மேககணினியில் தரவை பாதுகாப்பாக கையாளஉதவிடும் Cryptomator எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

Cryptomator என்பது ஒரு கட்டணமற்றதும் கட்டற்றதுமான பயன்பாடாகும், இது மேகக்கணியில் கோப்புகளின் பன்முக-தளமாகவும், வெளிப்படையானதாகவும் வாடிக்கையாளர் பக்க மறைகுறியீடாக்குதலை வழங்குகிறது. இது எந்தவொரு மேககணினி சேமிப்பு சேவையிலும் செயல்படுகின்றது; இது முற்றிலும் வெளிப்படையானது, எனவே நம்முடைய கோப்புகளுடன் நாம் வழக்கமாக எவ்வாறு வேண்டுமானாலும் பணிசெய்யலாம் வெவ்வேறு கணக்குகள், முக்கிய மேலாண்மை, மேகணினி அணுகலிற்கான அனுமதிகள் அல்லது சைபர் உள்ளமைவுகள் ஆகியவற்றின்தேவையில்லாமலேயே இதனை எளிதாக செயல்படுத்தி , பயன்படுத்திடமுடியும்.
மேகக்கணியில் தரவை இதைக்கொண்டு பூட்டிடுக இதனுடன், நம்முடைய தரவின் திறவுகோல் நம்முடைய கைகளில் உள்ளது. இது நம்முடைய தரவை விரைவாகவும் எளிதாகவும் மறைகுறியீடாக்கம் செய்கிறது. அதன் பிறகு, நமக்குப் பிடித்த மேககணினி சேவையில் அவற்றைப் பதிவேற்றம்செய்திடலாம்.
இதன்மூலம் நம்முடைய தரவின் பாதுகாப்பை நாமே நம்முடைய கைகளில் எடுத்துக் கொள்க: இது எண்ணிம தற்காப்பிற்க்கான எளிய கருவியாகும். இதுநம்முடைய மேககணினியின் தரவை நாமே சுதந்திரமாக பாதுகாக்க நம்மை அனுமதிக்கின்றது
பெரும்பாலான மேககணினி வழங்குநர்கள் தரவுபரிமாற்றத்தின் போது மட்டுமே தரவை மறைகுறியீடாக்கம் செய்கிறார்கள் அல்லது மறைகுறியீடாக்கத்திற்கான விசைகளை தாமாகவே செயல்படுமாறுவைத்திருக்கிறார்கள். அவ்வாறான நிலையில்இந்த விசைகள் திருடப்படலாம், நகலெடுக்கப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த பயன்பாட்டில் நம்முடைய தரவுக்கான திறவுகோள் நம்முடைய கையில் மட்டுமே உள்ளது.
இது நம்முடைய எல்லா சாதனங்களிலிருந்தும் நம்முடைய கோப்புகளை நாம்அணுக அனுமதிக்கிறது. இது பயன்படுத்த எளிதானது இது நம்முடையதரவு, மேககணினி ஆகியவற்றிற்கிடையே தடையின்றி ஒருங்கிணைப்புசெய்கிறது.
இதனுடன் நம்முடைய பணியை துவங்க, ஒரு கோப்புறைக்கு கடவுச் சொல்லை ஒதுக்கிடுக – அது மேகக்கணிக்குள் நம்முடைய தரவிற்கானபூட்டு என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவு தான். சிக்கலான முக்கிய உருவாக்கம் எதுவும் இதிலில்லை, இதில் பதிவு செய்யத்தேவையில்லை, கட்டமைப்பு எதவும் செய்யவேண்டியதில்லை!
பெட்டகத்தை அணுக, கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடுக. விரலியை (USB) போன்றே தரவை நகர்த்தக்கூடிய மெய்நிகர் மறை குறியீடாக்கம் செய்யப்பட்ட இயக்ககம்இதன்மூலம் நமக்கு வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் இந்த இயக்ககத்தில் எதையாவது சேமிக்கும்போது, இது தரவை தானாக மறைகுறியீடாக்கம் செய்கின்றது. அதனால் அதற்காக தனியாக செயல்பட வேண்டும் என இல்லாமல் இதுமிகவும் எளிமையானது, இல்லையா?
இதற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம் அதிநவீனமானது, AES , 256 பிட் விசை நீளம் கொண்ட கோப்புகள் , கோப்புகளின் பெயர்கள் ஆகியஇரண்டையும் மறைகுறியீடாக்கம்செய்கிறது. இதன் பொருள்: நம்முடைய மேகக்கணியில் உள்ள கோப்புறையை யாராவது பார்த்தால்,நம்முடைய தரவைப் பற்றி அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
இது திறமூலமாக இருப்பதால் இதனை குறிப்பிட்ட காலம் வரைதான் பயன்படுத்திகொள்ளமுடியும் என்பதற்கான காலாவதி தேதி எதுவும்இதிலில்லை
முக்கியவசதிவாய்ப்புகள்
• இதுDropbox, Google Drive, OneDrive, ownCloud, Nextcloud போன்ற எந்தவொரு மேககணினியின் சேமிப்பகத்துடன் வளாக கோப்பகத்துடன் ஒத்திசைவாக செயல்படுகின்றது
• வாடிக்கையாளர்களுக்கென தனியே கணக்குகள் எதுவும் துவங்கத் தேவையில்லை, எந்த இணைய சேவையுடனும் தரவு பகிரப்படுவதில்லை
• முற்றிலும் வெளிப்படையானது: மெய்நிகர்இயக்கியில் விரலி(USB) போன்று இதன்மூலம் நாம் நம்முடைய பணியை செய்க
• கோப்புகளின் பெயர்களும் மறைகுறியீடாக்கம் செய்யப்படுகின்றன
•இதனுடைய கோப்புறை அமைப்பின் வாயிலாக பார்வையாளர்களை குழப்பமடைய செய்யப்படுகிறது
• Dropbox இல் நாம் விரும்பும் பல பெட்டகங்களைப் பயன்படுத்திகொள்க, ஒவ்வொன்றும் தனிப்பட்ட கடவுச்சொற்களைக் கொண்டவை
•நம்முடைய தரவின் பாதுகாப்பிற்காக இதில்உறுதியளிக்கப்படுகின்றது!
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://cryptomator.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக , (GPLv3) எனும் உரிமத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ளது

Google Workspace இலிருந்து Nextcloudக்கு மாறுவதற்கான வழிகாட்டி

பெரிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் மேககணினி சேவைகளுக்கு நம்முடைய தரவை வழங்குவதில் நாம் எச்சரிக்கையாக இருந்தால், தொலைதூர சேமிப்பகம், எளிதான இணையசேவை ஆகியவற்றின் அடிப் படையிலான அணுகலின் வசதியை விரும்பினால், நமக்காக உதவி செய்ய மேககணினி சேவையகம் என்பது தயாராக உள்ளது. இது என்னென்ன செய்ய முடியும் என்பதால் பிரபலமானது. ஆனால் இதனை தேவையில்லை என ஒதுக்க வேண்டியதில்லை. அதிர்ஷ்டவசமாக, Nextcloud எனும் திறமூல செயல் திட்டம் ஆனது தனிப்பட்ட மேககணினி பயன்பாட்டு தொகுப்பை வழங்குகிறது.
இதில் தொடர்புகள், காலெண்டர்கள் , புகைப்படங்கள் உட்பட தரவை நிறுவுகைசெய்வது , பதிவிறக்கம் செய்வது எளிது. Google போன்ற மேககணினி வழங்குநர்களிடமிருந்து நம்முடைய தரவைப் பெறுவதே உண்மையான தந்திரம். இந்தக் கட்டுரையில் நம்முடைய எண்ணிம வாழ்க்கையை Android சாதனத்திலிருந்து Nextcloudக்கு மாற்ற நாம் எடுக்க வேண்டிய படிமுறைகளை விளக்கமளிக்கப்படுகின்றது.
நம்முடைய தரவை Nextcloudக்கு மாற்றிடுக
Nextcloud ஆண்ட்ராய்டு சாதனம் ஆகியவற்றிற்கு இடையில் தரவைப் பரிமாறி கொள்வதற்காக CalDAV (காலண்டர்) , CardDAV (தொடர்புகள்)ஆகிய இரண்டு வலைபின்னல்களின் நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த இரண்டு நெறிமுறைகளையும் ஆண்ட்ராய்டு ஆனது இயல்பாக ஆதரிக்காது. இதற்காக Android திறன்பேசிகள் , டேப்லெட்டுகள் ஆகியவற்றிற்கான DAVx⁵ எனும் ஒரு பயன்பாடு கூடுதலாக நமக்குத் தேவையாகும். இந்த DAVx⁵ பயன்பாடானது ஆண்ட்ராய்டு சாதனங்கள் , Nextcloud ஆகியஇரண்டிற்க்கும் இடையே காலெண்டர்களையும் தொடர்புகளையும் ஒத்திசைக்கிறது. Google Play Store (தோராயமாக US$6) , பிற App Storesஇல் இருந்து F-Droid இலிருந்து APK ஆக கட்டணமில்லாமலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
பயன்பாட்டுடன் ஒத்திசைவை அமைப்பதற்கு முன், நாம் ஏற்கனவே உள்ள தொடர்புகள் , காலெண்டர்களை பதிவேற்றம் செய்து அவற்றை Nextcloud இல் பதிவிறக்கம் செய்திட வேண்டும்:
அதற்காக நம்முடைய Google கணக்கில் உள்நுழைவு செய்து, தரவை பதிவேற்றம் செய்வதற்காக, Google உடனான தொடர்புகளின் , சந்திப்புகளின் தானியங்கி ஒத்திசைவு இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்க. இது Google Cloud இல் நம்முடைய தரவு புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
முகவரிப் புத்தகத்தைத் திறக்க Google Apps எனும் பட்டியைத் திறந்து, Contacts entry என்பதைத் தேர்ந்தெடுத்திடுக. இடது பக்கப்பட்டியில், Export என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. அடுத்து தோன்றிடும் உரையாடல் பெட்டியில், எல்லா தொடர்புகளையும் தேர்ந்தெடுத்து எல்லாவற்றையும் vCard (.vcf கோப்பு) ஆக சேமித்திடுக. நாம் குறிப்பிட்ட முகவரி புத்தக உள்ளீடுகளை மட்டும் பதிவேற்றம் செய்ய விரும்பினால், அவற்றை அதற்கு முன்பே தேர்ந்தெடுத்து, Export எனும் உரையாடல் பெட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளைத் தேர்ந்தெடுத்திடுக.
.vcf கோப்பை Nextcloud இல் பதிவிறக்கம் செய்க. இதைச் செய்வதற்காக Contacts எனும் பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து, கீழே இடதுபுறத்தில் உள்ள Settings என்பதை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்தபின் , Import contacts எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் தோன்றிடும் உரையாடல் பெட்டியின் சாளரத்தில், local file என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து, முன்பு சேமித்த vCard ஐத் திறந்திடுக.
எளிதாக காலெண்டர்களை பதிவேற்றம் செய்து, பதிவிறக்கம் செய்திடுக :
Google இணையதளத்திற்குச் சென்று, Calendar எனும் பயன்பாட்டைத் திறந்திடுக. அதன் இடதுபுறத்தில், நம்முடைய சொந்த அல்லது, சந்தா செலுத்திய காலண்டர்கள் (My calendars) அனைத்தையும் காணலாம். இதில் வலது பக்கம் நாள், வாரம் அல்லது மாதக் காட்சிகளைக் காட்டுகிறது. settingsஐ அணுக gearsகூடிய உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
இடதுபுறத்தில் உள்ள, Import and export. என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. முன்னிருப்பாக, எல்லா காலெண்டர்களும் பதிவேற்றம் செய்வதற்காகவென குறிக்கப்பட்டிருக்கும். இதில் தனிப்பட்ட காலெண்டர்களை மட்டும் சேமிக்க வாய்ப்பு எதுவும் இல்லை.
export என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின் .zip கோப்பை கணினியின் வன் வட்டில் சேமித்திடுக. பின்னர் இந்த .zip கோப்பைத் திறந்திடுக. இது பல .ics கோப்புகளை (iCalendar வடிவம்), ஒவ்வொரு Google காலெண்டருக்கும் ஒன்று என்றவாறுக் கொண்டுள்ளது.
Nextcloud இல் உள்ள Calendar எனும் பயன்பாட்டைத் திறந்து, கீழே இடதுபுறத்தில் உள்ள Calendar settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க, பின்னர் இதல் காலெண்டரை பதிவிறக்கம் செய்திடுக. கோப்பு மேலாளரில் (file manager) நாம் சேமித்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட .ics கோப்புகளைத் தேர்ந்தெடுத்திடுக.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைத்து நிகழ்வுகளும் நம்முடைய Nextcloudஇன் காலெண்டரில் தோன்றும். அனைத்து Google காலெண்டர்களுக்கும் இந்த செயல்முறையை மீண்டும் செய்க. இப்போது அனைத்தும் பழைய Google ஒத்திசைவு சேவையை மாற்ற தயாராக உள்ளது. இனி, நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனம் மூலம் புதிய உள்ளீடுகளை உருவாக்கிடுக.
நம்முடைய Nextcloud கணக்குடன் இணைத்தல்
DAVx⁵ எனும் பயன்பாட்டை நிறுவுகைசெய்து, அதற்கு நம்முடைய calendars , contacts ஆகியவற்றிற்கான அணுகல் இருப்பதை உறுதிப்படுத்திடுக. Nextcloud கணக்கை app உடன் இணைக்க ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள கூட்டல் குறி அடையாளத்தைத் தட்டுக. பின்னர் Login with URL and user name என்பதைத் தேர்ந்தெடுத்து, நம்முடைய Nextcloud பயனர் பெயரையும் , கடவுச்சொல்லையும் உள்ளிடுக. அடிப்படையாகஉள்ள URL புலத்தில் நம்முடைய Nextcloud இன் காலண்டர் பயன்பாட்டில் காணக்கூடிய முகவரி உள்ளது. கீழே இடதுபுறத்தில் உள்ள Calendar settingsஐ தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின், முதன்மை CalDAV எனும் முகவரியை நகலெடுக்க கீழே சுட்டியை நகர்த்தி செல்க.
நம்முடைய Nextcloud உடன் இணைக்க Login என்பதை சொடுக்குக, பின்னர் விரியும் திரையில் நமக்கென தனியாக கணக்குஒன்றினை உருவாக்கிடுக, உடன் Contact groupஇன் கீழ்தோன்றும் பட்டியிலிருந்து தனித்தனி vCards இன்Groups என்பதைத் தேர்ந்தெடுத்திடுக. பயன்பாட்டை ஒத்திசைக்க விரும்பும் contacts, address books ஆகியவற்றினை வரையறுக்க CardDAV , CalDAV ஆகிய பிரிவுகளில் உள்ள slidersஎன்பதை கூட பயன்படுத்தலாம்.

மேககணினி(Cloud) சேவை கட்டமைப்புகள்

தற்போது மேககணினி என்றால் என்ன, அது எப்படி 445 பில்லியன் டாலர் தொழில்துறையாக உருவெடுத்தது என்பது பற்றிய விவாதம் இருப்பதால், நாம்தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் இந்த மேககணினியைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சிப் பது நல்லது அல்லவா.
ஒரு மேககணினியின் பொதுவான கட்டமைப்பானது முன்-பக்கம்,பின்-இறுதி. ஆகிய இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக கருதலாம் –


முன்-பகுதியில் வாடிக்கையாளர் உள்கட்டமைப்பு உள்ளது, அதாவது, மேகக்கணியுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் பயன்பாட்டின் சாதனமும் பயனர் இடைமுகமும். தற்போதையச் சூழலில் திறன்பேசி ,கூகுள் டிரைவ், பயன்பாடு ஆகியவை முன்-பகுதி வாடிக்கையாளர் உள் கட்டமைப்பு ஆகும், அவை Googleஇன் மேகக்கணியை அணுகுவதற்குப் பயன்படுத்தி கொள்ளலாம். பின்-இறுதியில் மேககணியின் உள்கட்டமைப்பு உள்ளது, அதாவது மேககணினியின் சேவையை இயக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப வழிமுறைகள் , இயந்திரங்கள். சேவையாளர்கள், மெய்நிகர் கணினிகள், சேவைகள் சேமிப்பகம் ஆகிய அனைத்தும் மேககணினி உள்கட்டமைப்பால் வழங்கப்படுகின்றன, படத்தில் காட்டப்பட்டுள்ளவாறாக உள்ள.இதனுடைய முழுமையான கட்டமைவை அறிந்துகொள்ள, பின்-இறுதியின் ஒவ்வொரு கூறுகளையும் இப்போது விரைவாக காண்போம்.
பயன்பாடு(Application): இணையம் வழியாக மேகக்கணியுடன் தொடர்பு கொள்வதற்குப் பயனர் அல்லது வணிகநிறுவனம் பயன்படுத்துவதே இந்த பயன்பாடாகும்(app) .
சேவை(Service): மேககணினி வழங்குகின்ற பல்வேறு வகையானஉள்கட்டமைப்பு இந்தக் கட்டுரையில் பல்வேறு வகையான சேவைகளைப் பற்றி விரிவாகப் விவாதிப்போம்.
மேககணினியின் இயக்க நேரம்(cloud Runtime): இயக்கநேரம் ( runtime), செயல்படுத்துதல்(execution) ஆகியவை மெய்நிகர் கணினிகளுக்குக் கிடைக்கின்றன.
தேக்கிவைத்தல்(Storage): அளவிடுதலின் நெகிழ்வுத்தன்மையுடன் பயனர்/ வணிகத் தரவின் கையகப்படுத்தலும் மேலாண்மையும்.
உள்கட்டமைவு(Infrastructure): மேககணினியை இயக்க தேவையான வன்பொருள் , மென்பொருள்.ஆகியவை
பாதுகாப்பும்(security) மேலாண்மையும்(Management): பயனர்/வணிகத் தரவைப் பாதுகாக்க பாதுகாப்பு தொழில்நுட்ப வழிமுறைகளை வைப்பதுடன், அதிக சுமை, சேவை ஆகிய செயலிழப்புகளைத் தவிர்க்க மேககணினி கட்டமைப்பின் தனிப்பட்ட அலகுகளை நிர்வகித்தல்.
1.ஒரு மென்பொருள்சேவையாக (Software as a Service (SaaS)) என்பது மேககணினியின் மாதிரியாகும், இது மென்பொருளையும் பயன்பாடுகளையும் இணையத்தில் சேவையாக வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணம் Google Drive அல்லது Google Workspace. Google இயக்ககத்தில் உள்ள docs, sheets, slides, forms, போன்ற அனைத்து பயன்பாடுகளும் .இந்த மென்பொருட்களின் சேவைகளை இணைய உலாவியைப் பயன்படுத்தி நேரடியாக எங்கிருந்தும் எந்த நேரத்திலும் அணுகலாம் இவை களினால் உருவாக்கப்படும் கோப்புகள் தானாகவே மேகக்கணியில் சேமிக்கப் படும். எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் நம்முடைய ஆவணங்களின் சமீபத்திய பதிப்பை அணுகலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த மென்பொருள் சேவையை பெறுவதற்காக நமக்கென உருவாக்கப்பட்ட நம்முடைய கணக்கில் உள்நுழைவு செய்வது மட்டுமேயாகும். மென்பொருளை சேவை மாதிரியாக வைத்திருப்பதன் நன்மை இதுவேயாகும். நம்முடைய சாதனத்தில் எதையும் நிறுவுகைசெய்வதற்குப் பதிலாக அல்லது நம்முடைய சாதனத்தின் சேமிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நேரடியாக மேககணினியில் உள்ள மென்பொருள் பயன்பாட்டை அணுகலாம், இதனால் உள்ளூர்மயமாக்கப்பட்ட மென்பொருளுடன் வரும் பல பொறுப்புகள் நீக்கப்படும். SaaS இல் ‘சேவையை பெறும்போதுமட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது, அதாவது, நமக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் நாம் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். எப்போதும் அதிக சேமிப்பகத்தினை /அல்லது அதிக வசதிகளை அதிக கட்டணத்தை செலுத்தி பெறலாம் அல்லது தேவைகளுக்கு ஏற்ப கட்டணத்தினை செலுத்தி அவ்வசதிகளுக்கான கட்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
SaaS இன் நன்மைகள்: SaaS மிகவும் அளவிடக்கூடியது.‘சேவையை பெறும்போதுமட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நாம் விரும்பியவாறு நமக்கானசேமிப்பகத்தை அதிகரிக்கலாம்/குறைக்கலாம் /அல்லது பயன்பாட்டின் வசதிகளை நமக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்திகொள்ளலாம். எந்தவொரு இயக்க முறைமையுடனும் எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் நிகழ்நேர அணுகல் போன்ற வசதிகளை வழங்குவதால் இது கணிசமாக செலவு குறைந்ததாகும். இது வாடிக்கையாளர் பக்கத்தில் குறைந்த முயற்சியை உள்ளடக்கியது. மென்பொருளை நிறுவுகைசெய்திடுவது அதன்இயக்கத்தை துவக்குவது என குழப்பமான படிமுறைகள் எதுவும் தேவையில்லை. நம்முடைய இணைய உலாவி /அல்லது பயன்பாட்டின் வசதியிலிருந்து கூட இதைப் பயன்படுத்திகொள்ளலாம். மென்பொருளை நிறுவுகைசெய்திடாமல் அல்லது நம்முடைய சாதனத்தில் நிறுவுகைசெய்வதற்கு காத்திருக்காமல் தானாகவே புதுப்பிக்கப்படும்.
2.ஒருஇயங்குதளசேவையாக (Platform as a Service (PaaS)) ஒவ்வொரு தொழில் நுட்பதுவக்கநிலை(Tech.stratup) நிறுவனமும் தங்களுடைய பயன்பாடுகளை மேககணினியில் இயக்குவதற்கு தங்களின் சொந்த உள்கட்டமைப்பை பராமரிக்க தேவையான ஆதாரங்களைக் கொண்டிருக்க தேவையில்லை. பல சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் (குறிப்பாக துவக்கநிலைநிறுவனங்கள்) அனைத்து பின்புல உள்கட்டமைப்பையும் கையாளாமல் மேககணினியில் தங்கள் பயன்பாட்டை புரவலராக செய்ய விரும்புகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில்தான் ஒருஇயங்குதள சேவையின் மாதிரியாக செயல்படுகிறது. Heroku cloud போன்ற நிறுவனங்கள், வன்பொருள் உள்கட்டமைப்புடன் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமல், நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களுடைய பயன்பாடுகளை மேககணினியில் புரவலராக செய்து இயக்குவதற்கு PaaS கட்டமைவுஅடிப்படையிலான மேககணினி தீர்வுகளை வழங்குகின்றன. SaaSஐப் போன்றே, இந்த மாதிரியானது, உள்கட்டமைப்புக் கண்ணோட்டத்தில் அளவிடுதலுடன், பாதுகாப்போடு நமக்குத் தேவையான சேவைகளை மட்டும் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத்தன்மையை அளிக்கின்றது.
PaaS இன் நன்மைகள் மேககணினியின் உள்கட்டமைப்பைக் கையாள்வதில் எந்தத் தொந்தரவும் இல்லை. நம்முடைய பயன்பாட்டை அவர்களின் மேககணினியில் புரவலாக செய்யும் நிறுவனத்திற்கு அயலகசேவைபெறுதலை செய்கின்றானர். இது நம்முடைய பயன்பாட்டு மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியில் மட்டுமே கவனம் செலுத்த உதவுகிறது. PaaS அளவிடக்கூடியது. நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய சேமிப்பகத் தேவைகள், கூடுதல் சேவைகள் ஆகியவற்றை அதிகரித்துகொள்ளலாம் அல்லது குறைத்து கொள்ளலாம். நாம் அமைக்கும் பாதுகாப்பு அளவுருக்கள் நம்முடைய சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே. மேககணினியின் பாதுகாப்பு நம்முடைய மேககணினி சேவை வழங்குநரால் கையாளப்படுகிறது. மேககணினியில் தங்கள் பயன்பாடுகளை புரவலராக செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும், குறிப்பாக தங்கள் சொந்த உள்கட்டமைப்பை உருவாக்க முடியாத துவக்கநிலை நிறுவனங்களுக்கு இது நேரத்தையும் செலவையும் சேமிக்கஉதவுகின்றது.
3.உள்கட்டமைவு ஒரு சேவையாக (Infrastructure as a Service (IaaS)) என்பது PaaS ஐ விட ஒரு படி ஆழமாக செல்கிறது, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான சுயாட்சியை வழங்குகிறது. IaaS மாதிரியில்,மேககணினி சேவை வழங்குநர், மேககணினியின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான கட்டுப்பாட்டை நமக்கு வழங்குகின்றார். எளிமையாகச் சொன்னால், தனிப்பட்ட சேவையகங்கள் , மெய்நிகர் கணினிகள், சேவையகங்களில் இயங்கும் இயக்க முறைமைகள், அலைவரிசைகளை(bandwidths) அமைத்தல், நம்முடைய சொந்த பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குதல் மிகுதி எல்லாவற்றிலும் நம்முடைய நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு மேககணினி உள்கட்டமைப்பை உருவாக்குதலிற்கான நம்முடைய சொந்த மேககணினி சூழலை நாமே வடிவமைக்கலாம். . Amazon AWS , Google Compute Engine ஆகியவை இந்த IaaS மாதிரிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்த மாதிரியானது வழங்குகின்ற வன்பொருளின் மீதான சுயாட்சியைக் கருத்தில் கொண்டு, இதனை வன்பொருள் ஒரு சேவையாக (HaaS) என்றும் குறிப்பிடப்படுகிறது.
IaaS இன் நன்மைகள் ‘சேவையை பெறும்போதுமட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியில் சிறுமணி நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளது. எத்தனை VMகளை இயக்க வேண்டும், எவ்வளவு காலம் இயக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்திடலாம். குறிப்பிட்ட மணிநேரத்திற்கு கூட அதாவது வெறும் ஒரு மணிநேரமட்டும் போதும் என கட்டணம் செலுத்தலாம். மிகவும் அளவிடக்கூடியது, இது அதன் மையத்தில் ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது. நம்முடைய நிறுவனத்தின் இருப்பிடத்தில் சேவையாளர்களை தொட்டுணரக் கூடியவகையில் பராமரிக்கவேண்டிய தொந்தரவு எதுவும் இல்லாமல் உள்கட்டமைப்பில் உள்ள அனைத்தின் மீதும் முழுமையான சுயாட்சியையும் கட்டுப்பாட்டினையும் வழங்கின்றது. பெரும்பாலான நிறுவனங்கள் பணி நேரம், பாதுகாப்பு , எந்தநேரத்திலும் தொடர்ச்சியாக(24/7) நேரடியாக வாடிக்கையாளர் ஆதரவை உத்தரவாதம் செய்கின்றன, இது அவ்வாறான நிறுவனங்களுக்கு மிகவும்இன்றியமையாததாக இருக்கின்றது.
4.சேமிப்பகம் ஒரு சேவையாக (Storage as a Service (StaaS)) தற்போது Google Drive, OneDrive, Dropbox , iCloud ஆகியவை இந்த வகையான சேவையக துறையில் உள்ள சில பெரிய பெயர்பெற்ற நிறுவனங்களாகும் இவை தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு சேமிப்பகத்தை சேவையாக வழங்குகின்றன. StaaS ஒலிப்பது போன்று இதுமிகஎளிமையானது. நம்முடைய சாதனங்கள் மூலம் நிகழ்நேரத்தில் அணுகக்கூடிய மேகக்கணியில் சேமிப்பகம் மட்டுமே நமக்குத் தேவை என்றால், இந்த StaaS மாதிரியைத் தேர்வுசெய்திடலாம். பல நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுடைய தரவை பிற்காப்பு செய்வதற்கு இந்த சேவை மாதிரியைப் பயன்படுத்தி கொள்கின்றனர்.
StaaS இன் நன்மைகள் உள்ளமைக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்புகளின் உதவியுடன் நிகழ்நேரத்தில் நம்முடைய தரவை மிகவும் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் அணுகலாம். எந்தவொரு இயக்க முறைமையிலும் எந்த வகையான சாதனத்தின் மூலமாகவும் நம்முடைய தரவை அணுகலாம். நம்முடைய கோப்புகளை எவ்வாறு உருவாக்குவது, திருத்துவது , நீக்குவது எனவும் நிகழ்நேரத்தில் நம்முடைய தரவைபிற்காப்பு செய்திடலாம். நம்முடைய சேமிப்பகத்தை நமக்கு எவ்வாறு தேவைப்படுகின்றதோஅதை அளவிடலாம். இது ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது.
5.எதையும்/எல்லாவற்றையுமொரு சேவையாக (Anything/Everything as a Service (XaaS)) என்பது IaaS, PaaS, SaaS , StaaS ஆகியவற்றின் கலப்பினப் பதிப்பாகும், சேவை மாதிரியின் எதையும்/எல்லாவற்றையும் ஒரு சேவையாக வழங்கிறது, மேலும் இது விரைவில் மேககணினி சமூகத்தில்அனைத்தையும் இழுத்து இந்த சேவையை பெறுமாறு செய்துகொள்ளபோகிறது. ஒவ்வொரு வாடிக்கை யாளருக்கும் மிகவும் மாறுபட்ட தேவைகள் இருப்பது சாத்தியம், அவை அனைத்தினுடைய வெவ்வேறு மாதிரிகளின் கலவையாக( mishmash) இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அடுக்குகளில் இருந்து சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த தனிப்பயன் வாய்ப்பாக ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் மாதிரியை உருவாக்க முழுமையான சுயாட்சி வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளருக்கு அவர்களின் சொந்த விதிமுறைகளில் மேககணினியைப் பயன்படுத்த முழு சுதந்திரம் வழங்குவதன் பலனாகும் .
XaaS இன் நன்மைகள் நாம் விரும்புவதை, எவ்வாறு விரும்புகின்றோமோ அவ்வாறே நாம் விரும்புவதைமட்டும் தேர்ந்தெடுத்திடும் வாய்ப்பு இதில் உள்ளது. ஒரு அடுக்குகளாலான அமைப்பில் முன்னறிவிக்கப்பட்ட எந்த அடிப்படைக் கட்டணத் தையும் செலுத்தாமல் நமக்குத் தேவையானதை மட்டும் செலுத்திடலாம். நம்முடைய உள்கட்டமைப்பு, இயங்குதளம் , செயலியை சிறுமணி அளவில் தேர்ந்தெடுத்திடலாம். சரியான முறையில் பயன்படுத்தினால், XaaS ஆனது நம்முடைய பயன்பாட்டை மேககணினியில் புரவலராக செய்வதற்கு அதிக நேரத்தினையும், செலவும் செய்திடாமல் , மிகுந்த பயனுள்ள முறையாக இருக்கும்.
6.செயலிஒரு சேவையாக (Function as a Service (FaaS)) சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு அதன் அனைத்து செயலிகளையும் பயன்படுத்தாமல் PaaS இன் நன்மைகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, cron jobs போன்ற தூண்டுதல் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய, சேவையில்லாத கணினியில் இயங்குவதற்கு ஒரு குறிமுறைவரி அல்லது செயலி மட்டுமே தேவைப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்கங்களின் பதிவிறக்கங்கள் நிகழும் தருணத்தில் ஒரு அறிவிப்பை அனுப்பும் இணையதள போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பை வாடிக்கையாளர் உருவாக்க விரும்பலாம். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்காக, மேககணினியில் குறிப்பிட்டதொரு குறிமுறைவரிகளை இயக்க வேண்டும், அது ஒரு தூண்டுதலைச் செயல்படுத்துவதைச் சரிபார்த்து செயல்படுத்திடும். PaaS மாதிரியைப் பயன்படுத்துவது விலை உயர்ந்த தீர்வாக இருக்கும். இங்குதான் செயலிஒரு சேவையாக(FaaS) எனும் மாதிரி உதவிக்கு வருகிறது. Heroku போன்ற பல நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட குறிமுறைவரி அல்லது செயலியை மட்டும் புரவலராக செய்ய FaaS ஐ வழங்குகின்றன, அது முழுசெயலிக்கு பதிலாக பதில் செயல்இல்லாத ஒரு தூண்டுதலின் மீது மட்டுமே செயல்படுகிறது.
FaaS இன் நன்மைகள் குறிமுறைவரிகளில் குறிப்பிட்ட செயலியை செயல்படுத்தும் எண்ணிக்கைக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். குறிமுறைவரிகளை புரவலராக செய்வதற்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படாது. இது PaaS இன் அனைத்துப் பொறுப்புகளையும் நீக்கி, அதன் அனைத்துப் பலன்களையும் நமக்கு வழங்குகிறது. எந்த வகையிலும் அடிப்படை உள்கட்டமைப்புக்கு நாம் பொறுப்பாகமாட்டோம். எனவே, மெய்நிகர் கணினிகளின் பராமரிப்பு பற்றி கவலைப்படாமல் நம்முடைய குறிமுறைவரிகளைப் பதிவேற்றலாம். FaaS நமக்கு சுறுசுறுப்பாகசெயல்படுகின்ற திறனை வழங்குகிறது, அதாவது, செயலியின் குறிப்பிட்ட குறிமுறைவரி களை மட்டும் செயல்படுத்திடுகின்றது.
7சங்கிலிதொகுப்பு இயங்குதளம் ஒரு சேவையாக (Blockchain Platform as a Service (BPaaS)) சங்கிலி தொகுப்பு எனும் மிகப்பெரும் புயலானது சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையை தாக்கியுள்ளது. AI , தரவு அறிவியல் தொடர்பான தொழில்நுட்பங்களால் இது மிகக் குறைந்த அளவில் விஞ்சும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக திகழ்கின்றது. சங்கிலிதொகுப்பினை மிகவும் கவர்ச்சிகரமானதாக்குவது அதன் திறந்த-பேரேட்டு கட்டமைப்பு, பாதுகாப்பு, அளவிடுதல் , வெளிப்படைத்தன்மை ஆகியவைகளாகும். வங்கி, தேர்தல் அமைப்புகள், சமூக ஊடகங்கள் போன்ற பல பயன்பாடுகளுக்கு இந்த வசதிகள் மிகவும் அவசியமாகும். இத்தகைய பரந்த அளவிலான பயன்பாடுகளுடன், இந்த தொழில்நுட்பத்தின் தேவைகளை குறிப்பாகப் பூர்த்தி செய்யும் மாதிரியுடன் மேககணினியில் அத்தகைய தயாரிப்புகளை புரவலராக செய்வது மிகவும் அவசியமாகிறது. இங்குதான் BPaaS நமக்கு உதவிக்கு வருகிறது. இன்று பல நிறுவனங்கள், Amazon AWS, Microsoft Azure போன்ற பெரிய பெயர்பெற்ற நிறுவனங்கள் உட்பட, குறிப்பாக மேககணினியில் சங்கிலிதொகுப்பு அடிப்படையிலான பயன்பாடுகளை புரவலராக செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு BPaaS தீர்வுகளை வழங்குகின்றது.
BPaaS இன் நன்மைகள் திறனுடைய ஒப்பந்தங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் தனிப்பயன் மொழிகளுக்கான ஆதரவு போன்ற சங்கிலிதொகுப்பானது தொழிற்துறையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது. API பாளங்களை வழங்குவதன் மூலம் Ethereum போன்ற முன்னுதாரனமான சங்கிலிதொகுப்புகளுடன் ஒருங்கிணைப்புகளை ஆதரிக்கிறது. சங்கிலிதொகுப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியில் பயன்படுத்தப்படும் தனிப்பயன் தரவுத்தளங்களை ஆதரிக்கிறது. ‘சேவையை பெறும்போது மட்டும் கட்டணம் செலுத்துக (pay as you go)’ எனும் வசதி, அளவிடுதல், பாதுகாப்பு , அணுகல் எளிமை ஆகியவற்றுடன் இது மேகக்கணியின் அனைத்து நன்மைகளையும் கொண்டுள்ளது.

மீச்சிறு மேககணினி(Micro Cloud) எனும் சேவையகம்

மேககணினியில் சேவைகளை உருவாக்குவதற்கான முக்கிய தேவைகளை இந்த மீச்சிறு மேககணினி நிவர்த்தி செய்கிறது. இது மீச்சிறு சேவைகளான கட்மைப்புகளின் வடிவமைப்பினை மேம்படுத்துகிறது ஒரு தளத்தின் கட்டுமானத் தொகுதிகளாக செயல்படும் சேவைகளின் தொகுப்பை வழங்குகிறது இது பகிர்ந்தளிக்கப்பட்ட அமைப்புகளின் சிக்கலான தன்மையைக் கையாளுகிறது மேலும் கட்டமைக்க எளிய நிரல்படுத்தக்கூடிய சுருக்கமான தொகுப்புகளை வழங்குகிறது. இது மேம்படுத்துநரின் முதல் கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட மூலத்திலிருந்து இயங்குகின்றது மேலும் அதற்கும் அப்பால் இயங்குதள அனுபவத்தை உள்ளடக்கியது. இதனுடைய குறிக்கோள், மேகக்கணிக்கான கட்டமைப்பு சேவைகளின் சிக்கலைத் தவிர்ப்பது. AWS , பிறவற்றிலிருந்து நிர்வகிக்கப்பட்ட கணினி உள்கட்டமைப்பு சேவைகள் ஆகியவற்றின் மூலம் மேககணினி ஒரு பெரிய ஏற்றம் கண்டுவருகின்றது. இது செயல்பாட்டுச் சுமையாக இருந்ததை எடுத்து, APIகள் வழியாகப் பயன்படுத்தக் கூடிய சேவைகளில் முழுமையாக நிர்வகிக்கப்படுகின்ற தொகுப்பாக மாற்றப்படுகிறது. இது ஒரு மீச்சிறு சேவையாளர் கட்டமைப்பாக அமைக்கப் பட்டுள்ளது மேலும் அடிப்படை உள்கட்டமைப்பின் சிக்கலை சுருக்கி அமைத்துக் கொள்கிறது.
இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் பாதை அடிப்படையிலான தீர்மானத்தைப் பயன்படுத்தி RPC க்கு http / json கோரிக்கைகளை மாறும் வரைபடமான HTTP நுழைவாயில் , jwt இன் அனுமதிசீட்டுகள் விதி அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பயன்பாட்டிற்கு வெளியிலிருந்து அங்கீகாரம் ,ஒத்திசைவற்ற தொடர்பு அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான இடைக்கால pubsub செய்தி , மறுதொடக்கம் செய்யப் படாமல் சேவை நிலை கட்டமைப்பிற்கான இயக்கநேர உள்ளமைவு இரகசிய மேலாண்மை, உத்திரவிடப்பட்ட செய்தியிடல், offsets களிலிருந்து மறுபதிப்பு, தொடர்ச்சியான சேமிப்பகத்துடன் நிகழ்வுநிலைபாய்வு,அனைத்து உள்ளக கோரிக்கை போக்குவரத்திற்கும் இடைநிலை-சேவை வலைபின்னலின், தனிமைப்படுத்தல் வழிசெலுத்துல் மாற்றுதிட்டம் ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/micro/micro எனும் இணையதள முகவரிக்கு செல்க

Nextcloud Android app எனும் சேவயகம்

இது ஆண்ட்ராய்டிற்கான Nextcloud வாடிக்கையாளர்ஆகும், இது ஒரு தனியார் கோப்பு ஒத்திசைவு ,பகிர்வு , தகவல் தொடர்பு சேவையகமாகும். எந்த ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்தும் நம்முடைய Nextcloud எனும் சேவையகத்தில் உள்ள நம்முடைய அனைத்து கோப்புகளையும் எளிதாக அணுக இது நம்மை அனுமதிக்கிறது. இந்த செயலி பயன்படுத்த எளிதானது முற்றிலும் திறமூலபயன்பாடாகும், எனவே நாமே இதை புரவலாக செய்யலாம் அல்லது ஒரு நிறுவனம் நமக்காக அதைகட்டணத்துடன் செய்யலாம். இதன் மூலம் எப்போதும் நம்முடைய புகைப்படங்கள், நாட்காட்டி, தொடர்புத் தரவுகள், பிற ஆவணங்கள் , கோப்புகள் ஆகியவற்றினை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள்: பயன்படுத்த எளிதானது, நவீன இடைமுகம் கொண்டது நம்முடைய Nextcloud சேவையகத்தில் நம்முடைய கோப்புகளைப் பதிவேற்றவும் நம்முடைய கோப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் , நமக்கு பிடித்த கோப்புகள் , கோப்புறைகளை ஒத்திசைவாக வைத்திருக்கவும் உதவுகின்றது, நம்முடய சாதனத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,கானொளிகாட்சிகள் ஆகியவற்றை உடனடியாக பதிவேற்றம் செய்திடலாம் . பல கணக்கு ஆதரவு கொண்டது

இது GPLv2,எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://play.google.com/store/apps/details?id=com.nextcloud.client எனும் இணையதள முகவரிக்கு செல்க.

சிறு வணிகநிறுவனங்களுக்கான மேககணினியில் டேலி எனும்வசதி

       

தற்போது பெரும்பாலான வணிகநிறுவனங்கள் Tally accounting எனும் மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. தற்போதைய சூழ்நிலையில் சிறு வணிக நிறுவனங்களுக்கு இந்த Tally accounting எனும்பயன்பாடு மிகவும் அவசியமாகும். ஏனெனில்கணக்கியல் பதிவுகளை பயன்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் இது மிகவும் வசதியானதாக திகழ்கின்றது.
பெரிய நிறுவனமாக வளர்ச்சியை எதிர்நோக்குபவர்கள், சிறிய முதல் நடுத்தர வணிகநிறுவனங்கள் வரை இநத Tally கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மென்பொருளைகொண்டு வரி மேலாண்மை, கணக்கியல், கொள்முதல் மேலாண்மை, சரக்கு மேலாண்மை, விலைப்பட்டியல், விற்பனை மேலாண்மை, பணியாளர்களின் ஊதியம் போன்ற பலவற்றைக் கையாள முடியும்
மேலும் மேகக்கணியுடன் இணந்து செயல்படும் இதனுடைய கூடுதல் வசதிகளையும் பெறலாம்.அனைத்து வகையான வணிகநிறுவனங்களுக்கும் மேககணினி தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள தொழில்நுட்ப தீர்வாகும்.
இந்த தொழில்நுட்பம் வலைபின்னல், தரநிலை அணுகல், சேமிப்பகத்திற்கான தனித்துவமான தீர்வுகளுடன் வணிகநிறுவனங்களின் பணிகளை எளிதாக்கியுள்ளது. மேககணினி தொழில்நுட்பம் திறமையான மெய்நிகர் சூழலை உருவாக்கியுள்ளது, அதில் பயனாளாளர்கள் தங்கள் தரவை எந்த இடத்திலிருந்தும் எளிதாக அணுக முடியுமாறு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான தற்போதை சூழலில், மேககணினியில்டேலி( Tally on cloud) எனும்புதிய வசதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது இரண்டு இறுதி கருவிகளின் கலவையாகும். மென்பொருளோ வன்பொருளோ இல்லாமல் மேககணினி தொழில்நுட்பம் வழியாக மேககணினியில் உள்ள டேலி கணக்குப் பதிவியல் எனும் மென்பொருளைப் பயன்படுத்தி கொள்ளமுடியும். இதற்காக நல்ல இணைய இணைப்புடன் கூடிய எளிய சாதனம் மட்டுமே நமக்குபோதுமானதாகும்.
மேககணினியில் ஏன் Tally ERP?
பல்வேறு கணக்கியல் நோக்கங்களுக்காக TallyERP மிகபயனுள்ளதாக இருக்கின்றது. மேககணினியில்டேலி( Tally on cloud) ஆனது SAAS எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திகொள்கிறது, இது கணக்கியல் மென்பொருளையும் அதன் ஆதாரங்களையும் மேககணினியில் எளிதாக்குகிறது.
மேககணினியில்டேலி ( Tally on cloud) எனும் பதிப்பு ஆனது வணிகநிறுவனங்கள் தங்களுடைய எல்லா தரவையும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அணுக அனுமதிக்கிறது. Tally கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்த எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தலாம்,அதில் சேமித்துவைத்துள்ள தரவை அணுகலாம்.
மேககணினியில் டேலி( Tally on cloud) -அடிப்படையிலான பதிப்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறுவனங்களின் கணக்கு பதிவியலை பராமரிக்க சிறந்த சிக்கனமான வழியாகும்.
மேககணினியில் டேலி( Tally on cloud) பதிப்பின் முக்கிய நன்மைகள் அனைத்து வகையான வணிகநிறுவனங்களுக்கும் கிடைக்கின்றன. மேகக்கணியில்நாம் பெறும் பலன்கள் வணிகநிறுவனங்கள் தங்களுடைய அலுவலககணினியில் Tally ERP9 என்பதை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்வதை விட மிகச் சிறந்தவை. பொதுவாக, மேககணினி பதிப்பு நம்முடைய தரவை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கக்கூடிய சிறந்த பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதனைபயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறான நண்மைகளை அனுபவிக்கலாம்:

வலுவான பாதுகாப்பு
Tally ERP 9க்கான மேககணினியின் வலுவான தரவு பாதுகாப்பை வழங்குகிறது. ERP செய்யும் முக்கியமான பணி என்னவென்றால், வணிகத் தரவு தானியங்கி காப்புப் பிரதிகளைப் பெற முடியும். மேககணினியின் சமீபத்திய நச்சுயிர் தடுப்பு வசதியைக் கொண்டுள்ளது, இது முக்கியமாக மேககணினிக்கான ERP9யின் சிறந்த பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியது. மேககணினியில்டேலியின் தரவை RDP மூலம் அணுகலாம்.

எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எந்த சாதனத்திலிரு்நதும் அனுகுதல்
கணக்கியல், வணிக மேலாண்மைக்கு Tally சிறந்த தேர்வாகும். சிறு வணிகநிறுவனங்கள் Tallycloud hub எனும் மையத்திலிருந்து மேககணினியில் டேலியைப்( Tally on cloud) பயன்படுத்தி மேசைக்கணினி மட்டுமல்லாது பயனாளர் பயன்படுத்தி கொள்ளும் எந்தவொருச் சாதனத்திலிருந்தும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எளிதாக அணுகி தங்களுடைய கணக்குபதிவியல் பணிகளை செய்து முடித்தி கொள்ளலாம்.

செலவு குறைந்தது
மேககணினியில் டேலி( Tally on cloud) ஆனது Tally ERP 9 ஐ அதன் சேவையாளரிலிருந்து எடுத்து TallyCloud hub எனும் மையத்தில் வைக்கலாம். அந்த நேரத்தில், சேவையகத்தை பராமரிப்பதற்கான அனைத்து செலவுகளையும் புரவலர் ஏற்றுக்கொள்வார்.

தனிப்பயனாக்கக்கூடியது & அளவிடக்கூடியது
மேககணினி செயல்திட்டத்தில் உள்ளமைவுகள், தனிப்பயனாக்கங்களைச் செய்வதற்கான சுதந்திரம், மேககணினி கணக்கின் மூலம் நாம் பெறும் மிகவும் பயனுள்ள செயல்முறையாகும். ஒரு சிறு வணிகநிறுவனம், அளவிடக்கூடிய தேவைகள் கொண்டால், மேககணினியில் டேலியின்( Tally on cloud) மூலம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

நிகழ்வு நேர தரவு
தற்போதைய சூழலில் நிகழ்நேர ஒத்திசைக்கப்பட்ட தரவு அவசியம்; எனவே, சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கலாம் அறிக்கைகள் தயார் செய்யலாம். மேககணினியில் டேலி( Tally on cloud)ஆனது தரவு வணிக உற்பத்தித்திறனை அதிகரிக்கும். அதிக கிளைகளைக் கொண்ட வணிகநிறுவனங்கள், நிதித் தரவு, அறிக்கைகளுடன் இணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கிளைகளை வைத்திருக்க, மேககணினியில் டேலி( Tally on cloud)ஆனது சிறந்த தேர்வாகும்.

தரவின் நம்பகத்தன்மை
மேககணினியில் டேலி( Tally on cloud)சிறந்த சேவை, எந்த சந்தேகமும் இல்லாமல். எந்தவொரு வணிகத்திற்கும் மேககணினியில் உள்ள அனைத்து தரவு வகைகளின் பாதுகாப்பான, காப்புப்பிரதியை இது உறுதி செய்கிறது. கணினி இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகும் அல்லது மறுதொடக்கம் செய்த பின்னரும் தரவின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். Tally தரவுத்தளமானது தரமான தரவு ஒருமைப்பாட்டை சீரான இடைவெளியில் இயக்க முடியும்.

அடையக்கூடிய தன்மை
கணக்குப்பதிவியலின்மேலாண் வணிக மேலாண்மை ஆகிய இரண்டிற்கும் Tally ERP9 பயனுள்ளதாக இருக்கின்றது. மேககணினியில் உள்ள Tally ERP 9 பாரம்பரியமான அல்லது முன்மாதிரி மென்பொருளாகும். டேலியின் செயல்பாடுகளை மேகக்கணியில் உள்ள ERP9 மூலம் முழுமையாக மாற்றலாம். டேலி பயன்பாட்டை வெளியிட, RDP நெறிமுறையைப் பயன்படுத்தலாம். எந்த இடத்திலிருந்தும் கணக்கின் அணுகி பயன் பெறலாம்.

விணைமுறைத்திறனுடனான வணிக திட்டமிடல்
வணிகநிறுவனங்கள் பதிவுகளையும் தரவையும் பின்னர் நிர்வகிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் மேககணினியில் டேலி( Tally on cloud) எனும் மென்பொருள் உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் மிகவும் தேவைப்படும்போது வணிகநிறுவனங்கள் அவற்றை பகுப்பாய்வு செய்யலாம். அந்த நேரத்தில், வணிகநிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளையும் திட்டங்களையும் எடுக்கலாம். இந்த மென்பொருளின் மூலம், வணிகத் திட்டமிடல் எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் மாறும்.

பேரிடர் மீட்பு
பொதுவாக, தரவுகள் அனைத்தையும் மேககணினியில் சேமிக்க முடியும் என்பதால், பேரிடர் மீட்பு பணியை மேககணினியில் டேலி( Tally on cloud) மூலம் சமாளிக்க முடியும். எனவே எந்த நேரத்திலும் மேககணினியில் இருந்து வணிகத்தை மீட்டெடுக்கலாம். அலுவலக சொத்துக்களை சேதப்படுத்தும் எந்தவொரு இயற்கை பேரழிவின் போதும் இதைப் பயன்படுத்தலாம்.

தீவிர நெகிழ்வுத்தன்மை
பணியில் அதீத நெகிழ்வுத்தன்மை என்பது ஊழியர்கள், முதலாளிகள் இருவருக்கும் ஒரு வெற்றி-வெற்றி கூட்டனியாக திகழ்கின்றது. இதில் அலுவலகபணி நேரத்துக்குப் பிறகும் தரவை அணுகலாம், மேககணினியின்கணக்கின் மூலம் இது சாத்தியமாகும். ஓய்வில்லாமல் 24/7 என்ப்தன் அடிப்படையில் பணி அணுகுதலின் வாயிலாக அதிக பணிகளை செய்ய முடியும் பணியாளர்களை சிறந்த செயல்திறனுடன் பணி செய்ய அனுமதிக்கும். எந்தச் சாதனத்திலிருந்தும், இணைய இணப்பில்லாத டேலி அல்லது அலுவலககணினியின் டேலி மூலம் கூட இதில் எளிதாக பணி செய்யலாம்.

மேககணினியில் டேலி( Tally on cloud) கட்டணமற்ற மாதிரிசெயல்முறை
சேவை வழங்குநரிடமிருந்து மேககணினியின் செயல்முறையில் டேலியை கட்டணமின்ற பரிசோதனை பதிப்பைப் பயன்படுத்தலாம். அதன் முழு வசதிகளையும் புரிந்து கொள்ள இது நமக்குபேருதவியாக இருக்கும். அது நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைகூட நாம்சரிபார்த்திடலாம். சேவையைப் பற்றி மேலும் அறிய இந்த மாதிரி செயல்முறை நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அனைத்து Tally பதிப்புகளுக்கும் உதவி
இதில்நாம் தேர்வு செய்த அனைத்து வசதிகளையும் காணலாம், பின்னர் எந்த ஒரு மென்பொருளின் பதிப்புகளையும் பயன்படுத்தலாம். Tally GST மென்பொருள் இதில் உள்ளடங்கியதாகும். சேவை வழங்குநரிடமிருந்து உடனடி உதவியைப் பயன்படுத்தி, மேலும் தொடர்ந்திடுக. ஏதேனும் பெரிய சிக்கல்களைச் சமாளிப்பதற்கு உடனடி உதவி தேவைப்படும்போது அதற்கான ஆதரவுக் குழுவையும் தொடர்பு கொள்ளலாம்.
முடிவுரை
Tallycloudhub இலிருந்து Tally on cloudஇன் பல நன்மைகளும் அசாதாரண வசதிகளும் உள்ளன. .எந்தவொரு வணிகநிறுவனமும் எளிதாகப் பயன்படுத்த முடியும் எந்த அளவிலான வணிகநிறுவனங்களும் தயக்கமின்றி Tallyதொலைநிலை அணுகலுடன் செல்லலாம். ; Tally on Cloud தீர்வு மிகவும் செலவு குறைந்த , மிகவும் பாதுகாப்பானது. சிறு வணிகநிறுவனத்திற்கான மேககணினி கணக்கியல் மென்பொருளை வெவ்வேறு இடங்களில் இருந்து பயன்படுத்திகொள்ள உதவும் மிகச்சிறன்த பயன்பாடாகும்.

மேககணினியில் தரவை எவ்வாறு சேமித்து நிர்வகிப்பது

தனிநபர்களும் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏறாளமான அளவில் தரவுகளை உருவாக்குகின்றனர். சமூக ஊடகங்கள்,எண்மபரிமாற்றங்கள், பல்பொருள்இணையம்(IoT) , நிறுவனங்களின் தரவுத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட இந்தவளாகத்தின் தரவு மிகவும் சிக்கலானது, வளாகத்தில் உள்ள தரவு சேமிப்பக தீர்வு போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, நிறுவனங்கள் மேககணினி அடிப்படையிலான சேமிப்பகத்திற்கு மாறுகின்றன. இந்தக் கட்டுரை மேககணினி தரவு மேலாண்மை , அதன் நன்மைகள் , மேகக்கணியில் தரவை எவ்வாறு கையாள்வது என்பதை விரைவாக ஒருபறவைபார்வையில் காணஉதவுகிறது.
மேககணினியின் தரவு மேலாண்மை என்பது ஒரு நிறுவனத்தின் தரவை மேககணினியில் சேமித்து செயலாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும். மேககணினியின் இயங்குதளங்கள் வழியாக தரவு மேலாண்மையானது விரைவான பேரழிவு மீட்பு, திறமையான பிற்காப்பு , எந்த இடத்தில் இருந்து அணுகல் உறுதி ஆகிய வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது. மேலும், அளவிடுதல் , நெகிழ்ச்சித் தன்மை ஆகிய வசதிகளால் மேககணினியின் தரவு மேலாண்மையை கொண்டு வளங்களை எளிதாகக் கையாள முடியும்.
மேககணினியில் தரவை நிர்வகிப்பது என்பதுபாரம்பரிய அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது. ஒரு பாரம்பரிய தரவுக் கிடங்கு அமைப்பு வளாகத்தில் உள்ள தரவு மையங்களுக்கு நன்றாக செயல்படுகிறது. இருப்பினும், இதற்காக எந்தவொரு நிறுவனமும் இதற்கு தேவையான வன்பொருட்களையும், சேவையகங்களையும் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது, மேலும் வலைபின்னல் நிபுணர்களை நியமிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்நாட்களில் மேககணினி அடிப்படையிலான இயங்குதளங்களைப் பயன்படுத்தி தரவு சேமிப்பகம் பாரம்பரிய வளாகத்தின் அணுகுமுறையை விட பிரபலமடைந்து வருகிறது.மேககணினி இயங்குதளங்களில் தரவு சேமிப்பகம் பின்வரும் வழிகளில் பாரம்பரிய வளாகத்தின் அமைப்புகளிலிருந்து வேறுபட்டது.
அளவிடுமுறை: ஒரு மேககணினியின்தரவு மையம் ஒரு பெரிய சேமிப்பிட இடத்தையும் சேவையக வளங்களையும் வழங்குகிறது. எனவே, ஒரு வாடிக்கையாளரானவர் தான் சேமிக்க விரும்பும் தரவைப் பொறுத்து, மேககணினியி சேவையகங்கள் எளிதாக மேலே அல்லது கீழே அளவிட முடியும். இது தவறு சகிப்புத்தன்மையை செயல்படுத்துகிறது , பணியில்லா நேரத்தை தவிர்க்கிறது.
மீள்தன்மை: மேககணினியின் சேவையாளரில் சேமிக்கப்பட்ட தரவு அனைத்து சேவையகங்களிலும் சமமாக விநியோகிக்கப்படுகிறது, இதனால் அவை அச்சுறுத்தல்களுக்கு அதிக மீள்திறன் கொண்டவை. பாரம்பரிய தரவு மேலாண்மை அமைப்புகள் மீள்தன்மை கொண்டவை அல்ல , அவற்றில் சேவையக செயல்திறன் குறைவாகவே உள்ளது.
குறைக்கப்பட்ட சேமிப்பக செலவு: மேககணினியின் தரவு சேமிப்பக சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இறுதிப் பயனாளர் தான்பயன்படுத்தப்படும் சேமிப்பக ஆதாரங்களுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார். ஆனால், ஒரு பாரம்பரிய தரவு மேலாண்மை அமைப்பில், சேவையாளர்களை வாங்க வேண்டும்.
மேககணினியின் தரவு நிர்வாகத்தின் முக்கிய நன்மைகள்
மேககணினிதரவு நிர்வாகத்தின் சில குறிப்பிடத்தக்க நன்மைகள் பின்வருமாறு.
அ) பாதுகாப்பு: நவீன மேககணினியின் தரவுமையங்கள் வளாகத்தின் தீர்வுகளுடன் ஒப்பிடும்போது உயர் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. மேககணினியின் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தரவு இழப்பு, வன்பொருள் செயலிழப்பு ஆபத்து குறைக்கப்படுகிறது. பாரம்பரிய வளாகத்தின் அணுகுமுறைக்கு மாறாக, மேககணினியின் புவலர்நிறுவனங்கள் மறையாக்கம், அங்கீகாரத்தின் மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
ஆ) அளவிடுதலும் சேமிப்பும்: மேககணினியின் இயங்குதளங்கள் பாரம்பரிய வளாகத்தின் அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட அளவிலான அளவிடுகின்றல் திறனை வழங்குகின்றன. அவை இயக்கநேரத்திலேயே சேர்த்தல் சேமிப்பக இடத்தின் வெளியீட்டுடன் உச்ச சுமைகளின் போது கணினி ஆற்றலை வழங்குகின்றன. பாரம்பரிய அணுகுமுறையில், கணினி வளங்களின் பற்றாக்குறை இருந்தால், உடனடியாக பயனாளர் வன்பொருள் உள்கட்டமைப்பை வாங்கி நிறுவுகைசெய்திட வேண்டும்.
இ) ஆளப்படும் அணுகல்: மேககணினியில், தரவு ஆளுகை நடைமுறையானது இரகசியத் தரவுகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட , கண்காணிக்கப்படும் அணுகலை உறுதி செய்கிறது. இந்த அம்சம் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் தரவை அணுகுவதை ஆதரிக்கிறது. மேககணினி தரவுத்தள அமைப்பில் தரவு ஆளுமை நெறிமுறைகளை (அங்கீகாரங்கள், கொள்கைகள், மீப்பெரும் தரவு போன்றவை) செயல்படுத்துவதன் மூலம் இது அடையப்படுகிறது. எனவே, தரவுகள் , ஆதாரங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப அணுகலைப் பயன்படுத்துவதன் மூலம், மேககணினியானது வணிகங்களுக்கு குறிப்பிடத்தக்க செலவுச் சேமிப்பை வழங்குகிறது.
ஈ) தானியங்கு காப்புப்பிரதிகளும் பேரழிவு மீட்பும்: பாரம்பரிய அணுகுமுறையில், பேரழிவு மீட்பு அமைப்புக்கு நிலையான பராமரிப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. மேககணினியில் பேரழிவு மீட்பு என்பது முக்கியமான தரவுகளை பயன்பாடுகளை மேககணினி சேமிப்பபகத்தில் சேமித்து வைப்பதும், பேரழிவு ஏற்பட்டால் இரண்டாம் தளத்தில் தோல்வியுற்றதும் ஆகும்.
மேகக்கணியில் தரவுகளுக்கான மேலாண்மை உத்தியை உருவாக்குதல்
தகவல் தொழில்நுட்பத் துறையில், பெருநிறுவன இலக்குகளை அடைவதற்கு மேககணினி தரவு மேலாண்மை உத்திகள் முக்கியமானவை. மேககணினியின் தரவுகளின் சேவையாளரில் தரவுகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
அ) சரியான திட்டமிடல் பொறிமுறையை உறுதி செய்தல்:செயல்திட்ட மேலாண்மையின் வெற்றிக்கு திட்டமிடல் முக்கியமானது. மேககணினியின் தரவு நிர்வாகத்தில்,மேககணினியின் சூழலில் தரவை வெற்றிகரமாக ஒன்றாக குவிப் பதற்கு, பயனாளர் பின்வரும் சிக்கல்களை கவனித்துக் கொள்ள வேண்டும்:i) முழு மையான தரவுகளை மேககணினியில் ஏற்றப்படுவதை உறுதி செய்தல்,ii) திறமை யான தரவு அணுகலுக்கான முறையான வழிமுறைகளை செயல்படுத்துதல், iii) மேகக்கணி சேவையகத்தில் தரவு செயலாக்கம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என தீர்மானித்தல்.
ஆ) தரவுகளின் நிலைத்தன்மையைப் பேணுதல்: தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தகவல் துல்லியமானது என்பதையும், தரவுகளில் மிகுதியாக்கம் எதுவுமில்லை என்பதையும் தரவு நிலைத்தன்மையும் உறுதி செய்கிறது.
இ) சேமிக்கப்பட்ட தரவின் காப்புப்பிரதியை வைத்திருத்தல்: மேகக்கணிசேவை வழங்குநர்கள் வழக்கமான காப்புப்பிரதியின் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். மேகக்கணி தரவுமையங்களில், தொலைதூரஇடங்களின்சேவையாளருக்கு தரவை நகலெடுப்பதன் மூலம் வழக்கமான காப்புப்பிரதி செய்யப்படுகிறது.
ஈ) தரவு நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்: தரவுகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்டதும் கண்காணிக்கப்படுவதுமான அணுகலை உறுதி செய்வதற்காக ஆளுகை நெறிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
முசிவாக தரவுத்தளங்களின் அளவுகளின் வளர்ச்சியுடன், இன்றைய தரவு மேலாளர்களுக்கு எந்த இடத்திலிருந்தும் அணுகல், திறமையான தரவை நிர்வகிக்கக்கூடிய ஒரு அமைப்பு தேவை. இந்த நோக்கத்தை அடைய, மேகக்கணி தரவு மேலாண்மை உத்திகள் பல தொழில்களில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்பதே உண்மையான களநிலவரமாகும்.

மேககணினி சேவை வழங்குநர்களைப் பற்றி திறமூல மேம்படுத்துநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

பொதுவாக மேககணினியில் அடுக்குகளானவை(layer) கணினிகளின் இயக்க நேரத்தில் இணைந்து செயல்படும் வகையில்வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதனை பலர் மேககணினியின் புதிய எல்லையாக கருது வதால்,கடந்த பல ஆண்டுகளாக இவை மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இருப்பினும்,இது தனிப்பட்ட ஈடுபாட்டுடன் தொழிலகங் களிலும் கணினியிலும் மேககணினியை எவ்வளவு பயன்படுத்துகின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது ஆகும்.
ஒரு நிரலாளராக இருந்தால்,தன்னுடைய பணியைசெய்வதற்காகவோ அல்லது வேடிக்கையாகவோ கணினியின் மேம்பாட்டை மேகக்கணியில் நகர்த்த விரும்பிடுவோம், ஆயினும் தற்போது ஏராளமான அளவில் மேககணினி வழங்குநர்கள் இருப்பதால் அவர்களுள் எந்த மேககணினி வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும் , குறிப்பாக திறமூல ஆர்வலர்களுக்கு. அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், மேககணினியை தெரிவு செய்வதற்கான நேரடியான வழிகள் பலஉள்ளன.அவ்வாறான தற்போதைய சூழ்நிலையில் திறமூலமேம்படுத்துநர்கள் மேககணினி வழங்குநர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பின்வருமாறு
பொதுவாக மேககணினி சேவை வழங்குநர் தற்போத நாம் பயன்படுத்தி கொண்டு வருகின்ற நம்முடைய இயங்குதளத்தை வரையறுக்க வேண்டியதில்லை
அடுத்ததாக மேககணியில் மென்பொருளை உருவாக்கிடுவதற்காக, நம்முடைய சொந்த miniature எனும் மேககணினியை உருவாக்கலாம் அல்லது வேறொருவரின் மேககணினியின் பயன்படுத்திகொள்வதற்கான நேரத்தை(time) வாங்கலாம் என்றவாறான இரண்டு வாய்ப்புகள் நாம் தெரிவுசெய்வதற்காக தயாராக உள்ளன.
நமக்கென சொந்தமாக உருவாக்குவது மிகவும் வேடிக்கையான செயலாக உள்ளது. நம்முடை தொகுதிக்கு(cluster), போதுமான பங்களிப்பாளர்கள் கொடுக்கப்பட்டால், அது பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், நடைமுறை வரம்புகள் எதுவுமில்லா மல் மென்பொருள் மேம்படுத்திட வேண்டுமெனில், நம்முடை சொந்த மேககணியை இயக்குவது யதார்த்தமானதாக இருக்காது. ஒரு மேககணினியின் நேரத்தினை வாங்குவதில் நம்முடைய கணினியின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். மேககணினி வழங்குநர் என்பவர் நமக்கும் மெய்நிகர் உள்கட்ட மைப்புக்கும் இடையே ஒரு விற்பனை யாளராவார். நமக்கு கணினியின் பயன்கள் தேவை, எனும்போது அதனை மேகணினி வழங்குநர்கள் நமக்கு விற்க ஆர்வமாக உள்ளனர்.
நாம் ஒரு புதிய மடிக்கணினியை அலமாரியில் இருந்து வாங்குவது போலவே, அதனுடன் வரும் மூடிய மூல bloatware என்பதை நாம் பயன்படுத்திடுமாறு யாரும் நம்மை கட்டாயப்படுத்தப் போவதில்லை. மேககணினியில் இடத்தை வாடகைக்கு எடுக்கும்போது, எத்தனை லினக்ஸ் கொள்கலண்களை(containers) வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் அந்த கொள்கலண்களை உருவாக்கி வரிசைப்படுத்த நாம் பயன்படுத்துகின்ற இடைமுகம் , அந்தகொள்கலண்கள் இணைக்கும் உள்கட்டமைப்பு ஆகியவை திறமூலமாக இல்லாதவைகளாகும். நம்முடைய மேககணினி இடைமுகத்தை OS ஆகவும், நம்முடைய கொள்கலன்களை அப்பாச்சி httpd, Postfix, Dovecot போன்ற பலவற்றின் வாய்ப்பாகவும் கருதலாம்
திறமூல இடைமுகத்தை இயக்க, OpenShift (upstreamOKD செயல்திட்டத்தின் அடிப்படையில்) போன்ற திறமூல பணியகத்தினை இயக்கிடுவதற்காக தேர்வு செய்க AWS (ROSA) இல் சேவை, என்பது நமக்கான வாய்ப்புகளை முதலில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக அதற்கானமேடையில் வைக்கிறது.
மேககணினி என்பது வேறொருவரின் கணினி, எனவே நம்முடைய வழங்குநரை நம்பி செயல்படவேண்டியநிலையில் நாம் உள்ளோம்
நாம் கணினியில் அல்லது அதைச் சுற்றியுள்ள கருவிகளில் பணிபுரிந்தால், நாம் ஏற்கனவே மேகக்கணியைக் கையாளுகின்றோம் என்பதுதான் நடைமுறயில் உண்மையான அர்த்தமாகும். இணைய உலாவியின் உள்ளே ஒரு பயன்பாடு இயங்கும் போது, அது வேறொருவரின் கணினியில் (அதாவது, ஒரு நிறுவனத்தின் சேவையகங்களின் வரிசையாக) இயங்குகிறது என்ற மேககணினியின் அடிப்படையை புரிந்துகொள்க.
நம்முடைய தனிப்பட்டதரவுகள், நிறுவனதரவுகள், வாடிக்கையாளர் தரவுகள் ஆகியவை யாருடைய வன்பொருளில்உள்ளது என்பதைப் பற்றி சிந்திக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஒரு மேம்படுத்துநராக, பணிப்பாய்வுகளை நாம் உருவாக்கும் கருவித்தொகுப்பைக் கருத்தில் கொள்வதற்கும் காரணம் இருக்கிறது. நாம் ஒரு மேககணினி வழங்குநருடன் பதிவுபெறுவதால், நாம் ஒரு குறிப்பிட்ட கருவித்தொகுப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படலாம் என்று அர்த்தமன்று. நம்முடைய சொந்த மேம்பாட்டு சூழலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என நாம் பயப்படுவதால், சேவையிலிருந்து இடம்பெயர தயங்கக் கூடாது.இவ்வாறான நிலையில் நம்முடைய சூழல், CI/CD pipeline, வெளியீட்டு மாதிரி ஆகியவற்றை நிலையானதாக உருவாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்ற சரியானவழங்குநரைத் தேர்வு செய்க.மேகக்கணியில் மேம்படுத்துல் செய்வது என்பது கணினியில் மேம்படு்த்தல் செய்வதையேக் குறிக்கிறது
இதுவரை மேககணினியில் எதையும் உருவாக்கவில்லை எனில், அது நமக்கு அந்நியமாகத் தோன்றலாம், ஆனால் மேகக்கணியில் உருவாக்குவது நம்முடைய கணினியில் உருவாக்குவதை விட வித்தியாசமானது அன்று. அவ்வாறு ஏதேனும் இருந்தால், பல ஆண்டுகளாக நிறுவுகைசெய்து பயன்பாட்டில் இருக்கக்கூடிய நல்ல மேம்படுத்துதல் நடைமுறைகளை இது செயல்படுத்துகிறது.
அது மேகக்கணினியில் இருந்தாலும் அல்லது விசைப்பலகையில் இருந்து ஒரு அங்குல தூரத்தில் இருந்தாலும், கருத்தில் கொள்ள வேண்டிய மேம்படுத்திடும் சூழல் உள்ளது. இதில் நாம் கண்காணிக்க, நிர்வகிக்க புதுப்பிக்க வேண்டிய நூலகங்கள் நம்மிடம் உள்ளன. தொடரியல், நிலைத்தன்மை, மாறியின் பெயர்கள், செயலிகள் வழிமுறைகள் போன்ற பலவற்றிற்கு உதவும் IDE கூட நம்மிடம் உள்ளது. ஒரு நல்ல மேககணினி வழங்குநர் நாம் பயன்படுத்த விரும்புகின்ற அனைத்து கருவிகளையும் பயன்படுத்தகொள்ள நம்மை அனுமதிக்கின்றார், அவை உரை திருத்தி, கொள்கலன்-நட்பு IDE, அல்லது மேககணி-அறிவு IDE. ஆகியவைகளாகும்
திறந்த தரநிலைகள் இன்னும் முக்கியம்
கணினியின் முனைங்களில்(nodes) நம்மை முட்டாளாக்கிகொள்ள விடாதீர்கள். எண்மங்கள் ஆனவை offsiteஇல் நசுக்கப்படுவதால், நம்முடைய தரவை கருப்புப் பெட்டியில் வைக்க வேண்டும் என்று அர்த்தமன்று. மேகக்கணியின் அடித்தளம் திறந்த நிலையில் இருப்பதை OpenStack உறுதிசெய்கிறது, இது மேககணினி மேம்பாட்டினையும், நிர்வாகத்தையும் முன்னெப்போதையும் விட நம்முடைய மேசைக் கணினிககு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. திறந்த கொள்கலன் முன்முயற்சியின் பணியானது, கொள்கலன்களைத் திறந்த நிலையில் வைத்திருக்க Podman ,LXC போன்ற பயன்பாடுகளை இயக்கியுள்ளது (daemon இல்லாத root இல்லாதது). திறந்த தரநிலைகள் ,திறந்த விவரக்குறிப்புகள் நம்முடைய பணிக்கான சிறந்த தீர்வைத் தேர்வுசெய்ய ஒரு மேம்படுத்துநராக நம்மை அனுமதிக்கிறது.மேகணினி வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது, குறைந்த அளவில் எதற்கும் தீர்வு காண வேண்டாம்.
நாமே ஒரு திறமூலமேககணினியை உருவாக்க முடியும்
மேககணினி ஏற்கனவே இணையத்தின் பெரும்பகுதியை இயக்குகிறது, ஆனால் அது இன்னும் அதிக திறனைக் கொண்டுள்ளது. திறமூல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறமூல மேககணினி வழங்குநர்களை ஆதரிப்பது முக்கியம், ஆனால் அதை உருவாக்க உதவுவதும் முக்கியம். மேககணினியானது, நமது தனிப்பட்ட கணினிகள், இணையம், நமது அன்றாட சமூககுழுக்ங்களைப் போலவே, அதை உருவாக்குவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மட்டுமே திறமூலமாக இருக்கும்.திறமூலத்தைப் பயன்படுத்தி மேகக்கணியில், எல்லா இடங்களிலும் திறமூலத்தை வெளியிடமுடியும் என்ற செய்தியையும் மனதில் கொள்க

அடோப்பின் நிரபபுதலும் கையொப்ப மிடுதலும்(Adobe Fill & Sign)

அடோப்பின் நிரபபுதலும் கையொப்பமிடுதலும்(Adobe Fill & Sign) என்பது எந்தவொருப் படிவத்தையும் விரைவாக நிரப்பவும், கையொப்பமிடவும் , அனுப்பவும் உதவுகின்ற ஒரு பயன்பாடாகும். நாம் ஒரு காகித படிவத்தின் உருவப்படத்தை எடுத்து நம்முடைய கைபேசி அல்லது மடிக்கணினியின் வாயிலாக அதனை நிரப்பலாம். பின்னர் மின் கையொப்பமிட்டு அனுப்பலாம். அவ்வாறான படிவத்தினை அச்சிடுதல் அல்லது தொலைநகல் செய்யத்தேவை இல்லை.இதுபயன்படுத்த மிகவும் எளிதானபயன்பாடாகும்.
நிரப்புதல்: முதலில் நம்முடைய கைபேசியின் படபிடிப்பு (camera) வசதி மூலம் காகித படிவங்களை வருடுதல் செய்க அல்லது மின்னஞ்சலில் இருந்து கோப்பை திறந்திடுக.பின்னர் படிவப் புலங்களில் உரை அல்லது தேர்வுக்குறிகளை உள்ளிடுவதற்காக தட்டச்சுசெய்திடுக. முடிவாகதனிப்பயன் தன்னியக்க உள்ளீடுகள் மூலம் படிவங்களை இன்னும் விரைவாக நிரப்பிடுக.
கையொப்பமிடுதல்: முதலில்நம்முடைய விரல் அல்லது எழுத்தாணி மூலம் நம்முடைய கையொப்பத்தை எளிதாக உருவாக்கிடுக, பின்னர் படிவத்தில் நம்முடைய கையொப்பம் அல்லது முதலெழுத்துக்களைப் (initials) பயன்படுத்திடுக.
அனுப்புதல்: இவ்வாறு உருவாக்கிய படிவங்களைச் சேமித்து மின்னஞ்சல் மூலம் உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்பிடுக.
இதன்உதவியுடன் எங்கு வேண்டுமானாலும் ஐபோன் ,ஆண்ட்ராய்டு போன்ற சாதனங்களின் வாயிலாக எப்போதுவேண்டுமானாலும் படிவங்களை நிரப்பி கையொப்பமிட்டிடுக.
இதன்உதவியுடன் அச்சிடுதல் ,தொலைநகல் செய்வதை அகற்றி மின்னஞ்சல் மூலம் படிவங்களை நிரப்பி கையொப்பமிட்டு அனுப்பிடுக. படிவங்களை ஒரே இடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில்சேமித்திடுக. வசதிகேற்றவாறு நம்முடைய கைபேசி அல்லது மேசைக்கணினியிலிருந்து அனுப்பிடுக.
நம்முடைய விரல் அல்லது எழுத்தாணியைப் பயன்படுத்தி நாம் விரும்பும் விதத்தில்அல்லது வழியில் நம்முடைய கையொப்பத்தை இட்டிடுக. பின்னர், படிவத்தில் அந்த கையொப்பத்தைப் பயன்படுத்திடுக அல்லது தேவையான இடங்களில் நம்முடைய பெயரின் முதலெழுத்துக்களைச் சேர்த்திடுக.
இதன்வாயிலாக நம்முடைய பொன்னான நேரத்தையும் அச்சிடுகின்ற காகித்திற்கான மரங்கள் அழிப்பதையும் சேமித்திடுக. : தேவைுப்படும் படிவத்தை மீண்டும் அச்சிடவோ அல்லது தொலைநகல் அனுப்பவோ வேண்டாம். படிவங்களைச் சேமித்து மின்னஞ்சல் மூலம் உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்பிடுக.
அதிக நேரத்தை மிச்சப்படுத்துவதன் வாயிலாக இன்னும் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தி கொள்க: படிவங்கள், கையொப்பங்கள், பெயரின்முதலெழுத்துக்கள் சாதனங்கள் முழுவதும் தானாக நிறைவு செய்யும் பரிந்துரைகளை ஒத்திசைக்க Adobe Document Cloud இல் உள்நுழைவு செய்திடுக.

பல்வேறு மேக்கணனிகளின்(Cloud computers) திறமூல மேலாண்மை கருவிகள்

பல்வேறு மேககணினி உத்தி மூலம், மேககணினி சேவை வழங்குபவைகளுள் சிறந்தவற்றிலிருந்து ஒன்றினை தெரிவுசெய்துபயனடையலாம். ஆனால் இது அதன் சொந்த சவால்கள் பரிசீலனைகளுடன் வருகிறது. அதனால்தான் சரியான மேலாண்மை கருவிகளை, குறிப்பாக பாதுகாப்பு , இணக்கத்திற்காக மதிப்பீடு செய்து அடையாளம் காண்பது விரும்பத்தக்கதாகும். பின்வருபவை பல்வேறு மேககணினிகளின் சிறந்த திறமூல மேலாண்மை கருவிகளாகும்.

1.Mist இது பல்வேறு மேககணினிகளின் நிருவாக்ததினை எளிமையாக்க முயற்சிக்கிறது மேலும் அவையனைத்தையும் நிர்வகிக்கக்கூடிய ஒற்றையான இடைமுகத்தையும் வழங்குகிறது. public clouds, private clouds, hypervisors, containers ,bare metal சேவையகங்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலமான உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்களையும் இது ஆதரிக்கிறது. வழங்குதல், பல்லியம், கண்காணிப்பு, தானியங்கி, செலவு பகுப்பாய்வு போன்ற பொதுவான மேலாண்மை பணிகளைச் செய்வதற்காக இது ஒரு ஒருங்கிணைந்த இடைமுகத்தை வழங்குகிறது. இது ஒரு RESTful API ,CLI ஆகியவற்றுடன் கிடைக்கின்றது, எனவே ஏற்கனவே உள்ள பணிப்பாய்வுகளில் அதை எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.

முக்கியவசதிவாய்ப்புகள்:

மேககணினிகள் முழுவதும், குறிச்சொற்கள் மூலம் தொகுக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களின் உடனடித் தெரிவுநிலை கொண்டது

தற்போதைய உள்கட்டமைப்பு செலவுகளின் உடனடி அறிக்கை/மதிப்பீட்டினை வழங்குகின்றது

தற்போதைய , கடந்த கால செலவுகளை ஒப்பிடவும், பயன்பாட்டுடன் தொடர்புபடுத்தவும், சரியான அளவு பரிந்துரைகளை வழங்கவும் (EE/HS மட்டும்) உதவுகின்றது

எந்த மேகக்கணியிலும் புதிய ஆதாரங்களை வழங்குதல்: இயந்திரங்கள், தொகுதிகள், வலைபின்னல்கள், மண்டலங்கள், பதிவுகள் ஆகியவற்றினை வழங்குகின்றது

ஏற்கனவே உள்ள ஆதாரங்களில் வாழ்க்கைச் சுழற்சிச் செயல்களைச் செய்தல்: நிறுத்துதல், தொடங்குதல், மறுதொடக்கம் செய்தல், அளவை மாற்றுதல், அழித்தல் போன்ற சுழற்சியான செயல்களை ஆதரிக்கின்றது

இதன் மூலம் செய்யப்படும் அல்லது தொடர்ச்சியான வாக்குப்பதிவின் மூலம் கண்டறியப்பட்ட அனைத்து செயல்களுக்கும் உடனடி தணிக்கை பதிவினை வழங்குகின்றது

உரைநிரல்களை நூலகத்தில் பதிவேற்றவும், தணிக்கை பதிவு , SSH விசைகளின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை செயல்படுத்தும் போது அவற்றை எந்த கணினியிலும் இயக்கவும் முடியும்

SSH கட்டளை shell உலாவியில் அல்லது CLI மூலம் எந்த கணினியிலும், தணிக்கை பதிவு , SSH விசைகளின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது

நிகழ்நேர அமைப்பு தனிப்பயன் அளவீடுகளைக் காண்பிக்க இலக்கு இயந்திரங்களில் கண்காணிப்பை இயக்கவும், மேலும் நீண்ட கால அணுகலுக்காக அவற்றைச் சேமிக்கவும் அனுமதிக்கின்றது

அறிவிப்புகள், இணைய கொக்கிகள், உரைநிரல்கள் அல்லது இயந்திர வாழ்க்கைச் சுழற்சி செயல்களைத் தூண்டும் அளவீடுகள் அல்லது பதிவுகளில் விதிகளை அமைக்க பயன்படுகின்றது

ஒவ்வொருரு team/tag/resource/action (EE/HS மட்டும்) ஒன்றுக்கு நுணுக்கமான அணுகல் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமைத்திடுகின்றது .

நிர்வாகக் கட்டுப்பாடுகளை அமைக்த்திடுதல்; .கா., ஒரு பயனாளர்/அணிக்கான செலவில் ஒதுக்கீடுகள், தேவையான காலாவதி தேதிகள் (EE/HS மட்டும்) அமைத்திடுகின்றது

சிக்கலான வரிசைப்படுத்தல்கள் , பணிப்பாய்வுகளை விவரிக்கக்கூடிய உள்கட்டமைப்பு மாதிரிபலகங்களைப் பதிவேற்றிடுகின்றது (EE/HS மட்டும்)

ஆதரிக்கப்படும் எந்த மேககணினியிலும் (EE/HS மட்டும்) Kubernetes தொகுப்புகளை வரிசைப்படுத்தவும் அளவிடவும் செய்திடுகின்றது

இதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்: https://mist.io/ ஆகும் இதனுடைய சமீபத்திய பதிப்பு: Mist4.5.5 ஆகும்

2.Cloudify இது அனைத்து முக்கிய தனியார், பொது மேககணினி உள்கட்டமைப்பு சலுகைகளை ஆதரிக்கின்ற ஒரு தூய-விளையாட்டு, தரநிலை அடிப்படையிலான (TOSCA) மேககணினி பல்லிய தளமாகும். இந்தCloudify இன்மூலம், நிறுவனங்கள் OpenStack, VMware அல்லது AWS மேககணினிகள் முழுவதும், VMகள் அல்லது கொள்கலண்கள்(containers)போன்ற மெய்நிகராக்க அணுகுமுறைகள், Puppet, Chef அல்லது SaltStack போன்ற பல்வேறு தானியங்கி கருவிகளுடன் ஒற்றையான, திறமூல மேககணினி பல்லிய தளத்தைப் பயன்படுத்தலாம். பல்வேறு மேககணினிகள், தரவு மையங்கள் , கிடைக்கும் மண்டலங்களின் மேலாண்மை பல்லியத்திற்கான (MANO) பயன்படுத்த எளிதான, திறமூலக் கருவியை இது வழங்குவதால், இந்தCloudify ஆனது தொலைத்தொடர்புகள், இணைய சேவை வழங்குநர்கள் கலப்பின மேககணினி பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமானதாக உள்ளது.

முக்கியவமசதிவாய்ப்புகள்:

நிறுவன தர மேம்படுத்தப்பட்ட கலப்பின மேககணினி ஆதரவுகொண்டது: இது AWS, Azure, GCP, OpenStack , VMWare ,vSphere, vCloud உள்ளிட்ட அனைத்து முக்கிய பொது , தனியார் மேககணினி சூழல்களை ஆதரிக்கிறது.

முழு VMware அடுக்கிற்கான ஆதரவுகொண்டது: Cloudify என்பது முழு VMware அடுக்கையும் ஆதரிக்கின்ற ஒரே திறமூல பல்லிய தளமாகும்; அனைத்து VMware செருகுநிரல்களும் திறமூல Cloudify Community பதிப்பில் கிடைக்கின்றது

AWS , OpenStack ஆகிய இரண்டிற்கும் பொதுவாகப் பகிரப்பட்ட படிமங்கள் கொண்டது: முன்கூட்டியேகட்டப்பட்டமைப்பு செய்யப்பட்ட Cloudify Manager சூழல்கள் இப்போது AWSக்கு பகிரப்பட்ட AMI மூலமாகவும், OpenStack ஒரு QCOW படத்தின் மூலமாகவும் கிடைக்கின்றன. இது சிலநிமிடங்களில் முழு அளவிலான Cloudify சூழலின் எளிய இயக்கதுவக்கத்தை செயல்படுத்துகிறது.

வரிசைப்படுத்தலிற்கான புதுப்பித்தல்: இது பயன்பாட்டு வரிசைப்படுத்தல்களைப் புதுப்பிக்கவும், பயன்பாட்டு செயல்பாட்டுப் பொறியாளர்கள் மேம்படு்ததுநர்கள் இடவியல் மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் TOSCA வரிசைப்படுத்தல்களை இயக்க புதிய ஆதாரங்களைச் சேர்க்கவும் அனுமதிக்கிறது.

நிகழ்விட மேலாளர்மேம்படுத்தல்: புதிய Cloudify Manager மேம்படுத்தல் செயல்முறை, நிர்வகிக்கப்பட்ட சேவைகளுக்கு எந்த நேரமும் இல்லாமல், அனைத்து மேலாளர் உள்கட்டமைப்புகளுக்கும் முழுமையாக தானியங்கி இடத்தில் மேம்படுத்தல்களை வழங்குகிறது; Cloudify பதிப்புகள் , பயன்பாடுகளின்ஒட்டி தொகுக்கப்பட்ட பதிப்புகள் ஆகியவற்றுக்கு இடையே எளிதாக இடம்பெயர்வதை இது அனுமதிக்கிறது

இதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்: https://cloudify.co/ ஆகும் இதனுடைய சமீபத்திய பதிப்பு: Cloudify 3.4ஆகும்.

3.ManageIQ கலப்பின சுட்டியின் சூழல்களை நிர்வகிப்பதற்கான சவால்களை நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய நுண்ணறிவு, கட்டுப்பாடு, தானியிங்கி செயலை இந்தManageIQ வழங்குகிறது. நம்மமுடைய சூழலின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ளவும், இறுதிப் பயனாளர்களுக்கு சுய சேவையை வழங்கவும், இணக்கக் கொள்கைகளைச் செயல்படுத்தவும் இது நம்மை அனுமதிக்கிறது.

முக்கிய வசதிவாய்ப்புகள்:

நுண்ணறிவு: கண்டறிதல், கண்காணிப்பு, பயன்பாடு, செயல்திறன், அறிக்கையிடல், பகுப்பாய்வு,திரும்பப் பெறுதல்,போக்குகளை அறிதல் ஆகிய வசதிகளை வழங்குகின்றது

கட்டுப்பாடு: பாதுகாப்பு, இணக்கம், எச்சரிக்கை, கொள்கை அடிப்படையிலான ஆதாரம் , கட்டமைப்பு மேலாண்மை.ஆகிய வசதிகளை வழங்குகின்றது

தானியங்கிசெயல்: IT செயல்முறை, பணி , நிகழ்வு, வழங்குதல், பணிச்சுமை மேலாண்மை , இசைக்குழு.ஆகிய வசதிகளை வழங்குகின்றது

ஒருங்கிணைத்தல்: அமைவு மேலாண்மை, கருவிகள் , செயல்முறைகள், நிகழ்வு பணியகங்கள், CMDB, RBA , இணைய சேவைகள்.ஆகிய வசதிகளை வழங்குகின்றது

இதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.manageiq.org/ ஆகும் இதனுடைய சமீபத்திய பதிப்பு: ManageIQ4.2.0 ஆகும்.

4.OpenNebula இது பன்முகத்தன்மை கொண்ட விநியோகிக்கப்பட்ட தரவு மைய உள்கட்டமைப்புகளை நிர்வகிப்பதற்கான மேககணினி தளமாகும். இந்தOpenNebula இயங்குதளமானது, ஒரு சேவையாக உள்கட்டமைப்பின் தனியார், பொது, கலப்பின மேககணினிகளன் செயலாக்கங்களுக்கான தரவுகளின் மையங்களின் மெய்நிகர் உள்கட்டமைப்புகளை நிர்வகிக்கிறது. தரவு மைய மெய்நிகராக்கம், KVM hypervisor, LXD அமைவு கொள்கலண்கள், AWS Firecracker microVMகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேகணினி வரிசைப் படுத்துதலேஇந்த இயங்கு தளத்தின் முதன்மைப் பயன்பாடுகள் ஆகும். இதுதற்போதுள்ள VMware உள்கட்டமைப்பின் மேல் ஒருமேககணினி இயக்குவதற்கு தேவையான மேககணினி உள்கட்டமைப்பை வழங்குகின்ற திறன் கொண்டது. இது சேமிப்பு, வலைபின்னல், மெய்நிகராக்கம், கண்காணிப்பு, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றினை விநியோகிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளில் மெய்நிகர் இயந்திரங்களாக (.கா., கணினிதொகுதிகள்) வரிசைப்படுத்துகிறது, இது தரவு மைய வளங்கள் தொலைதூர மேககணினி வளங்கள் இரண்டையும் இணைத்து ஒதுக்கீடு கொள்கைகளின்படி செய்கிறது.

முக்கிய வசதிவாய்ப்புகள்:

பயனாளர்கள் நிர்வாகிகளுக்கான எளிய, சுத்தமான, உள்ளுணர்வுடன்கூடிய வரைகலை பயனாளர் இடைமுகம்(GUI), வெவ்வேறு பார்வைகளுடன்

பட்டியலிலிருந்து கொள்கலனாக்கப்பட்ட ,மெய்நிகராக்கப்பட்ட பணிப்பாய்வுகளை எளிதாக சுயமாக வழங்குதல் நுணுக்கமான கணக்கியல் , கண்காணிப்பு

நிறுவனத்தில் உள்ள பயன்பாடுகளைப் பகிரவும் விநியோகிக்கவும் தனிப்பட்ட சந்தையை உருவாக்கிடுதல் ஆகிய வசதகளை வழங்குகின்றது

புரவலர்களின் தொகுப்பு குவியலாக மாறும் உருவாக்கம் கொண்டது

மெய்நிகர் தரவு மையங்களை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட மெய்நிகர் சூழல்களாக மாறும் உருவாக்கம் கொண்டது

அளவிடுதல், தனிமைப்படுத்தல் அல்லது பல தள ஆதரவுக்காக பல மண்டலங்களின் கூட்டமைப்பு கொண்டது

சக்திவாய்ந்த , நெகிழ்வான திட்டமிடுபவர் -பணிச்சுமையை வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தவும் சக்திவாய்ந்த பயனாளர், குழு , பங்குகொள்கின்ற மேலாண்மை ஆகிய வசதிகளை கொண்டுள்ளது

நிறுவன பயனாளர் மேலாண்மை திறமூல பயனாளர் மேலாண்மை ஆகிய சேவைகளுடன் ஒருங்கிணைப்பினை கொண்டது இதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்: https://opennebula.io/ ஆகும் இதனுடைய சமீபத்திய பதிப்பு: OpenNebula 6.0 ஆகும்.

Previous Older Entries