ஓப்பன் ஆஃபிஸ் -87-பொதுவானவை

 நாம் இதுவரையில் முந்தை.ய தொடர்களில் ஆவணங்களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் , விரிதாளை கையாள ஓப்பன் ஆஃபிஸின் கால்க், படவில்லையை கையாள ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் , படங்களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா, கணக்கீடு களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் மேத், தரவுதளமாக ஓப்பன் ஆஃபிஸின் பேஸ் ஆகியபயன்பாடுகளை பார்த்து வந்தோம்

இந்த தொடரில் மேலே கூறிய ஓப்பன் ஆஃபிஸில்  பயன்படுத்தபடும் கூடுதலான வசதிகளை  பற்றி காணலாம்     இதுவரை முந்தைய  தொடர்களில் கூறியவாறு ஓப்பன் ஆஃபிஸில் உருவாக்கபட்ட கோப்புகளை அச்சிட விரும்புவோம் இந்நிலையில் அனைத்து பயன்பாடுகளிலும்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=>print=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்   print என்ற உரையாடல் பெட்டி ஒவ்வொரு பயன் பாட்டிற் கேற்ப சிறிது மாறுபடும்   அச்சுபொறியின் பெயர், எத்தனை நகல் என்பன போன்ற பொதுவான விவரங்களுடன் அந்தந்த பயன்பாடுகளுக்கேற்ப மேலும் தேவையான விவரங்களை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அச்சிட்டுகொள்க.

இந்த அச்சிடும் பணியை விரைவாக செய்திட வேண்டும்எனில் மேலே கட்டளை பட்டையிலுள்ள printer -இன் (படம் -87-1) உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் நேரடியாக நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது இயல்புநிலை அமைவை கொண்டு அச்சிட்டுவிடும்

87.1

படம் -87-1

நம்முடைய ஆவணத்தை பார்வையிட விரும்பும் பார்வையாளர்களின் கணினியில் நாம் பயன்படுத்திடும் ஓப்பன் ஆஃபிஸ் பயன்பாடு இல்லாவிட்டாலும்  நம்முடைய ஆவணத்தை அவர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக அக்கோப்பினை பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்து அனுப்பிட விரும்புவோம் அந்நிலையில்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=>Export as pdf=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்   pdf options என்ற (படம் -87-2 ) உரையாடல் பெட்டியில்  General,Inial view,user interface,links ,security ஆகிய ஐந்து தாவி பொத்தான்களின் பக்கங்கள் உள்ளன  அந்தந்த பக்கங்களுக்கு சென்று தேவையான வாய்ப்புகளை  தெரிவுசெய்துகொள்க

மிகமுக்கியமாக Export bookmarksஎன்ற வாய்ப்பானது கோப்பிலுள்ள விவரங்களை பகுதி பகுதியாக பிரித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல் வதற்கு அந்த பகுதியின் பெயரானது அட்டவணையாக பட்டியலிடப்பட்டு அந்த அட்டவணையில் குறிப்பிட்ட பகுதியின் பெயரை தெரிவுசெய்து சொடுக்கினால்  குறிப்பிட்டபகுதிக்கு நேரடியாக செல்வதற்கான வழிமுறைகளை  உருவாக்கு கின்றது .

Export automatically inserted blank pages என்ற வாய்ப்பானது புத்தகங்களில் வலதுபுறம் 1,3,5 என்றுஒற்றை படைவரிசையிலும்  இடதுபுறம் 2,4,6 என்று இரட்டைபடை வரிசையிலும் பக்கங்களை உருவாக்க பயன்படுகின்றது.

87.2

படம் -87-2

இதுமட்டுமின்றி நம்முடைய பிடிஎஃப் கோப்பினை அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பார்வையிடமுடியும் என்ற நிலையை உருவாக்கிட இதே உரையாடல் பெட்டியின் security  என்ற தாவிபொத்தானின் பக்கத்தில்  Set open password,set a password for permissions ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம் 87.3 இல் உள்ளவாறு தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையான கடவுச்சொற்களை உள்ளீடுசெய்து  ok என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. இறுதியாக pdf options என்ற (படம் -87-2 )உரையாடல் பெட்டியில் Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்   நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்துவிடும்

87.3

படம் -87-3

இதே செயலை விரைவாக செய்திட  மேலே கட்டளை பட்டையிலிலுள்ள இதற்கான (படம் -87-4) உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நேரடியாக நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது இயல்புநிலை அமைவை கொண்டு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்துவிடும்

87.4

படம் -87-4

இதுமட்டுமின்றி மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=> Export=> என்றவாறு கட்டளைகளை செயற் படுத்தியவுடன் தோன்றிடும்Export  என்ற உரையாடல் பெட்டியின் மூலம்   XHTML. BibTeX (.bib), LaTeX 2e (.tex),Macromedia Flash (.swf). என்பன போன்ற வகை கோப்புகளையும் உருவாக்கமுடியும் .

அடுத்ததாக ஓப்பன் ஆஃபிஸில் உருவாக்கபடும் ஆவணத்தை நேரடியாக மின்னஞ்சல்  அனுப்பிவைத்திடுவதற்காக

87.5

படம் -87-5

மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து File => Send => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்  விரியும் சிறு கட்டளைபட்டியில்  documents as E-mail,E-mail ascOpen documents,E-mail as Microsoft word,E-mail as pdf என்பன போன்ற (படம் -87-5)பல்வேறு வாய்ப்புகளின் கட்டளைகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் மின்னஞ்சல் பெறுபவரின் முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்து  கொள்க இந்நிலையில்  ஓப்பன் ஆஃபிஸின் மெயில் மெர்ஜ் எனும் வசதியை பயன்படுத்தி கொள்க

இதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து Tools => Mail Merge Wizard => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  Mail Merge Wizard எனும் வழிகாட்டி திரையில் (படம் -87-6)தோன்றிடும் இந்த வழிகாட்டி கூறும் வழிமுறைகளை next ,next என்றவாறு பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்கியவாறு  பின்பற்றி மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பி வைத்திடுக

87.6

படம் -87-6

பொதுவாக நாம்  அனுப்பிடும் ஆவணங்கள் நம்முடைய கையொப்பமுடன் இருந்தால் மட்டுமே அதனை நம்பகமான ஆவணமாக கொள்ளமுடியும் அதற்காக  மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து File => Digital Signatures => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக உடன்  விரியும்  உரையாடல் பெட்டியில்  தேவையானவாறு நம்முடைய கையெழுத்தை  சேர்த்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க .  இவ்வாறான கையெழுத்துடன் கூடிய ஆவணமானது நிலைபட்டியில்       87.7 என்றவாறு உருவபொத்தானுடன் தோன்றிடும்.

அக்சஸ் 2007-12-விபிஏவின் தரவுவகையும் அதனைசெயல்படுத்தும் வழிமுறையும்

 அக்சஸ் 2007 இன் குறிமுறை பதிப்புத்திரையானது பல்வேறு வசதி வாய்ப்புகளை விபிஏ வில் குறிமுறையை எழுதுவதற்கும் எழுதியதை பராமரிப்பதற்கும் உதவுகின்றது, இதனுடைய குறிமுறையானது பல வரிகளுக்கு நீளுவதாயின் ஒவ்வொரு வரியின்முடிவிலும் கீழ்கோடிட்டு எழுதுவர் அதனால் விபிஏவானது இதனை ஒரேகூற்றின் வரியாக கணக்கில் எடுத்துக்கொள்ளும்

இந்த பதிப்புத்திரையில் கட்டுப்பாடுகளின் பெயர்களான கட்டளைச்சொற்களை அகரவரிசைப்படி அடுக்கப்பட்டு குழுவாக வகைபடுத்தி பொருட்களின் கீழிறங்கு பட்டியலாக படம்-12-1-விரியச்செய்கின்றது,இந்த பட்டியலிருந்து நமக்குதேவையான கட்டளைகளை தெரிவுசெய்துகொள்ளலாம்,

12.1

படம்-12-1

ஒவ்வொரு கட்டளைவரித்தொடரிலும் மாறிகளை பயன்படுத்தி செயல் படுத்துவதுதான் திறன்மிகுந்த செயலாகும்,இங்கு மாறிஎன்பது தற்காலிகமாக மதிப்பை தேக்கிவைக்க பயன்படும் நினைவகத்தின் முகவரியையே மாறிஎன அழைப்பர்,இந்த மாறிக்கான மதிப்பை = என்ற இயக்கி மூலம் ஒதுக்கீடு செய்வார்கள்,

இந்த மாறிகளை Dim என்ற திறவுச்சொல்லை பயன்படுத்தி அறிவிப்பு செய்யலாம் ,மற்றும் = என்ற இயக்கிமூலம் மதிப்பை ஒதுக்கீடுசெய்யலாம்

இந்த மாறிகளை அறிவிப்பு செய்வதற்கான விதிமுறைகள் பின்வருமாறு உள்ளன,

1,இதனை எழுத்துகளால் மட்டுமே ஆரம்பிக்கவேண்டும்,

2,சொற்களுக்கு இடையில் உட்பொதிந்துள்ள காலிஇடம் விடக்கூடாது

3,ஒருமுறைபயன்படுத்திய சொல்லை மீண்டும் வேறுஇடத்தில் பயன்படுத்தக்கூடாது

4,சொல்லின் இடையே ஆங்காங்கே காலிஇடம் ,நிறுத்தக்குறிகள் போன்றவைகளை பயன்படுத்தக்கூடாது

5sub,module,form போன்ற ஏற்கனவே பயன்படுத்திய திறவுச்சொற்களை  மீண்டும் பயன்படுத்தக்கூடாது

6,சொற்களின் நீளம் 64 எழுத்துகளுக்குமிகாமல் இருக்கவேண்டும்

7,பெரிய மற்றும் சிறிய எழுத்துகளை கலந்து பயன்படுத்தலாம் அதனால் குழப்பம் ஏதும் வராது

இந்த மாறிகளை பின்வருமாறு இரண்டு வழிகளில் அறிவிப்பு செய்யலாம்

1,Implicitஎன்ற அறிவிப்பு இதன்மூலம் விபிஏவானது நமக்காக தானாகவே மாறிகளை உருவாக்கிகொள்கின்றது

2.Explicitஎன்ற அறிவிப்பு இதில் Dim,private,public போன்ற திறவுச்சொற்களை பயன்படுத்தி வெளிப்படையாக அறிவிப்பு செய்யப்படுகின்றது,

Dim என்ற திறவுச்சொல்லை பயன்படுத்தி அறிவிப்பு செய்யும் வழிமுறையில் மட்டும் Localஎன்ற திறவுச்சொல் பயன்படுத்தவதைபோன்று இது செயல் படுகின்றது

Public என்ற திறவுச்சொல்லை பயன்படுத்தி அறிவிப்புசெய்தால் அந்த மாறியை கட்டளைவரித்தொடரில் எங்குவேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்

Private என்பது Dimபோன்றதுதான் ஆனால் தருக்கமுறை(module)அளவில் மட்டும்இந்த மாறியை பயன்படுத்திட உதவுகின்றது,

மாறியை குறிப்பிட்டசொல்வரை அது  variant ஆக இருக்கும் ஆனால் இந்த variant ஆனது தரவுவகை அளவிற்கு திறனுடையதன்று இதனை தேக்கிவைக்க அதிக நினைவக இடம்தேவைப்படும் இதனை தேடிப்பிடிப்பதற்கும் அதிகநேரம் எடுத்தgகொள்ளும்

Option explicit  என்ற கூற்று தருக்கமுறை(module)யின் தலைப்பில் வைத்து ஆரம்பிக்கும்போது அனைத்து மாறிகளையும் வெளிப்படையாக அறிவிப்பு செய்வதாக விபிஏ அறிவுறுத்துகின்றது, இதனை Tools=>Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் தோன்றும் (படம்-12-2) options  என்ற உரையாடல் பெட்டியில் Editorஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்க  உடன் தோன்றும்  திரையில் தேவையான அறிவிப்புசெய்கின்ற தேர்வுசெய் பெட்டிகளை தெரிவுசெய்து கொள்ளலாம்,மாறிகளுக்கு பெயரிடும்போது நான்கு எழுத்துகள்வரை சுருக்கமாக cmd  என்பது போன்று  குறிப்பது வழக்கமாகும்

12.2

படம்-12-2

மாறியின் Scope இதில் Dim, Privateபோன்றவற்றின் செயல்பாடு மற்றும் வாழ்வு குறிப்பிட்ட வழிமுறையின் பணிமுடியும்வரை மட்டுமே ஆனால்  Publicஎன்பதற்கு மட்டும் தருக்கமுறை(module)முழுக்க இதன் செயல்பாடு மற்றும் வாழ்வு இருக்கும்,மாறியானது நிலையானதும் நிரந்தரமானதும் அன்று இதன்வாழ்வு குறிப்பிட்ட பணிமுடியும்வரை மட்டுமேயாகும்

இந்த procedure ஐ எங்கு  உருவாக்குவது? இதனை ஒரு செந்தர விபிஏ தருக்கமுறை(module)  அல்லது ஒருபடிவம் மற்றும்அறிக்கைஆகியவற்றின் பின்புலமாக செயல்படுவதற்காக உருவாக்கப்படுகின்றது,

இந்த விபிஏவின் வழிமுறையை (procedure ) பல்வேறுவழிகளில் பல்வேறு இடங்களில் நம்தேவைக் கேற்றவாறு அழைக்கமுடியும்

இதில்உள்ள  Sub procedure ஆனது பின்வரும் இலக்கணங்களை கொண்டது

1,Declaration அளவில் அறிவிப்புசெய்யப்படுவதால் இது எங்கு உள்ளது என விபிஏ தெரிந்து கொள்கின்றது

2,ஒவ்வொரு Subஎன்றகூற்றும்ஒரு  Endஎன்ற கூற்றுடன் முடிவடைகின்றது

3,அறிவிப்பானது ஒவ்வொரு கட்டளைவரித்தொடரின் ஆரம்பத்தின் தலைப்பில் செயல்படுகின்றது

4,விபிஏ procedure  ஆனது பல்வேறு கூற்றுகளை உள்ளடக்கமாக கொண்டது

Event procedure ஐ ஒருபடிவத்தில் உருவாக்குதல்

1,Frmsales என்ற படிவம் திரையில் உருவாக்கி வைத்து இருப்பதாக கொள்வோம் இதில்  cboBuyerID என்பதை தெரிவுசெய்துகொள்க

2,பின்னர் F4 என்ற செயலி விசையை அழுத்தி இந்த கட்டுப்பாட்டின் பண்பியல்பு சாளரத்தை திரையில் தோன்றச்செய்க,

3,இதில் Event  என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் திரையில் Afterupdateஎன்ற நிகழ்வை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்   Afterupdate என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியலை விரியச் செய்து அதில் Event procedure என்பதை (படம்-12-3) தெரிவுசெய்க,

4,பின்னர்   … என்ற முப்புள்ளி வடிகட்டும்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி விபிஏ பதிப்புத்திரையை திறந்துகொள்க,

12.3

படம்-12-3

5,அதில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்க,

கட்டளை நிரல் தொடர் 12-1

Me.Recalc

If Not IsNull(Me!cboBuyerId) Then

If Not IsNull(Me!cboBuyerId.Column(2)) Then

Me!txtDiscountRate = Format(Me!cboBuyerId.Column(2), “percent”)

Me!txtTaxLocation = Nz(Me!cboBuyerId.Column(4))

Me!txtTaxRate = Nz(Me!cboBuyerId.Column(3), 0)

End If

Else

Me!txtDiscountRate = Null

Me!txtTaxLocation = Null

Me!txtTaxRate = Null

End If

6,அதன் பின்னர் Debug என்ற பட்டியில் உள்ள  Compile என்பதை தெரிவுசெய்து கொண்டு இந்த குறிமுறையில் syntexபிழைஎதுவும் இருந்தால் சரிசெய்துகொள்க,

7 இந்த விபிஏ சாளபத்தை மூடிவிட்டு frmsalesஎன்ற படிவத்திற்கு திரும்புக, இது ஒரு sub  procedure இன் குறிமுறையாகும்

Function ஐ உருவாக்குதல்  Bassale function என்பதை உருவாக்குவதாக கொள்வோம்

1,முதலில் Moduleஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, இதன் வழிகாட்டிடும் பலகத்தை தெரிவுசெய்துஇந்த தருக்கமுறை(module)இன் பெயரில்  இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

2,உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில்  Design view என்பதை( படம்-12-4) தெரிவுசெய்து கொள்க,

12.4

படம்-12-4

3,உடன்  basesales function இன் விபிஏ பதிப்புத் திரையில் தோன்றும்

4அதில் பின்வரும் குறிமுறையை தவறில்லாமல் தட்டச்சுசெய்க,இது ஒரு  function இன் குறிமுறையாகும்

கட்டளை நிரல் தொடர்-12-2

Private CalcExtesion(Quantity As Integer,

price As Currency,Discountpercent As Double)As Currency

Dim Extesion As Currency

extension = Quantity * price

CalcExtension = extension – (extension * Discountpercent)

End Function

இந்த செயலி சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்க்கவேண்டும் அதற்காக immediateஎன்ற சாளரம் பயன்படுகின்றது,  ctrl+ G என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன்  immediateஎன்ற சாளரம் திரையின் கீழ்பகுதியில் தோன்றும் அதில்  ? CalcExtension (5,3.5,.05) என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை  அழுத்துக, உடன் அடுத்தவரியில் இதனுடைய விடை  16.625 என்றவாறு (படம்-12-5)தோன்றும்

12.5

படம்-12-5

இதேபோன்று மற்ற கூற்றுகளையும் கட்டுபாடுகளின் கட்டளைவரிகளையும் சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்க்கலாம்

விபிஏவில் Named arguments என்ற மற்றொரு வசதி உள்ளதுஇதன்மூலம் பெயரிடப்படாத தருமதிப்பை கொண்டு செயல்படுத்துவதா ?பெயரிடப்பட்ட வாறு செயற்படுத்தவதா? என்ற குழப்பமேதுமில்லாமல்தெளிவாக புரிந்துகொள்ள உதவுகின்றது, இது அக்சஸ் 2007 இல்  செயலியில் கடத்தும்போது மட்டும்  பயன்படுகின்றது,இது எதனையும் சார்ந்திராமல் சுதந்திரமாக இதன்அமையுமிடம் இருக்கஉதவுகின்றது,

கணினியின் இணைய இணைப்பு வேகம் 20%. கூடுதலாக ஆக்கிட

என்னதான் அதிவேக இணைய இணைப்பு ,அகல் கற்றை இணைய இணைப்பு என நம்மிடம் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் கோப்புகளை பதிவேற்றம் செய்யும்போதும் பதிவிறக்கம் செய்யும்போதும்    இணைப்பு வேகமானமானது படிப்படியாக குறைந்து கொண்டே வந்து நத்தை வேகத்திலும் அல்லது ஆமைவேகத்திலும் செயல்படும்

அதனால் நமக்கு ஏராளமான எரிச்சலும் செல்லா கோபமும் வந்து அலைக்கழிக்கும் இவ்வாறான நேரங்களில் கூடுதலாக செலவுசெய்து எங்களுடைய மென்பொருளை வாங்கி நிறுவி பயன்படுத்தினால் உங்களுடைய கணினியின் இணைய இணைப்பு வேகமானது ராக்கெட் வேகத்தில் செல்லும் என எறியும் நெருப்பில் நெய்ஊற்றுவது போன்று  தம்முடைய விளம்பரத்தின் மூலம் ஒரு சிலநிறுவனங்கள் நமக்கு கூடுதலான எரிச்சலை ஏற்படுத்துவார்கள்  அவ்வாறான கூடுதலான செலவேதுமில்லாமல் உங்களுடைய பையிலிருந்து கூடுதலாக ஒரு ரூபாய் கூட செலவழிக்காமலேயே உங்களுடைய கணினியின் இணைய இணைப்பு வேகத்தை 20 % உயர்த்தி கொள்ளமுடியும்   இது  எவ்வாறு முடியும் என இப்போது காண்போம்.

விண்டோ இயக்கமுறைமை நிறுவியுள்ள  எந்தவொரு கணினியும் இணைய இணைப்பு பெறும்போது  இந்த இயக்கமுறைமையினை அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்ளவும்  கணினியின் இயக்கத்தை  ஒருங்கிணைத்திடவும் என 20% இணைப்பு வேகத்தை விண்டோவானது தனக்கென யாருடைய அனுமதியும் இல்லாமல்  தானாகவே ஒதுக்கி கொள்ளும் மிகுதி 80 % மட்டுமே நாம் பயன்படுத்து வதற்காக  வழங்கபடுகின்றது அதனால்தான் நம்முடைய கணினியின் இணைப்பு வேகமானது மெதுவாக உள்ளது என்ற தகவலை  அறிந்து கொள்க இதனை தவிர்க்க start => run=> என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் விரியும்  run என்ற உரையாடல் பெட்டியில்  gpedit.msc என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையைஅழுத்துக

2.1

2.1

உடன் விரியும் Local Group Policy Editor  என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்தில்  Local Computer Policy=>Computer Configuration=>Administrative Templetes=> Network=> QoS Packet Scheduler=> என்ற வாறு  கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் விரியும்  QoS Packet Scheduler என்ற  பலகத்தில்  Limit Reservable Bandwidth. என்ற கட்டளையை தெரிவு செய்து இருமுறை சொடுக்குக

பின்னர் Limit Reservable Bandwidth. என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் enabled என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க அதன் பின்னர்options என்பதன்கீழுள்ள bandwith limit (%) என்ற உரை பெட்டியில்  20%. என்றிருக்கும் மதிப்பை 0 என மாற்றியமைத்தபின்  apply,  ok ஆகிய இரு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் உங்களுடைய கணினியின் இணைய இணைப்பு வேகம்   20%. கூடுதலாக இருப்பதை காணலாம்

2.2

2.2

 

BullZip என்ற பயன்பாடு

அடோப் அக்ரோபேட் ரைட்டர் எனும் மென்பொருள் நம்மிடம் இருந்தால்  மட்டுமே நம்மால் எந்தவொரு ஆவணத்தையும் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் என தவறான எண்ணம் நம்மில் பெரும்பாலா னோருக்கு  உள்ளன. ஆயினும் தற்பேது ஓப்பன் ஆஃபிஸில்  அல்லது லிபர் ஆஃபிஸில் எந்தவொரு ஆவணத்தையும் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும்   ஆனால் நம்மிடம் ஓப்பன் ஆஃபிஸ் அல்லது லிபர் ஆஃபிஸ்  இல்லாவிட்டால் BullZip  என்ற பயன்பாட்டினை கொண்டு  எந்தவொரு ஆவணத்தையும் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும். இதற்காக    http://www.bullzip.com/products/pdf/info.php#download என்ற இணைய  பக்கதிற்கு சென்று Bullzip PDF Printer என்ற மென்பொருளை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து    கணினியில் நிறுவியபின்  கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக

பின்னர் எந்தவொரு பயன்பாட்டிலும் File => Print …=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக  அதன் பின்னர் விரியும் print என்ற உரையாடல் பெட்டியில்    Printer என்பதன்கீழ்  Bullzip PDF Printer என்பதை தெரிவுசெய்து கொண்டு   OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையில் உருவாகும் பிடிஎஃப் கோப்பினை சேமித்து வைத்திடும் இடத்தினை மட்டும் தெரிவுசெய்தவுடன் நாம் விரும்பிய ஆவணம் பிடிஎஃப் கோப்பாக ஒரு சில நிமிடங்களில் உருமாறி விடும்

3.1

3.1

கோப்பினை யாருடைய கண்ணிலும் தென்படாது மறைத்து வைத்தல்

மிக முக்கியமான கோப்புகளை skofficefileஎன்றவாறான  தனியான கோப்பகத்திற்குள்  நம்மால் பாதுகாப்பாக  வைத்து பராமரித்து வரும்போது இந்த கோப்பகத்தை வேறுஎவரும் நம்முடைய கணினியில் தேடிடும்போது காணமுடியாதவாறு செய்தால் நம்முடைய கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும் என எண்ணிடுவோம் .அந்நிலையில் start=>Run=>  என்றவாறு கட்டளைகளை அல்லது விசைப்பலகையில் windowkey => Run=>என்றவாறு விசைகளை அழுத்துக உடன் தோன்றிடும்   Run என்ற உரையாடல் பெட்டியில் cmdஎன தட்டச்சு  செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

4.1

4.1

பின்னர் தோன்றிடும் கருப்பு வெள்ளையில் தோன்றிடும் கட்டளைவரியை செயற்படுத்துவதற்கான திரையில் attrib+s +h D:\skofficefileஎன்ற வாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக இதன் பின்னர் நம்முடைய கோப்பகமான skofficefileஎன்பது நம்முடைய கணினியில் தேடிடும்போது யாருடைய கண்ணிலும் தென்படாது  அதன்பிறகு நம்முடைய கண்களால் காணுமாறு செய்வதற்கு இதே   கட்டளைவரியை செயற்படுத்துவதற்கான திரையில் attrib-s -h D:\skofficefileஎன்ற வாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

4.2

4.2

படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்

ஏதேனும் படத்தின்மீது உள்ள எழுத்துகள் அல்லது வருபட்ட படநகலாக இருக்கும்  எழுத்துகளை  மீண்டும் அவைகள் முழுவதையும் தட்டச்சு செய்வது அல்லது ஏதேனும் ஒரு OCR மென்பொருளை கொண்டு அவ்வெழுத்துகளை மீட்டெடுப்பது ஆகிய இருவழிகளில் மட்டுமே   நம்முடைய ஆவணத்தில் இவைகளை கொண்டு வந்து சேர்த்திட முடியும்  இந்த OCR மென்பொருளை கொண்டு அவ்வெழுத்துகளை மீட்டெடுத்திடும்போது 100% துல்லியமாக இருக்கும் என உத்திரவாதம் கிடையாது அதனால் அதில் சில திருத்தங்களை தட்டச்சு செய்வதன் வாயிலாக இதனை சரியான உரையாக செய்யமுடியும்  இதற்கு பதிலாக நம்முடைய கணினியில் எம்எஸ் ஆஃபிஸ் இருந்தால் அதன்மூலம் படத்தின்மீது உள்ள எழுத்துகள் அல்லது வருபட்ட படநகலாக இருக்கும்  எழுத்துகளை  மீண்டும் அவைகள் முழுவதையும் தட்டச்சு செய்வது அல்லது  OCR மென்பொருள் இல்லாமல்  துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்

இதற்காக நம்முடைய கணினியில்  Microsoft Office OneNote  என்ற பயன்பாடு உள்ளதாவென சரிபார்த்து கொல்க பின்னர் Start–=>All Programs=>Microsoft Office=>Microsoft Office OneNote=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக அதனை செயல்பட செய்க  அதன்பின்னர் எழுத்துகள் உள்ள படத்தினை அல்லது  உருவ படத்தை இடம்சுட்டியால்  பிடித்து  இழுத்துவந்து  Microsoft Office OneNote  என்ற பயன்பா ட்டில் விட்டிடுக அல்லது நகலெடுத்து ஒட்டிகொள்க. பின்னர் ஒன்நோட்டில் ஒட்டிய எழுத்துகள் உள்ள படத்தின்து இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியலில் Copy Text From Picture  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் எம்எஸ் வேர்டு அல்லது நோட்பேடை திறந்துகொண்டு   இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியலில் paste  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் படத்தின்மீது உள்ள எழுத்துகள் அல்லது வருபட்ட படநகலாக இருக்கும்  எழுத்துகள் நம்முடைய பயன்பாட்டில் Xtra Power ,Windows x என்றவாறு வந்து சேர்ந்துவிடும் அதன்பின்னர் அதனை தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க

5.1

5.1

 

திரையில் Recycle Bin இல்லாத போது தவறுதலாக நீக்கம் செய்த கோப்பினை எவ்வாறு மீட்டெடுப்பது

நாம் நம்முடைய கணினியில் delete என்ற  கட்டளையின் மூலம் நீக்கம் செய்கின்ற கோப்புகள் அனைத்தும் கணினியானது முதலில் குப்பைக்கூடையான Recycle Bin என்பதில் கொண்டு  சென்று சேர்க்கின்றது

பின்னர்  மனம் மாறி அடடா நாம் நீக்கம் செய்த கோப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என தடுமாறும்போது உடன் நேராக கணினித்திரையில் இந்த குப்பைகூடையின்  உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும் Recycle Bin என்ற திரையில் நாம் நீக்கம் செய்த கோப்புகள் பட்டியலாக தோன்றிடும் அதில் தேவையான கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் குறுக்குவழி பட்டியில் Restore  என்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் அந்த கோப்பு பழைய இடத்திற்கு வந்து சேரும் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே

ஆயினும்  Recycle Bin என்ற உருவ பொத்தானே கணினித்திரையில் இல்லாத போது தவறுதலாக நீக்கம் செய்த கோப்பினை எவ்வாறு மீட்டெடுப்பது என்ற சிக்கல் எழும் .அவ்வாறான நிலையில்  இடம்சுட்டியை கணினித்திரையில் ஏதேனுமொரு காலியான இடத்தில் வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் குறுக்குவழி பட்டியில்  personlizeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன்  விரியும்   personlizeஎன்ற திரையில்  change desktop icons என்ற கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன்  விரியும்   desktop icons settingsஎன்றஉரையாடல் பெட்டியில்   Recycle Bin என்பதற்கருகிலுள்ள தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு apply, okஆகிய பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் கணினித்திரையில் Recycle Bin என்ற உருவ பொத்தான் தோன்றிடும

6.1

6.1

இணையபக்கங்களில் ஆரம்பிக்கபட்ட நம்முடைய தனிப்பட்ட கணக்கு களைநீக்கம் செய்திட

நாம் இணையத்தை பயன்படுத்திடும்போது ஒவ்வொரு இணைய பக்கத்திற்கும் உள்நுழைவதற்குமுன் நம்மை பற்றிய தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்து பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றின்மூலமாக  நமக்கென தனியாக ஒரு கணக்கினை ஆரம்பித்தபிறகே நம்மை Twitter,payball,facebookஎன்பன போன்ற   இணைய பக்கங்கள் நம்மை உள்நுழைவுசெய்ய அனுமதிக்கின்றன அதன்பின்  நம்முடைய பல்வேறு பணிச்சுமைகளின் காரணமாக இந்த இணைய பக்கத்திற்கு மிக நீண்ட நாட்களாக செல்லாமல் இருந்துவிடுவோம் பின்னர் மீண்டும் இதே இணைய பக்கத்தில் உள்நுழைவுசெய்யலாம் என  முயன்றிடும்போது நாம் நம்முடைய கணக்கினை உருவாக்கிடும்போது தயார்செய்த  பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவை நினைவில் இருந்தால் பரவாயில்லை மறந்து போனபோது புதிய கணக்கினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது  இந்நிலையில் நாம் ஏற்கனவே வழங்கிய  நம்மை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் என்ன ஆவது  மிகமுக்கியமாக நாம் நீண்ட நாட்களாக Orkut,My Space,Skypeஆகிய இணைய பக்கங்களில்  பயன்படுத்தாத போது நம்மை பற்றிய  தனிப்பட்ட தகவல்கள் என்னாவாது

மிகமுக்கியமாக  Skypeஇல்  நம்மை பற்றிய  தனிப்பட்ட தகவல்களுடன் நமக்கென ஒரு கணக்கினை ஆரம்பித்தபின் பயன்படுத்தாத பேது அதனை அழித்து நீக்கம் செய்ய அனுமதிக்காது  இது சரியான நடைமுறையா என யோசித்து பாருங்கள்

இவ்வாறானநிலையில்   http://wikicancel.org/ என்ற முகவரியில் செயல்படும் wikicancel.org  என்ற தளமானது கட்டணம் ஏதுமில்லாமல் paybal முதல்  netfix வரை நாம் ஆரம்பித்த நம்முடைய தனிப்பட்ட கணக்கு களை பல்வேறு படிமுறைகளை பின்பற்றி  நீக்கம் செய்திட  முடியும்

7.1

7.1

கணினியை பயன்படுத்துவதற்கான பாதுகாப்பிற்கான திறமூல கருவிகள்

பின்வருபவை கணினியை பயன்படுத்துவதற்கான பாதுகாப்பிற்கான திறமூல கருவிகள் ஆகும் மிகமுக்கியமாக  இணைய இணைப்பிற்கு தேவையான பாதுகாப்பினை இந்த கருவிகள் நமக்கு வழங்குகின்றன

1Nmap :Gprdon Fyodor Lyon என்பவரால் உருவாக்கபட்ட  இந்த கருவியானது port scanning,operatingystem detection  ,version detection  ஆகிய செயலை ஆதரிக்கின்றது இது வலைபின்னல் நிர்வாகியாகவும் ,அபகரிப்போரிடம்இருந்து காப்பாளாரகவும் செயல்படுகின்றது  இதனை  அவ்வப்போது செயல்படுத்தி நம்முடைய  வலை பின்னலை வருடி ஆய்வுசெய்து ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் ஆதனை சரிசெய்து செய்துகொள்ளமுடியம்

8.1

2 Tcpdump   இதில் Tcpdumpஎன்பது கட்டளைவரியின் மூலம் செயல்படுவதாகும்  இது lippcap என்பதன் அடிபபடையில் c/c++ என்ற திறமூல நூலகத்திலுள்ள வலைபின்னலின் போக்குவரத்தை கட்டுபடுத்தகூடிய திறன் வாய்ந்ததாகும்  $sudo tcpdum net 10.10.10.0/24என்ற கட்டளைவரியானது 10.10.10.0/24என்ற வலைபின்னல் முழுவதையும்  கட்டுபடுத்தகூடியதாகும்

3  wireshark ஆனது  இரு  கணினிகளுக்கிடையேயான TCP/IP தகவல்களை பிடித்து ஆய்வுசெய்து நம்மால் படிக்கமுடிந்த வடிவமைப்பில் வழங்குகின்றது  இதன்மூலம் வலைபின்னலின் என்னவகையான பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என அறிந்து சரிசெய்து அமைத்து கொள்ளமுடியும்

8.3

4 your firewall மிக சிறப்பாக கட்டமைக்கபட்ட  firewall  ஆனது எல்லாவகையான தீங்குதலான தாக்குதலிலிருந்தும் நம்முடைய வலைபின்னலை பாதுகாக்கின்றது  இது Cisco ADSL என்ற வழிசெலுத்திக்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகின்றது

5 SQLMap  தற்போது பெரும்பாலானவர்கள் தரவுதளத்தை அடிப்படையாக கொண்ட இணைய தளங்களையே பயன்படுத்துகின்றனர் அதனால் தரவுகளின் திருட்டு  நடைபெற ஏராளமான வாய்ப்புள்ளது  அதனால் MYSQL DB2 SQLite Sybase,Firbird  என்பன போன்ற தரவுகளை கையாளும் இணைய பக்கத்திற்கு போதுமான பாதுகாப்பினை இது வழங்குகின்றது

8.5

6 Aircrack-ng   இது கம்பியில்லா வலைபின்னல் இணைப்பிற்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகின்றது இது WEP WPA-PSK ஆகிய வற்றை ஆதரிக்கின்றது   802.11a,802.11b,802.11g ஆகிய வலைபின்னலின் போக்குவரத்தை கட்டுபடுத்துகின்றது

Free Nasஎனும் பயன்பாடு

கோப்பு நிலையில் கணினியின் தகவல்களை வலைபின்னல் வழியாக வளாக பிணையத்திற்கான இணைப்பை ஏற்படுத்தி  தேக்கிவைத்திடவும் மீட்டிடவும்  இது பயன்படுகின்றது

இது NFS,CIFS(Common Internet File System) ,SMB(Server Message Block)ஆகிய கோப்பு பகிர்வையும் நிருவகிப்பையும் பயன்படுத்தி கொள்கின்றது

இது வாடிக்கையாளர் கணினிகளுக்கான மத்திய தேக்கிவைக்கும் நினைவகமாக செயல்படுகின்றது

இது சுலபமான செலவுகுறைந்த  தகவல்களை தேக்கிவைக்கும் திறனை வழங்குகின்றது

இது மிக பேரளவு தரவுகளை கையாளும்போது மிகத்திறனுடன் செயல்படுகின்றது

இது Free BSD இலும் லினக்ஸிலும் தயாராக இருப்பதால் free Nas ,NAS4 NAS Lite என்ற  இதனுடைய வகையிலொன்றை நம்முடைய வன்தட்டிலும் அல்லது இதனை மெய்நிகர் கணினியிலும் அல்லது யூஎஸ்பி வாயிலாக வெளிப்புற வன்தட்டிலும் நிறுவி பயன்படுத்தி கொள்ளமுடியும்

மிகமுன்னேறிய  Free BSD  அடிப்படையில் இயங்கும் இயக்கமுறைமையில்  செயல்படக்கூடிய வலைபின்னல் இணைந்த தேக்கிவைத்திடும் சேவையாளராக விளங்குகின்றது

இது NFS,SSH,FTP,TFTP.BitTorrent,ITuneஆகிய இணைய வலைபின்னலை ஆதரிக்கின்றது  இது கம்பியுடைய அல்லது கம்பியில்லாத வலைபின்னலை ஆதரிக்கின்றது

இதனை VMWare Workstationஅல்லது அதனை போன்ற மெய்நிகர்கணினியில் கூட நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம்  512 MB RAM ,20 Gb HDD , ஆகியவை இது செயல்பட தேவையான வன்பொருளாகும்

இதனை http://freenas.org/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

9.1

 

Previous Older Entries