Sweet Home 3 ஒருஅறிமுகம்

ஸ்வீட் ஹோம் 3 என்பது பொதுமக்களின்பயன்பாட்டிற்காக GNU GPLஅனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டதொரு இலவச உள்ளக வடிவமைப்பு பயன்பாடாகும், இது நம்முடையவீட்டு தளவாடபொருட்களை ஒரு வீட்டின் இருபரிமான காட்சியில் திட்டமிட்டு, முப்பரிமான முன்னோட்டகாட்சியின் வாயிலாக திரையில் கண்டு மிகச்ரியாக அவைகளை வைத்து பராமரித்திட உதவுகிறது. இதனை http://www.sweethome3d.com/ எனும் தளத்திருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளமுடியும், இது நம்முடைய வீடுகளின் உட்புறத்தை விரைவாக வடிவமைக்க விரும்பும் நபர்களுக்கு உதவிடுவதற்காக தயாராக இருக்கின்றது, அவ்வப்போது இடமாறிகொண்டே யிருப்பவர்களும் புதியதாக வீடு கட்டிமுடித்து குடிபுக விரும்புவோர்களும் அல்லது ஏற்கனவே குடியிருக்கும் வீட்டை மறுவடிவமைப்புசெய்து வீட்டின் உட்புற தோற்றத்தை மாற்றிட விரும்புகிறவர்களும் இதன் உதவியால் காண்போரை கவரும் வகையில் நம்முடைய வீட்டினை இருக்கின்ற பொருட்களை வைத்தே மிகச்சிறப்பாக வடிவமைத்திட தயாராக இருக்கின்றது . இது நம்முடைய வீடு ,தளவமைப்பு , நாம் பயன்படுத்திடும் தளவாட பொருட்கள் ஆகியவற்றை கொண்டு நாம் விரும்பியவாறான தோற்றத்தில் வடிவமைப்பு செய்வதற்காக பல்வேறு காட்சிகளை காண்பித்து அவற்றுள் சிறந்தை தெரிவுசெய்வதற்காக நமக்கு வழிகாட்டிஉதவுகின்றது. ஏற்கனவே உள்ள உட்புறதோற்றத்தின் மீது அறைகளின் சுவர்களை வரையலாம், பின்னர், தயாராக உள்ள பட்டியலிலிருந்து வீட்டு தளவாடபொருட்களை இழுத்து சென்று விடுவதன் வாயிலாக தோற்றத்தினை மேம்படுத்தலாம் தளவமைப்பின் யதார்த்தமான ஒழுங்கமைப்பைக் காண்பிப்பதற்காக, இருபரிமாண திட்டத்தின் ஒவ்வொரு மாற்றமும் முப்பரிமான பார்வையில் ஒரே நேரத்தில் இதன்வாயிலாக புதுப்பித்துகொள்ளலாம். இந்த ஸ்வீட் ஹோம் 3 பதிப்பு 6.2 ஆனதுஒரு வீட்டின் உட்புற தோற்றத்தை எவ்வாறு வடிவமைப்பு செய்து உருவாக்குவது என்பதைக் காட்டுகிறது. இதில் பயனாளர் இடைமுகத்தை விவரித்த பிறகு, வீட்டின் சுவர்களை எவ்வாறு வரையலாம், தளவாடபொருட்களை எவ்வாறு இடமாற்றம் செய்து அமைப்பது என்பதை இதன்மூலம் கற்றுக் கொள்ளமுடியும். இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள http://www.sweethome3d.com/examples/userGuideExample.sh3d என்ற இணையபக்கத்திற்கு செல்க

எக்செல் வடிவ கோப்புகளை HTML அல்லதுJSON வடிவ கோப்புகளாக உருமாற்றம் செய்வதெவ்வாறு

வியாபார நிறுவனம் ஒன்று தாம் உற்பத்தி செய்திடும் பொருட்களின்பெயர்கள், அவைகளுக்கான விலைவிவரங்கள், அவற்றின் பயன்கள் என்பனபோன்ற பல்வேறு தகவல்களை எக்செல் வடிவமைப்பு கோப்புகளில் உருவாக்கி வைத்துள்ளது எனக்கொள்க இவ்விவரங்களை இணையத்தின் வாயிலாக பொதுமக்களின்பார்வைக்கு கொண்டுசென்றால்தான் அந்நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைளை செயல்-படுத்திடமுடியும் என்ற நிலையில் HTML அல்லதுJSON வடிவ கோப்புகளாக உருமாற்றம் செய்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் இந்நிலையில் கட்டணத்துடன் செயல்படுத்திட பல்வேறு தனியுடைமை பயன்பாடுகளும் கருவிகளும் ஏராளமான அளவில் தயாராக இருக்கின்றன அவைகளுக்கு மாற்றாக DHTMLX எனும் நிறுவனமானது GitHub இன் நூலகங்களாக எக்செல் வடிவ கோப்புகளை HTML அல்லது JSON வடிவ கோப்புகளாக உருமாற்றம் செய்வதற்கான கட்டற்ற கருவிகளுக்கான நூலகங்களை WebAssembly (Wasm) எனும் செந்தரத்தையும் Rust எனும் நிரல் தொடர்மொழியையும் பயன்படுத்தி வெளியிட்டுள்ளது இந்த நூலகங்களை நம்முடைய கணினியில் npm அல்லது CDNJS ஆகியவற்றின் துனையுடன் நிறுவுகை செய்து கொள்க அதாவது முதலில்
npm I excel2table
எனும் கட்டளை வரியுடன் இதனை நிறுவுகை செய்து கொள்க பின்னர்
import excel2table
எனும் கட்டளைவரியுடன் இதனை பதிவிறக்கம் செய்திடுக இறுதியாக
excel2table.render(html_container, data, config);
எனும் கட்டளைவரியின் வாயிலாக செயலியை துவங்கிடுக
இதனை தொடர்ந்து நம்முடைய எக்செல் வடிவகோப்பினை HTML வடிவிற்கு உருமாற்றும் பணியைதுவங்கிடுக
இந்த பணியை எளிதாக்கிடும் பொருட்டு Excel2Json converter ,Json2Excel converter , Excel2Table ஆகிய மூன்று நூலகங்கள் MIT எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன என்ற கூடுதல்தகவலையும் மனதில் கொள்க.

ஃபயர்பேஸ்-தொடர்-26-ஃபயர் பேஸை பயன்படுத்தி ஆண்ட்ராய்டின்நிகழ்வுநேர குழுவிவாத பயன்பாட்டை உருவாக்குதல்

ஃபயர் பேஸை பயன்படுத்தி ஆண்ட்ராய்டின்நிகழ்வுநேர குழுவிவாத பயன்பாட்டை (Real time Android Chat Application )எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம். இதற்காக ஏன் ஃபயர் பேஸை பயன்படுத்தவேண்டும் எனும் கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் நிற்க. ஏனெனில் நம்மிடம் எழுதுவதற்கு தரவுதள குறிமுறைவரிகள் எதுவும் கைவசம் இல்லை ஆயினும் ஃபயர் பேஸின் வாயிலாக இவ்வாறு குழுவிவாத பயன்பாடு உருவாக்குவது என்பது சிறிய இனிப்பு துண்டு ஒன்றினை திண்பதற்கு ஒப்பானதாகும் ஏனெனில் அனைத்து குழுவிவாத விவரங்களையும் தேக்கிவைத்து பராமரிப்பதற்காகவென தனியாக தரவுதளங்கள் எதுவும் நம்மிடம் இல்லை ஆயினும் இந்த பணியை ஃபயர்பேஸானது தானாகவே செயல்படுத்தி கொள்ளும் இந்த அடிப்படை செய்திகளை மனதில் கொண்டு நம்முடைய பணியை துவங்கிடுவோமா? பொதுவாக ஆண்ட்ராய்டின் குழுவிவாத பயன்பாடானது ஆண்ட்ராய்டின் ஸ்டுடியோவி-லேயே உருவாக்கப்படுகின்றது இதுஃபயர்பேஸின் தரவுதளத்திலிருந்து உள்நுழைவு செய்வதன்வாயிலாக தேவையான தரவுகளை volley என்பதை பயன்படுத்தி இணையத்திலிருந்து பெற்று கொள்கின்றது . இதற்காக முதலில் ஆண்ட்ராய்டின் Chat Appஇல் பயனாளராக பதிவுசெய்து கொள்ளுமாறு கோரவேண்டும் பின்னர்பயனாளர் ஏற்கனவே அவ்வாறு பதிவுசெய்திருந்தால் பயனாளரின் பெயர் கடவுச்-சொற்களை கொண்டு உள்நுழைவுசெய்திடுமாறு அனுமதித்திடவேண்டும் அதன்பின்னர் இவ்வாறு உள்நுழைவு செய்த பயனாளரொருவர் வேறு எந்தவொரு பயனாளருடனும் அல்லது பயனாளர்கள் தங்களுக்குள்ளும் குழுவிவாதம்செய்திட அனுமதிக்கவேண்டும் இவ்வாறான குழுவிவாதம் செய்திடும் அனைத்து பயனாளர்களும் நம்பகமானவர்களா அவர்களுடைய குழுவிவாதங்களை சேமித்து வைத்திடவேண்டுமா என்பனபோன்ற கேள்விகளுக்கான பதில்பணிகளனைத்தையும் இணையத்தில் நேரடியாக செயல்படும் ஃபயர்பேஸின் தரவுதளமானது மேற்பார்வை செய்து கொள்ளும் இவ்வாறான ஆண்ட்ராய்டின் Chat App இனை உருவாக்குவதற்காக
முதலில் ஃபயர்பேஸின் இணையதளமான https://firebase.google.com/ எனும் முகவரிக்கு செல்க. அதில் நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்கிடுக. தொடர்ந்து இந்த ஃபயர்பேஸினுடைய முகப்பு திரைக்கு செல்க. அதில் Create New Projectஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் திரையில் நம்முடைய புதிய செயல்திட்டத்திற்குskChat Appஎன்றவாறு ஒரு பெயரையும், நாம் வாழும் நம்முடைய நாட்டின் பெயரையும் உள்ளீடு செய்து கொண்டு Create Project எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அடுத்து தோன்றிடும் திரையில் Add Firebase to your Android app எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு அந்த கட்டுகளின் விளக்கங்களையும் உள்நுழைவு சான்றிதழிற்கானSHA-1எனும் திறவுகோளையும் சேர்த்திடுக .இந்நிலையில் கூகுளிற்குள் உள்நுழைவு செய்வதற்காக இந்த SHA-1எனும் திறவுகோளானது கண்டிப்பாக தேவை யென்ற செய்தியை மனதில் கொள்க. இந்த SHA-1எனும் திறவுகோளினை எவ்வாறு உருவாக்குவது என உறுதியாக தெரியாது என்ற நிலையில் https://www.androidtutorialpoint.com/material-design/adding-google-login-android-app/ எனும் முகவரியில் Generate SHA-1 fingerprint எனும் தலைப்பின் கீழான செயல்-முறைகளை படித்துஅறிந்து அதன்படிஉருவாக்கிகொள்க.
இது கூகுள் சேவைகளுக்கான google-services.jsonஎனும் கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்கின்றது. இதனை நாம் பின்னர் இணைத்து கொள்வோம் .அடுத்து விரியும் செயல் திட்டத்தின்முகப்பு திரையில் Auth Menu எனும் பட்டியலை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் SIGN-IN METHOD என்பதில் Email/Passwordஎன்பதை இயலுமை செய்து கொள்க. ஏனெனில் அனுமதிபெற்றவர்கள் மட்டுமே ஃபயர்பேஸில் படிக்கவும் எழுதவும் இந்த ஃபயர்பேஸானது அனுமதிக்கும் அதனால் இவ்வாறான அடிப்படைகளை செய்தபின்னர் தற்போதுதான் கூகுள் கணக்கின் வாயிலாக ஃபயர்பேஸினுடைய ஆண்ட்ராய்டின் Chat App எனும் பயன்பாட்டினை உருவாக்கவிருக்கின்றோம் அதனால் ஃபயர்பேஸின் முகப்புதிரையின் பட்டியில் Databaseஎனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்திரையானது JSON மரத்தின் வேர்கள் எங்கிருந்து துவங்குகின்றன என காண்பிக்கும் அதன்பின்னர் நாம்listItems என அழைக்கப்படும் child nodeஎனும் முனைமத்தை அதில் சேர்த்தபின்னர் ஒவ்வொரு பகுதியையும்(Item) இதன்கீழ் சேர்த்து கொள்ளமுடியும் நாம் இந்த JSON மரத்திற்கு தரவுகளை சேர்த்திடும்போது நடப்பிலுள்ள JSON கட்டமைப்பில் அதற்கான புதியதொரு-முனைமத்தையும் அதற்கான விசையும் தானாகவே உருவாகின்றது மேலும் தரவுதளத்தின் இணையமுகவரியும் நகலெடுக்கப்படுகின்றது இங்கு நம்முடைய முனைமத்தின் இணையமுகவரி https://androidchatapp-76776.firebaseio.com/users.json ஆகும் நாம் Rules எனும் தாவிப் பொத்தானின் திரைக்கு சென்று ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸ் தரவுதளத்தின் பாதுகாப்பு விதிகளை தேவையென விரும்பினால் பார்வையிடலாம் அல்லது பாதுகாப்பு விதிகளை படித்திடவும்திருத்தம் செய்திடவும் முடியும் இதில் பாதுகாப்பு விதிகள் trueஎன மாற்றி யமைத்து கொண்டு Firebase Authentication என்பதை இயலுமை செய்து நம்முடைய ஆண்ட்ராய்டின் Chat App எனும்பயன்பாட்டு பணியை தொடருக
பின்னர்திரையின் மேலே கட்டளை பட்டையில் File → New → New Project→என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக. தொடர்ந்து தோன்றிடும் திரையில் நம்முடைய பயன்பாட்டிற்கு ஒரு பெயரிடுக. உலகமுழுவதும்உள்ளவர்கள் நம்முடைய பயன்பாட்டு கட்டுகளை எளிதாக பயன்படுத்தி கொள்வதற்காகவென தனித்துவமான அடையாளம் காணஉதவிடும் நம்முடைய நிறுவனத்தின் களப்பெயரை உள்ளீடு செய்திடுக. இதே கட்டின் களப்பெயரையே ஃபயர்பேஸின் முகப்புதிரையிலும் பயன்படுத்தி கொள்ள-விருக்கின்றோம் என்ற செய்தியை மனதில் கொள்க. அதன்பின்னர் செயல்திட்ட இடவமைவையும், குறைந்தபட்ச SDKவையும் தெரிவுசெய்து கொள்க. அடுத்து தோன்றிடும் திரையில் Empty Activityஎன்பதை தெரிவுசெய்து கொள்க. ஏனெனில், பெரும்பாலான குறிமுறைவரிகளை நாம் இதில் சேர்க்கவிருக்கின்றோம் . அதனை தொடர்ந்து Nextஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .
இந்த செயலிற்கு SignInActivityஎன்றவாறு ஒரு பெயரை தெரிவுசெய்து கொள்க. பின்னர் Generate Layout Fileஎனும் தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்திருப்பதை உறுதி செய்து கொள்க. இல்லையெனில், நாமே இதனை உருவாக்க வேண்டியிருக்கும். இறுதியாக Finishஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. இந்நிலையில்Gradleஎன்பது நம்முடைய செயல்திட்டத்தின் கட்டமைவை சார்ந்திருப்பதை தீ்ர்வுசெய்திடுக .தொடர்ந்து இந்த செயல்முடிவுபெற்றுவிட்டால் அடுத்த படிமுறைக்கு செல்க.
அதன்பின்னர் Gradleஎன்பதை செயல்திட்டத்துடன் ஒத்திசைவாக செய்த பிறகு, நம்முடைய செயல்திட்டத்தின் பயன்பாட்டு கோப்புறையிலுள்ள google-services.json எனும் கோப்பைச் சேர்த்திடுக. மேலும் AndroidManifest.xmlஎனும் கோப்பில் Internetஎனும் அனுமதியை வலைபின்னலில் சேர்ப்பதற்கான இணைப்பு ஏற்படுத்த பின்வரும் குறிமுறைவரிகளை பயன்படுத்தி கொள்க.
AndroidManifest.xml

அதனைதொடர்ந்து நாம் குழுவிவாத செயலிற்காக பதிவுசெய்தல் உள்நுழைவு-செய்தல் ,விவாதம் செய்தல்ஆகியபணிகளுக்காக தனியான உள்நுழைவு இனத்தினை உருவாக்கிடவேண்டும் அதற்காக Launcher Activity ஐ Login ஆக உள்நுழைவுசெய்வது பதிவுசெய்வது ஆகிய செயல்களுக்காக AndroidManifest.xmlஎனும் கோப்பிற்குள் பின்வருமாறு குறிமுறைவரிகளை சேர்த்திடுக

பின்னர் நம்முடைய build.gradle எனும் பயன்பாட்டினை திறந்து அதிலுள்ள dependencies எனும் பகுதியில் பின்வரும் சார்புகளை சேர்த்திடுக
build.gradle
compile ‘com.firebase:firebase-client-android:2.5.2+’
compile ‘com.android.volley:volley:1.0.0’
தொடர்ந்து Firebase chat app எனும் Layout உருவாக்கிடவேண்டும் இதனை எவ்வாறு உருவாக்குவது என தெரிந்துகொள்ள https://www.androidtutorialpoint.com/basics/android-chat-bubble-layout-9-patch-image-using-listview/ எனும் இணையதளமுகவரிக்கு சென்று கொடுத்துள்ள வழிகாட்டிபக்கங்களை முழுவதுமாக படித்து தெளிவடைந்திடுக login, register ,chat ஆகிய திரைகளுக்கு தனித்தனியாக Layout உருவாக்கிடவேண்டும் அதனால் முதலில் activit_chat.xml எனும் பெயரில் Layout ஒன்றினை பின்வரும்குறிமுறைவரிகளை கொண்டுஉருவாக்கிடுக
activit_chat.xml

மேலே கூறிய குறிமுறைவரிகள் chat layout இற்கு ஆனவையாகும்இது நகரும் காட்சியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது ஏனெனில் பயனாளர்கள் முன்பின் நகர்ந்து message_area பகுதியிலுள்ள தம்முடைய முந்தைய குழுவிவாத செய்திகளை நிகழ்வு-நேரத்தில் அனுப்புவதற்கு வசதியாக இருக்கும் . தற்போது activity_login.xml எனும் பெயரில் login திரைக்காக layout ஐ பின்வரும் குறிமுறைவரிகளை கொண்டு உருவாக்கிடுக
activity_login.xml

-தொடரும்

ஆர்க் மவுஸ் ஒரு அறிமுகம்

ஆர்க் மவுஸ் எனும் பிறைவடிவசுட்டியென்பது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தாரால் உருவாக்கி வெளியிடப் பட்டதொரு கணினியின் துனைக்கருவியாகும் இது ஒரு பாரம்பரிய கணினி சுட்டியின் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ளது ஆயினும் இதுஒரு நேர்த்தியான தனிப்பட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மடக்கி வைத்து கொள்ளவும் எங்கு வேண்டுமானாலும் கையில் எடுத்து செல்லும் வசதியுடனும் நம்முடைய கையின்மணிக்கட்டிற்கு அதிக வலியெற்படாத பணிச்சூழலியல் வசதிகளை இது கொண்டுள்ளது இது முதன்முதலில் 2008 இல் வெளியிடப்பட்டிருந்தாலும் பல்வேறு வசதி வாய்ப்பகளுடன் தற்போது புதியவடிவமைப்பில் செந்தர சுட்டியைபோன்று இடதுபுற பொத்தான் ,வலதுபுற-பொத்தான் ,சுழலும் சக்கரம் ஆகியவைகளுடன் சேர்த்து கூடுதல் வசதிவாய்ப்புகளுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஆயினும் வழக்கமான சொடுக்குதலுக்கு பதிலாக தற்போது நாம் அனைவரும் பயன்படுத்திகொண்டுவரும் தொடுதிரை வசதியின் மூலம் விரல்களால் தொடுவதன் வாயிலாககூட செயல்படுமாறு இது மறுகட்டமைவு செய்யப்பட்டுள்ளது மடக்குவதற்கு பதிலாக flatten out வசதியை தேவையெனில் கொண்டுவரலாம் அதுமட்டுமல்லாது Arc Touch Bluetooth Mouse என்றவாறு இணைப்புடன்கூட இது கிடைக்கின்றது அதைவிட தற்போது Surface Arc Mouse எனும் ஐந்தாம் தலைமுறை சுட்டியானது பொத்தான்களுக்கு பதிலாக தொடுதிரையின் வாயிலாக செயல்படுமாறு கிடைக்கின்றது

Surface Pro, Surface Go ஆகியவை ஒரு அறிமுகம்

Surface Pro என்பது மேஜைக்கணினியாகவும்,tablet எனும் மடிக்கணினியாகவும் விண்டோ இயக்கமுறைமை செயல்படுத்தப்பட்டு பயன்படுத்தக்கூடிய வகையில் அதாவது ஒரே கட்டமைப்பையே இரண்டு பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ளும் வகையில்மைக்ரோசாப்ட் நிறுவனத்தாரால் உருவாக்கி வெளியிடப்பட்டதொரு Surface எனும் குழுவின் பொருளாகும் வாடிக்கையாளர் விரும்பியவாறு இதனை சரிசெய்து அமைத்துகொள்ளும் வடிவமைப்பு வசதியைஇதுகொண்டுள்ளது இது திரைகாப்பு பொருளாகவும் விசைப்பலகையாகவும் பயன்படும் Type Cover என்பதுடன் திரையில் கைகளால் எழுதுவதற்கான stylusஎனும் பேனாபோன்ற Surface Pen என்பதும் சேர்த்து கிடைக்கின்றது இது Surface Pro 6எனும்பதிப்பில் 0.3 இஞ்ச் தடிமனுடன் 1.7 பவுன்ட் எடைமட்டும் கொண்ட 16 ஜிபி ரேம் 1டெராபைட் தேக்கும் திறனுடைய வன்தட்டுடன் USB 3.0,வாயிலும் 3.5 mm headphone jack வாயிலும் சேர்ந்து கிடைக்கின்றது இன்ட்டெல் கோர் i5 அல்லது i7 செயலியுடன் UHD Graphics 620 எனும் வரைகலை செயலியுடன் இது கட்டமைக்கப்பட்டு கிடைக்கின்றது
Surface Go என்பது 2-in-1 கணினியாகமைக்ரோசாப்ட் நிறுவனத்தாரால் உருவாக்கி வெளியிடப்பட்ட Surface எனும் குழுவின் மற்றொரு பொருளாகும் இது 1800×1200 துல்லியத்துடன் கூடிய 10 இஞ்ச் தொடுதிரையுடன் வெளியிடப்பட்டுள்ளது திரையில் OneNote பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளும் வசதியுடன்இது உள்ளது இது திரைகாப்பு பொருளாகவும் விசைப்பலகையாகவும் பயன்படும் Type Cover உம் திரையில் கைகளால் எழுதுவதற்கான stylusஎனும் பேனாபோன்ற Surface Pen என்பதும் சேர்த்து கிடைக்கின்றது இது மிகச்சிறியது எடைகுறைவானது அதனோடு செலவும் குறைவானதாக கிடைக்கின்றது கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பேருதவியாக இந்தஇரண்டும் உள்ளன என்ற கூடுதல் தகவலைமனதில் கொள்க

Uvdesk எனும் கட்டற்றஉதவி அமைப்பு ஒருஅறிமுகம்

Uvdesk என்பது SaaS இன் அடிப்படையிலான வாடிக்கையாளருக்கு தேவையான சிறப்பான அனைத்து சேவைகளையும் வழங்கும் ஒரு கட்டற்றஉதவி தீர்வு-மையமாக விளங்குகின்றது இது Amazon, eBay, Etsy, Flipkart ஆகியவற்றுடனும் ஒருங்கிணைந்து செயல்படும் திறன்கொண்டுள்ளது Magento, Prestashop, Shopify, CS-Cart, Opencart என்பவைகளை போன்று வாடிக்கையாளர்களுக்கு மின் வணிகத்தில் மிகவிரைவாக பதில் செயல்செய்யக்கூடிய சிறந்த மின்வணிக கடையாககூட இது விளங்குகின்றது Contact Form, Feedback Form, Suggestion Form என்பவை போன்ற நம்முடைய வசதிகேற்றவாறு இணையபடிவங்களை வடிவமைத்து கொள்ள இது அனுமதிக்கின்றது Gmail, Yahoo mail, Hotmail என்பனபோன்ற அனைத்து மின்னஞ்சல் சேவையாளர்களுடன் இது ஒருங்கிணைந்து செயல்படக்கூடியது இது வாடிக்கையாளர்களின் விற்பணைக்கு பிந்தைய அனைத்து சேவைகளையும் வழங்கவல்லது எதிர்பாராத அனைத்து இணையதள தாக்குதல்களிலிருந்தும் நம்மை இது பாதுகாக்ககூடியது agents, tickets, teams, groups, customers ஆகிய பல்வேறு வழிகளிலிருந்தும் தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள இது அனுமதிக்கின்றது நம்முடைய முகவர்களின் திறனை சரிபார்த்திடும் வசதியை வழங்குகின்றது நவீன இணைய திறன்களை மேம்படுத்தி கொள்ளும் வசதிகொண்டது அனைத்து வகையான சமுதாய பல்லூடகங்களுடன் ஒருங்கிணந்து செயல்டக்கூடியது பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும்பல்வேறு வகைகளிலான மின்னஞ்சல்களுக்கு தேவையான சரியான பதிலை தானாகவே அனுப்புது என்பன போன்ற வசதியை கொண்டது Time format, Timezone, Default Priorities, Default Status, Default Mailbox ஆகிய பணிகளை கையாளும் சிறந்த நிருவாகத்திறனை இது கொண்டுள்ளது

கணினியின் துவக்க நிலை பயனாளர்கள் செய்திடும் பொதுவான தவறுகள்

பின்வரும் தவறுகளை பெரும்பாலான கணினியின் துவக்க நிலை பயனாளர் செய்திடுவார்கள்
1.பணிபுரிந்து கொண்டிருக்கும் மிகமுக்கியமான கோப்புகளை அவ்வப்போது பிற்காப்பு செய்து சேமித்திடவேண்டும் என்ற எண்ணமே சிறிதுகூட இல்லாமல் ஆழ்ந்து பணிபுரிந்து கொண்டிருப்பார்கள்.பொதுவாக ஒரு சில பயன்பாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே பிற்காப்பு செய்து சேமித்து கொள்ளும் மற்றவை அவ்வாறான தானியக்க செயல்களை செயல்படுத்தாது அதனால் நாம் பணிபுரியும் எந்தவொரு கோப்பினையும் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பிற்காப்பு செய்து சேமித்து கொள்க
2.ஏதேனும் பயன்பாடுகளை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது அதன் திரையில் கூறும் அறிவுரைகளை படித்தறிந்து கொள்ளாமலேயே தானியங்கி செயல்போன்று Next அல்லது Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுவார்கள் அவ்வாறு அடுத்தடுத்து பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடாமல் திரையில் கூறப்படடுள்ள விவரங்கள் முழுவதையும் படித்து அடுத்து நிகழ்வு என்னவென தெரிந்து கொண்டு செயல்படுக
3.பயன்படுத்தி கொண்டிருக்கும் கணினியில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளின் செயல்களை முறைப்படி நிறுத்தம் செய்திடாமல் அப்படியே அரைகுறையாக செயல்கள் நடைபெற்றுகொண்டிருக்கும்போதே கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்திடுவார்கள் அதனை தவிர்த்து அனைத்து பயன்பாடுகளின் செயல்கள் முடிவு பெறும்வரை காத்திருந்து கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்க
4.நமக்கு வரும் மின்னஞ்சல்களுடன் இணைப்பாக வரும்கோப்புகளை எச்சரிக்கையாக பாதிப்பு ஏதேனும் வருமா என கவணிக்காமல் திறந்திடுவார்கள் இதனால் நச்சுநிரல்கள் நம்முடைய கணினியை தாக்கும் அபாயம் உருவாகின்றது முடிந்தவரை அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை எச்சரிக்கையாக அனுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றது
5.நமக்கு வரும் மின்னஞ்சல்களை நம்முடைய நன்பர்களுக்கு நண்பர்களின் நண்பர்களுக்கு என தொடர்ச்சியாக சங்கிலி போன்று பரிந்துரைசெய்து அனுப்பிடவேண்டாம் என பரிந்துரைக்கப்படுகின்றது
6. நாம் கண்ணால் காணும் எந்தவொரு பயன்பாட்டு மென்பொருளையும் உடனடியாக பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடவேண்டாம் அவை தீங்கிழைக்கும் நச்சுநிரலாககூட இருக்கலாம் அதனால் அதனைபற்றி நம்பிக்கையான செய்தி கிடைத்தால்மட்டும் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடுக
7.பொதுவாக திரையில் காணும் Download Now, Start Download, அல்லதுContinue என்பன போன்ற பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுவார்கள் ஆயினும் இவை நம்மை வேறொரு விளம்பர பக்கத்திற்கு அழைத்து செல்லும் அதனால் இவ்வாறு நம்முடைய கண்ணால் காணும் அனைத்துபொத்தான்களையும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடவேண்டாம்
8.நாம் பயன்படுத்திடும் இயக்கமுறைமைகளையும் பயன்பாடுகளையும் அவ்வப்போது சமீபத்திய நிகழ்வுகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதற்காக நிகழ்நிலை படுத்தல் செய்திடாமல் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். நடைமுறையில் நாம் பயன்படுத்தி கொண்டிருப்பவைகளை அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி மேம்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது
9. எப்போதும் surge protector அல்லது UPS இல்லாமல் கணினியை மின்னிணைப்பு செய்து பயன்படுத்திடவேண்டாம் அவ்வாறு பயன்படுத்தினால் நம்முடைய கணினியையே புதியதாக வாங்கவேண்டிய நிலை ஏற்படும் அல்லது அதனுடைய உள்ளுறுப்புகளை புதியதாக மாற்றியமைத்திடவேண்டியிருக்கும்

Previous Older Entries