கூகுள் குரோமில் படிக்கமட்டும் (Read Mode) எனும் வசதி

நாம் இணையத்தில் உலாவரும்போது விளம்பரங்களால் தொந்திரவுஏற்படாமல் இருக்கவும் குறிப்பி்ட்ட பக்கத்தை பார்வையிடமட்டுமே விரும்புகின்றோம் ஆனால் நகலெடுத்திடவிரும்பவில்லை என விரும்பிடும்போது இந்த Read Modeஎனும் வசதி மிகச்சிறந்ததாக விளங்குகின்றது இதனை எவ்வாறு நம்முடைய கூகுள் குரோம் எனும் இணையஉலாவியில் கொண்டுவருவது என இப்போது காண்போம் இதற்கான முதல்படிமுறையாக கணினியின் நிலைபட்டையில் அல்லது திரையில் இருக்கும் உருவப்பொத்தானின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Properties எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Properties எனும் உரையாடல் பெட்டியின் Target box,எனும் பெட்டியில் மேற்கோள்குறிக்கு அடுத்ததாக  –enable-dom-distillerஎன்ற உரையை உள்ளீடு செய்து கொண்டு Applyஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து இந்த மாறுதல்களை சேமித்து கொள்க இதன்பின்னர் கூகுளின் இணையஉலாவி செயலில் இருந்தால் மூடிவிடுக பிறகு இந்த கூகுள் இணைய உலாவியை செயலுக்கு கொண்டுவந்து திரையின் மேலே வலதுபுற மூலையில் இருக்கும் கட்டளைகளுள் Menu=> Distill Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் ஏதேனும் இணையபக்கத்தை திறந்து பார்வையிட்டால்இந்தRead Modeஎனும் நிலையில் இருப்பதை காணலாம்

அதிக செலவாக கூடிய அருகலை(WiFi) தவறுகளை அறவே தவிர்த்திடுக

கடந்த ஒருமாதகாமாக என்னுடைய கைபேசியை பயன்படுத்திடவேயில்லை ஆயினும் என்னுடைய கைபேசி கணக்கிற்கான கட்டணம் செலுத்திடுமாறு கோரப்படுகின்றது என்ன காரணம் என ஆய்வுசெய்திடும்போது நான் எப்போதும் வீட்டில்இருந்தாலும் பணியிடத்தில் இருந்தாலும் என்னுடைய கைபேசியானது தானாகவே இந்த அருகலை(WiFi) இணைப்பை ஏற்படுத்தி கொள்ளுமாறு அமைவுசெய்திருந்தேன். கம்பி வழியாக இணைய இணைப்பைபயன்படுத்திடும்போது கம்பியில்லா இந்த இணைப்பை தொடுவதே இல்லை அவ்வாறான நிலையில் இணைய உலாவலின்போது அருகலை(WiFi) இணைப்பு ஆனது மிகமெதுவாக இருந்ததால் அதனை நிறுத்தம் செய்துவிட்டு cellular carrier வாயிலாக4ஜிஇணைப்பிற்கு மாறி முகநூல்(facebookபக்கத்தில்உலாவல் செய்வது அதில் கானொளிபடங்களை காண்பது போன்ற செயல்களை செய்து கொண்டிருந்தேன் அதன்பின்னர் முகநூ் பக்கத்திலிருந்து வெளியேறாமல் அப்படியே விட்டிட்டு கைபேசியின் திரையின் மேலே மூலையில் வீற்றிருக்கும் 3ஜி அல்லது 4ஜி உருவப்பொத்தான்களில் 4ஜி பொத்தானை மட்டும் சொடுக்குதல் செய்து இணைப்பை துண்டித்துவிட்டேன் அருகலை(WiFi) இணைப்பிற்கான விசிறிபோன்ற உருவப்பொத்தானும் இந்தபொத்தான்களுக்கு அருகில் வீற்றிருக்கும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் நான் ஏற்கனவே தானாகவே இந்த அருகலை(WiFi) இணைப்பை கைபேசியில் பெறுமாறு அமைவு செய்திருந்ததால் கைபேசியானது தொடர்ந்து அருகலை(WiFi) இணைப்பிலும் முகநூல் பக்கஇணைப்பிலும் இருந்து துண்டிக்கப்படாமல் இருந்ததால் நான் இதனை பயன்படுத்தாதபோதும் அதிகஅளவு பட்டியல் தொகை என்னுடைய கைபேசி கணக்கில் வந்துவிட்டது அதனால் வாசகர்களே நம்முடைய கைபேசியில் இவ்வாறான தானாகவே அருகலை(WiFi) இணைப்பு ஏற்படுமாறு செய்திருந்தால் அதனை முதலில் நீக்கம் செய்திடுக. வேண்டும்போதும மட்டும் அருகலை(WiFi) இணைப்பு ஏற்படுத்திகொள்ளமாறு செய்து செலவை மிச்சபடுத்திடுக

ஆண்ட்ராய்டு செயல்படும் கைபேசியின் தரவுகளை மேககணினியில் பிற்காப்பு செய்து சேமித்திடலாம்

இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக நம்முடைய ஆண்ட்ராய்டு செயல்படும் திறன்பேசியில் (ஸ்மார்ட் ஃபோனில்) Settings.=>Backup and Restore.=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் Backup my data என்ற வாய்ப்பினை செயலில் இருக்குமாறு தெரிவுசெய்திடுக அதிலும் Automatic restore என்ற வாய்ப்பினை செயலில் இருக்குமாறு செய்திடுக
பொதுவாக அனைத்து வகையான படங்களையும் இவ்வாறு பிற்காப்பு செய்திடுவதற்காக Google Photos App எனும் பயன்பாடு சிறந்ததாக அமைகின்றது இதனை நம்முடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்து செயல்படுத்திடுக முதன்முறை இது திரையில் செயல்படத்துவங்கிடும்போது backup to the cloud.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க
அவ்வாறேGoogle Drive app எனும் பயன்பாடானது நம்முடைய கைபேசியின் தரவுகளை பிற்காப்பு செய்வது மட்டுமல்லாது பேரளவு தரவுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்திடவும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுகின்றது
மேலும் Google Office Suite.எனும் பயன்பாடானது நேரடியாக அலுவலக பயன்பாடுகளை இணையத்தின் வாயிலாக பயன்படு்த்தி கொள்ளவும் தரவுகளை தேக்கிவைத்து சேமித்துக் கொள்ளவும் திறன்பேசி மட்டுமல்லாது கணினியின் வாயிலாககூட நம்முடைய தரவுகளை கையாளவும் பயன்படுகின்றது

ஃபயர் ஃபாக்ஸ் எனும் இணைய உலாவியில் அத்தியாவசியமாக இருக்கவேண்டிய விரிவாக்க வசதிகள்

1 Clipmarks: நம்முடைய இணையஉலாவியில் இணைய இதழ்கள், புத்தகங்கள், செய்திகள் போன்றவைகளை பார்த்துவரும்போது குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் நகலெடுத்து சேமித்திட-விரும்புவோம் அவ்வாறான நிலையில் இந்த விரிவாக்கவசதி மிகச்சிறந்த கருவியாக அமைகின்றது இந்த கருவியை கொண்டு நாம் விரும்பும் அந்த இணைய பக்கத்தை அல்லது இணைய இதழ்களின் பக்கத்தை வெட்டி நகலெடுத்து சேமித்து கொள்ளலாம் இதனை http://www.clipmarks.com/ என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
2 FoxyTunes2.96 எனும் விரிவாக்கவசதியானது iTunes, Musicmatch Jukebox, Windows Media Player என்பன போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட பல்லூடக இயக்கிகளை கட்டுபடுத்தி கையாள பயன்படுகின்றது இதனைhttp://computershopper.download.com/FoxyTunes/9100-11745_4-10336787.html என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
3 Gmail Manager 0.5.4 எனும் விரிவாக்க வசதியானது ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்கு ஒவ்வொன்றையும் தனித்தனி சாளரத்தில் திறப்பதற்குபதிலாக ஒட்டுமொத்தமாக அவைகளுள் தேவைப்படுவதைமட்டும் பயன்படுத்தி கொள்ளுமாறு வசதியை வழங்குகின்றது மேலும் இவைகளுக்கு ஏதேனும் மின்னஞ்சல் உள்வருகை செய்திடும்போது அதற்கான அறிவிப்பு ஒன்று நிலைபட்டியில் மேல்மீட்பு பட்டியாக திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது இதனைhttp://addons.mozilla.org/en-US/firefox/addon/1320 என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
4 Googlepedia0.5.1எனும் விரிவாக்க வசதியானது நாம் இணைய உலாவியில் ஏதேனும் ஒரு செய்தியை தேடிடமுனையும்போது தொடர்புடைய விக்கிபீடிய செய்தியையும் உலாவியில் காண்பிக்கசெய்கின்றது இதனைhttp://computershopper.download.com/Googlepedia/9100-11745_4-10550391.html என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
5 Tree Style Tab 0.6.2எனும் விரிவாக்கவசதியானது நம்முடைய இணைய உலாவலின்-போது நாம்திறந்து பயன்படுத்திடும்பல்வேறு தாவிகளின் திரையானது கோப்பக காட்சிக்கு பதிலாக மரக்கிளை காட்சியாக விரியசெய்கின்றது இதனைhttp://addons.mozilla.org/en-US/firefox/addon/5890 என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
6 Session Managerஎனும் விரிவாக்கவசதியானது நம்முடைய இணைய உலாவலினஅபோது நாம் ஏற்கனவே திறந்து பணிபுரி்ந்த-போது புறவமைப்பு முகவரிகள் ஆகியவை எவ்வாறு இருந்ததோ அதையேநாம் மீண்டும் திறந்து பணிபுரியும்போது கொண்டுவருவதற்கு உதவுகின்றது இதனைhttp://sessionmanager.mozdev.org/ என்ற இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க

எக்செல் எனும் பயன்பாட்டினை பயன்படுத்திடுவதற்கான எளிய ஆலோசனைகள்

1 நாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி அட்டவணையொன்றினை தயார்செய்திடவிழைவோம் அதில் நெடுவரிசை யில்மாதவாரியாகவும் கிடைவரிசையில் பணியாளர்வாரியாகவும் விற்பணை அல்லது உற்பத்தி திறனை பட்டியலிடுவோம் இவ்வாறான நெடுவரிசை கிடைவரிசை தலைப்பிற்குஒட்டுமொத்த தலைப்பினை எவ்வாறு அமைத்திடுவது என தெரியாததால் அப்படியே அமைத்திடாமல் விட்டிடுவோம் அதனை தவிர்த்திட Home  Fonts  Format Cells என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்திடுக உடன்விரியும் Format Cells எனும் உரையாடல் பெட்டியில் Border எனும் தாவியின் திரையை தோன்றிடசெய்க அதில் கீழே வலதுபுற மூலையில்உள்ளdiagonal split எனும் வாய்ப்பான உருவப்பொத்தானாை தெரிவுசெய்து கொள்க பிறகு நம்முடைய அட்டவணையின் நெடுவரிசை கிடைவரிசை சந்திக்கும்முதல் கலணிற்கு சென்று monthஎன தட்டச்சு செய்துகொண்டு Alt + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக பின்னர் Sales Rep என தட்டச்சு செய்து கொண்டு வெளியேறுக தற்போது இந்த அட்டவணையானது பின்வருமாறு தலைப்பு இருப்பதைகாணலாம்

1
2 ஒருசில நேரங்களில் எக்செல் எனும் பயன்பாட்டின் அட்டவணையின் நெடுவரிசைகளின் தலைப்புகள் ஒவ்வொன்றும் மிகநீண்டதாக இருக்கும் அதனால் இந்த அட்டவணையை ஒரேபக்கத்தில் வைத்திடமுடியாமல் திண்டாடுவோம் இந்நிலையில் இவ்வாறான நீண்டதலைப்புகளுள்ள நெடுவரிசைகளை தெரிவுசெய்துகொண்டுHome  Alignment  Orientation  Angle Counterclockwise என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில் நகரும்கடிகார முள்ளினை45o என்றவாறு கோண அளவினை வைத்து கொண்டு மீண்டும் Home  Font  Borders  All Borders. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்து கொள்க இதன்பின்னர் நெடுவரிசையின் அளவை மாற்றியமைத்து சரிசெய்து கொள்க தற்போது பின்வருமாறு அட்டவணையானது அமைந்திருபபதை காணலாம்
2

ஆண்ட்ராய்டுபயிற்சிகையேடு பகுதி-14 பயனாளர் இடைமுக புறவமைப்புகள்-தொடர்ச்சி

புறவமைப்பு அட்டவணை ஆண்ட்ராய்டு அட்டவணை புறவமைப்பு குழுக்களானவை நெடுவரிசை கிடைவரிசை சேர்ந்த காட்சியாக இருக்கின்றன . நாம் இந்த அட்டவணையில் ஒரு வரிசையை உருவாக்குவதற்காக

எனும் உறுப்பினை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வரியும், பூஜ்யம் அல்லது அதற்கு மேற்பட்ட கலண்களை கொண்டிருக்கும்; ஒவ்வொரு கலணும் ஒரு காட்சியின் பொருளை கொண்டிருக்கும் . அட்டவணை புறவமைப்பு கொள்கலன்களானவை அவைகளின், நெடுவரிசைகள், கிடைவரிசைகள் அல்லது கலண்கள் ஆகியவற்றின் எல்லைக் கோடுகளை காண்பிக்காது.
புறவமைப்பு அட்டவணையின் பண்புக்கூறுகள் பின்வருவது புறவமைப்பு அட்டவணையின் குறிப்பிட்ட முக்கியமான பண்புக்கூறுகளாகும்

1.1
எடுத்துகாட்டு இந்த உதாரணத்தில் அட்டவணை புறவமைப்பு பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒன்றினை எவ்வாறு உருவாக்குவது என எளிய வழிமுறைகளின் மூலம் நம்மை வழிநடத்தி செல்லும் “அனைவருக்கும் வணக்கம்” எனும் எடுத்துக்காட்டின் பகுதியில் நம்மால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை மாறுதல்கள் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக:

1.2
பின்வருவது filesrc / com.example.அனைவருக்கும் வணக்கம் / MainActivity.java எனும் கோப்பின் மாற்றப்பட்ட முதன்மை செயல்பாடான உள்ளடக்கம் உள்ளது. இந்தக் கோப்பின் அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகள் ஒவ்வொன்றிலும் இதனை சேர்க்க முடியும்.
package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கான res/values/strings.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

அனைவருக்கும் வணக்கம்
Settings

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்”
எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிபட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்
2.1
முழுமையான புறவமைப்பு
ஒரு முழுமையான புறவமைப்பு ஆனது நம்மை மிகச்சரியான இடவமைப்பை அதன் உறுப்பினர்களுடன் (X அல்லது / y அச்சுதூரங்களை) குறிப்பிட அனுமதிக்கின்றது. இந்த முழுமையான புறவமைப்பானது மிகச்சரியான முழுமையான நிலையில் இல்லாமல் புறவமைப்புகளின் மற்ற வகைகளை விட பராமரிப்பதில் மிககுறைந்த நெகிழ்வுதன்மையுடனும் கடினமாகவும் இருக்கும்.
முழுமையான புறவமைப்பின் பண்புக்கூறுகள்
பின்வருவது முழுமையான புறவமைப்பு காரணிகளின் குறிப்பிட்ட முக்கியமான பண்புக்கூறுகளாகும்:

1.3
எடுத்துகாட்டு
இந்த உதாரணத்தில் அட்டவணை புறவமைப்பு பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒன்றினை எவ்வாறு உருவாக்குவது என எளிய வழிமுறைகளின் மூலம் நம்மை வழிநடத்தி செல்லும் “அனைவருக்கும் வணக்கம்” எனும் எடுத்துக்காட்டின் பகுதியில் நம்மால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை மாறுதல்கள் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக:

1.4
பின்வருவது src / com.example.அனைவருக்கும் வணக்கம் / MainActivity.java எனும் கோப்பின் மாற்றப்பட்ட முதன்மை செயல்பாடான உள்ளடக்கம் உள்ளது.
இந்தக் கோப்பின் அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகள் ஒவ்வொன்றிலும் இதனை சேர்க்க முடியும்.
package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கு res/values/strings.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

அனைவருக்கும் வணக்கம்
Settings

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்”
எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப்பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்
2.2
வரைச்சட்ட புறவமைப்பு
வரைச்சட்ட புறவமைப்பு என்பது ஒரு உருப்படியை பிரதிபலித்திடுவதற்காக திரையின் ஒரு பகுதியில் தடுப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வரைச்சட்ட புறவமைப்பு என்பதை ஒரு ஒற்றையான உறுப்பினரின் காட்சியை தாங்குவதற்கு பயன்படுத்திகொள்ளப்படுகின்றது ஏனெனில் உறுப்பினர்களின் காட்சி ஒன்றுடன் மற்றொன்று சேர்ந்திடாமல் வெவ்வேறு திரைகாட்சியின் அளவுகளில் அவைகளின் அளவானவை இருந்திடுமாறு செய்வது என்பது ஒரு வழியில் காட்சிகளை நிருவகிப்பதற்கு மிகக்கடினமான செயலாக இருக்கும், , நாம், ஒரு வரைச்சட்ட புறவமைப்பில் பல உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் android:layout_gravity attribute. என்பதை பயன்படுத்தி, ஒவ்வொரு உறுப்பினரை ஈர்ப்பதற்கும் ஒதுக்கீடுசெய்வதன் மூலம் அவர்களுடைய நிலையை கட்டுப்படுத்த முடியும்:
வரைச்சட்ட புறவமைப்பின் பண்புக்கூறுகள்

1.5
எடுத்துகாட்டு
இந்த எடுத்துகாட்டில் வரைச்சட்ட புறவமைப்பை பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒன்றினை எவ்வாறு உருவாக்குவது என எளிய வழிமுறைகளை மூலம் நம்மை வழிநடத்தி செல்லும் “அனைவருக்கும் வணக்கம்” எனும் எடுத்துக்காட்டின் பகுதியில் நம்மால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை மாறுதல்கள் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக:

1.6
பின்வருவது filesrc / com.example.helloworld / MainActivity.java எனும் கோப்பின் மாற்றப்பட்ட முதன்மை செயல்பாடான உள்ளடக்கம் உள்ளது.
இந்தக் கோப்பின் அடிப்படை வாழ்க்கை சுழற்சி முறைகள் ஒவ்வொன்றிலும் இதனை சேர்க்க முடியும்.
package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle; I
mport android.app.Activity;
import android.view.Menu;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கு res/values/strings.xmஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

HelloWorld
Settings

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்”
எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப்பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல் நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

2.3
பட்டியல் காட்சி
அண்ட்ராய்டின் பட்டியல் காட்சி(ListView) என்பது பல பொருட்களாலான குழுக்களையும் செங்குத்தாக உருளும்படியான பட்டியலின் பிரதிபலிக்கும் ஒரு காட்சியாக வருகின்றது இந்த .பட்டியலான பொருட்கள் தானாகவே ஒரு வரிசை அல்லது தரவுதளம் போன்ற ஒரு மூலத்திலிருந்து உள்ளடக்கத்தைக் இழுத்து கொள்வது என்ற ஒரு ஏற்பானை(Adapter) பயன்படுத்தி பட்டியலிற்குள் சேர்க்கப்பட்டதாகும்
.ஒரு ஏற்பான் என்பது உண்மையில் பயனாளர் இடைமுக கூறுகளும் பயனாளர் இடைமுக கூறில் ஒரு தரவினை நிரப்பவது என்ற அந்த தரவு மூலங்களுக்கு இடையே பாளமாக விளங்குகின்றது .
பட்டியல் காட்சி(ListView) கட்டக்காட்சி(GridView) ஆகிய இரண்டும் ஏற்பான் காட்சியின்(AdapterView) துனை இனங்களாகும் மேலும் அவைகளை கட்டுப்-படுத்துவதால் ஒரு ஏற்பானிற்குள் அவைகளை பிரபலபடுத்திடமுடியும் இதனை தொடர்ந்து வெளிப்புற மூலத்தில் இருந்து தரவை மீளப்பெறவும் ஒவ்வொரு தரவின் உள்ளீட்டிற்குமான பிரிநிதிஎன்று ஒரு காட்சியை உருவாக்குகின்றது,
ஒரு ஏற்பான் காட்சிக்காக (அதாவது. பட்டியல் காட்சி(ListView) கட்டக்காட்சி(GridView)) காட்சியை உருவாக்குவதற்காகவும் பல்வேறுவகையில் தரவுகளை மீளப்பெறுவதற்காகவும் என்று பயன்படுத்தி கொள்வதற்கு ஆண்ட்ராய்டானது ஏராளமான துனை இணங்களை வழங்குகின்றது
வரிசை ஏற்பான்,சுட்டிஏற்பான் ஆகிய இரண்டும் பொதுவான சிறந்த ஏற்பான்களாகும் இவைஇரண்டிற்கும் தனித்தனியான எடுத்துகாட்டினை பின்வரும்பகுதியில் நாம் காணவிருக்கின்றோம்
பட்டியல் காட்சியின் காரணிகள்
பின்வருவது பட்டியல் காட்சியின் குறிப்பிட்ட முக்கியமான பண்புக்கூறுகளாகும்

1.7
அணிஏற்பான்
நம்முடைய தரவு மூலமானது ஒரு அணியாக இருக்கும்போது நாம் இந்த ஏற்பானை பயன்படுத்த முடியும். இயல்புநிலையில், வரிசைஏற்பான் (தகவி) ஆனது ஒவ்வொரு பொருளின் மீதும் to String() எனும் அழைப்பின்மூலம் ஒவ்வொரு அணியான பொருளிற்காகவும் காட்சியை உருவாக்குகின்றது மேலும் ஒரு உரைக்காட்சியில்(TextView) இந்த உள்ளடக்கங்களை வைத்திடுகின்றது . நாம், ஒருசரங்களாலான அணியை வைத்திருப்பதாக கொள்வோம் நாம் ஒரு பட்டியல் காட்சியை பிரதிபலக்க செய்திட விரும்புகிறோம் எனில் ஒவ்வொரு அணியானச்சரத்திற்கும் ஒவ்வொரு சரத்திற்கும் புறவமைப்பை குறிப்பிடுவதற்கு ஒரு புதிய அணி ஏற்பானை துவக்கி ஒரு கட்டமைப்பவரை பயன்படுத்தி கொள்ளவேண்டும்
ArrayAdapter adapter = new ArrayAdapter(this,
R.layout.ListView,
StringArray);
இங்கே இந்த கட்டமைப்பாளருக்கான மதிப்புருக்கள் உள்ளன:
இதுதான் பயன்பாட்டு சூழல்ஆகும். பெரும்பாலானவை இப்படியாகத்தான் இருக்கும் அதனால் இதனை கவணமாக வைத்திடுக.என்பதுமுதல் மதிப்புருவாகும்
XMLகோப்பில் புறவமைப்ப வரையறுக்கப்பட்டது வரிசையில் ஒவ்வொரு சரத்திற்காக உரைக் காட்சி இருக்கின்றது என்பது இரண்டாம் மதிப்பருவாகும்
உரை காட்சியில் ஒரு சரங்களின் வரிசையை பிரபலபடுத்திட வேண்டும் என்பது இறுதி மதிப்புருவாக உள்ளது.
நாம் இவ்வாறு ஒரு வரிசை ஏற்பானை உருவாக்கிவிட்டால், பின்னர் நம்முடைய ListViewஎனும் பொருளின் மீது வெறுமனே setAdapter() என்பதை அழைக்கலாம் அது பின்வருமாறு இருக்கும்:
ListView listView = (ListView) findViewById(R.id.listview);
listView.setAdapter(adapter);
நாம் res/layoutஎனும் கோப்பகத்தின் கீழ் XML எனும் ஒரு கோப்பில் நம்முடைய பட்டியல் காட்சியை வரையறுக்க வேண்டும். நம்முடைய எடுத்துக்காட்டில் நாம் activity_main.xml எனும் கோப்பை பயன்படுத்தி கொள்ள போகின்றோம்.
எடுத்துகாட்டு
பட்டியல் காட்சி (ListView)என்பதை பயன்படுத்தி நாம்நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை எவ்வாறு உருவாக்குவது என பின்வரும் எளிய வழிமுறைகளை மூலம் காண்பிப்பதற்காக நம்மை அழைத்து செல்லும் . நாம் “அனைவருக்கும் வணக்கம்” எனும் எடுத்துக்காட்டு பகுதியில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை மாறுதல்கள் செய்திட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக:

1.8
பின்வருவது src/com.example.அனைவருக்கும் வணக்கம்/MainActivity.java எனும் கோப்பின்மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை செயல்பாட்டின் உள்ளடக்கமாக உள்ளது. இந்தக் கோப்பினைஅடிப்படைவாழ்க்கை சுழற்சிமுறைகள் ஒவ்வொன்றிலும் சேர்க்க முடியும்.
package com.example.அனைவருக்கும் வணக்கம்;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.widget.ArrayAdapter;
import android.widget.ListView;
public class MainActivity extends Activity {
// Array of strings… String[] countryArray = {“India”, “Pakistan”, “USA”, “UK”};
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
ArrayAdapter adapter = new ArrayAdapter(this,
R.layout.activity_listview, countryArray);
ListView listView = (ListView) findViewById(R.id.country_list);
listView.setAdapter(adapter);
}
}
பின்வருவது res/layout/activity_main.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

பின்வருவது புதிய இரு மாறிலிகளை வரையறுப்பதற்கு res/values/strings.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கங்களாகும்

அனைவருக்கும் வணக்கம்
Settings

பின்வருவது res/layout/activity_listview.xmlஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “அனைவருக்கும் வணக்கம்”
எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிபட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல் நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்
2.4

லிபர் ஆஃபிஸின் பேஸ் ஒரு அறிமுகம்

பொதுவாக நாமெல்லோரும் தனியுடைமை மென்பொருளான எம்எஸ் ஆஃபிஸ் எனும் மென்பொருளை பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்த செய்தியேயாகும் இந்த எம்எஸ் ஆஃபிஸ் என்பதற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் எனும் கட்டற்ற பயன்பாடும் கட்டணமில்லாமல் கிடைக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இதில் எம்எஸ் வேர்டிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் என்பதும் , எக்செல்லிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் கால்க் என்பதும், பவர்பாய்ன்ட்டிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் என்பதும் , அக்சஶிற்கு மாற்றாக லிபர் ஆஃபிஸ் பேஸ் என்பதும் உள்ளன இந்த எம்எஸ் ஆஃபிஸ் பயன்பாடுகளில் உள்ள அத்தனை வசதி வாய்ப்புகளும் இந்த லிபர் ஆஃபிஸிலும் உள்ளன கூடுதலாக இந்த லிபர் ஆஃபிஸானது லினக்ஸ் மட்டுமல்லாது விண்டோ ,மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மிகமுக்கியமாக ஆண்ட்ராய்டு கைபேசியிலும் இந்த லிபர் ஆஃபிஸ் கோப்புகளை காட்சியாக கண்டு படித்திடலாம் அதைவிட எம்எஸ் ஆஃபிஸில் வேர்டை பயன்படுத்திகொண்டிருக்கும்போது எக்செல் பயன்பாட்டினை திறக்க வேண்டுமெனில்வழக்கமாக அதற்கான உருவப்பொத்தானை செயல்படுத்திடவேண்டும் ஆனால் லிபர் ஆஃபிஸில் நாம் திறந்த பணிபுரியும் லிபர் ஆஃபிஸ் பயன்பாட்டின் திரையின் மேலே கட்டளைபட்டையில் File=>New=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் பட்டியில் நாம் விரும்பும் பயன்பாட்டின் பெயரை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன் தொடர்புடைய பயன்பாடு திரையில் தோன்றிடும் மேலும் இருவேவ்வேறு பயன்பாடுகளை எம்எஶ் ஆஃபிஸில் ஒரே திரையில் அருகருகே திறந்து பணிபுரியும் வசதி கிடையாது ஆனால் இந்த லிபர் ஆஃபிஸின் ரைட்டரில் பணிபுரியும்போது மேலே கூறிய வழிமுறையை பின்பற்றி நாம் விரும்பும்மற்றொரு பயன்பாட்டினை இதே திரையில் தோன்றிட செய்து இவையிரண்டும் அருகருகே வைத்து கொண்டு ஒப்பீட்டு பணியை எளிதாக செய்திடலாம் அதுமட்டுமல்லாது லிபர் ஆஃபிஸின்ரைட்டரில் நாம் உருவாக்கிய கோப்பினை நம்முடைய நன்பர்களுக்கு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்து அனுப்ப விரும்பினால் அதற்காக தனியான பயன்பாடு எதனையும் செயல்படுத்த தேவையில்லை அதற்கு பதிலாக திரையின் மேலே கட்டளை பட்டையில் File=> என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் பட்டியில் Export as PDFஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன்விரியும் உரையாடல் பெட்டியில் Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் இந்த கோப்பிற்கான பெயர் சேமிக்கவேண்டிய இடம் ஆகிய-வற்றை தெரிவுசெய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உள்ளீடு செய்த பெயரில் நாம் விரும்பிய இடத்தில் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றமாகிவிடும் மேலும் இந்த லிபர் ஆஃபிஸ் நாம் எம்எஸ் ஆஃபிஸின் எம்எஸ்ஆஃபிஸ் 97-2003, எம்எஸ் ஆஃபிஸ் 2007-2013 போன்ற எந்தவொரு கோப்பினையும் திறந்து பணிபுரியலாம் பணிபுரிந்து முடிந்த பின்னர் லிபர் ஆஃபிஸ் கோப்பாக அல்லது எம்எஸ் ஆஃபிஸின் எம்எஸ்ஆஃபிஸ் 97-2003, எம்எஸ் ஆஃபிஸ் 2007-2013 போன்ற எந்தவொரு வகை கோப்பாகவும் சேமித்து கொள்ளலாம் அதைவிட நாம் செல்கின்ற இடத்தின் கணினியில் இந்த லிபர் ஆஃபிஸ் பயன்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை நம்முடைய பென்ட்ரைவிலிருந்தபடியே லிபர் ஆஃபிஸ் போர்ட்டபள் என்ற வசதியினை கொண்டு நாம் லிபர் ஆஃபிஸை செயல்படச்செய்து நம்முடைய பணியை முடித்துகொள்ளலாம் எம்எஸ் ஆஃபிஸில் அவ்வப்போது புதிய பதிப்புகள் வெளியிடுவதை போன்றே இந்த லிபர் ஆஃபிஸிலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒரு முறை புதிய பதிப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடபடுகின்றனஎன்ற கூடுதல் செய்தியையும் மனதில் கொள்க . இவ்வாறு ஏராளமான பல்வேறு வகைகூடுதலான பயன்கள் இந்த லிபர் ஆஃபிஸில் உள்ளன
அவ்வாறான எம்எஸ் ஆஃபிஸின் அக்சஸிற்கு இணையானஅதைவிட கூடுதலான வசதி வாய்ப்புகளுள்ள லிபர் ஆஃபிஸின்பேஸ் என்ற பயன்பாட்டினை பற்றி லிபர் ஆஃபிஸின் பேஸ் ஒரு அறிமுகம் எனும் கட்டுரை தொடரில் உங்களின் முன் சமர்ப்பிக்கின்றேன் வாருங்கள் இந்த லிபர் ஆஃபிஸினை உங்களின் தேவைக்கு பயன்படுத்தி பயன்பெறுக என கூறிக்கொண்டு இந்த லிபர் ஆஃபிஸின் பேஸ் ஒரு அறிமுகம் எனும் கட்டுரை தொடரினை துவங்குகின்றேன்

Previous Older Entries