இதழ்களை உருவாக்க உதவும் இலவச பயன்பாட்டு மென்பொருள்

கதை ,கட்டுரை மற்றும் துணுக்குகள் போன்றவைகளுடன் படங்களையும் இணைத்து வாசகர்களை கவருந்தன்மையுடன் இதழ்களை(magazine) உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்துவந்தது ,ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கணினியின் மென்பொருளில் ஏற்பட்ட முன்னேற்றங்களினால் இவைகளை  மிகச்சுலபமாக உருவாக்கலாம் என்ற நிலை தற்போதுள்ளது,

Adobe creative suite 3,  Quark Xpress போன்ற பயன்பாட்டு மென்பொருள்களின் வரவால் பத்திரிகை துறை மிகவும் பெரிதும் முன்னேற்ற மடைந்துள்ளது என்பதே  உண்மையாகும் ஆனாலும் இந்த DTP பயன்பாட்டு மென்பொருட்களுக்கு ரூபாய் 35000 முதல் 40000 வரை செலவிட வேண்டியுள்ளது,

2001 ஆம் ஆண்டிற்கு பிறகுமென்பொருள் துறையானது  திறமூலமாக மாறிவரும் சூழலில்Franz Scmid என்பவர் scribus என்ற DTPக்கான இலவச மென்பொருள் நிரல்தொடரை லினக்ஸ் தளத்தில் இயங்குமாறு வெளியிட்டுள்ளார்

இது லினக்ஸ் தளத்தில் மட்டுமல்லாது விண்டோ மற்றும் மேக் தளங்களிலும் நன்கு செயல்படும் தன்மையுடன் விளங்குகிறது

வரைகலை வடிவமைப்பாளர் இதனை தங்களுக்கு பொருத்தமானதாக இல்லை என குறை கூறினாலும் பின்வரும் பல்வேறு வகையான நோக்கங்களுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளலாம்

1, செய்திதாள், பருவ இதழ், சுவர்விளம்பரபடம், அழைப்பிதழ்அட்டை உருவாக்குவதற்காக

2,அச்சிடும் நிறுவனங்களில் பல்வேறு அச்சிடும் பணிகளுக்காக

3, லோகோ மற்றும் மாதிரிகளை அச்சிடுவதற்காக

4,படைப்புகளை பிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்து பயன்படுத்த

டிடிபி ஆனது சிக்கலான  வெவ்வேறு வடிவமைப்புகளை உடைய பலஉறுப்புகளை உள்ளடக்கியதாகும், அதனால் இந்த பணியின்போது ஏராளமான பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன,அச்சுக்குமுன் இவ்வாறு ஏற்படும் பிழைகளை கண்டுபிடிக்க preflight verifier என்ற கருவி பயன்படுகிறது, இவ்வாறான வாய்ப்புகள் scribus லும் உள்ளது.

 

 

படிமுறை-1-பதிவிறக்கும் செய்து நிறுவுதல்: முதலில் இந்த scribus  பயன்பாட்டினை  http://www.scribus.net  என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கும் செய்துகொள்க, இந்த பதிவிறக்கம் பணியை செய்யுமுன் நம்முடைய இயக்கமுறைமைக்கேற்ற (os )பதிப்பாக தெரிவுசெய்க அதற்கேற்றவாறான கட்டளைகளை அடுத்த பக்கத்திலிருந்து படித்து தெரிந்து கொள்க, Adobe postscript , PDF இன் கோப்புகளுக்கு மூலமொழிமாற்றியாக செயல்படும்

முதலில்Ghost script என்பதை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதற்காக திரையில் உள்ள Ghost script8,54என்பதையும் பின்னர் +download link என்பதையும் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக, உடன் விரியும் பட்டியில் ‘open a new window ‘என்பதை தெரிவு செய்க, அதன்பின்னர் இதில் கூறும் படிமுறைகளை பின்பற்றி ‘download Scribus’ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,உடன்  scribus என்ற மென்பொருள் நம்முடைய  கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்,

இந்த சமயத்தில் ‘The following programs are missing Ghostscript: you cannot use EPS image or postscript print preview’ என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும் இதற்கு   file / preferences என்பதை தெரிவு செய்க,இடதுபுற பலகத்தில் உள்ள ‘External Tools’  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக Postscript interpreter என்பதுgswin32c.exe என்ற கோப்பில் இருக்கும்,இது இருக்குமிடம் C:/program files / gs/gs8.54 / bin /gswin32c.exe என்பதாக உள்ளதா என சரிபார்க்கவும் இவ்வாறு இது சரியாக  அமர்ந்திருந்தால் இவ்வாறான பிழை ஏற்படாது,

படிமுறை-2-திருத்தமற்ற இடஅமைவுபடம் வரைதல்: ஒரு தாளில் இடஅமைவுபடம் சாதாரண சுற்றெல்லையாக ஆக வரைந்துகொள்க இவ்வாறான இதன் ஒவ்வொரு இடஅமைவுபடத்திலும் உரை,உருவப்படம், காலி இடம் ஆகியவை தங்களுக்குள் முன்பின் சரிசெய்து மிகச்சரியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும்,

இவ்வாறு திருத்தமற்ற சுற்றெல்லை வரையும்போது இதில் அதிகஅளவு இடநெருக்கடியாகவோ அல்லது ஒன்றுமே இல்லாமல் காலியாகவோ இல்லாமல் போதுமான அளவு இடவசதியுடன் மிகப்பொருத்தமாக இருக்குமாறு இதனை உருவாக்குக,

இதன் ஒவ்வொரு பக்கத்தையும் திறுத்தமற்ற விளக்கபடமாக இடஅமைவுபடத்தின் வகைக்கேற்ப வரைந்துகொள்க,இதில் இரண்டு பெட்டிகளை ஒன்றில் தொடர்ச்சியான உரையும் மற்றொன்றில் மிகவும் வலதுபுறமாக இருக்குமாறும்உருவாக்குக, இடையில் ஆங்காங்கு படங்களை உள்ளிணைத்து மிகுதிஇடங்களில் உரைகளையோ உருவபடங்களையோ முன்பின் சரிசெய்து அமைத்துகொள்க,

இவ்வாறு இடஅமைவுபட சுற்றெல்லையை ஒவ்வொரு பக்கத்திற்கும் உருவாக்கி விட்டால் அதன்பிறகு நம்முடைய பணி மிகச்சுலபமாகும் ,உருவபடத்தின் பண்பியல்பை RGM வடிவமைப்பிலிருந்துGMYK உருவபடத்தை(200dpi)அளவுள்ளதாக உருமாற்றுக, Gimp என்ற வரைகலை பயன்பாடு நம்மிடம் இல்லாமலிருந்தால் GYMK ஆதரிக்ககூடியhttp://www.blackfiveservices.co.uk/seperater.shtm1     என்ற வலைதளத்திலிருந்து
இதனை  பதிவிறக்கம் செய்துகொள்க,

scribus இல் வேர்டு ஆவணத்தின் உரையை உருமாற்றும்செயல் பளுஅதிகம் நிறைந்த பணியாகும், படமில்லாத உரைஆவணமெனில் story editorஐகொண்டு  நேரடியாகவடிவமைப்பு செய்துகொள்க

படிமுறை -3-வழிமுறை கோட்டை அமைத்தல்: scribus-ன் குறும்படத்தை  தெரிவுசெய்து சொடுக்கியவுடன் திரையில் தோன்றும் மின்வெட்டிற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் பின்னர் ‘new document’ என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில் preset layout and the margin guides என்பது தானாகவே அமைக்கப்பட்டிருக்கும்

options என்பதில் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்க பக்கங்களின் எண்ணிக்கை 2 என்றும் உள்வெளி (inside outside)விளிம்பின் அளவை 8.000mm என்றும் மேல் கீழ் விளிம்பின் அளவை 12.000 mm என்றும் அமைத்திடுக, ஆவண இடஅமைவு படத்தில் ‘double sided என்பதை தெரிவுசெய்து இடதுபுறம் முதல் பக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்க,

தேவையான அளவு precisionஇல் சரிசெய்து கொள்க,இவைகள் உரையையும் உருவபடத்தையும் சரிசெய்ய உதவுகிறது,

பின்னர்page/manage Guides என்பதை தெரிவுசெய்க,உடன் தோன்றும் உரையாடல் பெட்டியின்Rows and Column என்பதில் கீழிறங்கு பட்டியிலிருந்து 3 என நெடுவரிசைக்கு (Column) தெரிவு செய்க,நெடுவரிசை இடைவெளி(Column Gap) என்பதற்கு 5,000mm என தெரிவுசெய்க, Refer to என்பதில் marginesஎன்றவாய்ப்பை தெரிவுசெய்க view show Guides, show Baseline ஆகியவற்றை தெரிவுசெய்து சொடுக்குக இதில் உள்ள அடிப்படைகோடு (baseline) என்பது உரைத்தொடரின் கற்பனை கோடாகும் இது மிகச்சரியாக நெடு வரிசையும் பக்கமும் அமைவதற்கு உதவுகிறது,சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக  உடன் தோன்றும் பட்டியில் sample text என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,இதில் உள்ள கோட்டு இடைவெளியை அப்படியே அடிப்படை கோட்டிற்கும் பின்பற்றுக,

படிமுறை -4-முதன்மை பக்கத்தை உருவாக்குதல்: பக்கங்களின் எண்கள் தலைப்பு முடிவு ஸ்பாக்ஸ் , வேறுவடிவமைப்பு உறுப்புகளை முதன்மை பக்கத்தில் உள்ளடக்கியதாகும், பல்வேறுவகைகளில் முதன்மை பக்கங்களை உருவாக்கி பக்கங்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுத்திகொள்ளலாம், பக்கங்களின் எண்கள் மட்டும் தொடர்ச்சியான எண்களாக இருக்குமாறு மாற்றியமைத்து கொண்டே வரவேண்டும், Edit/Master pagesஎன்பதை தெரிவு செய்க,உடன்விரியும் பட்டியில் New Master pageஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் இதற்கு ஒரு பெயரிடுக,

அதன் பின்னர் கீழ்புறமுள்ள மூலையில் உரைபெட்டியை உள்ளிணைத்து Insert /charcter/page number என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மற்றொரு உரைபெட்டி அல்லது உருவப்படத்தின் பெயரையும் தேர்வுசெய்பெட்டியின் பெயரையும் நடப்பு பக்கத்தில் உள்ளீடு  செய்க தேவையானால் மாறுதல் செய்து கொள்க,பிறகு முதன்மை பக்கத்தை மூடிவிடுக, பின்னர் page / apply Master page என்பதை தெரிவுசெய்து சொடுக்கியபின் புதியதாக உருவாக்கப்பட்ட முதன்மை பக்கத்தை தெரிவு செய்து கொள்க,

படிமுறை -5-உரையை உள்ளிணைத்தலும் பதிப்பித்தலும்: வேர்டு ஆவணத்தை திறந்தவுடன் உரையை தட்டச்சு செய்யலாம் ஆனால் இந்த இதழ்  பயன்பாடுகளில் உரையையும் உருவபடத்தின் சட்டத்தை(frame) உருவாக்கிய பிறகே உரையை தட்டச்சு செய்யமுடியும்

இந்த சட்டங்களில் எங்கெங்கு படம் அல்லது உரை இருக்கவேண்டும் இவை எவ்வாறு இருக்கவேண்டும் என பிரித்தறிகிறது, பெரும்பாலான இடஅமைவுபடங்கள் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே இடஅமைவுபடமாக உள்ளன,

Insert Text box  என்பதை  தெரிவுசெய்து சொடுக்கி உரைபெட்டியை வரைந்திடுக, அதன்பின்னர் இந்த உரையை நகலெடுத்து இருமுறை உரைபெட்டியை இருமுறை சொடுக்கி இதனை ஒட்டி கொள்க, பின்னர் இந்த உரைகளை தெரிவு செய்து கொண்டுstory editor என்ற குறும்படத்தை(icon) தெரிவுசெய்து சொடுக்குக,

Scribus  இல் ஒவ்வொரு பத்தியும் தனித்தனி வடிவமைப்பில் உள்ளதால் தனித்தனி எண்களை வெவ்வேறு வகையின் பாவணையி(style) ல் வடிவமைப்பு செய்க புதிய பாவணையை உருவாக்கி no style என்பதை தெரிவுசெய்துகொள்க,பின்னர் edit style என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, இதற்கு Body Text எனப் பெயரிடுக பின்னர் தேவையான பாவணையை அமைத்து Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் No style என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பாவணையை தெரிவு செய்து கொள்க,update என்ற குறும்படத்தை தெரிவு செய்தால் நாம் செய்த மாறுதல் செயல்படுத்தப்படும் இவ்வாறு தலைப்பு துனைத்தலைப்பு தலைப்பு ஆகியவற்றிற்கு பொருத்தமான பாவணையை அமைத்துகொள்க,

பெரும்பாலும் உரையானது ஒரே பக்கத்தில் அமையாது தொடர்ந்து அடுத்தடுத்த பக்கத்திற்கும் செல்லும் அந்நிலையில்அடுத்த பக்கத்திலும் உரைபெட்டியை வரைந்து மிகுதி இருக்கும் உரையை முந்தைய பக்கத்திலிருந்து தெரிவுசெய்து  link frame என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி காலி உரைபெட்டியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மிகுதி உரை அடுத்த பக்கத்திலும் தொடரும்,

படிமுறை– 6-ஒரு பக்கத்தில் படங்களை அமைத்தல்: உருவப்படத்தை( image) உள்ளிணைப்பதற்கு insert  insert/image frame என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக ,பின்னர் ஒரு உரைபெட்டியை வரைக, அதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் தோன்றும் சூழ்நிலை பட்டியில் Get image என்பதை தெரிவுசெய்க

பின்னர்படங்கள் உள்ள கோப்பினை தெரிவு செய்து திறந்து கொள்க,

படத்தின் அளவை சரிசெய்ய சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியடன் விரியும் சூழ்நிலை பட்டியில் property என்பதை தெரிவு செய்க அல்லது F2 என்ற செயலிவிசையை அழுத்துக,

உடன் தோன்றம் properties என்ற உரையாடல் பெட்டியில் image என்றதாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் திரையில் scale to frame size என்பதில்proportion என்பதை தெரிவு செய்து சரியாக இந்த சட்டத்திற்குள் அமையுமாறு செய்க அல்லது free scalingஎன்பதை தெரிவுசெய்து அமைக்கவும்

உருவபடத்தைimage  சுற்றி உரையானது மடங்கி அமர்வதற்கு  properties என்ற உரையாடல் பெட்டியில் shape என்பதை தெரிவு செய்க  Text flow around frame என்பதையும் using contour line என்பதையும் தெரிவுசெய்க,

பின்னர் edit shape என்பதை தெரிவுசெய்து சொடுக்குக படத்தை சுற்றி increase அல்லது decreaseஆக அமருமாறு செய்து அமைத்துகொள்க,

படத்தின் ஏதேனுமொரு முடிவு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன் விரியும் பட்டியில்  Add node என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உருவபடத்தின் ஒரு பகுதியில் உரை இல்லாமலும் மற்றஇடங்களில் உரை இருக்குமாறும் அமர்ந்துவிடும் அதனால் delete node என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கினால் தேவையற்ற இடங்களில் உள்ள உரை நீங்கிவிடும்

F2 என்ற செயலிவிசையை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் உரையாடல் பெட்டியில் color என்ற தாவியின் பொத்தானை தொரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் fill properties என்பதை தெரிவு செய்துshadeஐ தெரிவு செய்து கொள்க

ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களையும்(Color), நிழல்(shade) களையும் மட்டும் தெரிவுசெய்க, வெவ்வேறு  உருவங்களை(shape) உள்ளிணைத்த (insert) பிறகு இதனை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் convert to என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக,விரும்பும் குறிமுறையை தெரிவு செய்து உருமாற்றம் செய்க,  Level என்பதை தெரிவுசெய்து எங்கு அமைந்திடவேண்டும் என முடிவுசெய்க,

படிமுறை -7-இறுதிச்சுற்று பணிகள்: இவ்வாறு உருவபடத்தை சுற்றி உரைபெட்டியை உள்ளிணைக்கும் போது அழகாக அமையாது அதனால் இதனை பதிப்பான்(editor) மூலம் சரிசெய்து சரியாக அமையுமாறு செய்க,

Text flows around frame என்பதை உருவப்படபெட்டியை சுற்றி அல்லது ஒன்றுக்கொன்று  overlap ஆகுமாறு  தெரிவுசெய்து கொள்க,grids , guide ஆகியவற்றை மாற்றி பிரிபலிக்கச்செய்து சரியாக அனைத்தும் அமர்ந்திருக்கின்றதாவென சரிபார்த்து உறுதிசெய்து கொள்க

படிமுறை -8-இதழை அச்சிடுதல்:முன்பெல்லாம் Quark Xpress என்ற பயன்பாட்டில் இவ்வாறான பணிமுடிந்ததும் அப்படியே அச்சிற்கு அனுப்பிவிடுவார்கள் ஆனால் இப்போது இவ்வாறு உருவாக்கிய கோப்பினை கையடக்க(PDF) ஆக உருமாற்றிய பிறகுதான் அச்சுக்கு அனுப்புகின்றனர்

அதனால் பயனாளர் DTPபயன்பாட்டு மென்பொருளை வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை ,மேலும் இது நிரந்தர எழுத்துரு ஆகும் அதன் பயனால் ஏதேனும் கைதவறுதலாக பிழை ஏற்பட்டு அமைப்பு மாறிவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை

File/Export/save as PDF என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து fonts என்ற தாவித்திரையை தோன்றசெய்து  எழுத்துருவை உள் பொதிந்து அமைத்திடுக,

.sk என்ற பின்னொட்டுடன் செல்லும் கோப்பினை பெறுபவர் collect for output என்பதை பயன்படுத்தி அனைத்தையும் பார்வையிடலாம்,file/ collect for output என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி திறந்து பார்க்கலாம்

Indent font என்ற கட்டளையானது பெறுபவரிடம் இந்த எழுத்துரு இல்லையென்றாலும் பார்வையிட உதவுகிறது,

Scribus மூலம் இவ்வாறான படிமுறையைபின்பற்றி  ஒரு இதழை மிகச்சுலபமாக உருவாக்கலாம்

 

அறிந்துகொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி-25- விபிஏ தருக்கமுறை கட்டமைவு கள்

ஒரு பயன்பாட்டினை வடிவமைப்பு செய்திடும்போது செயல்படுத்திடும்  தரவை  பொறுத்து இதனை நிரலில் எந்த பகுதியை பயன்படுத்துவது என தீர்மாணம் செய்யவேண்டுவது நிபந்தனை சார் செயலாக்கம்(conditional execution) என்பார்கள்

இதனை செயல்படுத்துவதற்காக நிரல்தொடரில் ஒரு சோதனை அல்லது நிபந்தனைக்கு பதிலளிக்கவேண்டும்  குறிப்பிட்ட நிபந்தனை உண்மையாக இருந்தால் நிரல்தொடரின் குறிப்பிட்ட பகுதி செயல்படுத்தபடும் இல்லையெனில் அடுத்த பகுதிக்கு தாண்டிசென்றுவிடும் விபிஏவில் இந்த நிபந்தனையானது இரண்டு வகையாக பிரிக்கபட்டுள்ளது

1நிபந்தனை சார்ந்த செயல்(condition processing)

2. திரும்ப திரும்ப செய்யபடும் செயல் (கண்ணி) (Loop)

 1நிபந்தனை சார்ந்த செயல்(condition processing)

ஒரு பயன்பாட்டு நிரல்தொடரை பரிசோதிப்பதற்காக பல்வேறு வழிகள் உள்ளன என்றாலும் முதன்மையான வழியொன்றுதான் உள்ளது எ.க ஒரு பாதை வழியாக நாம் ஒரு சிற்றுந்தில் சென்று கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில்  அந்த பாதை மூன்றாக பிரிகின்றதாக கொள்வோம்  அவ்விடத்தில் உள்ள ஒரு கைகாட்டி யானது அந்த மூன்று பாதைகளும் செல்லும் ஊரின் பெயர் விவரங்களை கொண்டுள்ளது .உடன்  அவற்றுள்  எந்தபாதையை தெரிவுசெய்கின்றோமோ அந்த ஊருக்கு நாம் சென்று சேரமுடியும்

அவ்வாறே ஒரு விபிஏவின் நிரல் தொடர் ஒன்றிலும் வெவ்வேறு  செயல்பாடுகளுக்கான மதிப்பை திரையில் பிரதிபலிக்கசெய்து  எந்த மதிப்பை நாம் தெரிவுசெய்கின்றோமோ அது உண்மையாக இருந்தால் அதன் விளைவு  நமக்கு கிடைக்கும்படி செய்யபட்டுள்ளது இவ்வாறு விபிஏவில் If……then……endif என்பது ஒரு பரிசோதனை செய்யும் கூற்றாகும்  இதில் உள்ள  ifஎன்பது மிகவும் ஆற்றல் வாய்ந்ததுதான் என்றாலும் இது ஒருநேரத்தில் ஒருபரிசோதனையை மட்டுமே செயல்படுத்தும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட  நிபந்தனைகளை பரிசோதிக்க வேண்டுமானால்  elseif,else என்ற கூற்றுகளை பயன்படுத்திகொள்ளவேண்டும் இதில் கடைசியாக இயல்புநிலை செயலாக else என்ற கூற்று இருக்கவேண்டும்

நிரல்தொடர் -25-1

Private cmd print_click( )

Dim report Dest as integer

me.visible = false

if me(grptype of output) = 1 then

report dest = ac preview

else

report dest = ac normal

end if

if me! (grptype of print) = 1 then

do cmd.open report “rpt products”, report dest,

“(chr product Id)”. (form)!(frm production)!(txt product Id)”

else if me! (grp type of print) = 2 then

do cmd.open report “rpt products”, “report dest”

else

do cmd.open report “rpt products”, report dest

end if

exit sub

end sub.

இதில்  ஒரு பொத்தானை சொடுக்கினால் அறிக்கை யொன்று அச்சிடுவதற்கான குறிமுறையானது  If………..then……….endif என்றவாறு கூற்றுகளை பயன்படுத்தி எழுதபட்டுள்ளது இதில் முதலில் if என்ற கூற்று  சோதனை செய்கின்றது  அது உண்மையாக (true)இருந்தால் அதனோடு சேர்ந்துள்ள then என்ற கூற்று செயல்படு கின்றது. பின்னர் மற்ற குறிமுறைகளை  தாண்டி சென்று விடுகின்றது   முதல் கூற்று பொய்யெனில் (false)முதலில் elseif என்ற கூற்று சோதனை  செய்கின்றது உண்மையாக (true)இருந்தால் அதனோடு சேர்ந்துள்ள then என்ற கூற்று செயல்படுகின்றது.பின்னர் மற்ற குறிமுறைகளை  தாண்டி சென்று விடுகின்றது  இதுவும் பொய்யெனில் கடைசியாக  இயல்புநிலையில் உள்ள else என்ற கூற்று செயல்படுகின்றதுஇதுபோன்று

ஒரு நிபந்தனை பலமுறை தொடர்ந்து சோதனைசெய்யபடுகின்றது. இந்த நிரல்தொடரின் வழிமுறையில் பல நிபந்தனைகளை சோதனைசெய்வதற்கு மிகஅதிக அளவு குறி முறைகளை ஒரு நிரல்தொடரில்  எழுதவேண்டியுள்ளது அதற்காக தட்டச்சு செய்யும் வேலையும் மிக அதிகமாக இருக்கும் .இதற்கு பதிலாக சுலபமான மிகச்சிறந்த வழிமுறையாக selectcase என்ற கூற்று உள்ளது இந்த முறையில் சோதனை செய்யவேண்டிய கோவையை கொடுத்தபின் சோதனை செய்யவேண்டிய மதிப்பகளை caseஎன்ற கூற்றுடன் கொடுத்திடவேண்டும்

நிரல் தொடர்-2

Private sub cmd print_click ( )

Dim report as integer

me.visible = falseிமுறைகளை

if me! (grp type of output) = 1 then

report dest = ac preview

else

report dest = ac normal

end if

select case me!(grp type of print)

case 1

do cmd.open report “rpt products”, report dest,

“((chr product Id).(forms)!(frm products)!(txt product Id)”

case 2

do cmd.open report “rpt products”, report dest

case 3

do cmd.open report “rpt product listing”, report dest

end select

exit sub

end sub

இதில் மூன்றுவகையாக அச்சிடுவதற்கான வாய்ப்பு கள் வழங்கப்பட்டுள்ளன. Case1 உணைமையாக இருந்தால் நடப்பு ஆவணம் அச்சிடபடுகின்றது . Case1  பொய்யாக இருந்து case2 உணைமையாக இருந்தால் நடப்பு ஆவணம் இரண்டாம் வகையில் அச்சிடபடுகின்றது இவையிரண்டும் பொருத்தமாக இல்லை ஆனால் case3 தான பொருத்தமாக இருக்கின்றது எனில் மூன்றாவது வகையில் அச்சிடபடுகின்றது. இவ்வாறு இந்த நிரல்தொடரில் செயலானது ஒவ்வொருமுறையும் உண்மையாக உள்ளதாவென சரிபார்த்து பொருத்தமாக இருந்தால் மட்டும் செயல்படுமாறு அமைக்கபட்டுள்ளது இந்தselect case என்ற கூற்று படிப்பதற்கும் குறிமுறைகளை எழுதுவதற்கும்  மிகவும் சுலபமாகவும் எளிமையாகவும் இருக்கின்றது

2.திரும்ப திரும்ப செய்யபடும் செயல் (கண்ணி) (Loop)

.ஒரு பயன்பாட்டின் நிரல் தொடரில் பெரும்பகுதி திரும்ப திரும்ப செய்யும்  தன்மையுடையதாக இருக்கும் இவ்வாறான திரும்ப திரும்ப செய்யபடும் செயலை செயல்படு்ததுவதற்கு loopஎன்ற கூற்றை பயனபடு்ததுவது நல்லது இது குறிப்பிட்ட நிபந்தனை உண்மையாக இருக்கும் வரை  தொடர்ந்து திரும்ப திரும்ப செயல்படுத்திடும் ஒரு  கட்டளை கோவையாகும் பொதுவாக விபிஏவில் உபயோகபடுத்தபடும் கண்ணி் கூற்றுகள்  Do …………. loop, For …………. next ஆகிய இரண்டு வகையாக உள்ளன

நிரல்தொடர்-3

Private sub cmd print_click ( )

Dim report dest as integer, int counter as integer

int counter = 1

me.visible = false

if me! (grp type of output) = 1 then

report dest = ac preview

false

report dest = ac normal

end if

select case me (grp type of print)

case 1

do while int counter < = me! int copies

do cmd.open report “rpt products”, report dest, “(chr product Id)

= (form) ! (frm products) ! (txt product Id)”

int counter = int counter + 1

loop

case 2

do while int counter < = me! int copies

do cmd.open report “rpt products”, report dest

int counter = int counter + 1

loop

case 3

do while int counter < = me! int copies

do cmd.open report “rpt product listing”, report dest

int counter = int counter + 1

loop

exit select

exit sub

இந்த கண்ணியில் முதலில் do என்ற முதன்மை சொல்லுடன் இரண்டாவதாக loopஎன்ற முதன்மை சொல்லும் மூன்றாவதாக இறுதியில் while அல்லது until ஆகியவற்றில் ஒரு முதன்மை சொல்லும் சேர்ந்து மூன்று பாகங்களாக உள்ளன.

இதற்கு பதிலாக 1.do என்ற முதன்மை சொல்லுடன் இறுதியில் while அல்லது until ஆகியவற்றில் ஒரு முதன்மை சொல்லையும்  சேர்த்து பயன்படுத்துவது

2.loopஎன்ற முதன்மை சொல்லுடன் இறுதியில் while அல்லது until ஆகியவற்றில் ஒரு முதன்மை சொல்லையும்  சேர்த்து பயன்படுத்துவது  ஆகிய இரண்டு வழிமுறையும் மேம்போக்காக பார்த்திடும்போது இரண்டும் ஒரேமாதிரியாக இருந்தாலும் முதல்வகையில் நிபந்தனை உண்மையாக இருந்தால்தான் கண்ணி ஒருமுறையாவது வேலையசெய்யும் .இரண்டாவத வகையில் நிபந்தனை உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்  கண்ணி ஒருமுறை வேலைசெய்யும்

மேலும் இதில் do…. loop  என்ற வழிமுறையில்  நிபந்தனையானது மூன்றுமுறை பரிசோதித்து பார்க்கின்றது இந்த நிரல் தொடரில்whileஎன்ர கூற்றுக்கு பதிலாக  until  என்ற கூற்றை பயன்படுத்தினால்  இந்த கண்ணி ஒருமுறை மட்டுமே இயங்கும் பின்னர் நிபந்தனை உண்மையாக இருந்தால் கண்ணியை விட்டு வெளியில் வந்துவிடுகின்றது  .do விற்கு பின்பக்கத்தில் while அல்லது until ஆகிய கூற்றில் ஒன்றை உள்ளீடுசெய்து loop  இற்கு பின் உள்ள கூறஅரை நீக்கிவிட்டு செயல்படு்ததினால் நிபந்தனை உண்மையாக இருந்தால் மட்டும் ஒருமுறையாவது செயல்படுத்தபடும்.

நிரல் தொடர்-4

Private sub cmd print_click ( )

dim report dest as integer, int counter

me.visible = false

if me!(grp type of output) = 1 then

report dest = ac preview

else

report dest = ac normal

end if

select case me! (grp type of print)

case 1

for int counter = 1 to me! int copies

do cmd.open report “rpt products”,report dest,“(chr product Id)=(form) ! (frm products) ! (txt_ products Id)”

next int counter

case 2

for int counter = 1 to me ! int copies

do cmd.open report “rpt product”. report dest

next int counter

case 3

for int counter = 1 to me ! int copies

do cmd.open report “rpt product listing”, report dest

next int counter

end select

exit sub

இதில் forஎன்ற முதன்மை சொல் இந்த கண்ணியின் செயலை துவக்குகின்றது counterஎன்ற மாறி   கண்ணியானது நடப்பில் எத்தனைமுறை செயல்படவேண்டும் என்ற எண்ணிக்கையை (iteration)  கொண்டிருக்கின்றது ஆரம்ப மதிப்பு ஆனது counter -ன் துவக்க மதிப்பாகும் .step என்ற  மதிப்பு ஒவ்வொருமுறையும்    counterஉடன் சேர்க்க வேண்டிய மதிப்பை குறிக்கின்றது இது முடிவு மதிப்பு வரும்வரை கூட்டிகொண்டே இருக்கின்றது nextஎன்ற கூற்று ஒரு கண்ணியின் இறுதிசெயலை குறிக்கின்றது கண்ணியின் ஆரம்பத்திற்கு செல்லவேண்டுமா அல்லது முடிவுமதிப்பை அடைந்திருந்தால் செயல்பாட்டினை நிறுத்தம் செய்யவேண்டுமா என முடிவுசெய்கின்றது

counter-ன் மதிப்பு end -ன் மதிப்பை அடைவதற்கு முன்பே foஎேன்ற கண்ணியைவிட்டு வெளியேற வேண்டி இதில் if என்ற நிபந்தனை சேர்க்கபட்டுள்ளது மதிப்பு உண்மையாக இருந்தால் கட்டுபாடு கண்ணியை விட்டு வெளியேறிவிடும்  இதன்முலம் தேவைக்குமேல் மீண்டும் கண்ணி செயல்படுவதை தவிர்க்கமுடியும்

இந்த கண்ணியில் step என்ற கூற்று நம்முடைய விருப்பத்தேர்வாகும் .ஆனால் ஒரு கண்ணி என்ன செய்கின்றது என்பதை பொறுத்து இந்த stepஎனும் கூற்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆயினும் இந்த stepஇற்கு மதிப்பு கொடுக்கவேண்டிய அவசியமில்லை  மேலும் இந்த step-ன் மதிப்பு எப்போதும் ஒரே மாதிரியாக இரு்கக வேண்டிய அவசியமும் இல்லை பொதுவாக இந்த  stepஇற்கு 1,2,3 என்றவாறு மதிப்பினை கொடுக்கலாம்   பெரிய எண்ணில் ஆரம்பி்தது சிறிய எண்ணில் முடிப்பதாக இருந்தால் இந்த step-ன் மதிப்ப ( –) என்றவாறு எதிர்மறையாக  இருக்கவேண்டும்

விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையில் தமிழை எவ்வாறு உள்ளீடுசெய்வது

விண்டோ எக்ஸ்பி நிறுவுகையின் குறுவட்டை (CD)அதற்கான வாயிலில் (Cd drive)செருகி தயாராக வைத்துகொண்டபின் start=>control panel=>Date, time and Regional options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Date, time and Regional options என்ற உரையாடல் பெட்டியில் install files for complex script and right to left languages including thai என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்தவுடன் நாம் தயாராக செருகி வைத்துள்ள விண்டோ எக்ஸ்பி நிறுவுகை குறுவட்டிலிருந்து தேவையான கோப்புகள் கணினியில் நிறுவப்படும்

பின்னர் கூறியவாறு Date, time and Regional options என்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்து அதில் Language என்ற தாவியின் பொத்தானை சொடுக்கி Language என்ற தாவியின் திரையை தோன்ற செய்க அதன்பின் அந்ததிரையில் detailsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் Text services and input languagesஎன்ற உரையாடல் பெட்டியில் settings என்ற தாவியின் பொத்தானை சொடுக்கி settings என்ற தாவியின் திரையை தோன்றசெய்க அதில் add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் விரியும் மொழிகளின் பட்டியிலிலிருந்து tamil என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படத்திலுள்ளவாறுkey boardஎன்பதன்கீழ் TA =tamil =keyboard =Tamilஎன்றவாறு தோன்றும்

பின்னர்ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Date, time and Regional options என்ற உரையாடல் பெட்டியில் applyஎன்ற பொத்தானையும் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பின்னர் வழக்கமான விசைப்பலகையின்மூலம் யுனிகோடு தமிழில் உள்ளீடுசெய்யலாம் நமக்கு இந்த விசைப்பலகையில் எந்தெந்த விசையில் எந்தெந்த யுனிகோடு தமிழ் எழுத்து இருக்கின்றது என தெரிவேண்டுமல்லவா

அதற்காக start=> all program=> Accessories= ease of access=> onscreen board என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் கணினியின் திரையில் onscreen board விசைப்பலகையின் பெட்டிஒன்று தோன்றும் அவ்விசைப்பலகையினுடைய இடதுபுறம் உள்ள alt +shift ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் விசைப்பலகையில் தமிழ்எழுத்து தோன்றும் shift விசையை அழுத்தினால் அதே விசைகளிலுள்ள இரண்டாவதாக உள்ள தமிழ்எழுத்துகள் தோன்றும் மீண்டும் alt +shift ஆகிய விசைகளை அழுத்தினால் விசைப்பலகையில் ஆங்கிலஎழுத்து தோன்றும்

அவ்வப்போது எழுத்துகள் எங்கேயுள்ளதுஎன தெரிந்துகொள்வதற்காக இவையிரண்டையும் அச்சிட்டு கொள்க

கணிணியினுடைய செயலி ஒன்று எவ்வாறு உருவாகின்றது

ஒரு சிறிய இண்டெல் கோர் 2 டியூ கணினி சில்லுக்குள் இலட்சக்கணக்கான மின்மபெருக்கிகள்(transistors) இருக்கின்றன என்றாலும் இவை ஒன்றுக்கொன்று மோதலும் குழப்பமும் இல்லாமல் இயங்குவதற்குஏற்ப எவ்வாறு இணைக்கப்பட்டு நன்கு பணிசெய்கின்றன என ஆச்சரிய படவைக்கின்றன, விரல்நகம் அளவேயுள்ள இந்த சின்னஞ்சிறிய கணினி சில்லுக்குள் எவ்வாறு இலட்சக்கணக்கான மின்மபெருக்கிகள்(transistors) உருவாக்கப்பட்டு அமைக்கப்படுவது சாத்தியமாகிறது என இப்போது காண்போம்,

இவ்வாறு உருவாக்க நான்கு படிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

படிமுறை -1 –பலகையை வடிவமைப்பு செய்தல் வடிவமைப்புக்கு செல்லுமுன் இவை எவ்வாறு பணிபுரிகின்றன என அறிந்து கொள்வோம், கையடக்கமுள்ள செல்லிடத்து பேசிமூலம் தொலைபேசி போன்று பேசுகின்றோம் பேசுவதை கேட்கின்றோம்,அதற்கேற்ப இதனுடைய சில்லுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என கொள்வோம் இதில் எஃப் எம் வானொலியின் பாடல்களையும், தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்வதாக கொள்வோம் இந்த பயன்பாடுகளுக்கு ஒவ்வொன்றின் பணிக்கும் தனித்தனி சில்லுகள் உருவாக்கி அமைப்பது எனில் அது கையடக்க செல்பேசியாக இருக்கமுடியாது,மிகப்பெரிய கருவியாகவே ஆகிவிடும் இதனை தவிர்க்க இவைகளின் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நிரல்தொடர் என உருவாக்கி அதனதன் மின்மபெருக்கி(transistor)யுடன் ஒதுக்கீடுசெய்து ஒரே கணினி சில்லுக்குள் இவைகளை உள்பொதிந்து அமைத்துவிட்டால் இத சாத்தியமாகும் அல்லவா!

இவ்வாறு ,இந்த கணினி சில்லுகளை உருவாக்குவதற்கு முதலில் வன்பொருளை வடிவமைத்து உருவாக்கியபின் அதனை இயக்குவதற்காக இயக்கியின் மென்பொருள் எழுதப்பட்டு இறுதியாக இவைகள் உள்பொதியப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன இதற்கு முதல்படியாக என்னென்ன செயல்கள் செயற்படுத்தப்போகின்றோமோ அதனதன் இயக்கியினுடைய மென்பொருள் எழுதப்பட்டு தனித்தனி மின்மபெருக்கி(transistor)யுடன் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றன அதன்பின்னர் இவை ஒருங்கிணைக்கப்படுகின்றன,

படிமுறை-2:மின்மபெருக்கி(transistor) என்பவை தருக்கமுறை வாயில்கள் என்பதை மனதில் கொள்க மிகவும் சிறியதான இவைகளை ஒன்றுக்கொன்று இணைத்து ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலான பணிதான் ஆயினும் இதனை எளிமைபடுத்த Hardware Descriptive Language என்பதை சுருக்குமாக குறிப்பிடும் HDL என்ற சிறப்புக் குறிமுறைகளால் எழுதப்படுகின்றது,இது நாம் வடிவமைக்கும் கணினியினுடைய சில்லுகள் ஒவ்வொன்றின் செயலும் எவ்வாறு இருக்கவேண்டுமென வரையறுக்கின்றது,மேலும் ஒவ்வொரு கடிகார சுற்றுகளிலும் எவ்வாறு இந்த சில்லுகள் செயல்படவேண்டும் என கட்டுபடுத்துகிறது,இந்த குறிமுறைகள் பின்னர் தருக்கமுறைவாயிலிற்கேற்ப தருக்கமுறை ஒத்திசைவாளராக மொழிமாற்றம் (interpretation) செய்யப்படுகிறது, அதன்பிறகு மின்சுற்று வரிப்படமாக ஒருங்கிணைக்கப்பட்டு எவ்வாறு செயல்படும் என அறியப்படுகிறது, தேவையானால் இவைகள் மேலும் மெருகேற்றப்படுகின்றன பின்னர் இந்த தருக்கமுறை ஒத்திசைவாளராக மொழிமாற்றம் செய்வதற்கான வடிவமைப்பு போதுமான அளவிற்கு இருக்கின்றதாவென சரிபார்க்கப் படுகின்றது,இறுதியாக இவை உண்மைநிலையில் எவ்வாறு செயல்படும் என உருவகப்படுத்துதல்கள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றது,

படிமுறை-3:ஒரு சிறிய தூசுஅளவேயுள்ள சிலிகான்களை கொண்டு ஆயிரக்கணக்கான மின்மபெருக்கிகள்(transistors) உருவாக்கவாய்ப்புள்ளதால் இந்த சிப்புகளை உருவாக்கும் பகுதி மிகமிக சுத்தமாக(Clean Room) பராமரிக்கப் படுகிறது மேலும் தனிச்சிறப்பு உபகரணங்களை கொண்டு சிறப்பு வழிமுறையில் சிலிகான் தூய்மைபடுத்தப்படுகிறது,

பரிசுத்தமான சிலிக்கானின் சிறுதுனுக்கி(wafer) லிருந்து மின்மபெருக்கிகளை(transistors) உருவாக்கும் பணி ஆரம்பிக்கின்றது முதலில் இந்த சிறுதுனுக்கை(wafer ) மிகவும் சுத்தமான தண்ணீர் மற்றும் தனிச்சிறப்பு தூய்மை படுத்தம் திரவத்தில் மூழ்கச்செய்து சுத்தமாக கழுவப்படுகின்றது,

அதன்பிறகு அதன்மேல் ஒரு வெப்பத்தடுப்ப பொருள் (Insulation material)கொண்டு ஒருசுற்று தடுப்புசுவர் அமைக்கப்படுகிறது, பின்னர் வெப்பப்படுத்தப்பட்டு ஆக்ஜிஸனுடன் சேர்ந்த சிலிக்கன்டை ஆக்ஸைடு என்ற அடுக்கால்(layer) மூடப்படுகின்றது பின்னர் ஒளியை தடுப்பதற்காக இதன்மீது மற்றொரு ஒளித்தடுப்பு போர்வையால் பூசப்பட்டு புறஊதாகதிர்களால் சுடப்பட்டு கட்டப்படுகிறது,

பின்னர் ஒரு முகமூடி (masking)கொண்டு இந்த மின்சுற்றுவரிப்படத்தின் வெளிப்புறம் மூடப்படுகிறது, அதன்பின்னர் இந்த சிலிக்கானின் சிறுதுனுக்கானது திரவத்திற்குள் மூழ்கும்படி செய்யப்பட்டு மீதிஅரைகுறையாக இருக்கும் தேவையற்ற சிலிக்கன்டை ஆக்ஸைடை கரைத்து கழுவிவிடப்படுகிறது,இந்த செயலையே உலோகஉருவம்செதுக்குதல் (etching)என்கின்றனர்,

அதன் பிறகு இரும்பைபிடுங்குதல் என்ற செயலின்மூலம் சில்லுகளில் உள்ள இரும்புதுனுக்குகள் உறிஞ்சியெடுக்கப்படுகின்றன இவ்வாறாக ஒரு சிறுதுனுக்கானது ஒரு மின்மபெருக்கி(transistor)யாக உருமாற்றப்படுகின்றது

படிமுறை-4

இவ்வாறு தனித்தனியாக உருவாக்கப்பட்ட மின்மபெருக்கிகள்(transistors) பின்னர் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும் இதனைகம்பியுடன் இணைத்தல் (wiring) என்பர், முகமூடி (masking)அணிவித்தல் , உலோகஉருவம்செதுக்குதல் (etching) ஆகிய இரு பணிகளை மாற்றி மாற்றி தொடர்ந்து சிலிக்கன்டை ஆக்ஸைடுடன் மூடப்படவேண்டும், இந்த சமயத்தில் ஒரு சிறு சாளரம் போன்ற பகுதி மட்டும் மூடப்படாமல் இந்த மின்மபெருக்கி(transistors) களின் முனைமங்களாக மற்றவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்காக விட்டுவிடவேண்டும் இந்த முனைம பகுதியில் ஒரு அடுக்கு உலோகம் பூசப்பட்டு மிகுதி இணைப்புஏற்படுத்தவும் வெப்பத்தடுப்பு, முகமூடியிடுதல் உருவம்செயதுக்குதல் பின்னர் உலோகம்பூசுதல் என மாற்றி மாற்றி சுமார் இருபது அடுக்கு அளவிற்கு செய்யப்படுகிறது,இவ்வாறான பணிமுடிந்த பிறகு இவை ஒன்றுடன் மற்றொன்று இணைக்கப்படுகிறது,

இந்த மின்மபெருக்கி(transistors)யின் நீளம் சுமார் 90 நேனோமீட்டராக இருந்தது பின்னர் 60 நேனோமீட்டராகி இப்போது 45 நேனோமீட்டராக குறைந்துள்ளது,

இவ்வாறாக சின்னஞ்சிறு மின்மபெருக்கிகள்(transistors) உருவாக்கப்பட்டு அதில் சிக்கலான செயல்களுக்கான தனித்தனியான HDL நிரல்தொடர் எழுதி இணைக்கப்படுகிறது,பின்னர் விரல்நகத்தின் அளவேயுள்ள சில்லுக்குள் லட்சகணக்கான மின்மபெருக்கிகள்(transistors) உள்பொதியப்படுகின்றன, ஒருசில்லுக்குள் fusion முறையில் இவ்வாறு மின்மபெருக்கிகள்(transistors) ஒருங்கிணைக்கப்படுகின்றன,

 

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003தொடர் பகுதி -24 -மாறிகள் (variables)

விபிஏவில் பல பொருட்களையும்(objects) கட்டளைகளையும்(commands) பொருத்தமாக கையாளுவதற்கு தேவையான தகவல்களை தற்காலிக நினைவிடத்தில் சேமிக்க வேண்டியுள்ளது. இந்த தற்காலிக நினைவிடத்திற்கு மாறிகள் என்று பெயராகும். பொதுவாக கணக்கீடுகளின் விளைவை அல்லது மற்றொரு செயல்முறையின் கட்டுபாட்டு மதிப்பை இருத்தி வைப்பதற்கு இந்த தற்காலிக நினைவிடத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்காக ஏதேனுமொரு இயக்கியை(operator) பயன்படுத்தி ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு மாறியை ஒதுக்கீடு செய்யபடுகின்றது

counter = 1

counter = counter + 1

today = date( )

ஆகியவை சில கணக்கீடுகளிலிருந்து மாறியை உருவாக்கிடும் சான்றுகளாகும்.

ஒவ்வொரு மொழியின் நிரல்தொடரிலும் மாறிகளுக்கு பெயரிடுவதற்காக தத்தமக்கு என்று தனித்தனியான விதிமுறைகளை கொண்டுள்ளன.அவ்வாறே விபிஏவிலும் இதற்காக கீழ்காணும் விதிமுறைகள் வகுக்கபட்டுள்ளன.

1எந்தவொரு பெயரும் ஏதேனுமொரு எழுத்தை கொண்டுதான் தொடங்க வேண்டும்.

2.இந்த பெயரில் எண், எழுத்து,கீழ்கோடு ஆகியவைமட்டுமே இருக்கவேண்டும்

3.இந்த பெயரானது 255 எழுத்தகளுக்குமேல் இருக்கக்கூடாது

4.இந்த பெயரில் விபிஏவின் சிறப்பு சொற்கள்(reserved word) எதுவும் இருக்ககூடாது ஆனால் தேவையானால் பெயரில் அந்த சிறப்பு சொற்களின் எழுத்துகளை மட்டும் சேர்த்து கொள்ளலாம். .. Open customer என்பதில் open என்ற சிறப்பு சொல் சேர்ந்து ஒரு மாறியின் பெயராகின்றது. ஆனால் Open என்ற சிறப்பு சொல் மட்டும் தனித்து நின்று மாறியின் பெயராக முடியாது

5.பொதுவாக மாறிகளை வெளிப்படையாக அறிவிப்பு செய்து கொள்வது நல்லது இதற்கு dim என்ற கூற்றை பயன்படுத்திடவேண்டும்

நிரல்தொடர்-24-1

Private form_load( )

Dim Form_loading As Boolean

Dim msg box title As string

form_loading = true

msg box -title = “Demo of the dim statement”

msg box “This is a demo”, vbox, msg box_title

end sub

இந்த நிரல் தொடரில் மாறிகளை உபயோகபடுத்துவதற்கு முன்பே அவைகளை dim என்ற கூற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

Option explicitஎனும் கூற்று

பொதுவாக ஒரு மாறியை பயன்படுத்துமுன் வெளிப்படையாக அதனை அறிவிக்கா விட்டால் விபிஏவானது அவைகளை தொக்கலாக(implicit) அறிவித்து கொள்ளும் இவ்வாறு பயன்படுத்தவில்லையெனில் தவறு என சுட்டிகாட்டும் இதனை தவிர்ப்பதற்காக விபிஏ சாளரத்தின் மேலே கட்டளைபட்டியிலுள்ள Tools=> options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-1-ல் உள்ளவாறு தோன்றும் optionsஎன்ற உரையாடல் பெட்டியில்உள்ள அனைத்து வாய்ப்புகளையும் தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

மாறியின் வரையெல்லை(scope)

ஒருமாறியை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் எந்தெந்த செயலியை(routine) இதில் பயன் படுத்தி கொள்லமுடியும் என்பதே வரையெல்லை (scope) ஆகும் இந்த வரையெல்லையானது மூன்று வகையாக பிரிக்கபட்டுள்ளது

1.உள்ளூர் வரையெல்லை(local scope):சார்பு(function),துனைநிரல்(subroutine), நிகழ்வு செயலி (event routine) ஆகியவற்றினுள் ஒரு மாறியை அறிவித்தல் இந்த வகையாகும் ஒரு பெட்டையில் உள்ள தாதாவின் மதிப்பு அந்த பேட்டையில் மட்டுமே இருக்கும் அடுத்த பேட்டையில் சென்று கேட்டால் யாருக்கும் இந்த தாதாவை பற்றி தெரியாது என்பதை போன்று இவைகளுள் இருக்கும் மாறியின் மதிப்புகளானது அந்தந்த குறிப்பிட்ட குறிமுறைகளில் மட்டுமே அடையாளும் காணும் அருகிலிருக்கும் குறிமுறைகளில் அடையாளம் காணாது விட்டுவிடும் இதற்கு உள்ளூர் வரையெல்லை என்று பெயராகும்

நிரல்தொடர்-24-2

sub routine 1( )

Dim Var1 As integer

Dim var2 As string

var1 = 6

var2 = “This is a demo”

end sub

 

sub routine 2( )

Dim Var1 As string

Dim var2 As integer

var1 = “This is a demo”

var 2= 85

end sub

இந்த இரண்டு துனைநிரல்களில் ஒன்றில் மாறி 1 முழுஎண்என்றும் மாறி 2 சரம் என்றும் மற்றொன்றில் மாறி 1சரம் என்றும் மாறி 2 முழுஎண்என்றும் மாற்றி மாற்றி அறிவிக்கபட்டுள்ளது இந்த நிரல்தொடர்களில் மதிப்பு அந்தந்த நிரல் தொடருக்குள் மட்டுமே அதாவது உள்ளூர் வரையெல்லைமட்டுமேயாகும் என்பதை தெரிந்து கொள்க

முழுமையளாவிய வரையெல்லை(global scope)

இந்தியாவில் எந்த இடத்திற்கு சென்று வினவினாலும் தேசபிதா மகாத்மா காந்தி நேரு மாமா ஆகியோரை பற்றி உடனடியாக மிகச்சரியாக கூறுவார்கள் அவ்வாறே ஒரே மாறியை publicஎன்ற கூற்றை பயன்படுத்திமுழுமையளாவிய வரையெல்லை(global scope)யாக அறிவிக்கபடுகின்றது. அதனால் இந்த மாறியை எந்த செயலியிலும் அதேமதிப்பில் பயன்படுத்திகொள்ளமுடியும்.

நிரல்தொடர்-24-3

option explicit

public var1 as integer

public var2 as string

sub routine 1( )

var1 = 6

var 2 = “This is a demo”

end sub

sub routine 2( )

var 2 = “This is not a demo”

Var 1 – 85

End sub

Private var1 as integer

Private var2 as string

இதில் Publicஎன்ற கூற்றை பயன்படுத்திvar1 என்ற மாறியை முழுஎண் என்றும் var2என்ற மாறியை சரம் என்றும் அறிவிக்கபட்டுள்ளது இதனை துனைநிரல்களும் அவ்வாறே பயன் படுத்தியுள்ளன

தகவமைப்பு வரையெல்லை (module scope)

ஒரு சில தலைவர்களின் பெயர் பக்கத்து மாநிலங்களும் பிரபலமாக இருக்கும் ஆனால் அதைத்தாண்டி நீண்டதூரத்திற்கு அவர்களுடைய செல்வாக்கு இருக்காது அவ்வாறே இந்த மாறிகளிலும் private என்ற கூற்றை பயன்படுத்தி அறிவிக்கும்போது அம்மாறிகளின் மதிப்பானது அந்த தகவமைப்பிற்குள்(module) மட்டுமே இருக்கும் இதுவும் dim என்ற கூற்றை போன்றதே யாகும் இது குறிப்பிட்ட படிவம் அல்லது நடப்பில் உள்ள அனைத்து செயலிகளுக்கும் பொதுவானதாக இருக்கும்

Private var1 as integer

Private var2 as string

ஒரே மாதிரியான தரவுவகைகளை கையாளுவதற்கு ஒருமாறியை private என்று அறிவத்தபின்னரே பயன்படுத்தவேண்டும் என்பதை மனதில் கொள்க.

நிழல்படுத்துதல் (shadow)

ஒருமாறியை உள்ளூர்வரையெல்லை கொண்டதாக அறிவிக்கபட்டபின் அதேமாறியானது private அல்லது publicஆக மாற்றி அறிவிக்கபட்டால் விரிவான வரையெல்லை (broader scope)யோடு அறிவிக்கபட்டுள்ளமாறி நிழல்படுத்தபடும் உள்ளூர் மாறி மட்டுமே செயலில் இருக்கும் எ.my addressஎன்ற மாறி public என அறிவிக்கபட்டிருந்தாலும் அதே மாறியை துனை நிரலில்dim என்ற கூற்றின் மூலம் அறிவிக்கப்பட்டால் துனை நிரலில் உள்ள local scope ஆக மட்டுமே அனுகும்.

இவ்வாறு மாறிகளை அறிவிக்கும்போது அந்த மாறிகளின் தரவுவகை எதுவென குறிப்பிடவேண்டும் ஏனெனில் அனைத்துமாறிகளும் ஏதேனுமொரு தரவு வகையை சார்ந்தவையாகும் இவ்வாறு தரவுகளின் வகையை குறிப்பிட்டு அவ்வாறே சேமித்து வைத்திருந்தால் குழப்பமேதுமில்லாமல் இருக்கும்.

அக்சஸில் புலங்களின் மதிப்பை மாறிகளுக்கு ஒதுக்கீடு செய்யும்போது எந்த வகையான தரவுகள்என குறிப்பிட வேண்டியுள்ளது. பின்வரும் அட்டவணை 24-1- ல் ஒவ்வொரு புலத்தின் தரவுவகைகளுக்கு இணையான விபிஏவின் தரவுவகை எதுவென கொடுக்கபட்டுள்ளன. இதனை மனதில் இருத்திகொண்டு விபிஏவை பயன்படுத்திடும்போது தரவுவகையை குறிப்பிடுக.

 

 

 

அட்டவணை-24-1 புலத்தின் தரவுவகைகளுக்கு இணையான விபிஏவின் தரவுவகை

Access Data Type VBA Data Type
Auto Number (Long integer) Long
Auto Number (Replication ID)
Currency Currency
Computed
Date/Time Date
Memo String
Number (Byte) Byte
Number (Integer) Integer
Number (Long Integer) Long
Number (Single) Single
Number (Double) Double
Number (Replication ID)
OLE Object String
Text String
Hyperlink String
Yes/No Boolean

கோவைகளை பயன்படுத்துதல்(using arrays)

ஒரே வகையான தரவுகளை நிறைய தொடர்ச்சியான மாறிகளில் குறிப்பிடுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக கோவை (array)என்ற கருத்தமைவில் பயன்படுத்துவது நினைவக்ததை மிகத்திறனுடன் பயன்படுத்திகொள்வதற்கான தொரு வழியாகும் ஒரு படிவத்தில் உரைபெட்டி கட்டுப்பாடுகளில் கோவை(array) ஒன்றை நம்மால் உருவாக்கிட முடியும். நம்முடைய குறிமுறைகளை எளிமையாகவும் மிகத்தித்திறனுடனும் பயன்படு்ததுவதற்கு உதவுவதுதான இந்த கோவை(array)யாகும்

இந்த கோவைகள்(arrays) இரண்டுவகையாக பிரிக்கபடுகின்றன. அவைபின்வரமாறு

1. நிலையான அளவு கோவை (Fixed size array)

எத்தனை உறுப்புகள் இந்த கோவைக்குள் இருக்கின்றன என முன்கூட்டியே தீர்மானித்து ஒதுக்குவதையே நிலையான அளவு கோவை(fixed size array)யாகும்

Dim astr names (20) as stirng

இதில் astr names என்ற பெயருடன் 21 உறுப்புகள் அடங்கிய கோவை அறிவிக்கபட்டுள்ளது மேலும் இது ஒரு சரவகை தரவுகளுடன் 0 முதல் 20 வரை சுட்டும்படி குறிக்கபட்டுள்ளது

2.இயக்கநேர கோவை(Dynamic Array)

ஒரு கோவைக்கு பெயர்மட்டும் வைத்தபின் நினைவத்தின் தேவைக்கேற்ப அதன் உறுப்புகளின் எண்ணிக்கையை உருவாக்கி கொள்ளும்படி விட்டுவிடுவதே இயக்கநேர கோவை (dynamic array)யாகும்

Static asng tax rates (1 to 10) as single

இதில் asng tax rateஎன்ற பெயருடன் அதிகபட்சம் 10 உறுப்புகள் கொண்ட ஒற்றை தரவுவகை 1 முதல் 10 வரை இயக்கநேர கோவையாக dynamic array அறிவிக்கபட்டுள்ளது

நிரல்தொடர்-24-4

Public type customer info

Customer as string

Address (2) as string

A fixed size array with two elements’

Phone ( ) as string

A dynamic array’

First order as date

End type

இதில் வாடிக்கையாளரின் விவரங்களை தொகுப்பதற்கு வாடிக்கை யாளர் முகவரிகளை (address)நிலையான அளவு கோவையாக f(ixedsizerray )இரண்டு உறுப்புகளுடன் அறிவிக்க பட்டுள்ளது தொலைபேசி எண்கள் இயக்கநேர கோவையாக பயன்படுத்தபட்டுள்ளன.

 படம்-24-1

பயாஸின் கடவுசொற்கள்மறந்துவிட்டதை எவ்வாறு தீர்வுசெய்வது

பயாஸ்தான் ஒவ்வொரு கணினியினுடைய அடிப்படை கட்டமைவாகும் இதனை மாறுதல் செய்து மிகச்சரியாக அமைவு செய்வதற்காக இதில் உள்நுழைவதற்கான கடவுச்சொற்கள் மிகவும் அவசியமாகும்  நம்மை தவிர வேறுயாறும் இந்த பயாஸிற்குள் உள்நுழைவுசெய்வதை இந்த கடவுச்சொற்கள் தவிர்க்கின்றன

பொதுவாக பயாஸின் திரையானது  ஏறத்தாழ மேலே படத்திலுள்ளவாறு தான் இருக்கும் ஆனாலும் இதில் கணினிஉற்பத்தியாளர்களுக்கு தக்கவாறு ஒருசில  மாறுதல்களுடனும் இருக்கும். கணினியை இயக்கதொடங்கும் நிலையில் F2 என்ற செயலிவிசையை திரும்ப திரும்ப அழுத்தும்போது முதலில் Loading BIOS Options என்ற செய்தியும் பின்னர் படத்திலுள்ளவாறு பயாஸினுடைய திரையின் தோற்றமும் அமையும்  மற்றவர்கள் யாரும் நம்முடைய கணினியினுடைய பயாஸிற்குள் நமக்கு தெரியாமல் நுழைந்து மாறுதல் எதுவும் செய்ய மாட்டார்கள்  என உறுதியுடன் நம்பினால் பயாஸிற்குள் நுழைவதற்கான கடவுச்சொற்களை அமைத்திடவேண்டாம் என பரிந்துரைக்கப் படுகின்றது  அவ்வாறு  பயாஸிற்கான கடவுச்சொல் அமைத்திட்டால் கணினியை இயக்கத்தொடங்கும்போது பயாஸின் கடவுச்சொல்லை உள்ளீடுசெய்தால் மட்டுமே அடுத்த படிநிலையான வழக்கமான பயனாளரின் பெயரையும் கடவுச்சொல்லையும் கோரும்திரைதோன்றும்  இந்த பயாஸின் கடவுச்சொற்களை தனியாக எழுதி மிகபதுகாப்பாக வைத்துகொள்க.

இந்த பயாஸின் கடவுச்சொற்கள் மறந்து போனால் வன்பொருள் மென்பொருள் ஆகிய இரண்டின் வழியாக உள்நுழைவு செய்வதற்கு  கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்துகின்றது முதலில் வன்பொருள் வழியில் தாய்ப்பலகையை அனுகி பயாஸின் மின்கலத்தை கழற்றி புதிய மின் கலனை பொருத்தி பயாஸ் அமைப்பை புதியதாக அமைத்துகொள்க

Easeus அல்லது Password Recovery Magic ஆகிய கருவிகளின் மூலம் மென்பொருள் வாயிலாக பயாஸ் கடவுச்சொற்களை  மாற்றியமைத்துகொள்க இந்நிலையில் கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி மாற்று வழியெதுவும் தேடவேண்டாம் அதற்குபதிலாக  cnet.com அல்லது downloads.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தி கடவுச்சொற்களை  மாற்றியமைத்து மென்பொருள் வழியாக பயாஸ் கடவுச்சொற்கள் மறந்துபோனாலும் கணினியை அனுகமுடியும்

கணிதத்தையும் அறிவியலையும் பயில்வதை MathMovesU என்ற தளம் எளிதாகவும் இனியதாகவும் ஆக்குகின்றது

கணக்கு என்றால் பிணக்கு ,ஆமணக்கு, என்றும் அறிவியல் என்றால் ஏதோ வேற்று கிரகத்திற்கு நம்மை அழைத்து போய்விடுவார்களோ என்றும் இடைநிலை பள்ளியிலும் உயர்நிலை பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் கணிதத்தையும் அறிவியலையும் பயில்வதை தவிர்ப்பதற்காக பயந்துகொண்டு காததூரம் ஒடிவிடும் நிலை தற்போது உள்ளது  அதனை தவிர்த்து மாணவர்கள் விளையாடிக் கொண்டே இந்த கணிதம் அறிவியல் ஆகியவற்றை பயில்வதை எளிமையானதாகவும் இனிய அனுபவமாகவும் ஆக்குவதற்காக பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துவருகின்றது  அவ்வாறான முயற்சியில் MathMovesU, என்ற இணையதளமானது இடைநிலை பள்ளியில் பயின்றிடும் மாணவர்கள் விளையாட்டு ,புதிர்போட்டி போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக கணிதம் அறிவியல் ஆகியவற்றை எளிதாக உதவித்தொகையுடன் பயின்றிடுமாறு உதவுகின்றது இந்த தளத்தின் முகவரி பின்வருமாறு http://www.mathmovesu.com/#/home  . இதன் முகப்பு பக்கத்திற்கு சென்றவுடன் இந்த தளத்தில் கணிதத்தையும் அறிவியலையும் எளிதாக பயில்வதற்காக என்னென்ன வசதிகள் வாய்ப்புகள் உள்ளன என கூறும் ஒளிஒலி படங்கள் நம்மை வரவேற்கின்றன. அப்படகாட்சியின் முடிவாக வழிகாட்டிடும் பட்டியல் தோன்றுகின்றது நாம் இந்த இடைமுக பட்டியலையோ அல்லது சிவப்பவண்ண வழிகாட்டி பொத்தானையோ தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம்  இசை, விளையாட்டு ,பயனம், புதிர் போட்டி போன்ற இதிலுள்ள  வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம் அதேபோன்று மாணவர்களுக்கான உதவித்தொகை குறித்த தகவல்களையம் இதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்

ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நீண்டநெடிய பட்டியலை அட்டவணையா கவும் அட்டவணையை பட்டியலாகவும் உருமாற்றி கொள்ளலாம்

ஏராளமான விவரங்களை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் பட்டியலாக உள்ளீடு செய்திடும்போது அவற்றை ஒரு அட்டவணையாக உருமாற்றிகொள்வது படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என எண்ணிடுவோம் இவ்வாறான நிலையில் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு அட்டவணையை உருவாக்கிய பின் ஏற்கனவே உள்ளீடு செய்துள்ள விவரங்களை மீண்டும் தட்ச்சு செய்து உள்ளீடு செய்வது தேவையற்ற செயலாகும் இதனை தவிர்த்திட அட்டவணை யாக உருமாற்றம் செய்யவேண்டிய அனைத்துஉரையையும் முதலில் தெரிவு செய்துகொள்க பின்னர் மேலே கட்டளைபட்டையிலிருந்து Table =>Convert=> Text to Table => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் தோன்றும்  Convert Text to Table என்ற உரையாடல் பெட்டியில் separates text at என்பதன்கீழ் சொற்களுக்கிடையேயுள்ள எந்தெந்த குறியீட்டை அடுத்தடுத்த நெடுவரிசையை பிரிப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வாய்ப்பையும் அட்டவணையில் நெடுவரிசைக்கு தலைப்பு வேண்டுமா என்பன போன்ற வாய்ப்புகளையும் தெரிவுசெய்தபின் அட்டவணையை மேலும் வடிவமைத்திட autoformat என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையில் தேவையானவாறு தெரிவுசெய்துகொண்டு இறுதியாக  OK. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த உரையானது அட்டவணையாக ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரில் உருமாறி காட்சியளிக்கும்

இவ்வாறே ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள ஒரு அட்டவணையை  சாதாரண உரையாக உருமாற்றம் செய்திடுவதற்கு மேலே கட்டளை பட்டையிலிருந்து Table =>Convert=> Table  to Text => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் தோன்றும்  Convert Table to Text  என்ற உரையாடல் பெட்டியில் separates text at என்பதன் கீழ்  அட்டவணையின் அடுத்தடுத்த    நெடுவரிசையை பிரித்ததை சொற்களுக்கிடையே எந்தகுறியீட்டை அனுமதிக்கவேண்டும் என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு   OK.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த அட்டவணையாது  ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரில்உரையாக உருமாறி காட்சியளிக்கும்

ஓப்பன் ஆஃபிஸ்கால்க் பணித்தாளில் திரையில் காண்பதை அவ்வாறே அச்சிடுவது

ஓப்பன் ஆபிஸ்பணித்தாளில் ஏராளமான தரவுகளுடன் பணிபுரியும்போது அந்தபணித்தாளை அச்சிடவிரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களாகத் தான் அச்சிடமுடியும் அதனால் குறிப்பிட்ட தரவுஎதிலிருந்து பெறபட்டது அதனுடைய கணக்கீடுகள் எவ்வாறு இருக்கும் என்பன போன்ற விவரங்களை அந்தந்த செல்லின்மீது இடம்சுட்டியைவைத்து மட்டுமே பார்வையிடமுடியும்

படம்-1

ஆனால் இந்த விவரங்கள் அச்சிலும் வரவேண்டும் என விரும்பினால் ஓப்பன்ஆஃபிஸ் கால்க்கில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக.

ஓப்பன் ஆபிஸ்பணித்தாளில் அச்சிடவிரும்பும் பகுதியை முதலில் தெரிவு செய்து கொள்க பின்னர்மேலே கட்டளை பட்டையிலிருந்துFormat=>Page=.>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன்விரியும் page style:default என்ற (படம்-2)உரையாடல் பெட்டியில் Sheet என்ற தாவியின் திரை தோன்றும் அதில் print  என்ற பகுதியின் கீழ் Grid, Formulas ,Column and row headers ஆகியவாய்ப்புகளை அல்லது மேலும் தேவையான வாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு மற்ற தேவையற்ற வாய்ப்புகள் தெரிவு செய்திருந்தால் அவற்றை நீக்கம் செய்துவிட்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் இந்த பணித்தாளை அச்சிட்டால் நாம்விரும்பியவாறு திரையில் காண்பதை அப்படியே அச்சிட்டு பெறலாம்

படம்-2

அறிந்துகொள்வோம் அக்சஸ்-2003- தொடர்-பகுதி-23-நிகழ்வுகள்(Events)

தரவுகளை ஒருஆவணத்திலிருந்து மற்றொரு ஆவணத்திற்கு நகர்த்துவது படிவத்தை திறப்பது , மூடுவது அவ்வாறே அறிக்கைகளை திறப்பது, மூடுவது ஆகியசெயல்கள் ஒரு படிவத்தின்  கட்டளை பொத்தான்களை சொடுக்குவதால்  ஏற்படும் நிகழ்வாகும்

பொதுவாக அக்சஸ் பயன்பாட்டின் செயல்கள் அனைத்தும் இந்நிகழ்வுகளின்  அடிப்படையிலேயே நடைபெறுகின்றன இந்நிகழ்வுகளின்  சிக்கலான செயல்களை இலகுவாக செயற்படுத்திடுவதற்காக விபிஏ உதவுகின்றது

ஏதேனுமொரு விசையை அழுத்துதல், இடம்சுட்டியை நகர்த்துதல் ,சுட்டியை சொடுக்குதல் ஆகிய செயல்கள் விபிஏவால் நடக்கும் நிகழ்வுகளாகும் பொதுவாக அண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப விபிஏ செயல்படுகின்றது

பயனாளர் ஒருவர் சாளரத்திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியை ஒருமுறை சொடுக்கும்போது  அந்த நிகழ்வு நடந்துவிட்டது என்ற தகவலையும் அதனுடன் அந்நிகழ்வுகளின் அளபுருக்களையும் பயன் பாட்டிற்கு விபிஏ அனுப்பிவைக்கின்றது ஒரு நிரலால் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் ஒருநிகழ்வின் தூண்டுதல் கட்டுபடுத்துகின்றது

இந் நிகழ்வை கட்டுபடுத்துவதற்கான தூண்டுதல்கள்(triggers) ஏழுவகை குழுவாக பிரிக்கபடுகின்றன

அட்டவணை-23-1- நிகழ்வை கட்டுபடுத்துவதற்கான தூண்டுதல்கள்(triggers)

வ எண் நிகழ்வு குழுக்களின் பெயர் நிகழ்வுகளி்ன் பயன் அல்லது செயல்
1 சாளர(படிவஅறிக்கை) நிகழ்வு(Window) சாளரத்தை திறத்தல் மூடுதல்,அளவை மாற்றி யமைத்தல்
2 தரவு நிகழ்வுகள்(data) நடப்புநிரலாக்குதல், நீக்கம் செய்தல், நிகழ்நிலை படுத்துதல்
3 குவித்தல் நிகழ்வுகள்(focus) செயல்படுத்துதல்,உள்ளீடு செய்தல்,வெளியேறுதல்
4 விசைப்பலகை நிகழ்வுகள்(keyboard) விசையை அழுத்துதல்,விடுவித்தல்
5 சுட்டி நிகழ்வுகள்(mouse) சொடுக்குதல்,நகர்த்துதல,அழுத்துதல,விடுவித்தல்
6 அச்சிடும் நிகழ்வுகள்(print) அமைப்பாக்குதல்,அச்சிடுதல்
7 பிழை,கடிகை நிகழ்வுகள்(error.timer) பிழைசுட்டுதல்குறிப்பிட்ட நேரத்தில் செயலாற்றுதல்

நிகழ்வை தூண்டுதல்(Event Triggering)

அக்சஸில் பயனாளர் ஒருவர் ஏதாவதொன்றை செய்யும்போது அதனுடனஅ தொடர்பான 53 வகையான நிகழ்வுகல் தூண்டபட்டு அக்சஸில் நிகழும்படி கட்டமைக்கட்டுள்ளது

இந்தநிகழ்வுகள் அக்சஸின் படிவங்களிலும்,அறிக்கைகளிலும் மட்டுமே நிகழும் அட்டவணையிலும் வினாவிலும் எந்தநிகழ்வும் ஏற்படாது

இந்நிகழ்வுகள் 1.பயனாளர் நிகழ்வு- மேலே கூறியபடி நிகழ்வது 2. அமைப்பு நிகழ்வ- ிது பயனாளரின் கட்டுப்பாடு இல்லமல் தானாக நிகழ்வது ஆகிய இரண்டு வகையில் நடை பெறும். கடிகார செயல்கள்,தரவை அனுகல் பிழைகள், படிவநிலை மாற்றங்கள், கட்டுபாட்டு நிலைமாற்றங்கள் ஆகியவை இரண்டாம் வகையை சேர்ந்ததாகும்.

படிவ நிகழ்வுசெயல்முறைகள்

 நாம் ஒரு படிவத்தில் பணிபுரியும்போது அதில்ஒரு நிகழ்வுசெயல்முறையை உருவாக்கி  படிவ அளவில் ஒரு பகுதியில் மட்டும் அந்நிகழ்வை செயல்படுத்திடமுடியும் ஒரு நிகழ்வை ஒரு படிவத்துடன் இணைத்து பயன்படுத்திடும்போதுஏற்படும் நிகழ்வுகளின் விளைவுகள் அந்த படிவம் முழுவதும் அதனை பிரதிபிக்கும்படி செயல்படுத்தபடுகின்றது அக்சஸால் அங்கீகரிக்கபட்டுள்ள நிகழ்வுகளை செயற்படுத்துவதற்கான குறியீட்டை எழுதி ஒரு படிவத்துடன் இணைத்தால் மட்டுமே அந்நிகழ்விற்கானபதில் விளைவுகள் ஏற்படும். இங்கு படிவ நிகவ்வுகள் என குறிப்பிடுவது படிவம் முழுவதும்  தூண்டுகின்ற நிகழ்வுகளை மட்டுமேயாகும். குறிப்பான கட்டுப்பாட்டு நிகழ்வுகள் அன்று என்பதை மனதில் கொள்க.

அட்டவணை-23-2 படிவநிலை நிகழ்வு ,அதனுடைய பண்பியல்பு தூண்டுதல் செயல்

வஎண் நிகழ்வுகள் தூண்டுதல் செயல்
1 On open ஏதேனுமொரு படிவத்தை திறப்பதற்கு,உடன் முதல் ஆவணம் திரையில் பிரதிபலிக்கின்றது
2 On close ஒரு படிவத்தை மூடுவதற்க பயன்படுகின்றது
3 On delete ஒரு படிவத்தில் உள்ள ஆவணத்தை நீக்குவதற்கு பயன்படுகின்றது
4 On click சுட்டியை அழுத்தி விடுவிக்கும் செயலுக்காக பயன்படுகின்றது

கட்டுப்பாட்டு நிகழ்வுசெயல்முறைகள்

கட்டுப்பாடுகள்கூட நிகழ்வுசெயல்முறைகள தூண்டிவிடுகின்றன.ஒருபுலத்திலுள்ள சிக்கலான தரவுகளை ஏற்புடையதாக்குதல் செயலைform’s before update property   என்பதைவிட field’s before update property என்ற நிகழ்வு சிறப்பாக தூண்டிவிடுகின்றது படிவ நிகழ்வுகளை உருவாக்குவதைபோன்றே கட்டுபாட்டு நிகழ்வுகளையும்

உருவாக்கிடவேண்டும் விபிஏ சாளரத்தில் ஒரு கட்டுபாட்டு நிகழ்விற்கான குறிமுறைகளை உருவாக்கி இணைத்தவுடன் பதில்விளைலவு ஏற்படுகினஅறது .இந்த கட்டுபாட்டு நிகழ்வின் அட்டவணை -23-3-ல் கொடுக்கபட்டுள்ளன

அட்டவணை -23-3- கட்டுபாட்டு நிகழ்வு அதன் பயன்பாடுகள்,தூண்டுதல் செயல்

வஎண் நிகழ்வுகள் தூண்டுதல் செயல்
1 Before update அட்டவணையை மாறுதல் செய்வதற்குமுன் நிகழ்நிலைபடுத்துதல்
2 After update அட்டவணையை மாறுதல் செய்தபின் நிகழ்நிலைபடுத்துதல்
3 On mouse up சுட்டி கட்டுபாட்டில் இருக்கும்போது சுட்டியை விடுதல்
4 On mouse down சுட்டி கட்டுபாட்டில் இருக்கும்போது சுட்டியை அழுத்தி பிடித்தல்

நிகழ்வுசெயல்முறையுடன் ஒரு படிவத்தை திறத்தல்

வியாபார பயன்பாடுகளுக்கு பயன்படுத்தபடும் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு பல்வேறு வகையான  படிவங்களும் அறிக்கைகளும் தேவைப்படுகின்றன எந்தெந்த செயல்பாடுகளுக்கு எந்தெந்த படிவங்கள் அறிக்கைகள் உருவாகிட வேண்டுமென தீர்மாணிக்கபட்டுள்ளன என தரவுதள தாங்கிகளிலிருந்து(databasecontainer)  தேடுவதுதான ஒரு பயனாளரின் முக்கிய  பணியாகும் பயன்பாடுமுழுவதும் எந்தெந்த அறிக்கை எங்கெங்கு இருத்தி வைக்கபட்டுள்ளதென இருநிலைமாற்றி (switch board)  வழிகாட்டுகின்றது இந்த இருநிலை மாறஅரிகள் கட்டளைபொத்தான்களின் தொகுப்பாக முகப்பு பெயருடன் நம்முடைய தேவைக்கேற்ப தெரிவுசெய்துகொள்ளும்படி நமக்கு ஆலோசனை கூறுகின்றது

படம்-1-

 இந்த படம்-1-ல் ஒருநிறுவனத்தின் இருநிலை மாற்றியானது ஆறுவகையான கட்டளை பொத்தான்களை கொண்டதாகும். இதில் ஒவ்வொரு கட்டளை பொத்தான்களை சொடுக்கும்போதும் ஒவ்வொரு நிகழ்வு செயல்முறையை இயக்குகின்றதுproduct  என்ற கட்டளை பொத்தானை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியை சொடுக்கியவுடன் படம்-1-ல் உள்ளவாறு cmd product என்ற கட்டளை பொத்தான்கள் பண்பியல்பு உரையாடல் பெட்டிகளுடன் பிரதிபலிக்கின்றதுஇந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியில் event என்பதை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் நிகழ்வுகட்டளையின் event என்பதில் on click என்ற நிகழ்விற்கு அருகில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பொத்தான்கள் builder பொத்தான்கள் ஆகும் இதனை இடம்சுட்டியால்தெரிவுசெய்துடுட்டியை சொடுக்குக உடன் படம்-2-ல் உள்ளவாறு படிவம் ஒன்று திறப்பதற்கான குறிமுறைகளின் விபிஏசாளரம் ஒன்று தோன்றிடும்

படம்-2

 நிகழ்வுசெயல்முறையுடன் ஒருபடிவத்தைமூடுதல்

பயனாளர் ஒருவர் ஏதேனுமொரு படிவத்தை திறந்து பார்த்தபிறகு மூடுவதற்கு அல்லது படிவத்திலிருந்து வெளிவருவதற்கு விரும்புவார். இவ்வாறான நிகழ்வின்போது

ஒவ்வொருமுறையும் படிவத்தை தானாகவே அச்சிடவேண்டும் என விரும்பினால் படம்-3-ல் உள்ளவாறு பண்பியல்புபெட்டியில் உள்ள நிகழ்வு(event)களில் on closeஎன்ற நிகழ்வை தெரிவுசெய்க. பின்னர் அதற்கருகில் உள்ள builder பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் படம்-3-ல் உள்ளவாறு தோன்றிடும் விபிஏசாளரத்தில் இதற்கான கட்டலைவரிகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து  சேமி்த்திடுக. இதன் பின்னர் இந்த படிவத்தை மூடும்போதும் இந்த படிவம்ஆனது தானாகவே அச்சிடபடும்

படம்-3-

நிகழ்வுசெயல்முறையை பயன்படு்ததி நீக்குதல் செயலை உறுதிபடுத்துதல்

படிவகாட்சியில் கருவிபட்டியின்மூலம்  ஆவணங்களை நீக்குதலைவிட ஒரு படிவத்தில் கட்டளை பொத்தானை உருவாக்கி அதன்மூலம் நீக்குதல் சிறப்பான செயலாகும். இந்த நீக்குதல் கட்டளைபொத்தான் ஆனது பயனாளரின் உற்ற நண்பனாக உதவுகின்றது. இது ஒரு ஆவணத்தை எவ்வாறு நீக்குதல் செய்வது எனஅனைவரும் புரிந்துகொள்ளும்படியான மிகஎளிதான வழியை காண்பிக்கின்றது. கூடுதலாக ஒருஆவணத்தை தடாலடியாக நீக்குதல் செய்யாமல் நிறைய கட்டுபாடுகளை விதித்து அதன்பின்னரே நீக்குதல் செயலை அனுமதிக்கின்றது இந்த கட்டளை பொத்தானை சொடுக்கியிவுடன் பயனாளர் மனம்மாறி நீக்குதல் செய்யாமல் விடுவதற்காக ஒரு இறுதிவாய்ப்பை வழங்கி அதனை உறுதிசெய்யும்படி கோருகின்றது ஏனெனில் இந்த ஆவணத்துடன் தொடர்புடைய பிரிதொரு ஆவணம் ஏதேனும் இவ்வாறு நீக்குவதால் பாதிக்காமல் இருக்குமா என பயனாளருக்கு மேலும்ஒரு வாய்ப்பை வழங்குகின்றது இந்த நீக்குதல் செயலை உறுதி செய்வதற்கு ஒரு msgbox.() என்ற சார்பை பயன்படுத்தலாம்

நிரல்தொடர்-33-1ல் உள்ளவாறு frm product formல் உள்ள cmd delete என்ற பொத்தானிற்கான குறிமுறைகள்  msgbox.() என்ற சார்பை பயன்படுத்தி நிக்குவதை உறுதிசெய்கின்றது

படம்-4

இந்த  cmd deleteclick() என்ற நிகழ்வு செயல்முறையை இயக்கும்போது  படம்-4-ல் உள்ளவாறு அக்சஸானது  செய்திபெட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது. இந்த செய்திபெட்டியில் yes , noஆகிய இரு வாய்ப்புகளை பயனாளருக்கு வழங்குகின்றது இதில் உள்ள  yes என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கினால் குறிப்பிட்ட ஆவணம் நீக்கபட்டுவிடும் noஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கினால் குறிப்பிட்ட ஆவணம் நீக்கபடாமல் அப்படியே பழையநிலையில் இருக்கும்

நிரல்தொடர்-23-1

Private Sub cmdDelete_Click()

On Error GoTo cmdDelete_Click_Err

Dim intAnswer As Integer

intAnswer = MsgBox(“Are you sure you want to delete this Product?”, vbQuestion + vbYesNo, “Delete Product”)

If intAnswer = vbYes Then

RunCommand acCmdDeleteRecord

End If

Exit Sub

cmdDelete_Click_Err:

MsgBox “Error is ” & Err.Description

Exit Sub

End Sub

அறிக்கையில்  நிகழ்வுசெயல்முறைகள்

படிவத்தை போன்றே அறிக்கைகளிலும் நிகழ்வுசெயல்முறையை பயன்படுத்திடும்போது  குறிப்பிட்ட பதில் நிகழ்வுகள் ஏற்படுகின்றன ஒட்டுமத்த அளவிலும் பகுதிஅளவிலும் அறிக்கையில் ஒருநிகழ்வின் பதில் விளைவு ஏற்படுகின்றது அதனால் ஒரு நிகழ்வை அறிக்கையின் ஒட்டுமொத்த அளவில் இணைத்து இயக்கிடும்போது அதன் விளைவு நிகழ்வுகளும் அறிக்கையின் ஒட்டு மொத்தஅளவில் ஏற்படுகின்றது.

இவ்வாறே ஒரு பகுதியில் மட்டும் இணைத்து இயக்கினால் அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பதில் விளைவு(அட்டவணை-23-4) ஏற்படுகின்றது

அட்டவணை-23-4 அறிக்கை நிகழ்வுகள் தூண்டுதல் செயல்

வஎண் நிகழ்வுகள் தூண்டுதல்செயல்
1 On open அச்சிற்குமுன் அறிக்கை.ை திறத்தல்
2 On close அறிக்கை மூடப்பட்டு திரையிலிருந்து நீக்கபடுதல்
3 On page அறிக்கையின் பக்கத்தை மாற்றுதல்

அறிக்கையின் பகுதிஅளவில் நிகழ்வு செயல் முறைகள்

மேலும் மூன்று நிகழ்வுகள்(அட்டவணை-23-5) அறிக்கையின் பகுதிஅளவில் பண்பியல்புகளை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது

அட்டவணை-23-5 அறிக்கையின் பகுதிஅளவு செயல்முறைகள் தூண்டுதல்செயல்

வஎண் நிகழ்வுபண்புகள் நிகழ்வுகள் நிகழ்வை தூண்டுதலால் நடைபெறும் செயல்கள்
1 On format வடிவமைத்தல் ஒரு பகுதிக்குள் என்ன வகையான தரவுகள் செயல்படுகின்றது என தெரிந்து கொள்வது
2 On print அச்சிடுதல் அச்சிடுவதற்கான தரவுகளை அதற்கேற்ப வடிவமைத்தல்
3 On retreat பின்வாங்குதல் வடிவமைத்தபின் அச்சிடுவதற்குமுன் ஓய்வெடுத்தல்

On format என்ற நிகழ்வை பயன்படுத்துதல்

ஒரு அறிக்கையில் பக்க அமைப்பை வடிவமைத்தல்,கணக்கீடுகளை செய்தல் போன்ற நிகழ்விற்கு இந்த On format என்ற நிகழ்வு பண்பியல்பு பயன்படுகின்றது  இதனை செயல்படுத்துவதற்கு  பண்பியல்பு உரையாடல் பெட்டியில் On format என்ற நிகழ்வு பண்பியல்பிற்கு அருகிலுள்ள builderஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விபிஏ சாளரம் ஒன்று திரையில் தோன்றிடும் அதில் கீழ்காணும் (நிரல்தொடர்-23-2) கட்டளைவரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்து  சேமித்திடுக  இது ஒரு கட்டுபாட்டை பிரதிபலிக்கவும் மறைக்கவும் செய்யும் நிகழ்வுகளை செயல்படுத்துகின்றது ஒரு கட்டுபாட்டின் மதிப்பு உண்மை(True)யெனில் கட்டுபாட்டை பிரதிபலிக்கவும்கட்டுபாட்டின் மதிப்பு பொய்(False)யெனில் கட்டுபாட்டைமறைக்கவும் செய்யும்

நிரல்தொடர்-23-2

Private Sub Detail0_Format(Cancel As Integer, FormatCount As Integer)

If Me!blnAuction = True Then

Me!dtmAuctionEndDate.Visible = True

Else

Me!dtmAuctionEndDate.Visible = False

End If

End Sub

ஒரு நிகழ்வு செயல்முறையில் ஒரு அறிக்கையை திறத்தல்

ஏதேனுமொரு அறிக்கையை திறக்கும்போது அவ்வறிக்கையின் தலைப்பை மட்டும் பிரதிபலிக்கசெய்து மற்ற தகவல்களை பிரதிபலிக்க செய்யாமல் வெறுமையாக காட்சியளிக்கும் அல்லது சமயத்தில் # error value என்றவாறு பிழைமதிப்பு  மட்டும்  திரையில் பிரதிபலிக்கசெய்யும் தகவல்கள் விடுபட்டு திரையில் வெறுமையாக பிரதிபலிப்பதை தவிர்பதற்காக on no data என்ற நிகழ்வை பயன்படுத்துதல் சிறந்ததாகும்  பண்பியல்பு உரையாடல் பெட்டியில்  on no data என்ற நிகழ்விற்கு அருகிலுள்ள builder என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் விபிஏ சாளரத்தில் இவ்வாறு தரவுகள் ஏதும் இல்லையெனில் msg box ( ) என்றொரு செய்திபெட்டியை பிரதிபலிக்க செய்வதற்கான கீழ்காணும்(நிரல்தொடர்-23-3) கட்டளைவரிகளை  தவறில்லாமல் உள்ளீடு செய்து சேமித்திடுக.

நிரல்தொடர்-23-3

Private Sub Report_NoData(Cancel As Integer)

MsgBox “The is no data for the report”

Cancel = True

End Sub

செய்திபெட்டி msg box ( )

இதுஒரு சக்திவாய்ந்த சார்பு செயலியாகும்  இது ஒரு உரையாடல் பெட்டியின் மூலம் திரையில் பயனாளருக்கு செய்தியை பிரதிபலிக்க செய்கின்றது பின்னர் ஒரு பயனாளர் தெரிவுசெய்யும் வாய்ப்பிற்கு ஏற்ப  மதிப்பை உடனடியாக திருப்புகின்றது இந்த சார்பானது msbox(prompt[,button][,title][,helpfile][,content]) ஆகிய ஐந்துமதிப்புகளை கொண்டதாகும்

நினைவக்குறிப்பு (prompt)

  1. பொத்தான்(button)
  2. தலைப்பு(title)
  3. உதவிகோப்பு(help file)
  4. உள்ளடக்கம்(content)

1.number and type button

2.icon style

3.default button

4.modelity of message box

 அட்டவணை-23-6 உள்கட்டமைக்கபட்ட மதிப்புடன்கூடிய செய்திபெட்டியின் மதிப்புகள்

வஎண் மாறி மதிப்பு விவரங்கள்
1 Vb ok only 0 இதில்ok என்ற பொத்தான் மட்டும் பிரதிபலிக்கும்
2 Vb ok cancel 1 இதில் ok ,cancel ஆகிய பொத்தான்கள் பிரதிபலிக்கும்
3 Vb abort retry ignore 2 இதில்abort ,retry ,ignore ஆகிய பொத்தான்கள் பிரதிபலிக்கும்
4 Vb yes no cancel 3 இதில்yes ,no ,cancel ஆகிய பொத்தான்கள் பிரதிபலிக்கும்
5 Vb yes no 4 இதில்yes ,no ஆகிய பொத்தான்கள் பிரதிபலிக்கும்

Previous Older Entries