கற்றுக்கொள்வதற்கான எளிய ஐந்து கணினி மொழிகள்

பயன்பாட்டிற்கான நிரலாக்கபணியானது துவக்கநிலையாளர்களுக்கு அச்சுறுத்துகின்ற துறையாக இருக்கலாம், ஆனால் மிகச்சரியான நிரலாக்க மொழியை தேர்வுசெய்வது என்பது நிரலாக்கபணியுடனான பயணத்தை மிகவும் மென்மையாக்குகின்றது. நிரலாக்க குறிமுறைவரிகளின் வழிமுறைக்கு புதியவராக இருந்தால், துவக்கநிலைக்கு ஏற்ற நிரலாக்க மொழியைத் தேடுபவர் எனில், அவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கான புதிய நிரலாளர்கள் எளிதாக கற்றுக்கொள்வதற்கான எளிய ஐந்து நிரலாக்க மொழிகள்பின்வருமாறு


1.பைதான்(Python):இந்த கணினிமொழியானது தொடர்ந்து துவக்கநிலையாளர்களுக்கு எளிய நிரலாக்க மொழிகளில் ஒன்றாக இருந்துவருகின்றது. இது கற்றுகொள்ள எளிமையானது ,இதனுடைய தொடரியல் நம்மால் எளிதாக படித்துபுரிந்து கொள்ளுமாறு ஆங்கில மொழியை ஒத்திருக்கிறது, இது குறிமுறைவரிகளின் வழிமுறைக்கு மிகவும் புதியவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக அமைகிறது. பைதான்ஆனது இணையமேம்பாடு, தரவு பகுப்பாய்வு ,இயந்திர கற்றல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


2.ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript ): இது இணைய மேம்பாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் கட்டாயம் கற்க வேண்டிய மொழியாகும். இது அதன் நெகிழ்வுத்தன்மைக்காக அறியப்படுகிறது ,முதன்மையாக ஊடாடும் இணைய தளங்களை உருவாக்க பயன்படுகிறது. விரிவான சமூககுழுக்குள் ,ஏராளமான நேரடிஇணைய ஆதாரங்களுடன், ஜாவாஸ்கிரிப்டைக் கற்றுக் கொள்ளும்போது நாம் ஏராளமான ஆதரவைப் பெறுவோம். கூடுதலாக, அனைத்து இணைய உலாவிகளும் ஆதரிக்கும் ஒரே நிரலாக்க மொழி இதுமட்டுமேயாகும்.


3.ரூபி( Ruby ): இது அதன் நேர்த்தியான ,எளிதாக படித்தறியக்கக்கூடிய குறிமுறை வரிகளுக்காக அடிக்கடி பாராட்டப்படுகிறது. இது ஒரு வரவேற்பு சமூககுழுவினைக் கொண்டுள்ளது, இது துவக்கநிலையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
ரூபி ஆன் ரெயில்ஸ்( Ruby on Rails ), இந்த ரூபியுடன் கட்டமைக்கப்பட்ட ஒரு பிரபலமான இணையகட்டமைப்பானது, இணைய மேம்பாட்டை எளிதாக்குகிறது, இது இணைய பயன்பாடுகளை உருவாக்குவதை எளிதாக்குகிறது. ரூபியின் தொடரியல் நிரலாளர்களின்குழப்பத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது, இது நிரலாக்கத்திற்கு புதியவர்களுக்கு சிறந்த மொழியாக அமைகிறது.


4.ஸ்கிராட்ச்( Scratch): கணினிமொழியை கற்பவர்களில் புதியவர்களுக்கு அல்லது நிரலாக்கத்திற்கான காட்சி ,ஊடாடும் அணுகுமுறையை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இது ஒரு தொகுப்பின் அடிப்படையிலான அமைப்பைப் பயன்படுத்துகிறது, இது பயனர்கள் புதிர் துண்டுகள் போன்ற குறிமுறைவரிகள் தொகுப்புகளை ஒன்றாக இணைக்க அனுமதிக்கிறது. சிக்கலான தொடரியலில் மூழ்காமல் அடிப்படை நிரலாக்கக் கருத்துக்களைக் கற்பிக்க இது சரியானது.


5.ஸ்விஃப்ட்( Swift): iOS பயன்பாட்டின் மேம்பாட்டில் ஆர்வமாக இருப்பவர்களுக்கும், துவக்க நிலையாளர்களுக்கும் இது ஏற்ற மொழியாகும். ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது சுருக்கமானதாகவும் படிக்க எளிதானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்திறன் ,எளிமை ஆகிய இரண்டின் அடிப்படையில், அதன் முன்னோடியான Objective-C ஐ விட இது ஒரு முன்னேறிய மொழியாக கருதப்படுகிறது. இது ஐபோன்கள் ,ஐபாட்களுக்கான பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கதவைத் திறக்கிறது.


முடிவாக, இந்த ஐந்து நிரலாக்க மொழிகளான – பைதான், ஜாவாஸ்கிரிப்ட், ரூபி, ஸ்கிராட்ச் ,ஸ்விஃப்ட் – ஆகியவை துவக்கநிலையாளர்க்கு சிறந்த தேர்வுகளாகும். இவற்றுள் நம்முடைய ஆர்வங்களுடன் ,இலக்குகளுடன் ஒத்துப்போகும் ஒன்றைத் தேர்வுசெய்து, கற்றல் செயல்முறையை அனுபவிக்க மறக்கவேண்டாம். இதனை பயின்றபின்னர், குறிமுறைவரிகளின் உலகில் விரைவில் முன்னேறிவிடுவோம்.

செயற்கை நுண்ணறிவின்(AI) கட்டமைப்பை உருவாக்கிடுவதற்கான கணினி மொழிகளும் அதன் கட்டமைப்புகளும்

தற்போது நம்முடைய நடைமுறை பயன்பட்டில பல்வேறு திறமூல நிரலாக்க மொழிகள் உள்ளன, அவைகளை சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கிடுவதற்காககூட பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தி நம்மில் ஒருசிலருக்கும் மட்டுமே தெரிந்த செய்தியாகும். அதாவது நமக்கு நிரலாக்கத் பணியில் அதிகஆர்வமாக இருந்தால், இந்த திறமூலகணினி மொழிகளை AI அமைப்பிற்காக அவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என அறிந்தகொள்ளமுடியும். இந்தக் கட்டுரை AI ,MLஆகியவற்றிற்கான முக்கிய நிரலாக்க மொழிகளைபற்றியும் , திறமூல கட்டமைப்புகளை பற்றியும் பகுப்பாய்வு செய்கிறது, மேலும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமானவற்றையும் அடையாளம் காண்பிக்கின்றது.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றின் வளர்ச்சியில் திறமூல நிரலாக்க மொழிகள் முக்கிய அங்கமாகிவிட்டன. சக்திவாய்ந்த AI , ML அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கப் பயன்படுத்தக் கூடிய பரந்த அளவிலான திறமூல நூலகங்களையும் கட்டமைப்பையும் அணுகுவதற்கு இந்த கணினிமொழிகள் மேம்படுத்துநர்களுக்கு உதவுகின்றன.
செயற்கை நுண்ணறிவு(AI) என்பது பல மென்பொருள் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு முக்கிய பகுதியாகும், ஏனெனில் இது மனித மனம் செயல்படும் விதத்தில் – அவதானிக்க, பெற, இலக்கினை சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய மென்பொருளை உருவாக்க மேம்படுத்துநர்களை அனுமதிக்கிறது. செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது பல்வேறு பணிகளுக்கு மிகமுக்கியமானதாகும், குறிப்பாக நிரலாக்கத்தில் ஏதேனும் ஒரு தொழிலைத் துவங்குவதற்காக ஆர்வமுள்ளவர்களுக்கு. இதற்கான மிகச்சரியான பொருத்தமான கணினிமொழியைத் தேர்ந்தெடுப்பது என்பது, விரைவாக வளர்ந்து வரும் இந்தத் துறையில் முன்னேற உதவக்கூடும், ஆனால் பலர் இந்த பணியை எங்கு துவங்குவது என அறியாமல் போராடுகிறார்கள். அவ்வாறான பணிையை இப்போது தொடங்குவது எதிர்காலத்தின் மாற்றத்திற்கான அலைகளில் எளிதாக பயனம் செய்ய உதவும்.
AIஇன் அமைப்பை உருவாக்குதல்
AIஐ செயல்படுத்தலுக்கான கருவிகளை அறிமுகப்படுத்தி புதியபுதிய வழிகளில் ஏராளமான அளவில் சிக்கல்களைத் தீர்வுசெய்வதை சாத்தியமாக்கியுள்ளது. இருப்பினும், அங்குள்ள ஒவ்வொரு நிரலாக்க சவாலுக்கும் இது அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வாக அமையாது – AI ஐப் பயன்படுத்தும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு கவனமாக சிந்தித்து திட்டமிடுவது அடிப்படைதேவையாகும்.
AI அமைப்பை உருவாக்கும்போது முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது பிரச்சனை.என்பது குறித்துதான். பின்வருமாறான வினாக்களை நம்மை நோக்கி நாமே கேட்டுக்கொள்க: நான் எந்த பிரச்சினையை தீர்வுசெய்யப் போகிறேன்? தீர்வின் எதிர்பார்க்கப்படும் விளைவு என்ன? இந்தக் கேள்விகளுக்கான நம்முடைய பதில்கள், தரவு செயலாக்கத்திற்கான இயந்திர கற்றல் (ML) அல்லது எண்ணிம படங்கள், கானொளிகாட்சிகளிலிருந்து அர்த்தமுள்ள தகவலைப் பெற கணினி பார்வை (CV) போன்ற பல்வேறு AI-சார்ந்த தீர்வுகளை நோக்கி நம்மைத் தூண்டும்.
AI ஐப் பயன்படுத்தி நாம் செயலாக்குகின்ற தரவின் அளவும், தரவு வகைகளையும் கருத்தில் கொள்வது அடுத்த படிமுறையாகும். செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் சக்திவாய்ந்தவை, ஆனால் அவை மாயா ஜாலமானவை அல்ல. கணினியில் தரமற்ற தரவு வழங்கப்பட்டால், அதிலிருந்து நாம் விரும்பிய முடிவுகளை உருவாக்க வாய்ப்பில்லை. நம்முடைய தரவு சரிபார்க்கப்பட்டு, குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.
AI என்பது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பரந்த துறையாகும். AI தொடர்பான பல்வேறு பணிகளில் வெவ்வேறு நிரலாக்க மொழிகள் சிறந்து விளங்குவதால், நமக்கான சிறந்த விருப்பம் நம்முடைய செயல்திட்டத்தின் பிரத்தியோகங்களைப் பொறுத்தது ஆகும். பொருத்தமான நிரலாக்க மொழியைத் தேர்ந்தெடுப்பது ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொறுத்ததுஆகும்.
இதற்காக பின்வரும் படிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
தரவு சேகரித்தல்: செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான முதல் படி தொடர்புடைய தரவுகளை சேகரிப்பதாகும். இந்தத் தரவு நாம் தீர்வுசெய்திட முயற்சிக்கின்ற சிக்கலுக்கான குறிப்பிட்டதாக இருக்க வேண்டும், மேலும் அதைப் பற்றி முடிந்தவரை அதிகமான தகவல்களைச் சேர்க்க வேண்டும்.
முன்-செயலாக்கத் தரவு: தரவை பெற்றவுடன், அதைசரி செய்து முன் செயலாக்கம்செய்திட வேண்டும். தரவை இயல்பாக்குதல், பொருத்தமற்ற தகவல்களை அகற்றுதல் பகுப்பாய்விற்குத் தயாராகும் வகையில் வடிவமைத்தல் ஆகிய பணிகள் இதில் அடங்கும்.
தரவை பகுப்பாய்வு செய்தல்: அடுத்து, வடிவங்கள், போக்குகள், தொடர்புகள், பிற நுண்ணறிவுகளை அடையாளம் காண தரவை பகுப்பாய்வு செய்ய வேண்டும். நாம் பணிபுரிகின்ற தரவு வகைகளைப் பொறுத்து, புள்ளிவிவர முறைகள், இயந்திர கற்றல் வழிமுறைகள் அல்லது தரவு பற்றிய நுண்ணறிவுகளைப் பெற மற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
ஒரு மாதிரியை உருவாக்கிடுதல்: தரவை பகுப்பாய்வு செய்தவுடன், இதுவே AI மாதிரியை உருவாக்குவதற்கான நேரமாகும் . இங்கு நாம் சரியான தருக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்,நம்முடைய மாதிரியின் அளவுருக்களை வரையறுத்து, அதை நம்முடைய தரவில் பயிற்சி செய்ய வேண்டும்.
பரிசோதனை செய்தலும் மதிப்பீடுசெய்தலும்: இறுதியாக, நாம் நம்முடைய AI மாதிரியை பரிசோதித்து மதிப்பீடு செய்ய வேண்டும். இது எவ்வளவு துல்லியமானது , நம்பகமானது என்பதைத் தீர்மானிக்க இது நமக்கு உதவக்கூடும், மேலும் இது மேம்படுத்தப்பட வேண்டிய எந்தப் பகுதிகளையும் அடையாளம் காண உதவக்கூடும்.
1.பைத்தான்: AIக்கான மிகவும் பிரபலமான நிரலாக்க மொழி பைதான் ஆகும். இது அதிகபயன்பாட்டிலுள்ள கணினிமொழிகளில் ஒன்றாகும், மேலும் இதனை கற்றுக்கொள்வதும் எளிதானது.
`முக்கிய வசதிவாய்ப்புகள்: எளிதில் படிக்கக்கூடிய தொடரியல், பரந்த அளவிலான பயன்பாட்டுப் பகுதிகள் , NumPy, SciPy , Pandas போன்ற சக்திவாய்ந்த நூலகங்கள் ஆகியவை இது உள்ளடக்கமாக கொண்டுள்ளது. பைதான் பொருள் சார்ந்த நிரலாக்கமொழியாகம், இது செயல்பாட்டு நிரலாக்கம் செயல்முறை நிரலாக்க முன்னுதாரணங்களையும் வழங்குகிறது, இது ஒரு சக்திவாய்ந்த பல்துறைகணினிமொழியாகும்.
பைத்தான் AI க்கு ஏன் சிறந்தது: பைதான் அதன் வாசிப்புத்திறன் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக AI வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கணினி மொழியாகும். இது AI , இயந்திர கற்றலுக்கான பல்வேறு வகையான நூலகங்களையும் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. பைதான் முன்மாதிரிகளை உருவாக்குவதையும், AI சிக்கல்களுக்கு வெவ்வேறு அணுகுமுறைகளை ஆராய்வதையும் எளிதாக்குகிறது. அதன் தொடரியலானது படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதானது, இது AI வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமானது.
2.ஜாவாஸ்கிரிப்ட்: இது இிணையதள உருவாக்கத்திற்கான மிகப்பிரபலமான கணினி மொழியாகும். மேம்படுத்துநர்கள் TensorFlow.js போன்ற இயந்திர கற்றல் நூலகங்களில் JavaScript ஐப் பயன்படுத்துகின்றனர். இது இயந்திர கற்றலுக்கான பல உயர்நிலை கருவிகளையும் நூலகங்களையும் கொண்டுள்ளது.
முக்கிய வசதிவாய்ப்புகள்: ஜாவாஸ்கிரிப்ட் பல்வேறு வழிகளில் AI பயன்பாடுகளில் பயன்படுத்திகொள்ளலாம். AI பயன்பாடுகளுக்கான பயனர் இடைமுகங்களை உருவாக்கவும், நரம்பியல் வலைபின்னல்களை உருவாக்கவும், இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்கவும், தரவை செயலாக்கவும், போட்கள் , தானியங்கு அமைப்புகளை உருவாக்கவும் இந்த கணினிமொழியை பயன்படுத்திகொள்ளலாம். AI அமைப்புகளுடன் இடைமுகமாக இணைய பயன்பாடுகளை உருவாக்கவும், AI தரவின் காட்சிப்படுத்தல்களை உருவாக்கவும் இந்த கணினிமொழியை பயன்படுத்திகொள்ளலாம்.
AIக்கு ஜாவாஸ்கிரிப்டை பொருத்தமானதாகஆக்குதல்: ஜாவாஸ்கிரிப்ட் என்பது உரைநிரல் கணினிமொழியாகும், இது மேம்படுத்துநர்களை விரைவாகவும் திறமையாகவும் சிக்கலான பயன்பாடுகளை உருவாக்கிடவும் உதவுகிறது. இது AI மேம்பாட்டிற்கு மிகவும் பொருத்தமான பல்வேறு வசதிவாய்ப்புகளைக் கொண்டுள்ளது, அதாவது மற்ற தொழில்நுட்பங்களுடன் எளிதாக ஒருங்கிணைக்கும் திறன், அதன் பரந்த நூலகங்கள் , அதன் இயந்திர கற்றல் திறன்கள் போன்றவைஇதிலுள்ளன. ஜாவாஸ்கிரிப்ட் மூலம், மேம்படுத்துநர்கள் எளிதாக அதனைகற்று சக்திவாய்ந்த AI பயன்பாடுகளை உருவாக்க முடியும், இது AI மேம்பாட்டிற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
3.C++: பல இயந்திர கற்றல் , ஆழ் கற்றல் ஆகிவற்றிற்கான நூலகங்கள் C++ எனும் கணினிமொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க C++ நூலகங்களில் Shark என்பதும் அடங்கும், இது நேரியல் பின்னோக்கு போன்ற மேற்பார்வையிடப்பட்ட கற்றல் தருக்கங்களை யும் mlpackஐயும்ஆதரிக்கிறது, , இது பயனர்கள் அளவிடக்கூடிய ML தீர்வுகளில் ஒருங்கிணைக்கக்கூடிய விரிவாக்கம் செய்யக்கூடிய வழிமுறைகளை வழங்குகிறது.
முக்கிய வசதிவாய்ப்புகள்: உயர் செயல்திறன் பயன்பாடுகள், வரைகலை-மைய பயன்பாடுகள், விளையாட்டுகள், உட்பொதிக்கப்பட்ட சாதனங்கள் , விரைவான கணக்கீடுகளுக்கு C++ ஆனது ஒரு சிறந்த தேர்வாகும். பைதான், சி , ஜாவாவிற்குப் பிறகு மிகவும் பிரபலமான நிரலாக்க மொழிகளில் இது இடம் பெற்றுள்ளது. TensorFlow, Caffe, Microsoft Cognitive Toolkit (CNTK), mlpack Library, DyNet, FANN, OpenNN , Shogun ஆகியவை C++ க்கான பல பிரபலமான AI-MLஇன் நூலகங்களாகும்.
AI க்கு C++ சிறந்தது: C++ அதன் வேகம் அளவிடுதல் ஆகியவற்றின் காரணமாக AI வளர்ச்சிக்கு சிறந்த கணினிமொழியாகும். இது ஒரு உயர்-நிலை, வலுவாக கட்டமைக்கப்பட்ட கணினிமொழியாகும், இது மேம்படுத்துநர்கள் சிக்கலான தருக்கங்களை விரைவாகவும் திறம்படவும் எழுதுவதை எளிதாக்குகிறது. இது சக்திவாய்ந்த AI பயன்பாடுகளை உருவாக்க பயன்படும் கருவிகளின், நூலகங்களின் பெரிய நூலகத்தையும் வழங்குகிறது. அதன் பொருள் சார்ந்த இயல்பானது எளிதாக பராமரிக்க அனுமதிக்கிறது, மேலும் அதன் பெயர்வுத்திறன் பல தளங்களில் AI அமைப்பை உருவாக்க அனுமதிக்கிறது.
4.ஜூலியா:இது உயர்-செயல்திறன் எண்ணிமகணினிக்காக வடிவமைக்கப்பட்டது இயந்திர கற்றலுக்கு உறுதியான ஆதரவைக் கொண்டுள்ளது. ஜூலியாவை TensorFlow.jl, MLBase.jl , MXNet.jlஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க முடியும்.
முக்கிய வசதிவாய்ப்புகள்:உயர் செயல்திறன்: ஜூலியா ஒரு விரைவான சக்திவாய்ந்த நிரலாக்க மொழியாகும், இது உயர் செயல்திறன் கொண்ட எண்ணிம அறிவியல் கணினிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகத்தின் அடிப்படையில் பைதான், Matlab, R போன்ற தற்போதைய கணினிமொழிகளை விஞ்சும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் LLVM அடிப்படையிலான இயந்திரமொழிமாற்றியானது உள்கட்டமைப்பு இதனை அடைய உதவுகிறது.
எளிதாக கற்றுக்கொள்ளுதல்: ஜூலியா எளிமையான ஆனால் சக்திவாய்ந்த தொடரியலை கொண்டுள்ளது, இது துவக்கநிலைகாரர்களுக்கு கணினிமொழியை கற்றுக்கொள்ளத் துவங்குவதை எளிதாக்குகிறது. இது ஒரு விரிவான ஆவணமாக்கல் அமைப்பையும் கொண்டுள்ளது, இது விரைவாகக் கற்றுக் கொள்வதை எளிதாக்குகிறது.
இயக்கநேரதட்டச்சுதிறன்: ஜூலியா ஆனது இயக்கநேரதட்டச்சுதிறனை ஆதரிக்கிறது, இது விரைவான முன்மாதிரி, பிழைத்திருத்தத்தை அனுமதிக்கிறது. இந்த வசதிகளுடனான தரவுகளுடன் பணி செய்வதை எளிதாக்குகிறது, ஏனெனில் நாம் பயன்பாடுகளில் ஒவ்வொரு மாறிக்கும் அதன்வகைகளை வரையறுக்க வேண்டியதில்லை ,இதில்நம்முடைய தேவைக்கேற்ப மாறிகளின் வகைகளை எளிதாக மாற்றியமைத்திடலாம்.
பல்வகை அனுப்புதல் திறன்: ஜூலியாவின் பல்வகை அனுப்புதல் திறன் எனும் வசதியானது , செயலிகளை வெவ்வேறு தருக்க வகைகளுக்கு நிபுணத்துவப்படுத்த அனுமதிக்கிறது. இது சுருக்கமான, திறமையான குறிமுறைவரிகளை எழுதுவதை எளிதாக்குகிறது.
இணையானசெயல்நிலை: ஜூலியாவின் இணையானசெயல்நிலை திறன்கள், பல்லடுக்கு அல்லது விநியோகிக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய குறிமுறைவரிகளை எழுதுவதை எளிதாக்குகிறது. இது பெரிய அளவிலான பிரச்சனைகளை விரைவாக தீர்வுசெய்திட அனுமதிக்கிறது.
தொகுப்புகள்: ஜூலியாவில் ஏராளமான தொகுப்புகள் உள்ளன, இது நம்முடைய செயல்திட்டங்களில் பயன்படுத்தக்கூடிய நூலகங்களையும் கட்டமைப்புகளையும் கண்டறிவதை எளிதாக்குகிறது. இது தொகுப்பு மேலாளரையும் கொண்டுள்ளது, இது தொகுப்புகளை நிறுவுவதையும் புதுப்பிப்பதையும் எளிதாக்குகிறது.
ஜூலியா AI க்கு ஏற்றது: ஜூலியா AI க்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இது அதிக செயல்திறன் கொண்ட, மாறும் வகையிலான மொழியாகும், இது விரைவான வளர்ச்சி மறு செய்கையை அனுமதிக்கிறது. இது நம்முடைய பயன்பாடுகளில் AI திறன்களைச் சேர்ப்பதை எளிதாக்கும் பரந்த அளவிலான நூலகங்களையும் தொகுப்புகளையும் கொண்டுள்ளது.
ஜூலியாவின் இணையான கணினித் திறன்கள் பெரிய தரவுத் தொகுப்புகளை மிகவும் திறமையான செயலாக்கத்திற்கு அனுமதிக்கின்றன, இது பல AI பணிகளுக்கு முக்கியமானது. கூடுதலாக, ஜூலியாவின் தொடரியல் கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதானது, இது அனைத்து திறன் நிலைகளிலும் உள்ளவர்களுக்கு அணுகக்கூடியதாக உள்ளது.
5.Scala:இது பைத்தானை விட கணிசமாக விரைவாக செயல்படக்கூடியது, மேலும் சிறந்த பொருள் சார்ந்த , செயல்பாட்டு நிரலாக்கத்தை ஒரு உயர்-நிலை மொழிக்கு கொண்டு வருகிறது. இது முதலில் ஜாவா மெய்நிகர் இயந்திரத்திற்காக(JVM) உருவாக்கப் பட்டது , ஜாவா குறிமுறைவரிகளுடன் எளிதாக தொடர்பு கொள்கிறது. மேம்படுத்துநர்கள் உயர்-செயல்திறன் அமைப்புகளை எளிதாக உருவாக்க முடியும், அதே நேரத்தில் நிலையான வகைகளை இதில் பயன்படுத்துவதன் மூலம் பிழைகளைத் தவிர்க்கலாம்.
முக்கிய வசதிவாய்ப்புகள்: இது மிகவும் அளவிடக்கூடியது , உயர் செயல்திறன் கொண்ட கணினியை ஆதரிக்கிறது, இது AI பயன்பாடுகளை உருவாக்குவதற்கு ஏற்றதாக அமைகிறது.
இதில்ல் ஒரு சுருக்கமான தொடரியல் உள்ளது, இது குறிமுறைவரிகளைப் படிக்கவும் எழுதவும் எளிதாக்குகிறது.
இது எந்த இயங்குதளத்திலும் சுதந்திரமாக இயங்குவதால் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
AI பயன்பாடுகளை உருவாக்குவதற்கு அவசியமான செயல்பாட்டு நிரலாக்கத்தை இது ஆதரிக்கிறது.
பொருள் சார்ந்த ,செயல்பாட்டு நிரலாக்கம் உட்பட பல நிரலாக்க முன்னுதாரணங்களை இது ஆதரிக்கிறது, இது AI வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைகிறது.
Scala ஆனது AIக்குஏன் சிறந்தது: இது அதன் அளவிடுதல், ஒத்திசைவு , செயல்திறன் காரணமாக AI மேம்பாட்டிற்கான சிறந்த தேர்வாகும். செயல்பாட்டு நிரலாக்கத்திற்கான அதன் ஆதரவு சிக்கலான AI தருக்கங்களின் வளர்ச்சியை எளிதாக்குகிறது. அதன் வகை அமைப்பு AI பயன்பாடுகளை குறியிடும்போது பிழைகளைத் தவிர்ப்பதை எளிதாக்குகிறது. கூடுதலாக, ஜாவாவுடனான இதனுடைய ஒருங்கிணைந்து இயங்கிடுகின்ற தன்மை, AI பயன்பாடுகளை உருவாக்கும் போது, ஏற்கனவே உள்ள ஜாவா நூலகங்கள் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மேம்படுத்துநர்களுக்கு உதவுகிறது.
6.ஜாவா: இது பல மென்பொருள் மேம்பாட்டு சூழல்களில் பயன்படுத்தப்படுகின்ற நம்பமுடியாத சக்திவாய்ந்த மொழியாகும். இது குறிப்பாக கைபேச பயன்பாடுகளின் இடத்தில் பரவலாக உள்ளது, அங்கு பல பயன்பாடுகள் அதன் செயற்கை நுண்ணறிவு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
முக்கிய வசதிவாய்ப்புகள்: ஜாவா அதன் நெகிழ்வுத்தன்மை, அளவிடுதல், இயங்குதளத்தின் சுதந்திரம் ஆகியவற்றின் காரணமாக AI க்கு சிறந்த மொழியாகும். இது ஒரு பொருள் சார்ந்த மொழியாகும், இது எளிதாக மட்டுப்படுத்தலை குறிமுறைவரிகளை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
AI க்கு Java சிறந்ததாக்குவது எது: AI மேம்பாட்டிற்கான தொகுப்புகளின் பெரிய நூலகத்தையும் ஜாவா கொண்டுள்ளது, AI சிக்கல்களுக்கு ஏற்கனவே உள்ள தீர்வுகளைக் கண்டறிவதை எளிதாக்குகிறது. கூடுதலாக, ஜாவா நன்கு ஆதரிக்கப்படுகிறது மேம்படுத்துநர்களின் மிகப்பெரிய சமூககுழுவினைக் கொண்டுள்ளது, இதுஉதவிகளை, ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.
திறமூல AI கட்டமைப்புகள்
திறமூல AI கட்டமைப்புகள் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கட்டமைப்புகள் ஆகும். இதற்காகவென புதியதாக சிக்கலான குறிமுறை வரிகளை எழுதாமல் புத்திசாலித்தனமான பயன்பாடுகளை உருவாக்க மேம்படுத்துநர்களை அவை அனுமதிக்கின்றன. திறமூல AI கட்டமைப்புகள் AI பயன்பாடுகளை உருவாக்குவதை எளிதாக்குகின்ற பல்வேறு வகையான கருவிகளையும் நூலகங்களையும் வழங்குகின்றன.
TensorFlow, Caffe, Theano, Torch, scikit-learn ஆகியவை பிரபலமான திறமூல AI கட்டமைப்புகளில் சிலவாகும். இந்த கட்டமைப்புகள் மேமபடுத்துநர்களுக்கு இயந்திரகற்ற் தருக்கங்கள், நரம்பணுபிணைய கட்டமைப்புகள், புோதுமானதாக்குதல் நுட்பங்கள்,தரவு செயலாக்க திறன்கள் போன்ற பலதரப்பட்ட வசதிகளை வழங்குகிறது. அவை GPUகள், TPUகள் , விநியோகிக்கப்பட்ட கணினியின் தொகுதிகள் போன்ற சக்திவாய்ந்த கணினி வளங்களுக்கான அணுகலையும் வழங்குகின்றன.
AI பயன்பாடுகளை உருவாக்க, பரிசோதிக்க, வரிசைப்படுத்த இந்த கட்டமைப்புகள் ஆய்வாளர்கள் , மேம்படுத்துநர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை மேம்படுத்துநர்களை விரைவாக முன்மாதிரிகளை உருவாக்கவும், பிழைத்திருத்தக் குறிமுறைவரிகளை உருவாக்கவும், உற்பத்தியில் பயன்பாடுகளை வரிசைப்படுத்தவும் உதவுகின்றன.
Tensorflow:இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற மென்பொருள் நூலகமாகும். இது நரம்பணுபிணையங்கள் போன்ற இயந்திர கற்றல் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற குறியீட்டு கணித நூலகம் ஆகும். இது Google இல் ஆய்வு, தயாரிப்பு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது தரவுப்பாய்வு வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டது, அங்கு கணுக்கள் கணித செயல்பாடுகளைக் குறிக்கின்றன , விளிம்புகள் அவற்றுக்கிடையே பாயும் தரவைக் குறிக்கின்றன. நெகிழ்வான கட்டமைப்பு பல்வேறு இயங்குதளங்களில் (CPUகள், GPUகள், TPUகள்), அத்துடன் மேசைக்கணினிகள் . சேவையாளர்களின் தொகுதிகளில் இருந்து கைபேசி, எட்ஜ் சாதனங்களுக்கு கணக்கீடுகளை எளிதாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
PyTorch:இது பைத்தானுக்கான திறமூல இயந்திர கற்றல் நூலகமாகும், இது நரம்பியல் வலைபின்னல்களை உருவாக்கவும் பயிற்சி செய்யவும் பயன்படுகிறது. இது Torch எனு் நூலகத்தினை அடிப்படையாகக் கொண்டது, மேலும் ஆழ்கற்றல் , மேம்படுத்தலுக்கான பரந்த அளவிலான வசதிகளை வழங்குகிறது. PyTorch கணினியின் பார்வை, இயற்கை மொழி செயலாக்கம் , வலுவூட்டலுடனான கற்றல் ஆகியவற்றிற்கான பல்வேறு கருவிகளையும் , நூலகங்களையும் வழங்குகிறது. கூடுதலாக, இது விநியோகிக்கப்பட்ட பயிற்சி கட்டமைப்பையும் திறமையான தரவு ஏற்றுதல் அமைப்பையும் வழங்குகிறது. இது பயன்படுத்த எளிதானது, அளவிடக்கூடியதாகவும், நீட்டிக்கக்கூடியதாகவும வடிவமைக்கப்பட்டுள்ளது.
முடிவாக
நிரலாக்க மொழிகள் அதிகஅளவில் அதிநவீனமாகி வருகின்றன, மேலும் அவை AI மேம்பாட்டிற்கு விரிவான ஆதரவை வழங்குகின்றன. AI மேம்பாட்டிற்காக Python, Java , C++ ஆகியன மிகவும் பிரபலமான நிரலாக்க மொழிகளாகும். பைதான் ஆனது AI மேம்பாட்டிற்கான மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாகும், ஏனெனில் அதன் பயன்பாட்டின் எளிமை , AI கருவிகளின் விரிவான நூலகம். ஜாவா அதன் வலுவான பொருள் சார்ந்த நிரலாக்க திறன்களின் காரணமாக AI மேம்பாட்டிற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான தருக்கங்கள் தரவு கட்டமைப்புகளைக் கையாள்வதற்கான அதன் சக்திவாய்ந்த திறன்களின் காரணமாக AI மேம்பாட்டிற்கு C++ ஒரு நல்ல தேர்வாகும்.
நிரலாக்க மொழிகள் AI வளர்ச்சியை சிறப்பாக ஆதரிக்கின்ற வகையில் தொடர்ந்து உருவாகிக்கொண்டுள்ளன. AI-உந்துதல் பயன்பாடுகளை உருவாக்குவதை எளிதாக்குகின்ற மேம்பட்ட AI நூலகங்கள் , கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. Prolog , Lisp போன்ற AI-சார்ந்த நிரலாக்க மொழிகளும் அதிகபிரபலமாகக்கூடும். கூடுதலாக, AI தருக்கங்கள் மிகவும் சிக்கலானதாக மாறும் போது, இந்த சிக்கலான தருக்கங்களை, தரவு கட்டமைப்புகளைக் கையாள மிகவும் வலுவான நிரலாக்க மொழிகள் தேவைப்படுகின்றன.

லுவா(Lua) எனும் எளிய கணினி மொழியைக் கற்றுக்கொள்க

லுவா என்பது எளிமைக்காகவும் செயல்திறனுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும், இது கானொளிகாட்சிவிளையாட்டிற்காக,பல்லூடக நிறுவனங்களால் பயன்பாட்டின்முன்-பக்க உரைநிரல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அற்புதமான சாளர மேலாளர், தொலைதூர கோப்பு மேலாளர், Howl உரை திருத்தி , அதன் தெளிவு சுத்தமான வடிவமைப் பிற்காக இன்னும் பல திறமூல செயல்திட்டங்களால் பயன்படுத்தப்படுகிறது. லுவா எனும் கணினிமொழியின் குறிமுறைவரிகளை மற்றவற்றுள் உட்பொதிக்கக்கூடியது, எனவே மற்றொருகணினி மொழியின் (ஜாவா, சி ,சி++ போன்றவை) குறிமுறைவரிகளுக்களுடன் லுவாவின் குறிமுறை வரிகளை எளிதாக சேர்க்கலாம், மேலும் ஒரு மீப்பெரிய C API உடன் தொடர்பு கொள்ளலாம். கானொளிகாட்சிவிளையாட்டு,பல்லூடகம் ஆகிய துறைகளில் நுழைவதற்கு லுவாவைக் கற்றுக்கொள்ள விரும்பினாலும் அல்லது அதிக வரம்பு இல்லாத எளிதான உரைநிரல் மொழியில் அதிக ஆர்வமாக இருந்தாலும், இந்த லுவா எனும் கணினிமொழியானது எளிதாக அணுகக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த நிரலாக்க மொழியாகும்.
லுவாவை நிறுவுகைசெய்தல்
Linux இல், தொகுப்பு மேலாளரைப் பயன்படுத்தி இதனை(Lua) நிறுவுகை செய்திடலாம். இதனுடைய விநியோகம் பின்னோக்கிய-இணக்கத்தின் ஆர்வத்தில் லுவாவின் பழைய பதிப்புகளை வழங்கலாம். பழைய பதிப்பை நிறுவுகைசெய்திட வேண்டாம் எனவிரும்பினால் சமீபத்திய பதிப்பை நிறுவுகைசெய்திடுக.
லுவா ( எனும் நிரலாக்க மொழி ஆனது Roblox ஆல் உருவாக்கப்பட்ட லுவா 5.1 இன் பிரபலமான fork ஆகும். Roblox நிரலாக்கத்திற்கு Luau அல்லது Lua ஐப் பயன்படுத்தினால், Lua 5.1 ஐ நிறுவுகைசெய்திடுக.
Windows அல்லது mac இயக்கமுறைமையில் நிறுவுகைசெய்திட அதற்கான, LuaDist ஐப் பார்வையிடுக.
லுவாவுடன் தொடங்குதல்
ஒரு உரை திருத்தியில் Lua குறிமுறைவரிகளை எழுதவிரும்பினால். சொல் செயலி அல்லது அலுவலக பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டாம். இதற்காக ஒரு எளிய பழைய உரை திருத்தி அல்லது IDE ஐப் பயன்படுத்திகொள்க, ஏனெனில் அவை குறிமுறைவரிகளை விளக்க வேண்டிய interpret நிரல்களைக் குழப்பக்கூடிய சிறப்பு வடிவமைப்பு எழுத்துகள் இல்லாமல் உரையை எளிய உரையாகச் சேமிக்கின்றன.
லுவா வின் குறிமுறைவரிகளின்பெரும்பாலான நிரல்களை பரவலாக பின்வருவன உள்ளிட்ட மூன்று பிரிவுகளாகஒழுங்கமைக்கலாம்:
சூழலை அமைத்தல்(Set up the environment): இந்தப் பிரிவில், நிரல் கிடைக்க விரும்பும் உறுப்புகளை நாம் அடையாளம் காணலாம். சில நிரல்களில், கூறுகள் வெறும் எழுத்துக்கள் எண்கள் ஆகியன மட்டுமே கொண்டிருக்கின்றன, மேம்பட்ட குறிமுறைவரிகளில் அவை வரைகலையை, ஒலியை உள்ளடக்கியிருக்கலாம்.
பொறியை உருவாக்கிடுதல்(Build the engine): இந்தப் பிரிவில், நாம் வழங்கிய உறுப்புகளை என்ன செய்ய வேண்டும் என்று லுவாவிடம் கூறுகின்றோம். அடிப்படை நிரல்களில், தரவு செயலாக்கப்பட்டு பதில் தயாரிக்கப்படுகிறது. மேம்பட்ட குறிமுறைவரிகளில், பயனர் பயன்பாட்டுடன் தொடர்பு கொள்ளும்போது இந்தப் பிரிவு ஒரு சுழற்சியில் இயங்கும்.
துவங்குதல்(Go): நம்முடைய குறிமுறைவரிகளை நாம் தொடங்கச் சொல்லும் வரை எதுவும் செய்யாது.
zombie apocalypseஎனும் வாய்ப்பு ஒன்றினைக் கணக்கிடும் எளிய லுவா உரைநிரலை எழுத விரும்புவதாக கொள்க (அல்லது குறைந்த பட்சம், ஒரு தீரற்ற எண்ணை உருவாக்கினால் அது zombie apocalypse இன் வாய்ப்பு என கூறலாம்). கணினியிலிருந்து சீறற்ற எண்ணைப் பெறுவது கடினம் லூவாவில்அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
— setup
math.randomseed(os.time())
myNumber = math.random(0,100)
— engine
function calculate()
print(“There is a ” .. myNumber .. “% chance of a zombie apocalypse today.”)
end
— go
calculate()
அமைவுப் பிரிவில், math.randomseed உடன் சீரற்ற எண் உருவாக்குவதைத் தொடங்குகின்றோம். சீரற்ற தன்மையின் ஆதாரமாக, இயக்க முறைமையால் அறிவிக்கப்பட்ட நேரத்தைப் பயன்படுத்துகின்றோம். இவை லுவாவின் உள்ளமைக்கப்பட்ட செயலிகள். நிரலாக்க மொழியின் அனைத்து உள்ளமைக்கப்பட்ட செயலிகளையும் யாரும் அறியத் தொடங்குவதில்லை, எனவே இது போன்ற கட்டுரைகளில், இணையத் தேடல்பணி அடிப்படையிலான லுவா ஆவணங்களைப் படிப்பதன் மூலம் அவற்றைப் பற்றி அறிந்து கொள்க.
அடுத்து, ஒரு மாறியை உருவாக்குகின்றோம். இந்த பயன்பாட்டிற்காக உருவாக்கிய ஒன்று, லுவாவில் கட்டமைக்கப்பட்ட ஒன்று அன்று என்பதை நினைவூட்டுவதற்காக மாறியின் பெயர்களை “my” எனும் முன்னொட்டுடன் வைத்திடுக. ஒரு மாறி என்பது மாறக்கூடிய (அல்லது நிரலாக்க சொற்களில் “மாற்றக்கூடிய”) மதிப்பு ஆகும்.இதற்காக கணினியின் தற்காலிக நினைவிடத்தில் தேவையான காலி இடத்தைக் கோருகின்றோம் தரவைச் சேமித்து வைத்திருக்கின்றோம், எனவே நாம் அதை பின்னர் பயன்படுத்தலாம். இந்த நிலையில், நாம் உருவாக்கும் மாறி 0 , 100ஆகியவற்றிற்கு இடையே உள்ள எண்ணைத் தேர்ந்தெடுக்க Lua இன் math.random எனும் செயலியைப் பயன்படுத்துகிறது. மீண்டும், இது ஒரு உள்ளமைக்கப்பட்ட செயலியாகும்.
பொறியின்( engine) பிரிவில், நம்முடைய சொந்த செயலியை உருவாக்கு கின்றோம், அதை கணக்கிடுதல் எனக்கூறலாம். இந்த பயன்பாட்டின் சூழலில் அது அர்த்தமுள்ளதாக இருப்பதைத் தவிர, கணக்கிடுதல் என்ற சொல்லில் சிறப்பு எதுவும் இல்லை. செயலிகளை நடைமுறையில் எதையும் பெயரிடலாம். நாம் எதை அழைத்தாலும், இது உண்மையில் ஏதாவது செய்யும் நம்முடைய குறிமுறைவரிகளின் பகுதியாகும். பெரும்பாலான கணினி நிரல்களில் பல செயலிகள் உள்ளன, ஆனால் இது ஒரு எளிய பயன்பாடு, எனவே இதில் ஒன்று மட்டுமே உள்ளது. கணக்கீட்டு செயலியானதுதிரையில் உரையைக் காண்பிக்க உள்ளமைக்கப்பட்ட லுவா அச்சிடு(Print Lua) எனும் செயலியைப் பயன்படுத்திகொள்கிறது. நாம் யூகிக்கக்கூடியது போன்று, லுவாவில் உள்ள இரண்டு புள்ளிகள் (..) ஒரு கூற்றின் தொடர்ச்சியைக் குறிக்கின்றன, இது ஆங்கிலத்தில் ellipsis செய்வது போன்றது.
இறுதியாக, go எனும் பிரிவு கணக்கீட்டு செயலியை இயக்குகிறது. ஒரு செயலியை இயக்க மறந்துவிட்டால், நம்முடைய பயன்பாடு ஒருபோதும் இயங்காது. துவக்கிக்கான பொத்தானைஅழுத்தாமல் மகிழ்வுந்தினை இயங்குவதற்காக உட்கார்ந்திருப்பது போன்றதாகும்.
labels பிரிவின் அமைப்பு, engine, goஆகிய கட்டளைகள் உள்ளன. லுவாவில் உள்ள கட்டளைகள் இரண்டு முன்புற கோடுகளால் (–) என்றவாறு குறிக்கப்படுகின்றன, மேலும் அந்த வரியை புறக்கணிக்குமாறு லுவாவிடம் வெளிப்படையாகக் கூற இது ஒரு வழியாகும். வேறு சொற்களில் கூறுவதெனில், setup, engine, go ஆகியவை Luaவின் முக்கிய சொற்கள் அல்ல, மேலும் அவை நம்முடைய குறிமுறைவரிகளில் தேவையில்லை. நம்முடைய குறிமுறைவரிகளைஎவ்வாறு கட்டமைப்பது என்பதை நினைவில் கொள்வதற்கு அவை ஒரு பயனுள்ள வழியாகும்.
இந்த பயன்பாட்டை சில முறை இயக்க முயற்சித்திடுக:
$ lua ./zombie.lua
There is a 78% chance of a zombie apocalypse today.
$ lua ./zombie.lua
There is a 10% chance of a zombie apocalypse today.
நிபந்தனைகள்
மிகக் குறைந்த அளவில், கணினிகள் இருமஎண்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இயங்குகின்றன. (1) அல்லது இல்லை (0) ஆகிய மின் சமிக்ஞைகள் உள்ளன. இது குறிமுறைவரிகளிலும் வெளிப்படுகிறது, மேலும் இிருமஎண்களின் நிலையை வெளிப்படுத்துவதற்கு நவீன நிரலாக்க மொழிகள் வழங்கும் உன்னதமான முறைகளில் ஒன்று if-then எனும் கூற்றாகும்.
ஒரு if-then கூற்றானது, கணினி இதுவரை சேகரித்த தரவை பகுப்பாய்வு செய்ய வைக்கிறது, அதை நாம் வரையறுக்கும் சில தன்னிச்சையான நிபந்தனைகளுடன் ஒப்பிட்டு, பின்னர் அது கண்டுபிடித்ததன் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்திடுக. நம்முடைய முதல் லுவா பயன்பாட்டை மிகவும் ஆற்றல்மிக்கதாக மாற்ற, நம்முடைய செயலியில் if-then எனும் கூற்றினைச் சேர்க்கலாம்:
function calculate()
print(“There is a ” .. myNumber .. “% chance of a zombie apocalypse today.”)
if myNumber > 50 then
print(“Take an umbrella!”)
else
print(“It’s a good day for gardening!”)
end
end
இந்த if-then எனும் கூற்றானது பயன்பாட்டின் தற்போதைய இயக்கம் என்ன கூற்றினை செய்கிறது என்பதைத் தீர்மானிக்க ஒரு சிறிய அடிப்படைக் கணக்கீட்டினைப் பயன்படுத்துகிறது. ஒரு zombie apocalypse இற்கு 50% க்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தால், பயனருக்கு சில பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படும். இல்லையெனில், வாய்ப்பு 50 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும், எனவே வெவ்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு எளிய நிபந்தனையாகும், இது கணினி உருவாக்கிய சீரற்ற எண்ணை பகுப்பாய்வு செய்து, அதன் முடிவின் அடிப்படையில் ஒன்று அல்லது மற்றொரு செயலை எடுக்க வேண்டும்.முடிவுகளைக் காண குறிமுறைவரிகளை இயக்கிடுக:
$ lua ./zombie.lua
There is a 71% chance of a zombie apocalypse today.
Take an umbrella!
$ lua ./zombie.lua
There is a 65% chance of a zombie apocalypse today.
Take an umbrella!
$ lua ./zombie.lua
There is a 12% chance of a zombie apocalypse today.
It’s a good day for gardening!
லுவாவில் நாம் பயன்படுத்தக்கூடிய repeat-until, while, for, ஆகியனபோன்ற பல்வேறு வகையான நிபந்தனைக் கட்டுப்பாடுகள் உள்ளன.
லுவாவை கற்றல்
நிரலாக்கம் செய்வது எவ்வாறு எனமுழுவதுமாக தெரிந்துகொண்டு யாரும் நிரலாக்கம் பணியை துவங்குவதில்லை. குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது என்பதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தால், லுவாவை தொடங்குவது ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இது ஒரு நிரலாளராக நம்முடைய புதிய வாழ்க்கையை எளிதாக்குவதற்கான வசதிகளைக் கொண்ட சிறிய கணினிமொழியாகும். நாம் பயன்படுத்தாத பல edge-case செயலிகளுடன் இது நம்மை குழப்பமடைய செய்வதில்லை. அதற்குப் பதிலாக, நாம் என்ன செய்ய விரும்புகின்றோமோ இது அதைச் செய்யும் நம்முடைய சொந்த தனித்துவமான செயலிகளை உருவாக்க தேவையான கட்டமைப்புத் தொகுப்புகளை இது(Lua) வழங்குகிறது. லுவாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதற்கான ஆவணங்களில் கிடைக்கின்றன, ஆனால் நாம் இந்த கணினி மொழியைத் தொடர்ந்து படிக்க விரும்பினால், இதற்கான மின்புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்ளலாம். அதனை படித்துமுடித்தால், நம்மால் லுவாவின் அனைத்து அடிப்படைகளையும் அறிந்து(தெரிந்து) கொள்ளமுடியும்.
/மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.lua.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

V எனும் புதியகணினிமொழி

V எனும் நிரலாக்ககணினிமொழியானது செயல்திட்டங்களை உருவாக்கு வதற்கான எளியகணினி மொழியாகும். வார இறுதிவிடுமுறை நாட்களில் மட்டும் இதனுடைய ஆவணங்களைப் படிப்பதன் மூலம் இந்த கணினி மொழியை முழுமையாக கற்றுக்கொள்ளமுடியும், பெரும்பாலான சூழ்நிலைகளில், ஏதாவது செய்ய இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது எளிமையான, படிக்கக்கூடிய பராமரிக்கக்கூடிய குறிமுறைகளை உருவக்க அனுமதிக்கிறது. இதனுடைய குறிமுறைவரிகள் மிகஎளிமையாக இருந்தாலும், V எனும் கணினிமொழியானது கணினி பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது கணினி மென்பொருள் நிரலாக்கம், இணையதள பக்கங்களை உருவாக்குதல், விளையாட்டுகளை உருவாக்குதல், GUI உருவாக்குதல், கைபேசி பயன்பாடுகள் உருவாக்குதல், அறிவியல்ஆய்வுகள், உட்பொதிக்கப்பட்டகருவிகள், போன்ற அனைத்து துறைகளிலும் இதனை பயன்படுத்திகொள்ளலாம். இந்த V எனும் கணினிமொழியானது முதல் அடுக்கில் . மதிப்பு வகைகள் சரத்தின் இடையகங்களைப் பயன்படுத்தி தேவையற்ற ஒதுக்கீடுகளை(allocations) செய்வதைத் தவிர்க்கிறது, ஒரு எளிய சுருக்கமாக இல்லாத குறிமுறை வரிகளின் பாணியை மேம்படுத்திடுகிறது. பெரும்பாலான பொருட்கள் (~90-100%) V இன் தன்னியக்க-கட்டணமற்ற இயந்திரத்தால் விடுவிக்கப்படுகின்றன: பயன்பாட்டினை தொகுக்கும் போது தேவையான கட்டணமற்ற அழைப்புகளை இயந்திர மொழிமாற்றியை தானாகவே செருகிகொள்ளும். மீதமுள்ள சிறிய சதவீத பொருட்கள் GC வழியாக விடுவிக்கப்படுகின்றன. மேம்படுத்துநர்கள் தங்கள் குறிமுறைவரிகளில் எதையும் மாற்ற வேண்டியதில்லை. Python, Go , Java போன்ற கணினி மொழிகளை போன்றே “இது செயல்படுகிறது”, தவிர, ஒவ்வொரு பொருளுக்கும் கனமான GC அல்லது விலையுயர்ந்த RC எதுவும் இதில்இல்லை. V எனும் கணினிமொழியானது Go எனும் கணினிமொழியுடடன் மிகவும் ஒத்திருக்கிறது
முக்கியவசதிவாய்ப்புகள் • இயல்புநிலையாக மாறாத மாறிகள் • முன்னிருப்பாக தூய செயல்பாடுகள் • இயல்புநிலையாக மாறாத கட்டமைப்புகள் • வாய்ப்பு/முடிவு(Option/Result) , கட்டாய பிழை சோதனைகள் • எளிய, படிக்கக்கூடிய பராமரிக்கக்கூடிய குறிமுறைவரிகளை உருவாக்க உதவுகின்றது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/vlang/v எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

சி எனும் கணினிமொழியைக் கற்பதற்கான ஐந்து எளியவழிகள்

சி எனும் கணினி மொழி ஏன் நீண்ட காலமாக நீடித்து நின்றுவருகின்றது என்பது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. ஒருவேளை அது அதன் தொடரியல் அல்லது அதன் சொற்களஞ்சிம் ஆகியவற்றின் எளிமை. அல்லது C எனும் கணினி மொழியானது பெரும்பாலும் ஒரு பயனுள்ள மொழி என்பது போன்ற காரணமாககூட இருக்கலாம், அது தளத்திற்கு தேவைப்படாத ஒன்றினை கட்டமைப்பதற்கானப் பொருளாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளது, ஏனெனில் இது கணினியின் எந்தவொரு புதிய அமைவிற்கும் சொந்த அடித்தளமாக திகழ்கின்றது. சி எனும் கணினி மொழி தெளிவாக ஒரு சக்திவாய்ந்த கணினி மொழியாகும், மேலும் அதன் நீண்ட ஆயுளுக்கும் அது மற்ற பிரபலமான தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படையாக ஊக்கமளிப்பபதாக தோன்றுகின்றது. C எனும்கணினிமொழியை கற்றுபயன்படுத்த விரும்புகின்ற அனைவருக்கும் பொதுவான ஐந்து தொழில்நுட்பங்கள் பின்வருமாறு, மேலும் இவை ஒவ்வொன்றும் C எனும் கணினி மொழி பற்றி மேலும் நன்கு அறிந்து கொள்ளவும் நமக்கு உதவக்கூடும்.
1. GObject , GTK: சிஎனும் கணினி மொழி ஒரு பொருள் சார்ந்த நிரலாக்க மொழி அன்று. இதில் இனக்குழு(class)வகை இல்லை. சிலர் பொருள் சார்ந்த நிரலாக்கத்திற்காக C++ ஐப் பயன்படுத்திகொள்கின்றனர், ஆனால் மற்றவர்கள் GObject நூலகங்களுடனும் Cஎனும் கணினி மொழியுடனும் ஒட்டிக் கொள்கின்றனர். GObject எனும் துணை அமைப்பானது C மொழிக்கு ஒரு இனக்குழு (class) கட்டமைப்பை வழங்குகிறது, மேலும் GTK எனும் செயல் திட்டமானது C மூலம் அணுகக்கூடிய விட்ஜெட்களை பிரபலமாக வழங்குகிறது. GTK இல்லாமல், GIMP (GTK உருவாக்கப்பட்டது), GNOME , நூற்றுக்கணக்கான பிற பிரபலமான திறமூல பயன்பாடுகள் இருக்காது. மேலும் GObject , GTK ஆகியவை வரைகலை பயனாளர் இடைமுக(GUI) நிரலாக்கத்திற்காக C மொழியைப் பயன்படுத்தத் துவங்குவதற்கான சிறந்த வழிகளாகும்.. சி மெழியைப் பயன்படுத்தி வரைகலை பயன்பாடுகளைப் பெறுவதற்கு அவை நன்கு பொருத்தமாக உள்ளன. இனக்குழு(class) , தரவு வகைகள் வரையறுக்கப் பட்டுள்ளன, widgets செய்யப்பட்டுள்ளன, மேலும் நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவைகளை ஒன்றாகச் சேர்ப்பது மட்டும்தான்.
2. Ncurses: முந்தைய பகுதியில் கண்டGTKஆனது நமக்குத் தேவையானதை விட அதிகமாக இருந்தால், முனைமபயனாளர் இடைமுகம்(TUI) ஆனது நம்முடைய வேகம் அதிகம் என்பதை நாம் தீர்மானிக்கலாம். ncursesஎனும் நூலகம் ஒரு முனையத்தில் “விட்ஜெட்டுகளை” உருவாக்குகிறது, இது நம்முடைய முனைய சாளரத்தில் வரையப்படும் வரைகலை பயன்பாட்டை உருவாக்குகிறது. சுட்டி இல்லாமல் GUI பயன்பாட்டைப் பயன்படுத்துவதைப் போலவே பொத்தான்கள் , உறுப்புகள் (elements) ஆகியவற்றினைத் தேர்ந்தெடுத்து, நம்முடைய அம்புக்குறி விசைகள் மூலம் இடைமுகத்தைக் கட்டுப்படுத்தலாம்.
3.Lua ,Moonscript: லுவா என்பது உள்ளமைக்கப்பட்ட சிமொழியின் API மூலம் சிமொழியின் நூலகங்களை அணுகக்கூடிய உரைநிரலாக்க மொழியாகும். இது சுமார் 30 செயலிகளையும், ஒரு சில உள்ளமைக்கப்பட்ட நூலகங்களையும் கொண்ட ஒரு சிறிய, எளிமையான விரைவாக செயல்படும் கணினி மொழியாகும். அமைவின் தானியங்கி, விளையாட்டு நிலை உரைநிரல், LÖVE போன்ற முன்னோடியுடன் விளையாட்டின் மேம்பாடு அல்லது GTK ஐப் பயன்படுத்தி பொதுவான பயன்பாட்டு மேம்பாடு ( Howl text editor போன்றவை) ஆகியவற்றிற்காக Lua உடன் தொடங்கலாம்.
4. Cython: இந்த Cython உடன் இடைமுகம் செய்யும் ஒரே மொழி Lua அன்று. பைதான் குறிமுறைவரிகளை எழுதுவதைப் போலஇது Python க்கு Cமொழியின் நீட்டிப்புகளை எழுதுவதை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மொழிமாற்றியும் மொழியுமாகும். முக்கியமாக, பைத்தானின் குறிமுறைவரிகளை கூட C மொழியுடன் முடிக்கலாம். சாத்தியமான எளிய எடுத்துக்காட்டு:
print(“hello world”)
Create a setup.py script:
from setuptools import setup
from Cython.Build import cythonize
setup(
ext_modules = cythonize(“hello.pyx”)
)
தொடர்ந்து அமைவு உரைநிரலை இயக்கிடுக:
$ python3 ./setup.py
நாம் hello.c எனும் கோப்பை , hello.cpython-39-x86_64-linux-gnu.so என்றவாறு அதே கோப்பகத்தில் முடித்திடலாம்.
Cython என்பது பைத்தானின் superset ஆகும், இது C செயலிகள் , தரவு வகைகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது C ஐக் கற்றுக்கொள்வதற்கு நேரடியாக நமக்கு உதவ வாய்ப்பில்லை, ஆனால் பைதான் மேம்படுத்துநருக்கு C குறிமுறைவரிகளைக் கற்று பைத்தானில் ஒருங்கிணைக்க புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.

5. FreeDOS:C மெழிபற்றி மேலும் அறிய சிறந்த வழி C இல் குறிமுறை வரிகளை எழுதுவதாகும், மேலும் நாம் உண்மையில் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகளை எழுதுவதை விட அற்புதமான வேறுஎதுவும் இல்லை. .FreeDOS செயல் திட்டம் என்பது விண்டோவின் முன்னோடியான DOS இன் திறமூல செயலாக்கமாகும். ஏற்கனவே FreeDOS ஐப் பயன்படுத்தியிருக்கலாம், BIOS நிகழ்நிலைபடுத்துவதை இயக்குவதற்கான எளிய திறமூல முறையாகவோ அல்லது ஒரு உன்னதமான கணினி விளையாட்டை விளையாடுவதற்கு முன்மாதிரியாகவோ இருக்கலாம். அதை விட FreeDOS மூலம் நிறைய செய்ய முடியும். நம்முடைய சொந்த கட்டளைகள், எளிய (அல்லது விரும்பினால் அவ்வளவு எளிமையானது அன்று) பயன்பாடுகளை எழுத ஊக்குவிக்கும் கருவிகளின் தொகுப்புடன் C மொழியைக் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது. நிச்சயமாக எந்த OS இல் C மொழியின் குறிமுறைவரிகளையும் எழுதலாம், ஆனால் FreeDOS ஆனது ஒரு எளிமையானது, புத்துணர்ச்சியுடன் C மொழியின் குறிமுறைவரிகளை எழுதலாம்.

வானமே எல்லை, ஆனால் தரை மட்டத்தில் கூட, சி மெழியின் மூலம் சில அற்புதமான வேடிக்கையான செயல்களைகூடச் செய்யலாம்.

ஊடாடும் இணைய பயன்பாட்டை உருவாக்க R எனும் கணினி மொழியைப் பயன்படுத்தி கொள்க

தற்போது தரவு பகுப்பாய்வு எனும் பணி நிறுவனங்களுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது, மேலும் பயனர் நட்புடனான இடைமுகங்களைக் கொண்ட தரவினை இயக்கிடும் பயன்பாடு களுக்கு பெரும் தேவையும் உள்ளது. தரவுஅறிவியலுக்கான பிரபலமான நிரலாக்க மொழியான R இல் உள்ள Shiny எனும் தொகுப்பைப் பயன்படுத்தி ஊடாடும் இணைய பயன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.இன்று உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வணிகநிறுவனமும் ஏதோ ஒரு வகையில் தரவுகளை நம்பியுள்ளது. உண்மையில், நிதி, வங்கி, சில்லறை விற்பனை, தளவாடங்கள், மின்-வணிக, போக்குவரத்து, விமான ஆகிய நிறுவனங்கள் அல்லது வேறு எந்த வகை நிறுவனங்களும் தரவு சார்ந்த பயன்பாடுகளைப் பயன்படுத்தி பல வணிக நடவடிக்கைகளை செயல்படுத்திடுவதற்காக தரவு அறிவியல் பேருதவி புரிகின்றது. , முன்பெல்லாம் முன்கணிப்பு செய்வதற்கு பல மணிநேரங்களை எடுத்து கொள்வதைக் காட்டிலும் இன்று அதிக செயல்திறன் கொண்ட கணினிகளும் குறைந்த விலை சேமிப்பகமும் சில நிமிடங்களில் முடிவுகளைஎளிதாகக் கணிக்க அனுமதிக்கிறது. எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் தரவு ஆய்வாளர்கள் உயர் செயல்திறனின்பல பரிமாண காட்சிப்படுத்தல் மூலம் பயன்படுத்த எளிதான பயன்பாடுகளை உருவாக்கி வருகின்றனர். இவை அனைத்தும் பெரிய தரவுகளுடன் மட்டுமே தொடங்குகிறது, இதில் அளவு,பன்முகத்தன்மை விரைவு(velocity)ஆகிய மூன்று கூறுகள் உள்ளன. இந்த தரவுகளிலிருந்து தருக்கபடி முறையின் மாதிரிகள் வழங்கப்படுகின்றன. இயந்திர கற்றல் , செயற்கை நுன்னறிவில்(AI) பணிபுரியும் அதிநவீன தரவு ஆய்வாளர்கள் தங்கள் பிழைகளை சுய-மேம்படுத்துதல், கண்டறிதல், கற்றுக் கொள்ளுதல் ஆகிய மாதிரிகளை உருவாக்குகின்றனர். தரவு அறிவியல் துறையில் தரவுகளை பயனுள்ள தகவலாக மாற்ற புள்ளியியலும் கணினியும் பயன்படுத்தப்படுகிறது, இது பெரும்பாலும் தரவு இயக்க அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. தரவு அறிவியல் என்பது புதிய நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கும் தேர்வுகளைச் செய்வதற்கும் பல்வேறு துறைகளில் இருந்து தரவை சேகரிக்கவும், பகுப்பாய்வுசெய்வதற்கானதும் விளக்கமளிப்பதற்கானதுமான வழிமுறைகளின் தொகுப்பு ஆகும். தரவு அறிவியலை உருவாக்குகின்ற தொழில்நுட்ப துறைகளில் புள்ளியியல், நிகழ்தகவு, கணிதம், இயந்திர கற்றல், வணிக நுண்ணறிவு ,சில நிரலாக்கங்கள் ஆகியவை அடங்கும். தரவு அறிவியலை பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தலாம் (படம் 1). பெரிய, சிக்கலான தரவுத் தொகுப்புகளின் பகுப்பாய்வு தரவு அறிவியலின் மையமாகும். இது ஒரு புதிய உலகை உருவாக்க உதவுகின்றது, அதில் தரவு முற்றிலும் புதிய வழிகளில் காணப்படுகிறது. அமேசான், கூகுள் , ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வணிக நுண்ணறிவிற்கும் முடிவெடுப்பதற்கும் தரவு அறிவியல் கொள்கைகளைப் பயன்படுத்திகொள்கின்றனர்.
R: எனும் தரவு அறிவியலுக்கான கணினிமொழி
தகவல்கள் அதிகஅளவில் இருப்பதால் தரவு பகுப்பாய்வும், நுண்ணறிவும் மிக அவசரமாக தேவைப்படுகிறது. மூல தரவானது பல தொழில்நுட்பங்களின் உதவியுடன் முடிக்கப்பட்ட தரவின் தயாரிப்புகளாக மாற்றப்படுகிறது.
தரவு அறிவியலுக்கான R இன் முக்கிய வசதிவாய்ப்புகள்பின்வருமாறு:
தரவு முன் செயலாக்கம், சமூக ஊடகப் பெறுதலும் பகுப்பாய்வும், தரவுச் சட்டங்களில் வகைப்படுத்தப்பட்ட செயல்பாடுகள், பிரித்தெடுத்தல், மாற்றுதல், பதிவேற்றுதல் (ETL) , SQL , விரிதாள்கள் உட்பட பல்வேறு தரவுத்தளங்களுக்கான இணைப்பு, NoSQL தரவுத்தளங்களுடன் இடைமுகம், மாதிரிகளுடன் பயிற்சியும் கணிப்பும், இயந்திர கற்றல் மாதிரிகள், ,கொத்தாக்கம், Fourier நிலைமாற்றம், Web scraping ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது
R என்பது புள்ளிவிவரக் கணக்கீடு , தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வலுவான நிரலாக்க மொழியாகும். R இன் பயனர் இடைமுகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பல தரவு அறிவியல் குழுக்கள் R இன் வளர்ச்சியை ஒரு எளிய உரை திருத்தியிலிருந்து தற்போதைய ஊடாடும் R Studio, Jupyter குறிப்புத்தாட்கள் வரை மேம்படுத்தியுள்ளன. அதாவதுஉலகம் முழுவதும் உள்ள R பயனர்களின் பங்களிப்புகள் மட்டுமே இதை சாத்தியமாக்கியுள்ளன. R இல் வலுவான தொகுப்புகளைச் சேர்ப்பது காலப்போக்கில் அதை அதிக சக்தி வாய்ந்ததாக ஆக்கியுள்ளது. ஏராளமான கட்டற்ற தொகுப்புகள், பெரிய தரவுத் தொகுப்புகளுடன் செயல்படுவதையும், தரவைக் காட்சிப்படுத்துவதையும் எளிதாகவும் திறமையாகவும் ஆக்கியுள்ளன.

Shinyஐப் பயன்படுத்தி R இல் ஊடாடும் இணையப் பயன்பாடுகளை உருவாக்குதல்
Shinyஎனும் தொகுப்பைப் பயன்படுத்தி R இல் ஊடாடும் இணையப் பயன்பாடுகளை உருவாக்கலாம். பயன்பாடுகளை இணையதளத்தில் புரவலராகச் செய்யலாம், Markdown ஆவணங்களில் உட்பொதிக்கலாம் அல்லது முகப்புதிரை களையும் காட்சிப்படுத்தல்களையும் உருவாக்கிடுவதற்காகப் பயன்படுத்தலாம். CSS வண்ணகாட்சிகள், HTML பொருட்கள், ஜாவாஉரைநிரலின் செயல்கள் அனைத்தையும் Shiny பயன்பாடுகளைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தி கொள்ளலாம்.
Shiny என்பது ஒரு R இன் கருவியாகும், இது ஊடாடும் இணைய பயன்பாடுகளை உருவாக்குவதை எளிதாக்குகிறது. R குறிமுறைவரிகளை இணையத்தில் நீட்டிக்க இது அனுமதிக்கிறது, இதைப் பயன்படுத்தக்கூடிய பெரிய சமூககுழுவிலிருந்து பயனடையலாம்.
இந்த Shinyஇன் உள்ளமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலாக, shinythemes, shinydashboard, shinyjs போன்ற பல மூன்றாம் தரப்பு நீட்டிப்பு தொகுப்புகள்கூட உள்ளன.
Shinyஐப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய பல்வேறு பயன்பாடுகளும் உள்ளன. அவற்றில் சிலவற்றின் பட்டியல் பின்வருமாறு. இயந்திர கற்றல் அடிப்படை யிலான இணைய பயன்பாடுகள், இயக்கநேரக் கட்டுப்பாடுகள் கொண்ட இணைய பயன்பாடுகள், தரவு-உந்துதல் முகப்புதிரைகள், பல தரவு தொகுப்புகளுக்கான ஊடாடும் பயன்பாடுகள், நிகழ்நேர தரவு காட்சிப்படுத்தலின் பலகங்கள், தரவு சேகரிப்பு படிவங்கள்,
இணைய பயன்பாடுகளை பின்வருவனவாக பிரிக்கலாம்: பயனர் இடைமுகம் , சேவையாளர் செயல்பாடு , பயன்பாட்டின் செயலி ,Shinyஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயன்பாடுகளில் ஒன்று படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது (https://shiny.rstudio.com/gallery/radiant.html).


1
விற்பனை முகப்புத்திரையின் உருவாக்கம்: விற்பனை முகப்புத்திரையுடன் தொடர்புடைய இணைய பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளின் துணுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகப்புத்திரையில் பல கட்டுப்பாடுகளும் தரவை காண பயனர் இடைமுக தொகுதிகளும் உள்ளன. முதலில், ஷைனி தொகுப்பு நிறுவுகைசெய்திடுக, பின்னர் அது குறிமுறைவரிகளில் அழைத்திடுக, தொடர்ந்து இதனுடைய வெளியீட்டினை ஒரு இணையப்பக்கத்தின் வடிவத்தில் வழங்கிடுக.
library(shiny)
library(dplyr)

sales <- vroom::vroom(“salesdata.csv”, na = “”)
ui <- fluidPage(
titlePanel(“Dashboard for Sales Data”),
sidebarLayout(
sidebarPanel(
selectInput(“territories”, “territories”, choices = unique(sales$territories)),
selectInput(“Customers”, “Customer”, choices = NULL),
selectInput(“orders”, “Order number”, choices = NULL, size = 5, selectize = FALSE),
),
mainPanel(
uiOutput(“customer”),
tableOutput(“data”)
)
)
)
server <- function(input, output, session) {
territories <- reactive({
req(input$territories)
filter(sales, territories == input$territories)
})
customer <- reactive({
req(input$Customers)
filter(territories(), Customers == input$Customers)
})

output$customer <- renderUI({
row <- customer()[1, ]
tags$div(
class = “well”,
tags$p(tags$strong(“Name: “), row$customers),
tags$p(tags$strong(“Phone: “), row$contact),
tags$p(tags$strong(“Contact: “), row$fname, “ “, row$lname)
)
})

order <- reactive({ req(input$order) customer() %>%
filter(ORDER == input$order) %>%
arrange(OLNUMBER) %>%
select(pline, qty, price, sales, status)
})

output$data <- renderTable(order())

observeEvent(territories(), {
updateSelectInput(session, “Customers”, choices = unique(territories()$Customers), selected = character())
})
observeEvent(customer(), {
updateSelectInput(session, “order”, choices = unique(customer()$order))
})

}
shinyApp(ui, server)
2
இந்த Shiny பயன்பாட்டின் குறிமுறைவரிகளை இயக்கும்போது, ​​படம் 3 இல் காட்டப்பட்டுள்ள வெளியீடு உருவாக்கப்படும், அதை எந்த இணைய உலாவியிலும் காண முடியும். விற்பனை முகப்புத்திரையில் பல கட்டுப்பாடுகள் உள்ளன மிகவும் ஊடாடும். வெவ்வேறு பயனர் இடைமுக தொகுதிகளுடனும் உள்ளன

3
Shiny மேகக்கணியைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த பயன்பாட்டை இணையத்தில் எந்த நேரத்திலும் எங்கும் கிடைக்கும் வகையில் மேககணினியில் வரிசைப்படுத்தலாம் புரவலராக செய்யலாம்.

Shinyஐப் மேககணினியின் 25 மாறுபட்ட செயலில் உள்ள நேரங்களுக்குள் ஐந்து பயன்பாடுகளை பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆய்வாளர்களும் தரவு ஆய்வாளர்களும் R இன் ஷைனி நூலக்ததினைப் பயன்படுத்தி நிகழ்நேரத் தரவைக் கொண்டு இயக்கப்படும் பயனர் நட்பு பயன்பாடுகளை உருவாக்கலாம். இந்த நூலகம் தங்களுடைய இயந்திர கற்றல் பயன்பாடுகளை இணைய தளங்களில் பயன்படுத்திகொள்ளவும் பயன்படுத்திகொள்ளலாம்.

ஜூலியா , பைதான் ஆகிய இரண்டில்: எந்த கணினிமொழி விரைவாக செயல்படக் கூடியது?

ஜூலியா என்பது மிகஅதிகசுருக்கமான ஒரு இயக்கநேர நிரலாக்க மொழியாகும். இது எந்தவொரு நிரலையும் உருவாக்க ஒரு பொது-நோக்கு கணினிமொழியாக இருந்தாலும், இது எண்ணியல் பகுப்பாய்வு , கணக்கீட்டு ஆய்விற்கு மிகவும் பொருத்தமான பல பண்புகளைக் கொண்டுள்ளது.
பைதான்ஆனது 1990 களின் முற்பகுதியில் ஒரு எளிய பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாக வடிவமைக்கப்பட்டது, ஆனால் அதன் பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துவருகின்றது. இந்த கட்டுரையில் நரம்பியல் பிணையவமைப்புகள், இயந்திர கற்றல் ஆகியவற்றில் இவ்விரண்டு கணினிமொழிகளின் செயல்திறனை ஆழமாகப் ஆய்வு செய்யவிருக்கின்றது.
ஜூலியாவின் கட்டமைப்பு இதனை ஒரு இயக்கநேர நிரலாக்க மொழியில் நிலையளவுருக்களை சார்ந்த பல்லுருப்பு பெறலையும் , அதன் முதன்மை நிரலாக்க மாதிரியாக அனுப்புகின்ற பல நிரலாக்க முன்னுதாரணத்தையும் கொண்டுள்ளது. இது செய்தி அனுப்புகின்ற இடைமுகம் (MPI) அல்லது உள்ளமைக்கப்பட்ட ‘OpenMP-style’ எனும்புரிகளை அல்லது இடைநிலையிலான குறிமுறைவரிகளில்லாமல் C , FORTRAN ஆகிய கணினிமொழிகளின் நூலகங்களை ஒரே நேரத்தில் நேரடியாக அழைக்கின்றவாறு இணையான, விநியோகிக்கப்பட்ட கணினியை அனுமதிக்கிறது. ஜூலியா ஆனது ஒரு சரியான நேரத்தில் ( just-in-time (JIT)) இயந்திர மொழிமாற்றியைப் பயன்படுத்திகொள்கின்றது, ஜூலியாவின் சமூக குழுவானது இதனை ‘just-ahead-of-time’’ (JAOT) என்று குறிப்பிடுகிறது, ஏனெனில் இதனை இயக்கும் முன்பாகவே இயல்புநிலையாக இயந்திரக் குறியீட்டிற்கு எல்லா குறிமுறை வரிகளையும் தொகுக்கிறது.
பைதான் போலல்லாமல், ஜூலியா குறிப்பாக புள்ளிவிவரங்கள், இயந்திர கற்றல் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூலியாவானது நேரியல் இயற்கணிதம் வழியாக பறந்து செல்ல முடியும்,

அதே சமயம் பைதான் ஆனது நேரியல் இயற்கணிதம் வழியாகச் செல்லமட்டுமே முடியும். ஏனெனில், இயந்திரக் கற்றலுக்குத் தேவையான அனைத்து அணிகளுக்கும் (matrices) சமன்பாடுகளுக்கும் இடமளிக்கும் வகையில் பைதான் ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை. ஆயினும் பைதான் ஆனதுஎந்த வகையிலும் மோசமானதாக இல்லை, இதற்காக NumPy உடன் இணைத்து பயன்படுத்திகொள்ளலாம், ஆனால் ஜூலியா ஆனது, தடைகள் எதுவும் இல்லாத அனுபவத்தின் அடிப்படையில் இந்த வகையான கணித ஆய்வுகளுக்கு ஏற்றவாறு மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பைத்தானை விட ஜூலியாவின் செயலேற்பி அமைவு Rஎனும் கணினிமொழியைப் போன்றது, இது ஒரு குறிப்பிடத்தக்க கூடுதல் வசதியாகும். ஜூலியாவின் துனையுடன்நேரியல் இயற்கணிதத்தின் பெரும்பகுதியை குறைந்த நேரத்தில் குறைந்த முயற்சியில் முடிக்க முடியும்.
சமீபத்திய ஆண்டுகளில் பைதான் இயந்திர கற்றல் தரவு அறிவியல் துறைகளில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஏனெனில் பைத்தானில் நாம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மூன்றாம் தரப்பு நூலகங்கள், இயந்திர கற்றல் குறிமுறைவரிகளை எளிதாக உருவாக்க உதவுகின்றன. பைத்தானின் பல நன்மைகள் இருந்தாலும், – இது ஒரு இயந்திர மொழிமாற்றியுடனான கணினி மொழியாக இருப்பதால் இது மிகமெதுவாக செயல்படுகின்ற ஒரு பெரிய குறைபாடு உள்ளது . தற்போது அதிகஅளவிலான தரவுகளை கையாளுகின்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகின்றோம், இவ்வாறான அதிகஅளவிலான தரவுகளில் நாம் மிகஅதிக நேரம் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இந்நிலையில்தான் ஜூலியா கைகொடுக்க வருகின்றது. பெரும்பாலான ஆய்வுப் பணிகள், உயர் சக்தியுடையக் கணினி அல்லது அறிவியல் கணக்கீட்டுத் திறன் போன்ற தலைப்புகளில் இதுவரை ஜூலியாவைப் பற்றி நடந்துள்ளன. ஆனால் ஜூலியா எந்தவொரு சிக்கலான அறிவியல் கணக்கீடுகளிலும் திறமையாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் வணிக அடிப்படையிலான சிக்கல்களிலும் எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப் பற்றி மட்டும் இங்கு விவாதிப்போம், மேலும் இயந்திர கற்றல் நரம்பியல் பிணையவமைப்புகளில் பைத்தானை கொண்டு எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதையும் காண்போம்.
குறிக்கோளும் பரிசோதனையும்
ஜூலியா எனும் கணினிமொழியானது பைத்தான் எனும் கணினிமொழியைப் போன்றே மிகஎளிமையானது, ஆனால் சி போன்ற தொகுக்கப்பட்ட மொழியாகும். எனவே பைத்தானுடன் ஒப்பிடுகையில் ஜூலியா எவ்வளவு விரைவாக செயல்படுகின்றது என்பதை முதலில் சில எளிய நிரல்களில் இந்த கணினி மொழிகளை பரிசோதித்திடுவோம்., பின்னர் நமமுடைய பரி சோதனையின் முக்கிய மையத்திற்குச் செல்வோம், இது இயந்திரக் கற்றல் ஆழ்கற்றல் ஆகியவற்றை பரிசோதிப்பதற்கானதாகும். ஜூலியா பைதான் ஆகிய இரண்டும் பல நூலகங்களையும் திறமூல தரப்படுத்தல் கருவிகளையும் வழங்குகின்றன. ஜூலியாவில் நேரத்தை தரப்படுத்துவதற்கும் கணக்கிடுவதற்கும், CPUTime, நேர நூலகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பைத்தானுக்கு, நேர தொகுதியைப் பயன்படுத்திகொள்ளப்பட்டுள்ளது.
அணிகளை பெருக்குதல்(Matrix multiplication )
நாம் முதலில் எளிய எண்கணித செயலிகளை முயற்சித்திடுவோம், ஆனால் இவை செயல்படும்நேரத்தில் அதிக வித்தியாசத்தை உருவாக்காது என்பதால், அணிகளின் பெருக்குதலில் நேரத்தைச் சரிபார்த்திடுவோம். சீரற்ற மிதக்கும் புள்ளிகளாலான எண்களின் இரண்டு (10 * 10) அணிகளை உருவாக்கி, இவற்றில் புள்ளியினை உருவாக்கிடுவோம். நாம் அறிந்தபடி, பைத்தானில் ஒரு NumPy நூலகம் உள்ளது, இது அணிகள் கோடுகள் ஆகியவற்றுடன் பணிபுரிவதில் பிரபலமானது. இதேபோல், ஜூலியாவில் ஒரு கோடுகளின் இயற்கணித நூலகம் உள்ளது, அது அணிகள் திசையன்களுடன் நன்றாக செயல்படுகிறது. எனவே அணிகளின் பெருக்கலை அந்தந்த நூலகங்களுடனும் பயன்படுத்தாமலும் ஒப்பிட்டுப் பார்த்திடலாம். இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்படும் அனைத்து நிரல்களுக்கான மூலக் குறிமுறைவரிகளும் (https://github.com/mr-nerdster/Julia_Research.gitsee) எனும் இணையதளமுகவரியின் GitHub களஞ்சியத்தில் கிடைக்கிறது. ஜூலியாவில் எழுதப்பட்ட 10×10 அணியின் பெருக்குதல் செய்வதற்கான நிரல் பின்வருமாறு:
@time LinearAlgebra.mul!(c,x,y)

function MM()
x = rand(Float64,(10,10))
y = rand(Float64,(10,10))
c = zeros(10,10)

for i in range(1,10)
for j in range(1,10)
for k in range(1,10)
c[i,j] += x[i,k]*y[k,j]
end
end
end
end
@time MM

0.000001 seconds
MM (generic function with 1 method)

ஜூலியா நூலகத்தைப் பயன்படுத்தி 0.000017 வினாடிகளும், மடக்கிகளைப்(loops). பயன்படுத்தி 0.000001 வினாடிகளும் எடுத்துக்கொள்கின்றது. அதேஅணி பெருக்குதலிற்கான நிரல் கீழே கண்டுள்ளவாறு பைத்தானில் எழுதப்பட்டது. நூலகம் இல்லாததை விட நூலகத்துடன் ஒப்பிடும்போது குறைந்த நேரத்தை எடுத்துகொள்ளும் என்பதை இம்முடிவுகளிலிருந்து காணலாம்.


import numpy as np
import time as t
x = np.random.rand(10,10)
y = np.random.rand(10,10)
start = t.time()
z = np.dot(x, y)
print(“Time = “,t.time()-start)
Time = 0.001316070556640625

import random
import time as t
l = 0
h= 10
cols = 10
rows= 10

choices = list (map(float, range(l,h)))
x = [random.choices (choices , k=cols) for _ in range(rows)]
y = [random.choices (choices , k=cols) for _ in range(rows)]

result = [([0]*cols) for i in range (rows)]

start = t.time()

for i in range(len(x)):
for j in range(len(y[0])):
for k in range(len(result)):
result[i][j] += x[i][k] * y[k][j]

print(result)
print(“Time = “, t.time()-start)

Time = 0.0015912055969238281
பைதான் நூலகத்தைப் பயன்படுத்தி 0.0013 வினாடிகள் மடக்கிகளைப் பயன்படுத்தி 0.0015 வினாடிகள் எடுத்துக்கொள்கின்றது.
நேரியல் தேடல்(Linear search )
அடுத்த பரிசோதனையானது, தோராயமாக உருவாக்கப்பட்ட ஒரு இலட்சம் சீரற்ற எண்களில் நேரியல் தேடலாகும். இதில் forஎனும் மடக்கி, இயக்கி(operator) ஆகிய இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளன – . 1 முதல் 1000 வரையிலான முழு எண்களைக் கொண்டு 1000 தேடல்களைச் செய்யப்பட்டன, மேலும் கீழே உள்ள வெளியீட்டில் காண்பதை போல, தரவுத் தொகுப்பில் எத்தனை முழு எண்களைக் காண்கிறோம் என்பதையும் அச்சிடலாம். forஎனும் மடக்கியைப் பயன்படுத்தியையும், IN எனும் இயக்கியையும் பயன்படுத்துவதன் மூலம் நேரத்தின் வெளியீடு பின்வருமாறு இருக்கும. இதில்சராசரி CPU நேரமானது 3 முறை இயக்கி எடுத்து அளக்கப்பட்டது. பின்வரும்நிரல் ஜூலியாவுக்காக எழுதப்பட்டது அதன் முடிவுகள் பின்வருமாறு.
import numpy as np
import time as t
x = np.random.rand(10,10)
y = np.random.rand(10,10)
start = t.time()
z = np.dot(x, y)
print(“Time = “,t.time()-start)
Time = 0.001316070556640625

import random
import time as t
l = 0
h= 10
cols = 10
rows= 10

choices = list (map(float, range(l,h)))
x = [random.choices (choices , k=cols) for _ in range(rows)]
y = [random.choices (choices , k=cols) for _ in range(rows)]

result = [([0]*cols) for i in range (rows)]

start = t.time()

for i in range(len(x)):
for j in range(len(y[0])):
for k in range(len(result)):
result[i][j] += x[i][k] * y[k][j]

print(result)
print(“Time = “, t.time()-start)

Time = 0.0015912055969238281
அதையே பைத்தானுக்காக எழுதப்பட்ட நிரல் அதன்முடிவுகள் பின்வருமாறு:
FOR_SEARCH:
Elapsed CPU time: 16.420260511 seconds
matches: 550
Elapsed CPU time: 16.140975079 seconds
matches: 550
Elapsed CPU time: 16.49639576 seconds
matches: 550

IN:
Elapsed CPU time: 6.446583343 seconds
matches: 550
Elapsed CPU time: 6.216615487 seconds
matches: 550
Elapsed CPU time: 6.296716556 seconds
matches: 550
மேலே கண்ட முடிவுகளிலிருந்து, ஜூலியாவில் மடக்கி, இயக்கி ஆகியவற்றினைப் பயன்படுத்துவதில் நேர வேறுபாடுகள் இல்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும், பைத்தானில் உள்ள IN எனும் இயக்கியைவிட மடக்கியானது ஏறக்குறைய மூன்று மடங்கு அதிக செயலாக்க நேரத்தை எடுத்துகொள்கின்றது. இங்கே சுவாரசியமான செய்தி என்னவெனில், இரண்டு நிகழ்வுகளிலும், பைத்தானை விட ஜூலியா மிக விரைவாக செயல்படுத்தும் நேரத்தைக் கொண்டுள்ளது என்பதேயாகும்.
நேரியல் பின்னோக்கு(Linear regression)
அடுத்த பரிசோதனைகள் இயந்திர கற்றல் தருக்கபடிமுறைகளில் செய்யப் படு கின்றன. முதலில் மிகவும் பொதுவான எளிமையான இயந்திர கற்றல் தருக்கபடி முறைகளில் ஒன்றில் பணியானது செயற்படுத்தப்பட்டது, அதாவது, ஒரு எளிய தரவுத் தொகுப்புடன் நேரியல் பின்னோக்கு(Linear regression) சரிபார்க்கப்டடது. 237 எண்ணிக்கையிலான தரவு உள்ளீடுகள், இரண்டு நெடுவரிசைகள் [HeadSize, BrainWeight] கொண்ட ‘Head Brain’ எனும் தரவுத் தொகுப்புப் பயன்படுத்தப்பட்டது. இதில், தலையின் அளவைப் பயன்படுத்தி மூளையின் எடையைக் கணக்கிட வேண்டியிருந்தது. எனவே பைதான் ஜூலியா இரண்டிலும் இந்தத் தரவுகளில் எந்த நூலகத்தையும் பயன்படுத்தாமல், புதிதாக ரியல் பின்னோக்கு(Linear regression) செயல்படுத்தப்பட்டது.
Julia:
GC.gc()
@CPUtime begin
linear_reg()
end
elapsed CPU time: 0.000718 seconds

Python:
gc.collect()
start = process_time()
linear_reg()
end = process_time()

print(end-start)
elapsed time: 0.007180344000000005
ஜூலியா , பைதான் ஆகிய இரண்டும் எடுத்தகொண்ட நேரம் மேலே கொடுக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து பின்னோக்கு(Logistic regression)
அடுத்து, இருகணினி மொழிகளிலும் உள்ள நூலகங்களைப் பயன்படுத்தி, மிகவும் பொதுவான வகை இயந்திரக் கற்றல் தருக்கபடிமுறை, அதாவது போக்குவரத்து பின்னோக்கு பற்றிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பைத்தானைப் பொறுத்தவரை, ஜூலியாவில் GLM நூலகத்தைப் பயன்படுத்தியபோது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் sklearn எனும் நூலகம் பயன்படுத்தப்பட்டது. 10,000 தரவு உள்ளீடுகளைக் கொண்ட வங்கியின் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவலே இதற்கு பயன்படுத்திய தரவுத் தொகுப்பாகும். இதில் இலக்கு மாறி என்பது binary மாறி ஆகும், இது நுகர்வோர் வங்கியை விட்டு வெளியேறினாரா (அவரது அல்லது கணக்கை முடி்த்துவிட்டாரா) அல்லது வாடிக்கையாளராக இருந்தாரா என்பதைக் குறிக்கிறது.
@time log_rec()
0.027746 seconds (3.32 k allocations: 10.947 MiB)

போக்குவரத்தின் பின்னோக்கிற்கு பைதான் எடுக்கும் நேரம் பின்வருமாறு
gc.collect()
start = process_time()
LogReg()
end = process_time()
print(end-start)

Accuracy : 0.8068
0.34901400000000005
நரம்பியல்வலைபிணையங்கள்(Neural networks)
பல்வேறு நிரல்கள் தரவுத் தொகுப்புகளில் இரு கணினிமொழிகளையும் பரசோதித்த பிறகு, அவற்றை நரம்பியல் பிணையங்களில் பரிசோதித்திட, MNIST தரவுத் தொகுப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தத் தரவுத் தொகுப்பில் பூஜ்ஜியத்திலிருந்து ஒன்பது வரையிலான கையால் வரையப்பட்ட இலக்கங்களின் சாம்பல் அளவிலான படங்கள் உள்ளன. ஒவ்வொரு படமும் 28×28 பிக்சல்கள். ஒவ்வொரு பிக்சல் மதிப்பும் அந்த பிக்சலின் ஒளி அல்லது இருளைக் குறிக்கிறது, மேலும் இந்த மதிப்பு 0 , 255 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஒரு முழு எண் ஆகும். இம்மதிப்பிற்குரிய படத்தில் வரையப்பட்ட இலக்கத்தைக் குறிக்கும் முகவரிசீட்டின் நெடுவரிசையையும் தரவு கொண்டுள்ளது.


1
MNIST தரவுத் தொகுப்பின் சில உதாரணங்களை படம் 1 காட்டுகிறது.
இரண்டு கணினிமொழிகளும் எடுத்துகொள்ளும் நேரத்தை பரிசோதிக்க எளிய நரம்பியல் பிணையவமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. நமது நரம்பியல் பிணையவமைப்பின் கட்டமைப்பு பின்வருமாறு:
Input —> Hidden layer —> Output
இது உள்ளீட்டு அடுக்கு, மறைக்கப்பட்ட அடுக்கு , வெளியீட்டு அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிக்கல்களைத் தவிர்க்க, தரவுத் தொகுப்பில் எந்த முன் செயலாக்கத்தையும் பயன்படுத்தவில்லை, அது அப்படியே செயல்படுத்தப் பட்டது. இந்த மாதிரியை 40 முறைகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது, அதில் ஜூலியாவிற்கும் பைத்தானுக்கும் இடையிலான நேர வித்தியாசம் சரிபார்க்கப்பட்டது.

2
படம் 2: ஜூலியா நரம்பியல் பிணையவைமைப்பில் 5.76 வினாடிகள் எடுக்கின்றது
ஜூலியாவிற்கு, Flux எனும் நூலகம் நரம்பியல் பிணையவமைப்பை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டது . பைத்தானுக்கு, Keras எனும்நூலகம் பயன்படுத்தப்பட்டது. நரம்பியல் பிணையவமைப்பில் ஜூலியா எடுத்த நேரத்தை படம் 2 காட்டுகிறது. படம் 3 பைதான் எடுத்த நேரத்தையும், நரம்பியல் பிணையவமைப்பில் மாதிரியின் சில மறு செயல்களையும் காட்டுகிறது.

3.
படம் 3: பைதான் ஒரு நரம்பியல்பிணையவமைப்பில் 110.3 வினாடிகள் எடுத்துகொள்கின்றது

நரம்பியல் பிணையவயமைப்பிற்கு வரும்போது ஜூலியாவிற்கும் பைத்தானுக்கும் இடையே பெரிய நேர வேறுபாடுகள் இருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.

அட்டவணை 1 பரிசோதனைகளின் அனைத்து முடிவுகளையும் சுருக்கமாகக் கூறுகிறது, மேலும் ஜூலியா , பைத்தானுக்கு இடையிலான நேர வேறுபாட்டை (சதவீதத்தில்) வழங்குகிறது.

அட்டவணை 1

ஆய்வுகள்ஜூலியா (நொடிகளில்)பைதான் (நொடிகளில்)நேரவேறுபாடு (%)
Matrix multiplication (without library)0.0000010.001599.9
Matrix multiplication (with library)0.0000170.001398.69
Linear search (using loop )0.4216.497.43
Linear search (using IN operator)0.436.293.06
Linear regression0.0007180.0071890
Logistic regression0.0250.3490192.83
Neural networks5.76110.394.77


மேற்கொண்ட அனைத்து பரிசோதனைகளின் வாயிலாக நிரலின் சிக்கலான தன்மையுடன் , தரவுத் தொகுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ஜூலியாவிற்கும் பைத்தானுக்கும் இடையிலான செயல்பாட்டின் நேர வேறுபாடு அதிகரிக்கிறது என அறிந்து கொள்ளலாம். இம்முடிவுகளிலிருந்து, இயந்திர கற்றல் ,நரம்பியல் பிணையவமைப்புகளுக்கு ஜூலியா சிறந்த நிரலாக்க மொழி என்று நாம் முடிவு செய்யலாம்.

PERL எனும் கணினிமொழியைக் எளிதாக கற்றுக்கொள்ளலாம்

PERL எனும் கணினிமொழியானது 1988 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது, இது ஒரு பின்நவீனத்துவ நிரலாக்க மொழியாகும், இது பெரும்பாலும் உரைநிரல் மொழியாகக் கருதப்படுகிறது, ஆனால் இது பொருள் சார்ந்த நிரலாக்கத்திற்கும் பயன்படுகின்ற திறன்மிக்கது. இது பல்லாயிரக் கணக்கான நூலகங்கள், வரைகலைபயனாளர்இடைமுகப்பு(GUI)கட்டமைப்புகள், Raku எனப்படும் spin-off மொழியாகவும் அமைந்துள்ளது,இது சுறுசுறுப்பான , ஆர்வமுள்ள சமூகத்துடன் கூடிய முதிர்ந்த நிரலாக்க மொழியாகும். அதன் மேம்படுத்துநர்கள் அதன் நெகிழ்வுத் தன்மையில் தங்களைப் பெருமைப் படுத்து கிறார்கள்: அதன் உருவாக்கியவரான Larry Wall என்பவரின் கூற்றுபடி, இது அதன் பயனர்களுக்கு எந்த குறிப்பிட்ட நிரலாக்க பாணியையும் செயல்படுத்தவில்லை, அதற்கு பதிலாக இதில் பெரும்பாலான செயல்களைச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளை மட்டும் கொண்டுள்ளது.
இது பரவலான பயன்பாட்டில் இருந்தபோது இருந்ததைப் போலவே ஒவ்வொரு துனுக்கிலும் வலுவானது, இது புதிய நிலாளர்களுக்கு ஒரு சிறந்த நிரலாக்க மொழியாக அமைகிறது.
Linux, macOSஆகிய இரு இயக்கமுறைமையிலும் ஏற்கனவே இந்த Perl எனும் நிரலாக்கமொழி நிறுவுகை செய்யப்பட்டே இருக்கும். விண்டோ இயக்க முறைமையெனில், இதனுடைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்துகொள்க.
இதனுடைய வெளிப்பாடுகள்
மூலக் குறிமுறைவரிகளின் அடிப்படை அலகு ஒரு வெளிப்பாடு ஆகும், இது ஒரு மதிப்பை வழங்குகின்றது.உதாரணமாக, 1 என்பது ஒரு வெளிப்பாடாகும். இது 1 இன் மதிப்பை வழங்குகிறது. 2 என்பது ஒரு வெளிப்பாடாகும். இது 2 இன் மதிப்பை வழங்குகிறது, மேலும் a எனும் எழுத்தை வழங்குகிறது.
வெளிப்பாடுகள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். $a + $b என்ற வெளிப்பாடு மாறிகளும் (தரவுக்கான placeholders) , கணித இயக்கிகளுக்கான கூட்டல்குறி (+) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதனுடைய கூற்றுகள்
இதனுடைய கூற்றுகள் வெளிப்பாடுகளால் ஆனவைகளாகும். ஒவ்வொரு கூற்றும் ஒரு அரை-புள்ளியில் (;) முடிவடைகிறது.
உதாரணத்திற்கு: $c = $a + $b;
நம்முடைய சொந்த PERL இன் கூற்றினை இயக்க முயற்சிக்க, முனைமைத்தைத் திறந்து பின்வருமாறுதட்டச்சு செய்க:
$ perl -e ‘print (“Hello Perl\n”);’
PERL இன் தொகுதிகள்
PERL இன் கட்டளைகளின் ஒரு தொகுதி பிறை அடைப்புகள், இருதலை அடைப்புகள் ஆகியவைகளுடன் ({ }) தொகுக்கலாம். தொகுதிகள் ஒரு பயனுள்ள நிறுவன கருவியாகும், ஆனால் அவை நிரலின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டிய தரவுகளுக்கான வாய்ப்பை வழங்குகின்றன. பைதான் நிரலாக்க மொழியானது காலிஇடைவெளியுடன் செயல்எல்லையை வரையறுத்து தொகுதிகளாக பிரிக்கிறது, LISP ஆனது அடைப்புக்குறிகளைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் C, ஜாவா ஆகியவை இதற்காக பிறை அடைப்புகள், இருதலை அடைப்புகள் ஆகியவைகளைப் பயன்படுத்துகின்றன.
மாறிகள்
மாறிகள் என்பது தரவுகளுக்கான ஒதுக்கீடுகளாகும். மனிதர்கள் அதைப் பற்றி சிந்திக்காமல் ஒவ்வொரு நாளும் மாறிகளைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, “it” என்ற சொல் எந்தப் பெயர்ச்சொல்லையும் குறிக்கலாம், எனவே அதை ஒரு வசதியான ஒதுக்கீடாகப் பயன்படுத்திகொள்கிறோம்.
கணினிகளைப் பொறுத்தவரை, மாறிகள் ஒரு வசதி அல்ல, ஆனால் அவசியமானவை. மாறிகள் என்பவை கணினிகள் தரவை எவ்வாறு அடையாளம் கண்டு கண்காணிப்பது என்பதாகும்.
Perl இல் , ஒரு மாறியின் பெயரையும் அதன் உள்ளடக்கத்தையும் அறிவிப்பதன் மூலம் மாறிகளை உருவாக்குகிடலாம்.
Perl இல் உள்ள மாறிகளின் பெயர்கள் எப்போதும் முன் இருக்கும் டாலர் குறி ($) மூலம் குறிப்பிடப்படுகின்றன.
இந்த எளிய கூற்றுகளின் கட்டளைகள் “Hello” , “Perl” ஆகிய சரங்களைக் கொண்ட $var என்ற மாறியை உருவாக்குகின்றன, பின்னர் மாறியின் உள்ளடக்கங்களை நம்முடைய முனையத்தில் அச்சிடுகிறது:
$ perl -e ‘$var = “hello perl”; print (“$var\n”);’
பாய்வு கட்டுப்பாடு(Flow Control)
பெரும்பாலான நிரல்களும் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது, மேலும் அந்த தேர்வுகள் நிபந்தனை கூற்றுகளாலும் சுழல்களால் வரையறுக்கப் பட்டு கட்டுப்படுத்தப் படுகின்றன. if எனும் கூற்று மிகவும் உள்ளுணர்வு வாய்ந்த ஒன்றாகும். Perl இல் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை சோதிக்க முடியும், மேலும் அந்த நிபந்தனையின் அடிப்படையில் நிரல் எவ்வாறு தொடர்கிறது என்பதை தீர்மானிக்கிறது. இது சி அல்லது ஜாவாவைப் போன்றதொடரியலை கொண்டது:
my $var = 1;
if($var == 1){
print(“Hello Perl\n”);
}
elsif($var == 0){
print(“1 not found”);
}
else{
print(“Good-bye”);
}
இந்த நிரலாக்க மொழியல் if எனும் கூற்றின் குறுகிய வடிவத்தையும் கொண்டுள்ளது:
$var = 1;
print(“Hello Perl\n”) if($var == 1);
செயலிகளும் துணைவழிமுறைகளும்
முடிந்தவரை அடிக்கடி குறிமுறைவரிகளை மீண்டும் பயன்படுத்துவது ஒரு பயனுள்ள நிரலாக்க பழக்கமாகும். இந்த நடைமுறையானது பிழைகளைக் குறைக்கிறது (அல்லது பிழைகளை ஒரு குறிமுறைவரிகளின் தொகுதியாக ஒருங்கிணைக்கிறது, எனவே நாம் அதை ஒருமுறை மட்டுமே சரிசெய்ய வேண்டும்), நம்முடைய நிரலின் பராமரிப்பை எளிதாக்குகிறது, நம்முடைய நிரலின் தர்க்கத்தையும் பிறமேம்படுத்துநர்கள் புரிந்துகொள்வதையும் எளிதாக்குகிறது.
இந்த நிரலாக்கமொழியில், உள்ளீடுகளை எடுக்கும் துனைசெயல்முறையினை நாம் உருவாக்கலாம் (@_ எனப்படும் சிறப்பு அணிவரிசை மாறியில் சேமிக்கப்படும்) மேலும் ஒரு வெளியீட்டை வழங்கலாம். முக்கிய சொல்லான துணை வழிமுறையைப் பயன்படுத்தி ஒரு துனைச்செயல்முறையினை உருவாக்கிடலாம், அதைத் தொடர்ந்து நாம்தேர்ந்தெடுத்த துனைச்செயல்முறையின் பெயரும், குறியீட்டு தொகுதியும் பின்வருமாறு:

!/usr/bin/env perl

use strict;
use warnings;
sub sum {
my $total = 0;
for my $i(@_){
$total += $i;
}
return($total);
}
print &sum(1,2), “\n”;
நிச்சயமாக, இது பல துணை நிரல்களைக் கொண்டுள்ளது, நாமேஉருவாக்க வேண்டியதில்லை. சிலவற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளன, மேலும் சமூக நூலகங்கள் மற்றவற்றை வழங்குகின்றன.
Perlஉடன் உரைநிரலாக்கம்
Perlஇல் தொகுக்கலாம் அல்லது அதை விளக்கமான உரைநிரலாக்க மொழியாகப் பயன்படுத்தலாம். தொடங்கும் போது பிந்தையது எளிதான வாய்ப்பாாகும், குறிப்பாக ஏற்கனவே பைதான் அல்லது ஷெல் உரைநிரலாக்கத்தினை நன்கு அறிந்திருந்தால் இது எளிதானதாகும்.
இந்த நிரலாக்கத்தில் எழுதப்பட்ட ஒரு எளிய தாயக்கட்டையின் உரைநிரல் பின்வருமாறு .

!/usr/bin/env perl

use warnings;
use strict;
use utf8;
binmode STDOUT, “:encoding(UTF-8)”;
binmode STDERR, “:encoding(UTF-8)”;
my $sides = shift or
die “\nYou must provide a number of sides for the dice.\n”;
sub roller {
my ($s) = @; my $roll = int(rand($s)); print $roll+1, “\n”; } roller($sides); இதை முழுவதுமாகப் படித்து, பின்பற்ற முடியுமா என்று பார்த்திடுக. இதன் முதல் வரியானது POSIXஇன் முனைமத்திற்கு உரைநிரலை இயக்குவதற்கு என்ன செயற்கட்டளையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. அடுத்த ஐந்து வரிகள் நிரலாக்க கொதிகலன்தகடும் அமைப்புகளுமாகும். பயன்பாட்டு எச்சரிக்கை அமைப்பு இதற்கான பிழைகளைச் சரிபார்த்து, அது கண்டறியும் சிக்கல்களைப் பற்றி முனையத்தில் எச்சரிக்கைகளை வெளியிடச் சொல்கிறது. பிழைகள் கண்டறியப்படும்போது உரைநிரலை இயக்க வேண்டாம் என்று கடுமையான அமைப்பு இதனிடம் கூறுகிறது. இந்த இரண்டு அமைப்புகளும் குறிமுறைவரிகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு பிழைகளைக் கண்டறிய உதவுகின்றன, எனவே பொதுவாக அவற்றை நம்முடைய உரைநிரலில் செயலில் வைத்திருப்பது நல்லது. உரைநிரலி்ன் முக்கிய பகுதியானது, முனைமத்திலிருந்து தொடங்கப்படும்போது, உரைநிரலிற்கு வழங்கப்பட்ட தருமதிப்பினை அலசுவதன் மூலம் தொடங்குகிறது. இந்த வழக்கில், எதிர்பார்க்கப்படும் தருமதிப்பு ஒரு மெய்நிகர் இறக்கத்தின் விரும்பிய பக்கமாகும். Perஆனது இதை ஒரு அடுக்காகக் கருதுகிறது மேலும் மாறி $ பக்கங்களுக்கு ஒதுக்க shift எனும் செயலியைப் பயன்படுத்துகிறது. தருமதிப்புகள் எதுவும் வழங்கப்படாதபோது, இறக்க செயல்பாடு தூண்டப்படும். துணை முக்கிய சொல்லுடன் உருவாக்கப்பட்ட உருளையின் துனைதிறவுகோளின் அல்லது செயலியின், ஒரு தருமதிப்பாக வழங்கப்பட்ட எண்ணை உள்ளடக்காமல், ஒரு போலியான சீரற்ற எண்ணை உருவாக்க இதனுடைய random எனும் செயலியைப் பயன்படுத்துகிறது. அதாவது, இந்த செயல்திட்டத்தில் 6-பக்க இறக்கம் ஒரு போதும் 6 ஐ உருட்ட முடியாது, ஆனால் அது 0 ஐ உருட்டலாம். இது கணினிகள் நிரலாளர்களுக்கு நல்லது, ஆனால் பெரும்பாலான பயனர்களுக்கு இது குழப்பமாக உள்ளது, எனவே இது ஒரு பிழையாக கருதப்படலாம். அந்த பிழை ஒரு சிக்கலாக மாறுவதற்கு முன்பு அதை சரிசெய்ய, அடுத்த வரி 1 ஐ சீரற்ற எண்ணுடன் சேர்த்து மொத்தத்தை தாயக்கட்டை விளைவாக அச்சிடுகிறது. ஒரு துனைசெயல்முறைக்கு அனுப்பப்பட்ட ஒரு தருமதிப்பினைக் குறிப்பிடும் போது, சிறப்பு மாறியான @ ஐக் குறிப்பிடுகின்றோம், இது செயலியின் அழைப்பின் ஒரு பகுதியாக அடைப்புக்குறிக்குள் உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வரிசையாகும். இருப்பினும், ஒரு வரிசையிலிருந்து மதிப்பைப் பிரித்தெடுக்கும் போது, தரவு ஒரு அளவுகோளாக (உதாரணத்தில் $s மாறி) அனுப்பப்படுகிறது.
ஒரு துனைசெயல்முறை அழைக்கப்படும் வரை இயங்காது, எனவே உரைநிரலின் இறுதி வரி தனிப்பயன் roller எனும் செயலியை செயல்படுத்துகிறது, இது கட்டளையின் தருமதிப்பை செயலியின் தருமதிப்பாக வழங்குகிறது.
கோப்பை dice.pl ஆக சேமித்து, அதை இயங்கக்கூடியதாகக் குறித்திடுக:
$ chmod +x dice.pl
இறுதியாக, இதை இயக்க முயற்சித்திடுக, அதன் சீரற்ற எண்ணைத் தேர்ந்தெடுக்கும் அதிகபட்ச எண்ணை வழங்கிடுக:

$ ./dice.pl 20
1
$ ./dice.pl 20
7
$ ./dice.pl 20
20
Not bad!
Perl ஆனது ஒரு வேடிக்கையான ,ஆயினும் சக்திவாய்ந்த நிரலாக்கமொழியாகும். Perl ஆனது இயல்புநிலையில் உரைநிரல் மொழியாக இருந்ததால், பைதான், ரூபி, கோ போன்ற கணினி மொழிகள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், Perl குறைந்த வலுவுடையது அன்று. உண்மையில், இது முன்னெப்போதையும் விட சிறந்தது, பிரகாசமான எதிர்காலம் கொண்டது. அதனால் இன்றே PERLஎனும் கணினிமொழியை கற்றிடும் பணியை துவங்கிடுக.

AL-IV (ALFOUR)எனும் நிரலாக்க மொழி

AL-IV என சுருக்கமாக அழைக்கப்பெறும் ALFOUR என்பது குறைந்தபட்ச அறிமுக நிலை கொண்ட உயர்நிலை கட்டாய பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாகும், மிக உயர்ந்த பாதுகாப்பினையும் நிலைப்புத்தன்மையையும் கோரும் எந்த தளத்திற்கும் எளிதாக உள்நுழைவிற்கான வாயிலமைத்தல், கட்டுப்படுத்தக் கூடிய அளவிலான குறிமுறைவரிகளின் பாதுகாப்பு, இயங்கக்கூடிய குறிமுறைவரிகளின் உயர் செயல்திறன். ,இலக்கு தளத்திலிருந்து முழு சுதந்திரம், குறைந்தபட்ச நுழைவு நிலை. ஆகிய திறன்மிக்கது
முக்கியவசதிவாய்ப்புகள்
• AL-IV இலிருந்து மற்ற ஆதரிக்கப்படும் கணினிமொழிகளுக்கு பயன்பாட்டினை எளிதாக தொகுக்கலாம்.
• கணினியின் புதிய துணை மொழியைச் சேர்ப்பது கடினம் அன்று. ஆரம்பத்தில், C# Delphi ஆகியன இது ஆதரித்தது.
• பொருள்களுக்கான சிறப்பு நினைவக மேலாண்மை விதிகள், இலக்கு தளத்தில் சுதந்திரமாக தவறினை சேகரிப்பதைத் தவிர்க்க அனுமதிக்கிறது.
• மிக எளிமையான தொடரியல், குறைந்தபட்ச அளவு விதிகள். நிரலாக்கத்தைத் தொடங்குவது மிகவும் எளிதானது.
• சோதனை திறன்கள் மொழியில் உட்பொதிக்கப்பட்டுள்ளன (சோதனை செயல்பாடுகள், ஒவ்வொரு தொகுப்பிலும் சோதனை செய்தல், மொழிமாற்றி மூலம் சோதனை அட்டையை கட்டுப்படுத்துதல்).
AL-IV இல் பெரும்பாலான விதிவிலக்குகள் சாத்தியமில்லை இன்னும் எந்தப் பொருட்களும் எப்போதும் பூஜ்யங்களை மாற்றாது. எனவே, விதிவிலக்குகளைக் கையாள்வது அவசியமில்லை.
• இது ஒரு மொழிமாற்றியாக பல நிபந்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது, இது சில நோக்கங்களுக்காக ஒரு இனத்தைப் பாதுகாப்பற்றதாக மாற்றுகிறது. மேலும், பாதுகாப்பற்ற இனங்களை முக்கியமான செயல்திட்டங்களில் பயன்படுத்துவதிலிருந்து அத்தகைய இனங்களை வடிகட்ட அனுமதிக்கும் தொடர்பாளர் குறிப்பான்களுடன் குறிக்க வேண்டும்.
• ALFOUR இன்னும் ஒரு சக்தி வாய்ந்த உயர்நிலை நிரலாக்க மொழியாகும், மேலும் இது பரந்த அளவிலான பணிகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம்.

நடைமுறை நிரலாக்கம்( PracticalProgramming)

நிரலாக்கத்திற்கான பயிற்சிகள், எடுத்துக்காட்டு குறிமுறைவரிகள், சிக்கல்களை தீர்வுசெய்வதற்கான தொகுப்புகள், தீர்வுகள், செயல் திட்டப்பணிகள் ஆகியன குறித்து பயனாளர்களின் கோரிக்கையன்படி இந்த புதியநடைமுறை நிரலாக்கம் (Practical Programming )என்பதன் மூலம் நிலாக்கத்தின் சில அடிப்படைகளை பயனாளர்கள் எளிதாக தெரிந்து கொள்ளுமாறு செய்யப்பட்டுள்ளது இது வழக்கமான பயன்பாடு போன்று நிறுவுகைசெய்து கற்றுகொள்கின்ற ஒரு தொகுப்பாக அமைந்துள்ளது, இது எந்தவொரு பணிக்கும் பொருந்தக்கூடிய நிரலாக்கத்தின் சில அடிப்படைகளைக் கற்பிக்கின்றது, மேலும் நிரலாக்க அனுபவம் இல்லாதவர்களும் நிரலாக்கத்தினை கற்றுக்கொள்ளக்கூடிய வழிகாட்டிடுமாறு இது அமைந்துள்ளது. தொழில்நுட்ப/உருவாக்க அலுவலக சூழலில் பயனாளர்களின் தினசரி நிரலாக்கத்திற்கான திறன்களுடனும் தொழில் நுட்பங்களுடனும் தங்கலுடைய திறனை மேம்படுத்திகொள்வதற்கு இது மிகப்பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த நடைமுறை நிரலாக்கத்திற்கான பாடத்திட்டத்தின் வாயிலாக பயிற்சிகள், செயல்பாடுகள் , மேம்பாடுகள், போன்றவற்றுடன் பொறியியல், உற்பத்தி, நிதி,தகவல்தொழில் நுட்பவியல்(IT), நிரலாக்க மேலாண்மை போன்ற பலவற்றில் போதுமான உதவிகளை வழங்குகின்றது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
இது பைதான் ,C#,SQL ஆகிய கணினிமொழிகளுக்கான நடைமுறைபயிற்சிகளும் , எடுத்துக்காட்டு குறிமுறைவரிகளும் கொண்டுள்ளது. அதனோடு MS Excel , Access ஆகிய பயன்பாடுகளுக்கான நடைமுறைபயிற்சிகளும் , எடுத்துக்காட்டு குறி முறைவரிகளும் கொண்டுள்ளது.இதில் MS Office உருவாக்கங்களை தரவுத் தளங்களுடன் இணைத்தல் ஆகிய வசதிகளைகூட கொண்டுள்ளது. குறிமுறை வரிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்ட, இதில் சிக்கல்களின் தீர்விற்கான தொகுப்புகளின் எடுத்துக்காட்டுகளை கொண்டுள்ளது.பயனாளர்களின் நிரலாக்க அறிவைச் சோதிப்பதற்காக சிக்கல்களுக்கான தீர்வுத் தொகுப்புகளையும் கொண்டுள்ளது. இவைகளை படிப்படியாக நன்கு அறிந்து கொள்வதற்கான PowerPoint படவில்லை காட்சிகள்கூட இதில் உள்ளன. நடைமுறைச் சிக்கலின் தீர்வுகளுக்கான திறன்களை ஒருங்கிணைக்க ஒவ்வொரு அமர்விற்கும் பூர்த்தி செய்யப்பட்ட உதாரணத்துடன் கூடிய செயல்திட்டங்களை கொண்டுள்ளது

மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/dbowmans46/PracticalProgramming எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Previous Older Entries