இணையம் எவ்வாறு செயல்படுகின்றது

உலகின் ஏதேனுமொரு மூலையில் இருந்து கொண்டு ஒரு இணையபக்கத்திற்கு செல்லும்போதும்,நம்முடைய நண்பர்களுக்கு  மின்னஞ்சல் அனுப்பிடும்போதும்  அல்லது இணைய அரட்டை செய்திடும்போதும் இணையம் என்பது இருப்பதை உணருகின்றோம் ஆயினும்இது எவ்வாறு செயல்படுகின்றது என இப்போது அறிந்துகொள்வோம்

72.2.1

   படத்திலுள்ள அம்புக்குறிகள் தகவல் எவ்வாறு ஒரு கணினியிலிருந்து பயனித்து மற்றொரு கணினியை அடைகின்றது என காண்பிக்கின்றது

அதாவது எந்தவொரு தகவலும் ஒரு கணினியிலிருந்து இணைய இணைப்பு அளி்த்திடும் மோடத்தின் வழியாக பயனித்து உள்ளூர் வழிசெலுத்திக்கு சென்றுஅங்கிருந்து மண்டலவழிசெலுத்திக்கும் பின்னர் பொது வலைபின்னலுக்கும்(TCP/IP)  சென்றடைகின்றது

அதன்பின்னர் அப்பொது வலைபின்னலில்(TCP/IP ) இருந்து மண்டலவழிசெலுத்திக்கும் பின்  உள்ளூர் வழிசெலுத்திக்கும் பின் பெறுபவரின் மோடத்தின்வாயிலாக பெறுபவரின் கணினிக்கு சென்றடைகின்றது

இந்த பொது வலைபின்னலில்(TCP/IP) இணைந்த ஒவ்வொரு கணினிக்கும்  ஒரேமாதிரியான முறையானதொரு   IP முகவரி வழங்கபட்டிருக்கும்

நாம் குறிப்பிடும் மிகச்சரியான ஐபிமுகவரியை மேலே குறிப்பிட்டுள்ள வழியாக எந்தவொரு தகவலும் பயனித்து மிகச்சரியான முகவரியின் கணினியை சென்றடைகின்றது

உதாரணமாக tracesk http://www.google.com  எனில்  ஒவ்வொரு தேடல் படிமுறையையும் நம்முடைய #1 என்ற கணினியில் ஆரம்பித்து   நாம் வழங்கும் மற்றொரு கணினியின் சரியான ஐபிமுகவரியை  மேலே குறிப்பிட்டவாரு பல்வேறு இணைய இணைப்பு வழங்குபவர்களின் சேவைக்கேற்ப பல்லடுக்கு உள்ளூர் மற்றும் மண்டல வழிசெலுத்தி வழியாக பயனித்து மிகச்சரியான இடத்திலுள்ள  கணினியை சென்றடைகின்றது

தொடுதிரை வசதி

தற்போதெல்லாம் விசைப்பலகை, சுட்டிஆகிய எதுவுமே இல்லாமால்  கணினி, மடிக்கணினி , செல்லிடத்து பேசி ஆகியவற்றை தொடுதிரை என்ற வசதிமூலம் இயக்கி பயன்படுத்தமுடியும் என்ற நிலையுள்ளது  இந்த தொடுதிரை வசதியானது Resistive , Capacitive ஆகிய இரண்டு வழிகளில் செயல்படுகின்றது

72.1.1

 Resistiveதொடுதிரை வசதி

இந்த முதல் வகையில்  மின்விசையை கடத்தும் பொருட்கள் இரண்டடுக்காக இடையில்காலியான இடம் விடப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும் நம்முடைய விரலால் அல்லது ஏதேனுமொரு பொருளால் இந்த முதல் அடுக்கினை தொட்டவுடன் அது இரண்டாவது அடுக்கு மின்விசையை கடத்தும் பொருளை தொட்டு மின்சார சுற்று முழுமை பெறுகின்றது  உடன் தொடுதிரையானது எத்தனையாவது நெடுவரிசையின் எத்தனையாவது கிடைவரிசை பெட்டி தொடப்பட்டது என்ற தகவலை கணினிக்கு அளிக்கும் உடன் தொடர்புடைய கட்டளை செயற்படுத்தபடும்

72.1.2

 இந்த  Resistiveஆனது Positives of Resistive , Negatives to Resistive என மேலும் இருவகைபடும்  இந்த Positives of Resistive என்ற முதல்வகையானது மிகவிலை மலிவானது gloves, stylus அல்லது pointing ஆகிய சாதனங்களை பயன்படுத்தி தொடுவதன்மூலம் இதனை செயல்படுத்தலாம்

இந்த Negatives to Resistiveஎன்ற இரண்டாவது வகையானது  ஒருசமயத்தில் ஒருவிரலை மட்டும் பயன்படுத்தி ஒரேயொரு புள்ளியை தொடுவதை மட்டுமே உணர்ந்திடுமாறு அமைந்துள்ளது மேலும் இது மென்மையானதன்று இதிலிருந்த  பதில்செயல் எதுவும்  உடன்எதிர்பார்க்கமுடியாது   மற்ற தொடுதிரைபோன்று நீண்டநாட்கள் இதுபயன்படும் என உறுதிகூறமுடியாது

Capacitive தொடுதிரை வசதி

இந்தஇரண்டாவது வகையில் திரையில் நான்குமுனையிலும் மிகச்சிறியஅளவில் மின்னோட்டம் இருந்துகொண்டிருக்கும் விரல் அல்லது வேறு சுட்டும் பொருளால் திரையை தொட்டவுடன்  மின்சுற்று தடைபட்டு மின்னோட்ட அளவு குறிப்பிட்ட புள்ளியில் வீழ்ச்சியடைகின்றது  உடன் sensors register ஆனது இதனை உணர்ந்து கணினிக்கு முன்புகூறியவாறு தகவல் அளிக்கின்றது

 72.1.3

 இந்த  Capacitiveஆனது Positives of Capacitive , Negatives of Capacitive என மேலும் இருவகைபடும்

Positives of Capacitive  என்றமுதலாவதுவகையில்இயற்கையான தொடுதலுக்கே மிகஅதிக பதில்செயல் கிடைக்கின்றது மேலும் இதுஒன்றுக்குமேற்பட்ட தொடுபுள்ளிகளை உணர்ந்திடுமாறு அமைக்கபட்டுள்ளது அதிக திறனுடைய பிரதிபலிக்கும தன்மை இதில் கிடைக்கின்றது

Negatives of Capacitive என்ற இரண்டாவது ஆனது சிறப்புதன்மையுள்ள உறையை அணிந்தவிரல் அல்லது சுட்டும் பொருள்மூலம் இந்த திரையை தொட்டால் இது கண்டுகொள்ளாது இது அதிக செலவு பிடிக்க கூடியாதாக உள்ளது இவைகளுள் நம்முடைய தேவைக்கேற்றதை நாம் பயன்படுத்தி கொள்ளமுடியும்

 

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி- 48 உதவிகுறிப்புகள் உருவாக்குதல்-தொடர்ச்சி

திட்ட கோப்பிற்குள் தலைப்பை சேர்த்தல்

புதிய திட்ட கோப்பு ஒன்றினைஉருவாக்கினால் இது நடப்பு கோப்பில் தானாகவே ஏற்றப்படும்.  பிறகு கூடுதலான HTML கோப்பை உருவாக்கிவிடும் பின்னர் இதனை எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய திட்டபணியில் சேர்க்க முடியும்,

ஒரு உதவி கோப்பில் குறைந்த பட்சம் ஒரு தலைப்பு கோப்பாவது திட்ட கோப்பில் திரட்டுதல்(compile) செய்து இணைக்கவேண்டும்.  HTML உதவி திட்டபணியின்  முக்கிய திரையில் உள்ள Add அல்லது Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தலைப்புக்கோப்பை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.

1.Topic filesஎன்ற உரையாடல் பெட்டியில் தலைப்பு பட்டியலின் கீழ் பிரதிபலிக்கும் கோப்புகளை தெரிவு செய்து Add என்ற பொத்தானை  சொடுக்குக. பின்னர் Ok என்ற பொத்தானை  சொடுக்குக.

2.அதன்பின்னர் தோன்றும் திரையில் open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் நாம் சேர்த்த  தலைப்பு கோப்பு திட்டகோப்பில் சேர்ந்திருப்பதை காணலாம்

இந்த Topic Files என்ர உரையாடல் பெட்டியில்(படம்-1) பிரதிபலிக்கும் தலைப்பு கோப்புகளில் நீக்கவேண்டிய கோப்பினை தெரிவு செய்து Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்யலாம்.

படம்-1

திட்ட கோப்பினை சேமித்தல் மற்றும் திரட்டுதல்(compile)  செய்தல்

நாம் உருவாக்கிய உதவி அமைப்பானது பிழை மற்றும் இணைப்பு முறிவு ஏதுமில்லாமல் சரியாக இயங்குகிறதா என பரிசோதிக்க விரும்புவோம்

இதற்கு முதலில் இந்த திட்ட கோப்பை  (.chm) என்ற பின்னொட்டுடன் திரட்டுதல்(compile)  செய்யவேண்டும் இவ்வாறு திரட்டுதல்(compile)  செய்யும் போது தலைப்பு கோப்புகள்,படக்கோப்புகள்,உள்ளடக்க கோப்புகள்,உதவி கோப்பில். Cltm என்ற பின்னொட்டுடன்உள்ளிறுத்தப்படும்

இந்த திரட்டுதல்(compile)  கோப்பினை நாம் விரும்புகின்ற வன்தட்டில், குறுவட்டுகளில், நெகிழ்வட்டுகளில்,சேவையாளர் தொகுதியில், இணையத்தில் என எங்குவேண்டுமானாலும் சேமித்து கொள்ள முடியும்.

HTML உதவி பணிமனையானது (படம்-2)கோப்புகளை திரட்டுதல்(compile)  செய்யும்போது  துனைகோப்புகளை எவ்வாறு ஒற்றையாக உருவாக்குவது என முடிவுசெய்கிறது.  இந்த சமயத்தில் பிழை ஏதேனும் ஏற்பட்டால் உடனே வெளிப்படுத்திவிடுகிறது.

படம்-2

HTML உதவி பணிமனையில் பின்வரும் செயல்கள்செயல்படுத்தப்படுகிறது.

1,உள்ளடக்க மற்றும் பட்டியல் கோப்புகளில் உள்ள விடுபட்ட தலைப்புகளின்        பிழைகளை அறிக்கையாக சுட்டிகாட்டுகிறது.

2,அதே போன்று இவைகளுக்கு இடையேயுள்ள இணைப்பு விடுபட்டுவிட்டால் அதனையும் அறிக்கையாக காண்பிக்கிறது.

3,தேவையற்ற காலிஇடம் மற்றும் கருத்துகளை நீக்கி விடுகிறது.

திட்ட பணிபக்கத்தில் save all files and compile என்ற  பொத்தானை தெரிவுசெய்து தெரிவு செய்துசொடுக்குக உடன் என்ன நிகழ்ந்து முடிந்தது  என்ற செய்தியானது  வலதுபுற பலகத்தில் (pane) அறிக்கையாக காட்சியளிக்கும்.

                 உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்

அனைத்து தலைப்பு கோப்புகளையும் உருவாக்கிய பிறகு இந்த தலைப்பு பெயர்களை உள்ளடக்கிய ஒரு அட்டவனையை உருவாக்க விரும்புவோம்.  இந்த தலைப்புகள் சேர்ந்த உள்ளடக்க அட்டவணையானது மிகச்சுருக்கமாகவும்  குழப்பமேதுமில்லாது தெளிவாகவும் உடனடியாக பயனாளர்  அறிந்துகொள்ளும் படியாகவும் உருவாக்கவேண்டும்.

            புதிய உதவி உள்ளடக்க கோப்பை உருவாக்குதல்

உள்ளடக்க கோப்பானது ,hhc என்றபின்னொட்டுடன் உள்ள ஆஸ்கி கோப்புகளாகும்.  இதில் Heading,Topics,Commands, ஆகிய மூன்று உறுப்புகள் உள்ளன.

HTML உதவி பணிமனையை பயன்படுத்தி பின்வரும்  படிமுறைகளில் புதிய உள்ளடக்க கோப்பினை உருவாக்க முடியும்.

1. முதலில் இதில் உள்ள Change Project Option என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2. உடன் திரையில் (படம்-3)தோன்றும் option என்ற உரையாடல் பெட்டியில் உள்ள files என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

படம்-3

3. பின்னர் தோன்றிடும் திரையில் புதிய உள்ளடக்க கோப்பிற்கு எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஒரு பெயரை உள்ளீடு செய்க.

Automatically create context file (.hhc) where compling என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவு  செய்து விடுக. பின்னர் Maximum need level என்ற பகுதியில் நாம் விரும்பும் அளவு (3என்பது போன்று ) தெரிவு செய்க. இங்கு மூன்று என தெரிவு செய்தால் <H1>,<H2>,<H3>, என மூன்று இணைப்பு(tag)களுடன் தலைப்புகள் உருவாகும்.

பிறகுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி திட்டப்பணியை திரட்டுதல்(compile)  செய்து சேமித்துவிடுக.  உடன் திரையில் இதன் உள்ளடக்கங்கள் பிரதிபலிக்கும்.

இது ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தை போன்று இருக்கும் குறிப்பிட்ட தலைப்பை பிடித்து சொடுக்கினால் அதனுள் இருக்கும் துனைத் தலைப்புகள் பிரதிபலிக்கும்.இந்த துனைத்தலைப்பை பிடித்து சொடுக்கினால் தொடர்புடைய பகுதிக்கு செல்லும்,

               உள்ளடக்க உறுப்புகளை மாறுதல் செய்தல்

புதிய தலைப்புகளை உள்ளிணைக்க அதற்கான இடத்தில் இடம்சுட்டியை நிறுத்தி கொள்க.

1,புதிய தலைப்பை சேர்ப்பதற்காக Insert a Heading என்ற என்ற பொத்தானை தெரிவு செய்க

2,உடன் Table of Contents Entry என்ற உரையாடல் பெட்டி திரையில்  (படம்-4) தோன்றும்.

படம்-4

3. Entry Title எனும் பகுதியில் புதிய தலைப்பை (New Heading) உள்ளீடு செய்க.

4. அதன்பின்னர் Add  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5. உடன் path or URL என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றும்.

6. இதன் file or URL பகுதியில் HTML கோப்பினை தெரிவு செய்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் கோப்பின் பெயர் Table of Contents Entry என்ற உரையாடல் பெட்டியில் தோன்றும்.

7. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தலைப்பு உருவாகி உள்ளினைந்து விடும்.

உதவி பட்டியலை உருவாக்குதல்

பொதுவாக பயனாளர் ஒருவர் ஏதேனும் ஒரு திறவுசொல்லை  வைத்து கொண்டு ஒவ்வொரு தலைப்பையும் தேடிப்பார்க்க விரும்புவார்.  அந்நிலையில் தலைப்பு திறவுசொல்லை உதவி அமைப்பில் பட்டியலாக அடுக்கிவைத்திருந்தால் மட்டுமே உடனடியாக அது எங்கிருக்கிறது என  தேடிப்பிடிக்க முடியும். முழு உரையையும் வைத்து தேடுவதைவிட திறவுச்சொல்லை வைத்து மிகவேகமாக தேடிப்பிடிக்க முடியும்.  ஆனால் தலைப்பு பட்டியில் இந்த திறவுச்சொல்லானது இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

திறவுச்சொற்களை பயன்படுத்தும் போது பின்வரும் செய்திகளை கருத்தில் கொள்ளுங்கள்.

1,தொடக்க நிலைபயனாளர்கள் தொழில் நுட்பமல்லாத சொற்களை பயன்படுத்துங்கள்.

2,நன்கு அனுபவ முதிர்ச்சியுடையவர்கள் மட்டும் தொழில் நுட்பமுள்ள சொற்களை திறவுச்சொல்லாக பயன்படுத்துங்கள்.

3,தொழில் நுட்ப சொற்களுக்கு இணையான பொதுவான சொற்களையே  பெரும்பாலும் பயன்படுத்துங்கள்.

4,எப்போதும் பொதுநிலையில்  பயன்படுத்தும் ஜனரஞ்சகமான சொற்களையே பயன்படுத்துக.

5,தலைப்புக்குள் இருக்கும்படியான குறிப்பிட்ட சொற்களையே பயன்படுத்துக.

6,தலைகீழ் வடிவமான சொற்களை அல்லது சொற்றொடரை பயன்படுத்துக.

பின்வரும் படிமுறையை பட்டியில் ஒரு திறவுச்சொல்லை சேர்ப்பதற்காக  பின்பற்றுக.

1. HTML உதவி பணிமனையின் சாளரத்தில் indexஎன்ற தாவிப்பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன் தோன்றும் Index என்ற பக்கத்தில் insert a keyword என்ற பொத்தானை தெரிவுசெய்து தெரிவு செய்க.  உடன் Index Entry என்ற உரையாடல் பெட்டி(படம்-5)தோன்றும்.

படம்-5

2. இதில் Key word எனும் பகுதியில் திறவுச்சொல்லை உள்ளீடுசெய்க.  அதன்பிறகு Add எனும் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் path or URL எனும் உரையாடல் பெட்டி(படம்-6)தோன்றும்.

படம்-6

3. அதில் HTML கோப்பு அல்லது திறவுச்சொல்லை உள்ளடங்கிய கோப்பை தெரிவு செய்க.  பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Index Entry உரையாடல் பெட்டியில்தெரிவு செய்யப்பட்ட கோப்பின் பெயர் பிரதிபலிக்கும்.

4. பிறகு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  புதிய திறவுச்சொல்லாக  சேமிக்கப்படும்.

5.பின் இந்த திட்டபணியை திரட்டுதல்(compile)  செய்து சேமிக்கவும், அதன் பின்னர் view Compiled file என்பதை தெரிவு செய்க.  உடன் தோன்றும் view compiled என்ற உரையாடல் பெட்டியில்view எனும் என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த உரையாடல் பெட்டிதிரையில் காட்சியளிக்கும்.

              முழு உரை தேடுதலை செயல்படுத்துதல்

முன் வரையறுக்கப்பட்ட திறவுச்சொற்களை கொண்டு தேடிப்பிடிக்கவே இந்த பட்டியல் திறவுச்சொல்  அனுமதிக்கிறது.  ஆனால் பயனாளர் ஒருவர் முன் வரையறுக்கப்படாத பட்டியலில் இல்லாத தலைப்புகளையே தேடிபிடித்து அறிய விரும்புவார்  அதனால் நாம்ஒரு முழு உரையை கொடுத்தாலும் தேடிப்பிடித்து நாம் விரும்பிய உதவி குறிப்புகளை நமக்கு வழங்குவதே ஒரு நல்ல உதவி அமைப்பகும்.

Search என்ற தாவித்திரையானது பயனாளர் ஒருவர்  எந்த எழுத்துகள், சொற்கள் அல்லது சொற்றொடர் கொடுத்தாலும் அதனை உடனே தேடிக்கண்டுபிடித்து வழங்கும் திறனுடன் இருக்கவேண்டும்.

பொதுவாக பயனாளர் ஒருவர் உதவி அமைப்பை இயக்கிவுடன் முதல் முதலில் Search என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவார் உடன் find search என்ற வழிகாட்டி (wizard) திரையில் தோன்றும்  இந்த வழிகாட்டியானது பயனாளருக்கு முழு உரையை அல்லது திறவுசொல்லை கணிப்பெறியில் எவ்வாறு அமைப்பது என உதவி புரியும்.

உதவி கோப்பில் முழு உரைகளின் வரிசைபடுத்தபட்ட பட்டியல் அனைத்தும் தனித்தன்மையுடையதாக இருக்கும்.

முழு உரைகளின் வரிசைபடுத்தபட்ட பட்டியலை உருவாக்கி பயனாளர் ஒருவர் பயன்படுத்தும் படி உருவாக்க முடியும்.  ஆனால் இது நினைவகத்தில் அதிகஅளவு இடத்தைபிடித்துக் கொள்ளும்.  அதனால் Help Project option என்ற உரையாடல் பெட்டியில் (படம்-7) compiles  என்ற தாவியின்கீழ் compile full text search information என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவு செய்யப்பட்டு முழு உரைக்கோப்பை உருவாக்க முடியும் உடன் இது திரட்டுதல்(compile)  செய்யப்பட்டு fts என்ற பின்னொட்டுடன் ஒரு கோப்பு உருவாகிவிடும்.

படம்–7

     திரட்டுதல்(compile)  செய்த உதவி கோப்பினை இயக்குதல்

HTML உதவி பணிமனையினுடைய சாளரத்தின் உள்ள கருவிபெட்டியில் கண்கண்ணாடி போன்று உள்ள view compiled file  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் view compiled என்ற உரையாடல் பெட்டிபடம்-8-ல் உள்ளவாறு தோன்றும்.  நாம் திரட்டுதல்(compile)  செய்த கோப்பினை browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் தேடிபிடித்து தெரிவு செய்து கொள்க பின்னர் view என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் உதவி அமைப்பில் பிரதிபலிக்க செய்யும் உள்ளடக்கத்தின் ஒவ்வொரு தலைப்பையும் பரிசோதித்து பார்க்கிறது உதவி அமைப்பின் முக்கிய கோப்பு உள்ள index என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேடிப்பிடிக்ககூடிய அனைத்து திறவுச்சொற்களும்  வரிசைபடுத்தபட்ட உள்ளீடுகளும் பட்டியலாக திரையில் தோன்றும்.

படம்-8

     பயன்பாட்டில் உதவி கோப்பினை ஒருங்கிணைத்தல்

இவ்வாறு உருவாக்கி திரட்டுதல்(compile)  செய்யப்பட்ட உதவி கோப்பினை அக்சஸ் பயன்பாடுகளில் ஒருங்கிணைக்க முடியும்

அக்சஸின் படிவ (form) நிலையில் உதவி பிரதிபலித்தல்

உதவி கோப்பில் தலைப்புகளுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடு அல்லது படிவத்திற்கு இணைப்பு ஏற்படுத்தும் செயலிற்கு உதவுவதே பொதுவான வழி முறையாகும்.  இதனை இரு நிலைகளில் செயல்படுத்த முடியும். முதலில் பயன்படுத்துவதற்கு உதவி கோப்பினை குறிப்பிட வேண்டும்.  பின்னர் உதவியின் வரிசைபடுத்தபட்ட ID பண்பியல்பை படிவத்திலும் கட்டுபாட்டிலும் அமைக்க வேண்டும்.

                     கட்டுப்பாட்டு நிலையில் உதவி பிரதிபலித்தல்

படிவத்தினுடைய உதவி தொடர்பு ID ஐ அமைத்தபிறகு இதற்கான கட்டுப்பாட்டை அமைக்க வேண்டும்.  தனித்தன்மையுடன் கூடிய தலைப்பினுடைய கட்டுபாட்டை இணைக்க விரும்பவில்லையெனில் 0 என அமைத்து விடுக.  இவ்வாறு இதனை 0 வாக அமைக்கும் போது பயனாளர் ஒருவர் F1 என்ற விசையை அழுத்தும்போது மட்டும் கட்டுபாடு  செயலுக்கு வரும் இல்லையேனில் தலைப்பு ID பொருத்தமாக இருக்குபோது மட்டுமே கட்டுபாடு செயலுக்கு வரும்.  பின்னர் உதவி தொடர்பு ID யின் பெயரையும் கட்டுபாட்டையும் அமைத்ததை உறுதி செய்து கொள்க.  சிலபயனாளர்கள் உரைபெட்டியை உதவிக்கு சொடுக்கி அழைப்பார்கள் வேறுசிலர் பெயரை மட்டும் சொடுக்கி உதவியை கோருவார்கள்.  எது எவ்வாறாயினும் உடன் உதவி இணைப்பு பிரதிபலிக்க வேண்டியது அவசியமாகும்.

Maping உதவி தொடர் IDக்கு உதவி உரையாடல் பெட்டிஅமைத்தல்

இவ்வாறு அமைத்த பிறகு ஒவ்வொரு ID க்கும் தொடர்புடைய உதவி தலைப்புடன் இணைப்பு (map) செய்ய விரும்புவோம்.  HTML உதவி பணிமனையானது இதற்காக தனியான கருவி ஒன்றை வழங்கி உள்ளது.  ஒவ்வொரு தலைப்புகிற்கும் தன்னிகரற்ற எண் ஒன்றை ஒதுக்கீடு செய்கிறது இந்த HTML உதவி பணிமனையில் உள்ள HTML உதவி ஏபிஐ ஆனது உதவி கோப்பிற்கான தகவலை வழங்குகிறது.  இந்த தகவலை பயன்பாட்டு உதவி சாளரத்தில் பிரதிபலிக்க செய்கிறது.

இதற்கு முன்பு முதலில் header என்ற கோப்பினை உருவாக்க வேண்டும்.  இது உதவி தொடர்பு IDயுடனும்.  ஏபிஐயுடனும் இணைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த Header என்ற கோப்பினை உருவாக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

1. நோட்பேடு போன்ற உரைப்பதிப்பான்  ஏதாவது ஒன்றை  தெரிவுசெய்து திறந்து கொள்க.

2. அதன்பிறகு பின்வரும் வடிவமைப்பின்படி ஒவ்வொரு symbolic IDயையும் உருவாக்குக

#define IDH_Symbolic ID 1000.

3.இந்த Symbolic IDயின் பெயரை நாம் விரும்பியவாறு புரிந்து கொள்ளும் வகையில் அமைத்து கொள்க.

4. இந்த கோப்பினை .h எனும் பின்னொட்டுடன் சேமிக்கவும்

இவ்வாறு header கோப்பை உருவாக்கியபிறகு HTML உதவி ஏபிஐ உருவாக்க வெண்டும்.

இதற்காக பின்வரும் படிமுறையை பின்பற்றுக.

1. HTML உதவி பணிமனையின் சாளரத்தில் உள்ள HTML உதவி ஏபிஐ information என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் HTML help API information எனும் உரையாடல் பெட்டி(படம்-9)தோன்றும்.

படம்-9

2. அதில் Map எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  விரியும் திரையில் Header file என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்  file என்ற உரையாடல் பெட்டிதோன்றும்

3. அதில் நாம் உருவாக்கிய Header fileன் பெயரை உள்ளீடு செய்க. அதன் பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  map page-ல் கோப்பின் பெயர் பிரதிபலிக்கும்.

4. HTML Help ApI Information என்ற உரையாடல் பெட்டியில்உள்ள Alias என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்த சொடுக்குக.  உடன் Alias page என்பது திரையில் தோன்றும்.

5. இதில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் Aliasஎன்ற  உரையாடல் பெட்டி(படம்-10) திரையில் தோன்றிடும்.

படம்-10

6. அதில் முதல் Symbolic ID யை தலைப்பு கோப்பில் உள்ளீடு செய்க.

7. use it to refer to this HTML file என்பதில் உள்ள அம்புக்குறியை பிடித்து தெரிவுசெய்க. பின்னர் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

8. இவ்வாறே ஒவ்வெரு symbolic ID பெயருக்கும் மேற்கண்ட படிமுறையை பின்பற்றுக.

9. அனைத்து Alias ஐயும் வரையறுத்து முடிவு பெற்ற பின்னா ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி HTML உதவி ஏபிஐ informationஎன்ற கோப்பினை முடிவிடுக.

10.  பின்னர் திரட்டுதல் செய்து (compile) இந்த திட்டப்பணியை பாதுகாத்திடுக.  இந்த ஏபிஐ ஆனது தலைப்பு கோப்பின் தகவலை திட்டப்பணியுடன் உள்ளிணைத்துகொள்ள அனுமதிக்கிறது.  Alias வரையறுத்தவுடன் symbolic ID யுடன் தனிப்பட்ட ID யை இணைக்கின்றது.

HTML Help API பரிசோதித்தல்

ஏபிஐ தகவலை வரையறுத்தபின் ஏபிஐ இணைப்பு சரியாக இருக்கின்றதா என பின்வரும் படிமுறையை பின்பற்றி பரிசோதிக்க வேண்டும்.

1. HTML உதவி பணிமனை சாளரத்தில் கட்டனை பட்டையில் உள்ள Test எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் HTML Help API  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் Test HTML Help API எனும்  உரையாடல் பெட்டிதிரையில் (படம்-11)தோன்றும்.

2. compiled file என்பதன் கீழ் உள்ள பெட்டியில் சரியான கோப்புதான் பிரிதிபலிக்கின்றதா என சரிபார்க்கவும் இல்லையெனில் Browse என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சரியான கோப்பினை நடப்பு திட்டபணியில் கொண்டு வருக.  பின்னர் command என்பதனருகில் இருக்கும் பெட்டியில் HH_HELP_CONTEXT என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் Window எனும் பகுதியில் main எனவும் map number எனும் பகுதியில் ID எண்ணையும் தெரிவு செய்க.

3. Test என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்து செடுக்குக.  உடன் உதவி viewer எனும் உரைக்கான உரையாடல் பெட்டிஉள்ளீடு செய்த தலைப்புடன் பிரதிபலிக்கும்.

படம்-11

இந்த சமயத்தில் பிரச்சினை ஏதேனும்  தோன்றினால் பின்வரும் சரிபார்ப்பு பட்டியலை பின்பற்றுக,

1,தலைப்பு கோப்பில் ID எண் சேர்ந்துள்ளதா.

2,HTML உதவி ஏபிஐஉரையாடல் பெட்டியில்சரியான தலைப்பு கோப்பு சேர்ந்துள்ளதா.

3,ஒவ்வொரு simbolic ID.யும் தலைப்பு கோப்பில் Alias உடன் பொருத்தமாக இருக்கிறதா.

4,Alias ஆனது பொருத்தமான HTML கோப்புடன் ஒத்திருக்கின்றதா

5,திட்ட கோப்பானது மீண்டும் திரட்டுதல்(compile)  செய்து சேமிக்கப்பட்டுள்ளதா.

அக்சஸில் உதவி கோப்பை பாரிசோதித்தல்

அக்சஸ் பயன்பாட்டுடன், உதவி அமைப்பின் இணைப்பு சரியாக உருவாக்கப்பட்டடவுடன். நேரடியாக உதவி அமைவை உங்களுடைய அக்சஸ் படிவத்தில் செயல்படுத்த முடியும்,  புதிய அக்சஸ் உதவி அமைவை அக்சஸ் படிவத்தில் கொண்டுவர  முதலில் படிவத்தை பிரதிபலிக்க செய்க பின்னர் F1 என்ற விசையை கட்டுக உடன் உதவித்தலைப்புகள் உதவிக் காட்சித் திரையில் காட்சியாக விரியும்.

உள்ளடக்க அட்டவணையை பிரதிபலிக்க செய்தல்

உள்ளடக்க அட்டவணை உருவாக்கியிருந்தாலும் அக்சஸ் படிவத்ததில் F1என்ற விசையை அழுத்தியவுடன் எம் எஸ் ஆஃபிஸின் உதவி சாளரம்தான் (படம்-12) உடனடியாக திரையில் பிரதிபலிக்கும்

படம்-12

குறிப்பிட்ட பெட்டியை திரையில் பிரதிபலிக்க செய்யாது மேலும் அதற்கான வழிகாட்டு சாளரமும் தோன்றாது, இதனை தவிர்ப்பதற்கு HTML உதவி ஏபிஐ அழைப்பதற்கான விபி குறிமுறையை பின்வருமாறு உருவாக்க வேண்டும்.  இது HTML உதவிக்கோப்பிற்கு ஏபிஐ க்கான அறிவிப்பை செய்கிறது.  பின்னர் உதவி உள்ளீட்டு செயலியின் HTML உதவி ஏபிஐ க்கு கட்டளையிடுகிறது.படிவ உதவி கோப்பின் மாறியில் திரட்டுதல்(compile)  உதவி தேக்கிவைக்கப் பட்டதை பயன்படுத்தி கொள்வதற்கு உதவி அமைப்பை வரையறுக்கவேண்டும்

HTML உதவி ஏபிஐ அழைக்க வேண்டும் அதற்கான குறிமுறை-48-1 பின்வருமாறு

Public Sub Show_Help (HelpFileName As String, MycontextID As Long)

Dim hwndHelp As Long

Select Case MycontextId

Case Is = 0

hwndHelp =  HtmlHelp(Application.hwndAccessApp, HelpFileName,_

HH_DISPLAY_Topic, MycontexId)

Case Else

hwndHelp = htmlHelp(Application.hwndAccessApp,HelpFileName,_

HH_HELP_CONTEXT,MycontextID)

End Select

EndSub

HELP என்ற பொத்தானை தெரிவுசெய்து அழுத்தினால் உதவி வர வேண்டும் அதற்காக HELP என்ற பொத்தானை தெரிவுசெய்து  இயக்குவதற்கான கட்டளைகள் படம்-13-ல் உள்ளவாறு

இவ்வாறு செய்த பிறகே உதவி என்ற பொத்தானை தெரிவுசெய்து அழுத்தினால் உடன் ஏபிஐ மூலம் உதவி அமைப்பு அதற்கான வழிகாட்டுதல்களுடன் உதவிகாட்சி திரையில் காண்பிக்கும்.

படம்-13

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -72-முப்பரிமான படங்களை கையாளுதல்-தொடர்ச்சி

முப்பரிமான உருவங்களை(3D bodies) சுழற்றியமைத்தல்

ஒரு இருபரிமான படத்தை சுழற்றியமைப்பதை போன்றே அதே கட்டளைகள், வழிமுறைகளை பின்பற்றி ஒரு முப்பரிமான உருவத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் சுட்டியை வைத்து சுட்டியின்பொத்தானை அழுத்திபிடித்து கொண்டு இந்த முப்பரிமான படத்தின் X,Y ஆகிய அச்சுகளை சுழற்றி அமைக்கமுடியும் .கூடுதலாக மூன்றாவது பரிமான சுழற்றுதலுக்கானZ என்ற அச்சினை சுழற்றுவதற்காக படம்-72-1-உள்ளவாறு தோன்றிடும் விளிம்பில் உள்ள புள்ளிகளில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை அழுத்திபிடித்து கொண்டுசுழற்றி அமைக்கமுடியும் அதன் மையத்தில் ஒருங்கிணையும்  புள்ளியை (intersection point)வைத்தே இம்மூன்று அச்சுகளின் இருப்பை நம்மால்அறிந்து கொள்ளமுடியும்

படம்-72-1

முப்பரிமானவடிவங்களை(3D Shapes)சுழற்றியமைத்தல்

முப்பரிமான வடிவங்களையும் முன்பு கூறியவாறே  சுழற்றிஅமைக்கமுடியும் மேலும் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Position and Size => Rotation =>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துதல் அல்லது F4என்ற செயலி விசையை அழுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதனை சுழற்றி அமைக்கமுடியும் அதுமட்டுமல்லாமல் இந்த முப்பரிமான வடிவங்களுக்கென தனியான கருவிபட்டியை (படம்-72-2) பயன்படுத்தியும் சுழற்றிஅமைக்கமுடியும்

படம்-72-2

முப்பரிமான உருவங்களுக்கான(3D bodiesமுப்பரிமான அமைப்பு(3D Settings)

இதனை அமைப்பதற்கென  3D Efects என்ற (படம்-72-3) உரையாடல் பெட்டிஉள்ளது  மேலே கட்டளை பட்டையிலுள்ள Customize Toolbar => Add => Category Options => 3D Efects =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக இதனை திரையில் பிரதிபலி்க்கசெய்யலாம்  மற்ற உரையாடல் பெட்டிபோன்று திரையில் இதனை நிலையாக இருக்குமாறு வைத்து தேவையான செயலை அதற்கான தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திகொள்ளமுடியும் மேலும் அதன்மேல்பகுதியிலிருக்கும்

  என்ற பொத்தானை செயல்படுத்துவதன்மூலம் இதனை முப்பரிமானசெயலில் இருக்குமாறும் அதே பொத்தானை பணிமுடிந்தபின் கண்டிப்பாக சொடுக்கி செயலற்றதாக(Deactive) செய்தபின் வெளியேறுமாறு பரிந்துரைக்கபடுகின்றது அதன் கீழ்பகுதியில்    உள்ள

          ஆகிய மூன்று பொத்தான்கள்  மிகமுக்கிய பங்குவகிக்கின்றன

இதனுடைய முதல் பொத்தான் ஒரு இருபரிமான படத்தை extrusion bodyஆகஉருமாற்றிடவும் இரண்டாவது பொத்தான்  சுழலும் உருவங்களாக (rotation body)உருமாற்றிடவும் மூன்றாவது பொத்தான்central projection , perspective projection   ஆகியவைகளுக்கிடையே மாறுவதற்கும் பயன் படுகின்றன முதலிரண்டு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குவதற்குபதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள Modify =>Convert  => To 3D / To 3D Rotation Object.=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அதே செயலை செய்யமுடியும்

3D Effects – Geometry

படம்-72-3

3D Effects உரையாடல் பெட்டியின் முதல்  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம்-72-3-ல் உள்ளவாறு இந்த  உரையாடல் பெட்டியின் தோற்றம் அமைந்திடும்

படம்-72-4

ஒரு சாதாரண இருபரிமான வட்டம் முப்பரிமான உருவமாக முந்தைய தொடரான ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -71 என்ற பகுதியில் பார்த்தவாறு உருவாக்கியபின் இந்த  3D Effects உரையாடல் பெட்டியின் Scaled depthஐ     பயன்படுத்தி 10% ,30% ,50% (truncated cone), 0%ஆகியஉருளை உருவமாக உருமாற்றியபின் (படம்-72-4) இதே கட்டளை பெட்டியின் மேலே வலதுபுறமூலையில் உள்ள Assign

என்ற       உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தி நாம் செய்த மாறுதலை சேமித்துகொள்க

மேலும் இந்த  3D Effects உரையாடல் பெட்டியின் rotation angles ஐ பயன்படுத்தி சுழலும்  கோணம் 360° க்கு குறைவாக  அமைத்துகொள்க  அதுமட்டுமின்றி இதிலுள்ள Horizontal , Verticalஆகியவற்றின் அளவுகள் படத்தின் துல்லியமாக அமைத்திட பயன்படுகின்றன இதன் அளவை அதிகமாக வைத்து அமைத்தால் முப்பரிமான படத்தை உருவாக்குவதற்காக கணினி அதிக நேரம் எடுத்துகொள்ளும்

இந்த  உரையாடல் பெட்டியின் Normalஎன்பதின் கீழேமூன்றாவதாக உள்ள  Double-Sided     என்ற      உருவபொத்தானை பயன்படுத்தி படம்-72-5-ல்உள்ளவாறு ஒரு அரைஉருளையை முழுஉருளையாக அமைத்திடமுடியும்

 படம்-72-5

இதே Normalஎன்பதின் கீழ்உள்ள உருவபொத்தான்களை பயன்படுத்தி ஒரு முப்பரிமான படத்திற்கு தேவையான  colors, textures , lighting ஆகியவற்றை நாம் விரும்பிவாறு மாற்றியமைக்கமுடியும்

3D Effects – Shading

ஒருமுப்பரிமான உருவத்திற்கு இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் lighting  ஐ பயன்படுத்தி Flat, Phong ,Gouraud ஆகிய மூன்று வழிமுறைகளில் மாற்றியமைத்து தேவையான நிழலுருவருமாறு உருவாக்குமுடியும் அதற்காக இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் மேலே இடதுபுறம் இரண்டாவதாக உள்ளShading என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-72-6 -ல் உள்ளவாறு இந்த உரையாடல் பெட்டி தோன்றிடும்

படம்-72-6

பிறகு இதிலுள்ள shadow என்றஉருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கியபின் surface angles  என்பதில் நாம் விரும்பும் கோணஅளவை அமைப்பதற்கேற்ப ஒரு கோளத்தின் நிழலுரு படம்72-7-ன் மேல்பகுதியில் உள்ளவாறு அமைகின்றது

 படம்-72-7

அவ்வாறே camera என்பதன் கீழுள்ள Distance ,Focal length ஆகியவற்றை வெவ்வேறுவகையில் camera settings அட்டவணை -72-1-ல் உள்ளவாறு அமைப்பதற்கேற்ப ஒரு கனசதுரத்தின் நிழலுருவானது    படம் 72-7-ன் கீழ்பகுதியிலுள்ளவாறு அமைகின்றது

camera settings அட்டவணை-72-1

a b c d
Distance 0.81 cm 3.81 cm 0.81 cm 0.81 cm
Focal length 10 cm 10 cm 5 cm 15 cm

3D Effects – Illumination 

இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் மேலே மூன்றாவதாகஉள்ள Illumination என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-72-8 -ல் உள்ளவாறு இந்த உரையாடல் பெட்டி தோன்றிடும்  அதிலுள்ள light source , Ambient light ஆகியவற்றை நாம் விரும்பியவாறு மாற்றியமைப்பதன் மூலம் ஒரு முப்பரிமான உருவின் தோற்றத்தை  மாற்றியமைக்கமுடியும்   அவ்வாறு மாற்றியமைக்கபட்ட ஒருவளையத்தின்  தோற்றம் படம் 72-8-ன் வலதுபுறம் உள்ளவாறு அமைகின்றது

படம்-72-8

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர் -பகுதி-47 விண்டோவில் உதவியை உருவாக்குவது

எந்த ஒரு பயன்பாட்டிலும் அதனை எவ்வாறு இயக்குவது என்ற ஆலோசனைகளை கூறும் ஆவனங்களை உதவி குறிப்புக்கள் என அழைப்பார்கள்.  இது பயன்பாட்டில் எந்த நிலையிலும் அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவது என்று தடுமாறும்போது F1 என்ற செயலி விசையை அழுத்தி அதற்கான சொற்களை தட்டச்சு செய்தவுடன் தோன்றும் உதவி குறிப்புகளை அறிந்து  கொண்டு  அவ்வாறே செயல்படுவதற்காக இது உதவுகிறது,.

இதன்மூலம் குறைந்த முயற்சியில் குறிபிட்ட செயலை எவ்வாறு செயல்படுத்துவது என அறிந்து கொள்ளமுடியும். இதற்காக  துனுக்குகள் (bits and pieces) என்பது உதவுகிறது. இவை ஒன்றாக சேர்ந்ததை தலைப்பு (topic) என அழைக்கிறோம். ஒவ்வொரு தலைப்பும்  அதனுடன் தொடர்புடைய தகவல்களின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்,

இந்த உதவி அமைப்பு உரைத்தலைப்பு அல்லது வரை படத்துடன் பல்லூடகமும் சேர்த்து அமைக்கப்பட்டதாகும். Hots photographics பயன்படுத்துவதுதான் சிறந்த பயன்பாடகும்,

கருவிபட்டையின் பயன்பாடு மற்றும் உதவி மூலம் விளக்கும் ஹாட்ஸ்கிராபிக்ஸ்  அல்லது ஹைகிராபிக்ஸ்     ஆகியவை  வரை படங்களாகும் இவை பல்வேறு பகுதியை இணைப்பதற்கு ஒதுக்கப்படுகின்றன. இவைகண்ணுக்கு புலப்படாதவை பயனாளர் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் இடம்சுட்டியை வைத்திருக்கும்போது அதைப்பற்றி தெரிந்துகொள்ள F1 என்ற செயலி விசையை அழுத்தினால் போதும் உடன் உதவி கோப்பில் சேகரித்துதேக்கி வைக்கப்பட்டுள்ள உதவி குறிப்புக்கள் திரையில் தனிச்சாளரத்தில் தோன்றும்.

படம்-1

படம்-1-ல் உள்ளவாறு திரையில் தோன்றும்.இந்த  உதவி குறிப்புக்கள் மூன்று பலகங்களை கொண்டது,

1. வலதுபுறம் பிரதிபலிபப்து தலைப்பு பலகமாகும.இதில் நாம் தேடவிரும்பும் தலைப்புகள தொடர்பான தகவல்கள் பிரதிபலிக்கும்.

2. இடதுபுறம் வழிகாட்டிடும் பலகமாகும். இது நாம் விரும்பிய உதவிக்குறிப்பின் பக்கம் திரையில் தோன்றுமாறு பிரதிபலிக்கும்.

3. மூன்றாவதாக வின்டோவின் மேல்புறம் இருப்பது கருவி பட்டையாகும். இது நாம் விரும்பியவாறு வழிகாட்டிடும் பலகத்தை பிரதிபலிக்கசெய்வது மறையச் செய்வது அடுத்த தலைப்பிற்கு  நகர்ந்து செல்வது அல்லது பிந்தைய தலைப்பிற்கு செல்வது போன்ற செயல்களை செய்ய உதவும் கருவிகளை கொண்டது

இதுமட்டுமல்லாது Stop, Refresh,Locate மற்றும் Home ஆகிய பொத்தான்கள் இதில் உள்ளன.  வழிகாட்டிடும் பலகத்தில் உள்ள Search என்ற தாவிபொத்தானை அல்லது Index ஐ உள்ளடக்குவது அல்லது விட்டுவிடுவது ஆகிய காட்சி தோற்றத்தை  நாம்விரும்பியவாறு  செய்யமுடியும் .  எது எவ்வாறாயினும் ஒவ்வொரு உதவி அமைப்பும் தனித்தனி உள்ளடக்க தாவி பொத்தான்களை கொண்டுள்ளது, இவற்றை பயனாளர்  ஒருவர் தெரிவுசெய்து சொடுக்கியுடன் தொடர்புடையை பயன்பாட்டின் உதவிபட்டியை திரையில் காணமுடியும்.

content tab என்ற இதுஉதவி அமைப்பின் உள்ளடக்கமாகும், இது ஒரு புத்தகத்தின் உள்ளடக்கங்களுக்கு சமமானதாகும்.  இந்த உள்ளடக்க தலைப்புகளுக்கு துணைத் தலைப்புகள் இருக்கும் அவற்றை பிரதிபலிக்க செய்ய இதன் முக்கிய தலைப்பை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கினால் போதும். உடன் இந்த பட்டியலில் உள்ள  ஒரு தலைப்பில் ஒன்றை  பற்றி மட்டும் தெரிந்து கொள்ள  குறிப்பிட்ட உதவித்தலைப்பை இடம்சுட்டியால் தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக பின்னர் இதற்கு துனைத்தலைப்பு இருந்தால் அதனை இருமுறை சொடுக்கினால் தொடர்புடைய உதவி குறிப்புகள் வலதுபுற பலகத்தில் பிரதிபலிக்கும் Display என்ற பொத்தானை சொடுக்கினால் தொடர்புடைய உதவித்தலைப்பை திரையில் காண்பிக்கும்.

Topic pane இது உதவித்தலைப்புகள் உதவிஅமைப்புடன்  ஒருங்கிணைந்ததாகும்.  இவைகளை இந்த  உதவிப்பலகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறது.  இந்த பலகத்தில் குறிப்பிட்ட தகவல் தொடர்பான தலைப்பும் அதனுடன் தொடர்புடைய இணைப்புகளுடன் Zoom text, graphics,animation,sound போன்றவை அமர்ந்திருக்கும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ்ஆனது மைக்ரோசாப்ட் HTML உதவிப்பணிமனை சேர்ந்த உதவிக் குறிப்புகளை கொண்டுள்ளது,இந்த HTMLஉதவியானது நேரடியான மைக்ரோஷாப்ட்  winhelp 4,0 அடிப்படையில்  உள்ளது, இதனை பற்றி அறிந்துகொள்ளு முன்பு  HTML  உதவி மற்றும் HTML உதவிப்பணிமனை ஆகியவற்றை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும்,

இதுபோன்று தலைப்பு உள்ளடக்கங்கள், உருவப்படங்கள், மற்றும் இதர மூலகோப்புகளிலிருந்து  உருவாக்கப்பட்ட செயல்திட்ட கோப்புகள் பயனாளருக்கு பெரிதும் உதவுகிறது,

விபி குறிமுறைகளிலிருந்து HTML உதவி பயன்பாட்டில் ஏபிஐ அழைத்து  இதில் பணிபுரியலாம்

எல்லாம் சரிஇந்த விண்டோ உதவிஅமைப்பினை எவ்வாறு உருவாக்குவது என இப்போது காண்போம்,

முதலில் HTML க்குள்  உங்களுடைய உதவித்தலைப்புக் கோப்புகளை எழுதி உருவாக்கவேண்டும்,அதன்பின் வேர்டு அல்லது வேறு  பயன்பாட்டுகருவிகளை கொண்டு இந்த HTMLகோப்புகளையும்  இதனுடைய HTML 3,2 பதிப்பு மூலகுறிமுறைகளையும்  நம்மால் உருவாக்கமுடியும்,

பின்னர் உதவிசெயல்திட்ட கோப்பினை(.hhp) உதவிஅமைவுடன் இடைமுகம் செய்வதை நிருவகிப்பதற்காக உருவாக்க முடியும், அதன்பின் தலைப்பு , வரைகலை, உள்ளடக்கங்கள்(.hhc), பட்டியல்கள் (.hhk) மற்ற இதர மூலக் கோப்புகளை உருவாக்கலாம்,

விண்டோவையும் மற்றும் அதனுடைய பாவணைமையும் வரையறுத்து இதில் இந்த உதவி குறிப்புகள் எவ்வாறு அமையவேண்டும் என்று உருவாக்கமுடியும்,

இவ்வாறு உருவாக்கிய தலைப்புகளடங்கிய தொகுதிகளாக  அவற்றுள் ஒன்றை பிடித்தால் தொடர்புடைய தகவல்களை காண்பிப்பதற்கான வழிகாட்டும் அட்டவணையை தனியான கோப்பாக உருவாக்கலாம்,

இந்த தலைப்பு தொகுதிகளை வரிசையாக அடுக்கி பிரதிபலிக்க பட்டியல் கோப்புகளை தனியாக உருவாக்கலாம்,

HTML help Active X control ஐ பயன்படுத்தி  இந்த உதவி கோப்பை மொழிமாற்றம் கம்பைல் செய்யலாம்,

கடைசியாக உதவி அமைவை பரிசோதித்து பார்க்கவேண்டும்,

உதவி தலைப்பை  உருவாக்குதல்

உதவிக்கோப்பின் அடிப்படை உதவித்தலைப்பு மட்டுமே , இது HTML  மொழியின் .htm என்ற பின்னொட்டுடன் உருவாக்கப்படுகிறது,

ஒவ்வொரு உதவித்தலைப்பு அல்லது இணையபக்கம் ஆகியவை உரை , வரைகலை, அசைவூட்டம், உருவப்படம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதாகும்,

ஆயினும்  இது HTML -இன் வடிவமைப்பின் சிறப்பு குறிமுறைகளால்ஆனது,

இந்த சிறப்பு குறிமுறைகளை tags என அழைப்பார்கள்,இது எவ்வாறு ஒவ்வொரு தலைப்பும் பிரிதிபலிக்கவேண்டும் என தேடுபொறியிடம் அறிவுறுத்துகிறது, இதில் உரை மட்டுமே பிரிதிபலிக்கும் மற்ற வரைகலை, அசைவூட்டம், உருவம் ஆகியவை தனியான HTML ஆக தோன்றும்,

இதன் தலைப்புகளை தட்டச்சு செய்வதற்கு முன்பு ஒரு பட்டியலில்  அனைத்து உதவித்தலைப்புகளையும் வரையறுத்துவிடவேண்¢டும்,, இது நிலை1 அவுட்லைனாகும்,

இதற்கு கீழே இதனுடைய துணைத்தலைப்புகளை  வரையறுத்து விடவேண்டும்,, இது நிலை2 அவுட்லைனாகும்,

அதன்பின்னர் இந்த தலைப்பு துணைத்தலைப்புஆகியவை தொடர்பான விவரங்களை தட்டச்சு செய்யவேண்டும், இவ்வாறான வழிமுறையில் சாதாரணமான முயற்சியில் உதவிக்குறிப்புகளை உருவாக்கலாம்,

உதவித்தலைப்புஒவ்வொன்றிற்கும் தனித்தனி HTML கோப்புகளை உருவாக்குவது சுலபமான செயலாகும், இவ்வாறு வெவ்வேறு கோப்புகளாக தனித்தனி தலைப்புகளுக்கும்¢ HTML உதவியை  வடிவமைத்து உருவாக்கப்படுகிறது,அதன்பிறகு இந்த தலைப்புகளை ஒன்றிணைந்த ஒரு தலைப்பு கோப்பாக உருவாக்கவேண்டும்,

பின்வரும் வழிமுறையில்இதனை செய்யமுடியும்,

1.   மைக்ரோ ஷாப்ட் வேர்டில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குக,

2.   அதில் தலைப்பு பெயராக பிரிதிபலிக்கவேண்டிய உரைகளை தட்டச்சுசெய்க,

3.   தலைப்பு பகுதி ஒவ்வொன்றும் தனித்தனியாக இருப்பதற்காக வேர்டில் உள்ள insert =>Break => page break என்றவாறு தெரிவுசெய்துஅமைத்திடுக,

4.   இந்த கோப்பினை ஒரு இணையபக்கமாக (படம்-2)சேமித்திடுக,

படம்-2

உதவிசெயல்திட்டகோப்பு ஒன்றினை உருவாக்குதல்

இவ்வாறு தலைப்பை உருவாக்கியபிறகு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஒரு HTML உதவிசெயல்திட்ட கோப்பினை .hhp போன்ற பின்னொட்டுடன் அந்த கோப்பினை உருவாக்கவேண்டும்,  இதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்,

1)   HTML உதவி பணிமனையை திறந்து கொள்ளவும்,

2)   File=> New=> Project என்றவாறு தெரிவுசெய்து கொள்க ,உடன் புதிய செயல்திட்ட வழிகாட்டி திரையில் விரியும்,

3)   அந்த வழிகாட்டியின்  பக்கங்கள் கூறும் ஆலோசணைகளை பின்பற்றவும்,

4)   New project-Exixting Files  என்ற வழிகாட்டியில் படம்-3-ல் உள்ளவாறு HTML File(.htm) என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்க,

படம்-3

5)   உடன் New Project-HTML Files  என்பது திரையில் பிரிதிபலிக்கும் (படம்-4) , அதில் ADD என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, அதில் HTML கோப்பை தெரிவு செய்த பிறகு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக,

படம்-4

6)   இறுதியாக தோன்றும் பெட்டியில் finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் படம்-5-ல் உள்ளவாறு New help project கோப்பு பிரதிபலிக்கும்.

படம்-5

 7,இதில் குறைந்த பட்ச அமைவுகள் தானாகவே சேர்க்கப்படிருக்க வேண்டும். இந்த செயல்திட்ட கோப்பு  பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் files, option ஆகியவை போன்று இந்த பகுதிகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் இதனை வடிவமைப்பு செய்யமுடியும்.

தலைப்புகளுக்கு வரைபடத்தை சேர்த்தல்

உதவித்தலைப்புகள்  மேஜைக்கணினியில் உருவாக்கப்பட்டதாயினும் வரைபடங்களும் உருவப்பட்டங்களும் சேர்த்து உருவாக்க பட்டிருக்கும் HTML கோப்பில் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி வரைபடத்தை உள்ளிணைக்க முடியும்.

1.வரைபடம் தோன்ற வேண்டிய இடத்தில் இடம்சுட்டியை நிறுத்தி சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக,

2.உடன் தோன்றும் பட்டியலிலிருந்து Insert=>Picture என்றவாறுதெரிவுசெய்க, உடன் தோன்றும் படகோப்புகளிலிருந்து தேவையானதை  தெரிவுசெய்க

3.உடன் தோன்றும் Image கோப்பினை தெரிவு செய்து உள்ளிணைப்பு செய்க.

Help Project வாய்ப்பை அமைத்தல்

முதலில் செயல்திட்டத்திற்கான வாய்ப்பை வரையறுத்துவிடுக.  HTML உதவிப்பணிமனைத்த் திரையில் உள்ள Change Project Option என்ற என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன் தோன்றும் Option என்ற உரையாடல் பெட்டியில்  General மற்றும் files ஆகிய இரு தாவிகள் உள்ளன.

General  தாவியின் பொத்தானை அமைத்தல்

இப்போது தோன்றும் திரையில் General  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதில் உள்ள title என்பதில் உதவி அமைவின் தலைப்புTopic பெயரை உள்ளீடு செய்க Default file என்பதில் நம்முடைய HTML கோப்பின் பெயராக மாறுதல் செய்க.

file  தாவியின் பொத்தானை அமைத்தல்

அதன்பின்னர்தலைப்பில் உள்ள file என்ற  தாவியின் பொத்தானை சொடுக்குக இதில்

(படம்-6)

Complied file:நாம் உருவாக்கப்போகும் கோப்புகள் கம்பைல் செய்யும் போது CHP எனும் பின்னொட்டுன் உருவாக்க வேண்டிய கோப்பின் பெயராக உள்ளீடு செய்யவேண்டும்

Log file: சிறிய கோப்பாக இருந்தால் இந்த பெட்டியை பூர்த்திசெய்யாது விட்டுவிடலாம் பெரிய கோப்பாக இருந்தால் கம்பைல் செய்யும் போது எழும் பிழைகளை சுட்டிகாட்ட உதவும் கோப்புகளின் பெயரை  இதில் குறிப்பிடவேண்டும்.

Contents files: இது உள்ளடக்கத்தின் பட்டியல் பெயராக அதன் வழியுடன் அடங்கியது

Index file:இது உதவி  கோப்பு தலைப்புகளை அடுக்கி வைத்திருப்பது.

படம்-6

வின்டோவை வரையறுத்தல்

உதவிகாட்சியானது முன்று பலகங்களால் கட்டப்பட்டது என முன்பே அறிந்து கொண்டோம்.  இதில் புதியதாக பலகம் ஏதும் உருவாக்க முடியாது ஆனால் இருப்பதை வாடிக்கையாளர் விரும்பத்தின் மூலம் மாறுதல் செய்ய முடியும் இவ்வாறு மாறுதல்செய்ய  வின்டோவின் நிலை,பின்புல வண்ணங்கள் மற்ற மதிப்புருக்களை(attribute) வரையறுக்கவேண்டும், பின்வரும் படிமுறை இதற்கு உதவுகிறது

படம்-7

1,செயல்திட்ட உருவபடத்தில் உள்ள Add / Modify window Diffinition என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் முதல் வின்டோவில் வரையறுத்தலை சோ¢க்கும்போது படம்-7-ல் உள்ளவாறு  Create a window type named என கேட்டு நிற்கும்.  அதில் main என தட்டச்சு செய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.  உடன் படம்-8-ல் உள்ளவாறு window type என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்.

படம்-8

2.அதில் உள்ள General  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக படிமுறை 1 ல்குறிப்பிட்ட Main என்பதை window typing-ல்  காண்பிக்கும்.  Title bar text பெட்டியில் இந்த மெயின் வின்டோவிற்கு ஒரு பெயரிடுக.

3.பின்னர் Navigation  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பெட்டியில் windows with Navigation pane Topic pane and Button என்ற தேர்வுசெய்பெட்டியை  தெரிவுசெய்க.

4.Search Tab, Auto Sync ஆகிய வாய்ப்புகளும் (படம்-9) தெரிவுசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

5.இறுதியாக Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-9

உடன் HTML உதவிபணிமனையானது இந்த செயல்திட்ட வாய்ப்புகளை நாம் தெரிவு செய்த புதிய வின்டோவின் வரையறுத்தலை சரிபார்க்கும்.  ஏதாவது தவறான  Definition இருந்தால்  Resolve window Definition wizard என்பது தோன்றும்.

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-46-அக்சஸில் விண்டோ ஏபிஐ யின் உபயோகம்

   பொதுவாக விண்டோ இடைமுகத்தின் விரிவாக்கமாக செயல்படும் குறிமுறை நூலக தொகுப்பினையே விண்டோ ஏபிஐ என அழைக்கின்றனர்.  அக்சஸானது தயார் நிலையில் உள்ள இந்த நூலக விண்டோ ஏபிஐ யை பயன்படுத்தி நமக்கு விண்டோ செயல்களை சுலபமாக்குகிறது.  செயலிகளுடன் உள்ள இந்த ஏபிஐ நூலகத்தின்மூலம் புதிய சாளரத்தை உருவாக்குவது, அமைவு வளங்களை சரிபார்ப்பது, தொடர்புகளுடன் பணிபுரிவது, பயன்பாடுகளுக்கு செய்தியை அனுப்புவது, .ini கோப்புகளை கட்டுப்படுத்துவது, பதிவேட்டை Registery அணுகுவது,  போன்ற மற்ற பணிகளை செய்வதற்கு பெரிதும் அக்சஸ் உதவுகிறது.

இந்த செயலிகள் விண்டோவின் அகப்பணிகளை நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுத்துகிறது.அக்சஸும் விபஏவும் ஒளிமறைவற்ற தன்மையுடன் தொடர்பு கொள்ள உதவினாலும்.  விண்டோ ஏபிஐ ஆனது “C” மொழியில் குறிமுறைகளை எழுதாமல் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.அதனை சரிகட்டுவதற்காக அக்சஸின் விபஏவில் நூற்றுக்கணக்காக செயலிகள்  பயன்படுத்த ஏதுவாக தயார்நிலையில் உள்ளன,  இவை எவ்வாறு எப்படி வேலை செய்கின்றது என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.

இவைகள் இயக்க நேர இணைப்பு நூலக கோப்புகள் DLLS, அல்லது .dll ஆகும், ஆனால் இவைகள் .exe, .drv விரிவாக்க கோப்பாக அமைந்திருக்கின்றன.  இயக்க நேர இணைப்பு Dynamic links என்பது நம்முடைய பயன்பாட்டை செயல்படுத்துவதற்கான அதிக குறிமுறை இல்லாத செயலிகளை இயக்குவதற்கான ஒரு வழியாகும். இதில்  குறிமுறைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இறுதியாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக .exe பின்னொட்டுடன் இவைகள் உருவாக்கப்படுகின்றன.

நூலகத்துடன் கட்டுண்ட பயன்பாட்டை செயல்படுத்தும் கோப்புகளுக்கு நிலையான இணைப்பு Static links ஐ செயல்படுத்தும் முன்பே கட்டுண்டது early bindingஆகும், இந்த Static இணைப்பானது கடினமான குறிமுறைகளால் ஆனது நிருவகிப்பது மிக கடினமானதாக உள்ளது.  இந்த வகை செயலானது பல பயன்பாடுகளில் உள்ளினைந்தே இருக்கின்றது.  இவைகள் உங்களுடைய வன்தட்டில்(¢Hard disc)தமக்கு தேவையான அளவு முழு இடத்தையும் ஆக்கிரமித்துகொள்ளும். மேலும் கூடுதலாக பயன்பாட்டை  புத்தாக்கம் செய்ய விரும்பினால் இந்த exe கோப்புகளை முழுவதும் மேம்படுத்த வேண்டியுள்ளது.  ஆனால் இயக்க நேர இணைப்பானது குறிப்பிட்ட இடத்தின் நூலகத்தை தேக்கிவைக்க அனுமதிக்கிறது.  பின்னர் இயக்க நேரத்தில்  தேவைப்படும்போது மட்டும் செயலிகளை மேற்கோளாக எடுத்துகொள்கிறது. இதனை Late binding   என அழைக்கப்படுகிறது  இது செயல்படுத்தும்போது மட்டும் கட்டுண்டது ஆகும்

DLL-ன் சில பயன்பாடுகள்

1 நினைவகத்தில் குறிமுறையை தேவையற்றதாக ஆக்குகிறது.  இயக்க நேர நூலகத்தை அழைக்கும்போது பயன்படுத்தும் நேரத்தில் மட்டும் குறிமுறையானது நினைவகத்தில் வந்து அமர்ந்து பணியாற்றிவிட்டு செல்கிறது.  பின்னரி நினைவகம் ஆனது பழைய நிலையிலேயே இருக்கிறது.

2 பயன்பாட்டின் புரவலராக செயல்படுவதால் குறிப்பிட்ட குறிமுறைகளை பயன்பாடுகளில் பயன்படுத்த வேண்டியபோது DLL-லில் இதனை இணைத்துவிட்டு பின்னர் அந்தந்த பயன்பாடுகளில் இந்த குறிமுறையை அழைத்தால் மட்டும் வந்து நம்முடைய தேவையை  புரவலர் போன்று முழுவதும் நிறைவேற்றிவிட்டு செல்கிறது.

3 இந்த குறிப்பிட்ட குறிமுறையை DLL ல் மட்டும் புதுப்பிக்க செய்தல், புத்தாக்கம் செய்தல் போன்றபணிகளை ஒவ்வொரு பயன்பாட்டிலும் சென்று செய்ய தேவையில்லை..

ஏன் விண்டோ எபிஐ யை பயன்படுத்த வேண்டும்

1 விண்டோவில் உள்ள வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட்,  அக்சஸ் போன்ற பயன்பாடுகளை இயக்கும்போது இவைகளில்  பொதுவான ஒருசில செயல்களுக்காக கட்டளைதொடர்கள், விபிஏ குறிமுறைகள் போன்றவை ஏராளமாக தேவைப்படுகின்றன.  இவைகளை பொதுவான DLL ஆக விண்டோ ஏபிஐ-ல் பொது நூலக விதிமுறைகளாக ஆக்கப்பட்டு எப்போதும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார்நிலையில் வைக்கபட்டுள்ளன.  குறிப்பிட்ட கட்டளையை செயல்படுத்துவதற்காக அதற்கான பட்டியை மட்டும் பிடித்தால் போதும் உடன் தொடர்புடைய கட்டளையின் குறிமுறைகள் DLL லிருந்து ஏபிஐ மூலம் செயல்படுத்தப்படுகிறது.

2 இவைகள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவேண்டுமா?.

விண்டோ ஏபிஐ  நூலகத்தில் உள்ள கட்டளைகள் அனைத்தும்  பரிசோதிக்கப்பட்டு நன்றாக செயல்படுகிறது என நிரூபிக்கப்பட்டதாகும்.  அதனால் இவைகள் நாம் புதியதாக உருவாக்கும் எந்த ஒரு செயல்திட்டத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் இவ்வாறாக இணைக்கப்படும் விண்டோ ஏபிஐ  நூலக கட்டளை தொடர்களை மீண்டும்  ஒருமுறை பரிசோதிக்கத் தேவையில்லை.

3    தளங்களுக்கு இடையே ஒத்திசைவு

பெரும்பாலான தளத்தின் Win32 ஏபிஐ  அறிவிக்கைகள் அனைத்து தளங்களிலும் பயன்படுத்த ஏதுவாக தயார் நிலையில் உள்ளன.  இவைகள் பயனர் அடிப்படையில் நம்முடைய குறிமுறைகளில் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.

4 நாம் புதியதாக உருவாக்கும் குறிமுறைகள் இந்த இயக்க நேர நூலகத்தில் இருந்து செயலிகளை பயன்படுத்தி கொள்வதால் இந்த செயலிகளுக்கான குறிமுறைகள் தேவையற்றதாகிறது, ஆனால் நம்முடைய குறிமுறைகளுக்கு குறைந்த அளவே நினைவகத்தில் இடம் இருந்தால் போதும்.

DLL ஆவணங்கள்: பெரும்பாலான விண்டோ DLL செயலிகள் “C” மொழியின் செயலிகளுடன் உள்ளினைக்கப்பட்டுள்ளன.

இவைகளை எங்கேயும் காணமுடியும் இவைகள் Software development kits (SDK) ODBL, MAPI WIN32  ஆகியவற்றின் உள்ளடக்கங்களாக உள்ளன.

தரவு வகைகள் Data Types: விண்டோ ஏபிஐ யில் தரவு வகைகளை புரிந்து கொள்வது சிறிது கடினமான பணியாகும்.  பல புத்தகங்கள் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் செந்தர ஆவணங்களும், தரவு வகைளை விளக்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளன.

பின்வரும் அட்டவணையில் “C” மொழியின் தரவுவகைகள் அதற்குசமமான அக்சஸ் விபிஏ தரவுவகைகள் கொடுக்கப்பட்டுள்ன

அட்டவணை 46-1

 

C TYpe

VBA Type

Char

String

Short

Integer

Int

Long

Long

Long

Float

Single

Double

Double

UNIT

Long

ULONG

Long

USHORT

Integer

UCHAR

String

DWORD

Long

BOOL

Boolean

BYTE

Byte

WORD

Integer

HANDLE

Long

LPSTR

No equivalent

LPTCSTR

No equivalent

இவைகள் SDK மற்றும் ஏபிஐ ஆகியவற்றில் உள்ள விபஏவில் மேற்கொள்களாக எடுத்து காட்டுவதற்கு பயன்படுகின்றன.

பட்டி 46-1

DWORD GetPrivateProfileString (

LPCTSTR lpszSection,       // points to section name

LPCTSTR lpszKey,          // points to key name

LPCTSTR lpszdefault,       // points to default string

LPCTSTR lpszreturnBuffer,   // points to destination buffer

DWORD  cchReturnBuffer,   // size of destination buffer

LPCTSTR lpszFile            // initialization file name

);

பட்டி 46-1 இல் அறிவிக்கப்பட்ட  வகை உருமாற்றம் செய்யப்பட்டு விபிஏ வகையாக பட்டி-46-2 இல் கொடுக்கப்பட்டுள்ளன,

பட்டி 46-2

Declare Function GetPrivateProfileStringA lib “Kernel32”( _

ByVal lpszSection as string , _

ByVal lpszKey as string, _

ByVal lpszDefault as string, _

ByVal dwReturnBuffer as long, _

ByVal cchReturnBuffer as long, _

ByVal lpszFile as string) as long

 

இவை இரண்டுபட்டிகளின் மூலம் Get private profile string செயலிகள் “C” மொழியிலும் அதற்குசமமான விபஏவிலும் தரவு வகைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என அறிற்துகொள்ளலாம்.

இந்த விண்டோ ஏபிஐ யில் உள்ள கட்டளைகளில் பொதுவான முனனொட்டுடன் Prefix அனைத்து ஆவணத்திலும் பயன்படுத்தப்படுகின்றன அவற்றிற்கான அட்டவணை பின்வருமாறு

அட்டவணை 46-2

 

Prefix C Data Type VBA Data Type
Lpsz LongPointer to a null

Terminated string

String
Dw DWORD Long
W WORD Integer
Hwnd HANDLE Long
B BOOL Long
l LONG Long

 

 

ஏபிஐயுடன் இதனை ஏன் செயல்படுத்த முடியாது?

இந்த சொற்களை பார்த்தவுடன் அனைவரும் தங்களின் சொந்த DLL ஐ பயன்படுத்தி அனைத்து கட்டளைவரியிலும் புகுந்து சரிசெய்து இவையனைத்தையும் செயல்படுத்த முடியும் என நிரூபித்து உள்ளனர். ஆனால்  விண்டோ ஏபிஐ யிலிருந்து விபரவிற்கு உருமாற்றம் செய்யபடும்போது Call back  போன்ற செயலிகளை செயல்படுத்த கடினமாகிறது.

விண்டோ ஏபிஐ யின் பயண்பாடுகள்

விண்டோ எபிஐ செயலிகளை பற்றி பொதுவில் அறிந்து கொணடபின் அக்சஸின் விபஏவில்   இவைகளை எடுத்துக் கையாளலாம்.

1.Declare என்ற கூற்று அறிவிப்பு செய்ய பயன்படுகிறது.

2.செயலி (Function) அல்லது துணைச்செயலி (Sub function or sub routine)ஆகியவை மற்றொரு செயலியை அழைக்கப்பயன்படுகிறது,

3.இந்த செயலியானது GetPrivateProjfileString என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

4.இதன் நூலக பெயரான Library Name Lib என்ற சொல்லும் DLL  என்ற விண்டோ API செயலி அல்லது துணைச்செயலியில் இரட்டை குறிக்குள் Kernal 32 குறிக்கப்படுகிறது.

5.ஆனால் இதனை  நம்முடைய விபர குறிமுறைக்குள் நேரடியாக அழைக்கமுடியாது,  அதற்காக அதற்கு சமமான பொருளை அழைப்பதற்கு Alias என்ற கூற்றுடன் பின்வரும் கூற்றில் அதே Get private profifle string என அழைக்கப்படுகிறது.

Declare  Function APIGetPrivateProfileString _

டib  “ Kernel32”  Alias “ GetPrivateProfileStringA”

மதிப்புரு பட்டியல் Aguement list: ஒருசெயலியை அறிவிப்பு செய்யும்போது ஆவணங்களில் குறிப்பிட்ட இதே செயலியை அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் இயக்கநேர பிழைச்செய்தி error 49: bad DLL Calling convention என்று கிடைக்கும்.  ஏபிஐ செயலியிலும் இதே பிழை தோன்றும்.  இதனால் உங்களின் விண்டோ  பயன்பாடான அக்சஸானது உடன் தொக்கி(crash) நின்றுவிட வாய்ப்பு உள்ளது.  அதனால் நம்முடைய பயன்பாடுகளின் மதிப்புரு பட்டியலின்சரியான தரவு வகையாக நூலக மதிப்புருவின் பெயரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட வேண்டும்.

By val or By Ref என்ற கூற்றுகள் மதிப்புரு பட்டியலை ஒரு கூற்றை அறிவிப்பு செய்ய ஒதுக்கீடு செய்யும்போது இதனை ஏபிஐ ஆனது எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என முடிவு செய்ய  வேண்டும்.  இயல்பு நிலையில் அக்சஸானது By reference  உடன் ஒரு மதிப்புருவை கடத்துகிறது. செயலிக்கு மாறியின் நினைவக முகவரியை அழைக்கப்படும்போது அக்சஸ் கடத்துகிறது.  செயலியால் இந்த நிலை முகவரியை பெறும்போது முகவரியில் தேக்கிவைக்கப்படும் மதிப்பை விரும்பியவாறு அல்லது விரும்பாதவாறு.மாற்ற முடிகிறது.  அதற்கு பதிலாக By value என்பதற்¢கு முன் அக்சஸானது மதிப்பை கடத்தும்போது செயலிகளுக்கு தேவையான மதிப்பை மட்டும் பெற்று செயல்படுத்துகிறது.பொதுவாக By ref ஐ விட By value என கடத்துவதே சிறந்த செயலாகும்.  நாம் எதிர்பார்க்கும் இறுதி விடைகிடைப்பதற்கு இது உதவும்.

தரவு வகைகள் As Data Type :எதேனும் ஒரு ஏபிஐ ஒரு சார்பை/செயலியை அழைத்து மதிப்பை திருப்பும் ஆனால் துணைச்செயலி அவ்வாறு திருப்பாது.

அதனால் துணைச்செயலியில் திரும்பவரும் தரவின் வகையை குறிப்பிடத் தேவையில்லை.  நம்முடைய பயன்பாட்டில் உபயோகப்படுத்தும் மதிப்பையே செயலியிலும் திருப்பும் என எதிர்பார்க்கலாம்.  அல்லது பிழைச்செய்தியின் எண்களை வெளியிடும்.  இந்நிலையில் பிழைகளை கையாளும் துணைச் செயலியையே  அழைக்கலாம்.

ஏபிஐ செயலியின் ஆவனத்தில் குறிப்பிட்டுள்ள தரவு வகைகளுடன் நாம் குறிப்பிடும் வகை மதிப்பை திருப்புவது பொருத்தமாகஅமைய வேண்டும்.

Wrapper செயலியை பயன்படுத்துதல்:ஏபிஐ செயலியில் நேரடியாக நிரல்தொடர் இருப்பது அரிதான செயலாகும் ஏபிஐ நமது சிக்கலான தருமதிப்பிற்காக அடிக்கடி அழைக்கப்படுகிறது.   திருப்பப்படும் மதிப்பு பயன்படும் முன்பு அடிக்கடி பெரும்பாலான ஏபிஐ செயலியில் தேவையான பொருள் விளக்கம் தர வேண்டியுள்ளது.

இதனை தீர்வு செய்ய பெரும்பலான நிரலர்களால் Wrapper என்னும் செயலியை பயன்படுத்துகின்றனர்.  பொதுவான கூற்றுக்கு இந்த Wrapper செயலியானது வேறு சாதாரணமான விபிஏ செயலியாகும்.  இது  தேவைப்படும் அனைத்து அளபுருக்களுடன்(parameter) ஏபிஐ அழைப்பதை வழங்குகிறது.  அது மட்டும் இன்றி பயன்பாடு உபயோகிக்க தக்க வகையில் தகவல்களை ஏபிஐ செயலியில் மதிப்பை பெயர் மாற்றம் செய்து திருப்புகிறது.

நம்முடைய விபிஏ குறிமுறையானது முதலில் ஏபிஐ செயலியை அழைக்கின்றது. பின்னர் ஏபிஐ செயலி திருப்பும் மதிப்பின் அடிபடையில் Wrapper செயலியும் அதே மதிப்பை திருப்புகிறது.

Hwnd என்றால் என்ன?

பல விண்டோ ஏபிஐ செயலியில் Hwnd என்ற அளபுருக்களை(parameter) பயன்படுத்துகின்றனர்.  கணிப்பொறி திரையில் வரைபட பொருளை Hwnd ஆனது ஒரு முழு எண் மதிப்பை சாளரத்தில் பயன்படுத்தி பாதுகாக்க செய்கிறது.  ஒவ்வொரு சாளரம், பொத்தான், உரைப்பெட்டி, போன்ற பொருட்களும் hwnd மதிப்பை பெற்றுள்ளது. ஏபிஐ செயலியின் இயக்கத்திற்கு முன்பு இந்த hwnd மதிப்பை தேவைப்படும் அளவிற்கு அழைக்கிறது.  மைக்ரோ சாப்ட் நிறுவனம் கூட இந்த மிகச் சுலபமான hwnd மதிப்பை பெரும்பலான அக்சஸ் பொருட்களின் பயன்படுத்தி கொள்கிறது.  பல அக்சஸ் பொருட்கள் தங்களின் பயன்பாடுகளில் hwnd ஒன்றாக உள்ளினைத்து கொள்கிறது.  நம்மால் இதனை பண்பியல்பு சாளரத்தில் காணமுடியாது.  ஆனால் பண்பியல்பில் hwndஒன்றினைந்துள்ளது.

txt Last Name hwnd இதில் அழைக்க தேவைப்படும் மிக முக்கிய மதிப்பீடு hwnd ஒரு கட்டுபாட்டில் கடத்துகிறது.

அமைப்பு தகவல்களை மீளப்பெறுதல்

விண்டோ அமைவு கணிப்பொறியில் இயங்கும்  வன்பொருள் (Hrdware)மற்றும் மென்பொருள் (Software) பற்றிய தகவல்களை மீளப் பெறுவதற்காக இந்த ஏபிஐ ஆனது பல செயலிகளை நமக்கு வழங்குகிறது.  வன்தட்டில் இடம் இல்லை (no space in hard disc),  CD யிலும் நகல்எடுக்க முடியவில்லை என்பது போன்ற பிரச்சனைகளுடனான தகவல்களை அறிந்து கொண்டு இதனை தவிர்க்க முயற்சிக்கலாம்.

விண்டோ மற்றும் தற்காலிக இயக்ககங்களின் (directory)இடத்தை தெரிந்து கொள்வதற்காக இந்த செயலிகள் ஒருவாறு தக்க தகவல்களை வழங்குகிறது.

GetWindow Directory A

இந்த சரத்தை முடக்கும்போது தேக்கி வைத்து சாளரத்திற்கு பாதையை  Get Window Directory A மீளப் பெறுகிறது.

எடுத்துக்காட்டு

Declare Function apiGetWindowDirectory _

Lib “Kernel32” _

Alias “GetWindowsDirectoryA” (_

ByVal lpszReturnBuffer As String,_

ByVal lpszBufferSize As Long) as Long

முடக்கிருப்பில் (Buffer) நகலெடுக்கப்பட்ட சரத்தினுடைய நீளத்தின் மதிப்பை திருப்புகிறது. முடக்கிருப்பானது போதுமானதான நீளத்திற்கு மேல் இல்லையெனில் தேவையான நீளத்திற்கு மட்டும் மதிப்பை திருப்புகிறது.  செயலியானது செயலிழந்து போனால் மதிப்பு பூஜ்ஜியம் ஆக திருப்புகிறது.

பின்வருபவை GetWindowsDirectoryA யின் ஏபிஐ செயலியை பயன்படுத்தி கொள்ளும்  Wrapper என்ற செயலியாகும்

Function GetWindowsDirectory ( ) As String

Dim WinDir As String * 255

Dim WinDirSize As Long

Dim ErrNumber As Long

WinDirSize = Len(WinDir)

ErrNumber =  apiGetWindowsDirectory(WinDir, WinDirSize)

If ErrNumber > 0 Then

GetWindowsDirectory = Lefts $(WinDir ,ErrNumber)

Else

GetWindowsDirectory = vbNullString

End If

End Function

இதில் ஏபிஐ செயலியின் Err Number திருப்பும் மதிப்பு ஒரு மதிப்புருவாக Left செயலிக்கு Win Dir என்னும் சரத்திலிருந்து விண்டோ மதிப்பகத்தை  பிரித்தெடுக்க பயன்படுகிறது.

இங்கே Err Number மதிப்பு 0 எனில் காலி சரத்தை (VBNULL String) அதற்கு பதிலாக திருப்புகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வொய் பி மோடத்தின் பயன்பாடு

நம்மில் பெரும்பாலானவர்கள் தரைவழிஇணைப்பு அல்லது செல்லிடத்து பேசிவழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றோம் ஒரு இணைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை இணைய இணைப்பு பெறமுடியாது ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி இணைப்புகட்டணத்துடன் அல்லது அவையணைத்தையும் குழுஇணைப்பு கட்டணத்துடன்  இணைய இணைப்பை பெற்று பயன்படுத்தி வருகின்றோம்  அலுவலக பயன்பாட்டிற்கு இந்த  குழுஇணைப்பு கட்டணம் கட்டுபடியாகும் நம்முடைய வீடுகளில் உள்ள உறுப்பினர்கள்  ஒவ்வொருவரும் தனித்தனி கட்டண இணைப்பு எனில் செலவு கூடுதலாகும் இதனை தவிர்ப்பதற்கு நம்முடைய வீடுகளில் உள்ள ஒன்றிற்குமேற்பட்ட கணினிகளை வளாக பிணையம்(LAN) போன்று கம்பி வழியாக இணைத்தபின் ஏதேனுமொரு கணினியை மோடம் வாயிலாக தரைவழிஇணைய இணைப்பை பெற்றபின் மற்ற கணினிகள் அந்தவொரு இணைப்பை மட்டும் பயன்படுத்தி இணையத்தில் உலாவரமுடியும்

அதைவிட தற்போது தரைவழி இணைப்புடன் கணினியை இணைக்க பயன்படும் மோடமானது Wi fi மோடமாக சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றது இதனை வாங்கிவந்து  தரைவழி இணைப்புடன் ஒரு கணினியை மட்டும் இணைத்தபின்    இதனை செயல்படுமாறுசெய்க பின்னர் இந்த  Wi fi மோடத்தின்  பின்புறமுள்ள  Wi fi க்கான முதல் பொத்தானை அழுத்தி சிறிதுநேரம் கழித்து மீண்டும் அதே பொத்தானை அழுத்தினால் இந்த  Wi fi க்கான விளக்கு எரிவதை உறுதிபடுத்திகொள்க

அதன்பின்  இணைய இணைப்பு இல்லாத கணினியில் இந்த Wi fi க்கான மென்பொருளை நிறுவிகொண்டு  திரையின் கீழ்பகுதியிலிருக்கும் பட்டியில்இந்த Wi fi க்கான   உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும்   உரையாடல் பெட்டியில் wireless network connection Digisol என்ற பெயருக்கு அருகிலிருக்கும் Connect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

71-4

 உடன் Connect to the Network என்ற சிறு உரையாடல் பெட்டியொன்று Connecting to Digisol  என்ற செய்தியுடன் இணைப்பை ஏற்படுத்திடும் செயலை செய்து முடித்தபின் இந்த உரையாடல் பெட்டி திரைகாட்சியிலிருந்து மறைந்து விடும் இதன்பின நம்முடைய இணையஉலாவியை இயக்கி நம்முடைய  வழக்கமான செயலை செய்யலாம்

71-4-1

  இவ்வாறு ஒரே தரைவழிஇணைப்பின் மூலம் கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை Wi fi மோடத்தின் மூலம் இணைய இணைப்பு இணைய பணிகளை ஆற்றமுடியும்

Previous Older Entries