அ முதல் ஃ வரை கணினி ஒரு அறிமுகம்-புதியவர்களுக்கு

மிகஅற்புதமான கணினி உலகிற்குள் உங்களை வரவேற்பதில் பெரிதும் நான் மகிழ்ச்சி யடைகிறேன்.  தற்போது நாமெல்லோரும் இந்த புதிய தகவல் தொழில் நுட்ப சகாப்த நுழைவாயிலை கடந்த சென்று கொண்டிருக் கிறோம். அதன்பயனாக  நம்முடைய மிகப்பெரும் வெற்றி படைப்பான கணினி எனும் மிகஅற்புத கருவியுடன் பணிபுரிந்து வாழ்ந்து வருகிறோம்.

1.0

படம்-1

  கணினியானது பொதுவாக அதிக செலவு பிடிக்ககூடியம் புதுமையானதும் ஆன ஒரு பொருளாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது.  ஆனால் இன்றைய நிலையில் இதன் தாக்கம் நம்முடைய ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது.  ஆயினும் துரித தொழில் நுட்ப வளர்ச்சி , ஆரய்ச்சி ஆகிய வற்றின் உதவியால்  மிகச்சிறந்த பல வாய்ப்புகளின் அதிகபட்ச நன்மைகள் குறைந்த செலவில்  தற்போது எங்கும் எவரும் எளிதில் அடையும் வகையில் கிடைக்கின்றன.

முதலில் இங்கு நான் உங்களுக்கு பல நிகழ்கால கணினியின் நன்மைகளை பற்றி அறிமுகபடுத்த விழைகிறேன்.  அதாவது தொடக்க காலத்தில் அறிவியல் ஆய்வுக்கூடத்திலும் பின்னர் ஆய்வு நிறுவனங்களிலும் இருந்த இந்த கணினியானது தற்போது படிப்படியாக  தனிநபர் முதல் தொழிலகங்கள்வரை  அடிப்படைத் தேவை யாகவே கணினி மாறிவிட்டதை காண்கிறோம்.  இன்று நம்முடைய எந்தவொரு செயலும் இந்த கணினியில்லாது நடைபெறாது என்று நிலைக்கு வந்துவிட்டது.

இவ்வாறான கணினியினால் நம்முடைய அன்றாட வாழ்வின் ஒருசில பயன்பாடுகள் பின்வருமாறு.

1. தொடர் வண்டி , வானூர்தி ஆகியவற்றில் பயனச்சீட்டுகளை ஒதுக்கீடு செய்வது.

2. மாணவர்களின் தேர்வு முடிவை அறிவிப்பதற்கான மதிப்பென் பட்டியலை தயார்செய்வது.

3. வானிலை அறிக்கைகளை தயார் செய்வது.

4. பொழுது போக்கிற்கான திரைப்படங்கள், அசைவூட்டு படங்கள், இசை தொகுப்புகள் போன்றவைகளை தயார்செய்வது.

5. மருத்துவமனைகளில் நோயாளிகளை கவணிப்பதற்கான திட்டங்களை நிரு வகிப்பது,

இவைகளின் தகவல்களை தொகுப்பது மட்டுமல்லாது மற்ற பயன்பாடுகளுக்கும் இதனை உபயோகித்து கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு பல பயனுள்ள செயல்களை நிகழ்த்தும் இந்த கணினி என்றால் என்ன ? என்ற கேள்வி கண்டிப்பாக இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் எழும்

கணினி என்பது மிகச்சிறந்த, துல்லியமான மின்னனு தகவல்களை,   உருவாக்கி பராமரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும் ,மேலும் இது இவ்வாறான தகவல்களை ஏற்று தேக்கி வைக்குமாறு வடிவமைக் கப்பட்டுள்ளது இவ்வாறு சேகரிக்க பட்ட தகவல்களை கொண்டு  நாம் இடும் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு அதன் விளைவுகளை வெளியிட உதவும் ஒரு கருவியாகும்.  இது ஒரு சாதாரன கணிப்பியை விட(calculator) பல்லாயிரம் மடங்கு வேகமாக செயல்படக்கூடியது ஆகும்.

இது தலைவலி பிடித்தசெயலான ,நகலெடுத்தல்(copy), நகர்த்துதல்(move), வெட்டுதல்(cut), ஒட்டுதல்(paste), போன்றவற்றுடன் தரவுகளை கூட்டுதல்,கழித்தல், பெருக்குதல், வகுத்தல், ஒப்பீடுசெய்தல் போன்ற கணக்கீடுகளையும் மிக எளிதில் நம்மைவிடமிக துல்லிய மாகவும் விரைவாகவும் செய்கின்றது.

இவ்வாறு செய்கின்ற செயல்களுக்காக சில கட்டளைகளை நாம் உள்ளீடு செய்ய வேண்டியுள்ளது  அவைகளை  கட்டளைத்தொடர் (programme) என அழைக்கின்றோம். சுருக்கமாக கூறவேண்டுமெனில் கணினி என்பது ஒரு மின்னனு சாதனமாகும் இது

1. பயனாளிகள் வழங்கும் தரவுகளை, கட்டளைகளை ஏற்று  செயல்படுகிறது.

2. தரவுகளை தேக்கிவைத்து கணக்கீடுகளை தருக்க செயல்களை செயல் படுத்துகிறது.

3. அதன்பின்னர் பயனாளர் குறிப்பிட்டவாறு வெளியீட்டை வழங்குகிறது.

4. மிகவிரைவாக நம்பகமான அளவில் தரவு,ஒலிஒலிபடம், ஒலி ஆகியவற்றை கம்பிவழியே கடத்துகிறது.

கணினியின் வரலாறு

இவ்வாறான கணினி பிறந்து வளர்ந்த வரலாறைஇப்போது கண்போம்.  ஆதியில் “கணினி(Computer)” என்பது கணிதர் ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக எண்சட்டம் போன்ற பல்வேறு பொறியியல் கணக்கீட்டு கருவியின் உதவியுடன் பணிபுரிந்தார்.

உதாரணமாக கி.மு 87 இல் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அன்டிகைதிரா எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம் . கணிப்புகளை செய்யும் ஒருநபரே கணினி(Computer)” ஆகும் என்ற உருவகம்தான் மக்கள் அனைவரின் மனதிலும் 20ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்தது .ஆனால்  19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணினி என்பது கணிப்பதற்கு பயன்படும் ஒரு இயந்திரமாகும் என மக்களால் புரிந்துகொள்ளப்பட்டது

ஆயினும் 1.தானியங்கி கணக்கீடு, 2.கட்டளைத்தொடர்  ஆகிய இரு தொழில் நுட்பங்களின் அடிப்படையிலேயே இன்றைய கணினியின் வரலாறு தொடங்குகின்றது அபாகஸ் மணிச்சட்டம் முதல்வகைக்கும் அன்டிகைதிரா  இரண்டாம் வகைக்கும்  எடுத்துகாட்டுகளாகும்.

2

படம்-2

   படம்-2-ல் காணும் ஜாக்குவேர்டு லூம் என்பதுதான் 1801 ஆம் ஆண்டு முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட  கட்டளைத்தொடர் சாதணமாகும் இது Museum of Science and Industry in Manchester,  England, இல் உள்ளது.இதில் துளையிடப் பட்ட அட்டையை பயன்படுத்தி ஒரு நெசவுஇயந்திரம் இயக்கப்பட்டது.

பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கணிதம், பொறியியல் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. அதன்பயனாக 17ம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூடுகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பொறியியல் கணிப்பு சாதனங்கள்  வரத் தொடங்கின,

3

படம்-3

இதன் காரணமாக எண்ம கணினி மூலமான தொழில் நுட்பங்கள் பல 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண் டின்  ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன.  டிஃபரன்ஸ் எஞ்சின் என்பதை 1823 இலும் அனாலிட்டிகல் எஞ்சின் எனும் முதன்முதல் முழுமையான கட்டளைத்தொடர் கணினியை 1837இலும் சார்ல்ஸ் பாபேஜ் என்பவர்  வடிவமைத்தார்.

4

படம்-4

  1890 ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க  நாட்டினுடைய மக்கள்தொகை கணக்கிடுவதற்காக ஹெர்மன்ஹோல்டிரித் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட துளையிடப்பட்ட அட்டையும் கணக்கீட்டு அட்டவனைஇயந்திரமும் பெரிதும் பயன்பட்டது.தொடர்ந்து இவ்வாறான கணக் கீட்டிற்காக தற்போது IBM என சுருக்கமாக அழைக்கப்படும் International Business Machine Corporation என்ற நிறுவனத்தை இவர் 1911 இல் தொடங்கினார்.இவ்வாறு இதுவரையில் உருவாக்கபட்ட வைகளை முதல் தலை முறை கணினி என அழைக்கப்படுகின்றது.

5

படம்-5

  பெனிசில்வேனியா பல்கலைகழகத்தில் பணிபுரிந்த ஜான்மேக்லீ ,எக்கெர்ட் ஜெ.பிரஸ்பெர் ஆகியஇருவரும் கூட்டாக சேர்ந்து  இனியாக் ENIAC என சுருக்கமாக அழைக்கப்படும் Electronic Numerical Integrator and Calculator என்ற சுமார் 30 டன் எடையுள்ள 18000 வெற்றிடகுழாய்களை(vacum tube) பயன்படுத்தி கணினியொன்றை 1946 இல் இரண்டாம் உலகப்போருக்காக போர்முடிந்த பின்னர் உருவாக்கினர்.

6

படம்-6

   அதன்பின்னர் இந்த இனியாக்கின் குறைகளை தெரிந்து கொண்டு, அதைவிட நெகிழ்வுதன்மை கொண்டதும், நல்ல வடிவமைப்பை  கட்டளைத்தொடர் தேக்க கட்டமைப்பு என அறியப்படும் இன்றைய கணினியின் முன்னோடியான EDSAC என சுருக்கமாக அழைக்கப் படுகின்ற  Electronic Delayed Storage Automatic Computer என்ற கட்டளைத்தொடர் கணினியை 1952 இல் ஜான்வான் நியூமேன் என்பவரால்  உருவாக்கப் பட்டது  இவ்வாறு வெற்றிடகுழாயால் உருவாக்கப் பட்டவை இரண்டாம் தலைமுறை  கணினி என அழைக்கின்றனர்

ஆனால்1964 ஆம் ஆண்டு  மின்மபொருக்கி (transistor) கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக 1960 களில் உருவில் பெரியதாக இருந்த வெற்றிடகுழாய் கணினியானது செலவு குறைந்த, சிறிய,ஆனால் வேகமான மின்மபொருக்கி (transistor) கணினிகளால் மாற்றீடு செய்யப் படலாயின.இந்த வகை மூன்றாம்தலைமுறை கணினியாகும்.

ஒருங்கிணைந்த மின்சுற்று(integrated circuit) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த அரைக்கடத்தியின்(semiconductor)[i] அறிமுகத்தால்1970 களில்  கணினி உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைந்து கணினியின் உருவமும் மிகச் சிறியதானதால் தற்போதைய தனியாள் கணினிகளின் (PC)முன்தோன்றல்கள் சந்தையில் சாதாரண மக்களும் வாங்கும் அளவிற்கு கிடைக்கத்தொடங்கின.

7

படம்-7

  இதற்கடுத்த நிலையில் நுன் செயலியின்(microprocessor) வரவால் மிகச்சிறிய ஆனால் மிகவேகமாக செயல்படும் சிறியகணினி பாமரனும் வாங்கத்தூண்டும் விலையில் உருவாக்கப்பட்டது இந்தவகைகணினிகள் நான்காம்தலைமுறை கணினி என அறியப்படுகின்றது.

சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலகஇயந்திரங்களை கட்டுப்படுத்தல் வரையான பல்வேறு பணிகளுக்கும் ஒரேவிதமான கணினி வடிவமைப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. ஆயினும் முந்தைய வடிவமைப்புகளை விட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல்களை செயற்படுத்தலிலும், கொள்ளளவிலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. இவற்றின் இந்த திறனானது அடுக்குறிபோக்கில்  அதிகரித்து வருகின்றது. அதாவது ஒவ்வொரு இரண்டாண்டிலும் கணினியின் திறன் இரண்டின் மடங்காக உயர்ந்து வருகின்றது இதனை மூர் விதி என்று குறிப்பிடுவர்.

கணினியின் வகைகள்

தொன்மையான கணினிகள் பெரிய கட்டிடம் அளவிற்கு இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீக்கணினிகள்  என அழைக்கப்படும் சிறியவகையிலிருந்து நிறுவனங்களின் பரிமாற்ற செயற்பாடு களுக்கு பயன்படும் முதன்மை சட்டக கணினி(Main Frame Computer) என அழைக்கப்படும் மீப்பெரிய வகை வரை தற்போது பயன்பாட்டில் உள்ளன. . ஆயினும் மக்களுக்கு அதிகம் பரிட்சய மானவையாக அமைவன சிறியளவானதும் ஒருத்தரின் பயன் பாட்டுக்குரியதுமான தனியாள் கணினியும்  மடிக்கணினியும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதி கணினிகளாகும்(Embedded Computer). இந்த உட்பொதிகணினியென்பது இன்னொரு சாதனத்தை கட்டுப் படுத்து வதற்குரிய சிறிய கணினியாகும். இவை போர்விமானங்களில் இருந்து எண்ம படப்பிடிப்பு கருவிகள் வரை பயன்படுத்தப் படுகின்றன  செயலின் அடிப்படையில் கணினியை இரு வகையாக பிரிக்கலாம் அவை

8

படம்-8

1.ஒத்திசைக்கணினி(analog computer): தொடர்ந்து மாறிக்கொண்டே யிருக்கும் வெப்பநிலை,திரவம், மின்சாரம்  போன்றவற்றை கணக்கிட பயன்படுகின்றது. முதல் படத்தில் பொறியியல் அனலாக் கம்யூட்டர்  இரண்டாவது படத்தில் மின்னணு ஒத்திசைக்கணினி(analog computer)ஆகும்

2.எண்ம கணினி(digital computer): தற்போது நடைமுறையில் நம்மால் பயன்படுத்தி கொண்டிருப்பவை

ஆயினும் பொதுவாக உருவஅமைப்பின் அடிப்படையில் கணினியை பின்வருமாறு வகைபடுத்தப்படுகின்றன.

1.மீப்பெருங்கணினி(super computer): இந்தியாவின் சிடாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட –பாரம்-10000 இந்தவகையைசேர்ந்தது. வின்வெளிஆய்வு நிறுவனங்களில் உபயோகப் படுத்தப் படுகின்றது

2.முதன்மைபொறியமைவுகணினி(mainframe computer): இரயில்வே வங்கி போன்ற நிறுவனங்களில் ஒரே சமயத்தில் பல்லாயிரகணக்கான நபர்பயன்படுத்திடும் வகையில் இதனை உபயோகப்படுத்தபடுகின்றது

3சிறுகணினி(mini computer) : சிறுநிறுவனங்களில் ஒரேசமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்  பயன்படுத்திடும் வகையில் இதனை உபயோகப்படுத்தபடுகின்றது

4.மிகச்சிறு கணினி(micro computer): தனிநபர் பயன்பாட்டிற்கான ஒருசமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்திடமுடியும்

5.புத்தகக்கணினி :

6.மடிக்கணினி:

7.கைக்கணினி :

கணினியின் பாகங்கள்

 9

படம்-9

 பருப்பொருளான ஓர்உடலும் அதனை இயக்குகின்ற உயிரும் சேர்ந்த ஒரு உருவை மனிதன் என நாம் அழைக் கின்றோம் அவ்வாறே  பருப்பொரு ளான 1வன்பொருளும்(hardware)  அதனை இயக்கபயன்படும் உயிர் போன்ற 2. மென்பொருளும் (software) சேர்ந்த ஒட்டுமொத்த உருவ மைப்பையே  கணினியென அழைக்கப்படுகின்றது இதனுடைய 1வன்பொருளd(hardware பின்வருமாறு

1.கணினித்திரை(monitor):  ஆரம்ப காலங்களில் கணினி யானது இந்த கணினித்திரை (monitor) இல்லாத தாகவே இருந்துவந்தது.ஆனால் இன்றோ கணினித்திரை(monitor) இல்லாத கணினியே இல்லை யென்றே கூறலாம் .நாம் உள்ளீடு செய்கின்ற எந்தவொரு செய்தியையும் கண்களால் காண்பதற்கேற்ப பிரிதிபலிக்க பயன்படுவதே கணினித்திரை(monitor)ஆகும். ஆரம்பத்தில் சிஆர்டி கணினித்திரை(monitor) அதன்பின்னர் எல்சிடி கணினித்திரை(monitor)  தற்போது ட்டிஎஃப்ட்டி கணினித்திரை(monitor) என மாறிக்கொண்டே வந்துள்ளது.

10

படம்-10

2. தாய்ப்பலகை(motherboard): செயலிகள், அட்டைகள், நேரணுகு நினைவகம் போன்றவை களை பொருத்தி இவைகளை ஒன்றுக்கொன்று இணைத்து முழுமையாக்க இது பயன்படுகின்றது

3. மத்திய செயலகம்(CPU): இங்குதான் அனைத்து கணக்கீடுகளை செயற்படுத்துவது தகவல்களை கடத்துவது போன்றசெயல்கள் நடைபெறுகின்றன
4. நேரணுகு நினைவகம் (RAM): கணினி செயற்படுவதற்குதேவையான தகவல்களை அவ்வப்போது தேடிபிடித்து கொண்டுவந்து செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக அடிக்கடி தேவைப்படும் தகவல்களை தயார்நிலையில் வைத்துகொண்டு அவ்வப்போது பயன்படுத்தி கொள்ளும் தற்காலிக நினைவகமாகும். இதுதான் ஒருகணினியின் முதன்மை நினைவக மாகவும். செயல்படுகின்றது ஆரம்பத்தில் 64எம்பியில் தொடங்கி 128எம்பி, 256எம்பி ,512எம்பி ,1ஜிபி ,2ஜிபி, 3ஜிபி, 4ஜிபி என இதன் திறன் வளர்ந்துகொண்டே வந்துள்ளது மின்சாரம் இருக்கும்வரை மட்டுமே இந்நினைவகத்தில் தகவல்கள் இருக்கும் .மின்சாரம் இல்லையனில்  இந்நினைவகத்தில் தகவல்கள் அழிந்துபோகும்.
5.விரிவாக்க அட்டை  கணினியில் ஒருசில கூடுதல் பணிகளுக்கு தேவைப்படும் கருவிகளை இணைத்து பயன்படுத்துவதற்காக துனையாக இருக்கின்றது
6.மின்விநியோகஅமைப்பு கணினியின் உள்ளுறுப்புகள் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை இது வழங்குகின்றது
7. குறுவட்டு பொறுத்துவாயில்   எழுதுவதற்கும் படிப்பதற்கும் ஆன குறுவட்டு களை கணினிக்குள் பொருத்துவதற்கு பயன்படுகின்றது.
8. வன்தட்டு(HD) கணினியில் தகவல்களை நிரந்தரமாக தேக்கிவைத்திட பயன்படுகின்றது.இதனை கணினியின் இரண்டாம்நிலை நிணைவகமாக கருதுவார்கள் இதன் நிணைவக கொள்ளளவு 80ஜிபி முதல் 320ஜிபி வரையில் இருக்கின்றது C: இயக்ககம் D: இயக்ககம்  E: இயக்ககம்(Directory) என நாம் பயன்படுத்தி கொள்வதற்காக இதன் நிணைவகத்தை பாகப்பிரிவினைசெய்வார்கள் கொள்ளளவு 80ஜிபி முதல் 320ஜிபி வரையுள்ள வெளிப்புற வன்தட்டையும் கணினியுடன் இணைத்து பயன்படுத்திகொள்ள முடியும்

11

படம்-11

9.விசைப்பலகை இது ஒரு தட்டச்சு இயந்திரத்தினை ஒத்த வாறான விசைகளை கொண்டது இதில் கூடுதலாக முதல்வரிசையில்  ஒருசில கட்டளைகளை உடனடியாக செயல்படுத்துவதற்கான செயலி விசைகள், இதனுடன் தற்போதைய செயலிலிருந்து வெளியேறுவதற்கு Esc எனும் விசை, பெரியஎழுத்தாக்கு வதற்கு Caps Lock எனும் விசை, எண்களின் விசைகளை கட்டுபடுத்துவதற்கு Num Lock எனும் விசை ஆவணங்களின் பக்கங்களை நகர்த்துவதற்கு Scrol Lock எனும் விசை செயலை தற்காலிகமாக நிறுத்திட Pause எனும் விசை திரைகாட்சியினை படமாக ஆக்கிட Print Screen  எனும் விசை  என்பன போன்ற  சிறப்புவிசைகளும், இரண்டாவது வரிசையில்  0லிருந்து 9 வரையுள்ள எண்களின் விசைகள் தட்டச்சுசெய்த எழுத்தை அழிக்க Backspace எனும்விசை  வலதுபுறமையத்தில் ஆவணங்களில் இடம்சுட்டியை நகர்த்துவதற்கு பயன்படும் Page up எனும் விசை, Page down எனும் விசை, இவைகளுக்கான அம்புக்குறிகள்  Home End எனும் விசை,  Insert எனும் விசை, del எனும் விசை, Enter என்பன போன்ற  சிறப்புவிசைகளும், வலதுபுறத்தில் கனிப்பியை போன்ற 0லிருந்து 9 வரையுள்ள எண்களின் விசைகள்  கடைசி வரிசையில் ஒருசில சிறப்பு செயல்களுக்காக பயன்படும் Shift எனும் விசை, Ctrl எனும் விசை, Alt எனும் விசை என்பன போன்ற  சிறப்புவிசைகளும் சேர்ந்து ஆகமொத்தம் 101அல்லது அதற்கு மேற்பட்ட விசைகளை கொண்டதாகும்.

10. இடம்சுட்டி  இது ஒரு விசைப்பலகையின் உதவியில்லாமல் கணினியை இயக்க பயன்படும் கருவியாகும்.

11.நிகழ்வுநேரங்காட்டி (Real Time clock)ஒருகணினியானது இயங்கிகொண்டிருந்தாலும் இயங்காது இருந்தாலும்  இதில்பொருத்தப்பட்ட மின்கலத்தின் உதவியால் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்து நாம் கோரும்போது அப்போதைய நேரத்தையும் நாளையும் காட்டிட உதவுகின்றது

12 .அச்சுபொறி இது கணினியின் வெளியீடுகளை தாளில் நாம் படிப்பதற்கு வசதியாக அச்சிட்டு பெறுதற்கு பயன்படும் கருவியாகும் .இவ்வாறான அச்சுப்பொறிகள் பின்வருமாறு வகைபடுத்தப்படுகின்றன

1.புள்ளியிலான அச்சுப்பொறி(dotmatics printer) இது செலவு குறைந்தது 9 பின் 24 பின் ஆகியவகைளில் கிடைக்கின்றது இதன்திறன் dpi (Dot per Inch)இல் அறியபடுகிறது

2.மைஊற்றும் அச்சுப்பொறி(Inkjet printer)  வண்ணப்படங்களை அச்சிடுவதற்கு ஆனால் செலவதிகமானது

3. வரிஅச்சுப்பொறி(line printer)  வர்த்தக நிறுவணங்களில் பயன்படுத்தப்படுகிறது இதன்திறன் Lpm(Line per minute) இல் அறியபடுகிறது

4. ஒளிஅச்சுப்பொறி(laser printer) வர்த்தக நிறுவணங்களில் பயன்படுத்தப் படுகிறது  இதன்திறன் PPm (Page per Minute இல் அறியபடுகிறது

5வரைவி.( plotter) பொறியியல் வரைபடங்களை வரைய பயன்படுகிறது

பொதுவாக முதலிரண்டும் இயங்கிடும்போது அதிக இரைச்சல் ஏற்படும்.

கம்பிகள்(Cables) இணைப்பான்கள்(Conectors) பொறுத்திகள்(Jockets)  கணினியின் உறுப்புகளையும் கருவிகளையும்  ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து முழுமையான கணினியாக உருவாக்குவதற்கு கம்பிகள்(Cables) இணைப்பான்கள் (Conectors) பொறுத்திகள்(Jockets) ஆகியவை பயன்படுகின்றன.

அதுமட்டுமல்லாது கணினியின் உறுப்புகளை 1. விசைப்பலகை, இடம்சுட்டி,  வருடி, நுன்பேசி ஆகியவற்றை கணினியின் உள்ளீட்டு கருவிகள் என்றும்

2. மத்திய செயலகம்(CPU) ரேண்டம் நேரணுகு நினைவகம் (RAM) போன்றவைகளை நுன்ம செயலிகள் என்றும்

3. கணினித்திரை(monitor),அச்சுப்பொறி ,ஒலிபேசி போன்றவைகளை கணினியின் வெளியீட்டு கருவிகள் என்றும் வகைப்படுத்தப் படுகின்றன

12

படம்-12

 கணினிப் புறப்பெட்டி எனும் இதனை அமைப்பு அலகு(system unit) என அழைக்கப் படுகின்றது. இதில்தான் கணினியின் அனைத்து உள்ளுறுப்புகளும் கட்டமைக்கப் பட்டுள்ளன.

13

படம்-13

கணினிப் புறப்பெட்டியின் முன்பக்கஅமைப்பு

1.கணினியின் இயக்கத்தை தொடங்கவும் நிறுத்தவும் பயன்படும் நிகழ்/அகல் நிலைமாற்றி.(on/off switch)

2. கணினியின் இயக்கம் திடீரென தொங்கலாக நின்றுவிடும்போது சரிசெய்து மீண்டும் கணினியின் இயக்கத்தை தொடங்க பயன்படும் மறுஅமைவு நிலைமாற்றி(reset switch).

3.கணினி இயங்குகின்றதா மின்சாரம் கணினிக்குள் வருகின்றதா எனத்தெரிந்து கொள்வதற்கு பயன்படும் செயல்காட்டிவிளக்கு(indicator bulb)

4.குறுவட்டு நெகிழ்வட்டுகளை கணினிக்குள் நுழைத்து பொருத்துவதற்கு பயன்படும் குறுவட்டு நெகிழ்வட்டுநுழைவுவாயில் (cd/dvd drive)

14

படம்-14

கணினிப் புறப்பெட்டியின் பின்பக்கஅமைப்பு

1.கணினிக்குத்தேவையான மின்சாரத்தை வழங்கும் மின்கம்பிகளை இணைப்பதற்கு உதவும் மின்சாரம் உள்ளீடு / வெளியீடு பொறுத்துவாயில்கள்.

2.இடம்சுட்டி/ மோடம் ஆகியவற்றை இணைக்க பயன்படும் வாயில்களான இணைவாயில்

3.கணினியின் திரையை இணைக்க பயன்படும் வாயில்களான ஒளிப்படம் /கணினித்திரை வாயில்

4அச்சுப்பொறியை இணைக்க பயன்படும் வாயில்களான இணையான வாயில்

5. விசைப்பலைகையை இணைக்க பயன்படும் வாயில்களான விசைப்பலகைவாயில்

6.பென்ட்ரைவை இணைக்கபயன்படும் வாயில்களான யூஎஸ்பி போர்ட் இது தற்போது வெளியிடப்படும் கணினிகளில் முன்புறம் அமைக்கப்பட்டு வருகின்றது

பயாஸ்(BIOS)          

15

படம்-15

 

அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு அமைப்பு Basic Input Output System என்பதன் குறும்பெயரே பயாஸ்ஆகும். கணினிக்கு மின்சாரத்தை அளித்து இதனை இயக்கத் தொடங்கும்போது கணினியின் உள்ளுறுப்புகள் இதனுடன் இணைக்கப் பட்டுள்ள கருவிகள்  அனைத்தும் நல்லநிலையில் உள்ளதா அவைகளுடனான இணைப்பு சரியாக இருக்கின்றதா என சரிபார்த்து அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும் தொடர்ந்து கணினியின் இயக்கும் பணியை இயக்க முறைமை (Operating System )யிடம் ஒப்படைக்கும் இவ்வாறான செயலை இதில் முன் கூட்டியே உட்பொதியபட்ட கட்டளைத் தொடரின் அடிப்படையில் செயற்படுத்துகின்றது இது கணினியின் முதன்மை(படிக்கமட்டுமான (Read only memory)) நினைவகமாகும் இந்த கட்டளைத் தொடர் உட்பொதியப்பட்ட செயலியை பயாஸ்சிப் என அழைப்பார்கள் கணினி இயங்க தொடங்கும்போது இதன் உள்ளுறுப்புகள் நல்லநிலையில் உள்ளதா அவைகளுடனான இணைப்பு சரியாக இருக்கின்றதா என சரிபார்த்திடும் பணியைPower On Self Test  சுருக்கமாக POSTஎன அழைப்பார்கள்

கணினியை வாங்குமுன் கவனிக்கவேண்டிய செய்திகள்

கணினியை இரண்டுவகையில் பெறமுடியும் .1.நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளவை .இவை விலை அதிகமானவையாகும் இவைகளை நிறுவன கணினி (branded computer) என அழைப்பர் 2.கணினியின் உள்ளுறுப்புகள் ,கருவிகள் ஆகியவற்றை தனித்தனியே கடைகளில் வாங்கிவந்து அவற்றை ஒருங்கிணைப்பு செய்துகொள்வது  இந்தவகை விலைக்குறைவானதுஆகும் இதனை தொகுப்பு கணினி (Assembled computer) என அழைப்பர் . ஒரு கணினியை வாங்குமுன் நம்முடைய தேவைகள் நாம் எதிர்பார்த்திடும் பயன்கள் நம்முடைய கையிலிருக்கும் ரொக்கத்தொகை விற்பனைக்கு பிந்தையசேவை  வழங்கப்படும் உத்திரவாதம்  மேம்படுத்திகொள்ளும் வசதி ஆகிய காரணிகளை  கருத்தில் கொள்ளவேண்டும்.

மென்பொருள்  கணினியை இயக்கவும் குறிப்பிட்ட செயல்களை செயற்படுத்திடவும் தரவுகளை வைத்து கணக்கீடு செய்யவும் பயன்படும் கட்டளைகளின் தொகுப்பே கணினியின் மென்பொருளாகும்.  இந்த கட்டளைகளாலான மென்பொருளை கணினியில் பல்வேறு செயல்களை நாம்விரும்பியவாறு செயற்படுத்துகின்றது. இந்த கட்டளைத் தொடர்கள் BASIC, FORTRAN, PASCAL, C++, JAVA, என்பனபோன்ற கட்டளைத்தொடர் மொழிகளில் எழுதப்படுகின்றது  இவை நம்மால் படித்துணரக்கூடிய ஆங்கில எழுத்துகளில் அமைந்திருக்கும் ஆனால் கணினிக்கு 0,1 ஆகிய இரண்டு எண்கள் மட்டுமே தெரியும்  அதனால் இந்த உயர்நிலை கட்டளைத்தொடர் மொழிகளில் எழுதப்படுகின்ற இந்த கட்டளை தொகுப்புகளை கணினிக்கு புரியக்கூடியவகையான இயந்திரமொழியாக மொழிமாற்றம் செய்திட சிப்பு மொழிபெயர்ப்பி(assembler),தொகுப்பி(compiler) ஆகிய கருவிகளை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இவைகளைபற்றி மெத்தபடித்தவர்கள் பார்த்துகொள்வார்கள் அதனால் அவற்றை பற்றி கவலைப்படவேண்டாம்..

இந்தமென்பொருளை  1.அமைப்பு மென்பொருள் 2.பயன்பாட்டு மென்பொருள் என இரு வகையாக பிரிக்கின்றனர்  விண்டோ, லினக்ஸ் போன்ற இயக்க முறைமைகள்(OS) முதல் வகையை சார்ந்தது. அலுவலக பயன்பாடான Ms Office, open Office ஆகியவற்றின் வேர்டு எக்செல் பவர்பாய்ன்ட் போன்றவை இரண்டாம் வகையை சார்ந்தது.

இந்த இயக்கமுறைமையானது(OS) ஒரு கணினியின் கட்டு பாட்டாளராக செயல்படுகின்றது .அதாவது வன்பொருளிற்கும் மென்பொருளிற்கும் இடையே  ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு அந்தந்த செயல்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் நிணைவகத்தை ஒதுக்கீடுசெய்து ,உள்ளீட்டு வெளியீட்டு  சாதணங்களை கட்டுபடுத்தி  கணினியை நாம் விரும்பியவாறு நன்கு இயங்கும்படி செய்கின்றது.


அக்சஸ்2007-19-அக்சஸில் மற்ற பயன்பாடுகளை ஒருங்கிணைத்தல் தொடர்ச்சி

 அவுட்லுக்2007என்ற பயன்பாட்டை உபயோகபடுத்தி தரவுகளை அனுகுதல் சேர்த்தல்,மாறுதல் செய்தல் ,நீக்கம் செய்தல் போன்ற பணிகளை அக்சஸ்2007இல் மிக எளிதாக செய்யமுடியும்,இதற்காக அக்சஸில் முதலில் நாம் பயன்படுத்த விழைகின்ற அட்டவணைஅல்லது வினாவை திறந்துகொள்க, பின்னர் அக்சஸ் திரையின் மேல் பகுதியில் உள்ள External Data என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் External Data என்றபட்டியின் Collect Data என்ற குழுவின்கீழ் உள்ள Create E-mail என்ற பொத்தானை படம்19-1தெரிவுசெய்து சொடுக்குக,

19.1

படம்19-1

உடன் இதற்கான வழிகாட்டி ஒன்று திரையில் தோன்றி உங்களை வழிநடத்தி செல்லும், இந்த வழிகாட்டியின் முதல் பக்கத்தில் ஒன்றும் செய்யமால்next என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக,

பின்னர் தோன்றும் திரையில் எந்த வகையான (HTML அல்லது Info path form ஆகியவற்றில் ஒன்றை ) தரவுகளை உள்ளீடு செய்து சேகரிக்க விரும்பு கின்றோம் என்பதை தெரிவுசெய்க, இதில் நாம் HTML என்பதை தெரிவு செய்தால் பெறுபவரும் இதே HTML ஐ வைத்திருக்க வேண்டும், Info path ஐ தெரிவு செய்தோமெனில் பெறுபவர் அவுட்லுக் மட்டும் வைத்திருந்தால் போதும் பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

அதன்பின்னர் தோன்றும் திரையில் புதியதாக தரவுகளை சேகரிக்கப் போகின்றோமா அல்லது ஏற்கனவே இருப்பதுடன் சேர்க்கப் போகின்றோமா என்பதில் ஒருவாய்ப்பை மட்டும் தெரிவுசெய்க, உடன் காலியான படிவத்தை வழிகாட்டி உருவாக்கிவிடும், ஏற்கனவே இருப்பது எனில் பெறுபவர் இதனை ஆய்வுசெய்து சரியாக இருக்கின்றது என புத்தாக்கம் செய்யமுடியும், தரவுகளை எவ்வாறு சேகரித்தாலும் ஏற்கனவே இருக்கும் தரவுகளை அழித்துவிட்டு புதியதாகத்தான் எழுதப்படும் என்பதை நினைவில் கொள்க, பின்னர் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,அதன்பின்னர் எந்தெந்த புலத்தினை உடன் அமைக்கப் போகின்றோம் என்பதை தெரிவு செய்க, அடுத்ததாக ஒவ்வொரு புலமும் படிப்பதற்கு மட்டுமா என குறிப்பிடுக, புலங்களின் பெயர்களுக் கிடையே இடைவெளி விடுக, இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் தோன்றும் குறுக்குவழி பட்டியில் property என்பதை தெரிவு செய்க பின்னர் தோன்றிடும் பன்பியல்பு பெட்டியில் தேவையானவாறு திருத்தம் செய்து, வழிகாட்டியில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, பிறகு வருகின்ற மின்னஞ்சலிற்கு பதிலை எவ்வாறு அனுப்பிட விரும்புகின்றோம் என முடிவுசெய்க, Automatically process to receipenet என்பதை தெரிவுசெய்து அவுட்லுக்கை அனுமதிப்பதற்காக Customs தேர்வுசய்பெட்டியில் தரவுகளை சேர்க்கவும் ,அவுட்லுக் 2007இல் Acces Data update to existing data என்ற தேர்வுசய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, தரவுதளத்துடன் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் இருக்கும் புலத்தினை குறிப்பிட்டு நடப்பில் உள்ள அட்டவணைஅல்லது வினாவின் புலத்தினை தெரிவு செய்து கொண்டு மின்னஞ்சல் மூலம் தொடர்புள்ள அட்டவணையின் புலத்தினை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, இந்த மின்னஞ்சலில் subject , To ,CC ,BCCC ,attachment ஆகிய விவரங்களை வாடிக்கையாளர் விரும்பியவாறு உள்ளீடுசெய்து இயல்புநிலை அமைப்பை ஏற்றுக்கொண்டு next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கியபின் மீண்டும் அடுத்து தோன்றும் திரையில் next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, பெறுபவரின் மின்னஞ்சல் முகவரிமற்றும் இதர விவரங்களை பெறுபவரின் அடைவை (directory) தெரிவு செய்து send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, இந்தபடி முறையில் நாம் தெரிவு செய்த வாய்ப்பிற்கு ஏற்ப மாறுபடும்,infopath ஐ தெரிவுசெய்திருந்தால் ஒருசில படிமுறைகள் மட்டும் மாறுபடும்,

சரி தரவுகளை சேகரிப்பதற்கான மின்னஞ்சலை வாடிக்கையாளருக்கு அனுப்பிவிட்டோம் இதற்கான பதில் வாடிக்கையாளரிடமிருந்து பெறும்போது அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது , நம்முடைய தரவுதளத்தினை இந்த வாடிக்கையாளரிடமிருந்து பெறுகின்ற பதிலிலிருந்து எவ்வாறு புத்தாக்கம் செய்வது என இப்போது காண்போம்,

அக்சஸ்திரையின் மேல்பகுதியில் உள்ள External Data என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Extenal Data என்ற பட்டியின் Collect Data என்ற குழுவின் கீழ் உள்ள Manage replies என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 19.2

படம்19-2

உடன் Manage Data Collection message என்ற உரையாடல் பெட்டி (படம்19-2) யொன்று திரையில் தோன்றும் இதில் எந்தெந்த மின்னஞ்சல்கள் எவ்வப்போது அனுப்பட்டது அதற்கான பதில் எவ்வப்போது பெறப்பட்டது, எவையெவை புத்தாக்கம் செய்யப்பட்டன எவையெவை நீக்கம் செய்யப்பட்டன என்பன போன்ற செய்தி அறிந்து கொள்வதற்கான வசதிகள், வாய்ப்புகள் உள்ளன,

இதனுடைய மேல்பகுதியில் select a Data collection message என்பதன்கீழ் பெறப்பட்ட செய்திகளின் பெயர் அட்டவணைஅல்லது வினா,செய்தியின் வகை சேகரித்த விவரங்கள் எந்தெந்த மடிப்பகத்தில் (folder) தேக்கி வைக்கப்பட்டுள்ளன, என்ற விவரம் பட்டியலாக தோன்றும் இந்த உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில் நம்மால் தெரிவுசெய்யப்பட்ட செய்தியின் Date/Time,last sent,auto mataic reply status போன்ற முழுவிவரங்களும் தோன்றும்

Resend e -mail message என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மேல்மீட்பாக விவரம் தோன்றும் மேலும் இந்த மின்னஞ்சலில் வாடிக்ககையாளரால் சில படிமுறைகள் செய்யப்படுகின்றன, இது பெறுபவரின் முகவரி அல்லது வேறுஒருவருக்கு இந்த செய்தியை மின்னஞ்சலாகஅனுப்பிவைக்க உதவும்,

Delete e-mail message என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் இது நாம் பெற்ற மின்னஞ்சலை நீக்கம் செய்துவிடும் இதன்பிறகு இதே வாடிக்கையாளரிடமிருந்து பதில் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றால் அதனை வழக்கமான புதிய மின்னஞ்சலாக பாவித்துக்கொள்ளும்,

 19.3

படம்19-3

Message option என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் மேல்மீட்பாக செய்தி வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் செய்துவிடும், இதனை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் collecting Data using e-mail option என்ற உரையாடல் பெட்டி படம்19-3இல் உள்ளவாறு தோன்றும் இது input section மற்றும் cutoms process section ஆகியவற்றை அமைத்திட உதவுகின்றது, இதில் மாறுதல் ஏதேனும் செய்தால் அவுட்லுக்கில் மின்னஞ்சல் பெட்டியில் இருப்பவைகள் பாதிப்படையாது,இதில் உள்ள

1,Automatically process replies and add data to data base என்ற வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்க,இதன்மூலம் அவுட்லுக்கில் வாடிக்கையாளரிடமிருந்து பதில் மின்னஞ்சல் கிடைக்கபெற்றதும் தானாகவே தரவுதளத்தில் சேர்த்துவிடும், இதனை தெரிவுசெய்யவில்லை யெனில் நாமாக முயன்று நாம் அனுப்பிய மின்னஞ்சலிற்கு பதில் வந்ததா என தேடிப்பிடித்து சரிபார்த்து தரவுதளத்தில் சேர்க்கவேண்டும்,

2,Discard replies for those to whom you data not send theses message என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் மின்னஞ்சல்லிற்கு பதில் வந்தால் அவுட்லுக் மடிப்பகத்தில் தேக்கிவைத்துவிடும், தரவுகளை தானாகவே சேர்க்காது, இதனை தெரிவுசெய்தால் பதில் கிடைத்ததும் அல்லது வெளியில் மற்றவர் களிடமிருந்து பதில் வந்தாலும் தானாகவே தரவுகளை சேர்த்துவிடும்,

3,Allow multiple rplies for each receipient என்ற வாய்ப்பு ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கப்பெறும் பதில்களை அவ்வப்போது தரவுதளத்தினை புத்தாக்கம் செய்து கொள்ள பயன்படுத்திகொள்ளும், இதனை தெரிவுசெய்தால் முதலில் வரும் பதிலைமட்டும் புத்தாக்கம் செய்ய பயன்படுத்தி கொள்ளும் பின்னர் வரும் பதிலை தேவையெனில் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது நீக்கம் செய்துவிடலாம், infopath2007ஐ பயன்படுத்துதாயின் பதில் மின்னஞ்சலின் எண்ணிக்கையை மட்டும் காட்டும் ஆவணங்களின் எண்ணிக்கை யன்று ஒரேபதிலில் பல்வேறு ஆவணங்களை புத்தாக்கம் செய்யப்படும், தெரிவு செய்யவில்லை யெனில் முதலில் வந்த பதிலை மட்டும் கணக்கில் கொள்ளும் மற்றவற்றை விட்டுவிடும்,

4,Allow multiply row per reply என்ற வாய்ப்பு பலவரிகளை மின்னஞ்சலின் முடிவுப்பகுதியில் ஒன்றன் கீழ் ஒன்றாக செய்தியில் சேர்க்கின்றது, இதனை தெரிவுசெய்யாது விட்டால் ஒருவரியை மட்டும் சேர்க்க அனுமதிக்கின்றது,

5,Only allow update to existing Data என்பதை தெரிவுசெய்தால் புதிய ஆவணத்தை விட்டுவிடும் புத்தாக்கம் செய்யாது இதனை தெரிவுசெய்யாது விட்டுவிட்டால் புதிய ஆவணத்தை சேர்த்துவிடும்,

6,Setting for automatic processing என்ற வாய்ப்பை தெரிவுசெய்தால் தானாகவே எப்போது பதிலிருக்கவேண்டும் நீக்கம் செய்யவேண்டும்என்றவாறு செயற்படுத்தி முடிவுசெய்ய உதவுகின்றது, எத்தனை பதில்களை தெரிவு செய்கின்றோமா அதற்கேற்றவாறு Date and Time ஆகியவற்றை குறிப்பிட வேண்டும், Apply பொத்தானை தொரிவுசெய்து சொடுக்குதல் செய்து ok பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

இவ்வாறு அவுட்லுக்2007ஐ பயன்படுத்தி நம்முடைய தரவுதளத்தினை புத்தாக்கம்(Update) செய்து கொள்ளமுடியும்,

ஓப்பன் ஆஃபிஸ்-94-பொது

    வாடிக்கையாளர் விரும்பியவாறு கட்டளைபட்டி கருவி பட்டிகுறுக்குவழிவிசை ஆகியவற்றை ஓப்பன் ஆஃபிஸில் புதியதாக உருவாக்கி அதற்கான சிறுசிறுநிகழ்வு செயல்களை ஒதுக்கீடு செய்து கொள்ளமுடியும் ஆயினும் சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதால் உருவாகும் குறுக்குவழிபட்டியை மட்டும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் செய்திடமுடியாது பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் இணையதளத்திலிருந்து அல்லது மூன்றாவது விற்பணையாளர் மூலம் ஓப்பன் ஆஃபிஸில் புதியதாக விரிவாக்கங்களை மிகசுலபமாக செய்துகொள்ளலாம்

இதனுடைய கட்டளை பட்டியை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்திட திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ளTools ==> Customize==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customizeஎன்ற திரையில் Menusஎன்ற திரையை(படம்-1) தோன்றிடசெய்க அதில்save in என்ற பகுதியின் கீழிறங்கு பட்டிமூலம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் அல்லது நடப்பு ஆவணம் ஆகிய ஏதேனுமொன்றை தெரிவுசெய்துகொள்க

94.1

படம்-1

பிறகு இதற்கு மேலேயுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான கட்டளையை தெரிவு செய்து கொள்க .நடப்பிலிருக்கும் பட்டியில் மாறுதல்கள் செய்வதாக இருந்தால் தேவையான கட்டளை பட்டியை இதனுடைய கீழிறங்கு பட்டியிலிருந்து தெரிவு செய்து கொண்டு இதே உரையாடல் பெட்டியில் Menu அல்லது Modify என்றவாறு தேவையான பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் சிறு உரையாடல் பெட்டியில் Move, Rename,Delete. ஆகிய கட்டளையை செயற்படுத்துக ஆனால் ஒருசில கட்டளைபட்டிக்கு இந்த கட்டளை செயல்படாது என்பதை மட்டும் மனதில் கொள்க இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

இதே உரையாடல் பெட்டியில்Newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்New Menu என்ற (படம்-2)சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Menu Name என்பதி்ல் Skmenu என்றவாறு ஒருபெயரினை தட்டச்சு செய்து Menu position என்ற பகுதியில் அது மிகச்சரியான இடத்தில் அமரச்செய்வதற்கு மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி கொள்க பின்னர் OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

94.2

படம்-2

கட்டளைபட்டையில் புதியதாக ஏதேனுமொரு கட்டளையை சேர்க்கவிரும்பினால் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Add commands என்ற (படம்-3)உரையாடல் பெட்டியில் மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி புதிய வகையை category என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டு புதிய கட்டளையை commands என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து சொடுக்கி பட்டியில் சேர்த்து கொள்க இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி கட்டளை பட்டியில் நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

94.3

படம்-3

மேலே கூறியவாறு கருவிபட்டையிலும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளலாம் அதாவது புதிய கருவிபட்டியை சேர்த்துகொள்ளுதல் நடப்பிலிருக்கும் கருவிபட்டியில் புதிய கருவிகளின் உருவபொத்தான்களை சேர்த்தல் அல்லது இடமாற்றியமைத்தல் போன்ற பணிகளை செய்யலாம்

94.4

படம்-4

இதற்காக நடப்பில் இருக்கும் கருவிபட்டியின் கடைசியாக இருக்கும் அம்புக்குறியை தெரிவுசெய்துசொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியிலிருந்து Customize Toolbar என்றவாறு (படம்-4)கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customizeஎன்ற திரையில் Toolbars என்ற(படம்-5) திரையை தோன்றிடசெய்க

94.5

படம்-5

அதில்save in என்ற பகுதியின் கீழிறங்கு பட்டிமூலம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் அல்லது நடப்பு ஆவணம் ஆகிய ஏதேனுமொன்றை தெரிவுசெய்துகொள்க பிறகு இதற்கு மேலேயுள்ள கீழிறங்கு பட்டியலிருந்து தேவையான கருவி பட்டையை தெரிவு செய்து கொள்க நடப்பிலிருக்கும் கருவிபட்டியில் மாறுதல்கள் செய்வதாக இருந்தால் தேவையான கருவி பட்டியை கீழிறங்கு பட்டியலிருந்து தெரிவு செய்து கொண்டு இதே உரையாடல் பெட்டியில் Toolbar அல்லதுModifyஎன்றவாறு தேவையான பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் சிறு உரையாடல் பெட்டியில் Move, Rename,Delete. ஆகிய கட்டளையை செயற்படுத்துக இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்துகொள்க

நினைவகத்திற்குள் கணக்கீடு(In memory computing) என்பதே

நினைவகத்திற்குள் கணக்கீடு(In memory computing)  என்பதே வருங்காலத்தில் மிகமுக்கிய பங்காற்றவிருக்கின்றது என கார்ட்னர் என்ற கணினிஅறிஞர் கணித்துள்ளார்

அதாவது  செல்லிடத்து பேசிக்கான தரவுகளை கையாளுதல் ,வங்கிபணியில் வாடிக்கையாளர்களர்களின் தேவையை நிறைவுசெய்தல்,இணையவியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை பூர்த்திசெய்தல் என்பனபோன்ற எண்ணற்ற செயல்களுக்காக ஏராளமான அளவில் தரவுகளை தவறில்லாமல் கையாளவேண்டியுள்ளது இவ்வாறான நிலையில் இதனை செயல்படுத்தும் நிறுவனத்திற்கு இந்த தேவைகளை கையாளுவதற்கேற்ப நினைவகத்திற்குள் கணக்கிடும் தரவுதளம் (In memory Data base (IMDB))  என்பது கைகொடுக்கின்றது.

பொதுவாக தரவுதளநிர்வாக அமைவானது கணினியின் தரவுகளை தேக்கி வைப்பதற்காக முக்கிய நினைவகத்தை சார்ந்திருப்பதையே  நினைவகத்திற்குள் கணக்கிடும் தரவுதளம் (In memory Data base (IMDB))  என்றும்  அதற்கு மறுதலையாக தரவுதளநிர்வாக அமைவானது வன்தட்டில் தரவுகளை தேக்கிவைக்கின்றது என்றும் விக்கிபீடியா நமக்கு பொருள் கூறி விளக்குகின்றது.

இந்த நினைவகத்திற்குள் கணக்கிடும் தரவுதளம் (In memory Data base (IMDB))  என்பதனை கையாள அல்லது செயல்படுவதற்காக குறைந்த நினைவக வசதியே போதுமானதாகும்  அதாவது வன்தட்டை அடிப்படையாக கொண்டு  இயங்கும் தரவுதளத்திற்கும் இதற்கும்உள்ள வேறுபாடே இந்த குறைந்த நினைவக வசதிமட்டுமேயாகும்

இவ்வாறான(IMDB) நிருவாகத்திற்காகOracleTimesTen, IBMSolidDB,SybaseASE என்பன போன்ற வியாபாரநிறுவனங்களின் மென்பொருட்கள் தற்போது முக்கியமாக விளங்குகின்றன இவ்வாறு இருந்தபோதிலும் CSQL,MonetDB ஆகிய திறமூல பயன்பாடுகளும் தேவையானவர்களுக்கு உதவதயாராக இருக்கின்றன.

CSQLஎன்ற திறமூல பயன்பாடானது இந்தியாவில் உருவாக்கபட்டது இது சாதாரணமான SQLவினா , DMLஅறிக்கைகள் ஆகியஇரண்டை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒரேயொரு அட்டவணையிலிருந்த அனைத்து செயல்களையும் மிகவிரைவாக செயல்படும் வண்ணம்    கட்டமைக்கபட்டுள்ளது  இது நிகழ்வுநேர பயன்பாடாக Insert,Update,Delete, Select ஆகிய குறிப்பிட்ட கட்டளைகளை மட்டும் ஒரு அட்டவனையில் செயல்படுத்திடும் வண்ணம் வடிவமைக்க பட்டுள்ளது.மேலும்  பயனாளர்கள் இதனை அனுகுவதற்கான வாயிலாக JDBC,ODBC போன்ற SQL அடிப்படையில் செயல்படும் பயன்பாடுகளை இடைமுகமாக அனுமதிக்கின்றது இது தற்போதைய வன்தட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் வியாபார தரவுதளத்திற்கான தற்காலிக நினைவகமாகவும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது

Monet DBஎன்ற திறமூல பயன்பாடானது நெதர்லாந்தில் செயல்படும் தேசிய அறிவியல் கணிதமன்றத்தின் வாயிலாக 1979-ல் உருவாக்கபட்டு 2003 ஆம் ஆண்டுமுதல் திறமூல பயன்பாடாக உருமாற்றபட்டுள்ளது இது பேரளவு தரவுதளத்தினை அதாவது நூற்றுகணக்கான நெடுவரிசையும் இலட்சகணக்கான கிடைவரிசைகளையும் உள்ளடக்கிய தரவுகளை மிகஎளிதாக கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளது

4.2.1

 

புதியவைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிடும் திறனும் தகவல்தொழில்நுட்பக்கல்லூரிகளில் கற்பித்தலே இன்றைய தேவையாகும்

பொதுவாக தகவல் தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்கான கல்லூரி அல்லது  தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றில் ஒருமாணவன் நுழைந்திடும்போது அவனுக்கு வழங்கும்  கல்லூரி பாடத்திட்டத்தில் முதன்முதலில் இடம்பிடிப்பது சி /சி++என்ற மொழியாகும்  ஏனெனில் இது மிக எளிமையானதும் மிகபழமையானதும் மிகசுலபமாக புரிந்து தெரிந்து கொள்ளகூடிய வகையிலும் உள்ளது

கல்லூரிகளில் இந்த சி /சி++ ஆகிய மொழிகளை கற்றுதரும் கல்லூரி விரிவுரை யாளர்கள்  அடிக்கடி விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையில் செயல்படும் டர்போசி /சி++  அல்லது போர்லேண்டு சி /சி++  என்ற பெயருடன் பாடங்களை நடத்துவதை கேள்விபட்டிருப்பீர்கள்  உடன் ஏதனும் ஒரு கல்லூரிமாணவன் எழுந்து அந்த விரிவுரையாளரிடம் கணினியின் வேறு  ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழலில் இயங்கிடுபவைகளை(Integrated development Environment(IDE)) பற்றி கூறுங்களேன்என வினவியவுடன் ஒழுங்காக நான்(விரிவுரையாளர்) நடத்திடும்  டர்போசி /சி++  அல்லது போர்லேண்டு சி /சி++  ஆகிய மொழியை மட்டும் கண்டிப்பாக அறிந்து கொள் அதைவிடுத்து அதுஎன்ன ? வேறுஎன்னஉள்ளது? என்பனபோன்ற குறுக்கு கேள்விகளெல்லாம் கேட்டு பாடம் நடத்தும் நேரத்தை விணடிக்கவேண்டாம்!” என தடைவிதிப்பதை காணலாம் இந்த நிகழ்வை நான் இட்டுகட்டுவதாக  தவறாக எண்ணிடவேண்டாம் உங்களை சுற்றியுள்ள எந்தவொரு தகவல் தொழில்நுட்ப கல்வி பயிலும் பிள்ளைகளின் பெற்றோரையும் விசாரித்தீர்கள் எனில் இந்த உண்மை புலப்படும்

இந்த   டர்போசி /சி++  அல்லது போர்லேண்டு சி /சி++  என்ற மொழிகள் 1994-95 ஆம் ஆண்டு சுமார் 19  இருபதாண்டுகளுக்கு முன்பு உருவாக்கபட்ட இந்த மொழிகளை இப்போதும் அதையே கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வலுகட்டாயமாக புகட்டுவது சரியான செயல்தானா என உங்களுடைய நெஞ்சைதொட்டு கூறுங்கள் இந்த  டர்போ சி /சி++  அல்லது போர்லேண்டுசி /சி++   மொழிகளிலேயே இதுவரை எத்தனையோ பதிப்புகள் வெளியிடபட்டு மேம்படுத்துதல்களும் புதுப்பித்தல்களும் செய்யபட்டுள்ளன  ஆயினும் ஒரு மாணவனுக்கு  அவனுடைய வாழ்விற்கான அடிப்படையாக நல்ல வழிகாட்டிடும் ஆசிரியரே இவ்வாறு இருந்தால் அந்த மாணவன் எப்போது தற்போதைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்வது  அதற்கேற்ப தன்னுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திகொள்வது. இங்கு   டர்போசி /சி++  அல்லது போர்லேண்டுசி /சி++   ஆகிய மொழிகளுக்கு நான் எதிரிஎன எண்ணிடவேண்டாம் கணினியில் மற்ற சூழல்களும் எவ்வாறு உள்ளதனஎன  ஒரு கல்லூரிமாணவன் தெரிந்து கொள்ளவேண்டாமா? என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இங்கு இந்த செய்தியை உங்களுக்கு கூறுகின்றேன் .

 பொதுவாக நாமெல்லோரும் ஆரம்பத்தில் மிதிவண்டியைதான் வெகுதூரமாக இருக்கும் நம்முடைய சொந்த ஊரிலிருந்து கல்லூரிக்கு சென்றுவருவதற்கு ஒருகாலத்தில் பயன்படுத்திவந்தோம் ஆனால் இன்று சுமார் நூறடி தூரம் என்றாலும் எத்தனைவகையான இருசக்கரவாகணங்களை பயன்படுத்துபவர்களாக நாமெல்லோரும் மாறிநம்முடைய வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தியுள்ளோம் என்பதை சிந்தித்து பாருங்கள் அவ்வாறுதான் இந்த கணினிமொழியிலும் தற்போதைய வளரச்சிக்கு தக்கவாறு புதிய சூழலையும்  திறனையும்  காலத்திற்கு தக்கவாறு மேம்படுத்தி கொள்ளவேண்டும்

தற்போது பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் கண்டுபிடிப்புகள் என காட்சி மாறிகொண்டேஇருப்பதால் இன்றைக்கு தேடினால் முதலில் தென்படுவது பைத்தான் எனும் மொழியாகும் இது பயனாளரின் இனிய நண்பனாகவும் உற்ற தோழனாகவும் தற்போது விளங்குகின்றது  அதுபோன்றே இந்த மொழிகளில் எழுதும் கட்டளைவரிகளை இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்ய உதவிட திறமூல மென்பொருட்களான GCC ,GNUC ஆகிய மொழிமாற்றிகளாகும் இது தற்காலத்தில் உள்ள அனைத்து மொழிகளில் எழுதப்படும் கட்டளைவரிகளையும் மிகஎளிதாக    இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்துவிடுகின்றது

94.4.1

பழைய மொழிகளின் புதிய பதிப்புகளை அல்லது ஜாவா, சன்ஜாவா, ஆரக்கிள்ஜாவா, திறமூல மொழியான ஐஸ்டுடீஜாவா என்பன போன்ற காலத்திற்கு ஏற்ப புதிய புதிய மொழிகளையும்  CodeBlocksIDE,  NetBeens  IDE என்பனபோன்ற புதிய ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழலில் இயங்கிடுபவைகளை(Integrated development Environment(IDE)) பற்றியும் அவ்வாறே சாதாரண உரைபதிப்பான்களுக்கு பதிலாக  விஎம் மாக்ஸ் போன்ற புதிய உரைபதிப்பான்களை பயன்படுத்திடும் திறனை வளர்த்துகொள்ளும் மனப்பான்மையும் புதியவைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிடும் திறனும் தகவல்தொழில்நுட்பக்கல்லூரிகளில் கற்பித்தலே இன்றைய தேவையாகும்

94.4.2

ஐபிகாப் 2.0 என்ற இணையத்தின் தீங்குத்தடுப்பு பாதுகாப்பு மென்பொருள்

 இன்று  இணையம் இல்லையெனில் எந்தவொரு நிறுவனமும் அல்லது எந்தவொரு தனிநபரும் வாழஇயலாது என்ற நிலைக்கு மாறியுள்ளோம் நம்முடைய வாழ்வின் எந்தவொரு தேவையை நிறைவுசெய்வதற்கான செயலிலும் இணையபயன்பாடு மிகமுக்கிய பங்காற்று கின்றது.

இவ்வாறு இணையத்தை பயன்படுத்திடுவதற்காக முதன்முதல் உள்நுழைவு செய்திடும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஐபிமுகவரி ஒதுக்கீடு செய்யபடுகின்றது இந்த ஐபிமுகவரிமூலமாக மட்டுமே நாம் இணையத்தில் உள்நுழைவுசெய்து உலாவரமுடியும் அவ்வாறேஇதனை கொண்டு நாம் எங்கெங்கு உலாவந்தோம் என தெரிந்துகொள்ளவும்முடியும்

இதனால் இவ்வாறான செயலைஒருவரண்முறைக்கு கொண்டுவரவும் பாதுகாப்பு வழங்கிடவும் இந்திய தகவல்தொழில்நுட்பசட்டம்2000(Indian ITAct2000) என்பது ஏற்படுத்தபட்டு நடைமுறைபடுத்தபட்டது

ஒரு ஐபிமுகவரியை வைத்திருப்பவரே அந்த முகவரிமூலம் நிகழ்த்தும் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவர் என இந்த சட்டத்தின்மூலம் வரையறுக்க படுகின்றது  அதாவது இந்த ஐபிமுகவரியை ஒதுக்கிடு செய்து நடைமுறைபடுத்திடும் நிறுவனங்களும் அதனை பயன்படுத்திடும் நபரும் முழுபொறுப்பு ஏற்கவேண்டிய நிலையுள்ளது.

இருபத்திநான்குமணிநேரமும் இயங்குகின்ற இந்த இணையத்தில் இவ்வாறான நிலையிலிருந்து பாதுகாப்பாக செயல்படுவது என்பதே பெரிய கேள்விகுறியாக மாறியது அதனை போக்குவண்ணம் தனிநபர் இணையத்தை பயன்படுத்துவதுஎனில்  நல்ல திறனுடைய நச்சுநிரல் மென்பொருள் தனியாள் நெருப்புசுவர்(Firewall)  ஆகியவை நல்ல பாதுகாப்பு கவசமாக விளங்குகி்ன்றன

  பெரிய வியாபார நிறுவனங்கள் நூற்றுகணக்கான வலைபின்னல்கள் ஆயிரகணக்கான பயனாளர்கள் கொண்ட வலைபின்னலில் பேரளவு செலவுபிடிக்கும் வியாபார பாதுகாப்பு வளையங்கள் அவர்களின் தேவையை நிறைவுசெய்கின்றன

 சிறிய,நடுத்தர  நிறுவனங்கள் எனில் மேலே கூறிய பேரளவு செலவுபிடிக்கும் வியாபார பாதுகாப்பு வளையங்கள் அவர்களின் கனவாகத்தான் இருக்குமேயொழிய நனவாகாது  இவ்வாறானவர்களின் கனவை நனவாக்கும் பொருட்டு இவர்களுக்கும் போதுமான பாதுகாப்பினை  இணையத்தில் வழங்கும்பொருட்டு ஐபிகாப் 2.0 என்ற இணையத்தின் தீங்குத்தடுப்பு பாதுகாப்பு மென்பொருள் விளங்குகின்றது

இதனை http://ipcop.org/download.php  என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொண்டு இதனோடு BlocoutTraffic(BOT),Zerina,AdvProxy,URLFilter ஆகிய கூடுதல்வசதிகளையும் சேர்த்து நிறுவிகொண்டு  சிறிய,நடுத்தர  நிறுவனங்கள் தங்களின் இணைய பயன்பாட்டில் பாதுகாப்பாக இயங்குவதற்கு பயன்படுத்திகொள்க

94.5.1

இணையத்தின் மூலமும் தற்காலிக ஆதார் அட்டையை பெறமுடியும்

எந்தவொரு தனிநபரும் தன்னுடைய அடையாளமாக வாக்காளர் அடையாள அட்டை ,குடிமபொருள் வழங்கும் அட்டை, ஓட்டுநர் உரிமம் ,தான் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை என ஏராளமான அளவில் உள்ளன இவைகளை  தேவைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் பயன்படுத்திட வேண்டியுள்ளது இவையணைத்தையும் ஒருங்கிணைத்து இனிவருங்காலத்தில் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்யும்பொருட்டு எந்தவொரு தனிநபருக்கும் ஒரேயொரு அடையாள அட்டை இருந்தால் நல்லது என்ற கோட்பாட்டின் அடிப்படையில்   ஆதார் அட்டை  என்பது உருவாக்கபட்டு வழங்கிடும் பணி படிப்படியாக செயல்படுத்தபட்டு வருகின்றது இதனை தயார்செய்யும குழுநம்முடையவீட்டிற்கு எப்போது வருவார்கள் நமக்கு எப்போது இந்த ஆதார் அட்டை கிடைக்கும் என காத்திருக்கும் வரை தற்காலிகமாக இணையத்தின் மூலமும் தற்காலிக ஆதார் அட்டையை பெறமுடியும் அதற்கான வழிமுறை பின்வருமாறு

முதலில் நமக்கான ஆதார் அட்டைக்காக  பதிவுசெய்வதற்கானமையத்தில் பதிவுசெய்யபட்டபோது நமக்கு ஒதுக்கிய பதிவுஎண் பதிவுசெய்தநாள்  நேரம் ஆகியவிரங்கள் அடங்கிய  ஏற்புகை தாள் நம்மிடம் உள்ளதாவென உறுதிபடுத்திகொள்க  அதன்பின்னர் http://eaadhaar.uidai.gov.in/  என்ற இணைய பக்கத்திற்கு செல்க   அங்கு நம்முடைய ஆதார் அட்டைக்கான பதிவுஎண்,பெயர் நாள் நேரம் பின்கோடு கேப்சா கோடு ஆகியவிவரங்களை அதனதன் புலங்களில் உள்ளீடுசெய்து Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு வரும்திரையில் நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணை சரிபார்த்திடுமாறு கூறும்  சரியாக இல்லையெனில் No என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிய பின் மிகச்சரியாக நம்முடைய செல்லிடத்து பேசிஎண்ணை உள்ளீடுசெய்து சரியாக இருந்தால்  Yes என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒரேயொருமுறையான கடவுச்சொல் One Time Password (OTP) நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வந்துசேரும் அதனை அடுத்த புலத்தில் உள்ளீடு செய்து சொடுக்கியவுடன் நம்முடைய மின்னனு ஆதார் அட்டையை அனுகுவதற்கான வழிகிடைக்கும் அவ்வாறுகிடைக்கும் இணைப்பின்மூலம் நம்முடைய மின்னனு தற்காலிக ஆதார்அட்டையை பிடிஎஃப் கோப்பாக பதிவிறக்கம் ஆகும் அதனை  திறப்பதற்கு நம்முடைய பின்கோடை கடவுச்சொற்களாக பயன்படுத்தி திறந்து அச்சிட்டுகொள்க இதனை பின்னர் இந்த ஆதார்அட்டை வழங்கும் குழுவால் வழங்கும்வரை பயன்படுத்திகொள்க

சிலநேரங்களில் இந்த பிடிஎஃப் கோப்பை திறக்கும்போது ‘Signature not Valid’ என்ற செய்திகிடைக்கபெறும் அந்நிலையில் ‘Signature not Valid’ என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி உள்நுழைவுசெய்துகொள்க94.6.1

Previous Older Entries