நம்முடைய தேவைக்கேற்ப Eclipsஎனும் திறமூல மென்பொருளை பயன்படுத்தி கொள்க

Eclipsஎனும் திறமூல மென்பொருளானது ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலில் செயல்படும்தன்மைகொண்ட கூடுதல் இணைப்பான்களை உருவாக்கபயன்படும் ஒரு பயன்பாடாகும் இதனை கொண்டு சி சி++,கோபால் பிஹெச்பி, ஜாவாஸ்கிரிப்ட்,ரூபிஎன்பனபோன்ற மொழிகளில் உருவாக்கபடும் பயன்பாடுகளிலும் கூடுதல் இணைப்பான்களை உருவாக்கமுடியும். இது காலிபணியிடமும் வாடிக்கையாளர் விரும்பியவண்ணம் உருவாக்கபடும் விரிவாக்ககூடுதல்இணைப்பும்  கொண்டதாகும். இதனுடை கூடுதல் இணைப்பான் ஆனது லேடெக்ஸ் ,டெல்நெட், டிபிஎம்எஸ்ஸில் கூட இணைந்து செயல்படும் வல்லமைகொண்டதாக விளங்குகின்றது  இந்த பயன்பாடு அனைத்து இயக்கமுறைமைகளிலும் அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன் பெற்றதாகும்அதுமட்டுமல்லாத மேககணினியுடன் இணைந்து செயல்படும் தன்மைகொண்டது இது package explorer view, Debug view, Console view, Project view என்பனபோன்ற  திரைகாட்சிகளை தன்னகத்தே கொண்டது    இதனை https://eclips.org/downlaod/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்7கம் செய்து பயன்படுத்தி கொள்க

ஜாவாஸ்கிரிப்பட்டை பயன்படுத்தி மிகஎளிதாக கணினிவிளையாட்டுகளை உருவாக்கிடமுடியும்

கணினியின் திரையும் இயக்கமுறைமைகளும் கருப்புவெள்ளையாக இருந்த காலத்திலிருந்தே கணினிவிளையாட்டுகளும் இருந்துவருகின்றன அதிலும் கைபேசியைகூட தற்போது கணினியை போன்று பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் கணினி விளையாட்டுகள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்வாறான கணினியின் விளையாட்டுகளை லினக்ஸ்இயக்கமுறைமையில் நம்மால் எளிதாக  உருவாக்கிடமுடியும் பொதுவாக இணைய பயன்பாடுகளின் உலாவிக்குள் செயல்படும் ஜாவாஸ்கிரிப்பட்டை பயன்படுத்தி மிகஎளிதாக கணினிவிளையாட்டுகளை உருவாக்கிடமுடியும். இந்த ஜாவாஸ்கிரிப்ட்டை கொண்டு கணினிவிளையாட்டுகள் என தேடினால் இணையத்தில் ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன  அவைகளுள் ஒன்றினை பதிவிறக்கம் செய்து கற்று தெளிவடைந்து நம்மாலும் புதியதாக கணினிவிளையாட்டுகளை உருவாக்கிடமுடியும் இவ்வாறான  புதியதாக கணினிவிளையாட்டுகளை உருவாக்கிட நம்மிடம் ஜாவாஸ்கிரிப்ட்டும், ஃபயர் ஃபாக்ஸ் இணைய உலாவியும், ஜிஎடிட் எனும் பதிப்பு பயன்பாடும் இருந்தால் போதுமானவையாகும்.

இந்த  ஜாவாஸ்கிரிப்ட்டைகொண்டு முதலில் <canvas>என்பதை அமைவுசெய்துகொண்டு moveto,lineto,stroke,pendown.penup,ஆகிய கட்டளைகளை கொண்டு எளிதாக கணினிவிளையாட்டுகளை உருவாக்கிடலாம் இருபரிமான முப்பரிமான விளையாட்டுகளை கூடwww.processing.org  எனும் இணையதளத்திலுள்ளprocessing எனும் எளிய கணினி விளையாட்டுகளுக்கான மொழியைகொண்டு உருவாக்கிடமுடியும்

5.1

5.1

  இந்த மொழியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்திடவேண்டாம் என விரும்புவோர்கள் கவலையேபடவேண்டாம் DistroPureDyneஎன்பதை கொண்டு http://puredyne.en.malvida.com/linux/எனும் தளத்தில் மிகஎளிதாக கணினி விளையாட்டுகளை உருவாக்கலாம்  அதுமட்டுமல்லாது இந்த கணினிவிளையாட்டுகளை செயல்படுத்து வதற்கான பொறியை https://www.unrealengine.com/blog/unrealengine-4-and-linux/ எனும் தளத்திலிருந்து பெற்று செயல்படுத்தி சரிபார்த்திடலாம்

5

ஓப்பன்சிவிவிஷன் எனும் பயன்பாட்டினை உபயோகித்து படங்களை தெளிவாக படபிடிப்பு செய்திடமுடியும்

OpenCV4vision என்பது செல்லிடத்து பேசியிலும் குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களிலும் படங்களை தெளிவாக படப்பிடிப்பு செய்திடவும் காட்சிகளை அதிக தெளிவுதிறனுடனும் துல்லியத்துடனும் இருக்குமாறு செய்கின்றது

இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டிலும் செயல்படும் வல்லமைகொண்டதாகஉள்ளது.  இதனை http://sourceforge.net/projects/opencvlibrary/files/opencv-android/2.4.10/OpenCV-2.4.10-android-sdk.zip/download/ எனும் இணைய பக்கத்திலிருந்து இதனுடைய நிலையான பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்க இதனோடுகூடவே முன்கூட்டியே கட்டமைக்கபட்ட apkவகைகோப்புகளும் கிடைக்கின்றன அவைகளை கொண்டு எவ்வாறு இந்த பயன்பாட்டினை செயல்படுவது என சுலபமாக அறிந்து கொண்டு அதன்பின்னர் இதனை செயல்படுத்தி பயன்படுத்திடலாம் .  இதனை செயல்படுத்திட OpenCV manager என்பவர் தேவையாகும் இதனை கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க  அதன்பின்னர் இந்த ஓப்பன்சிவிமேனேஜரை செயல்படுத்திடுக பிறகு ஓப்பன்சிவி விஷனின் கட்டமைவை குறிப்பிட்ட ஓப்பன்சிவிவிஷனின் நூலகத்தை நிறுவிகொள்க அதன்பின்னர் இந்த  ஓப்பன்சிவிவிஷன் எனும் பயன்பாட்டினை செயல்படசெய்க  மிகமுக்கியமாக அவ்வப்போது இந்த ஓப்பன்சிவி விஷன் எனும் பயன்பாட்டை நிகழ்நிலை படுத்தி மேம்படுத்திகொண்டு பயன்படுத்துக . இந்த ஓப்பன் சிவிவிஷனை பயன்படுத்து பவர்களுக்காகவென Image segmentation, Image registration, Human pose estimation, SLAM, Object recognisation, Gesture recognisation, Multiview stereo matching Face recognisation,Action recognisation,Text recognisation, Tracking, ஆகிய பதினொரு பகுதிகளில் கட்டளைதொடர் உருவாக்கிடுமாறு 50000டாலர்களுக்கு மேலான பரிசுபோட்டிகூட நடைபெறுகின்றது அதற்கான கடைசிநாள் மே8,2015 ஆகும்6

வாருங்கள் நாமும் Esoteric programming languageஎனும் இரகசியாமான நிரல்தொடர் மொழிகளை உருவாக்குவோம்

இரகசியமான நிரல்தொடர்மொழிகள் (Esoteric programming language)என அறியபடும் (esolangs)என்பவை வழக்கமான வியாபாரஉலகில் பயன்படுத்தபடும் கணினிமொழியின் மொழிமாற்றியை(assembler) கொண்டு மொழிமாற்றம் செய்து கணினியில் செயல்படுத்திடும் திறன்கொண்டவையாகும் இவை சோம்பேறியாக இருப்பவர்களின் மூலைக்கு நன்கு வேலைகொடுத்து சுறுசுறுப்பாக இயங்க செய்யும் திறன்மிக்கதாக விளங்குகின்றன மிமுக்கியமாக இணையத்தின் விக்கி பக்கத்தில் 750 இற்கும்  அதிகமான அளவில் இந்த இரகசியமான நிரல்தொடர்மொழிகளால் உருவாக்கபட்ட உள்ளீடுகள் உள்ளன. பிரெய்ன்ஃபக், ஊக், பியட், வொயிட்ஸ்பேஸ், ஜாவா- டு-கே, ஜோக்  ஆங்கிலமொழியல்லாதவை ஆகியவை இந்த வகையை சேர்ந்தவையாகும்

  .BF என சுருக்கமாக அறியபடும்Brainfuck எனும் இரகசியகணினிமொழியானது .b .bfஆகிய பின்னொட்டுடன் மட்டும் உருவாக்கபடுகின்றது இதில்< > + – . ,  [ ]  ஆகிய எட்டுகுறிகளை மட்டுமே பயன்படுத்தி காலியிடம் விடாமல்இந்த மொழியை பயன்படுத்தி  [++++>>><<<—,,,,….] என்றவாறு கட்டளைதொடர் உருவாக்கபடுகின்றது

 Ook ஆனது  .BF  இலிருந்த மேம்படுத்தபட்டஇரகசிய கணினிமொழியாகும். இந்த மொழியில் Ook., Ook? , Ook! ஆகிய மூன்றுவகை தொகுப்பு குறியீடுகள் மட்டுமே கொண்டதாகும் .இந்த மொழியை பயன்படுத்தி Ook? Ook? Ook., Ook., Ook!  Ook!  என்றவாறு கட்டளைதொடர் உருவாக்கபடுகின்றது

 Piet  என்பது Piet  என்பவரால் உருவாக்கபட்ட இரகசிய கணினிமொழியாகும் இது .ppmஎன்ற பின்னொட்டுடன் கூடிய கோப்பாக உருவாக்கபடுகின்றது

 whiltespace  எனும் இரகசியகணினிமொழியில்[Space] ,[Tab], [Linefeed] ஆகிய மூன்றுவகையை கொண்டு  ஐந்து கட்டளைகளால் மட்டும் உருவாக்கபட்ட மொழியாகும் இதில்  [Space]என்பது அடுக்குகளையும்  [Tab] [Space]என்பதுகணித செயல்களையும்  [Linefeed]என்பது தொடரோட்டத்தையும் [Tab] [Linefeed]என்பதுஉள்வெளியீட்டு கட்டளைகளையும்  குறிப்பிட பயன்படுகின்றன.

 ஜாவா-டு-கே ஆனது 11 ஐ அடிப்படையாக கொண்ட வொயிட்ஸ்பேஸ் உடன் சேர்ந்து உருவாக்கபட்ட மொழியாகும்

 ஜோக் மொழியானது 99 என இசையால் அறியபடும் இரகசிய கணினிமொழியாகும்

 ஹிந்தி பெங்காளி போன்ற மொழிகளில்கூட  ஹிந்தாவிஇந்திக் மொழியமைப்பால் உருவாக்கப்டட இரகசிய கணினிமொழியுள்ளன

 மேலேகூறியஇரகசிய கணினிமொழியானவை வர்த்தக நேக்கமற்ற நேரத்தை வீணாக்குகின்றவையாக இருந்தாலும்  நம்முடைய அறிவை விரிவாக்குகின்றன  எந்தவொருநிரல்தொடர்மொழியும் எவ்வாறு செயல்படுத்தபடுகின்றன எவ்வாறான பிரச்சினைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பனபோன்ற பயனுள்ள மூளைக்கு வேலைதரும் அரும்பணியாற்றுகின்றன. வாருங்கள் பொழுதுபோக்காக நாமும் இவ்வாறான தொரு இரகசிய மொழியை உருவாக்கிடுவோம்4

புதியவர்கள் எந்த கணினிமொழி சிறப்பானது எளிமையானது என தெளிவாக அறிந்து கற்று வல்லுணர்களாவது என அறிந்து தெரிந்து கொள்ள

பொதுவாக அனைத்து பயன்பாட்டு மென்பொருட்களின் குறிமுறைவரிகளை எழுதுபவர்களும் ஏதாவதுஒரு கணினியின் மொழியில் சிறந்த வல்லுனராக இருக்கின்றனர் ஆயினும் அன்றாடம் கணினிஉலகில் புதியபுதிய கணினிமொழிகள் வெளியிடபட்டுகொண்டே இருக்கின்றன அல்லது ஏற்கனவே நடப்பில் இருக்கும் கணினிமொழியானது மெருகூட்டப்பட்டு புதியபொலிவுடனும் வசதிகளுடனும் புதிய பதிப்புகளாக வெளியிடபட்டுகொண்டே இருக்கின்றன. இவ்வாறான இன்றைய நிலையில் கணினிமொழியில் இதுவரை சி, சி++ ,சி# ,லிஸ்ப், .நெட், ஜாவா, ஜாவாஸ்கிரிப்ட், எர்லாங்க்,போர்ட்ரான், பைத்தான், ரூபி,ஆப்ஜெக்ட்சி, எஃப்# என்பன போன்ற   பல்வேறு வகையான கணினிமொழிகள் வெளியிடபட்டுவருகின்றன. அதனால் பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்குபவர்கள் இவ்வாறாக புதிதுபுதிதாக வெளியிடபடும் குறிப்பிட்ட மொழியின் குறிமுறைவரிகளை பயன்படுத்தி தமக்கு முன்எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணவிழைகின்றனர்  அதனால் புதியதாக வெளியிடபடும் இவ்வாறான கணினிமொழியில் குறிமுறைவரிகள் எவ்வாறு அமைந்திருக்கும் என ஆவலுடன் அதனை கற்று தெளிவுபெறவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள்.   இவற்றுள் இணைய பயன்பாட்டிற்கான ஜாவாஸ்கிரிப்ட்மொழி யென்றும் இயக்கநேர மொழியென்றும்  செயலிமொழியென்றும் திறமூலமொழி யென்றும் பழையமொழியின் புதியஅவதாரமென்றும் கணினிமொழிகள் பல்வேறுவகையிலும் பெயரிலும் வெளியிடபட்டு கொண்டேயிருந்தாலும் சிமொழியானது என்றும் நிலையாக வளமாக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும் கணினிமொழியாக உள்ளது என்பது திண்ணம்.  இருந்தாலும்  புதியவர்கள் எந்த கணினிமொழி சிறப்பானது எளிமையானது என தெளிவாக அறிந்து கற்று வல்லுணர்களாவது  என அறிந்து தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள்பின்வரும் காரணிகளை மனதில் கொள்க

3.1 நிலையானவகையில் குறிமுறைவரிகளை எழுத விழைபவர்கள் ரூபிஅல்லது பைத்தான் கணினிமொழிபோதுமானதாகும்

3.2 இணையபயன்பாடுகளின் நிரல்தொடர்பற்றி தெரிந்திருக்வேகதேவையில்லை ஆயினும் இணைய பயன்பாடுகளை உருவாக்கிடும் திறன் வேண்டுமெனில் ஜாவாஸ்கிரிப்ட் கணினிமொழி போதுமானதாகும்

3.3 அமைப்பு வகைமென்பொருளை உருவாக்கவிழைபவர்கள் சி++ அல்லது கோ கணினிமொழி போதுமானதாகும்

3.4புதிய கணினி விளையாட்டுகள் உருவாக்கிடவிழைந்தால் எல்ம் எனும் கணினிமொழி போதுமானதாகும்

3.5கணினிமொழிபற்றிய தெரியாதவர்கள்கூட பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கவிழைந்தால்  சி எனும் கணினிமொழி போதுமானதாகும்

3.6 கணினிதத்தில் ஆர்வுமுள்ளவர்களுக்கு போர்ட்ரான் அல்லது ஜூலியா,  மொழிபோதுமானதாகும்

3.7புதிய புதிய கேள்விகளுக்கும் புதிய புதிய விடைகளை தீர்வுகளை காணவிழைபவர்களுக்கு புரோலாக்  அல்லது ஆர் கணினிமொழி போதுமானதாகும்

3.8 புதிய புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிழைபவர்களுக்கு ஆஹா எனும் கணினிமொழி போதுமானதாகும்

 

CAPTCHA என்றால் என்ன?

Completely Automated Public Turning test to tell Computers and Humans Apart என்பதை சுருக்குமாக CAPTCHA என அழைப்பார்கள்அதாவது குறிப்பிட்ட தளங்களுக்குள் தேவையான விவரங்களை அதற்கான உரைபெட்டிகளில் உள்ளீடு செய்து உள்நுழைவு செய்வதை மனிதஇடைமுகம் இல்லாமல் தானியங்கியாக செயல்படுவதை தவிர்ப்பதற்காக திரையில் தோன்றிடும்எழுத்துருவங்களை அதற்கான உரைபெட்டிகளில் உள்ளீடு செய்வதன் வாயிலாக உறுதி செய்யபடுவதாகும் இவ்வாறான   CAPTCHA  எனும் உரைபெட்டி ஒருசில நேரங்களில்  Google Chrome or Mozilla Firefox   என்பன போன்ற இணையஉலாவியில் காணாமல் போய்விடுகின்றது இதனை தவிர்த்திட திரையின் கீழே இடதுபுறமூலையிலுள்ள start எனும்எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் start எனும் திரையின் தேடிடும் பெட்டியில் Firefox.exe -P தேடிடும் கோப்பின்  பெயரை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக அல்லது OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் Firefox profile manager எனும் திரை தோன்றிடும் அதில் Create Profile எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அடுத்து தோன்றிடும் திரையில் Test Profile என்றவாறு உள்ளீடு செய்துகொண்டு Finish எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர்   Start Firefoxஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணைய உலாவியை மீண்டும் மேலேற்றம் செய்து செயல்படசெய்தபின்னர் தோன்றிடும் ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணைய உலாவியில்  வழக்கம் போன்று CAPTCHA  தோன்றிடும்

CAPTCHA-1.

இதையே  Google Chrome எனும் இணைய உலாவியெனில் வலதுபுறம் மேலே மூலையிலுள்ள settings எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் settings எனும் பட்டியில்   History என்பதையும் அதன்பின்னர் Clear Browsing Data என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குதல்  செய்தபின்னர் எனும் இணைய உலாவியை மீண்டும் மேலேற்றம் செய்து செயல்படசெய்தபின்னர் தோன்றிடும் Google Chrome எனும் இணைய உலாவியில்  வழக்கம்போன்றுCAPTCHA  தோன்றிடும்

CAPTCHA-2

மாணவர்களை் போட்டி தேர்வுகளுக்கு தயார்செய்திட உதவும் grockitஎனும் தளம்

 தற்போது மாணவர்களைGMAT®, SAT®, ACT®, GRE®  என்பன போன்ற போட்டிதேர்வுகளுக்கு இணையத்தின் வாயிலாக நேரடியாக பயிற்சி அளித்து தயார்செய்திடும் சேவையாளராக  Grockit  என்பது உள்ளது . இந்த தளமானது மிகவிரைவாகவும் அதேசமயத்தில் சரியாகவும் அதிகஅளவு வினாக்களுக்கான விடையை அளிக்க உதவும் சேவைதளமாகவும் விளங்குகின்றது இது நம்முடைய குறைவான திறன்களை பயிற்சியின் வாயிலாக மேம்படுத்தி மாணவர்களின் கற்கும்பணியை எளிதாக்குகின்றது  எந்தஇடத்திலிருந்தும்  எப்போது வேண்டுமாணாலும் நேரடியாக பயிற்சி பெறும் களமாக இது விளங்குகின்றது  ஒளிஒலி காட்சி படகாட்சி வல்லுணர்களின் சொற்பொழிவுகள்  ஆகியவற்றை கொண்டு ஒரு சாதாரணமான மாணவர்களும் போட்டிதேர்வுகளிலும் கல்லூரிகளின் நுழைவு தேர்வுகளிலும் வெற்றிபெறுவதற்கான படிகட்டுகளாக இது அமைகின்றது இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் தெரிந்து பயிற்சிபெறவும் https://grockit.com/about_us/ எனும் இதனுடைய தளத்திற்கு செல்க

11

Zend Framework2 எனும் பிஹெச்பி பணிச்சட்டம்

Zend Framework2  எனும் பிஹெச்பி பணிச்சட்டமானது கணினி பயன்பாடுகளை உருவா்ககுபவர்களுக்கு சிறந்த துனைவனாக உள்ளது  கூகுளில் பிஹெச்பி பணிச்சட்டம் என தேடினால் kohana, Phalcom, Symfony, Yii, CodeIgniter, CakePHP, Zend என்பன போன்ற ஏராளமான அளவில் பிஹெச்பி பணிச்சட்டங்கள் கிடைக்கின்றன இவைகளுள் எதனை நான் தேர்ந்தெடுப்படுது என தவிப்பவர்கள் அஞ்சற்க முதலில் அவர்கள் தங்களுடைய தேவையை முடிவுசெய்துகொள்ளவேண்டும் அதாவது பிஹெச்பிசூழலில் அடிக்கடி எளிய பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்துவதற்கு Rapid application Developement(RAD)   Yii, CodeIgniter, CakePHP என்பனபோன்ற பணிச்சட்டங்களும் சிக்கலான குறிமுறைவரிகளை மேம்படுத்திட  Zend எனும் பணிச்சட்டமும் பொருத்தமாகும்   இவைகளுள் நெகிழ்வுதன்மையுடனான பணிச்சட்டம்  வலுவான பணிச்சட்டம் ஆகிய இருவகையுள்ளன அதனால் நாம் எந்த வகையில் உருவாக்கவிருக்கின்றோம் நம்முடைய தேவைஎன்ன என ஆய்ந்து அதற்கேற்றதை தெரிவுசெய்துகொள்வது நல்லது இவற்றுள் ZF2என சுருக்கமாகZend Framework2 என்பது நெகிழ்வுதன்மையுடனான எந்த சூழலிலும் செயல்படும் திறன்கொண்டது  இதனை https://github.com/zendframework/ZendSkeletonApplication/  எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

10

grokit எனும்கருவி

grokit எனும்கருவியானது  கடல்போன்று விரிந்து பரந்துள்ள ஆயிரகணக்கான மூலக்குறிமுறைவரிகளில் நாம் விரும்பும் கட்டளையை தேடஉதவுகின்றது இந்த பணிக்காக தற்போது ஓப்பன்கோர்க் என்பது இருந்தாலும் அதைவிட சிறந்த கருவியாக இந்த குரோகிட் உள்ளது இதனைhttp://grokit.pythonanywhere.com/  எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க  இதனை எவ்வாறு விண்டோ இயக்கமுறைமையில் அல்லது லினக்ஸ் இயக்கமுறைமையில் அமைத்து செயல்படுத்துவது என அதனதன் ஒளிஒலிபடகாட்சியை கண்டு அதன்பின் அவ்வாறானதொரு வழிமுறையை பின்பற்றிடுக இந்த கருவி simplicity, independence ஆகிய இரு அடிப்படை தன்மைகளை கொண்டது  இதில் முன்கூட்டியே கட்டமைக்கபட்ட செயலிகள்தயார்நிலையில் உள்ளன மேலும் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்ற அடிப்படை வழிகாட்டி தகவல்களும் இதில் உள்ளன.  இது எந்தவொரு குறிமுறைவரிகளின் மூலக்குறிமுறைவரிகளையும்  தேடிபிடித்திடும் திறன்மிக்கது பொதுவாக நிறுவனங்கள் தங்களின் வளாக பிணையத்தின் வாயிலாக எங்கிருந்தும் தன்னுடைய ஊழியர்கள் தமக்கு வேண்டிய மூலக்குறிமுறைவரிகளை தேடிபிடித்திடும் வசதியை இது வழங்குகின்றது அதுமட்டுமல்லாத இதுHTTPSஇல் கூட மூலக்குறிமுறைவரிகளை தேடிபிடித்திடும் திறன்கொண்டது

9

File Transfer Protocol எனும் ஒழுங்கு நெறிமுறை செயலுக்காக உதவிடும் ftplibஎனும் தகவமைவு

HTTP என சுருக்கமாக அறியபடும் Hypher Text Transfer Protocol என்பது இணையத்துடன் கோப்பகளை கையாளவும்  FTP  என சுருக்கமாக அறியபடும் File Transfer Protocol என்பது கோப்புகளை கையாளவும்  SMTP என சுருக்கமாக அறியபடும் Simple Mail Transfer Protocol என்பது  மின்னஞ்சல்களை கையாளவும் ஆன ஒரு ஒழுங்கு நெறிமுறையாகும் ( Protocol) ஏதேனுமொரு வாடிக்கையாளர் வெகுதூரத்திலிருந்து ஒரு FTP  சேவையாளருடன் 127.0.0.1 எனும் வாயிலின் வாயிலாக பயனாளர் பெயருடனும் கடவுச்சொற்களுடனும் உள்நுழைவுசெய்து தொடர்பு கொள்ளும்போது அவருக்கு தேவையான விவரங்களை கோருவதற்கான தகவல்களை குறிப்பிட்ட பக்கத்தின் வாயிலாக எவ்வாறு பெறுவது என்றும் அதன் பின்னர் அவ்வாடிக்கையாளர் உள்ளீடு செய்திடும் தகவல்களிலிருந்து  அவர்விரும்பும் செயல்கள் அல்லது கோப்பகள் இருக்கும் பக்கத்திற்கு மாற செய்து பின்னர் அவைகளை  பதிவிறக்கும் செய்திட அனுமதித்த பிறகு இறுதியாக அவ்வாடிக்கையாளர் அந்த இணைய பக்கத்திலிருந்த வெளியில் எவ்வாறு செல்லவைப்பது  என்பன போன்ற ஒழுங்குநெறிமுறைகளை இந்த File Transfer Protocol என்பது கட்டுபடுத்தி செயல்படுத்துகின்றது இவ்வாறான File Transfer Protocol எனும் ஒழுங்கு நெறிமுறை  செயலுக்காகவென பைத்தான் மொழியில் மிக எளிதாக ftplibஎனும் ஒரு தகவமைவை(module) உருவாக்கிடலாம்  மேலும் விவரங்களை அறி்ந்துகொள்ள https://docs.python.org/2/library/ftplib.html/  எனும் இணையபக்கத்திற்கு செல்க

8

Previous Older Entries