VMware certificationஎன்றால் என்ன ?

12

இது மெய்நிகர் கணினியில் குறிப்பிட்ட பணியை செய்வதற்கான சான்றிதழாகும் அதாவது தற்போது நடைமுறையில் மெய்நிகர் கணினிகளில் VCA, VCP, VCAP VCDXஆகிய சான்றிதழ்கள் மிகமுக்கியமானவையாகும் இவற்றுள்VMware’s Certified Associate-level certificationsஎனும் சான்றிதழ் பயிற்சியை VCAஎன அழைப்பார்கள் இது கீழ்நிலை சான்றிதழாகும் இதனை ஒரு நாளின் பாதியளவு நேரத்திற்குள் ஒளிஒலிபடகாட்சி பயிற்சிஏடுகளைகொண்டு எளிதாக பயின்று சான்றிதழ் பெறலாம் இது தொடக்கநிலை சான்றிதழாகும்

VMware‘s Professional-level எனும் சான்றிதழ் பயிற்சியை VCP ன அழைப்பார்கள் இதுசிறிது மேம்பட்ட கல்வியாகும் இந்த பயிற்சிக்கு ஒருவாரம் வரை ஆகும்

VMwareCertified Advanced Professional level எனும் சான்றிதழ் பயிற்சியை VCAP என அழைப்பார்கள் இது ஒரு சிறிது கடிணமான அதிககாலம் பிடிக்கும் சான்றிதழ் கல்வியாகும்

VMware Certified Design Expert எனும் சான்றிதழ் பயிற்சியை VCDXஎன அழைப்பார்கள் இதுமேம்பட்ட கல்வியாகும் இவ்வுலகில் இதுவரை இதனை வெறும் 200 நபர்கள் மட்டுமே இதனை முடித்துள்ளனர் என்ற செய்தியை மனதில் கொள்க

இவையனைத்தும் இலைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்ககூடிய சான்றதழ் கல்வியாகும் இந்த சான்றிதழ்களைபற்றிய மேலும் விரங்களை அறிந்துகொள்ள http://itknowledgeexchange.techtarget.com/it-jobs/pearson-vue-goes-biometric-for-cert-testing/ எனும் தளத்திற்கு செல்க

PaaS,SaaS,DaaS,IaaS சேவையாளர்கள் என கூறுகின்றார்களே அவ்வாறானவர்கள் யார் அல்லது அவ்வாறு கூறுவது எவற்றை குறிப்பிடுகின்றன?

நாம் தற்போது நம்முடைய இணைய தொடர்பில் அல்லது அன்றாட நடைமுறையில் மேககணினியுடன் தொடர்பு கொள்ளும்போது இந்த பணியில் உதவிபுரிவதற்காக PaaS , SaaS, DaaS,IaaS ஆகிய சேவையாளர்கள் உள்ளனர் என கூறுகின்றார்களே அவ்வாறு கூறுவது எவற்றை குறிப்பிடுகின்றது என அறிந்துகொள்ள நாம் அனைவரும் விரும்புவோம் நிற்க இங்கு மேலை கூறியவைகளில்

Platform as a service என்னும் சேவையை சுருக்கமாக PaaSஎன அழைப்பார்கள் பொதுவாக மேககணினி வழங்குநர்கள் இணையத்தின் வாயிலாக பயனாளர்களுக்கு தேவையான மென்பொருள் கட்டமைவை சிறிதளவு கட்டணத்துடன் வழங்குவதை PaaSஎன அழைப்பார்கள் இந்த வகையான சேவைகளில் Salesforce.com’s , Google App Engine , Heroku for software development and management.போன்றவர்கள் உள்ளனர்

software as a service என்னும் சேவையை சுருக்கமாக SaaS என அழைப்பார்கள் பயனாளர்கள் தங்களுடைய கணினியி்ல் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான மென்பொருளை இந்த வகையான சேவையாளரிடமிருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த வகையான சேவைகளில்Google Apps, Salesforce.com Microsoft Office 365. போன்றவர்கள் உள்ளனர்

Desktop as a service என்னும் சேவையை சுருக்கமாக DaaSஎன அழைப்பார்கள் மேககணினிவழங்குநர்கள் பயனாளர்களின் தரவுகளை தேக்கிவைத்தல் ,பிற்காப்பு செய்தல், பாதுகாப்பு செய்தல் மேம்படுத்துதல், நகலெடுத்தல், மெய்நிகர்கணினியை செயல்படுத்துதல் போன்ற செயல்களை இந்த சேவையில் வழங்குகின்றனர் இந்த வகையான சேவைகளில்Amazon WorkSpaces, VMware Horizon Air Desktops போன்றவர்கள் உள்ளனர்

infrastructure as a service என்னும் சேவையை சுருக்கமாக Iaas என هششஅழைப்பார்கள் மேககணினிவழங்குநர்கள் பயனாளர்களின் dynamic scaling, desktop virtualizationபோன்ற செயல்களை இந்த சேவையில் வழங்குகின்றனர் இந்த வகையான சேவைகளில் Amazon Web Services (AWS), Windows Azure, Google Compute Engine, Rackspace Open Cloudபோன்றவர்கள் உள்ளனர்

UDP (User Datagram Protocol)என்றால்என்ன ?

 நம்பகமற்ற வலைபின்னல் அல்லது இணையம் வழியாக தரவுகளை Internet Protocol (IP)ஐ பயன்படுத்தி அனுப்புவதை UDP (User Datagram Protocol) என அழைக்கபடுகின்றது .இந்த UDP (User Datagram Protocol) என்பது Transmission Control Protocol (TCP) என்பதற்கு மாற்றாக பயனாளர்களையும் இணையத்தையும் இணைக்கும் கருவியாகும் இவையிரண்டுமே Internet Protocol (IP)என்பதன் மேல் இயங்குகின்றன அதனால் சிலநேரங்களில் இவைகளை UDP/IP அல்லது TCP/IP. ன்றவாறே குறிப்பிடுவார்கள் உண்மையில் பொதுவாக இவையிரண்டும் இணையத்தின் வாயிலாக தரவுகளின்சிறிய பொதியை மட்டும் அனுப்புவதையே Datagram என அழைப்பார்கள் ஆயினும் TCP ஆனது higher bandwidth overheadஉம் latency உம் சேர்ந்து நாம் அனுப்பிடும் தரவுகள் சென்று சேர்ந்ததா என சரிபார்த்து வரிசைகிரமாக அனுப்புகின்றது அதற்குபதிலாக UDP ஆனது தரவுகளை lower bandwidth overheadஉம் and latency உம் சேர்ந்து தரவுகளை அனுப்புகின்றது
மிகமுக்கியமாக இந்த
UDP ஆனது gaming, voice , video போன்றவைகளை அனுப்பிட பயன்படுத்தி கொள்ள படுகின்றது

இணையபக்கங்களில் கடவுச்சொற்களக்கு பதில் நம்முடைய மூளையின் அதிர்வை பயன்படுத்தி உள்நுழைவு செய்யமுடியும்

9

இணையதளங்களில் பயன்படுத்திடும் மின்னஞ்சல் வங்கிகணக்கு அல்லது எந்தவொரு தளத்திற்கு சென்றாலும் அதனுள் உள்நுழைவு செய்வதற்காக கடவுச்சொல் இருந்தால் மட்டுமேமுடியும் என்றநிலையில் ஒருமனிதன் எத்தனை உள்நுழைவு சொற்களை நினைவில் வைத்துகொண்டு அதனதன் உள்நுழைவுசெய்வதற்கு பயன்படுத்துவதற்கெல்லாம் செயல்படமுடியும் அதனால் பெரும்பாலாணவர்கள் ஒரேமாதிரியான கடவுசசொற்களையே அனைத்திற்கும் பயன்படுத்திடுவார்கள் இதனைசூழ்ச்சியாளர்கள் இந்த ஒரு கடவுச்சொல்லை மட்டும் எப்படியாவது கண்டுபிடித்து தனிநபர்களின் அந்தரங்க செய்திகளிலிருந்து பணவிவாகரங்கள் வரை அபகரித்து கொள்ள ஏதுவாகிவிடுகின்றது இதனை தவிர்ப்பதற்காக Brainprint என்ற புதிய செயல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது நம்முடைய குறிப்பிட்ட தளத்திற்குமுகப்பில் சென்றவுடன் நம்முடைய மூளையில் ஏற்படும் உணர்வுஅலைகளை கொண்டு பதிவுசெய்து குறிப்பி்டட இணைய தளத்திற்குள் உள்நுழைவு செய்திடும் வசதி கூடிய விரைவில் வரவிருக்கின்றது என்ற இனிய செய்தி மனதில் கொள்க

நன்பர்களுக்கான வாழ்த்துகளை மின்னஞ்சல்மூலம் அனுப்பலாமே

7

 புத்தாண்டு பொங்கல் பிறந்தநாள் போன்றவைகளுக்கானவாழ்த்துகளை நாம் அச்சிட்டு நம்முடைய நண்பர்கள் அனுப்புவதால் ஏராளமான காடுகளை அழித்து ஒழிப்பதற்கான காரணமாக நாம் அமைகின்றோம் அதற்கு பதிலாக நம்மில் பெரும்பாலாணவர்கள் செல்லிடத்து பேசி பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம் இந்த செல்லிடத்து பேசிக்கு இணையத்தின் வாயிலாக கட்டணமில்லாமல் வாழ்த்து செய்திகளை அனுப்பி நம்முடையஉறவுகளை பகிர்ந்து கொள்ளலாமே இந்த வாழ்த்து செய்திகளானது சமூகவலைபக்கங்களான ட்விட்டர் முகநூல் போன்றவைகளின் வாயிலாக கூட பகிர்ந்துகொள்ளமுடியும் இதற்கான தொடர்புமுகவரிகளை நம்முடைய ஜிமெயில் யாகூமெயில் போன்றவற்றிலிருந்து பெற்று அவைகளுக்குகூட நம்முடைய வாழ்த்து செய்திகளை அனுப்பிடமுடியும் நம்முடைய சொந்த குரல்,படம் ஆகியவற்றைகூட இந்த வாழ்த்து செய்தியில் அனுப்பிடமுடியும் இந்திய திருவிழாக்கள் அரசுவிடுமுறைகள் அமைச்சககங்கள் என 41 வகை விழாக்களுக்கான வாழ்த்து செய்திகள் தயார்நிலையில் உள்ளன இதனை http://http://jan-sampark.nic.in/jansampark/ எனும் தளத்திற்கு சென்று பயன்படுத்திகொள்க

தொலைதூர கல்விக்கு உதவிடும் பிக்புளூபட்டன் எனும் கட்டற்றமென்பொருள்

 5

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள வகுப்பறைகளில் நேரடியாக பயிலுகின்ற நன்மைகள் எதுவும் இந்த தொலைதூர கல்வியில் இல்லையே என வருத்தபடுபவர்களின் உதவிக்காக கைகொடுக்கவருவதுதான் பிக்புளூபட்டன் எனும் கட்டற்றமென்பொருளாகும் இந்தபிக்புளூபட்டன் எனும் கட்டற்றமென்பொருளானது இணையவிவாத கூட்டத்தின் அடிப்படைய செயல்படும் VoiceoverIP(VoIP) ஆகும் இது வகுப்பறை போன்ற விவாத நிகழ்வுகளை பதிவுசெய்து பின்னர் தேவைப்படும்போது மீண்டும் இயக்குதல்செய்து காட்சியாக காணமுடியும் , ஒருங்கிணைந்த VoIPஆனது கவணிக்கவும் பேசுவதற்கு பங்கெடுத்துகொள்ள அனுமதிக்கின்றது பவர்பாயின்ட் போன்று படக்காட்சியாக காண்பிக்க உதவுகின்றது இணையபடப்பிடிப்பு கருவி பயனாளர்களிடைய பங்கிட்டுகொள்ள உதவுகின்றது எந்தவொரு பாடப்பொருள் குறித்தும் தனிப்பட்ட அல்லது குழுவான விவாதத்திற்கு அனுமதிக்கின்றது கணினியில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதி்ககின்றது மிகமுக்கியமாக இதனுடைய ஒரேதிரையில் மூன்று சாளரங்களை கொண்டது இதனுடைய இடதுபுறமுள்ள சாளரத்தில் கல்விகற்பதற்கான விவாதத்தில் கலந்துகொள்பவர்களின் விவரங்களின் பட்டியலும் மையத்தில் உள்ளசாளரத்தில் ஆசிரியர்எழுதுவதை பிரதிபலிக்கும் கரும்பலகையும் வலதுபுறம் ஆசிரியரும் மாணவர்களும் அல்லது மாணவர்களுக்குள்ளும் நேரடி விவாதத்தை பிரதிபலிக்கும்சாளரமாகும் தற்போது இதனுடைய 0.9.0 என்ற பதிப்பு கிடைக்கின்றது இது உபுண்டு லினக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படும் திறன்கொண்டதாகஉள்ளது அமைச்சர்பெருமக்கள் நேரடியாக புதிய திட்டங்களை திறந்துவைத்திட பயன்படுத்துவதை போன்றே இந்த கருவியை பல்கலை கழகங்கள் தொழில்நுட்பநிறுவனங்கள் தங்களின் கல்வியை பயனாளர்களிடம் சென்றடைவதற்கு இந்த பிக்புளூபட்டன் எனும் கட்டற்றமென்பொருளை பயன்படுத்தி கொள்ளலாமே இதனை பதிவிறக்கம் செய்திடவும் மேலும் விவரம் அறிந்தகொள்ளவும் http://bigbluebutton.org/ எனும் தளத்திற்கு செல்க

நம்முடைய ஐஃபோனிற்கு வரும் உரைசெய்தியை உடனடியாக படிக்கவேண்டாம்

நம்முடைய  ஐஃபோனிற்கு நம்முடைய நண்பர்களால் நமக்கு அனுப்பட்டு கிடைக்கபெறும் குறுஞ்செய்திகளில் உள்ள உரைசெய்திகளை உடனடியாக அதனை திறந்த படிக்கவேண்டாம் ஏனெனில்  நாம் படித்திட முயலும்போதுஅதனோடு கூட ஒருசில எழுத்துகள் ஒருங்குகுறியீடுகள்  உடன் நம்முடைய சாதனத்தை செயலிழக்க செய்துவிடுகின்றன மீண்டும் நம்முடைய சாதனத்தை மறுதொடக்கம் செய்திட முயன்றாலும் செயல்படசெய்திடமுடியாத நிலை ஏற்படுத்துகின்றது அதனால் இவ்வாறான நிலையை தவிர்க்கமுதலில் அவ்வாறுவரும் செய்தியை  Siri digital assistant என்பதை கொண்டு சரிபார்த்தபின் ஆபத்தானது எனில் அந்த குறுஞ்செய்தியை நீக்கம் செய்திடுமாறும் ஆபதற்றது எனில் அந்த குறுஞ்செய்தியை திறந்து படித்திடுமாறும் ஆப்பில் நிறுவனம் பரிந்துரைசெய்கின்றது

வாருங்கள் Wordbaseஎனும் சொல்விளையாட்டு தளத்திற்கு

4

 பொதுவாக நாம் அனைவரும் ஏராளமான புதிய சொற்களை அறிந்து கொண்டு நம்முடைய மொழி அறிவையும் பொதுஅறிவையும் விரிவுபடுத்தி கொள்ளவிழைவோம் அதிலும் இவ்வாறான புதிய சொற்களை விளையாட்டுகளின் வாயிலாக அறிந்துகொள்வது மிகஎளிதாக நம்முடைய மனதில் ஆழபதி்ந்துவிடும் என்பதுதான் மனிதமனத்தின் அடிப்படையாகும் அவ்வாறான பயனை அளிப்பதற்காக http://www.wordbaseapp.com/ எனும் இணைய தளம் விளங்குகின்றது அதற்காக நாம் இந்த தளத்திற்கு வந்து சேர்ந்தவுடன் இதன் மேல்பகுதியில் எவ்வாறு இந்த விளையாட்டை விளையாடுவது என ஒளிஒலி படக்காட்சியை முதலில் கண்டு அறிந்துகொள்க அதிலும் பல்வேறு படிமுறையாக இதில் எழுத்துகள் கிடைவரிசையாக நெடுவரிசையாக உள்ளவைகளில் படகாட்சியாக படிப்படியாக அமைக்கபட்டுள்ளதை இந்த தளத்தின் கீழ்பகுதிக்கு நகர்த்தி சென்று அறிந்துகொள்க  ஆப்பில் நிறுவனத்தினுடைய AppStore, கூகுள்நிறுவனத்தினுடையGoogle Play Storeஆகியவற்றில் கூட இவ்வாறான சொல்விளையாட்டை இலவசமாக விளையாடி நம்முடைய மொழிஅறிவை விரிவு படுத்தி கொள்ளமுடியும் வாருங்கள் இந்தWordbaseஎனும் சொல்விளையாட்டு தளத்திற்கு வந்து உங்களின் மொழிஅறிவை மேலும் வளர்த்துகொள்ளுங்கள்

இயக்கமுறைமைகளிலுள்ள மென்பொருட்களின்பீட்டா பரிசோதனை ஆபத்தானதா ?

தற்போது ஏன்இந்த கேள்வி எழுகின்றது எனில் விண்டோ10 இயக்கமுறையானது வெளியீட்டிற்கு முன்பரிசோதனை பதிப்பு என சமீபத்தில் இலவசமாக வெளியிடபட்டு அதனை அனைவரும் தத்தமது கணினிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் என கோரப்படுகின்றது

நம்முடைய கணினியில் விண்டோ7 இயக்கமுறைமை இருந்தால் அதனை இந்த பீட்டா எனும் சோதனை பதிப்பை நேரடியாக பரிசோதித்து பார்க்கவேண்டாம் எனகேட்டுகொள்ளபடுகி்ன்றது ஏனெனில் அவ்வாறு செய்திடும்போது கணினியிலுள்ள நம்முடைய மதிப்புமிக்க தரவுகளை இழந்தவிட வாய்ப்பண்டு மேலும் இந்த பீட்டா பதிப்பானது ஏராளமான செயல்களை உடன் நிகழ்நிலை படுத்திடுமாறு கோருகின்றது அதுமட்டுமல்லாத அவ்வாறு நிகழ்நிலை படுத்திடும் செயலை செய்ய வேண்டியிருக்கும் நம்மிடம் இருக்கும் பயன்பாடுகள் இந்த பீட்டா பரிசோதனை பதிப்புடன் ஒத்தியங்கிடுமா என உத்திரவாதம் எதுவுமில்லை அதனால் தனிப்பட்ட கணினியில் இதனை பயன்படுத்துவதைவிட இரட்டை இயக்கமுறைமையாக அல்லது மெய்நிகர் கணினியை இயங்கசெய்து அதில் இந்த விண்டோ10 இன் வெளியீட்டிற்கு முந்தை பரிசோதனை பதிப்பை நிறுவுகை செய்து பயன்படுத்தி பார்த்திடுமாறு பரிந்துரைக்க படுகின்றது

தட்பவெப்பநிலை அறிவதற்கான இணையதளம்

நாம் வாழும் அல்லது விரும்பும் குறிப்பிட்ட இடத்தில் தற்போது அல்லது சிலமணித்துளிகளில் அல்லது இன்று அல்லது இந்த வாரத்தில் மழை , காற்றோட்டநிலை , தட்பவெப்பநிலை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும் இதற்காக முதலில் http://forecast.io/ எனும் தள்ததிற்கு செல்க அங்கு தட்பவெப்பநிலையை அறிய விரும்பும் இடத்தின பெயர் முகவரி அல்லது நகரம், மாவட்டம் ,மாநிலம்,நாடு போன்ற விவரங்களை இந்த தளத்தின் மேல்பகுதியில் இடத்தை குறிப்பதற்கான பட்டையில்(location bar) உள்ளீடு செய்துகொள்க பின்னர் தற்போது அல்லது சிலமணித்துளிகளில் அல்லது இன்று அல்லது இந்த வாரத்தில் மழை,காற்றோட்டநிலை, தட்பவெப்பநிலை போன்றவைகளில் எந்த விவரத்தை நாம் அறிந்த கொள்ளவிருமபுகின்றோம் என குறிப்பிட்டால் உடன் அவ்வாறான விவரங்களை திரையில் காண்பிக்கும் மேலும் வருங்காலம் மட்டுமல்லாது நடந்து முடிந்துபோன காலங்களில் குறிப்பிட்ட இடத்தின் தட்ப வெப்பநிலையையும் மற்ற விவரங்களையும் இதேபோன்று கோரிக்கைகளை உள்ளீடு செய்து அறி்ந்து கொள்ளமுடியும்

Previous Older Entries