ஃபயர்பேஸ்-தொடர்-18- ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸின் மேககணினி செய்திகள் தொடர்ச்சி செயலியை சேர்த்தல் (Adding Functionality)

இதற்காக MyAndroidFirebaseMsgService எனும் பெயரில்ஒரு புதிய ஜாவா இனத்தை உருவாக்குக அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக.இது FirebaseMessagingService ஐ நீட்டிக்கும் சேவையாகும். இது பின்புலத்தில் அனைத்து வகையான செய்தி கையாளுதல்களையும் செய்கிறது தொடர்ந்து அவை கிடைக்கும் போது புஷ் அறிவிப்பினை அனுப்புகிறது.
MyAndroidFirebaseMsgService
import android.app.NotificationManager;
import android.app.PendingIntent;
import android.content.Context;
import android.content.Intent;
import android.media.RingtoneManager;
import android.net.Uri;
import android.support.v4.app.NotificationCompat;
import android.util.Log;
import com.google.firebase.messaging.FirebaseMessagingService;
import com.google.firebase.messaging.RemoteMessage;
public class MyAndroidFirebaseMsgService extends FirebaseMessagingService {
private static final String TAG = “MyAndroidFCMService”;
@Override
public void onMessageReceived(RemoteMessage remoteMessage) {
//புகுபதிவு கேட்(Cat)டிற்கு தரவை பதிவு செய்க
Log.d(TAG, “From: ” + remoteMessage.getFrom());
Log.d(TAG, “Notification Message Body: ” + remoteMessage.getNotification().getBody());
//அறிவிப்பை உருவாக்குக
createNotification(remoteMessage.getNotification().getBody());
}
private void createNotification( String messageBody) {
Intent intent = new Intent( this , ResultActivity. class );
intent.addFlags(Intent.FLAG_ACTIVITY_CLEAR_TOP);
PendingIntent resultIntent = PendingIntent.getActivity( this , 0, intent,
PendingIntent.FLAG_ONE_SHOT);
Uri notificationSoundURI =
RingtoneManager.getDefaultUri(RingtoneManager.TYPE_NOTIFICATION);
NotificationCompat.Builder mNotificationBuilder = new NotificationCompat.Builder( this)
.setSmallIcon(R.mipmap.ic_launcher)
.setContentTitle(“Android Tutorial Point FCM Tutorial”)
.setContentText(messageBody)
.setAutoCancel( true )
.setSound(notificationSoundURI)
.setContentIntent(resultIntent);
NotificationManager notificationManager =
(NotificationManager) getSystemService(Context.NOTIFICATION_SERVICE);
notificationManager.notify(0, mNotificationBuilder.build());
}
}
onMessageReceived()எனும் செயலியை நாம் அழைத்தால் உடன் செய்திஅறிவிப்பு ஒன்றினை கிடைக்கப்பெறுவோம் இந்த செயலிக்குள் LogCatஎனும் முகப்புதிரைக்கு பூட்டிடும் செய்தியை பெறுவோம் தொடர்ந்து உரைச்செய்தியுடன் createNotification() எனும் செயலியை அழைத்திடுகின்றது இந்த createNotification() எனும் வழிமுறை படத்தில்காண்பித்துள்ளவாறு ஒருபுஷ் செய்திஅறிவிப்பொன்றை ஆண்ட்ராய்டு செய்திபகுதியில் உருவாக்குகின்றது

நாம் NotificationCompat.Builderஎன்பதை பயன்படுத்தி ஒரு புதிய செய்திஅறிவிப்பை இயல்புநிலை ஒலிசெய்தி அறிவிப்புடன் உருவாக்கிடலாம் தொடர்ந்து இணையத்திற்கு ResultActivityஎன்பதை கடத்தலாம் .
2. MyAndroidFirebaseInstanceIdService எனும் ஒரு ஜாவா இனத்தை உருவாக்கிடுக அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக இது ஃப்யர்பேஸின் தயார்நிலை சேவையாளரின் விரிவாக்க சேவையாக விளங்குகின்றது தொடர்ந்து இது நுழைவு அட்டையை உருவாக்குதல் பதிவுசெய்தல் சுழல்முறையில் மாற்றுதல் ஆகிய பணிகளை கைாளுகின்றது .மேலும் இது குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்ட சாதனங்கள் / சாதன குழுக்களுக்கு அனுப்பியிருப்பதை உறுதி செய்கிறது.
import android.util.Log;
import com.google.firebase.iid.FirebaseInstanceId;
import com.google.firebase.iid.FirebaseInstanceIdService;
public class MyAndroidFirebaseInstanceIdService extends FirebaseInstanceIdService {
private static final String TAG = “MyAndroidFCMIIDService”;
@Override
public void onTokenRefresh() {
//நுழைவுஅட்டையை பெற்று வைத்திருக்கவும்
String refreshedToken = FirebaseInstanceId.getInstance().getToken();
//நுழைவுஅட்டையை பதிவுசெய்திடுக
Log.d(TAG, “Refreshed token: ” + refreshedToken);
}
private void sendRegistrationToServer(String token) {
//நம்முடைய சேவையக கணினியில் நுழைவுஅட்டையை சேமித்து வைத்திட நாம் விரும்பினால் உடன் இந்த வழிமுறையை செயல்படுத்திடுக
}
}
இதன்பின்னர் onTokenRefreshcallback எனும் செயலியானது ஒருபுதிய நுழைவுஅட்டை உருவாக்கிடும் செயலை தூண்டிவிடுகின்றது onTokenRefresh() எனும் போட்டியில்getToken() எனும் செயலியை அழைத்து நடப்பில் தயாராக இருக்கும் நுழைவு அட்டைபதிவை அனுகுவதற்காக உறுதிபடுத்திடுகின்றது அதன்பின்னர் நாம் மிகசாதாரணமாக புத்தாக்கம் செய்து உள்நுழைவுஅட்டையை உள்நுழைவுசெய்திட பயன்படுத்தி கொள்ளமுடியும்
பின்னர் activity_main.xml எனும் கோப்பினை திறந்துஅதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக. தற்போது செயல்களின் பெயரைமட்டும் திரையில் காண்பிக்குமாறு ஒரேயொரு TextView ஐ மட்டும் நாம் கைவசம் வைத்துள்ளோம்
activity_main.xml

1. MainActivity.javaஎன்பதன் உள்ளடக்கங்கள் மட்டும் இயல்புநிலையில் முன்னிருப்பாக இருக்கும்
MainActivity.java
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
public class MainActivity extends AppCompatActivity {
இதனை தொடர்ந்து ResultActivity.javaஎனும் ஒரு புதிய ஜாவாவின் செயலியை உருவாக்கிடுக அதில் பின்வரும் குறிமுறைவரிகளை சேர்த்திடுக
ResultActivity.java
import android.os.Bundle;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.widget.TextView;
public class ResultActivity extends AppCompatActivity {
private TextView textView ;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
textView = (TextView)findViewById(R.id.textView1);
textView.setText(“Welcome to the Result Activity”);

}
}
இதன் இறுதி விளைவாக செயல்பாட்டிற்கான activity_main.xml இன் தளவமைப்பை மீண்டும் பயன்படுத்துகின்றோம், மேலும் “Welcome to the Result Activity என உரையை மாற்றுவோம்
செய்தி அறிவிப்பினை பெறப்பட்ட வுடன் பயனாளர் ஒருவர் அதனை சொடுக்கும்போது இந்த செயல்பாடு அழைக்கப்படும்.

இப்போது பயன்பாடு அனைத்தும் முடிவடைந்துவிட்டது, அதனை தொடர்ந்து FirebaseNotifications எனும் குழுவிலிருந்து அறிவிப்பு ஒன்றினை அனுப்புவதன் மூலம் நம்முடைய பயன்பாட்டை பரிசோதித்து பார்த்திடுவோம்.
ஃபயர்பேஸின் முகப்புபக்கத்திற்குள் உள்நுழைவுசெய்தபின்னர் பின்வரும் படங்களில் உள்ள படிமுறைகளை பின்பற்றிடுக.

மேலே படங்களில் காண்பித்தவாறு செயற்படுத்தியவுடன் புதிய அறிவிப்பு செய்தியொன்று உடன் பின்வருமாறு உருவாகின்றது வாழ்த்துக்கள் !! தற்போது நாம் செய்தி மற்றும் புஷ் அறிவிப்புகளுக்காக நாம் Firebase Cloud Messaging ஐ ஆண்ட்ராய்டு பயன்பாட்டுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து விட்டோம் . அதனை தொடர்ந்து ஃபயர்பேஸின்முகப்புத்திரையிலுள்ள அறிவிப்புகளின் பலகத்தில் அனைத்து செய்திகளையும் நாம் காணலாம்

லினக்ஸ் முனைமத்திலகூட யூட்யூபின் விழியகாட்சிகளை காணலாம்

விழியக்காட்சியின் உள்ளடக்கங்களானது வரைகலை இடைமுகப்பா என சிந்திக்கவும் தற்போது youtube-dl. எனும் கட்டளைவரியின் உதவியுடன் லினக்ஸ் முனைமமுடைய கணினியின் திரையில் கூட யூட்யூபின் விழியகாட்சி படங்களை பதிவிறக்கம் செய்திடஉதவுகின்றது youtube-dl.எனும் இந்த பயன்பாடானது கிரீயேட்டிவ் பொதுஅனுமதியான CC0 என்பதை போன்ற நடப்பு கட்டற்ற அனுமதிகளுக்கு ஒத்ததான the Unlicense எனும் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது இதனை https://rg3.github.io/youtube-dl/ எனும்இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர்https://github.com/rg3/youtube-dl/blob/master/README.md#installation எனும்இணையமுகவரியில் கூறியுள்ள அறிவுரைகளை பின்பற்றி அல்லது
$ sudo dnf install youtube-dl
எனும் கட்டளைவரியை உள்ளீடு செய்துஉள்ளீட்டுவிசையை அழுத்தி நிறுவுகை செய்து கொள்க அதன்பின்னர் நாம் விரும்பும் விழியக்காட்சி படதொகுப்பின் கோப்பிற்கான ID ஐ மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்க நம்முடைய கணினியில் Mplaye rஎனும் பயன்பாடு நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென உறுதிபடுத்தி கொள்க இல்லையெனில்
$ mplayer fireplace.webm
எனும் கட்டளைவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்தி நிறுவுகை செய்து கொள்க அதனோடு libcaca என்பதும் நிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென உறுதி படுத்திகொள்க தொடர்ந்து
$ export CACA_DRIVER=ncurses
எனும் கட்டளைவரியை செயல்படுத்துக பின்னர்
$ mplayer -really-quiet -vo caca fireplace.mp4
எனும் கட்டளைவரியை செயல்படுத்துக உடன் லினக்ஸ் திரையில் யூட்யூப் விழியகாட்சி திரையில் இயங்குவதை காணலாம்

மெய்நிகர் பெட்டி(VirtualBox)யை பயன்படுத்தி விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினியில்லினக்ஸை இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்

பொதுவாக விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் லினக்ஸ் இயக்கமுறைமையையும் பயன்படுத்திதான் பார்க்கலாமே எனவிரும்பிடும்போது ஒரே கணினியில் விண்டோ , லினக்ஸ் ஆகிய இரண்டு இயக்கமுறைமைகளையும் இணையாக நிறுவுகை செய்து கணினிஇயங்கத்துவங்கிடும்போது அவற்றுள் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து கொள்ளுமாறு கட்டமைவுசெய்து பயன்படுத்தி கொள்வார்கள் அதற்குபதிலாக விண்டோ இயக்கமுறைமையின் மீது தனியாக ஒரு பயன்பாடு இயங்குவதைபோன்றே மெய்நிகர்பெட்டி(VirtualBox) எனும் கருவியை செயல்படச்செய்து அதன் வாயிலாக லினக்ஸ் இயக்கமுறைமையை பயயன்படுத்தி கொள்ளமுடியும் அதற்கான வழிமுறைகள்பின்வருமாறு
முதலில் https://www.virtualbox.org/wiki/Downloads எனும் இணையமுகவரியிலிருந்து VirtualBox 5.2.18 எனும்சமீபத்தியபதிப்புள்ள இந்த கருவியை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் வழக்கமாக மற்ற பயன்பாடுகளை நிறுவுகை செய்வதை போன்றே இதனுடைய செயலி கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நிறுவுகை செய்து கொள்க உடன் திரையில் VirtualBox manager எனும் உருவப்பொத்தானாக திரையில் தோன்றிடும் அதனை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Machine->New menuஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இதற்கு ஒரு பெயரையும் லினக்ஸ் இயக்கமுறைமையையும் தெரிவுசெய்து கொள்க அதனைதொடர்ந்து இந்த மெய்நிகர் கணினிக்கான நினைவகத்தை ஒதுக்கீடு செய்து கொள்க பின்னர் Create a virtual hard disk now’எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து அவ்வாறுமெய்நிகர் வன்தட்டு நினைவகம் உருவாக்கியவுடன் அதில் VDI என்பதை தெரிவுசெய்வதன் வாயிலாக அதற்கான கோப்பு வகையை தெரிவுசெய்து கொள்க தொடர்ந்து சேமிப்பதற்கான வாய்ப்பாக Dynamically allocated’என்பதை தெரிவுசெய்து கொள்க பின்னர் கோப்பு அமைவிற்கான இடம் அதன்அளவு ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டு Create எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மெய்நிகர்கணினிஒன்று உருவாகி திரையில் காண்பிக்கும் https://www.ubuntu.com/download எனும் இணையபக்கத்திலிருந்து உபுண்டு 18.04 பதிப்புள்ள இயக்கமுறைமையின் ISO image கோப்பினை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துகொள்க .தொடர்ந்து VirtualBox manager ஐ செயல்படச்செய்திடுக அதிலுள்ள புதியதாக நாம் உருவாக்கிய மெய்நிகர்கணினியை Virtual machine இடம்சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் settings என்பதையும் அதன்பின்னர் Storage->Empty->Optical Drive->Choose Virtual Disk Optical File. என்றவாறு கட்டளைகளையும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நாம் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ISO image எனும் கோப்பினை தெரிவுசெய்து Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்துமெய்நிகர்கணினியை Virtual machine இடம்சுட்டியால் பிடித்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Start->Normal Start . என்றவாறு கட்டளைகளையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன் வழக்கமான திரைபோன்று தோன்றிடும் திரையில் கூறிடும் அறிவுரையை பின்பற்றி மெய்நிகர்கணினியில் உபுண்டு இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடும் பணியை நிறைவுசெய்திடுக இதன்பின்னர் விண்டோ உபுண்டுஆகிய இரண்டு இயக்கமுறைமைகளையும் ஒரே கணினியில் இயங்கச்செய்து பயன்படுத்தி கொள்ளலாம் ஆயினும் லினக்ஸ் இயக்கமுறைமையை வரைகலை இடைமுகப்புதிரையாக பயன்படுத்தி கொள்வதற்காக SSH எனும் சேவையாளர் நிறுவுகை செய்யப்பட்டிருக்கவேண்டும் அதற்காக மெய்நிகர் பெட்டியின் வாயிலாக லினக்ஸ் திரைக்கு செல்க அங்கு
$ sudo apt update
$ sudo apt install openssh-server
ஆகிய கட்டளைவரிகளை செயல்படுத்திடுக உடன் லினக்ஸில் SSH எனும் சேவையாளர் நிறுவுகை செய்யப்பட்டுவிடும் மேலும்
$ ip addr show
எனும் கட்டளைவரியையும் செயல்படுத்திகொள்க அதனோடு PuTTY என்பதை https://www.putty.org/ எனும் இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து அந்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் 10.2.0.15என்றவாறு லி னக்ஸ் கணினியின் IPமுகவரியை உள்ளீடுசெய்து கொஂஂண்டு Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் லினக்ஸை தொடர்புகொள்வதற்கான பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து கொள்க. இவ்விரண்டு இயக்கமுறைமைகளுக்கு மிடையே கோப்புகளை பரிமாறி கொள்வதற்காக WinSCPஎனும் பயன்பாட்டினை https://winscp.net/eng/download.php எனும் முகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்து கொள்க பின்னர் இதனை செயல்படச்செய்து தேவையான கோப்பு ஒழுங்குமுறையை பின்பற்றி IPமுகவரியையும் பயனாளர் பெயரையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து Loginஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையானது இரண்டு சாளரதிரையாக பிரிந்து தோன்றிடும் அதில் இடதுபுறம் விண்டோ பயன்பாட்டு திரையும் வலதுபுறம் லினக்ஸ் பயன்பாட்டு திரையும் ஆகும் தேவையான கோப்புகளை இரண்டிற்குமிடையே நகலெடுத்து ஒட்டி பரிமாறி கொள்க

பல்வேறு கணினிமொழிகளிலும் குறிமுறைவரிகளைஎழுதி பழகஉதவிடும் coding ground எனும் இணையதளம்

இதற்காக முதலில் https://www.tutorialspoint.com/codingground.htm எனும் இணையமுகவரிக்கு சென்று இதிலுள்ள பல்வேறு கணினிமொழிகளை பற்றிய விவரங்களை அறிந்து கொள்க மிகமுக்கியமாக இதில் நமக்கு உதவத்தயாராக இருக்கும் 75 இற்கும்அதிகமான கணினிமொழிகளுள் நாம் விரும்பும் கணினிமொழியை கொண்டு நமக்கு தேவையான பயன்பாடுகளை உருவாக்கி கொள்ளலாம்
இதில் நாம் விரும்பியகணினிமொழியில் குறிமுறைவரிகளை எழுதி இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து செயல்படுத்தி சரியாக பயன்பாடு செயல்படுகின்றதாவென சரிபார்த்திடலாம்உதாரணமாக நாம் ஜாவா எனும் கணினிமொழியில் நம்முடையமுதல் பயன்பாடு ஒன்றினை உருவாக்கிடுவதாக கொள்வோம்
public class அனைவருக்கும் வணக்கம்{
public static void main(String []args){
System.out.println(“அனைவருக்கும் வணக்கம்”);
}
}
Share to generate a short link to be Shared or Embedded in your Website எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய இணையபக்கமானது இதனோடு உள்பொதிந்த இணையபக்கமாக உருவாகி நம்முடைய இணையபக்கத்தின் பயனாளரொருவர் இந்த மாதிரி நிரல்தொடர்போன்று தாம்விரும்பும் பயன்பாட்டு நிரல்தொடரை தான் விரும்பும் மொழியில் உருவாக்கி இயந்திரமொழிக்குமொழிமாற்றம் செய்து பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்திடலாம்
இதனை தற்போது உலகமுழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர் இது நம்முடைய பயனாளர்களை நம்முடைய இணையபக்கத்திலேயேதக்கவைத்து கொள்ள உதவுகின்றது நாம் சேமி்த்த நிரல்தொடர்களை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஒரு கட்டணமற்ற இணையதளமாகும் வாருங்கள் எந்தவொரு கணினிமொழியிலிருந்தும் நாம் விரும்பும் எந்தவொரு பயன்பாட்டினையும இந்த தளத்தின் உதவியடன் உருவாக்கி பயன்பெறலாம்

Arduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்து படங்களையும் திரையில் காட்சியாக தோன்றசெய்து காணலாம்

தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படப்பிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிய தாகிவிட்டது இதற்காகவென தனியாக படப்பிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியையே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா
எனவே எந்தவிடத்திலும் எந்தநேரத்திலும் புகைப்படம் எடுக்கும் கருவி கைவசமுள்ள இந்த காலத்தில், மிக மெதுவான மிக குறைந்த தெளிவுத்திறன் புகைபடக்கருவி நம்முடைய கைவசம் இல்லை யேஎன நாம் கவலைப்படலாம்.   இயல்பான சூழ்நிலையில் அது உண்மையாககூட இருக்கலாம் அவ்வாறான நிலையில் கைகொடுக்க வருவதுதான் Arduino One Pixel Camera எனும் புகைப்படக்கருவி இதனைhttps://github.com/tuckershannon/One-Pixel-Arduino-Camera எனும் தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்க
அதாவது சாதாரண கேமராவின் மையத்தில் 3D அச்சிடப்பட்ட உறை மற்றும் 3mm OD ஆகியவை உள்ளன, மேலும் Adafruit இருந்து அலுமினிய குழாய் மூலம் உள்வரும் ஒளியின் இறுக்கமாக கவனம் பெறும் TCS34725 RGB வண்ண சென்சார் ஒன்றுமுள்ளது. இது Arduino Uno ஒளியின் சிறிய துண்டு நிறத்தை தீர்மானிக்க அனுமதிக்கிறது, இது இறுதி வண்ண படத்தின் ஒற்றை பிக்சலை உருவாக்குகிறது. செயல்முறை முடிவில் கருப்பு & வெள்ளை படம் நினைவில் இல்லை என்றாலும் ஒரு எளிய photocell இலிருந்து ஐந்து வண்ண சென்சார் வாயிலாக வெளியேற்ற முடியும் என்று குறிப்பிடுகிறது. இரு நிகழ்வுகளிலும், ஒளியின் அளவை ஆய்வு செய்தவுடன், இரட்டை BYJ-48 ஸ்டெப்பர் மோட்டார்கள் மூலம் சென்சார் autoturret-style இடமாற்றம் செய்யப்படுகிறது. , முழு உருவமும் இந்த தனித்தனி வாசிப்புகளில் இருந்து ஒன்றாக இணைக்கப்படும் வரை இந்த செயல்முறை தொடரச்செய்து வெளியேற்றப்படுகின்றது

நம்முடைய வியாபாரத்தில் chatbots இன் பயன்பாடுகள்

மனிதர்களுடனான உரையாடல்களை குறிப்பாக இணையத்தில். வாயிலாக நடைபெறும் உரையாடல்களை விவாதங்களை சித்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி நிரல், தொடர்பயன்பாட்டினையே chatbots என அழைப்பார்கள்
அதாவது இணையத்தின் வாயிலாக முகநூல் போன்ற குழுவிவாதங்களை குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தை பற்றிய குழுவிவாதமாக கொண்டுசெல்வதை chatbots என க்கூறலாம் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாக மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளது வருகின்ற 2025, ஆண்டிற்குள் 1.25 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இதனுடைய வியாபார பயன்பாடு உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 1.அதிகரித்து வரும் வலைத்தளங்கள் மற்றும் கைபேசி பயன்பாடுகள் உயர் நுண்ணறிவு நுகர்வோர் ஈடுபாடுக்கான துரித வேகக் கோரிக்கை. நுகர்வோர் நடத்தை ஆகியவற்றை எளிதாக கொள்கின்றது. 2.இதில் இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள். வாடிக்கையாளர்களுக்கான சேவை நடவடிக்கைகளாக உருவாக்கப்படுகின்றது. ஆகியவை இந்த chatbots ஐ நடைமுறைபடுத்திடுவதற்கான முக்கிய காரணிகள்
இந்த chatbots இன் வியாபாரத்திற்கான பயன்கள் பின்வருமாறு
1.வழக்கமான மின்னஞ்சல்கள் செய்திகடிதங்கள் அல்லது சமுதாயவலைபக்கங்களின் வாயிலாக முழுமையான விவரங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு சென்று சேராது ஆயினும் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களை தீர்வு செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரகையேடாக கையடக்க விலையில் இது வியாபார நிறுவனங்களுக்கு பயன்தருகின்றது
2. குறிப்பிட்ட வியாபார நிறுவனம் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எந்தநேரத்திலும் எந்தஇடத்திலும் இதன் வாயிலாக கிடைக்கின்றது
3. வாடிக்கையாளர்களுடன் இடைமுகம் செய்வதற்காகவென தனியாக முகவர்கள் உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணியாளர்களை நியமனம் செய்து பயன்படுத்தி கொள்ளாமல் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் உற்பத்தியில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திடும்போதான செயல்களைநிருவகிப்பதற்காக தனியாக மனித தலையீடு இல்லாமலேயே வாடிக்கையாளர் திருப்தியுறும் சேவைகளை இதன் வாயிலாக நிருவகத்திடமுடியும்
4. வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்கனவே ஏதாவதொரு தேவைக்காக நிறுவனத்துடன் தொடர்புகொஂண்டபோது கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு அவரவர்களின் விருப்பத்திற்கேற்ற பொருத்தமான சேவையை அவர்கள் விரும்பியவாறு வழங்கபடுகின்றது
5. வாடிக்கையாளரின் ஆழ்ந்த ஈடுபாட்டினால் நிறுவனத்தின் விற்பணை பலமடங்கு உயரஉதவுகின்றது
இப்போதெல்லாம், நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் பணிச்சுமையின் செலவைக் குறைக்க, சிறந்த ஆதரவை வழங்க இந்த செயற்கை நினைவகத்தால் (AI )செயல்படும் முகவர்களை வியாபாரத்தின் வெற்றிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்

WiFi எனும் அருகலையை பயன்படுத்தி வீட்டுதோட்டங்களில் செடிகொடிகளில் நன்கு பராமரிக்கலாம்

இதற்காக WiFi-enabled soil moisture sensor எனும் தந்திரமான வழிமுறை பயன்படுத்திகொள்ளப்படுகின்றது இது ஒரு முப்பரிமான அட்டைபெட்டிபோன்றுள்ளது அதில் நிலையை அறிந்து கொள்ள LED களும் அனுகுவதற்காக USB வாயில்களும் உள்ளன ஒரு D1 பேட்டரி கவசமும் 14500 Li-ion எனும் மின்விநியோக அமைப்பும் சேர்ந்த WeMos D1 mini,என்பது மூளையாக செயல்படுகின்றது இதில் capacitive moisture sensor என்பதுஉள்ளது இதிலுள்ள WS2812 எனும் LED ஆனது பச்சைவண்ணமாக இருந்தால் நல்லநிலையையும் சிவப்பாக இருந்தால் காய்ந்த நிலையையும் நீலவண்ணம் அதிகஈரமாகவும் இருப்பதாக தெரிந்துகொள்ளலாம் இதிலுள்ளஉணர்விகள் sleep modeஐ ஆதரிப்பதன் வாயிலாக குறிப்பிட்ட காலஇடைவெளியில் மண்ணின் நிலையை பரிசோதித்து மேற்குறிப்பிட்ட LED இன்வண்ணத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம் தொடர்ச்சியாக பணிசெய்திட சிரமமபடுபவர்கள் https://www.blynk.cc/ எஂனும் முகவரியில் பயன்படுத்துவதற்காக தயாராக இருக்கும் பயன்பாட்டினை கொண்டு நம்முடைய கைபேசி வாயிலாகவே அருகலையின் துனையுடன் உணர்விகளை கட்டுபடுத்திடலாம் இந்தBlynk எனும் பயன்பாடானது மண்ணின் நடப்பு moistureநிலையைகாண்பிக்கும் அதனை தொடர்ந்து தேவையானவாறு ஈர்ப்பதம் அல்லது வறண்டநிலையின் எச்சரிக்குமாறு அமைத்து சரியான நிலையை அமைத்து கொள்ளலாம்

Previous Older Entries