சங்கிலி தொகுப்பு தொழில்நுட்ப வழிகாட்டி-3-சங்கிலி தொகுப்பு என்பதற்கான வரையறை

விண்டோஸ் அல்லது லினக்ஸ் அல்லதுமேக் இயக்கமுறைமை போன்று பிளாக்செயினை ஒரு இயக்க முறைமையாகவும் பிட்காயினானது அந்த இயக்க முறைமையில் செயல்படும் பயன்பாடாகவும் நினைத்துப் பாருங்கள்.! பிளாக்செயினை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியை மிக எளிதாக தொடரலாம்.அல்லவா இருந்தபோதிலும் ,சங்கிலி தொகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் தொக்கிநிற்கும்
முதன்முதலில் மறையாக்க-நாணயங்கள் (கிரிப்டோகரன்ஸிகளை) கண்டுபிடித்து வெளியிடும் போது கிரிப்டோகரன்ஸி என்றால் என்னஎனும் கேள்விக்கான பதிலை காண முயற்சித்ததை போன்று மிகவும் குழப்பமான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் சங்கிலி தொகுப்பு என்றால் என்னவென விளக்கம் பெறுவது அத்தியாவசிய தேவையாகும் இருந்தாலும் அதனை பற்றிஅறிந்து கொள்வதற்குமுன் பிட்காயின் என்றால் என்ன வென தெரிந்து கொண்டபின்னர் பிளாக்செயினின் வரையறைதெரிந்து கொள்வோமா !
பிட்காயின்கள் என்பது ஒரு அறியப்படாத நிரலாளரால் அல்லது நிரலாளர்களின் குழுவால் கண்டு பிடிக்கப்பட்ட மறையாக்க-நாணயமும் டிஜிட்டல் கட்டண முறையுமாகும், இது சடோஷி நகமோட்டோ என்ற பெயரில் உள்ளது. அதாவது அவை வழக்கமான நாணயத்தைப் போலவே பயன்படுத்தப்படலாம், ஆனால் நம்முடைய ரூபாய்போன்றோ அல்லது டாலர் போன்றோ கைகளால் தொட்டுணரமுடியாது. அவை இணையத்தின் வாயிலாக கையாளுகின்ற மின்னனு நாணயங்களாகும், இவற்றைகொண்டு நாம் விருமபும் பொருட்களை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தி கொள்ளமுடியும். இவை பொதுமக்கள் பயன்படுத்திடும் கணினிகளில் டிஜிட்டல் நாணயம் போன்று பிட்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். . பேபால், சிட்ரஸ் அல்லது பேடிஎம் போன்ற மேககணினிகளில் மட்டுமே இந்த பிட்காயின்கள் உள்ளன. அவை தொட்டுணரும் நாணயங்களாக இல்லையென்றாலும் மெய்நிகர் நாணயங்களாக, இணையம் வயிலாக மக்களிடையே தொட்டுணரக்கூடிய பணத்தைப் போலவே பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. பிட்காயின் அமைப்பானது இடையில் இடைத்தரகர்கள் யாரும் இல்லாமலேயே பியர்-டு-பியர் (P2P)நெட்வொர்க் அடிப்படையில் நேரடியாக பயனர்கள் இருவர்களுக்கிடையே பரிமாறிகொள்ளப்படுகின்றன.
இந்த பரிமாற்றங்கள் அனைத்தும் நெட்வொர்க் முனைமங்களால் சரிபார்க்கப்பட்டு, சங்கிலி தொகுப்பு எனப்படும் பொது விநியோகிக்கப்பட்ட பேரேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன. சேவையாளர் கணினி எனும் ஒரு மைய களஞ்சியம் அல்லது ஒற்றை நிர்வாகி என எதுவும்இல்லாமலேயே இதற்கான நடவடிக்கைகள் செயல்படுவதால், இந்த பிட்காயின் என்பதே முதன் முதல் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிட்காயின்களை உருவாக்கிடும் செயலானது அவைகளை ஒரு தனித்துவமான நாணயங்களாக ஆக்குகின்றன.இந்நிலையில் தற்போது பொதுமக்களின் புழக்கத்தில் உள்ள சாதாரண ரூபாய் நேட்டுகள் அல்லது நாணயங்களைப் போன்று இந்த பிட்காயின்களை தேவைக்கேற்ப உருவாக்கி வெளியிட முடியாது. தற்போதைய நிலையில் 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே உருவாக்க முடியும், அவற்றில் 17 மில்லியன்பிட்காயின் கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. மிகச்சரியான பரிவர்த்தனைகளைக் கொண்ட ஒரு தொகுதியினை பிளாக்செயினில் சேர்க்கப்படும் போதெல்லாம் பிட்காயின் உருவாக்கப்படும் என்பதே தற்போதைய நடைமுறையாகும் .அதாவது இதுவே பிட்காயின்களை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் ஆயினும் பல்வேறு கணித மற்றும் குறியாக்க வழிமுறைகள் மூலம் போலி பிட்காயின்கள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை அல்லது புழக்கத்தில் விடப்படவில்லை என்பதை உறுதியாக கூறலாம் . சரி இப்போது பிளாக்செயினைப் பற்றி தெரிந்துகொள்ள அதன் வரையறைக்குள் நுழைவோமா.
block , chain ஆகிய இரு சொற்கள் இணைந்த இந்த சங்கிலி தொகுப்பு என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வரும் டிஜிட்டல் பதிவுகளின் பட்டியல்களாலான தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன அவை குறியாக்கவியலைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்பட்ட இந்த “தொகுதிகள்” ஒரு நேரியல் சங்கிலியில் சேமிக்கப்படுகின்றன. இந்த சங்கிலியின் ஒவ்வொரு தொகுதியும் பிட்காயின் பரிவர்த்தனைகான தரவைக் கொண்டுள்ளது , இது குறியாக்கவியல் ரீதியாகக் hashed செய்யப்பட்டு ,பரிவர்த்தனை செய்யப்பட்டநேரம் முத்திரையிடப்படுகிறது(Time Stamped). , இந்த சங்கிலி தொகுப்பில் அதற்குமுன் வந்த முந்தைய-தொகுதி மீது ஹேஷ் தரவுத் தொகுதிகள் எழுதப்படுகின்றன மேலும் இந்த ஒட்டுமொத்த “பிளாக்செயினில்” உள்ள எல்லா தரவுகளையும் மாற்றவோ அல்லது சிதைத்து அழிக்கவோ முடியாது என்பதை இது உறுதிசெய்கின்றது
அதாவது சங்கிலி தொகுப்பு என்பது ஒரு வகை விநியோகிக்கப்பட்ட பேரேடாகும், மேலும்இது ஒரு நிரந்தர மற்றும் சேதமடையாத-ஆதார பரிமாற்றபதிவுகளின் தரவாகும். ஒரு சங்கிலி தொகுப்பு என்பது ஒரு பரவலாக்கப்பட்ட தரவுத்தளமாக செயல்படுகிறது, இது ஒரு பியர்-டு-பியர் (P2P) நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இது எந்தவொரு ஒரு தனிப்பட்ட நிறுவனத்தாலும் கட்டுப்படுத்தப்படவில்லை விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க்கில் உள்ள ஒவ்வொரு கணினியிலும் இந்த பேரேட்டின் நகல்சேமித்துவைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால்ஏதாவதொரு கணினிசெயல்படாவிட்டாலும் (SPOF) என சுருக்கமாக அழைக்கப்படும் single point of failure என்ற வகையில் பாதிப்புஎதுவும் ஏற்படாமல் இதனை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் அனைத்து முனைமங்களின் நகல்களும் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. கடந்த காலத்தில், சங்கிலி தொகுப்புகள் பொதுவாக பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களுடன் அல்லது பிட்காயின் ரொக்கத்திற்கு (Bitcoin Cash)தொடர்புடையவைகளாக விளங்கி வந்தன
மிகஎளிமையான சொற்களில்கூறவேண்டுமெனில் , இந்த சங்கிலி தொகுப்பு என்பது தகவல்களைக் கொண்ட தொகுதியின் சங்கிலியாக வரையறுக்கப்படுகின்றது. இந்த நுட்பம் டிஜிட்டல் ஆவணங்களை நேர முத்திரையிடுவதை (Time Stamped)நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் அவற்றைப் பழைய தேதியிட்டு புதுப்பிக்கவோ அல்லது சிதைத்து அழிக்கவோ முடியாது.இந்த பிளாக்செயினில் வங்கி அல்லது அரசு போன்ற மூன்றாம் தரப்பு இடைத்தரகர் யாருடைய இடைமுகமும் இல்லாமலேயே பணம், சொத்து, ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்பாக பரிமாறி கொள்வதற்கு பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. ஒரு பிளாக்செயினுக்குள் ஒரு தரவு பதிவுசெய்யப்பட்டவுடன், அதை மாற்றுவது மிகவும் கடினம்என்ற செய்தியை மட்டும் மனதில் கொள்க . இந்த சங்கிலி தொகுப்பு ஆனது மின்னஞ்சல்களை கையாளும் SMTP போன்ற ஒரு மென்பொருள் நெறிமுறையாகும் . இருப்பினும், இணையம் இல்லாமல் பிளாக்செயினை இயக்க முடியாது என்ற கூடுதல் செய்தியையும் மனதில் கொள்க . இது மற்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பாதிக்கும் என்பதால்இந்த சங்கிலி தொகுப்புஎன்பதை ஒரு மெட்டா தொழில்நுட்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சங்கிலி தொகுப்பு என்பது ஒரு தரவுத்தளம், மென்பொருள் பயன்பாடு, வலைபின்னலில் இணைக்கப்பட்ட ஒரு சில கணினிகள் போன்ற பல்வேறு உறுப்புகளை உள்ளடக்கியSMTP போன்ற ஒரு மென்பொருள் நெறிமுறையாகும். ஒரு சில நேரங்களில் இது பிட்காயின் சங்கிலி தொகுப்பு என்றும் அல்லது தி எத்தேரியம் சங்கிலி தொகுப்பு என்றும்வேறு சில நேரங்களில் இது மற்ற மெய்நிகர் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் டோக்கன்கள் என்றும் இந்த பிளாக் செயின் பற்றிய சொற்கள் நடைமுறையில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன . இருப்பினும், அவ்வாறு பயன்படுத்துபவர்களின் பெரும்பாலோனாரால் விநியோகிக்கப்பட்ட பேரேடுகளைப் பற்றியே விவாதிக்கப்படுகின்றன.
சங்கிலி தொகுப்பு பரிவர்த்தனைகள் நிலையான (சங்கிலி தொகுப்புஅல்லாத ) அமைப்புகளை விட மிக விரைவாகவும் மலிவாகவும் செயலாக்கப்படுகின்றன, இது ஒரு பொது தரவுத்தளத்தினையும் அனைத்து பரிவர்த்தனைகளும் பிணையத்தில் தெரியும், சைபர் தாக்குதல்களையும் தடுக்கின்றது,
பொதுவாக கூறுமிடத்து சங்கிலி தொகுப்பு என்பது பொருளாதார பரிவர்த்தனைகளின் அழியாத டிஜிட்டல் பேரேடாகும், இதனை நிதி பரிவர்த்தனைகளை மட்டுமல்லாமல் பணமதிப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.
மிக எளிமையான சொற்களில் கூறவேண்டுமெனில் பிளாக்செயினின் முக்கிய நோக்கம் விரைவான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான பியர்-டு-பியர் (P2P)பரிவர்த்தனைகளை அனுமதிப்பதேயாகும். நம்பகமான, பரவலாக்கப்பட்ட பிணைய அமைப்பில் நாணயம், தரவு போன்ற டிஜிட்டல் மதிப்புகளை பரிமாறிகொள்ள அல்லது மாற்றிட இது அனுமதிக்கின்றது.எந்தவொரு புதியநபரும் பின்வரும் செய்தியின் வாயிலாக சங்கிலி தொகுப்பு பற்றிஅறிந்து கொள்ளமுடியும்
1. எக்செல் விரிதாளைப் போன்றே, இந்த பிளாக்செயினானது டிஜிட்டல் தரவுத்தளமாகும்
2. இந்த தரவுத்தளமானது பொதுவாக முனைமங்கள் என அழைக்கப்படுகின்ற பல்வேறு கணினிகள் கொண்ட ஒரு பெரிய பிணையத்தில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது, மேலும் இந்த சங்கிலி தொகுப்பு என்பது முற்றிலும் அனைவருக்கு் பொதுவானது., ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக எந்தவொரு முனைமங்களாலும் உருவாக்கப்படலாம். சங்கிலி தொகுப்பு , அதிக முனைமங்களால் பராமரிக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானது 3. ஒவ்வொரு முறையும் பிளாக்செயினை நெட்வொர்க் தரவுத்தளத்தில் புதுப்பித்தல் செய்திடும்போதும்,அவ்வாறு தானாகவே புதுப்பிக்கப்பட்டபின்னர் பிணையத்திஉள்ள ஒவ்வொரு கணினியிலும் அது பதிவிறக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
4. இந்த சங்கிலி தொகுப்பு தொழில்நுட்பம் கிரிப்டோகிராஃபிக் நுட்பங்களுடன் பாதுகாக்கப்படுவதால், ஹேக்கர்கள் அதில் மாற்றங்களைச் செய்வது கண்டிப்பாக சாத்தியமில்லாத செயலாகின்றது அதாவது அவ்வாறு இதில் ஏதாவது ஒரு மாற்றத்தைச் செய்வதற்கான ஒரே வழி, பிளாக்செயினில் இணைந்திருக்கும் பாதிக்கும் மேற்பட்ட முனைமங்களை ஹேக் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும், அதனால் தான் இது அதிக முனைமங்களில் / கணினிகளில் இந்த பிளாக்செயினில் இயங்குவதால் மிகவும் பாதுகாப்பானது. என மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது
இறுதியாக சங்கிலி தொகுப்பு என்பது பிட்காயின் அன்று, ஆனால் இது பிட்காயினுக்குப் பின்புலத்தில் செயல்படும் தொழில்நுட்பம்ஆகும் , பிட்காயின், டிஜிட்டல் டோக்கன் போன்றவைகளை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதைக் கண்காணிக்க உதவிடும் பேரேடே சங்கிலி தொகுப்பு ஆகும், சங்கிலி தொகுப்பு இல்லாமல் பிட்காயின் வைத்திருக்க முடியாது, ஆனால் பிட்காயின் இல்லாமல் சங்கிலி தொகுப்பு வைத்திருக்க முடியும் தற்போதையநிலையில், பிட்காயின் மட்டுமன்று பல்வேறு தொழில்களில் சங்கிலி தொகுப்பு பயன்பாடுகள் ஒரு விநியோகிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்கவும் நிர்வகிக்கவும் அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பதிவுகளை பராமரிக்கவும் பாதுகாப்பான செலவு குறைந்த வழியாக ஆராயப்பட்டு பயன்படுத்தி கொள்ளமுயற்சிக்கபடுகின்றன.

WhatsApp எனும் செய்தியாளர் பயன்பாட்டிற்கு மாற்றான கட்டற்ற பயன்பாடுகள்

தற்போதுள்ள ஐபோன், விண்டோபோன், ஆண்ட்ராய்டு போன் போன்ற பல்வேறு கைபேசி சாதனங்களிலும் குறுஞ்செய்திகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதற்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுப்புமுடியும் என்றவாறான கட்டுப்பாடு எதுவுமில்லாமல் இணைய இணைப்பில் கைபேசி சாதனங்கள் இருந்தால்மட்டும் போதும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் எப்போதும் எந்தநேரத்திலும் உரைவடிவிலான செய்திமட்டுமல்லாது குரலொலி வாயிலாகவும் ஏன் கானொளிகாட்சி வாயிலாக வும் குழுவாக இணைந்து தங்களுக்குள் உருவப்படங்களையும் கானொளி காட்சிபடங்களையும் உலகில் எங்கிருந்தும் யாருடனும் எந்தநேரத்திலும் தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறி கொள்ளமுடியும் என்ற வசதி வாய்ப்புகளை WhatsApp எனும் செய்தியாளர் பயன்பாடானது வாரிவழங்குகின்றது ஆனால் இது ஒரு தனியுடைமை பயன்பாடாகும் இதற்கு மாற்றாக பின்வரும் கட்டற்ற பயன்பாடுகள் கூட அதே வசதி வாய்ப்புகளை வழங்குபவைகளாக உள்ளன என்ற செய்தியை மட்டும்மனதில் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதை முடிவுசெய்துகொள்க
3.1.Signalஎனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினைகொண்டு அனைத்து கைபேசி தளங்களிலிருந்து மட்டுமல்லாது நம்முடைய கணினியிலிருந்து கூட வாட்ஸப்பின் அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் செயல்படுத்தி பயன்பெறமுடியும் இதற்கான இணையமுகவரி https://github.com/signalapp என்பதாகும்
3.2.Wireஎனும் செய்தியாளரானது குரலொலி கானொளி வாயிலாக நண்பர்களுடன் உரையாட உதவுகின்றது அது மட்டுமல்லாது கானொளி கூட்டங்களை கூட இதன் வாயிலாக நடத்திகொள்ள முடியும் மேலும் கோப்புகளையும் பரிமாறிகொள்ளமுடியும் இவையனைத்தும் துவக்கமுதல் முடிவுவரை மறையாக்கம் செய்யப்பட்டு வேறுயாரும் இடையில் புகுந்து நம்மால் பரிமாறிகொள்ளப்படும் செய்திகளை அல்லது தகவல்களை தெரிந்து கொள்ளமுடியாதவாறு மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகின்றது இது அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்றதொரு பயன்பாடாகும் இதற்கான இணையமுகவரி https://wire.com/en/என்பதாகும்
3.3.TOX என்பது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உரையாட வும்அவ்வாறான உரையாட லின்போது யாரும் இடையில் புகுந்து நம்முடைய உரையாடலை அறிந்து கொள்ளாதவாறுமிகவும் பாதுகாப்பாக உரையாட உதவிடும் அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்ற தொருபயன்பாடாகும்இதில் குறுஞ்செய்திகளையும் உரைவடிவிலான செய்திகளையும் கானொளி காட்சிகளையும் கோப்புகளையும் நண்பர்களுடன் பரிமாறிகொள்ளமுடியும் குழுவாக இணைந்து கருத்துகளை பரிமாறிகொள்ளவும் முடியும் இதற்கான இணையமுகவரி https://tox.chat/ என்பதாகும்
3.4.Riot என்பதனை கொண்டு இரண்டுநபர்கள்மட்டுமே உரையாடவும்அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சிறு குழுவாகவும் அல்லது பேரளவுகுழுவாகவும் இணைந்து குறிப்பிட்ட தலைப்பிற்காக குறிப்பிட்ட நிகழ்விற்காக என்றவாறு நாம் விரும்பியவாறு குழுக்களை உருவாக்கி கொள்ளலாம் கானொளி கூட்டங்களை நடத்துதல் குழுக்கூட்டங்களை நடத்துதல் குரலொலி அல்லது கானொளி வாயிலாக உரையாடுதல் குறுஞ்செய்திகளையும் உரைவடிவிலான செய்திகளையும் கானொளி காட்சிகளையும் கோப்புகளையும் நண்பர்களுடன் பரிமாறிகொள்ளுதல் ஆகியபணிகளை எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும் குழுவாக இணைந்து கருத்துகளை பரிமாறிகொள்ளவும் முடியும் அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்றதொரு பயன்பாடாகும்இதற்கான இணையமுகவரி https://about.riot.im/ என்பதாகும்
3.5.Jitsi எனும் செய்தியாளரானது குரலொலி ,கானொளி வாயிலாக நண்பர்களுடன் உரையாடிட உதவுகின்றது அது மட்டுமல்லாது கானொளி கூட்டங்களை கூட நடத்திடலாம் மேலும் கோப்புகளையும் பரிமாறிகொள்ளமுடியும் இவையனைத்தும் துவக்கமுதல் முடிவுவரை மறையாக்கம் செய்யப்பட்டு வேறுயாரும் இடையில் புகுந்து பரிமாறிகொள்ளப்படும்செய்திகளை தெரிந்து கொள்ளமுடியாதவாறு மிகவும் பாதுகாப்பானதாகஆக்குகின்றது இது அனைத்து கைபேசி சாதனங்களிலும் அனைத்து இயக்கமுறைமை களிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்றதொரு பயன்பாடாகும் மிகமுக்கியமாக simulcast, bandwidth estimations, scalable video coding போன்ற கானொளி காட்சி வழிசெலுத்ததல்களின் அடிப்படைகளைகூட இது ஆதரிக்கின்றது இதற்கான இணையமுகவரி https://jitsi.org/ என்பதாகும்

கணினிமொழியை மேம்படுத்திடுவதற்குஉதவிடும்Dr Java எனும்IDE சூழல்

DrJavaஎன்பது ஜாவாஎனும் கணினிமொழியில் நிரல்களை எழுதுவதற்கான இலகுரக IDE எனும் கணினிமொழியை மேம்படுத்திடுவதற்குஉதவிடும் ஒரு சூழலாகும் இது ஜாவாவில் நிரல்தொடர் எழுதுவதற்காக கற்க விரும்பும் மாணவர் களுக்காகவே முதன்மையாக வடிவமைக்கப் பட்டதாகும். , இது ஒரு உள்ளுணர்வு இடைமுகத்தையும் ஜாவா குறியீட்டை ஊடாடும் வகையில் மதிப்பிடும் திறனையும் வழங்குகிறது. இது மிகவும் மேம்பட்ட பயனர்களுக்கான சக்திவாய்ந்த பல்வேறு வசதி வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. Dr Java என்பது BSD எனும் பொதுஉரிமத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு Rice எனும் பல்கலைக்கழகத்தில் JavaPLT எனும் குழுவால் உருவாக்கப்பட்டு வெளியிடபட்டதாகும்
கடந்த ஜனவரி 1, 2019 முதல், ஆரக்கிள்நிறுவனமானது Java SE 8 க்கான உரிம விதிமுறைகளை , வணிக நோக்கங்களுக்காக கட்டணமில்லாமல் பயன்படுத்த அனுமதிக்கபடமாட்டாது என மாற்றியது. அதனை தொடர்ந்து இந்த புதிய உரிம விதிமுறைகளின் கீழ் ஜாவாவின் வணிக ரீதியற்றகணினிமொழியை கற்பிக்கும் ஒருசில பயனாளர்கள் கூட இனி ஆரக்கிள்நிறுவனத்தின்Java SE 8.ஐப் பயன்படுத்த முடியாதோ என அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
. அதிர்ஷ்டவசமாக, Java SE 8 இற்கு மாற்றாக OpenJDK 8எனும் ஒரு சிறந்த கட்டற்றபயன்பாடு தயாராக உள்ளது, , ஆனால் இது ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா பதிவிறக்க தளத்தின் மூலம் விநியோகிக்கப் படவில்லை. OpenJDK 8 இன் விநியோகங்களானவை குறிப்பாக அமேசானின் Corretto 8 போன்று பெரிய நிறுவனங்களால் தொழில் ரீதியாக விநியோகிக்கப்படுவதை ஆதரிக்கின்றன,.அதைவிட , OpenJDK 8 என்பது Java 8 இன் நிலையான பதிப்பாகும், இது உபுண்டு எனும் இயக்கமுறைமை போன்ற பெரும்பாலான லினக்ஸ் விநியோகங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றது. Dr Java இன் சமீபத்திய பீட்டா வெளியீடு அனைத்து தளங்களிலும் OpenJDK 8, OpenJRE 8 ஆகியவற்றுடன் வெளிப்படையாகசெயல்படும் வகையில் அமைந்துள்ளது . ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது , Java 8 இன் எந்தவொரு திறமூல விநியோகமும் போதுமானதாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, அமேசானின் Corretto பதிவிறக்கப் பக்கத்திலிருந்து கிடைக்கும் OpenJDK 8 இனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக Corretto 8என்பதை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்துகொள்ளுங்கள் என முதன்மையாக பரிந்துரைக்கப்படுகின்றது, ஏனெனில் இந்த விநியோகமானது Open Java 8 இன் மிக விரிவானதாகவும் சிறந்த ஆதரவு சூத்திரமாகவும் விளங்குகின்றது.
java -jar drjava-beta-2019-220051 .jar
என்றவாறு குறிமுறைவரியை கட்டளை வரிதிரையில் தட்டச்சு செய்து செயல்படுத்தி Dr Java ஐ இயக்கமுடியும் அல்லது பல்வேறு வரைகலைபயனாளர் இடைமுக திரைகளின் வாயிலாக jar எனும் கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக செயல்படுத்தி இயக்கமுடியும்
அல்லது குறிப்பாக விண்டோ இயக்கமுறைமை யெனில் drjava-beta-2019-220051 .exe எனும் செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நிறுவுகை செய்து கொண்டு செயல்படுத்தி இயக்கமுடியும்
இந்த Dr Java செயல்படுவதற்கு Java 2 v1.4 அல்லது அதற்குப் பிந்தைய மெய்நிகர் இயந்திரம் தேவையாகும். (குறிப்பு: Dr Javaஇல் தொகுப்பிற்கான அனுகலைப் பெற JDK ஐ நிறுவுகை செய்யக்கூடாது அதற்கு பதிலாக , JREKஎன்பது நிறுவுகைசெய்யப்பட வேண்டும்.)
இதற்காக நாம் ஒரு JVM ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனவிரும்பினால், சோலாரிஸ், லினக்ஸ், விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன் கொண்ட Sun’s JDK 5.0 ஐ பதிவிறக்கம் செய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது. பிற பயனர்கள் தங்கள் இயக்க முறைமையுடன் (MacOS X உட்பட) வரும் ஜாவா மெய்நிகர் இயந்திரத்தைப் பயன்படுத்திகொள்க.
மேலும், இந்த Dr Java ஆனது முக்கிய நிரலுக்குஒன்றும், இடைமுகபலகத்திற்கு மற்றொன்றும் என இரண்டு ஜாவா மெய்நிகர் இயந்திரங்களைப் பயன்படுத்திகொள்கின்றது இதனை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள RMIஎன சுருக்கமாகஅழைக்கப்படும் ஜாவாவின் தொலைதூரவேண்டுதல் வழிமுறையை (Remote Method Invocation (RMI)) பயன்படுத்தி கொள்கின்றது. மேலும் இந்த RMI ஆனது TCP / IP எனும் இயல்புநிலை போக்குவரத்து பொறிமுறையைப் பயன்படுத்தி கொள்கின்றது, எனவே அந்த இயக்கிகளை மட்டும் நிறுவியிருக்க வேண்டும்என்ற செய்தியை மனதில் கொள்க . TCP / IP இல்லாமல், DrJava மிகச்சரியாக செயல்படுவதற்கு துவங்கமுடியாது என்ற செய்தியை மட்டும்மனதில் கொள்க.

சிம்பிலிசிட்டி லினக்ஸ் ஒரு அறிமுகம்

சிம்பிலிசிட்டி லினக்ஸ் எனும் இயக்கமுறைமையானது கட்டற்ற கட்டணமற்ற லினக்ஸ் வெளியீடாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது இது பப்பி லினக்ஸ் என்பதை பயன்படுத்தியும் அதன் அடிப்படையிலிருந்தும் XFCEஎனும் விண்டோ மேலாளரை பயன்படுத்தி கொண்டு ம் உருவாக்கப் பட்டுள்ளது இது மேககணினியின் அடிப்படையிலான வசதி வாய்ப்புகளுடன் Netbook என்றும் நாம் வழக்கமாக பயன்படுத்திடும் கணினிகளின் வசதி வாய்ப்புகளுடன் Desktop என்றும் பல்லூடக பயன்பாடுகளின் வசதி வாய்ப்புகளுடன் Mediaஎன்றும் மூன்று வகை களில் Simplicity Linux 19.10 எனும் பதிப்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது இம்மூன்று வெளியீடுகளிலும் Ecosia என்பது இயல்புநிலை இணைய தேடுபொறியாக இணைந்து கிடைக்கின்றது


குறிப்பாக இந்த தேடுபொறியின் விளம்பர வருமானம் நாம் வாழும் இவ்வுலகில் மரங்களை வளர்த்து சுற்றுசூழலை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது மிகமுக்கியமாக தற்போது இவ்வுலகின் நுரையீரலாக விளங்கும் அமோசான் காடுகள் தீயினால் அழிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் LibreOffice 5, MPV media player, Clementine music player, GIMP,Inkscape. போன்ற நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பல்வேறு கட்டற்ற பயன்பாடுகள் இதில்முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டு கிடைக்கின்றது இந்த சிம்பிலிசிட்டியின் அடுத்த வெளியீடுகளில் Libreoffice 6.2, Simple Screen Recorder, Darktable, Timeshift, Harmony (a streaming music player), Focuswriter, Rambox (condenses messaging and e-mail into one application), Okular, and Sylpheed ஆகிய பயன்பாடுகளுடன் முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டு வெளியீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாது இது 32-bit ,64-bitஆகியஇருவகை கட்டமைப்புள்ள கணினிகளில் செயல்படும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள http://www.simplicitylinux.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Timecard எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு பணியாளர்களின் பணிவருகையை கண்காணிக்கலாம்

தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் வருகையை கண்காணிப்பதற்காக அதிக காலவிரையம் ஆகும் சிறப்புதன்மையுடனான பயன்பாடு களை அதிக செலவிட்டு பயன்படுத்திடும் வண்ணம் வைத்திருக்கின்றன இவைகளனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தவைகளாகும் அதிக பிழையுடனும் ஒவ்வொரு பணியாளரின் பணிநாட்களை கணக்கிடுவதற்காக அதிக காலஅவகாசத்தையும் எடுத்து கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளன அவ்வாறான சிரமங்கள் எதுவுமில்லாமல்மிகஎளிதாகவும் விரைவாகவும் பணியாளர்களின் வருகையை கணக்கிடவும் பணியாளர்கள் எங்கெங்கு பணிபுரிகின்றார்கள் என கண்காணித்திடவும் புதிய பல்வேறு கட்டற்ற பயன்பாடுகள்கூட தற்போது பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன அவைகளில் முதன்மையான மூன்று கட்டற்ற பயன்பாடுகள் பின்வருமாறு
Timesheet எனும் கட்டற்ற பயன்பாட்டில் பணியாளர்கள் தங்களுடைய கைவிரல்களை அழுத்த தேவையில்லை அதற்கு பதிலாக அவர்களுடைய பணியிடத்தில் அவர்கள் எப்போது வந்தார்கள் எப்போது பணியிடத்தினை விட்டு வெளியில் சென்றார்கள் நிகரமாக எவ்வளவுநேரம் பணி புரிந்துள்ளனர் என GPS location துனையுடன் தானியங்கியாக கணக்கிடுகின்றது smartwatch உடன் ஒத்தியங்கிடுமாறும் பல்வேறு சாதனங்களில் செயல்படுமாறும்ஆனபல்வேறுவசதிகளைவழங்குகின்றது.
HoursTracker எனும் கட்டற்ற பயன்பாட்டில் பணியாளர்கள் தங்களுடைய கைவிரல்களை அழுத்த தேவையில்லை அதற்கு பதிலாக அவர்களுடைய பணியிடத்தில் அவர்கள் எப்போது வந்தார்கள் எப்போது பணியிடத்தினை விட்டு வெளியில் சென்றார்கள் நிகரமாக எவ்வளவுநேரம் பணிபுரிந்துள்ளனர் என GPS location துனையுடன் தானியங்கியாக கணக்கிடுகின்றது மேலும் பணியாளர்கள்நிகரமாக பணிபுரிந்த நேரம் ,அவர்கள் பயனம் செய்ததூரம் அவர்களுக்கான செலவுகள் ஆகியவற்றை வரைபடங்களாக இதன்மூலம் திரையில் காணமுடியும்
Time Recording ஒரே பணியாளர் வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு சம்பளவிகித்தில் பணிபுரியும் போது மிகச்சரியாக எந்தெந்த சம்பளவிகிதத்தில் எவ்வெவ்வளவு நாட்கள் எங்கெங்கு பணிபுரிந்துள்ளனர் அவருக்கு மொத்தசம்பளம் எவ்வளவு வழங்கப்படவேண்டும என கணக்கிடுவதற்கு இந்த கட்டற்ற பயன்பாடு உதவுகின்றது இதில் மிகைநேர பணியைகூட எளிதாக கணக்கிடுவதற்கான வசதியை கொண்டுள்ளது மேககணினியில் தரவுகளை பிற்காப்பு செய்து கொள்கின்றது மேலும் விவரங்களுக்கு https://appgrooves.com/rank/business/timecards எனும் இணையமுகவரிக்கு செல்க

DC++எனும் கோப்புகளை நேரடியாக பரிமாறிகொள்ளஉதவிடும் கட்டற்ற பயன்பாடு

P2Pஎன்ற வகையில் இருசாதனங்களுக்கு இடையில் நேரடியாக மிகமேம்பட்டவகையில் எளிதாக கோப்புகளை பரிமாறி கொள்வதற்கான ஒழுங்குமுறையை பின்பற்றிடும் DC++எனும்கட்டற்ற பயன்பாடு பேருதவியாய விளங்குகின்றது இந்த கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு இரண்டு சாதனங்களுக்கு இடையே விவாதித்தல், தேடுதல் ,மென்பொருட்கள் ,இசை, போன்றகோப்புகளை மையங்களில் வரிசைபடுத்தி எளிதாக பரிமாறி கொள்ளுதல் என்பன போன்ற பணிகளை மிகஎளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும் .மேலும் தற்போதுகொள்ளளவு பெரியதான கோப்புகளெனில் பதிவிறக்கம் செய்து கொள்ள BitTorrent எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது அதற்கு பதிலாக DC++எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது இது இணைய இணைப்புள்ள இரு சாதனங்களுக்கு இடையே எவ்வளவு பெரிய கோப்புகளையும் மிகஎளிதாகபரிமாறி கொள்ள உதவுகின்றது கோப்புகளை மையபடுத்தப்பட்ட வகை, சாதாரண வகை ஆகிய இரண்டுவகை களிலும் பரிமாறி கொள்ள dchub://randomhub.com:411i எனும் வாயில்வழியாகவும் மேம்பட்ட வகையில் எனில் adc://randomhub.com:411எனும்வாயில் வழியாகவும் கோப்புகளை சாதாரண வகையில் இருவாடிக்கையாளர்களுக்கு இடையில்மட்டும் பரிமாறி கொள்ள dchub://randomhub.com: 412 எனும் வாயில் வழியாகவும் கோப்புகளை மேம்பட்ட வகையில் இருவாடிக்கையாளர்களுக்கு இடையில் மட்டும் பரிமாறி கொள்ள adc://randomhub.com: 412எனும் வாயில்வழியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் இவ்வாறு கோப்புகளை பரிமாறி கொள்வதற்காக இதிலுள்ள Public Hubsஎன்பதை யார்வேண்டுமானாலும் கோப்புகளை பரிமாறிகொள்ளபயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் Private Hubsஎன்பதை குறிப்பிட்ட இரு நபர்கள் மட்டும் கடவுச்சொற்களை கொண்டு தங்களுக்கு இடையே கோப்புகளை பரிமாறி கொள்ளலாம் இதனுடைய பொதுமையத்தில் Slots என்பதில் எத்தனை நபர்கள் ஒரேநேரத்தில்பயன்படுத்தி கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளவாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் உதாரணமாக 5 slots என குறிப்பிட்டிருந்தால் ஒரேநேரத்தில் 5 நபர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக முதலில் DC++ எனும் சாளரத்திரையில் மேலேஇடதுபுறமூலையில் File எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து விரியும் திரையில் Settings எனும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக அடுத்து தோன்றிடும் பலகத்திரையின் இடதுபுறத்தில் Sharing எனும் வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையின் வலதுபுறத்தில் Add Folder என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நாம் பகிர்ந்து கொள்ளவிரும்பும் கோப்புகளை வைத்துள்ள கோப்பகத்தை தெரிவுசெய்து கொண்டு Ok.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நாம் தெரிவுசெய்து கோப்புகளின் அளவுகளிற்கேற்ப சிறிது காலஅவகாசம்எடுத்து கொண்டு வரிசைபடுத்திடும் தொடர்ந்து Ok.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கோப்புகள் பரிமாறி கொள்ளப்படும்

நாம் மிகவிரைவாக படிப்பதற்காக உதவிடும் கட்டற்ற பயன்பாடுகள்

எழுத்துவடிவிலான உரைகளை படித்திடும் தற்போதைய நம்முடைய பழக்கவழக்கமானது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்புதான் துவங்கியது அதற்குமுன் மனிதநாகரிகம் தோன்றியபின் முதன் முதலில் சைகைகளின் வாயிலாக வும் பின்னர் குரலொலிகளின் வாயிலாகவும் மனிதர்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறி கொண்டனர் அதன்பின்னர் 5,000 ஆண்டுகளுக்கு முன்புதான் எழுது வதற்கு கற்றுகொண்டு எழுத்துகளுடன் கூடிய உரைவடிவிலான செய்திகளை தங்களுக்குள் பரிமாறி கொண்டனர் இவ்வுரைவடிவிலான செய்திகளை கூட ஆரம்பத்தில் தட்டுதடுமாறி மிகமெதுவாக எழுத்துகூட்டி படித்து செய்தியை அறிந்து கொண்டனர் அதன்பின்னர் உரைவடிவிலான செய்திகளை விரைவாக படித்தறிவதற்கான பயிற்சியை பின்பற்றி மிகவிரைவாக செய்திகளை பரிமாறி கொண்டனர் தொடர்ந்து செய்த செயலையே திரும்பு திரும்ப செய்துவந்ததால் தானியாங்கியாக தற்போதைய உரையை படித்தறியும் நிலைக்கு நாமனைவரும் முன்னேறி இருக்கின்றோம் இருந்தபோதிலும் இந்த வேகம் பத்தாது இன்னும் விரைவாக படித்து புரிந்து கொள்ளும் அடுத்த கட்டத்திற்கு செல்லவிரும்பும் தற்போதைய மிகமேம்பட்ட சூழலில் அதாவது அவ்வாறான வகையில் நம்முடைய மூளைக்கு விரைவாக படித்திடுமாறு பயிற்சி யளித்திடுவதற்காக செய்திகளை விரைவாக பரிமாறி கொள்வதற்காக பின்வரும் கட்டற்ற மென்பொருட்கள் நாம் பயன்படுத்தி கொள்ளதயாராக உள்ளன அவைகளை கொண்டு பயிற்சி பெற்றால் நாமும் மிகவிரைவாக படித்திடும் அடுத்த படிநிலைக்கு செல்லமுடியும்
1.Gritzஎனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமை களிலும் செயல்படும் திறன்கொண்ட GPL எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது இது தற்போது நாம் உரையை படித்திடும் வேகத்தினை விட இருமடங்காக உயர்த்திடும் திறன்கொண்டது இதனை https://github.com/jeffkowalski/gritz எனும் இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினிகளில் கட்டளைவழிதிரையில் நிறுவுகைசெய்து மின்புத்தகங்களை Calibre போன்ற கட்டற்ற பயன்பாட்டின் துனையுடன் உரைவடிவில் மாற்றியமைத்து கொண்டு பயன்படுத்தி கொள்க
2.Spray Speed-Readerஎன்பது ஜாவாஸ்கிரிப்டால்உருவாக்கப்பட்டு மிகவிரைவாக நாம் படிப்பதை ஊக்குவிக்க உதவிடுகின்ற மற்றொரு கட்டற்ற பயன்பாடாகும் இதனை https://github.com/chaimpeck/spray எனும் இணையதளபக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
8.3. Sprits-itஎனும் கட்டற்ற இணைய தள பயன்பாடானது இணையதளங்களில் இணைய உலாவிகளின் வாயிலாக விரைவாக படித்திடஉதவுகின்றது உரைவடிவிலான மின்புத்தகங்களையும் விரைவாக படித்திடுவதற்கான பயிற்சியை வழங்குகின்றது இது வலதுபுறத்தில் துவங்கிடும் உரைகளையும் இடதுபுறத்திலிருந்து துவங்கிடும் உரைகளையும் மிகவிரைவாக படித்திடுவதற்கான பயிற்சியை வழங்குகின்றது
4. Comfort Readerஎனும் கட்டற்ற பயன்பாடானது ஆண்ட்ராய்டு சாதனங்களை பயன்படுத்திடும் பயனாளர்களும் மிகவிரைவாக படிப்பதற்கான பயிற்சியை வழங்குகின்றது இதனை https://github.com/mschlauch/comfortreader எனும் இணைய தளத்திளிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
இவைகளில் ஏதாவது ஒன்றில் பயிற்சி எடுத்துகொண்டால் நிமிடத்திற்கு 250wpm என்பதை நிமிடத்திற்கு 500wpm என்றவாறு நம்முடைய படிக்கும் வேகத்தினை உயர்த்தி கொள்ளலாம் என்ற செய்தியை மனதில் கொள்க

Previous Older Entries