள்வோம்

இதனை செயற்படுத்துவதற்காக முதலில் அட்டவணையின் <A1> எனும் கலணில் இடம்சுட்டியை வைத்துகொண்டு விசைப்பலகையில் = என்ற விசையை அழுத்துக அல்லது லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல் பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் Table => Formula=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2 எனும் செயலி விசையை அழுத்துக உடன் Formulaஎனும் பட்டை லிபர் ஆஃபிஸ் திரையின் மேல்பகுதியில் = என்ற குறியீட்டுடன் பிரதிபலிக்கும் அதில் <B1> எனும் கலணையும் விசைப்பலகையில் + எனும்குறியீட்டு விசையையும் <C2>எனும் கலணையும் தெரிவுசெய்திடுக உடன் =<B1>+<C2> என்றவாறு கூட்டல் வாய்ப்பாடு ஆனது திரையில் பிரதிபலிக்கும் பின்னர் Enter எனும் உள்ளீட்டு விசையை அல்லது Formulaஎனும் பட்டையில் பச்சைவண்ண சரி எனும் குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விடையானது <A1> கலணில் பிரதிபலிக்கும்

3

3

குறிப்பிட்ட கலணின் கணக்கீட்டு வாய்ப்பாட்டை திரையில் தோன்றிடசெய்வதற்காக தொடர்புடைய கலணில் இடம்சுட்டியை வைத்துகொண்டு Table => Formula =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2 எனும் செயலி விசையை அழுத்துக அல்லது திரையின் மேலேஉள்ள Formulaஎனும் பட்டையில் Formula f(x) எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் நாம் விரும்பியவாறு அட்டவணையில் உள்ள வாய்ப்பாடுகளை பிரதிபலிக்க செய்திடலாம்

ஏதேனுமொரு நெடுவரிசை அல்லது கிடைவரிசையிலுள்ள தொடர்ச்சியான கலண்களில் தரவுகளை கணக்கீடு செய்வதற்காக முடிவான A6 கலணில் இடம்சுட்டியை நிறுத்திவைத்துகொண்டு விசைப்பலகையில் = என்ற விசையை அழுத்துக அல்லது லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் Table => Formula=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2 எனும் செயலி விசையை அழுத்துக உடன் Formulaஎனும் பட்டை லிபர் ஆஃபிஸ் திரையின் மேல்பகுதியில் = என்ற குறியீட்டுடன் பிரதிபலிக்கும் பின்னர் A2 முதல் A5 வரை உள்ள கலண்களை இடம்சுட்டியால்தொடர்ச்சியாக தெரிவுசெய்துகொள்க உடன் =<A2:A5>. என்றவாறு Formulaஎனும் பட்டையில் பிரதிபலிக்கும் பின்னர் Enter எனும் உள்ளீட்டு விசையை அல்லது Formulaஎனும் பட்டையில் பச்சைவண்ண சரி எனும் குறியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விடையானது <A6> கலணில் பிரதிபலிக்கும்

அல்லது அதற்கு பதிலாக நாமே முயன்று முடிவான A6 கலணில் இடம்சுட்டியை நிறுத்திவைத்துகொண்டு விசைப்பலகையில் = என்ற விசையை அழுத்துக பின்னர் A2+ A3+ A4+ A5 என தட்டச்சு செய்திடுக அல்லது Formulaஎனும் பட்டையில் உள்ள f(x) எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் A2, A3, A4, A5 ஆகிய கலண்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்துகொண்டு ஒவ்வொருமுறையும் + எனும் குறியீட்டு விசையையும் அழுத்துக இறுதியாக உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் விடையானது குறிப்பிட்ட கலணில் பிரதிபலிக்கும்

எச்சரிக்கை லிபர் ஆஃபிஸ் கால்க்கில் இவ்வாறு கணக்கீடு செய்த கலண்களை இடையில் இணைத்தல் அல்லது நீக்குதல் செய்தால் தானாகவே அவற்றையும் கணக்கீட்டிற்கு எடுத்துகொள்ளும் ஆனால் ரைட்டரில்உள்ள அட்டவணையில் அவ்வாறு எடுத்துகொள்ளாது என்பதை கவணத்தில் கொள்க

கலண்களை எதிர்பாராதவிதமாக நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாத்திடலாம் அதற்காக தேவையான கலண் அல்லது கலண்களில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Cell => Protect=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு பாதுகாப்புசெய்த கலணின் பாதுகாப்பினை நீக்கம் செய்திட முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேல்பகுதியிலுள்ள கட்டளைபட்டையில் Tools => Options=>=> LibreOffice Writer => Formatting Aids and mark Cursor in protected areas => Enable => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தேவையான கலண் அல்லது கலண்களில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Cell => Unprotect=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

அல்லது தேவையான கலண் அல்லது கலண்களில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Table => Unprotect=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Shift+Ctrl+Tஆகிய மூன்றுவிசைகளை சேர்த்து அழுத்துக

Previous Older Entries