டேலி ஈஆர்பி9

ஒவ்வொரு நிறுவனத்தினுடைய தற்போதைய நிதிநிலையையும் சொத்துகளின் மதிப்பையும் அறிந்துகொள்வதற்காக உதவுவதான் நிதிகணக்கியல் எனப்படும் கணக்குபதிவியலாகும்.

முன்பெல்லாம் கைகளால் எழுதப்பட்டுவந்த இந்த கணக்குபதிவியலானது தற்போது கணினியில் பதிவு செய்யப்படுகின்றது.அதனால் இதற்கேற்றவாறான மென்பொருட்களை பயன்படுத்துவதில்   இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்ப  டேலியானது முதன்மையான இடத்தை வகிக்கின்றது.

தற்போது கணினியின்பயன்பாடானது உலகமெல்லாம் வலைபின்னலாக பரவியுள்ள  இணையதளமெனும் அடுத்தபடிமுறைக்கு பரிணமித்துள்ளது.இதற்கேற்றவாறு  டேலிநிறுவனமும் தன்னுடைய இந்த முதன்மை இடத்தை தக்கவைத்து  கொள்வதற்காக  டேலி ஈஆர்பி9 என்ற புதிய மேம்பட்ட மென்பொருளை தற்போது வெளியிட்டுள்ளது

டேலிநிறுவனமானது இந்த   டேலி ஈஆர்பி9 யை Series A,Series B,series Cஆகிய மூன்று படிமுறைகளாக தன்னுடைய புதிய மேம்பட்ட பதிப்புகளை வெளியிடுகின்றது.இதனை  ஒருவர்மட்டும் பயன்படுத்தக்கூடியவகையில் Silver என்ற பெயரிலும், பத்துபேர்மட்டும் பயன் படுத்தக்கூடிய வகையில் Gold என்ற பெயரிலும், ஆயிரம் பேர் மட்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் Diamond என்றபெயரிலும்,ஆயிரம் நபருக்குமேல் பயன்படுத்தக் கூடியவகையில் Platinumஎன்றபெயரிலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தவகைவகையான வெளியீடுகளில் இதனுடையசெயல்பாடு, பெறப்படும் அறிக்கைகள் ,இதனுடைய தோற்றம் போன்றவைகளில் எந்தவொரு மாற்றமும் கிடையாது ஆயினும் இதனை பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை வரன்முறைமட்டுமே மாறுபடும் என்பதை மனதில்கொள்க.

இந்த   டேலி ஈஆர்பி9 யின் சிறப்பு தன்மை பின்வருமாறு

௧.ஒரு நிறுவனத்திற்கு நேரடியாக செல்லாமலேயே எங்கிருந்தும் எப்போதும் வேண்டு மானாலும் இதனை அனுகமுடியும் அவ்வாறு அனுகி தேவையான விவரங்களை உள்ளீடு செய்யவும் அறிக்கையாக பெறவும் முடியும்.

௨. டேலிநெட் என்ற இணையதளத்தின் மூலம் இந்த டேலி ஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகையான இணையதள சேவைகளையும் (செல்லிடத்து பேசி மூலமாகவே தம்முடைய நிறுவனத்தின் வங்கிபணிகளை கட்டுபடுத்திடுவது போன்று)  வழங்குகின்றது.

௩. இந்த   டேலி ஈஆர்பி9 ஐ நம்முடைய கணினியில் நிறுவிடும்போது இதனுடைய வெவ்வேறு அமைப்புகளையும்  வெவ்வேறு திரைக்கு செல்லாமல் ஒற்றை திரையிலேயே அமைவை செய்யும் நடைமுறைசெயலை மிகஎளிமை படுத்தியுள்ளது.

௪. அவ்வாறே இந்த மென்பொருளை செயல்படுத்துவதற்கான அனுமதி பெறும் நடைமுறையை எளிமை படுத்தி பயனாளரின் நன்பனைபோன்று ஒற்றைத்திரையிலேயே அனைத்துவகையான நடைமுறைகளையும் செயல்படுத்தி அனுமதி பெறும் வழிமுறையை கொண்டுள்ளது.

௫.கட்டுபாட்டு மையம் என்ற புதிய கருத்தமைவை  இந்த   டேலி ஈஆர்பி9 யில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன்மூலம் டேலிநெட் என்பதை இடைமுகமாக கொண்டு வாடிக்கையாளரின் கணக்குபதிவியலுக்குத்தேவையான அனைத்து கட்டுபாடுகளையும் வழங்குகின்றது.

௬.தன்னுடைய கணக்கு பதிவியலுக்கான மென்பொருளை பயன்படுத்திடும் வாடிக்கையாளர் எதிர்கொள்ளும்பிரச்சினை எதுவாகஇருந்தாலும் அதற்கான தீர்வை உடனடியாக வழங்குவதற்கு ஏதுவாக ஆங்காங்கே ஆதரவு மையத்தை துவங்கியுள்ளது.

௭.வாடிக்கையாளர் விரும்பியவாறான அறிக்கைகளை வடிவமைத்து உருவாக்கி பெற்றிடு வதற்கு ஏதுவாக இதனுடைய வடிவமைப்பானது நெகிழ்வுத்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

௮.ஒரு வியாபார நிறுவனத்திற்கு சட்டப்படியும் கணக்குப்பதிவியலின்படியும் தேவையான  சம்பளப்பட்டி தயாரித்திடும் பணியினை சுலபமானதாகவும் மேம்பட்டதாகவும்  இருந்திடுமாறு செய்கின்றது.

௯.உற்பத்தி நிறுவனங்களுக்குத்தேவைப்படும் மத்தியஅரசின் கலால் துறைத்தொடர்புள்ள அனைத்துவகை செயலிற்குமான வசதியை வழங்குகின்றது.

௧௰.மிகமுக்கியமாக ஒருநிறுவனத்தால் எழுதப்படும்   கணக்குப்பதிவியலை சரிபார்த்திடும்

தணிக்கையாளருக்கு உதவுவதற்கென்றே தனியான பதிப்பு இதில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நிறுமச்சட்டம் 1956 பிரிவு 43AB யின்படியும் வருமானவரிச்சட்டம் 1961 பிரிவு 35AC யின் படியும் தேவையான அனைத்து அறிக்கைகளையும் ஒருதணிக்கையாளர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேரடியாக செல்லாமலேயே எங்கிருந்தும் எப்போதுவேண்டுமானாலும் காலவரன்முறை எதுவுமில்லாமல் இணையத்தின்வாயிலாக  அந்நிறுவனத்தின்   கணக்குகளை தணிக்கைசெய்து தயார்செய்திட டேலி ஈஆர்பி9 ஈடில்லாத்தோழனாக விளங்குகின்றது.

படம்-1

நச்சுநிரலால் பாதிக்கப்பட்ட பென்ட்ரைவையும்கணினியையும்எவ்வாறு கையாளுவது

இதுபோன்ற நிலையில் முதலில் பாதிக்கப்பட்ட பென்ட்ரைவை மறுவடிவமைப்பு செய்திடவேண்டும்.இதற்காக ஏராளமான வழிகளிருந்தாலும் லினக்ஸ் இயக்கமுறைமையுள்ள கணினி வழியாக மறுவடிவமைப்பு செய்திடுவதே சிறந்ததாகும்.ஏனெனில் இதில்  நச்சுநிரலால் ஏற்படும்  பாதிப்பு  அறவே தவிர்க்கப்படுகின்றது. முதலில் உங்களுடைய பென்ட்ரைவை கணினியில் உள்ளினைத்து அதில் auto run.inf என்ற கோப்புஇருக்கமிடத்தை கண்டுபிடித்து அதனை Deleteபொத்தானை அழுத்துவதன்வாயிலாக அழித்திடுக.

பொதுவாக ஒரு நச்சுநிரலானது புறச்சாதனங்களை பொருத்துவதற்கு பயன்படும் யூஎஸ்பி இயக்ககத்தின் வாயிலாகவே  auto run.inf என்ற கோப்பின்மூலம் எந்தவொரு கணினியினுட் பகுதியிலும் மிகவிரைவாக பயனம்செய்து பரவுகின்றது.ஒவ்வொருமுறையும் இந்த  யூஎஸ்பி வாயிலில் ஏதேனும்  பென்ட்ரைவை உள்ளினைத்து செயல்படுத்திடும்போது நச்சுநிரல்களனது தானாகவே இந்த auto run.inf என்ற கோப்பின்மூலம்  கணினியினுட் பகுதியிலும் மிகவிரைவாக பயனம்செய்து பரவுகின்றது அதனால் இந்த auto run.inf என்ற கோப்பினை கணினியினுட் பகுதியில் பரவாமல் தவிர்த்திடவேண்டும்.

அதற்காக Start=> Run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் gpedit.msc என உள்ளீடு செய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக.

பின்னர் தோன்றிடும்  Group policyஎன்ற சாளரத்தின் இடதுபுறபலகத்தில்  Computer Configuration=> Administrative Templates => System => என்றவாறு இருப்பதை தேடிபிடித்திடுக.

படம்-1

பின்னர் இந்த System என்ற பகுதியில் Turn off Auto play என்பது Not Configuredஎன்ற நிலையலுள்ளதாவென சரிபார்த்திடுக. அதற்காக இந்த Turn off Auto play என்பதை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக.உடன் தோன்றிடும்(படம்-1) Turn off Auto play propertiesஎன்ற உரையாடல்பெட்டியில்  Turn off Auto play என்பதன்கீழ் உள்ள Enabledஎன்றவானொலி பொத்தானை தெரிவுசெய்திடுக.அவ்வாறே இதில்  Turn off Auto play on என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலை திறப்பதன்வாயிலாக All drives என்ற வாய்ப்பினையும் தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

படம்-2

பொதுவாக இந்த யூஎஸ்பி இயக்ககத்தின் வாயிலின் மூலம் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக http://download.cnet.com/Autorun-Virus-Remover/3000-2239_410862968.html/ என்ற வலைதலத்திற்கு சென்று Auto run Virus Remover என்றபயன்பாட்டினை  Download the latest version என்ற இணைப்பை (படம்-2) தெரிவுசெய்வதன்மூலம் உங்களுடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்துகொள்க.இது பலகோப்புகள் ஒன்றாக  சுருக்கிகட்டப்பட்ட ஒருகோப்பாகும் இதனைவிரித்து இதனுட்பகுதியிலுள்ளஅனைத்தையும் வெளியிலெடுத்துகொள்க. பின்னர் இவற்றுள் Set up.exe என்ற கோப்பினை செயல்படுத்துவதன் மூலம் இந்த பயன்பாட்டினை உங்களுடைய கணினியில் நிறுவிகொள்க.

பின்னர் இதனை செயற்படுத்துக. உடன்  Auto run Virus Remover v2.3 என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில்தோன்றும் .அதில் உள்ள Removable Mediaஎன்ற தேர்வுசெய்பெட்டி (Check box)தெரிவுசெய்யப் பட்டுள்ளதாவென உறுதிசெய்துகொண்டுஇதில் Startஎன்ற பொத்தானை சொடுக்குக.உடன் யூஎஸ்பி இயக்ககத்தின் வாயிலின் மூலம் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளை இது ஆய்வுசெய்து தடுத்துவிடும்.

படம்-3

இதுபோன்ற பிரச்சினைகள் Dosகட்டளைகள் வாயிலாகவும் தவிர்க்கமுடியும். அதற்காக உங்களுடைய கணினியை மறுதொடக்கம் (Restart)செய்க .இந்த தொடக்கசெயலின்போதே F8 என்ற செயலி பொத்தானை அழுத்துக. உடன் டாஸ் நிலையில் திரைதோன்றும். அதில் Safe mode with Command Prompt என்ற வாய்ப்பினை (படம்-3)அம்புக்குறி பொத்தானை அழுத்துவதன் வாயிலாக தெரிவுசெய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக.

பின்னர் தோன்றிடும் டாஸ் திரையில் C: என உள்ளீடு செய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக. அதன்பின்னர் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகளை பிரிதிபலிக்கச் செய்வதற்காக. DIR/AHஎன உள்ளீடு செய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக. உடன் auto run.inf என்ற கோப்பினை கணினியில் இருந்தால் திரையில் பிரிதிபலிக்கும். அடுத்தவரியில் TYPE auto run.inf என உள்ளீடு செய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக. பின்னர் அடுத்தவரியில்  Del C:\ auto run.infஎன உள்ளீடு செய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக. உடன் இந்த கோப்பு அழிக்கப்பட்டுவிடும் .

அதன்பின்னர் அடுத்தவரியில் MSCONFIG என உள்ளீடு செய்து உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துக. உடன் System Configuration Utility  என்ற (படம்-4)உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும். பின்னர் இதில் உள்ள Start upஎன்ற தாவியை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் திரையில் Sample-virus என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்யப்பட்டிருந்தால் நீக்கம் செய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக.இறுதியாக உங்களுடைய கணினியை மறுதொடக்கம் செய்து இயக்குக.

படம்-4

நம்முடைய பணியிடத்தில் நாம் இல்லாதபோது நம்முடைய  கணினியின் யூஎஸ்பி இயக்கக வாயில்வழியாக  யாரும் உள்நுழையாதவாறு தடுத்திடுவதற்காக பயாஸ் அமைவில் ஒருசில செயல்களின்மூலம் முடக்கம் செய்திடலாம்.இதற்காக உங்களுடைய கணினியை மறுதொடக்கம் செய்க .இந்த தொடக்கசெயலின்போதே Del என்ற  பொத்தானை அழுத்துக. உடன் பயாஸ் அமைவுநிலையில் திரைதோன்றும். அதில்  Integrated  peripherals  என்ற பகுதிக்கு செல்க. அங்குள்ளUSB port  என்ற வாய்ப்பிலுள்ளDisable என்ற தேர்வுசெய்பெட்டியை(Check box) தெரிவுசெய்து இந்த மாறுதலை சேமித்துகொள்க.தேவையானால் பயாஸிற்குள் செல்வதற்கான கடவுச்சொல் அமைவையும் சேர்த்து சேமித்துகொள்க.

இதுமட்டுமல்லாது என்கணினி (My Computer) என்பதன் வாயிலாகவும் யாரும் உள்நுழையாதவாறு தடுத்திடுவதற்காக   என்கணினியை (My Computer) இடம் சுட்டியால் (Cursor)  தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் (mouse)வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் விரியும் சூழ்நிலைபட்டியலில்(context menu)  உள்ள Manage என்பதைதெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் தோன்றிடும் Device Manager  என்ற உரையாடல் பெட்டியின் உள்ள பட்டியலில்  Universal Serial Bus Controller என்பதை இடம் சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் விரியும் சூழ்நிலைபட்டியலில்Disable என்பதை தெரிவுசெய்தகொள்க.

தலைகீழாக்கிக்கும் (Inverter) தடையற்றமின்வழங்கிக்குமான(Uninterrupted Power Supply (UPS)) ஒரு ஒப்பீடு

நேர் மின்விசையை (Direct Current (DC))மாற்று மின்விசையாக(Alternator Current (AC)) உருமாற்றிவழங்கிடும் பணியினையே தலைகீழாக்கியும் (Inverter) தடையற்ற மின்வழங்கியும் (Uninterrupted Power Supply (UPS)) செய்கின்றன. ஆயினும் இவையிரண்டிற்குமுள்ள வேறுபாடுகள்தான் யாவை?

தலைகீழாக்கி (Inverter):முக்கிய பகுதி ,(மின்சுற்று(Circuitry)),மின்கலன் ஆகிய இரண்டும் சேர்ந்தகட்டமைப்பே ஒரு தலைகீழாக்கி (Inverter) யாகும்.இந்த மின்கலன்களானது ஈயமும் நீர்மமும் சேர்ந்த மின்கலன் ,பராமரிப்பு தேவையற்ற காய்ந்த கட்டை மின்கலன் என இரண்டுவகையாகவுள்ளன.

ஒவ்வொரு தலைகீழாக்கியிலும் நேர் மின்விசையை (Direct Current (DC))மாற்று மின்விசையாக(Alternator Current (AC)) மாற்றிவழங்குவதற்காக  இதனுட்பகுதியில் ஒரு சிறிய மின்சுற்றும்(Circuitry) ஒரு பெரிய மின்மாற்றியும்(transformer) சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன.

மின்தடங்கல் ஏற்படும் நேரங்களில் மின்கலன்களில் சேமித்து வைத்துள்ளமின்சாரத்தை  உடன் தொடர்ச்சியாக வழங்கிட சிறிது கூடுதலான காலஅவகாசத்தை இது எடுத்துகொள்கின்றது.

மேலும் சிலநேரங்களில் மின்னோட்டமானது மிகஅதிகமாகவும் (surge) ஒருசிலநேரங்களில் மிககுறைந்தும் ஏற்ற இறக்கத்துடன் மின்துள்ளாகவும் (Spike) இருந்திடும்.

இந்நிலையில்  மின் ஓட்டத்தை சீராக பராமரித்திட உதவிடும் தானியங்கி மின்னோட்ட கட்டுபடுத்தி (Automatic Voltage Regulator(AVR))  என்ற அமைப்பு இதில் இல்லாததால் கம்பிவழியாக பெறுகின்ற மின்சாரத்தை அப்படியே நாம் பயன்படுத்திடும் மின்கருவிகளுக்கு இது கடத்திவிடுகின்றது.

இதுபோன்ற சமயங்களில் நம்முடைய வீடுகளில் பயன்படுத்திடும் மின்விளக்குகள் ,மின்விசிறி போன்றமின்கருவிகள் ஓரளவிற்கு மட்டும் மின்ஏற்ற தாழ்வினை தாங்கி கொள்கின்றன.ஆனால் கணினி ,மருத்துவகருவிகள் போன்றமின்னனுகருவிகள் பழுதடைய வாய்ப்பாகின்றது..

தடையற்றமின்வழங்கி(Uninterrupted Power Supply (UPS)): இதில் முக்கிய பகுதி (மின்சுற்று(Circuitry)),மின்கலன் ஆகிய இரண்டுடன்  கூடுதலாக தானியங்கி மின்னோட்ட கட்டுபடுத்தி (Automatic Voltage Regulator(AVR))யும் மின் உணர்வியும்(Sensor)சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது..

மின்னோட்டமானது மிகஅதிகமாகவும் (surge) மின்துள்ளாகவும் (Spike) கம்பிவழியாக உள்வருவதை AVR  ஆல் கட்டுபடுத்திடமுடியாதிருந்திடும் நிலையில் .மின் உணர்வி(Sensor) ஆனது  UPS க்குள் வரும் மின்னோட்டத்தை தடைசெய்து மின்கலன்களில் சேமித்து வைத்துள்ள மின்சாரத்தை ஒரேசீராக நாம் பயன்படுத்துவதற்காக வழங்குகின்றது.அவ்வாறே குறைந்த அளவிற்கு மின்னோட்டம் UPS க்குள் பெறப்படும் நிலையில்மின்கலன்களில் சேமித்து வைத்துள்ள மின்சாரத்தை அதனுடன் சேர்த்து ஒரேசீராக நாம் பயன்படுத்துவதற்காக வழங்குகின்றது.

மின்தடங்கல் ஏற்படும் நேரங்களில் குறைந்தது கால் மணிநேரம் முதல் சில மணிநேரங்கள் வரை நம்முடைய மின்கலன்களின் திறனிற்கேற்ப தொடர்ச்சியாக  மின்சாரத்தை ஒரேசீராக இந்தUPS ஆனது நாம் பயன்படுத்துவதற்காக வழங்குகின்றது.

மின்னனுகருவிகள் பயன்படுத்தப்படாத தொழிலகங்கள் வீடுகளுக்கு தலைகீழாக்கியையும் (Inverter),மின்னனுகருவிகள் பயன்படுத்தப்படுகின்ற மருத்துவமனை போன்ற இடங்களில் தடையற்ற மின்வழங்கியையும் (Uninterrupted Power Supply (UPS))  உபயோகபடுத்திகொள்வது நல்லது.

நான்கு அறைகள் கொண்ட ஒருவீட்டில் நான்கு குழல் விளக்குகள் ஒவ்வொன்றும் 40 -80 வாட் மின்சாரம் பயன்படுத்திகொள்ளும்.நான்கு மின்விசிறி ஒவ்வொன்றும் 100 -150 வாட் மின்சாரம் பயன்படுத்தி கொள்ளும்.60 வாட் கொண்ட குண்டு மின்விளக்குகள் இரண்டு குளியறைக்காக,தொலைக்காட்சிபெட்டியொன்று,  பொருட்களை பாதுகாத்திட உதவும் குளிர்பதனபொட்டியொன்று ஆகியவை கொண்ட ஒருவீட்டில் பயன்படுத்திடும் மொத்த மின்சாரம் 1000வாட்ஆகின்றது.இவைகள் நன்கு சீராக இயங்குவதற்கு 20- 50 சதவிகிதம் கூடுதலாக அதாவது 1500வாட் என்றவாறு மின்சாரம் செலவாகும் என எடுத்துகொள்வது நல்லது. அதிலும்  குளிர்பதனபெட்டி இயங்கதொடங்குவதற்கு மட்டும் 200 சதவிகிதம் மின்சாரத்தை எடுத்துகொள்ளும் என்பதையும் கணக்கில்கொண்டால் ஏறத்தாழ2000வாட் என்றவாறு ஒருவீட்டிற்கு மின்சாரம் செலவாகும் என்றவாறு இவைகளை கொள்முதல் செய்வதற்கான கணக்கீடுசெய்து எடுத்துகொள்வதே மிகவும் நல்லது.

இவ்வாறான கணக்கீட்டின்போது வீட்டு பயன்பாட்டின் மின்உபயோகம் 2500 – 3000 வாட் வரையிலும் இருந்திடும் நிலையில் தலைகீழாக்கியை (Inverter) அல்லது தடையற்ற மின்வழங்கியை (Uninterrupted Power Supply (UPS)) பயன்படுத்திகொள்க.அதற்குமேல் இருந்திடும் நிலையில் மின்னாக்கியை(Generator) பயன்படுத்திகொள்வதே நல்லது.

ஓப்பன் ஆஃபிஸ்-20-ஆவணங்களில் குறுக்குவழிவிசைகளை பயன்படுத்தல்

         ஓப்பன் ஆஃபிஸின்  ஆவணம் ஒன்றில் சுட்டியை பயன்படுத்தாமல்   விசைப்பலகையை மட்டும் பயன்படுத்தி அனைத்து செயல்களையும் செய்யமுடியும். உதாரணமாக  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டி ருக்கும்போது கட்டளைபட்டி(Menu bar) அல்லது கருவிபட்டியிலுள்ள(Tool bar) கட்டளையை அல்லது கருவியை செயல்படுத்திட விழைவோம்

        அந்நிலையில் சுட்டி(Mouse) எங்கிருக்கின்றது எனத்தேடாமல் இடம் சுட்டியானது (Cursor) கட்டளைபட்டிக்கு மட்டும்  செல்வதற்கு F10 என்ற விசையை அழுத்துக.
       பின்னர் கருவிபட்டிக்கு (Tools bar) இடம்சுட்டி செல்வதற்கு F6என்ற விசையை மீண்டும் மீண்டும் அழுத்துக.
        இவ்வாறு குறிப்பிட்ட பட்டிக்கு இடம்சுட்டி சென்றபின் தேவையான கட்டளையை அல்லது கருவியை  தெரிவுசெய்திடுவதற்கு இடது(Left arrow) அல்லது வலதுநோக்கும் அம்புக்குறியை(Right arrow) பயன் படுத்திகொள்க.
        இவ்வாறுதெரிவுசெய்தபின் கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) பயன்படுத்துக. உடன் நாம் தெரிவு செய்தது கருவிபட்டியின் கருவியெனில் குறிப்பிட்ட கருவி செயலிற்கு வரும் நாம் தெரிவுசெய்தது கட்டளைபட்டியின்(Menu bar)  கட்டளையெனில் குறிப்பிட்ட கட்டளையின் துனைப்பட்டி (Sub menu)திரையில் விரியும்
      அதில் மீண்டும் மேலேகூறியவாறு அம்புக்குறியை  பயன்படுத்தி நாம்விரும்பும் கட்டளையை செயற்படுத்தி கொள்க.குறிப்பிட்ட கட்டளை அல்லது கருவியில் இடம்சுட்டி இருக்கும்போது  உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தியும்  நாம்விரும்பும் கட்டளையைஅல்லது கருவியை செயற் படுத்தி கொள்ளலாம்.
      F6என்ற விசையை மீண்டும் மீண்டும் அழுத்தும்போது இடம்சுட்டியானது (Cursor) திரையில் ஒவ்வொரு  பட்டியாக  சென்று பிரதிபலிக்கும் கடைசியில் நாம் பணிபுரியும் ஆவணத்திற்கே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
      Shift + F6, Shift+Ctrl+Tab என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  இடம் சுட்டியானது ஆவணத்திலிருந்து பட்டிக்கு செல்லும்
     Ctrl+F6  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  இடம்சுட்டியானது பட்டியிலிருந்து ஆவணத்திற்கு செல்லும்
       F10என்ற விசையை  அழுத்தும்போது தற்போது இடம்சுட்டியானது ஆவணத்திலிருந்தால் பட்டிக்கும் பட்டியிலிருந்தால் ஆவணத்திற்கும் மாறிச்செல்லும்.
      Esc  என்ற விசையை  அழுத்தும்போது   தற்போது இடம்சுட்டி இருக்கும்  இடமான பட்டி , துனைப்பட்டி,உரையாடல்பெட்டி ஆகியவற்றிலிருந்து முந்தைய இடத்திற்கு செல்லும்.
        Alt,F6 ,F10 ஆகியவிசைகளில் ஒன்றை அழுத்தினால் கட்டளைபட்டியின் முதல்கட்டளையான Fileஎன்ற கட்டளையை தெரிவுசெய்துவிடும் அந்நிலையில் கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) அல்லது உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தியவுடன் இந்தFile என்பதன் பட்டியலை திரையில் விரித்து திறந்துவிடும்.
    அதில்   கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) அழுத்தி தேவையான கட்டளையை தெரிவுசெய்து  உள்ளீட்டு விசையை (Enter key) அழுத்தியவுடன் நம்மால் தெரிவுசெய்யப்பட்ட கட்டளை செயற்படுத்தப்படும்.
     ஏதேனும் பட்டியில் இடம்சுட்டிஇருக்கும்போது Home என்ற விசையை அழுத்தினால் முதல் கட்டளைக்கும் End என்றவிசையை அழுத்தினால் கடைசி கட்டளைக்கும் இடம்சுட்டிசெல்லும்.இந்நிலையில் உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தினால் குறிப்பிட்ட கட்டளை செயற்படுத்தப்படும்.
              
                                                                             படம்-20-1
   வரைவுப்பட்டியில்  உள்ள ஏதேனும் பணிக்குறியின்மீது(Icon)இடம்சுட்டி இருந்திடும்போது உதாரணமாக செவ்வகம் அல்லது நீள்வட்ட பணிக் குறியின்மீது இடம்சுட்டி இருப்பதாக கொள்வோம் இந்நிலையில்  Ctrl+ Enter என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  முன்கூட்டியே இயல்பு நிலையில் அமைக்கப்பட்டுள்ளவாறு செவ்வக அல்லது நீள்வட்ட  படம் ஆவணத்தில் வரையப்பட்டுவிடும்.(படம்-20-1) இந்த கருவிப்பட்டி மிகநீண்டதாக இருந்து ஏதேனும் சில பணிக்குறிகள் திரையில் பிரதிபலிக்கவில்லை யெனில் PageUpஅல்லதுPage Down விசையிலொன்றை  அழுத்தினால் மிகுதிபணிக் குறிகள் திரையில் பிரதிபலிக்கும்.
   படம்-20-2
 சாளரத்தை மாற்றியமைப்பதற்கான அமைவுபட்டி(System menu)
   Alt+Space bar என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக.உடன் அமைவுபட்டி(System menu) மேலே இடதுபுறமூலையில் தோன்றும்(படம்-20-2) இதில் இடம்சுட்டி பிரதிபலித்து கொண்டு  இருக்கும்போது மேலேகூறியவாறு விசைகளை அழுத்தி தேவையான வற்றை செயற்படுத்திகொள்க.
             கருவிபட்டியை சாளரத்துடன் கட்டுதல்
   F6 என்ற விசையை தேவையைனவாறு அழுத்தி  கருவிபட்டியை தெரிவு செய்து கொள்க பின்னர்  Ctrl+ Shift+ F10        என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் கருவிபட்டியானது தனியாக மிதந்து கொண்டிருந்தால் சாளரத்துடன் கட்டப்பட்டுவிடும். அல்லது  சாளரத்துடன் கட்டப்பட்டிருந்தால் தனியாக (படம்-20-3) மிதக்க ஆரம்பித்துவிடும்

                                                        படம்-20-3

  பொதுவாக கட்டளைகளை செயற்படுத்திட கட்டளைபட்டியிலுள்ள குறிப்பிட்ட கட்டளையை தெரிவுசெய்தவுடன் விரியும் பட்டியலிலிருந்து  குறிப்பிட்ட கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கிடுவோம் அதற்கு பதிலாக குறுக்கு வழிவிசைகளை செயற்படுத்தி நாம்விரும்பும் செயலை செயற்படுத்தி கொள்ள முடியும்.உதாரணமாக நாம் ஓப்பன் ஆஃபிஸ் ஆவணமொன்றில் பணிபிரிந்து கொண்டிருக்கும்போது வேறொரு கோப்பினை திறப்பதற்காக File=>Open=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதற்கு பதிலாக Ctrl , O ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக.உடன் Open என்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றும்
   அதுபோன்றே கட்டளைபட்டியலில் ஒருசில கட்டளைகளின் முதலெழுத்து கீழ்கோடிடப் பட்டிருக்கும்.அவ்வாறான கட்டளையை செயற்படுத்திடுவதற்கு Alt என்ற விசையை அழுத்திபிடித்துகொண்டு கீழ்கோடிடப் பட்டிருக்கும் கட்டளைகளின்  முதலெழுத்தின் விசையை சேர்த்து அழுத்துக.
    உடன் குறிப்பிட்டகட்டளைக்கான உரையாடல்பெட்டியிருந்தால் திரையில் தோன்றும் அதில் இயல்புநிலையில்  பொத்தான்9Button) பட்டிபெட்டி(Listbox) தேர்வுசெய்பெட்டி(Check box) ஆகியஏதேனும் ஒன்றின்மீது இடம்சுட்டியிருக்கும் பின்னர் Tab என்ற விசையை தட்டினால் அடுத்தவாய்ப்பிற்கு இடம்சுட்டி முன்னோக்கி தாவிச்செல்லும்.
    Shift + Tab என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் முந்தைய வாய்ப்பிற்கு இடம்சுட்டி பின்னோக்கி தாவிச்செல்லும். இவ்வுரையாடல் பெட்டியில் குறிப்பிட்ட வாய்ப்பின்மீது இடம்சுட்டியிருக்கும்போது . உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தினால் குறிப்பிட்ட வாய்ப்பின் கட்டளை செயற்படுத்தப்படும்.

ஓப்பன் ஆஃபிஸ்-19-கைபேசியிலும் ஓப்பன் ஆஃபிஸ் ஆவணத்தை பயன்படுத்தலாம்

   மைக்ரோசாப்ட் இணைய உலாவியின் (Ms Internet Explorer)மூலமாக கூட ஓப்பன் ஆஃபிஸின்  ஆவணங்களை திறக்கமுடியும்.அதற்காக நம்முடைய கணினியில் ஓப்பன் ஆஃபிஸினை நிறுவுகையின்போதே ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பதையும்  சேர்த்து நிறுவிடவேண்டும் இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோலை எவ்வாறு நம்முடைய கணினியில் நிறுவுவது என இப்போது காண்போம்.
1.முதலில் ஓப்பன்ஆஃபிஸ் பயன்பாடு ஏதேனும் நம்முடைய கணினியில் இயங்கிகொண்டிருந்தால் அதன்இயக்கத்தை நிறுத்துக.
படம்-19-1
2.அதன்பின்னர் .நாம் வழக்கமாக  பயன்பாடுகளை  இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல்பட்டையில் (Taskbar) உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Startஎன்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.( படம்-19-1)
3.பின்னர் விரியும் Control panel திரையின் கட்டளைபட்டியலில்  Programs and Features என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதன்பின்னர் Control panel ல்தோன்றிடும்  தற்போது நிறுவியிருக்கும் நிரல் தொடர்களின் பட்டியலிலிருந்து Openoffice.orgஎன்பதை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேல்பகுதியிலுள்ள  change என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5.பின்னர் தோன்றிடும் நிறுவுகை வித்தகரின் (Installation wizard) திரையில் Modify என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
6.அதன்பின்னர் தோன்றிடும்திரையில்  Optional Components என்பதை திறந்து கொள்க. அதில் ActiveX Controlஎன்பது உள்ளதாவென உறுதிசெய்துகொள்க. ( படம்-19-2)
                         படம்-19-2
7.பின்னர் இதிலுள்ள துனை பட்டியலை திறந்து கொண்டு Nextஎன்ற பொத்தானையும் பின்னர்  Next என்ற பொத்தானையும் பின்னர் Install என்ற பொத்தானையும் இறுதியாக  Finish என்ற பொத்தானையும் சொடுக்கி நிறுவிடும் பணியை முடிவிற்க கொண்டுவருக.
  இவ்வாறு உங்களுடைய கணினியில்  இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோலை நிறுவியபின்னர்  மைக்ரோசாப்ட் இணைய உலாவியின் (Ms Internet Explorer) வாயிலாக உங்களுடைய கணினியிலுள்ள ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை தேடிபிடித்து திறக்கவும் தேவையானால்  இதேநிலையில் சேமித்து கொள்ளவும் முடியும்.
  இவ்வாறு மைக்ரோசாப்ட் இணைய உலாவிக்குள் (Ms Internet Explorer) திறக்கபட்டுள்ள ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை சூழ்நிலை பட்டியை(Context menu) சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக  செயலிற்கு கொண்டுவந்து அதிலிருக்கும்  Edit  என்பதை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் தேவையான மாறுதல்களை செய்துகொள்ளலாம்( படம்-19-3).
படம்-19-3
 தற்போது பெரும்பாலானவர்கள் இணையத்தில் உலாவிடுவதற்காக கணினிக்கு பதிலாக கைபேசியையே PocketPc  ஆக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கைபேசி யான PocketPc யிலும் ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை நம்மால் திறந்து பயன் படுத்திட முடியும் இதற்காக பின்வரும் செயல்களை பின்பற்றுக.
  முதலில் கைபேசியின் கோப்பு வடிவமைப்பிற்கு (PocketPc Format ) ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை  உருமாற்றம் செய்திடவேன்டும்.
   தற்போது நடப்பில் கணினிக்கும் கைபேசிக்கும் இடையே  AportsDoc என்பது PalmOSஎன்ற ஒத்திசைவு சாதணங்களுக்கும்  Pocket Excel ,PocketWord ஆகியவை PocketPc என்ற ஒத்திசைவு சாதணங்களுக்கும்   வடிகட்டியாக (Filter) செயல்படுத்தப்படுகின்றன .   இந்தPocket Pcயுடன் நம்முடைய கோப்புகள் ஒத்திசைவு செய்வதற்காக முதலில் Mobile device Filters ஐ உங்களுடைய கணினிக்குள் நிறுவிடுக இதனுடன்  இதற்கான DLL கோப்பையும் சேர்த்து நிறுவிடுக. மிகமுக்கியமாக Java  Runtime Environment என்பது உங்களுடைய கணினிக்குள் நிறுவப்பட்டு உள்ளதாவென உறுதிசெய்துகொள்க
  Mobile device filters ஐ உங்களுடைய கணினியில் நிறுவிடுவதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
1. நீங்கள்விண்டோஸ்ஓஎஸ் பயன்படுத்துபவராயிருந்தால் உங்களுடைய கணினியிலுள்ள ActiveSync உடன்  PocketPc Device என்பவைகளில் ஏதேனும் இணைக்கப்படிருந்தால்  முதலில் அதனுடைய தொடர்பை  துண்டித்துவிடுக. பின்னர் அவ்வாறே ஓப்பன்ஆஃபிஸ்பயன்பாடு ஏதேனும் இயங்கி கொண்டிருந்தாலும் அதன் இயக்கத்தையும் நிறுத்துக.
2அதன்பின்னர் .நாம் வழக்கமாக பயன்பாடுகளை  இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல்பட்டையில் (Taskbar)  உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Startஎன்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக(படம்-19-1).
3.பின்னர் விரியும் Control panel இன் கட்டளைபட்டியலில்  Programs and Features என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதன்பின்னர் Control panel ல்தோன்றிடும்  தற்போது நிறுவியிருக்கும் நிரல் தொடர்களின் பட்டியலிலிருந்து Openoffice.orgஎன்பதை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேல்பகுதியிலுள்ள  change என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5.பின்னர் தோன்றிடும் நிறுவுகை வித்தகரின் (Installation wizard) திரையில் Modify என்பதை தெரிவுசெய்து Next  என்ற பொத்தானை சொடுக்குக.
6.அதன்பின்னர் தோன்றிடும்திரையில்  Optional Components என்பதை திறந்துகொள்க. அதில் Mobile Device Filters என்பதை தெரிவுசெய்து (படம்-19-4)  Nextஎன்ற பொத்தானையும் பின்னர்  Next என்ற பொத்தானையும் பின்னர் Install என்ற பொத்தானையும் இறுதியாக  Finish என்ற பொத்தானையும் சொடுக்கி நிறுவிடும் பணியை முடிவிற்க கொண்டுவருக.
                              படம்-19-4
   இதன்பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் திரையில் File=> Open  என்றவாறு கட்டளைகளை செற்படுத்தியவுடன் தோன்றிடும் Open என்ற உரையாடல் பெட்டியில் உள்ள File Type என்பதற்கு AportisDoc(Palm)(*.pdb),அல்லது Pocket Word(*.psw) என்றவாறு பொருத்தமான வடிகட்டியை(Appropriate Filters ) தெரிவுசெய்துகொண்டு(படம்-19-5) Open என்ற பொத்தான சொடுக்குக

                                   படம்-19-5

   ஓப்பன் ஆஃபிஸ் திரையில் File=> Save as  என்றவாறு கட்டளைகளை செற்படுத்தியவுடன் தோன்றிடும் Save as என்ற உரையாடல் பெட்டியில் உள்ள File Type என்பதற்கு AportisDoc(Palm)(*.pdb),அல்லது Pocket Word(*.psw) என்றவாறு பொருத்தமான வடிகட்டியை(Appropriate Filters ) தெரிவுசெய்துகொண்டு Save  என்ற பொத்தானை சொடுக்குக.
  இதுபோன்றே கைபேசியின் கோப்பு வடிவமைப்பினை  (PocketPc Format ) ஓப்பன் ஆஃபிஸ் கோப்பு வடிவமைப்பிற்கு உருமாற்றம் செய்து பயன்படுத்திகொள்ளலாம். இதற்காக
1. Active Sync என்ற சாளரத்தை முதலில் திறந்துகொள்க. அதில் options  என்ற கட்டளையை தெரிவுசெய்துoptions என்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்க.
2.பின்னர் இதிலுள்ள Rulesஎன்ற தாவியை தெரிவுசெய்துசொடுக்குக .அதன் பின்னர் விரியும் Rulesஎன்ற தாவியின் திரையில்   Conversion  settingsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3.பின்னர்  Device to Desktop என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Device to Desktop என்ற தாவியின் திரையில்   Pocket Word Document  -Pocket Pc  என்பதை தெரிவுசெய்து Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.பின்னர் இதேதிரையின் Conversionஎன்ற கீழிறங்கு வாய்ப்பு பட்டியலிலிருந்து Open Office Writerஎன்பதை தெரிவுசெய்துகொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  இவ்வாறே எக்செல் பணிப்புத்தகத்தையும் உருமாற்றம் செய்திட மேலேகூறப்பட்ட படிமுறை 1,2 ஐ அப்படியே பின்பற்றுக படிமுறை 3,4 ஐ பின்வருமாறு பின்பற்றுக.
3.பின்னர்  இதிலுள்ள Device to Desktop என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Device to Desktop என்ற தாவியின் திரையில்   Pocket Excel Workbook –  Pocket Pc என்பதை தெரிவுசெய்து Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.பின்னர் இதேதிரையின் Conversionஎன்ற கீழிறங்கு வாய்ப்பு பட்டியலிலிருந்து Openoffice.org Calc என்பதை தெரிவுசெய்துகொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  இதன்பின்னர் கைபேசியின் வடிவமைப்பு கோப்பு களை  (PocketPc format file) ஓப்பன் ஆஃபிஸ்வடிவமைப்பு கோப்புகளாகவோ அல்லது ஓப்பன் ஆஃபிஸ்வடிவமைப்பு கோப்புகளை கைபேசியின் வடிவமைப்பு கோப்புகளாகவோ (Pocket Pc format file) நகலெடுத்தல் திறத்தல் படித்தல் மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை    Active Sync  அல்லது Window Internet Explorer ஆகிய இரண்டிலொன்றை பயன்படுத்தி செயல்படுத்தி கொள்ளலாம்.
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)

ஓப்பன் ஆஃபிஸ்-18 மீஇணைப்பு (Hyperlink)செய்தல்

 இந்த ஓப்பன் ஆஃபிஸ் மூலம் எந்தவகையான கோப்பாக இருந்தாலும் திறக்கமுடியும் என்பது நாமனைவரும் அறிந்ததே..  இவ்வாறு நாம் திறக்கவிழையும் கோப்புகள் எந்தவிடத்தில் இருக்கின்றதோ அதனை தேடிப்பிடித்து திறப்பதற்கு File => Open => என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..
    பின்னர் தோன்றும் Open என்ற உரையாடல் பெட்டியில் File Types என்பதற் கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து All Files (*.*)என்பதை தெரிவு செய்தால் அனைத்துவகையான கோப்புகளும் பட்டியலாக திரையில் இந்த Open என்ற உரையாடல் பெட்டிக்குள் பிரிதிபலிக்கும் அவற்றுள் நாம்விரும்பியதை தெரிவுசெய்து திறந்து கொள்ளலாம். அல்லது நாம் எந்தவகையான கோப்புகளை இந்த Open என்ற உரையாடல் பெட்டிக்குள் பிரிதிபலிக்கச்செய்ய விரும்பு கின்றோமோ அதனைமட்டும் தெரிவுசெய்தால் நாம் தெரிவுசெய்தவகை கோப்புகள் மட்டும் பட்டியலாக திரையில் பிரிதிபலிக்கும்..
  பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டருடைய ஆவணத்தை சேமித்தபின் மீண்டும் திறக்கும்போது இடம்சுட்டியானது இயல்புநிலையில் அந்த ஆவணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பிரிதிபலிக்கும்.. பெரியஆவணங்களில் திருத்தம் செய்யும் பணியை செய்துமுடித்தபின்னர் வேறொரு நாளில் நாம் கடைசியாக எந்தவிடத்தில் திருத்தம் செய்துமுடித்தோம் என்று நினைவுகூர்ந்து எந்தவிடத்திலிருந்து தொடர்ந்து திருத்தம் செய்யவேண்டும் என தேடிப்பிடிப்பதில் அதிகசிரமம் ஏற்படும்.
   .இதனை தவிர்க்க Tools => Options => என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதை தெரிவு செய்து சொடுக்குக.
   அதன்பின்னர் Open Office.Org  என்பதன்கீழ்விரியும் பட்டியலிலிருந்து User Data என்பதை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் Options-Open Office.Org-User Data என்ற உரையாடல் பெட்டிபடம்-18-1 இல் உள்ளவாறு தோன்றும்
   இதன் வலப்புறமுள்ள பலகத்தில்Address என்பதன்கீழ் கோரும் விவரங்களை உள்ளீடு செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக. அல்லது Shift + F5 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக.
  இவ்வாறு அமைத்தபின்னர் நம்மால் சேமிக்கப்படும் ஆவணங்களை மீண்டும் அதில்பணிபுரிவதற்காக திறக்கும்போது கடைசியாக நாம் பணிபுரிந்த இடத்திலேயே இடம்சுட்டி பிரிதிபலித்துகொண்டிருப்பதை காணலாம்.
                                                            படம்-18-1
  ஒருஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே  நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் கோப்பு இருக்கும் கோப்பகத்தை அடைவை(Directory) மாற்றிக் கொள்ளலாமே என எண்ணிடுவோம்
   அந்நிலையில்  Tools => Options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.. பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதை தெரிவு செய்து சொடுக்குக. அதன் பின்னர் Open Office.Org  என்பதன் கீழ்விரியும் பட்டியலிலிருந்து Path என்பதை தெரிவு செய்து சொடுக்குக.
  பின்னர் Options-Open Office.Org-Path என்ற உரையாடல் பெட்டிபடம்-18-2 இல் உள்ளவாறு தோன்றும் இதன் வலப்புறமுள்ள பலகத்தில் Paths Used by Open Office.Org என்பதன்கீழ் விரியும் பட்டியலிலிருந்து My Documents என்பதை தெரிவுசெய்து Editஎன்றபொத்தானை சொடுக்குக.
 அதன்பின்னர்விரியும் Select path என்ற உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான அடைவை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
                                                                      படம்-18-2
  ஒருசிலநேரங்களில்  ஒருகோப்பில் இருக்கும் மிகமுக்கியவிவரங்களை மற்றொரு கோப்புடன் மீஇணைப்பு (Hyperlink)வாயிலாக இணைத்திடுவோம் .அவ்வாற மீஇணைப்பு செய்யும்போது இவ்விணைப்பானது தொடர்பு மீஇணப்பா(Relative Hyperlink) அல்லது முழுமையான மீஇணைப்பா (Absolute Hyperlink)என்ற இரண்டு அடிப்படை காரணிகளை கருத்தில்கொள்ளவேண்டும்..
   உதாரணமாக grapic/picture.gif என்ற கோப்பினை மேற்கோள் காட்டிடுவதாக கொள்வோம்  தொடர்புமீஇணைப்பு மேற்கோள் எனில் தொடர்புபடுத்திடும் இரண்டு கோப்புகளும் ஒரேஅடைவிற்கள்(Directory) இருந்திடவேண்டும்.
    அவ்வாறில்லாமல் மேற்கோள் காட்டிடும் கோப்பும் மேற்கோள் பெற்றிடும் கோப்பும் அதேகணினியில் வெவ்வேறு அடைவிற்கள்இருந்தால்  File://data1/xyz/picture.gif என்றவாறு முழுமையான மீஇணைப்பு மேற்கோளாக அமைத்திடவேண்டும். .
  அதற்குபதிலாக இரண்டு கோப்புகளும் வெவ்வேறு சேவையாளர் கணினியில் இருந்தால் http://data2/picture.gif என்றவாறு முழுமையான மீஇணைப்பு மேற்கோளாக  அமைத்திடவேண்டும் .
   இவ்வாறு அமப்பதற்கு முன்பு Tools => Options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதன் கீழுள்ள Load/save என்பதைதெரிவு செய்து சொடுக்குக.
 அதன்பின்னர் Load/save  என்பதன்கீழ்விரியும் பட்டியலிலிருந்து General என்பதை தெரிவு செய்து சொடுக்குக. .பின்னர் Options-Load/save-General என்ற உரையாடல் பெட்டிபடம்-18-3 இல் உள்ளவாறு தோன்றும்
  இதன் வலப்புறமுள்ள பலகத்தில் saveஎன்பதன்கீழ் Save URLs relative to file system மற்றும்  Save URLs relative to internet ஆகியவற்றினை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
   படம்-18-3
   பெரிய அதிகாரிகளை பார்க்க செல்லும்போது நம்முடையபெயர் முகவரி போன்றவிவரங்களை ஒரு துண்டுதாளில் எழுதிகொடுப்போம் அதற்குபதிலாக ஒருசிலர் சிறுபார்வையாளர் அட்டையை நூற்றுகணக்கில் அச்சிட்டு வைத்திருப்பார்கள் அவ்வாறே நம்முடையவாடிக்கையாளர்களுடன் கடிததொடர்புகொள்ளும்போது அவர்களுடைய முகவரிகளை  அச்சிட்டு அனுப்பிடுவோம். இவ்வாறான பார்வையாளர் அட்டை வாடிக்கையாளர் முகவரிகளை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் வாயிலாக நாமே மிகஎளிதில் வடிவமைத்துகொள்ளலாம்.
  அதற்காக File => New=>  Lableஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.பின்னர் படம்-18-4 இல் உள்ளவாறு தோன்றும் Lablesஎன்ற உரையாடல் பெட்டியின் வாய்யப்புகளிலிருந்து நாம்விரும்பியவாறு வாடிக்கையாளர்களின் முகவரிகளை வடிவமைத்துகொள்ளலாம்.
                                                                     படம்-18-4
  இவ்வாறே File => New=>  Business Cardsஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் படம்-18-5 இல் உள்ளவாறு தோன்றும் Business Cardsஎன்ற உரையாடல் பெட்டியின் வாய்யப்புகளிலிருந்து நாம் விரும்பியவாறு பார்வையாளர் அட்டையை வடிவமைத்துகொள்ளலாம்.
                                                                   படம்-18-5
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)

ஓப்பன் ஆஃபிஸ்-17-உரை அசைவூட்டம்

 View => tool bars => Drawing என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலிருந்து கட்டளைகளை செயற்படுத்துக.பின்னர் தோன்றும் Drawing tool bar இல் மூன்றாவதாக வுள்ள Rectangle என்பதை தெரிவுசெய்க உடன் இடம்சுட்டியினுடைய தோற்றம் சிறு செவ்வக கோட்டுருவமாக மாறியிருக்கும்.அதனைபிடித்து தேவையான இடத்தில் ஒரு செவ்வகத்தை வரைந்துகொள்க.
    பின்னர் Drawing tool bar இல் T என்றவாறுள்ள text என்பதை தெரிவுசெய்து இந்த தொடரின் தலைப்பெழுத்தான ஓப்பன் ஆஃபிஸ்-17-உரை அசைவூட்டம் என்றவாறு இந்த செவ்வக பெட்டிக்குள் உள்ளீடு செய்க.
    அதன்பின்னர் Format=.Object=>Text Attributes  என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.பின்னர் படம்-17-1இல் உள்ளவாறு தோன்றும் Text என்ற உரையாடல் பெட்டியில் text animation என்ற தாவியை தெரிவுசெய்கஉடன் தோன்றும் திரையில் text animation effects என்பதன்கீழ் effects என்பதற் கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து Scroll Through என்பதை தெரிவு செய்து கொள்க.
     பின்னர்  Animation cycle என்பதற்கு Continue என்றதேர்வு செய் பெட்டி யையும்   incrementஎன்பதற்கு  1 pixel  என்ற தேர்வு செய்பெட்டியையும் delay  என்பதற்கு automatic  என்ற தேர்வுசெய் பெட்டியையும் தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக. உடன் செவ்வகபெட்டிக்குள் இருக்கும் இந்த தொடரின் தலைப்பெழுத்துகள் ஓடிக்கொண்டேயிருப்பதை திரையில் காணலாம்.   
                                    படம்-17-1
 இந்த ஓப்பன் ஆஃபிஸில் நம்மால் உருவாக்கப்படும் ஒரு  ஆவணமானது எம்எஸ் வேர்டின் ஆவணமாக தானாகவே இயல்புநிலையில் சேமித்துகொள்ளுமாறு செய்தால் நன்றாகஇருக்கும் என எண்ணுவோம் அந்நிலையில்  Tools => Optionsஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலிருந்து கட்டளைகளை செயற்படுத்துக.
   பின்னர்  Options என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில்தோன்றும்.அதில் openoffice.org என்பதன்கீழுள்ள  load/save என்பதை தெரிவுசெய்க.
    அதன்பின்னர் இதன்(load/save )கீழ் விரியும் பட்டியலிலிருந்து  General என்பதை தெரிவுசெய்க.உடன் படம்-17-2 இல்உள்ளவாறு தோன்றும் திரையில் Document type என்பதற்கு Text documents என்பதையும்Always save asஎன்பதற்கு  microsoft word97/2000/xp என்பதையும் இவைகளிலிருக்கும் கீழிறங்கு பட்டியிலிருந்து தெரிவுசெய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக.
  இதன்பின்னர் நம்மால் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் ஆவணங்களனைத்தும் எம்எஸ் வேர்டின் ஆவணமாகவே docஎன்ற பின்னொட்டுடன் இயல்புநிலையில் சேமிக்கப்படும்.
 அதுமட்டுமன்றி ஒருஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே இடையில் ஏதேனும் காரணங்களினால் தடங்கள்ஏற்பட்டு  மீண்டும் பணியை தொடரும்போது நாம் இதுவரையில் செய்தபணியனைத்தும் இழக்கப்பட்டு புதியதாக ஆரம்பநிலையி லிருந்து தொடங்குகின்ற நிலைஏற்படும்
   அவ்வாறான நிலையை தவிர்க்கும் பொருட்டு Tools=> options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலிருந்து கட்டளைகளை செயற் படுத்துக. பின்னர் தோன்றும் திரையில்  load/save=> General  என்றவாறு தெரிவுசெய்க.
   உடன் Options-Load/Save-General என்ற உரையாடல் பெட்டியொன்று படம்-17-1 இல் உள்ளவாறு தோன்றும். save என்பதன்கீழுள்ள save autoRecovery information every என்பதன் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து minutes என்பதற்கு முன்புறமுள்ள சுழல் பெட்டியிலிருந்து எவ்வளவு நேரத்திற்கொருமுறை கணினியானது தானாகவே சேமித்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டு ok என்ற பொத்தானை சொடுக்குக.
                         படம்-17-2
  ஒரு சிலநேரங்களில் நம்மால் உள்ளீடு செய்யப்படும் உரையானது தானாகவே யூஆர்எல் முகவரியாக உருமாற்றி அங்கீகரித்துகொண்டு நமக்கு எரிச்சலேற்படுத்தும்
   அந்நிலையில் Tools => Auto  correctஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலிருந்து கட்டளைகளை செயற் படுத்துக. பின்னர்    Auto correct என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும். அதில்  optionsஎன்றதாவியை தெரிவுசெய்க
    Mஎன்ற நெடுவரிசை-Replace while modifiy existing text  என்றும் Tஎன்ற வெடுவரிசை = Auto format /auto correct while typingஎன்றும் பொருளுணர்த்தும் அவைகளின்  URL recognition  என்பதற்கரு கிலுள்ள தேர்வுசெய்பெட்டியில் தெரிவு செய்திருந்தால்நீக்கம் செய்து (படம்-17-3 ) ok என்ற பொத்தானை சொடுக்குக.

                               படம்-17-3

  File => Properties என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலிருந்து கட்டளைகளை செயற்படுத்துக.பின்னர்    properties of என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில்தோன்றும்.அதில்  Description என்றதாவியை தெரிவுசெய்க.
  பின்னர் தோன்றிடும்  திரையில் Titleஎன்பதற்கருகில் உள்ள உரைபெட்டியில் இந்த ஆவணத்தின் தலைப்பாக ஓப்பன் ஆஃபிஸ்-17 என்றும் Subjectஎன்பதற்கருகில் உள்ள உரைபெட்டியில் இந்த ஆவணம் எதைபற்றியது என்றும்  Keywords என்பதற்கருகில் உள்ள உரைபெட்டியில் இந்த ஆவணத்தை எவ்வாறு தேடிபிடிப்பது என்றும் உள்ளீடுசெய்க.
 மேலும்இது  ஒரு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம்  என விவரமாக கூறும்  ஒரு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் ஆவணமாகும் என்ற விவரத்தை Comments என்ற பகுதியிலும் உள்ளீடு செய்க.(படம்-17-4)                         
                              படம்-17-4
 நாம் பயன்படுத்தும் நடப்பு ஆவணத்தில் எத்தனை எழுத்துக்கள் எத்தனை சொற்கள் எத்தனைவரிகள் எத்தனை பத்திகள் எத்தனை அட்டவணைகள் எத்தனை படங்கள் எத்தனை பக்கங்கள்  உள்ளன என்பனபோன்ற விவரங்கள்  Properties என்ற உரையாடல்பெட்டியின் Statistics என்ற தாவியின் திரையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்(படம்-17-5.)
      படம்-17-5.
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)

Previous Older Entries