லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-20

 எண்களின் வடிவமைப்பை மாற்றியமைத்தல்

எண்களின் வடிவமைப்பில் ஏராளமான மாறுதல்கள் உள்ளன உதாரணமாக நம்மால் லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் பக்கஎண்களை அராபிக் எண்களாக பிரதிபலிக்கசெய்திடமுடியும்.     அதற்காக பக்கஎண்ணை இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தனை இருமுறை சொடுக்குதல் செய்தபின்னர் விரியும் பட்டியலில் தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்துகொள்க ஆயினும் பின்வரும் விளக்கத்தில் கூறியவாறு பக்கபாணியில்உள்ள பக்கஎண்களை வடிவமைப்பு செய்தல்எனக்குறிப்பிடுவதே சிறந்ததாகும். உரைப்பகுதியை தெரிவு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் பக்கம் Page எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் Page Styleஎனும் உரையாடல் பெட்டியின் page எனும் தாவிபொத்தானின் பக்கத்திரையில் layout settings எனும் பகுதியில் format என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான வடிவமைப்புடைய எண்களை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து அமைத்துக்கொள்க

 20.1

முதல் பக்க எண்ணை அராபிக் எண் 1 ஐ தவிரவேறுஎண்களாக செய்திட

ஒருசில சமயத்தில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் முதல் பக்க எண்ணை அராபிக் எண் 1 ஐ தவிரவேறு எண்களில் தொடங்குமாறு செய்ய விரும்புவோம் உதாரணமாக நாம் புதியதாக ஒரு புத்தகத்தை எழுதி உருவாக்குவதாக கொள்வோம் அதன் உள்ளடக்க அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி கோப்பாக உருவாக்குவதாக கொள்வோம் அதாவது அத்தியாயம் 1ஐ பக்கம் 1இல் தொடங்குவதாகவும் அத்தியாயம் 2 ஐ பக்கஎண் 15இல் தொடங்குவதாகவும் அத்தியாயம்3 ஐ பக்கஎண் 3தஇல் தொடங்குவதாக கொள்வோம்

இந்நிலையில் லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் ஒரு ஆவணத்தில் பக்கஎண் 1 ஐவிட பெரியதாக தொடங்கிட பின்வருமாறு வழிமுறைகளை பின்பற்றி கட்டளைகளை செயற்படுத்துக

ஆலோசனை 1இங்கு பக்க எண்ணிடலுக்காக கூறும் அறிவுரைகள் முடிவுபகுதியில் பிரிபலிப்பதாக செய்வதற்கானவையாகும் தலைப்புபகுதியெனில் அதற்கான வழிமுறைவேறாகும்

ஆலோசனை 2 ஆவணத்தின் தொடக்க எண்கள் ஒற்றைபடை எண்களில் குறிப்பிட வேண்டாம் ஏனெனில்   கோப்பினை அச்சிடும்போதும் அல்லது கையடக்க கோப்பாக உருமாற்றம் செய்திடும்போதும் காலியான பக்கத்தை விடவேண்டியிருக்கும்.

1லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Insert ==> Footer => [page style]=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து ஆவணத்தின் முடிவுபகுதியை செயல்படுமாறு செய்க பக்கபாணியானது ஏற்கனவே இந்த ஆவணத்தின் முடிவுபகுதியை செயல்படுமாறு செய்திருந்தால் இந்தமுடிவுபகுதியின் பெயரில் சரிபார்ப்பு குறி தோன்றிடும் இந்நிலையில் பக்கபாணியை சொடுக்குதல் செய்வதற்கு பதிலாக முடிவுபகுதியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தேர்வுசெய்பட்ட பக்கபாணியின் பெயரை சொடுக்குதல் செய்தபின் எச்சரிக்கை செய்திக்கான உரையாடல் பெட்டியில் முடிவுபகுதியில் ஏற்கனவேயுள்ள உரையை நீக்கம் செய்திட விரும்ப வில்லை எனில் No என்பதையும்   அல்லது முடிவுபகுதியில் ஏற்கனவேயுள்ள உரையை நீக்கம் செய்திட விரும்பினால் Yes என்பதையும் தெரிவுசெய்துகொண்டு முடிவுபகுதியை தெரிவுசெய்து சொடுக்குக

2 தற்போது இடம்சுட்டியானது முடிவுபகுதியில் இருக்கும். இந்நிலையில் பக்கஎண்களை உள்நுழைவு செய்திடலிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Insert => Fields => Page Number=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்தியவுடன் ஆவணத்தின் பக்கஎண்ணாக 1 என பிரதிபலிக்கும்

3 அதன்பின்னர் உரைப்பகுதியின் முதல் பத்தியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

4 பின்னர் Format => Paragraph=>   என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்திடுக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Paragraph எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் Paragraph எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்.

5 அதில் நாம் பயன்படுத்தும் ஆவணத்தின் முதல்பக்க பாணியாக இருப்பதற்காக Text Flowஎனும் தாவியின் பக்கத்தில் Breaks எனும் பகுதியில் Insert எனும் வாய்ப்பையும் Type என்பதன் கீழிறங்கு பட்டியலில் Page என்பதையும் இதன் அருகில் இடதுபுறம் உள்ள With Page Style   என்ற வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க இங்கு பக்கமுடிவை உள்நுழைவு செய்யவில்லை என்பதையும் பக்கஎண்களைமட்டுமே மாற்றியமைத்திடுமாறு செய்கின்றோம் என்ற தகவலை கவணத்தில் கொள்க
20.2
6 தற்போது பக்கஎண்களின் புலமானது செயலில் இருக்கும் நாம் தொடங்கவிரும்பும் பக்கஎண்ணை தட்டச்சு செய்துகொண்டுஅல்லது page number என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான பக்கஎண்ணை தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக

அத்தியாயத்தின் எண்களுடன் பக்கஎண்ணிடல்

மிகப்பெரிய தொழில்நுட்ப புத்தகங்கள் எனில் அத்தியாயஎண்களுடன் பக்கஎண்களையும் சேர்த்து 1-1, 1-2, 1-3, …; 2-1, 2-2, 2-3, … என்றவாறு முடிவு பகுதியில் அல்லது தலைப்பு பகுதியில் குறிப்பிட்டால் குறிப்பிட்ட பக்கத்தை சென்றடைவது சுலபமாக இருக்கும்

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இவ்வாறான வகையில் பக்கஎண்கள் பிரதிபலிக்குமாறு செய்திட நமக்கு மூன்று செயல்கள் தேவைப்படுகின்றன

1 அத்தியாயங்களின் தலைப்புகள் பக்கபாணிகளை போன்றே இருக்குமாறு குறிப்பிடவேண்டும் உதாரணமாக Heading1 எனும் பாணியில் இருக்குமாறு குறிப்பிடுக

2 லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Tools => Outline Numbering=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் Outline Numbering எனும் உரையாடல் பெட்டியில் நிலையை Level1 என்றும் பத்தியின் பாணி(paragraphstyle)யில் Headjing1என்றும் numberஎன்பதில் 1,2,3,….என்றவாறும் குறிப்பிடுக
20.3
3 அத்தியாயத்தின் எண்களை சேர்த்திட

3.1 நாம் சற்றுமுன் உள்நுழைவுசெய்த பக்கஎண்களுக்கு அருகில் தலைப்புபகுதி அல்லது முடிவுபகுதியில் இடம்சுட்டியை வைத்திடுக பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேஉள்ள முதன்மைபட்டியில் Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக
20.4
3.2 உடன் விரியும்Fields எனும்உரையாடல் பெட்டியில் Documentஎனும் தாவியின் பக்கத்தில் Type என்பதன் பட்டியலில் Chapterஎன்பதையும் Format என்பதன் பட்டியலில் Chapter number என்பதையும் Level என்பதில் 1 என்றும் தெரிவுசெய்துகொண்டு Insertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்பக்கஎண்களுக்கும் அத்தியாய எண்களுக்கும் இடையில் கோடு அல்லது குறியீடு ஏதேனும் ஒன்றை குறிப்பிடுக

இணையத்தில் உலாவரும்போது பயன்படுத்திடவேண்டிய குறுக்குவழி விசைகள்

 
4.1இணைய பக்கங்களில் மீகநீண்ட உரையை படித்துகொண்டிருக்கும்போது இடம்சுட்டியை நகர்த்துவதற்கு சுட்டி போதுமானதாக இல்லாத நிலையில் நம்முடைய விசைப்பலகையின் 4.1 ஆகிய இரு விசைகளும் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

4.2நாம் பார்த்துவரும் இணையபக்கத்தை திரையில் பிரதிபலிக்கும் வேகம் போதுமானதாக இல்லை யென அதனை விரைவுபடுத்த விரும்பினால் நம்முடைய விசைப்பலகையிலுள்ள 4.2எனும் செயலி விசையை அழுத்தி அவ்விணைய பக்கத்தை புத்தாக்கம் செய்துகொள்க

4.3நாம் உலாவரும் இணைய உலாவியின் அதே சாளரத்தில் புதிய பக்கத்தை கூடுதலாக கொண்டுவருவதற்கு நம்முடைய விசைப்பலகையிலுள்ள + ஆகிய4.3. இருவிசைகளை சேர்த்து அழுத்துக

4.4 நம்முடைய இணைய உலாவியில் இணையமுகவரியை உள்ளீடு செய்வதற்கான பெட்டிக்கு நேரடியாக சுட்டி செல்வதற்காக நம்முடைய விசைப்பலகையிலுள்ள 4.4எனும் செயலி விசையை அழுத்துக

4.5 நாம் உலாவரும் நம்முடைய இணையஉலாவியானது முழுத்திரையிலும் தோன்றுமாறு செய்வதற்காக நம்முடைய விசைப்பலகையிலுள்ள 4.5.1எனும் செயலி விசையை அழுத்தி அவ்விணைய உலாவியை முழுத்திரையிலும் இருக்குமாறு செய்துகொள்க நம்முடைய விசைப்பலகையிலுள்ள  4.5.2எனும் செயலி விசையை அழுத்தி அவ்விணைய உலாவி பழையபடி இருக்குமாறு செய்துகொள்க

4.6   நாம் பயன்படுத்தாதபோது நம்முடைய கணினியை மற்றவர்கள் பயன்படுத்தாதவாறு பூட்டிவைத்திட நம்முடைய விசைப்பலகையிலுள்ள 4.6 ஆகிய. இருவிசைகளை சேர்த்து அழுத்துக.

2013இல் வெளியிடபட்ட திறமூல மென்பொருட்கள் ஒரு மீள்பார்வை தொடர்ச்சி

3.1 SimpleInvoices இது ஒரு இணையத்தின அடிப்படையில் செயல்படும் பொருட்களின் பட்டியலை உருவாக்கிடும் பயன்பாட்டு மென்பொருளாகும் அதிகஅளவு கட்டமைப்பு எதுவும் இல்லாமலேயே விரிவாகவும் எளிமையாகவும் பொருட்களின் பட்டியலை உருவாக்கிடுவதற்காக இது பயன்படுகின்றது அதற்காக இதனுடைய SimpleInvoices எனும் மென்பொருளை நம்முடைய கணினியில் மிகச்சாதாரணமாக வழக்கமான மென்பொருளை நிறுவுகை செய்வதைபோன்று இந்த SimpleInvoices மென்பொருளை நிருவகை செய்தபின் உடனடியாக பொருட்களின் பட்டியலை தயார் செய்திடலாம்   மேலும் இந்த பொருட்களின் பட்டியலை கையடக்க கோப்பாக எளிதாக உருமாற்றம் செய்து வாடிக்கையாளருக்கும் விரைவாக அனுப்பிவைக்கலாம் மிகச்சிறிய நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு இது பேருதவியாக இருக்கின்றது இது விண்டோ லினக்ஸ் யூனிக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படக்கூடியது இதனை http://simpleinvoices.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.2 Observium இது வளாக பிணையம் ,இணையம் ஆகிய இணைப்புகளில் உள்ள கணினிகளை கட்டுபடுத்தி கையாள உதவிடும் மிகச்சிறந்த சாதணமாக விளங்குகின்றது இது Cisco, Windows, Linux, HP, Dell, FreeBSD, Juniper, Brocade, Netscaler, NetApp என்பன போன்ற பல்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்தது இது வளாக பிணையம் இணையம் ஆகிய இணைப்புகளில் இணைக்கபட்டுள்ள சாதனங்களின் வரலாறு நடப்பில் உள்ள அதனுடைய திறன் ,கட்டமைவு , உள்நுழைவு கட்டுபாடு என்பன போன்ற அனைத்து தகவல்களையும் அலசிஆராய்ந்து கையாளஉதவுகின்றது இதனை http:// observium.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.3 MariaDB – Drop என்பது ஆரக்கிளின் MySQLஎன்ற சேவையாளருக்கு மாற்றானதாக தன்னார்வு குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும் இது லினக்ஸின் பல்வேறு வெளியீடுகளில் இயல்புநிலையில் செயல்படுமாறு உடன்இணைத்தே வழங்கபடுகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல் எல்ஜிப்பிஎல் ஆகிய அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://mariadb.orgஎனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

3.4 RackTables இது ஒரு தரவுகளின் மையமாக செயல்படுகின்றது இதனை செயலபடுத்த முதலில் கணினியுடன் இணைந்த server, workstations, routers, switches ஆகிய வன்பொருட்களின் விவரங்களை குறிப்பிடவேண்டும் பின்னர் கணினியுடன் இணைந்த சாதனங்களை குறிப்பிடவேண்டும் அதன்பின்னர் அவைகளை ஒத்தியங்கி செயல்படுமாறு செய்திடவேண்டும் பின்னர் இவைகளை இணைத்துள்ள வாயில்களை சரியாக செய்யபட்டுள்ளதாவென சரிபார்த்திடவேண்டும்   அதன்பின்னர் அந்த சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றிற்கான ஐப்பிமுகவரியை ஒதுக்கீடு செய்து குழுவாக இணைக்கபட்டு நன்கு நிருவகிக்குமாறு செய்யபடவேண்டும்   பின்னர் கையாளவேண்டிய கோப்புகள் இணைக்கபட்டு பயன்படுத்திடும் பயனாளர்களின் பெயர் பயன்படுத்துவதற்காக அனுமதித்தல் அல்லது நிராகரித்தல் ஆகியவற்றை அமைத்து இந்த RackTables செயல்படுமாறு செய்யபடுகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல் அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://:racktables.orgஎனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
3.4

3.5 Angry IP scanner எனும் திறமூல மென்பொருளானது பிணைய, இணைய ஆகிய வலைபின்னல் இணைப்புகளின் சிறந்த பாதுகாப்பு காவலனாக உள்ளது இது பயன்படுத்திட எளிமையானதாகவும் அதேசமயத்தில் மிகவிரைவாக செயல்படும் திறன்மிக்கதாகவும் உள்ளது இதனை செயற்படுத்தியவுடன் இணைப்பில் உள்ள ஐப்பி முகவரிகளையும், இணைப்பு வாயில்களையும் பாதுகாப்பானதாக உள்ளதாவென வருடி ஆய்வுசெய்து அனுமதிக்கின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்பெற்றது. இது ஜிப்பிஎல்2 அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனை http://: angryip.org எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
3.5

எந்தவகையான இணைய நிலைமாற்றியை அமைத்தல் என்பதற்காக பின்வரும் காரணிககளை கருத்தில் கொள்க

மிகப்பிரலமாக அனைவருக்கும் தெரிந்த நிலைமாற்றி மையம் என்பது   கையடக்க நிலைமாற்றியை பயன்படுத்தி சாதனங்களுக்கிடையே இணைப்பை மாற்றுவதைபோன்று கணினி இணைய சாதனங்களிடைய இணைய இணைப்பை பரமரித்திடும் ஒரு இணைய நிலைமாற்றியாகும் இதுவே நம்முடைய இணையஇணைப்பை வடிவமைப்பதிலும் கட்டமைப்பதிலும் பராமரிப்பதிலும் மிகமுக்கியபபங்காற்றுகின்றது தனிப்பட்ட கணினியுடன் இணைய இணைப்பு செய்வதற்கு இந்தஇணைய நிலைமாற்றி தேவையில்லை ஆனால் ஒன்றிற்குமேற்பட்ட கணினிகளை இணைய இணைப்புடன் இணைப்பதற்கு அதாவது அலுவலகங்கள் தொழிலகங்களில் இந்த இணைய நிலைமாற்றி அவசியம் தேவையாகும். இதனை அமைத்திட இதற்கான தனியானதொரு கட்டமைப்பு தேவையாகும் மேலும் கம்பியுடைய இணைய இணைப்ப கம்பியில்லாத இணைய இணைப்பு ஆகியஇருவகையில் இந்த இணைய நிலைமாற்றியை அமைத்திடலாம் பெரும்பாலாணவர்களால் கம்பியில்லாத இணைய நிலைமாற்றியை மட்டுமே பயன்படுத்திகொள்கின்றனர் ஆயினும் கம்பியுடைய இணைய நிலைமாற்றியே தற்போதுள்ள அலுவலகங்கள் தொழிலகங்கள் ஆகிய சூழலிற்கு தேவையாகும் ஏனெனில் கம்பியில்லாத இணைய இணைப்பு குறைந்த வேகமுடையதாக இருப்பதால் சிறியஅளவு கோப்புகளையே பதிவேற்றம் செய்வதும் பதிவிறக்கம் செய்வதும் முடியும் பேரளவுதரவுகளையும் கோப்புகளையும் பதிவேற்றம் செய்வதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் தரவுகளை பிற்காப்பு செய்வதற்கும் கம்பியுடைய இணைய இணைப்பு இருந்தால் தான் முடியும் என்றநிலையில் இன்றைய நவீனயுகத்தில் இந்த இணைய நிலைமாற்றி பங்கு மிகமுக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் எந்தவகையான இணைய நிலைமாற்றியை அமைக்கவிருக்கின்றோம் என்பதற்காக பின்வரும் காரணிகளை கருத்தில் கொள்க

2.1 இணைய நிலைமாற்றியை பயன்படுத்திடும் பயனாளர்களின் எண்ணிக்கை

2.2 இணைய இணப்பின் கட்டமைப்பு அளவு அதாவது 50 இணைப்புகளின் கட்டமைப்பு எனில் ஒரு இணைய நிலைமாற்றி போதுமானது அதற்குமேல் எனில் பல்லடுக்கு இணைய நிலைமாற்றிதேவையாகும்

2.3 பேரளவு இணைய நிலைமாற்றியை அமைத்திடும்போது அவைகளை ஒருங்கிணைத்து Coreஆக செயல்படுமாறு செய்வதால் அவ்வாறான பேரளவு தரவுகளின் போக்குவரத்தை கையாளும் செயல் எளிதாகின்றது

2.4 நமக்கு மிகவிரைவான இணையஇணைப்பு அல்லது குறைந்தஅளவுஉள்ளுரை சுனக்கமானது(latency) ஆகியஇரண்டில் நாம் தெரிவுசெய்வதற்கேற்ப செயல்படுவதை உறுதிசெய்துகொள்க

2.5 நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்து அல்லது மொத்த விற்பணையாளரிடமிருந்து எந்தவழியில் நாம் கொள்முதல் செய்யவிருக்கின்றோம் என்ற தகவலையும்

2.6 இணைய நிலைமாற்றிகளில் வழங்கபட்டிருக்கும் பல்வேறு வசதி வாய்ப்புகள் நம்முடைய தேவையை நிறைவு செய்திடுவதை உறுதிசெய்துகொள்க

2.7 இறுதியாக அவ்வாறு வழங்கிடும் வசதிவாய்ப்புகளுக்கேற்ற இணைய நிலை மாற்றியின் விலைவிவரம்

கூகுளினுடைய ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப்பின் பயன்கள்

1.1இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப்பானதுHoloஎனும் வடிவமைப்பு மொழிக்கு பதிலாக material design என்பதில் உருவாக்கபட்டுள்ளதால் முப்பரிமான காட்சியின் இடைமுகமாக செல்லிடத்து பேசி, கைக்கணினி, கைக்கடிகாரம் மகிழ்வுந்து தொலைகாட்சிபெட்டி ஆகியஅனைத்து சாதனங்களிலும் செயல்படும் திறனுள்ளதாக மேம்படுத்தபட்டுள்ளது

1.2ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப் செயல்படும் சாதனங்களின் மின்தேவைக்காக பயன்படுத்தபடும் மின்கலன்களின் மின்னேற்றத்தை 90 நிமிடங்கள் கூடுதலாக பயன்படுத்தி கொள்ளுமாறு மின்நுகர்வு சிக்கனத்தை கடைபிடிக்குமாறு சாதனங்களில் செயல்படும் பயன்பாடுகளில் செயல்படுத்துகின்றது முந்தைய பதிப்பில் இந்த வசதி இல்லை

1.3 சாதனங்களின் மூலம் மற்றவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டிருக்கும் போது இடையே செய்திகள் இடைமுகம் செய்தால் அவ்வுரையாடலிற்கு இடைஞ்சலில்லாமல் இந்த செய்திகளை கையாளும் வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது

1.4 நாம் பயன்படுத்திகொண்டிருக்கும் தரவுகளுக்கு பாதிப்பில்லாமல் அதிக கால அவகாசத்தை எடுப்பதை தவிர்த்து சிக்கலான செயல்இல்லாமல் எளிமையாக விரைவாக நம்முடைய சாதனத்திற்கு பாதுகாப்பு அளித்திடும் வசதியுள்ளது

1.5 மூன்றாவது நபர்களுடைய பயன்பாடுகளின் துனையில்லாமலேயே வொய்பி, புளூடுத், ஜிப்பிஎஸ் ஆகிய இணைப்பு எளிதாக இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப்பின் மூலம் வழங்கபடுகின்றது

1.6 குறுஞ்செய்திகளையும் பேரளவுசெய்திகளையும் மிகவிரைவாகவும் எளிதாகவும் அனுப்பிடவும் பெறுவதற்கும் ஆன வசதி இதில் கொண்டுவரபட்டுள்ளது

1.7 கண்ணால் காணும் காட்சியை மேம்பட்ட வசதிகளுடன் படம்பிடிப்பதற்கான வாய்ப்பினை இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப் வழங்குகின்றது

1.8 நம்முடைய சாதனத்தில் உள்ள மிகமுக்கியமான தரவுகளை அனுகாமலேயே நம்முடைய நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் நம்முடைய சாதனங்களை பங்கிட்டுகொள்ளும் வசதியை அளிக்கின்றது

1.9 32 பிட் சாதனங்களிலும் ஜிமெயில் போன்ற 64பிட் வசதிகளை பதிய நெக்ஸஸ்9 இன் வாயிலாக வழங்குகின்றது

1.10 புதியதாக மேம்பட்ட தேடிடும்வசதி என்பனபோன்ற ஏராளமான புதிய பல வசதிகளை இந்த ஆண்ட்ராய்டு5.0 லால்லிபாப் நமக்கு வழங்க தயாராக உள்ளது

பிணையம் இணையம் ஆகிய வலைபின்னலை கட்டுபடுத்துவதற்கான திறமூல கருவிகள்

Zabbix இது ஒருஒற்றையான இணையபக்கமுனைமத்தின் அடிப்படையில் செயல்படும் பல்வேறு செயலிகளின் தொகுதியான வலபின்னலை கையாளஉதவும் கருவியாகும் பல்வேறு வகையான சேவையாளர்களிடுமிருந்தும் தரவுகளை சேகரித்து கையாளுவது வலைபின்னலில் உள்ள ஒவ்வொரு கருவிகளையும் கையாளுதல் போன்ற பணிகளை செவ்வன செய்கின்றது இது SNMP எனும் வசதியை பயன்படுத்தி முகவர்மூலம் வலைபின்னலை கையாளும் செயலை செய்கின்றது அதுமட்டுமல்லாது SMTP , HTTPஆகிய சேவைகளையும் இது வழங்குகின்றதுஇது Perl,Pythonஎன்பன போன்ற மொழிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மிக்கது

5.1
Ntop என்பது இணைய போக்குவரத்தை மிகஎளிதாகவும் அதேசமயத்தில் மிக விரைவாகவும் கையாளஉதவும் ஒரு கருவியாகும் இது சி மொழியில்எழுதபட்டு சுயமாக செயல்படும் திறன்கொண்டது ஒரு ஒற்றையான செயலின் வாயிலாக ஒரு இணைய இணைப்பின் இடைமுகத்தின் வாயிலாக அனைத்து செயல்களையும் கையாளும் தன்மை கொண்டது நடப்பில் உள்ள இணைய இணைப்பையும் முந்தைய இணைய இணைப்பின் போக்குவரத்து தகவல்களை அட்டவணையாகவும் வரைபடமாகவும் வழங்குகின்றது இது தரவுகளை நிலையான தரவுகளின் தொகுதியாக RRD எனும் கோப்பில் தேக்கிவைக்கின்றது இணையத்தில் தகவல்கள் போக்குவரத்து நடைபெற்றுகொண்டிருக்கும்போதே அவைகளை சரிபார்த்து ஆய்வுசெய்திடுகின்றது
5.2
NeDi என்பது இணைய இணைப்பில் இணைக்கபட்டுள்ள கருவிகளை பற்றி உதவும் ஒரு கருவியாக செயல்படுகின்றது பெரிய நிறுவனங்களில் இணையத்தின் மூலம் இயக்கபடும் சாதனங்களை அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றி வைத்து பயன்படுத்திடும்போது அவை தற்போது எந்தஇடத்தில் இணைக்கபட்டுள்ளன என அறிந்து கொள்ள உதவுகின்றது இது கருவிகளை மட்டுமல்லாது வலைபின்னலின் கட்டமைவு முழுவதையும் ஆய்வுசெய்து கண்டுபிடித்த அனைத்து தகவல்களையும் இணைக்கபட்ட சாதனங்கள் வன்பொருட்கள் ஆகியவிவரங்களை பட்டியலாக வழங்குகின்றது இது Cisco Discovery Protocol or Link Layer Discovery Protocolஆகியவற்றை பயன்படுத்தி இணைக்கபட்டுள்ள நிலைமாற்றிகள் வழிசெலுத்திகளை கண்டறிந்து பின்னர்அதனுடன் இணைந்து அவைகளை பற்றிய தகவல்களை சேகரித்து வழங்குகின்றது வலைபின்னலில் இணைக்கபட்டிருந்த சாதனங்கள் ஏதேனும் காணாமல் போயிருந்தாலும் திருடபட்டிருந்தாலும் உடன் அதற்கான எச்சரிக்கை செய்தியை நமக்கு வழங்குகின்றது
5.3
Nagios என்பது வலைபின்னலில் ஐப்பி அடிப்படையிலான servers, services, network links ஆகியவற்றை நிலையை தொடர்ச்சியாக கண்கானித்திட உதவும் சாதனமாகும் அதுமட்டுமல்லாது சேவையாளரின் நினைவகம் ரேம் நினைவகம் சிபியுவின் பயன்பாடு , FLEXlm அனுமதியை பயன்படுத்தி கொள்ளுதல் சேவையாளர் கணினியில் வெளியிடபடும் வெப்பம் ஆகியவற்றை கட்டுபடுத்துகின்றது மின்னஞ்சல் குறுஞ்செய்திகளை எப்போது அனுப்புவது யார்யாருக்கெல்லாம் அனுப்புவது என்பனபோன்ற முடிவுகளை திறமையாக எடுத்து அதற்கான பொறிகளை பயன்படுத்தி இவைகளை அனுப்புவதை கட்டுபடுத்துகின்றது
5.4
Cacti என்பது வலைபின்னல்இணைப்பின் சாதனங்கள் அல்லது சேவைகளிலிருந்து ஏதனும் தரவுகள் எண்களாக கிடைக்கபெற்றால் அவைகளை கையாள இந்த Cacti என்பது பயன்படுகின்றது சேவையளர்கணினிகளின் நினைவக வட்டுகள் பயன்பாடு குளிர்விப்பானின் வேகத்தை கட்டுபடுத்துதல் மின்நுகர்வை கட்டுபடுத்துதல் போன்ற பணிகளை செய்கின்றது PHPNetwork Weathermap எனும் இதனுடைய கூடுதல் வசதியை பயன்படுத்தி நடப்பிலிருக்கும் இணைப்பிலுள்ள சாதனங்களுக்கிடையேயான பயன்பாடு சரியாக இணைப்பில் பயன்படுத்திகொள்ளபடுகின்றதா என காணமுடியும்

5.5

Citrix Workspace Suite எனும் தொகுதியான பயன்பாடுகளை பயன்படுத்திகொள்க

9
Citrix Workspace Suite என்பது பயன்பாடுகளின் தொகுதியான கட்டாகும் அதாவது ஒற்றையானமென்பொருளில் XenDesktop, XenApp, XenMobile, ShareFile and NetScaler. XenClient, CloudBridge, AppDNA என்பனபோன்ற அனைத்து பயன்பாடுகளும் கட்டுகளாக பயன்படுத்திட ஏதுவாக கிடைக்கின்றது இது பணிமேடையில் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப பயன்பாடுகளை வழங்கிடும் கருவியாகவும் அவைகளை அனுகுவதற்கான பொதுவான வாயிலாகவும் செயல்படுகின்றது
Citrix Workspace Services (CWS) என்பதுபயன்பாடுகளை உருவாக்கி வழங்குவதற்கும் கட்டுபடுத்துவதற்குமானதொரு தளமாகும் அதாவது பணிமேடைகளையும் பயன்பாடுகளையும் செல்லிடத்து பேசிசேவைகளையும் மேககணியிலிருந்து அல்லது தரவுமையத்திலிருந்துஅல்லது இவ்விரண்டும் கலந்ததிலிருந்து உருவாக்கி வழங்கிடும் ஒருதளமாகும் desktop as a service(DaaS) ,desktop virtualizationஆகிய இரண்டிற்கு பாலமாக செயல்படுகின்றது மேககணிக்குள் விண்டோ7 இயக்கமுறைமையை செயல்படுத்துகின்றது

Previous Older Entries