பெரிய அளவுள்ள கோப்புகளை கணினி அல்லது செல்லிடத்து பேசியில் எவ்வாறு அனுப்புவது

. நம்முடைய கணினியிலுள்ள பெரிய அளவு கோப்புகளை மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிடும்போது உடன் சுவற்றில் அடித்த பந்து போன்று அவைகளை தம்மால் கொண்டு செல்ல முடியவில்லை என மின்னஞ்சல் வசதியானது நம்மிடமே திருப்பிவிடும். ஆனாலும்அவ்வாறான பெரிய அளவு கோப்புகளை எவ்வாறு அனுப்பி வைப்பது என நாம் தடுமாறி நிற்போம் கவலையை விடுக DropSendஎனும் வசதி நமக்கு ஆபத்து உதவியாக தயாராக இருக்கின்றது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக நம்முடைய கணினியில் புதியதாக பயன்பாட்டு மென்பொருள் எதையும் நிறுவுகை செய்திடத்தேவையில்லை மேலும் இந்த வசதிக்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை இது எளிய நடைமுறையில் மிகபாதுகாப்பாக அதாவது 256-bit AES எனும் பாதுகாப்புடன் JPGs, PFs, MP3s போன்ற எந்தவடிவமைப்பு கோப்பாக இருந்தாலும் 8 ஜிபி வரையுள்ள கோப்புகளை மிகவிரைவாக அனுப்பி வைக்கஉதவுகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதற்கான படிவத்தில் நம்முடைய மின்னஞ்சல் முகவரி, பெறுபவரின் முகவரி ,மின்னஞ்சல் அனுப்பும் பொருள் , அனுப்பும் செய்தி போன்ற விவரங்களை மட்டும் உள்ளீடு செய்து கொண்டு இந்த திரையில் உள்ள Select a File எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நாம் அனுப்பவிரும்பும் பெரிய அளவு கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் பச்சைவண்ண Send Your File எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பிவைக்க விரும்பும் பெரிய அளவு கோப்பு பெறுபவருக்கு சென்று சேர்ந்துவிடும் ஏதேனும் இது தொடர்பான சந்தேகம் எழுந்தால் FAQஎனும் கேள்விபதில் பகுதியிலும் உதவி தேவையெனில் Helpஎனும் பக்கத்திற்கும் சென்று தீர்வுசெய்து கொள்க மேலும் விவரங்களுக்கும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளவும் http://www.dropsend.com/எனும் இணைய பக்கத்திற்கு செல்க
8

வேலை தேடுபவர்களுக்கு உதவிடும் செல்லிடத்து பேசி பயன்பாடுகள்

தற்போது நாம் வாழும் இன்றைய சமுதாய சூழலில் இளஞர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் வேலே தேடுவதுதான் தலையாய பிரச்சினையாக உள்ளது மனித நாகரிகம் அடையந்தொடங்கியவுடன் அனைருக்கும் கல்வி கற்கவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு கல்வியை கற்று முடித்தவுடன் முதலில் தான் வாழுவதற்காக வேலை தேடுவதே மிகமுக்கிய பெரிய பிரச்சினையாக உள்ளது இந்நிலையில் வேலேதேடும் ஒருவர் தமக்கு பொருத்தமான பணி எதுவென தேடிபெறவிழையும் வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காகவே தற்போது அனைவருடைய கைகளிலும் புழங்கும் செல்லிடத்து பேசியில் பல பயன்பாடுகள் தயாராக உள்ளன அவையாவன
1.பெரும்பாலான நிறுவனங்கள் தம்மிடம் வரும் வேலைவேண்டி வரும் விண்ணப்பங்களில் தேவையற்ற அனாவசியமான தகவல்கள் அதிகஅளவில் இருப்பதை விரும்புவதில்லை சுருக்கமாக அதேநேரத்தில்அனைத்து தகவல்களும் இருக்கவேண்டும் என விரும்பவார்கள் இவ்வாறான சுருக்கமான அனைத்து தகவலையும் தருவதற்காக Pocket Resumeஎன்ற செல்லிடத்து பேசி பயன்பாடு உதவுகின்றது
2.விண்ணப்பிபவரகள் இருமொழியறிந்த திறமையுடைவர்கள் யார்யார் என நிறுவனங்களுக்கு பட்டியலாக தயார்செய்வதற்கு DuoLingo எனும் செல்லிடத்து பேசி பயன்பாடு பெரிதும் உதவுகின்றது
3. இணையமில்லாத பணி எதுவுமேஇல்லை என்ற தற்போதைய நிலையில் வேலை தேடுபவர்களுக்கு DuoLingoஎனும் செல்லிடத்து பேசி பயன்பாடுபேருதவியாக உள்ளது
4 வேலை தேடுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு செல்லும்போது அங்கு எவ்வாறான கேள்வி கேட்பார்கள் நாம் அதற்கு எவ்வாறு பதில் கூறுவது என தயங்குவார்கள் அல்லது தடுமாறுவார்கள் அவ்வாறானவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு உதவுவதுதான் Interview Proஎனும் செல்லிடத்து பேசி பயன்பாடாகும்
5.நாம் பணிபுரிய விருக்கும் இடத்தின் சூழ்நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக Glassdoorஎனும் செல்லிடத்து பேசி பயன்பாடு உதவுகின்றது
6நேர்முகததேர்வு முடிந்தபின்னர் நமக்கு பணிஉத்திரவு கிடைப்பதற்கான தொடர்நடவடிக்கை எடுத்திடFelt எனும் செல்லிடத்து பேசி பயன்பாடு உதவுகின்றது
6

கூகுள் எனும் தேடுபொறியில் நாம் பயன்படுத்தாத பல்வேறு வசதிகளை பயன்படுத்திகொள்க

.நாம் விரும்பும் எந்தவொன்றையும் தேடிப்பிடித்திட கூகுளானது மிகப்பிரபலமாக உள்ளது
எனும் செய்தி அனைவரும் அறிந்ததே.தொடர்ந்து இதுமிகவிரைவாகவும் எளிதாகவும் தேடிப்பிடிப்பதற்கான நண்பனாக விளங்குகின்றது ஆயினும் நாமனைவரும் இந்த தேடுபொறியின் இரண்டுமூன்று பக்கங்களின் விவரங்களை மட்டுமே நாம் அறிந்து தெரிந்துகொள்கின்றோம் அவைகளுக்குமேல் இதில் உள்ள ஏராளமான சிறப்பு தொழில் நுனுக்கங்கள் எதையும் நாம் தெரிந்து பயன்படுத்தி கொள்வதே இல்லை .
உதாரணமாக

1.நாம் bread recipes என்பதை நாம் அறி்ந்து கொள்ள விரும்புகின்றோம் ஆனால் நமக்கு yeast என்பதை பற்றிய விவரம் தேவையில்லை எனும்போது bread recipes – yeast என்றவாறு தேடுபொறியில் உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

2. ஒருசொல்லிற்கு தொடர்புடைய சொற்களையும் அதே அர்த்தமுடைய சொற்களையும் தேடிபிடித்திடுவதற்காக விசைப்பலகையில் இடதுபுறம் இரண்டாவதுவரிசையின் முதல் விசைக்குறியீட்டினை நாம் தேடிடும் சொற்களின் பின்புறம் ~ என்றவாறு தேடுபொறியில் உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

3. ஒரு சொல்லிற்கான வரையறைஅல்லது விளக்கத்தை அறிந்துகொள்வதற்காக குறிப்பிட்ட சொல்லை தேடுபொறியில் உள்ளீடு செய்தபின் define என தட்டச்சு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

4. குறிப்பிட்ட சொல் அல்லது சொல்தொடர் மட்டுமே நமக்கு தெரியும் மிகுதியை அறிந்து கொள்ள தேடுபொறியில் மேற்கோள்குறியீட்டிற்குள் நமக்கு தெரிந்தசொல் அல்லது சொல்தொடரை மட்டும் உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

5. செல்லிடத்து பேசி ஒன்று வாங்க விரும்புகின்றோம் ஆனால் குறப்பிட்ட விலைவிகிதத்தில் மட்டும் என விரும்பிடும்போது cell Phone 100$..200$.என்றவாறு தேடுபொறியில் உள்ளீடு செய்து உள்ளீட்டுவிசையை அழுத்துக

6. GIFஎனும் அசைவூட்டு படங்களை தேடிபிடித்திட கூகுளின் Google Images எனும் பகுதிக்கு செல்க அங்கு “Search tools” and “Type” என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் கீழிறங்கு பட்டியலில் Animated என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

7. நாம் தேடுபொறியில்தேடிக்கொண்டிருக்கும்போது மற்ற முக்கியபணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவேண்டும் என்பதையை மறந்துவிடுவோம் அவ்வாறான நிலையில் set timer for என தட்டச்சு செய்தபின்தோன்றிடும் திரையில் நமக்கு நினைவூட்டவேண்டிய மணி நிமிடம் நொடி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

8. சாதாரண கணிப்பான் போன்று நாம் கணக்கிடவேண்டியதை =என்ற குறிக்கு பின் உள்ளீடு செய்தால் போதும் உடன் கணக்கிட்ட விடை கிடைக்கும்

9. நாம் வெளிநாடு செல்லவிரும்பும்போது நம்முடைய நாட்டு பணத்திற்கு சமமாக குறிப்பிட்ட நாட்டின் பணத்தின் மதிப்பு எவ்வளவு அதனுடைய பெயர் என்னவென இந்த தேடுபொறியின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்

10. குறிப்பிட்ட சொல்லின் அல்லது சொற்தொடரின் முழுவடிவும் நமக்குத்தெரியவில்லை ஆனால் அவற்றுள் ஒருசில எழுத்துகள்மட்டும் தெரியும் என்ற நிலையில் தெரிந்ததை மட்டும்உள்ளீடு செய்த பின்னர் (*)என்ற குறியீட்டை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

11. குறிப்பிட்ட பெயரில் குறிப்பிட்ட கோப்பமைவில் தேடிபிடித்திட தேடுபொறியில் அதனுடைய பெயரை தட்டச்சு செய்தபின்னர் .ppt , .doc ,, pdf என்றவாறு கோப்பின் அமைவை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

கடினமான நடையிலுள்ள ஆங்கில கட்டுரைகளை எளிதாக புரிந்துகொள்ள உதவும் இணையதளம்

ஆங்கிலமொழியை அறிந்து கொள்ளவேண்டும் என விரும்பும் புதியவர்கள், ஆங்கிலமொழியை கற்றறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்,ஆங்கில மொழியில் உள்ள மிகக்கடினமான பகுதியை மட்டும் படித்துவுடன் எளிதாகஅறிந்து கொள்ள விரும்புவோர்கள், ஆங்கில மொழியை தம்முடைய மாணவர்களுக்கு எளிதாக கற்றுகொடுக்கு விரும்பும் ஆசிரியர்கள் என அனைத்துதரப்பினர்களுக்கும் https://rewordify.com/ எனும் தளம் மிகபயனுள்ளதாக விளங்குகின்றது முதன்முதல் இந்த தளத்தில் உள்நுழைபவர்கள் https://rewordify.com/index.php?demo=Y எனும் இணைய முகவரியில் செயல்படும் மாதிரி செயல்முறைகாட்சியை ஐந்துநிமிடத்திற்கு கண்டபின் பயன்படுத்தி கொள்வது குறித்து முடிவுசெய்துகொள்க அதன்பின்னர் இந்த இணையதள பக்கத்தை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பதற்காக https://rewordify.com/helpfirstuser.php?n=y எனும் இணைய முகவரியில் உள்ள படிப்படியானவழிகாட்டி பெரிதும் உதவுகின்றது மூன்றாவாதாக ஆங்கில மொழியில் உள்ள கட்டுரைகளில் குறிப்பிட்ட பத்திகளை படித்தால் எளிதில் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்பவர்களுக்கு ஆபத்துக்குதவும் நண்பனாக இந்த தளம் விளங்குகின்றது இதற்கென தனியாக அருஞ்சொற்பொருள் பேரகராதி எதையும் பயன்படுத்திகொள்ளாமல் எளிதாக புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் இது உதவுகின்றது நான்காவதாக https://rewordify.com/helpeducen.php எனும் இணைய முகவரியின் உதவியுடன் சிக்கலான கடினமானஆங்கில மொழியறிவை தம்முடைய மாணவர்களுக்கு எளிதாக எவ்வாறு புரியமாறு பாடங்களை நடத்தி மாணவர்களை புரிந்து கொள்ளுமாறும் அறிந்துகொள்ளுமாறும் செய்வது என உதவிக்கு வர இந்த இணையதளபக்கம் தயாராக உள்ளது இதனை பயன்படுத்திகொள்வதற்காக நம்முடைய கணினியில் புதியபயன்பாட்டு மென்பொருள் எதையும் நிறுவுகைசெய்திடதேவையில்லை இணையத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இந்த தளத்தினை பயன்படுத்திகொள்வற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை இந்த இணைய பக்கத்தை கணினியில் மட்டுமே பயன்படுத்திடமுடியும் என்ற நிபந்தனை எதுவுமில்லை நம்மிடம் கைக்கணி அல்லது மடிக்கணினி (டேப்ளெட் அல்லது ஸ்மார்ட் ஃபோன்) ஆகிய எதுவிருந்தாலும் அதன்மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் இந்த தளத்தினை பயன்படுத்தி கொள்வதற்காக நம்முடைய தனிப்பட்ட தகவல் எதுவும் அதிகம் தரத்தேவையில்லை வழக்கமான பயனாளர் பெயர் ,கடவுச்சொற்கள் போன்ற சாதாரண தகவலுடன் நமக்கென்று தனியாக கணக்கு ஒன்றினை மட்டும் ஆரம்பித்தால் போதுமானதாகும் மாணவர்களுக்கு என தனி கணக்கினை ஆரம்பித்தபின் அவர்கள்படிப்பதையும் கற்பதையும் ஆசிரியர்கள் எளிதாக கண்காணித்திடமுடியும் என்ற அறிமுகத்துடன் வாருங்கள் இன்றே இந்த இணயதளத்தை பயன்படுத்தி எளிதாக கடினமான ஆங்கிலமொழியின் கட்டுரைகளை புரிந்து அறிந்துகொள்ளுங்கள்
5

PDF ஆவணங்களை கையாளும்Adobe Acrobat எனும் பயன்பாட்டிற்கு மாற்றாக கட்டற்ற பயன்பாடுகள் உள்ளனவா?

கணினியில் தற்போது நம் அனைவராலும் பேரளவு பயன்படுத்தபடும் PDF எனும் வடிவமைப்பிலுள்ள கையடக்க ஆவணத்தை உருவாக்குதல் திருத்தம் செய்தல் படித்தல் ஆகிய பணிகளுக்காக Adobe Acrobat எனும் கட்டணத்துடன் கூடிய பயன்பாட்டினையே நாம் அனைவரும் பயன் படுத்தி வருகின்றோம் இந்நிலையில் இந்த PDF எனும் வடிவமைப்பிலுள்ள கையடக்க ஆவணங்களை படிப்பதற்காக மட்டும் Evince, SumatraPDF ஆகிய கட்டற்ற பயன்பாடுகள் உள்ளன பிந்தையது விண்டோ இயக்கமுறைமையில் செயல்படக்கூடியதாகும். மேலும் Firefox, Chromeஆகிய இணையஉலாவிகள்கூட இந்த PDFஎனும் கையடக்க ஆவணங்களை படிக்க உதவுகின்றன தொடர்ந்து லிபர் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலிருந்து இவைகளின் ஆவணங்களை நேரடியாக PDFஎனும் கையடக்க ஆவணமாக உருவாக்கிடமுடியும் அதுமட்டுமல்லாத Scribus,Inkscape, GIMP,CUPS ஆகிய கட்டற்ற பயன்பாடுகள் கூட எந்தவொரு ஆவணத்தையும் PDF எனும் கையடக்க ஆவணமாக உருவாக்கிட உதவுகின்றன இவ்வாறு உருவாக்கப்பட்ட PDF எனும் கையடக்க ஆவணத்தில் திருத்தம் செய்வதற்காக LibreOffice Drawஎனும் கட்டற்ற பயன்பாடு மிகச்சிறப்பாக உதவுகின்றது அதேபோன்று Inkscape,PDFedit ஆகிய GPLv2 எனும் அனுமதியின்படி கிடைக்கும் கட்டற்ற பபயன்பாடுகளும் PDF எனும் கையடக்க ஆவணத்தில் திருத்தம் செய்வதற்காக பயன்படுகின்றன அதனால் PDF எனும் கையடக்க ஆவணங்களை உருவாக்குதல் திருத்தம் செய்தல் படித்தல் என்றவாறு பணிகளுடன் கையாளுவதற்காக மேலே கூறிய கட்டற்ற பயன்பாடுகளை Adobe Acrobat இற்கு மாற்றாக பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது

AutoCAD எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு மாற்றான கட்டற்ற மென்பொருட்கள்

பொறியியல் துறை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் நம்முடைய வாழ்வில் தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற building , car, bridge, Machinery spaceshipபோன்றவற்றை வடிவமைத்திடுவதற்காக AutoCAD எனும் பயன்பாடு மிகஅத்தியாவசிமானதாகவும் மிகபிரபலமானதாகவும் விளங்குகின்றது ஆனால் இதுஒரு தனியுடைமை மென்பொருளாகும் அதனால் இதனை பயன்படுத்துபவர் கட்டணத்துடன் பெறவேண்டும் என்பதால் பொறியியல் மாணவர்கள் அனைவரும் பெரிதும் சிரமத்துள்ளாகின்றனர் இவர்களின் வருத்தத்தை போக்குவதற்காக ஏதேனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள் உள்ளனவா என தேடிடும்போது பின்வருபவை அவ்வாறானவர்களுக்கு உதவும் நண்பர்களாக உள்ளன
3.1.BRL-CADஎனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ, லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகவும் 400 இக்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கருவிகளைகொண்டதாகவும் LGPL எனும் அனுமதியின் அடிப்படையில் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கிடைக்கின்றது
3.2.அதற்கடுத்ததாக FreeCAD எனும் கட்டற்ற பயன்பாடானது sketcher இலிருந்து renderer வரையான இடைமுகத்துடனும் நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் LGPL எனும் அனுமதியின் அடிப்படையில் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கிடைக்கின்றது
3.3.மூன்றாவதாக LibreCADisஎனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ, லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகவும் LGPL எனும் அனுமதியின் அடிப்படையில் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கிடைக்கின்றது
அதுமட்டுமல்லாது இவைகளை AutoCADஇனுடைய DXF எனும் வடிவமைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் சேமித்துகொள்ளவும் AutoCAD பயனாளர்கள்கூட எளிதாக இவைகளுடன் இடைமுகம் செய்துகொள்ளவும் முடியும் மேலும் OpenSCAD, SolveSpaceஆகிய கட்டற்ற மென்பொருட்கள் கூட இந்த AutoCAD எனும் பயன்பாட்டிற்கு மாற்றாக விளங்குகின்றன

வரைகலையில் Blender எனும் கட்டற்ற பயன்பாட்டின் மூலம் இருரிமான படங்களை முப்பரிமாணமாக உருமாற்றிகொள்க

நடப்பில் நம்முடைய வாழ்வில் காணும் அனைத்து உருவங்களையும் அச்சு அசலாக அபபடியே கொண்டுவருவதையே முப்பரிமாண(3D) வரைபடகலையாகும் இந்த முப்பரிமாண(3D) வரைகலையானது நகைகளை வடிவமைப்பு செய்பவர்கள், உருவஅலங்காரம் செய்பவர்கள் போன்றவர்களுக்கு பேருதவியாக இருந்துவருகின்றது பொதுவாக அச்சுப்பொறி வழியே இருபரிமாண வரைபடங்கள் மட்டுமே கொண்டு வரமுடியும் என்றிருந்தது பின்னர் முப்பரிமாண வரைபடங்களையும் அச்சில் கொண்டுவரமுடியும் என்று மாறியது நாம் பயன்படுத்திவரும் கணினியில் இந்த முப்பரிமாண(3D) வரைபடகலையை செயலில் கொண்டுவருவதில் தனியுடமை மென்பொருட்கள் முன்னனியில் இருந்துவருகின்றன அதனோடு தற்போது கட்டற்ற மென்பொருளான Blenderஎனும் மென்பொருளின் வாயிலாக கூட இந்த முப்பரிமாண(3D) வரைபடகலையை எளிதாக செயலில் கொண்டுவரமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க ஆயினும் நடைமுறையில் இந்த Blenderஎனும் கட்டற்றமென்பொருளின் மூலம் இருபரிமாண வரைபடத்தை மட்டுமே கையாளமுடியும் என்றுள்ள நிலையில் இதனுடைய திரையில் Unit எனும் பலகத்தை தோன்றசெய்து அதில் Scene Settings என்பதன்கீழ் Millimeters என்றும் Length என்பதில் metric என்றும் தெரிசெய்துகொண்டபின்னர் திரையின் மேலே கட்டளபட்டையில் File=>Save Startup File=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அல்லது விசைப்பலகையில் Shift+Uஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்தி இந்த அமைவைசேமித்துகொள்க அதன்பின்னர் நாம் ஒரு கணசதுரத்தை முப்பரிமானமாக அச்சிடவேண்டும் எனக்கொள்வோம் இதனை இந்த Blender எனும் கட்டற்ற பயன்பாட்டின் திரையில் முப்பரிமாண காட்சியாக கொண்டுவருக பிறகு விசைப்பலகையில் N எனும் விசையை அழுத்தி பண்பியல்பு பகுதிக்கு செல்க அங்கு Transformஎனும் பலகத்தில்Dimension என்பதன் கீழுள்ளXஅச்சிற்கு 223mmஎன்றும் Yஅச்சிற்கு 223mm என்றும் Zஅச்சிற்கு2223mm என்றும் மதிப்புகளை உள்ளீடு செய்துகொள்க. இதனை சரிசெய்வதற்காக முதலில் Object Properties எனும் பகுதிக்கு செல்க கீழ்பகுதியில் Display எனும் பலகத்திலுள்ள Maximum Draw Type எனும் பெயரிலுள்ள கீழிறங்கு பட்டியலின் Textured என இயல்புநிலையில் இருப்பதை Wire என மாற்றியமைத்திடுக பின்னர் Outliner என்பதில் கனசதுரபெயரினை இருமுறை சொடுக்குதல்செய்து அதனுடைய பெயரை reference_cube.என மறுபெயரிடுக eye, arrow, camera ஆகிய மூன்று உருவபொத்தான்களில் முதலிலிருப்பது தானாகவே முப்பரிமாண தோற்றத்தை காணும் மற்ற இரண்டையும் தேவையெனில் தெரிவுசெய்துகொள்க மிகமுக்கியமாக camera எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில் Hஎனும் விசையை அழுத்தி இந்த முப்பரிமாண காட்சியிலிருந்து மறையச்செய்திடுக இதன்பின்னர் இந்த கணசதுரத்தை முப்பரிமாண அச்சுபொறியில் இந்த Blender எனும் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக அச்சிட்டு பெறலாம் இவ்வாறே மற்ற இருபரிமாண வரைபடங்களை முப்பரிமானமாக இந்த Blender எனும் கட்டற்ற பயன்பாட்டின் மூலம் உருமாற்றம் செய்திடமுடியும்

Previous Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.

Join 513 other followers