பணியாளர் ஒருவர் தன்னுடைய வருங்கால வைப்புநிதியின்மிகுதி இருப்பு தொகைஎவ்வளவு என எந்த நாளிலும் எளிதாக அறிந்து கொள்ளலாம்

எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியும் எந்தவொரு தொழிலாளியும் தன்னுடைய வாழ்நாளில் எத்தனை நிறுவனங்களில் வேண்டுமாணாலும் மாறிமாறி பணிபுரிந்து கொண்டிருந்தாலும்அவருக்கு ஒரேயொரு UAN எனும் வாருங்கால வைப்புநிதிக்கான எண் ஒதுக்கீடு செய்யப்படும் அதனால்அவர் எத்தனை நிறுவனத்திற்கு மாறி சென்று பணிபுரிந்துகொண்டிருந்தாலும் அவருடைய இந்த UAN எனும் ஒரேயொரு கணக்கில் மட்டுமே வருங்கால வைப்புநிதியானது வரவு வைக்கப்படும் இதன்மூலம் அவருடைய வருங்கால வைப்புநிதி அவருடைய கணக்கில் சேமிப்பது உறுதிசெய்யப்படுகின்றது இதற்கு முன்பு அவர் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறி சென்றால்அந்தந்த நிறுவனங்களிலும் அவருக்கென தனித்தனி கணக்குகள் ஒதுக்கீடு செய்ய்யப்பட்டு அவர் பணிஓய்வு பெறும்போது அந்த கணக்குகளை ஒன்றாக சேர்த்து வருங்கால வைப்புநிதியை திரும்பபெறுவது என்பது மிகவும் காலவிரையுமும் அதிகசிரமமும் கொண்டசெயலாக குறிப்பி்ட்டகாலத்தில் அவருடைய கணக்கில் இருந்த பணம் கிடைத்திடாமல் மிகவும் சிரமமப்பட்டனர் இவ்வாறான சிரமங்கள் அறவே இந்த புதிய முறையில் தவிர்க்கப்பட்டது சரி இவ்வாறான புதிய UAN எனும் வாருங்கால வைப்புநிதி கணக்கில் எவ்வளவு தொகை இருப்பில் இருக்கின்றது என பணிபுரியும் ஒருவர் பின்வரும் படிமுறையை பின்பற்றி மிகஎளிதாக இணையத்தின்வாயிலாக காணமுடியும்
இதற்கான முதல் படிமுறையாக அவர் http://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface/ எனும் இணையபக்கத்திற்கு சென்று நம்முடைய 12 இலக்கவருங்கால ஒருங்குகுறிஎண்(UAN.) செயல்படசெய்திடுவதற்கான தாவிப்பொத்தானின் திரைக்கு சென்று தேவையான விவரங்களை உள்ளீடு செய்திட்டபின் நம்முடைய ஒருங்குகுறிஎண்(UAN.) ஆனது செயல்பாட்டிற்கு வருவதற்கு நான்கு நாட்கள் எடுத்து கொள்ளும் அதன்பின்னர் இந்த 12 இலக்க ஒருங்குகுறி எண்ணை (UAN.) உள்நுழைவு செய்வதற்காக பயனாளர் பெயராக கொண்டு கடவுச்சொற்களுடன் உள்நுழைவுசெய்திடுக
படிமுறை இரண்டில் இந்தEPFO எனும் வருங்கால வைப்புநிதியின் இணையபக்கத்தில் பணியின்போது இடையே திருமணம் உடல்நிலை சரியில்லாததற்கான மருத்துவ செலவு ஆகியவற்றிற்காக திரும்பபெறுவதற்கான நம்முடைய கோரிக்கையின் நிலை ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும்போது நம்முடைய கணக்கினை வேறுநிறுவனத்திற்காக மாற்றவேண்டிய நம்முடைய கோரிக்கையின் நிலை போன்ற பல்வேறு இணைய சேவைகளை நமக்காக தயாராக உள்ளதை காணலாம்
அவ்வாறான சேவைக்காக பல்வேறு தாவிப்பொத்தான்களின் திரைநமக்கு உதவதயாராக இருக்கின்றன அவற்றுள்‘view எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றிடு செய்திடுகஅதில் நம்முடைய profile, service history, UAN card , passbook addressஆகியவிவரங்களை காணலாம் இந்த passbook addressஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்நம்மை இதுதொடர்பான இணையபக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அல்லது http://epfindia.gov.in/ என்ற இணையபக்கத்திற்கு செல்க அங்கு member passbook எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்நம்மை இதுதொடர்பான இணையபக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும் இங்கு நம்முடைய செயலில் இருக்குமாறு செய்த UAN ,எண்ணையும் EPFO இணைய தளத்தின் உள்நுழைவதற்கான அதே கடவுச்சொற்களையும் பயன்படுத்தி உள்நுழைவுசெய்திடுக இதன்பின்னர் நம்முடைய வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது தற்போதைய மிகுதியாக எவ்வளவு தொகைஉள்ளது என அறிந்து கொள்ளலாம் இதனை தனியான தாளில் தேவையெனில் அச்சிட்டு கொள்ளமுடியும்

யாவரும் எளிதில் கல்வி கற்பதற்காக உதவிடும் கேடிஇ (KDE)இன் பயன்பாடுகள்

எந்தவொரு வயதினரும் கல்வி கற்று தங்களின் திறனை மேம்படுத்திடுவதற்காக ஏராளமான இணையதளங்கள் தயாராக உள்ளன அவற்றுள் கட்டணமற்றவைகளும் ஏராளமாக உள்ளன அவைகளுள் ஐந்து கேடிஇ பயன்பாடுகள் பின்வருமாறு
1 கேடச் (Ktouch) இது தொடுதிரைஎனும் வசதியின் வாயிலாக எழுத்துகளை உள்ளீடு செய்வதற்கான சிறந்த பயிற்சிதளமாகம் மிகவிரைவாக கற்றுகொள்ளஉதவிடும் ஒரு சிறந்த கருவியாகவும் விளங்குகின்றது Vimபோன்ற உரைபதிப்பான் பயன்பாட்டின் வாயிலாக நாம் தட்டச்சு பயிற்சியை பெறுவதற்கு இது உதவுகின்றது இதில் ஏற்கனவே இந்த தட்டச்சு பயிற்சிக்கான பாடங்களை அல்லது நாம் விரும்பியவாறான பாடங்களை தெரிவுசெய்து கொண்டு நம்முடைய தட்டச்சு பயிற்சியை துவங்கலாம் நிமிடத்திற்கு 180 எழுத்துகள் வீதம் 98%துல்லியத்துடன்பயிற்சியைஇது திரையின் மேலேயுள்ள சாளரத்தின் வாயிலாக கட்டுபடுத்தி நம்மை பயிற்றுவிக்கின்றது
2 கேஜியாக்ரபி (KGeography)என்பது பல்வேறு உலகநாடுகளின் பெயர் அவற்றின் எல்லை அவற்றின் தலைநகர் அவைகளின் இடஅமைவு போன்ற தகவல்களை கொண்ட உலகவரைபடத்துடன் அவ்விவரங்களை அறிந்துகொள்வதற்கான பல்வேறு பயிற்சிகளுடன் கூடிய எளிய மிகதிறனுடைய கருவியாக இது விளங்குகின்றது
3மார்பில் (Marble) இதுவும் கேஜியாக்ரபி போன்றகருவிதான் ஆயினும் இது ஏறத்தாழ கூகுளின்எர்த் என்ற பயன்பாடுபோன்றதாகும். உலகநாடுகளின் சாலை வரைபடங்கள் , வரலாற்று வரைபடங்கள், தட்பவெப்பநிலை வரைபடங்கள் ,டாப்போகிராபிகல் வரைபடங்கள் என்பனபோன்ற மிகவித்தியாசமான உலகவரைபடங்களை நாம் கற்றறிந்து கொள்வதற்கான மிகச்சிறந்த கருவியாக உள்ளது இது கிரியேட்டிவ் பொது அனுமதிஅடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது
4 மினியூட்(Minuet )இசையை எப்படியாவது கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக இதிலுள்ள chords, intervals, rhythms, scales ஆகிய திறன்களுக்கான பியானோ போன்ற கருவிகளுக்கான பல்வேறு பயிற்சிகள் நாம் இசையை கற்றுக்கொள்வதற்காக தயாராக உள்ளன இவை ஒவ்வொன்றிற்குமான எளிய எடுத்துகாட்டுகளை காதால் கேட்டு அதன்பின்னர் நாமே முயற்சி செய்து பயிற்சி பெறும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடன் அதற்கான தீர்வையும் இதில் கண்டு நாம் தெளிபெறமுடியும்
5 கேவேர்டுகுவிஸ் (KwordQuiz) இதிலுள்ள flashcardsஎனும் மெய்நிகர் கருவியானது இருபலகங்களை கொண்டது அவற்றுள் வேறு மொழிகளின் சொற்களை இடதுபுற பலகத்தில் உள்ளீடு செய்தால் அதற்கான விளக்கத்தை நம்முடைய தாய்மொழியில் வலதுபுற பலகத்தில் வழங்குகின்றது அவ்வாறே நாம் வரலாற்று தேர்வுக்கு தயாராவதற்காக வரலாற்று தேதிகளை இடதுபுற பலக்ததில் உள்ளீடு செய்தால் அந்த தேதியில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் வலதுபுற பலகத்தில் பிரதிபலித்திடும்
மேலும் இதைபோன்ற பயனுள்ள கருவிகளை பற்றி அறிந்து கொண்டு பயன்படுத்தி கொள்வதற்கு KDE யினுடைய https://www.kde.org/applications/education எனும் இணைய பக்கத்திற்கு செல்க

வரைபடங்களை கையாளஉதவும் ஜிம்ப் எனும் கட்டற்ற பயன்பாடு எவ்வாறு என்னுடைய வாழ்க்கையின் பாதையை மாற்றியமைத்தது

நான் வழக்கமான இளந்தலைமுறையாளர்கள் போன்று அங்கொன்றும்இங்கொன்றுமான பணிகளை செய்துவந்தபின்னர் மிகமெதுவாக திறமூலமென்-பொருட்களில் மிகமுக்கியமாக கட்டற்ற பயன்பாடான ஜிம்ப் எனும் பயன்பாட்டில்வடிவமைத்தல் மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்திடும் நிலைக்கு முன்னேறியபோது என்னுடைய வாழ்க்கைதரம் இந்த ஜிம்ப்எனும் கட்டற்ற பயன்பாட்டினால் மேம்பாடு அடைந்தது என பின்வரும் தகவல்களை அனைவரின் பாரவைக்கும் சமர்ப்பிக்கேன்றேன்
1 இந்த ஜிம்ப் எனும் கட்டற்ற பயன்பாடானது என்னுடைய சொந்த வரைகலை விளம்பர படங்களைகட்டணம் எதுவுசெலுத்தாமலேயே வடிவமைத்து உருவாக்கி விற்பணை செய்து என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான பொருளை ஈட்டிட அனுமதிக்கின்றது
2 முதலில் எனக்கென தனியாகவும் பின்னர் நன்பர்களுக்காகவும் அதன்பின்னர நான்சார்ந்துள்ள நிறுவனத்திற்காகவும்என தனியான பிராண்டினை நான் ஒரு தொழில்முறைவரைவாளனாக வடிவமைத்து மேம்படுத்திட இந்த ஜிம்ப் எனும் கட்டற்ற பயன்பாடானது அனுமதிக்கின்றது
3 சமூக வலைதளத்திலும் மின்வெளி சந்தையிலும் சென்றடைவதற்கான வடிவமைப்பு கருவிகளை கொண்டு நான் எந்த வகையானபிராண்டினை விரும்புகின்றேனோ அதனை அடைவதற்கு இது பேருதவியாக உள்ளது
4 இந்த ஜிம்ப் எனும் கட்டற்ற பயன்பாடானது பெரிய நகரஙகளிலும் சாதாரணமனிதன் ஒருவன் வாழ்வதற்கு போதுமான வருமானத்தை ஈட்டக்கூடிய திறனை வழங்குகின்றது
5 நிறுவனத்திற்கு எடுத்துகொள்ளும் எந்தவொரு புதிய செயல்திடடத்திலும் இந்த ஜிம்ப் எனும் கட்டற்ற பயன்பாடானது புத்தாக்கத்துடன் கற்பனைவளமிக்க செயல்களை வடிவமைத்து மேம்படுத்திட அனுமதிக்கின்றது
6 இவ்வாறான செயல்திட்டங்களில் எதிர்பாராத சூழ்நிலைகளிலும் தளர்ந்து மனம்-சோர்ந்திடாமல் செயல்வேகத்துடன் சுயமாக அதனை வெற்றிகொள்ளும் திறனை பெறுவதற்கு இதிலுள்ள பல்வேறு கருவிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன
7 இதுInkscape,Converseen, Comipro+ ஆகிய மற்ற வரைபடங்களின் வடிவமைத்தல் மேம்படுத்துதல் ஆகிய செயல்களுக்கேற்ப இது ஒத்தியங்கிட தயாராக இருக்கின்றது
8 குறிமுறைவரிகளைபற்றியோ கணினிபற்றியோ அறிமுகம்இல்லாத புதியவர்கள் கூடமிகஎளிதாக இதனை கற்று சிறந்ததொழில்முறை வரைகலை வடிவமைப்பாளாராக மிளிரமுடியும் என்பதுதான் மிகமுக்கிய செய்தியாகும்
9 இந்த ஜிம்ப் எனும் கட்டற்ற வரைகலை பயன்பாட்டினை கொண்டு வணிக ரீதியிலான பொருட்கள், ஆடைகளின் விளம்பரங்கள், ஸ்கேட்போர்ட்ஸ், மாடிதோட்டம் திட்டங்கள், புகைப்பட ஆல்பங்கள், ஸ்காலடாஸ்டிக் விளக்கக்காட்சிகள், இன்போ கிராபிக்ஸ், டி.ஜே. பிரஸ் கிட்கள், சில்லறை பேக்கேஜிங், காமிக் புத்தகங்கள், ஸ்டோர்பிரண்ட் பதாகைகள், பஸ் ஸ்டாப் சுவரொட்டிகள், வணிக அட்டைகள், இரவு விருந்து நிகழ்ச்சிகான சுவரொட்டிகள், விளம்பரப் பொருட்கள், சமூக ஊடக உள்ளடக்கங்கள், மாநாடு பதாகைகள், இலவசமான கூப்பன்கள் ஆகிய பல்வேறு பணிகளை செய்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பொருளினை எளிதாக ஈட்டமுடியும் என்பது திண்ணம்

ஆண்ட்ராய்டுபயிற்சிகையேடு பகுதி-13 பயனாளர் இடைமுக புறவமைப்புகள்

அடிப்படை கட்டுமான தொகுதி என்பது பயனாளர் இடைமுகத்திற்காக ஒரு காட்சியான(View) பொருளாகும் .இது காட்சி இனத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகும், இது திரையில் ஒரு செவ்வக பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் மேலும் இது வரைதலுக்கும் நிகழ்வினை கையாளுவதற்கும் பொறுப்பாக உள்ளது. காட்சி என்பது பொருட்களுக்கான அடிப்படை இனமாகும் . பொத்தான்கள், உரைகளின் புலங்கள்போன்ற பயனாளர் இடைமுக உறுப்புகளின் இடைமுகத்தை உருவாக்குவதற்கு இதனை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது
இந்தகாட்சிகுழு (View Group)என்பது ஒரு காட்சியின்(View) துனை இனமாகும் மேலும் இது மற்ற காட்சிகளை அல்லது மற்ற காட்சிக் குழுக்களை கொண்டிருக்கும் இது கண்ணிற்கு புலப்படாத கொள்கலணை வழங்குகின்றது தொடர்ந்து அவைகளின் புறவமைப்பு பண்பியல்புகளையும் வரையறுக்கின்றது
. மூன்றாவது மட்டத்தில் காட்சிகுழுக்கக்ளின் துனை இனங்கள் உள்ள வெவ்வேறு புறவமைப்புகள் நம்மிடம் இருக்கின்றன மேலும் ஒரு வித்தியாசமான புறவமைப்பானது ஒரு ஆண்ட்ராய்டு பயனாளர் இடைமுகத்திற்காக காட்சி கட்டமைப்பை வரையறுக்கின்றது பொதுவாக இயக்கநேரத்தில் View / ViewGroupஎனும் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும் அல்லது நம்முடைய செயல்திட்டத்தின் res/layoutஎனும் கோப்பகத்தில் இருக்கின்ற main_layout.xml எனும் எளிய XML கோப்பினை பயன்படுத்தி நம்முடைய புறவமைப்பை அறிவிக்கமுடியும்
. நம்முடைய வரைகலை பயனாளர் இடைமுகப்பினை அடிப்படையாக கொண்ட XML எனும் கோப்பில் மேலும் உருவாக்குவது பற்றிய விவரங்கள் இந்த பயிற்சியில் உள்ளன . பொத்தான்கள், அடையாளங்கள், உரை பெட்டிகள் என்பன போன்ற எந்தவகை பொருட்களையும் ஒரு புறவமைப்பு கொண்டிருக்கலாம், . பின்வருவது நேர்கோட்டு புறவமைப்பை கொண்டஒரு XML கோப்பின் எளிய உதாரணமாகும்

<!– More GUI components go here →

இவ்வாறு நம்முடைய புறவமைப்பு வரையறுக்கப்பட்டிருந்தால் நம்முடைய பயன்பாட்டு குறிமுறைவரிகளிலிருந்து புறவமைப்பு வளங்களை நம்முடையActivity.onCreate() callback என்பதில் பின்வருமாறு செயல்படுத்தி மேலேற்றம் செய்ய முடியும்
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
ஆண்ட்ராய்டின் புறவமைப்பு வகைகள்
ஏராளமான வகையில் ஆண்ட்ராய்டால் புறவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன நாம் பெரும்பாலான அனைத்து ஆண்ட்ராய்டு பயன்பாடுகளையும் வெவ்வேறு வகையான காட்சிகள், தோற்றங்கள், உணர்வுகள் ஆகியவற்றை வழங்குவதற்காக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்

1

நேர்க்கோட்டு புறவமைப்பு
இது ஒரு திசையில் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக, உள்ள அனைத்து உறுப்புகளையும் சீரமைக்கின்றஒரு காட்சிக்குழுவாகும்
நேர்க்கோட்டு புறவமைப்பின் பண்புகள்
பின்வருவது நேர்கோட்டு புறவமைப்பின் குறிப்பிட்ட முக்கியமான பண்பு- கூறுகளாகும்

2
எடுத்துகாட்டு
இந்த உதாரணமானது ஒரு நேர்கோட்டு புறவமைப்பை பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை எவ்வாறு உருவாக்குவது என காண்பிப்பதற்கு சில எளிய வழிமுறைகளின் மூலம் நம்மை அழைத்து செல்கின்றது . மேலும் “அனைவருக்கும் வணக்கம்” எனும் எடுத்துக்காட்டின் பகுதியில் நம்மால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை மாறுதல்கள் செய்து-கொள்வதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக:

3
பின்வருவது src/com.example.அனைவருக்கும் வணக்கம்/MainActivity.java. எனும் கோப்பில் மாறுதல்கள் செய்யப்பட்ட முக்கிய செயல்பாட்டின் உள்ளடக்கங்களாகும்.
மேலும் ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகளையும் இந்தக் கோப்பில் உள்ளிணைக்க முடியும்
package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}

பின்வருவது res/layout/activity_main.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

<Button android:id="@+id/btnStartService"
android:layout_width="150px"
android:layout_height="wrap_content"
android:text="@string/start_service"
<Button android:id="@+id/btnPauseService"
android:layout_width="150px"
android:layout_height="wrap_content"
android:text="@string/pause_service"
<Button android:id="@+id/btnStopService"
android:layout_width="150px"
android:layout_height="wrap_content"
android:text="@string/stop_service"

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கான res/values/strings.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

அனைவருக்கும் வணக்கம்
Settings
Start
Pause
Stop

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்”
எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க அதனை தொடர்ந்து எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க பிறகு கருவிப்-பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல் நிறுவுகை செய்யத்-துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்:

4
தற்போது புறவமைப்பின் நோக்கு நிலையை android:orientation=”horizontal” என்றவாறு மாறுதல்கள் செய்திடுக தொடர்ந்து அதே பயன்பாட்டினை இயக்குவதற்கு முயற்சி-செய்திடுக இப்போது அது பின்வரும் திரைத்தோற்றத்தை வழங்கும்

5
தொடர்பு புறவமைப்பு
அண்ட்ராய்டின் தொடர்பு புறவமைப்பை உறுப்பினர்களின் காட்சிகளின் நிலையில் எவ்வாறு ஒருவருக்கொருவரான தொடர்பினை குறிப்பிடுவது என இயலுமை செய்திடுக.
தொடர்பு புறவமைப்பின் பண்புக்கூறுகள்
பின்வருவது தொடர்பு புறவமைப்பின் குறிப்பிட்ட முக்கியபண்புகூறுகளாகும்

6

உறவினர் அமைப்பை பயன்படுத்தி, நாம் வலதுபுற சுற்றெல்லையருகே இரண்டு கூறுகளை சரிசெய்திடமுடியும், அல்லது ஒன்றன் கீழே ஒன்றாக, திரையின் மையத்தில், மையத்தின் வலதுபுறம் அல்லது இடதுபுறம், என்பனபோன்று பல்வேறு வகையில் சரி செய்ய முடியும். இயல்புநிலையில், அனைத்து உறுப்புகளின் காட்சிகளானவை புறவமைப்பின் மேலே இடதுபுறம் அமைகின்றன. எனவே நாம் இந்த உறவினர் அமைப்பிலிருந்து கிடைக்கின்ற பயன்படுத்த தயாராக இருக்கின்ற Relative Layout.- Layout Params என்பதிலிருந்து பல்வேறு புறவமைப்புகளின் பண்பியல்பு-களை பயன்படுத்தி ஒவ்வொரு காட்சி நிலைகளையும் வரையறுக்க வேண்டும், மேலும் அவைகளுள் சில முக்கியமான பண்புக்கூறுகள் கீழே கொடுக்கப்-பட்டுள்ளன:

7

எடுத்துகாட்டு
இந்த உதாரணமானது உறவினர் புறவமைப்பை பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை எளிய வழிமுறைகளின் மூலம் எவ்வாறு உருவாக்குவது என காண்பிப்பதற்கு நம்மை அழைத்து செல்கின்றது . “அனைவருக்கும் வணக்கம்” எனும் எடுத்துக்காட்டு பகுதியில் நாம் உருவாக்கிய ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாறுதல்கள் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக

8

பின்வருவது filesrc/com.example.அனைவருக்கும் வணக்கம்/MainActivity.java. எனும் கோப்பில் மாறுதல்கள் செய்யப்பட்ட முக்கிய செயல்பாட்டின் உள்ளடக்கங்களாகும்.
மேலும் அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகள் ஒவ்வொன்றையும் இந்தக் கோப்பில் சேர்க்க முடியும்

package com.example.helloworld;
import java.text.SimpleDateFormat;
import java.util.Calendar;
import java.util.Date;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.text.format.DateFormat;
import android.view.Menu;
import android.widget.TextView;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
SimpleDateFormat dateFormat = new SimpleDateFormat(“yyyy/MM/dd”);
Date date = new Date(); String nowDate = dateFormat.format(date);
TextView dateView = (TextView)findViewById(R.id.dates);
dateView.setText(nowDate);
SimpleDateFormat timeFormat = new SimpleDateFormat(“HH:mm:ss”);
String nowTime = timeFormat.format(date);
TextView timeView = (TextView)findViewById(R.id.times);
timeView.setText(nowTime);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
// Inflate the menu;
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}

பின்வருவது res/layout/activity_main.xmஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கு res/values/strings.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

அனைவருக்கும் வணக்கம்
Settings
Enter your name
Done

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்”
எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப்பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல் நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

9

child Trends எனும் குழந்தைகளின் வளரச்சி ஆய்வுதகவல்களை கொண்ட தளம் ஒருஅறிமுகம்

நம்முடைய குழந்தைகள் இளைஞர்கள் ஆகியோரை பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் பல்வேறு வகையான இளையோர்களின் வளர்ச்சி போக்கின் ஆய்வுத்தகவல்களை கொண்ட சிறந்தொரு தகவல்களஞ்சியமாக இந்த தளம் விளங்குகின்றது இந்தபிள்ளைகளின் வளர்ச்சிபோக்கின் ஆய்வினை கொண்டு குழந்தைகளையும் அவர்களின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்துவது அவர்களை வெற்றி பெறசெய்வதற்காக அரசானது கொள்கை முடிவுஎடுப்பதற்குமிகமுக்கியமான தளமாக விளங்குகின்றது இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன்இதன்முதன்மை பக்கத்தில் இந்த தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்கான பல்வேறு வசதி-வாய்ப்புகளை பற்றிய விவரங்கள் நம்முடைய கண்ணை கவரும்வண்ணம் பல்வேறு உருவப்படங்களாக அவைகளை பற்றிய தனித்தனி தலைப்புகளுடன் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாட்களுடன் உள்ளன அதுமட்டுமல்லாது இந்த தளத்தின் கிடைக்கும் சேவைகள், ஆய்வு முடிவுகள் (Research) ,தரவுதளகளஞ்சியங்கள் ( Databank) என்னென்ன செய்யப்-படவேண்டும் என்பன போன்று தனித்தனியான உருவப்படபொத்தான்களும் இந்த திரையின் தலைப்பில் உள்ளன இவைகளுள் ஆய்வுமுடிவுகள்(Research) ,தரவுதள-களஞ்சியங்கள் ( Databank)ஆகிய இரண்டு பகுதிகளும் மிகவும் ஆச்சரியம மூட்டும் வகையில் மிகசிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன வாருங்கள் இன்றே https://www.childtrends.org/databank-indicatorsஎனும் இந்த தளத்திற்கு வந்து பயன்பெறுக

அறிவியில் ஆர்வுமுள்ள மாணவர்களுக்கு உதவிடும் Science Notebook Cornerஎனும் இணையதளம்

இளையோர்கள் அதிலும் மாணவர்கள் தாம் எவ்வாறு அறிவிலறிஞர்கள் போன்று ஆய்வுசெய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது என்ற ஆரவுமுள்ளவர்களுக்கு இந்த Science Notebook Cornerஎனும் தளம் மிகஅத்தியாவசியஒன்றாக விளங்குகின்றது இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன் இதன்முதன்மை பக்கத்தில் Setting Up Your Science Notebooks, Strategies for Notetaking, Strategies for Investigations, Strategies for Reflection, and Introductory Science Notebooking Activities.ஆகிய பல்வேறு பகுதிகளாக பிரிக்கபட்டிருப்பதை காணலாம் ஒவ்வொரு பகுதியும் அதற்கான உருவப்படங்களுடனும் அந்தபகுதியினுடைய விளக்கஉரைகளும் கொண்டுள்ளன அதனை அறிந்துகொண்டபின்னர் அவைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் தொடர்புடைய தலைப்பின் பகுதிகளையும் படிப்படியாக எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது என்ற விளக்கவுரைகளும் உள்ளதை காணலாம் அதற்காக
1முதலில் இதிலுள்ள நாம் விரும்பும் பகுதியை தெரிவுசெய்து கொள்க
2அடுத்து அதற்கான விளக்கப்படங்கள் விளக்கவுரைகளை ஆகியவற்றை நன்கு அறிந்து கொள்க
3 மூன்றாவதாக சுயமான எளிய வழிகாட்டுதல்களை உருவாக்கிடுக
4 நான்காவதாக ஒவ்வொருநாளும் நாம் என்னென்ன செய்தோம் என பட்டியலிடுக
5ஐந்தாகவதாக அதனை இவ்வாறன அறிவியல் ஆர்வமுள்ள குழுவான மற்ற நபர்களுடன் பகிரந்துகொள்க

நம்முடைய மடிக்கணினி அல்லது கைக்கணினி மின்கலனின் மின்இழப்பை தவிர்த்திடுக

நம்மில் பலர் மேஜைக்கணினிக்கு பதிலாக மடிக்கணினிஎன்றும் கைக்கணினிஎன்று கையடக்க சாதனங்களுக்கு மாறிவிட்டோம் இவ்வாறான கையடக்கசாதனங்கள் அனைத்தும் நேரடி மின்னிணைப்பிற்கு பதிலாக அதில் இணைக்கப்பட்டுள்ள மின்கலனில் உள்ள மின்சாரத்தின் வாயிலாக செயல்படுகின்றன இந்த சாதனங்களில் செயல்படும் இயக்கமுறைமைகளான விண்டோ 8 இற்குபிறகு வெளியிடபட்ட இயக்கமுறைமைகளில் அவ்வியக்கமுறைமைகளுடன் Mail, Calendar, Weather, Alarms & Clock, People, Photos, Groove Music,என்பனபோன்ற நூற்றுகணக்கான பயன்பாடுகளுடனேயே வழங்கப்பட்டுவருகின்றன அதுமட்டுமல்லாது இந்த மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தின் Windows Store எனும் இணையதளத்திலிருந்து நாம்விரும்பிய எண்ணற்ற பயன்பாடுகளை அவ்வப்போது பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன இவ்வாறான கணக்கற்ற பயன்பாடுகள் நாம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தா-விட்டாலும் இவைபின்புலத்தில் தானாகவே இயங்கி கொண்டிருக்கின்றன அதனால் நம்முடைய கையடக்க சாதனத்தின் மின்கலனில் உள்ள மின்சாரம் விரைவாக காலியாகி விடுகின்றது இதனைதவிர்ப்பதற்காக விண்டோ10 இயக்கமுறைமையில் இடதுபுற-மூலையில் உள்ள Windows+I என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பயன்பாட்டின் அமைவு (Settings app) திரையின் இடதுபுறத்தில் உள்ளவைகளில் முதலில்System என்பதை சொடுக்குக பின்னர் விரியும்பட்டியலில் Battery என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்வலதுபுற பகுதியில் மின்கலனின் மின்சாரம் எவ்வளவு உள்ளது என காண்பிக்கும் அதனோடு எந்தெந்த பயன்பாடு பின்புலத்தில் இயங்கி மின்சாரத்தை காலிசெய்கின்றன என்ற செய்தியையும் காண்பிக்கின்றது கடந்த 24மணிநேரத்தில் அல்லது கடந்த வாரத்தில் எந்தெந்த பயன்பாடுகள் அதிகமாக மின்சாரத்தினை செலவழிக்கசெய்தன என பட்டியலிடும் அதன்பின்னர் Settings > Privacy > Background apps என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது தேடிடும் பெட்டியில் Background apps என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் பின்புலத்தில் இயங்கிடும் பயன்பாடுகளை பட்டியலாக விரியசெய்திடும் அவைகளின் தலைப்பிலுள்ள on ,Off ஆகிய இரு வாய்ப்பு பொத்தான்களில் Off எனும் வாய்ப்பு பொத்தானை மட்டும் தெரிவு செய்து ஒட்டுமொத்தமாக இவைகளின் பின்புல செயலை நிறுத்தம் செய்திடுக அல்லது ஒவ்வொரு பின்புல பயன்பாட்டின் அருகிலும் உள்ள on ,Off ஆகிய இரு வாய்ப்பு பொத்தான்களில் தேவையானபயன்பாட்டினை விட்டிட்டு தேவையற்ற பயன்பாட்டில் மட்டும Off எனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்து இவைகளின் பின்புல செயலை நிறுத்தம் செய்திடுக

பாதுகாப்பு மென்பொருளிற்கு (antivirus software)ஆண்டுசந்தா ஏன்செலுத்திடவேண்டும்

Norton, Kaspersky, Bitdefender, Mcafee, and Malwarebytes என்பன போன்ற பாதுகாப்பு பயன்பாட்டு மென்பொருட்களை விலைகொடுத்து வாங்கினாலும் அதன்பின்னர் நம்மிடம் ஏன் இவை வருடாந்திர கட்டணம் செலுத்தமாறு கோருகின்றன என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் இயல்பாக எழுவது அனைவரும் அறிந்த செய்தியே அவ்வாறே நாம் இதனை இதற்கான விலை கொடுத்து வாங்கியபின்னரும் எதற்காக ஒவ்வொரு குறிப்பிட்ட காலமுடிவில் சந்தா தொகை போன்று கட்டணம் செலுத்திடுமாறு நம்மிடம் கோருகின்றன என்ற அத்தியாவசிய கேள்வி எழுவது திண்ணம்
ந்ம்முடைய கணினியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது அதிலும் இணையத்துடன் தொடர்புகொண்டுபயன்படுத்தி கொண்டிருக்கும்போது பாதுகாப்பு ஆபத்துகள் தினமும் புதியதுபுதியதாக உருவாகிகொண்டேயுள்ளன அதிலும் ஒவ்வொருமணி நேரத்திற்கும் புதிய தாக்குதல்கள் புதிய ஆபத்துகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது நாம் ஒருமுறைமட்டும் விலைகொடுத்து இந்த பாதுகாப்பு மென்பொருளை வாங்கிடும்போது அந்த பாதுகாப்பு பயன்பாடானது அன்றைய நிலையில் உள்ள ஆபத்து களுக்கானபாதுகாப்பிற்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் அதன்பிறகு அவ்வப்போது மாறிவரும் புதிய புதிய தாக்குதல்களையும் ஆபத்துகளையும் எதிர்கொள்கின்ற திறனை அவ்வப்போது புதுப்பித்து கொண்டே இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக செயல்படமுடியும் அதற்காக இந்த பாதுகாப்பு பயன்பாடுகளில் அவ்வப்போதைய புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு நிகழ்நிலை படுத்தினால்தான் புதியசூழலிலும் பாதுகாப்பாக இருக்கமுடியும் இதற்காகவே இவை குறிப்பிட்ட காலகட்டணத்தை சந்தா கட்டணம்போன்று செலுத்திட கோருகின்றன

நம்முடைய பிள்ளைகள் எளிய விளையாட்டுகளின்வாயிலாக கல்விகற்க உதவும் Phoenicia எனும் புதிய ஆண்ட்ராய்டு பயன்பாட்டு கருவி

இது அப்பாச்சியின் பொதுஅனுமதியின்படி வெளியிடப்பட்டுள்ள தொரு கட்டற்ற பயன்பாடாகும் தற்போது இதனுடைய இரண்டாவது பீட்டாபதிப்பு வெளியிடபட்டுள்ளது இதிலுள்ள விளையாட்டுகள் முதலில் நம்மை சுற்றுலா போன்று அந்தந்த காட்சிகளுக்கான விளக்கத்துடன் அழைத்து செல்கின்றது அதனை தொடர்ந்து நாம் இந்த தளத்தினை பயன்படுத்ததுவங்கலாம் இந்த இணையதளத்தில் இரு உரையாடல் பெட்டிகள் உள்ளன 1புதிய விளையாட்டினை துவங்கி அதில் என்னென்ன புதிய பொருட்கள் நம்முடைய விளையாட்டிற்காக தெரிவுசெய்யவேண்டியுள்ளன எவ்வளவு நாணயங்கள் புள்ளிகள் அந்த விளைாட்டில் நாம் பெற்றுள்ளோம் என அறிந்து கொள்வதற்கு முதல் உரையாடல் பெட்டி உதவுகின்றது மேலும் இதில் புதிய சொற்கள் அதற்கான விளக்கங்கள் ஆகியவற்றை உருவப்படத்துடன் கற்றுக்கொள்ள உதவுகின்றது 2அடுத்தஇரண்டாவது உரையாடல் பெட்டியானது அடுத்த நிலைக்கு நாம் செல்வதற்கு என்னென்ன புதிய பொருட்கள் நம்முடைய விளையாட்டிற்காக தெரிவு செய்ய வேண்டியுள்ளன என காண்பிக்கின்றது மேலும் இந்த இரண்டாவது உரையாடல் பெட்டியில் முதல் உரையாடல் பெட்டிக்கு மாற்றாக தனித்தனி எழுத்துகளை கொண்டு கொடுக்கப்பட்ட உருவப்படத்திற்கான சொற்களை உருவாக்கவேண்டும் என்றவாறான விளையாட்டினை நமக்கு அளிக்கின்றது
இந்த விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கேற்ப நமக்கு நாணயங்களும் புள்ளிகளும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன விளையாட்டாக கல்வி கற்பதற்கு அதிலும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் விளையாட்டாக கல்விகற்பதற்கு இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு உதவுகின்றது. வாருங்கள் இன்றே இதனை நாம்நம்முடைய கையடக்க ஆண்ட்ராய்டு சாதனத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வோம்

கணினிதிரையில் ஓடுகின்ற காட்சிகளை பிடித்து கானொளிபடமாக செய்திடஉதவிடும் Open Broadcastஎனும் கருவி

இது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதொரு கட்டற்ற பயன்பாடாகும் நாம் திரையில் காணும் காட்சிகளை நேரடியாக படம்பிடித்து அதனோடு ஒலிகளையும் கலந்து வரம்பற்றநிலையில் நாம் விரும்பியவாறு கானொளி காட்சிகளாக உருவாக்கிடஇது உதவுகின்றது
இது image masking, color correction, chroma/color keyingஆகியன கொண்டு நாம் விரும்பியவாறு கானொளி படத்தில் வடிகட்டி அமைத்திடஉதவுகின்றது இதிலுள்ள noise gate, noise suppression, and gain ஆகிய வசதிகளை கொண்டு கானொளி படத்திற்கான ஒலிகளை மிகச்சரியாக கலந்து பயன்படுத்திட அனுமதிக்கின்றது இதற்காக VST எனும் கூடுதல் இணைப்பையும் இது ஆதரிக்கின்றது இதில் அதிக முயற்சி இல்லாமலேயே புதிய கானொளி படமூலங்களை சேர்த்திடுவதும் நடப்பில் இருப்பதனுடைய போலியை உருவாக்கிடுவதும் அதனுடைய பண்பியல்புகளை சரிசெய்திடுவதும் மிகஎளிய செயலாக ஆக்குகின்றது மேலும் இதில் பதிவுசெய்வதற்கும் ஒலிபரப்பு செய்வதற்கும் அவைகளுக்கு இடையே மாற்றி கொள்வதற்குமான அமைப்பு பலகத்தை மிகவிரைவாகவும் எளிதாகவும் கட்டமைவு செய்து கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாமல் இதில் ஒளியுடன் கூடிய அல்லது ஒளியற்ற இருள்தன்மை ஆகிய இரு காட்சி சூழலை தேவைக்கேற்ப அமைத்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https:obsproject.com/எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Previous Older Entries