Kriptomatஎனும் சேவையகம்

Kriptomat என்பது மிகவும் புதுமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவில் இருந்து பாதுகாக்கப்பட்ட கிரிப்டோநாணய பரிமாற்றமாகும். “அனைவரும் கிரிப்டோவுக்குத் தகுதியானவர்கள்(Everybody deserves crypto)”,என்பதே இதனுடைய குறிக்கோள் ஆகும் அதனால்தான் இது ஒரு எளிய , நம்பகமான fiat-to-crypto எனும் நுழைவாயிலாக செயல்படுகிறது, இது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது , 23 வெவ்வேறு மொழிகளில் உலகெங்கிலும் உள்ள 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வாடிக்கை யாளர்களுக்கு சேவையளிபபதற்காக இதுதிறக்கப்பட்டுள்ளது.இது பல சர்வதேச அங்கீகாரம் பெற்ற Cryptocurrency ,பாதுகாப்பு உரிமங்களையும் பெற்றுள்ளது. நெறிமுறைப்படுத்தப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட போதிலும், இது அடையாள சரிபார்ப்பின் விரைவான பதிப்பையும், குறைந்த கட்டணங்களையும் வழங்குகிறது, இதனால் சந்தையில் சிறந்த, வரவிருக்கும் ஐரோப்பிய பரிமாற்றங்களில் ஒன்றாக இது அமைகிறது. இதனை எளிதாகவும் உடனடியாகவும் வாங்கலாம்: இது கிரிப்டோ நாணயங்களை வாங்குவதை/விற்பதை எளிதாகவும் வேகமாகவும் பாதுகாப்பா கவும் செய்கிறது. இதனை கையாளுவதற்காக நம்மிடும்வங்கி கணக்கு அல்லது பற்றுஅட்டை/கடனட்டை இருந்தால் போதும். Kriptomat இல் 30 பிரபலமான கிரிப்டோநாணயங்களை வாங்கலாம், விற்கலாம், சேமிக்கலாம். மேலோட்டத்தை அழித்திடுவதை தடுப்பதற்கான 24/7 உயர் பாதுகாப்பு கொண்டுள்ளது இதனுடைய விலைகள் சொத்துக்களின் மதிப்பைநாமே சரிபார்க்கலாம். இதனுடைய முக்கிய முயற்சிகளில் ஒன்று, தொழில்துறையில் முன்னணி பாதுகாப்புடன் வெவ்வேறு உள்ளக கிரிப்டோ பணப்பைகளில் இருக்கும் கிரிப்டோ கையிருப்புகளைப் பாதுகாப்பதாகும். 98% கிரிப்டோ சொத்துக்களை கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன் மிகவும் பாதுகாப்பான குளிர் சேமிப்பகத்தில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக நிலுவைகளையும் போக்குகளையும் கண்காணித்து வருகின்றது. நிபுணத்துவ ஆதரவினை கொண்டது அதன் பயனர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை உறுதிசெய்கின்றது. பார்வையாளர்கள் உதவிகரமான ஆதரவுக் குழுவை 24/7 இல்நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் விரிவான உதவிப் பிரிவுகளில் உதவியைப் பெறலாம். அனைவரும் கிரிப்டோவுக்குத் தகுதியானவர்கள் ஒரு முழுமையான தொடக்கநிலை அல்லது அனுபவமுள்ள கிரிப்டோநாணய ஆர்வலராக இருந்தால், இது ஒரு சரியான இடமாகும். கிரிப்டோவை சொந்தமாக்குவது எளிதாகவும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
கிரிப்டோவை நிமிடங்களில் வாங்கவும், விற்கவும் சேமிக்கவும் செய்திடலாம்
Bitcoin, Ethereum, Shiba Inu , போன்ற 300இக்கும் மேற்பட்ட கிரிப்டோநாணயங்களை வெவ்வேறு கட்டண முறைகளுடன் வாங்குவதற்கான எளிதான வழி.யாகவும் உலகத்தரம் வாய்ந்த ஆதரவினையும்கொண்டுள்ளது.
Kriptomat சிறந்த நடைமுறைகள், தொழில் தரநிலைகள், EU விதிமுறைகளை கடைபிடிக்கிறது. எஸ்எம்எஸ் அங்கீகரிப்பு, இணையஇணைப்பில் குளிர்-பணப்பை சேமிப்பு, நிறுவன, தொழில்நுட்ப பாதுகாப்பு , தற்போதைய பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவை நம்முடைய நிதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

மேலும் விவரங்களுக்குhttps://kriptomat.io/எனும் இணையதள முகவரிக்கு செல்க

குறிமுறைவரிகளின்-சேவையகம்(code-server) ஒரு அறிமுகம்


குறிமுறைவரிகளின்-சேவையகம் ஆனது VS குறிமுறைவரிகள் உலகின் மிகவும் பிரபலமான ஒருங்கிணைந்த மேம்படுத்துதல் சூழலை ( IDE) மேககணினி ஒருங்கிணைந்த மேம்படுத்துதல் சூழலலாக ( IDE) மாற்றுகிறது. நிலையான மேம்படுத்துதல் ( dev) சூழலுடன் தேர்வு செய்யும் எந்த சாதனத்திலும் அடிப்படையில் குறிமுறைவரிகளை உருவாக்கலாம் என்பதே இதன் பொருளாகும். இதனுடைய முழு மேம்படுத்துதல் ( dev) சூழலும் பெரிய மேககணினி சேவையகங்களில் இயங்குவதால், பரிசோதனைகள், உருவாக்கங்கள், பதிவிறக்கங்கள் ஆகிய பல்வேறு செயல்களை செயற்படுத்திடும் போது இதனுடைய விரைவான செயலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடைய சேவையகத்தில் அனைத்து கணக்கீடுகளும் செயல்படுத்துபடுவதால் நாம் பயணத்தில் இருக்கும்போது சாதனத்தின் மின்கலண் ஆயுளை பாதுகாத்திடுகின்றது.
முக்கிய வசதி வாய்ப்புகள்: பணிநிலையங்களை மாற்றும்போது கூட, எளிதான , நிலையான சூழல் மேலாண்மைவசதி கொண்டுள்ளது, இதனுடைய சக்திவாய்ந்த, அளவிடக்கூடிய சேவையகங்கள் மேம்பட்ட செயல்திறனை வழங்குகின்றன, அனைத்து மூலக் குறிமுறைவரிகளும் மேம்பாட்டுத் தரவுகளுக்கான மையப்படுத்தப்பட்ட சேவையகங்கள் அதிக பாதுகாப்பை வழங்குகின்றன மூலக் கட்டுப்பாட்டு Docker images ஐஅனைத்து கருவிகளுடனும் சார்புகளுடன் உருவாக்குவதற்கான ஒரு செயல்திட்டமாக உள்ளது . ஒத்துழைப்பு, பணிப்பாய்வுகளை சீராக்க தரப்படுத்தப்பட்ட சூழல்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும், சக்திவாய்ந்த மேகக்கணி சூழல்களைப் பயன்படுத்துகையில், மேம்படுத்துநர்கள் தங்களது சொந்த பதிப்பாளரையும் உள்ளமைவையும் பயன்படுத்திகொள்ளலாம் எந்த சாதனத்திலிருந்தும் எங்கிருந்தும் பாதுகாப்பாக முறைவரிகளை உருவாக்கலாம். அதற்காக இணைய அணுகலும் இணைய உலாவி ஆகியவை மட்டுமே தேவைகளாகும். மையப்படுத்தப்பட்ட images களஞ்சியங்களிலிருந்து ஒருசில நொடிகளில் மேம்படுத்திடும் சூழல்கள் உருவாக்கப்படுகின்றன. அடிப்படையில் imageஇற்கான புதுப்பிப்புகளை கொண்டுள்ளது அந்த imageப் பயன்படுத்தி எல்லா சூழல்களுக்கும் வெளியே அனுப்பலாம். மூலக் குறிமுறைவரிகளும் தரவுகளின் கொத்துகளில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியங்களில் பாதுகாப்பாக இருக்க முடியும்

இந்த code-server என்பது MIT Licenseஎனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://coder.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க .

சேவையகத்தினை உருவாக்கு வதற்கான Go எனும் கணினி மொழி

Goஎன்பது ஒரு கட்டற்ற நிரலாக்க (கணினி)மொழியாகும், இது மிகவும் எளிய, நம்பகமான திறனுடைய மென்பொருட்களை (பயன்பாடுகளை) உருவாக்குவதை எளிதாக்குகிறது. இது மிகவும் செயல்திறன் மிக்க, எளிதாக தொகுக்கப்படக்கூடிய, சிறிய, பொருள் சார்ந்த, நிலையானவகை கணினி மெழியாகும். எளிய ஆனால் மிகத் திறனுடைய இணைய சேவையகங்களை உருவாக்குவதே னுடைய குறைந்தபட்ச குறிக்கோளாகும், இந்த கணினி மொழி வாயிலாக அவ்வாறான சேவையகங்களை நாம் ஒருசில நிமிடங்களிலேயே உருவாக்கி செயல்படுத்திடத் துவங்கலாம். மற்ற அனைத்து கணினி மொழிகளுடன் ஒப்பிடும்போது இதனுடைய செயல்திட்டங்களின் தொகுப்பு நேரமும் செயற்படுத்திடும் நேரமும் மிகவும் குறைவாகும். இது நிலையானதாக வகைபடுத்தப்ப் பட்ட கணினிமொழி என்பதால், பெரும்பாலான பிழைகள் உடனடியாக தொகுத்திடும் நேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படுகின்றன. இது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட ஒத்திசைவினையும் ஆதரவையும் கொண்டுள்ளது, இது அதன் குறிமுறைவரிகளைல்வேறு சூழலிலும் இயங்கச் செய்கிறது. தனுடைய வழக்கமான (இலகுரக செயல்முறை), channels , select statements ஆகிய கருத்தமைவுகள் பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் நிரல்களை எளிதாக செயல்படுத்த உதவுகிறது மேலும் பல்லடுக்கு அமைப்பை அதிகபட்சமாகப் பயன்படுத்திகொள்கின்றது. நாம் ஒரு HTTP சேவையகத்தை உருவாக்குவதற்காக நமக்கு இதில் ஒரு இயந்திர மொழி மாற்றி , உரை / குறிமுறைவரிகளின் பதிப்பாளர் ஆகிய இரண்டு மட்டுமே தேவையாகும். அவ்வாறான இயந்திர மொழி மாற்றியை இதனுடைய அதிகாரப்பூர்வ மின்னனு விநியோகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம், இது FreeBSD க்கான https://golang.org/dl/ எனும் இணையமுகவரியில் கிடைக்கிறது (இதனுடைய பதிப்பு10-நிலையானது ,அதனைவிடமேம்பட்ட வெளியீடு), லினக்ஸ், மேக் (10.11 அல்லது அதற்கு மேற்பட்டவை), விண்டோ இயக்கத்தில் 32-பிட் (386) , 64-பிட் (amd64) x86 செயலி கட்டமைப்புகளுக்கான அமைப்புகள். பதிவிறக்கம் செய்தவுவுடன்,இதனை நிறுவுகை செய்வதற்கான முழுமையான செயல்முறைகள் நிறுவுகையை பரிசோதிப்பது ஆகிய வழிமுறைவிவரங்களை https://golang.org/doc/install#install எனும் இணையமுகவரியில் அறிந்துகொள்ளலாம். இந்த செயல்திட்டம் இதனுடைய பிறசெயல்திட்டங்களில் சார்புகளை உள்ளடக்கியிருந்தால்,Go 1.13 முதல் இயல்புநிலை சார்பு மேலாண்மை அமைப்பிற்கு தேவைப்படும் தொகுப்புளை பயன்படுத்தவேண்டும். இதனுடைய தொகுப்புகள் Go எனும் கட்டுகளின் தொகுப்பாகும், இது go.mod எனும் கோப்புடன் அதன் மூலகோப்பில் சேமிக்கப்படுகிறது. Go.mod கோப்பில் உள்ளீடுகள் உள்ளன, அவை வழிசெலுத்தியின் கோப்பகத்திற்கு பயன்படுத்தப்படும் பதிவிறக்க வழி அதன் சார்பு தேவைகளாகும். அடுத்து, இதில் குறிமுறைவரிகளை எழுதுவதற்கு, textpad, notepad அல்லது IDE போன்ற உரை திருத்திகள் தேவையாகும். ஆயினும் Https://code.visualstudio.com/download இலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய கட்டணமற்ற கட்டற்ற குறிமுறைவரி பதிப்பாளாரான VSCODE ஐ பயன்படுத்தலாம். வலைபின்னலை ஆதரிக்க, இதில் net’ என்ற பெயரில் ஒரு தொகுப்பு உள்ளது, இதில் HTTP / HTTPS சேவையகத்தை உருவாக்கவும் வாடிக்கையாளர் கோரிக்கைகளைச் செயற்படுத்தி கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்ற http எனும் தொகுப்பு ஒன்றும உள்ளது. வலைபின்னல்தொகுப்பினை (https://golang.org/src/net/net.go) TCP / IP, UDP, domain பெயர் தெளிவுதிறன் , மின்னஞ்சல்கள் போன்ற பிணைய I / O ஐ ஆதரிப்பதற்காக ஒரு இடைமுகத்தை வழங்குகிறது. Http தொகுப்பானது கவணித்தலும் சேவையும்( ListenAndServe) எனும் ஒரு வழி முறையைக் கொண்டுள்ளது, இது சேவையகத்தைத் துவங்கி உள்வரும் கோரிக்கைகளை கேட்கிறது. இந்த முறை இரண்டு தருக்கங்களை ஏற்றுக்கொள்கிறது:

1. முகவரி(address):: இது சுட்டியின் முகவரி , இயந்திரத்திநுழைவுவாயில் ஆகியவற்றின் சரவடிவமாகும். ‘9000’ போன்ற இணைய வாயில் மட்டுமே வழங்கப்பட்டால், இந்த இணைய வாயிலை கணினியின் அனைத்து சுட்டிமுகவரிகளின் மூலமும் அணுகமுடியும்.

2. கையாளுபவர்(handler): இந்த தருக்கம் கையாளுபவர் எனும் இடைமுகத்தின் வகையாகும். இது servHTTP வழிமுறையைப் பயன்படுத்திகொள்கிறது, இது கவணித்தலும் சேவையும் எனும் வழிமுறை செயல்படுத்தப்படும் போதெல்லாம் வளாகத்தில் அழைக்கப்படுகிறது.

3. servHTTPஎனும்வழிமுறை இது ( (res http.ResponseWriter, req * http.Request) னும் வடிவமைப்பில் உள்ளது, மேலும் இது கோரிக்கையை ஏற்று பதிலை வழங்கும் முக்கிய செயல்பாடாகும்.

அடுத்தபடிமுறைக்கு செல்வதற்கு முன், (res 9000 இல் இயங்கும் ஒரு சேவையகத்திற்கான குறிமுறைவரிகளை காண்போம், இது இணைய உலாவியில் திறக்கப்படும் போது ‘Welcome to the World of Go Lang’ என்ற உரையுடன் பதிலளிக்கிறது:

package main

import (

net/http”

))

// HttpHandler is a handler struct

type HttpHandler struct{}

// implement `ServeHTTP` method on `HttpHandler` struct

func (h HttpHandler) ServeHTTP(res http.ResponseWriter, req *http.Request) {

// create response binary data

data := []byte(“Welcome to the world of Go Lang”)

// write `data` to response

res.Write(data)

}

func main() {

// create a new handler

handler := HttpHandler{}

// listen and serve on localhost

http.ListenAndServe(“:9000”, handler)

}

மேலே காணும் குறிமுறைவரிகளில் ஒரு நிரலை http-server.go என்ற கோப்பில் எழுதப்பட்டுள்ளதை காணலாம், அதில் ஒரு HttpHandler என்பதை உருவாக்கி, serveHTTP எனும் வழிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. முகப்புத்திரையில் http-server.go என்ற கட்டளையை இயக்குவதன் மூலம் இந்த நிரல் இயங்கும்போது, முக்கிய செயல்பாடு செயல்படுத்தப்படுகிறது, இது http ListenAndServe எனும் வழிமுறையை அழைக்கிறது, இதன் மூலம் சேவையகத்தை ஒரு தருக்கமாக வழங்கப்பட்ட முகவரியில் துவங்குகிறது. ServHTTP இன் உள்ளே, மின்னனு தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளது, இது வழக்கமாக எழுதும் முறையைப் பயன்படுத்தி பதிலுக்கு எழுதப்பட்டுள்ளது. இணைய உலாவியில் http: // localhost: 9000 என்ற முகவரியை சென்றடைந்ததும், சேவையகம் அனுப்பிய தரவானது ஒரு பதிலாக காட்டப்படும். சேவையக முகப்புத்திரையில் CTRL ஐத் தட்டச்சு செய்வதன் மூலம் சேவையகமானது நிறுத்தப்படும் வரை தொடர்ந்து இயங்கும். மேலே உள்ள குறிமுறைவரிகள் ஒரு எளிய சேவையகத்தை உருவாக்குகின்றது, ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், எல்லா கோரிக்கைகளுக்கும் ஒரே பதிலையே திரும்ப திரும்ப ளிக்கிறது. எடுத்துக்காட்டாக, URL இல் /index.html அல்லது /test.pdf இருந்தால், பதில் எப்போதும் நிலையானதாக ஒரேபதிலாக இருக்கும் இதைத் தீர்வுசெய்வதற்கா, வெவ்வேறு URL களுக்கு வெவ்வேறு பதில்களைக் கையாளும் ஒரு பாதை அடிப்படையிலான கட்டுப்பாட்டு பொறிமுறையிலான சேவையகம் நமக்குத் தேவையாகும். ServerMux என்பது HTTP தொகுப்பில் உள்ளமைக்கப்பட்ட கட்டமைப்பாகும், மேலும் இது ஒரு பாதைக்கான செயல்பாட்டை ஏற்றுக்கொள்கிறது. கோரிக்கைகள் பாதையுடன் பொருந்தும்போது, விரும்பிய பதிலை வழங்க தொடர்புடைய செயலி அழைக்கப்படுகிறது. உதாரணமாக, கணக்குகளின் செயல்பாட்டிற்கு /api/accounts maps, இது கணக்கு தொடர்பான தகவல்களைத் தருகிறது, அதேசமயம் /api/subscription maps தகவலை வழங்குகிறது. கீழேயுள்ள குறிமுறைவரிகள் /home, /home/accounts, /home/subscription:எனும் இணைய URL களுக்கான வெவ்வேறு வெளியீடுகளை சித்தரிக்கிறது /

.package main

import (

fmt”

net/http”

))

func main() {

// Create a new ServerMux

mux := http.NewServeMux()

// handle `/` route

mux.HandleFunc(“/home”, func(res http.ResponseWriter, req *http.Request) {

fmt.Fprint(res, “ Welcome to Home Page!”)

})

// handle `Accounts` route

mux.HandleFunc(“/home/accounts”, func(res http.ResponseWriter, req *http.Request) {

fmt.Fprint(res, “ Welcome to Accounts page!”)

})

mux.HandleFunc(“/home/subscription”, func(res http.ResponseWriter, req *http.Request) {

fmt.Fprint(res, “ Welcome to Subscription Page!”)

})

// Listen and serve using ServerMux

http.ListenAndServe(“:9000”, mux)

}

கோ எனும் கணினிமொழியில் சேவையகத்தை அமைப்பதற்கான அடிப்படைகளை இந்த கட்டுரை உள்ளடக்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://golang.org/ எனும் இணையமுகவரியில் உள்ள ஆவணங்கள் வழியாக அறிந்துகொள்ளலாம். இந்த கணினிமொழியை கற்றுக்கொள்வதற்கு https://tour.golang.org/welcome/1 எனும் இணையமுகவரிக்கு செல்க மேலும் https://play.golang.org/ எனும் இணையமுகவரியில் இதனை ஒரு செயல்முறைவாயிலாக அறிந்துகொள்ளலாம்.

புவியியல்சேவையாளர்(G eoServer)

புவியியல்சேவையாளர்(GeoServer) என்பது ஜாவா அடிப்படையிலான மென்பொருள் சேவையகமாகும், இது பயனாளர்கள் புவியியல் தரவுகளைக் காணவும் திருத்தவும் அனுமதிக்கின்றது. இதுதிறந்த புவிசார் கூட்டமைப்பு (OGC) வகுத்துள்ள திறந்த தரங்களைப் பயன்படுத்தி, புவியியல்சேவையாளர் வரைபட உருவாக்கம் தரவுகளின் பகிர்வு ஆகியவற்றில் பெரும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கின்றது.
நம்முடைய இருப்பிடஞ்சார்ந்த தகவல்களை உலகுக்குக் காட்ட உலகவரைபடசேவையாளர் நம்மை அனுமதிக்கின்றது. இணைய வரைபட சேவையின் (WMS) தரத்தை செயல்படுத்துவதன் மூலம், இந்த உலகவரைபடசேவையாளரைகொண்டு பல்வேறு வெளியீட்டு வடிவங்களில் வரைபடங்களை உருவாக்க முடியும். திறந்தஅடுக்குகள், ஒரு இலவச மேப்பிங் நூலகம், புவியியல்சேவையாளரில் ஒருங்கிணைக்கப்பட்டு, உலகவரைபடத்தை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்கம்செய்கின்றது. புவியியல்சேவையாளர் கருவிகள் என்ற திற மூல ஜாவாவின் GIS கருவித்தொகுப்பில் கட்டப்பட்டுள்ளது.
நேர்த்தியான பாணியிலான வரைபடங்களை விட புவியியல்சேவையாளரில் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றது. புவியியல்சேவையாளர் இணைய வசதிகள் சேவை (WFS) தரநிலை இணையஉள்ளடக்க சேவை (WCS) தரத்துடன் ஒத்துப்போகின்றது, இது உலகவரைபடங்களை உருவாக்க பயன்படும் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளவும் திருத்தவும் அனுமதிக்கின்றது. இணைய மேப்பிங் கைபேசி பயன்பாடுகளின் பயன்பாட்டை எளிதாக்க நம்முடைய வெளியிடப்பட்ட உலகவரைபடங்களை ஓடுகளாக பிரிக்க புவியியல்சேவையாளர் இணைய வரைபட ஓடு சேவை யின் தரத்தையும் பயன்படுத்திகொள்கின்றது.
புவியியல்சேவையாளர் என்பது நீட்டிப்புகள் வழியாக சேர்க்கப்பட்ட கூடுதல் செயல்பாட்டுடன் கூடிய தொகுப்பு மட்டு( modular) பயன்பாடு ஆகும். இணைய செயலாக்க சேவைக்கான நீட்டிப்புகள் செயலாக்க விருப்பங்களின் வசதிகளைத் திறக்கின்றது, விரும்பினால் நாம் இதனை சொந்தமாககூட எழுதலாம்!
நம்முடைய தரவுகளை மற்றவர்களின் இணையதளங்களிலும் பயன்பாடுகளிலும் இணைக்க மற்றவர்களை இயக்குவதற்காக இயலுமை செய்திடுக, மேலும் இதற்காக நம்முடைய தரவுகளை விடுவித்திடுக அதிக வெளிப்படைத்தன்மையை அனுமதித்திடுக.
இது கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளாகும்: புவியியல்சேவையாளரானது ஒரு கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளாகும். இது தனியுரிமை GIS தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இதில் உள்நுழைவு செய்வதற்கான நிதித் தடையை கணிசமாகக் குறைக்கிறது. கூடுதலாக, புவியியல் சேவையாளரானது இலவசமாக கிடைப்பது மட்டுமல்லாமல், இது கட்டற்ற பயன்பாடாகவும் திகழ்கின்றது. திற மூல மென்பொருளில் பிழை திருத்தங்களும் வசதி மேம்பாடுகளும் வெளிப்படையான முறையில் நிகழ்கின்றன, பெரும்பாலும் மூடிய மென்பொருள் தீர்வுகளுடன் ஒப்பிடும்போது விரைவான வேகத்தில். நம்முடைய நிறுவனத்தில் புவியியல்சேவையாளரை மேம்படுத்துவது மென்பொருள் பூட்டுவதைத் தடுக்கின்றது, விலையுயர்ந்த ஆதரவு ஒப்பந்தங்களை அதன்போக்கில் சேமிக்கின்றது.
புவியியல்சேவையாளருடன் இணைந்தால் நம்முடைய இணையமேப்பிங் தேவைகளுக்கு திறமூல தீர்வை வழங்கும் திறமூல அடுக்குகளையும் துண்டுப்பிரசுரங்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
Google Maps, Google Earth, Microsoft Bing Maps, MapBox போன்ற பிரபலமான உலகவரைபட பயன்பாடுகளிலும் புவியியல்சேவையாளரின் தரவுகளை காண்பிக்க முடியும். கூடுதலாக, புவியியல்சேவையாளரானது ESRI ArcGIS போன்ற பாரம்பரிய GIS கட்டமைப்புகளுடன் இணைக்க முடியும்.
புவியியல்சேவையாளரானது உலகம் முழுவதிலுமிருந்து பயனாளர்கள் மேம்படுத்துநர்களைக் கொண்டதொரு பெரிய துடிப்பான சமூகத்தைக் கொண்டுள்ளது. மின்னஞ்சல் பட்டியல்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் இதற்கான ஆதரவு கிடைக்கின்றது. இது ஒரு நிலையான வெளியீட்டு சுழற்சி , பொது வெளியீட்டு கண்காணிப்பாளர் வெளிப்படைத்தன்மை நம்பகமான புதுப்பிப்புகளை வழங்குகிறது. கூடுதலாக, பல்வேறு வகையான வழங்குநர்களிடமிருந்து வணிக ஆதரவுகூட கிடைக்கின்றது. புவியியல்சேவையாளர் மூலம், நாமனைவரும் எப்போதும் நல்ல நண்பர்களுடன் தொடர்பில் இருக்கமுடியும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://geoserver.org/ எனும் இணையதலமுகவரிக்கு செல்க

திறமூல இணைய சேவையகங்கள் ஒரு அறிமுகம்

பொதுவாக ஒருஇணையசேவையகம் என்பது வன்பொருளை அல்லது மென்பொருளைக் குறிக்கலாம் அல்லது இரண்டும் ஒன்றாகச் சேர்ந்ததையும் குறிக்கலாம்.
வன்பொருள் எனில் இணையசேவையகத்தின் மென்பொருளையும் இணைய தளத்தின் கூறுகளின் கோப்புகளான HTML ஆவணங்கள், படங்கள், CSS நடை தாட்கள் ஜாவாஸ்கிரிப்ட் கோப்புகள் ஆகியவற்றை சேமித்திடுகின்ற ஒரு கணினி ஆகும். இந்த கணினியானது இணையத்துடன் இணைக்கப்பட்டது மேலும், இது இணையத்துடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்களுடன் தரவு களின் பரிமாற்றத்தை ஆதரிக்கின்றது.
மென்பொருள் எனில், இணைய சேவையகத்தினை நிறுவுகை செய்த கோப்புகளை இணைய பயனாளர்கள் எவ்வாறு அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாகும் ; குறைந்தபட்சம், இது ஒரு HTTP சேவையகமாக கருதப்படும். HTTP சேவையகம் என்பது இணைய முகவரிகள் (URL ) இணைய பக்கங்களைக் காண இணைய உலாவி பயன்படுத்தும் நெறிமுறை (HTTP ) ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் மென்பொருளாகும். இது சேமித்து வைக்கும் இணையதளங்களின் தளப் பெயர்களின் (mozilla.org போன்றவை) மூலம் அணுகலாம், மேலும் இது அவைகளின் உள்ளடக்கத்தை இறுதி பயனாளரின் சாதனத்திற்கு வழங்குகிறது.
மிக அடிப்படையான மட்டத்தில், ஒரு இணையஉலாவிக்கு ஒரு இணைய சேவையகத்தில் நிறுவுகை செய்யப்பட்ட கோப்பு தேவைப்படும்போது, அந்த இணையஉலாவியானது அந்த கோப்பினை HTTP வழியாகக் கோருகிறது. அந்த கோரிக்கை மிகச்சரியான இணைய சேவையகத்தை (வன்பொருள்) அடையும் போது, HTTP சேவையகம் (மென்பொருள்) கோரிக்கையை ஏற்று, கோரப்பட்ட ஆவணத்தைக் கண்டறிந்து (அவ்வாறு இல்லையென்றால், 404 எனும் பதில் திரும்பப் பெறப்படுகிறது), அதை இணையஉலாவிக்கு திருப்பி அனுப்புகிறது..
இவ்வாறான சூழலில்இணையதளத்தை வெளியிடுவதற்காக நிலையான அல்லது மாறும் இணைய சேவையகம் ஒன்று தேவைப்படுகிறது.
ஒரு நிலையான இணைய சேவையகமானது அல்லது அடுக்கானது ஒரு HTTP சேவையகத்துடன் (மென்பொருள்) ஒரு கணினியை (வன்பொருள்) கொண்டுள்ளது. அந்த சேவையகமானது அதில் நிறுவுகை செய்யப்பட்ட கோப்புகளை நம்முடைய இணைய உலாவிக்கு அனுப்புவதால் அதை நிலையானதாக அழைக்கிறோம்.
ஒரு இயக்கநேர இணையசேவையகமானது நிலையான இணைய சேவையகத்தையும் கூடுதல் மென்பொருளையும் கொண்டுள்ளது, பொதுவாக பயன்பாட்டு சேவையகமும் தரவுத்தளமும் . HTTP சேவையகம் வழியாக நம்முடைய இணைய உலாவிக்கு அனுப்புவதற்கு முன்பு நிறுவுகை செய்யப்பட்ட கோப்புகளை பயன்பாட்டு சேவையகமானது புதுப்பித்து கொள்வதால் நாம் அதை இயக்கநேரசேவையகம் என்று அழைக்கின்றோம்.
இவ்வாறான ஒரு இணைய சேவையகத்தில் கிடைக்கும் முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்களை உருவாக்குகின்றது.
பதிவு செய்யப்படும் கோப்புகள் எங்கு சேமிக்கப்படுகின்றன, அப்பதிவு கோப்புகளில் என்னவகையான தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைகொண்டு பதிவு கோப்பின் அமைப்புகளை உள்ளமைக்கிறது.
இணையதளம் / அடைவு பாதுகாப்பை உள்ளமைக்கிறது. எடுத்துக்காட்டாக, தேவைகள் அடுத்தடுத்த உள்ளமைவின் அடிப்படையில், இணைய சேவையகம் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை காண்பதை அனுமதிக்கிறது அல்லது தடுக்கிறது, அதே போன்று எந்தெந்த IP முகவரிகளின் இணையதளத்தைப் பார்க்க அனுமதிக்கலாம் /அனுமதிக்கப்படவேன்டாம் என முடிவுசெய்கின்றது.
இது ஒரு FTP தளத்தை உருவாக்குகின்றது.
மெய்நிகர் கோப்பகங்களை உருவாக்கி, அவற்றை இயல்புநிலை கோப்பகங்களுக்கு வரைபடமாக்குகிறது.
தனிப்பயன் பிழை பக்கங்களை உள்ளமைக்கிறது / பரிந்துரைக்கிறது. இது பயனாளர்கள் இணையதளத்தில் பயனாளர் நட்பு ,பிழை செய்திகளை உருவாக்கவும் காண்பிக்கவும் அனுமதிக்கிறது.
இயல்புநிலை ஆவணங்களைக் குறிப்பிடுகிறது, அவை கோப்பின் பெயர் கொடுக்கப்படாதபோது காட்டப்படும். எடுத்துக்காட்டாக, பயனாளர் http: // localhost ஐத் திறந்தால் எந்தெந்தக் கோப்புகளைக் காட்ட வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது. பொதுவாக index.html அல்லது அதேபோன்ற ஒத்த ஒன்றாகும், ஆனால் அது இருக்க தேவையில்லை.
முதன்முதலில் இணைய உலாவியில் விளைந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 1990 ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களால் CERN http என்பது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை இணைய சேவையகங்கள் வெகுதூரம் சென்றுள்ளன. இணைய சேவையகங்களின் முன்னணி வழங்குநர்களில் ஒருசிலர் நிறுவனங்களுக்கு மூடிய மூல வாய்ப்பங்களை வழங்குகிறார்கள், ஆனால் பல இன்னும் திறமூலமாக இருக்கின்றன (லினக்ஸ் அடிப்படையில்). ஒருசில இணைய சேவையகங்கள் சிறப்புத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, வேறு சில புதுப்பிப்புகளை அடிக்கடி பெறுகின்றன, இன்னும்சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் சில சமீபத்திய புதுப்பிப்புகளின் காரணமாக அவற்றின் நிலைத்தன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அறியப்படுகின்றன.இவ்வாறான மிகவும் பிரபலமாக உள்ள அதிலும் திறமூல இணைய சேவையகங்களில் ஒருசில பின்வருமாறு

1. அப்பாச்சி HTTP:இது ஒருதிறமூல, குறுக்கு-தள இணைய சேவையகமாகும்இது அப்பாச்சி உரிமம் 2.0 இன் விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டதாகும். அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளையின் கீழ் மேம்படுத்துநர்களின் திறமூல சமூகத்தால் இது உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இது தற்போது நாம் பயன்படுத்திகொண்டுவருகின்ற இணையதளங்களில் 46 சதவீதத்தை இயக்குகின்றது. இது Linux, FreeBSD, Solaris, Windows, MacOS X, Novell Netware, OS/2 போன்ற பல்வேறு இயக்க முறைமைகளிலும் ( அநேகமாக யுனிக்ஸ் போன்ற எந்த அமைப்பும்) நன்கு இயங்குகின்றது .
இது பல்வேறு வசதிவாய்ப்புகளை ஆதரிக்கின்றது, பல தொகுக்கப்பட்ட தொகுதிகளாக( modules) செயல்படுத்தப்படுகின்றன, அவை முக்கிய செயல்பாட்டை நீட்டிக்கின்றன. இவை அங்கீகாரசெயல் திட்டங்களிலில் Perl, Python, Tcl , PHP போன்ற சேவையக நிரலாக்க மொழிகளை ஆதரிக்கின்றன. பிரபலமான அங்கீகார தொகுதிகளில் mod_dccess, mod_auth, mod_digest , mod_auth_digest ஆகியவை அடங்கும். மற்ற வசதிவாய்ப்புகளான மாதிரியில் பாதுகாப்பான சாக்கெட்டுகளின் அடுக்கு , போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு ஆதரவு (mod_ssl), ஒரு ப்ராக்ஸி தொகுதி (mod_proxy), ஒரு URL மாற்றியமைத்தல் தொகுதி (mod_rewrite), தனிப்பயன் பதிவு கோப்புகள் (mod_log_config) வடிகட்டுதல் ஆதரவு (mod_include, mod_ext_filter) ஆகியவை அடங்கும். இதில் பிரபலமான சுருக்க முறைகளில் வெளிப்புற நீட்டிப்பு தொகுதி, mod_gzip, HTTP வழியாக வழங்கப்படும் இணையகங்களின் அளவை (எடை) குறைக்க உதவும் வகையில் செயல்படுத்தப்படுகின்றது. ModSecurity என்பது இணையபயன்பாடுகளுக்கான ஊடுருவல் கண்டறிதலிற்கும் தடுப்பதற்குமான திறமூல இயந்திரமாகும். இதனுடையபதிவுகளை AWStats / W3Perl அல்லது Visitors போன்ற இலவச ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தி இணைய உலாவி மூலம் பகுப்பாய்வு செய்யலாம்.
மெய்நிகர் நிறுவுகையை ஒரு அப்பாச்சி நிறுவுகையில் பல்வேறு இணைய தளங்களுக்கு சேவை செய்ய அனுமதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு அப்பாச்சி நிறுவுகையுடன் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் example.com, example.org, test47.test-server.example.edu போன்றவற்றிற்கு சேவை செய்ய முடியும்.
இதன் வசதி வாய்ப்புகள்:இயக்கநேர தொகுப்புகளை பதிவேற்றமுடியும், நிலையான கோப்புகளை கையாளமுடியும், குறியீட்டு கோப்புகள், தானியங்கு அட்டவணைப்படுத்தல் உள்ளடக்க விவாதம்.IPv6 , HTTP / 2 ஆகியவற்றின் ஆதரிக்கின்றது. தனிப்பயன் பதிவு சுழற்சி, IP முகவரி அடிப்படையிலான புவி இருப்பிடம், பயனாளர் அமர்வு கண்காணிப்பு, ஒரே நேரத்தில் இணைப்பு வரம்பு ஆகியவற்றை கொஂண்டது அதுமட்டுமல்லாமல், இது CGI , FTP, XML ஆகியவற்றை ஆதரிக்கின்றது.எளிதாக URL மாற்றியமைத்திடும் வசதிகொண்டது, சிறந்த அங்கீகாரம் , அங்கீகார அணுகல் கட்டுப்பாடு.தவறு சகிப்புத்தன்மை இணையதளஇணைப்பின் தோல்விகளை கையாளுதல் பல சுமைகளை சமநிலைப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய பல்வேறு வசதி வாய்ப்புகளை இதுகொண்டுள்ளது.
இதனுடைய இணையதளமுகவரி: https://httpd.apache.org/ ஆகும்
2. அப்பாச்சி டாம்காட்(Tomcat) :ஜாவாஎனும்நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட திறமூலஇணைய சேவையகமான இது, அப்பாச்சி அறக்கட்டளையால் வடிவமைக்கப்பட்டதாகும் இது மென்பொருள் வடிவமைப்பாளரான ஜேம்ஸ் டங்கன் டேவிட்சனின் கண்டுபிடிப்பிக்கு வழங்கப்பட்ட பெருமையாகும் . இது ஜாவா-சர்வ்லெட், ஜாவாசேவையாளர் பக்கங்கள், வெளிபடுத்திடும் ஜாவா மொழியின் வெப்சாக்கெட் தொழில்நுட்பங்களின் திறமூல செயல்படுத்தல் என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு வகையான தொழில்களிலும் நிறுவனங்களிலும் பெரிய அளவிலான, நோக்கத்திற்கும் -சிக்கலான வலை பயன்பாடுகளுக்கும் அதிகாரம் அளிக்கிறது.
இது Catalina, Coyote, Jasper, Cluster போன்ற பல்வேறு கூறுகளால் ஆனது. கேடலினா டாம்காட்டின் சர்வ்லெட் கொள்கலன் என்று அழைக்கப்படுகிறது. கொயோட் என்பது HTTP 1.1 ஐ ஆதரிக்கின்ற இதற்கான இணைப்பான் கூறு ஆகும். வலை சேவையகமாக, கேடலினா, பெயரளவில் ஜாவா சர்வ்லெட் அல்லது ஜேஎஸ்பி கொள்கலன், உள்ளூர் கோப்புகளை HTTP ஆவணங்களாக வழங்குகின்ற எளிய இணைய சேவையகமாகவும் செயல்பட அனுமதிக்கிறது. ஜாஸ்பர் என்பது டாம்காட்டின் ஜேஎஸ்பி இயந்திரமாகும. இது JSP கோப்புகளை ஜாவா குறியீட்டில் தொகுக்க சேவையகங்களாக கேடலினாவால் கையாள முடியும். பெரியஅளவிலான பயன்பாடுகளை நிருவகிக்க கிளஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளது. இது இணைய சுமைகளை சமநிலைபடுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது, இது பல நுட்பங்கள் மூலம் அடையப்படலாம். கிளஸ்டரிங் ஆதரவுக்கு தற்போது JDK பதிப்பு 1.5 அல்லது அதற்கு மேற்பட்டது தேவைப்படுகிறது.
இதனுடைய வசதிவாய்ப்புகள் :இது இலகுரகமானது அதிக நெகிழ்வானது. , மிகவும் நிலையானது கூடுதல் பாதுகாப்பு உள்ளது. நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஜாவா பயன்பாட்டு சேவையகமாக அமைந்துள்ளது JSSE இணைப்பிகளுடன் TLS ஆதரவுக்காக HTTP / 2, OpenSSL ஐ ஆதரிக்கிறது.TLS மெய்நிகர் நிறுவுகை, இணைய பயன்பாட்டு நினைவக கசிவு பாதுகாப்பு கண்டறிதலுக்கான ஆதரவினை வழங்குகின்றது மேம்பட்ட IO திறன்கள் மறுசீரமைக்கப்பட்ட கிளஸ்டரிங் கொண்டுள்ளது.

இதனுடைய இணையதளமுகவரி: https://tomcat.apache.org/ஆகும்

3.Nginx எனும்இணைய சேவையகம்: இது ஒரு BSD போன்ற உரிமத்தின் அடிப்படையில் ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணைய சேவையகமாகும். மேலும் இது ஒரு HTTP, தலைகீழ் ப்ராக்ஸி சேவையகமாகவும், மின்னஞ்சல் பதிலாள் சேவையகமாகவும் அமைந்துள்ளது அதாவது பொதுவான TCP / UDP பதிலாள் சேவையகமாக இது விளங்குகின்றது. இதை இகோர் சிசோவ் என்வர் வடிவமைத்துவெளியிட்டுள்ளார். சுமார் 2.5MB எனும்அளவிற்கு மிகக் குறைந்த நினைவக தடம் கொண்ட 10,000 க்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்டது. அதன் ஒத்திசைவற்ற, நிகழ்வு உந்துதல் இயல்பு காரணமாக இது அனைத்துசெயல்களையும் சாத்தியமாக்கு கின்றது. இது அதிக எண்ணிக்கையிலான இணைய சேவையக மொழிகளை ஆதரிக்கிறது, ஆனால் அதற்கு எந்த சொந்த ஆதரவும் இல்லை, இதனால் மூன்றாம் தரப்பு தொகுதிகள் (modules ) பயன்படுத்தப்பட வேண்டும்; உதாரணமாக, PHP ஸ்கிரிப்ட்களை செயலாக்கவேண்டுமெனில் PHP-FPM ஆகியவற்றை தனித்தனியாக நிறுவப்பட வேண்டும். இது ஒரு முழுமையான இணையசேவையகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், இப்போதெல்லாம் பல மேம்படுத்துநர்கள் உண்மையான சேவையகத்தின் முன் நிலையான உள்ளடக்க சேவையகமாக இதைப் பயன்படுத்தி கொள்கின்றனர். ஒருசில தளங்கள் பின்முனைமத்தில் கோரிக்கைகளை மாறும் வகையில் கையாளுகின்றன, மேலும் உள்ளடக்கத்தை பயனாளரால் கோரப்படும்போது அவற்றை சேவை செய்ய இதை தேர்ந்தெடுக்க செய்கின்றன.
ஸ்கிரிப்டுகளுக்கான FastCGI , SCGI ஆகியவற்றை கையாளுபவர்கள்,, WSGIஇன் பயன்பாட்டு சேவையகங்கள் அல்லது Phusion பயணிகளின் தொகுதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிணையத்தில் இயக்கநேர HTTP உள்ளடக்கத்தை வழங்க இதனை பயன்படுத்தலாம், மேலும் இது மென்பொருள் சுமையின் இருப்புநிலையாக செயல்பட முடியும்.
இந்த Nginx இல் OSS Nginx, Nginx Plus Nginx ஆகியஇரண்டு பதிப்புகள் உள்ளன -. பிந்தையது முந்தையதில் சேர்க்கப்படாத கூடுதல் வசதிகளை வழங்குகிறது, அதாவது செயலில் நல்லநிலையில் உள்ளதாவென பரிசோதனைகள், குக்கீகளை அடிப்படையாகக் கொண்ட அமர்வு நிலைத்தன்மை, DNS-சேவை-கண்டுபிடிப்பு ஒருங்கிணைப்பு, ஒரு தற்காலிக நினைவகத்தை தூய்மைப்படுத்தும் API, AppDynamic, Datalog, Dynatrace New Relic plugins, Active-Active HA ஒத்திசைவு, உள்ளமைவுகளுக்கான (பூஜ்ஜிய வேலையில்லா நேரத்துடன்) புதுப்பிப்புகள், அத்துடன் Nginx Plus API மற்றும் இணைய பயன்பாட்டு ஃபயர்வால் (WAF) இயக்கநேரக் தொகுதியைப் பயன்படுத்திகொள்கின்றது .
நிலையான கோப்புகளை வழங்குவதன் மூலமும், குறைந்த நினைவகத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், வினாடிக்கு நான்கு மடங்கு கோரிக்கைகளைக் கையாளுவதன் மூலமும் அப்பாச்சி சேவையகத்தை விஞ்சும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனுடைய வசதிவாய்ப்புகள் :குறைந்த நினைவகத்துடன் ஒரே நேரத்தில் 10,000 இற்கும் மேலான இணைப்புகளைக் கையாளும் திறன்கொண்டது; நிலையான, குறியீட்டு கோப்புகளை கையாளுகிறது தானாக அட்டவணைப்படுத்தலை வழங்குகிறது. பெயர்- ஐபி முகவரி அடிப்படையிலான மெய்நிகர் சேவையகங்கள் ஆதரிக்கின்றது. இது IPv6 இணக்கமானது. இது SNI உடன் TLS / SSL ஐ ஆதரிக்கிறது, OCSP ஸ்டேப்ளிங் , gRPC , HTTP / 2 ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகின்றது.இணைப்பு ,இணைப்பில் இழப்பு இல்லாமல் கட்டமைப்பு மேம்படுத்தல் செயல்படுத்தல் செய்யப்படுகிறது. SMTP, POP3 IMAP ப்ராக்ஸி ஆகியவற்றை ஆதரிக்கிறது.
தற்காலிக நினைவகத்துடன் தலைகீழ் ப்ராக்ஸியையும். மட்டு கட்டமைப்பையும் கொண்டது.இதனுடைய இணையமுகவரி https://www.nginx.com/ஆகும்
4.H2O எனும்இணைய சேவையகம்: இது ஒரு புதிய தலைமுறை HTTP சேவையகமாகும், இது பயன்பாட்டில் உள்ள அனைத்து இணைய சேவையகங்களின் முழு வசதிகளான HTTP / 2 செயலாக்கங்களைக் கொண்டுள்ளது. இணைய சேவையகமாக H2O உடன், பயனாளர்கள் HTTP / 2 புதிய வசதிகளான latency optimisation, server-push and server-sideமுன்னுரிமை போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம், அரிதாகவே பேசப்படும் நவீன இணைய நவீன உலாவி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த H2O ஆனது libh2o ஆல் இயக்கப்படுகிறது, இது H2O இன் அனைத்து இணைய சேவை சக்தியையும் கொண்டுள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாட்டிற்காக libh2o தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. இது MIT உரிமம் பெற்றது. இது சிஎனும் நிரலாக்கமொழியில் எழுதப்பட்டுள்ளது, மேலும் இது நூலகமாகவும் பயன்படுத்திகொள்ளலாம்.
இதனுடைய வசதிவாய்ப்புகள்
இது HTTP 1.0 / 1.1 / 2.0, வெப்சாக்கெட், TLS ஐ ஆதரிக்கிறது. மேலும் இது TCP Fast Open, FastCGI, ரிவர்ஸ் ப்ராக்ஸியை ஆதரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் AEAD சைபர்கள், OCSP ஸ்டேப்ளிங், mime-வகை உள்ளமைவு, முன்னோக்கி ரகசியம், துண்டிக்கப்பட்ட குறியாக்கம். சேவையக உந்துதல், விவாத முறைகள்: NPN, ALPN, மேம்படுத்தல்,போன்ற வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது . இதனுடைய இணையதள https://h2o.examp1e.net/ ஆகும்
5.Caddy எனும்இணைய சேவையகம்: இது ஒரு திற மூல இணைய சேவையகமாகும், இதுHTTP / 2 இயக்கப்பட்ட இணைய சேவையகமாகும், இது மத்தேயு ஹோல்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட கோ எனும் நிரலாக்க மொழியில் எழுதப்பட்டதாகும். அப்பாச்சி வலை சேவையகத்திற்கு இது ஒரு வலுவான மாற்றாகும். கட்டமைக்க பயன்படுத்த எளிதானது, மேலும் இது IPv6, Markdown, WebSockets, FastCGO, , வார்ப்புருக்கள் பிற பெட்டிகளுக்கு வெளியே உள்ள சமீபத்திய வசதிவாய்ப்புகளுடன் ஏற்றப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த தளப் பெயர்களைக் கொண்ட தளங்களுக்கு இது இயல்புநிலையில்HTTPS ஐ செயல்படுத்துகிறது (ACME நெறிமுறை வழியாக TLS சான்றிதழ் விவாதம் நடத்தக்கூடிய பெயர்கள்) HTTP கோரிக்கைகளை HTTPS க்கு திருப்பி விடுகிறது. இது துவக்கத்தின்போது தேவைப்படும் சான்றிதழ்களைப் பெறுகிறது மேலும் சேவையகத்தின் வாழ்நாளில் அவற்றைப் புதுப்பிக்க வைக்கிறது.
ஒரு மாற்று உள்ளமைவு முறையான, இது துவக்கத்தில் இருப்பதை விட TLS கைகுலுக்கலின் போது மட்டுமே சான்றிதழ்களைப் பெற அனுமதிக்கிறது, இந்த வசதியான ம் ‘தேவைக்கேற்ப TLS’ என அழைக்கப்படுகிறது. இந்த வசதியை கொண்டுவர, பயனாளர் இந்த வழியில் வழங்கக்கூடிய அதிகபட்ச சான்றிதழ்களைக் குறிப்பிட வேண்டும். இது விண்டோ, மேக்,லினக்ஸ், பி.எஸ்.டி, சோலாரிஸ் ஆண்ட்ராய்டு ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படுகின்றது.
இதனுடைய வசதி வாய்ப்புகள்
விரைவான HTTP கோரிக்கைகளையும், விரைவான வரிசைப்படுத்தலுடன் குறைந்தபட்ச உள்ளமைவுவையும் கொண்டது நிறுவல், சிறிய இயங்கக்கூடியவை மற்றும் பல CPUs/cores இல் இயங்குகிறது. இது IPv6 ஐ ஆதரிக்கிறது, உள்நுழைவு தனிப்பயன் வடிவமைப்பை உருவாக்குகிறது.
Fast FastCGI க்கு சேவை செய்கிறது, தலைகீழ் ப்ராக்ஸி, மீண்டும் எழுதுகிறதும் வழிமாற்றுகள், சுத்தமான URL ,Gzip சுருக்க, அடைவு உலாவல், ஆகியவசதிகளை கொண்டது மெய்நிகர் ஹோஸ்டை ஆதரிக்கிறது, .இதனுடைய இணையதளமுகவரி :https://caddyserver.com/ ஆகும்

DeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிமுகம்

பொதுமக்கள் அனைவரும் தற்போது எந்தவொரு பணியையும் செய்வதற்காக எளிய வழிகளைத் தேடுகின்றனர் மேலும் அவை எளிதாக செயல்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக பெரும்பாலான பணிகள் இயந்திரங்களின் வாயிலாக தானியங்கியாக செயல்படுமாறு மேம்படுத்தபட்டுவருகின்றன அதிலும் தொழிலகங்களில் அவ்வாறு இயந்திரங்கள் தானியங்கியாக செயல்படுவதற்கு M2M எனும் தொழில்நுட்பமானது அத்தியாவசிய தேவையாக சமீபத்தில் மேம்பட்டு வந்துள்ளது. இந்த M2M தொழில்நுட்பமானது பல்வேறு வடிவங்களில் தரவுகளுடன் இணையத்தை அடிக்கடி தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது மிகமுக்கியமாக சாதனங்களுக்-கிடையே அல்லது இயந்திரங்களுக்கிடையே தரவுகளின் பரிமாற்றத்திற்கு தேவையான தகவல் தொடர்பின்மூலம் இந்த M2M தொழில்நுட்பமானது அவைகளை இணைக்கின்றது
, .இந்த M2M தொழில்நுட்பமானது முதலில் உற்பத்திதுறைகளிலும் பின்னர் இதர தொழில் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டது, தொழிலகங்களில்SCADA , தொலைநிலை கண்காணிப்பு போன்ற பிற தொழில்நுட்பங்களின் தரவுகளை தொலைநிலையாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த M2M தொழில்நுட்பமானதுபேருதவியாக இருந்துவருகின்றது . இந்த M2Mதொழில்நுட்பத்தின் மூலம் ரோபோ அல்லது இயந்திரம் போன்றவைகளைக் கட்டுப்படுத்தமுடியும். மிககுறைந்தஅளவிலான மனித தலையீட்டோடு, நீர் சுத்திகரிப்பு அல்லது பாலங்களைகண்காணித்தல் போன்ற முக்கியமான பொது உள்கட்டமைப்பினை மிகவும் திறம்பட கண்காணிக்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திகொள்ள முடியும்.
இயந்திரங்களுக்கிடையேயான தகவல் தொடர்பு அமைப்பினை செயல்படச் செய்வது என்பது படிப்படியான செயல்முறையாகும். இந்த செயல்பாட்டில்: சென்சார்கள் (செயல்பாட்டு சூழலில் இருந்து தரவைப் பெற்று அதை கம்பியில்லாமல் கடத்துகின்றன), பியர்-டு-பியர் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் ,இணையத்தின் வாயிலாக இணைந்துள்ள கணினிகள் ஆகிய மூன்று முக்கியஉள்ளடக்கங்கள் உள்ளன.பொதுவாக M2M தொழில்நுட்பத்தில் செயல்படுபவைகளாக 1.பின்புலசேவைகளுக்கிடையே தகவல்தொடர்புகள்: 2.IoT எனும் பொருட்களுக்கான இணையத்தில்இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் தகவல்தொடர்புகள்.3. CLI எனும் வாடிக்கையளர்களின் தகவல்தொடர்புகள்: ஆகியவற்றை குறிப்பிடலாம்
பின்வருபவை M2M தொழில்நுட்பத்தின் கட்டமைப்பிற்கு சிறந்தஎடுத்துகாட்டுகளாகும்.
1.M2M சாதனங்கள்:sensors ,ZigBee அல்லது Bluetooth, LoWPAN ஆகியவை இந்த வகையை சேர்ந்ததாகும்
2.M2M பகுதி வலைபின்னல் அமைவு (சாதன டொமைன்):ஒரு தனிப்பகுதி வலைபின்னலானது இதனடிப்படையில் செயல்படுவதாகும்
3. M2M நுழைவாயில்:
4.M2Mவலைபின்னல்அமைவு XDSL, LTE, WiMAX , WLAN ஆகியவை இந்தவகைகளாகும்.
5.M2M பயன்பாடுகள்: IoT அடிப்படையிலான திறனுடைய வீடுகள், இ-ஹெல்த், எம்-ஹெல்த், டெலிமெடிசின்,மருத்துவசாதனங்களுக்கானஇணையம், விற்பனை இயந்திரங்கள், திறனுடைய வாகணங்களின் நிறுத்துமிடஅமைப்புகள், மனிததலையீடின்றி சுயமாக செயல்படும் விற்பணை கடைகள், கம்பியில்லா கட்டண வசூல் அமைப்புகள், தொழிற்சாலைகளில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகள், , தொழில்துறை கண்காணிப்பு, முதலியன இந்த வகையை சேர்ந்தவைகளாகும்
தற்போது பல்வேறு வகைகளில்திறமூல M2M மேம்பாட்டு தளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன அவைகளுள் DeviceHive எனும் திறமூல M2M தொழில்நுட்ப மேம்பாட்டு தளத்தை பற்றி மட்டும் இப்போது காண்போம்
DeviceHive ஆனது அனைத்து சேவைகளைத் தொடர்புகொள்வதற்கும் நிருவகிப்பதற்கும் திறனுடைய சாதனங்களுக்கான சக்திவாய்ந்த கருவிகளை வழங்குகிறது. கைபேசி மேம்படுத்துநர்களையும் பயனாளர்களையும் பாதிக்கின்ற மேககணினி, கைபேசி, உட்பொதியப்பட்டசெயலிகள் ஆகிய மூன்று முக்கியமான தொழில்நுட்பங்களை இது ஒருங்கிணைக்கின்றது – . இம்மூன்றும் இணைந்து தொலைதூரசெயலி, தொலைதூர கட்டப்பாடு, கண்காணிப்பும் தானியங்கியும், திறனுள்ளசெயல்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த இது ஒரு தகவல் தொடர்பு அடுக்குகளையும், கட்டுப்பாட்டு மென்பொருளையும் , பல-தள நூலகங்களையும் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. எந்தவொரு பொருட்களுக்கான இணையத்தினையும் உருவாக்க அல்லது தனிப்பயனாக்க இந்த டிவைஸ்ஹைவ்ஆனது ஒரு வலுவான அடித்தளத்தையும் கட்டுமான ஆதரவையும் வழங்குகின்றது. இதனுடைய M2Mதொழில்நுட்பமானது, உட்பொதியப்பட்ட மேம்படுத்துதல், மேககணினி இயங்குதளங்கள், பேரளவு தரவுகளுக்கும் வாடிக்கையாளர் பயன்பாடு-களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றது. மாறுபட்ட நெறிமுறைகளில் சாதன மேலாண்மை ஏபிஐகளுடன் அளவிடக்கூடிய, வன்பொருள் , மேககணினி மீச்சிறு சேவை அடிப்படையிலான தளமாகவும் இது பயன்படுகின்றது, இது இறுதி பயனாளர்களை சாதன இணைப்பை அமைக்கவும் கண்காணிக்கவும் தரவு பகுப்பாய்வுகளை செய்யவும் அனுமதிக்கிறது.
இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
1.வரிசைப்படுத்தல்: இந்த டிவைஸ்ஹைவ் ஆனது எண்ணற்ற வரிசைப்படுத்தல் விருப்பங்களை எளிதாக்குகிறது மேலும் எந்தவொரு தொடக்கநிறுவனமாகஇருந்தாலும் அல்லது வளர்ந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் அவைகளுக்கு ஏற்றதாக இதுவிளங்கு கின்றது. , தனியார் ,பொது அல்லது கலப்பின மேககணிகளின் மேம்படுத்துதல்களை எளிதாக்க டோக்கர் ஒருங்கிணைத்தல் குபெர்னெட்டுகள் வரிசைப்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
2.அளவிடுதல்: இந்த டிவைஸ்ஹைவ் ஆனது ஒரு கொள்கலன் சேவை சார்ந்த கட்டிடக்கலை அணுகுமுறை போன்ற சிறந்த மென்பொருள் வடிவமைப்பு நடைமுறைகளை உள்ளடக்கியது, இது குபெர்னெட்டுகளால் நிர்வகிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு செயல்படு-கின்றது, இது ஒருசிலநொடிகளில் அளவிடுதலையும்அதன்தன்மையையும் கொண்டு வருகின்றது
3.இணைப்பு: இது REST API, WebSockets அல்லது MQTT வழியாக எந்தவொரு சாதனத்துடனும் ஆன இணைப்பை ஆதரிக்கின்றது. இது Android iOS ஆகிய இரண்டு கணினிமொழிகளை மட்டுமல்லாமல் பல்வேறு கணினிமொழிகளில் எழுதப்பட்ட நூலகங்களை ஆதரிக்கின்றது – இது ESP8266 போன்ற உட்பொதியப்பட்ட சாதனங்களை கூட ஆதரிக்கின்றது.
4.தடையற்ற ஒருங்கிணைப்பு: தனிப்பயனாக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டை பயனாளர்கள் இயக்க அனுமதிப்பதன் மூலம் கூகிள், சிரி, அலெக்சா போன்ற குரல் உதவி சேவைகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை இது ஆதரிக்கின்றது.
5. திறனுடைய பகுப்பாய்வு: இது நிகழ்நேர செயல்முறைகளுக்கு மீள் தேடல், அப்பாச்சி ஸ்பார்க், கசாண்ட்ரா மற்றும் காஃப்கா ஆகியவற்றைப் பயன்படுத்தி திறனுடைய பகுப்பாய்வுகளை ஆதரிக்கினறது. இது இயந்திர கற்றல் ஆதரவையும் எளிதாக்குகின்றது.
6. திறமூலபயன்பாடு: இது கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டிற்காக அப்பாச்சி 2.0 உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படடுள்ளது, மேலும் இதனை செயல்படுத்தி பயன்பெறும இறுதி பயனாளர்கள் இந்தடிவைஸ்ஹைவ் பயன்படுத்திடும்போது எழும் எந்தவொரு சிக்கல்களையும் டேட்டாஆர்ட்டின் ஐஓடி நிபுணர்களிடம் எளிதாக கோரி தீர்வுசெய்து கொள்ளமுடியும்
7.ஒழுங்குமுறைகள்: டிவைஸ்ஹைவ் ஆனது REST, WebSocket API , MQTT ஆகிய ஒழுங்குமுறைகளை ஆதரிக்கின்றது. இது தவிர, அனைத்து RESTful சேவைகளுக்கும், இது நிறுவல் மற்றும் பிற திறன்களை சோதிக்க Swagger API கருவியை வழங்குகின்றது.
8.வாடிக்கையாளர் / சாதன நூலகங்கள்: இந்த டிவைஸ்ஹைவ் ஆனது ஏராளமான சாதன நூலகங்களை ஆதரிக்கின்றது – நெட் வரைச்சட்டம், .நெட் மீச்சிறுவரைச்சட்டம், சி ++, பைதான் , சி (மீச்சிறுகட்டப்பாட்டாளர்கள்) ஆகியவற்றுடன் ஒத்தியங்குகின்றது.
9.வாடிக்கையாளர் நூலகங்கள்: இவற்றில் நெட் வரைச்சட்டம், iOS , இணைய / ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவைஇதில் அடங்கும்.
10.சாதனங்களின் ஆதரவு: இது வாடிக்கையாளர் நூலகம் வழியாக பைதான், நோட்.ஜெஸ் அல்லது ஜாவா அடிப்படையிலான லினக்ஸ் போர்டுகளுடன் எந்தவொரு சாதனத்தையும் ஆதரிக்கிறது. வெப்பநிலையை அளவிடுவதற்கான DS18B20, LM75A / LM75B / LM75C, DHT11 , DHT22 ஆகிய சென்சார்கள் அழுத்தத்தினை அளவிடுவதற்கான BMP180, BMP280, ஆகிய சென்சார்கள் போன்ற அனைத்து வகையான சென்சார்களையும் கையாள எளிய API உடன்கூடிய ESP8266 எனும் சிப்பை இது ஆதரிக்கின்றது. இந்த டிவைஸ்ஹைவ் என்பது மீச்சிறுசேவையாளர் அடிப்படையிலான அமைப்பாகும், மேலும் விவரங்களுக்குhttp://devicehive.com எனும் இணையதளமுகவரிக்குசென்றுபயன்படுத்தி கொள்க

புதிய WampServerஎனும் கட்டற்ற சேவையாளர் ஒரு அறிமுகம்

விண்டோ இயக்கமுறைமையில் Apache, MySQL, PHP ஆகிய தரவுதளங்களுடன் இணைந்து செயல்படுகின்ற இயக்கநேரஇணைய பக்கங்களை உருவாக்கWampServerஎனும் கட்டற்ற சேவையாளர் இணையதளமானது அனுமதிக்கின்றது .நம்முடைய சொந்த தரவுதளத்தினை எளிதாக கையாளும் வகையில் Apache, MySQL, PHP ஆகிய தரவுதளங்களை கொண்டு இயக்கநேர இணையபக்கங்களை உருவாக்குவதற்கு தேவையான அனைத்தும் கிடைப்பதற்கேற்ப இவைகளை தானாகவே நிறுவுகை செய்துகொள்கின்றது நம்முடைய சேவையாளரை செயல்படுத்திடுவதற்காக அவைகளின் அமைவுகளுக்கான கோப்புகளை தொட்டு செயல்படுத்தாமலேயே சேவையாளரை செயல்படுத்திடும் வசதியை இது வழங்குகின்றது இதனுடைய சமீபத்திய Wampserver 2.5 எனும்பதிப்பு GPLv2 எனும் பொது அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாராக கிடைக்கின்றது 32 பிட் 64 பிட் ஆகிய இருகட்டமைப்புள்ளகணினிகளிலும் இது செயல்படும் திறன்மிக்கது ஆயினும் இது பழைய Windows XP, SP3, Windows Server 2003.ஆகிய விண்டோ இயக்கமுறைமையிலுள்ள கணினியில் செயல்படாது இதனை அனுபவ முள்ளவர்கள்தான் நிறுவுகை செய்யமுடியும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை .அனுபவமில்லாத புதியவர்கள் கூட இதனுடைய கோப்பினை பதிவிறக்கம் செய்து சொடுக்குதல் செய்தவுடன் திரையில் கூறும் வழிகாட்டுதல்களைபின்பற்றினால் மட்டும் போதுமானதாகும் தேவையான அனைத்தையும் தானாகவே நிறுவுகை செய்து கொள்கின்றது Apache, MySQL, PHP போன்ற தரவுதளங்களின் சமீபத்திய கோப்புகளுடன் தானாகவே நிகழ்நிலை படுத்தி கொள்கின்றது இது வழக்கமாக c:\wamp\wwwஎன்றவாறு கோப்பக பெயருடன் நிறுவுகை செய்து கொள்கின்றது மேலும் இந்த கோப்பகத்தில் Apache, MySQL, PHP ஆகிய ஒவ்வொன்றிற்கும் ஒரு துனைகோப்பகம் என்றவாறு உருவாக்கி அவற்றுள் இவைகளின் கோப்புகளை வைத்திடுக மேலும் WampSever இன் பட்டியலில் localhost எனும் இணைப்பை சொடுக்குதல் செய்திடுக அல்லது நம்முடைய இணைய உலாவியில் http://localhost என்ற இணைப்பு முகவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை சொடுக்குக அதனை தொடர்ந்து புதியதாக இதனை துவக்குவதற்கு WampServer எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் இணையஇணைப்புடன் அல்லது இணைய இணைப்பில்லாமல் ( online/offline) ஆகிய இரண்டு வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க இதனை பயன்படுத்தவிழைந்தால் http://sourceforge.net/projects/wampserver/files/ எனும் இணைய முகவரிக்கு சென்று இதனுடைய சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது.

அறிக்கையிடலிற்கான சேவையாளர் (Report Server) ஒரு அறிமுகம்

அறிக்கையிடலிற்கான சேவையாளர் (Report Server) என்பது நவீன , பல்துறை திறமூல வணிக நுண்ணறிவு ( business intelligence (BI)) தளமாகும், இது மிகவும் சக்திவாய்ந்த அறிக்கையிடல் வசதிகளைக் கொண்டுள்ளது. பொதுவாக எந்தவொரு பயன்பாட்டிலும் அதன் வெளியீடுகளில் குறிப்பிட்ட வகையில் மட்டுமே அறிக்கை வெளியிடப்பெறும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கபெறும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல்ஒரு ஒருங்கிணைந்த சூழலில் Jasper, Birt, Mondrian , Excel—based ஆகிய பல்வேறு வகைகளிலான அறிக்கைகளை நாம் பயன்படுத்தி கொள்வதற்காக இதில் தயாராக இருக்கின்றன அவற்றுள் நமக்கு தேவையான பொருத்தமான ஒரு வகையை மட்டும் நாம் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும். இது மிக விரைவானதும், நவீனமானதுமான , பயனாளர் இடைமுகத்தை கொண்டது
எந்தவொரு இணைய உலாவியிலும் சுதந்திரமாக இயங்குகின்ற இயங்குதளமாக இது விளங்குகின்றது
மேலும் இது மிகவும் சக்திவாய்ந்த தற்காலிக அறிக்கையிடல் திறன்களை கொண்டது அதுமட்டுமல்லாது நெகிழ்வான முகப்புபக்க உட்கூறுகளை கொண்டது. அதைவிட இது எக்செல்லிற்கு சொந்தமான ஏற்றுமதிவசதிகளை கொண்டுள்ளது.jXLSஎனும் நூலகம் வாயிலாக முன் கூட்டியேவடிவமைக்கப்பட்ட அறிக்கைகளுக்கான எக்செல்வார்ப்புருக்கள் இதில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக இருக்கின்றன
சிக்கலான வடிவங்களுக்கான ஆதரவுடன் நெகிழ்வான திட்டமிடலை இது கொண்டுள்ளது.இதுஒத்துழைப்பை ஆதரிக்கின்ற ஒரு தனித்துவமான கருத்துகளை கொண்டதாகும் படிநிலை கட்டமைப்புகளையும் ACL களின் அடிப்படையில் பரவலாக உள்ளமைக்கக்கூடிய அனுமதி அமைப்பினையும் கொண்டது மிகப்பெரிய அளவிலான நிறுவல்களைக் கூட மிக எளிதாக நிருவகிக்கக்கூடிய நிருவாக கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து வகைகோப்புகளிலிருந்தும் xml க்கு பதிவேற்றம் செய்தல் அல்லது xml இலிருந்து அனைத்து வகையாகவும் பதிவிறக்கம் செய்தல் ஆகிய வசதிகளை கொண்டது
http://demo.raas.datenwerke.net எனும் இணையமுகவரியில் ஒரு மாதிரி செயல்படும் முறையின் வாயிலாக இந்ததளத்தினை பற்றிய ஒரு சிறு அறிமுகம் வழங்கப்படுகின்றது, அவ்வாறான மாதிரி செயல்முறையை அறிந்து கொள்ள முதலில் இந்த தளத்திற்குள் பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர் CTRL,ALT, T ஆகிய விசைகளை சேர்த்துஅழுத்தி ReportServer இன் முனைமத்திற்கு சென்று சேருக தொடர்ந்து pkg install -d demob என்றவாறு தட்டச்சு செய்து TAB எனும் விசையை அழுத்துக. உடன் pkg install -d demobuilder-VERSION-DATE.zip என்றவாறு உரையானது திரையில் விரியும் சரியாக உள்ளது எனில் உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து இந்த மாதிரி காட்சிகளை திரையில் தோன்றுவதற்கான முன்தயாரிப்பு செய்ய சிறிது கால அவகாசம் எடுத்து கொள்ளும் அதுவரையில் சிறிது நேரம் காத்திருக்கவும் மிகமுக்கியமாக demoadminஎன்பதையே பயனாளர் பெயராகவும் கடவுச்சொற்களாகவும் பயன்படுத்தி இந்த மாதிரிகாட்சிகளை கண்டு தெளிவுபெறலாம்
இந்த demoadminஎனும் கணக்கின் வாயிலாக உள்நுழைவு செய்தால் நமக்கு கணினிக்கான பரந்த படிக்க மட்டுமான அணுகலை அனுமதிக்கும் ஆயினும் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளையும் அல்லது அறிக்கைகளுக்கான சேவையாளரை முழுவதுமாக ஆராய இது அனுமதிக்கின்றது. நிச்சயமாக, இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திருந்தால், முழு அணுகலைப் பெறுவதற்காக நிறுவலின் போது குறிப்பிட்ட மேம்பட்ட பயனாளர் கணக்கைப் பயன்படுத்தி கொள்ளமுடியும் இது இயல்புநிலையில் root எனும் பயனாளராக மட்டும் இருக்கும் என்ற செய்தியை மனதில்கொள்க.

மிகமுதன்மையான பல்லூடக சேவையாளர்(Multimedia server) மென்பொருட்கள்

ஒலி,கானொளி, உருவப்படங்கள், புத்தகங்கள் போன்றவைகளை நம்முடைய கைவசம் உள்ள சாதனங்களின் வாயிலாக தொகுத்து சேமித்து பகிர்ந்து கொள்ளஉதவுவதே இந்த பல்லூடக சேவையாளராகும் தற்போதைய இணையவழியான தகவல்தொடர்பு சூழலில் பல்லூடக சேவையாளரின் பங்கு அளப்பரியதாகும். கணினி, வலைபின்னலுடன் இணைந்த சேமிப்பகம் ,கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கு போதுமான அகல்கற்றை இணைப்பு ஆகியவை ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் மிகச்சிறந்த மென்பொருட்களாக இவை விளங்குகின்றன அவ்வாறான கட்டற்ற பல்லூடக சேவையாளர் மென்பொருட்களுள் முதன்மையானவை பின்வருமாறு
1. Kodi எனும் கட்டற்றபல்லூடக சேவையாளரானது அனைத்து இயக்கமுறைமைகளையும் வன்பொருட்களையும் ஆதரிக்கின்றது இது அனைத்து பல்லூடக கோப்புகளையும் ஒரே இடத்தில் சேமித்துவைத்துகொண்டு 10-foot UI எனும் தொலைகாட்சி பெட்டிக்குமட்டுமான வரைகலை இடைமுகப்பினை கையாளும் திறன்கொண்டது இதன் வாயிலாக நேரடியாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணமுடியும் CDs, DVDs , Blu-ray disks போன்றவைகளின் வாயிலாக கானொளிகாட்சிகளையும் இசைகளையும் பார்த்தும் கேட்டும் மகிழலாம் மேலும் விவரங்களுக்கு https://kodi.tv/ எனும் இணைய முகவரிக்கு செல்க

2. Plex என்பது மற்றொரு மிகத்திறனுடைய அனைத்து வசதிவாய்ப்புகளையும் கொண்டதொரு கட்டற்றபல்லூடக சேவையாளராகும் இது விண்டோ மேக்ஸ் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளையும் ஆதரிக்கின்றது பல்வேறு சாதனங்களுக்கும் ஏற்றவகையில் செயல்படும் திறன்மிக்கது HD videoமுதல் 10-bit H.264 வரை ஆதரிக்கின்றது SSL ஐ ஆதரிப்பதன் வாயிலாக பயனாளரின் இனியநண்பனாக இணையவரைகலை இடைமுகப்பை கொண்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு https://www.plex.tv எனும் இணைய முகவரிக்கு செல்க

3. Emby என்பது அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன்மிக்க கட்டற்றபல்லூடக சேவையாளராகும் இது Amazon Fire TV, Apple TV, Chromecast, Raspberry Pi ஆகியவற்றில் கிடைக்கின்றது இது வரைகலை இடைமுகப்பு கொண்ட நேரடியாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது பேரளவு தரவுகலையும் துனைத்தலைப்புகளையும் திருத்தம் செய்வதை ஆதரிக்கின்றது இது DLNA என்பதை தேடிபிடித்து எளிதாக பல்லூடககோப்பினை அனுக அனுமதிக்கின்றது .மேலும் விவரங்களுக்குhttps://emby.media எனும் இணைய முகவரிக்கு செல்க

4. OpenFLIXR என்பது கட்டற்ற மெய்நிகரான நெகிழ்வுதன்மையுடன்கூடிய தானியங்கியாக பதிவிறக்கம் செய்து பல்லூடகத்தை செயல்படச்செய்திடும் அனைத்திற்கும் ஒரேதீர்வான பல்லூடக சேவையாளராகும் இது VirtualBox, VMware Fusion/Workstation/Player/ESXi போன்றவைகளின் துனையுடன் அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன்மிக்கது எளிய இணையஇடைமுகம் கொண்டது ஒரேமெய்நிகர் சாதனத்தில் அனைத்தையும் செயல்படுத்திடும் திறன்கொண்டது தானியங்கியான பல்லூடக சேவையாளராக விளங்குகின்றது .மேலும் விவரங்களுக்குhttp://www.openflixr.com/ எனும் இணைய முகவரிக்கு செல்க

வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பகம் (Network attached storage (NAS)) ஒரு அறிமுகம்

வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பகமானது கோப்பு பயன்பாடு , பகிர்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுமொரு அர்ப்பணிப்பு பயன்பாட்டு சேவையகமாக கருதப்படுகிறது, . முந்தைய கோப்பு சேவையின் நேரடி இணைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் ஒப்பிடுகையில், இந்த NAS ஆனது தரவு சேமிப்பு, அணுகல் மேலாண்மை ஆகியபணிகளில் மிகமேம்பட்ட செயல்பாடுகளை வழங்குகின்றது. இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டஇயக்ககத்துடன் இணைந்த தருக்கநிலையில் அல்லது RAIDஇன் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும் இது கோப்புகளை பகிர்ந்து கொள்ள network file sharing (NFS) ,server message block (SMB) அல்லதுApple file protocol (AFP)என்பனபோன்ற ஒழுங்கமைவுமுறைகளை பின்பற்றுகின்றது இந்த NAS ஆனது நிமிடத்திற்கு மில்லியன் கணக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன்கொண்டது பெரிய நிறுவனங்களின் நம்பிக்கைகுகந்த அமைவாகஇது விளங்குகின்றது இதுஎண்ணிக்கைகளற்ற வகையில் குறைந்த செலவில் தரவுகளை சேமித்து வைத்து மீளப்பெறுவதற்கு பேருவதவியாய் இருக்கின்றது

இது SCP ,FTP.என்பனபோன்ற ஒழுங்கமைவைபின்பற்றி TCP/IP ஆகிய நம்பிக்கைக்குஉரிய தகவல்தொடர்புகளை வழங்குகின்றதுஅதுமட்டுமல்லாது HTTP/HTTPSஐயும் இதுஆதரிக்கின்றது
இணைப்பிற்காக Ethernet, optical fibre ஆகியவை மட்டுமல்லாது802.11. போன்ற கம்பியில்லா இணைப்பையும் தொடர்புகொள்வதற்காக பயன்டுத்தி கொள்கின்றது
தரவுகளை சேமிப்பதற்கான இயக்ககமாக இயல்புநிலையில் SCSI ஐ இதுபயன்படுத்தி கொள்கின்றது மேலும் இது ATA disks, optical disc ,magnetic media போன்றவைகளைகூட தரவுகளை சேமிப்பதற்கான இயக்ககமாக பயன்படுத்தி கொள்கின்றது
மிகமுக்கியாக கணினியை பயன்படுத்தி FTP/SMB/software server ஆகியவற்றின் வாயிலாக தன்னுடைய சேவையை வழங்குகின்றது
MIPS அல்லதுReal Time Operating System(RTOS ) பயன்படுத்திடும் ARM அடிப்படையிலான செயலியின் கட்டமைவுகளைஅல்லது உட்பொதிந்த இயக்கமுறைமையை இதனுடைய NAS சேவையாளர் செயல்படுவதற்கு பயன்படுத்தி கொள்கின்றது
இது TCP/IP ஐயும், கோப்பமைவையும் செயல்படுத்திடுவதற்கு ஒற்றையான ASIC சிப்பினை பயன்படுத்தி கொள்கின்றது
மிகமுக்கியமாக 1TB அல்லது 2TB சேமிப்பு கொள்ளவு தேவைப்படும் சிறியநிறுவனங்கள் செலவேயில்லாமல் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்ஆயினும்இதனைகொண்டு , 1000TB மேல் சேமிப்பகத்தையும் கையாளமுடியும்
இது RAID 0 , RAID 1 முதல் RAID 5வரையிலுள்ள தொழில்நுட்பங்களை ஆதரிப்பதால் குறிப்பிட்ட சேமிப்பகம் செயலிழந்து போனாலும் தரவுகளை இழக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
பயனாளர்கள் தாம்விரும்பும் கூடுதலான பயன்பாடுகளைகூட பதிவிறக்கம்செய்து இதனோடு இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது செயல்படுவதற்கு மிககுறைந்த அளவு மின் சாரமே போதுமானதாகும் இதனை ஒரு கையடக்க சாதனமாககூட பயன்படுத்தி கொள்ளமுடியம் இது ஒரு கட்டற்றசேவையாளராகும் இருந்தபோதிலும் கட்டணமில்லாமலும் கட்டணத்துடனும் நாம் பயன்படுத்தி கொள்ள கிடைக்கின்றது பயனாளர்கள் தொலைதூரத்திலிருந்து கூட இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு இது மேககணினி அமைவைபயன்படுத்தி கொள்கின்றது பயனாளர்களுக்கு கூடுதல் வசதி வாய்ப்புகளை பெறுவதற்காகஇதில் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் பயன்படுத்தி கொள்ளஅனுமதிக்கின்றது

Previous Older Entries