ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-61- வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றி யமைத்தல்

 வாடிக்கையாளர் ஒருவர் தாம் விரும்பியவாறு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பில் மாறுதல் செய்து அமைத்து கொள்ளலாம் பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் இவ்வாறான மாறுதல்களை செயல்படுத்துவதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => Options =>என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக  
 
படம்-61-1
   உடன் விரியும் options-Open Office.org என்ற திரையின் இடதுபுற பலகத்தில்  Open Office.org என்பதற்கருகிலுள்ள + கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும் கட்டளைகள் ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் பயன் படக்கூடிய பொதுவான கட்டளைகளாகும் அவைகளுள் Appearance  என்ற கட்டளை யை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும்  options-Open Office.org-Appearance  என்ற (படம்-61-1 )திரையில் Drawing/Presentation என்ற  பகுதியை தேடிபிடித்து அதில் grid என்பதற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டியலின்மூலம் தேவையான வண்ணங்க ளின் வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 பின்னர் இடதுபுறபலகத்தில்  Open Office.org Impress என்பதற்கருகிலுள்ள +  கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் கட்டளைகள் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய  கட்டளைகளாகும் அவைகளுள் General  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும்  options-Open Office.org-Impress- general  என்ற (படம்-61-2 )திரையில்
       படம்-61-2
 Text objects என்ற பகுதியில்உள்ள Allow quick editing என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது உடனடியாக உரைபதிப்பு செயலுக்கு மாறிகொள்வதற்கு உதவுகின்றது only text area selectable என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது  தெரிவுசெய்யபட்ட உரையை உள்ளீடு செய்யவேண்டிய பகுதியில் மட்டும் உரைபதிப்புசெயலை  அனுமதிக்கின்றது  இந்த இரு செயல்களையும் மேலே கருவிபட்டியிலுள்ள இவைகளுக்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம்  செயல்படுத்திட முடியும்
   New document என்ற பகுதியில்உள்ள  Start with Wizard என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் இயங்கதொடங்கும் போது புதிய இம்பிரஸ் கோப்பினை உருவாக்குவதற்கான வழிகாட்டியை  தோன்ற செய்கின்றது  இதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள File => new=> presentaion=> என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் புதிய இம்ப்பிரஸ் கோப்பினை உருவாக்கமுடியும்
   Settings என்ற பகுதியில்உள்ள use background cashe என்ற வாய்ப்பானது  புதிய படவில்லையை உருவாக்கியவுடன் அதன்பின்புலத்தை தானாக உருவாக்கி கொள்கின்றது இதனை  தெரிவுசெய்யாது விடுத்தால்  ஒவ்வொரு முறை புதிய படவில்லை உருவாக்கும் போதும் நாமே அதன்பின்புலத்தை உருவாக்க வேண்டி யிருக்கும். copy when moving  objects always moveable என்ற வாய்ப்பு படவில்லை யின் படங்களை நகர்த்துதல் ,அளவை மாற்றியமைத்தல் ,சுழற்றியமைத்தல் ஆகிய செயலின்போது  தானாகவே நகலெடுத்து கொள்கின்றது  சரியாக அமையவில்லை எனும்போது ctrl என்ற விசையை அழுத்தி பழைய நிலைக்கு மாற்றியமைத்து கொள்ளலாம். unit of measurement என்பது தேவையான அளவை அமைப்பதற்கும் tab stop  என்பது தேவையான இடத்தில் காலி இடைவெளி விடுவதற்கும் பயன்படு கின்றது
  Start presentaion என்ற பகுதியில்உள்ள always with current page என்ற வாய்ப்பானது படவில்லையை உருவாக்கி முடித்தவுடன் அப்படவில்லையானது   திரையில் எவ்வாறு தோன்றும் என முன்னோட்டம் பார்ப்பதற்காக முயலும்போது நடப்பு படவில்லையிலிருந்து திரைகாட்சியை காண்பிப்பதற்கு உதவுகின்றது
  Compatability  என்ற பகுதியில்உள்ள  வாய்ப்புகள் நடப்பு  கோப்பில் மட்டும் அமைப்பதற்கு பயன்படுகின்றன Use printer metrics for document formattingஎன்ற வாய்ப்பானது கணினியுடன் இணைக்கபட்டுள்ள அச்சுபொறிக்கு ஏற்ப ஒத்திசைவு செய்து  திரையில் காட்சிகளை பிரதிபலிக்கசெய்கின்றது. Add spacing between paragraphs (in current document)என்ற வாய்ப்பானது உரையின் பத்திகளுக்கிடைய  இடைவெளி விடுவதற்கு உதவுகின்றது
 இதன் பின்னர் இடதுபுற பலகத்தின் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய  கட்டளைகளுள் view  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும்  options-Open Office.org-Impress- view  என்ற (படம்-61-3 )திரையில்

படம்-61-3
  Display  என்ற பகுதியில்உள்ள Rulers visible  என்ற வாய்ப்பானது திரையின் இடதுபுறத்திலும் மேல்பகுதியிலும் அளவுகோளை பிரதிபலிக்கசெய்கின்றது. Guides when movingஎன்ற வாய்ப்பானது  குறிப்பிட்ட பெட்டிக்கு வெளியே பணியிடம் முழுவதும் குறிப்பிட்ட பொருளை நகர்த்திடும் போது நமக்கு வழிகாட்டிட பயன்படுகின்றது  இதற்கு பதிலாக மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான   குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திடமுடியும்
All control points in Bézier editorஎன்ற வாய்ப்பானது  தெரிவுசெய்யபட்ட Bézier புள்ளியை பிரதிபலிக்க செய்கின்றது Contour of each individual objectஎன்ற வாய்ப்பானது தெரிவுசெய்யபட்ட பொருளின் Contour  கோட்டினை பிரதிபலிக்க செய்கின்றது
 பிறகு இடதுபுற பலகத்தின் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய  கட்டளைகளுள் grid  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும்  options-Open Office.org-Impress- grid  என்ற (படம்-61-4 )திரையில்

படம்-61-4
   grid  என்ற பகுதியில்உள்ள snap to grid என்ற வாய்ப்பானது நொடிப்பு செய்யவும் visible grid என்ற வாய்ப்பானது திரையில் காண்பிக்கவும் பயன்படுகின்றது
  resolution என்ற பகுதியில்உள்ள synchronize என்ற வாய்ப்பானது திரைத்துல்லியத்தை ஒத்திசைவுசெய்ய பயன்படுகின்றது
  snap என்ற பகுதியில்உள்ள வாய்புகளை நமக்கு தேவையானவாறு பயன்படுத்தி கொள்ளலாம் அதற்கு பதிலாக இந்த செயல்களுக்கான Snap to Object Points , Snap to Object Border ,Snap to Page  Margins,Snap to Guides என்பது போன்றவைகளில்  தேவையான குறும்படத்தை மட்டும்  கருவிபட்டியிலிருந்து தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் செயல்படுத்தி கொள்ளலாம்
வாடிக்கையாளர் விரும்பியவாறு  கட்டளை பட்டையில்  மாறுதல் செய்வதற்கு
 இதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => customization=> என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்– 61-5 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்  அதில் menu என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்– 61-5
  உடன் விரியும் menu என்ற தாவியின் திரையில்  புதிய கட்டளை பட்டியலை சேர்ப்பதற்கு new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  

 படம்– 61-6
  உடன் new menu  என்ற (படம்– 61-6)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் menu name என்பதில் நாம் உருவாக்கி சேர்க்க போகும் கட்டளைக்கு பெயர் ஒன்றை உள்ளீடு செய்க இந்த கட்டளையானது  எங்கிருக்கவேண்டும்  என்பதற்காக menu position என்பதன் கீழுள்ள வாய்ப்பில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானையும் customizeஎன்ற உரையாடல் பெட்டியிலும் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக 
  நடப்பு கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளை இடம் மாற்றம் செய்ய customizeஎன்ற உரையாடல் பெட்டியிலுள்ள move என்ற கட்டளை பயன்படுகின்றது 
 நடப்பிலிருக்கும் பட்டியில் புதிய கட்டளையை சேர்த்திட customizeஎன்ற உரையாடல் பெட்டியில் உள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்– 61-7 ல் category என்பதன் கீழ் தேவையான வகையையும் commands என்பதில் தேவையான கட்டளையையும் தெரிவுசெய்துகொண்டு add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   மேலும் இவ்வாறு தேவையான கட்டளைகளையும் வகைகளையும் தெரிவுசெய்யும்போது ஒவ்வொருமுறையும் add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இறுதியாக close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. 

படம்– 61-7
 வாடிக்கையாளர் விரும்பியவாறு  கருவி  பட்டையில்  மாறுதல் செய்வதற்கு
அவ்வாறே கருவிபட்டையையும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் முடியும் அதற்காக  கருவிபட்டையின் முடிவிலிருக்கும் அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பட்டையில் Customize என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்View => Toolbars => Customize => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக  அல்லது  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => Customize => Toolbars tab => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக  உடன் படம்– 61-8 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று Toolbars என்ற  தாவியின் திரையுடன் தோன்றிடும்
 
படம்– 61-8
இதில் மேலே கட்டளை பட்டையில் கூறியவாறு  செயற்படுத்தி கொள்க.
மிகமுக்கியமாக  குறும்படங்களுடன் கூடிய பொத்தான்களே இதிலுள்ளன அதனால்        அவ்வாறான குறும்படங்களுடன் கூடிய பொத்தான்களை உருவாக்கிட அல்லது  அவைகளை மாறுதல் செய்திடுவதற்காக Modify => Change icon=>என்றவாறு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக

படம்– 61-9
உடன் தோன்றிடும் Change iconஎன்ற (படம்– 61-9) உரையாடல் பெட்டியில் தேவையான உருவத்தை தெரிவுசெய்து  okஎன்ற பொத்தானை சொடுக்குவதன்மூலம் ஒதுக்கீடு செய்து கொள்க. புதியதாக உருவாக்குவதற்கு எனில் import என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
வாடிக்கையாளர் விரும்பியவாறு விசைப்பலகையின் விசைகளை ஒதுக்கீடு செய்வதற்கு
  அதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => customization => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்– 61-10 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்  அதில் keyboard என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

   படம்– 61-10
உடன் விரியும் keyboard என்ற தாவியின் திரையில் impress என்ற வாய்ப்பின் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க.  பின்னர் கீழே functions என்ற பகுதியிலுள்ள category என்பதன்கீழ் insertஎன்பதை தெரிவுசெய்து கொண்டு functions  என்பதன் கீழுள்ள duplicate slides என்பதை  தெரிவுசெய்க உடன்keys  என்பதன் கீழ்insert  என்பது சேர்ந்திருக்கும்
   இந்நிலையில் மேலே shortcutkeys என்ற பகுதியின் கீழ்insert duplicate  slides என்பதை தெரிவுசெய்து கொண்டு முதலில் modify என்ற பொத்தானையும்  பின்னர் ok  என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக .
   இவ்வாறே நாம் விரும்பியவாறு மற்ற விசைகளுக்கும் குறுக்கு வழி கட்டளைகளை ஒதுக்கீடு செய்து சேமித்துகொள்க. நடப்பிலிருக்கும் குறுக்கு வழி விசையை மாற்றியமைத்திடload என்ற பொத்தானும்  மறுஅமைவுசெய்திட reset என்ற பொத்தானும் பயன்படுகின்றன.
 ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கட்டளைகளை பயன்படுத்தி மேலும் கூடுதலான விரிவாக்கத்தை http://extensions.services.openoffice.org/.என்ற இணையபக்கத்தில் தேடிபிடித்து பதிவிறக்கம்செய்து  கொள்க பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => Extension Manager => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்– 61-11 ல் உள்ளவாறு Extension Manager என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான விரிவாக்கத்தை தெரிவுசெய்து கொண்டு  Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  ஓப்பன் ஆஃபிஸில் நிறுவிகொண்டு கூடுதல் பயன் பெறுக 
படம்– 61-11

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி செய்தல், மின்னஞ்சல் செய்தல்

முந்தைய தொடர்களில் கூறப்பட்டவாறு உருவாக்கிய ஒரு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை மேலே கருவிபட்டையிலுள்ள அச்சிடுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் அச்சிடுமாறு செய்யமுடியும் . ஆனால் இந்த ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை அச்சிடும்போது பின்புலவண்ணம் போன்றவைகளையும் கணக்கில் கொண்டு அச்சிட்டால் மட்டுமே அச்சிட பட்ட ஆவணங்களிலும் நாம் எதிர்பார்த்தவாறு  தோற்றம் இருக்கும்  அதனால்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Tools => Options => Open Office.org  => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-60-1 
உடன்  படம்-60-1-ல்   உள்ளவாறு தோன்றிடும் Open Office.org-Print என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளை தெரிவு செய்து கொள்க. மேலும் கூடுதலாக Convert colors to grayscaleஎன்ற தேர்வுசெய் பெட்டியையும் தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மாறுதல்களை சேமித்துகொள்க
பிரௌவ்ச்சராக அச்சிடுதல்
பிறகு  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன் பின்னர் தோன்றிடும் Properties என்ற திரையில் படுக்கைவசமாகவா கிடைவசமாகவா(portrait or landscape) என மிகச்சரியாக தெரிவுசெய்துகொள்க
 பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Optionsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு தோன்றிடும் Optionsஎன்ற திரையின் pages என்ற பகுதியில் Brochure , Right page, Left page ஆகிய வாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுதல்
  ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்புதிரையில் மேலே கருவிபட்டையிலுள்ள பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் அதற்கு பதிலாக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File =>Export as PDF => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் PDF option என்ற படம்-60-2ல்உரையாடல் பெட்டியில் உள்ள ஐந்துவகை தாவியின் பொத்தான்களின் வாய்ப்புகளில் தேவையான தாவியின் பக்கத்திற்குசென்று அதில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு இறுதியாக Exportஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 

 
 படம்-60-2
மிகமுக்கியமாக securityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள set open password ,set permissions password ஆகிய  பொத்தான்கள்  அனுமதிபெற்றவர்கள்மட்டுமே திறந்து பயன்படுத்திடமுடியும் என்ற பாதுகாப்புசெய்வதற்காக  மிக முக்கிய பங்காற்று கின்றன  இந்த பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியதும் தோன்றும்   set open password என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான கடவு சொற்களை இரண்டுமுறை உள்ளீடுசெய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதேsecurityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை தேவையானவாறு  தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
ப்ளாஷ் கோப்பாக ஏற்றுமதிசெய்தல்
இம்ப்பிரஸின் முக்கியபயனே அதன்உள்ளடக்கங்கள் அசைவூட்டம் செய்வதில்தான் உள்ளது நாம் மேலேகூறியவகையில் இம்ப்பிரஸின் கோப்பினை ஏற்றுமதிசெய்தால் மற்றஅலுவலக கோப்புபோன்று இதுவும் இருக்குமே தவிர அதில் அசைவூட்டம் ஏதும் இருக்காது.(தேவையெனில் இதனை திரையில் காண்பதற்கு அடோப் ப்ளாஷ் பிளேயரை  http://www.adobe.com/products/flashplayer/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க ) 
    பார்வையாளர்கள் அசைவூட்டத்துடன் இந்த இம்ப்பிரஸின் கோப்பினை காணவும் பயன்படுத்திடவும்   மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் File Formatஎன்பதன்கீழ் Macromedia Flash (SWF) (.swf)என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவு செய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க 
இணையபக்கமாக உருமாற்றுதல்  
.பார்வையாளர்கள் இதே கோப்பினை இணையபக்கமாக பயன்படுத்திட மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் file type என்பதன்கீழ் HTML Documentஎன்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டபின் தோன்றிடும் திரையில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க
மின்னஞ்சல்செய்தல்
நாம் உருவாக்கிய ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Send =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக


படம்-60-3
 உடன் படம்-60-3-ல் உள்ளவாறு விரியும் சிறுபட்டியில் முதல்வாய்ப்பு எந்த அலுவலகபயன்பாட்டினை பயன்படுத்திகொண்டிருக்கின்றோமோ அதே கோப்பாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான  பொதுவான  கட்டளையாகும்
   இரண்டாவதாக உள்ள  E-mail as OpenDocument Presentationஎன்ற வாய்ப்பு கட்டளையானது பெறுபவர் இம்ப்பிரஸ் கோப்பாகவே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது 
 E-mail as Microsoft PowerPointஎன்ற மூன்றாவது வாய்ப்பு பெறுபவர் மைக்கரோசாப்ட் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்துவர்எனில் நாம் அனுப்பும் இம்ப்பிரஸ் கோப்பானது .PPTஎன்ற பின்னொட்டுடன் உருவாக்கி அனுப்படும் நமக்கும் இந்த கோப்பினை கையாளுவதற்கு சிரமமில்லாமல்   இருக்கும் 
  மூன்றாவதாக உள்ள E-mail as PDF,என்ற வாய்ப்புிற்கான கட்டளையானது எந்தவொரு பயனாளரும் சுலபமாக திறந்து பார்ப்பதற்கான கோப்பாக உருவாக்கி அனுப்பிடுவதற்கான வாய்ப்பாகும்
 நிற்க இந்த மின்னஞ்சலிற்காக உருவாக்கபடும் *.OTP,*.PPT ஆகிய வகை கோப்புகள் கணினி நினைவக்ததில் சேமிக்காது மின்னஞ்சல் அனுப்புவதற்காக மட்டும் தற்காலிகமாக உருவாக்கி அனுப்பபடும்  என்ற செய்தியை கவனத்தில் கொள்க 
  ஓப்பன்ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உருவாக்கிய கோப்பினை மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட்டில் திறந்து கையாளுவதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Save As=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Save As என்ற திரையில் File Type என்பதன்கீழ் Microsoft PowerPoint 97/2000/XP (.ppt). என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-60-4
உடன் படம்-60-4-ல் உள்ளவாறு எச்சிரிக்கை செய்வதற்காக தோன்றிடும்   openoffice.org3.0 என்ற சிறுஉரையாடல்பெட்டியில்keep current format  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன்மூலம்  சேமித்துகொள்க .

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-59-படவில்லைகளின் காட்சி தொடர்ச்சி

படவில்லைகளின் மாறுதல்(Slide Transition): படவில்லைகளின் காட்சியை தொடர்ச்சியாக அமையுமாறு செய்தலே மாறுதல்(transitions)ஆகும் .
ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் திரையின் செயல்பலகத்தில் உள்ள Slide Transition என்பதை தெரிவு செய்து சொடுக்குக உடன் Slide Transition என்ற  (படம்-59-1 )தலைப்பில் செயல்பலகம்ஆனது மாற்றமாகி தோன்றும்  பின்னர் படவில்லை களின் பலகத்தில் அல்லது படவில்லைகளின் தொகுப்பு காட்சிதிரையில்  தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொணடு Slide Transition என்ற தலைப்பில் உள்ள செயல்பலகத்தில் Apply to selected slidesஎன்ற பட்டியலில் தேவையான வாய்ப்பையும்   Apply to selected slidesஎன்ற பகுதியின் கீழ்உள்ள speedஎன்பதற்கு அருகில் உள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பையும் அவ்வாறே soundஎன்பதற்கு அருகில் உள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் Loop until next soundஎன்ற தேர்வுசெய் பெட்டி தானாகவே தெரிவுசெய்துகொள்ளும்
   இதனால் அடுத்த மாறுதல் செய்யும் வரை தொடர்ந்து இதுசெயலில் இருக்கும் அதனை தொடர்ந்து இம்மாறுதல் தேவையில்லையெனில் இதில் தெரிவுசெய்ததை நீக்கம் செய்துகொள்க. பின்னர் advanceஎன்ற பகுதியின் கீழ்உள்ள on mouse click , automatically afterஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க அதன் பின்னர்இந்த மாறுதல்கள் அனைத்து படவில்லைகளிலும் தேவையெனில் Apply to All Slidesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  படம்-59-1
பின்னர் Slide Showஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நடப்பு படவில்லையிலிருந்து படவில்லைகாட்சி யானது திரையில் தோன்றிடும். Automatic previewஎன்ற தேர்வுசெய் பெட்டி  தெரிவுசெய்திருந்தால் நாம்செய்த மாறுதல்கள் உடனுக்குடன்  படவில்லைகாட்சியாக  திரையில் கண்டு சரிசெய்து கொள்ள முடியும். அவ்வாறே Playஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கி உடனுக்குடன்  படவில்லை காட்சியாக  திரையில் கண்டு சரிசெய்து கொள்ள முடியும் Apply to selected slidesஎன்ற பட்டியலில் No Transition என்ற வாய்ப்பை தெரிவு செய்து படவில்லைகளின் மாறுதலை(Slide Transition)  நீக்கம் செய்து கொள்ளமுடியும்  
 படவில்லையின் அசைவூட்டம் (slide animation)
 இதுவும் படவில்லை மாறுதல்(Slide Transition)  போன்றதே ஆனால் இதன்மூலம் படவில்லைக்குள்ள உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் அசைவூட்டத்தினை அமைத்திடலாம்  அதனால் இதனை அமைக்குமுன் தனிப்பட்ட படவில்லையை  சாதாரண காட்சிதிரையில் தெரிவுசெய்து கொண்டு அதனுள் இருக்கும் உரை அல்லது படத்தை தெரிவுசெய்து கொள்க. உடன் நாம் தெரிவுசெய்த உரை அல்லது படத்தை சுற்றி பச்சை வண்ண கைப்பிடி யொன்று தோன்றும் பின்னர் Custom Animationஎன்பதை தெரிவு செய்து சொடுக்குக உடன்  Custom Animation என்ற தலைப்பில் செயல்பலகம் ஆனது மாற்றமாகி தோன்றும் அதில் modify effect என்ற பகுதியின் கீழ்உள்ள addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-59-2
உடன் Custom Animationஎன்ற (படம்-59-2 ) உரையாடல் பெட்டியொன்று திரையில்  தோன்றிடும் இதில்
 Entranceஎன்பது ஒரு படவில்லை காட்சி முடிந்து அடுத்த படவில்லை காட்சி எவ்வாறு தோன்றிடவேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும் 
Emphasisஎன்பது ஒரு படவில்லைகக்குள் உள்ள உரைக்கு தேவையான அடிப்படை அசைவூட்டத்தை அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
 Exit என்பது ஒரு படவில்லை காட்சி எவ்வாறு முடிவடைய வேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
 motion pathஎன்பது ஒரு படவில்லை யிலுள்ள பொருளானது அசைவூட்டத்தின் போது எங்கெங்கெல்லாம் செல்லவேண்டுமென அமைப்பதற்கானவாய்ப்புகளுள்ள தாவியாகும்
 misc effects மேலே கூறியவாறுஅல்லாத பொதுவான அசைவூட்டத்தினை அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
இவைகளிந் மூலம் தேவையான அசைவூட்டங்களை அமைத்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க
 படம்-59-3
பிறகு Custom Animation என்ற தலைப்பில் உள்ள செயல்பலகத்தில் effects என்பதற்கு அருகிலுள்ள முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் effects options என்ற(படம்-59-3 ) உரையாடல் பெட்டியொன்று திரையில்  தோன்றிடும்இதில்
effect என்பது அசைவூட்டு பாதை ,ஒலி ஆகியவை எவ்வாறு இருக்கவேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
 timimings என்பது அசைவூட்டத்திற்கான காலஅளவு எவ்வளவாக இருக்கவேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
text animation என்பது உரைகளுக்கான அசைவூட்டத்தில் தனித்தனி எழுத்தாகவா   குழுவாகவா எனஅமைப்பதற்கானவாய்ப்புகளுள்ள தாவியாகும்
இவைகளை கொண்டு தேவையான அசைவூட்டங்களை அமைத்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க
இப்படவில்லைகளில் அமைக்கபட்ட அசைவூட்டங்கள் ஏதேனும் தேவையில்லை என கருதுபவைகளை தெரிவுசெய்துகொண்டு  Removeஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி அதற்கான அசைவூட்டத்தை மட்டும் நீக்கம் செய்து கொள்க
இடைமுக கட்டளைகள் go to previous slide, go to next slide, go to first slide, go to last slide, go to page அல்லது object , go to document, play sound, அல்லது run a macro. ஆகியவை படவில்லைகளின் அசைவூட்டத்தின்  போது  இடையிடையே மாற்றியமைப்பதற்கான கட்டளைகளாகும்  இதனை செயல்படுத்திட  படவில்லையில் தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழிபட்டியில்  Interactionஎன்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Interactionஎன்ற (படம்-59-4 )உரையாடல்பெட்டியில் Action at mouse clickஎன்பதற்கருகில்உள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக
  படம்-59-4

இவ்வாறு படவில்லைகளில் அசைவூட்டங்கள் அமைத்தபின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Slide Show => Slide Show=>என்றவாறு கட்டளைகளை  அல்லது F5 , F9. ஆகிய செயலி விசையில் ஒன்றை  அல்லது மேலே கருவிபட்டையில் Slide Showஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி திரையில் படவில்லைகளின் அசைவூட்டத்தை காணலாம்

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி

  எந்தெந்த படவில்லைகள் எந்த வரிசைகிரமத்தில் படவில்லைகாட்சியாக திரையில் காண்பிக்கப் படவேண்டும் ,
 இந்த படவில்லைக்காட்சியானது தானாகவே இயங்கவேண்டுமா அல்லது  நாம் விரும்பியவாறு இயங்கவேண்டுமா? ,
 படவில்லைகாட்சியில் இருபடவில்லைகளுக்கு இடையேயான இடைவெளிநேரம் எவ்வளவு இருக்கவேண்டும்,
 படவில்லைகாட்சியில் படவில்லைகளின் அசைவூட்டம் எவ்வாறு அமைய வேண்டும்,
 படவில்லைகாட்சியின்போது சுட்டியின் பொத்தானை சொடுக்குவதால் என்ன நிகழ வேண்டும்
  என்பது போன்ற செயல்களை ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உள்ள ஒரு சில கருவிகளை பயன்படுத்தி நம்மால் அமைத்து கொள்ளமுடியும். இவ்வாறான பெரும்பாலான செயல்கள் படவில்லைகளின் தொகுப்பு காட்சித் (slide sorter view) திரையில் செயல்படுத்தி கொள்ளமுடியும். அதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து View => Slide Sorter=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. 
  அல்லது ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் பணியிடத்தின்(workspace) மேல் பகுதியில்  உள்ள Slide Sorterஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன்  Slide Sorter view என்ற காட்சி திரையின் பணியிடத்தில் அனைத்து படவில்லைகளும் காட்சியளிக்கும்
 படவில்லை காட்சியை திரையில் காண்பிப்பதற்கு முன் அதற்கான அடிப்படை அமைப்பை ஒவ்வொரு படவில்லைக்கும் உருவாக்கிடவேண்டும் அதற்காக முதலில் அவைகள் என்னென்னவென தெரிந்துகொள்வோம் மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Slide Show Settings=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.  உடன்  Slide Showஎன்ற (படம்-58-1)உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில்

 படம்-58-1
  Rangeஎன்ற பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் எந்தெந்த படவில்லைகள் எந்தவரிசையில் படவில்லைகாட்சியில் இருக்கவேண்டுமென  தொகுத்திட உதவுகின்றது
  1.All slidesஎன்ற வாய்ப்பு  மறைக்கபட்ட படவில்லையைத் தவிர மிகுதி அனைத்தையும்  வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
  2.From என்ற வாய்ப்பு நாம் தெரிவுசெய்திடும் படவில்லையிலிருந்து  மிகுதியை வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
  3.Custom Slide Showஎன்ற வாய்ப்பு நாம் விரும்பிய வகையில் படவில்லைகள் அனைத்தையும்  வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
   Typeஎன்ற பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் படவில்லைகாட்சியின்போது படவில்லைகள் எவ்வாறு காட்சியளிக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
  1.Defaultஎன்ற வாய்ப்பு படவில்லைகாட்சி முழுத்திரையிலும் தெரியுமாறும்  ஓப்பன் ஆஃபிஸின் கட்டுபாடு இல்லாமலேயே கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை  காண்பித்து காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது
  2.Windowஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியானது   ஓப்பன் ஆஃபிஸின் கட்டு பாட்டுடன்   கடைசி படவில்லைவரை   படவில்லைகாட்சியை காண்பித்து காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது.
  3.Autoஎன்ற வாய்ப்பு   படவில்லை காட்சி முடிந்தவுடன் கடைசி படவில்லையில் சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் முதல் படவில்லையிலிருந்து கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை  காண்பிக்குமாறு அமைத்திட பயன்படு கின்றது
  Optionsஎன்ற பகுதியில் பின்வரும் வாய்ப்புகள் உள்ளன
  1.Change slides manuallyபடவில்லை காட்சியில் படவில்லைகளுக்கு இடையில் காலஇடைவெளியானது  தானாகவே அமைக்கபட்டிருந்தாலும் அதனால் படவில்லையில் மாறுதலும்  தானாகவே ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இந்த வாய்ப்பு உதவுகின்றது
  2.Mouse pointer visible என்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
  2.Mouse pointer as penஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது அந்த காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில்  பேனா போன்ற உருவத்துடன் பிரதிபலிக்கசெய்கின்றது
  3.Navigator visibleஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது வழிகாட்டியை திரையில்   பிரதிபலிக்கசெய்கின்றது
  4.Animations allowedஎன்ற வாய்ப்பு படவில்லையின் அனைத்து  சட்டகத்திலும் அசைவூட்டத்தை செயல்படுத்துகின்றது இதனை தெரிவுசெய்யவில்லையெனில் முதல்படவில்லையில் மட்டும் அசைவூட்டத்தை அனுமதிக்கும்
  5.Change slides by clicking on backgroundஎன்ற வாய்ப்பு படவில்லை காட்சியின்போதே அடுத்த படவில்லையின் பின்புலத்தை மாறுதல் செய்ய பயன்படுகின்றது
  6.Presentation always on top என்ற வாய்ப்பு மற்ற பயன்பாடுகளின் சாளரம் திரையில் மேல்பகுதியில் தோன்றுவதை தவிர்ப்பதற்காக பயன்படுகின்றது
   Multiple displays என்ற பகுதியின் வாய்ப்புகள்  ஒன்றுக்கு மேற்பட்ட திரையில் ஓரே சமயத்தில் படக்காட்சியை காண்பிக்குமாறு அமைத்திட பயன்படுகின்றது
 படவில்லையை படவில்லைக்காட்சியின்போது மறைத்திட
  ஒருசில படவில்லைகளை குறிப்பிட்ட படவில்லைக்காட்சியில் காண்பிக்க வேண்டாம் என விரும்பிடும்போது  முதலில் படவில்லைகளின் பலகத்தில்(slide pane )அல்லது  படவில்லைகளின் தொகுப்புத்திரையில்  தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொள்க  பின்னர் கருவிபட்டியிலுள்ள Hide Slideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக 
அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Hide Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
  அல்லது மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Hide Slide=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. 
  உடன் குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியிலிருந்து மாறைக்கபட்டுவிடும்
மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்காட்சியில் காண்பித்திட
  மேலே கூறியவாறு மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்  காட்சியில் காண்பிக்க விரும்பிடும்போது  முதலில் படவில்லைகளின் பலகத்தில் அல்லது  படவில்லைகளின் தொகுப்புத்திரையில்  தேவையான படவில்லையை தெரிவு செய்து கொள்க  பின்னர் கருவிபட்டியிலுள்ள ShowSlideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
   அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Show Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
  அல்லது மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Show Slide=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியில் சேர்க்கபட்டுவிடும்
வாடிக்கையாளர் விரும்பியவாறு படவில்லைகாட்சியை அமைத்திட
  நாம்விரும்பியவாறு படவில்லைகாட்சி திரையில் தோன்றுவதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Custom Slide Show=> என்றவாறுகட்டளை களை செயற்படுத்துக.   உடன் தோன்றிடும் Custom Slide Show என்ற (படம்-58-2) உரையாடல் பெட்டியில்  newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 படம்-58-2
பின்னர் விரியும் define Custom Slide Show என்ற (படம்-58-3)உரையாடல் பெட்டியில்  படவில்லைக்காட்சிக்கான பெயரை name என்ற பகுதியில்தட்டச்சு செய்துகொண்டு Existing slides என்பதன் கீழுள்ள பட்டியலில் தேவையானவற்றை தெரிவுசெய்து >> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து படவில்லைகள் selected slides என்ற பகுதியில் சென்று சேர்ந்துவிடும்  selected slides என்ற பகுதியில்  தேவையற்ற படவில்லை ஏதேனுமிருந்தால் அதனை தெரிவுசெய்து கொண்டு << என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையற்றது பழைய நிலைக்கே சென்றுவிடும் அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

படம்-58-3
பின்னர் Custom Slide Show என்ற (படம்-58-2)உரையாடல் பெட்டியில்  edit,delete,copy ஆகிய பொத்தான்களை பயன்படுத்தி  படவில்லை கோப்பில் தேவையான மாறுதல் செய்துகொள்க   பிறகு இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Use Custom Slide Showஎன்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு   பட்டியலிலுள்ள படவில்லையில் படவில்லைக்காட்சிக்கான தொடக்க படவில்லையை மட்டும் தெரிவு செய்து கொண்டு startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்விரும்பிய படவில்லையிலிருந்து படவில்லைக்காட்சியானது திரையில் காண்பிக்க தொடங்கும்  இந்த படவில்லைக்காட்சி முடிவடைந்த பின்னர் Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்து கொள்க

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-57-படவில்லையை சேர்த்தலும் வடிவமைத்தலும் தொடர்ச்சி

உருமாதிரியிலிருந்து(outline) படவில்லையை உருவாக்குதல்
  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் உரையை அடிப்படையாகவைத்து பின்வரும் மூன்று வழிகளில் படவில்லைக்கான உருமாதிரியை(outline) உருவாக்கிவிட்டால் அதன்பின்னர் அதிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லையை உருவாக்குதல் எளிதான செயலாகும்
   1.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு உருமாதிரியை(outline) அனுப்பிவைப்பது
   2,ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு தானியங்கி சுருக்க விவரமாக அனுப்பிவைப்பது
   3.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து நகலெடுத்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் ஒட்டுவது
1.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு உருமாதிரியை(outline) அனுப்பிவைப்பது
இயல்புநிலை பத்திதலைப்பு பாவணையில் உரையானது ரைட்டரில் இருந்தால் இந்த தலைப்புகளையே படவில்லைகளின் உருமாதிரியாக(outline) உருவாக்கி கொள்ளமுடியும்
அதற்காகமுதலில் அவ்வாறான உரைத்தொகுப்பை தெரிவுசெய்துகொண்டு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் மேலே கட்டளை பட்டையிலிருந்து File =>Send =>Outline to Presentation=> என்றவாறு(படம்-57-1) கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக.

 படம்-57-1
 உடன் புதிய படவில்லைகள் உருவாகி outline என்ற தாவியின் திரையுடன் தோன்றும் பின்னர்  normal என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லைகளின் தொகுப்பு பலகத்துடன் திரைத்தோற்றம் (படம்-57-2)அமையும் 


 படம்-57-2
  இந்த படவில்லையின் உள்ளடக்கம் சரியாக  அமைவதற்காக  இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து insert=>expanding slides=>அல்லது duplicating slides=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லைகளை புதியதாக சேர்த்து இதன் உள்ளடக்கங்களை மாற்றி,திருத்தியமைத்து (படம்-57-3)கொள்க


 படம்-57-3
 2.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு தானியங்கி சுருக்க விவரமாக அனுப்பிவைப்பது
தலைப்பையும் அதனுடன் துனைத்தலைப்புகளையும் சேர்த்து படவில்லையாக உருவாக்குவதற்கு இந்த வழிமுறை பயன்படுகின்றது  அதற்காக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் மேலே கட்டளை பட்டையிலிருந்து File => Send => AutoAbstract to Presentation=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
 உடன் படம்-57-4-ல் உள்ளவாறு Create AutoAbstractஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் include outline level என்பதில் வில்லைகளின் தலைப்பு எத்தனை என்றும் Subpoints per levelஎன்பதில் எத்தனை பத்திகள் துனைத்தலைப்பாக அமையவேண்டும் என்றும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  


 படம்-57-4
உடன் படவில்லைகளின் தொகுப்பு பலகத்துடன் திரைத்தோற்றம்  (டம்-57-2) அமையும் 
  இந்த படவில்லையின் உள்ளடக்கம் சரியாக  அமைவதற்காக  இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து insert=>expanding slides=>அல்லது duplicating slides=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லைகளை புதியதாக சேர்த்து இதன் உள்ளடக்கங்களை மாற்றி,திருத்தியமைத்து (படம்-57-3) கொள்க
 3.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்துநகலெடுத்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் ஒட்டுவது
  காலியான புதிய படவில்லை யொன்றை  உருவாக்கிகொள்க அதில் Click add to Title, என்ற பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு ரைட்டரில் தேவையான தலைப்பு உரையை நகலெடுத்து வந்து ஒட்டி கொள்க. அவ்வாறே Click add to Textஎன்ற பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு துனைதலைப்புகளையும்  நகலெடுத்து வந்து ஒட்டி கொள்க. இவ்வாறு செய்யும்போது உரைகளின் வரிசை மாறியமையும்அதனால்  Demote என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக அவற்றை சரிசெய்து அமைத்து கொள்க
 இவ்வாறு நம்மால் புதியதாக உருவாக்கப்பட்ட படவில்லைகளை வடிவமைத்திடமேலே கட்டளை பட்டையிலிருந்துFormat => Page=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Page Setupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்Page Setup என்ற உரையாடல் பெட்டியில் நாம் விரும்பியவாறு பத்தியை வடிவமைத்துகொள்க
  கருத்துரைகளை சேர்த்தல்  (add Comments)
 குறிப்பிட்ட படவில்லையைபற்றிய கருத்தரையை இதனுடன் சேர்த்தால் மற்றவர்கள் தொடர்ந்து இந்த படவில்லையை மேம்படுத்துவதற்கு முடியும் அதற்காகமேலே கட்டளை பட்டையிலிருந்து insert=>Comment=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக 

  படம்-57-5-
  உடன் படம்-57-5-ல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து இந்த கருத்துரைக்கு வெளியே இடம்சுட்டியை வைத்து சொடுக்குக.
 இவ்வாறு ஒருபடவில்லையில்கருத்துரை(Comments) உருவாக்கபட்டபின் அதில் இடம்சுட்டியை வைத்து  சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக


  படம்-57-6
பின்னர் விரியும்சூழ்நிலை பட்டியிலிருந்து (படம்-57-6) தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக இந்த கருத்துரையை வடிவமைப்பு செய்துகொள்க இந்த கருத்துரை  தேவையில்லையெனில் நீ்க்கம் செய்யவும்முடியும்
  மேலும் இந்த கருத்துரை(Comments)என்ற பெட்டியின்  கீழேஇடதுபுறமூலையில் உள்ள சிறியமுக்கோன வடிவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் பட்டியிலிருந்து deleteஎன்ற கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்கி நீக்கம் செய்யமுடியும் அவ்வாறே reply என்ற கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்கி மற்றவர்களின் கருத்துரைக்கு பதிலிருக்கமுடியும்
 குறிப்பை சேர்த்தல் (add notes)
படவில்லையில் மேலும் கூடுதலான தகவலை notesஎன்ற வாய்ப்பின்மூலம் வழங்க முடியும். ஆனால் இந்த குறிப்பு படவில்லை காட்சியின்போது திரையில் காண்பிக்காது இதனை உருவாக்குவதற்காக notesஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்click add notes என்ற பெட்டியொன்று (படம்-57-7) படவில்லைக்கு கீழ்பகுதியில் தோன்றிடும்


 படம்-57-7
 அதில் தேவையான குறிப்பை தட்டச்சு செய்தபின் normalஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரணகாட்சிதிரைக்கு மாறிக்கொள்க.
இந்த குறிப்பு பகுதியை வடிவமைப்பு செய்திட மேலேகட்டளைபட்டையிலிருந்துView => Master => Notes Master=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக 
  பின்னர் தோன்றிடும் திரையின் add notes என்ற பகுதியில் இடம்சுட்டி பிரதிபலிக்கும் அதன்பின்னர் Format => Page=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது குறிப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Page Setupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
  பின்னர் தோன்றிடும்Page Setup என்ற உரையாடல் பெட்டியில் நாம்விரும்பியவாறு குறிப்பு பத்தியை வடிவமைத்துகொள்க


 படம்-57-8
 இதனை அச்சிட்டு பெறுவதற்கு மேலே  கட்டளைபட்டையிலிருந்து File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் தோன்றிடும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்genralஎன்ற தாவியின் திரையில்  print document என்பதற்கு அருகிலுள்ள வாய்ப்புகளில்notes என்பது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென(படம்-57-8) உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
   படவில்லை கோப்பினை குறிப்பை பிடிஎஃப்ஆக உருமாற்றம் செய்வதற்கு மேலே  கட்டளை பட்டையிலிருந்துFile => Export as PDF=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக


 படம்-57-9
 பின்னர் தோன்றிடும் Export as PDFஎன்ற உரையாடல் பெட்டியில் generalஎன்ற பகுதியில் Export comments என்பது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென (படம்-57-9)உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 பார்வையாளர்களுக்கு நாம் கூறவிரும்பும் படவில்லைகளில் உள்ள செய்திகளை அச்சிட்டு வழங்குவதற்கு  handoutஎன்ற வசதி பயன்படுகின்றது


 படம்-57-10
  இதனை செயற்படுத்துவதற்காக handoutஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்handout என்ற பெட்டியொன்று படவில்லைக்கு கீழ்பகுதியில்(படம்-57-10) தோன்றிடும்
 அதில தேவையான உரையை தட்டச்சு செய்தபின் normalஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரணகாட்சிதிரைக்கு மாறிக்கொள்க.
  இந்த handout என்ற பகுதியை வடிவமைப்பு செய்திட  மேலேகட்டளை பட்டையி    லிருந்து View => Handout Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் தோன்றிடும் handoutஎன்ற பகுதியில் இடம்சுட்டி பிரதிபலிக்கும்
பின்னர் மேலேகட்டளை பட்டையிலிருந்து Format => Page =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது handout என்ற பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Slide => Page Setup=>என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்Page Setup என்ற உரையாடல் பெட்டியில் நாம்விரும்பியவாறு handout என்பதிலுள்ள பத்தியை வடிவமைத்துகொள்க
இதனை அச்சிட்டு பெறுவதற்கு மேலே  கட்டளைபட்டையிலிருந்துFile => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  அதன் பின்னர் தோன்றிடும் Printஎன்ற உரையாடல் பெட்டியில் print document என்பதற்கருகிலுள்ள வாய்ப்புகளில்handout என்பது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
பிடிஎஃப்ஆக உருமாற்றம் செய்வதற்கு மேலே  கட்டளைபட்டையிலிருந்துFile => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

  

   படம்-57-11
 பின்னர் தோன்றிடும் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Printerஎன்ற பகுதியில்PostScript printerஎன்பதிலுள்ள பட்டியலிலிருந்துAdobe PDF  என்பதை(படம்-57-11) தெரிவுசெய்து கொண்டு இந்தகோப்பின் பண்பியல்பை சரிபார்த்து கொள்க.பின்னர்Rely on system fonts only; do not use document fontsஆகியவை தெரிவுசெய்யபடவில்லை யென்பதையும் Print to fileஎன்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பு தெரிவு செய்யபட்டுள்ளதாவென்பதையும் உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 படம்-57-12
 உடன் படம்(படம்-57-12)  உள்ளவாறு எச்சரிக்கை செய்தியொன்று தோன்றிடும் அதில்yes no  ஆகியவற்றிலொன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் .ps என்ற பின்னொட்டுடன் பிடிஎஃப் கோப்பு உருவாகிவிடும்.

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-56-படவில்லைகளை சேர்த்தலும் வடிவமைத்தலும்



புதிய காலியான படவில்லையொன்றை உள்ளிணைத்தல்
 ஒரு இம்பிரஸ்ஸின் திரையில் இரண்டுவகையில் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியை தோன்றுமாறு செய்யமுடியும் 
 1.படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் ஒரு படவில்லையின் மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியவுடன் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியொன்று(படம்-1) தோன்றிடும்.

படம்-1
2.படவில்லைகளின் பலகத்தில் (slides pane)(படம்-2)அல்லது மேலே கட்டளை பட்டியிலுள்ள  View => Slide Sorter=>.என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியபின் தோன்றிடும் குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view) ஏதேனுமொரு படவில்லையின் குறும்படத்தின்மீது இடச்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியவுடன் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியொன்று (படம்-2) தோன்றிடும்.

படம்-2
  பின்னர் முதல் வகையில் தோன்றிய பட்டியெனில் slides => new slides => என்றவாறும் இரண்டாவது வகையில்  தோன்றிய பட்டியெனில் new slides => என்றவாறும் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
 உடன் இம்ப்பிரஸ் திரையில் புதிய காலியான படவில்லையொன்று உள்ளிணைந்து தோன்றிடும்
ஏற்கனவேயிருக்கும் கோப்பிலிருந்துபுதிய காலியான படவில்லையொன்றை உள்ளிணைத்தல்
 ஏற்கனவேயிருக்கும் கோப்பிலிருந்தும் புதிய படவில்லையொன்றை உள்ளிணைத்து கொள்ளமுடியும் அதற்காக
 1.புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் திறந்துகொணடு அதில் புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  படவில்லைக்கு முந்தைய படவில்லையில் இடம் சுட்டியை வைத்தபின் மேலே கட்டளைபட்டியில் insert => file=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக. 
  2.உடன் தோன்றிடும் கோப்புகளை தேடிடும் insert files என்ற உரையாடல் பெட்டியுள்ள திரையில்  படவில்லை கோப்பு இருக்குமிடத்தை தேடியபின் விரும்பும் படவில்லை களின் கோப்பு கிடைத்தவுடன்  அதனை தெரிவுசெய்துகொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 3.பிறகு தோன்றிடும் Insert Slides/Objectsஎன்ற(படம்-3) உரையாடல் பெட்டியில் இம்பிரஸ் கோப்பின்அருகிலிருக்கும் +என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கிய வுடன் அதிலுள்ள படவில்லைகளின் குறும்படங்கள் வரிசையாக விரிவுபடுத்த படும்
படம்-3
  4.அவைகளுள் தேவையான படவில்லைகளை மட்டும்தெரிவுசெய்துகொண்டு Linkஎன்ற தேர்வுசெய்பெட்டியையும் அதன்பின்OKஎன்ற பொத்தானையும் தெரிவு செய்து சொடுக்குக
ஏற்கனவே யிருக்கும் கோப்பிலிருந்து நகலெடுத்து ஒட்டுதல் வழியில்புதிய படவில்லை யொன்றை உள்ளிணைத்தல்
 நகலெடுத்து ஒட்டுதல் வழியிலும் புதிய படவில்லை யொன்றை ஏற்கனவே யிருக்கும் கோப்பிலிருந்து உள்ளிணைத்து கொள்ளமுடியும்
1. நகலெடுத்திட விரும்பும் படவில்லையுள்ள கோப்பி்ன் மேலே கட்டளை பட்டியிலுள்ள  View => Slide Sorter=>.என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view)  தேவையான படவில்லைகளை தெரிவுசெய்து கொள்க
2.பிறகுமேலே கட்டளைபட்டியிலுள்ள  Edit => Copy=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது மேலேமுதன்மை கருவிபட்டியில்  Copyஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Cஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
3.பின்னர் புதிய படவில்லையை உள்ளிணைக்க வேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை .படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் திறந்துகொள்க
4.அதில் ஒட்டவேண்டிய படவில்லையில் இடம்சுட்டியை வைத்து மேலே கட்டளை பட்டியிலுள்ள  Edit => Paste=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
  அல்லது மேலேமுதன்மை கருவிபட்டியில் Pasteஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+V.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
 இதற்கு பதிலாக புதிய படவில்லையை உள்ளிணைக்க வேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை சாதாரன திரையிலும்  ஏற்கனவே படவில்லைகள் இருக்கும்  இம்ப்பிரஸ் கோப்பினை குறும்படங்களின் காட்சித்  திரையிலும்(slides sorter view)  பக்கம் பக்கமாக திரையில் திறந்து கொள்க
 பிறகு ஏற்கனவே படவில்லைகள் இருக்கும் கோப்பிலிருந்து தேவையான படவில்லைகளை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை பிடித்துகொண்டு அப்படியே பிடியை விடாமல் இழுத்துவந்து புதிய கோப்பில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து பிடித்திருந்த சுட்டியின் பொத்தானை விட்டிடுக.
   உடன் மேலேகூறிய நகலெடுத்து ஒட்டுதல்  இழுத்துவந்து விடுதல் ஆகிய இருவழிகளிலும் புதிய கோப்பில் நாம்விரும்பிய படவில்லைகள் உள்ளிணைந்தவிடும்
படவில்லையை பதிலிடுதல் (Duplicate) வழிமுறையில் புதிய படவில்லையை உள்ளிணைத்தல்
 மேலே கூறிய வழிமட்டுமல்லாது பின்வரும் வழியிலும் புதிய படவில்லையை உள்ளிணைத்து கொள்ளமுடியும்
புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை திறந்துகொண்டு அதன் மேலே கட்டளைபட்டியில் View => Normal=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரான காட்சித்திரையை தோன்றிட செய்க
 பின்னர் அதில் மேலே கட்டளைபட்டியில் Insert=> Duplicate Slide => என்றவாறு(படம்-4) கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய படவில்லை யொன்று இடம்சுட்டி இருக்கும் படவில்லைக்கு அடுத்தாற் போன்று தோன்றிடும்

படம்-4
   குறிப்பு ஒரே படவில்லைக்குள் ஏராளமான தகவல்கள் இருந்தால் பார்வையாளர் களுக்கு எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட படவில்லையின் தகவல்களை தேவையான அளவிற்கு ஒன்றுக்குமேற்பட்ட படவில்லைகளாக இந்த வழிமுறையில் பிரித்து கொள்க
படவில்லைகளை விரிவாக்கம் செய்தல்
ஒரு படவில்லைக்குள் ஏராளமான தகவல்கள் இருந்திடும்போது அவற்றின் எழுத்துரு வின் அளவை  குறைத்து படவில்லையின் தோற்றத்தை மாற்றியமைப்பதற்கு பதிலாக இந்த தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளாக பிரித்து வழங்குவது நன்று அதற்காக மேலே கட்டளைபட்டியில் Insert => Exp and Slide => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அப்படவில்லைக்குள் உள்ள முக்கிய தகவல்கள் தனித்தனி புதிய படவில்லைகளாக பிரிந்து அமையும் 
ஒட்டுமொத்த சாராம்ச படவில்லையை உருவாக்குதல்
ஒரு இம்பிரஸ் கோப்பில் பல்வேறு படவில்லைகளில் கூறப்படும் தகவல்களை தொகுத்து  ஒட்டுமொத்த சாரம்சமாக அக்கோப்பின் முதல் படவில்லையில் வழங்கினால் நன்றாக இருக்கும் என திட்டமிடுவோம் அதற்காக   படவில்லைகளின் பலகத்திரையில் (slides pane)அல்லது  குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view) தேவையான படவில்லைகளை தெரிவுசெய்துகொள்க பின்னர் மேலே கட்டளை பட்டியில் Insert => Summary Slide=>. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அப்படவில்லைகளின்  தலைப்பிலுள்ள முக்கிய தகவல்கள் மட்டும் சேர்ந்து ஒரே படவில்லைக்குள் ஒட்டுமொத்தசாராம்ச வில்லையாக தோன்றிடும்
படவில்லையின் பெயரை மாற்றியமைத்தல்
 பெயர்மாற்றம் செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகுஇந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியெனில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் Rename Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Rename Slideஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக 
 அதன்பின்னர் தோன்றிடும் Rename Slideஎன்ற (படம்-5)உரையாடல் பெட்டியில் நாம் விரும்பியவாறு அந்த படவில்லைக்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்து மாற்றி அமைத்தபின் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5
படவில்லையை வடிவமைத்தல்
வடிவமைப்பு செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையெனில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில்  Slide design என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில்  Slide design என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  

படம்-6
   உடன் தோன்றிடும்Slide design என்ற(படம்-6)  உரையாடல் பெட்டியில் தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்க பிறகு loadஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு உடன்விரியும் load slide design என்ற உரையாடல் பெட்டியின்categories என்பதன் கீழுள்ள Slide design என்ற போன்ற வகைகளில் தேவையானதை தெரிவுசெய்க அவ்வாறு தெரிவுசெய்திடும்போது அவை எவ்வாறு இருக்கும் என  பார்த்து தெரிந்து கொள்ள இதிலுள்ள   more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையின் preview பகுதியில் பார்த்து திருப்தியானபின் ok என்ற பொத்தானையும்  பின்னர் slide designஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்றபொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக
தேவையற்ற படவில்லைகளை நீக்கம் செய்தல்
  நீக்கம்செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையெனில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் Delete Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Delete Slideஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக 

 அல்லது தேவையற்ற படவில்லைமீது இடம் சுட்டியை வைத்து விசைப்பலகை யிலுள்ள del என்ற விசையை அழுத்துக

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-55-கால்க்கின் விரிதாள் வரைபடம் போன்றவைகளை ஒரு படவில்லைக்குள் இணைத்தல்

 சிக்கலான தரவுகளை  ஒரு அட்டவணையாக மட்டுமே இம்ப்பிரஸின்  படவில்லைக்குள் பொதிந்து பிரதிபலிக்க செய்யமுடியும்  அதனால் அத்தரவுகளை  ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் ஒரு பட வில்லைக்குள் அட்டவணையாக உருவாக்கி பிரதிபலிக்க செய்யலாம் அதைவிட. இந்த தரவுகளை ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில்  சிக்கலான கணக்கீடுகளின் விடையையும் தரவுஆய்வையும் உருவாக்கி ஒரு பட வில்லைக்குள்    பொதிந்து காட்சியாக காண்பிக்கமுடியும் ஆனால் இவ்வாறான  சிக்கலான தரவுகளின் கணக்கீடுகளை ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் தனியாக உருவாக்கி கொண்டு அதன்பின்னர் அதனுடைய விளைவுகளை மட்டும் படவில்லைக்குள் பிரதிபலிக்கும்படி செய்வதுதான் நல்லது ஏனெனில் கால்க்கின் விரிதாள் தனியாக படவில்லைக்கு வெளியில் இருக்கும்போது நாம் விரும்பியவாறு கணக்கீடுகளை எப்போது வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டு மானாலும் மாற்றியமைத்துகொள்ளமுடியும்
 படவில்லைக்குள் கால்க்கின் விரிதாள் ஒன்றினை உள்ளிணைத்தல்
 கால்க்கின் விரிதாள் ஒன்றினை உள்ளிணைப்பதற்கு செயல்பலகத்திலுள்ள முன்கூட்டியே கட்டமைக்கபட்ட (படம்-1)இடஅமைவின்(layout) படவில்லை யொன்றை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-1
 உடன் காலியான படவில்லையொன்று திரையில் தோன்றும் அதன் மையபகுதியில் உள்ள விரிதாள் போன்ற குறும்படத்தின் மீது இடம்சுட்டி பிரதிபலி்க்கும்  உடன் சுட்டியை இருமுறை சொடுக்குக.
படம்-2
    உடன் விரிதாளானது படவில்லைக்குள் உள்ளிணைந்து தோன்றும் அதனுடன் (படம்-2) இந்த விரிதாளினை வடிவமைப்பதற்கான வடிவமைப்பு பட்டை (formating bar) கருவிபட்டை(toolbar) விரிதாளிற்கேஉரிய வாய்ப்பாடு பட்டை(Formula bar) ஆகியவையும் தோன்றிடும்  கால்க்கில் அனுபவம் பெற்றவர்எனில் இவை கால்க்கின் விரதாளில் பணிபுரிவதற்கு உதவுபவைஎன தெரிந்துகொண்டு வழக்கமான கால்க்கின் பணிகளை இந்த படவில்லைக்குள் உள்ள விரிதாளில் பணிபுரிவார்கள்.
   இதனுடைய விளிம்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து பிடித்து நகர்த்தி செல்வதன் மூலம் இந்த விரிதாளின் நீள அகலங்களை மாற்றியமைத்திடலாம்.அதன் கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில்  Insert => Sheet =>என்றவாறு  கட்டளைகள செயற்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தாளை இதனுடன் உள்ளிணைத்திடலாம் ஆயினும்  படவில்லைக்குள் எப்போதும் நாம் கடைசியாக பணிபுரிந்து வெளியேறிய பணித்தாள் மட்டுமே பிரதிபலிக்கும்
  வாய்ப்பாடு இல்லாத வெற்றுத்தரவுகளை மட்டும் உள்ளீடுசெய்யும்போது பொதுவாக அதன் வகையை இம்ப்பிரஸ் ஆனது புரிந்துகொண்டு அதனை ஏற்றுகொள்வதற்கு பச்சை வண்ண பொத்தானையும் அல்லது மறுத்தளிப்பதற்கு சிவப்பு வண்ணபொத்தானையும்  திரையில்  பிரதிபலிக்கும் அவற்றுள் தேவையானதை சொடுக்கி தரவுகளின் உள்ளீட்டை நிறைவுசெய்யலாம்  
 இந்நிலையில் இம்ப்பிரஸ்ஆனது தரவுகளை தவறாக புரிந்துகொண்டால்  Format => Cells=> என்றவாறு  கட்டளைகள செயற்படுத்தியபின் தோன்றும் திரையில் தேவையானவாறு சரிசெய்து கொள்க.
   கால்க்கில் ஒவ்வொரு நுன்னறைக்கும் (cell)ஒரு பாவணையென ஏராளமாக இருக்கும் தனித்தனியான கால்க்கின் பாவனையை இம்ப்பிரஸ் ஆதரிக்காது அதனால் Ctrl +A  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பணித்தாள் முழுவதும் ஒரேமாதிரியான பாவணையை தெரிவுசெய்துகொள்வது நல்லது
வரைபடத்தை படவில்லைக்குள் இணைத்தல்
   செயல்பலகத்தில் உள்ளமுன்கூட்டியே கட்டமைக்கபட்ட இடஅமைவை (layout) தெரிவு செய்வது அல்லது மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Chart=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது ஆகியஇருவழிகளில் ஒரு வரைபடத்தை படவில்லைக்குள்(slide) இணைக்கமுடியும்.
  செயல்பலகத்தில் உள்ளமுன்கூட்டியே கட்டமைக்கபட்ட இடஅமைவில் (layout)வரைபடம் உள்ள படவில்லைகளுள் ஒன்றினை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் படவில்லையில் உள்ள வரைபடத்தின் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
  உடன் மாதிரி தரவுகளுடன் வரைபடமொன்று திரையில் தோன்றிடும் அந்த வரை படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக அல்லது  மேலே கட்டளை பட்டையிலிருந்து View => Chart Data Table =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் வரைபடத்திற்கான தரவுகளடங்கிய அட்டவனை இருக்கும் தாள் திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய தரவுகளை உள்ளீடுசெய்துகொள்க
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Chart => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது செந்தர கருவிபட்டை(Standard tool bar) யிலிருந்து வரைபடத்திற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன் மாதிரி தரவுகளுடன் வரைபடமொன்று திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய தரவுகளை உள்ளீடுசெய்துகொள்க.
  பிறகு மேலே கட்டளை பட்டையிலிருந்து View => Toolbars => Main Toolbar => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் Main Toolbarல் Chart Typeஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது மேலே கட்டளை பட்டையிலிருந்து Format => Chart Type=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது படவில்லையில் தோன்றிடும் வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக அதன்பின்னர் விரியும் சூழ்நிலைபட்டியில் Chart Typeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
  உடன் Chart Typeஎன்ற(படம்-3) உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதன் இடதுபுற பலகத்தில் வரைபடத்தின் வகைகளின் பெயர்பட்டியலாக தோன்றும் அவைகளுள் ஒன்றை  தெரிவுசெய்தவுடன் அதிலுள்ள பல்வேறு துனைவகைகளின் மாதிரிவரைபடம் வலதுபுறத்தில் தோன்றும் அவற்றுள் தேவையான வகையை மட்டும் தெரிவு செய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  பிறகு வரைபடத்திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insertஅல்லது Format என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியில் தேவையான வரைடத்தின் உறுப்புகளை சேர்ப்பதற்கான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
   ஒருவரைபடத்தில் chart wall,chart areaஆகிய (படம்-4)இருமுக்கிய கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன அவைகளின் உதவியுடன் வரைபடத்தின் கட்டமைப்பை  நாம்விரும்பியவாறு மாற்றி யமைத்து கொள்ளலாம் 
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Format => Position and Size =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F4என்ற செயலிவிசையை அழுத்துக அல்லது வரை படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Position and Size என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
   உடன் தோன்றிடும் Position and Size என்ற உரையாடல் பெட்டியின் துனையுடன் அல்லது வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் வரைபடத்தை சுற்றி நான்கு மூலைகளிலும் பச்சைவண்ண கைப்பிடிதோன்றிடும் அதனைபிடித்து தேவையானவாறு இழுத்துசெல்வதன் மூலம் வரைபடத்தின் அளவையும் இடத்தையும் மாற்றியமைத்து கொள்க.
 மேலே கட்டளை பட்டையிலிருந்து Format => Chart Area=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Chart Areaஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதன் உதவியுடன்  வரைபடத்தின் பின்புலத்தை தேவையானவாறு மாற்றியமைத்து கொள்க
 படம்-4
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert =>Movie and Sound=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்   திரையில் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு ஒளிஒலி படங்களைஅல்லது இசையை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லை்ககுள் இணைத்துகொள்க
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools =>Gallery=>.  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Gallery.  என்ற திரையில் தேவையானவற்றை  தெரிவுசெய்து சொடுக்கி படவில்லைக்குள் இணைத்துகொள்க
 படம்-5
  இவ்வாறு செய்தவுடன் இம்பிரஸின் திரையில் Media Playbackஎன்ற (படம்-5)கருவிபட்டை தானாகவே இயல்புநிலையில் Drawing என்ற கருவிபட்டைக்கு சற்று மேலே தோன்றிடும் அதன்மூலம் நாம் படவில்லைக்குள் இணைத்தவைகளை முன்காட்சியாக காணலாம்  
   அல்லது மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools=> Media Player=>   என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Media Playerல்  நாம் படவில்லைக்குள் இணைத்தவைகளை முன்காட்சியாக காணலாம்
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Object => OLE object=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Insert OLE object என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் create new என்ற வா்னொலி பொத்தானை தெரிவு செய்து கொண்டு    object type  என்பதன் கீழ் தேவையான வகையை தெரிவுசெய்துok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
   ஏற்கனவே இருக்கும் கோப்பினை இணைப்பதற்கு இதே Insert OLE object என்ற (படம்-6) உரையாடல் பெட்டியில்create from file  என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில்Link to file என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க பின்னர் தேவையான கோப்பை  தேடிபிடித்துதெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
படம்-6
  இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert=> Object=> Formula=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Math objectஎன்ற திரையின் மூலம் படவில்லைக்குள் உருவாக்கிய அட்டவணையில் வாய்ப்பாடுகளை(formula) உருவாக்கி கொள்ளமுடியும்
 எச்சரிக்கை இவ்வாறு மாறுதல் செய்யும்போது எழுத்துருவின் அளவை சரியாக அமைத்துகொள்க.
 இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Fill =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பிறகு தோன்றிடும் திரையின்மூலம் படவில்லைக்குள் ஓப்பன் ஆஃபிஸின்  Draw , HTML , plain text ஆகியவற்றின் கோப்புகளை  இணைத்து கொள்ளமுடியும் நேரடியாக இணைய இணைப்பிருந்தால் URLமுகவரியை உள்ளீடுசெய்தும் இந்த கோப்புகளை ஒரு படவில்லைக்குள்  இணைத்துகொள்ளமுடியும்

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-54-வரைகலைபொருளை (graphic object)வடிவமைத்தல்

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் ஒருபடவில்லையிலுள்ள வரைகலை பொருளில் இருக்கும் கோட்டினை வடிவமைத்தல் ,உரையை வடிவமைத்தல், காலிஇடத்தை நிரப்புதல் ஆகியசெயல்கள் சேர்ந்து அவ்வரைகலையின் பாவனைக்கு (graphics style)காரணமாக அமைகின்றன.
கோட்டினை வடிவமைத்தல்
ஒரு கோட்டினை சாதரணமாக வடிவமைத்திட சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Line and Filling என்ற (படம்-1) கருவிபட்டையிலிருந்து அந்த கோட்டிற்கான பாவனையையும் அகலத்தையும் வண்ணத்தையும் அதனதன் கருவிகளை தெரிவுசெய்து வடிவமைத்து கொள்ளமுடியும். இந்த கருவிபட்டையானது திரையில் தோன்றவில்லையெனில் சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டையிலிருந்து View =>Toolbars =>Line and Filling=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி தோன்றுமாறுசெய்து கொள்க
படம்-1

மேலும் சிறப்பாக ஒரு கோட்டினை வடிவமைத்திட சாளரத்தின் மேல்பகுதி யிலுள்ள கட்டளை பட்டையிலிருந்து Format =>Line=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது தேவையான கோட்டின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சுழ்நிலை பட்டியிலிருந்து Line என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Line and Fillingஎன்ற கருவி பட்டையில் இரண்டாவதாக உள்ள Line என்ற கருவிக்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2
உடன் Line என்ற(படம்-2)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்இது Line, Line Styles, Shadow, Arrow Styles ஆகிய நான்கு தாவிகளின் திரைகளை உள்ளடக்கியதாகும் அவற்றுள் .மாறுதல் செய்வதற்கு விரும்பும் தாவியின் பக்கத்தை திறந்து அதில் தேவையானவாறு தெரிவுசெய்து Add அல்லது modify ஆகியவற்றிலொரு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மாறுதல் செய்துகொண்டு இறுதியாக okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
காலிஇடத்தை நிரப்புதல்
வரைகலைபொருளில் உள்ள காலியான இடத்தில் தேவையான வண்ணத்தை இட்டு நிரப்புவதற்காக சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Line and Fillingஎன்ற கருவிபட்டையி லிருந்து color என்ற கருவியின் கீழிறங்கு பட்டியை விரியசெய்து தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து வடிவமைத்து கொள்ளமுடியும். அதற்கு பதிலாக மேல்பகுதி யிலுள்ள கட்டளை பட்டையிலிருந்து Format =>area=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
படம்-3
உடன் area என்ற(படம்-3)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் இது area ,shadow ,transparency, colours ,gradient ,hatching, bitmaps ஆகிய ஏழு தாவிகளின் திரைகளை உள்ளடக்கியதாகும். அவற்றுள் மாறுதல் செய்வதற்கு விரும்பும் தாவியின் பக்கத்தை திறந்து அதில் தேவையானவாறு தெரிவுசெய்து Add அல்லது modify ஆகியவற்றிலொரு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மாறுதல் செய்துகொண்டு இறுதியாக okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உரையை வடிவமைத்தல்
ஒரு படவில்லையின் வரைகலை பொருளில் உள்ள எழுத்தினை வடிவமைத்திட மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டையிலிருந்துFormat=> Character=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Format => Text=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
இதில் முதல் வகையில் வடிவமைத்தலை பற்றி ஏற்கனவே முந்தைய தொடரில் பார்த்திருக்கின்றோம் தற்போது இந்த தொடரில் இந்த இரண்டாம் வகை வாய்ப்பு வழியாக எவ்வாறு ஒரு படவில்லையின் வரைகலை பொருளிலுள்ள உரையை வடிவமைப்பு செய்வது என காண்போம்
ஒரு படவில்லையின் வரைகலை பொருளுள் தேவையான உரையை தட்டச்சு செய்வதன் மூலம் உள்ளீடுசெய்து அதனை தெரிவு செய்து கொள்க பின்னர் மேல்பகுதியி லுள்ள கட்டளை பட்டையிலிருந்து Format => Text=>என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக அல்லது தேவையான உரையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சுழ்நிலை பட்டியிலிருந்து Textஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-4
உடன் Textஎன்ற(படம்-4)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் இது Text,Text animation ஆகிய இரண்டு தாவிகளின் திரைகளை உள்ளடக்கிய தாகும். இரண்டாவது தாவியின் திரையில் உள்ள வாய்ப்புகலை பயன்படுத்தி வடிவமைத்தல் செய்வதே இம்ப்பிரஸின் முக்கிய செயலாகும் இந்த திரையில் பின்வரும் வாய்ப்புகள் உள்ளன
இதில்Effectஎன்பதன் கீழிறங்கு பட்டியிலுள்ள Blink என்ற வாய்ப்பு எழுத்துகளை விட்டுவிட்டு ஒளிர்வதற்கும் , scroll through என்ற வாய்ப்பு எழுத்துகள் அனைத்தும் உருண்டோடி செல்வதற்கும், scroll back and forthஎன்ற வாய்ப்பு எழுத்துகள் அனைத்தும் முன்பின் உருண்டு செல்வதற்கும், scroll in என்ற வாய்ப்பு எழுத்துகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து உருண்டோடி செல்வதற்கும்பயன்படுகின்றன.இவைதவிரஇதே உரையாடல் பெட்டியிலுள்ளstartinside என்ற வாய்ப்பு உள்பகுதிக்குள் உருண்டு செல்லவும் animation cycle என்ற வாய்ப்பு அசைவுட்டத்திற்கான காலஅவகாசத்தை குறிப்பிடவும் பயன்படுகின்றன.
இதனை பயன்படுத்தி எழுத்துகளுக்கு அசைவுட்டம்(animation) அமைத்தபின் எவ்வாறு செயல்படுகின்றது என பார்த்து தெரிந்து கொள்ள F9 என்ற விசையை அழுத்துக அல்லது மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டையிலிருந்து slide show => slide show=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துகபின்னர் தோன்றிடும் படவில்லை காட்சியில் திருத்தம் செய்வதற்கு escஎன்ற விசையை அழுத்துக
வரைகலையின் பாவனையை வடிவமைத்தல்
மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டையிலிருந்து Format => styles and formating=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது F11என்ற செயலி விசையை அழுத்துக
படம்-5
உடன் தோன்றிடும் styles and formatting என்ற (படம்-5)உரையாடல் பெட்டியில் graphics styles என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.
படம்-6
உடன் விரியும் graphics styles என்ற (படம்-6)உரையாடல் பெட்டியில் text –ல் ஆரம்பித்து indents & spacing முடியவுள்ள 14 தாவிகளின் திரைகளில் தேவையானதை தெரிவுசெய்து சரிசெய்து அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
அல்லது தேவையான வரைகளை உருவை தெரிவுசெய்துகொண்டு styles and formatting என்ற உரையாடல் பெட்டியில் உள்ள new style from selection என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியிபின் விரியும் பட்டியில் தேவையான வாய்ப்பை தெரிவுசெயதுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவைகளை அவ்வப்போது நிகழ்நிலைபடுத்துவதற்காக styles and formatting என்ற உரையாடல் பெட்டியில் உள்ள updation of style என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியிபின் விரியும் பட்டியில் தேவையான வாய்ப்பை தெரிவுசெயதுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-53-படவில்லையிலுள்ள வரைபடங்களை நிருவகிப்பது

 இந்த தொடரில் ஓப்பன் ஃபிஸ் இம்ப்பிரஸின் ஒரு படவில்லைக்குள் கொண்டு வரபட்ட அல்லது உருவாக்கபட்ட படங்களை ,உருவபடங்களை ,வரைபடங்களை இடவலமாகவும் தலைகீழாகவும் சுழற்றுதல் வரிசைகிரமத்தை மாற்றியமைத்து  சரிசெய்தல் ஆகிய செயல்களை எவ்வாறு நிறைவேற்றுவது என காண்போம்.இந்த பணிகளைசெய்வதற்காக உதவிடும் வரைகலை கருவிபட்டையை(drawing toolbar) இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்
படம்-53-1
எந்த மாதிரியான உருவை வரையபோகின்றோமோ அதற்கேற்ற தோற்றத்தை தெரிவு செய்வ தற்கான வரைபட உருவங்களை(drawing objects) கொண்டது முதல்பகுதி (படம்-53-1) ஆகும்
                          படம்-53-2
 அவ்வாறு வரையபெற்ற படங்களுக்கு மேலும் மெருகூட்டுவதற்கான கருவிகள்(drawing tools) கொண்டது (படம்-53-2) இரண்டாம்பகுதியாகும்
                                                          படம்-53-3
  முதல்பகுதியில் தேவையான உருவை தெரிவுசெய்துகொண்டு படவில்லையில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து பிடித்து இழுத்துசென்றுவிடுவதன்மூலம் ஏதனுமொரு உருவை வரைந்து(படம்-53-3)கொள்க
  இவ்வாறு ஒன்றுக்குமேற்பட்ட உருவங்களை ஓப்பன் ஃபிஸ் இம்ப்பிரஸின் ஒரு படவில்லைக்குள் வரைந்து கொண்டபின் அவைகளை ஒன்றாக சேர்த்து ஒரேகுழுவாக மாற்றியமைத்துகொள்வது நல்லது அதற்காக  முதலில் அவைகளை தெரிவு செய்து கொண்டு மேலேகருவிகளின் பட்டையிலுள்ள selectionஎன்ற கருவியை தெரிவுசெய்து அவ்வூருவங்களை சுற்றி ஒரு செவ்வகத்தை வரைந்துகொள்க அல்லது shift விசையை அழுத்தி பிடித்துகொண்டுஅவைகளை ஒவ்வொன்றாகதெரிவுசெய்து சேர்த்து கொண்டு  மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Group =>Group=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Shift+Gஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. இவ்வாறு உருவாக்கபட்ட குழுவிலுள்ளவைகளை திருத்தம் செய்வதற்கு F3 என்ற விசையை அழுத்தி குழுவிற்குள் செல்க அல்லது மேலே கட்டளை பட்டையி லுள்ள Format => Group => Enter group=> என்றவாறு கட்டளை களை செயற்படுத்தி குழுவிற்குள் செல்க  திருத்தம் செய்தபின் குழுவிற்கு வெளியே வருவதற்கு Ctrl+F3 ஆகிய விசைகளை அழுத்துக அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Group =>Group=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
  இடமாற்றம் செய்ய விரும்பும்  படத்தை தெரிவுசெய்து சொடுக்கி பிடித்து இழுத்துசென்று விடுவதன்மூலம்வரையபட்ட படங்களை இடமாற்றம் செய்யமுடியும் அதற்கு பதிலாக இடமாற்றம் செய்யவிரும்பும்  படத்தை தெரிவுசெய்தபின் F4என்ற விசையை அழுத்துக அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Position and Size=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Position and Size என்ற உரையாடல் பெட்டியின் Position and Size என்ற தாவியின் திரையில் (படம்-53-4) தேவையானவாறு சரிசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அமைத்துகொள்க
                                                             படம்-53-4
படத்தினுடைய ஏதேனுமொருபக்கவிளிம்பை பிடித்து இழுத்து செல்வதன்மூலம் அதனுடைய அளவை சரிசெய்து கொள்ளலாம் அதற்கு பதிலாகPosition and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் Position  என்ற தாவியின் திரையில் தேவையானவாறு சரிசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அமைத்துகொள்க
                                                             படம்-53-5
 பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Toolbars => Mode => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Mode toolbarஎன்ற (படம்-53-5)கருவிகளின் பட்டையிலுள்ள கருவிகளைகொண்டு இந்த படங்களுக்கு சிறப்பு தோற்றத்தை வழங்கமுடியும்
                               படம்-53-6
இந்த Mode toolbarஎன்ற கருவிகளின் பட்டையிலுள்ள Distortஎன்ற கருவி ஒரு படத்தின் செவ்வக வடிவத்தை படம்-53-6-ல் உள்ளவாறு மாற்றியமைத்திட உதவுகின்றது
                             படம்-53-7
இந்த Mode toolbarஎன்ற கருவிகளின் பட்டையிலுள்ள Set in circle (perspective)என்ற கருவி ஒரு படத்தின் செவ்வக வடிவத்தை படம்-53-7-ல் உள்ளவாறு மாற்றியமைத்திட உதவுகின்றது
                                                              படம்-53-8
இந்த Mode toolbarஎன்ற கருவிகளின் பட்டையிலுள்ள Set to circle (slant)என்ற கருவி ஒரு படத்தன் செவ்வக வடிவத்தை படம்-53-8-ல் உள்ளவாறு மாற்றியமைத்திட உதவுகின்றது
 இதன்பின்னர் இம்ப்பிரஸின் பல்வேறு படவில்லைகளிலுள்ள படங்களை மிகச்சரியாக அமர்ந்திடு மாறு செய்வதற்கு மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Grid=> அல்லது View => Guides =>என்றவாறு இருகட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றும் திரையில் Grid அல்லது Snap Lines  என்று அழைக்கபடும்Snap Guides ஆகிய இரு தொழில் நுட்பத்தை (படம்-53-9) பயன்படுத்தி தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க.
                             படம்-53-9
   ஒரு குழுவிலுள்ள இரு படங்களை இணைப்பதற்கு Gluepoints toolbarஎன்பதிலுள்ள கருவிகளை பயன்படுத்திகொள்க
  பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லையிலுள்ள படங்களுக்கு முப்பரிமான தோற்றத்தை கொண்டு வருவதற்கு மேலே கருவிகளின் பட்டையின் இறுதியிலுள்ள Visible Buttons 3D-Objects என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் விரிவாக்கம் செய்யபட்ட 3D Objects toolbar என்பதில் தேவையான முப்பரிமான தோற்றத்தை தெரிவுசெய்து அமைத்துகொள்க
  இதன்பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லையிலுள்ள படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் Convertஎன்ற கட்டளையை தெரிவுசெய்தவுடன் விரியும் துனைபட்டியில் தேவையான வகைக்கான வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கி வெவ்வேறு உருவாக மாற்றியமைத்துகொள்க
 பிறகு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லையிலுள்ள படத்தை அல்லது படவுருவை இடைமுகம் செய்யும்போது குறிப்பிட்ட செயல் நடைபெறவேண்டுமென விரும்புவோம் அந்நிலையில் தேவையான படத்தை தெரிவுசெய்துகொண்டு மேலே கருவிகளின் பட்டையிலுள்ள Interactionஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் Interactionஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் Interactionஎன்ற (படம்-53-10)உரையாடல் பெட்டியில் தேவையான இடைமுகவாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
                                படம்-53-10
 பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லையை பார்வையாளர்களை கவரும்வண்ணம் செய்வதுதான் சிறப்பாகும் அதற்காக அசைவூட்டம் என்பது பயன்படுகின்றது மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert => Animated Image=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்திய வுடன் Animation என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்
  பின்னர் தேவையான படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த படமானது இந்த Animation என்ற (படம்-53-11) உரையாடல் பெட்டியில் சென்று அமர்ந்திருக்கும் அதன்பின்னர் இந்த உரையாடல் பெட்டியில் தேவையான அசைவூட்டும் வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
   இந்நிலையில் படவில்லையிலுள்ள அனைத்து படங்களுக்கும் ஒரேமாதிரியான அசைவூட்டத்தை அமைக்கவேண்டுமெனில் இவ்வுரையாடல் பெட்டியின்animation group  என்பதன்கீழுள்ள group object என்ற வானொலிபொத்தானையும் தனித்தனியாக எனில் ஒவ்வொருபடமாக தெரிவுசெய்து Bitmap objectஎன்ற வானொலி பொத்தானையும் தெரிவுசெய்து செயற்படுத்துவது நல்லது  
                            படம்-53-11
மேலே வரைகலைகருவிபட்டையிலுள்ள Fontwork Gallery என்ற படவுரு பொத்தானை  தெரிவு செய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள View= > Toolbars => Fontwork =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் Fontwork  என்ற கருவிபட்டையிலுள்ள Fontwork Gallery என்ற படவுரு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் (படம்-53-12)எழுத்துரு தொகுப்பில் Fontwork Gallery தேவையான எழுத்துருவின் உருவவகையை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்கி அமைத்துகொள்க.
                         படம்-53-12

ஓப்பன்ஆஃபிஸ்இம்ப்பிரஸ்-52-படங்களை சேர்த்தலும் வடிவமைத்தலும்

ஓப்பன்ஆஃபிஸ்இம்ப்பிரஸ்-52-படங்களை சேர்த்தலும் வடிவமைத்தலும்
 பக்கம்பக்கமாக எழுதப்படும் சொற்களால் ஆன உரையைவிட ஒரேயொரு படத்தை கொண்டு நாம் கூறவிரும்பும் செய்தியை பார்வையாளருக்கு எளிதாகவழங்கமுடியும். அவ்வாறான படத்தை இம்ப்ரஸின் ஒரு படவில்லையில் சேர்த்து வழங்கும்போது படவில்லைகாட்சி கூடுதல் செய்தியை பார்வையாளருக்கு வழங்குகின்றது.அவ்வாறான ஒரு படத்தை படவில்லைக்குள் எவ்வாறு சேர்த்து இணைத்து வடிவமைப்பது என இப்போது காண்போம்.
     தேவையான படவில்லையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மேலே கட்டளை பட்டியிலுள்ள Insert => Picture=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
  உடன் விரியும்Insert Picture என்ற உரையாடல் பெட்டியில் இணைக்கவிரும்பும் படம் இருக்குமிடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்க அப்போது முன்காட்சி (Preview) திரையில் அந்த படத்தின் தோற்றம் காண்பிக்கும் இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில் இருக்கும்Link ,Preview ஆகிய இருவாய்ப்புகளின் தேர்வுசெய்பெட்டிகளில் முதல்வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு இந்தபடம் நன்றாக இருந்தால் Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பி தெரிவுசெய்த படம் படவில்லையில் இணைக்கபட்டிருக்கும்  உடன் பச்சை வண்ணத்தில் எட்டு கைப்பிடிகள் இப்படத்தைசுற்றி நாம் மேலும் வடிவமைப்பதற்கு உதவுவதற்காக தயாராக இருக்கும்.
  அச்சிடபட்டு கைவசமிருக்கும் படத்தை படவில்லைக்குள் கொண்டு வந்து சேர்த்திட மேலே கட்டளை பட்டியிலுள்ள Insert => Picture =>  Scan => Request=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக பின்னர் scannerஎன்ற சாதனத்தை இயக்குவதற்கான மென்பொருளிற்கேற்ப அவை கூறும் படிமுறையை பின்பற்றுக
 ஒரு கோப்பிலிருக்கும் படங்களின் தொகுப்பிலிருந்து நாம் விரும்பும் படத்தை படவில்லைக்குள் கொண்டு வந்த சேர்த்திட மேலே கட்டளை பட்டியிலுள்ள Tools  => Gallery  =>   என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக அல்லது மேலே வரைகலை கருவிபட்டியிலிருந்து (Drawing Toolbar)  இதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-52-1-ல் உள்ளவாறு விரியும் themesஎன்ற தலைப்பின்கீழ் பல்வேறு வகையான படங்களின் தொகுப்பிலிருந்து (Gallery) தேவையான படத்தை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியை பிடித்து இழுத்துவந்து படவில்லையில் தேவையான இடத்தில் விட்டிடுக உடன் நாம் விரும்பி தெரிவுசெய்து இழுத்து வந்த படம் படவில்லையில் இணைக்க பட்டிருக்கும்(படம்-52-1) அதனை சுற்றி பச்சை வண்ணத்தில் எட்டு கைப்பிடிகள் இப்படத்தை நாம் மேலும் வடிவமைப்பதற்கு உதவுவதற்காக தயாராக இருக்கும்.
படம்-52-1
  இந்த கைப்பிடியை பிடித்து நகர்த்திசென்ற விடுவதன்மூலம் படத்தின் அளவையும் இடத்தையும் மாற்றியமைக்கலாம்   மேலே வரைகலை கருவிபட்டியிலிருந்து (Drawing Toolbar) Rotate என்ற (படம்-52-2)பொத்தானை சொடுக்கியபின் படத்தை இடவலமாக அல்லது தலைகீழாக மாற்றியைக்கமுடியும்
படம்-52-2
 மேலே கட்டளை பட்டியிலுள்ள View  => Toolbars  => Picture   =>   என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் திரையின் மேல்பகுதியில் Picture toolbarஎன்ற படங்களின் கருவிபட்டையானது வடிவமைப்பு செய்வதற்கு தயாராக தோன்றிடும்  அதனை பயன்படுத்தி படவில்லையில் சேர்த்த படத்தைமேலும் வடிவமைப்பு செய்து மெருகூட்டிடமுடியும் இதன் இடதுபுறம் ஓரமாகவுள்ள வடிகட்டியின் குறும்படத்திற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டிக்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்படம்-52-3-ல் உள்ளவாறு விரியும் பலவாய்ப்புகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து வடிகட்டி படத்தை வடிவமைத்து கொள்க இதே கருவிபட்டியின் மையத்திலுள்ள Transparency என்ற பெட்டியில் 0 என அமைத்து படத்தின் பின்னால் உள்ளவைகளை பார்த்திடுமாறு அமைத்திடுக
 படம்-52-3
 இம்ப்ரஸ் ஆனது படவில்லையில் இணைக்கும் படங்களை வெட்டி சரிசெய்வதற்கு 1.நேரடியாக இடைமுகம் செய்து வெட்டிசரிசெய்வது 2. அதற்கான உரையாடல் பெட்டிமூலம் வெட்டிசரிசெய்வது ஆகிய இரண்டு வழிகளில்அனுமதிக்கின்றது
முதல் வழியில் முதலில் படவில்லையிலுள்ள படத்தை தெரிவுசெய்து கொண்டு மேலே படங்களின் கருவிபட்டையிலுள்ள கத்தரிபோன்ற குறும்படத்தை தெரிவு செய்துசொடுக்குக  உடன் படம்-52-4-ல் உள்ளவாறு படத்தை சுற்றிகுறியீடும் பக்கமூலைகளில்  ட வடிவ குறியீடும் தோன்றும் தேவையான பக்கத்தின் மூலையிலிருக்கும் குறியீட்டை பிடித்து இழுத்து செல்வதன்மூலம் படத்தின் அளவை சரிசெய்து கொள்க
படம்-52-4
 படவில்லையிலுள்ள படத்தை தெரிவுசெய்து கொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Format => Crop Picture=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையிலுள்ள படத்தின்மீது  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Crop Picture என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம் 52-5-ல் உள்ளவாறு  Crop என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் Crop என்பதன் கீழுள்ள keep scale ,keep image ஆகிய இரு தேர்வுசெய்பெட்டியில் தேவையானதையும் தொடர்புடைய அளவுகளையும் தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  
படம்-52-5
 உருவப்படமும் இணையமுகவரியும் இணைந்து உரையும்மேல்மீட்புஇணைப்பும் சேர்ந்ததற்கு சம்மான உருவபடத்தை உருவாக்குகின்றது இவ்வுருவ படத்தை உருவாக்குவதற்காக  படவில்லையிலுள்ள படத்தை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit => Image Map =>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Image Map என்ற உரையாடல் பெட்டியில் தேவையானகருவிகளை தெரிவுசெய்து இறுதியாக Apply ,Save ஆகிய குறும்படங்களை தெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாற்றங்களை செயற்படுத்தி சேமித்துகொள்கக
படம்-52-6

Previous Older Entries