இப்போது விண்டோஎக்ஸ்பியிலிருந்து எளிதாக லினக்ஸிற்கு மாறமுடியும்

8.1

 தற்போது ஏப்ரல் 2014 முதல் விண்டோஎக்ஸ்பிக்கான பாதுகாப்பு ஆதரவை விலக்கி கொண்டுவிட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில்

நாம் அனைவரும் விண்டோ 7 அல்லது விண்டோ8 ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளில் ஒன்றிற்கு கட்டணம் செலுத்தி மாறிகொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற இக்கட்டான நிலைஉள்ளது ஆயினும் இந்நிலையில் கட்டணமற்ற லினக்ஸ் இயக்கமுறைமை ஏராளமான வகையில் நம்முடைய தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு இருக்கும்போது நாம் அதற்காக கவலைபடவேண்டாம். விண்டோஎக்ஸ்பி மிகசிறந்ததாகவும் எளிமையானதாகவும் விளங்கிவருகின்றது என்பது உண்மைதான் ஆனால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஏராளமான வகையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில் அதற்கேற்ப நம்முடைய இயக்கமுறைமையும் தயாராக மாறி இருக்கவேண்டுமல்லவா அதனால் கட்டணமற்ற லினக்ஸின் பல்வேறு வகையான இயக்கமுறைமைகளும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு தற்போதைய வளர்ச்சிகேற்ப செயல்படும் தன்மையில் உள்ளன அவைகளுள் நம்முடைய தேவைக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து நம்முடைய கணினியில் பயன்படுத்திகொள்ளலாம். இதனை தொடர்ந்து வைரஸ் போன்ற எந்தவொரு எதிர் நச்சுநிரலும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை பாதிக்காது என்பதை மனதில் கொள்க மேலும் பழைய கணினியானாலும் தற்போதைய புதிய கணினியானாலும் லினக்ஸ் செயல்படும் திறன்கொண்டதாகும் அதுமட்டுமல்லாது இதனை நிறுவி செயல்படுத்துவதற்கு அதிக நினைவக காலியிடம் தேவையில்லை என்ற தகவலையும் மனதில் கொள்க. மேலும் கணினியுடன் இணைத்துள்ள எந்தவொரு சாதனத்தையும் அதற்கு என தனியாக எந்தவொரு மென்பொருளையும் நிறுவிடாமலேயே அதனை இயக்கிடும் திறன்மிக்கது இந்த இயக்கமுறைமை கட்டுகளுடன் நமக்கு தேவையான அனைத்து வகையான பயன்பாட்டு மென்பொருட்களும் நமக்கு உதவ தயாராக இருக்கினறன வாடிக்கையாளர் விரும்பிடும் வகையில் மாறுதல்கள் செய்துகொள்ளும் நெகிழ்வு தன்மை கொண்டதாக உள்ளன அதனால் வாருங்கள் விண்டோ எக்ஸிபியிலிருந்த லினக்ஸ் இயக்கமுறைக்கு மாறி நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்துகொள்வோம்

8.2

8.2

திறமூல மென்பொருளில் வாழ்க்கை பயன்பாட்டு அறிவியல்

7.1

 இன்றைய நம்முடைய வாழ்வு அறிவியல் கண்டுபிடிப்புகளின் அற்புத கொடையாகும் அவ்வாறான அறிவியலின் அடிப்படைகளை அனைவரும் அறிந்துகொள்வது மிகஅத்தியாவசியதேவையாகும் அதனால் ஒரு சாதாரண மனிதன் கூட அறிவியலை பற்றியும் அதனுடைய அடிப்படைகளை பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் நிலையில் அதற்காக முதலில் http://usefulscience.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க அங்கு இயல்புநிலையில் New என்றும், Useful, Creativity, Education, Fitness, Happiness, Health, Nutrition, Parenting, Persuasion, Productivity, Sleep என பல்வேறு வகைகளில் நம்மை தெரிவுசெய்திடுமாறு கோரி நிற்பவைகளில் நாம் விரும்பிடும் வகையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்ரிடும் இந்த அறிவியல் பக்கத்தை நம்முடைய Facebook, Twitteஆகிய சமுதாய இணைய பக்கத்தின் வாயிலாககூட அனுகமுடியும் அடுத்து தோன்றிடும் திரையில் நம்முடைய வாழ்க்கையில் பயன்படும் பல்வேறுவகையான தகவல்கள் நாம் அறிந்து கொள்வதற்காக கிடைக்கின்றன அவற்றை படித்து பயன்பெறுக7

விண்டோவிலும் செயல்படும் பயன்பாட்டு மென்பொருட்களை லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படுத்திடமுடியும்

6.1

 லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படும் ஏராளமான இலவச திறமூலமென்பொருட்களில் ஒருசில விண்டோவிலும் செயல்படும் திறன் மிக்கவையாக உள்ளன என இதுவரை கேள்வியுற்றிருக்கின்றோம் தற்போது விண்டோவில் பயன்படுத்தபடும் பயன்பாட்டு மென்பொருட்களை லினக்ஸிலும் செயல்படுமாறு அமைக்கமுடியும் என்பதே தற்போதைய புதிய செய்தியாகும். மிகமுக்கியமாக இவ்வாறு செயல்படுத்திட Wine எனும் கருவியை கொண்டு, விண்டோவை அடிப்படையாக செயல்படும் பயன்பாடுகளை லினக்ஸிலும் செயல்படுமாறு போலச்செய்தல் எனும் கருத்தமைவிற்கு ஏற்ப செயல்பட செய்யலாம் அதற்கடுத்ததாக PlayOnLinux என்பது Wine, இற்கு முன்புற பயனாளராக செயல்படசெய்கின்றது   லினக்ஸ் இயக்கமுறைமை திரையில் VMWare அல்லதுr VirtualBox என்ற மெய்நிகர் பெட்டியாக செயல்படச்செய்து அதில் விண்டோ இயக்கமுறையில் செயல்படும் பயன்பாடுகளை செயல் படசெய்யலாம்

இந்த செயலிற்காக முதலில் நம்முடைய கணினியில் Software Center எனும் பகுதியை திரையில் விரியச்செய்கஅதில்   நம்மால் இதற்கான கருவியை கண்டு பிடிக்கமுடியவில்லையெனில் தேடிடும் பெட்டியில் Playonlinux என தட்டச்சு செய்து தேடிபிடித்திடுக உடன்உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை கோரும் அதனை உள்ளீடுசெய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் இந்த பயன்பாடு நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுவிடும் பிறகு முதன்முதல் இதனை பயன்படுத்துவதாக இருந்தால் உடன் ஒரு வழிகாட்டி திரையில் தோன்றி நம்மை இந்த மென்பொருளை நிறுவுவதற்காக வழிகாட்டிடும் அதனால் அந்த திரையில் Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் the Wine parameters அடிப்படையில் virtual drive ஐ கட்டமைவு செய்துவிடும். அதனோடு இதனை நிறுவதற்காக தயாராக இருக்கும் உடன் Install எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் திரைகளில் Next , Next என்றவாறு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி இந்த நிறுவுகை செயலை முடிவிற்குக கொண்டுவருக6.1

இசையை உருவாக்கி இசையமைத்து மகிழஉதவும் திறமூலமென்பொருள்

5.1

இசையை தானாகவே உருவாக்கி ஒருங்கிணைத்து இசைக்கருவிகள் இல்லாமேலேயே இசைத்து அதற்கேற்ப நம்மை அசைந்தாட செய்யவல்ல திறமூல மென்பொருள் இப்போது கிடைக்கின்றது

பொதுவாக இசைக்கு மயங்காதவர் இந்தஉலகில் யாருமேஇல்லை ஏன் எந்தவொரு உயிரிணங்களும் இல்லை என்பதே உண்மையான நிலையாகும் அவ்வாறானதொரு சிறந்த இசையை உருவாக்குவது என்பது இசைவல்லுநரிடம் சென்று முறைப்படி அதற்கான இலக்கணம், தாளம் ,பல்லவி போன்ற அனைத்து அடிப்படைகளும் ஐயம்திரிபற தெரிந்துகொண்டு அதன்பின்னர் மட்டுமே நம்மால் ஒரு இசையை அல்லது பின்னனி இசையை உருவாக்கமுடியும் என எந்தவொரு கட்டுபாடு எதுவுமில்லாமல் கணினியில் இதற்கான மென்பொருளை கொண்டு சிறந்த இசைமேதைபோன்றே நாமும் எந்தவொரு பாடலிற்கும் இசையமைக்கமுடியும்.இதற்காக அதிக கட்டணம் செலுத்தவேண்டுமா என்ற ஐயப்பாடு எதுவும் தேவையில்லை திறமூல இலவச மென்பொருளாக இது http://www.musanim.com/ என்ற இணைய தளத்தில் கிடைக்கின்றது தேவையெனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

மேககணினி சேவையாளர் பகுதியில் கோப்புகளை சேமிப்பது சிக்கலான செயலா ?

4.1

இன்று நம்மிடம் ஏற்கனவே Hotmail இல் கணக்கு ஒன்று இருந்தால் நமக்காக மேககணினி பகுதியில் 15 ஜிபி காலி இடம் தயாராக உள்ளது எனும் செய்தியை மனதில் கொள்க. இதற்காக Outlook.com எனும் பகுதியில் Hotmail இன் பயனாளர் பெயரையும் கடவுச்சொற்களையும் பயன்படுத்தி உள்நுழைவுசெய்து அங்கு மேல்பகுதியில் உள்ள கீழிறங்கு பட்டியலை விரியசெய்து அதில் OneDriveஎன்பதை திறந்துகொண்டு அதன்வாயிலாக Cloud Storage ஐ தொடர்புகொண்டு நம்முடைய கோப்புகளை பதிவேற்றம் செய்தல் ,பகிர்ந்து கொள்ளசெய்தல் ஆகிய செயல்களை செய்துகொள்ளலாம் விண்டோ8 இயக்கமுறைமையாக நம்முடைய கணினிஇருந்தால் இந்த OneDriveஎன்பது ஏற்கனவே நிறுவபட்டேகிடைக்கும் என்பதை மனதில் கொள்க விஸ்டா விண்டோ7 மேக் ஆகிய இயக்கமுறைமைகள் எனில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் https://onedrive.live.com/about/en-us/download/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று இந்த OneDrive எனும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிகொண்டு அதன்பின் மேலேகூறியவாறு பயன்படுத்தி கொள்க.

சிறந்த பயனுள்ள ஐந்து ஆண்டராய்டில் செயல்படும்பயன்பாடுகள்

 3.1 Evernote எனும் பயன்பாடானது நம்முடைய சிறந்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்து குறிப்பெழுத உதவுகின்றது மேலும் இது அனைத்து ஆண்ட்ராய்டு சாதணங்களிலும் கணினிகளிலும் ஒத்திசைவு தன்மையுடன் செயல்படும் திறன்கொண்டதாக உள்ளது. அதுமட்டுமின்றி பயனாளரின் உற்ற நன்பனாகவும் செயல்படுகின்றது நம்முடைய கைகளால் எழுதப்படும் குறிப்புகளையும் இதில் சேர்த்து கொள்ளும் திறன்மிக்கது

3.1

3.1

3.2Wunderlis இது நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல்செய்வதற்கான பட்டியல் தயார்செய்திடவும் நம்முடைய பயனத்திட்டங்களை தயார்செய்திடவும்   உதவுகின்றது இது அனைத்து வகையான சாதணங்களிலும் செயல்படும் திறன்மிக்கதாகவும் பயன்படுத்துவதிலும் வடிவமைப்பதிலும் எளிமையானதாகவும் விளங்குகின்றது.

3.2

3.2

3.3 Google Calendar நம்முடைய பணியை திட்டமிட்டு எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பணியை எவ்வப்போது செய்யவேண்டும் என மிகத்திறமையுடன் பட்டியலிடஇது பயன்படுகின்றது

3.3

3.3

3.4 Google Keep இதவும் குறிப்பெழுத உதவும் மற்றொரு சிறந்த பயன்பாடாக விளங்குகின்றது புதிய பயனாளர் ஒருவர் மிகச்சுலபமாக இதில் இடைமுகம் செய்யவும் இதனை பயன்படுத்தவும் எளிமையானதாக உள்ளது இதில் நம்முடைய குரலொலிமூலம்கூட குறிப்பெழுதும் திறன்மிக்கது

3.4

3.4

3.5 Todoist இதுஒரு செயல்திட்ட நிருவாகியாக செயல்படுகின்றது எந்தெந்த நேரத்தில் என்னென்ன செயல் செய்யவேண்டும் என பட்டியலிடும் திறன்கொண்டது பயன்படுத்த எளிதானது

3.5

3.5

விண்டோ சேவையாளரில் வேர்டு பிரஸ்ஸின் அடிப்படையில் உருவாக்கிய இணையதள பக்கத்தை செயற்பட செய்தல்

இன்று உலகமுழுவதும் வேர்டு பிரஸ் எனும் திறமூல உள்ளடக்க மேலாண்மை எனும் பயன்பாட்டினை கொண்டு இலட்சகணக்கான இணைய பக்கங்களும் வலைபூக்களும் உருவாக்கபட்டு செயல்படுத்தபட்டு வருகின்றன ஏனெனில் இதில்மட்டுமே அவரவர் விரும்பும் கூடுதலான வசதிகளையும் வாய்ப்புகளையும் தேவைக்கேற்ப மட்டும் இதனுடன் ஒட்டி பயன்படுத்தி கொள்ளமுடியும் என இந்த மென்பொருள் அனுமதிப்பதால் பல்வேறு சமூக வலைதளங்கள் முதல் வியாபார இணைய தளங்கள் வரை தத்தமது தேவைக்காக இந்த வேர்டு பிரஸ்ஸையே பயன்படுத்தி கொள்கின்றன. இதனை நேரடியாக http://www.wordpress.com/ என்ற இணையதளத்தன் வாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது http://www.wordpress.org/ என்ற தளத்திலிருந்து இந்த பயன்பாட்டு மென்பொருளின் கோப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் விண்டோ இயக்கமுறைமையுடனிருக்கும் நம்முடைய கணினியில் இதனை செயற்படுத்திட இந்த WordPress என்பதுடன் Microsoft Web Platform என்பதை சேர்த்து நிறுவுகை செய்திடுவதற்கு முன்பு WordPress நிறுவுவதற்கான முந்தைய அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதற்காக http://wordpress.org/about/requirements என்ற தளத்திலிருப்பதையும் IIS என்பதன் தேவைய நிறைவுசெய்வதற்காக http://msdn.microsoft.com/en-us/library/cc268240.aspx என்ற தளத்தில் இருப்பதையுதும் உறுதி செய்து கொள்க இந்நிலையில் Microsoft wep matrix ,Microsoft wep platform ஆகிய இரு கருவிகளும் வேர்டுபிரஸ்ஸை தானியங்கியாக நிறுவுவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை மனதில் கொள்க. மைக்ரோ சாப்ட்டின் அடிப்படையிலான பயன்பாடு மட்டுமல்லாது திறமூல பயன்பாடுகளையும் தயார்நிலை மாதிரிபடிமமாக இணைத்து செயற்படுத்திகொள்ள இந்த இரு கருவிகளும் பயன்படுகின்றன மேலும் விண்டோவின் அடிப்படையில் செயல்படும் இயக்கமுறைமைகளில் வேர்டுபிரஸ்ஸை வெற்றிகரமாக நிறுவுகை செய்திடவும் இந்த கருவிகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன. இந்த கருவிகள் Internet Information Service(IIS) ,SQL Server Express,.NET Framework ,Visual Web Developer ஆகிய சமீபத்திய கூடுதலான துனை உறுப்புகளுடனேயே கிடைக்கின்றன.

2.1Microsoft wep matrix என்ற கருவியை பயன்படுத்தி இணைய பக்கத்தினை உருவாக்குதல்

முதலில் Microsoft web matrix என்பதை http://microsoft.com/web/gallery/install.aspx?aapid=webmatrix என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடுக உடன் தொடர்புடைய Internet Information Service(IIS) ,SQL Server Express,.NET Framework ,Visual Web Developer ஆகிய சமீபத்திய கூடுதலான துனை உறுப்புகளையும் நிறுவுகை செய்துகொள்ளும்

பிறகு Microsoft web matrix என்பதை செயற்படுத்திடுக உடன் தோன்றிடும் திரையில் New==>App.Gallery==> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது திரையில் உள்ள site from web gallery என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து wordpress என்பதை நிறுவுகை செய்திடுவதற்காக தெரிவுசெய்து கொள்க

பின்னர் இந்த செயலானது MySQL ,PHPஆகியகட்டுகளையும் தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்ளும்

தரவுகளை நிருவகித்திட MYSQL Database என்பது மிகஅடிப்படைய தேவையாகும் அதனால் MYSQL Database என்பதை பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க.

இவ்வாறு நிறுவுகை செய்திடும்போது வேர்டுபிரஸ்ஸில் தரவுகளை அனுகிடும் போது அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்திடுக

அதன்பின்னர் Webmatrix Site workspace ஐ திறந்து நம்முடைய wordpress site ஐ நிறுவுகை செய்திடவேண்டும் அதற்காக இதிலுள்ள runஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உருவாக்கும் நம்முடைய வேர்டு பிரஸ்ஸினுடைய தளத்தின் இணைய முகவரியை (URL) அல்லது நிலையான இணைய பக்க இணைப்பை வழங்கிடும். இங்கு கோப்பு பணிப்பகுதியில் நம்முடைய தளத்தின் PHP பக்கத்தினை அனுகிடமுடியும். நம்முடைய இந்த இணைய பக்கத்தினை நாம் விரும்பிய வாறு மாறுதல் செய்து கொண்டு மீண்டும் Run again என்ற பொத்தானை இதே webmatrix என்ற திரையில் தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய இணைய பக்கம் நம்முடைய கணினியின் இயல்புநிலை இணைய உலாவியின் மூலம் நிறுவுகை செய்திடும் பணியை செயற்படுத்தி முடிவிற்கொண்டுவரும். அதன்பின்னர் ருதியாக நம்மால் உருவாக்கபட்ட நம்முடைய இணைய பக்கத்திற்கு உள்நுழைவு செய்திடுக. உடன் வேர்டுபிரஸ்ஸின் நம்பகத் தன்மையுடனான முகப்பு பக்கத்திரை தோன்றிடும் மேலும் மிகவிவரமாக படிப்படியான நிறுவுகை செயலை அறிந்து கொள்ள http://www.microsoft.com/wep/post/your-first-website-using webmatrix/ என்ற தளத்திற்கு செல்க.

2.2Microsoft wep platform என்ற கருவியை பயன்படுத்தி இணைய பக்கத்தினை உருவாக்குதல்

முதலில் http://ww.microsoft.com/web/download/platform.aspx/ என்ற தளத்திற்கு சென்று ,Microsoft wep platform Installer(WebPI) என்பதை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க

பின்னர் இந்த WebPI ஐயின் திரையில் Application என்பதன்கீழ் குழுவான திறமூல பயன்பாடுகளை நிறுவுகை செய்துகொள்ளமுடியும் அதற்காக WordPress என்பதை நம்முடைய முறைமையில் சேர்த்துகொள்க.

அதன்பின்னர் இந்த WebPI ஐஆனது WordPress என்பதுடன் MYSQL, PHP ஆகியவற்றின் கட்டுகளையும் பதிவிறக்கம் நிறுவுகைசெய்துகொள்ளும். முந்தைய படிமுறைகளில் கூறியதைபோன்று தரவுகளை கையாளுவதற்காக new database என்பதை வேர்டு பிரஸ்ஸில் பயன்படுத்தி கொள்வதற்காக இதனை ஒரு உள்ளடக்கமாக தேக்கிவைத்துகொள்ளும்.

பின்னர் நம்முடைய கணினியில் உள்ள Internet Explorerஎன்ற பயன்பாட்டின் திரையை தோன்றசெய்க அதில்நம்முடைய இணையபக்கத்தின் முகவரியாக http://localhost/<skfcma.com=> என உள்ளீடுசெய்து திறந்து கொள்க இந்த திரையில் வேர்டு பிரஸ்ஸிற்கு தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொள்க. இதன்பின்னர் வேர்டு பிரஸ்ஸின் வாயிலாக உருவாக்கபட்ட நம்முடைய இணைய பக்கத்தின் முதன்மை பக்கத்திற்கு உள்நுழைவு செய்து சென்றபின் தேவையான வாறு நாம் விரும்பிடும் வகையில் மாறுதல்களை செய்துகொள்க

மேலும் விவரம் தேவையெனில் http://codes.wordpress.org/Admininatration_Screens/ என்ற தளத்திற்கு செல்க மேலும் மிகவிவரமாக படிப்படியான நிறுவுகை செயலை அறிந்து கொள்ள http://codex.wordpress.org/Installing_on_Microsoft_IIS/ என்ற தளத்திற்கு செல்க

விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் கணினியில் வேர்டு பிரஸ்ஸை கொண்டு உருவாக்கபடும் இணைய பக்கத்திற்கு தேவையான படங்களையும் ஒலிஒளிப்படங்களையும் எவ்வாறு இணைத்து அழகுபடுத்தி மெருகூட்டி கொள்வது என அறிந்துகொள்ள http://microsoft.com/en-in/download/details.aspx?id=8621/ என்ற தளத்திற்கு செல்க ஒரு இணைய தளத்தினை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த செய்திகளை அறிந்து கொள்ள http://wordpress.com/documentation/best-practice/ என்ற தளத்திற்கு செல்க

Previous Older Entries