அக்சஸ்2007-2- புதிய அட்டவணையை உருவாக்குதல்

அக்சஸில் ஒரு அட்டவணையை உருவாக்குமுன் இந்த அட்டவணைக்கு எவ்வாறு பெயரிடுவதென்று முடிவு செய்ய வேண்டும்

இவ்வாறு பெயரிடும்போது எற்படும் தவறுகளை தானாகவே சரிசெய் வதற்காக MsOffice=>Access Option=> Current Database=>Name Auto correct என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துகொள்க

ஒரேபெயரை அட்டவணை,படிவம்,அறிக்கை,வினா ஆகியவெவ்வேறு பொருளிற்கு tblcontact,frmcontact. rptcontact.  qrycontact என்றவாறு முன்னொட்டுடன் வைத்திடலாம் ஆனால் ஒரேபொருளிற்குள் இவ்வாறு ஒரேபெயரை வைக்க முடியாது,

விபிஏவை பயன்படுத்தி செயற்படுத்தம்போது குழப்பமேதுமில்லாமல் மேற்கோள் காட்டுவதற்கு இந்த பெயரானது தேவைப்படுகின்றது,

பெயர்கள் பெரிய மற்றும் சிறிய எழுத்துகளுடன் கலந்து உருவாக்குவதே படிப்பதற்கும் எளிதில் நினைவு கொள்ளத் தக்கவகையிலும் இருக்கும் உதாரணமாக TBLCONTACT என்பதைவிட tblContact என்பது எளிதில் நினைவுகூறமுடியும்,

மிகநீண்ட பெயருக்கு பதிலாக இரத்தினசுருக்கமாக இருப்பதே நன்று,இதனால் எழுத்துப்பிழை ,தவறாக புரிந்து கொள்ளுதல் போன்றவை தவிர்க்கப்படுகின்றது, உதாரணமாக contact information என்பதற்கு பதிலாக continfo என்றவாறு மிகச்சுருக்கமாக குறிப்பிடலாம்

பெயரிடும்போது எழுத்துகளுக்கிடையில் இடைவெளி எதுவும் கண்டிப்பாக விடவேண்டாம்

அக்சஸ் சாளரத்தின் மேல்பகுதியில் இருக்கும் create என்ற தாவியை சொடுக்குக உடன்  createஎன்ற தாவிபட்டி படம் 2-1-ல் உள்ளவாறு தோன்றும் இதனுடைய அட்டவணை எனும் குழுவில் உள்ள  tableஎன்ற பொத்தானை சொடுக்கினால் புதிய அட்டவணையொன்று உருவாக்கப்பட்டு சேர்க்கப்படும் table design என்ற  பொத்தானை சொடுக்கினால் வடிவமைப்பு காட்சி நிலையில் புதிய அட்டவணையொன்று உருவாக்கப்பட்டு சேர்க்கப்படும்

 படம்-2-1

  இவற்றில் table என்ற பொத்தானை சொடுக்குக உடன் படம் 2-2 -ல் உள்ளவாறு தரவுதாள் காட்சியில் Id இணைக்கப்பட்டு Add New Field என்று புதிய புலத்தை சேர்க்கும்படி பிரிதிபலிக்கும் இதில் எம் எஸ் எக்செல் போன்றே add new field –ன் நெடுவரிசையில் நேரடியாக தரவுகளை உள்ளீடுசெய்து கொள்ளலாம் Rename என்பதை தெரிவுசெய்துஇந்தபுலத்திற்கு  Field புதிய பெயரை உள்ளீடு செய்யலாம்  இது முந்தைய அக்சஸ் பதிப்பின் create table in Datasheet view என்பதற்கு நிகரானதாகும் வடிவமைப்பு காட்சிக்கு செல்லாமலேயே எக்செல்லின் அட்டவணையை போன்று தரவுகளை இதில் உள்ளீடு செய்வதன் மூலம் அக்சஸில் ஒரு அட்டவணையை உருவாக்கிடமுடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

 படம் -2-2

  படம்-2-1-ல் உள்ளவாறுதோன்றும் create என்ற தாவிபட்டியின் table என்ற குழுவில் உள்ள table design என்ற பொத்தானை சொடுக்குக, உடன் படம்-2-3-ல் உள்ளவாறு புதிய அட்டவணையொன்று வடிவமைப்பு காட்சியில் தோன்றும் இது முந்தைய பதிப்பின் வடிவமைப்பு காட்சிக்கு நிகரானதாகும்,இதில் மேல்பகுதி பலகம் புலஉள்ளீட்டு பகுதியென்றும்  கீழ்பகுதி பலகம் புலபண்பியல்பு பகுதியென்றும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன, மேல்பகுதியில் புலத்தின்பெயர் field name, என்னவகையான தரவுகளை data type உள்ளீடு செய்யப்போகின்றோம் இதனுடைய விளக்கம் description ஆகிய மூன்று நெடுவரிசைகள் உள்ளன, கீழ்பகுதி பலகத்தில் ஒவ்வொரு புலத்தின் பண்பியல்புகள் properties எவ்வாறு இருக்கவேண்டும் எனத் தீர்மாணிக்கின்றது, F6 விசையை பயன்படுத்தி இவ்விரு பலகத்திற்குமிடையே இடம்சுட்டியை மேலும் கீழும் நகர்த்தி வைத்துகொண்டு பணிபுரியலாம்,

 படம்-2-3

இந்த வடிவமைப்பு தாவிபட்டியின் கீழ் பின்வரும் பொத்தான்கள் உள்ளன,

primery key வடிவமைப்பு தாவிபட்டியின்   கருவிகள் என்ற குழுவில் உள்ள primery key என்ற பொத்தான் ஒரு புலத்தினை முதன்மைதிறவுகோளாக உருமாற்றி வடிவமைக்க உதவுகின்றது அக்சஸின் முந்தைய பதிப்புகளில் அட்டவணையின்  முதல் புலமானது முதன்மைதிறவுகோளாக தானாகவே அட்டவணையை சேமிக்கும்போது ஒதுக்கீடு செய்துகொள்ளும், அல்லது தேவையானால் உருவாக்கலாம், அக்சஸ்2007-ல் இந்த primery key என்ற பொத்தானின் உதவியுடன் முதன்மைதிறவுகோளை உருவாக்கலாம் இதன் பண்புகள் பின்வருமாறு

1,இது எப்போதும் சுட்டுவரிசையாக(Index) செய்யப்பட்டிருக்கும்

2,ஒரே பெயரில் வேறு புலம் இருக்காது,

3,இதன் மதிப்பு பூஜ்ஜியம் null ஆக எப்போதும் இருக்காது,

4,புதிய ஆவணங்களை சேர்த்தவுடன் தானாகவே அதற்குரிய முதன்மை திறவுகோளின் புதிய எண்ணை உருவாக்கிவிடும்,

5,இந்த முதன்மைதிறவுகோளின்  எண்களை எப்போதும் மாறுதல் செய்யமுடியாது

6,ஒன்றுக்கு மேற்பட்ட  புலங்களை சேர்த்து கூட்டாக உருவாக்கப்படும் முதன்மை திறவுகோள்களை   கலப்பு முதன்மைதிறவுகோள் என அழைப்பர்,

Insert Row: அட்டவணையின் இடையில் ஏதேனும்  விடுபட்ட புலத்தை உள்ளினைக்க இந்த பொத்தான்  உதவுகின்றது

Delete Row:  அட்டவணையில் தவறாக உருவாக்கப்பட்ட புலங்களை நீக்க இந்த பொத்தான் உதவுகின்றது,

Property sheet:  புலங்களுக்கான பண்பியல்புகளை தீர்மாணிக்க இந்த பொத்தான் பயன்படுகின்றது,

Index:இந்த பொத்தான் புலங்களை வரிசை கிரமமாக அடுக்கி ஏதேனும் விவரம் தேவையெனில் சுலபமாக தேடி அனுகுவதற்கு உதவுகின்றது, இந்த பொத்தானை சொடுக்கினால் இதற்காக Index என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்ற செய்கின்றது,அதில் தேவையானவாறு உள்ளீடுசெய்து வரிசைபடுத்தி கொள்ளலாம்

புலங்களுக்கு பெயரிடுதல்: பெயரை படித்தவுடன் புரிந்துகொள்ளுமாறும்  எளிதில் நினைவில் கொள்ளும்படியும் இருக்குமாறு உள்ளீடு செய்க,

தரவுவகையை குறிப்பிடுதல்:  பின்னர் இந்த புலத்திலிருக்கும் தரவுகளின் வகையை குறிப்பிடுக,

தரவுகளை ஏற்புடையதாக்குதல்(validation):  இந்த புலத்தில் உள்ளீடு செய்யும் தரவுகள் எவ்வாறு இருந்தால் ஏற்புடையதாக்கல்  செய்யவேண்டும் என குறிப்பிடுக,

Look upஅட்டவணையை வடிவமைத்தல்: ஒரு சில தரவுகள் பொதுவாக எல்லா அட்டவணைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும் எல்லா அட்டவணை களிலும் தனித்தனியாக தரவுகளை உள்ளீடு செய்தபின்னர் இவைகளை மாறுதல் செய்வதற்கு எல்லா அட்டவணைகளுக்கும் சென்று மாறுதல் செய்ய வேண்டியிருக்கும் அந்நிலையில்  குறிப்பிட்ட புலத்திற்கான தரவுகளை  ஒரு இடத்தில் மட்டும் ஒருஅட்டவணையாக உருவாக்கி வைத்துவிட்டு  Look up வசதியை பயன்படுத்தி இந்த Look up அட்டவணையிலிருந்து மற்ற அட்டவணைகளுக்கான தரவுகளை எடுத்துகொள்ளும்படி செய்யலாம்,இதில் look up wizard என்பது மற்ற அட்டவணைகளில் உள்ள குறிப்பிட்ட புலத்தை பார்வையிட்டு புலங்களை எடுத்துகொள்ள உதவுகின்றது

 படம்-2-4

புலங்களில் உள்ள தரவுகளின் வகைகளை ஒதுக்கீடுசெய்தல்

இந்த அக்சஸ் 2007-ல் உள்ள(படம்-2-4) text,memo,number,date/time,currency,auto number,yes/no,OLE object போன்ற வகைகள் முந்தைய பதிப்புகளை போன்றதே,

Hyberlink: மற்ற அட்டவணைகளுடன் இணைப்பு ஏற்படுத்த இது உதவுகின்றது,

Auto number:ஒரு அட்டவனையில் அடுத்தடுத்த ஆவணங்களுக்கு தொடர்ச்சியாக எண்ணிடுவதற்குஇது பயன்படுகின்றது இது இயல்புநிலையில் அட்டவணையின் ஆரம்பப் பகுதியில் தோன்றும் தேவையானால் வேறு இடத்தில் மாற்றி யமைத்து கொள்ளலாம்,இந்த எண்களை மாறுதல் எதுவும் செய்யமுடியாது, புதிய ஆவணங்களை உருவாக்கும்போது  அடுத்த எண் தானாகவே உருவாகிவிடும்,

attachment இது மட்டும் அக்சஸ்2007-ல் புதியதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது, குறிப்பிட்ட ஒரு புலத்துடன் மட்டும் இணைப்பு ஏற்படுத்தி  தரவுகளை கணக்கீட்டிற்காக Look up வசதி மூலம் எடுத்தகொள்ளும் ஆனால் அக்சஸ்2007 கோப்பு முழுவதையும் ஒரேபுலமாக இணைப்பில் எடுத்துகொள்ளும்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஒருபுலத்தில் தரவுவகை என்ற நெடுவரிசையில் உள்ள கீழிறங்கு பட்டியலை தோன்றச்செய்து அதில் இந்த attachment என்ற பண்பியல்பை தெரிவுசெய்க,உடன் படம்-2-5-ல் உள்ளவாறு attachment என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் உள்ள Add என்ற பொத்தானை சொடுக்குக,உடன் வழக்கமான கோப்புகளை திறக்கும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் நாம் திறக்கவிரும்பும் கோப்பினை இதில் தேடச் செய்து தேடிபிடித்து தெரிவுசெய்துகொள்க பின்னர் ok என்ற பொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக,

 படம்-2-5

 அட்டவணையை உருவாக்குதல் create என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-2-1-ல் உள்ளவாறு create என்ற தாவியின்பட்டி திரையில் தோன்றும் அதில் table என்ற குழுவில் உள்ள table design view என்ற பொத்தானை சொடுக்குக உடன் படம்-2-2-ல் உள்ளவாறு வடிவமைப்புதாவி என்ற சூழ்நிலை பட்டியுடன் sheet1- table1என்றவாறு வடிவமைப்பு காட்சியில் ஏற்கனவே அட்டவணை ஏதேனும் உருவாக்கியிருந்தால் table2 என்றவாறு காட்சியளிக்கும்

Field name என்றபெட்டியில் இந்த புலத்திற்கு ஒருபெயரை உள்ளீடு செய்க, பின்னர் தாவி விசையை தட்டுக உடன் இடம்சுட்டியானது data type என்ற நெடுவரிசைக்கு சென்று நிற்கும் இதில் கீழிறங்கு அம்புக்குறியை சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் என்னவகையான தரவுகள் என தெரிவுசெய்து தாவி விசையை  தட்டுக,இப்போது இடம்சுட்டியானது description என்ற நெடுவரிசை யில் பிரதிபலிக்கும் விருப்பப்பட்டால் இந்த புலத்தில் தரவுகளின் விவரத்தை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக உடன் இடம்சுட்டியானது அடுத்த புலத்தை உருவாக்குவதற்கேதுவாக அடுத்த வரியின் field name பகுதியில் சென்று நிற்கும்,முன்புபோலவே பெயரிட்டு தரவுவகைகளை குறிப்பிடுக,

F6 விடையைதட்டுக உடன் இடம்சுட்டியானது கீழேயுள்ள பண்பியல்பு பலகத்திற்கு செல்லும் அதில் input mask என்பதன் அருகில் இருக்கும் முப்புள்ளியை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Input mask wizard (படம்-2-6) என்பது திரையில் தோன்றும் இது இந்த புலத்தில் உள்ளீடு செய்யும் தரவுஎந்த அமைப்பில் இருக்கவேண்டும் என தீர்மாணிக்கின்றது  நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திட எண்ணிணால் edit list என்ற பொத்தானை சொடுக்குக உடன் customize input mask wizard என்ற சிறுஉரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் தேவையானவாறு மாறுதல்செய்க,பின்னர் close என்ற பொத்தானை சொடுக்குக இறுதியாக இந்த வித்தகரில் உள்ள finish என்ற பொத்தானை சொடுக்குக,

  படம்-2-6

Insert  field: ஒரு அட்டவணையை உருவாக்கும்போது ஏதேனும் புலத்தினை உருவாக்காது தவறுதலாக விட்டுவிடுவோம் அந்நிலையில் வடிவமைப்பு த் தாவிபட்டியின் கருவிகள் என்ற குழுவில் உள்ள insert row என்ற பொத்தானை சொடுக்கி  புதிய புலத்தை உள்ளிணைத்து கொள்க அல்லது குறிப்பிட்ட புலத்திற்கு அருகில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக,உடன் திரையில் தோன்றும் குறுக்கு பட்டியில் insert row என்பதை சொடுக்கி  புதிய புலத்தை உள்ளிணைத்துகொள்க,

Delete row இவ்வாறே தவறுதலாக ஏதேனும் புலத்தை உருவாக்கியிருந்தால் வடிவமைப்புத் தாவிபட்டியின் கருவிகள்  குழுவில் உள்ள Delete  row என்ற பொத்தானை சொடுக்கி குறிப்பிட்ட புலத்தை நீக்கம் செய்¢க அல்லது குறிப்பிட்ட புலத்திற்கு அருகில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின்  வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக,உடன் தோன்றும் குறுக்கு பட்டியில் Delete  row என்பதை சொடுக்கி குறிப்பிட்ட புலத்தை  நீக்கம் செய்க

புலத்தின் வரிசையை மாற்றியமைத்தல் மாற்றியமைக்க விரும்பும் புலத்தை  இடம்சுட்டியால் பிடித்து அப்படியே இழுத்து சென்று தேவையான இடத்தில் விடுக,

தரவுவகையை மாற்றியமைத்தல் எந்தவொரு தரவுவகைகளையும் வேறொருவகையாக மாற்றம் செய்யலாம் ஆயினும் தானியங்கிஎண்கள் மற்றும் OLE வகையை  மட்டும் மாற்றம் செய்யமுடியாது ,

தரவுகளுக்கு பண்பியல்புகளை நிர்ணயித்தல் field size,format,input mask,decimal places,caption validate போன்ற பண்யில்புகளை அந்தந்த புலத்திற்கு நிர்ணயம் செய்யவேண்டும் அல்லது இயல்புநிலையில் உள்ளதை எற்றுகொள்ளவேண்டும்,

சுட்டுவரிசை (Index),வினா(Query),அரட்டையடித்தல்(Charting),குழுவாக்குதல்(Group) போன்ற செயல்களில புலங்களை அடையாளம் காட்டிடஇது பயன்படுகின்றது, இதில் தானியங்கி சுட்டுவரிசை(Auto Index) என்பது மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது நாம் ஒவ்வொரு புலத்திற்கும் சுட்டுவரிசை(Index) பற்றி எதுவும் குறிப்பிடாவிட்டால் கணினியானது தானாகவே தானியங்கி சுட்டுவரிசை(Auto Indexed)ஆக எடுத்துகொள்ளும்படி செய்வதற்கு எம்எஸ் ஆஃபிஸ் பொத்தானை சொடுக்குக உடன் விரியும்எம்எஸ் ஆஃபிஸ் பட்டியலில் Access options என்ற பொத்தானை  சொடுக்குக உடன் திரையில் தோன்றும் Access options என்ற உரையாடல் பெட்டியில் object designer என்பதை தெரிவுசெய்க உடன் படம்-2-7-ல் உள்ளவாறு Access options என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் எந்தெந்த புலத்திற்கு தானாகவே சுட்டுவரிசை(Index) செய்யவேண்டும் என auto index on import/create என்ற பகுதியில் தேவையான புலங்களில்  குறிப்பிடுக, பின்னனர்  ok என்ற பொத்தானை சொடுக்கி தொடர்ந்து பணிசெய்யுங்கள்ஆனால்  OLE தரவுகளை மட்டும் தானியங்கி சுட்டுவரிசை(Auto Indexed)ஆக எடுத்துகொள்ளாது,என்பதை நினைவில் கொள்ளுங்கள்

 படம்-2-7

 அட்டவணையின் வடிவமைப்பை அச்சிடுதல் database tools என்ற தாவிபட்டியின் analyaia என்ற குழுவில் உள்ள data base documenter என்ற பொத்தானை சொடுக்குக. உடன் படம்-2,8-ல்  உள்ளவாறு documenter என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் அட்டவணைகள் (Tables)என்ற தாவி(Tab) செயலில் இருக்கும் பட்டியலிடப்பட்டிருக்கும் அட்டவணைகளில் அச்சிடவேண்டியதை மட்டும் தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக,உடன் அச்சிற்குமுன்காட்சியாக அட்டவணையின் வடிவமைப்பு திரையில் காட்சியாக தோன்றும்,

 படம்-2-8

சேமித்தல்(Save): நாம் இவ்வாறு உருவாக்கிய அட்டவணையை சேமித்திட சாளரத்தின் மேல்பகுதியில்  எம்எஸ் ஆஃபிஸ் உருவத்திற்கு அருகிலிருக்கும் save எனும் உருவத்தை சொடுக்குக முதன்முதலாக சேமிப்பதாயின் save as எனும் உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும் இந்த அட்டவணைக்கு ஒரு பெயரிட்டு சேமித்திடுக,

மறுபெயரிடுதல்(Rename): அட்டவணையின் பெயரை மாறுதல் செய்ய விரும்பினால் குறிப்பிட்ட அட்டவணையை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் திரையில் தோன்றிடும் குறுக்குப்பட்டியில் Renameஎன்பதை சொடுக்குக உடன் இடம்சுட்டியானது அட்டவணையின் பெயரின் மீது பிரிதிபலிக்கும் தேவையான பெயரை உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையைதட்டுக,

அழித்தல்அல்லது நீக்கம் செய்தல்(Delete):  அழிக்க அல்லது நீக்கம் செய்யவேண்டிய அட்ட வணையை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் திரையில் தோன்றும் குறுக்குப் பட்டியில் Delete என்பதைதெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த அட்ட வணையை அழிக்க அல்லது நீக்கம்  செய்வதற்கான எச்சரிக்கை செய்தி பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் ok என்ற பொத்தானை சொடுக்கியவுடன் இந்த அட்டவணை நீக்கம் செய்யப்பட்டுவிடும்

நகலெடுத்தலும்(copy)ஒட்டுதலும்(paste): புதியதாக ஒரு அட்டவணையை உருவாக்கிட அவ்வட்டவணையை ஆரம்பத்திலிருந்து உருவாக்குவதற்கு பதிலாக ஏற்கனவே உருவாக்கி பயன்படுத்திவரும் அட்டவணையின் துணைகொண்டு ஒருசில மாறுதல் மட்டும் செய்து பயன்படுத்திகொள்ளலாம் அந்நிலையில் நகலெடுத்திடவிரும்பும் அட்டவணையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானைசொடுக்குக உடன் திரையில் தோன்றிடும் குறுக்குப்பட்டியில் copy என்பதை சொடுக்குக அல்லது home தாவிபட்டியின் clip board குழுவில் உள்ளcopy என்ற பொத்தானை சொடுக்குக  பின்னர் புதியாதாக அட்டவணையொன்றை உருவாக்கவேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானைசொடுக்குக  உடன் திரையில் தோன்றிடும் குறுக்குப்பட்டியில் paste என்பதை சொடுக்குக அல்லது home தாவிப்பட்டியின் clip board குழுவில் உள்ளpate என்ற பொத்தானை சொடுக்குக உடன் படம்2,9-ல் உள்ளவாறு paste table as என்ற  உரையாடல் பெய்டியொன்று திரையில் தோன்றும்

  இதில் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன structure only இந்த வாய்ப்பு கட்டமைப்பை மட்டும் நகலெத்துவிடும் structure and data இது அட்டவணை முழுவதையும் நகலெத்துவிடும் append data to existing tableஇது புதியதாக தரவுகளை ஏற்கனவேயுள்ள அட்டவணையில் கூடுதலாக சேர்த்துகொள்ள உதவுகின்றது, இந்த வாய்ப்புகளில்  நமக்குத் தேவையான ஒன்றை மட்டும் தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக உடன் அந்த அட்ட வணையானது நகலெடுக்கப்பட்டுவிடும் அதில் தேவையானவாறு மாறுதல் செய்துகொள்க,

 படம்-2,9

அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் திறமூல மென்பொருட்கள்

இயற்பியல் பேராசிரியர் ஒருவர் தம்முடைய மாணவர்களை  தத்தமது இயற்பியல் ஆய்வை  கணினிமூலம்  செய்திடுமாறு  பணித்தார் அந்தோ பரிதாபம் அவர்கள் MATLABஎன்ற அனுமதிபெற்றால் மட்டும் இயக்கிடமுடியுமெனும் மென்பொருளை கொண்டு மட்டுமே இந்த ஆய்வுகளை செய்திட முடியும் என்ற அளவிற்கு மட்டுமே விவரங்களை அறிந்திருந்தானர்  ஆனால் அவர்கள் அனைவரும் இந்த   MATLABஎன்ற  மென்பொருளிற்கான பலஇலட்சகணக்கான ரூபாய் அனுமதிகட்டணத்தை செலுத்துமளவிற்கு வசதியுடைவர்கள் அன்று  சரி  கல்வி பயிலும்போது அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பினையும் வசதியையும் வழங்கவேண்டுமே என்ன செய்வது என நீண்ட நெடிய ஆலோசனைக்கு பிறகு   திறமூல பயன்பாடுகள்  ஏதாவது கிடைக்கின்றதாவென  இணையத்தில்தான் தேடிபார்ப்போமே என உலாவரும்போது என்ன ஆச்சரியம் கட்டணமெதுவுமில்லாமல் அனைவரும் பயன்படுத்த கூடிய scilabஎன்ற மென்பொருள் அவருக்கு கிடைத்தது  அவ்வாறே அறிவியல் பயிலும் மாணவர்களுக்கென்றே பின்வரும் திறமூலமென்பொருட்கள்  உள்ளன என அறிந்து கொள்க

 scilab: இது அறிவியல் மற்றும் கணித கணக்கீடுகளுக்கென வடிவமைக்கபட்ட பயன்பாட்டு மென்பொருளாகும்  இதில் கட்டளை வரியை உள்ளீடு செய்திடும் வசதி உள்ளது  தேவையெனில் பயனாளர் ஒருவர் தம்முடைய சொந்த திறன்மிகுந்த நிரல் தொடர்களை எழுதி உருவாக்கவும் அனுமதிக்கின்றது இதில் நூற்றுக்குமேற்பட்ட கணித செயலிகள் உள்ளன மேலும் பயனாளர் ஒருவர் விரும்பினால்  சி சி++ மொழிகளில் நிரல் தொடர்களை எழுதி தேவையான கணித செயலிகளை உருவாக்கி இதனோடு சேர்த்துகொள்ளவும் அனுமதிக்கின்றது இது மிகமுன்னேற்றமடைந்த தரவுகளின் கட்டமைப்பு கொண்டுள்ளது நாம்விரும்பினால் நம்முடைய சொந்த தரவுகளின் கட்டமைப்பையும் இதனுடன் சேர்த்துகொள்ளமுடியும்

FreeMAT:என்பதும்  MATLAB இற்கு இணையான மற்றொரு அறிவியல் பயன்பாட்டு மென்பொருளாகும்

Maxima: என்பது அல்ஜிப்ராவை பயிலும் மாணவர்களுக்கான பயன்பாடாகும்  குறியீடுகள் எண்கள் ஆகிய இரண்டையும் செயல்படுத்தும் சிறப்புவகை மென்பொருளாகும்

Grace :என்பது WYSIWYG 2D என்ற இருபரிமான வரைகலை பயன்பாட்டிற்கு உதவிடும் மிகசிறந்த வெளியீட்டினை வழங்கிடும் கருவிபயன்பாடாகும்   கோட்டு சமன்பாடு  சாதாரன சமன்பாடு ஆகிய வளைவுகோடுகளை மிகபொருத்தமாக அமைக்கும்  திறன்கொண்டது வகைகெழு தொகைகெழு (integration differentiation, interpolation) போன்ற கணித சமன்பாடுகளை கையாளும் திறன் கொண்டதாகும்

Ktechlab:இது மின்னியலையும் மின்னனுவியலையும்  பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் மின்சுற்றுகளை வடிவமைத்து உருவாக்கிட பயன்படுகின்றது

Celestia: இது வானவியலை பயிலும் மாணவர்களுக்கானது முப்பரிமானங்களை கையாளும் திறன்கொண்ட கற்பனையாக  நாம்விரும்பும் வேகத்தில் வானத்தில் உள்ள புதிய கோள்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு எவ்வளவு நேரத்தில் சென்று சேரமுடியும் என்னென்ன இன்னல்களை சந்திக்க நேரிடும் அதனை எவ்வாறு தவிர்ப்பது என்பன போன்ற அனுபவத்தை இதில் அறிந்துகொள்ளமுடியும்

Stellarium: இதுவும் முந்தையதை போன்ற வானவியலுக்கு பயன்படுகின்றது கூடுதலாக வானத்திலுள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும்  தொலைநோக்கி உதவியில்லாமல் வெறும் கண்காளால் காண உதவுகின்றது

chemical equation expert:இது வேதியியல்அல்லது இரசாயனம் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் உருவாக்கிடும் வேதியியல் சமன்பாடுகளை கையாளும் திறன்கொண்டதாகும்

ACD/ChemSketch:இது வேதியியல் கட்டமைப்பின் சின்னஞ்சிறு மூலக்கூறுகளின் பண்புகளை இருபரிமான முப்பரிமான கட்டமைப்பையும் காட்சிகளையும்  முன்நிகழ்வுகளை காணஉதவும் மிகமுக்கியமாக logP ஐ அறிந்துகொள்ளும் திறன் கொண்டதாகும்  50 க்குறைவான அனுஎடைகொண்ட  மூன்று சுற்று கொண்ட மூலக்கூறுகளின் கட்டமைவை அறிந்து கொள்ளவும் அதற்கான பெயரிடவும் உதவுகின்றது

Avogadro: இது பயன்படுத்த எளிதான அறிவியல் மாணவர்களுக்கு மட்டுமல்லாது   அறிவியல் ஆய்வாளர்களுக்கும் பயன்படுத்தகூடியதாக உள்ளது  உயிரியல் தகவல்களையும் மிகமுன்னேறிய மூலக்ககூறுகளின் கட்டமைவை ஆய்வுசெய்திடவும்  உலோகவியலை கையாளவும் இது உதவுகின்றது

மேலும் தேவையெனில் http://bestfreewaredownload.com/ என்ற வலைதளத்திற்கு சென்று தேடிபிடித்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க

நம்முடைய சொந்த லினக்ஸின் கெர்னலை நாமேகட்டமைத்து உருவாக்கிடமுடியும்

குறிப்பு:இங்கு உபுன்டு10.04 இற்கான படிமுறைகள் மட்டும் குறிப்பிட பட்டுள்ளன இதே படிமுறை மற்றலினக்ஸ் இயக்கமுறைமைக்கும் பொருந்தும்

முதலில் லினக்ஸின் பதிப்பு எண்ணை கட்டுப்படுத்த உதவிடும் Gitஎனும் பயன்பாடு உதவுகி்ன்றது. இதனை sudo opt-get install git-coreஎன்ற சிறு கட்டளை வழியாக நிறுவுகை செய்திடுக

அவ்வாறே sudo opt—get install libncurses5-dev என்ற சிறு கட்டளை வழியாக curses5-dev என்ற கோப்பினையும் நிறுவுகை செய்திடுக அதன்பின்னர் uname-a  என்ற சிறு கட்டளை வழியாக  நடப்பிலிருக்கும் லினக்ஸின் பதிப்பு எண்ணை சரிபார்த்திடுக பிறகு git clone  என்ற சிறு கட்டளை வழியாக  தேவையான லினக்ஸின் கெர்னலை பதிவிறக்கம் செய்து கொள்க

இதன்பின் அனுபவமுடையவர்கள் எனில் make menuconfigஎன்ற சிறு கட்டளை வழியாக கட்டமைவு செய்திடமுடியும் புதியவர்கள் எனில் நடப்பில் கட்டமைவுசெய்திடும் cp/boot/config/-2.6.32-38-generic.configஎன்ற கோப்பினை நகலெடுத்து மூலகோப்பகத்தில் ஒட்டிடுக

பின் இந்த   configஎன்ற கோப்பினை செயல்படுத்துக உடன் தோன்றிடும் configஎன்ற திரையில்  சரியாக இருக்கும் என நம்பினால் Yes / No ஆகியவற்றில்ஒன்றை தெரிவுசெய்திடுக இல்லையெனில் இயல்புநிலையில் இருப்பதை ஏற்று உள்ளீட்டு விசையை மட்டும் அழுத்துக

 பிறகு  makefileஐ திறந்து பின்வருமாறு மாறுதல் செய்து makeஎன்ற கட்டளையை செயற்படுத்தி இந்த கெர்னலுக்கு ஒரு புதிய பெயரிடுக

 

VERSION=2

PACHLEVEL= 6

SUBLEVEL=32

EXTRVERSION= dips

NAME= Building My kernel

பின் make INSTALL_MOD_STRRIP=1 modules_installஎன்ற கட்டளையை செயற்படுத்துவதன் வழியாக  அனைத்து கெர்னலையும் நிறுவுகை செய்திடுக

இதன்பின்  கணினியின் தொடக்கநிலையின்போது தேவைப்படும் மூலக்கோப்பினை sudo update-initramfs -c -k 2.6.32-dips+என்ற கட்டளை மூலம் செயற்படுத்துக

பிறகு /boot என்ற கோப்பகத்தையும் configஎன்ற கோப்பினையும் அவை இருக்கின்றனவா என்றும் நாம்ம சொந்தமாக உருவாக்கவிருக்கின்ற நம்முடைய கெர்னலின் உருவகோப்புகள் உள்ளனவா என சரிபார்த்து கொள்க

இதன்பின் GRUBஎன சுருக்கமாக அழைக்கபடும் Grand United Boot loader என்ற GNU -ன் அடிப்படையில் ஒன்றிற்குமேற்பட்ட இயக்கமுறைமைகளை இயங்க தொடங்க அனுமதிக்கும் இயக்ககோப்புகளின்  கட்டுகளை /boot/grub என்ற கோப்பகத்தில் உள்ளதாவென சரிபார்த்து கொள்க

இப்போது கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக  இப்போது நாம் புதியாதாக உருவாக்கிய கெர்னலில் இருந்து கணினியின்  தொடக்க இயக்கம் அமைவதை காணலாம் இவ்வாறு மிக எளிமையாக புதியதான நம்முடைய சொந்த கெர்னலை உருவாக்கிடுக

திறமூல கருவிபெட்டிகளான மருத்துவ காட்சிப்படுத்தல் (VTK) மற்றும் உருவபட (ITK)மென்பொருட்கள் ஒப்பீடு

மருத்தவத்துறையில் பயன்படுத்தபடும் Osirix,paraview ITK-snap என்பனபோன்ற  பயன்பாட்டு மென்பொருட்களுக்கு முதுகெலும்பை போன்று அடிப்படையாக இந்த  ITK VTK ஆகிய திறமூல  கருவிபெட்டிகள் விளங்குகின்றன. 1999 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருக்கும் தேசியமருத்துவநூலகத்தை   CT ,MRI ஸ்கேன் போன்ற மருத்துவ கருவிகளை கையாளுவதற்கேற்ற  Insight segmentation and registration toolkit(ITK)என்ற திறமூல மருத்துவ கருவிபெட்டிக்கான மென்பொருளை உருவாக்கிடுமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க இது உருவாக்கப்பட்டு மேம்படுத்துபட்டு வருகின்றது இது Cmake என்ற மென்பொருளால் கையாளபட்டு அனைத்துவகை இயக்கமுறைமகளிலும் இயங்கிடுமாறு செய்யபட்டுள்ளது இதன் மூலக்குறிமுறைகள் சி++ மொழியில் எழுதபட்டதாகும் ஆயினும் இது பைதான் ஜாவா போன்ற மற்றமொழிகளால் இடைமுகம் செய்யவும் அதன்மூலம் இதனுடைய பயனை விரிவாக்கசெய்துகொள்ளவும்  அனுமதிக்குமாறு உருவாக்கபட்டுள்ளது  இது PNG,BMP,JPEG,Tiff,RAW,GE4x என்பன போன்ற வடிவமைப்பு கோப்புகளையும் ஆதரிக்கின்றது  http://itk.org/ என்ற தளத்திலிருந்து இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளமுடியும்

3.1

 இதேபோன்று முப்பரிமான கணினி வரைகலையையும் உருவப் படங்களையும் கையாளுவதற்காக Visualise toolLit(VTK) என்ற மருத்தவ கருவிபெட்டிக்கான மென்பொருள் மிகப்பிரபலமாக பயன்படுத்தபட்டு வருகின்றது  இது மருத்துவ கல்வி மற்றும் ஆய்வுபணிகளுக்காக பயன்படுத்தபட்டு வருகின்றது  இதன் மூலக்குறிமுறைகள் சி++ மொழியில் எழுதபட்டதாகும்  இதனை  பைதான் ஜாவா போன்ற மற்றமொழிகளால் இடைமுகம் செய்யவும் அதன்மூலம் இதனுடைய பயனை விரிவாக்கசெய்துகொள்ளவும்  அனுமதிக்குமாறு உருவாக்கபட்டுள்ளது இதனைhttp://vtk.org என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளமுடியும்

3.2

 இவ்விரண்டிற்குமிடைய உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு

1ITK ஆனது உருவபடத்தை செயல்படுத்துவதன் அடிப்படையில் செயல்படுகின்றது

VTK ஆனது காட்சிபடுத்துதலின்  அடிப்படையில் செயல்படுகின்றது

2 ITKதுண்டாக்கல் மற்றும் பதிவு நெறிமுறைகளின்  அடிப்படையில் செயல்படுகின்றது

VTK ஸ்கேலார் வெக்டார் ஆகியவற்றின் அடிபடையிலான காட்சிபடுத்துதலின் நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகின்றது

இவ்விரண்டு கருவிகளும் சி++ அடி்பபடையில் உருவாக்கபட்டாலும் நாம் செயல்படுத்திட விழையும் இயக்கமுறைமை தளத்திற்கேற்ற திரட்டுதலை(compiler) பயன்படுத்தி உருமாற்றம் செய்துகொள்ளவேண்டும்

ITK ஆனது Cmake என்ற மென்பொருளால் கையாளபடுவதால்  இந்த  Cmake என்ற மென்பொருளை http://www.cmake.org/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளமுடியும்

3.3

 இவ்விரு கருவிகளையும் பயன்படுத்தி நமக்கேற்ற மென்பொருளை உருவாக்கிடுவதற்கு முதலில் தனியாக இதற்கென ஒரு கோப்பகத்தை உருவாக்கிகொள்க

பின் CmakeLists.txtன்ற கோப்பினை எம்எஸ் விண்டோ பயன்படுத்துவதாயின் visual studio workspace -ல் உருவாக்கிகொள்க

அதன்பின்.Cxxஎன்ற பின்னொட்டுடன் கூடிய ஒருமூலகோப்பினை உருவாக்கிடுக

பின் Cmakeஐ ஒருபுதியபெயரின் கோப்பகத்தில் கட்டமைவுசெய்திடுக

அதன்பின்  நமக்கத்தேவையான மருத்துவத்துறையின் மென்பொருளை உருவாக்கிடுக

இறுதியாக அதனை Exe கோப்பாக திரட்டுதல்(compile) செய்து செயற்படுத்துக

ஆரக்கில் மெய்நிகர் கணினியின் பெட்டி(oracle vm virtual box)

2.1

தற்போது நாமனைவரும் நம்முடைய அன்றாட அலுவலக பணிகளின்போது ஒன்றிற்குமேற்பட்ட இயக்கமுறைமைகளில் அனுகி பணிபுரியவேண்டிய சூழல் ஏற்பட்டுவருகின்றது   அதற்காக நம்முடைய கணினியில் மெய்நிகர் கணினி என்ற அடிப்படையில் ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை கணினியின் ஒரே வன்தட்டில் வெவ்வேறு பகுதியில் நிறுவுகை செய்தபின் அவைகளை ஏதேனுமொன்றை மட்டுமே ஒருசமயத்தில் பயன்படுத்திடமுடியும் என்ற நிலை உள்ளது  அதனால் ஏராளமான கணினியின் வளங்களை படன்படுத்திடமுடியாமல் வீனாகின்றன.இதனை தவிர்த்து ஒரே சமயத்தில் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஒன்றிற்கு மேற்பட்ட விண்டோ, லினக்ஸ், மேக்ஸ், சோலாரிஸ் போன்ற இயக்கமுறைமைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு செயல்படுத்திட உதவுவதுதான இந்த oracle vm virtual box ஆகும்

இதனை இண்டெல் அல்லது ஏஎம்டி அடிப்படையில் இயங்கும் அனைத்து கணினிகளிலும்  32வகையான மெய்நிகர் சிபியுவரை இயங்கிடுமாறு நிறுவுகை செய்து  செயல்படுத்திட முடியும் அதனைதொடர்ந்து அவைகளில் தனித்தனியாக செயல்படும் யூஎஸ்பி சாதனங்களை இணைத்து அதற்கென தனியான இயக்கிகள் இல்லாமலேயே இதிலுள்ள   யூஎஸ்பி கட்டுபாட்டாளர் மூலம்  செயல்படுத்திடமுடியும்

அவ்வாறே கணினித்திரைகளும் ஒவ்வொரு மெய்நிகர் இயக்கமுறைமைக்கேற்றவகையில் திரைத்துல்லியத்தை மாற்றியமைத்துகொள்கின்றது

இதனை https://www.virtualbox.org என்ற தளத்திற்கு சென்று நமக்குத்தேவையான வகையை தெரிவுசெய்து பதிவிறக்கம்செய்தபின் நிறுவுகைசெய்து இயக்குக பின் இடதுபுறமூலையில் உள்ள newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் New virtual machine என்ற வழிகாட்டி திரை தோன்றிடும் அதில் உள்ள வாய்ப்புகளில் நாம்விரும்பும் இயக்கமுறைமையை அதற்கான பட்டியலிலிருந்து தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பின்னர் நம்முடைய கணினியில் உள்ள ரேமின் அளவை மெய்நிகர் கணினியில்  நிறுவுகை  செய்யவிருக்கும் இயக்கமுறைமைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து அமைத்து  கொள்க

பிறகு இந்த இயக்கமுறைமை செயல்படுவதற்கான  புதிய வன்தட்டினை  இணைத்து கொள்வது அல்லது தற்போது கணினியில் உள்ள வன்தட்டினையே புதியதற்கும் குறைந்தது 8ஜிபி அளவுஒதுக்கிகொள்வது ஆகிய இரு வாய்ப்புகளில் நம் விருப்பபடி தெரிவுசெய்துகொண்டு create new hard disc என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் Virtual Disk Image(VDI),Virtual Machine Disk(VMD),Virtual hard Disk(VHD),Parallels Hard Disks(HDD) ஆகிய நான்குவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து(முதல் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது) கொள்க

பின் Dynamically allocated என்பதை தெரிவுசெய்து கொள்க இதன்மூலம் மெய்நிகர் கணினிசெயல்படும்போது மட்டும் தேவைப்படும் வன்தட்டு நினைகத்தை எடுத்துகொள்ளும் செயல்படாதபோது வன்தட்டு நினைவகத்தை ஆக்கிரமிப்பு செய்துகொள்ளாது

அடுத்து தோன்றிடும் திரையில் இதுவரையில் செய்தவந்த செயலின் விவரங்களை சுருக்கமாக காண்பிக்கும்   உடன் create disk என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின் create virtual machine  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் virtual box manager  என்ற முதல் திரைக்கு செல்லும் அங்கு நாம் உருவாக்கிய முதல் மெய்நிகர் கணினிஇருப்பதை காணலாம் அதில் Settings என்ற தாவியின் திரையில் தேவையான அமைவிற்கான வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலை முடிவிற்கு கொண்டுவருக.

பின் இதனுடைய start  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் நாம் நிறுவுகை செய்யவிரும்பும் இயக்கமுறைமைக்கான குறுவட்டினை  அதற்கான வாயிலில் உள்நுழைவுசெய்து வழக்கமான இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதை போன்றே நிறுவுகை செய்து கொள்க

இவ்வாறே ஒன்றிற்கு மேற்பட்ட மெய்நிகர்கணினியையும் அதில் தேவையான இயக்கமுறைமைகளையும் நிறுவகை செய்து ஒரேசமயத்தில் அனைத்து இயக்கமுறைமைகளையும் செயல்படுத்தி பயன்படுத்திகொள்க

 

ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா-தொடர்-பகுதி-77-

ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ்  என்பது ஓப்பன் ஆஃபிஸில் கணித சமன்பாடுகளை எழுதி,பதிப்பித்திட உதவும் ஒரு துனை பயன்பாடாகும் அதாவது இது பெரும்பாலும் ஒரு உரை ஆவணத்தில் மட்டுமல்லாது மற்றவகையான ஆவணங்களிலும் அல்லது கணிதத்திற்கென்றே உள்ள தனிப்பட்ட ஆவணங்களிலும் கணிதசமன்பாடுகளின் பதிப்பானாக செயல்படுகின்றது  இதனை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் உட்பகுதியில் பயன்படுத்தினால் அது ஒரு தனிப்பட்ட பொருளாக உருவாகிவிடுகின்றது

இதனை  செயல்படுத்திட வழக்கமான நம்முடைய உரை ஆவணமான ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Object => Formula =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் கணிதசமன்பாடுகளின் பதிப்பு திரையானது கீழ்பகுதியில் உருவாகி அதனோடுகூடவே  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையும் (படம்-1) தோன்றிடும்

77-1

தனியாக வேண்டுமெனில் ஓப்பன் ஆஃபிஸின் ஆரம்பத்திரையில் Formula என்ற வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக   உடன் untitiled1-open office.org maths  என்ற கணிதசமன்பாடுகளின் பதிப்பு திரையானது  உருவாகி அதனோடுகூடவே  Elements என்ற மிதக்கும்  சிறுசாளரத்திரையும் (படம்-2)தோன்றிடும்

77-2

அதுமட்டுமல்லாது அவ்வாவணத்தில்  கணித வாய்ப்பாட்டினை உருவாக்குவதற்கான ஒருசிறிய பெட்டி ஒன்றும் தோன்றிடும்   அதில் இந்த கணிதபதிப்பு திரையானது கணிதசமன்பாடுகளை பிரதிபலிக்ககூடியஒரு மார்க்அப் மொழியை பயன்படுத்தி கொள்கின்றது

உதாரணமாக %beta என்பது கிரேக்க எழுத்தான  beta ( B ).என்பதை உருவாக்குகின்றது  அதாவது இந்த மார்க் அப் மொழியானது ஆங்கிலத்தில்   a over b   என்பது   a/b  என்பதை குறிப்பதாக கொண்டு அதற்கேற்ப திரையில் கணிதசமன்பாட்டினை (மதிப்பை) பிரதிபலிக்கசெய்யும்

இந்த  கணித சமன்பாட்டின் பதிப்புத்திரையில்  பின்வரும் மூன்று வழிகளில் ஒரு கணித சமன்பாட்டினை உருவாக்கிட முடியும்

1 Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையில் உள்ள நாம் உருவாக்கிட விரும்பும் கணிதசமன்பாட்டிற்கேற்ற குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்

2   திரையின் கீழ்பகுதியிலுள்ள கணிதசமன்பாடு பதிப்புத்திரையில்  இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை  சொடுக்கியவுடன் விரியும் சூழ்நிலை பட்டியிள் உள்ளீடு செய்யவிரும்பும் கணித சமன்பாட்டிற்கு தேவையான குறியீட்டின் வகையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் துனை பட்டியில் தேவையான  குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்

3  மார்க்அப் மொழியின் சிறு பெட்டியில் கணித வாய்ப்பாட்டினை நேரடியாக  உள்ளீடு செய்தல்

1 Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் வாயிலாக  5×4 என்றவொரு கணித சமன்பாட்டினை உருவாக்குதல்

77-3

.பொதுவாக இந்த Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையானது  குறியீட்டுகளின் வகை(categories) என்ற மேல்பகுதியும் நாம் தெரிவுசெய்வதற்கேற்ற தொடர்புடைய குறியீடுகள்  (Symbols)உள்ள கீழ்பகுதியும்(படம்-3) சேர்ந்ததாகும்   இந்த Elements என்ற மிதக்கும் சிறுசாளரத் திரையை மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Elements=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக மறையவும் தோன்றிடவும் செய்யமுடியும்

77-4

இந்த  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் மேல்பகுதியான குறியீட்டுகளின் வகை(categories)களில் இயல்புநிலையில் unary/binary operators என்பது தெரிவு செய்யப் பட்டிருக்கும் தேவையெனில் நாம் விரும்பும் வேறு வகையை தெரிவுசெய்தவுடன்  தொடர்புடைய குறியீடுகளானது    குறியீடுகள்  (Symbols)உள்ள கீழ்பகுதியில் தோன்றிடும் பின் கீழ்பகுதியில்  multiplication என்றவாறு(படம்-3) அல்லது நாம் விரும்பும் கணித குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்   திரையின் கீழ் பகுதியிலுள்ள கணிதபதிப்புத்திரையில்  <?> times <?>  என்றவாறு மார்க் மொழியும்  மேலே உரைஆவணத்திரையில்   × என்றவாறு  சிறு பெட்டியும் (படம்-4)தோன்றிடும்  கணிதபதிப்புத்திரையில்  <?>  என்பவைகளில் தேவையான எண்களை உள்ளீடு செய்க உடன்அந்த மதிப்புகள் மேலே உரையாவணத்தில் பெட்டிக்கு பதிலாக(படம்-4) பிரதிபலிப்பதை காணலாம்

கணித வாய்ப்பாட்டில்பயன்படுத்தப்படுகின்ற  ( α ,β ,µ )என்பன போன்ற  கிரேக்க எழுத்துகள்   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையிலோ அல்லது வலதுபுறம் சொடுக்குவதன்மூலம் விரியும் குறுக்குவழிபட்டியிலோ  இருக்காது  ஆயினும் இந்த மார்க் அப்  மொழிப் பெட்டியில் %என்ற குறியீட்டினை உள்ளீடுசெய்தபின் தொடர்ந்து ஆங்கிலத்தின் சிறிய எழுத்தில் அல்லது ஆங்கிலத்தின்பெரிய எழுத்துகளில்  %alpha என உள்ளீடு செய்தால் α என்றும் %ALPHAஎனஉள்ளீடுசெய்தால்  A என்றும் தொடர்புடைய கிரேக்ககுறியீடுகள் தோன்றிடும்

இவ்வாறு தட்டச்சு செய்வதற்கு கடினமாக இருந்தால் மேலே கட்டளைபட்டையில் Tools => Catalog=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும்  Symbols என்ற உரையாடல் பெட்டியில் symbol set என்பதன் கீழுள்ள கீழிறங்கு பெட்டியில் Greek என்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் (படம்-5)பட்டியலில் தேவையான கிரேக்க குறியீட்டினை தெரிவுசெய்து insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

77-5

கிரேக்க எழுத்தான பை(pi.)யின் மதிப்பை உள்ளீடுசெய்தல்

படிமுறை-1  %என்ற குறியீட்டினையும் தொடர்ந்து  piஎன உள்ளீடுசெய்க உடன்  என்ற கிரேக்ககுறியீடு திரையில் பிரதிபலிக்கும்

படிமுறை-2 மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Elements=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையை தோன்றசெய்க

படிமுறை-3 = என்பது  உறவுக்குறியீடாகும் அதனால்   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் மேல்பகுதியிலுள்ள  Relationsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-4 பிறகு   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் கீழ்பகுதியிலுள்ள  a=b என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-5  உடன் கணித வாய்ப்பாட்டின் பதிப்புத்திரையானது %pi<?> simeq <?>. என்றவாறு பிரதிபலிக்கும்

படிமுறை-6 அதிலுள்ள  <?>என்ற மார்க்அப்மொழி குறியீடுகளை நீக்கம் செய்திடுக

படிமுறை-7 பின் இந்த வாய்ப்பாட்டின் இறுதியில் 3.14159   என்றவாறு மதிப்பை உள்ளீடு செய்க உடன்   உரைபதிப்புத்திரையில்  ≃3.14159 என்றவாறு (படம்–6 )பிரதிபலிப்பதை காணலாம்

77-6

.திறமூல மென்பொருட்களை பயன்படுத்தி நம்முடைய உற்பத்தி திறனை மேம்படுத்தமுடியும்

உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், உற்பத்தி திறனை மேம்படுத்துதல் என்று அடிக்கடி கூறுவதை  கேள்விபட்டிருக்கின்றோம் ஆயினும்  உற்பத்தி நிறுவனம் மட்டுமல்லாது சேவை நிறுவனங்களில் கூட அந்நிறுவனங்களின் அனைத்து செயல்களுக்கும் கணினியை பயன்படுத்துமாறு மிகமுக்கியமாக தகவல்தொடர்புதுறையில் பணிபுரிபவர்களின்  கணினிமூலம் தட்டச்ச செய்யும் பணியை வேகபடுத்தி  அவைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தமுடியும்

1இவ்வாறு  தகவல்தொடர்புதுறையில்  பணிபுரிபவர்கள் தங்களுடைய உற்பத்தி திறனை மேம்படுத்திட PDF creatorஎன்ற கருவியை பயன்படுத்திகொள்ளமுடியும்  அதாவது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் அலுவலக பணிக்காக எம்எஸ் ஆஃபிஸை பயன்படுத்தி வருகி்ன்றன அதில் எந்தவொரு ஆவணத்தையும்  பிடிஎஃப் வடிவத்திற்கு உருமாற்றம் செய்திடுகின்றது ஆனால் அதனை கடவுச்சொற்களுடன் மட்டுமே திறந்து படிக்கமுடியும் என்றவாறு இதன்மூலம் செய்யமுடியாது அதற்கு வேறுநிறுவனத்தின் மென்பொருளை  ஏராளமான பணம் செலவிட்டு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது அதற்குபதிலாக இந்த PDF creatorஎன்ற  திறமூல பயன்பாடு செலவில்லவாமல் கிடைக்கி்றது இதனை http://www.pdfforge.org/ என்ற இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து  நிறுவியபின் இதனை இயக்கியவுடன் தோன்றிடும் திரையில்  தேவையான எம்எஸ் ஆஃபிஸின் ஆவனங்கள் அல்லது ஹெச்டிஎம்எல் ஆவணங்களைகூட தெரிவுசெய்தபின்னர் அச்சிடவா ,பிடிஎஃப் ஆவனமாக உருவாக்கிடவா என்ற வாய்ப்புகளில் இரண்டாவது வாய்ப்பை தெரிவுசெய்து convert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் கடவுச்சொற்களுடன் மட்டுமே படிக்கமுடிகின்ற பிடிஎஃப் கோப்பாக உருவாக்கிவிடுகின்றது

77-1-1

  இரண்டாவதாக wikki pad என்ற கருவியானது  கட்டுரைகள் வலைபூக்கள் போன்றவைகளை எம்எஸ் வேர்டிற்கு பதிலாக ஒரு நோட்பேடு போன்று ஆனால் அதைவிட கூடுதலாக இடையிடையே படங்களை அட்டவணைகளை எளிதாக அடுக்கி உள்ளிணைத்திடவும் ஆவணங்களை வரிசைகிரமமாக அடுக்கி பாதுகாத்திடவும் நாம்உருவாக்கிடும் பக்கங்களை எத்தனைமுறை வேண்டுமானாலும் திருத்தி எழுதிடவும்  இலக்கணபிழை எழுத்துபிழை போன்றவைகளை சரிபார்த்திடவும் அனுமதிக்கின்றது  இதனை பற்றி மேலும் விவரமறிந்து கொள்ள http://wikipad.sourceforge.net/ என்ற இணையபக்கத்திற்கு செல்க

77-1-2

 மூன்றாவதாக நாம் புத்தகங்களை படிக்கும்பும்போதும்  ,பயிற்சியின்போதும் முக்கியமான தகவல்களை நினைவுக்குறிப்புகளாக குறித்து வைத்துகொண்டபின் பின்வருங்காலங்களில் அதனை நினைவுபடுத்தி கொள்வதற்காக பயன்படுத்திகொள்ளமுடியும் அவ்வாறான நினைவுக்குறிப்புகளை உருவாக்கி பாதுகாத்திட free mind என்ற  திறமூல பயன்பாடு பயனுள்ளதாக அமைகின்றது சுட்டியையும் விசைப்பலகையையும் மாற்றி மாற்றி பயன்படுத்தாமல் அனைத்து செயல்களையும் விசைப்பலகையின்மூலமாக மட்டுமே அந்தந்த செயல்களுக்கு என ஒதுக்கீடுசெய்த விசைகளை பயன்படுத்தி மிகவிரைவாக  நினைவுக்குறிப்புகளை உருவாக்கி  PNG வடிவத்தில் உருவபடக்கோப்பாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்  இதன்மூலம் முடியும்  இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள http://www.freeemind.sourceforge.net/ என்ற இணையபக்கத்திற்கு செல்க

 77-1-3

 நான்காவதாக நமக்குதேவைப்படும் மிகமுக்கியமான பயன்பாடுகளின் மென்பொருட்களனைத்தையும் முதலில் கணினியினுடைய வன்தட்டுகளில் அவற்றை நிறுவுகை செய்தபின் மட்டுமே பயன்படுத்திட முடியும் என்ற நிலைஉள்ளது இதனால் இவவாறான பயன்பாடுகளை தொடர்புடைய இணையபக்கத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் சென்று பதிவிறக்கம் செய்யவேண்டும் அல்லது அவைகளை தனியான குறுவட்டுகளில் பதிவுசெய்து  எடுத்து சென்று பயன்படுத்திட வேண்டும்  அதற்கு பதிலாக  கையடக்க பென்ட்ரைவ்களிலேயே நிறுவிக்கொண்டு தேவைப்படும்போது கணினியில் இந்த பென்ட்ரைவை மட்டும் பொருத்தி பயன்படுத்திகொள்வது எளிதானது காலவிரையத்தை தவிர்க்ககூடிய செயலாகும் இதற்காக http://www.portableapplication.com என்ற இணையதளத்திற்கு சென்று நமக்கு தேவையான பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து நம்முடைய பென்ட்ரைவ்களில் நிறுவிக்கொண்டு பின்னர் தேவைப்படும்போது இதனை பயன்படுத்தி கொள்க.

77-1-4

 ஐந்தாவதாக  கணினியில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் ஆர்வமிகுதியால் காலநேரம் பார்க்காது தொடர்ந்து  ஒரேநிலையில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டே இருப்பார்கள் அதனால் அவ்வாறானவர்களுக்கு ஏராளமான வகையில் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்த்திடுவதற்காக அவ்வாறானவர்கள் workrave என்ற பயன்பாட்டினை http://www.workrave.org/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின் தேவையான கட்டமைவை செய்து கொண்டால் குறிப்பிட்ட காலஇடைவெளியில் விசைப்பலகையின் அல்லது சுட்டியின் இயக்கத்தை நிறுத்தி வைத்து நமக்கு ஓய்வு அளிக்க செய்யும்

77-1-5

Previous Older Entries