ஓப்பன் ஆஃபிஸ்-கால்க்-42டேட்டாபைலட் தொடர்ச்சி

சென்றதொடரில் கூறியவாறு செயல்படுத்தி அட்டவணையின் தரவுகளை டேட்டா பைலட்டாக உருமாற்றம் செய்து பெற்றாலும் ஒருசில தரவுகள் மட்டும் நமக்கு புரியும்படியாக இருககாது உதாரணமாக கிமீ வீதம் வாடகை (Kms ,rate)அட்டவணையை டேட்டாபைலட்டாக  உருமாற்றம் செய்தால்  நமக்கு  பயனேதுமில்லை  தொடர்ந்து அதன் நெடுவரிசையிலோ அல்லது கிடைவரிசையிலோ குழுவாக உருமாற்றம் செய்தால் மட்டுமே புரிந்துகொள்ள ஏதுவாக இரு்ககும் அதற்காக அந்த டேட்டாபைலட்டில் இடம் சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline =>Group =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துகஅல்லது விசைப்பலகையிலுள்ள F12 என்ற விசையை அழுத்துக. உடன் Grouping என்ற (படம்-42-1)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் இயல்புநிலையில இருப்பதை ஏற்றுக்கொண்டு Group by என்ற உரைபெட்டியில் மட்டும் 10 என குறிப்பி்டடு ok என்ற பொத்தானை சொடுக்குக  உடன் டேட்டாபைலட்டானது1-10 11-20 21-30  … 71-80 என்றவாறு குழுவாக மாறிவிடும்  
                                                                      படம்-42-1
 டேட்டாபைலட்டின் தரவின் வகைகள் உரையாக இருந்தால்இவ்வாறு தானாகவே குறிப்பிட்ட இடைவெளியில் குழுவாக உருவாகாது அந்நிலையில் எந்தெந்த தரவின் வகையை எந்தெந்த குழுவில் சேர்க்கவேண்டுமென நாமே வரையறுக்கவேண்டும் அவ்வாறான உரைகளில் ஓரே குழுவின் கீழ்வகைபடுத்தவேண்டியவைகளை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline => Group => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள F12 என்ற விசையை அழுத்துக. உடன் Grouping என்ற (படம்-42-2)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில்Group by  என்பதன் கீழுள்ள தேவையான  வானொலிபொத்தானை தெரிவுசெய்துகொண்டுஇதற்கருகிலுள்ள உரைபெட்டியின் வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
                          (படம்-42-2)
 டேட்டாபைலட்டின் அட்டவணையில் இடம்சுட்டியைவைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Start என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Data Pilot என்ற உரையாடல்பெட்டியில் Layout என்பதன்கீழுள்ள  வரிசைபடுத்திட விழையும் புலத்தை தெரிவுசெய்து சுட்டியை இருமுறை சொடுக்குக உடன் விரியும் Data Field என்ற (படம்-42-3)உரையாடல்பெட்டியில்  Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Data Field Options என்ற உரையாட ல்பெட்டியில் sort by என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலின் வாய்ப்புகளை நாம்விரும்பிய வண்ணம் தெரிவுசெய்துகொண்டு ஏதேனும் தரவுகளை மறைக்க வேண்டுமெனில் hide items  என்பதன்கீழுள்ள வாய்ப்புகளை நாம்விரும்பிய வண்ணம் தெரிவுசெய்துகொண்டுok என்ற பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் தரவுபுலத்தில்(datafield) உள்கூடுதல்(subtotal) வேண்டுமெனில்  data fieldஐ  தெரிவுசெய்து சுட்டியை இருமுறை சொடுக்குக உடன்Data Field  என்ற (படம்-42-3)உரையாடல்பெட்டியில்subtotalஎன்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
                                                               படம்-42-3
   இவ்வாறு குழுவாக வரிசைபடுத்தபட்ட தரவுகளில் விவரம் எதுவும் தேவையெனில்
டேட்டாபைலட்டின் அட்டவணையில் இடம்சுட்டியைவைத்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline => Show Details=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Show Details. என்ற (படம்-42-4)உரையாடல்பெட்டியில் தேவையான வகையை தெரிவுசெய்துok என்ற பொத்தானை சொடுக்குக
                                                                  படம்-42-4
 இந்த விவரம் மறைவதற்கு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline => Hide Details =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
 குறிப்பிட்ட நெடுவரிசையின் தரவுகள் நாம் குறிப்பிடும்நிபந்தனைகளுக்கு உட்பட்டு வடிகட்டி பிரதிபலி்க்கசெய்வதற்காக டேட்டாபைலட்டின் மேலே வலதுபுறமூலையிலுள்ள Filter என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Filter என்ற(படம்-42-5) உரையாடல்பெட்டியில் வடிகட்டவிரும்பும்  புலவகையையும் அதற்கான நிபந்தனைகளையும் தெரிவுசெய்துok என்ற பொத்தானை சொடுக்குக
                                                                   படம்-42-5
 இவ்வாறு டேட்டா பைலட் உருவாக்கிய பிறகு இதற்கான அட்டவணையின் தரவுகளை மாறுதல் செய்தால் அம்மாறுதலும் இந்த டேட்டா பைலட்டிலும் கொண்டுவருவதற்கு  
அவ்வப்போது மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => DataPilot => Refresh=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                          படம்-42-6
இவ்வாறுடேட்டா பைலட்டில் பெறபட்ட தரவுகளை மற்ற கணக்கீடுகளுக்கு பயன்படுத்துவதற்கு GETPIVOTDATA என்ற செயலி பயன்படுகின்றது =GETPIVOTDATA(‘Sum – விற்பனைகூடுதல் ரூ.’;F79) என்றவாறு(படம்-42-6) சூத்திரத்தை பயன்படுத்தி தேவையான மண்டலங்களின் மொத்தவிற்பனையைமட்டும் பெறுவதற்கு f78,f79,f80,f81 என்றவாறு செல்எண்களை மட்டும் நமக்குத்தேவையானவாறு குறிப்பிட்டால் போதும்.

மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களின்குறியீடுகளைநீக்கம் செய்தல்

நமக்கு மற்றவர்களிடமிடருந்து பரிந்துரைத்து வரும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களில்  ஒவ்வொரு வரியிலும் > > என்பன போன்ற குறியீடுகள் காட்சியளித்து நம்மை எரிச்சலுறச்செய்கின்றன இதனை  தவிர்க்கமுடியுமா என்றால் ஆம் பின்வரும் வழிமுறைகளை பின்னபற்றினால் முடியும்

முதலில் மின்னஞ்சலில் உள்ள இவ்வாறான உள்ளடக்கத்தை நகலெடுத்து எம்எஸ் நோட்பேடு அல்லது வேர்டில் ஒட்டி கொள்க பின்னர் Ctrl + F  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் find & Replace என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில்  தோன்றும் அதில்  search for  என்ற பெட்டியில் இந்த > > குறியீட்டை உள்ளீடு செய்துகொள்க பின்னர் Replace withஎன்ற பெட்டியில் காலியாக விட்டிடுக அதன்பின்னர்  Replace All  என்ற பொத்தானை சொடுக்குக உடன் அனைத்து > > குறியீடுகளும் நீக்கம் செய்யப்பட்டுவிடும்  இப்போது மின்னஞ்சலின் உரை படிப்பதற்கு நன்றாக இருக்கும்

> >
> >

ஹிட் என்றால் என்ன?

பலரும் இணையத்திலிருக்கும் இணையதளங்களை பற்றி விவாதிக்கும்போது குறிப்பிட்ட தளத்தினுடைய ஹிட் எண்ணிக்கை எவ்வளவு? என விவாதிப்பதை காணலாம்  சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் நாம் உள்நுழைவு செய்யும்போது அங்கு நிறுவியுள்ள கணக்கிடும் பொறியானது இது வரையில் இந்த தளத்தை எத்தனைபேர் பார்வை யிட்டுள்ளனர் என்று திரையில் பிரதிபலிப்பதையே தவறாக அதுதான்  அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர்.
பொதுவாக  பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாகவும். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடும் எனவும்  தவறாகவே எண்ணுகிறார்கள்.

இவ்வாறு இணையத்தில் உலாவரும் அனைவருமே  இந்த ஹிட்என்றசொல் குறித்து தவறான கருத்துகளையே கொண்டுள்ளனர் என்று கூறலாம். இது உண்மை அன்று சரியான கணிப்பும் அன்று. அதாவது “ஹிட்” என்பது கணினியிலிருந்து ஒரு வெப் செர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும். உதாரணமாக ஒரு இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் மூன்று படங்கள் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற நம்முடைய உலாவி இந்த மூன்று படங்களுக்கும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அந்த தளத்தின் எச்.டி.எம்.எல்லுக்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் நான்கு “ஹிட்டு” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் பட்டுள்ளன என கொள்ளலாம்.
இவ்வாறே நாமும் ஒரு தேடுபொறியின் மூலம்  நம்முடைய தேடுதல் கோரிக்கையை அனுப்பி அதற்கான முடிவுகள் நமக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே இணைய உலாவியின் மூலம் நாம்  தேடுதல் செய்யும்போது 100 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் நமக்கு 100 ஹிட்டுகள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுவே “ஹிட்” என்பதன் உண்மையான பொருள் ஆகும்.

எம்எஸ் வேர்டின் உரைகளின் வரிகளில் எண்களைச் சேர்க்க

    உரைஆவணத்தில் குறிப்பிட்ட வரியிலுள்ள சொல்லைக் குறிப்பிட பத்தி 1ல் 4 ஆவது வரியில் நான்காவது சொல்என்றவாறு சொல்ல வேண்டிய மிகசிரமமான நிலையில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு எண்ணை ஒதுக்கீடுசெய்துஅந்த எண்ணின் அடிப்படையில் ஏதேனுமொரு சொல்லை மிகஎளிதாக தேடலாம் அல்லவா?  ஆயினும் ஒரு உரை ஆவணத்தில் உரையின் வரிகளுக்கு எவ்வாறு எண்களை அமைப்பது? அந்த ஆவணத்தைத் தயாரிக்கும் போதே வரிகளுக்கமுன்புறம்எண்களை  அமைக்க முடியாது.ஏனெனில் அவ்வாறு ஒவ்வொரு வரிக்கு முன்புறமும் எண்ணை அமைத்திருந்தால் ஏதாவது சொல்லை திருத்தும் போது அந்த வரிகளின்எண் முன் பின் செல்ல வாய்ப்புண்டு. இதற்குப் பதிலாக ஒருஆவணத்தில்தானாகவே வரிகளில் எண்களை அமைத்திடவும் தேவையற்ற இடங்களில் நீக்கவும் தேவையானவசதி எம்எஸ் வேர்டு பயன்பாட்டில் செய்யப்பட்டுள்ளது.

.இதற்காக முதலில் மேலே கட்டளைபட்டையிலுள்ள File=>Page Setup=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. பின்னர் விரியும் Page Setup  என்ற (படம்-1)உரையாடல் பெட்டியின் Layout  என்னும் தாவிதிரையை தோன்றசெய்க அதில்Line numbers என்னும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Line numbers என்ற உரையாடல் பெட்டியில்Add line numbering என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்க. பின்னர் Numbering என்பதன் கீழுள்ளrestart numbering after each page, start at a particular number,போன்றவைகளின் வானொலி பொத்தான்களில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானையும் Page Setup  என்ற உரையாடல் பெட்டியில் okஎன்ற பொத்தானையும்சொடுககுக.
                                                                                                                                                                                                              படம்-1

உடன் ஆவணத்தின் உரைகளின் வரிகளில் எண்கள் இருப்பதை காணலாம். இதன்பின்னர் இந்த ஆவணத்தை திருத்தம்  செய்திடலாம்.  அதனால் ஆவணத்தின் உரைகளின் வரிகளில் எண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

ஆவணத்தின் குறிப்பிட்ட பத்திகளில் மட்டும் உள்ள  எண்களை நீக்க விரும்பினால்  அவ்வாறான பகுதியை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின் சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Paragraphஎன்பதனைத் தேர்ந்து எடுக்கவும் பின்னர் விரியும் Paragraph என்ற (படம்-2)உரையாடல் பெட்டியின் Line and Page Breaks என்ற தாவியின் திரையில்Suppress Line Numbers என்ற தேர்வுசெய் பெட்டி தெரிவுசெய்திருந்தால் அதனை நீ்க்கம் செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக..

                                                                                                                                                              படம்-2

  நாம் பயன்படுத்துவது ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டராக இருந்தால் அதில் இதேபோன்று உரைகளின் வரிகளில் எண்களை உருவாக்குவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Line Numbering=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக .உடன் விரியும்  Line Numberingஎன்ற உரையாடல் பெட்டியில் Show numbering என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு  தேவையான மற்ற வாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

    குறிப்பிட்ட பத்தியில்மட்டும் உரைகளின் வரிகளில் எண்களை உருவாக்குவதற்கு முதலில் குறிப்பிட்ட பத்தியை மட்டும் தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள format=> paragraphs=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.உடன் விரியும்paragraphs என்ற (படம்-3)உரையாடல் பெட்டியின் outline numbering என்ற தாவியின் திரையில்  line numbering என்பதன் கீழுள்ளInclude this paragraph in line numbering , restart at this paragraph ஆகிய இரு வாய்ப்புகளின் தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் அந்த பத்தியின் உரைகளின் வரிகளில் எண்கள் இருப்பதை காணலாம்

                                                                                                                                                                                                                  படம்-10

எம்எஸ் வேர்டின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

எம்எஸ் வேர்டில்  வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ண எழுத்துக்களுடன் தொடர்ந்து நெடு நேரம் பணி புரிவதால் பலர் தங்களுடைய கண்களின் பார்வைத்திறனில் மாற்றம் இருப்பதாகச் சொல்வதை கேட்டிருக்கலாம்.ஆனால் கணினியில் அனைத்து  பயன்பாடுகளும் வண்ணமயமாக இருக்கும்போது இதைமட்டும் ஏன் இன்னும் கருப்பு வெள்ளையில் பயன்படுத்தி கொண்டிருப்பது என ஆதங்கபடுவர் வேறுசிலர்   கவலையே படாதீர்கள் இதற்கு தீர்வாக பின்வரும் மாற்று வழி ஒன்று உள்ளது. அதனை பின்பற்றினால் மட்டும் போதும்.

மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools=>Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன்விரியும் Options  என்ற (படம்-1)உரையாடல் பெட்டியின் General என்னும் தாவியின் திரையில் General Options  என்பதன் கீழுள்ளBlue background, white text  என்றதேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் எம்எஸ் வேர்டின் ஆவணமானது நீலவண்ண பின்னனியில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களுடன் மாறியமைந்து விடும்.

                                                                                                                                                                                                                                படம்-1

நாம் பயன்படுத்துவது ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டராக இருந்தால்  மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools=>Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன்விரியும் Options-open office.org  என்ற (படம்-2)உரையாடல் பெட்டியின் இடதுபுறம் open office.org என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும் இடதுபுற பட்டியில் appearance என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் வலதுபுறம்General என்பதன் கீழுள்ளDocument background என்பதின் கீழிறங்கு பட்டியலை திறந்து தேவையான வண்ணத்தையும் அவ்வாறே fonts color என்பதின் கீழிறங்கு பட்டியலை திறந்து தேவையான வண்ணத்தையும் இறுதியாக  ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணமானது நீலவண்ண பின்னனியில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களுடன் மாறியமைந்து விடும்.

                                                                                                                                                                                                                         படம்-2

விண்டோ-7 ,விஸ்டாஆகியவற்றில் முன்காட்சி பலகத்தை தவிர்ப்பது எவ்வாறு

 

   விண்டோ-7 ,விஸ்டா ஆகியவற்றில் எதையாவது தேடினோமெனில் அதுதொடர்பான சாளரத்தின் வலதுபுறம் முன்காட்சிபலகம்( Preview Pane) என்றபகுதியில் தோன்றிடும் அதனை தவிர்த்திட ஏதேனுமொரு குறும்படத்தின்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை சொடுக்கு உடன் விரியும் சாளரத்திரையில் Organize, Views,  Burn. ஆகிய மூன்று வாய்ப்புகளின் பொத்தான்கள் இருக்கின்றன  அவற்றுள் Organize என்றவாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் Layout என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Layout என்ற சிறு பட்டியலில் Preview Pane என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய தேடுதலின் விவரமுன் காட்சி பலகம் நீ்க்கபட்டுவிடும்

புதியவர்களுக்கு SQLவழிகாட்டி

கட்டமைக்கப்பட்ட வினவு மொழி (Structured Query Language) என்பதன் சுருக்குபெயரே SQL ஆகும் இது தரவுதளத்திலிருக்கும் பல்வேறு அட்டவணைகளிலுள்ள தரவுகளை அணுகிடவும் அதனை கணக்கீடு செய்யவும் பயன்படுத்தபடும் ஒரு நிரல் தொடர் மொழியாகும் இது ANSI (American National Standards Institute)ஆல் கட்டமைக்கபட்ட திட்டவட்டமான செந்தர கட்டளைகளைகளின் தொகுப்பாகும் அதாவது செர்வரின் பதிப்பு எதுவாக இருந்தாலும் அதனை நடைமுறைபடுத்திடும் வழிமுறைமட்டும் ஒருகுறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கு கட்டுபட்டதாகும்

மிக சுருகக்கமாக கூறுவதெனில் SQL என்பது தரவு தளங்களையும், அட்டவணைகளையும்,தரவுதளத்தின் வழிமுறைகளையும் உருவாக்கிட உதவுமொரு கருவியாகும். மேலும் இது ஒரு தரவுதளத்தின் வினாவை எழுப்பவும் ஆவணங்களை உள்ளிணைக்கவும் ஏற்கனவே தரவுதளத்தில் இருக்கும்ஆவணங்களை நிகழ்நிலை படுத்திடவும் ஏற்கனவே தரவுதளத்தில் இருக்கும்ஆவணங்களை மீளபெறவும் பயன்படு கின்றது ஏற்கனவே தரவுதளத்தில் இருக்கும்ஆவணங்களை இந்த SQLஐ கொண்டு கணக்கீடு செய்து வரிசைபடுத்திடSQL server அல்லது அதற்கு இணையான RDBMS (relational database management system)ஆன MsAccess ,MySQL போன்றவை பயன்படுகின்றன சேவையாளர் பகுதிக்கு தேவையான உரைநிரல் மொழியானPHP , ASP ஆகியவையும் இணையபக்கங்களை உருவாக்கபயன்படும் CSS உடன்சேர்ந்த HTML மொழியும் இதற்காக நமக்கு தேவைப்படுகின்றன் உண்மையில் SQL-வாயிலாக   CREATE DATABASE dbname; என்றவாறு எளிதாக ஒரு ஒற்றைவரி கட்டளைமூலம் ஒரு தரவுதளத்தினை நம்மால் உருவாக்கிடமுடியும்

அதன் பின்னர் இத்தரவுதளத்தில்CREATE TABLE name( col1 datatype, col2 datatype, …); என்றவாறு மற்றொரு ஒற்றைவரி கட்டளைமூலம் தரவுகளை தேக்கிவைப்பதற்கான அட்டவணையையும் அதனுள் மிகஎளிதாக உருவாக்கிடமுடியும்இங்கு col1, col2ஆகியவை FirstName , LastName என்றவாறு பெயரை குறிப்பிடும் புலமாகும் இதன் தரவுவகை உரையாகவோ(TEXT) அல்லது முழுஎண்ணாகவோ (INTEGER) இருக்கும் அதுமட்டுமல்லாது  தேவையானால் நாள் (DATE)  நாணயமாக(CURRENSY) ஆகவும்  இதன் தரவுவகை இருக்கும்

இந்த அட்டவணை வேண்டாமெனில்.DROP TABLE User; என்றவாறு மற்றொரு ஒற்றைவரி கட்டளைமூலம் அட்டவணையை நீக்கம் செய்திடலாம்ஒரு அட்டவணையில் தரவுகளை உள்ளிணைக்க INSERT INTO target [(field1[, field2[, …]])] மாறுதல் செய்ய VALUES (value1[, value2[, ...]); என்பன போன்ற கட்டளைவரிகளை SQL-நமக்கு வழங்குகின்றது

MsExcel போன்று தரவுதளத்தின் வாடிக்கையாளரின் இடைமுகப்பாக செயல்படும் MsAccess or SQLite ஆகியவற்றில் நாமே முயன்று ஒரு அட்டவணைக்குள் தரவுகளை உள்ளீடு செய்யவும் நிகழ்நிலைபடுத்திடவும் இந்த SQL பயன்படுகின்றது 

SELECT StockNumber

FROM Prices

WHERE Price > 5

இந்த SQL கட்டளைவரிகளானது   சாதாரன ஆங்கிலமொழிபோன்று கட்டளை வரிகளை உள்ளீடுசெய்தால்  வரைகலைஇடமுகப்பான MsAccess or SQLite ஆகியவற்றின் கட்டளைகளாக மொழி(உரு) மாற்றம் செய்து புரிந்துகொண்டு செயல்படுகின்றது என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும் மேலும் இதில் FROM , from,  FRom,  frOM, என்றவாறு  பெரியஎழுத்து சின்ன எழுத்து என எப்படியிருந்தாலும்  வித்தியாசமெதுவுமில்லாமல் FROMஎன்றே புரிந்துகொள்ளும்

அவ்வாறே ஆங்கிலமொழியில் இரண்டு சொற்களை இணைப்பதுபோன்றே SELECT FirstName & ” ” & Lastname & ” works in the ” & Dept & ” department” AS Job

FROM User; என்றவாறு இதிலும் & என்ற குறியீட்டை கொண்டு இரண்டு சொற்களை இணைத்து பயன்படுத்தலாம் இங்கு இரண்டு உரைகளை இணைப்பதற்கு ஜாவாமொழியில் (“+”) என்ற  குறியீட்டை பயன்படுத்துவதை போன்று & என்ற குறியீடு பயன்படுத்த படுகின்றது மேலும் SQLமொழியை ஐயம்திரிபற தெளிவுபெற்று கற்றிட http://www.w3schools.com/sql/      என்ற வலைதளத்திற்கு சென்று  அறிந்துகொள்க

Previous Older Entries