அக்சஸ் 2007-36 – ஒரு உரைபெட்டிக்கு விட்டுவிட்டு ஒளிறும் Labelஐ உருவாக்குதல்

  ஒரு படிவத்தில் உள்ள உரைபெட்டியின் Labelஇக்கு நாம் விரும்பும் வண்ணத்தை சேர்க்கலாம் அவ்வாறு புதிய வண்ணத்தை அந்த Labelஇற்கு சேர்த்திடும்போது அதனை விட்டுவிட்டு ஒளிறும்படி செய்யமுடியும் அதன்மூலம் பார்வையாளரின் கவணத்தை குறிப்பிட்ட உரைபெட்டியின் மீது திரும்பும்படி செய்யலாம். ஓரு படிவத்தில் தேவையான தரவுகளை உள்ளீடுசெய்யும்பொது குறிப்பிட்ட உரைபெட்டியில் உள்ளீடுசெய்யும். மிகசிக்கலான தரவுகளின்மீது உள்ளீடுசெய்பவரின் கவணத்தை ஈர்ப்பதற்கு இந்த வழிமுறை பேருதவியாக அமைகின்றது.. இதற்காக படிவத்தினுடைய Timer என்ற நிகழ்வு பயன்படுகின்றது.இதனை எவ்வாறு செயல்படுத்துவது என பின்வரும்வழிமுறைகள் கூறுகின்றன.

  1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007 என்றவாறு செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
  2. உடன் தோன்றிடும் ஆள Ms Access2007 என்ற சாளரத் திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
  3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து வைத்திடுக.
  4. அதன்பின்னர்வடிவமைப்பு (Design)தாவிபட்டியின் திரையில் கட்டுப்பாட்டு (Control)குபுவில் உள்ள Text Box Control Control என்ற ஐகானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்சுட்டியை இந்த படிவத்தில் ஏதெனும் ஒருஇடத்தில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

  1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் லெபிள் என்ற தலைப்பு பகுதியில் சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக.உடன் விரியும் இந்த உரைபெட்டியினுடைய Labelஇன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Allஎன்ற தாவிபட்டியின்கீழ்இருக்கும் Name என்றபகுதியில் lblMyLabel என்றும் Caption என்றபகுதியில் இந்த Label இற்கு Blinker என்றவாறும் ஒருபெயரை தட்டச்சு செய்து இந்த பண்பியல்பு பெட்டியை மூடிவிடுக.
  2. பின்னர்இந்த படிவத்தினுடைய பண்பியல்பு பெட்டியை திறந்துகொள்க. அதில் Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  3. அதன்பின்னர்இந்த Event எனும் தாவியின் திரையில் உள்ள Timer Interval என்ற பெட்டியில் 500 என தட்டச்சுசெய்க .இந்த மதிப்புதான் படிவத்தில் உள்ள Label இன் ஒளிறும் நேரத்தை கட்டுப்படுத்துகின்றது.

9 .பின்னர்இந்த Event தாவிபட்டியின்திரையில் உள்ள On Timer evenஎன்பதற்கருகில் இருக்கும்Ellipse என்ற முப்புள்ளியை சொடுக்குக.

  1. உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

நிரல் தொடர் 36-1

With lblMyLabel

.ForeColor = (llf(.ForeColor = 0, 255, 0))

End With

End Sub

2.பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சிநிலையில் திறந்திடுக உடன் படம்-36-1 இல் உள்ளவாறு உரைபெட்டியின் Label ஆனது விட்டுவிட்டு திரையில் மின்னுவதை காணலாம்.

 36.1

படம்-36-1

அக்சஸ்-2007-தொடர் 35

35.1

படம் -35-1

   ஒரு படிவத்தில் உள்ள குழுவான வாய்ப்பில் ஏதெனும் ஒரு வாய்ப்பை தெரிவுசெய்யும்பொது அதனுடைய பெயரானது   மற்றொரு கட்டுப்பாட்டினுடைய Label இன் பெயராக மாறும்படி அக் சஸ்2007 இல் அமைக்கமுடியும் .அதற்கான படிமுறை பின்வருமாறு

  1. முதலில் அக்சஸ் 2007 ஐ இயக்கி அதில் ஒரு புதிய படிவத்தை வடிவமைப்பு காட்சிநிலையில்அதாவது Design எனும் தாவியின் பொத்தானின் திரையில் பிரிதிபலிக்கும்படி திறந்துகொள்க.
  2. பின்னர் Control என்ற குழுவில் OptionGroup என்ற கட்டுப்பாட்டை தெரிவுசெய்து சொடுக்குக. பிறகு காலியான படிவத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி ஒரு செவ்வக வடிவ கட்டத்தை வரைக
  3. உடன் படம் 35-1 இல் உள்ளவாறு OptionGroupwizard என்பது திரையில் தோன்றி திரைத்தோற்றம் அமையும்.இதில் உள்ள What label do you want for each option? என்ற கேள்வியின் கீழ்Label Names என்பதற்கடுத்தாக முதல்வரியில் Item Number என்றும் இரண்டாவது வரியில் Item Name என்றும் பெயரை தட்டச்சு செய்து கொண்டுNext என்ற பொத்தானை சொடுக்குக.
  4. அதன்பின்னர்தோன்றும் திரையில் Do you want one option to be default choice?என்ற கேள்விவிக்கு பதிலாக Yes, the default choice is Item Number என்று இருக்கும் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு (படம்-35-2) Next என்ற பொத்தானை சொடுக்குக.

  35.2

படம் -35-2

  1. பின்னர்விரியும் அடுத்ததிரையில் (படம்-35-3) What value do you want to assign to each option?ஏன்ற கேள்விவிக்கு பதிலாக Item Number என்பதற்கு 1 என்றும் Item Name என்பதற்கு 2 என்றும் இவைகளின் மதிப்புகள் இயல்புநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அவற்றை அப்படியே ஏற்றுகொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக.

35.3

படம் -35-3

  1. அதன் பின்னர்தோன்றும் திரையில்(படம்-35-4) What type of control do you want in the option group ? என்பதற்கு Option buttonஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டுNext என்ற பொத்தானை சொடுக்குக.

35.4

படம் -35-4

  1. பிறகு தோன்றும் திரையில் (படம்-35-5) இந்த கட்டுப்பாட்டிற்கு skMyFrameஎன்றவாறு ஒரு பெயரை தட்டச்சுசெய்து கொண்டு Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிஇந்த வித்தகர்திரையை மூடிவிடுக.

35.5

படம் -35-5

  1. பின்னர்நாம் உருவாக்கிய குழுவான Option Group Frame என்பதை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் இதனுடைய பண்பியல்பு உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும். .
  2. அதில் Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் Event தாவிபொத்தானின் திரையில் உள்ள After Update என்ற நிகழ்வின் அருகில் உள்ள ellipses என்ற முப்புள்ளியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக.
  3. அதன் பின்னர்விரியும் பட்டியலில் Code Builder என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
  4. பிறகு தோன்றும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் நிரல்தொடர் 35-1 இல் உள்ளவாறு குறிமுறைகளை தவறில்லாமல் தட்டச்சு செய்து இந்த விபிஎடிட்டர் சாளரத்தை மூடிவிடுக.

நிரல்தொடர் 35-1

Private Sub skFrame_AfterUpdate()

If Me!skMyFrame = 1 Then

Me!lblMyLabel.Caption = “Enter the Item Number”

Else

Me!lblMyLabel.Caption = “Enter the Item Name”

End If

End Sub

  1. பின்னர் Control என்ற குழுவில் உள்ள Text Box என்ற கட்டுப்பாட்டை தெரிவுசெய்து சொடுக்கியபின்  படிவத்தில் நாம் ஏற்கனவெ உருவாக்கிய குழுவிற்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி மற்றொரு செவ்வக வடிவ கட்டத்தை வரைக .பின்னர்இதனுடைய Label பிடித்து மேல்பகுதிக்கு இழுத்துவந்து உரைபெட்டியும் Label உம் இணையாகவும் சரிசமமாகவும் இருக்குமாறு சரிசெய்து அமைத்திடுக.
  2. அதன்பின்னர்இந்த Labelஐ இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானைஇருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் உள்ள All என்றதாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர்விரியும் திரையில் உள்ள Name என்பதில் இந்த Label இக்கான பெயராக lbl Name என்றவாறு தட்டச்சுசெய்து இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை மூடிவிடுக
  3. அதன்பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சிநிலையில் திறந்து கொண்டு அதில் உள்ள Item Number என்ற வாய்ப்பை தெரிவுசெய்க. உடன் கீழ்பகுதியில் உள்ள உரைபெட்டியின் lable எனும்பகுதியில் Enter the Item Number என்றவாறு (படம்-35-6) பிரிதிபலிக்கும்.

35.6

படம் -35-6

  1. பிறகு அதில் உள்ள Item Name என்ற வாய்ப்பை தெரிவுசெய்க. உடன் கீழ்பகுதியில் உள்ள உரைபெட்டியின் lable எனும்பகுதியில் Enter the Item Name என்றவாறு பிரிதிபலிக்கும்.

அக்சஸ் -2007 தொடர் -34 பிறந்த தேதியிலிருந்து வயதை கண்டுபிடித்தல்

 ஒருவருடைய பிறந்த தேதியை கொடுத்தால் அவருடைய த ற்போதைய மிகச்சரியான வயதை அக்சஸ்2007 இல் Age Function என்பதன் மூலம் காணலாம்.இந்த வயதை எழுத்தின் மூலம் விவர உரையுடன் கூட காணமுடியும். அதற்காக

  1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007 என்றவாறு செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
  2. உடன் தோன்றிடும் Ms Access2007என்ற சாளரத் திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
  3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து வைத்திடுக.
  4. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe)) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் ஏதெனும் ஒருஇடத்தில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

  1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு date of birth என்றவாறு ஒருபெயரை இந்த Lable இன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Caption என்றபகுதியில் தட்டச்சு செய்க.
  2. பின்னர்இதே உரைபெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் All என்ற தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பகுதியில் இந்தஉரைப்பெட்டிக்கான பெயரை txtDOB என்றவாறு தட்டச்சு செய்க.
  3. அதன் பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Formatஎன்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Format என்ற தாவிபட்டியின் திரையில் Input Mask என்பதில்உள்ள Ellipsesஎன்ற முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் சிறு உரையாடல் பெட்டியின் பட்டியலில் உள்ள Short Date என்பதை தெரிவுசெய்து Finish என்ற பொத்தானை சொடுக்குக.
  4. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Format என்ற தாவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Format என்ற தாவிபட்டியின் திரையில் text Align என்பதில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. உடன் விரியும் சிறு பட்டியலில் Left என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
  5. அதன் பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Check Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
  6. பின்னர்இடம்சுட்டியை நாம் உருவாக்கிய படிவத்தில் Date of Birth என்ற பெயரின் கீழ்பகுதியில் வைத்து கொடுக்கி   தேர்வு செய்பெட்டிஒன்றை உருவாக்குக.
  7. பின்னர்இந்த தேர்வுசெய்பெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த தேர்வுசெய்பெட்டிக்கு Include months? என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
  8. அதன் பின்னர்இதே தேர்வுசெய்பெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த தேர்வுசெய்பெட்டிக்கு CkMonths என்றவாறு பெயரிடுக.
  9. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Data னும் தாவிபட்டியின்ன் கீழ்உள்ள Default Value என்ற பகுதியில் இந்த தேர்வுசெய்பெட்டியின் இயல்பு மதிப்பு 0 என இருந்திடுமாறு 0 வை உள்ளீடுசெய்க.
  10. அதன் பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Check Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
  11. பின்னர்இடம்சுட்டியை   include Months?என்ற பெயருடன் நாம் உருவாக்கிய தேர்வுசெய்பெட்டியில் அதற்கு கீழ்பகுதியில் வைத்து கொடுக்கி மற்றொரு தேர்வுசெய்பெட்டியை உருவாக்குக.
  12. பின்னர்இந்த தேர்வுசெய்பெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த தேர்வுசெய்பெட்டிக்கு display Age with Text? என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
  13. அதன் பின்னர்இதே தேர்வுசெய்பெட்டியை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த தேர்வுசெய்பெட்டிக்கு CkText என்றவாறு பெயரிடுக.
  14. பின்னர்இதே பண்பியல்பு பெட்டியில் Data எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Default Value என்ற பகுதியில் இந்த தேர்வுசெய்பெட்டியின் இயல்பு மதிப்பு 0 என இருந்திடுமாறு 0 வை உள்ளீடுசெய்க.
  15. பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள   Button Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  16. அதன் பின்னர்இடம்சுட்டியை Include Months மற்றும் display Age With text? ஆகிய பெயருடன் நாம் உருவாக்கிய தேர்வுசெய்பெட்டிகளுக்கு கீழ்ப் பகுதியில் வைத்து கொடுக்கி கட்டளை பொத்தான் ஒன்றினை உருவாக்குக.
  17. உடன் இந்த கட்டளை பொத்தானை உருவாக்குவதற்கான பொத்தான் வழிகாட்டி என்ற வித்தகர்உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்.அதில் Cancel என்ற பொத்தானை சொடுக்கி இதனை மூடிவிடுக.
  18. பின்னர்இந்த கட்டளை பொத்தானில் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக..உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Caption என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு Get Your Age என்றவாறு பெயரிடுக.
  19. அதன்பின்னர்இதே பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு Get Your Age என்றவாறு பெயரிடுக.

25;பின்னர்Event என்ற தாவி பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர்இந்த Event எனும் தாவிபட்டியில் உள்ள On Click Event என்பதற்கருகில் உள்ளEllipse என்ற முப்புள்ளியை சொடுக்குக.

  1. உடன் தோன்றிடும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

நிரல் தொடர் 34-1

Dim varAge As Variant

   Dim dtDOB As Date

   Dim dtCurrentDate As Date

   Dim bolMonths As Boolean

   Dim bolText As Boolean

   dtCurrentDate = FormatDateTime(Now(), vbShortDate)

   Me![txtDOB].SetFocus

   dtDOB = Me![txtDOB].Value

   Me![ckMonths].SetFocus

   If Me![ckMonths].Value Then

       bolMonths = True

   Else

       bolMonths = False

   End If

   Me![cktext].SetFocus

   If Me![cktext].Value Then

       bolText = True

   Else

       bolText = False

   End If

   varAge = Age(dtDOB, dtCurrentDate, bolMonths, bolText)

   Me![txtAge].SetFocus

   Me![txtAge].Value = varAge

   இவ்வாறு பொருத்தமான மாறிகளையும் நடப்பு தேதிக்கான சரியான வழிமுறை வடிவமைப்புகளையும் FormateDateTimeஎன்ற செயலியை பயன்படுத்தி Short Date என்பதற்கு அமைத்தபிறகுஒருவருடைய பிறந்ததேதி என்னவென்றும் அவ்வாறே பிறந்ததேதி உள்ளீடு செய்யப்பட்டால் எவ்வாறு ஒருவருடைய வயதை கணக்கிடுவது என்றும் படிமுறை காணவேண்டும் அதற்காக

  1. அதே விபிஎடிட்டர் எனும் சாளரத்திரையில் உள்ளInsert என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்விரியும் Insert என்ற பட்டியலில் Moduleஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. உடன்தோன்றிடும் குறிமுறை சாளரத்தில் பின்வரும் குறிமுறையை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்துகொள்க.

நிரல் தொடர் 34-2

Public Function Age(DOB As Date, today As Date, Optional WithMonths As Boolean = False, _ Optional WithDays As Boolean = False, Optional DisplayWithWords As Boolean = False) As Variant

   On Error GoTo Age_ErrorHandler

   Dim iYears As Integer

   Dim iMonths As Integer

   Dim iDays As Integer

   Dim dTempDate As Date

   ‘ Check that the dates are valid

   If Not (IsDate(DOB)) Or Not (IsDate(today)) Then

     DoCmd.Beep

     MsgBox “Invalid date.”, vbOKOnly + vbInformation, “Invalid date”

     Exit Function

   End If

   ‘ Check that DOB < Today

   If DOB < today Then

     DoCmd.Beep

     MsgBox “Today must be greater than DOB.”, _

         vbOKOnly + vbInformation, “Invalid date position”

     GoTo Age_ErrorHandler

   End If

   iYears = lAge = Abs(DateDiff(“yyyy”, dteDate1, dteDate2) – _

     IIf(Format(dteDate1, “mmdd”) <= Format(dteDate2, “mmdd”), 0, 1))

   dTempDate = DateAdd(“yyyy”, iYears, DOB)

   If WithMonths Then

     iMonths = DateDiff(“m”, dTempDate, today) – _

         IIf(DateAdd(“m”, iMonths, DateAdd(“yyyy”, iYears, DOB)) > today, 1, 0)

     dTempDate = DateAdd(“m”, iMonths, dTempDate)

   End If

   If WithDays Then

     iDays = today – dTempDate

   End If

   ‘ Format the output

   If DisplayWithWords Then

     ‘ Display the output in words

     Age = IIf(iYears > 0, iYears & ” year” & IIf(iYears <> 1, “s”, “”), “”)

     Age = Age & IIf(WithMonths, iMonths & ” month” & IIf(iMonths <> 1, “s”, “”), “”)

     Age = Trim(Age & IIf(WithDays, iDays & ” day” & IIf(iDays <> 1, “s”, “”), “”))

   Else

     ‘ Display the output in the format yy.mm.dd

     Age = Trim(iYears & IIf(WithMonths, “.” & Format(iMonths, “00”), “”) _

     & IIf(WithDays, “.” & Format(iDays, “00”), “”))

   End If

Exit_Age:

     Exit Function

Age_ErrorHandler:

     Age = Null

End Function

34.1

படம்-34-1

  1. பின்னர்விபிஎடிட்டர் எனும் சாளரத்தை மூடிவிடுக.
  2. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவிபட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் Get Your Age என்ற கட்டளை பொத்தானிற்கு கீழ்பகுதியில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

  1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் Lable என்ற தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு Age என்றவாறு ஒருபெயரை இந்த Lable இன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Caption என்றபகுதியில் தட்டச்சு செய்க.
  2. பின்னர்இதே உரைபெட்டியை இடம் சுட்டியால் தெரிவுசெய்து இருமுறை கொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியின் All என்ற தாவிபட்டியின் கீழ்உள்ள Name என்ற பகுதியில் இதனுடைய பெயரை txtAge என்றவாறு இந்த உரைப்பெட்டிக்கு தட்டச்சு செய்க.
  3. பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சியில் திறந்துகொள்க.அதில் Date of Birth என்ற பகுதியில் உங்களுடைய பிறந்த தேதியை தட்டச்சு செய்து Get Your Age என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Age என்ற பகுதியில் உங்களுடைய வயது எண்ணில் பிரிதிபலிக்கும்.
  4. அதன்பின்னர்Include Months? மற்றும் Display age with text? ஆகிய தெர்வுசெய்பெட்டிகளை தெரிவுசெய்து கொண்டுGet Your Age என்ற கட்டளை பொத்தானை சொடுக்குக. உடன் உங்களுடைய வயது Get Your Age என்றபகுதியில் உரைவிவரத்துடன் படம்-34-1 இல் உள்ளவாறு தோன்றிடும்.

அக்சஸ்-2007 – 33- காலண்டர்கட்டுப்பாட்டில் வீச்செல்லையின் தேதியியை பிரிதிபலிக்கச்செய்தல்

33.1

படம்-33-1

அக்சஸ்-2007 இல் வீச்செல்லையின் தேதியை ( அதாவது ஆரம்ப தேதியையும்   முடிவு தேதியையும் கண்டுபிடிப்பது) தேர்ந்தெடுப்பதை Calendar Active X control என்பது ஆதரிக்காது. ஆயினும் ஒருசில வரி விபியின் குறிமுறைகளைகொண்டு இதனை செயல்படுத்திடலாம்.நாம் உருவாக்கிடும் நம்முடைய சொந்த படிவத்தில் வீச்செல்லையின் தேதியை ( அதாவது ஆரம்ப தேதியையும் முடிவு தேதியையும் கண்டுபிடிப்பது) காலண்டர்கட்டுப்பாட்டிலிருந்து பிரிதிபலிக்கும்படி செய்யமுடியும். அதற்காக பின்வரும் வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

  1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
  2. உடன் தோன்றிடும் Ms Access2007என்ற சாளர திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
  3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து கொள்க.
  4. அதன்பின்னர்வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள insert ActiveX Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  5. உடன் insert ActiveX Control என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் படம்-33-1 இல் உள்ளவாறு தோன்றும்.அதில் Select an ActiveX Control என்பதன் கீழ்உள்ள Calendar Control-12.0 என்பதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  6. உடன் Detail என்ற சூன் 2009 மாதத்திய காலண்டர்நம்முடைய படிவத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
  7. பின்னர்இதே வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  8. அதன் பின்னர்இடம்சுட்டியை இந்த படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல்செய்து ஒரு உரைபெட்டியை உருவாக்குக.
  9. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு Range என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்து கொள்க.
  10. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் இந்த உரைப்பெட்டிக்கு txtRange என்றவாறு Name என்ற பகுதியில் இதனுடைய பெயரை தட்டச்சுசெய்க.
  11. பின்னர்இதே வடிவமைப்பு (Designe) எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text BoxControl என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  12. அதன் பின்னர்இடம்சுட்டியை படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் Range என்ற பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிக்கு கீழ்பகுதியில் வைத்து சொடுக்குதல்செய்து மேலும் மற்றொரு உரைபெட்டியை உருவாக்குக.
  13. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு start Date என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
  14. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை கொடுக்குக. உடன் தோன்றும் பண்பியல்பு எனும் உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த உரைப் பெட்டிக்கு txtStartDate என்றவாறு பெயரிடுக.
  15. பின்னர்வடிவமைப்பு (Designe) எனும்தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Text Box Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  16. அதன் பின்னர்இடம்சுட்டியை படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் start Date என்ற பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிக்கு கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மேலும் மற்றொரு உரைபெட்டியை உருவாக்குக.
  17. பின்னர்இந்த உரைபெட்டியின் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இந்த உரைபெட்டிக்கு   End Date என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
  18. அதன் பின்னர்இதே உரைபெட்டியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக. உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த உரைப் பெட்டிக்கு txtEndDate என்றவாறு பெயரிடுக.
  19. பின்னர்வடிவமைப்பு (Designe)எனும் தாவி பட்டியின் கட்டுப்பாட்டு (Control)குழுவில் உள்ள Button Control என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  20. அதன் பின்னர்படிவத்தில் உள்ள சூன் 2009 மாதத்திய காலண்டருக்கு கீழ்பகுதியில் start Date ,End Date ஆகிய பெயருடன் நாம் உருவாக்கிய உரைபெட்டிகளுக்கு அருகில் வலதுபுறப் பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கட்டளை பொத்தான் ஒன்றினை உருவாக்குக.
  21. உடன் இந்த கட்டளை பொத்தானை உருவாக்குவதற்கான பட்டன் விஸார்டு என்ற வழிகாட்டிஉரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்.அதில் Cancel என்ற பொத்தானை சொடுக்கி இதனை மூடிவிடுக.
  22. பின்னர்இந்த கட்டளை பொத்தானில் தலைப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி இந்த கட்டைளை பொத்தானிற்கு   Get Range என்றவாறு ஒருபெயரை தட்டச்சு செய்க.
  23. அதன் பின்னர்இதே கட்டளை பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
  24. உடன் தோன்றும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் All எனும் தாவியின் கீழ்உள்ள Name என்ற பண்பியல்பில் இந்த கட்டளை பொத்தானிற்கு bttnRange என்றவாறு பெயரிடுக.

24.;பின்னர்இந்த பண்பியல்பு பெட்டியின் மேல்பகுதியில் உள்ள Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர்இந்த Event தாவியில் உள்ள Ellipse என்ற முப்பள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக.

  1. உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

Program-33-1

Private Sub GetRange_Click()

Dim dt As Date

Dim intRange As Integer

dt = Me!Calendar0.Value

intRange = Me!txtRange.Value

Me!txtEndDate = DateAdd(“d”, intRange, dt)

End Sub

  1. பின்னர்இந்த காலண்டர் கட்டுப்பாட்டுடன் உள்ள படிவத்தை படிவகாட்சி நிலையில் படம் 33-2 இல் உள்ளவாறு திறந்து கொள்க.அதில் ஏதேனும் ஒருதேதியை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அதன் பின்னர்Range என்ற பகுதியில் +2 அல்லது -2 என்றவாறு நேர்மறை எண் அல்லது எதிர்மறை எண்களை வீச்சிற்கு பிறகுஉள்ளதேதி தேவையா அல்லது முன்பு உள்ளதேதிதேவையா என்ற நம்முடைய தேவைக்கெற்ப உள்ளீடு செய்க.
  3. உடன் Start Date என்ற பகுதியில் நாம் தெரிவுசெய்த தேதியும் End Date என்றபகுதியில் வீச்செல்லையின் தேதி அதாவது கூட்டல்குறியுடன் எனில் கூடிமுடிவுதேதியும் கழித்தல் குறியெனில் தேதியை கழித்து முந்தியதேதியும் பிரிதிபலிக்கசெய்யும்(படம்-33-2).

33.2

படம்-33-2

அக்சஸ்-2007- 32 எஸ்கியூஎல் சேவையாளருடன் இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்திகொள்ளுதல்

முந்தைய அக்சஸ் 2007-31 இல் எஸ்கியூஎல் சேவையாளரை பேரளவில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் என அறிந்துகொண்டோம். இந்த எஸ்கியூஎல் சேவையாளர் அக்சஸ் 2007 ஐ தோழமையுடன் பாவிப்பதால் அக்சஸ் 2007 ஐ கூட இதனுடைய துணையடன் நம்மால் பேரளவில் பயன்படுத்திகொள்ளமுடியும்.. அதற்காக http://msdn.microsoft.com/vstudio/express/sql என்ற வலைதளத்திற்கு சென்று SQL Server 2005 Express Edition என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிகொள்க.

இது தரவுகளை இணைத்திடும் பொறியாக செயல்படுகின்றது. எஸ்கியூஎல் சேவையாளர் பொருட்கள் எதுவும் அக்சஸ்2007 இல் accdb என்ற பின்னொட்டுடன் கூடிய கோப்பு வடிவமைப்பில் இல்லை .ஆயினும் ODBC என்பதை பயன்படுத்தி அக்சஸ் 2007 இன் கோப்புகளை எஸ்கியூஎல் சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்திட முடியும்.

அக்சஸ்2007 இல் ADP என்ற வடிவமைப்பை பயன்படுத்தி எஸ்கியூஎல் சேவையாளரை திறந்து கொண்டு அனைத்து பணிகளையும் செய்யமுடியும். அக்சஸ் 2007 இல் ADP என்ற கோப்பு வடிவமைப்பில் File=> New => Browse => ADP =>என்றவாறு தெரிவுசெய்து அக்சஸ் 2007 இன் வடிவமைப்பில் பணிபுரியமுடியும்.ஆனால் இந்த வடிவமைப்பில் பணிபுரியும்பொது அக்சஸ் 2007 இன் வசதிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காது என்பதை மனதில் கொள்க.

பயனாளரின் பெயர்கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி எஸ்கியூஎல் சேவையாளர் முன்புற கருவிகள் வழியாக மிக எளிதில் நேரடியாக எந்த ஒரு தரவுதளத்துடனும் இணைப்புஏற்படுத்திடமுடியும்.

பொதுவாக தரவுதளஇயந்திரமானது செய்திகளை பெறுவது பின்னர்தாம் பெற்ற செய்திகளை திரும்ப வழங்குவது ஆகிய செயல்களுக்காக செய்தி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Traffic controller)என அறியப்படும் கவணிப்பாளரிடம்(istener) இந்த பணியினை ஒப்படைத்துவிடுகின்றது.

இந்த கவணிப்பாளர் ஒரு இணைய (ஐபி) முகவரியிலிருந்து வரும் செய்தியில் முதலில் தன்னிடமுள்ள இணைய (ஐபி) முகவரியுடன் ஒப்பிட்டு சரிபார்க்கின்றது. சரியாக இருந்தால் மட்டும் தரவுதளத்துடன் இணைப்பை எற்படுத்திட கோரும் செய்தியை சேவையாளரிடம் வழங்குகின்றது.உடன் சேவையாளர் தரவுதளத்து!டன் இணைப்பை ஏற்படுத்திட அனுமதிக்கும்போது   இதற்கான இணைப்பை தரவுதள சேவையாளருடன் ஏற்படுத்துகின்றது. பின்னர்சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்திய செய்தியை தரவுதளத்திற்கு அனுப்புகின்றது.

உடன் கவணிப்பாளர்இந்த செய்தியை பெற்று தரவுதளத்திற்குற்கு அனுப்புவதுடன் இல்லாமல் தொடர்ந்து இணைப்பை பராமரிக்கும் செயலையும் செய்கின்றது.. இவ்வாறு கவணிப்பாளர்தரவுதளத்திற்கும் தரவுதளசேவையாளருக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவது அதற்கு தேவையான செய்திகளை வழங்கி இடைமுகமாக செயல்படுகின்றது.

தரவுதளத்துடன் தொடர்புகொள்ள பயன்படும் இணைப்பு சரத்தினை (Connecting string)என அழைப்பார்கள் இந்த இணைப்புசரமானது பின்வரும் உறுப்புகளால் ஆனதாகும்

  1. Hostname – தரவுதளசேவையாளர் இருக்குமிடத்தை இவ்வாறு அiழைக்கப்படும்.
  2. Database name -குறிப்பிட்ட தரவுதளத்திற்குன் பெயராகும். ஏனெனில் எஸ்கியூஎல் சேவையாளர் பல்லடுக்கு தரவுதளமானதுஓரேகணினியில் ஒற்றையான பல்லடுக்குகளை நிறுவுகைசெய்வதற்கு இது அனுமதிக்கின்றது. ஒவ்வொரு தரவுதளசேவையாளரும் ஒற்றையான தரவுதளஎஸ்கியூஎல் சேவையாளரை பயன்படுத்திகொள்கின்றது.
  3. Authentication-பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை தெரிந்துவைத்திருப்பவர்கள் மட்டுமே தரவுதளத்தினை அனுகி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்றவாறு இது பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியாகும்.

தரவுதளத்தில் பின்வரும் கட்டளைகள் எஸ்கியூஎல் சேவையாளரை நிறுவுகை செய்யும்

sql cmd -s my computer

பின்வரும் கட்டளை வரி குறிப்பிட்ட தரவுதளத்தினை இணைப்பதற்கும் எஸ்கியூஎல் சேவையாளரை நிறுவுகை செய்வதற்கும் பயன்படுகின்றது

sql cmd -s my computer -d mydatabase

சாதாரண தரவுதளத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதைவிட சிறித கூடுதலான படிமுறைகளை இதில் பின்பற்றவேண்டும் இதற்காக ODBC என்ற இயக்குபவர் அக்சஸ்மட்டுமல்லாது எக்செல்லுடன் கூட எஸ்கியூஎல் சேவையாளரை இணைப்பதற்கு பயன்படுகின்றது.

1 .முதலில் Start => settings => control panel => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்தி கொள்க..

2 பின்னர்தோன்றிடும் control panel என்ற சாளரத்தின் Administrative Tools என்ற வாய்ப்பை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக. உடன் விரியும் பட்டியலில் ODBC என்ற தரவு மூலத்தை தெரிவுசெய்க. இதில் மூன்று வகையான வடிவமைப்பு வாய்ப்புகள் உள்ளன.

1) User DSN என்பது வாடிக்கையாளரின் கணினியில் மட்டும் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது

2) System DSN வாடிக்கையாளர்கணினியுடன் இணையத்தையும் இணைப்பு ஏற்படுத்துவதற்கு பயன்படுகின்றது

3) File DSNவாடிக்கையாளர்கணினியுடன் தரவுதளத்தின்கோப்புகளை இணைப்பதற்காக பயன்படுகின்றது

இவற்றுள் File DSNஎன்பதையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர் .இதனை தெரிவுசெய்து செயற்படுத்தி அமைத்தபின்னர் கட்டுப்பாட்டு பலகத்தை மூடிவிடுக. பின்னர்

  1. அக்சஸ்2007ஐ செயற்படுத்துக.அதன்பின்னர்தோன்றிடும் திரையில் External Data என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் External Data என்ற தாவிபட்டியில் Import என்ற குழுவில் ; Xml file என்பதற்கடுத்து கீழ்பகுதியில் உள்ள more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியலிலிருந்து ODBCData base என்பதை (படம்-32-1) தெரிவுசெய்க.

 

32.1

படம்-32-1

 

  1. பின்னர்விரியும் Get External Data – ODBC Data Base என்ற உரையாடல் பெட்டியிலிருந்து Link to the data source by connecting a linked table என்பதை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை(படம்-32-2) தெரிவுசெய்து சொடுக்குக.

32.2

படம்-32-2

  1. உடன் Select Data Source என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் DSN name என்பதில்   Local SQL serverஎன உள்ளீடுசெய்து Newஎன்ற பொத்தானை (படம்-32-3) தெரிவுசெய்து சொடுக்குக.

32.3

படம்-32-3

  1. பின்னர்விரியும இயக்கிகளின் பெயர்பட்டியலிலிருந்த SQL Driver என்பதை தேடிப்பிடித்து தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அடுத்து தோன்றிடும் திரையில் இந்த DSN கோப்புகளை எங்கு சேமித்து வைக்கவிரும்புகின்றோம்   என்பதற்கு Browser என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர்விரியும் உரையாடல் பெட்டியில் உள்ள File name என்ற பகுதியில் Local SQL server என்று உள்ளீடுசெய்து save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

32.4

படம்-32-4

  1. உடன் create new data source என்ற திரை தோன்றிடும். அதில் finish என்ற(படம்-32-4) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அடுத்துதோன்றிடும் திரையில் Description என்ற பகுதியில் Local test database என்றவாறும் server என்பதில் SQL SERVER NAME என்றும் உள்ளீடு செய்து கொண்டு next என்ற பொத்தானை(படம்-32-5) தெரிவுசெய்து சொடுக்குக.

32.5

படம்-32-5

  1. பின்னர்தோன்றிடும் திரையில்   இயல்புநிலையில் கணினியின் இயக்க முறைமையினுடைய பயனாளரின் பெயரும் கடவுச்சொற்களையும் எடுத்துகொள்ளும். தேவையானால் மாற்றி யமைத்து கொண்டு next என்ற (படம்-32-6) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  2. அதன் பின்னர்தோன்றிடும் திரையில் தரவுதளத்திற்குன் பெயராக test என இருக்கும் தேவையானால் மாற்றியமைத்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

32.6

படம்-32-6

  1. பின்னர்தோன்றிடும் திரையில் உள்ளடக்க செயலை பற்றி கவலைப் படத்தேவையில்லை இறுதியாக finish என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.
  2. இயல்புநிலையில் தேவையானால் server என்ற பகுதியில் local என உள்ளீடுசெய்துகொள்க உடன் தோன்றிடும் இருதிரைகளில் முதல் திரையில் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்இரண்டாவது திரையிலும் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  3. ஓரு User DSN ஒரு System DSN அல்லது இவையிரண்டையும் உருவாக்க விரும்பினால் அவ்வாறு பிணையத்தில் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  4. பின்னர்தோன்றிடும் Link table என்ற உரையாடல் பெட்டியில் தேவையான அட்டவணைகளை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  5. அதன் பின்னர்தோன்றிடும் திரையில் குறிப்பிட்ட அட்டவணையின் எந்தெந்த புலங்கள் கோப்பில் தெரிவுசெய்யவெண்டுமோ அவற்றை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் அக்சஸ்2007 ஆனது எஸ்கியூஎல் உடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டுவிடும்.

பயனாளரின் பெயரையும் கடவுசொற்களையும் எஸ்கியூஎல் சேவையாளருடன் தொடர்புகொள்ளும்போது ஆரக்கிள் தரவுதளத்திற்குள் அனுமதிப்பதை போன்று இதிலும் அனுகுவதற்கு அனுமதிக்கின்றது. இதுமட்டுமில்லாது கூடுதலாக வளாக பிணையத்திலும் அனுகிடுவதற்கு அனுமதிக்கின்றது.

அக்சஸில் பயனாளர்அனுகிடும்போது குறைந்த அளவிற்கான வசதிகளை மட்டும் அனுமதிக்கின்றது.

எஸ்கியூஎல் இல் இருப்பதை போன்று அக்சஸ் 2007 ஐ தொடர்புகொள்வதற்கு அக்சஸில் டிடிஎல் கட்டளைகள் பயன்படுகின்றன. ஆனாலும் அக்சஸ்2007 இல் இதனை செயற்படுத்திட முடியாது.

CREATE USER <user> <password> […   .]

ADD USER <user> […   .]

ALTER DATABASE PASSWORD <new> <old>

CREATE GROUP <group> <pid> [… .]

INSERT, SELECT,DELETE,UPDATE

 

என்பன போன்ற SQLserver கட்டளைவரிகளைக்கொண்டு அக்சஸிலிருந்து பணிபுரியலாம்.

  1. Import table (with data) from SQL Server as a copy of the SQL Server table என்ற கட்டளை மூலம் எஸ்கியூஎல் அட்டவணையை பதிவிறக்கம் செய்து அக்சஸில் பணிபுரியலாம் ஆனால் SQL Server இல் செய்திடும் இதன் மாறுதல்கள்   அக்சஸில் உள்ள அட்டவணையில் பிரிதிபலிக்காது. அவ்வாறு .மாறுதல் செய்திருந்தால் அவ்வப்போது பதிவிறக்கம் செய்துகொண்டு புத்தாக்கம் செய்துகொள்ளவெண்டும்.
  2. Link to tables that remain within SQL server என்ற கட்டளை வரிமூலம் எஸ்கியூஎல் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொண்டு அக்சஸில் பணிபுரியலாம் இந்த வழிமுறையில் அனைத்து மாறுதல்களும் உடனுக்குடன் அக்சஸில் பிரிதிபலிக்கும் இங்கு தரவுதளமானது ஒரு இனத்தின் மூலஅமைவை பராமரிக்கின்றது.

தேக்கப்பட்ட வழிமுறையை (Stored procedure)அக்சஸில் செயல்படுத்து வதற்கான படிமுறை பின்வருமாறு

  1. ஒரு .accdஎன்ற பின்னொட்டுடன் உள்ள தரவுதளகோப்பினை அக்சஸ்2007 இல் திறந்துகொள்க.
  2. பின்னர்create என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் create என்ற பட்டியின் other என்ற குழுவில் உள்ள Query Design என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  3. உடன் show table என்ற உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றிடும் அதில் close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. ஏனெனில் நாம் இப்போது SQL இனுடைய கட்டளையை பயன்படுத்திட போகின்றோம்

32.7

படம்-32-7

  1. பின்னர்மேலே இடதுபுறம் உள்ள SQL View என்ற உருவ பொத்தானை(படம்-32-7) தெரிவுசெய்து சொடுக்குக. உடன் query text editor என்ற திரைதோன்றிடும் அதில் SELECT * FROM REGION; என்றகட்டளை வரியை செயற்படுத்துக.
  2. அதன் பின்னர்பட்டியின் Resultsஎன்ற குழுவில் உள்ள Runஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  3. பின்னர்மேலே இடதுபுறத்தில் உள்ள view என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் வாய்ப்புகளின் பட்டியலில் sqlview என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க.
  4. பின்னர் தரவுதளத்தின் பதிதப்பித்தல் திரைக்கு திரும்பி வந்து பின்வரும் கட்டளைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து செயற்படுத்துக..

CREATE PROCEDURE Jumbled Country

SELECT r.region.c.country

FROM region r join country C

ON( c.region_id=r.region_id);

அக்சஸ்-2007-31 -வாடிக்கையாளர்சேவையாளர்உறவு

ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கணினிகளை ஒரு சேவையாளர்கணினியுடன் பினைய இணைப்பின் மூலம் பயன்படுத்திட முடியும்(படம்-31-1). இதில் வாடிக்கையாளர்கணினிகளின் வாயிலாக உள்ளீடு செய்யப்படுகின்ற அனைத்து தரவுகளையும் சேவையாளர்கணினியில் சேமித்துவைத்துகொண்டு அவ்வப்போது தேவைப்பபடும்போது மட்டும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

31.1

படம்-31-1

பயனாளர்கள் ஒரு பயன்பாட்டுடன் இடைமுகம் செய்யும்போது மட்டும் வாடிக்கையாளர்கணினிகளின் வாயிலாக சேவையாளர்கணினியுடன் தொடர்பு கொள்வார்கள்.இதற்கு அடிப்படையாக தேவையான அனைத்து செயல்களும் சேவையாளர்கணினியே செயல்படுத்துகின்றது. இவ்வாறான வாடிக்கையாளர்சேவையாளர்தொடர்பு செயல் கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டாக வளாகஇணைப்பு (LAN), இணைய இணைப்பு (WAN) ஆகியவற்றை கூறலாம்.

இணையம் என்பது உலகமுழுவதும் பரந்து விரிந்துள்ள பிணையத்தில் உள்ள கணினியை TCP/IP பிணைய நெறிமுறையை பயன்படுத்தி இணைப்பு ஏற்படுத்துவது ஆகும்.இதில் இயங்கும் ஒவ்வொரு கணினியும்; ஒரு வாடிக்கையாளர்ஆகும். இந்த வாடிக்கையாளர்கணினிகளில் ஒருசில சிறிய அளவு தரவுகளை மட்டுமே தேக்கி வைக்கமுடியும். ஆனால் சேவையாளர்கணினியில் பேரளவில் தரவுகளை குவித்து சேமித்து வைத்திடமுடியும்.

இணைய உலாவி எனும் பயன்பாடு வாடிக்கையாளர்கணினிகளில் மட்டுமே இயங்குகின்றது.அதில் நாம் விரும்பும் இணைய பக்ககத்தின் யூஆர்எல் முகவரியை மிகச்சரியாக உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை தட்டியவுடன் தேடுபொறியானது சேவையாளர்கணினியில் உள்ள தொடர்புடைய தரவுகளை தேடிப்பிடித்து நம்முன் திரையில் கொண்டுவந்து பிரிதி பலிக்க செய்கின்றது. அதன் பின்னர்அவற்றிலிருந்து நமக்குத் தேவையான செயலை செயல்படுத்திக்கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கோரும்போதெல்லாம் தேவையான தரவுகளை வழங்கி வாடிக்கையாளரின் பணிமுடிந்தபின்னர்அதன்விளைவான தரவுகளை மீண்டும் திரும்ப பெற்று தேக்கிவைத்திடும் செயலை செயல்படுத்துகின்ற நம்முடைய கண்ணிற்கு புலப்படாத பின்புலமாக இயங்குகின்ற கணினியையே Back office computer என அழைப்பார்கள். இணையச்சேவையாளர், தரவுகளின்சேவையாளர் (படம்-31-2 )ஆகியவை இந்த வகையை சேர்ந்ததாகும்.

31.2

படம்-31-2

இவற்றுள் எந்தவொரு தனிநபரும் நேரடியாக தொடர்புகொள்ளமுடியாது .ஆயினும் ஒருவாடிக்கையாளர்கணினியில் யூஆர்எல் முகவரியை மிகச்சரியாக உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை தட்டுவதன் மூலம் நமக்குத் தேவையான இடத்திலுள்ள தரவுகளை தேடிப்பெறமுடியும்.

பொதுவாக பல்வேறு வகையான தரவுகளை தொகுத்து தேக்கிவைத்து பயன்படுத்துவதையே தரவுதளம் என அழைப்பார்கள். ஆரக்கிள் எஸ்கியூஎல் எம்எஸ்அக்சஸ்ஆகியவை இவ்வாறானதாகும். எஸ்கியூஎல் எனப்படும் தரவுதளசேவையாளர் எம்எஸ்அக்சஸைவிடபேரளவில் பல்வேறு வழிகளில் பல்வேறுவகையான வசதிகளையும் வாய்ப்புகளையும் பயனாளர்களுக்கு வாரி வழங்குகின்றது.

31.3

படம்-31-3

அதனால் இந்நிலையில் எம் எஸ்அக்சஸ்ஒரு தரவுதளம்தானா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும்.ஆம் எம்எஸ்அக்சஸும் ஒரு தரவுதளம்தான் ஆனால் எம்எஸ்அக்சஸில் இல்லாத சிறப்புவகை தரவுதளசெயலிகளான தேக்கப்பட்ட வழிமுறை(stored procedure).பயனாளர்வரையறுத்த செயலி (user defined function) தூண்டுபவர்(trigger) என்பன போன்றவை எஸ்கியூஎல் சேவையாளரில் உள்ளன என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

தேக்கப்பட்ட வழிமுறை(stored procedure)): என்பது தரவிற்கு எதிராக ஓரு தரவுதளத்தில் செயல்படக்கூடிய கட்டளைகளின் தொகுப்பாகும்.

பயனாளர்வரையறுத்த செயலி (user defined function):என்பது stored procedure பேன்றதே ஆனால் கூடுதலாக ஒற்றை மதிப்பை மட்டும் இது திருப்புகின்றது.

தூண்டுபவர் (trigger): என்பது ஒரு தரவுதளத்தில் தொடர்ந்து கட்டளைகளை செயல்படுத்தியவுடன் எழும்நிகழ்வுகளில் குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் மிகச்சரியாக கண்டுபிடிப்பதாகும்.

இந்த பொருட்கள் தரவுதளம்சேவையாளருக்கு செயலாக்கிடும் திறன் தருக்கமுறைமை ஆகியவற்றை ஒரு தரவுதளமாநது உடன் சேர்த்து தரவுகளை தேக்கிவைத்திடும் செயலை எவ்வாறு கையாளுவது என்ற திறனை வழங்குகின்றன.

அக்சஸானது இந்த மூன்று பொருட்களுக்கும் இணையான மேக்ரோ மாட்யூல் இனமாட்யூல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு அவ்வாறான பணிகளை சிறிய அளவில் மட்டும் செயல்படுத்துகின்றது.

அக்சஸானது ஒற்றை பயனாளர்அல்லது குழுவான பயனாளர்களுக்கு மட்டும் கோப்பு சேவையாளராக பின்புலத்திலிருந்து இயங்கி பயனாளரின் கணினிக்கு தேவையான தரவுகளை வழங்கிய பின்னர்இதன்விளைவாக எழும் தரவுகளை திரும்ப பெற்று தேக்கிவைத்துகொள்கின்றது.இந்த இடைமுகசெயலை நூறு, ஆயிரம் என அளவிற்கு அதிகமான பயனாளிகள் இணையத்தின் வாயிலாக அக்சஸினுடைய கோப்புகளின் சேவையாளருடன் தொடர்புகொள்ளமுடியாது.

இதற்கு மறுதலையாக ஆரக்கிள் எஸ்கியூஎல் சேவையாளர்போன்ற தரவுதளசேவையாளர்பொறிகள் தரவுகள்தொடர்பான அனைத்து செயல்களையும் சேவையாளர்கணினியில் செயல்படுத்தி இதன் இறுதி விளைவை மட்டும் வாடிக்கையாளருடைய பயன்பாட்டிற்கு கோரப்படுகின்ற தரவுகளை மட்டும் அவர்களுடைய கணினியில் வழங்குகின்றது.

வாடிக்கையாளருடைய பயன்பாடானது பயனாளருடைய இடைமுகம் உள்ளீடு ஆகியவற்றை மட்டும் ஆதரிக்கின்றது. அதாவது வாடிக்கையாளர்களின் கோரிக்கை இடைமுகம் ஆகியவை ஓரிடத்திலும் அதற்கான செயல் பிரிதோரிடத்திலும் என்றவாறு தனித்தனியாக செயற்படுத்தப்படுவது வாடிக்கையாளர்சேவையாளர்உறவின் எஸ்கியூஎல் தரவுதள சேவையாளராகும்(படம்-31-3) அக்சஸானது இந்த இரட்டைசெயலை தன்னுடைய சொந்த அக்சஸ்தரவுதளபொறிவாயிலாக செயல்படுத்துகின்றது.ஆனால் எஸ்கியூல் சேவையாளர்போன்ற பலபயனாளிகள் பலசெயல்களை ஆகியவற்றை அன்று.

View,cluster,clustered index,identity field,temporary table,partitioning and parallel processing போன்ற திறன்மிகுந்த செயல்களை ஆரக்கிள் எஸ்கியூஎல்போன்ற தரவுதள சேவையாளர்களால் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றது. மேலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களை இடைமுகம் செய்யவும் இலட்சக்கணக்கான ஆவணங்களை பயன்படுத்திட ஏதுவாக தயார்நிலையில் தேக்கிவைத்திடும் திறன்கொண்டதாகும். திறன்மிகு படிவங்கள்,அறிக்கைகள் போன்றவைகளை பயனாளர் ஒருவர் பயன் படுத்தி கொள்ள ஏதுவாக அக்சஸ்வைத்துள்ளது. மேலும் சர்பாயின்ட் சேவைமூலம் இணையத்தின்வாயிலாக அனைத்து பயனாளிகளும் இதனுடைய தரவுகளை பங்கிட்டு பயன்படுத்திகொள்ளும் வசதியை அக்சஸ்2007 வழங்குகின்றது

இணயச்சேவையாளர்பயன்பாட்டுசேவையாளர்இணைக்கும் கணினியின் பின்புல சேவையாளர்ஆகியவற்றுடன் தொடர்புகொள்ளுதல் செயற்படுத்துதல் ஒன்றாக சேர்த்தல் போன்றவைகள் ஒரேமாதிரியாகவே இருக்கும் . ஆயினும் ஒரு பயன்பாட்டை பேரளவில் வாடிககையாளர் சேவையாளர்முனைமத்தில் செயற்படுத்தவது பயன்பாட்டு சேவையாளர்ஆகும். அதிக பணிச்சுமையுடன் இருக்கும் கணினிக்கு வரும் கோரிக்கைகளை பணிச்சுமை இல்லாத அல்லது குறைந்த பணிச்சுமையுள்ள கணினிக்கு கோரிக்கைகளை திருப்பிவிடப்படும் செயல்களை செயற்படுத்திடும் நிகழ்வாகும்.

இணையச்சேவையாளர்என்பது வாடிக்கையாளர்கோரும் இணையதளமுகவரிகளின் கணினியுடன் அவைகளை இணைத்து பராமரிக்கின்றது. இதனடிப்படையில் செயலை இணையத்தின்மூலம் பல்வேறு வகையான பயன்பாடுபகளை பயன்படுத்துவதற்கு வெப்செர்வர்என்றும் குறிப்பிட்டவகை பயன்பாட்டைமட்டும் பயனபடுத்துவதற்காக செயல்படுவது அப்ளிகேசன் செர்வர் பயனுள்ளதாகும். ஓருகணினியின் அடிப்படைசெயல் உள்ளீடுசெய்யும் தரவுகளை தேக்கிவைப்பது ஆகும்.

அதற்கடுத்ததாக இவைகளை எவ்வாறு கையாளுவது என்ற புரொகிராமை இயக்குவது ஆகும்.இறுதியாக வாழக்கையாளருடன் அல்லது பயனாளருடன் எவ்வாறு இடைமுகம் செய்வது என்ற மூன்றாவது அடுக்காகும் .ஆக இவ்வாறு ஒன்றுக்குமேற்பட்ட அடுக்கடுக்கான பணிகளை சேர்த்து பல்லடுக்கு அமைவு என அழைக்கப்படுகின்றது.இதன் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள தனித்தன்மைவாய்ந்த சிறப்பான செயலிகள் தனித்தனியே பிரிக்ககப்படுகின்றது.

தரவுதளத்தில் பொதுவாக இரண்டடுக்கு கட்டமைவு தானிருக்கும் .அதிலும் அக்சிஸில் ஓரடுக்கு கட்டமைவுதானிருக்கின்றது.இதில் பயனாளர்கள் தரவுகளை நேரடியாக படிவங்கள் அல்லது அறிக்கை, இதர ஆப்டிகூக்;ட்டுகளிலிருந்து பெற்று பயன்படுத்திகொள்ளப்படுகின்றது.

ஆக்சஸ் 2007இல் .accdb என்ற பின்னொட்டுடன் கூடிய தரவுகளின் கோப்புகளை பின்புலமாக தேக்கிவைக்கப்படு கின்றது. இதனை பயனாளர்கள் அட்டவணைவி னாவினுடைய படிவங்கள் வாயிலாக பெறமுடியும் .

அக்சஸ் 2007-30 அக்சஸில் XML HTML ஆகியவற்றின் ஆவணங்களை உள்ளிணைக்கலாம்

  அக்சஸ் 2007 தரவுதள  பயன்பாடானது தம்மிடம் உள்ள தரவுகளை தேக்கிவைக்கவும் கையாளவும் பகிர்ந்து கொள்ளவும் XML ,HTML என்பன போன்றவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திகொள்கின்றது. அதனால் இவைகளை பற்றி முதலில் அறிந்து(புரிந்து)கொள்வோம்.

 HTML என சுருக்கமாக அழைக்கப்படும் மீவுரை குறியீட்டு மொழி(Hyper Text Markup Laguage) என்பது வலைதளத்தினை வரையறுக்க பயன்படுகின்றது.இது குறிப்பிட்ட அளவு குறியொட்டுகளுடன்(tags) கட்டுப்படுத்தப்படுகின்றது.இந்த குறியொட்டு(tag) என்பது மீவுரைகுறியீட்டு  மொழியின் அடிப்படை உறுப்பாகும்.இதுதான் ஒருஇணைய பக்கத்தில் இருக்கும் தரவுகளின் தோற்றம். எப்படியிருந்திடவேண்டும் என வரையறுக்கின்றது.இதற்கு ஏற்றவாறு இனைய உலாவியானது மிகச்சரியாக இதனை புரிந்துகொண்டு அவ்வாறே தம்முடைய கணினியில் உள்ள திரையில் பிரிதிபலிக்க செய்கின்றது.  <  > ஆகிய இரு குறிகளே HTML இன் குறியொட்டு கள் என  குறிப்பிடப்படுகின்றன.இவ்விரு குறிகளும் இல்லையெனில் ஒரு இணைய உலாவியால் ஒரு இணைய பக்கத்தை பற்றியஅடையாளத்தை கண்டுகொள்ளமுடியாது. பின்வருபவை  (நிரல்தொடர்-30.1) ஒரு சாதாரண  HTML இன் குறிமுறையாகும். இதனை செயற்படுத்தினால் படம் 30.1 இன் மேல்பகுதியில் உள்ளவாறு ஒரு திரையின் தோற்றம் அமையும்.

நிரல்தொடர்- 30.1மாதிரி HTML நிரல்தொடர்

<HTML>

            <Head>

                       <Title> Example</Title>

             </Head>

                          <Body>

                                     <B> Public Sub generateXML1()

   Dim rst As DAO.Recordset

   Dim strsql As String

   Dim strOut As String

   strsql = “SELECT * FROM Books;”

   Set rst = CurrentDb.OpenRecordset(strsql)

   Do Until rst.EOF

      strOut = strOut & rst.Fields(“NAME”)

      rst.MoveNext

   Loop

   MsgBox strOut

End Sub </B>

                         </Body>

</HTML>

 30.1

படம்-30.1

  XML என சுருக்கமாக அழைக்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட  குறியீட்டு மொழி(eXtend  Markup Laguage)என்பது HTMLஇன் குறிப்பிட்ட முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட குழுவான குறியொட்டினை  தேவைப்படும்போது விரிவாக்கம் செய்து கொள்வதாகும். இது ஒரு நிரலர்கள் தங்களுடைய செயலிகளில் புதிய புதிய குறிமுறைகளை தேவைப்படும்போதெல்லாம் சேர்த்து உருவாக்கிட உதவிடும் உரைநகல் மொழியாகும்.(scripting language) .இதன்மூலம் வாடிக்கையாளர் விரும்பியவாறு மிக விரிவாக xml குறியொட்டுடன் உருவாக்கிடமுடியும் .இது தரவு ,உயர்மட்டதரவு (metadata) ஆகியவற்றிற்கு தேவையான ஆவணங்களுக்கு XML ஆனது நேரடியாக இயக்க நேர சூழலை வழங்குகின்றது. பின்னர் இதன் விளைவானது உலாவியின் அடிப்படை மொழியாகவும்  தரவு மற்றும் குறியொட்டின்(tag)  மாறிகளாகவும் பாவிக்கின்றது. இதன் பொதுவான தன்மைகள் பின்வருமாறு

1. ஒரு xml குறிமுறைகளின் வரிஒவ்வொன்றும் ஒரு ஆரம்ப குறியொட்டு மற்றும் ஒருமுடிவு குறியொட்டுடன் கண்டிப்பாக இருக்கவேண்டும்,.

2.ஒரு xml குறிமுறைகளில் ஏராளமான அளவில் குறியொட்டுகள்  இருந்தால் ஒவ்வொரு ஆரம்ப குறியொட்டும் தமக்கே உரிய முடிவு குறியொட்டுடன் மட்டுமே வரிசைக்கிரமமாக அமைந்திருக்கும்.

3. ஒவ்வொரு வேர்(மூல)முனைமத்துடன் அதற்கே யுரிய துனைமுனைமம் மட்டுமே அந்தகுழுவிற்குள் இருக்கமுடியும் ஒன்றின் கிளை மற்றொன்றின் வேர்(மூல)முனைமத்தடன் தொடர்பிருக்காது.

4.இந்த XMLஆனது பெரிய எழுத்து சிறிய எழுத்து என வேறுபாடு பார்த்து செயல்படக்கூடியது..

5. தரவுகள் உரைகள் ஆகியவற்றின் மதிப்புகள் இரண்டு குறியொட்டிற்கு இடையே மட்டும் அமைந்திடவேண்டும்.

6.XML குறிமுறையானது வரிசைக்கிரமான படிமுயையில் அதாவது  உயர்ந்த இடத்திலிருந்து தாழ்நிலைவரை இருப்பவைகளையே ஏற்ககூடியது.  உதாரணமாக மேல் நிலையில் நம்முடைய உலகத்தை கண்டங்கள் என்றும் அடுத்த படிமுறையாக நாடுகள் என்றும் அதற்கடுத்தாக மாநிலங்கள் என்றும் அதற்கடுத்த படிமுறையாக மாவட்டங்கள் என்றும் கடைசி படிமுறையாக நகரங்கள் அல்லது கிராமங்கள் என்றும் வரிசைகிரமமாக உயர்நிலையிலிருந்து தாழ்நிலைவரை குறிப்பிட வேண்டும்.

30.2

படம்-30.2

DOM என்பது ஆவணபொருள்மாதிரியின் (Document Object model) சுருக்குபெயராகும். இணைய உலாவி இயங்கிடும்போது உரைஅல்லது நிரல் மொழியை பயன்படுத்திடும் போதும்  HTML அல்லது  XML  ஆகியவற்றின் உள்ளடக்கங்களை பெறுவதற்கு இது அனுமதிக்கின்றது.இது இயக்கநேரத்தில் HTML அல்லது  XML ஆகியவற்றின் நிரல்தோடர்களை  இணைய உலாவியில் இயங்கிகொண்டிருக்கும்போதே மாற்றியமைத்திட அனுமதிக்கின்றது. .ஒருபொதுவான HTML DOM படிமுறையின் கட்டமைவு படம் 30.2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறே ஒருபொதுவான XML DOM படிமுறையின் கட்டமைவு படம் 30.3 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

30.3

படம்-30.3

 XSLT (படம்-30.4)இந்த HTML மற்றும் XML ஆகியவற்றின் ஆவனத்தில் மட்டும் அதனுடைய தரவுகளை கட்டுபடுத்தி மறுஅமைவு செய்து இணையத்தில் பிரிதிபலிக்கசெய்யவும் வழங்குவதற்கும் இந்த XSL பயன்படுகின்றது.

30.4

படம்-30.4

   ஒரு XML ஆவணத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என WWW(Wide world web) வின் கூட்டமைப்பு நிர்ணயம்செய்து வரன்முறைபடுத்தி செந்தரத்தை உறுதிசெய்து வெளியிடுகின்றது.இந்த செந்தரத்திற்கேற்ப நாம் அனைவரும் இந்த XML ஆவணத்தை கட்டமைவு செய்யவேண்டும்.  அதனடிப்படையில் உலகில் எங்கோ ஒருமூலையில் உள்ள கணிப்பொறியில் உருவாக்கிய XML ஆவணம் வேறு எங்ககோ உள்ள ஒரு கணிப்பொறியானது எளிதில் புரிந்துகொண்டு அவ்வாறே ஒருஇணைபக்கத்தினை திரையில் பிரிதிபலிக்கச் செய்கின்றது. இதனால் இணையத்தின்மூலம் தரவுகளை ஒருவருக்கொருவர் மிகஎளிதில் பரிமாறிக்கொள்வுளம் பகிர்ந்துகொள்ளவும் முடிகின்றது.  இதனை தொடர்ந்து அக்சஸ் 2007 ஆனது இந்த XML ஒரு தரவுதளமா பாவித்தகொண்டு அதனுடன் ஒத்திசைவு செய்து தம்முடைய தரவுகளை சேமித்திடவும் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றது.

பின்வருபவை XML இன் மேம்மபட்ட உண்மையான பிற பயன்களாகும்.

1.            XPath இதன்மூலம் XMLஆவணத்தினை பிரித்தறியமுடிகின்றது

2.            XQuery:இதன்மூலம் ஒரு XML ஆவணத்தில் உள்ள விவரங்களை வினா எழுப்பி தேவையான தரவுகளை அறிந்துகொள்ளவும் பெறவும் முடிகின்றது.

3.            XLink மற்றும் XPointer.  இதன்மூலம் தரவுகளை இணைப்பதற்கும் சுட்டிகாட்டிடவும் முடிகின்றது.

4.            XForm  இதன் மூலம் XML ஆவணத்தின் இயக்கநேரத்தின் போதே இணையபக்கத்தினை படிவமாக பெற முடிகின்றது.

5.            XInclude ஒரு XML ஆவணத்துடன் மற்றொரு XML ஆவணத்தை உட்பொதிவதற்கும் உள்ளினைவதற்கும் பயன்படுகின்றது.

6.            XML-FO இது ஒரு XML ஆவணத்தினை செந்தரமான பகுதி XSL இன் வடிவமைப்பில் பிரிதிபலிக்கசெய்கின்றது.

 ஒரு XML ஆவணத்தில் தரவு(Data) ,உயர்மட்ட தரவு(metadata).தலைமுறை உள்உறவு (inter relationship inherent)ஆகியமூன்றும்   அடிப்படையாக அமைந்துள்ளன,  இதன்மூலமாக மட்டுமே அட்டவனைகள் ஆவனங்கள் போன்றவை ஒருங்கிணைடக்கபட்டு கட்டமைத்து கையாளப்படுகின்றன. இந்த XML இல் பின்வரும் மூன்று செந்தரங்கள் பராமரிக்கப்டுகின்றன வலியுறுத்தபடுகின்றன.அவை

1.Docunt Type Definition இது ஒரு XML  ஆவணத்தில் உள்ள தரவுகள் எவ்வாறு ஓருங்கிணைக்கப்படவேண்டும் என வரையறுப்பதற்கான கட்டளைவரிகள் கொண்ட தனியான ஆவணமாகும்.

2.XML shema Definition: இது மேலே கூறிய DTD யின் மேம்மபட்ட ஆவணமாகும்.தருக்க கட்டமைவின் மூலம் XML இன் தரவை கட்டமைக்க உதவுகின்றது.

3.XML data Type இது  தற்கால உறவு தரவுதளத்தின் அடிப்படையில் xML தரவு வகையாக கட்டுபடுத்துகின்றது.

XML ஆவனத்தின் தரவுகளானது Activex Data Object இனை பயன்படுத்தி  உருவாக்கி  செயல்படுத்தப்படுகின்றது இதனை ADO என கூறுவர். இதன் அடுத்த படிமுறையாக(தலைமுறையான)  DAO வின் செயலிகளை அக்சஸ்2007 இல் பயன்படுத்திகொள்ளப்படுகின்றது. இந்த DAO வானது ஒரு XML ஆவணத்தின் தரவுகளை கையாள பயன்படுகின்றது.இந்த DAO செயலியினை அடிப்படையாக கொண்டு XMLஆவணத்தின் வழியாக அக்சஸ் 2007  ஆனது தரவுகளை சேமித்திடவும் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றது

அக்சஸ்2007-29- வி பிஏவுடன் பொருள்நோக்குமொழியாக அக்சஸ்-2007-தொடர்ச்சி

பண்பியல்பு செயல்முறையின் விதிகள்: இதில் ஒருசில விதிமுறைகள் செயல்படுத்திட படுகின்றன.அவைகளை பற்றி இப்போது காண்போம்,

பண்பியல்பின் செயல்முறைக்கு ஒதுக்கப்படுகின்ற பெயரே பண்பியல்பின் பெயராக விளங்குகின்றது என்பதே முதலானதும் மிக முக்கியமானதுமான விதிமுறையாகும். அதனால் பண்பியல்பை விவரிக்ககூடியதாகவும்  புரிந்து கொள்ள உதவிபுரிவதாகவும் இருக்குமாறு இதனை பயன்படுத்திகொள்க,

property மற்றும் property Get ஆகியவற்றின் தரவுவகைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற பெயர் போன்றவை தனிமாறிகளுக்குள் ஒன்று போலவே இருக்கின்றன. ஆனால் இவை ஒன்றுக் கொன்று ஒரேமாதிரியாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை யெனில் திரையில் பிழைச்செய்தி தோன்றுகின்றது,

இனத்தின் விரிவாக்கம்:குறிப்பாக ஒருநிரல் தொடரில் இருக்கின்ற மாட்யூல்களுக்குள் பண்பியல்பு செயல்முறையை விரிவாக்கம் செய்யமுடியும்.பின்னர் இந்த மாட்யூல்களுக்கு ஒரு வழிமுறையை சேர்க்கமுடியும்.மேலும் தேவையானால் இதில் ஒருசில இனங்களை சேர்த்துக் கொள்ளமுடியும். இப்போது இந்த நிரல்தொடர் இனத்தின் மாட்யூல் மூலம் விரிவாக்கம் செய்யமுடியும்.

குறிமுறைகளை மறுபயன்படுத்துதல் மற்றும் தரவுகளின் தொகுப்பு ஆகியஇரண்டும் பொருள்நோக்கு நிரல்தொடரின் அடிப்படை பண்பியல்பாகும்.ஒருசெயலுக்காக எழுதப்படுகின்ற குறிமுறைகளை பல்வேறுசெயல்களிலும்  இடங்களிலும் ஒருசில மாறுதல்களை மட்டும் செய்து இதே குறிமுறைகள் நன்கு செயல்படுமாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் .இதனையே குறிமுறை மறுபயன்படுத்துதலின் வழிமுறை என்பர்.

ஒருபயன்பாட்டில் தரவு மேலாண்மை,வியாபார தருக்கம் ,பயனாளரின் இடைமுகம் ஆகிய பல்லடுக்கு செயலாக இதனுடைய தரவுத் தொகுப்பு உள்ளன.

தரவு மூலத்தில் இருந்து தரவுவை பெறுதல் அல்லது தரவு மூலத்திற்கு தரவுவை திரும்ப கொண்டு சேர்த்தல் ஆகியவை ஒருபயன்பாட்டின் தரவுமேலாண்மை அடுக்கில் செயல் படுத்திட படுகின்றன.

இவ்வடுக்குகளில் ஒருபயன்பாட்டின் செயல்களை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை வியாபார தருக்க அடுக்கானது பார்த்துகொள்கின்றது.

பயனாளரிடமிருந்து தரவுகளைபெறுதல் அதனடிப்படையில் தரவுகளை செயல் படச்செய்தல் இறுதிவிளைவாக கிடைகின்ற தரவுகளை பயனாளருக்கு திரும்ப வழங்குதல் ஆகிய செயல்களை பயனாளர் இடைமுக அடுக்கு பார்த்துகொள்கின்றது.

இந்த மூன்றும் ஒருங்கிணைந்த தரவு அடுக்கின் பின்புலமாக அல்லது இதற்குள் இருந்து செயல்படுத்திட படுகின்றன.இதற்காக ஒருபயன்பாட்டில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் உபயோகப்படுத்தி கொள்ளபடுகின்றன.

ஒருபயன்பாட்டின் செயலில் மதிப்பு பூஜ்ஜியத்திற்கு மேல் இருந்திடும்போது ஒரு தரவிற்கு பண்பியல்பு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது, பின்னர் இந்த தரவிற்கு சமமாக இருப்பவைகளின் அனைத்து விரங்களையும் இதனுடைய இனம் மீளப்பெறுகின்றது.  அதன்பின்னர் தொடர்புடைய பண்பியல்பிற்கு தரவுக்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தரவினுடைய விவரம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மதிப்பு பூஜ்ஜியம் மற்றும் அதற்கும் கீழ் இருந்திடும்போது கைவசம் தரவு ஒன்றுமில்லை எனத்தெரிந்து கொண்டு புதிய தரவை உருவாக்குகின்றது. பின்னர் இயல்பு மதிப்பை ஒவ்வொரு பண்பியல்பிற்கும் ஒதுக்கீடு செய்கின்றது.

நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பயன்பாட்டில் ஒரு  இனத்தின் வழியாக மட்டுமே அந்த அதனுடைய தரவை மீளப்பெறமுடியும்,இது மட்டுமே தரவை திரும்பபெறுவதற்கான ஒரே வழியாகும்.பயன்பாட்டின் மற்ற குறிமுறைகள் இந்த பயன்பாட்டில் தரவை எங்கு தேக்கிவைத்துள்ளன இதனை எவ்வாறு தெரிவுசெய்வது அல்லது தெரிவுசெய்யாமல் விடுவது என்பவைகளை பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. பின்வருங்காலத்தில் இந்தபயன்பாட்டின்  தரவினுடைய மூலத்தை மாறுதல் ஏதேனும் செய்யப்பட வேண்டும் எனில் இந்த  பயன்பாட்டின் இனத்தினை மட்டும் புத்தாக்கம் செய்தால் போதுமானதாகும்.இந்த பயன்பாட்டின் மற்ற பண்பியல்புகளில் மாறுதல் எதுவும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும்.

Property Get பண்பியல்பானது DLookup என்ற செயலியை பயன்படுத்தி கொண்டு பண்பியல்புகளின் அட்டவணையை ஒப்பீடுசெய்கின்றது,அப்போது  மாறியின்மதிப்பு பூஜ்ஜியத்திற்கு மேல்இருந்தால் கைவசமுள்ள தரவை திரையில் பிரிதிபலிக்க செய்கின்றது. பூஜ்ஜியத்திற்கு சமமாக அல்லது குறைவாக இருந்தால் புதியதை உருவாக்கி திரையில் பிரிதிபலிக்க செய்கின்றது.இந்நிலையில் தரவினுடைய  கட்டளையை பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை.

அனைத்து தரவுகளின் செயல்களும் ஒரு இனத்திற்குள் மட்டுமே செயல் படுகின்றன . அதனால் இந்த வியாபார தருக்கத்தை புத்தாக்கம் செய்யும் செயல் சுலபமானதாகின்றது. இங்கு வழிமுறை பூஜ்ஜியத்திற்கு மேல் இருந்தால் ஏற்கனவே இருப்பதை மீளப்பெறுகின்றது, பூஜ்ஜியமாக இருந்தால் புதியதை உருவாக்குகின்றது.

இன நிகழ்வு: Initialitationமற்றும் Termination ஆகிய இரண்டும் பொருள்நோக்கு நிரல் தொடரில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான நிகழ்வுகளாகும்,இவை அக்சஸின் மாட்யூல்கள் மட்டுமின்றி பொருள்நோக்கு நிரல்தொடரின் எண்ணற்ற வகைகளில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் இவை இனநிகழ்வு மாட்யூல்களிலிருந்து மாறுபட்டவை என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு பயன்பாட்டின் செயலைத் துவங்கு முன்பு அது தொடர்பான தரவுவை Initialitation செய்து தரவுக்களின் மதிப்பை ஆரம்ப நிலைக்கு அதாவது பூஜ்ஜியத்திற்கு வைத்தபின்னர் எந்தவகையான கணக்கீட்டு செயல்களையும் செயல்படுத்தினால்தான் நாம் எதிர்பார்க்கும் விளைவு அல்லது முடிவு அந்த பயன்பாட்டிலிருந்து பெறமுடியும்.

அவ்வாறே இந்த செயல் முடிவு பெறுவதற்காக erminateஎன்ற ஒரு நிகழ்வை செயல் படுத்தினால்தான் குறிப்பிட்ட செயல் முடிவுக்கு வரும் இல்லை யென்றால் அந்தசெயல் எங்காவது தொக்கி  வெளியேற முடியால் திண்டாடிக் கொண்டிருக்கும்.

இவைகளினடிப்படையில் பார்த்திடும்போது எந்தஒரு பயன்பாட்டின் செயலிலும் இந்த       இரண்டு இன நிகழ்வுகள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன என தெளிவுபெறமுடியும்.

இனமாட்யூல்களுக்கு மேற்கூறியநிகழ்வுகளை சேர்ப்பதுதான் ஒருபயன்பாட்டினை பொருள்நோக்கு நிரல்தொடராக மாற்றுவதற்கான வலுசேர்த்திடும் செயலாகும். இதுவே ஒருபயன்பாட்டை பொருள்நோக்கு நிரல் தொடராக இனங்காட்டுவதற்காக முதன்முதலில் செய்யக்கூடிய ஆரம்ப செயலுமாகும்.இதன் மீதுதான் மற்ற அனைத்த சிக்கலான நிகழ்வுகளும் கட்டமைவு செய்யப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்க.

ஒரு இனமாட்யூல்களுக்குள் ஒரு நிகழ்வை அறிவிப்பு செய்யவேண்டும் எனில் அந்த மாட்யூலின் தலைப்பில் அதாவது ஆரம்பத்தில் மட்டுமே செய்யப்படவேண்டும்.பின்னர் பொருள்நோக்கு தேடுதளின் மூலம் வாடிக்கையாளர் விரும்பியவாறு ஒருநிகழ்வை தெரிவு செய்து அறிவிப்பு செய்யமுடியும். இடைமுகத்தில் அறிவிப்பு செய்வதற்கு ஒரு இன அறிவிப்பு தேவைப்படுகின்றது.

ஒருமாட்யூலின் ஒற்றைக் குறிமுறையில் கூட ஒருநிகழ்வை எழும்படி செய்யமுடியும் என்பதை நினைவில் கொள்க. இதற்காக பலவரிகளைக் கொண்ட குறிமுறைகளை எழுதத் தேவையில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை பொருள்நோக்கு நிரல்தொடராக உருவாவதற்காக ஒருஇனத்தில் சேர்த்து கொள்ளமுடியும்.

29.1

படம்-29-1

படம்-29-1-இல் ஒருபடிவம் உள்ளது. இதில் பயனாளர் ஒருவர் தரவை உள்ளீடுசெய்து ok என்ற பொத்தானை  அழுத்தியவுடன் தரவானது இந்த ok என்ற நிகழ்வின் வாயிலாக முக்கிய படிவத்திற்கு தரவை கடத்துகின்றது. உள்ளீடுசெய்த தரவு தவறானது எனில் பயனாளர் cancel என்ற பொத்தானை அழுத்தினால் தரவுவை கடத்தும் செயல் நடைபெறாது அதற்கு பதிலாக இந்த படிவத்தை மூடிவிடும் செயலை இந்த கேன்செல் நிகழ்வு செயல்படுத்துகின்றது. இதற்கான குறிமுறை பின்வருமாறு இருக்கும்.

நிரல்தொடர்-29-1

Option Compare Database

Option Explicit

 

Public Event Error(Error As VBA.ErrObject)

Public Event FormClosing(Message As String)

 

Private Sub cmdCancel_Click()

txtSomeData.Value = Null

DoCmd.Close acForm, Me.Name

End Sub

 

Private Sub cmdOK_Click()

DoCmd.Close acForm, Me.Name

End Sub

 

Private Sub Detail_Click()

 

End Sub

 

Private Sub Form_Close()

If Not IsNull(txtSomeData.Value) Then

RaiseEvent FormClosing(txtSomeData.Value)

Else

RaiseEvent FormClosing(“No data”)

End If

End Sub

அக்சஸில் உருவாக்கப்படும் ஒவ்வொரு படிவமும் உண்மையில் ஒரு இனத்திலிருந்துதான் உருவாக்கப்படுகின்றது. இவை ஒரு . accdb என்ற பின்னொட்டாக  உள்ள கோப்புகளில் இருக்கின்றது என எண்ணிடுவேம் .

ஆனால் இவை உண்மையில் ஒரு படிவ இனத்தில் தேக்கி வைக்கப் படுகின்றன. நாம் ஒருபடிவத்தின் இனத்தில் பணிபுரியும் போதுமட்டும் திரையில் பிரிதிபலிக்கும்படி செய்கின்றது. வடிவமைப்பு காட்சிதிரையில் பதிப்பிக்கும் இடைமுகமாக படிவ இனத்திற்குள் காண்பிக்க செய்து படிவ பண்பியல்பில் நம்மை பணிபுரிய அனுமதிக்கின்றது.

படிவஇனத்தின் பண்பியல்பை பற்றிய குறிமுறைகளே அக்சஸினுடைய படிவத்தின் பின்புலத்தில் உள்ளன.இதுஒரு இனமாகும் இதுவே பொருள்நோக்குதொடரின் அடிப்படையாகவும் இருக்கின்றது.

அக்சஸ்2007-28 வி பிஏவுடன் பொருள்நோக்குமொழியாக அக்சஸ்-2007

 

நவீன பயன்பாடுகள் அனைத்துமே எந்தவொருநிலையையும் சமாளிக்ககூடியதும் (robust)மீண்டும் மீண்டும் பயன்படுத்திகொள்ளுமாறான குறிமுறைகளை (reusable code)கொண்டதும் ஆக உள்ளன, இவ்வாறாக இல்லையெனில் ஒருபயன்பாட்டை பயனாளர் எவரும் பயன்படுத்திட மாட்டார்கள் என்ற தற்போதைய நிலையுள்ளது அதனடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தம்முடைய அக்சஸ் பயன்பாட்டினையும் இவ்வாறே செயல்படுவதற்கு ஏதுவாக இயக்கநேர குறிமுறை நுலகத்தின் வழியாக இறக்குமதிசெய்வது அல்லது ஏற்றுமதி செய்து கொள்வது ஆகியசெயலின் மூலம் இதற்கான குறிமுறையை அனுகிடுமாறு அனுமதிக்கின்றது,

பொருள்நோக்கு நிரல்தொடர் (object oriented program) என்றால் என்னவென உங்களுக்கு எற்கனவே தெரிந்திருக்கும் என நம்புகின்றேன் இந்நிலையில் அக்சஸ் எவ்வாறு பொருள் நோக்கு பயன்பாடாக முடியும் என்ற ஐயம் அனைவரின் மனதிலும் எழும்,அக்சஸில் உள்ள படிவம் அறிக்கை ஆகியவையே பொருளாகும் இவற்றின் மூலமாகவே அக்சஸின் வெளியீடுகள் நமக்கு கிடைக்கின்றன அதனால் அக்சஸை பொருள்நோக்கு பயன்பாடு எனவும் கூறமுடியும் இந்த பொருட்களை விபிஏவை பயன்படுத்தி உருவாகுமாறு அதற்கான குறிமுறைகளைஉட்பொதிந்தால் பொருள் நோக்கு பயன்பாடாக அக்சஸ் மாறிவிடுகின்றது ஆனால் பொருள்நோக்கு பயன்பாட்டின் அடிப்படை பண்பயில்பான பொதிவுறையாக்கம் (encaptualation) எவ்வாறு அக்சஸில் செயல்படுத்தப்படுகின்றது என இப்போது காண்போம்,

பொருள்சார்ந்த செயல்வரைவுகளின் தரவுகளையும் செயல்கூறுகளையும் ஒரு பொருளிற்குள் தனித்தனியாக பிரித்து வைக்கின்றது, அதனடிப்படையில் செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாதவாறு மாற்றமைவுசெய்ய அனுமதிக்கின்றது, இதனையே பொதிவுறையாக்கம் என அழைக்கின்றோம்,

அக்சஸின் படிவம் ஒன்றிற்குள் ஒரு உரைபெட்டியினை கொண்டுவந்து வைத்தவுடன் இந்த உரைபெட்டிக்கு என்று தனியான புதிய பண்புகள்,வழிமுறைகள்,நிகழ்வுகள் ஆகியவை எற்படுத்தப்பட்டு இந்த உரைபெட்டி மட்டும் தனித்து இயங்கிடுமாறு  உருவாகி விடுகின்றது, இவ்வாறு இந்த உரைபெட்டியை உருவாக்குவது கண்ணிற்கு தெரிந்த பொதிவுறையாக்கமாகும்

Err object என்பதை பயன்படுத்தி ஒருகட்டளைத்தொடரில் எந்த இடத்தில் எவ்வாறான பிழைஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியும் பின்னர் இந்த பிழையை சரிசெய்து சரியாக செயல்படுமாறு மாற்றி யமைக்கமுடியும், அதன்பின்னர் clear வழிமுறையில் Errobject ஐ மறுஅமைவு செய்து மீண்டும் அடுத்தபிழை ஏதேனும் ஏற்பட்டுள்ளதாவென காண்பதற்கு ஏதுவாக தயார் செய்யமுடியும்,இந்த Err objectஐ கண்ணால் காணமுடியாது ஆனால் இதன் பயனை மட்டும் உணரமுடியும் அதனால் இதனை ஒரு கண்ணிற்க்கு புலப்படாத பொதிவுறையாக்கம் செய்யப்பட்ட பொருளாக கருதப்படுகின்றது, அடுத்ததாக

Product inventory object என்பதை எடுத்து கொள்வோம்,இதற்குள் இதில் உள்ள ஒருபொருளின் பெயர்,பொருள் ஒவ்வொன்றின் விலை,கையிருப்பு அளவின் எண்ணிக்கை, மொத்தவிலை என்பன போன்ற பல்வேறுவகையான தனித்தனி பண்பியல்புகள் தனித்தனியாக பராமரிக்கப்படுகின்றன,

ஒருபெயர்பட்டி அல்லது  உரைபெட்டியின் கட்டுப்பாடு  ஒருசாதாரண பொருளாகும், இதன் அடிப்படைத்தன்மையும் பண்பியல்புகளும் மிகசிக்கலான பொருளிற்குள் இருப்பது போன்றதேயாகும் பின்வரும்( நிரல்தொடர்-28-1) விபிஏ குறிமுறை யானது எவ்வாறு ஒரு பொருளானது அக்சஸ் பயன்பாட்டில் உபயோகபடுத்திடமுடியும் எனகூறுகின்றது,

நிரல்தொடர்-28-1

Dim objectName As ObjectClass

Set objectName = New ObjecClass

‘Setting a property of the object:

objectName.SomProperty = SomValue

‘Invoking a method of the object:

objectName.SomeMethod

இதில் பொருளின் பெயரே ஒரு ObjectName ஆகும்,இதனை Dim என்ற கூற்றின் வாயிலாக அறிவிப்பு செய்யப்படுகின்றது,

ஒருஇனக்கூற்றின் (class module)குறிமுறையில் பொருள்ஒன்று வரையறுக்கப் படுகின்றது, அதன் அடிப்படையில் அக்சஸ் பயன்பாட்டிற்குள் ஒரு இனக்கூற்றினை சேர்க்கமுடியும், பின்னர் அதற்கான  பண்பியல்புகள் வழிமுறையும் குறிமுறையையும் இதனுடன் இணைக்க முடியும் அதன்பின்னர் இனக்கூறின் பொருளை வரையறுப்பதற்காக பயன்படுத்தமுடியும், இங்கு இனக்கூறின்பெயரே பொருள் இனத்தின்பெயராகும்,

பொதுவாக ஒருசிறப்புவகை குறிமுறைத் தகவமைவையே ஒருஇனக்கூறு என அழைப்பர், அக்சஸானது ஒருபொருளை வரையறுப்பதற்காக இதனை ஆதரிக்கின்றது, மேலும் புதிய சான்றளிக்கப்பட்ட பொருள் தகவமைவு குறிமுறையிலிருந்து உருவாக்கிட அனுமதிக்கின்றது

ஒருஇனக்கூறில் உள்ள பொதுசுட்டியுடன் இனைந்து செயல்முறைகள் ,பண்பியல்புகள், வழிமுறைகள் ,நிகழ்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது, இனக்கூறுக்குள் மட்டும் அறிவிப்புசெய்து பயன்படுத்திகொள்ளும்படியும் இந்த தனிச்சுட்டியின் உதவியுடன் வெளிப்புறத்துடன்  தொடர்புகொண்டு பயன்படுத்த முடியாதவாறும் அமைக்கப்பட்டுள்ளது,

இதனடிப்படையில் நாம் ஒருproduct class module ஐ உருவாக்கிடமுடியும் பின்னர் ProductName, UniPrice,Qty,Total Value,Discount.NetValueஆகிய பண்பியல்புகளை இதனுடன் சேர்க்கமுடியும், இதனுடன் மெலும் தேவையெனில் இதனை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி கொள்ளப் போகின்றோமோ அதற்கேற்றவாறு இதனுடைய பண்பியல்புகளை சேர்த்து கொள்ளமுடியும், இதற்காக தனியானதொரு விபிஏ குறிமுறை மூலமாகவே உருவாக்கிடமுடியும் என்பதை மனதில் கொள்க,

Customer contact,employee details,product details ஆகியவை பொதுவாக எல்லாஇடங்களிலும் நடப்பிலிருக்கும் இனக்கூறு(class module)ஆகும்,

இந்த இனக்கூறின் குறிமுறையிலிருந்து நம்முடைய பொருளைபற்றிய அறிவுமற்றும் நடைமுறையில் உள்ள பொருளின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அக்சஸினுடைய விபிஏ குறிமுறையாக உருமாற்றம் செய்து அதனையே அக்சஸின் பொருளினுடைய பண்பியல்புகள் ,வழிமுறைகள் ஆகியவைகளாக உருமாற்றம் செய்யமுடியும்,

பின்வரும் அட்டவணை28-1 ஒருபொருள் இனக்கூறின் பண்பியல்புகள் ,வழிமுறைகள் ஆகியவைகளை கொண்டுள்ளன,

அட்டவனை-28-1

28.0

இதில் தேவையானால் மேலும் பண்பியல்புகள் ,வழிமுறைகள் ஆகியவைகளை சேர்த்து மிகத்திறனுடன் இதனை பயன்படுத்திகொள்ளமுடியும்,

28.2

படம்-28-1

அக்சஸ்2003 ஆக இருந்தால் ஒருதரவுதளத்தில் insert=>class module=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குவதன் மூலம் ஒருபதிப்பு சாளரத்தை திறந்து ஒருபுதிய இனக்கூறை திறக்கமுடியும்

ஆனால் அக்சஸ்-2007 இல் create தாவிபட்டியின் othersஎன்ற குழுவின்கீழ்உள்ள macroஎன்ற அம்புக்குறியள்ள பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் விரியும் பட்டியலிலிருந்த class module என்பதை தெரிவுசெய்வதன் மூலம் இதனை செயலிற்கு கொண்டுவர முடியும், இதில் குறிமுறையை உருவாக்கிய பின்னர் மேல்பகுதியில் உள்ள save என்ற உருவபொத்தானை அழுத்தி இதற்கு ஒருபெயரிட்டு (படம்-28-1)சேமிக்கமுடியும்,

இதில் இனத்தின் பெயர் நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் மிகசுருக்கமானதாக இருக்கவேண்டும், ஒவ்வொரு பண்பியல்பையும் ஒருபொதுமாறியாக அறிவிப்பதுதான் ஒருஇனத்திற்கான பண்பியல்புகளை செயல்படுத்திடும் சுலபமான வழியாகும் , ஒரு இனக்கூறிற்குள் ஒருபுதிய பண்பியல்பை அந்த இனத்திற்கான பொதுமாறியாக சேர்க்கமுடியும்,

28.2

படம்-28-2

ஒருஇனத்திலிருந்து உருவாக்கப்பட்ட இனக்கூறின் ஒவ்வொரு பொதுமாறியையும் அந்தபொருளின் பண்பியல்பாக பாவிக்கின்றது(படம்-28-2),ஏனெனில் நாம் ஒருஇனக்கூறினை பொதுமாறியாக அறிவிப்பு செய்துள்ளோம்,அதனால் இதற்காக மேலும் பணியுரியாமல் அக்சஸானது இந்த மாறியை இனப்பொருளின் பண்பியல்பாக கருதிகொள்கின்றது,

இவை மற்ற பொருள்வழிமுறைபோன்று இனத்திலிருந்து பொருளாக உருவாக்கிடும் செயலை ஆதரிப்பதை வரையறுக்கின்றது, இவைஒவ்வொன்றிலும் ஒருபொருள் இனக்கூறில் பொது செயல்முறை தவிர வேறொன்றும் இல்லை,பின்வரும் குறிமுறை sell method ஆகும்,

நிரல்தொடர்-28-2

Public SubSell(UnitSold As Integer)

Me.UnitInStock = Me.UnitsInStock -UnitsSold

End sub

இயல்புநிலையில் இனத்திலுள்ள அனைத்து செயல்முறைகள் பொதுசெயல்முறைகளாகவே இருக்கின்றன, பொதுதிறவுசொல் செயல்முறையின் நிலையை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமைகின்றது,,இதில் எந்தவொருமதிப்பையும் திருப்பி அனுப்பபடவில்லை,

நிரல்தொடர்-28-3

Public Sub Discount(Percent As Integer)

If Percent < 1 Or Percent > 99 Then    Exit Sub

End If

Me.UnitPrice = Me.UnitPrice – ((Percent / 100) * Me.UnitPrice)

End Sub

இந்த டிஸ்க்கவுன்ட் வழிமுறை செயல்வழிமுறை போன்றதே இதில் 1சதவிகிதத்திற்கும் கீழ் அல்லது 99 சதவிகிதத்திற்கும் மேல் எனில் இந்த வழிமுறையின் செயல் முடிவுக்கு வந்து விடுகின்றது, மதிப்பு இரண்டிற்கும் இடையில் இருந்தால் கழிவுத்தொகை எவ்வளவு என கணக்கிட்டு கழிக்கின்றது,

நிரல்தொடர்-28-4

Private Sub Form_Load()

Set Product = New ClsProduct1

Set rs = CurrentDb.OpenRecordset(“tblProducts”)

If rs.RecordCount > 0 Then

Call SetObjectProperties

Call FillForm

End If

End Sub

இதில் கட்டற்ற Frmproductஆனது Frms load செயல்முறையிலிருந்து ஏராளமான பண்பியல்பை உருவாக்கி இதற்காக ஒதுக்கீடு செய்கின்றது, மேலும் இதிலிருந்து ரெக்கார்டுசெட்டை உருவாக்கு கின்றது என்றும் பண்பியல்புகளை எவ்வாறு உருவாக்கி ஒதுக்கீடுசெய்கின்றது என்றும் தெரிந்து கொள்ளலாம்

ஒரு குறிமுறையின் செயலானது எழுத்துகளை கடந்து செல்லும் நிலையில் எண்மதிப்பு தேவைப்படும்போது அல்லது பண்பியல்பின் மதிப்பு பூஜ்ஜியத்தைவிட குறைவாக இருக்கும்போது பண்பியல்பு பிழைஏற்படுகின்றது, பின்வரும் வழிமுறை பிழையின்றி பண்பியல்கள் செயல்படவும் இயக்கநேர பிழைகளை தவிர்க்கவும் பயன்படுகின்றன,

1,இயல்புநிலைபண்பியல்பின் மதிப்பை அமைத்தல் ,பொருத்தமற்ற தரவுகளை கடக்கும்போது இயல்புநிலை பண்பியல்பின் மதிŠபு ஏற்படும்படி அமைக்க வேண்டும்¢,

2,தனிப்பட்ட செயல்முறையை உபயோகபடுத்துதல் தரவுவகைகளை ஏற்புடைத்தாக்கிட(validity) இனக்கூறின் தனிப்பட்ட செயல்முறையை பயன்படுத்திகொள்க

3,பிழையை தேடிப்பிடித்தல் இனக்கூறின் எந்தவொரு இடத்திலும் குறிப்பாக இனப்பண்பியல்புகள் அல்லது வழிமுறைகளில் பிழையை தேடிப்பிடித்தலை உபயோகபடுத்திகொள்க

பொதுவாக பொதிவுரையாக்கும் செயலுடன் இருப்பதே  பொருள்நோக்கு நிரலின் அடிப்படைத் தன்மையாகும் என்பதை மனதில்கொள்க,

ஒரு இனக்கூறிற்கான குறிமுறைகளை உருவாக்கிடும்போது Intelligence ஆனது இனத்தின் பொருட்பெயரை உருவாக்கமுயலும் நிலையில் தொடர்புடைய பெயர்களுடன் கீழிறங்கு பட்டியலாக விரிவடைகின்றது அவற்றில் ஒன்றை நாம் தெரிவுசெய்து கொள்ளலாம் ,அவ்வாறே Auto List members என்ற கீழிறங்கு பட்டியலும் (படம்-28-3)ஒருபொருளின் பண்பியல்புகள் அல்லது வழிமுறைகளின் முதலெழுத்தை உள்ளீடுசெய்ய ஆரம்பிக்கும்போது தொடர்புடைய சொற்களின் பட்டியலை திரையில் பிரிதிபலிக்கசெய்கின்றது,

28.3

படம்-28-3

இந்நிலையில் ஒரு பண்பியல்பின்பெயரின் இடையில் எங்காவது இடம்சுட்டியைவைத்து shift + F2 ஆகியவிசைகளை சேர்த்து அழுத்தியவுடன் இதனுடையபின்புலத்தில் விபிஏ குறிமுறைஇருந்தால்  தொடர்புடைய இனக்கூறின் சாளரம் திறந்துகொள்கின்றது,  பின்புலத்தில் விபிஏ குறிமுறை இல்லையெனில் ஒன்றும் நடைபெறாது பிழைசெய்திமட்டும் திரையில் பிரிதிபலிக்கும்

ஒரு அக்சஸ்பயன்பாட்டினை கட்டுண்டுதும் கட்டற்றதும் அல்லது இரண்டும் கலந்த  பொருள்நோக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

முக்கியமாக கட்டற்ற கட்டுப்பாட்டை உருவாக்குதில் பொருள்நோக்கு வழிமுறை பெரிதும் பயன்படுகின்றது,

அக்சஸில் பொருள்நோக்கு வழிமுறையின் பயன்படுத்தவேண்டிய விதிமுறைகள்

1,பயனாளரின் இடைமுகத்தின்போது ஒருஇனக்கூறிலிருந்து செய்திபெட்டியொன்று திரையில் தோன்றச்செய்யவேண்டும்,இந்த விதிமுறை அக்சஸிற்கு முக்கியத்துவம் அற்றதாக இருந்தாலும் இதனை செயல்படுத்துவது பின்னாளில் வரும்பிரச்சினையை சமாளிக்கஏதுவாகஇருக்கும்,

2,இனக்கூறை நிகழ்நிலைஅல்லது மேம்படுத்திடும்போது இனக்கூறுகளின் இடைமுகத்தை பாதுகாத்திடுக, நடப்பிலிருக்கும் தரவுவகைகளின் பன்பியல்புகளை மாற்றியமைத்து புதியபண்பியல்பு வழிமுறை நிகழ்வுகள் ஆகியவற்றை சேர்த்திடுவதற்கு இந்த விதிமுறையை பின்பற்றிட வேண்டும்

ஒரு இனக்கூறில் மூன்றுவகையான பண்பியல்பு செயல்முறைகள் உள்ளன அவை

1,PropertyLetசெயல்முறை:இதுபுதியமதிப்பை பண்பியல்பிற்கு ஒதுக்கீடுசெய்கின்றது, இதற்கான குறிமுறைபின்வருமாறு இருக்கும்,

நிரல்தொடர்-28-5

Public Property Let LastName(Value As String)

m_LastName = Left$(Value, 20)

End Property

2,PropertySetசெயல்முறை:இதுபொருளின் பண்பியல்பின்மதிப்பை ஒதுக்கீடுசெய்கின்றது, இதற்கான குறிமுறைபின்வருமாறு இருக்கும்,

நிரல்தொடர்-28-6

Public Property Set Products(Value As ADO.Recordset)

If Not Value Is Nothing Then

Set m_Products = Value

End If

End Property

3,PropertyGetசெயல்முறை:இதுஒருவிபிஏவின் செயலிபோன்று பண்பியல்பின் மதிப்பை மீளப்பெறுகின்றது, இதற்கான குறிமுறைபின்வருமாறு இருக்கும்,

நிரல்தொடர்-28-7

Public Property Get LastName() As String

LastName = m_LastName

End Property

அக்சஸ்2007 தொடர்-25- தொடர்ச்சி- ஒருReplicaவை உருவாக்குவதற்கான நிரல்தொடர் எழுதுதல்

Replicaவை உருவாக்குவதற்கான நிரல்தொடர் எழுதுதல்

ஏதெனுமொரு தரவுதளத்தினை Replica வின் Design Master   ஆகஉருமாற்றிடுக.

2.இந்த Design Master இலிருந்து replica வை உருவாக்குக

Replica விற்கு ஒத்திசைவாக தரவுகளின் வடிவமைப்பை புத்தாக்கம் செய்து கொள்க.

தரவுதளத்தினை Design Master  ஆக உருமாற்றம்செய்வதற்கான நிரல்தொடர் பின்வருமாறு

நிரல்தொடர்-25-2

Public Functiomn Isreplicable(-

MyDBName As String) As Boolean

Dim intMatch As Integer

Dim I As Integer

Dim MyDB As DAO.Database

Dim ws as DAO.workspace

On Error GoTo HandleError

Set ws = DBEngine (o)

‘No need to open the database exclusively.

‘so second argument is False:

Set MyDB = ws.OpenDatabase (MyDBName.False)

‘First, check to see if Replicable property has

‘been added to this database’s properties collection:

For I = 0 To MyDB.Properties.count – 1

If MyDB.Properties(i).Name = “Replicable” Then

intMatch = True

End if

Next i
‘ We didn’t find the  Replicable property,

‘so we’re sure this database is not replicable:

‘Therefore, set the function’s value and exit.

If intMatch = False Then

Exit function

End If

‘We found Replicable property,

‘so check its value:

If MyDB.Properties (“Replicable”) = “T” Then

IsReplicable = True

Exit Function

Else

IsReplicable = False

Exit Function

End If

ExitHere:

Exit Function

HandleError:

Select case Err

Case 0

IsReplicable = False

Resume ExitHere

Case Else

IsReplicable = False

MsgBox “Error” & Err & “ : “ & Error

Resume ExitHere

End Select

End Selection

 

புதிய Replica வை உருவாக்குவதற்கான நிரல்தொடர் பின்வருமாறு

நிரல்தொடர்-25-3

Sub MakeAdditionalReplica(ReplicaDB As String, –

NewReplica As String, –

Dim db As DAO.Database

Dim ws as DAO.workspace

Set ws = DBEngine(0)

“Open the existing replica database as db,

“The database must be  opened in exclusive mode

“(2nd argument is True):

Set db = ws.OpenDatabase(ReplicaDB, True)

Run the MakeReplica method to create the new replica:

db.MakeReplica strNewReplica , “First Replica of “ & –

ReplicaDB, dbRepMakeReadOnly

db.Close

End Sub

 

Replica set குழுஉறுப்பினர்கள் தமக்குள் ஒத்திசைவு செய்துகொள்வதற்கான நிரல் தொடர் பின்வருமாறு

நிரல்தொடர் -25-4

Sub Synchronize (db1Name, db2Name)

Dim db As DAO.Database

Dim ws as DAO.workspace

Set ws = DBEngine (0)

Set db = ws.OpenDatabase (dbName1)

‘Perform a bidirectional synchronization:

db.Synchronize db2Name, dbRepImpExpChanges

db.Close

End sub

 

ஜெட் தரவுதள இயந்திரம் ஆனது பல்வேறுபுதிய பண்பியல்புகளை Replicable    ஆக உருமாற்றம் செய்திடும்போது செர்க்கின்றது.

1. Replicable  (Boolean) இதில் (T)என்றவாறு எப்போதும் இருக்குமாறு பராமரிக்கின்றது.

2. ReplicaID : இது Design Master   ஐ சுட்டிகாட்டிட உதவுகின்றது.

3. Design Master ID: இது பல்வேறு MsysReplica System அட்டவணைக்கான விவரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

Partial Replica set ஐ உருவாக்குதல்

விற்பனை பிரதிநிதி ஒருவர் ஒருநிறுவனத்தில் பணிபுரிவதாக கொள்வோம். இவர் தம்முடைய விவரங்களை மட்டும் தலைமையகத்துடன் ஒத்திசைவுசெய்தால் போதுமானது அனைத்துவிற்பனையாளர்களுடனும் அன்று .இவ்வாறு குறிப்பிட்ட மண்டலத்துடன் மட்டும் தலைமையகம் ஒத்திசைவுசெய்து தகவல்களை பரிமாரிக்கொள்வதை பகுதிநகல்செய்தல் Partial Replica set என அழைப்பர் .இதனை செயற்படுத்திட Partial Replica set என்ற வழ்காட்டி பயன்படுகின்றது.  இதனை செயலிற்கு கொண்டு              வருவதற்காக

25.8

படம்-25-8

1. முதலில் Replication option   என்ற பொத்தானை (படம்-25-8)தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Partial Replica   என்பதை தெரிவுசெய்து  சொடுக்குக

25.9

படம்-25-9

2.உடன்விரியும் வழிகாட்டித்திரையில் (படம்-25-9)இந்த கோப்பினை சேமித்து வைப்பதற்கான இடத்தை தெரிவு செய்து கொண்டுnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

25.1

படம்-25-10

3.பின்னர் தோன்றிடும் திரையில் (படம்-25-10)உள்ள வகைகளின் Global replica (இது நகல்குழு முழுவதும் ஒத்ததிசைவுசெய்ய பயன்படுகின்றது.). Local replica (உள்ளுர் குழுவில் மட்டும் ஒத்ததிசைவு செய்ய பயன்படுகின்றது.) . Anonymous replica (இது சிக்கலும் பிழையும் ஏற்படும்போது ஒத்ததிசைவு செய்ய பயன்படுகின்றது.)ஆகிய மூன்று வாயப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

4.அடுத்து தோன்றிடும் திரையில் table to filter என்ற பகுதியில் கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையானதை தெரிவுசெய்துகொள்க. பின்னர் paste என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தெரிவுசெய்திடும் நிபந்தனையை  Branch Id = “TN”  And  Location = “Chennai “  : Manager Id = “112” என்றவாறு குறிப்பிட்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5.அதன் பின்னர் தோன்றிடும் திரையில் எந்த அட்டவணையை Partial Replica வாக  தெரிவு செய்ய விரும்புகின்றோம் என்பதை குறிப்பிட்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6.இறுதியாக அறிக்கை தேவையா எனகேட்கும் தேவையில்லை என தெரிவுசெய்துகொண்டு Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

Partial Replicaசெய்வதற்கான நிரல்தொடர் பின்வருமாறு

நிரல்தொடர்-25-5

Public Function CreatePartial () As Boolean

Dim db As DAO.Database

On Error GoTo HandleError

‘In the following statement, MyDM.mdb has already

‘been designated as a Design Master Database:

Set db = OpenDatabase (“C:\My Documents\MyDM.mdb”)

‘Use the MakeReplica method to create the

‘partial replica, Notice the use of the

Db.MakeReplica  “C:\My Documents\MyDMP.mdb”,-

“Partial Replica of MyDM”, dbRepMakePartial

CreatePartial = True

ExitHere:

Db.Close

Exit Function

HandleError:

CreatePartial = False

MsgBox Err.Number & “:” & Err.Description

Resume ExistHere

End Function

நகல்குழுவில் பணிபுரிந்திடும்போது பின்வரும்கருத்துகளை மனதில்கொள்ளவும்

1.ஒத்திசைவு செய்யுமுன்  சரியாக இருக்கின்றதாவென ஒப்பீடுசெய்து கொள்க

2.வடிவமைப்பை மாறுதல்செய்யுமுன் ஒத்திசைவு செய்துகொள்க.

3 Replica set இன் குழுவாக உருமாற்றுமுன் கடவுச்சொற்கள் ஏதெனும் இருப்பின் அதனை நீக்கிவிடுக.

4.படிவம் திறந்து உள்ளபோது மட்டும் Synchronize now என்ற பொத்தானை எப்போதும் செயல்படுத்திட வேண்டாம்.

5. எப்போதும் System objects  என்பது செயலற்ற நிலையில் உள்ளதாவென சரிபார்த்துகொள்க.

Previous Older Entries