புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-24 பயனாளர் இடைமுகப்பு கட்டுப்பாடுகள் -தொடர்ச்சி

வானொலி பொத்தானின் குழு ஒரு தொகுதியான வானொலி பொத்தான்களுக்காக ஒரு வானொலி பொத்தான் குழு பயன்படுத்தப்படுகின்றது ஒரு வானொலி பொத்தான் குழுவைசார்ந்த ஏதேனுமொரு பொத்தானை தேர்வுசெய்திட்டால் அதே குழுவிற்குள் ஏற்கனவேதேர்வுசெய்யப்பட்ட வேறு ஏதேனுமொரு வானொலிபொத்தானின் தேர்வை தானாகவே விளக்கிகொள்ளும்
வானொலி பொத்தான் குழுவின் பண்புக்கூறுகள்
பின்வருபவை வானொலிபொத்தான்குழுவின் கட்டுப்பாட்டிற்கான முக்கிய பண்புக்கூறுகளாகும் நாம் ஆண்ட்ராய்டு அலுவலக இணைய பக்கத்தில் இந்த பண்புக்கூறுகளின் முழுமையான பட்டியலை காணமுடியும் அதனை தொடர்ந்து இயக்க நேரத்தில் அவற்றை பயன்படுத்தி தொடர்புடைய வழிமுறைகளுடன் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திடவும் முடியும்இது .android.view.Viewஎன்பதலிருந்து மரபுவழியாக பெறப்பட்ட இனமாகும்
எடுத்துகாட்டு கோட்டு புறவமைப்பையும்(linear layout) வானொலி பொத்தான் குழுவையும் பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை உருவாக்குவது எவ்வாறு என காண்பிப்பதற்கா ன எளிய படிமுறைகளின் வாயிலாக நம்மை பின்வரும் எடுத்துகாட்டு கொண்டுசெல்லும்

ஆண்ட்ராய்டின் முன்மாதிரியை துவக்குவதற்கு இந்த பயன்பாட்டினை இயக்குக அதனை தொடர்ந்து இந்த பயன்பாட்டில் செய்யப்பட்ட மாறுதல்களின் விளைவை சரிபார்த்திடுக
பின்வருவது src/com.example.guidemo9/MainActivity.java.எனும் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை கோப்புகளின் உள்ளடக்கமாகும் இந்த கோப்பு ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி வழிமுறைகளை உள்ளிணைந்ததாக்க முடியும்
package com.example.guidemo9;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.view.View;
import android.view.View.OnClickListener;
import android.widget.Button;
import android.widget.RadioButton;
import android.widget.RadioGroup;
import android.widget.Toast;
public class MainActivity extends Activity {
private RadioGroup radioGroupCricket;
private RadioGroup radioGroupTutorials;
private RadioButton radioBtn1;
private RadioButton radioBtn2;
private Button btnCricketer;
private Button btnTutorialsPoint;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
// group1
addListenerRadioGroup1();
// group2
addListenerRadioGroup2();
}
private void addListenerRadioGroup2() {
radioGroupTutorials = (RadioGroup) findViewById
(R.id.radioGroup2);
btnTutorialsPoint = (Button) findViewById(R.id.button2);
btnTutorialsPoint.setOnClickListener(new OnClickListener() {
@Override
public void onClick(View v) {
// get selected radio button from radioGroupTutorials
int selected = radioGroupTutorials.getCheckedRadioButtonId();
radioBtn2 = (RadioButton) findViewById(selected);
Toast.makeText(MainActivity.this,
radioBtn2.getText(), Toast.LENGTH_SHORT).show();
}
});
}
private void addListenerRadioGroup1() {
radioGroupCricket = (RadioGroup) findViewById
(R.id.radioGroup1);
btnCricketer = (Button) findViewById(R.id.button1);
btnCricketer.setOnClickListener(new OnClickListener() {
@Override
public void onClick(View v) {
// get selected radio button from radioGroupCricket
int selected = radioGroupCricket.getCheckedRadioButtonId();
radioBtn1 = (RadioButton) findViewById(selected);
Toast.makeText(MainActivity.this,
radioBtn1.getText(), Toast.LENGTH_SHORT).show();
}
});
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
/* Inflate the menu;
this adds items to the action bar if it is present */
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

இவைகளின் புதிய மாறிலிகளின் வரையறுப்பதற்கு res/values/strings.xmlஎன்பதன் உள்ளடக்கமாகும்

GUIDemo9
Settings
Example showing RadioGroup
Sachin
Saurav
Rahul
MySQL Tutorial
SQL Tutorial
SQLite Tutorial
cricketer
tutorialspoint

பின்வருவது AndroidManifest.xml:என்பதன் இயல்புநிலை உள்ளடக்கமாகும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்டGUIDemo9எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க Eclipseஇலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப்பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Eclipseஆனது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும் அதில் இந்த சாளரத்தில் radioGroupCricket , radioGroupTutorials ஆகிய இரு வானொலிகுழு பொத்தான்கள் தோன்றிடும் இதே திரையில்”Rahul” எனும் வானொலி பொத்தானை தேர்வுசெய்து கொண்டு cricketer எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2
உடன் பின்வரும் திரைதோன்றிடும் அதில் radio Group Tutorials எனும் குழுவினைசேர்ந்த ஒரு வானொலி பொத்தானை தேர்வுசெய்துகொள்க. உடன் ஏற்கனவே தேர்வுசெய்திருந்த அதே வானொலி குழுவிலுள்ள வானொலி பொத்தானின் தேர்வானது தானாகவே நீக்கம் செய்யப்பட்டுவிடும் அதனை தொடர்ந்து “SQL Tutorial” எனும் வானொலி பொத்தானை தேர்வுசெய்துகொண்டு tutorialspoint எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3
பயிற்சி XMLஇன் புறவமைப்பு கோப்பிலும் நிரல்தொடரினை உருவாக்கிடும் நேரத்தில் வானொலி பொத்தானில் வித்தியாசமான காட்சியை காணவும் உணரவும் வித்தியாசமான பண்புக்கூறுகளுடன் மேலேகூறிய பயிற்சியை முயற்சித்திடுக என பரிந்துரைசெய்யப்படுகின்றது அதனை திருத்தம் செய்திடுமாறும் எழுத்துருவின் வண்ணம் ,குழு உரையமைப்பு ஆகிய பல்வேறு வகையில் மாறுதல்கள் செய்து அதன் விளைவை சரிபார்த்திடுக ஒரே செயலிற்கு பல்வேறு வானொலி பொத்தான்களின் கட்டுப்பாடுகளுடன் மேலேகூறிய பயிற்சியை செய்து பார்த்திடமுடியும்
இதுவரையில் நாம் பார்த்துவந்த பயனாளர் இடைமுகப்பு கட்டுபாட்டினை உருவாக்குதல் எனும் பகுதிகளில் விவரித்தவாறு ஒரு காட்சியாக காணும் பொருளானது தன்னிகரிற்ற சுட்டியை அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அது அந்த மரகாட்சியில் தன்னிகரிற்ற காட்சியாக சுட்டிகாட்டிடும் ஒரு XMLகுறிஒட்டின் உள்பகுதியிலுள்ள ஒரு சுட்டிக்கான இலக்கணம் பின்வருமாறு:
android:id=”@+id/text_id”
பயனாளர் இடைமுகப்பு கட்டுபாடு அல்லது காட்சி அல்லது பொருட்களை உருவாக்குவதற்கு நம்மிடம் காட்சியை அல்லது பொருளை வரையறுப்பதை புறவமைப்பு கோப்பில் கொண்டிருக்கவேண்டும் மேலும் அதனை பின்வருமாறு தன்னிகரற்ற சுட்டியாக ஒதுக்கீடு செய்திடவேண்டும் :

பிறகு இறுதியாக ஒரு எடுத்துகாட்டு கட்டுப்பாட்டு பொருளை உருவாக்கிடுக அதனை பின் கட்டளைவரிகளைபயன்படுத்தி அதனுடைய புறவமைப்பிலிருந்து கைப்பற்றிடுக
TextView myText = (TextView) findViewById(R.id.text_id);

புதியவர்களுக்கு twitter எனும் சமூகவலைதள சேவை ஒரு அறிமுகம்

செப்டம்பர்2017 இல் ஏறத்தாழ 330 மில்லியின் நபர்கள் இந்த ட்விட்டர் எனும் சமூகவலைதளத்தன் சேவையை பயன்படுத்தி கொள்கிறார்கள் என புள்ளிவிவரம் ஒன்று கூறுகின்றது இவ்வளவு பிரமாண்டமான நபர்கள் பயன்படுத்திடும் இந்த ட்விட்டர் என்பது என்ன இதன் சேவையை எவ்வாறு பெறுவது என்ற கேள்வி புதியவர்களுக்கு எழும் நிற்க ட்விட்டர் என்பது செய்திகளை அறிந்து கொள்ள உதவும் மையமாகவும் சமூகவலைதள சேவையாகவும் அதிகபட்சம் 140 எழுத்துகளை மட்டுமேஇதில் பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற கட்டுப்பாட்டுடனும் தனியாக கணக்கு எதுவும் துவங்காமலேயே இதனை பார்வையிடமுடியும் என்றவசதியும் கொண்டதொரு வலைதளசேவையாகும் இதனுடைய சேவையை செலவில்லாமல் பயன்படுத்திகொளளமுடியும்நாம் விரும்பினால் குறிப்பிட்ட இடவதியை பெற்றுவிளம்பரங்களை அனுமதிப்பதன் வாயிலாக பணம் சம்பாதிக்கவும் முடியும் இந்த தளத்தில்# என்ற குறியீடான ஹேஸ்டேக் என்பதுகுறிப்பிட்ட செய்தியை அறிந்து கொள்ள உதவும் திறவுசொற்களாகும் இந்த சேவை துவங்கிய 2006 இல் எஸ்எம்எஸ் எனும் குறுஞ்செய்தி 160 எழுத்துகளுடன் மிகப்பிரபலமாக அமைந்திருந்தது அதனால் அதைவிட குறைவாக இருக்கவேண்டும்என அதிகபட்சம் 140 எழுத்துகளுடன் மட்டும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும் என்ற கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது ஆயினும் இந்த தளத்திலுள்ள கருவிகள் என்பதை பயன்படுத்தி 140 எழுத்துகள் என்ற கட்டுபாடு இல்லாமல் மிகநீண்ட உரையைகூட வெளியிடமுடியும் இதில் கணக்கு வைத்திருப்பவரகளின் நீலவண்ண சரிபார்த்திடும் குறியீடு இருந்தால் அவர்கள் பொதுமக்களின் பால் சமீக அக்கறை உடையவர்கள் என அறிந்து கொள்க இதில் வியாபார, இசை, இதழ்கள், அரசியல் போன்ற பல்வேறு வகையில் ஆழ்ந்த ஈடுபாடுடையவர்கள் தனித்தனியாக குழுவாக இணைந்திருப்பதை காணலாம் இந்த தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின்பெயர்களுக்கு பின்னால் நீலவண்ண சரிஎனும் குறியிடுஇருப்பவர்களின் கணக்கு சரிபார்க்கபட்டது என அறிந்து கொள்க இந்த தளத்தில் கணக்கு துவங்கவிரும்புவோர்கள் signup எனும் இதனுடைய முகப்பு பக்கத்தில் @எனும் குறியீடுடன் கூடிய பயனாளர் பெயர் மின்னஞ்சல்முகவரி கைபேசிஎண், கடவுச்சொறகளுடன் Personalize Twitter எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவு செ ய்திடாமல் விட்டிட்டு signupஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்கினால் போதும் உடன் நமக்கென தனிகணக்கு இதில் உருவாகிவிடும்

நம்முடைய முகநூலின் தன்விவரகுறிப்புகளை யார்யாரெல்லாம் பார்வையிட்டார்கள் என தற்போது அறிந்து கொள்ளமுடியும்

இந்த முகநூல் எனும் சமூகவலைதளமானது நம்முடைய நன்பர்களுடன் நம்முடைய கருத்துகளை பரிமாறிகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுகின்றது அவ்வாறே நம்முடைய நன்பர்கள் யார் என தேடிஅறிந்து கொள்ளவும் முடியும் அதைவிட இதிலுள்ள ஏராளமான தொழில்நுட்பங்கள் வசதிவாய்ப்புகள் நம்மால் பயன்படுத்தபடாமலேயே உள்ளன அவற்றுள்ஒன்றுதான் நம்முடைய தன்விவரகுறிப்புகளை யார்யாரெல்லாம் பார்வையிட்டார்கள் என நாம் அறிந்து கொள்ள உதவிடும் தொழில்நுட்பமாகும் வழிமுறை 1 Chrome Profile Visitor Extension எனும் விரிவாக்க வசதி இந்த வசதியை பெறுவதற்காக முதலில்https://chrome.google.com/webstore/detail/social-profile-view-notif/pegkceflonohbcefcbflfpficfkmpeod?hl=en எனும் தளத்தலிருந்து இந்த விரிவாக்க பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க பின்னர் இதனை செயல்படுத்தி திரையில் தோன்றியவுடன் visitor எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து visitor எனும் தாவிபொத்தானின் திரையை விரியசெய்திடுகஅதில் நம்முடைய தன்விவரகுறிப்புகளை யார்யாரெல்லாம் பார்வையிட்டார்கள் அறிந்து கொள்ளலாம்

வழிமுறை2.View Page Source எனும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுதல் நம்முடைய முகநூல் கணக்கில் Facebook timeline எனும் நம்முடைய பகுதிக்கு சென்றுஅதில் இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை அழுத்திடுக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் View Page Source எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் html, CSS, and JavaScript ஆகிய குறியீடுகளுடன் கூடிய கடலிற்குள் நாம் வந்திருப்போம் அப்போது ctrl+F ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்திடுக பின்னர் InitialChatFriend list என தட்டச்சு செய்திடுக உடன் முகநூல்கணக்கின் சுட்டிஎண்கள் (FB ids numbers) பட்டியலாக விரியும் பின்னர் Facebook.com எனும் இணையபக்கமுகவரிக்கு பின்பறம்“/” எனும் குறியிட்டுடன் முதல் சுட்டிஎண்ணை கொண்டுவந்து Facebook.com/123456.என்றவாறு ஒட்டிடுக உடன் நம்முடைய தன்விவரகுறிப்புகளை பார்வையிட்டவர்களை அறிந்துகொள்ளாம்

எந்தவொரு கைபேசி (cell phone)இருக்குமிடத்தையும் எளிதாக காணலாம்

நாமனைவரும் பயன்படுத்திகொண்டுவரும் கைபேசி (cellphone)தற்போது எந்தஇடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளபின்வரும் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன
1 முதலில் Geo-location Tracking எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட கைபேசி இருக்குமிடத்தை phone tracker app (https://phonty.com/)எனும் பயன்பாட்டினை கொண்டு கண்டறியலாம்
2. அடுத்ததாக Call Recordingஎனும் கருவியை கொண்டு குறிப்பிட்ட கைபேசி இருக்குமிடத்தை கண்டறியலாம்
3 மூன்றாவதாக SMS & MMS Tracking எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட கைபேசி இருக்குமிடத்தை கண்டறியலாம்
4 நான்காவதாக Facebook & Whatsapp Tracking எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட கைபேசி இருக்குமிடத்தை கண்டறியலாம்

இணயபக்கங்களின் முகப்பு திரையை மேம்படு்த்திடும் தொழில்நுட்பம்

பல்வேறு பயனாளர்களும் வரைகலைபயனாளர் இடைமுகப்பு தொழில்நுட்பம் (Graphic User Interfaces (GUIs))எனும் முகப்புபக்கத்தின் தோற்றம் அதன் வசதி வாய்ப்புகளின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட இணையபக்கதை பயன்படுத்தி கொள்வது அல்லது கடந்து செல்வது என முடிவுசெய்திடுவார்கள் அவ்வாறான வசதி வாய்ப்புகளை வழங்குவதற்காக Front-end development எனும் தொழில்நுட்பம் அடிப்படையாக அமைகின்றது இணைய பக்கவடிவமைபபாளர்கள் இந்த முகப்பு பக்கத்தை வடிவமைப்பதற்காக HTML and CSS ஆகியமொழிகளின் அடிப்படையில் அமைந்த கட்டளை குறியீட்டு வரிகளை பயன்படுத்தி கொள்வார்கள் புதியவர்கள் கூட மிகஎளியதாக அமைந்துள்ள இவைகளை மிகவிரைவாக கற்று பயிற்சிபெற்று மிகச்சிறந்த இணைய பக்க வடிவமைப்பாளராக மிளிரமுடியும் என்பது திண்ணம்
அடுத்ததாக JavaScriptஎன்பதுமிகப்பிரபலமான இணையபக்கத்தை வடிவமைத்திடுஉதவிடும் கணினிமொழியாகும் தேவைப்படும் செயல்களைமட்டும் செயல்படுத்திகொள்வதற்கான வசதியுடன் இணையபக்கத்தை வடிவமைத்திட இது பேருதவியாக உள்ளது மற்ற இணையபக்கங்களுடன் செயலிகளுடன்அதாவது films, maps,online game போன்றவைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன்மிக்கதாக அமைகின்றதுஎந்தவொரு வகைபயனாளரும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையபக்கத்தினை வடிவைத்திடபயன்படுகின்றது அடுத்ததாக JQuery என்பது கூடுதல்இணப்புகள் விரிவாக்கவசதிகள் போன்றவசதிகளை எந்தவொரு இணையபக்கத்திலும் கொண்டுவருவதற்கு இது பேருதவியாய்அமைந்துள்ளது இவ்வாறான இணைய பக்கவடிவமைப்பில் அடிப்படையாக அமைவது எந்தநேரததிலும் நாம் இணையபக்க வடிவமைத்திட பயன்படுத்தி கொள்வதற்கு தயார்நிலையில்உள்ளவரைச்சட்டங்களாகும் (Frameworks) மிகசிக்கலான இணையபக்க வடிவமைப்பிற்கு JS frameworksஎன்பவை மிகவும் உதவியாகா விளங்குகின்றன அடுத்ததாக அனைத்து இணையஉலாவிகளுடன் ஒத்தியங்கும் தன்மையுடன் (Cross browser compatibility) வடிவமைத்திடவேண்டும் மூன்றாவதாக பல்வேறு பயனாளர்கள் பயன்படுத்தி கொளளும் முகப்புபக்க வரைச்சட்டங்கள்front-end frameworks நன்றாக அமைந்திருக்கவேண்டும் Bootstrap என்பது மிகவும் பிரபலமானதாக விளங்குகின்றதுநான்காவதாக இணையபக்கதில் உள்நுழைவுசெய்திடும் பயனாளர் ஒருவர் செய்திடும் செயலிற்கான பயன்கள் உடன் கிடைத்திடுமான பதில் செயல்மிகச்சரியாக responsive design அமையுமாறு வடிவமைப்பு இருக்கவேண்டும் தற்போது பெரும்பாலானவர்கள் திறன்பேசி கைபேசி போன்றவைகளின் வாயிலாக இணையத்தில் உலாவருகின்றனர் அதனால்அந்த சாதனங்களின் வாயிலாக செயல்படுத்திடும் செயலிற்கு மிகச் சரியான பதில்செயல்செயற்படுமாறு வடிமைத்திடவேண்டும் இவ்வாறான பல்வேறு செய்திகளை மனதில் கொண்டு சிறந்த இணையபக்கத்தினை வடிவமைபபு செய்திடுக

லிபர் ஆஃபிஸ் பேஸ் தொடர்-பகுதி-2-லிபர் ஆஃபிஸ் பேஸில் ஒரு அட்டவணையை அதன் வழிகாட்டி மூலம் உருவாக்குதல்

படிமுறை1:கடந்த லிபர் ஆஃபிஸ் பேஸ் தொடரில் கடைசியாக Table Wizard என்ற வழிகாட்டியினுடைய திரை தோன்றிடும் என பார்த்தோம் , புதியவர்கள் எவரும் அட்டவணையொன்றை எளிதாக உருவாக்குவதற்கு வசதியாக அந்தTable Wizard என்ற வழிகாட்டியினுடைய திரையில் Stepsஎன்ற இடதுபுற பலகத்தில் Select fields என்ற முதல் படிமுறை இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டிருக்கும் அதனை ஏற்றுகொள்க. இந்த வழிகாட்டியினுடைய வலதுபுற பலகத்தில்Select fields for your tableஎன்ற தலைப்பின்கீழுள்ள Business ,personal ஆகிய இருவகைகளில் இந்த அட்டவணையை நாம் உருவாக்கமுடியும் என இதிலுள்ள வகைகள்(category) காண்பிக்கின்றது .இயல்புநிலையில் Business என்ற வகையின் வானொலி பொத்தான் தெரிவுசெய்ய பட்டிருக்கும் நாம் CD Collection Sample என்ற அட்டவணையை உருவாக்கிட இருப்பதால் இரண்டாவது வகையான personal என்ற வகையின் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க பின்னர் இவ்வாறு மேலே நாம் தெரிவு செய்வதற்கேற்ற வகையின் அட்டவனையின் பெயர் பட்டியல் ஆனது Sample tablesஎன்ற கீழிறங்கு பட்டியலில் மாறியமைந்திருக்கும் அவைகளை விரியசெய்துCD Collection என்பதை (படம்-1) தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்வதற்கேற்ற அட்டவணையிலுள்ள புலங்களின் பெயர்கள் Available fields என்ற இடதுபுற பட்டியலில் மாறியிருக்கும் அதன் வலதுபுறம் Select fieldsஎன்ற பகுதி காலியாக இருக்கும் இதில்தான நாம் உருவாக்கவிரும்பும் அட்டவணையினுடைய புலங்களை கொண்டுவந்து சேர்க்கவிருக்கின்றோம்

1
பிறகு நாம் விரும்பும் புலங்களின் பெயர்களைAvailable fields என்ற இடதுபுற பட்டியலில் இருந்து ஒவ்வொன்றாக தெரிவுசெய்து வலதுபுற Select fieldsஎன்ற பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்திடு வதற்காக Select fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மையபகுதியிலுள்ள > என்ற ஒற்றைகுறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அனைத்து புலங்களையும் எனில் >> என்றஇரட்டைக் குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
முதலில் Available fields என்ற இடதுபுற பட்டியலில் இருந்து CollectionID, AlbumTitle, Artist, DatePurchased, Format, Notes, ,NumberofTracks ஆகிய புலங்களை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு Select fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மையபகுதியிலுள்ள > என்ற ஒற்றைக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் நாம் தெரிவுசெய்த புலங்களின் பெயர்கள் Select fieldsஎன்ற பகுதியில் பிரதிபலிக்கும் மேலும் Photoஎன்றவாறு புலம் ஒன்று நமக்குத் தேவையெனில் அதனை மற்ற மாதிரி அட்டவணையில் எங்கேனும் உள்ளதாவென தேடிபிடித்து தெரிவுசெய்யவேண்டும்
அதற்காக category என்பதில் Business என்ற வகையையும் Sample tablesஎன்ற கீழிறங்கு பட்டியலில் Employee என்பதையும் available fields என்ற இடதுபுற பட்டியலில் இருந்து Photo என்ற புலத்தை தெரிவுசெய்து கொண்டுSelect fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மைய பகுதியிலுள்ள > என்ற ஒற்றைக் குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நாம் தெரிவுசெய்த Photoஎன்ற புலத்தின் பெயர் Select fieldsஎன்ற பகுதியில் பிரதிபலிக்கும்
இவ்வாறே Select fieldsஎன்ற பகுதியில் நம்மால் பட்டியலிடபட்ட புலங்களின் வரிசை கிரமங்கள் மாறியிருந்தால் அதனை மாற்றியமைத்திடுவதற்காக இதன் அருகிலுள்ள Up அல்லதுDown ஆகிய அம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்து பிடித்து நகர்த்தி வரிசையை மாற்றியமைக்கவிரும்பும் புலம் ஏதேனுமுள்ளதாவென தேடிபிடித்திடுக பின்னர் அதனை மாற்றியமைத்திடுவதற்காக நாம் மாற்றியமைக்க விரும்பும் புலத்தின் பெயரை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு கீழ்நோக்கு அல்லது மேல்நோக்கு அம்புக்குறியுள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான இடத்தில் சென்று அமரச்செய்க

2
அவ்வாறே Select fieldsஎன்ற பகுதியில் நாம் விரும்பாத புலங்கள் ஏதேனும் சேர்ந்திருந்தால் முதலில் அவ்வாறான புலம் ஏதேனும் உள்ளதாவென தேடிபிடித்திட இதன் அருகிலுள்ள Up அல்லதுDownஆகிய அம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்து பிடித்து நகர்த்தி அவ்வாறான புலம் ஏதேனுமுள்ளதாவென தேடிபிடித்திடுக பின்னர் அதனை தெரிவுசெய்து கொண்டுSelect fields, available fields ஆகிய இருபகுதிகளுக்கும் மையபகுதியிலுள்ள < என்ற ஒற்றைக் குறியுள்ள பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்விரும்பாத புலத்தின் பெயர் Select fieldsஎன்ற பகுதியில் நீக்கபட்டு available fields என்ற பகுதிக்குசென்றுவிடும் பிறகு வழிகாட்டியினுடைய திரையின் கீழ்பகுதியிலுள்ளnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை2 முந்தைய படிமுறையில் புலங்களை நகர்த்துவதற்கு மட்டும் பார்த்தோம் தேவையற்ற புலங்களை இந்த பகுதியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்வதற்காக அவ்வாறான புலத்தை தெரிவுசெய்து – என்ற குறியீட்டு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கிவிடுக
எச்சரிக்கை நன்கு அனுபவம் பெற்றபிறகு இந்த வழிமுறையை பின்பற்றி புலத்தை நீக்கம் செய்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது
set types and format என்ற இந்த இரண்டாவது படிமுறையின் set field types and formats என்ற தலைப்பில் தோன்றிடும் வழிகாட்டித்திரையின் selected fields என்பதன்கீழுள்ள ஒவ்வொரு புலத்திற்குமான பண்பியல்புகளை வலதுபுற பகுதியிலுள்ள field information என்பதன்கீழுள்ள ஒவ்வொரு பண்பியல்பையும் அதனுடைய கீழிறங்கு பட்டியலில் இருந்து நாம்விரும்பியவாறு மாற்றியமைத்திடலாம் அல்லது ஏற்கனவே இயல்புநிலையில் உள்ளபண்பியல்புகளை ஏற்றுகொள்ளலாம்
குறிப்பு ஒவ்வொரு புலத்தையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் குறிப்பிட்ட புலத்தின் வாயிலாக தரவுகளை உள்ளீடு செய்யவிரும்பினால் field information என்பதன்கீழுள்ள entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க
புலங்களின் பெயரை மாற்றியமைத்திட விரும்பினால் Field name என்பதற்கருகிலுள்ள உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து தேவையான பெயரை தட்டச்சு செய்து கொள்க
.ஒவ்வொரு புலத்தின் எழுத்தின் அளவு இயல்புநிலையில் இந்த லிபர் ஆஃபிஸ் பேஸ் ஆனது VCHARஎன்பதை உரைபுலத்திற்கான புலவடிமைப்பை பயன்படுத்தி கொள்கின்றது அதனால் நாம் எவ்வளவு எழுத்துகள் தேவையென Lengthஎன்ற பண்பியல்பில் தேவையான எண்ணிக்கையை அமைத்துகொள்க
முதல் புலமான CollectionID என்பதன்Auto value என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
AlbumTitle என்ற புலத்தின் entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
Artistஎன்ற புலத்தின் entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
DatePurchased என்ற புலத்தின் இயல்புநிலையில் உள்ள பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
Format என்ற புலத்தின் entry required என்ற பண்பியல்பு no என்றிருப்பதை yesஎன அதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
Notes என்ற புலத்தின் இயல்புநிலையில் உள்ள பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
,NumberofTracks என்ற புலத்தின் field type என்ற பண்பியல்பில் வரிகளின் எண்ணிக்கை999 இற்குள் எனில் Tiny Integer [TINYINT]என்பதையுயம் அதற்குமேல் வரிகளின் எண்ணிக்கை99999 வரையெனில் Small Integer [SMALLINT] என்பதை தெரிவுசெய்து கொள்க இயல்புநிலையில் உள்ள மற்ற பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
. Photo என்ற புலத்தின் இயல்புநிலையில் உள்ள பண்பியல்புகளை அப்படியே ஏற்று கொள்க
இவ்வாறு நாம் உருவாக்கிய புலம் ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து அதனதன் பண்பியல்பை நாம்விருமபியவாறுஅல்லது நமக்குத்தேவையானவாறு மாற்றியமைத்துகொண்ட பிறகு வழிகாட்டியினுடைய திரையில் கீழ்பகுதியிலுள்ளnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3
படிமுறை3உடன் இடதுபுறம் steps என்பதன் கீழ்set primary key என்ற படிமுறைக்கு மாறியிருக்கும் table wizard ஆனது set primary keyஎன்ற தலைப்பில் விரியும் இதன்கீழ் create a primary key என்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பும் automatically add a primary key என்ற வானொலி பொத்தானின் வாய்ப்பும் auto value என்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பும் இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டிருக்கும்
இவ்வாறான வாய்ப்பு இந்த வழிகாட்டியானது தனக்கு கட்டளையிடபட்ட முதல்புலத்தை திறவுகோளாக தெரிவுசெய்து கொள்ளும் ஆனால் நாம் விரும்பும் புலத்தை திறவுகோளாக மாற்றியமைத்திட use an existing fields as a primary keyஎன்ற வானொலி பொத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு field nameஎன்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து தேவையான புலத்தின் பெயரை தெரிவுசெய்தவுடன் auto value என்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பு இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டுவிடும்
ஒன்றுக்குமேற்பட்ட புலங்களை திறுவுகோளாக மாற்றிட விரும்பினால் define primary key as combination of several key மூன்றாவது வானொலி பெத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு primary key field என்பதில் தேவையான புலங்களை படிமுறை ஒன்றில் கூறியவாறு தெரிவுசெய்து கொண்டபிறகு வழிகாட்டியினுடைய திரையில் கீழ்பகுதியிலுள்ளnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பு ஒரு அட்டவணையின் குறிப்பிட்டதொரு ஆவணத்தை தேடிபிடிப்பதற்கு இந்த primary key எனும் திறவுகோள் பயன்படுகின்றது அதனால் சிக்கலில்லாது ஒற்றையான புலத்தை திறவுகோளாக தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

4
படிமுறை4உடன் இடதுபுறம் steps என்பதன் கீழ் create table என்ற படிமுறைக்கு மாறியிருக்கும் table wizard ஆனது create tableஎன்ற தலைப்பில் விரியும் இதன்கீழ் what do you want to name your table? என்பதன் கீழுள்ளCD-Collection என்ற பெயரை தேவையானால் மாற்றி யமைத்துகொள்க. what do you want to do next ? என்ற கேள்வியின்கீழ் உடனடியாக தரவுகளை உள்ளீடு செய்யவிரும்பினால்insert data immediately என்ற வானொலி பொத்தானின் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இ்ந்த வழிகா்டடியின் திரையின் பணியைமுடிவிற்கு கொண்டு வருக. பிறகு தோன்றும் தரவுஉள்ளீட்டு சாளத்திரையை மூடி tables, queries, forms, reports ஆகியவைஅடங்கிய முதன்மைத்திரைக்கு வந்து சேருக

விண்டோ7,8 அல்லது10 இயங்கிடும் கணினியின் கடவுச்சொற்களை எவ்வாறு மறுஅமைவுசெய்வது

பல்வேறு கணினி வல்லுநர்கள் கணினியின் கடவுச்சொற்களை அதற்கான கருவிகள் அல்லது அதனை உடைத்தல் ஆகியவழிமுறைகளை பின்பற்றி கணினியின் கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடுவார்கள் அவ்வாறே புதியவர்கள் எவரும் பின்வழிமுறையை பற்றி கணினி வல்லுநர்கள் போன்று விண்டோ7,8 அல்லது10 இயங்கிடும் கணினியின் கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடலாம்
வழிமுறை1 Ophcrack எனும் கருவியை அதற்கான அதிகாரபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நெகிழ்வட்டு(CD) அல்லது யூஎஸ்பி (USB)நினைவகத்தில் கணினியின் இயக்கத்தைதுவங்கிடுமாறு நிறுவுகை செய்திடுக பின்னர் இந்த வெளிப்புற நினைவக்ததை கொண்டு கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடவிரும்பும் கணினியின் இயக்கத்தை துவங்கசெய்திடுக உடன் விரியும்திரையில் Ophcrack Graphic Mode – Automatic என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு உள்ளீடடு விசையை அழுத்துக உடன் இந்த கருவியானது கடவுசொற்களை மீட்டெடுத்துவிடும் 6.1

இரண்டாவது  iSeePassword – Windows Password Recovery Pro எனும் கருவியை அதற்கான அதிகாரபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நெகிழ்வட்டு(CD) அல்லது யூஎஸ்பி (USB)நினைவகத்தில் கணினியின் இயக்கத்தைதுவங்கிடுமாறு நிறுவுகை செய்திடுக பின்னர் இந்த வெளிப்புற நினைவக்ததை கொண்டு கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடவிரும்பும் கணினியின் இயக்கத்தை துவங்கசெய்திடுக உடன் விரியும்திரையில் Reset Password என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு உள்ளீடடு விசையை அழுத்துக உடன் இந்த கருவியானது கடவுசொற்களை மீட்டெடுத்துவிடும்

மூன்றாவதுவழிமுறையில் விண்டோஇயக்கமுறைமை நிறுவுகை செய்துள்ள நெகிழ்வட்டினை அதற்கான வாயிலில் உள்நுழைவுசெய்து கணினியின் இயக்கத்தை நெகிழ்வட்டினை துவங்கசெய்திடுக தொடர்ந்து தோன்றிடும் திரையில் ஒன்றும் செய்திவேண்டாம் அதற்குபதிலாக உள்ளீட்டு விசையை மட்டும் அழுத்துக பிறகு தோன்றிடும் திரையில் Install Nowஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு திரையில் கூறும் அலோசனைகளை பின்பற்றிடுக இறுதியாக கணினியின் இயக்கமானது நிறுத்தபட்டு மறுதுவக்கமாகும் எச்சரிக்கைஇந்த வழிமுறையில் நம்முடைய கணினியின் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுவிடும்

Previous Older Entries