அறிந்து கொள்வோம் அக்டஸ்-2003-தொடர்- பகுதி-40-சான்றளிக்கப்பட்ட(instance) வேர்டினுடைய பொருள்(object)

ஒற்றை தானியங்கியை (Automation) பயன்படுத்தி உருவாக்குதல்

ஒரு சான்றளிக்கப்பட்ட(instance)  வேர்டினுடைய பொருள்(object) ஒன்றை தானியங்கியை (Automation) பயன்படுத்தி உருவாக்குவதுதான் முதல் படிமுறையாகும்(step). அதற்கான குறிமுறைகள் பின்வருமாறு.

On Error Resume Next

Set word Obj = Get Object(“Word.Application”)

If  Err.Number < > 0 Then

Set Word Obj = CreateObject (“Word.Application”)

End If

மிகத்தெளிவாக கூற வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் நன்றி கடிதம் உருவாக்குவதற்காக ஒரு புதிய சான்றளிக்கப்பட்ட வேர்டினுடைய ஆவனத்தை உருவாக்க வேண்டாம். இதற்காக சிறிதளவு சிறப்பு குறிமுறைகள் மட்டும் இருந்தால் போதும். இந்த சிறிதளவான சிறப்பு குறிமுறைகள்ஆனது முதலில் ஒரு செயற்படும் சான்றளிக்கப்பட்ட வேர்டை பயன்படுத்துவதற்கான சான்றினை உருவாக்குதவற்கு முயல்கிறது. பின்னர் வேர்டு ஆனது ஒரு பயன்பாட்டில் இயங்காதபோதும் இந்த செயலியானது பிழை ஏதும் கிடைத்தால் அதனை பிடித்து அடுத்த நடவடிக்கையாக அதற்கடுத்த கூற்றை செயல்படுத்தி பிழைச்செய்தியை உருவாக்கி பிரதிபலிக்க செய்கிறது.

இவ்வாறு முதலில் சான்றளிக்கப்பட்ட வேர்டு ஆவணத்தை நம் கண்ணுக்கு புலப்படாமல் இயக்குகின்றது. அதனால் வேர்டு இயங்குகிறது என தெரியாமல் உங்கள் பயன்பாட்டில் வேர்டை நீக்கிவிட வாய்ப்புள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவும் சான்றளிக்கப்பட்ட வேர்டு இயங்கும்போது நம் கணணிற்கு புலப்படுவதற்காகவும் Wordobj¢ ,visible = True என்ற வரியை இந்த குறிமுறையில் அவசியம் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு காலியான ஆவணம் ஒன்றை உருவாக்குவேண்டும்,அதற்காக வேரடு இயங்கும்போது தயார் நிலையில் உள்ள Thanks.dot எனும் ஒரு மாதிரி படிமத்தை உருவாக்குவதற்கு கீழ்காணும் குறிமுறை உதவுகிறது.

Word Obj.Documents.Add Template ; = “G:\Access|| Book\Thanks.dot”

_New Templates; = Flase

இந்த Thanks.dot என்ற மாதிரி படிமத்தில் ஒருசில அடையாளக் குறிகள்(Bookmark) ஆங்காங்கு இடப்பட்டுள்ளன. இந்த அடையாள குறிகளிடப்பட்டுள்ள இடங்கள் வெளியிலிருந்து தரவுகளை உள்ளிணைக்க வேண்டும் எனக் குறிக்கின்றன. இவ்வாறு ஒரு வேர்டின் கடிதத்தில் அடையாளக் குறியிடுவதற்கு கட்டளை சட்டத்தில் உள்ள Insert => என்ற கட்டளையைத் தெரிவு செய்க,உடன் விரியும் Insert எனும் பட்டியில் உள்ள Bookmark என்பதை தெரிவு செய்க. பின்னர் இந்த அடையாளக் குறிக்கு ஒரு பெயரிட்டு add என்ற பொத்தானை இடம்சுட்டியால்  தெரிவுசெய்து சொடுக்குக (படம்-1).

படம்-1

ஒரு வேர்டின்ஆவணத்தில் எங்கெங்கெல்லலாம் இவ்வாறு அடையாளகுறியிட்டோம் என கண்டறிந்து அவ்விடத்தில் நாம் சேர்க்க விரும்பும் உரையை எளிதாக சேர்ப்பதற்கு உதவுவதுதான் இந்த தானியங்கி செயலாகும்.  Goto  என்ற வழிமுறையின் உதவியால் அடையாள குறியிட்ட குறிப்பிட்ட இடத்திற்கு செல்லலாம். பின்னர் உரையை உள்ளிணைக்க அல்லது அடையாளத்தை பதிலீடு செய்ய TypeText என்ற வழிமுறை பயன்படுகின்றது. இதற்கான குறிமுறை பின்வருமாறு

Word Obj.Selection.Goto What : = WdGotoBookmark, Name:=”Full Name”

Word Obj.Selection.Type Text Cust![Contact Name]

புதிய ஆவணங்களில் தரவுகளை உள்ளீடு செய்ய விரும்புவோம். இந்த சமயத்தில் வேர்டை செயல்படும் பயன்பாடாக குறிப்பிட வேண்டும் இல்லையெனில் தரவுகளை உள்ளீடு செய்யும்போது தானாக அக்சஸிலிருந்து வேர்டுக்கு நிலைமாறிவிடும் இதனை தவிர்ப்பதற்கு   Wordobj.Activate என்ற வரியை உள்ளிணைத்து கொள்க.

தானியங்கி வேர்டு ஆவணத்தில(document) இடம்சுட்டியை(cursor) நகர்த்துவதற்கு moveup என்ற வழிமுறையை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒரு வேர்டில் இப்போது இருக்கும் இடத்திலிருந்து ஐந்து வரிகள் மேற்பக்கம் நகருவதற்கான குறிமுறை பின்வருமாறு

Word obj.Selector.Moveup Wdline.5

இவ்வாறு பயன்படுத்திவரும் சான்றளிக்கப்பட்ட தானியங்கி பொருளை மூடுவதற்கு

Set word obj = nothing அல்லது

wordobj.quit ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கூற்றை பயன்படுத்துக.

வேர்டின்அடையாளமிட்ட இடத்தில் ஏதேனுமொரு படத்தை உள்ளிணைக்க விரும்புவோம். இந்நிலையில் .BMP கோப்பாக உருவாக்கப்பட்ட படத்தை உள்ளிணைக்க கீழ்காணும் குறிமுறை உதவுகிறது.

Word Obj.Selection.Goto What = wsGoToBookmark.Name :=”Picture”

Word Obj.ChangeFileOpenDirectory “D:\Graphics\”

Word.Obj.Active Documents.Shapes.AddPicture

Anchor: = Selection.Range, File Name : =_

“D:\Graphics\Picture.BMP”, LinkToFile : = False

Save with Document_= True

வேர்டின் தானியங்கி செயல் என்று கூறி வருகிறோமே இதனை உருவாக்க கடினமாக இருக்குமோ? என்ற கேள்வி எழும். இந்த தானியங்கியை உருவாக்குவதற்கான குறிமுறைகளை எழுதுவதில் சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை.  போதுமான பொருள்கள் (Proper Object), பண்பியல்புகள் (Properties), பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் (method to use) ஆகியவற்றை பற்றி மட்டும் தெரிந்திருந்தால் போதும் இதனை மிக சுலபமாக உருவாக்கி விடமுடியும். இவற்றை நாம் எவ்வாறு தெரிந்து அறிந்து பயன்படுத்தி தானியங்கியை உருவாக்குவது என்று தயங்கி மயங்கி தடுமாறுபவர்கள்கூட கவலைப்பட அதற்காக வேண்டாம் Macro recorder என்பதை இதற்காக செயல்படுத்துவதே மிகச்சுலபமான எளிதான வழிமுறையாகும்.

இதற்காக வேர்டு சாளரத்தின் மேலே கட்டளை பட்டையில் (menu bar) உள்ள tools என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் tools எனும் பட்டியில் macro என்பதை தெரிவு செய்க. உடன் விரியும் சிறு பட்டியில் record new macro என்பதை தெரிவு செய்க(படம்-2).

படம்-2

உடன் record macro என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் உள்ள macro name என்பதில் நாம் உருவாக்க போகும் குறும நிரலுக்கு (macro) ஒரு பெயரை உள்ளீடு செய்க அல்லது இயல்பு நிலையில் macro1 என்றிருக்கும் அப்படியே விட்டுவிடுக. பின்னர் இது எந்த பொத்தானை பிடித்து சொடுக்கி செயற்படுத்தினால் இயங்கும் என்பதற்காக ஒதுக்கீடு பகுதியில் assign macro to என்பதில் toolbars அல்லது keyboard ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்க. இது எங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக store macro in என்பதில் all documents அல்லது நடப்பில் உள்ள ஆவணம் போன்று ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்க. அதன்பிறகு இந்த குறும நிரலின் விவரம் description எதற்காக உருவாக்கினோம்? யார் உருவாக்கியது? எப்போது? என்பது போன்ற விவரங்கள் உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பின் இப்போது word ஆவணத்தில் நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றும் பதிவாகி விடும் தானியங்கி செயல் பதிவு ஆவதற்கு அடையாளமாக சிறு செவ்வக பட்டி ஒன்று இரண்டு பொத்தான் களுடன்  திரையில் மிதக்க ஆரம்பிக்கும் அதில் ஒன்று இந்த குறும நிரல் macro பதிவை தற்காலிக நிறுத்துவதற்கும்(pause) மற்றொன்று மொத்தமாக நிறுத்துவதற்கும் (stop records) பயன்படுகின்றன.

செய்ய வேண்டிய செயல் அனைத்தையும் மிக கவனமாக செய்து முடித்துவிட்டு stop record என்ற பொத்தானை கண்டிப்பாக தெரிவு செய்து சொடுக்குக. நீங்கள் இவ்வாறு பதிவு செய்த செயல்களுக்கான குறிமுறையை திரையில் காண Tools => Macro => Visual Basic Editor என்றவாறு தெரிவு செய்தவுடன் VBE சாளரம் திரையில் திறந்து நீங்கள் பதிவு செய்த Macroவின் குறிமுறைகளின் வரிகள்  படம் – 3 ல் உள்ளவாறு பிரதிபலிக்கும்.

கீழ்காணும் குறிமுறைகளை இந்த தானியங்கி செயல்களுக்காக நகலெடுத்து ஒட்டிக் கொள்ளுங்கள்.

Dim word obj as New word.Application

Word Obj.Documents.Add Template ; = “Normal.dot”

New Template : = False, Document Type : = 0

படம்-3

யூஎஸ்பி தேக்கும் சாதன வாயிலை முடக்கம் செய்தல்

தற்போது நாம் அனைவரும் குச்சிபோன்ற  யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை பயன்படுத்தி வருகின்றோம் அதனால் நம்முடைய கணினியில் அறிமுகமல்லாத ஒருவர்  இந்த யூஎஸ்பி வாயில்வழியாக நம்முடைய கணினியில் நச்சு நிரலை பரப்பி கணினியின் இயக்கத்தை முடக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன அதனால் நம்மைத்தவிர மற்றவர்கள் யாரும் இந்த யூஎஸ்பி தேக்கும் சாதன வாயிலை அனுகாதவாறு முடக்கம் செய்திடலாம் அதற்கான வழிமுறை பின்வருமாறு

இதற்காக முதலில் start=> run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

    படம்-1

 பின்னர் தோன்றிடும்  run என்ற (படம்-1) உரையாடல் பெட்டியில் open என்ற உரைப்பெட்டியில்regedit  என உள்ளீடு செய்து ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் Registry Editor என்ற திரையில்  முதலில் HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR

என்பதையும் பின்னர் வலதுபுற பலகத்தில் USBSTORஎன்பதையும் (படம்-2) தேடிகண்டு பிடித்திடுக  அதன்பின்னர்  USBSTORஎன்பதன் வாய்ப்பான start என்பதனுடைய மதிப்பை  அதனுடைய வலதுபுற பலகத்தில்   கண்டுபிடித்து

    படம்-2

 அதனை value data என்பதில் 4 என Edit Dword Value என்ற உரையாடல் பெட்டியில் அமைத்து ok  என்ற (படம்-3)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபின் Registry Editor என்ற திரையை மூடிவிட்டு நாம் செய்த மாறுதல் செயல்படுததுவதற்காக கணினியை மறுதொடக்கம் செய்திடுக

       படம்-3

 இதன்பின்னர் யாரும் நம்முடைய கணினியில்யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை அதற்கான வாயிலில் இணைத்து இயக்கமுடியாது

மீண்டும் முந்தைய நிலைக்கு கொணடுவர  Edit Dword Value என்ற உரையாடல் பெட்டியை செயலிற்கு கொண்டு வந்து அதிலுள்ள value data என்பதில் 3 என  மாறுதல் செய்து ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிபின் Registry Editor என்ற திரையை மூடிவிட்டு நாம் செய்த மாறுதல் செயல்படுத்துவதற்காக கணினியை மறுதொடக்கம் செய்திடுக

இதன்பின்னர் நம்முடைய கணினியில்யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை அதற்கான வாயிலில் இணைத்து இயக்கமுடியும்

7பவர்பாயின்ட் 2010-ன் பிரசன்டேசனை வீடியோவாக உருமாற்றம் செய்யலாம்

1இதற்காக முதலில் File என்பதிலுள்ளகீழிறங்கு பட்டியிலிருந்து back stage view  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து செயல்படுத்திகொள்க

2 பின்னர் மேலே இடதுபுறமூலையிலிருக்கும் எம்எஸ் ஆபிஸ் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பட்டியில்Send &Save  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

3 உடன்விரியும்  இதனுடைய துனைவாய்ப்புகளில் File types என்பதன்கீழுள்ள create a video  என்ற (படம்-1)வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக

        படம்-1

 4அதன் பின்னர் விரியும்  திரையில் கோப்பின் அளவு போன்ற பல்வேறு வாய்ப்புகளை தேவையானவாறு தெரிவுசெய்து கொண்டு இறுதியாக create  video  என்ற   பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

5 பின்னர் இந்த கோப்பிற்கு ஒருபெயரிட்டு (படம்-2)இதனை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொள்க

   படம்-2

6 உடன் இந்த கோப்பு .wmvஎன்ற பின்னொட்டுடன்  கோப்பு உருமாற்றும் பணி நடைபெறும் அதனை திரையில்(படம்-3) காண்பிக்கும்

  படம்-3

 இந்த பணி முடிவுற்றதும் இதனை  ஏதேனுமொரு வீடியோ பிளேயரில் செயல்படுத்தி பார்வையிடலாம் இதே கோப்பினை  தேவையெனில் Windows Live Movie Maker என்பதன் வாயிலாக மாறுதல் செய்து மெருகூட்டலாம் YouTube என்ற இணையதளத்திற்கு பதிவேற்றம் செய்து கொள்ளலாம்

செயலில் இருக்கும் மிகமுக்கிய தகவல்களை கணினியை நிறுத்தம் செய்திடும் போது எவ்வாறு நீக்கம்செய்வது

சில இயக்கமுறைமைகள் தரவுகளை செயல்படுத்திடும்போது கணினியின் வன்தட்டு நினைவகத்தை மெய்நிகர்  நினைவகமாக பயன்படுத்திகொள்கின்றன.அவ்வாறான தரவுகளை அல்லது நிரல்தொடர்களை செயல்படுத்திடும் செயலின்போது இவைகளை  ரேம் எனப்படும் தற்காலிக நினைவகத்திலிருந்து வன்தட்டிற்கும் பின்னர் தேவைபட்டால் வன்தட்டலிருந்து தற்காலிக நினைவகத்திற்கு மறுஏற்றமும் செய்கின்றது இவ்வாறான தரவுகளை அல்லது நிரல்தொடர்களை வன்தட்டில் swapfiles எனப்படும்  தற்காலிக கோப்பாக சேமிக்கபடுகின்றன.இந்த வன்தட்டு நினைவகத்திலிருந்து  swapfiles எனப்படும்  தற்காலிக கோப்பாக மாற்றம் செய்யபடும் தொழில்நுட்பத்தை pagingஎன அழைப்பர் பயன்பாட்டு மென்பொருளை நேரடியாக இயக்குவதற்கு பதிலாக முதலில் இந்த paging என்ற செயலிற்காக இயக்கமுறைமையானது அதிகஅளவிற்கு   நேரத்தை எடுத்துகொள்கின்றது அதாவது எந்தவொரு பயன்பாட்டினை கணினியில் இயக்கும்போதும் அல்லது தரவுகளை செயல்படுத்திடும்போதும் முதலில் அதனை இந்த paging என்ற செயலாக உருமாற்றிய பின்னரே நாம் திரையில் காணும் செயலாக நமக்கு காட்சியளிக்கின்றது இவ்வாறான செயலின்போதுமிகமுக்கிய தகவல்களை செயல் படுத்திடும்போதும் தரவுகளை மறையாக்கம் செய்யபடாத இதே வழிமுறையே பின்பற்றபடுகின்றது  அதனால் நம்முடைய மிகமுக்கிய தகவல்கள் வேறுயாரேனும் இதே கணினியை இயக்கிடும்போது அபகரித்திட வாய்ப்புள்ளது இதனை தவிர்த்திட ஒவ்வொருமுறை paging என்ற செயல் முடிந்தவுடன் இந்த தரவுகள் தானாகவே அழித்துவிடுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக

1முதலில் கணினியின் நிர்வாகியாக உள்நுழைவு செய்க

2பின்னர் start=>control panel=> Administrative Tools => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

3 அதன்பின்னர் தோன்றிடும் Local Security Settings என்ற பலகத்தின் இடதுபுறபலகத்தில் உள்ள Local Policies என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

4 பின்னர் தோன்றிடும் திரையில் Security Options என்ற வாய்ப்பைதெரிவுசெய்து சொடுக்குக பிறகு Shutdown: Clear virtual memory pagefile என்றவாய்ப்பை  தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக

5 .அதன்பின்னர் தோன்றிடும் Shutdown: Clear virtual memory pagefile properties  என்ற சிறு உரையாடல் பெட்டியானது local securities settings Shutdown என்ற தாவியின் திரையுடன் தோன்றிடும் அதில் Clear virtual memory pagefile  என்பதன்கீழ்ள்ள இரு வாய்ப்புகளில்enable  என்ற வானொலி பொத்தானை  தெரிவுசெய்து கொண்டுமுதலில்apply என்ற பொத்தானையும் பிறகு ok  என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

பார்வையற்றவர்களும் என்விடிஏ வின் உதவியுடன் எந்தவொரு கணினியையும் இயக்கமுடியும்

NonVisual Desktop Access ஆகிய சொற்களின் முதலெழுத்துகளாலானNVDA என்பது விண்டோஸ் இயங்குதளத்திற்கான இலவச திறமூல திரை வாசிப்பான் ஆகும் பார்வை யற்றவர்களும், பார்வைக் குறைப்பாடுள்ளவர்களும், பிரெயில் எனப்படும் குரல் ஒலியின்  மூலம் விண்டோஸுடன்கூடிய கணிப்பொறியை இயக்கமுடியும். இதனை [http://www.nvaccess.org].  என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இதன் சிறப்பத்தன்மை பின்வருமாறு
இந்த என்விடிஏ ஆனது பார்வையற்றவர்களும், பார்வைக் குறைப்பாடுள்ளவர்களும், விண்டோஸ் இயங்குதளத்தை, மூன்றாம் தரப்பு செயலிகளை அணுகவும்,அவைகளுடன் அளவளாவவும் பயன்படுகிறது.
இணைய உலாவிகள், மின்னஞ்சல் வாங்கிகள், இணைய அரட்டை நிரல்கள், அலுவலக தொகுதிகள் (எம்.எஸ். ஆஃபிஸ், ஓபன் ஆஃபிஸ்,லிபர் ஆஃபிஸ் ) போன்ற பிரபல பயன்பாட்டு செயலிகளை ஆதரிக்கின்றது
இது 34க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும் உள்ளடக்க பேச்சொலிப்பானைக் கொண்டதாகும்  இதில் எழுத்துருவின் பெயர், எழுத்துருவின் அளவு, எழுத்துப் பிழை போன்ற ஆவண வடிவமைப்புகளை அறிவித்திடும் வசதியுள்ளது
இதில் சுட்டியை சொடுக்கியின் கீழிருக்கும் உரையைத் தானாகவே அறிவித்திடவும்,  சொடுக்கியின் நிலையை ஒலி மூலம் அறிந்து கொள்வதற்கான  விருப்பத் தேர்வு வசதியும் உள்ளது
இந்த என்விடிஏவை ஒரு கணினியில் நிறுவிடாமலேயே கையில் எடுத்துச் செல்லக் கூடிய USB வாயிலாக  இயக்கிடும் வசதிஉள்ளது  இதில் யாரும் எளிதாக பயன்படுத்தக்  கூடிய பேச்சு நிறுவி  உள்ளது
32, 64 பிட் உட்பட தற்போதைய விண்டோஸ் இயங்குதளங்களையும் ஆதரிக்கும் தன்மை கொண்டது  இது Microsoft Active Accessibility, Java Access Bridge, IAccessible2, UI Automation போன்ற பொது அணுகு இடைமுகத்தை ஆதரிக்கின்றது  இது விண்டோஸ் கட்டளைத் தூண்டி (command prompt), முணைம செயலி ஆகியவற்றை ஆதரிக்கின்றது
பொதுவாக கணினியில் இதனை செயல்படுத்துவதற்காக பின்வருபவை தேவையாகும்
32 , 64 பிட் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7  ஆகிய இயக்கமுறைமைகள் ,  256 எம்பி க்கு மேற்பட்ட ரேம் , 1.0 GHz க்கு மேற்பட்ட செயலி ,  சுமார் 50 எம்பி  அளவு வன்தட்டின் நினைவகம்

.  http://www.nvda-project.org/  என்ற  இணையப்பக்கத்திற்க சென்ற இதனுடைய சமீபத்திய என்விடிஏவைத் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தற்பொழுது 1.பேச்சின் உதவியுடன் என்விடிஏவை கணினியில் நிறுவும் NVDA Installer 2.கணினியில் நிறுவாமல் கையில் எடுத்துச் செல்லக்கூடிய USB  வாயிலாக செயல்படும் NVDA Portable  ஆகிய  இரண்டு வகைகளில் இந்த என்விடிஏ கிடைக்கிறது:

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -67-வரைபொருளின் தன்மையை மாற்றியமைத்தல்தொடர்ச்சி பாவணையை பயன்படுத்துதல்

ஒரு குழுவான வரைபொருளிற்கு ஒரே மாதிரியான area fll, line thickness, border போன்ற வற்றை கொண்டுவருவதற்கு பாவணை styles.என்பது பயன்படுகின்றது இதனை செயலுக்கு கொண்டு வருவதற்கு Line and Fillingஎன்ற கருவிபட்டையில் உள்ள styles and Formattingஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  விசைப் பலகையில் F11 என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் styles and Formattingஎன்ற சாளரம் திரையில்(படம்-1) தோன்றிடும் அதனை நாம் விரும்பும் வகையில் திரையின் இடதுபுறம் அல்லது திரையின் வலதுபுறம் இணைத்து கொள்ளமுடியும்
      படம்-1
 பின்னர் வரைபொருளில் நாம் விரும்பியவாறு area fll, line thickness, border போன்றவற்றை அமைத்து திருப்தியுற்றால் இதிலுள்ளNew Style from Selectionஎன்ற உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் create styleஎன்ற உரையாடல் பெட்டியில் இந்த புதிய பாவணைக்கு ஒரு பெயரிட்டு okஎன்ற (படம்-1)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு புதியதொரு பாவணையை உருவாக்கியபின் மற்ற வரைபொருளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு நாம் உருவாக்கிய பாவணையின் பெயரை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக
   ஏற்கனவே உருவாக்கியிருக்கும் பாவணையை மாறுதல் செய்வதற்கு முதலில் அதனை தெரிவுசெய்து அதில் தேவையான மாறுதல்களை செய்தபின்திருப்தியுற்றால் Update Style ன்ற உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு மாறுதல் செய்தவுடன் ஏற்கனவே இந்த பாவணையை பயன்படுத்திய வரைபொருள் தானாகவே நிகழ்நிலை படுத்திகொள்ளும்
வரைபொருளிற்கு சிறப்பு தோற்றத்தை அளித்தல்
  படம்-2
இதனை திரையில் தோன்றிடசெய்வதற்கு முதலில் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் View > Toolbars> Drawingஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிசெயற்படுத்துக பின்னர் இந்த  Drawingஎன்ற கருவிபட்டையில் Efects என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்   special efect tools படம்-2-ல்  உள்ளவாறு தோன்றிடும் 
  படம்-3
  ஒருவரைபொருளை சுழற்றி(படம்-3) அமைப்பதற்கு இதிலுள்ளRotate  என்ற கருவிபொத்தான் பயன்படுகின்றது
தேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொண்டு இந்த  special efect tools –ல் உள்ள Distortஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் convert selected object to curve?என்ற (படம்-4)கேள்வியுடன் சிறு பெட்டியொன்று தோன்றிடும் அதில்உள்ள Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வரைபொருளின் ஏதேனுமொரு மூலையை தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியானது கைபோன்று உருமாறி தோன்றிடும் அதனைபிடித்து தேவையானவாறு இழுத்துசென்று விட்டிடுக
படம்-4
அவ்வாறேதேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொண்டு இந்த  special efect tools –ல் உள்ள Set in Circle (perspective)என்ற (படம்-5)உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் convert selected object to curve?என்ற கேள்வியுடன் சிறு பெட்டியொன்று தோன்றிடும்அதில்உள்ள Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வரைபொருளின் ஏதேனுமொரு பக்கத்தை தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியானது பிறைபோன்று உருமாறி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு இழுத்துசென்று விட்டிடுக
 
படம்-5
தேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொண்டு இந்த  special efect tools –ல் உள்ள Set to Circle (slant)என்ற (படம்-6)உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் convert selected object to curve?என்ற கேள்வியுடன் சிறு பெட்டியொன்று தோன்றிடும்அதில்உள்ள Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வரைபொருளின் ஏதேனுமொரு பக்கத்தை தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியானது பிறைபோன்று உருமாறி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு இழுத்துசென்று விட்டிடுக
 படம்-6
இந்த  special efect tools –ல் உள்ள Transparencyஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  Line and Fillingஎன்ற கருவிபட்டையில் உள்ள Transparencyஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர்  புள்ளியுடன் கோடாக இரு சதுரம் வரைபொருளின்மீது தோன்றிடும் அவைகளை தேவையானவாறு நகர்த்தி அந்த வரைபொருளில்Dynamic gradients(படம்-7) அமைத்திடமுடியும்
  அதற்கு பதிலாக  Line and Fillingஎன்ற கருவிபட்டையில் உள்ள gradientsஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் இதேDynamic gradients(படம்-7) ஒரு வரைபொருளில் அமைத்திடமுடியும்
      படம்-7

புதிய உபுண்டு 12.04 என்ற நீண்டகால சேவையுடன் கூடிய இயக்கமுறைமை

இந்த   புதிய உபுண்டு 12.04 என்ற இயக்கமுறைமையானது இயக்குவதற்கு எளிதான ஆயிரக்கணக்கான இலவச பயன்பாட்டு மென்பொருட்களுடன் தற்போது கிடைக்கின்றது நம்முடைய கணினியில் தற்போது நடப்பில் உள்ள  PC files, printers, cameras, MP3 players  ஆகியவற்றை எந்தவித கூடுதல் சிரமும் இல்லாமல் அப்படியே செயற்படுத்த கூடியதாகும்

12.01

இதில் முந்தைய கட்டளை பட்டிக்கு பதிலாக மிகவிரைவாக செயல்படுத்தகூடிய  புதிய Head-Up Display (HUD) என்பது உள்ளது

  12.02

  இதில் ஆயிரக்கணக்கான இலவச பயன்பாட்டு மென்பொருட்களை தனியாக Ubuntu Software என்ற பகுதியில் சேகரித்து வைத்துள்ளனர் அவற்றுள் பெரும்பாலான வர்களால் அதிகமாக பயன்படுத்துபவைகளை முன்னுரிமை படுத்தி அடுக்கி வைத்துள்ளனர்

      12.03

 ஒலிஒளி படம் பார்ப்பதற்காக புதிய Video Lens என்பதை உடன் இணைத்துள்ளனர் அதனால் நமக்கு தேவையான படத்தை இதில்  உள்ள உருவபொத்தானை தெரிவு செய்து சொடுக்கியபின் நமக்குத்தேவையான படத்தின் பெயரை தட்டச்சு செய்து தேடிபிடித்து இயக்கி கொள்ளமுடியும்

    12.04

 இதில் பாதுகாப்பிற்கான  அவ்வப்போது நிகழ்நிலைபடுத்தி புதுப்பித்துகொள்ளும்built-in firewall , virus protection  ஆகியவைஉள்ளன

இவ்வளவு வசதிகளும் வாய்ப்பும் நிரைந்த இலவசமான உபுண்டு லினக்ஸ்12.04 என்ற இயக்கமுறைமை இருந்தாலும்  நம்முடைய இந்தியாவில் பொரும்பாலானவர்கள் பைரஷியாக இந்த விண்டோஇயக்கமுறைமையையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றோம்

இந்நிலையில் உடனடியாக இந்த   உபுண்டு லினக்ஸ்12.04  இற்கு மாறுவதற்கு தயக்கமாக இருந்தால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உபுண்டு லினக்ஸ்12.04  ஐ  விண்டோவுடன் இணையாக இயக்கி பயன்படுத்தி பார்த்து கொள்ளமுடியும்

அதற்காகhttp://www.ubuntu.com/download/desktop/windows-installer  என்ற தளத்தில்  உபுண்டுவின் windows-installer ஐ பதிவிறக்கம் செய்துகொள்க

 இவ்வாறு பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்தவுடன் நம்முடைய இணையஉலாவியானது விண்டோ எக்ஸ்புளோரராக இருந்தால் இதற்கான கோப்பினை சேமித்தடவா இயக்க போகின்றோமா என கோரும் Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

   12.05

 மற்ற ஃபயர் ஃபாக்ஸ் போன்ற இணைய உலாவியெனில் Save  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

   12.06

 அதன்பின்னர் தோன்றிடும் பாதுகாப்பு எச்சரிக்கை செய்திபெட்டியில் Continue என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

12.07

  பிறகு தோன்றிடும்ubuntu installer என்ற திரையில் பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் போன்றவற்றை தவறில்லாமல் உள்ளீடு செய்து install என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 உடன் உபுன்டுவானது பதிவிறக்கம் ஆகி நிறுவும் பணியை செயல்படுத்தும் இந்த பணி நம்முடைய கணினியில் நடைபெறும்போது  பொறுமையாக காத்திருக்கவும்

  12.08

 இறுதியாக நிறுவிடும்பணி முடிவுற்றதாக அறிவித்திடும் திரையில் Reboot now என்ற வானொலி பெட்டியை தெரிவுசெய்து கொண்டுfinish  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

  12.09

  இதன்பின்னர் கணினியின் இயக்கம் நிறும் செய்யபட்டு மறுதொடுக்கம் ஆகும் அவ்வாறு தோன்றிடும் கருப்பு வெள்ளை கட்டளைத்திரையில்  Ubuntu என்பதை தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன்  உபுன்டு இயக்கமுறைமை நம்முடைய கணினியில் செயல்படுத்துவங்கும்

 12.10

நம்முடைய கையெழுத்தையே எழுத்துரு (font) ஆக மாற்றியமைக்கலாம்

தட்டச்சு செய்வதற்கு பதிலாக நம்முடைய கைகளால் அழகான, தெளிவான கையெழுத்தால் எழுதும் உரையை கணினியில் பயன்படுத்தபடும் ஒரு எழுத்துரு  (font) ஆக  மாற்றிக் கொள்ளமுடியும் . இந்த செயல் இணையத்தில் ஒரு நேரடி  சேவையாக  www.fontcapture.com   என்ற தளத்திலிருந்து நமக்கு கிடைக்கின்றது.
இதற்காக தனியான எந்தவொரு   மென்பொருளையும் நம்முடைய கணினியில் நிறுவிடத்தேவையில்லை. நம்மிடம்  கணினியுடன் அச்சுப்பொறி (printer), வருடி(Scanner)  இணைய இணைப்பு ஆகியவை மட்டும் இருந்தால்  போதும்.
முதலில்   www.fontcapture.com  எனும் இணைய தளத்திற்கு செல்க. அங்கு இந்ததளத்தில் இருக்கும் எழுத்துருமாதிர படிம (font template)கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க இது ஒரு கையடக்க ஆவனகோப்பாக (PDF ) இருக்கும். அதனை நம்முடைய கணினியுடன் இணைத்துள்ள அச்சுப்பொறியின் மூலம் அச்சிட்டுக் கொள்க  பின்னர் அச்சிடபட்ட எழுத்துருமாதிர படிமத்தில் (font template)  கோரியவாறு நம்முடைய  கையெழுத்தால் அதில் எழுதி நிரப்பிக் கொள்க. அதன்பின்னர் அந்த எழுத்துருமாதிர படிமத்தை (font template) ஒரு உருவ கோப்பாக(image file) வருடி (scanner)மூலம் வருடசெய்து இந்த உருவ கோப்பினை(image file) இதே இணைய தளத்திற்குச் சென்று பதிவேற்றம்(upload)   செய்து விடுக. உடன் நம்முடைய கையெழுத்தால் எழுதி நிரப்பபட்ட எழுத்துருமாதிர படிம (font template) கோப்பானது ஒரு சில நிமிடங்களில் நம்முடைய  கையெழுத்தைக் கொண்ட ஒரு  புதிய எழுத்துரு கோப்பாக(font file) உருமாறிவிடும் அதனை நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம்(download) செய்து நம்முடைய கணினியின் எழுத்துரு மடிப்பகத்தில்(font folder) நிறுவிக்கொள்க

11.01

அன்றாட செயல்களை திட்டமிட்டு செயல்படுத்திடmyTinyTodoஎன்ற கருவி பயன்படுகின்றது

நம்முடைய அன்றாட செயலை  தனியாள் கணினியிலும் ,செல்லிடத்து பேசியிலும், இணையத்திலும்  திட்டமிட்டு செயல்படுத்துவதற்காக தற்போது ஏராளமான மென்பொருள் கருவிகள் உள்ளன இவற்றுள் Max Pozdeevஎன்பவரால்  PHP ,Jquery ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கபட்டLAMP அடிப்படையில் இயங்கும் பொது அனுமதிபெற்ற myTinyTodoஎன்ற கருவியானது  நம்முடைய அன்றாட செயலை திட்டமிட்டு செயல்படுத்திடுவதற்காக பயன்படுகின்றது இதனை செல்லிடத்து பேசியிலும் பயன்படுத்திகொள்ளமுடியும் இதில் multilists, drag lists, tasks ,tagging,prioritisation search போன்ற பல்வேறு வசதிகளுள்ளன. இதனை http://mytinytodo.net/demo/ என்ற இணைய தளத்தில் நேரடியாக செயல்படுத்தி முன்னோட்டத்தை பார்த்து  அதன்பின்னர் http://mytinytodo.net   என்ற  தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

இது செய்யவேண்டிய செயலை உருவாக்குதல் அதற்கான விவரஉரையை சேரத்தல் குழுவின் செயல் நடைமுறைபடுத்துதல் tagஐ பயன்படுத்தி செயலை ஆய்வுசெய்தல் அதன்பின்னர் குறிப்பிட்ட செயல் முடிந்தாக குறிப்பிடுதல்(mark complete the task)  ஆகியவற்றை இதில் உருவாக்கலாம்

INBOXஎன்ற தாவியின் திரையில் செயலை திட்டமிட்டு குறிப்பிட்ட செயல் முடிந்தாலும் முடியாவிட்டாலும் உருவாக்கி ACTIONABLE பகுதிக்கு நகர்த்தபடுகின்றது

ACTIONABLEஎன்ற தாவியின் திரையில்  INBOXஎன்ற பகுதியில்உருவாக்கபட்ட செயல்கள் முன்னுரிமைபடி வரிசைபடுத்தபட்டு அதனதன் duedateஎன்னவென குறிப்பிடபட்டு அதனை செயல்படுத்துபவரை அழைத்தல் செயலை முடித்தல்  ஆகியன செயல்படுத்தபடுகின்றது

SOMEDAY என்ற தாவியின் திரையில் காலக்கெடு எதுவுமில்லாத வருங்கால செயல்கள் உருவாக்கபட்டு நிருவகிக்கபடுகின்றது    இந்த கருவியில் காலக்கெடு குறிப்பிடும் வசதிஉள்ளது

குறிப்பிட்ட செயலின்மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்யும்போது அதுதொடர்பான செயல்கள்மூலம் பட்டியலாக திரையில் காண்பிக்கவும் மற்றவைகளை திரைக்காட்சியலிருந்து மறைக்கவும் ஆன வசதியுள்ளது

குறிப்பிட்ட செயல்தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் தேடியறியும் வசதிஇதில் உள்ளது

மைக்ரோசாப்ட் அவுட்லுக்கிற்கு மேலேற்றம்செய்து செயலை ஒருங்கிணைக்கும் வசதிஇதில் உள்ளது  இது ஒரு திறமூல கருவியாகும் அதனால் இதனை யாரும் பயன்படுத்தி கொள்ளமுடியும்

10.01

 

வேர்டு பிரஸ்ஸை பயன்படுத்தி சிறிய வலைபூ குழுக்களை உருவாக்கலாம்

ஒரே துறையை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருகுழுவாக மின்னஞ்சல் அல்லது skypeவாயிலாக  சேர்ந்து தங்களுக்குள் கருத்தினை பரிமாறிக்கொள்ள முடியும்

ஒருநிலையில் இந்தமின்னஞ்சல் அல்லது skypeவாயிலான குழுவில் தகவல்தொடர்பு போதுமானஅளவு நடைபெற வாய்ப்பில்லாமல் போகின்றது இந்நிலையில் பேரளவு குழுக்களாக சேர்ந்து தங்களுக்குள் கருத்தினை பரிமாறிக்கொள்வதற்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக் போன்றவை பயன்படுகின்றன.  ஆனால் இந்த குழு சமூக வலைதள குழுவன்று குறிப்பிட்ட துறையை மட்டுமே சார்ந்தது ஆகும்

அதனால் மின்னஞ்சலுமல்லாமல் சமூக வலைதளம் போன்றுமல்லாமல் வேறுஒருவழியில் நடுத்தர அளவில் குழுவாக ஒன்றினைந்து   தங்களுக்குள் கருத்தினை பரிமாறிக்கொள்ள வேண்டிய நிலையில் p2 theme வலைபூஎன்ற வழிமுறையில் குழுவான வலைபூ போன்று செயல்பட வேர்டு பிரஸ்  உதவுகின்றது   http://wpdevel.wordpress.com என்ற தளத்திற்கு சென்று இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளலாம்.

முதலில் இந்த  p2 theme என்பதை செயல்படுத்தியவுடன் ட்விட்டர் போன்ற இடைமுகம் செய்யுமாறான திரையொன்று தோன்றுகின்றது  புதிய வலைபூக்களுக்கான இணைப்புகள் இதன் முகப்பு பக்கத்தின் வலதுபுறம் தோன்றுகின்றன அதாவது குழுக்களின் பகிர்ந்து கொள்ளும்  வலைபூ, வீடியோ போன்றவைகளின் அனைத்து வகையான வசதிகளுடைய  தற்போதைய நிலையை இந்த திரையில் காட்சியாக காண்பிக்கின்றது  குறிப்பிட்ட வகை செய்திக்கான நம்முடைய கருத்துகளை உள்ளீடு செய்தவுடன் Ajax பாவணையில் மேல்மீட்பு பட்டியாக திரையில் காண்பிக்கின்றது  ஃபேஸ் புக் போன்று இந்த கருத்துகளை மற்றொரு  p2 theme  வலைபூகுழுவுடன் ஒப்பீடு செய்யும் வசதியும் இதிலுள்ளது

இதில் சமீபத்திய கருத்துகள் (Recen comments)என்ற வசதியை வாடிக்கையாளர் விரும்பியவாறு அமைத்து கொள்ளமுடியும் . குழுஉறுப்பினர்களின் சமீபத்திய புதிய வலைபூபக்கம் பற்றிய RSSFeed செய்தியை அறியும் வசதி இதில்உள்ளது

எதிர்வருங்காலத்தில் குழுஉறுப்பினர்கள் இனிஎழுதவிருக்கின்ற வலைபூபக்கத்தை பற்றிய முன்னறிவிப்பை(Announcment) இதில் வெளியிடும் வசதிஉள்ளது    இதில் கருத்து இழையை மறைத்தோ அல்லது இயல்புநிலையிலோ மொத்தமாக இல்லாமலோ அமைத்து கொள்ளமுடியும்

இதனுடைய பக்கபட்டையை நீக்கி குழுஉறுப்பினர்களின் வலைபூக்களை முழுத்திரையிலும் காணுமாறு அமைத்திடமுடியும்

சிறிய குழுவானது குறிப்பிட்ட நோக்கத்திற்காக இணையத்தின்மூலம் நேரடியாக தமக்குள் கருத்து பரிமாறி கொள்வதற்கு வேர்டு பிரஸ்ஸின் இந்த   p2 theme வலைபூகுழுவை அமைத்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

9.01