ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் -தொடர் பகுதி-85

85.1

படம்-85-1

  ஓப்பன் ஆஃபிஸில் தரவுகளின் மூலங்களை முதலில் அனுகுவதற்கும் அதன்பின் அதனுடன்  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களுடன் இணைப்பு ஏற்படுத்தி தேவையான தரவுகளை பெறுவதற்கும் அனுமதிக்கின்றது. உதாரணமாக ஒரே உள்ளடக்கம் கொண்ட சுற்றறிக்கை ,அழைப்பிதழ் போன்றவைகளை பல்வேறு  முகவரிகளுக்கு அனுப்ப உதவிடும் மெயில் மெர்ஜ் எனும் வசதியில்    ஒரே உள்ளடக்கம் கொண்ட உரைப்பகுதி தனியாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலும் இதனை அனுப்பவேண்டிய முகவரிகள் தனியாக ஓப்பன் ஆஃபிஸ் கால்க் அல்லது ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் அல்லது எம்எஸ் ஸ்பிரட்ஷீட் போன்ற ஓப்பன் ஆஃபிஸில் பதிவுபெற்ற தரவுதளங்களுடன் இணைப்பு ஏற்டுத்தி தேவையானவாறு ஆவணங்களை உருவாக்க முடியும்

இவ்வாறான வசதியை பெறுவதற்காக முதலில் எந்தெந்த தரவுமூலங்கள் ஓப்பன் ஆஃபிஸில் பதிவு பெற்றுள்ளன என அறிந்து கொள்ளவேண்டும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள File=>New=>Database=>என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துக  பின்னர் விரியும் தரவுதள வழிகாட்டியின் உரையாடல் பெட்டியில் வலதுபுற பலகத்தில் உள்ள connect to an existing database என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க அதற்கு பிறகு அதன்கீழ்பகுதியிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச் செய்தால்   ஓப்பன் ஆஃபிஸில் பதிவு பெற்றுள்ள Spread sheet, dBASE, Microsoft Access, என்பன போன்ற தரவுதளமூலங்களின் பெயர்கள் (படம்-85-1)பட்டியலாக விரியும் இந்த தரவுமூலங்களை ஒரு தரவுதளத்தை அனுகுவதை போன்றே அனுகமுடியும்

ஒருமுறை இவ்வாறு தரவுதளமூலங்களை பதிவுசெய்துவிட்டால் அதன்பின் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்ட ரிலும், ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கிலும் view=>DataSource=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது F4என்ற விசையை அழுத்துவது ஆகியசெயலின்மூலம் அந்த தரவுகளின் பெயரை விரியச்செய்து(படம்-85-2) பெயருக்கு அருகிலிருக்கும்+ என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கிபயன்படுத்தி கொள்ளமுடியும்

85.2

படம்-85-2

 தரவுதளத்தினை அனுகுதல்

படிமுறை-1 File=>New=>Database=>என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துக  பின்னர் விரியும் தரவுதள வழிகாட்டியின் உரையாடல் பெட்டியில் வலதுபுற பலகத்தில் உள்ள connect to an existing database என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொள்க அதன்பின் அதற்கு கீழ்பகுதியிலுள்ள கீழிறங்கு பட்டியலை(படம்-84-1) விரியச்செய்து அதில்  dBASE என்பதை தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படிமுறை-2அதன்பிறகு தோன்றிடும்  திரையில் browseஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நம்முடைய நாம் விரும்பும் தரவுகளிருக்கும் கோப்பகத்தை அல்லது மடிப்பகத்தை தேடிபிடித்து தெரிவு செய்து கொண்டு  next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-3பின்னர் தோன்றிடும் திரையின் Register the database for me, and Open the database for editing என்ற இயல்புநிலை அமைப்பை  ஏற்றுகொண்டு  finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படிமுறை-4 பின்னர் இதற்கு ஒரு பெயரிட்டு நாம் விரும்பிய இடத்தில் சேமித்து கொள்க

படிமுறை-5அதன்பின்னர்  படிவம் உருவாக்கும் வழிகாட்டியின் உதவியால் படிவத்தை  உருவாக்கமுடியும்

இதே படிமுறையில் அட்டவணையை இணைப்பு செய்வதற்காக படிமுறை-1-ல் குறிப்பிட்டுள்ளவாறு விரியும் தரவுமூலங்களின் பட்டியலில் இருந்து    Spread sheet,Microsoft Access, என்பன போன்ற தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்து மற்ற படிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக.

இவ்வாறான ஒரு தரவுதளத்தினை பதிவுசெய்வதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => OpenOffice.org Base => Databases=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் (படம்-85-3) உரையாடல் பெட்டியில் Registered database  என்பதன் கீழ் தரவுதளங்களின் பட்டியல் விரியும் அதற்கு கீழ்பகுதியில் New ,Delete, Editஆகிய மூன்று பொத்தான்கள் உள்ளன

85.3

படம்-85-3

 புதியதாக பதிவுசெய்வதற்காக  New என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் create Database Linkஎன்ற(படம்-85-3) சிறுஉரையாடல் பெட்டியில் தேவையான தரவுதளமூலங்கள் இருக்கும் இடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இந்த தரவுதளமூலத்தில் ஸ்பிரட்ஷிட் தவிர மற்றவைகளை மாறுதல் செய்யமுடியும் அதற்காக view=>Data Source=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது F4என்ற விசையை அழுத்துவது ஆகிய செயலின்மூலம் தரவுமூலத்தை திரையில் காட்சியாக விரியச்செய்க அதில் கீழ்பகுதியின் பட்டையில் முதல் நான்கு பொத்தான்களும் மாறுதல்கள் செய்யவும் ஐந்தாவது பொத்தான் (படம்-85-4)புதியதை உள்ளீடு செய்திடவும் பயன்படுகின்றன   இந்த தரவுகளின் பட்டியலில் நீக்கம் செய்யவேண்டிய கிடைவரிசையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் delete rowஎன்ற (படம்-85-4) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி நீக்கம் செய்து கொள்க

85.4

படம்-85-4

ஒரு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்தில் தரவுமூலத்திலிருந்துOn (date),our breakfast cost (amount) paid by (name), our lunch cost (amount)paid by (name), and our supper cost (amount) paid by (name). என்றவாறு உரையையும் தரவுகளையும் இணைத்து ஒரு உரைபத்தியை உருவாக்குவதாக கொள்வோம் இதில் பிறை அடைப்பிற்குள் குறிப்பிட்டுள்ளவைகளே  வெளியிலுள்ள தரவுமூலத்திலிருந்து தரவுகளை இணைக்கும் பகுதியாகும்

ரைட்டர் ஆவணத்தில் on என தட்டச்சு செய்து date என்ற புலத்தை தரவுதளத்திலிருந்து இடம்சுட்டியால் தெரிவுசெய்து இழுத்துவந்து இந்த on என்ற சொல்லிற்கு அருகில் விடுக பின்னர் இந்த பகுதி நிழலுருவாக தோற்றமளித்திடview=field shading=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

இதன்பின்னர் இந்த dateஎன்பதற்கு பின்புறம்  our breakfast cost என தட்டச்சு செய்து amount என்ற புலத்தை தரவுதளத்திலிருந்து இடம்சுட்டியால் தெரிவுசெய்து இழுத்துவந்து இந்த  our breakfast costஎன்ற சொல்லிற்கு அருகில் விடுக பின்னர் இந்த பகுதி நிழலுருவாக தோற்றமளித்திடview=field shading=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

இவ்வாறே மற்ற சொற்களையும் தட்டச்சு செய்து அதற்கான புலங்களை தரவுதளத்திலிருந்து இழுத்துவந்து விடுவது என்றவாறு செய்தபின்னர் இவைகளுக்கான தரவுகளை கொண்டு வந்து சேர்த்திடுவதற்காக தரவுகளின் பட்டியலின் இடதுபுறம் உள்ள குறிப்பிட்ட கிடைவரிசையின் சாம்பல் வண்ண பெட்டியை தெரிவுசெய்து சொடுக்கியபின்  படம்-85-5 இன் மேல்பகுதி படத்தில் உள்ள கருப்பு வட்டமிடபட்ட தரவுபுல உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   உடன்  இந்த தரவானது நாம்உருவாக்கிய ரைட்டர் ஆவணத்தின் புலத்திற்குள் உள்ளிணைந்து விடும்  இவ்வாறு ஒவ்வொரு புலத்திற்குமான தரவுகளை உள்ளிணைத்துகொள்க  அட்டவணையின் தரவுகளையும் இவ்வாறே கொண்டு வந்து இணைக்கமுடியும்

பட்டியலின் இடதுபுறம் உள்ள குறிப்பிட்ட கிடைவரிசையின் சாம்பல் வண்ண பெட்டியை தெரிவுசெய்து சொடுக்கியபின்  படம்-85-5 இன் மேல்பகுதி படத்தில் உள்ள சிவப்பு வட்டமிடபட்ட தரவுபுல உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

85.5

படம்-85-5

 உடன் படம்-85-5 இன் கீழ்புறமுள்ளவாறு Insert database columns  என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில் insert data as  என்பதற்கருகில் உள்ள tableஎன்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க பின்னர்   table என்பதன் கீழுள்ள database columns என்ற பட்டியலில் இருந்து தேவையான புலங்களை தெரிவுசெய்து கொண்டு இவைகள் ஒவ்வொன்றாக எனில் இதற்கு வலதுபுறமுள்ள ஒற்றை அம்புக்குறியையும் அனைத்து புலங்களையும் எனில் இரட்டை அம்புக்குறியையும் தெரிவுசெய்து சொடுக்கி  table columns என்ற பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தபின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த ஆவணத்தை சேமித்து கொள்க

முந்தைய தொடர்களிலும் இந்ததொடரிலும் கூறியவாறு படிவம் ஒன்றை உருவாக்கிய பின்னர் அப்படிவத்தில் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக    முதலில் இடதுபுற பலகத்தின் தரவுதள பட்டியலின் படிவ உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் படிவங்களின் பட்டியலில் நாம் உருவாக்கிய படிவத்தின் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபிறகு விரியும் படிவத்தில்    நாள் புலம் எனில் இதிலுள்ள அம்புக்குறியை பிடித்து நகரத்தி காலண்டரில் நாளை தேடுவதைபோன்று தேவையான நாளை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க
எண்களின் புலம் எனில் அதற்கேற்றவாறும் எழுத்துகளின் புலம் எனில் அதற்கேற்றவாறும் உள்ள கீழிறங்கு பட்டியலை  விரியச்செய்து அல்லது நேரடியாக தேவையான தரவுகளை தட்டச்சு செய்து கொள்க   படிவமானது இவ்வாறு தரவுகளை உள்ளீடு செய்தபின் படம் -85-6-ல் உள்ளவாறு தோன்றிடும்

85.6

படம் -85-6

அக்சஸ் 2007-தொடர் -9 – அறிக்கைதயார் செய்தல்

டேட்டா பேஸில் இருக்கும் விவரங்களை நாம் விரும்பியவாறு அச்சிட்டு பெறுவதே அறிக்கையாகும். அக்சஸில் நான்கு வகையான அடிப்படை அறிக்கைகள் உள்ளனஅவை.

1.    Tebular Report: இது கிடைவரிசை , நெடுவரிசையாக தரவுகளை வகைப்படுத்தி பெறுவதற்கு உதவிபுரியும் அட்டவணையாகும்.

2.    Columnar report: இது ஒரு படிவத்தை ஒரு பக்கவடிவமைப்பாக மாற்றி வரைபடத்துடன் தோன்ற செய்வது.

3.    Mail Merge report இது கடிதம் எழுதுவதற்காக பயன்படுகின்றது

4.    Mailing Lebels : இது பல்வேறு முகவரிகளை தனித்தனி பெயர்பட்டியாக  ஒரே பக்கத்தில் அமையுமாறு  செய்ய பயன்படுகின்றது,.

           படிவத்திற்கும் அறிக்கைக்கும் உள்ள வேறுபாடு:  படிவமானது பயனாளர்  இடைமுகம் செய்து தரவுகளை உள்ளீடு செய்யஅனுமதிக்கின்றது.  ஆனால் அறிக்கையானது அவ்வாறு இடைமுகம் செய்ய அனுமதிக்காது முடிவான தரவுகள் மட்டும் அறிக்கையில் தோன்றும்.

அறிக்கையை உருவாக்குதலின் படிமுறை:

1.    முதலில் அறிக்கையின் புறவடிவமைப்பை வரையறுத்து கொள்க.

2.    பின்னர் தரவுகளை அதற்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துகொள்க.

3.    அதன் பின்னர் Acces report Design Window வை பயன்படுத்தி அறிக்கையை வடிவமைத்திடுக

4.    முடிவாக அறிக்கையை முன்காட்சியாக  திரையில் காணவும் சரியாக இருந்தால் அச்சிட்டு கொள்க.

அறிக்கை வழிகாட்டியை(report wizard) பயன்படுத்தி அறிக்கையை உருவாக்குதல்:

அக்சஸ் திரையின் மேல்பகுதியில் உள்ள  Create என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் Create  என்ற தாவிபட்டியின் Reportsஎன்ற  குழுவில் உள்ள Report Wizard  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் Report Wizard திரையில் தோன்றும்.

அதில் Tables/ queries என்பதன் கீழ் உள்ள கீழிறங்கு பட்டியலை விரியச் செய்து. அதில் Table : tbl skProduct என்றவாறு தெரிவு செய்து சொடுக்குக.

உடன் இந்த அட்டவணையில் உள்ள புலங்கள் Available fields என்பதன் கீழ் தோன்றும் அவற்றில் தேவையானதை மட்டும் தெரிவு செய்துகொள்க, தனித்தனியாக வெனில் > என்ற ஒற்றை குறியை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக, அல்லது ஒட்டுமொத்தமாக வெனில்   >> என்றவாறு இரட்டை குறிகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Selected Fields என்பதன் கீழ் இவை சென்று சேர்ந்துவிடும். இதிலிருந்து  தேவையற்ற புலத்தை  நீக்கிவிட குறிப்பிட்ட புலத்தை பிடித்து < என்ற ஒற்றை குறியை தெரிவு செய்து சொடுக்குக, அனைத்து புலங்களும் போதுமானஅளவிற்கு சரியாக இருக்கிறது எனில் Next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக .

அதன் பின்னர் தோன்றிடும் திரையில் Do you want to add any grouping level? என்பதற்கு Category என்றவாறு தெரிவு செய்து முன்புபோலவே > என்ற ஒற்றை குறியை தெரிவு செய்து சொடுக்குக  அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுவெனில் >> என்றவாறு இரட்டை குறிகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  Priorty என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி முன்பின் சரிசெய்து கொண்டு  Next  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

பின்னர் தோன்றிடும் திரையில் ஆறு வகையான புறவமை ப்பு வாய்ப்புகளில்  ஒன்றைதெரிவு செய்து Next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக

அதன் பின்னர்  நெடுக்கைவசமாகவா அல்லது படுக்கை வசமாகவா என்பதையும் அறிக்கையின் பாவணையையும் தெரிவு செய்து  இறுதியாக Finish என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

உடன் அறிக்கையானது திரையில் Design view என்ற சூழ்நிலை தாவிபட்டியுடன் தோன்றும்.  மேலும் தேவையானால் இதில் மாறுதல் செய்து கொள்ளலாம்.

அறிக்கைகளை Design view, Report view, Layout view, Print Preview ஆகிய நான்கு வகைகளில் காட்சியாக கண்டு சரிசெய்ய முடியும்.

Design view வில் அறிக்கைகளை உருவாக்குதல் மாறுதல் செய்தல் போன்ற பணிகளை செய்யலாம் .

Create என்ற தாவிபட்டியின் Report என்ற குழுவில் உள்ள blank Report என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன் புறவமைப்பு காட்சியில் புதிய அறிக்கை திரையில் தோன்றும். இந்த புறவமைப்பு காட்சியில் அறிக்கையை மாறுதல் செய்யும் வசதி அக்சஸ் 2007ல் மட்டுமே உள்ளது. இதில் கட்டுபாட்டின் நிலை ,ஓர அளவு போன்று பல்வேறு விவரங்களை மாறுதல் செய்யும்போதே திரையில் முன்காட்சியாக கண்டு நாம் விரும்பியவாறு சரிசெய்து கொள்ளலாம்.  ஆனால் Design view திரைபோன்று அருமையான அமைப்பை படிவத்தில் உருவாக்க முடியாது.

அதற்கு பதிலாக பழைய வழிமுறையான Design view வில் உருவாக்கி சரிசெய்துகொள்ளலாம்  அதற்காக அறிக்கையில் இடம் சுட்டியை வைத்து வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் குறுக்கு வழி பட்டியில் Design view என்பதை தெரிவு செய்து தெரிவு செய்து சொடுக்குக. உடன் Design view இல் அறிக்கை  தோன்றும்  இந்த அறிக்கையில் தேவையான வாறு மாறுதல் செய்து கொள்க.

அறிக்கைகளில் ஒரு Record மட்டுமே ஒருநேரத்தில் செயல்படுத்தும் நாம் உருவாக்கிய அறிக்கையின் வடிவமைப்பிற்கு ஏற்றாற்போன்று ஒவ்வொரு தரவையும் பல்வேறு வகையில் செயல்படுத்தப்படும்.இந்த அறிக்கைகள் பல்வேறு பகுதி (Section) களாக  பிரிக்கப்பட்டிருக்கும் இந்த பகுதிகளை bands என அழைக்கின்றனர்.

ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளில் உள்ள ஆவணங்களின் தரவுகளை காட்சியாக காண உதவும் மற்றொரு வழியே அறிக்கையாகும், ஒரு அறிக்கையானது ஒரு அட்டவணை அல்லது வினாவுடன் கட்டுண்டதாக இருக்கும் இது ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தரவுகளை கொண்டுவந்து பிரதிபலிக்க செய்கின்றது.

1.    Create என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் Create என்ற தாவிபட்டியின் Report என்ற  குழுவில் உள்ள Blank report என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

9.1

படம்-1

உடன் Access ஆனது Blank report ஐ படம்-1 -இல் உள்ளவாறு திரையில் தோன்றச் செய்யும் புலபட்டியலின்பெட்டியானது அறிக்கையின் தலைப்பில் அல்லது வலதுபுறம்தோன்றும்.

2.    இந்த சமயத்தில் நம்முன் கட்டுபாட்டை  அறிக்கையில் கொண்டு வந்து சோர்ப்பதற்காக 1) Layout view 2) Design view  ஆகிய இரண்டு வாய்ப்புகள் தயாராக உள்ளன இவற்றில்  Design view என்பதே சரியான தேர்வாக அமையும்.

3.    அதனால் இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக . உடன் தோன்றும் குறுக்கு வழி பட்டியில் Design view என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக. உடன் அறிக்கையானது . பழைய வழிமுறையான Design view விற்கு மாறிவிடும்  அதில் தேவையான மாறுதல்களை கட்டுபாடுகளில் செய்து கொள்க.

9.2

படம்-2

4.    Page set up என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்படம்-2-இல் உள்ளவாறு தோன்றும். Page set up என்ற பட்டியின் page layout என்ற குழுவில் Margin, orientation, போன்ற மற்ற வசதியை சரி செய்வதற்கான  பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி சரிசெய்து கொள்க.

கட்டுபாட்டை உருவாக்குதல் :

Design என்ற தாவிபட்டியின் Tools  என்ற குழுவில் உள்ள Add Existing field என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் field list என்ற விண்டோவில் தேவையான Tool Box Control ஐதெரிவு செய்து கொண்டு  சொடுக்கி பொத்தானை பிடித்துகொள்க,.

பின்னர் அப்படியே பிடித்து இழுத்து வந்து சரியான இடத்தில் அறிக்கையில் இதனை விடுக.

அதன்பின்னர் அறிக்கையின் கீழ்பகுதிக்கு இடம் சுட்டியை கொண்டு சென்றவுடன் இரண்டு தலை உள்ள அம்புக்குறி போன்ற தோற்றத்தில் இடம்சுட்டியின் தோற்றம் மாறி அமையும் உடன் அறிக்கையின் கீழ்பகுதி விளிம்பை பிடித்து இழுத்து தேவையானவாறு அமைத்துக்கொள்க .

அறிக்கைகளில் இடம் சுட்டியை வைத்து தெரிவு செய்து சொடுக்குக. பின்னர்  Designஎன்ற தாவி பட்டியில் Font   எனும்  குழுவில் உள்ள Bold என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி எழுத்துகளை தடிமனாக உருவாக்கி கொள்க. அவ்வாறே  இது தலைப்பெழுத்து என்பதால் எழுத்துருவின் அளவை பெரியதாக மாற்றிக்கொள்க.

இவ்வாறு தோற்றத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டுபாடுகள் அனைத்தையும் தெரிவு செய்து முன்புபோலவே  Bold  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி எழுத்தை தடினமாக உருமாற்றுக.

உரைப்பெட்டிகளின் உள்ள எழுத்துகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் அதனால் அச்சிடும்போது அவை சுத்தமாக மறைந்து விடும் அல்லது பகுதி மட்டும் தோன்றும்  அறிக்கையை பார்ப்பதற்கு வசதியாக நன்றாக அமையாது அதனால் Can Grow அல்லது can Shrink ஆகிய பண்பியல்புகளை பயன்படுத்தி இவ்வெழுத்துகளை உரைப்பகுதிக்குள் பொருத்தமாக அமையுமாறு மாற்றியமைத்திடுக.

அறிக்கைகளில் தரவுகளை குழுவாக ஒன்று சேர்க்கும் போது Group Header  Group Footer என்ற புதிய இரண்டு பகுதிகள் உருவாகின்றன.

9.3

படம்-3

   Design என்ற தாவிபட்டியின் Grouping &  Totals என்ற குழுவில் உள்ள Grouping என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. உடன் படம்-3-இல் உள்ளவாறு தோன்றும் திரையின் கீழ்பகுதியில் உள்ள Add a Group என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர்  புலத்தில் தேவையானதை தெரிவு செய்து குழுவாக உருவாக்கி கொள்க.

இவ்வாறு குழுவாக உருவாக்கியதை Add a Sort என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அடுக்கி கொள்ளலாம்.

கட்டுபாடுகளை பிடித்து இழுத்து சென்று விடுவதன்மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றியமைத்து கொள்ளலாம்.

இவ்வாறே Page Breake ஐ உருவாக்கி அமைத்து கொண்டு முடிவாக நாம் உருவாக்கிய அறிக்கையை சேமித்திடுவதற்காக விரைவு அனுகுதல் கருவிபட்டையில் உள்ள Saveஎன்ற  உருவபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.  உடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் பொருத்தமான பெயரை தட்டச்சு செய்து saveஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

இந்த அறிக்கையை அச்சிடுவதற்காக மைக்ரோ சாப்ட் ஆபிஸ் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.  உடன் விரியும் பட்டியலில் Print என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக.  பின்னர் விரியும் வலதுபுற பலகத்தில் தேவையான வாய்ப்பை தெரிவு செய்து அச்சிட்டு கொள்க.

அக்சஸ் 2007- தொடர் 8-படிவத்தை பயன்படுத்துதல்

அக்சஸில் உள்ள ஒரு படிவத்தில் 1,பட்டிபெட்டி (list box)2,சேர்க்கை பெட்டி (cobo box)  ஆகிய இரண்டு வகையான பெட்டிகள் உள்ளன, பட்டிபெட்டி (list box)யானது  எப்போதும் தெரிவுசெய்வதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் திறந்து இருக்கும் , ஆனால் சேர்க்கை பெட்டி (cobo box)யானது தெரிவுசெய்து சொடுக்கிய பிறகே பட்டியலை திறந்து தெரிவுசெய்யும்படி தயாராக இருக்கும்  ஆனால் இது இதனுடைய பட்டியலில் இல்லாதவற்றையும் உள்ளீடு செய்வதற்கு அனுமதிக்கின்றது,

ஏதேனும் ஒரு படிவத்தை வடிவமைப்புகாட்சியில் திறந்துகொள்க, பின்னர் design என்ற தாவிபட்டியின் கட்டுபாட்டுக் குழுவில் உள்ள சேர்க்கை பெட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, இந்நிலையில்  கட்டுபாட்டு வழிகாட்டியின் கட்டளையை பயன்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதா வென உறுதி செய்துகொள்க,

பின்னர் இடம்சுட்டியை படிவத்தில் தேவையான இடத்தில் வைத்து சேர்க்கை பெட்டியை வரைக, அல்லது படிவத்தில் ஏற்கனவே உருவாக்கி இருக்கும் உரை பெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் தோன்றும் குறுக்குவழி பட்டியில் combo box என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உரைபெட்டியானது சேர்க்கைபெட்டியாக உருமாறிவிடும்,

இந்த படிவம் வடிவமைப்பு காட்சியில்இருப்பதையும் Form selectorஇல் இடம்சுட்டி இருப்பதையும் உறுதி செய்து கொள்க, 1,design என்ற தாவி பட்டியின் Toolsஎன்ற குழுவில் உள்ள property sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது 2, அதே கட்டளையில் கீழிறங்கு பட்டியலை தோன்ற செய்து அதில் இருந்து Form என்பதை தெரிவுசெய்து கொள்க, அல்லது 3, படிவத்தின் Form selector இல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் தோன்றும் குறுக்குவழி பட்டியில் properties  என்பதை தெரிவு செய்க உடன் தோன்றும் properties sheets    என்ற உரையாடல் பெட்டியில்caption  என்ற பெட்டியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக, அதில் skproducts (படம்-1) என்றவாறு தட்டச்சு செய்க,வேறு பண்பியல்பை தெரிவுசெய்து சொடுக்குக,அல்லது உள்ளீட்டு விசையை அழுத்துக,

8.1

 படம்-1

  படிவத்தில் தரவுமூலத்தடன் கட்டுப்பாடுகளை கட்டுண்டவாறு  (bound control) இருக்கும்படி பின்வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி செய்யமுடியும்

1,அட்டவணை 2,வினா 3, எஸ்கியூஎல் அறிக்கை

ஒருபடிவத்தை திரைக்காட்சியாக ஆறுவகைகளில் காணமுடியும்

1.single form:இது திரையில் ஒருசமயத்தில் ஒரு ஆவணத்தை மட்டும் பிரிதிபலிக்கச்       செய்யும்

2.continuos form: இதில் ஒரே சமயத்தில் ஒன்றுக்குமேற்பட்ட ஆவணங்களை பிரிதிபலிக்கச்செய்யும்

3. datasheet: இது எக்செல்லின் விரிதாள் போன்று கிடைவரிசையும் நெடுவரிசையும் சேர்ந்தார் போன்று காட்சியளிக்கும்

4. pivot table: இதில் அங்கிங்கென நகரக்கூடிய நெடுவரிசை மற்றும் கிடைவரிசையுடன் தரவுத்தாளாக காட்சியளிக்கும்

5.pivot chart:இதில்மேற்கண்ட ஆய்ந்தறி அட்டவணையானது வரைபடத்துடன் காட்சியளிக்கும்,

6.split form: இந்த வாய்ப்பு அக்சஸ் 2007 இல் மட்டும் தான் உள்ளது, அதற்கு முந்தைய பதிப்புகளில் இல்லை  இதில் திரையானது இரண்டுபகுதியாக பிரிக்கப்பட்டு மேற்பகுதியில் ஆவணங்களை தெரிவுசெய்யபடுவதற்கும் கீழ்பகுதியில்  அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட ஆவணங்களில் ஏற்படும் மாறுதல்களை உடனுக்குடன் திரையில் பிரிதிபலிக்கவும் செய்யும்

இயல்பு நிலையில் ஒற்றை படிவமே திரையில் காட்சியளிக்கும் தேவையானால் மேலே கண்ட வாய்ப்புகளில்  ஒன்றை தெரிவுசெய்து மாற்றியமைத்து கொள்ளலாம்

படிவத்தில் தலைப்பையும் முடிவையும் (Header and Footer) சேர்த்தல்

மேலே உள்ள Arrange என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,  உடன் தோன்றும்Arrange என்ற  தாவிபட்டியின் show/hide என்ற குழுவில் உள்ள header/footer என்ற பொத்தானை (படம் -2 தெரிவுசெய்து சொடுக்கி உருவாக்கலாம் அல்லது காலியான படிவத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியில் Page Header /Footer  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் படிவத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அந்தந்த பக்கத்தின் தலைப்பு பகுதியும் Page Header அந்தந்த பக்கத்தின் முடிவுப்பகுதியும் Page Footer உருவாகிவிடும்

அவ்வாறே  அதே குறுக்குவழிபட்டியில் உள்ள form Header/Footer என்பதை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் அந்தந்த குறிப்பிட்ட படிவத்தில் படிவத்தின் தலைப்பு பகுதியும்Form Header படிவத்தின் முடிவுபகுதியும் Form Footer உருவாகிவிடும்

8.2

 படம் -2

புலப்பட்டியலைபயன்படுத்தி கட்டுபாடுகளை சேர்த்தல்

ஒரு அட்டவணையிலிருந்து தேவையான புலத்தை இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து விடுவதன்மூலம் ஒருகட்டுண்ட கட்டுப்பாட்டை (bound control) உருவாக்கமுடியும் இதற்கான படிமுறை பின்வருமாறு

1,வழிகாட்டியின் மூலம் Tbl skproducts என்பதை தெரிவுசெய்துகொள்க,

2,  பின்னர் மேலே உள்ள Create என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் தோன்றும் Createஎன்ற தாவி பட்டியின் form என்ற குழுவில் உள்ள Blank Form என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் புதிய படிவம் ஒன்று புறவடிவமைப்பு காட்சியாக வடிவமைப்பு காட்சியில் design என்ற சூழ்நிலைதாவி பட்டியுடன் திரையில் தோன்றும்

3,இந்த design என்ற தாவிபட்டியின் Control குழுவிலுள்ள Add Existing field என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

4,உடன் தோன்றும் புலப்பட்டியலில்  Produc ID என்ற புலத்தை தெரிவுசெய்து சொடுக்குக,

5, shift என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு இந்த புலப்பட்டியலில் costஎன்ற  புலத்தை தெரிவு செய்து பிடித்துகொள்க,

6,அப்படியே சுட்டியை பிடித்து இழுத்துவந்து படிவத்தில் தேவையான இடத்தில் விடுக,

உடன் தேவையான கட்டுண்ட கட்டுப்பாடு (bound control) உருவாகிவிடும்

கணக்கிடப்பட்ட கட்டுப்பாட்டை(calculated control) உருவாக்குதல்

இதற்கான படிமுறை பின்வருமாறு

1, வழிகாட்டியின் மூலம் Tbl skproducts என்பதை தெரிவுசெய்துகொள்க,

2,  பின்னர் மேலே உள்ள Create என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் தோன்றும் Createஎன்ற தாவி பட்டியின் form என்ற குழுவில் உள்ள Blank Form என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் புதிய படிவம் ஒன்று புறவடிவமைப்பு காட்சியாக வடிவமைப்பு காட்சியில் design என்ற சூழ்நிலைதாவி பட்டியுடன் திரையில் தோன்றும்

3, புலப்பட்டியலில் இருந்து Cost மற்றும் sale price ஆகிய புலங்களை பிடித்து இழுத்து வந்து படிவத்தில் தேவையான இடத்தில் விடுக

4, பின்னர் படிவத்தை வடிவமைப்பு காட்சிக்கு மாற்றிகொள்க,

5,அதன் பின்னர் design என்ற தாவிரிப்பனின் control என்ற குழுவில் உள்ள உரைபெட்டியின் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் படிவத்தில் இடம்சுட்டியைவைத்து உரைபெட்டியை வரைக,

6 இந்த கட்டுபாட்டின் பெயர் nameஎன்ற பண்பியல்பிற்கு  txt profit என தட்டச்சு செய்க, இங்கு  txt என்ற முன்னொட்டு சொல் கட்டுபாடானது உரைபெட்டியாக உள்ளது எனக் குறிக்கின்றது,

7,இதனுடன்  control source என்ற பண்பியல்பில்  = [sale price ] – [cost] என அமைத்திடுக,

8, இதனுடைய  Format என்ற பண்பியல்பை currency என அமைத்திடுக,

9,இதனுடைய Decimal placesஎன்ற பண்பியல்பிற்கு 2 என அமைத்திடுக,

10, இந்த கட்டுபாட்டின் பெயர்பட்டி என்பதில் Caption என்ற பண்பியல்பிற்கு  Profit என அமைத்திடுக,

11, பின்னர் படிவக்காட்சிக்கு மாறிக்கொள்க, இப்போது கணக்கிடப்பட்ட கட்டுபாட்டில் என்ன பிரிதிபரிக்கின்றது என காண்க,

ஒரே படிவத்தில் அமைக்கப்பட்டுள்ள வெவ்வேறு கட்டுபாடுகளுக்குள் மாறுவதற்கு தாவி விசையை பயன்படுத்துக,

படிவத்தில்  உள்ள கட்டுபாட்டின்  இடையே இடம்சுட்டியை நகர்த்துவதற்காக தாவி (Tab) விசையை பயன்படுத்துவோம் உடன் படிவத்தில் வரிசை முறைப்படி நகர்ந்து செல்லாது  எங்காவது உள்ள கட்டுபாட்டிற்குள் சென்று விடும்

அவ்வாறு வரிசைமுறைப்படி நகர்ந்து செல்லவேண்டும் என விரும்பினால் Arrange என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்  தோன்றும் Arrange என்ற தாவிபட்டியின்Control Layout என்ற குழுவில் உள்ள  Tab Orderஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

உடன்  தோன்றும்  Tab Order என்ற உரையாடல் பெட்டியில்(படம் -3) Custom order பகுதியில் உள்ள புலங்களை இடம்சுட்டியால் பிடித்து இழுத்து வந்து  தேவையான இடத்தில் வைத்திடுக

பின்னர் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தாவி (Tab) விசையை அழுத்தினால் உடன் இடம்சுட்டியானது  வரிசைகிரமமாக நகர்ந்துசெல்லும்,

8.3

படம் -3

படிவத்தை அச்சிடுதல்

விரைவு அனுகல் பட்டையில் உள்ள அச்சிடுவதற்கானஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதுதான் படிவத்தை அச்சிடுவதற்கான மிகசுலபமான வழியாகும் ஆயினும் மைக்ரோ ஷாப்ட் ஆபிஸ் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் தொடக்க பட்டியில் உள்ள printஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் வலதுபுற பட்டியில் அச்சிடுவதற்கான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அச்சுக்கு முன்காட்சியாக கண்டு அதன்பின்னர் அச்சிட்டுகொள்க,

படிவத்தை அறிக்கையாக உருமாற்றுதல்

இந்த படிவத்தை வடிவமைப்பு காட்சியில்திறந்து கொள்க, பின்னர் மைக்ரோ ஷாப்ட் ஆபிஸ் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் Save as என்பதை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் வலதுபுற பட்டியில் as a report என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் படிவம் முழுவதும் அறிக்கையாக (Report) உருமாற்றி சேமித்து விடும், படிவத்தின் தலைப்பும் முடிவும் அறிக்கையின் தலைப்பும்முடிவமாக அமைந்துவிடும் அவ்வாறே படிவத்தின் ஒருபக்கத்தினுடைய தலைப்பும் முடிவும் அறிக்கையினுடைய ஒரு பக்கத்தின் தலைப்பாகவும் முடவாகவும் மாறி அமர்ந்துவிடும் மீண்டும் புறவமைப்பை உருவாக்காமல் நேரடியாக இந்த அறிக்கை களில் தேவையான மாறுதல்களை செய்து கொள்ள இது உதவிபுரிகின்றது,

மேலும் இது Report Design Window ஆக உருமாறி திரையில் தோற்றமளிக்கின்றது

குழுவிவாதம் (group discussion)

ஒத்த கருத்துடையவர்களோடு விவாதம் செய்து கருத்துகளை பரிமாறகொள்ள உதவும் Google group போன்றவை குழுவிவாதம் (group discussion)என அழைக்கபடுகின்றது இதன்மூலம் நம்முடைய அறிவுத்திறன் அனுபவத்திறன் மேலும் மெருகூட்டபடுகின்றது இன்று இதுபோன்ற நிறுவனங்களின் குழுக்கள் ஒரே கருத்துடை தனிப்பட்டவர்களின் குழு என ஏராளமான அளவில் இவை இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் இவ்வாறான குழுக்களின் வாயிலாக தம்முடைய நிறுவனத்தின் தகவல்கள் வெளியாகிவிடுமோ என பயம்கொள்வதால் நிறுவனத்தின் நிலையில் இந்த குழுவிவாதத்தை  தடைசெய்கின்றன இருந்த போதிலும் இவ்வாறான குழுவிவாதத்தை செயல்படுத்துவதற்கு ஏராளமான மென்பொருட்கள் கிடைத்தாலும் Vanillaஎன்ற மென்பொருள் ஒரு சிறந்த திறமூல பயன்பாடாக பயன்படுகின்றது

1இதனை நிறுவி செயல்படுத்தவது  எளிதான செயலாகும்

2மிகப்பிரபலமான தலைபபில் விரைவாக குழுவிவாதத்தை தொடங்கி செயல்படுத்தமுடியும்

3 இது மிக கையடக்க தன்மையில் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துசென்று நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

4 வாடிக்கையாளர் விரும்பியவாறு இதனை மாற்றியமைத்து பயன்படுத்தி கொள்லமுடியும்

5 ஃபேஸ் புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதள உறுப்பினருடன் மிகஎளிதாக ஒருங்கிணைத்து செயல்படுத்திடமுடியும்

6 செல்லிடத்த பேசியிலும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்

7 இதனை http://vanillaforums.org/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

http://localhost/vanilla/ என்ற இதன் முகப்பு பக்கத்திற்கு சென்று htdocs என்பதன்கீழ் vanilla என்ற அடைவை உருவாக்கி கொள்க பின்னர்   தோன்றிடும் படிவத்தில் பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை அளித்து தரவுதள பெயராக vanilla என உருவாக்கி கொண்டு இந்த படிவத்தை submitஎன்ற பொத்தானைஅழுத்துவதன் வாயிலாக வனிலா நிறுவாக பக்கத்திற்கு செல்க பின்னர் இதன் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு பயன்படுத்தி கொள்க

84.4.1

 

கணினியில் பணிபுரிந்திடும்போது நம்முடைய உடல்நலன் பாதுகாப்பு

1மிக இருண்ட அறையில் கணினியை பயன்படுத்திடவேண்டாம்

2 விசைப்பலகையும் நாம்பயன்படுத்திடும் ஆவணத்தின் எழுத்துகளும் நன்கு கண்ணிற்கு தெளிவாக தெரியுமாறு வைத்து பயன்படுத்துக பொதுவாக கருப்பஎழுத்துகள் வெள்ளை பின்னனி நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது

3  கணினியை பயன்படுத்திடும்  அறையில் எரியும் விளக்குகள் கணினியின் திரையில் பிரதிபலிக்காவண்ணம் அதாவது கணினிக்கு எதிர்ப்புறத்திற்கு பதிலாக கணினிஇருக்கும் பக்கம் இருக்குமாறு பார்த்து கொள்க

4 கணினியின் திரையின் துல்லியத்தையும் பிரகாசத்தன்மையும் போதுமான அளவிற்கு  அமைத்து கொள்க

5 கணினியின் திரைக்கும் நம்முடைய கண்ணிற்கு மிகச்சரியான் தூரத்தில் இருக்குமாறு பாரத்து கொள்க தொடர்ந்து கணினியின் திரையை பார்க்காமல் அவ்வப்போது கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்கவும்  கண்ணை மூடி திறந்து கண்ணில் கண்ணீர் இல்லாமல் வறண்டுபோகாமல் பார்த்து கொள்க

ட்ராப் பாக்ஸ்

பெரும்பாலானவர்கள் ட்ராப் பாக்ஸ் என்பது  இணையத்தின்மூலம்நேரடியாக தேக்கிவைக்கவைக்க உதவும ஒருகாலிநினைவகம் என்றே தவறாக எண்ணுகின்றனர் ஆயினும் அதன்மூலம் பின்வரும் ஏராளமான பயன்களை பெறமுடியும்

1 செல்லிடத்து பேசி அல்லது வேறுஎந்தவொரு சாதனத்தின்மூலமும் இதனை எளிதாக அனுகிடமுடியும்

2 தொடக்கத்தில் நமக்கு 2 ஜிபி காலி நினைவகத்தை இலவசமாக வழங்குகின்றது அதன்பின் நாம் இந்த ட்ராப்பாக்ஸ் தளத்தில் சேர்த்திடும் நண்பர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு நண்பரின் சேர்க்கைக்கும் 500 எம்பி காலி நினைவகத்தை நம்முடைய கணக்கில் சேர்த்து வழங்குகின்றது இவ்வாறு அதிகபடசம் 16 ஜிபிவரை காலிநினைவகத்தை நமக்கு இலவசமாக வவங்குகின்றது

3 ட்ராப்பாக்ஸின் வாடிக்கையாளர் மென்பொருளானது நம்முடைய கணினியில்  இதற்கென தனியான மடிப்பகத்தை உருவாக்கி  கொள்கின்றது நம்முடைய கோப்பினை இழுத்துசென்று இன்த மடிப்பக்ததில் விட்டால் போதும்  தானாகவே ட்ராப்பாக்ஸானது இந்த கோப்புகளை இதனுடைய இணைய பக்கத்தி்கு மேலேற்றி கொள்கின்றது

4  Windows, Mac, Linux எனஎந்தவொரு இயக்கமுறைமையிலும்   ஏன் ஸ்மார்ட் போன்களில் கூட அதற்கான சிறப்புவகை பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தி கொள்ளமுடியும்

5 கோப்பின் அளவை பற்றி கவலைபடாமல் இதில் பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும்

6 எந்த இடத்திலிருந்தும் எந்த கணினி மடி்ககணினி ஸ்மார்ட் போன் போன்று எந்த சாதணத்திலிருந்தும் இதனைஅனுகிடமுடியும்

7 இந்த ட்ராப் பாக்ஸில் தவறுதலாக அழித்துவிட்ட கோப்பினை முப்பது நாட்களுக்குள் கவலையில்லாமல் அதனை மீட்டெடுத்துவிடமுடியும்

8 ஒரு கோப்பினை பல்வேறு திருத்தங்களை செய்துகொண்டிருப்போம் அப்போது இவ்வாறு திருத்துவதற்கு முந்தைய கோப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணிடும்போது உடன் முந்தைய கோப்பின் பதிப்பை மீட்டெடுக்கமுடியும்

9 இந்த ட்ராப்பாக்ஸை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு விடுபட்டாலும் தொடர்ந்து பண்புரிந்தபின் மீண்டும் இணைய இணைய இணைப்பு கிடக்கும்போது நாம் செய்த பணி நிகழ்நிலை படுத்தி கொள்ளும்

10 நம்முடைய நண்பர்களுடன் குறிப்பிட்ட கோப்பினை மடிப்பக்ததிலுள்ள கோப்புகளை எளிதாக அவர்களுக்கென தனியாக இந்த ட்ராப்பாக்ஸில் கணக்கு இல்லையென்றாலும் பகிர்ந்து கொள்ளமுடியும்

11 அவ்வாறே நண்பர்கள் குழுவாகவும் பகிர்ந்து கொள்ளமுடியும்

12 நம்முடைய இணைப்பின் கற்றை அளவு அதாவது அகல்கற்றையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அதற்கேற்ப இதனை பயன்படு்ததி கொள்ளமுடியும் அவ்வாறே கோப்பினை பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது இணையஇணைப்பு துண்டிக்கபட்டு பின் இணைப்பு கிடைத்திடும்போது விடுபட்ட இடத்திலிருந்து பணி தொடர்ந்து நடைபெறும்

13 இது திறமூல பயன்பாடாக இருப்பதால் நாம் விரும்பும் சேவையை அதற்கான சேவை வழங்குனர்மூலம் இதில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

84.3.1

விண்டோ 8 ஐ யூஎஸ்பி வாயிலாக நிறுவுகை செய்திடலாம்

விண்டோ 8 இன் 64 பிட் பதிப்பையும்  விண்டோ7 யூஎஸ்பி/டிவிடி கருவியையும்  என்ற http://www.techspot.com/downloads/4911-windows-7-usb-dvd-download-tool.html தளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்க  இந்த விண்டோ 8 இன் 64 பிட் பதிப்பு இயங்குவதற்கு கூடுதலாக 1 ஜிபி ரேமும் 4 ஜிபி காலி நினைவகமும் தேவையானவையாகும்

பின்  4 ஜிபி காலி நினைவகம் உள்ள யூஎஸ்பி ட்ரைவானது பூட்டபிள் யூஎஸ்பி ட்ரைவாக உருவாக்க வேண்டும்  அதற்காக   விண்டோ7 யூஎஸ்பி/டிவிடி கருவியை கணினியில் நிறுவி அதனை செயல்படுத்தி திறந்து கொள்க அதன்பின் விண்டோ 8 இன் ஐஎஸ் ஒ கோப்பினை  இந்த  யூஎஸ்பி ட்ரைவிற்குள் இந்த கருவியின் மூலம் உள்ளிணைத்திடுக  நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் இந்த பிற்காப்பு பணிமுடிவடைந்ததாக backup completed என்ற செய்தியின் மூலம் அறிவிக்கும்

84.2.1

84.2.1

விண்டோ எக்ஸ்பி அல்லது விண்டோ7 ஐ மேலெழுதி இந்த விண்டோ 8 ஐ யூஎஸ்பி வாயிலாக நிறுவுகை செய்யவிருக்கின்றோம் அதனால் அவைகளிலுள்ள தேவையான கோப்பினை பிற்காப்பு செய்து கொள்க  இந்த யூஎஸ்பிவாயிலாக   விண்டோ எக்ஸ்பி அல்லது விண்டோ7இன் ரூட்டைரக்ட்ரியை திறந்து கொண்டு   என்ற கோப்பினை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்தி  நிறுவுகை பணியை தொடங்கி செயல்படுத்துக

84.2.2

84.2.2

உடன்1 Windows 7 users should have a painless upgrade as programs, 2 Windows settings as well as user accounts and files are imported   ஆகிய இரு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க  ஆயினும் பொதுவாக விண்டோ8 ஆனது முந்தைய பதிபபின் உருவாக்கிய கோப்பினை சேமிக்காது இதனால் ஒரே கணினியில் நடப்பு இயக்கமுறைமையுடன் விண்டோ 8 ஐ சேர்த்து நிறுவிகொள்ளமுடியும இதற்காக வெளியிலிருந்து காலி நினைவகியத்தை அல்லது இருக்கும் காலிநினைவகத்தை பாகப்பிரிவினை செய்துகொள்ளலாம் முதல் செயல் காலிநினைவகத்தை மட்டும் கணினியுடன் இணைத்துகொண்டால் போதும்  இரண்டாவது  வகையில் Start =>  Disk Management => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி  Disk Management என்ற பயன்பாட்டினை செயற்படுத்தி நாம் நிறுவுகை செய்யவிரும்பும் ட்ரைவில் இடம்சுட்டியை வத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் சூழ்நிலைபட்டியில் Shrink Volume என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

அவ்வாறே Unallocated” என்ற இடம்சுட்டியை வத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் சூழ்நிலைபட்டியில்New Simple Volume என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  New Simple Volume என்ற வழிகாட்டி உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும்

84.2.3

84.2.3

அடுத்து காலியாக இருக்கும் அடைவின் பெயரை தெரிவுசெய்துகொண்டுfile systemஎன்பதில்  NTFS  என்பதையும் மற்றஇயல்புநிலையில் இருப்பதையும் தெரிவுசெய்து கொண்டுnextஎன்ற பொத்தானையும் பின் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக   விண்டோ எக்ஸ்பி எனில் இதற்கான வேறுநிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்தி கொள்க  இவ்வாறு பாகப்பிரிவினை செய்தபின் யூஎஸ்பியிலிருந்து  விண்டோ 8 ஐ இரட்டை இயக்கமுறைமை நிறுவுகை பணி மிக சுமுகமாக எளிதாக நம்மை வழிகாட்டி அழைத்துசென்று நடைபெறசெய்யும் இதன்பின் ஒரே கணினியில் இரு இயக்கமுறைமையையும் இரட்டை இயக்கமுறைமையின் அடிப்படையில் எளிதாக இயக்கி பயன்படுத்தி கொள்க

 

 

Previous Older Entries