கணினியையும் அதன்உறுப்புகளையும் அறிந்துகொண்டு அவைகளை திறம்பட பயன்படுத்திகொள்ளஉதவும் கட்டற்ற மென்பொருட்கள்

நாம் இணையத்தில் நம்முடைய நண்பர்களுக்கு புத்தகத்தை கொள்முதல் செய்வதற்காக அமோஸான் எனும் இணைய தளத்தினை பரிந்துரைசெய்திடுவோம் அவ்வாறே ஒலிஒளிபடங்கள் எனில் யூட்யூப் எனும் இணைய தளத்தினை பரிந்துரைசெய்திடுவோம் அல்லவா அவ்வாறே நம்முடைய கணினியில் இணைந்துள்ள உறுப்புகளையும் கணினியில் மறைந்துள்ள திறன்களையும் மிகசிறப்பாக நாம் பயன்படுத்தி கொள்வதற்காகவும் திறனுடன் கையாளுவதற்காகவும்  ஏராளமான அளவில் கட்டணத்துடன் கூடிய மென்பொருள்கருவிகள் உள்ளன அதேபோன்று கட்டற்ற கட்டணமற்ற  மென்பொருள்கருவிகள் கூட உள்ளன அவைகளுள் மிகப்பிரபலமானவை பின்வருமாறு

1 R இது ஒரு கணினிமொழிசார்ந்த புள்ளியியல் ,வரைகலை ஆகியசூழலில் அவைகளின் தரவுகளை எளிதாக கையாள உதவும் கட்டற்ற கருவியாகும்  சமன்பாடுகள் கோடற்ற சமன்பாடுகள் வகைவகையான புள்ளியியல் ஆய்வுகள்,கால ஆய்வுகள் வரைகலை தொழில்நுட்பங்கள் விரிவாக்க ஆய்வுகள் என ஏராளாமானவகையில் இந்த கருவியை பயன்படுத்தி கொள்ளமுடியும்

2 Python அறிவியலாளர் சமூகத்திற்கு பெரிதும் உதவும்கருவியாக இந்த பைத்தான சிறந்து விளங்குகின்றது இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்வதிலிருந்து மேம்பட்ட நிரல்தொடர்மொழியாக மேம்படுத்துவதுவரைஇதுமிகப்பெரியகருவியாக அறிவியல் ஆய்வாளர்களுக்கு உதவுகின்றது

3Apache Mahout இது கணினியையும் அதன் துனை உறுப்புகளையும் மிகவிரைவாக அளந்தறிய உதவும் மிகச்சிறந்த கருவியாக மிளிறுகின்றது

4H2O இது பேரளவு தரவுகளை அறிவியலறிஞர்கள் மிகவிரைவாகவும் எளிதாகவும் கையாளவும் கணினியின் நினைவக அளவுகோளை கையாளவும் உதவும் மிகச்சிறந்த கருவியாக விளங்குகின்றது

5RapidMiner இதிலுள்ள வழிகாட்டியின் உதவியுடன் முன்கூட்டியே நம்முடைய ஆய்விற்கு தேவையான கருவிகளை கட்டமைத்துகொண்டு அதனை செயல்படுத்தி சரிபார்த்திடவும் அனைத்து தளங்களையும் சரிபார்த்திடவும் உதவும் மிகச்சிறந்த கருவியாக உள்ளது

 வாருங்கள் இவைகளுள்  உங்களின் தேவைக்கேற்றதை அறிந்து தெரிவுசெய்து அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்

 

 நம்முடைய அன்றாட விண்டோ சூழலில் பயன்படுத்தி கொள்வதற்கான கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்

1இணையத்தில் உலாவருவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமல்லாது   ஃபயர் ஃபாக்ஸ், குரோமியம் போன்ற கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகளையும் நம்முடைய தேவைக்ககேற்ப பயன்படுத்தி கொள்க இவை அனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கவையாகும்.

2 மின்னஞ்சல்களை கையாள மைக்ரோசாப்ட்டின் அவுட்லுக் என்பதற்கு பதிலாக தண்டர்பேர்டு எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க இதில் தேவையற்ற குப்பை மின்னஞ்சல்களை வடிகட்டுவதுபோன்றஏராளமான நமக்கு தேவையான கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது மேலும் இதுஅனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கதாகும்.

3 தொடர்புகொள்வதற்கும் குழுவிவாதத்திற்கும்  முகநூல் செய்தியாளர், எம்எஸ்என் செய்தியாளர்,யாகூ செய்தியாளர் போன்றவைகளுக்கு மாற்றாக பிட்கின்(Pidgin), எம்பாத்தியையும்(Empathy) ஸ்கைப்பிற்கு மாற்றாக  எகிஜா(Ekiga) என்பதையும்  எக்ஸ்சாட்(Xchat) என்பதையும் பயன்படுத்தி கொள்க.இவை அனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கவையாகும்.

அலுவலக பயன்பாடுகளுக்காக உதவும் எம்எஸ் ஆஃபிஸிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸையும் ,அபிவேர்டு, என்பதையும்  மைக்ரோசாப்ட் பப்ளிஸர்ஸ் என்பதற்கு பதிலாக ஸ்கிரைபஸ் என்பதையும் அடோப் அக்ரோபேட்டிற்கு பதிலாக ப்பிடிஎஃ்ப் கிரியேட்டர் என்பதையும் செயல்திட்டங்களுக்கு ஃபெங்க் ஆஃபிஸ் என்பதையும் பயன்படுத்தி கொள்க இவை அனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கவையாகும்.

வரைபடங்களை கையாளுகின்ற அடோப் போட்டோசாப்பிற்கு பதிலாக ஜிம்ப் என்பதையும் மைக்ரோசாப்ட் விஸியோவிற்கு மாற்றாக டையா என்பதையும் அடோப்இல்லஸ்ட்ரேட்டர் கோரல் ட்ரா ஆகியவற்றிற்கு பதிலாக இங்க்ஸ்பேஸ் என்பதையும் பயன்படுத்தி கொள்க இவை அனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கவையாகும்.

6. அறிவியல் ஆய்விற்காக  மேட்லேப் என்பதற்கு மாற்றாக ஸ்கைலேப்  என்பதை பயன்படுத்திகொள்கஇதுஅனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கதாகும்.

 7.அசைவூட்டு படங்களை கையாளுவதற்காக மாயாவிற்கு பதிலாக ப்ளெண்டர் என்பதை பயன்படுத்திகொள்க இது அனைத்து இயக்கமுறைமையில் செயல்படும் திறன்மிக்கதாகும்.

8.இசைகளுக்காக விஎல்சியையும்  பேரளவு கோப்புகளைசுருக்கி கட்டுவதற்கு  பிட்டோரண்ட், 7 ஜிப், எஃப்டிபி களையும் ,தரவுதளங்களாக மைஎஸ்கியூஎல்மெய்நிகர் கணினிக்காக மெய்நிகர் பெட்டியையும் பயன்படுத்திகொள்க.

புதியவர்கள்கூட யாருடைய துனையும் வழிகாட்டுதலுமின்றி எளிதாக லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திகொள்ளமுடியும்

 நாம்அனைவருமே கட்டணத்துடன் கூடிய விண்டோ இயக்குமுறைமையை பயன்படுத்துபவர்களாகவே உள்ளோம்  அதற்கு மாற்றாக கட்டணமற்ற லினக்ஸை பயன்படுத்திகொள்க என விவாதித்தால் எளிதான விண்டோஇயக்கமுறைமையை விட்டிட்டு  கணினியின் வல்லுனர்கள் மட்டுமே பயன்படுத்திடும் லினக்ஸை பயன்படுத்திட தெரியாது என்று அலுத்துகொள்பவர்களின் கவலையை போக்கி அனைவரும் எளிதாக விண்டோவை போன்றே லினக்ஸ் இயக்கமுறைமையையும் பயன்படுத்திக் கொள்வதற்காக வெளியிடப்பட்டவைகள்தான் மின்ட், ஓப்பன்சுசி, உபுண்டு போன்ற லினக்ஸ் இயக்கமுறைமையின் வகைகளாகும்

அடுத்ததாக  அன்றாட பயன்பாட்டிற்கு விண்டோவை பயன்படுத்தி கொண்டு லினக்ஸ்எவ்வாறு செயல்படுகின்றது என அவ்வப்போது பார்த்து திருப்தியுற்றால் மாறிக்கொள்வேண் என விவாதிப்பவர்கள்  விண்டோவையும் லினக்ஸையும் இணையாக ஒரு கணிணியில் இயக்கமுடியாதே  என பொய்யான வாதத்தை நம்முன் வைப்பார்கள்  முதலில் இந்த வாதத்தினை உண்மையானது இல்லையா என சரிபார்த்திடுவோம் இந்த விண்டோ இயக்கமுறைமையின் மீது ஒரு பயன்பாடு போன்ற லினக்ஸ் இயக்கமுறைமையும் செயல்படும் திறன்கொண்டது என்ற செய்தியை அறிந்துகொள்க அதனால் இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி பார்த்தபின்னர் இந்த லினக்ஸ் இயக்கமுறைமைக்கு  மாறுக என்ற ஆலோசனை கூறப்படுகின்றது

 இவ்வாறான வெற்றுவிவாதத்திற்க முற்றுபுள்ளிவைத்து உண்மையிலேயே லினக்ஸை பயன்படுத்திட விழைபவர்கள் பின்வரும்  ஆலோசனைகளை பின்பற்றிடுக

முதலில் இணையத்தில் நேரடியாக உபுண்டு டூர் என்பதன் துனையுடன் லினக்ஸினை எவ்வாறு பயன்படுத்துவது என  அறிந்துகொள்க

2. அடுத்ததாக இணைய உலாவியில் லினக்ஸ சிஎல்ஐ பயன்படுத்திடுக http://www.bellard.org/jslinux/index.html/      

மூன்றாவதாக விண்டோ இயக்கமுறைமையில் இந்த லினக்ஸை ஒரு பயன்பாடு போன்று செயல்படசெய்து அதனுடைய செயல்முறையை அறிந்துகொள்க http://www.ubuntu.com/downlaod/desktop/window-installer/  நான்காவாதாக லிவ்சிடி என்பதன் துனையுடன் நம்முடைய கணினியில் இயக்கமுறையைநிறுவுகை செய்திடாமலேயே நேரடியாக சிடியிலிருந்து இந்த லினக்ஸை நம்முடைய கணினியில் செயல்படசெய்து பயன்படுத்திகொள்க http://www.linux.com/directory/distributions/livecd/

5 ஐந்தாவதாக கையடக்க  பென்ட்ரைவில் இருந்து இந்த லினக்ஸை செயல்படச்செய்து பயன்படுத்தி பார்த்திடுக http://lwww.inuxliveusp.com/   ,http://pendrivelinux.com/ 

6 ஆறாவதாக மெய்நிகர்கணினியை நிறுவுகை செய்து அதில் இந்த லினக்ஸை பயன்படுத்தி இதனுடைய செயலை பார்த்தறிந்துகொள்க

7 இறுதியாக விண்டோவுடன் லினக்ஸையும் சேர்த்து இணையாக(CoLinux) KNOPPIXஎன்பதை இயக்கி பயன்படுத்தி கொள்கhttp://www.colinux.org/     இந்த ஏழுபடிமுறைகளையும் பயன்படுத்தி திருப்தியுற்றால் தனியாக எளிதான லினக்ஸ் வெளியீடுகளை பயன்படுத்தி கொள்க

7

வரைபடங்களை வரையஉதவும் டாட் எனும் கணினிமொழி

 உரைகளை கொண்டு வரைகலையையும் வரைபடங்களையும் உருவாக்கி கையாள இந்த டாட் எனும் கணினிமொழி உதவுகின்றது  இது ஒரு கட்டற்ற மென்பொருளாகும் இது.dot, .pdf போன்ற பின்னொட்டுடன்கூடிய வடிவமைப்பு கோப்புகளை கையாளும் திறன்கொண்டதாகும்  இதனை http://www.graphviz.org/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க

 8

ஒரு உரை பதிப்பானை திறந்துகொண்டு பின்வரும் குறிமுறைவரிகளை உள்ளீடு செய்து கொள்க

 diagraph G{

  v1 → v2 [lable = “e1”];

 v1 → v4 [lable = “e2”];

 v1 → v3 [lable = “e3”];

 

 பின்னர் இதனை செயல்படுத்தி firstgraph.dot எனும் கோப்பாக சேமித்துகொள்க. அதன்பிறகு

$ dot firstgraph.dot -Tpdf -0 firstgraph.pdfஎனும் கட்டளைவரிவாயிலாக ப்பீடிஎஃப் வடிவமைப்பில் சேமித்துகொள்க பிறகு $ rvince firstgraph.pdfஎன்ற கட்டளை வரிவாயிலாக அந்த ப்பீடிஎஃப் கோப்பிலிருந்து வரைபடத்தை திரையில் கொண்டுவரமுடியும்.

மேலும் விவரங்களுக்கு http://refernce.wolfarm.com/language/ref/feromat/DOT.html/ என்ற இணைய பக்கத்தி்ற்கு செல்க

 இணைய உலாவலின்போது தானியங்கியாக ஓடும் கானொலி காட்சிகளை எவ்வாறு நிறுத்துவது?

நாம் மிக முக்கிய அத்தியாவசிய தேவைக்கானசெய்திகளை தேடி இணையபக்கங்களில் உலாவிக்கொண்டிருக்கும்போது  கண்களை கவரும் வண்ண படங்களுடனும் இணைய இசைகளுடனும் இடையிடையே கானொளி காட்சிகள் திரையில் தோன்றி நம்முடைய கவணத்தை  திசைதிருப்பிவிடுகின்றன அதிலும் விளம்பரங்களின் தொல்லை தாங்கமுடியாதவாறு அமைந்துள்ளன இதனை எவ்வாறு தவிர்த்து நம்முடைய கவணத்தை சிதறாத நம்முடைய பணியை செய்வது என்பதுதான் மிகப்பெரிய சவலான பணியாகும் அஞ்சற்க  நம்முடைய இணைய உவாவியானது இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனில்  அதனுடைய திரையை தோன்றசெய்திடுக அதில் மேலே வலதுபுறமூலையில் உள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  விரியும் பட்டியில் Manage Add-onsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்விரியும் திரையில்இடதுபுறம்Add on typesஎன்பதன்கீழ் Toolbars and extensions என்பதையும் அதற்கு இணையாக வலதுபுறம்shockwave flash object என்தையும் தெரிவுசெய்துகொண்டு கீழே வலதுபுறமூலையிலுள்ளdisable என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

1

1

நம்முடைய இணைய உலாவி ஃபயர்ஃபாக்ஸ் எனில்  முகவரிபட்டையில்about:addons என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் விரியும் திரையில் Pluginsஎன்பதை தெரிவுசெய்து கொண்டு Shockwave Flashஎன்பதை மேம்படுத்தி காண்பிக்க செய்து  கீழிறங்கு பட்டிவாயிலாகAsk to Activate என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

2

2

நம்முடைய இணைய உலாவி ஃபயர்ஃபாக்ஸ் எனில்  முகவரிபட்டையில் chrome://settings/content என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் விரியும் திரையில்  Pluginsஎனும் பகுதியில் Let me choose when to run plugin contentஎன்ற வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொண்டு Doneஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

3

3

இணைய உலாவலின் போது குரோம் இணையஉலாவியில் செயல்படுத்தபடும் சில தொழில்நுட்பங்கள்

இணைய உலாவலின்போது இணையங்களில் காணும் உரைகளை உடன் தெரிவுசெய்து நகலெடுத்திட விரும்புவோம் அதற்காக விசைப்பலகையில் shiftஎனும் விசையை பிடித்துகொண்டு தெரிவுசெய்வதற்கு பதிலாக தெரிவுசெய்திடவிரும்பும் சொல் ஒற்றையாக இருந்தால் அந்த சொல்லின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை ஒருமுறை மட்டும் சொடுக்குக சுட்டியின் பொத்தானை மூன்று முறை சொடுக்குதல் செய்தால் அந்த பத்தி முழுவதும் தெரிவுசெய்யப்பட்டுவிடும் குறிப்பிட்ட வரிகள் மட்டும் எனில் முதல் சொல்லின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை ஒருமுறை மட்டும் சொடுக்குக பின்னர் தேவையான வரிவரை இடம்சுட்டியை நகர்த்தி சென்று அங்கு இடம்சுட்டியை வைத்திட்டு இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை ஒருமுறை மட்டும் சொடுக்குக உடன் நாம் விரும்பும் வரிகளின் உரைமுழுவதும் தெரிவுசெய்யபட்டுவிடும் அதன்பின்னர் வழக்கம் போன்று நம்மால் தெரிவுசெய்யபட்ட உரையை நகலெடுத்து ஒட்டிகொள்க

எக்செல்லை எளிதாக அறிந்து பயன்படுத்தி கொள்ள உதவும் excel-easy.comஎனும் தளத்தினை பயன்படுத்தி கொள்க

எக்செல்லை பயன்படுத்துவது என்பது சிலருக்கு எட்டிக்காயாக கசக்கும் வேறுசிலருக்கு அதுஏதோ மந்திரதந்திர செயல்கள் என்பதுபோல பயந்து ஒதுங்கிடுவார்கள் பயப்படவேண்டாம் அனைவரும் ஏன்புதியவர்கள் கூட http://www.excel-easy.com/எனும்  தளத்திற்கு சென்று இந்த தளத்தில் Introduction, Basics, Functions, Data Analysis and VBA ஆகிய தலைப்புகளில்கூறும் செய்முறை பயிற்சிகளை கண்டு எளிதாக பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் மேலேகூறிய தலைப்புகள் தொடர்பாக முந்நூறுக்கும் அதிகமான மாதிரிப்பயிற்சிகள் இதில் உள்ளன அவைகளை நன்கு படித்தறிந்து நமக்கு பொருத்தமான எக்செல் மாதிரிகளை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க.

1

Previous Older Entries