2011 ஆம் ஆண்டில் குறும்பு செய்பவர்(hackers)ஆல் முடக்கபட்ட இணையதளங்கள்

1.Motion Hosting Server என்ற இணையதளத்தை 25.09.2011 -ல் TiGER-M@TE என்ற குறும்பு செய்பவர்(hackers) ஆல்முடக்கபட்டு அதன் சேவைஅனைத்தும் முடங்கிபோனது

2.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் யூட்யூப் இணையபக்கம்  சென்றஆண்டின் கடைசியில் முடங்கிபோனதுடன் அதன் முகப்பு பக்கத்தில் I DID NOTHING WRONG I SIMPLY SIGNED INTO MY ACCOUNT THAT I MADE IN 2006 என்றசெய்தியை பிரதிபலிக்கும்படி செய்துள்ளனர்

3.நம்முடைய இந்திய அரசின் சிபிஐ(Central Bureau of Investigation) இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆனது  பாகிஸ்தானின் Pakistan Cyber Army என்ற குறும்பு செய்பவர்(hackers) குழுவால் முடக்கபட்டு முகப்பு பக்கத்தில் P*k*stanZin*ab**d . என்ற செய்தியை பிரதிபலிக்கும்படி செய்துள்ளனர்

4.பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தின் இணையதளம் கூட Zombie_Ksa என்ற குறும்பு செய்பவர்(hackers)ஆல் முடக்கபட்டு So I am here to request you to go out there and help the poor, needy and hungry  என்ற செய்தியை அதன் முகப்பு பக்கத்தில் தலைமைநீதிபதிக்கு விட்டு சென்றுள்ளனர்

5.உலகநாடுகளின் மாமன்றமான யூனெஸ்கோ வின் இணையதளபக்கத்தையும்  Fatal Error Crew என்ற  குறும்பு செய்பவர்(hackers) குழு முடக்கியுள்ளது

6.நம்முடைய நாட்டின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன் இணையதளத்தின் முகப்பு பக்கம் பாகிஸ்தானின் KhantastiC haX0r .  என்ற குறும்பு செய்பவர்(hackers)குழுவால் முடக்கபட்டது

ஜினோம் 3 ஐ மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்

நாம் Gnome 2 ல் பயன்படுத்தி வந்த பல வசதிகள் தற்போது Gnome 3-ல்  பயன்படுத்த சிறிது கடினமாகவே இருக்கும். அதில் முக்கியமானவை

1. power off: Gnome -ன்பயனர் கட்டளை பட்டியில் ALT விசையை அழுத்தினால் மட்டுமே  கணினியின் செயலை நிறுத்தம் செய்யமுடியும். அல்லது கணினி தற்காலிக செயலிழப்பு நிலையிலேயே இருக்கும்.
2. Window list: Gnome பலகத்தில் முன்பு பார்த்த தற்போது இயங்கி கொண்டிருக்கும் பயன்பாடுகளின் பட்டியல் Gnome 3 ல் இருக்காது.
3. APP menu: அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் தெரிவு செய்வதற்காக முன்பு இருந்த Gnome APP menu தற்போது இல்லாமல் இருக்கும்.

இவை மட்டுமல்லாமல் இதே போன்று வேறு  பல பயன்பாடுகளும் தற்போதையை புதிய Gnome 3 ல் இல்லாமல் இருக்கும்.

ஆனால் இவற்றை தற்போது தேவை எனில் எளிதில் செயல்படுத்த முடியும். அதற்காகவே Gnome 3 Shell Extensions என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Gnome Shell Extensions தளத்தை நாம் பார்வையிடும் போது Gnome ஐ பயன்படுத்தியவண்ணம் இருக்க வேண்டும். அல்லது அந்த Extension தற்போதைய இயங்குதளத்தில் செயல்படாது என்று கூறிவிடும்.

ஒவ்வொரு Extensions பக்கத்திலும் இடது பக்கம் அப்பயன்பாட்டை Enable/Disable செய்வதற்கு ஏற்ற வகையில் ON/OFF பொத்தான்கள் உள்ளன. இவற்றுள் ON என்பதை செயல்படுத்தினால் பயன்பாட்டை நிறுவ வேண்டுமா என GNOME கேட்கும். அதிலிருந்து நிறுவுக என்பதை தெரிவு செய்தால் உடனடியாக பயன்பாடு நிறுவபட்டுவிடும்.  இதில்

1.Alternative Status Menu:பயனர் கட்டளை பட்டியில் power off எங்கே என்று தேடுபவர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தி எளிதாக power off செய்ய முடியும்.  இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/5/alternative-status-menu/ என்பதாகும்

2.Dock:பல விருப்பத்தேர்வு பயன்பாடுகளை  திரையிலேயே  dock bar போன்ற கருவிபட்டை போன்று வைத்திருக்க இப்பயன்பாடு உதவுகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/17/dock/ என்பதாகும்

3.Favorites Menu:நம்முடைய விருப்பத்தேர்வு பயன்பாடுகளை இதனுடைய பலகத்தில் கட்டளை பட்டியாக வைத்திருக்க இப்பயன்பாடு உதகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/115/favorites-menu/ என்பதாகும்

4.Music Integration:பல்வேறுவகையான இசைபயன்பாடுகளை நாம் பயன்படுத்தும் போது அவற்றை எளிதாக கட்டுப்படுத்த இது உதவுகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/30/music-integration/ என்பதாகும்

5.Places Status Indicator: கணினியில் உள்ள drives, directories போன்றவற்றை எளிதாக பட்டியலிட இப்பயன்பாடு உதவுகின்றது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/8/places-status-indicator/ என்பதாகும்

6.Window Icon List:தற்போது இயங்கி வரும் பயன்பாடுகளின் பட்டியலை icons களாக Gnome panel ல் பட்டியலிட இப்பயன்பாடு உதவுகிறது. இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/70/window-icon-list/ என்பதாகும்

7.Window List:மேலே குறிப்பிட்டது போன்றே தற்போது இயங்கி வரும் பயன்பாடுகளின் பட்டியலை icons களாக Gnome panel ல் பட்டியலிட இப்பயன்பாடு உதவுகிறது.     இதனுடைய முகவரி https://extensions.gnome.org/extension/25/window-list/ என்பதாகும்

இவை மட்டுமல்லாமல் இதே போன்ற அனைத்து பயன்பாடுகளையும் நாம் விரும்பும் கூடுதல் பயன்பாடுகளையும் இந்த  Gnome 3 Shell Extensions https://extensions.gnome.org/ என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிட்டு தேவைப்படுவனவற்றை மட்டும் நிறுவி கொள்க.

குப்பை செய்திகளை வடிகட்டும் வழிமுறை

ஸ்பேம் எனப்படும் நம்பகமற்ற செய்திகள் அல்லது குப்பை செய்திகள் மின்னஞ்சல் வாயிலாக நமக்கு ஏராளமான அளவில் வருவதற்கு வாய்ப்புள்ளன

இவைகளை வடிகட்டி தனிமடிப்பகத்திற்கு  இயல்பு நிலையில் சென்றிடுமாறு  அனைத்து மின்னஞ்சல் சேவையிலும் அமைக்கபட்டுள்ளது ஆனால் யாகூவைபோன்று ஜிமெயிலில் அவ்வாறான மின்னஞ்சல் வந்திருப்பதை காண  இயலாது   நாமே முயன்று அதனை திரையில் காணுமாறு அமைத்திட முடியும் அதற்காக

நம்முடைய ஜிமெயில் திரையை திறந்து அதன் இடதுபுறம் உள்ள  கட்டளை பட்டையில் moreஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில்  spam என்பதை தெரிவுசெய்து சொடுக்குக  அதன்பின்னர் விரியும் திரையின் மேல் பகுதியில் இந்த spam  மின்னஞ்சல்கள் இருக்கும் தொடுப்பு  விவரம் தோன்றும் அதனை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் நமக்கு வந்து சேர்ந்த குப்பை மின்னஞ்சல்களை காணலாம்

நாம் அன்றாடம் பயன்படுத்திடும் திறமூல பயன்பாடுகள்

நாம் தினமும் ஏராளமான பயன்பாடுகளை நம்முடைய தேவைக்காக அவைகள் வியாபாரத்திற்காக வெளியிடபட்டதா அல்லது திறமூலமாக வெளியிடபட்டதாவென  என்று அதனுடைய  மூலத்தை பற்றி அறிந்து கொள்ளாமலேயே பயன்படுத்தி வருகின்றோம்.இதில் பிரச்சினை எதுவும் ஏற்படாத வரையிலும் குறிப்பிட்ட பயன்பாட்டினை குறிப்பிட்ட நோக்கத் திற்காக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம்.

ஆனால் குறிப்பிட்ட கால இடை வெளியில் இந்த வியாபார பயன்பாடுகளை உருவாக்கி வெளியிடு பவர்கள் புதிய புதிய வசதிகளுடன் மேம்படுத்தி புதிய பதிப்பாக வெளியிட்டு கொண்டே இருக்கின்றனர் நாமும்   பையில் பணம் இருக்கும் வரை புதிய பதிப்பிற்கு மாறிக்கொண்டே இருக்கின்றோம் அவ்வாறான வியாபார பயன்பாடுகளின் புதிய பதிப்பிற்குமாறுவதற்கு   பணவதியின்றி மாற இயலாதவர்கள் வேறு மாற்று பயன்பாடுகளை  விலையில்லாமல்  கிடைக்குமா என தேடும் போது கிடைப்பதுதான் இந்த திறமூல பயன்பாடுகள் ஆகும் .

இது வியாபார பயன்பாடுகளுக்கு சமமான வசதிகளை வழங்ககூடியதாக உள்ளன  தொண்டுள்ளம் கொண்ட  நண்பர்கள்  ஒன்றுகூடி குழுவாக இந்த  திறமூல பயன்பாடுகளை உருவாக்கி   அதன் மூலநிரலுடன் சேர்த்து வெளியிடு கின்றனர் அதனால் மேலும் வசதி தேவைபடுபவர்கள் தாமே முயன்று அதில் மேம்படுத்தி கொள்ளமுடியும்

நாம் அன்றாடம்  பயன்படுத்திடும் அவ்வாறான திறமூலபயன்பாடுகளை பற்றி இப்போது காண்போம்

1.விஎல்சிமீடியா பிளேயர்: நம்முடைய பொழுதுபோக்கிற்கான ஒளிஒலி படங்கள் எந்தவகையான வடிவமைப்பில் இருந்தாலும்  அது முழுமையற்ற கோப்பாக இருந்தாலும் இந்த பயன்பாட்டினுடைய  உதவியால் இயக்கி  நல்ல திரைப்படங்களை போன்று கணினியினுடைய திரையில் காணமுடியும் மேலும் நாம் இதன்மூலம் கணியினுடைய திரையின் அளவிற்கேற்ப படத்தின் அளவை சரிசெய்து அதனுடைய துல்லியத்தையும் சரிசெய்து படத்தை பார்த்து இசையை கேட்டு மகிழலாம்  இதனை http://www.videolan.org/vlc/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

2.மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ்:தற்போது இலட்சகணக்கான மக்கள் தங்களுடைய இணைய உலாவியாக இதனையே பயன்படுத்துகின்றனர். இதில்   விண்டோ எக்ஸ்ப்ளோரரைவிட  தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பாதுகாத்தல், பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில், நம்முடைய உலாவுதலின்  வரலாற்றை பாதுகாத்தல்   என்பனபோன்ற கூடுதலான வசதி வாய்ப்புகளுடன்  விலையில்லாமல் கிடைக்கின்றது  இதனை http://www.mozilla.org/en-US/firefox/channel/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

3.பிட்கின்: நம்மில் ஒருசிலர் ஒரே நபரே ஜிமெயில் ,யாகூ ,ஃபேஸ்புக் ,ஹாட்மெயில்  என்பனபோன்று  இணையத்தில் பலகணக்குகளை வைத்திருப்போம் இவை ஒவ்வொன்றையும் தனித்தனி சாளரமாக திறந்து பார்வையிட்டு நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்காக அடுத்தடுத்து  மாறுவதற்கு மிகுந்த சிரமபடுவோம் அதற்கு பதிலாக இவையனைத்தையும் ஒரே சாளரத்தில் பயன்படுத்தி கொள்ளுமாறு உதவுவதுதான் இந்த பிட்கின் என்ற திறமூல பயன்பாடாகும் இதனை http://www.pidgin.im/download/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

4.வெர்ச்சுவல் பாக்ஸ்:  ஏராளமான அளவில் புதிய புதிய பயன்பாட்டு  மென்பொருட்கள் வெவ்வேறு இயக்கமுறைமைகளில் இயங்கிடும வண்ணம் வெளியிடபட்டுகொண்டே யிருக்கின்றன.இவை எவ்வாறு செயல்படும் என அந்தந்த புதிய இயக்கமுறைமையை கணினியில் நிறுவுதல் செய்யாமலேயே பரிசோதித்துபார்ப்பதற்கு இந்த மெய்நிகர் பெட்டி(virtualbox) என்ற வசதி பயன்படுகின்றது புதிய இயக்கமுறைமைக்கும் வலைபின்னலுக்கும் எவ்வளவு ரேம் நினைவகம் தேவையென்றும்  ,வன்தட்டு நினைவகம் எவ்வளவு தேவையென்றும்  ஒதுக்கீடு செய்து  இயக்கி பரிசோதித்தபின்னர் தேவையில்லை எனில் இதனை நீக்கம் செய்து விடலாம் இதனை https://www.virtualbox.org/wiki/downloads/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

6.ஒப்பன் ஆஃபிஸ்:  பணம் கொடுத்து பயன்படுத்தும் எம்எஸ்வேர்டு, எம் எஸ் ஸ்பிரட்ஸீட்,எம்எஸ்பவர்பாயிண்ட், எம்எஸ் அக்சஸ்  ஆகிய எம் எஸ் ஆபிஸிற்கு சமமான வசதி வாய்ப்புகளை இந்த ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர், கால்க், இம்ப்பிரஸ் ,டேட்டா பேஸ் ஆகியவற்றில் பெறமுடியும் இதனை https://www.openoffice.org/downloads/index.html/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

7.மொசில்லா தண்டர்பேர்டு: நம்முடைய மின்னஞ்சல்களை கையாளுவதற்காக பயன்படும் எம்எஸ் அவுட்லுக் என்ற வியாபார பயன்பாட்டினைவிட கூடுதலான ஆர்எஸ்எஸ் செய்தியோடை,குப்பை மின்னஞ்சல்களை வடிக்கட்டுதல்  மின்னஞ்சல்களுக்கிடையே இடம் மாறிசென்று பார்வையிடுதல் என்பனபோன்ற ஏாளமான வசதிகளை கொண்டதாக இது உள்ளது இதனை http://www.mozilla.org/en-US/thunderbird/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

8.டிஜாடப்:நாம் அன்றாடம் பயன்படுத்திடும் கோப்புகளை இந்த டிஜாடப் மூலம்  அவ்வப்போது காப்புநகல்(backup)  செய்து கொள்வது நல்லது  நாம் தரவுகளை பயன்படுத்தி கொண்டே இருக்கும் போது ஏதனும் இடையில் தடங்கள் ஏற்பட்டாலோ அல்லது   நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் கோப்பு அழிந்து போகும் நிலைஏற்பட்டாலோ உடனடியாக நம்முடைய. பணி தடங்களில்லாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு இந்த காப்புநகல் செய்த கோப்பு கைகொடுக்கும்  இந்த காப்புநகல் செய்யும் பணியை   நம்முடைய கட்டளையை எதிர்பார்க்காமல் தானாகவே தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை  செயல்படுமாறு அமைத்துவிட்டு நம்முடைய தரவுகளின் பாதுகாப்பை பற்றி கவலையில்லாமல் நம்முடைய பணியை செய்துகொண்டிருக்கலாம்  இதனை https://www.launchpad.net/deja-dup/+downlaods/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

9.கோட் ப்ளாக்ஸ்:   இது ஒரு சிறந்த பிரபலமான  C/C++.IDE  போன்ற எந்த தளத்திலும் செயல்படக்கூடிய கூடுதலான திறன்களும் வசதிகளும் கொண்டதாகும் இதனை ARM,Matlap,OpenGL,AVRஎன்பன போன்ற குறிமுறைகளாகவும் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை http://www.codeblocks.org/downloads/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

10.ஜிம்ப்: இது உருவபடங்களையும் படங்களையும் உருவாக்கி மாறுதல் செய்து சேமித்திட பயன்படுகின்றது ஏராளமான புதிய வசதிகளை சேர்த்து நம்முடைய விருப்பம்போன்று ஒரு படத்தினை  இதன்மூலம் வடிவமைத்துகொள்ளலாம் இதனை http://www.gimp.org/downloads/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

11.ப்ளெண்டர்: இது முப்பரிமான படங்களை உருவாக்கிட அதில் அசைவூட்டங்களை அமைத்திட என்பனபோன்ற ஏராளமான வசதிகளை படங்களில் கொண்டு வருவதற்கு பயன்படுகின்றது இது எல்லா இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியது  இதனை http://www.blender.org/downloads/get-blender/   என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

12.7-ஜிப்:  tar,rar,zipஎன்பன வடிவமைப்பில் கோப்புகளை சுருக்கி வைத்திட இது பயன்படுகின்றது இதனை http://www.7-zip.org/download.html/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்க

கணினியில் பயன்படுத்த வேண்டிய சில யுக்திகள்(tricks)

1.நீக்கம் செய்யமுடியாத அல்லது படிக்கமுடியாத மடிப்பகத்தை உருவாக்கமுடியும்

அதற்காக விசைப்பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் வரிசையில்லாமல் விருப்ப பட்டவைகளை அழுத்துக உடன் அதற்கான அஸ்கி எழுத்துரு  திரையில் தோன்றிடும் இதனை நம்மால் படிக்கமுடியாது

இவ்வாறான வழியில் மடிப்பகத்தின் பெயரை உருவாக்குவதற்கு டாஸ் திரைக்கு செல்க அதில்  md (alt+1+9+4) என்றவாறு தட்டச்சு செய்து கொள்க இங்கு  mdஎன்பது மடிப்பகத்தை உருவாக்கு என்ற கட்டளையாகும் பின்னர் விண்டோ திரையில் இந்த மடிப்பகத்தை  திறக்க முயன்றால் திறக்கவும் முடியாது இந்த மடிப்பகத்தை கண்ணால் பார்க்கவும் முடியாது

இதன்பின்னர் மீண்டும் டாஸ் திரைக்கு சென்று  ren (alt+1+9+4) என்றவாறு தட்டச்சு செய்து கொள்க இங்கு ren என்பது மடிப்பகத்திற்கு வேறுபெயரிடு என்ற கட்டளையாகும் விசைப்பலகையில் எண்கள் இல்லாத வேறு எழுத்துகளை கொண்டு பெயரினை தட்டச்சு செய்தபின் விண்டோதிரையில் அந்த மடிப்பக்கத்தை கண்ணால் காணமுடியும் திறக்கவும் முடியும்

2.FAT பாகப்பிரிவினையிலிருந்து NTFS க்கு உருமாற்றம் செய்வதற்கான  படிமுறைகள்

விண்டோ 7 எனில் Start=>All programs=>Accessaries=>Command prompt=>  அல்லது விண்டோ எக்ஸ்பி எனில் Start=> run => Cmd =>Ok=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் CONVERT D:/FS:NTFS என்று தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் FAT பாகப்பிரிவினையிலிருந்து NTFS க்கு உருமாற்றம் ஆகிவிடும்

3.விண்டோவில் பெயரில்லாத கோப்பினையும் மடிப்பகத்தையும் உருவாக்குதல்

தேவையான கோப்பினை அல்லது மடிப்பகத்தை தெரிவுசெய்து அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் rename என்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விசைப் பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் 0160 ஆகிய விசைகளை அழுத்தி தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் குறிப்பிட்ட கோப்பு அல்லது மடிப்பகமானது  ஓரெழுத்திற்கான காலியிடமுள்ள  பெயரில்லாததாகிவிடும்  

மேலும் கூடுதலாக மற்றொரு பெயரில்லாத கோப்பினை உருவாக்கிடதேவையான கோப்பினை அல்லது மடிப்பகத்தை தெரிவுசெய்து அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் rename என்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F2என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விசைப்பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் 0160 ஆகிய விசைகளை அழுத்தி தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக  சிறிதுநேரம் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்து மீண்டும்

பின்னர்விசைப்பலகையிலுள்ள Alt என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு  விசைப் பலகையின் வலதுபுறத்தில் எண்களுள்ள விசைகளில் 0160 ஆகிய விசைகளை அழுத்தி தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக   உடன்குறிப்பிட்ட கோப்பு அல்லது மடிப்பகமானது  ஈரெழுத்திற்கான காலியிடமுள்ள  பெயரில்லாததாகிவிடும்  இவ்வாறே மூன்றெழுத்து நான்கெழுத்து காலியிடமுள்ள பெயரில்லாத கோப்பிற்கும் செயற்படுத்தி கொள்க

4விண்டோ எக்ஸ்பியில்  Netmeeting ஐ நிறுவதல்   இது ஒரு அதிச செய்தியாக இருக்கலாம் ஆனால் இந்த பயன்பாடு விண்டோ எக்ஸ்பியில் ஏற்கனவே நிறுவப்பட்டே வருகின்றது அதனை செயலுக்கு கொண்டுவருவதே நம்முடைய பணியாகும் அதற்காகStart=> run => Cmd =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் Conf என்று தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் இந்த Netmeeting என்ற  செயல்பட தயாராகிவிடும்

5.Ctrl+Alt+Del என்ற கட்டளையை பயன்படுத்தி நிரந்தரமாக நீக்கம் செய்யபட்ட கோப்புகளை திரும்பபெறுதல் ஒருசில நேரங்களில் ஏதேனுமொரு கோப்பினை நீக்கம் செய்தபிறகு அடடா தவறுதலாக நீக்கம் செய்தவிட்டோமே அதனை எவ்வாறு திரும்ப பெறுவதுஎன தவித்திடுவோம் அவ்வாறான நிலையில் Kissass Undelete என்ற பயன்பாடு   தவறுதலாக நீக்கம் செய்யபட்ட கோப்புகளை மீளப்பெறுவதற்கு உதவுகின்றது அவ்வாறு தவறுதலாக நீக்கம் செய்யபட்ட பகுதியில் வேறு புதிய கோப்பு எதுவும் உருவாக்கி அந்த காலி நினைவகத்தை அபகரிக்காமல் இருக்கவேண்டும் என்பதே இந்த பயன்பாட்டினுடைய அடிப்படை நிபந்தனையாகும்

முதலில் இந்த பயன்பாட்டினை http://sourceforge.net/projects/kickassundelete/  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க

பிறகு நீக்கம் செய்யபட்ட கோப்பகத்தை இடதுபுறமுள்ள பலகத்தில் தெரிவுசெய்து Scan என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் ஒருசிலநொடிகளில் நாம் குறிப்பிட்ட கோப்பகம் முழுவதும் வருடபட்டு கோப்புகளின் பெயர் அதன் வகை கடைசியாக மாறுதல் செய்த நாள் ஆகிய விவரங்களுடன வரிசையாக பட்டியல் இடப்படும்  அவற்றுள் தேவையான கோப்புகளை மட்டும் தெரிவுசெய்து recover. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நிரந்தரமாக நீக்கம் செய்யபட்ட கோப்பகள் மீட்கபட்டுவிடும் இந்த பயன்பாடு Windows XP/ Windows Vista/ Windows 7 ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியதாகும்

மெய்நிகர் கணினியில் விண்டோ 8 இயக்கமுறைமையை நிறுவுதல்

 

தற்போது விண்டோ 7 இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் செயலில் இருக்கும் இயக்கமுறைமையை மாற்றிடாமல் விண்டோ 8 இயக்கமுறைமை எவ்வாறு இயங்கும் என செயல்படுத்தி பார்த்தபின்  மாறுவதா வேண்டாமா என அதன் திறனறிந்து முடிவுசெய்யலாம் என எண்ணுபவர்கள்  VMware என்ற மென்பொருளை நிறுவி அதில்  தேவையான விண்டோ 8 இயக்கமுறைமையை  நிறுவி இயக்கி  செயல்படுத்தலாம்  இந்த மென்பொருளை அதன் திறவுகோளுடன்  பெற்று நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்துக உடன் இந்தமெய்நிகர் கணினியை இயக்குவதற்கான  குறுக்குவழி கட்டளையானது Start என்ற பட்டியிலில் சேர்ந்துவிடும் அதனை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றிடும் திரையில்Create a new Virtual Machine  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் new Virtual Machine என்ற வழிகாட்டியின் திரையில் I will install the operating system later என்ற வாய்ப்பை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் விண்டோ 7 என்ற இயக்கமுறைமையை தெரியவுசெய்து கொண்டு பின்னர் தோன்றிடும்  திரைகளில் பொருத்தமான வாய்ப்புகளை அல்லது இயல்புநிலையில் உள்ள வாய்ப்புகளை தெரிவுசெய்து new Virtual Machine என்ற வழிகாட்டி திரையின் செயலை  முடிவுக்கு கொண்டுவருக  உடன் காலியான மெய்நிகர் கணினியின் திரை தோன்றிடும் அதில் Power on this virtual machine என்ற வாய்ப்பிற்கான  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த மெய்நிகர் கணினி  தொடக்க இயக்கம் ஆரம்பிக்க முயன்று தோல்வியடையும் ஏனெனில் இந்த மெய்நிகர் கணினியில் நாம் எந்தவொரு இயக்கமுறைமையையும் நிறுவுகை  செய்யவில்லை

அதனால் Removable Devices” à “CD/DVD (IDE)” à “Settings”. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

பின்னர் தோன்றிடும்  திரையில்  இடதுபுறம்CD/DVD (IDE  என்ற வாய்ப்பையும் வலதுபுறம் Use ISO image file என்றவாய்ப்பையும்  அதன்பின்னர் விண்டோ 8 நிறுவுகை கப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக   பின்னர் “Restart VM என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இப்போது நம்முடைய மெய்நிகர் கணினியானது விண்டோ8 என்ற இயக்கமுறையுடன் செயல்படதுவங்கும்

குறும்பு செய்பவர்(hackers)களிடமிருந்து பாதுகாப்பு தரும் தலைசிறந்த பத்து கருவிகள்

ஒவ்வொரு மென்பொருள் அல்லது வன்பொருளிற்கும் குறும்பு செய்பவர்(hackers) ஏற்படும் பாதிப்புகளானது  ஒருங்கிணைந்த துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது  ஏனெனில் இயக்க முறைமையில் உள்ள பிழை, வியாபார பயனாபாட்டு மென்பொருட்களில் உள்ள சிறுசிறு ஓட்டைகள் அல்லது  அப்பயன்பாட்டு உறுப்புகளின் சிக்கலான உள்கட்டமைவில் உருவாகும் தவறான கட்டமைவு ஆகியவை தீய நோக்கம் கொண்டோரால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகி அவை சுலபமாய் பாதிக்கபடும் நிலை ஏற்படுகின்றது கெடுநோக்கம் கொண்ட தொழில்நுட்பவியலார்கள் இவ்வாறான கணினியின் அமைவிற்குள் எளிதாக ஊடுவிசென்று தங்களுடைய சுயலாபத்திற் காகவும் அல்லது தம்முடைய வியாபாரத்தை பெருக்குவதற்காவும் இந்த பாதிப்பகளை ஏற்படுத்தமுடியும்

இதனை கணினியின் தொழில் நுட்ப அடிப்படையில் பார்க்கும்போது இது சுலபமான செயல் அன்று ஆனால் குறும்பு செய்பவர்(hackers) கள் பல்வேறு வழிமுறைகளிலும் பல்வேறு முறை தக்குவதற்கு முயன்று பின்னரே இந்த தீயநோக்கு கொண்டோரால் வெற்றி கொள்ள முடியும்

இவ்வாறு  இந்த குறும்பு செய்பவர்(hackers)களால் தாக்குதலுக்கு உள்ளாவதால் ஒரு நிறுவனத்தின் தரவுகள் திருடபடுவதுமட்டுமில்லாமல் அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு குந்தகம் ஏர்படுவதுடன் பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றது  இந்த குறும்பு செய்பவர்(hackers)ஆல் இணையம் மட்டுமல்லாது வளாகபிணையம் கூட இத்தீயநோக்கு கொண்டோர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.  முன்பெல்லாம் வியாபார பயன்பாடுகளில் மட்டுமே இவ்வாறான தாக்குதலை  இந்த தீயநோக்கம் கொண்டவர்கள் தொடுப்பார்கள்  என நம்ப பட்டடது.  ஆனால் தற்போது திறமூல பயன்பாடுகளில் கூட இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன என்பதே கவலை தரும் நிலையாகும்   சுருக்கமாக கூறுவதெனில் இந்த பாதிப்புகளின் வாயிலாக ஒருநிறுவனமானது பலவகையிலும் இந்த தீயநோக்கம் கொண்டோரால் சுரண்டபடுகின்றது  ஆயினும்இந்த  தாக்குதல் அதிகமாக உருாவதற்கேற்ப அதன்பாதிப்புகளை தடுப்பதற்காகவே புதியபுதிய பாதுகாப்பு கருவிகளும் உருவாகி கொண்டயுள்ளன என்பதே அனைவரின் வயிற்றிலும் பால்வார்க்கும் செயலாக உள்ளது  அவ்வாறான பாதுகாப்பு கருவிகளில் ஒரு சிலவற்றை பற்றி இப்போது காண்போம்

  wireshark: இது இணையம்வழியாக  ஐபி முகவரிகளுக்கிடையே  அல்லது டிஎன்எஸ்களுக்கிடையே  நடைபெறும் தரவுகளின் போக்குவரத்தில் வடிகட்டுதல் ஆய்வுசெய்தல் பரிசோதித்தல் என்பனபோன்ற செயல்கள் மூலம் பாதுகாப்பாக நடெபெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கின்றது

  Nmap:இது TCPநிலையில் நல்ல தரமான வருடியாக செயல்படுகின்றது  தரவுகளுடன் வரும் கையெழுத்தை சரிபார்த்தல் அதன்மூலம் குறிப்பிட்ட இயக்க முறைமையின் பதிப்பை யூகித்தல் வலைபின்னலின் பதில் செயல் போன்றவற்றை சரிபார்க்கின்றது தூரத்திலிருந்து இயக்கபடும் கருவிகளிலுள்ள  ஃபயர்வால் ,வழிசெலுத்தி , அதன் மாதிரி அதன் தன்மை ஆகியவற்றை  அறிந்து அதனடிப்படையில் எந்தெந்த நழைவுவாயில் பாதுகாப்பாக உள்ளன எவை பாதுகாபில்லாமல் உள்ளன என இதன்மூலம் அறிந்து கூடுதலான பாதுகாப்பை பாதுகாப்பில்லாத வாயிலுக்கு அளிக்கமுடியும்

  Aircrck:தற்போது பெரும்பாலான தகவல்தொடர்பு கருவிகள்  கம்பியில்லா இணைப்பில்  செயல்படுகின்றன அதனால் இவைகளின் எளிதான கடவுச்சொற்களின் வாயிலாக இந்த குறும்பு செய்பவர்(hackers)கள் உள்நுழைவுசெய்து  பேரளவு பாதிப்பு ஏற்படுத்தும்  தாக்குதலை மேற்கொள்கின்றனர் இவ்வாறான நிலையில்  இது தகவல் தொடர்பின்போது அனுப்படும் தரவுகளின் பொட்டலங்களின் பாதுகாப்பு கவசமாக உடனிருந்து அவைகளை குறியீடாக்குதல் குறியீட்டிலிருந்து பழையதரவாக உருமாற்றுதல் என்பன போன்ற செயல்கள்மூலம்  கம்பியில்லா கருவிகளுக்கிடையே தகவல்களின் போக்குவரத்தை    பாதுகாக்கின்றது

  Nikto:இது HTTP, HTTPS ஆகியவற்றை ஆதரிக்கின்றது. கோப்புகளை இணைய தளங்களுக்கு தவறான கட்டமைப்பில் மேலேற்றம் செய்யும் போது ஏற்படும் பாதுகாப்பு ஒட்டைகள் ,தவறாக குக்கிகளை கையாளுவது, நிரல் தொடர்களின் கட்டளைகளுக்கிடையே ஏற்படும் முரன்பாடுகள் என்பனபோன்றவற்றில் உருவாகும் பாதுகாப்பு குறைபாட்டை இது சரிசெய்து நல்லபாதுகாப்பை அளிக்கின்றது .

  SQLmap:இது ஒருதரவுதளத்தில் ஏற்படும் தாக்குதலை பாதுகாக்கின்றது தரவுதளத்தின் அடிப்படையிள் இயங்கும் தரவுதளசேவையாளர் தரவுதள தேடுபொறி ,கடவுச்சொற்கள் யூகிக்கும் செயலை தடுத்தல் ஆகியவற்றில் பாதுகாப்பு அளிக்கின்றது

Previous Older Entries