கைபேசி படத்தொகுப்பில் தந்தி( Telegram) படங்களை சேமிப்பதை நிறுத்துவது எவ்வாறு

எண்ணற்ற வழிகளில் வாட்ஸ்அப்பை விட தந்தி( Telegram) மிகச் சிறந்தது, மேலும் நாம் தந்திக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டிய காரணங்கள் பின்வருமாறு. இது துவக்கநிலையாளர்களுக்கு எளிதானது, இது உலகின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கிற்கு சொந்தமானது அன்று. எனவே இது ஒரு பெரிய நன்மையாகும் நாம் எதிர்பார்ப்பது போல, தந்தி சிறிய தந்திரங்களால் நிரம்பியுள்ளது, இது செய்தியிடல் பயன்பாட்டை இன்னும் சுவாரஸ்யமாகப் பயன்படுத்துகிறது. இதுபோன்ற ஒரு வசதி, நாம் பெறும் படங்களை நம்முடைய கைபேசியின் படத்தொகுப்பில் தானாகவே சேமிப்பதைத் தடுக்கும் திறன்கொண்டது.
புகைப்படங்களைச் சேமிப்பதில் இருந்து தந்தியை நம்முடைய தந்தி( Telegram) யின் படங்கள் நம்முடைய படத்தொகுப்பில் காண்பிக்கப்பட்டால், அவற்றை நாம் விரும்பவில்லை எனில், தானாக பதிவிறக்கம் செய்யும் செயல்முறையைத் தடுக்க முடியும்.அவ்வாறு
புகைப்படங்களைச் சேமிப்பதில் இருந்து தந்தியில் எவ்வாறு நிறுத்துவது என்பதை அறிய, கீழே உள்ள எளிய படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றிடுக:

  1. இந்த பயன்பாட்டைத் திரையில் தோன்றிடசெய்திடுக.
  2. சாளரத்தின் மேல் இடது புற மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகளில் தட்டுக.
  3. உடன்விரியும் புதிய பட்டியில், Settings என்பதை த் தேர்ந்தெடுத்திடுக.
  4. அரட்டை அமைப்புகளின் (Chat Settings ) பிரிவுக்கு சென்றிடுக.
  5. Save to Gallery என்பதில்அடுத்த நிலை மாற்றத்தை Off எனும்நிலைக்கு நகர்த்திடுக.
    (NB: இந்த அமைப்பை மாற்றுவது சாதனத்தில் நாம் ஏற்கனவே பதிவிறக்கிய படங்களை பாதிக்காது.)
    வாட்ஸ்அப்பைப் போலன்றி ( தானியங்கி பதிவிறக்கங்களை முடக்கும்போது படங்களை மழுங்கடிக்கும்), தந்தி படங்களை திரையில் அவற்றின் எல்லா வகையிலும் காண முடியும்.
    நம்முடைய தொகுப்பில் ஒரு படத்தைச் சேமிக்க விரும்பினால், படத்தைத் திறந்து அதன் மேலே வலது புற மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை சொடுக்குக. உடன் விரியும் மேல்மீட்பு பட்டியில், Save to Gallery என்பதைத் தேர்ந்தெடுத்திடுக.

எம்எஸ்எக்செலில் தரவு பகுப்பாய்விற்கான pivot எனும் அட்டவணையை உருவாக்குதல்

பெரிய தரவுத்தொகுப்புகளை ஒரு தனியான, சுருக்கமான அட்டவணையில் தானாக ஒடுக்க ஒரு ஊடாடும் தரவுகளின் சுருக்கக் கருவியாக இந்த பிவோட் (pivot )எனும் அட்டவணையைப் பயன்படுத்தலாம். ஒரு பெரிய தரவுகளின்தொகுப்பின் தகவலறிந்த சுருக்கத்தை உருவாக்க அல்லது முக்கிய விற்பனைக்கு இடையில் ஒப்பீடுகளைச் செய்ய இதைப் பயன்படுத்தலாம்
பிவோட் (pivot)அட்டவணைஎன்றால்என்ன?
புள்ளிவிவரங்களை நிருவகிக்க பெரிய தரவுகளின்தொகுப்புகளை எளிதாக்குவதற்கான ஒரு வழிமுறையான பிவோட் அட்டவணை எனும் வசதியாகும் இதனை கொண்டு . புதிய போக்குகள் , தரவுகளுக்கிடை யேயான இணைப்புகளைக் கண்டறிய தரவுகளை முன்னிலைப்படுத்த பிவோட் அட்டவணை எனும் வசதியைப் பயன்படுத்திகொள்ளலாம்.இது எக்செல்லில் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான முதன்மை வழிமுறையான வழக்கமான தட்டையான அட்டவணை, போன்றதாகும்
தட்டையான அட்டவணையில் தரவுகளை கொண்ட பல்வேறுநெடுவரிசைகளும் கிடைவரிசைகளும் உள்ளன. இந்த தரவுகளின் மூலம் ஒரு சில அடிப்படை போக்குகளை அறியலாம், குறிப்பாக ஒரு சிறிய தரவுத்தொகுப்பு மூலம். இதனை அறியலாம் இருப்பினும், நம்மிடம் ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உள்ளீடுகளைக் கொண்ட தரவுகளின்தொகுப்பு இருந்தால், அவைகளின் போக்குகளை ஒரே பார்வையில் புரிந்து கொள்ள முடியாது. அந்த சந்தர்ப்பத்தில், கிடைக்கக்கூடிய வகைகளைப் பயன்படுத்தி தரவுகளை வரிசைப்படுத்தவும் இணைக்கவும் ஒரு மைய அட்டவணையை உருவாக்கலாம்
பிவோட் அட்டவணையைப் பற்றிய சிறந்த செய்திகளில் ஒன்று, தரவுகளை மறுசீரமைக்கக்கூடிய வேகம். சிக்கலான ஒப்பீட்டு சூத்திரங்களை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லைஎன்பதுதான், மேலும் ஒரு மைய அட்டவணையுடன் பணிபுரிய எக்செல் சார்பாக இருக்கத் தேவையில்லை. இன்னும் சிறப்பாக, நாம் விரும்பும் போதெல்லாம் பிவோட் அட்டவணையை மீட்டமைத்து புதிதாக தொடங்கலாம்.
எக்செல்லில்பிவோட்அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது?
எம்எஸ்எக்செல்லானது ஒரு சிறந்த ஒருங்கிணைந்த பிவோட் அட்டவணை வாய்ப்பினைக் கொண்டுள்ளது. பிவோட் அட்டவணைகளைப் பயன்படுத்தும் ஒரு விரிதாளின் நிரலிலிருந்து எக்செல் வெகு தொலைவில் உள்ளது என்பதை கவணத்தில்கொள்க. மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸின் மாற்றுகளான லிப்ரே ஆபிஸின் Spreadsheet கூகுளின் G-Suite ஆகிய அனைத்தும் இந்த பிவோட் அட்டவணைகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளன.
பிவோட் அட்டவணையை உருவாக்க, Insert எனும் தாவலின் திரைக்குச் சென்று PivotTable என்பதைத் தேர்ந்தெடுத்திடுக. பின்னர் இந்த பிவோட் அட்டவணையில் நாம் சேர்க்க விரும்பும் அட்டவணை அல்லது தரவு வரம்பைத் (data range )தேர்ந்தெடுத்திடுக.. இதில்வெளிப்புற தரவு மூலத்தை (அதாவது, MS Access) இணைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதை காண முடியும் , அல்லது இருக்கும் பணித்தாளில் பிவோட் அட்டவணையை வைத்திடுக. பிந்தைய வாய்ப்பிற்காக, புதிய பிவோட் அட்டவணையானது ஏற்கனவே இருக்கும் தரவை மறைக்காது அல்லது உடைக்காது என்பதை சரிபார்த்திடுக (ஏதாவது நடந்தால் செயல்தவிர்க்க எப்போதும் CTRL + Z ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக!).
பிவோட்அட்டவணைதரவைவரிசைப்படுத்துதல்
அடுத்து OK எனும் பொத்தானைஅழுத்தினால், வலதுபுறத்தில்முன்னிலை அட்டவணை புதிய பணித்தாளில் காலியாகத் துவங்குகிறது. , திரையில் PivotTable Fields எனும் பலகத்தை காணலாம். இந்த குழுவில் பெயர்கள், முகவரிகள், விற்பனை , இதுபோன்ற பல தரவுத் தொகுப்பிலிருந்து தரவு வரம்புகள் உள்ளன. இங்கேயிருந்து, நம்முடைய முன்னிலை அட்டவணையில் தரவுகளைச் சேர்க்க நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன:
1. இழுத்து சென்றுவிடுதல்(Drag and Drop): வலது புறத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மைய அட்டவணை புலங்களை கீழே உள்ள நான்கு பகுதிகளுக்கு (வடிப்பான்கள், நெடுவரிசைகள், வரிசைகள் , மதிப்புகள்) இழுத்து சென்றுவிடலாம். எந்தவொரு வேறுபாட்டிற்கும் எதிராக நாம் குறுக்கு-குறிப்பினை விரும்பும் குறிப்பிட்ட தரவு உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. அறிக்கையில் சேர்த்தல்(Add to Report): தனிப்பட்ட தரவுத்தொகுப்பு புலங்களைக் சொடுக்குவதால் அவை நேரடியாக காத்திருப்பு அறிக்கை அட்டவணையில் சேர்க்கப்படும். கிடைக்கக்கூடிய தரவை விரைவாக உருவாக்க, பகுப்பாய்வு செய்ய, இணைக்க , மாற்ற இந்த முறையைப் பயன்படுத்திகொள்க.
இந்த இரண்டு வழிமுறைகளும் ஒரே மாதிரியான முடிவுகளை வழங்கும் அதே வேளையில், அறிக்கையில் சேர்த்தலானது நம்முடைய விருப்பமான தரவுத் துறையைத் தேர்ந்தெடுத்து, நம்முடைய அறிக்கை அட்டவணை உருமாறும் போது ஆச்சரியப்படுவதை அனுமதிக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தரவு புலத்தை நாம் சொடுக்கும் போது, அது தானாகவே எக்செல் சரியானது எனக் கருதப்படும் பகுதிக்குச் சேர்க்கின்றது, அதே நேரத்தில் நெடுவரிசைப் பகுதிக்கு 16384 க்கும் மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட ஒரு தரவு புலத்தை சேர்க்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது.
பிவோட்அட்டவணைதரவுவரம்புகளைத்தேர்ந்தெடுப்பது
நாம் பயன்படுத்தும் பிவோட் அட்டவணையின் எடுத்துக்காட்டு அடிப்படையை. புரிந்துகொள்ள எளிதான ஒரு சில மாதிரி தரவு புள்ளிகள் இதில் உள்ளன.பிவோட் அட்டவணையின் புலங்கள் பட்டியலிலிருந்து, County , Sales Volume, Sales Total, Product. ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்திடுக.
இப்போது நம்முடைய பிவோட் அட்டவணையின் தரவைப் பார்த்து எந்த போக்குகளுக்கும் தரவை பகுப்பாய்வு செய்யலாம். ஒவ்வொரு பிரிவின் கண்ணோட்டத்தையும் காண விரும்பினால், சுட்டியின் வலது புறம் சொடுக்குதல் செய்தபின் விரியும் சூழ்நிலை பட்டியில் Expand/Collapse => Collapse Entire Field => என்றவாறு கட்டளைகளைத் தெரிவுசெய்து சொடுக்குக.
பிவோட்அட்டவணையில்தரவைவடிகட்டுதல்
எந்த வகையான தரவு சுருக்கமான தொடர்புகளை உருவாக்குகிறது என்பதை அறிந்துகொள்க, எந்த தரவு புலங்களுக்கு அவற்றின் ரகசியங்களை வெளிப்படுத்தவும் வடிகட்டி அமைப்புகளின் மதிப்பு நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்படுகிறது என அறிந்துகொள்க:
1. விரும்பிய தரவு புலத்தின் மீது வட்டமிட்ட, உரையின் வலதுபுறத்தில் சிறிய கருப்பு அம்புக்குறியைக் கவனித்திடுக
2. கருப்பு அம்புக்குறியைத் தேர்ந்தெடுப்பது ஒரு கீழிறங்கு ‘Filter’ எனும் பட்டியலை வெளிப்படுத்துகிறது – ஒரு புலத்தில் தரவை தனிமைப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அல்லது பல தரவு மூலங்களில் ஒத்த தரவு வரம்புகளுக்கு இடையிலான ஒப்பீடுகளை செய்திடலாம்.
3. County எனும்வடிகட்டி பட்டியலைத் தேர்ந்தெடுத்திடுக.
4. இயல்பாக, எல்லா தரவு வரம்புகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Unselect all (select all என்பதை அழுத்துவதன் மூலம்), அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்ந்தெடுப்பது ஒருசில நாடுகளில் செய்யப்படுகின்றது

இது இந்த நாடுகளுக்கான தரவை தனிமைப்படுத்துகிறது, முன்னிலை அட்டவணையை சுருக்கமான, ஒப்பீட்டு தரவுகளால் நிரப்புகிறது, சாத்தியமான போக்குகளுக்கு பகுப்பாய்வு செய்யத் துவங்க முடியும்.
கிடைக்கக்கூடிய ஒவ்வொரு புலத்தின் வடிப்பான்களையும் மாற்றியமைப்பது, முன்னிலை அட்டவணையில் வழங்கப்பட்ட தரவை எப்போதும் நேரடியாக மாற்றும், மேலும் இது தரவின் உண்மையான திறனைத் திறப்பதற்கான ஒரு நிச்சயமான முறையாகும்.
தரவு போக்குகளைக் கண்டறிய பிவோட் அட்டவணைகளைப் பயன்படுத்திடுக
தரவை புதிய கோணங்களில் செயல்படுவதற்கு ஒரு பிவோட் அட்டவணையைப் பயன்படுத்தலாம், பணி, வணிகம் அல்லது பிறவற்றிற்கான புதிய போக்குகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறிய உதவுகிறது. பிவோட் அட்டவணைகளில் பணி செய்ய அதிக அளவு தரவு, பல தரவு புலங்கள் மற்றும் சில நகல் தரவு புலங்கள் இருக்கும்போது சிறப்பாக செயல்படுகின்றன.

சிறந்த குறிமுறைவரிகளை எழுதுவதற்கான பைதான் உதவிக்குறிப்புகளும் தந்திரங்களும்

சமீபத்திய பைதானின் வசதிகளுடனும், தொழில்நுட்பங்களுடனும், உதவிக்குறிப்புகளுடனும், தந்திரங்களுடனும் புதுப்பித்த நிலையில் இருப்பதன் மூலம் குறிமுறைவரிகளின் தரத்தை மேம்படுத்திடுக
1. எஃப்-எனும் சரங்கள்( F-Strings)
நிரலாக்கத்தை சிறப்பாக வடிவமைக்க நிரலாளர்களுக்குள் பைதான் வெளியீடுகளை உட்பொதிக்க F-Strings எனும் ஒரு சுருக்கமான , வசதியான வழியை வழங்குகிறது. இதற்காக முதலில், அச்சிடும் அறிக்கையில் சேர்க்க விரும்பும் இரண்டு மாறிகளின் பெயர் , வயது ஆகியவற்றை பின்வருமாறு வரையறுத்திடுக.
பெயர் = “”SK”
வயது = 60
அச்சு அறிக்கையில் சரத்தை இணைத்திட அல்லது காற்புள்ளிகளைப் பயன்படுத்திடவேண்டாம், அதற்காக பைதான் 3.6 உடன் வெளியிடப்பட்ட பைத்தானின் மேம்பட்ட சர வடிவமைப்பு தொடரியல் “f-Strings”ஐப் பயன்படுத்தலாம்.சுருள் அடைப்புகளுக்குள் உள்ள மாறிகள் அல்லது வெளியீடுகளுடன் சரத்திற்கு முன் “f” என்ற சிறிய எழுத்து அல்லது பெரிய எழுத்தை பயன்படுத்திகொள்க.“f-Strings” என்பது சரங்களை வடிவமைப்பதற்கான ஒரு புதிய வழிமுறையாகும், மேலும் அவைகளில் படிக்கக்கூடிய, வேகமான, சுருக்கமான , வடிவமைப்பின் பிற வழிகளைக் காட்டிலும் பிழையின் வாய்ப்புகள் குறைவாகும்!
2. உதவி செயலி( The Help Function)
தொகுதிகள், செயல்பாடுகள், இனங்கள், முக்கிய சொற்கள் போன்றவற்றின் ஆவணங்களைத் தேட பைதானில் உதவி செயலிகளை பயன்படுத்திகொள்ளப்படுகின்றது.அந்த பொருளின் ஆவணங்களை மீட்டெடுக்க உதவி செயலியின் உள்ளே ஒரு பொருளை அனுப்பிடுக

3. எந்த பொருளின் அளவையும் கண்டறிதல்( Find the Size of Any Object)
பொருள் எந்த வகையிலும் இருந்தாலும் இயல்புநிலையிலான sys எனும் தொகுதிக்கூறு அந்த பொருளை எடுத்து அதன் அளவை பைட்டுகளில் தரும் ஒரு செயலியை பெறுகிறது. .உதாரணமாக:பொருளுக்கு நேரடியாகக் கூறப்படும் நினைவக நுகர்வை மட்டுமே கணக்கிடப்படுகிறது, ஆனால் அது குறிக்கும் பொருட்களின் நினைவக நுகர்வு அன்று.

4. ஒப்பீட்டு இயக்கிகளின் சங்கிலி( Chaining of Comparison Operators)
பொதுவாக இரண்டு நிபந்தனைகளுக்கு மேல் சரிபார்க்க, and/or போன்ற தருக்க இயக்கிகளைப் பயன்படுத்தி கொள்க
if a < b and b < c:
பைத்தானில், ஒப்பீட்டு இயக்கிகளின் சங்கிலியைப் பயன்படுத்தி இதை எழுத சிறந்த வழி உள்ளது.
இயக்கிகளின் சங்கிலி பின்வருமாறு எழுதப்படலாம்:
if a < b < c:
உதாரணமாக:

  1. பட்டியலின் புரிதல்கள்( List Comprehensions)
    பட்டியலை புரிந்துகொள்ளுதல் என்பது பட்டியல்களை உருவாக்குவதற்கான மற்றொரு , பல மடங்கு நேர்த்தியான வழிமுறையாகும்.வெற்று பட்டியலை உருவாக்கி, ஒவ்வொரு உறுப்புகளையும் அந்த பட்டியலின் முடிவில் சேர்ப்பதற்கு பதிலாக, இந்த வடிவமைப்பைப் பின்பற்றுவதன் மூலம் பட்டியலையும் அதன் உள்ளடக்கங்களையும் ஒரே நேரத்தில் வரையறுக்கலாம்:
    new_list = [expression for item in iterable (if conditional)]
    உதாரணமாக:

மற்றொரு எடுத்துக்காட்டு (நிபந்தனையுடன்):

6. சரத்தை பெருக்குதல்( String Multiplication)
பைத்தானில், எண்களை மட்டுமல்ல, சரங்களையும் சாதாரண பெருக்கல் போன்று செயற்பபடுத்த முடியும்.
உதாரணமாக:

7. ஒரு வரியில் பல்வேறு மாறிகளை ஒதுக்கீடுசெய்தல்( Assign Multiple Variables in One Line)
காற்புள்ளிகளுடன் மாறிகளை மதிப்புகளைப் பிரிப்பதன் மூலம் பல்வேறு மதிப்புகளுக்கு பல்வேறு மதிப்புகளை ஒதுக்கீசெய்திடலாம் பட்டியல்கள்(lists ) அல்லது டுப்பிள்ஸ்(tuples ) போன்ற காட்சிகளை அழிக்கும் / திறக்கும்போது இதுவும் செயல்படுகிறது,

மேலும் ஒரு வரிசையின் கூறுகளை தனிப்பட்ட மாறிகளுக்கு ஒதுக்கீடுசெய்வதற்கு மிகவும் நேர்த்தியான வழியாகும், ஏனெனில் ஒரு சுழற்சியைப்(loop ) பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை அல்லது வரிசையின் ஒவ்வொரு உறுப்புகளையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டும்.

8. ஒருஇடத்தில் மாறிகளை பதிலாக மாற்றியமைத்தல்( Swap Variables In-Place)
பல நிரலாக்க மொழிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளின் மதிப்புகளை மாற்றியமைப்பதை கூடுதலாக தற்காலிமான( temp) மாறியை வரையறுப்பதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
x , y ஐ மாற்றியமைத்திடவிரும்புகின்றோம் எனில்
temp = x
x = y
y = temp
பைத்தானில், மாறிகளை மாற்றிமைப்பதற்கான ஒரு எளிய வரி கட்டுமானம் ஒன்றுஉள்ளது, இது ஒரு வரியில் பல மாறிகளுக்கு மதிப்புகளை ஒதுக்குவது என்ற கருத்தை ஒத்ததாகும்.பின்வரும் குறிமுறைவரிகள் மேலே உள்ளதைப் போலவே செய்கிறது, ஆனால் இதில் எந்த தற்காலிக மாறியைப் பயன்படுத்தி கொள்ளவில்லை:

9. ஒரு கணக்கிடு(Enum) உருவாக்குதல்
கணக்கீடுகளை உருவாக்குவதற்கான பைத்தானில் உள்ள ஒரு இணம் கணக்கிடு(Enum) ஆகும், அவை தனித்துவமான, நிலையான மதிப்புகளுடன் இணைக்கப்பட்ட குறிமுறை பெயர்களின் தொகுப்பாகும்.
ஒருகணக்கீட்டை(Enum) உருவாக்குவதற்காக, நாம் விரும்பும் கணக்கிட்டின்(Enum) பெயரான ஒரு இனத்தை உருவாக்குவது அவசியமாகும்.நாம் செய்ய வேண்டியது எல்லாம் மாறிகள் பட்டியலிட்டு அவற்றை நாம் விரும்பும் மதிப்புகளுக்கு சமமாக அமைத்தல் மட்டுமேயாகும்:உதாரணமாக

Enum memberPaulas ஐ ஒரு எடுத்துக்காட்டினை அணுக, Person.Paul ஐ செய்ய முடியும், இது 0 ஐத் தரும்.
பைத்தானில், ஒருவருக்கொருவர் அருகிலுள்ள மாறிகளை பட்டியலிட்டு அவற்றை வரம்பு செயல்பாட்டிற்கு சமமாக அமைப்பதன் மூலம் மேலே உள்ள உதாரணத்தை சுருக்கலாம்:

  1. கணக்கிடுதல் (Enumerate)
    பெரும்பாலும் ஒரு பட்டியலைத் தேடும்போது பட்டியலில் ஒரு நிலையைக் கொண்ட குறிமுறை மட்டுமல்லாமல் உண்மையான உறுப்பையும் அணுக விரும்புவோம். உதாரணமாக எழுத்துகளின் பட்டியலை வரையறுப்போம்:
    x = [‘a’, ‘b’, ‘c’]

உறுப்பு மற்றும் குறிமுறையை அணுக, நிலையான வழியை அதன் வழியாக சுழற்றுவதற்கு பதிலாக:
கணக்கிடுதலை பயன்படுத்திகொள்க.கணக்கிடுதல் (Enumerate)என்பது பைத்தானின் உள்ளமைக்கப்பட்ட செயலியாகும், மேலும் இது ஒரு மறுபயன்பாட்டுக்கு மேல் சுழல( loop) மற்றும் தானியங்கி கணக்கீட்டைக் (counter) கொண்டிருக்க அனுமதிக்கிறது. இது பட்டியலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் தொடர்புடைய குறிமுறையுடன் இணைக்கிறது. பெரும்பாலான புதியவர்கள் மட்டுமல்லாது ஒருசில மேம்பட்ட நிரலாளர்கள் கூட இதை அறிந்திருக்க மாட்டார்கள்.

I மற்றும் v மாறிகளை நாம் விரும்பும் மாறி பெயர்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக, குறிமுறையைப் பொறுத்தவரை, enumerate(x).இல் கணக்கிடுக.
11.dir எனும் செயலி
dir () என்பது பைதான் 3 இல் உள்ள ஒரு சக்திவாய்ந்த உள்ளடங்கிய செயலியாகும், இது எந்தவொரு பொருளின் பண்புக்கூறுகள் முறைகள் ஆகியவற்றின் பட்டியலை வழங்குகிறது, அதாவது செயலிகள், தொகுதிகள், சரங்கள், பட்டியல்கள், அகராதிகள் போன்றவைகளை வழங்குகிறது, . தொகுதி பற்றி எந்த தகவலும் இல்லாதபோது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் புதிய தொகுதிகளை விரைவாக கற்றுக்கொள்ள உதவுகிறது.
உதாரணமாக:பிழைத்திருத்த நோக்கங்களுக்காக dir () எனும் செயலிபெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இயற்றப்பட்ட அளவுருவின் அனைத்து பண்புகளையும் பட்டியலிடுவதற்கான dir () எனும் செயலியின் திறன், ஏராளமான இனங்கள் செயலிகளை ஆகியவற்றை தனித்தனியாக கையாளும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  1. தருகத்தைத் திறத்தல்( Argument Unpacking)
    ஒருசில நேரங்களில் Splat அல்லது பரப்பி(Scatter)இயக்கி * என அழைக்கப்படுகின்ற, ஒரு பட்டியலில் / டுப்பில்( tuple) உள்ள தருக்கங்கள் தனித்தனி நிலை தருக்கங்கள் தேவைப்படும் ஒரு செயல்பாட்டு அழைப்பிற்குத் திறக்கப்பட வேண்டியிருக்கும்.
    உதாரணமாக, உள்ளமைக்கப்பட்ட range()செயல்பாடு எதிர்பார்க்கிறது
    ஒரு செயல்பாட்டு அழைப்பை எழுதும் போது ஒரு பட்டியலிலிருந்து தருக்களைத் திறக்க அல்லது எனும் இயக்கிகளைப் பயன்படுத்தலாம்: ஒரு எளிய பட்டியலை வரையறுக்கலாம் x = [1,2,3,4,5] இயக்கிகளைத் திறப்பதற்கான பொதுவான எடுத்துக்காட்டு அச்சிடலைப் பயன்படுத்தும்: print ( x) // முடிவு: 1 2 3 4 5
    திறக்கப்படாத இயக்கிகள் பட்டியலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் எடுத்து அவற்றை ஒரு அளவுருவாக அனுப்புவதால், இடத்தின் மூலம் பிரிக்கப்பட்ட பட்டியலின் ஒவ்வொரு உறுப்புகளையும் இது வெறுமனே அச்சிடுகிறது, எனவே மேலே உள்ள குறிமுறைவரிகளின் மொழிபெயர்ப்பு அச்சிடப்படும் (1,2,3, 4,5).
    இந்த பைதானின் தந்திர செயல்பாடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, முறை யானஅழைப்பினை பெறும் அனைத்து தருக்கங்களையும் ஒரே மாறியில் ‘கட்டப்படுகின்றது.
    உதாரணமாக:
    மேலேயுள்ள செயலியானது வரம்பற்ற அளவு தருக்கங்களை எடுக்கலாம் (args[0] , args[1] முறையே முதல் மற்றும் இரண்டாவது தருகத்தை உங்களுக்குத் தரும்).
    இதேபோல், அகராதிகள் **எனும் இயக்கிகளுடன் முக்கிய தருக்கங்களை வழங்க முடியும்.
    நபர் என்று அழைக்கப்படும் பைதான் அகராதியை வரையறுப்போம்:
    நபர் = {“பெயர்”: “சகு”, “வயது”: 60, “இடம்”: “லண்டன்”}
    ஒரு செயல்பாட்டிற்கு ஒரு அகராதியில் அனுப்ப ** எனும் இயக்கியைப் பயன்படுத்தலாம்.
    கடந்து வந்த அகராதி விசைகளை செயல்பாட்டு முக்கிய தருக்கங்களாக சிதைத்து, பின்னர் அந்த தருக்கத்திற்கு அனுப்பப்பட்ட உண்மையான மதிப்பாக மதிப்பை எடுக்கும்

பைனரி கணித தந்திரங்கள்: எண்களை பத்தின் அடிப்படையில் வகுப்பதாக மாற்றுவது எளிதானது அன்று

பெரும்பாலும் நம்மிடம் உள்ள கணினியின் சிறிய செயலிகளில்(CPU), பெருக்கல் அல்லது வகுத்தல் அறிவுறுத்தல் இல்லை. ஆயினும், நல்ல நிரலாளர்கள் வலதுபுறமாக மாறுவது, இடதுபுறமாக மாறுவது ஆகிய இரண்டு சக்தியால் பெருக்கப் படும் அல்லது பிரிக்கப்படும் என்பதை நிச்சயமாக அறிவார்கள். ஆனால் இரண்டு சக்தியாக இல்லாத ஒன்றை பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் எப்போதும் உள்ளன. ஒரு சில நேரங்களில் பெருக்கலை மட்டும் செய்யுமாறு அதனை பணிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, பைனரி மற்றும் தசமங்களுக்கு இடையிலான மாற்றத்தை கையாளும் போது 10 ஆல் பெருக்கப்படுவது பொதுவானது. ஆனால் 10n ஆனது 8n + 2n க்கு சமமாக இருப்பதால், இடதுபுற மாற்றத்தின் தொகுப்பாக மூன்று மடங்காக எட்டால் பெருக்கப்படுவதை வெளிப்படுத்தலாம், அந்த மதிப்பை அசல் மதிப்பில் சேர்த்து இடதுபுறமாக மாற்றினால் ஒரு முறை இரண்டால் பெருக்கலாம்.
ஆனால் வகுத்தலில் வேறு பிரச்சினை உருவாகின்றது. n / 10 என்பது n / 8-n / 2 அல்லது அது போன்ற எளிய எதையும் சமப்படுத்தாது. மற்றொரு நாளில் ஒரு எண்ணை 10 ஆல் வகுத்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய விரும்பி அக்கணக்கீட்டுடன் ஒட்டிக்கொண்டால் அது மிகவும் நேரடியாக நமக்கு காண்பித்திடுகின்றது என அறிந்து கொள்ளலாம்,
முதலில், பெருக்கலைசெய்ய ஒருசில மாற்றங்களைச் செய்வோம். ஒவ்வொரு இடது புறமாற்றமும் இரண்டு சக்தியாகும், எனவே n << 1 2 * n ஆகவும், n << 8 256 * n ஆகவும் இருக்கும். அது எளிமையானது. கடினமான பகுதி இரண்டின் சக்திகள் அல்லாதவற்றுக்காக அதை சிதைக்கிறது: n << 3 + n << 1 என்பது n * 10 க்கு சமம்
ஒரே நேரத்தில் ஒரு மாற்றம் செய்கின்ற மொழிமாற்றியில் இருந்தால், இரண்டு மாற்றங்களையும் இணைப்பதன் மூலம் சிறிது நேரத்தை மிச்சப்படுத்தலாம்:
SHL A
MOV A,T ; Move A to temporary storage
SHL A
SHL A
ADD A, T ; Add T to A
பெருக்கக்கூடிய செயலிகளில் கூட இது மிகவும் திறமையானது.
வகுத்தல் மாற்றங்களில் இவை செயலாற்றுகின்றன, ஆனால் தந்திரமானகலவைகளான வகுத்தலானது ஒரு மாதிரியானது, ஆயினும் இவை நன்றாக இணைக்கப்படவில்லை. எனவே n >> 1 என்பது n / 2 மற்றும் n >> 8 என்பது n / 256 ஆகும். ஆனால் நம்மைப் போன்ற வகுத்தல்களை ஒன்றிணைக்க எளிதான வழி வேறு எதுவும்இல்லை.
நாம் பார்த்த குறிமுறைவரிகள் பின்வருமாறு இருக்கின்றன:
1 unsigned divu10(unsigned n) {

2 unsigned q, r;

3 q = (n >> 1) + (n >> 2);

4 q = q + (q >> 4);

5 q = q + (q >> 8);

6 q = q + (q >> 16);

7 q = q >> 3;

8 r = n - (((q << 2) + q) << 1); return q + (r > 9);

9 }
இது ஒரு வாய்மொழியான குறிமுறைவரிகளாகும்! ஆனால் அது செயல்படுகின்றது. இதைப் புரிந்துகொள்வதற்கான இரகசியம், ஒவ்வொரு மாற்றியையும் எண்ணின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வதாக கருதுவது. இதற்கான முதல் பணியாக குறிமுறைவரியைப் நன்குபார்த்திடுக
q = (n >> 1) + (n >> 2)
இது உண்மையில் n / 2 + n / 4 ஆகும். உயர்நிலைப் பள்ளி கணிதத்தை நினைவில் வைத்திருந்தால், அது 3n / 4 க்கு சமம். நிச்சயமாக, இது 0.75 ஆல் பெருக்கப்படுவதற்கு சமம். Q இன் கடைசி செயலை எதிர்பார்த்தால், : q = q >> 3; எனும் ஒரு நமக்கு ஒரு துப்பு கிடைக்கும்
அது q = q / 8 என்று கூறுகிறது. ஆகவே, 10 ஆல் வகுப்பதே நம்முடைய குறிக்கோள் என்றால், அதை 0.1 ஆல் பெருக்குவது என்று எண்ணுவது எளிதாக இருக்கும். இரண்டு சக்திகளுடன் நன்றாகப் பொருந்த, முழு செயலையும் 0.8 ஆல் பெருக்கி, 8 ஆல் வகுக்க நாம் உண்மையில் சிந்திக்க விரும்புகின்றோம்.
எனவே இரண்டு வலது மாற்றங்களில் ஒரு சரியான மாற்றத்தைச் சேர்ப்பது 0.75 ஐப் பெறுகிறது, இது 0.8 இலிருந்து வெகு தொலைவில் இல்லை, ஆனால் அது நமக்கு தேவையில்லை. அடுத்த வரி 0.75 காரணிக்கு இன்னும் கொஞ்சம் சேர்க்கிறது. இன்னும் எத்தனை தொகை ? 3n / 64 மற்றும் மொத்தம் இப்போது 51n / 64 ஆகும். அது 0.797 அல்லது அதற்கு சமம். ஏற்கனவே 0.8 ஐ நெருங்குகிறது. ஒவ்வொரு நிபந்தனையும் கொஞ்சம் குறைவாகச் சேர்த்து, நம்மை கொஞ்சம் நெருக்கமாக நெருங்குகிறது. இது எவ்வாறு உடைகிறது என்பதை இங்கே காணலாம்: கடைசி வரி சற்று நெருக்கமாக்குகிறது. 13107n / 16384 இது கிட்டத்தட்ட நெருக்கமாக உள்ளது.

வெளிப்பாடுஅடிப்படை மதிப்புDeltaமொத்த மதிப்புவிகிதம்
(n>>1)+n(>>2)3n/403n/40.75
q+(q>>4)3n/4 + (3n/4)/163n/6451n/640.7969
q+(q>>8)51n/64+(51n/64)/25651n/1638413107n/163840.7999
q+(q>>16)13107n/16384+(13107n/16384)/6553613107n/1073741824858993458n/10737418240.8

இது நமக்கு உதவ முடியவில்லை, ஆனால் இது ஒரு FPGA இல் செயல்படுத்த மிகவும் எளிதானதாகும்
கருத்துகளுடன் கூடிய குறிமுறைவரிகள் இங்கே உள்ளன, இது பின்பற்றுவது சற்று எளிதானது:
1unsigned divu10(unsigned n) {

2 unsigned q, r;

3 q = (n >> 1) + (n >> 2); // q=n/2+n/4 = 3n/4

4 q = q + (q >> 4); // q=3n/4+(3n/4)/16 = 3n/4+3n/64 = 51n/644

5 q = q + (q >> 8); // q = 51n / 64 + (51n / 64) / 256 = 51n / 64 + 51n / 16384 = 13107n / 16384 q = q + (q >> 16); // q = 13107n / 16384 + (13107n / 16384) / 65536 = 13107n / 16348 + 13107n / 1073741824 = 858993458n / 1073741824

6 // note: q is now roughly 0.8n

7 q = q >> 3;// q=n/8 = (about 0.1n or n/10)

8 r = n - (((q << 2) + q) << 1); // rounding: r= n-2*(n/10*4+n/10)=n-2*5n/10=n-10n/10

9 return q + (r > 9); // adjust answer by error term

10 }
அதை உடைத்தவுடன், புரிந்து கொள்வது கடினம் அன்று. இந்த முறை சிறிது காலத்திற்கு முந்தையது, மேலும் அசல் மூலமானது தொடர்புடைய வலைத்தளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் இதில் ஒரு காப்பக நகல் உள்ளது. அந்த குறிமுறைவரிகளின் ஒரே வித்தியாசம் கடைசி வரியானது கருத்துரைக்கப்பட்டு அதற்கு பதிலாக: q + ((r + 6) >> 4) என்பதை திருப்புகின்றது

விண்டோ 10 இயக்கமுறைமை செயல்படும் கணினி உதவிக்குறிப்புகளும் தந்திரங்களும்

விண்டோ 10 இயக்கமுறைமை ஒரு மகிமைப்படுத்தப்பட்ட கோப்புறையை விட அதிகமான நம்முடைய ஆளுமையின் பிரதிபலிப்பாகும். அதை திரைத்தாளுடன் அலங்கரிக்கலாம், நமக்கு பிடித்த குறுக்கு வழிகளால் அதை மறைக்கலாம் அல்லது அதில் உள்ள விளையாட்டுகளை விளையாடலாம். பொதுவான கணினியின் அனுபவத்தை மிகவும் பயனுள்ளதாகவும், வேடிக்கையாகவும் மாற்றுகின்ற விண்டோ 10 உதவிக்குறிப்புகளும் தந்திரங்களும் பின்வருமாறு.
1. கணினியின் முகப்புதிரையின் அனைத்து உருவப்பொத்தான்களையும் தற்காலிகமாக மறைக்கலாம் அல்லது நிரந்தரமாக மறைக்கலாம்: உருவப்பொத்தான்களுடன் ஒழுங்கற்ற ஒரு சுத்தமான கணினியின் முகப்புதிரையை காண விரும்பினால், அவற்றை உண்மையில் அகற்றாமல் தற்காலிகமாக மறைக்க எளிதான செயலாகும். இதற்காக கணினியின் முகப்புதிரையில் எங்கு வேண்டுமானாலும் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில், View => Show desktop icons => என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக. இவ்வாறு செயற்படுத்தப் பட்டதும், முகப்புதிரையில் உருவப்பொத்தான்கள் அனைத்தும் மறைக்கப்படும், ஆனால் சுட்டியின் வலது புற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக விரியும் மேல்மீட்பு பட்டியில் இதை மீண்டும் மாற்றுவதன் மூலம் அவற்றை எளிதாகக் திரைக்குகொண்டு வரலாம்.
2. கணினியின் முகப்புதிரையில் ஒரு கண்ணுக்கு தெரியாத கோப்புறையை உருவாக்குதல்: இது ஒரு வேடிக்கையான தந்திரமாகும், ஆயினும் இந்த கண்ணுக்கு தெரியாத கோப்புறையை கணினியின் முகப்பு திரையில் உருவாக்கலாம், அது வெற்று பார்வையில் மறைவாக தோன்றுகின்றது. இது ஒரு கோப்புறையின் உருவப்பொத்தானை “blank” (முற்றிலும் வெளிப்படையான) உருவப்பொத்தானாக மாற்றுவதோடு, காண்பிக்கப்படாத இட எழுத்துக்கு மறுபெயரிடுவதையும் உள்ளடக்குகிறது. இது தொழில்நுட்ப ரீதியாக தனிப்பட்டதாகவோ பாதுகாப்பாகவோ இல்லை, ஆயினும் இது ஒரு மிகவேடிக்கையானதாகும்.
3. கணினிமுகப்புதிரையிலுள்ள உருவப்பொத்தான்களின் அளவை விரைவாக மாற்றுதல்: கணினியின் முகப்புதிரையிலுள்ள உருவப்பொத்தான்களின் அளவை விரைவாக சரிசெய்ய விரும்பினால், சுட்டியின் பொத்தானை உருளச் செய்யும் போது Ctrl எனும் விசையை அழுத்துக. ஒரு திசையில் உருட்டினால், உருவப்பொத்தான்கள் பெரியதாகஆக்கிகொண்டே வரும் (ஒருவேளை எதிர்பார்ப்பதை விட பெரியது!), ஆனால் மற்றொருபுறம்உருட்டும்போது, அவை சிறியதாக மாறிஇருக்கும். விரும்பும் அளவைக் கண்டறிந்ததும், Ctrl எனும் விசையை அழுத்துவதை விட்டிடுக, உருவப்பொத்தான்கள் அந்த அளவிலேயே இருக்கும்.
4. கணினிமுகப்புதிரையை Stardock வேலிகள் மூலம் ஒழுங்கமைத்தல்: கணினியின் முகப்புதிரையில் கோப்புகள், கோப்புறைகள் குறுக்குவழிவிசைகளை ஒழுங்கமைக்க விரும்பினால், இந்த ஸ்டார்டாக்( Stardock) வேலிகள் எனும் பயன்பாட்டினை முயற்சிக்கவும். நாம் வரையறுக்கும் குழுக்களில் உருவப்பொத்தான்களை ஏற்பாடு செய்ய இந்த பயன்பாடு நம்மை அனுமதிக்கிறது. விரும்பினால் கணினிமுகப்புதிரையின் கோப்புகளை அடுக்குகளாக தானாக வரிசைப்படுத்த Stardock வேலிகளில் கூட அனுமதிக்கலாம்.
5. கணினிமுகப்புதிரையின் திரைத்தாளாக Bing’s இன் தினசரி புகைப்படங்களைப் பயன்படுத்துதல்: இந்த Bing ஆனது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகான புகைப்படங்களைக் கொண்டுள்ளது, மேலும் அவற்றை கணினியின் முகப்புதிரையின் திரைத்தாளாக தானாகவே பயன்படுத்த மைக்ரோசாப்ட் எளிதாக்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ Bing Wallpaper app ஐப் பதிவிறக்கி நிறுவுகைசெய்துகொள்க இதனை தொடர்ந்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் புதிய, தொழில்முறை-தரமான திரைத்தாள் நம்முடைய கணினியின்முகப்புதிரையில் பிரதிபலித்து கொண்டிருப்பதை காணலாம்.
6. மெய்நிகர் கணினிகளைப் பயன்படுத்துதல்: இது கணினியின் கோப்பு இடத்திற்கு கண்டிப்பாக பொருந்தாது, ஆனால் விண்டோ 10 இல் மெய்நிகர் கணினிகளையும் பயன்படுத்தலாம். இவை நம்முடைய பயன்பாட்டு சாளரங்களுக்கான மாற்று பணியிடங்களாக விரைவாக மாறலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பயன்பாட்டு சாளரங்கள் நிறைந்த ஒரு மெய்நிகர் கணினியை வைத்திருக்கலாம், பின்னர் அசல் சாளர தளவமைப்பை இழக்காமல் முற்றிலும் சுத்தமான ஒன்றிற்கு மாறலாம்.துரதிர்ஷ்டவசமாக, கணினியின் முகப்புதிரையின் உருவப்பொத்தான்களின் பல பக்கங்களை இதன் வாயிலாக கட்டமைக்க முடியாது.
7 விரைவு வெளியீட்டு பட்டியில் Show Desktop எனும்உருவப்பொத்தானை உருவாக்குதல்: விண்டோ 10 இல், பணிப்பட்டியின் வலதுபுறத்தில் உள்ள சிறிய வரியைக் சொடுக்குதல் செய்தால் எந்த நேரத்திலும் நம்முடைய கணினியின் முகப்புத்திரையை விரைவாகக் காணலாம். பழைய பள்ளி விண்டோ விசிறி என்றால், விரைவான வெளியீட்டு பகுதிக்கு Show Desktop எனும் உருவப்பொத்தானை உருவாக்கி இழுத்து கொண்டுவந்துசேர்த்திடலாம்.

வாடிக்கையாளர் தேவைகளை நிறைவுசெய்வதற்கேற்ப கணினி பயன்பாட்டினை உருவாக்கி வழங்கிடும் நிறுவனம் செய்ய வேண்டிய – நிரலாக்கத்திற்கான வழிகாட்டி

வாடிக்கையாளர்: “எங்களுடைய அடுத்த தேவைஒரு பெரிய யானைமட்டுமே, இது உங்களுக்கேத் தெரிந்த செய்திதான்,
நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு: ஆனால் நீங்கள் எருமையை ஏன் யானைக்கு பதிலாக சரிசெய்து கொள்ளக்கூடாது, அது கூட பெரியது…. கருப்பு வண்ணத்தில் உள்ளது .சிறிய வால்உடையது? ”
வாடிக்கையாளர்: இல்லையில்லை எங்களுக்கு ஒரு யானை மட்டுமே தேவை, எங்களுடைய தற்போதைய செயல்முறையை விளக்குகிறேன் …… ”(என வாடிக்கையாளர் ஒரு மணி நேரம் தங்களுடைய தேவையை விளக்குகிறார்)
நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு: மிகவும் நன்றி, உங்களுடைய தேவையை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆனால் எங்களுடைய கணினியானது ஒரு எருமையை மட்டுமே ஆதரிக்கிறது.
வாடிக்கையாளர்: எங்களுக்கு யானை மட்டுமே தேவை!
நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப குழு: சரிபரவாயில்லை , நாங்கள் வழக்கமாக உருவாக்குகின்ற நிரலாக்கத்தினை உங்களுக்காக தனிப்பயனாக்க முடியுமா என்று பார்க்கின்றோம் ”
அதாவது வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய கருப்பு வண்ணம் கொண்ட நான்கு கால்களுடைய விலங்கு, நீண்ட வால், முறம்போன்ற இரு காதுகள் ,குறைந்த முடி இருக்கவேண்டும். துதிக்கை வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த வாடிக்கையாளரின் தேவைகள் அனைத்தும் மிகச்சரியாக ஆவணப்படுத்தப்பட்டது, அந்த ஆவணத்தில் இருதரப்பாராலும் கையொப்பமிடப்பட்டு பயன்பாடு களின்மேம்படுத்துதல் மையத்திற்கு அனுப்பப்பட்டது!
நிரலாாக்கநிறுவனத்தின் பயன்பாடுகளின் மேம்படுத்திடும் மையத்தில்,
பயன்பாட்டின் வடிவமைப்பு / மேம்பாடு – வாடிக்கையாளரின்தேவைகளின் அடிப்படையில் அனைத்து அம்சங்களும் அடிப்படை நிரலாக்கத்தில் (எருமையாக) ஆதரிக்கப்படுகின்றன, உடற்பகுதி, துதிக்கை ,காதுகள் ஆகியவற்றிற்கும் மட்டும் தனியானதொரு தனிப்பயனாக்கம் செய்யப்படு கின்றது.

நிரலாாக்கநிறுவனத்தின் பயன்பாடுகளை மேம்படுத்திடும் மையத்தில் பணிபுரியும் நிரலாளர்கள் மகிழ்ச்சியுடன் மேலே வாடிக்கயாளர் கூறியவாறான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினார்கள், ஆனால் அதைவாடிக்கையாளர் கோரியாவாறு உருவாவதற்கேற்ப நிரலாக்கத்தில் இடையிடையே சேர்க்க, அந்நிறுவனத்தின் நிரலாக்க பரிசோதனையாளர்கள் தங்களுடைய பரிசோதனை செயல்களை பின்வருமாறு நிறைவு செய்தனர்:

விளக்கங்கள் : வாடிக்கையாளரின் தேவைகள் : இறுதியாக வாடிக்கை யாளருக்கு வழங்கியது
பெரிய விலங்கு : ஆம் : ஆம்
கருப்புவண்ணம் : ஆம் : ஆம் இருக்கின்றது
நான்கு கால்கள் : ஆம் : ஆம் உள்ளன
சிறிய வால் : ஆம் : ஆம் உள்ளது
முறம்போன்ற இருகாதுகள்: ஆம் : ஆம் உ ள்ளன
உடலில் குறைவான முடி : ஆம் : ஆம் உ ள்ளன
ஒரு துதிக்கை : ஆம் : ஆம் இருக்கின்றது
எங்களுடைய மதிப்பு கூட்டல் :- : பால் வழங்குமாறு செய்தது

இறுதியாக அவ்வாறு தனிப்பயனாக்கம் செய்தபின்னர் பயன்பாட்டினை வாடிக்கையாளருக்குக் காண்பிக்கப்படுகிறது: உடன் வாடிக்கையாளர் இந்த இறுதி தனிப்பயனாக்கம் செய்த பின்னரான உருவத்தினை பார்த்தவுடன் மயக்கம் அடைந்து வீழ்ந்தார்!

விஎஸ் குறிமுறைகளுக்கான( VS Code)திற மூல மாற்றுகள்

காட்சி படப்பிடிப்பு குறிமுறை(Visual Studio Code)என்பதையே சுருக்கமாக VS Code என அழைக்கப்படு கின்றது, இது லினக்ஸ், விண்டோ, மேக் ஆகியஇயக்கமுறைமைகளில் செயல்படுவதற்கான குறிமுறைவரிகளின் பதி்ப்பாளராகும். இது ஒரு ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) போன்ற உரையைத் திருத்துவதற்கும் முழு குறிமுறைவரிகளையும் நிருவகிப்பதற்கும் இடையில் செயல்படுகின்ற ஒரு பதிப்பாளராகும். இது செருகுநிரல்களின் மூலம் விரிவாக்கம் செய்யக்கூடியது மேலும் இது ஒரு நம்பகமான உரை திருத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது வலிமைமிக்க திறமூலம் அல்லாத போட்டி பதிப்பாளர்களை எளிதில் வெல்லும்.திறன்கொண்டது
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை திறமூலமாக வெளியிட்டது, இருந்தபோதிலும் மைக்ரோசாப்டில் இருந்து பதிவிறக்கம் செய்திடும் இதனுடைய பதிப்பானது திறமூலமன்று. இருப்பினும், விஎஸ் குறிமுறையை திற மூலமாகப் பயன்படுத்த அல்லது அதன் திறமூல மாற்றுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
நடைமுறையில், விஎஸ்குறிமுறைக்கும் வழக்கமான குறிமுறைக்கும் இடையிலான வேறுபாடுகள் – பொதுவாக OSS க்கு இடையிலான வேறுபாடுகள் மிகக் குறைவாகும். மிக முக்கியமாக, வி.எஸ் குறிமுறையில் தொலை அலை கருவி(telemetry )உள்ளது, இது மென்பொருளைக் கண்காணிக்கின்றது. மைக்ரோசாப்ட்ஆனது நம்முடைய ஒவ்வொரு அசைவையும் உண்மையில் கண்காணிப்பது சாத்தியமில்லை, மேலும் தற்போதைய சூழலில் பயன்பாட்டுத் தரவுகளை சேகரிப்பதற்காகவென ஏராளமான அளவில் மென்பொருட்கள் உள்ளன. நாம் நம்முடைய பயன்பாடுகளை உருவாக்கும்போது நம்மை அவ்வாறு கண்காணிப்பு இல்லாமல் செய்ய விரும்பினால், வி.எஸ் குறிமுறைக்கான ஒருசில சிறந்த ( திற மூல) மாற்றுகள் இங்கே.காணலாம்
1.VSCodium: இதுவி.எஸ் குறிமுறைக்கு எளிதான மாற்றாகும், இது மைக்ரோசாப்டின் தனியுரிமை சேர்த்தல் இல்லாமல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் product.json என்பதில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் விஎஸ் குறிமுறையிலிருந்து கட்டப்பட்ட குறிமுறைவரிகளை – OSS இன் தரவிறக்கம் செய்யக்கூடிய இயங்குதளங்களை இந்த VSCodium செயல்திட்டம் வழங்குகிறது. கண்டுபிடிக்கமுயலும் அனைத்து தொலை அலை கருவிகளின் வாய்ப்புகளையும் இதனுடைய மேம்படுத்துநர்கள் கடினமாக முயன்று அவற்றை செயலிழக்கச் செய்கின்றார்கள், விஎஸ் குறிமுறையின் மூலக்குறிமுறிவரிகளை நாமே உருவாக்காமல் கண்டுபிடிக்கக்கூடிய சுத்தமான கட்டமைப்பை வழங்கு-கிறார்கள்.இது ஒரு திறமூல உருவாக்கத்துடன் அனுப்ப முடியாத ஒருசில தனியுரிமை கருவிகளை விஎஸ்குறிமுறையானது அமைதியாக செயல்படுகின்றது என்று எச்சரிக்கிறது. இதில் சி # பிழைத்திருத்தமும் சில (gallery) நீட்டிப்புகளும் அடங்கும். தேவைப்பட்டால், அவை இந்த சிக்கல்களுக்கு ஆவணப்படுத்தப் பட்ட பணித்தொகுப்புகளாக உள்ளன, ஆனால் விஎஸ் குறிமுறையில் மிகவும் குறிப்பிட்ட ஒன்றை நம்பினால், அது வி.எஸ்.கோடியத்தில் செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் எல்லா தொலை அலை கருவியும் செயலிழக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
2.Code – OSS நாம் VSCodium இன் நிரலாக்கத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை எனில், விஎஸ் குறிமுறையை மூலத்திலிருந்து தொகுத்து அதையே முடிவாக செய்துகொள்ளலாம். ,விஎஸ் குறிமுறையை விடஇயங்கக்கூடியதையே Code - OSS என அழைக்கப்படுகிறது மேலும் விஎஸ்கோடியத்திற்கு பொருந்தும் உரிம கட்டுப்பாடுகள் நம்முடைய கட்டமைப்பிற்கும் பொருந்தும், ஆனால் அதற்கான பணிகளை செய்யவேண்டும். மூலத்திலிருந்து பயன்பாட்டை உருவாக்கினால், முதலில் அதைத் தொடங்கும்போது அனைத்து தொலைஅலைகருவியும் செயலிழக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
3.Atom:இது ஒரு திறமூல IDE போன்ற உரை பதிப்பானாகும், மைக்ரோசாப்ட் நிறுவனமானது GitHub ஐ வாங்கியபோது இதனையும்சேர்த்து வாங்கியது. வி.எஸ் குறிமுறையைப் போலவேஇதன் பதிப்பாளரை செருகுநிரல்களுடன் நீட்டித்து கருப்பொருட்கள் தனித்துவமான கருவிகள் ஆகியவற்றின் கலவையுடன் தனிப்-பயனாக்கலாம். இது குறுக்கு-தள உள்ளமைக்கப்பட்ட GitHub ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. சுருக்கமாக, கூறவேண்டுமெனில் இது நமக்குத் தேவையானதாக இருக்கக்கூடும், நமக்குத் தேவையான நீட்டிப்புகள் ஏற்கனவே இருக்கும் வரை அல்லது அவற்றை எழுத நாம் தயாராக இருக்கவேண்டும்.விஎஸ் குறிமுறையைப் போலவே, இது முன்னிருப்பாக அளவீடுகளைக் கண்காணிக்கும். இது முடக்கப்-படலாம், மேலும் வி.எஸ் குறிமுறையைப் போலன்றி, நீட்டிப்புகளில் தன்னிச்சையான கட்டுப்பாடுகள் எதுவும் இதில் இல்லை, எனவே நம்முடைய தனியுரிமைக்கு ஈடாக நம்முடைய பணிப்பாய்வுகள் எதையும் மாற்ற வேண்டிய-தில்லை. இது நிச்சயமாக குறிமுறையாளர்களுக்கு ஒரு பயனுள்ள கருவியாகும், ஆனால் இது கணினியைப் பயன்படுத்தும் எவருக்கும் ஒரு சிறந்த பதிப்பாளராகும் நாம் ஒரு நல்ல பொது-நோக்கு உரை திருத்தியைத் தேடுகின்றோம் எனில், இந்த Atom ஒன்றை முயற்சிக்கலாம்.
4.GNOME Builder: இது மேஜைக்கணினிக்கான IDEஆக உருவாக்கப்பட்டது, இது லினக்ஸிற்கான குறிமுறைவரிகளின் பதிப்பாளராகும், குறிப்பாக GNOME பயன்பாடுகளை உருவாக்குவதற்காக. லினக்ஸிற்கான பயன்பாடுகளை உருவாக்கிடலாம் மேலும் பொருந்தக்கூடிய எளிதான வழியை விரும்பினால், இந்த Builder ஒரு எளிதான தேர்வாகும். Flathub.org இலிருந்து இந்த Builder ஐ நிறுவுகை செய்திடுக; ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கும்போது, இந்த GNOME இல் SDK ஐ காணவில்லை எனில் அதை நிறுவும்படி கோரும். Builder ஆனது நமக்காக இதைச் செய்வதால்,நம்முடைய பயன்பாட்டைப் பராமரிக்கும்போது உணர்வுபூர்வமாக GNOME ஐக் கண்காணிக்க வேண்டியதில்லை என்பதே இதன் பொருளாகும் இருப்பினும், GNOME பயன்பாடுகளை விட Builder ஐப் பயன்-படுத்தலாம். பைதான், ரஸ்ட், சி , சி ++, ஜாவா, கோ, ஜாவாஸ்கிரிப்ட், டைப்ஸ்கிரிப்ட், வி.பி.நெட், பல்வேறு மார்க்அப் , மார்க் டவுன் மொழிகள் போன்ற மேலும் பலவற்றை உள்ளடக்கிய டஜன் கணக்கான நிரலாக்க மொழிகளை இது ஆதரிக்கிறது. இவற்றில் ஒரு சில தானியங்குநிரப்புதல் pop-up செயலிகளின் வரையறைகளுடன் முழு ஆதரவைக் கொண்டுள்ளன, மற்றவர்-களுக்கு தொடரியல் சிறப்புவசதிகள் , தானியங்கு அடைப்பு பொருத்தம் போன்ற எளிய வசதிகள் மட்டுமே உள்ளன. ஒரு தீவிர நிரலாளராக கருதினால் அல்லது ஒரு நல்ல HTML மற்றும் CSS பதிப்பாளர் தேவைப்பட்டாலும், இந்த GNOME Builder இன் IDE உடன் மகிழ்ச்சியாக பணியாற்றலாம்.
5.Geany:இதுஒரு சக்திவாய்ந்த, நிலையான இலகுரக பதிப்பாளராகும், இது நல்லBash, Python, Lua, XML, HTML, LaTeX, போன்ற பல்வேறு கணினி மொழிகளில் நிரலாக்கங்களை எழுத உதவுகின்றது. இது 50இற்கு மேற்பட்ட வெவ்வேறு நிரலாக்க scripting மொழிகள், மார்க்அப் மொழிகள் , இதர கோப்பு வகைகளுக்கு (.diff மற்றும் .po போன்றவை) ஏராளமான ஆதரவை வழங்கு-கின்றது. குறைந்த பட்சம், இது நிச்சயமாக அடைப்புக்குறி பொருத்துதல் , தொடரியல் சிறப்புவசதியை வழங்குவது மட்டுமல்லாமல்- இது வழக்கமாக இன்னும் ஏராளமான வகையில் ஆதரவை வழங்குகிறது.இது ஒரு சிறிய பதிப்பாளராகும் , ஆயினும் இது செருகுநிரல்களின் மூலம், ஒரு செயல்திட்டக் காட்சி, கோப்பு முறைமை மரம், பிழைத் திருத்தம், ஒரு முனையம் என்பன போன்ற பல்வேறு வசதிகளை நாம்விரும்பினால் இதில் சேர்க்கலாம், இது ஒரு IDE போல தோற்றமளிக்கும் வரை செயல்படும். அல்லது, விரும்பினால், அதை எளிமையாகவும் குறைவாகவும் வைத்திருக்கலாம். கணினியின் CPU அல்லது RAM ஆகியவற்றின் செயல்முறை வரையறையினால் வி.எஸ் குறிமுறையை நம்மால் இயக்க முடியாதபோது இந்த Geanyஆனது ஒரு வெளிப்படையான மாற்றாக நமக்கு அமைகின்றது இதனை மிகவிரைவாக துவக்கி இயக்கலாம் மேலும் இதனுடைய நினைவக காலடிதடம் நெகிழ்வு தன்மையுடன்கூடியதாக விளங்குகின்றது.. ஒரு முனையத்தில் Vim ஐ இயக்குவதை விட இதனை இயக்கும்போது இது கொஞ்சம் கனமாக இருக்கும் இதனுடைய செயல்பாடானது ஒரு ராஸ்பெர்ரி பையில் கூட வேகமாகவும் சிக்கலாகவும் செயல்படுகின்றது.
6.Brackets: இது ஒரு உரை திருத்தி மற்றும் வலை உருவாக்குநர்களை இலக்காகக் கொண்ட IDE ஆகும். இது HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட், PHP , பைத்தான் ஆகியவற்றிற்கு வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது. இருப்பினும், வி.எஸ் குறிமுறையைப் போலவே, இது நீட்டிப்புகளின் வளமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது, எனவே எந்த கணினி மொழியில் நாம் பணி செய்கின்றோமோ அதை நம்முடைய பணிக்குழுவாகப் பயன்படுத்தலாம். பல்வேறு கணினி மொழிகளை அலசிஆராயவும், scripts களை இயக்கவும், குறிமுறைவரிகளை தொகுத்து செயல்படுத்தவும் இதில் நீட்டிப்புகள் உள்ளன. ஒரு IDE அல்லது ஒரு எளிய நோட்பேடிற்கு அப்பால் ஒரு உரை பதிப்பாளரை நாம் அறிந்திருக்கின்றோமா இல்லையா என்பதை யாரும் புரிந்து கொள்ளக்கூடிய பாரம்பரிய இடைமுகத்தை இது கொண்டுள்ளது. தொடர்புடைய நீட்டிப்புகளைச் சேர்ப்பதற்கும் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் சிறிது நேரம் செலவிட்டால், தானியங்குநிரப்புதல் மற்றும் பளபளப்பு மூலம், தட்டச்சு செய்யும் எல்லாவற்றிலும் வேடிக்கையான தவறுகளைத் தவிர்க்க நமக்கு உதவும் பயனுள்ள மற்றும் நுட்பமான பதிப்பாளரை இதில் காணலாம். நாம் குறிமுறைவரிகளை எழுதுகின்றோம் எனில், அது நம்முடைய சுயபரி சோதனை மற்றும் பிழைத்திருத்த பணிப்பாய்வுகளை விரைவாக உருவாக்கும்.
7.Che: வெட்டு விளிம்பில் வாழ்வதை ரசிக்கின்றோம் எனில், இது நாம் முயற்சிக்க வேண்டிய ஒரு பதி்ப்பாளராகும். இது ஒரு மேககணினி அடிப்படை-யிலான IDE ஆகும், எனவே இது இயல்பாகவே ஒரு மென்பொருள்சேவையாக (SaaS) இயங்குகிறது, ஆனால் இது முற்றிலும் திற மூலமாகும், எனவே இது நம்முடைய சொந்த மென்பொருள்சேவையாக(SaaS)ஆக இயக்கப்படலாம், நமக்கு Kubernetes ஒருஉதாரணமாக இருந்தால். ஒருஇணையத்தில் நேரடியான IDE என்பதை விட, இது மேககணினியின் வளர்ச்சிக்காக கட்டப்பட்ட ஒரு IDE ஆகும். நாம் நம்முடைய வளாக கோப்பு முறைமையின் பார்வையை எதிர்-பார்க்கின்றோம் அல்லது விரும்புகின்றோம் என்றால் எந்தவிதமான அனுமானங்களும் இதில் இல்லை. இது மேககணினியில் இருந்துகொண்டே செயல்படுகிறது, எனவே உண்மையில் நாம் எப்படி வேண்டுமானலும் இதனை செயல்படுத்தி பயன்பெறலாம். , நம்மிடம் ஒரு Git சேவையகம் இருந்தால், அதை கோப்பு முறைமையாகக் கருதி, அதன் களஞ்சியத்திலிருந்து நேரடியாக ஒரு செயல்திட்டத்தில் பணியாற்றலாம். வளாக காப்பு பிரதியை விரும்பினால், நாம் செய்யும் எந்த பணியிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

வெற்றிகரமான பைதான் சூழலை அமைக்க உதவிடும் அத்தியாவசிய கருவிகள்

பைதான் ஒரு அற்புதமான பொது-நோக்கு நிரலாக்க மொழியாகும், தற்போது இது பெரும்பாலும் முதன்மையான நிரலாக்க மொழியாக கற்பிக்கப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், இந்த கணினி மொழியை கற்பதற்காக பல்வேறு புத்தகங்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன, இது நமது விருப்ப மொழியாக உள்ளது. இந்த கணினி மொழி பெரும்பாலும் நேராக முன்னோக்கி இருப்பதாகக் கூறப் பட்டாலும், வளர்ச்சிக்கு பைத்தானை உள்ளமைப்பது (xkcd ஆல் ஆவணப்படுத்தப்பட்டவை) என விவரிக்கப் படவில்லை .நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இந்த பைத்தான் எனும் கணினி மொழியைப் பயன்படுத்திகொள்ள ஏராளமான அளவில் பல்வேறு சுற்றுச்சூழல் கருவிகள் உள்ளன. பைதானில் நிரலாக்கங்களை உருவாக்குவதற்கான சுற்றுச்சூழல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என இப்போது காண்போம் .
பைதான் பதிப்புகளை நிர்வகிக்க pyenv ஐப் பயன்படுத்திகொள்ளுதல்
கணினியில் செயல்படும் பைதான் பதிப்பைப் பெறுவதற்காக கண்டறிந்த சிறந்த வழி pyenv ஆகும். இந்த மென்பொருள் லினக்ஸ், மேக் , WSL2: ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்கது: வழக்கமாக அக்கறை கொண்ட மூன்று “UNIX-போன்ற” சூழல்களில். pyenv ஐ நிறுவுவது ஒருசில நேரங்களில் கொஞ்சம் தந்திரமானதாக இருக்கும். அவற்றுள் ஒரு வழி, அர்ப்பணிக்கப்பட்ட pyenv நிறுவியைப் பயன்படுத்துவது, இது bootstrap இற்கான ஒரு curl | bash வழிமுறையாகும் (மேலும் விவரங்களுக்கான பகுதியில் இதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்) .ஒவ்வொரு வழிகாட்டுதலுக்கும் ஒரு பைனவை நிறுவுகைசெய்து அமைத்தவுடன்,இயல்புநிலை பைதான்(default Python) பதிப்பை அமைக்க pyenv global ப் பயன்படுத்தலாம். பொதுவாக, நாம் நமக்கு பிடித்த(favorite) பதிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்பிடுவோம். இது வழக்கமாக சமீபத்திய நிலையானதாக இருக்கும், ஆனால் மற்ற பரிசீலனைகள் அதை மாற்றக்கூடும்.
மெய்நிகர் சூழல்களை virtualenvwrapper மூலம் எளிதாக்குதல்
பைத்தானை நிறுவ பைன்வைப் பயன்படுத்துவதன் ஒரு நன்மை என்னவென்றால், நாம் விரும்பும் அனைத்து அடுத்தடுத்த பைதான் மொழிபெயர்ப்பாளர் நிறுவல்களும் நாம் பயன்படுத்தும் இயக்க முறைமைக்கு பதிலாக நமக்கு சொந்தமானவையாக திகழும்.பைத்தானுக்குள் அதன் செயலிகளை நிறுவுவது பொதுவாக சிறந்த வழி அன்று என்றாலும், ஒரு விதிவிலக்கு உள்ளது: மேலே தேர்ந்தெடுக்கப்பட்டநமக்கு பிடித்த (favorite)பைத்தானில், virtualenvwrapper ஐ நிறுவி யை உள்ளமைத்திடுக. இது ஒரு கணநேர அறிவிப்பில் மெய்நிகர் சூழல்களை உருவாக்க, மாற்றுவதற்கான திறனை வழங்குகிறது.ஒரு தனித்துவமான பணிப்பாய்வு பரிந்துரைக்கப்படுகின்றது. இதில் நாம் உருவாக்க விரும்பும் ஒரு மெய்நிகர் சூழல் உள்ளது, இதன் மூலம் நாம் அதை மீண்டும்ஒரு lot—runner ஐ போன்று பயன்படுத்தலாம் – . இந்த சூழலில்,நமக்கு பிடித்த runnerஐநிறுவுகைசெய்திடுக; அதாவது, பிற மென்பொருளை இயக்க தவறாமல் பயன்படுத்தும் மென்பொருள். இன்றைய நிலவரப்படிமுதன்மை விருப்பம் tox ஆகும்.
பைத்தான் runner ஆக tox ஐ பயன்படுத்துதல்
பைத்தானின் சோதனை ஓட்டங்களை தானியக்கமாக்குவதற்கான சிறந்த கருவி tox ஆகும். ஒவ்வொரு பைதான் சூழலிலும், ஒரு tox.ini கோப்பை உருவாக்கிடலாம். தொடர்ச்சியான ஒருங்கிணைப்புக்கு நாம் பயன்படுத்தும் எந்த வொருஅமைப்பும் அதை இயக்கும், மேலும் விவரிக்கப்பட்டுள்ள virtualenvwrapper இன் workon தொடரியல் மூலம் வளாக கணினியில் இதை இயக்க முடியும்: இதற்கான கட்டளைவரி பின்வருமாறு
$ workon runner
$ tox
இந்த பணிப்பாய்வு முக்கியமானது என்பதற்கான காரணம் என்னவென்றால், பைத்தானின் பல்வேறு பதிப்புகள் நூலக சார்புகளின் பல பதிப்புகளுக்கு எதிராக நம்முடைய குறிமுறைவரிகளை பரிசோதித்திடலாம். அதாவது tox runner இல் பல்வேறு சூழல்கள் இருக்கப் போகின்றன. ஒருசிலர் சமீபத்திய சார்புகளுக்கு எதிராக இயங்க முயற்சிப்பார்கள். வேறுசிலர் உறைந்த சார்புகளுக்கு எதிராக இயங்க முயற்சிப்பார்கள் , மேலும் pip-compile மூலம் வளாககணினியிலும் உருவாக்கலாம்.
பக்க குறிப்பு: தற்போது nox ஐ tox இற்கு மாற்றாக பயன்படுத்திகொள்ளப்படுகின்றது. அதற்கான காரணங்கள் இந்த கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டவைகளாகும், ஆயினும் அதைப் பார்த்து அறிந்துகொள்வது சிறந்தது.
பைதான் சார்பு மேலாண்மைக்கு pip-compile ஐப் பயன்படுத்துதல்
பைதான் ஒரு இயக்கநேர நிரலாக்க மொழியாகும், அதாவது குறிமுறைவரிகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அதன் சார்புகளை ஏற்றுகிறது. ஒவ்வொரு சார்புநிலையின் எந்த பதிப்பும் இயங்குகிறது , சீராக இயங்கும் என்பதையும் குறிமுறைவரிகளுக்கும் எதிர்பாராத செயலிழப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிக்கும்.என்பதையும் புரிந்துகொள்க அதாவது சார்பு மேலாண்மை கருவியை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என தெரிந்துகொள்க ஒவ்வொரு புதிய செயல்திட்டத்திற்கும், ஒரு தேவைகளின் கோப்பை உள்ளடக்கங்களாக கொள்ளப்படுகின்றது, அது (பொதுவாக) பின்வருபவை மட்டுமே:
. ஒற்றை புள்ளியுடன் ஒற்றை கட்டளைவரி என்பதே மிகவும்சரியான செயல்முறையாகும்
. Setup.pyfile இல் Twisted> = 17.5 போன்ற “loose” சார்புகளை ஆவணப்படுத்தப்படுகின்றது. இது Twisted==18.1 போன்ற சரியான சார்புகளுக்கு முரணானது, இது நமக்கு ஒரு வசதி அல்லது பிழை திருத்தம் தேவைப்படும்போது நூலகத்தின் புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்த கடினமாக உள்ளது.
இங்கு . எனும் புள்ளியானது. தற்போதைய அடைவை(current directory) குறிக்கின்றது, இது தற்போதைய கோப்பகத்தின் setup.py சார்புகளுக்கான ஆதாரமாகப் பயன்படுத்துகிறது. இதன் பொருள் pip-compile தேவைகள். in=> requirements.txt =>ஐப் பயன்படுத்துவது உறைந்த சார்பு கோப்பை உருவாக்கும். இந்த சார்பு கோப்பை virtualenvwrapper ஆல் உருவாக்கப்பட்ட மெய்நிகர் சூழலில் அல்லது tox.ini இல் பயன்படுத்தலாம். ஒருசில நேரங்களில் தேவைகள்- dev.txt, தேவைகள்- dev.in (உள்ளடக்கங்கள் :. [Dev]) அல்லது தேவைகள்- test.txt, தேவைகள்- test.in (உள்ளடக்கங்கள் :. [பரிசோதனை]) இலிருந்து உருவாக்கப்படுகிறது. இந்த ஓட்டத்தில் pip-compile ஐ மாற்றியமைக்க வேண்டுமா என்று சரிபார்க்கவேண்டும். சார்பு பதிவிறக்கங்களைப் பேச ஒத்திசைவற்ற HTTP கோரிக்கைகளைப் பயன்படுத்துவது போன்ற dephel கருவி அதைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளைக் கொண்டுள்ளது.
முடிவுரை
பைதானை பயன்படுத்திகொள்ள மகிழ்ச்சியுட்டுவது போன்று சக்தி வாய்ந்தது. அந்த குறிமுறைவரிகளை எழுத, கருவிகள் pyenv, virtualenvwrapper, tox , pip-compile ஆகிய அனைத்தும் தனித்தனியாக உள்ளன. இருப்பினும், அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பங்கைக் கொண்டுள்ளன, ஒன்றுடன் ஒன்று இல்லாமல், ஒன்றாக, அவை ஒரு சக்திவாய்ந்த பைதான் பணிப்பாய்வுகளை வழங்குகின்றன

ட்விட்டரில் குரலொலி வாயிலான ட்வீட்டை எவ்வாறு அனுப்புவது

குரலொலி வாயிலான ட்வீட் எனும் புதிய வசதியானது ட்விட்டரின் சமீபத்திய வசதிகளில் ஒன்றாகும், நமக்கு ஒரு ஐபோன் கிடைத்தால், குரலொலி வாயிலான ட்வீட் எனும் புதிய வசதியை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பதை செயல்முறையில் எளிதாகசெய்து காண்பிக்க முடியும். நீண்ட காலமாக, ட்விட்டர் ஆனது உரை அடிப்படையிலான குறுஞ்செய்திகள் வழியாக ட்வீட்களை அனுப்புதல் எனும் சேவையாக மட்டுமே இருந்துவந்தது – . இருப்பினும், இதில் பல ஆண்டுகளாக, பல்வேறு கூடுதலான செயலிகளுடன் வளர்ந்து கொண்டேவந்தது அதாவது GIF கள், புகைப்படங்கள் , கானொளிகளை இடுகையிடும் திறன் பயனாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொடுத்தன. மிக சமீபத்தில், நீண்ட ட்வீட்களை கூட அனுப்புவதை சாத்தியமாக்கியது, மேலும் மீச்சிறு இடுகை / சமூக வலைப்பின்னல் தளத்திற்கு சமீபத்திய புதியவசதியாக ஒலிவடிவிலான ட்வீட்களை அனுப்பும் திறன் – அல்லது குரலொலிவாயிலான அழைத்திடுதலை வழங்கதயாராக இருக்கின்றது.
தற்போது, இந்த வசதியானது iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, எனவே இதன் வாயிலாக ஐபோன் வைத்துள்ள எவரும் இணையத்தில் தங்களுடைய குரலொலி வாயிலாக நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ளும் புதிய வழியைக் பயன்படுத்தி கொள்ளமுடியும். கைபேசியின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி நாம் என்ன சொல்ல விரும்புகின்றோமோ அதை பதிவு செய்யலாம், மேலும் இது ஒலிமட்டு மல்லாது கானொளியாக கூட ட்வீட் செய்யலாம். இயல்புநிலையாக, ஒலிவடிவிலான ட்வீட்டுகள் 140 வினாடிகளுக்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளன, ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டாம் நாம் சொல்ல வேண்டிய அனைத்து செய்திகளையும் இரண்டு நிமிடங்களில் முடியவேண்டுமே என 20 வினாடிகளை குறைத்து முடிக்க முடியாது. அதாவது நம்முடைய செய்தி பதிவானது 140 வினாடிகள் எனும் கால வரம்பை மீறினால், ட்விட்டர் ஆனது தானாகவே நமக்காக அதனை பல ட்வீட்களாக பிரித்துவிடுகின்றது. இந்த சிறந்த வசதியுடன் எவ்வாறு துவங்குவது என்பதையும் இங்கே, நாம் என்ன சொல்ல விரும்புகின்றோம் என்பதையும் மிகவும் வெளிப்படையான வழிமுறையை நமக்குவழங்குகிறது
1. ட்வீட் பதிவை அணுகுதல்:நாம் செய்ய வேண்டிய முதல் செயலாக, ட்விட்டர் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பானது நிறுவப் பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திகொள்க. பயன்பாட்டு அங்காடியைத்( App Store) திறந்து, நம்முடைய கணக்கிற்கான உருவப்பொத்தானை அழுத்துக உடன், கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகளைப் பெறுக. இப்போது ஏற்கனவே இருக்கும் ட்விட்டர் பயன்பாட்டை நீக்கி, புதிய ட்வீட்டர் பயன்பாட்டினை உருவாக்க திரையின் கீழே வலதுபுறத்தில் உள்ள பொத்தானைதட்டுக. அதனைதொடர்ந்து விரியும் திரையில் camera எனும் பொத்தானை அடுத்துள்ள புதிய ஊதா வண்ண ஒலி அலை பொத்தானையும் சமீபத்திய படங்களையும் காணலாம் – இது முதல் முறையாக தோன்றும் போது,இது பயன்பாட்டில் முன்னிலைப்படுத்தப்படும்.
2. ஒரு ட்வீட்டை பதிவு செய்க:தொடர்ந்து soundwave எனும் பொத்தானை அழுத்திடும்போது, மேலே நம்முடடைய சுயவிவரப் படத்தையும், அதற்கு கீழே ஒரு சிவப்பு வண்ண பதிவு பொத்தானையும் காண்பிக்கும் மேலும் புதிய திரைக்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம். முதல் முறையாக பதிவு பொத்தானை அழுத்தும்போது, மைக்ரோஃபோனை அணுக ட்விட்டர் பயன்பாடு அனுமதி வழங்க வேண்டும் – அதற்காக OK எனும் பொத்தானை அழுத்துக – அதனைதொடர்ந்து பதிவுசெய்திடும்பணி உடனடியாகத் துவங்குவதை காணலாம்
3. பதிவை இடைநிறுத்து தல்அல்லது முடித்தல்:நாம் குரலொலி வாயிலாக சொல்லத் திட்டமிட்டவற்றின் உரை நம்மிடம் இல்லையென்றால், பதிவை இடைநிறுத்தம் செய்துகொண்டபின்னர் நாம் கூறவேண்டிய செய்திகளைச் சேகரித்து தொடரவும் விரும்புகின்றோம் எனில் . இது ஒரு பிரச்சனையன்று: இந்நிலையில் பதிவு பொத்தானிற்குபதிலாக இடைநிறுத்த பொத்தானை அழுத்துக. மீண்டும் பதிவு செய்யத் தயாராக இருக்கும்போது,பதிவு பொத்தானை மீண்டும் அழுத்திடுக. பதிவு செய்யும் போது, எஞ்சியிருக்கும் காலவரம்பான140 வினாடிகளில் மிகுதி எவ்வளவு உள்ளன என்பதைக் குறிக்கும் ஒரு முன்னேற்றப் பட்டி நிரப்பப்படுவதை காணலாம். மைக்ரோஃபோன் குரலொலி வாயிலாக செய்தி அனுப்புவதற்காக துவங்கிடும்போது, நம்முடைய சுயவிவரப் படத்தைச் சுற்றி அசையும் வட்டங்கள் ஒரு குறிகாட்டியாகத் தோன்றுவதையும் காணலாம்
4. குரொலொலி வாயிலானட்வீட்களை முன்னோட்டமிட்டு இடுகையிடுதல்: நாம் உருவாக்கும் குரலொலி வாயிலான ஒரு பதிவு குறித்து திருப்தி யடையவில்லையெனில் எந்த நேரத்திலும் அதனை நீக்கம் செய்திட திரையின் மேலே இடதுபுறத்தில் விரலால் அழுத்தலாம். ஆனால் பதிவுசெய்ததை இடுகையிடவிரும்பினால், மேலே வலதுபுறத்தில் Done எனும் பொத்தானை அழுத்துக, மீண்டும் tweet composition திரைக்கு அழைத்துச் செல்லப்படுவோம். அதிலுள்ள play எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதன் மூலம் பதிவுசெய்ததை முன்னோட்டமிடலாம், மேலும் விரும்பினால் மேலே உள்ள அறிமுக ( introductory) அல்லது விளக்க ( explanatory ) உரையைச் சேர்க்கலாம். சரியாக இருக்கின்றது எனில் Tweet எனும் பொத்தானை அழுத்துக
5. நீண்ட ஒலி ட்வீட்களைப் பதிவுசெய்க: மேலே குறிப்பிட்டுள்ளபடி, 140 வினாடிகளின் இயல்புநிலையை விட நீளமான குரலொலி ட்வீட்களை அனுப்ப முடியும். இந்த ‘வரம்பை’ அடையும்போது, தொடர்ந்து பதிவுசெய்யலாம் ட்விட்டர் ஆனது நம்முடைய அந்த வரம்பிற்கு மேல் இருப்பதை தனித்திரியாக உடைக்கும். அவ்வாறான திரிகளானவை25 ட்வீட் வரை நீளமாக இருக்கலாம், அதாவது கோட்பாட்டின்படி – 3,500 வினாடிகள் வரை குரலொலியை பதிவு செய்யலாம் (ஒரு மணி நேரத்திற்குள்!) இது போன்ற நீண்ட ட்வீட்களை பதிவுசெய்தபின்னர் பதிவுசெய்தலை முடிக்க Done எனும் பொத்தானை தட்டும்போது, அதற்கான திரிகளானவை தானாக உருவாக்கப்பட்டுவிடும். அவற்றை இடுகையிட அனைத்து திரிகளையும் ட்வீட் செய்க.
6. ட்வீட்டைகாதால் கேட்டல்: காலவரிசை மூலம் உலாவும்போது, குரலொலிட்வீட்களை கண்டுபிடிக்க முடியும், ஏனெனில் அவை பெரிய சுயவிவரப் படத்தை ஒரு பெரிய, வெற்று வண்ண பின்னணியில் ஒரு play பொத்தானைக் கொண்டுள்ளன. சுயவிவரப் படமானது அசைவூட்டம் செய்யப்பட்டுள்ளது, நாம் பதிவுசெய்தபோது இருந்ததைப் போலவே, playbackபொத்தானைத் தட்டுவது போல எளிது. குரலொலி ட்வீட்களை iOS இல் மட்டுமே பதிவு செய்ய முடியும், ஆனால் அவற்றை எந்த சாதனத்திலும் மீண்டும் இயக்க முடியும்.
7. குரலொலி ட்வீட்டுகள் பற்றி கூடுதல் செய்திகள்சகுரலொலி வாயிலான ட்வீட்களைப் பற்றி கவனிக்க ஒருசில கூடுதல் செய்திகள் உள்ளன. முதலாவதாக, அவை ‘அசல் ட்வீட்களுடன்’ மட்டுமே இணைக்க முடியும், அதாவது அவற்றை பதில்களில் பயன்படுத்த முடியாது, அல்லது ஏதாவது மறு ட்வீட் செய்து ஒரு கருத்தைச் சேர்த்தால் போன்றவைகளில் சேர்க்கமுடியாது. இரண்டாவதாக, நம்முடைய சுயவிவரப் படத்தை மாற்றினால், பதிவுசெய்த நேரத்தில் இருந்த படம் அதன் படத்திற்கான படமாக தொடர்ந்து பயன்படுத்தப்படும் – அது புதுப்பிக்காது.

குனு பி.எஸ்.பி.பி(GNU PSPP)

இது மாதிரி தரவுகளின் புள்ளிவிவர பகுப்பாய்வுக்கான ஒரு நிரலாக்கம் ஆகும். இது தனியுரிமை திட்டமான SPSS க்கான சுதந்திர மாற்றீட்டைப் போலவே கட்டணமில்லாமல் கிடைக்கின்றது, மேலும் இது ஒரு சில விதிவிலக்குகளுடன் மிகவும் ஒத்ததாக தோன்றுகிறது.
time bombs என்பது இதில் இல்லை என்ற செஂய்தியே இந்த விதிவிலக்குகளில் மிக முக்கியமானவையாகும் , ; PSPP இன் நகலானது காலாவதி யாகாது(expire) அல்லது எதிர்காலத்தில் வேண்டுமென்றே செயல்படுவதை நிறுத்தாது. இதில் நாம் பயன்படுத்தக்கூடிய வழக்குகள் அல்லது மாறிகள் எண்ணிக்கையின் செயல் வரம்புகள் எதுவும் இல்லை. “advanced” செயலிகளைப் பெறுவதற்கு கூடுதல் தொகுப்புகள் எதையும் கொள்முதல் செய்யத் தேவையில்லை; PSPP தற்போது ஆதரிக்கின்ற அனைத்து செயல்பாடுகளும் முக்கிய தொகுப்பில் உள்ளன.
PSPP ஒரு நிலையான நம்பகமான பயன்பாடாகும். இதனைகொண்டு descriptive statistics, T-tests, anova, linear and logistic regression, measures of association, cluster analysis, reliability and factor analysis, non-parametric tests போன்ற பல்வேறு ஆய்வுகளை செய்ய முடியும். உள்ளீட்டுத் தரவுகளின் அளவைப் பொருட்படுத்தாமல் அதன் பகுப்பாய்வுகளை முடிந்தவரை விரைவாகச் செய்ய அதன் பின்புலமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த PSPP ஐ அதன் வரைகலை இடைமுகம் அல்லது மிகவும் பாரம்பரிய தொடரியல் கட்டளைகளுடன் பயன்படுத்தலாம்.
இந்த PSPP இன் ஒருசில வசதிகளின் சுருக்கமான பட்டியல் பின்வருமாறு
திரைபடபிடிப்புகள், மாதிரி வெளியீடுகள் ஆகியவற்றினை கொண்ட ஒரு பக்கத்தையும் கிடைக்கச் செய்திடும் வசதி. PSPP க்கு உள்ளது:
இது ஒரு பில்லியனுக்கும் அதிகமான வழக்கமான செயலிகளுக்கு ஆதரவினை அளிக்கின்றது.
இது பதினொறு பில்லியனுக்கும் அதிகமான மாறிகளின் ஆதரவினை அளிக்கின்றது.
இது SPSS. உடன் இணக்கமான தொடரியல் , தரவு கோப்புகள் ஆகியவற்றை ஆதரிக்கின்றது
இதில் முனையம் அல்லது வரைகலை பயனர் இடைமுகத்தின் தேர்வு செய்யமுடியும்.
இது உரை, postscript, pdf, திறமூலஆவணம் அல்லது HTML வெளியீட்டு வடிவங்களின் தேர்வ செய்யமுடியும்.
இதில் குனுமெரிக், லிப்ரெஃபிஸ், ஓபன் ஆபிஸ். போன்ற பிற கட்டற்ற மென்பொருட்களுடன் எளிதாக இடைமுகம் செய்யமுடியும்.
இதில் விரிதாட்கள், உரை கோப்புகள் , தரவுத்தள மூலங்களிலிருந்து எளிதாக தரவுகளை பதிவிறக்கும் செய்துகொள்ளமுடியும்.
இது ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரவுத்தொகுப்புகளைத் திறக்க, பகுப்பாய்வு செய்வதற்கான திருத்துவதற்கான திறன் கொண்டது. அவைகளை , சேர்த்திடலாம் அல்லது ஒன்றிணைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
அனைத்து பொதுவான எழுத்துத் தொகுப்புகளையும் ஆதரிக்கின்ற பயனாளர் இடைமுகத்துடன் பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கமுடியும்.
இது மிகப் பெரிய தரவுத் தொகுப்புகளில் கூட விரைவான புள்ளிவிவர நடைமுறைகளை கொண்டுள்ளது.
இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக உரிம கட்டணம்எதுவும் செலுத்ததேவையில்லை.
காலாவதி காலம் எதுவும் இல்லை.
நெறிமுறையற்ற “இறுதி பயனாளர் உரிம ஒப்பந்தங்கள்(end user license agreements)” எதுவும் இதில் இல்லை.
இதில் முழு குறிமுறைவரிகளையும் பயன்படுத்திகொள்வதற்காகவென பயனாளர் கையேடு ஒன்று உள்ளது
இது சுதந்திரமாக பயன்படுத்திகொள்ளுமாறு உறுதி செய்யப்பட்டது; இது GPLv3 அல்லது அதற்குப் பிறகான உரிமம் பெற்றது.
இது பல்வேறு வகைகளிலான கணினிகளும் பல்வேறு இயக்க முறைமைகளில் இயங்குகிறது (குனு அல்லது குனு / லினக்ஸ் விருப்பமான தளங்கள், ஆனால் இது மற்ற கணினிகளிலும் நன்றாக இயங்குகிறது ).
குறிப்பாக புள்ளிவிவரங்கள், சமூக அறிவியலறிஞர்கள் , மாதிரி தரவுகளை விரைவாக வசதியான பகுப்பாய்வு தேவைப்படும் மாணவர்கள் ஆகியோர்களை இலக்காகக் கொண்டுள்ளது.மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.gnu.org/software/pspp/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

Previous Older Entries