அக்சஸ்2007 -5-வினாவில் செயற்குறி , வெளிப்பாடுஆகியவற்றின் பயன்

  செயற்குறி , வெளிப்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி கணக்கீடு செய்து தகவல்களை பெறுவது,மதிப்புகளை ஒப்பீடுசெய்வது, பல்வேறு வடிவமைப்பில் மதிப்புகளை பிரிதிபலிக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் ஒரு வினாவை உருவாக்கி பயன்படுத்தமுடியும்

     இந்நிலையில்  செயற்குறி(Operator) என்றால் என்ன? என்ற கேள்வி எழும்,

 எண்களை கூட்டுதல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல் போன்ற கணக்கீடு செயல்களை செய்தல், மதிப்புகளை ஒப்பீடு செய்தல்,எழுத்துகளை சரமாக தொகுத்தல், தரவுகளை வடிவமைப்பு செய்தல் என்பன போன்ற பணிகளை செய்ய உதவிடும் குறியீடுகளையே செயற்குறி என்பர்,

   இந்த செயற்குறிகளும் இதரபொருட்களும் சேர்ந்ததையே வெளிப்பாடு (Express) என்பர்,

இந்த செயற்குறிகள் பலவகையாகவுள்ளன,அவை

கணக்கீடுகளுக்கு உதவிடும் +,-,/,*, என்பனபோன்றவை கணித செயற்குறிகள் ஆகும்,

உறவுகளை குறிப்பிடுவதற்கு உதவிடும் =,<,>,=>,<= என்பன போன்றவை உறவு செயற்குறிகள் ஆகும்,

எழுத்துகளில் பயன்படுத்தப்படும் &, ? என்பன போன்றவை உரை செயற்குறிகள் ஆகும்,

தருக்கங்களை குறிப்பிட உதவிடும் or,not,and என்பன போன்றவை தருக்க செயற்குறிகள் ஆகும்

இவற்றிற்குள் அடங்காதவைகளே இதர செயற்குறிகள் ஆகும்,

இந்த செயற்குறிகளின் முன்னுரிமை வரிசை பின்வருமாறு

முதலில் கணிதசெயற்குறி,பின்னர் தருக்க செயற்குறி என்றவாறு வரிசைக்கிரமமாக அமையும்,

பல்வேறுநிபந்தனைளை குறிப்பிடுவதற்கும், சிக்கலான வினாவை உருவாக்குவதற்கும் இந்த செயற்குறிகள் பெரிதும் உதவிபுரிகின்றன,

ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற மதிப்புகளை குறிப்பதற்கு Notஅல்லது <>ஆகிய செயற்குறிகள் வினாவின் வெளிப்பாடுகளுக்கு முன்பகுதியில் பயன்படுத்தப் படுகின்றன,

இந்த செயற்குறிகளை பயன்படுத்துவதற்கான செயல்முறை பின்வருமாறு

1,முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl contacts , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

 2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name,state ஆகிய புலங்களை QBEயில் சேர்த்திடுக

3, இதன்பின்னர்QBEயில் state என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4, பின்னர்இதே புலத்தில்  TN என தட்டச்சு செய்க,

உடன் TN  என்பதன் முன்புறமும் பின்புறமும் அக்சஸ் ஆனது தானாகவே மேற்கோள் குறியை (படம்-1) உருவாக்கிவிடும்,

 5.1படம்-1

எண்களுடன் கூடிய நிபந்தனையை உள்ளீடுசெய்தல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2.பின்னர் priceஎன்ற புலத்தை tbl sales என்ற அட்டவணையிலிருந்தும் description , category ஆகிய புலங்களை tbl product என்ற அட்டவணையிலிருந்தும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக

3, அதன்பின்னர் QBEயில் Priceஎன்பதன்கீழ்உள்ள sort என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4,உடன் தோன்றும் நிபந்தனைதிரையில் Ascending என்பதை கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவு செய்க,

5,பின்னர் QBEயில் Price என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

6, அதன்பின்னர் அதில் <10000 என தட்டச்சுசெய்க (படம்-2), உடன் ரூபாய் 10000 க்கு மேல் உள்ளவற்றை மட்டும் பட்டியலிடும்,

 5.2   படம்-2

OR செயற்குறியை ஒரு புலத்தில் பல மதிப்புகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்துதல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name,state ஆகிய புலங்களையும்,     tbl sales என்ற அட்டவணையிலிருந்து Sale date என்ற புலத்தையும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக.

3, அதன்பின்னர் QBEயில் state என்பதன்கீழ்உள்ள sort என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4,உடன்தோன்றும் கீழிறங்கு பட்டியலிலிருந்து Ascending என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

5, மீண்டும் QBEயில் state என்பதன்கீழ்உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

6,பின்னர்TN,AP என தட்டச்சு செய்க, உடன் QBE படம்-3-ல் உள்ளவாறு இருக்கும்,

 5.3படம்-3

வெற்று மதிப்பை தேடுதல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name ஆகிய புலங்களையும், tbl sales என்ற அட்டவணையிலிருந்து Sale dateஎன்ற புலத்தையும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக.

3, இதன்பின்னர்QBEயில் Sale date என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

4, அதில் is null என தட்டச்சு செய்க,இதன் QBE படம்-4-ல் உள்ளவாறு இருக்கும்,

 5.4படம்-4

And என்ற செயற்குறியைபுலங்களுக்கிடையே நிபந்தனையை குறிப்பிடுவதற்கு

செய்முறை பயிற்சி:

1 முதலில்,வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product,tbl product  , tbl salesஆகிய மூன்று அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர்tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name ஆகிய புலங்களையும்,description என்ற  புலத்தை tbl product என்ற அட்டவணையிலிருந்தும் கொண்டுவந்து QBEயில் சேர்க்கவும்

3, இதன்பின்னர்QBEயில் state என்பதன்கீழ்உள்ள sort என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4,அதில் KLஎன தட்டச்சு செய்க,

5, பின்னர் Query by Example(QBE)யில் description என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

6. இதன்பின்னர்savy என்பது போன்று தட்டச்சு செய்க,

கணக்கீடு புலத்தைவினாவில் உருவாக்குதல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product,tbl product  , tbl salesஆகிய மூன்று அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name ஆகிய புலங்களையும், price,discount price  ஆகிய புலங்களை tbl sales என்ற அட்டவணையிலிருந்தும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக

3, இதில் (QBEயில் )காலியான கடைசி செல்லை தெரிவுசெய்து சொடுக்குக

4,அதில் dicountamt: [tblsales].[price]*[tblesales].[discountpercent]என தட்டச்சு செய்து (படம்-5) வேறு செல்லை தெரிவுசெய்து சொடுக்குக, இந்த வினாவை இயக்குக உடன் திரையில்கழிவுத்தொகை() சரியாக கணக்கிட்டு  பிரிதிபலிக்கசெய்யும்,

 5.5படம்-5

அறிவியல் ஆய்விற்கு பயன்படும் CHReME என்ற இணையதளகருவி

CHReME என்பது இந்தியாவின் சிடாக் என்ற நிறுவனத்தால் உருவாக்கபட்ட ஒரு தனிப்பட்ட அதிவேக மிகத்திறன்வாய்ந்த கணக்கீட்டின்(High performance Computing(HPC))அடிப்படையில் அமைந்த இணைய அடிப்படையில் இயங்கும் HPC என்பதை பற்றி அறியாதவர்களும் பயன்படுத்திடக்கூடியதொரு கருவியாகும் .

இந்த HPC என்பது தருக்கவழிமுறைகளும் வன்பொருளும் மென்பொருளும்  சேர்ந்த ஒருதொகுதியான சவால்மிகுந்த சிக்கலான மிகமுன்னேறிய அதிககாலவிரையத்தை எற்படுத்தகூடிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது இது அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கான ஆய்விற்கும் மேம்பாட்டு செயலுக்கும் பாலமாக அமைகின்றது  மேலும் இது கணக்கீட்டு அறிவியல், திரவஇயக்கம், கணக்கீட்டு இயற்பியல், இரசாயனம் ஆகியவை உள்ளடக்கிய பொறியியல் ,கணினிஅறிவியல் ஆகிய அனைத்து துறைகளிலும்மி கமுக்கியமாகதொழிற்சாலையின் பயன்பாட்டிலும் பரவியுள்ளது

இதனை மொஸில்லாஃபயர்ஃபாக்ஸ் போன்ற எந்தவொரு இணையஉலாவியாலும் எங்கிருந்தும் நம்முடைய கணினியில் கூடுதலாக எந்தவொரு பயன்பாட்டினை நிறுவுகை செய்யாமலேயே இந்த CHReME என்ற தளத்திற்குள் உள்நுழைவு செய்வதன் மூலம் அனுகிடமுடியும். இந்தCHReME என்ற தளமானது அறிவியல் அறிஞர்கள் தம்முடைய ஆய்வுபணியை மேற்கொள்ளவும் நிருவகிக்கவும் கட்டுபடுத்தவும் உதவுகின்றது .இது ஒரு பயனாளரின் இனிய நண்பனை போன்று விளங்குகின்றது. ஒரு பயனாளர் சமர்ப்பிக்கும் தொகுதி கணக்கீட்டு பணி(batch jobs),இடைமுக கணக்கீட்டு பணி(interactive jobs) இணையான கணக்கீட்டு பணி (parallel jobs)ஆகியவற்றை Torque,Maui,PBApro  ஆகிய பணிமேலாளர்கள்மூலம் செயல்படுத்தி கட்டுபடுத்தி ஒளிவுமறைவற்ற வெளியீட்டினையும் தற்போதைய செயலின் நிலையையும் அறிக்கையாக மின்னஞ்சல் வாயிலாக வழங்குகின்றது. இந்த தளமானது செயல்களை பயனாளர் பகுதி(User Area), தளநிருவாகியின்பகுதி(Admin Area),பயன்பாடுகளின் குறிப்பிட்ட இடைமுகம்(Application Specific Interface) ஆகிய மூன்று வகையாக ஒரு பட்டியல் மூலம் வழங்கி அவற்றுள் பயனாளர் ஒருவர் தேவையானதை தெரிவுசெய்து செயல்படுத்திடுமாறான வாய்ப்பை வழங்குகின்றது

இது SSHவலைபின்னல் வழிமுறையை பின்பற்றுவதால் ஒரு வாடிக்கையாளர்இந்தHPC  அமைப்பு தளமான CHReME என்ற தளத்திற்கும் வாடிக்கையாளர் கணினிக்குமிடையேயான தரவுகளின் பகிர்வு செயலின்போது மிகுந்த பாதுகாப்பை வழங்குகின்றது

இதனுடைய வாடிக்கையாளர் பயன்படுத்திடும்  பயனாளர் பகுதி(User Area)யில் பணியை உருவாக்குதல் மற்றும் சமர்ப்பித்தல்(job creation and submission),பணியை கட்டுபடுத்துதல்(job monitoring),கோப்பினை பதிவேற்றம் செய்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல்(file uploading and   downloads), கோப்பகத்தை அல்லது அடைவை கட்டமைத்தல்(Directory structure).வளங்களின் தொகுதி தகவல்களை பராமரித்தல் (cluster resources information),உள்நுழைவு தகவல்களை பராமரித்தல்(log information), இணையத்தில் நேரடியான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டியை வழங்குதல் (online tutorials and manuals)என்பனபோன்ற எண்ணற்ற சேவைகளை வழங்குகின்றது

இதனுடைய தளநிருவாகியின்பகுதி(Admin Area)யில்  பயனாளர் நம்பிக்கையை நிருவதித்தல் (user credential management), வாடிக்கையாளர்வரிசைகட்டமைவை நிருவகித்தல்(Que configuration management), வலங்களின் தொகுதியை நிருவகித்தல் மற்றும் கட்டுபடுத்துதல்(cluster resources management and monitoring), மொழிமாற்றியையும் நூலகத்தையும் நிருவகித்தல்(compilers and libraries,)  வேறுஏதேனும் செயல்இருந்தால் அவற்றை நிருவகித்தல்(other information)  என்பனபோன்ற எண்ணற்ற சேவைகளை வழங்குகின்றது

இதனுடைய பயன்பாடுகளின் குறிப்பிட்டஇடைமுகம்(Application Specific Interface) என்ற பகுதியில்  பணித்தொடரை உருவாக்குதல்(workflow creation) , பயன்பாட்டினை செயல்படுத்துதல் (Execution), பணித்தொடரை அமைத்தல்(workflow settings),மின்னஞ்சல் மூலம் வாடிக்கை யாளர்களுக்கு நிகழ்வை அறிவித்தல்(event intimation)என்பனபோன்ற எண்ணற்ற சேவைகளை வழங்குகின்றது

79.1.1

திறமூல இயந்திரமனிதபயன்பாடுகள்

79.2.1

ரோப்கோட் (Robocode) என்பது ஒரு இயந்திரமனித  விளையாட்டிற்கான திறமூல நிரல்தொடராகும்  இதில் ஒரு இயந்திரமனிதனின் நிரல் தொடர் எனும் டேங்க் ஆனது ஜாவா ,டாட்நெட் ஆகிய நிரல் தொடரால் உருவாக்கபட்ட பல டேங்க்குகள் அடங்கிய படையை வெற்றிகொள்வதே இதனுடைய குறிக்கோளாகும் இந்த இயந்திரமனித டேங்க்குகளின் போரானது நிகழ்வுநிலையில் திரையில் காட்சியாக தோன்றுகின்றதும்  இதனை http://robocode.sourceforge.net/ என்ற தளத்திலிருந்து விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் பதிப்பாக தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்  இதனை செயல்படுத்திட ஜாவா5.0 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு நம்முடைய கணினியில் இருக்கவேண்டும்

79.2.2

சிம்பேட்(simbad) என்பது ஜாவாவை அடிப்படையாக கொண்டியங்கிடும் முப்பரிமான இயந்திரமனித திறமூல நிரல்தொடர் விளையாட்டாகும் இது sensors, bambers, cameraஆகியவற்றை ஆதரிக்ககூடியது இயற்கை  வலைபின்னலை அடிப்படையாக கொண்ட தருக்கவழிமுறைகளின் குறிமுறைகளை உள்ளடக்கிய வசதிகளை நிரல்தொடராளருக்கு வழங்குகின்றது இதனை http://simbad.sourceforge.net/ என்ற தளத்திலிருந்து விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் பதிப்பாக தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்

மேலும் இதுபோன்ற திறமூலநிரல்தொடர் எந்திரமனித பயன்பாடு தேவையெனி்ல்

http://microsoft.com/robotics/ ,http://cyberbotics.com/overview/  என்பனபோன்ற இணையதளத்தி்றசென்று  பதிவிறக்கம் செய்து கொள்க

 

கிளவுட் ஸ்விங்க் என்ற இணைய சேவை

கிளவுட் ஸ்விங்க் என்பது இதுவரையில் இல்லாத நெகிழ்வுதன்மையுடனான ஒருசேவைக்கேற்ற மேக கணினிகளின் தீர்வுதளமாக விளங்குகின்றது இது வாடிக்கையாளர் விரும்பிய சேவையை அவர்கள் விரும்பும் கட்டண அளவிற்கே கிடைக்கின்றது  இது மிக பாதுகாப்பானது ,வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளும் வண்ணம் நெகிழ்வுதன்மை கொண்டது ,இதனை செயற்படுத்திடும்போது  சிறந்த வல்லுனர்களின் ஆதரவு  கிடைக்கின்றது இது பயன்பாடுகளை கட்டுபடுத்திடும் திறன்கொண்டது  ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து திறமூல பயன்பாடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கசெய்கின்றது எந்தவொரு பயன்பாட்டினையும் எந்தவொரு தொழில்நுட்பத்தில் இயங்கும் மேககணினிகளின் தளங்களிலும் செயல்படுமாறு செய்யவல்ல திறன்கொண்டது. இதில்முன்கூட்டியே கட்டமைக்கபட்ட LAMP,Tomcat,Railss,Node.jsஎன்பனபோன்ற தளங்களினால் 600  இற்குமேற்பட்ட பயன்பாட்டு திறமூல கட்டுகளை ஆதரிக்கும் திறன்கொண்டதாக உள்ளது.   இது மேக கணினி,இயக்கமுறைமை,மெய்நிகர்கணினி ஆகிய ஏதாவதொரு வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்ளும் சுதந்திரத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது

கிளவுட் ஸ்விங்க் அடிப்படையில் ஒரு சிறு ஜாவா இணையபயன்பாட்டிற்கான வழிமுறை பின்வருமாறு

1 முதலில் http://cloudswing.openlogic.com/ ஜாவா பயன்பாட்டினை ஒதுக்கீடு செய்து முப்பதுமணிநேரம் பயன்படுத்துவதற்காக பதிவுசெய்துகொள்க

2  Tomcat என்ற தளத்தினை ஜாவா பயன்பாட்டினை பயன்படுத்திகொள்வதற்காக  தெரிவுசெய்துகொள்க

3  Tomcat என்ற முன்கூட்டியே கட்டமைக்கபட்ட தளத்தில் செயல்படும்   ஜாவா பயன்பாட்டினையும் மற்ற துனைப்பயன்பாடுகளையும் அதில் சேர்த்து கொள்க

4 மேககணினிகளின் சேவையாளரர்களான அமோஸான், ரேக்ஸ்பேஸ் ஆகியவற்றில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க

5 மெய்நிகர் கணினியை நிறுவிகொண்டு இதற்கான ஜபிமுகவரியையும் பெற்றுகொள்க  எங்கிருந்தும் அனுகிடுவதற்காக SSH திறவுகோலை பதிவிறக்கம்செய்துகொள்க

6  இணைய உலாவியின் மூலம் மெய்நிகர்கணினியின் ஜபிமுகவரிமூலம்  Tomcat என்ற தளம் செயல்படுகின்றதாவென சரிபார்த்துகொள்க

7 WAR  என்ற  கோப்பினை நம்முடைய கணினியிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் கணினிக்கும் அங்கிருந்து ந்ம்முடையகணினிக்கும் பதிவேற்றம் பதிவிறக்கம் செய்து கொள்க

8 இவ்விரண்டு கணினியையும் MySQL வாடிக்கையாளர் ஆகிய  ஒரு தரவுதளத்தின அட்டவணை,வினா போன்ற கோப்புகளை உருவாக்குக.

9 ஒருபுதிய தரவுதளத்தினை கட்டமைவுசெய்க

10 உலாவியின் மூலம் இணைப்பு பெற்றபின் நம்முடைய பயன்பாட்டினை செயல்படுத்திடுக

11  இதன்பின் கிளவுட் ஸ்விங்க் முகப்பு பக்கத்தில் நம்முடைய பயன்பாட்டினை கட்டுபடுத்திடமுடியும்

79.3

விண்டோ எக்ஸ்ப்ளோரர் எனும் இணைய உலாவியில் விரும்பிய தேடுபொறியை இயற்புநிலையில் செயற்படுமாறு செய்திட

விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர் எனில் அதில் வழக்கமாக இயல்புநிலையில் உள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோ எக்ஸ்ப்ளோரர்தான் இணைய உலாவியாகக இருப்பதைகாணலாம்

சரி பரவாயில்லை என இந்த   விண்டோ எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியை செயற்படுத்தியவுடன்  அதில்  இதே மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினுடைய பிங்க் என்ற தேடுபொறியைத்தான் பயனாளர் ஒருவர் பயன்படுத்தி கொள்ளுமாறு  இயல்புநிலையில் அமைத்து இருப்பார்கள் நாமும் இதை விட்டால் வேறுவழியில்லையா எனதேடி தவித்திடுவாம்

அஞ்சற்க நாம் விரும்பிய இணைய உலாவி இல்லையென்றாலும் பரவாயில்லை நாம் விரும்பிய தேடுபொறியையாவது இயற்புநிலையில் இதில் செயற்படுமாறு செய்யமுடியும்  அதற்காக இந்த   விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையின் மேலே வலதுபுற மூலையிலிருக்கும் பற்சக்கரம் போன்ற அல்லது Toolsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் பட்டியில் Manage Add-ons என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும்  Manage Add-ons என்ற திரையின் இடதுபுற பலகத்தில் Add-ons  types என்பதன்கீழ் உள்ள Search providers என்ற வகையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்விரியும் திரையின் கீழ்பகுதியிலுள்ள   Find more search providers.. என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக  பிறகு தோன்றிடும்  internet explorer galleryஎன்ற திரையில் தேவையான தேடுபொறியை தெரிவுசெய்து கொண்டு Add to internet explore என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும்Add Search provider என்ற உரையாடல் பெட்டியில் make this my default providerஎன்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசய்துகொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக நம்முடைய கணினியில் இயங்கும் விண்டோ எக்ஸ்ப்ளோரர்  என்ற பயன்பாட்டு திரையை மூடியபின் மீண்டும் செயற்படுத்தினால் நாம் விரும்பிய தேடுபொறியானது இயல்புநிலையில் இந்த விண்டோ எக்ஸ்ப்ளோரர்  இணைய உலாவியில் விரிவதைகாணலாம்

79.4

ஒலிஒளிபடங்களின் கோப்புகளை உருமாற்றம் செய்து ஐபோன்போன்ற கருவிகளில் காணஉதவிடும் கருவி

நம்முடைய கணினியில் ஒலிஒளிபடங்களின் கோப்புகளை கைவசம் ஏராளமாக வைத்துள்ளோம் ஆனால் நாம் அவைகளை நம்முடைய செல்லிடத்து பேசியில் ,மடிக்கணியில் , வீடியோ விளையாட்டை மட்டும் பயன்படுத்தும் சாதனம் அல்லது ஐபோன்போன்ற கருவிகளில் பயன்படுத்திட விரும்பும் நிலையில் இந்த கணினியில் உள்ள வீடியோ கோப்புகள் இந்த கருவிகளில் செயற்படு்த்தி திரைகாட்சியாக காணமுடியாத நிலை தற்போது உள்ளது  வீடியோ கோப்புகளை இந்த கருவிகளிலும் காண்பதற்கேற்ப உருமாற்றம் செய்வதற்காக   Miro Video Converter என்ற பயன்பாட்டினை இதனுடைய http://www.mirovideoconverter.com/ என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அவை கூறும் வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய கணினியில்  நிறுவிகொள்க பின்னர் இந்த பயன்பாட்டினை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில்To covert drag a video file here or choose a file  என்ற பகுதியில்  வீடியோகோப்புகள் இருக்குமிடம் நமக்குத்தெரிந்து இருந்தால் அவ்வாறான கோப்பினை பிடித்து இழுத்துவந்து இந்த பகுதியில் விட்டிடுக அல்லது வீடியோகோப்புகள் இருக்குமிடம் தெரியவில்லையெனில்  choose a fileஎன்ற கட்டளையை தெரிவுசெய்து பிடித்து சொடுக்குக  விரியும் திரையில் உருமாற்றம் செய்யவிரும்பும் வீடியோ கோப்புகள் இருக்குமிடத்தை தேடிபிடித்து  தெரிவுசெய்தவுடன் அக்கோப்பின் பெயர் இந்த பெட்டிக்குள் தோன்றிடும் தொடர்ந்து இந்த பெட்டியின் மேல்பகுதியில் Ready to convert என்று காண்பிக்கும் உடன் இந்த பெட்டிக்கு கீழ்பகுதியிலிருக்கும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து எந்தவகையான கருவியில் இந்த வீடியோ கோப்பு செயல்படவேண்டும் என்பதை iphoneஎன்றவாறு நம்முடைய கருவியின் வகையை தெரிவுசெய்து கொண்டு convertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் உருமாற்றும் பணி நடைபெற்று முடிவுற்றதும் show fileஎன்ற இணைப்பு தோன்றிடும் அதனை தெரிவுசெய்து  சொடுக்கியவுடன் உருமாற்றம் செய்யப்பட்ட கோப்பு புதியதொருபெயரில் இருப்பதை காணலாம்  அதனை தேவையான கருவிக்கு நகலெடுத்து ஒட்டிக்கொள்ளமுடியும்  குறிப்பிட்ட கருவியில் இந்த வீடியோ கோப்பினை இயக்குவதற்காக எந்தவொரு சிறப்பு பயன்பாடு இல்லாமலேயே இந்த உருமாற்றபட்ட கோப்பினை செயற்படுத்தி காணமுடியும்

79.5

கடவுச்சொற்களின் பாதுகாப்பு

இணையத்தில் அபகரிப்போர்களிடமிருந்து நம்முடைய கடவுச்சொற்களை பாதுகாப்பது குறித்து use a secure password என்றவாறு ஆயிரகணக்கான எச்சரிக்கை  செய்திகள் நமக்கு ஏராளமாக வருவதை காணலாம் சரிதான் இவ்வாறு அனைவரும் நம்மை எச்சரிக்கின்றார்களே என 8gh4LnGpO? என்றவாறு நம்முடைய கடவுச்சொற்களை மாற்றி அமைத்திட்டால்  நம்மால் இவற்றை நம்முடைய நினைவில் பதியவைத்து நினைவுபடுத்திடமுடியமா? அல்லது அவ்வாறு இதனை நம்முடைய நினைவில் வைத்திருக்கமுடியாது என எதேனும் தாளில் எழுதி வைத்திட்டால் நாமே நம்முடைய வீட்டின் சாவியை பொதுமக்களின் பார்வையில் வைத்தாற்போன்று ஆகிவிடுமே என்னசெய்வது எனஅல்லாடும் நிலையில் http://www.passwordcard.org/en என்ற தளம் நமக்கு கைகொடுக்கின்றதுஇதில்நாம் விரும்பியவாறு கடவுச்சொற்களை குறியீடுகளுடன் சேர்த்து உருவாக்கிகொள்ளலாம் அல்லது தானாகவே குறியீடுகளுடன் சேர்த்து அல்லது குறியீடுகள் இல்லாமல் உருவாகுமாறு செய்யலாம் பின் இந்த PasswordCard ஐ  அச்சிட்டு வைத்துகொள்ளலாம் இதனை வைத்து நம்மைத்தவிர வேறுயாரும் நம்முடைய கடவுச்சொற்களை யூகிக்கமுடியாது  நாம் மட்டும் இந்த கடவுச்சொற்களின் அட்டையில் எத்தனையாவது வரியில் எத்தனையாவது எழுத்தில் அல்லது எந்த குறியீட்டிற்கு பின் தொடங்குகின்றது எத்தனை எழுத்துகள் கொண்டது எத்னை எழுத்துகள் எத்தனைவரிகள் தாண்டி செல்லவேண்டும் என்பனபோன்ற விவரங்களை மட்டும் மனதில் பதியவைத்துகொண்டால் போதும்  நம்முடைய இந்த கடவுச்சொற்களின் அட்டவணை தொலைந்து விட்டதுஎன்றால்கூட பரவாயில் பாதுகாப்பு எண்ணை கொண்டு மீண்டும் இதனைஅச்சிட்டு கொள்ளலாம்

79.6

Previous Older Entries