ஆண்ட்ராய்டு செயல்படும் சாதனத்தில் எவ்வாறு நகலெடுத்து ஒட்டுவது

கைபேசி போன்ற ஆண்ட்ராய்டு செயல்படும் சாதனத்தில் கோப்பகளை நகலெடுத்து ஒட்டும்பணியானது கோப்பின் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும் உதாரணமாக தொகுப்பாக உ்ள்ள உருவப்படங்களில் ஒருஉருவப்படத்தை நகலெடுத்து ஒட்டுவதாக கொள்வோம் அதற்காக phone எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் copy எனும் வாய்ப்பினை தெரிவசெய்துசொடுக்குக பின்னர் ஒட்டுமிடம் உரையாக இருந்தால் அதனை பிடித்துகொண்டு அதில்paste அல்லது clipboard ஆகிய வாய்ப்புகள் தோன்றிடும் வரை அழுத்துக
உரையை நகலெடுப்பதாக இருந்தால் நகலெடுத்திடவிரும்பும் உரையை தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை copy எனும் வாய்ப்புகள் தோன்றிடும் வரை அழுத்துக
இணைய பக்கம் எனில்அவ்வாறே இணையபக்கத்தின் உரையை copy எனும் வாய்ப்புகள் தோன்றிடும் வரை அழுத்துக
மேலும் கோப்பகள்,தனிப்பட்ட ஆவனங்கள், உருவப்படங்கள் ஆகியவற்றை தெரிவுசெய்து copy எனும் வாய்ப்புகள் தோன்றிடும் வரை அழுத்துக
இவ்வாறு நகலெடுப்பாதற்காக தெரிவுசெய்தவுடன் நாம் வேறு கோப்புகள் ,வெளிப்புற சேமிக்குமிடம் ஆகியவற்றில்எங்கு இதனை கொண்டுசென்று ஒட்டுதல் செய்யவிருக்கின்றோம் என தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் move எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்நாம் தெரிவசெய்தவாறு நகலெடுத்து ஒட்டுதல் செய்யப்பட்டுவிடும்
7

கூகுளின் இணையஉலாவியின் விரிவாக்கத்திற்கான அடிப்படை பாதுகாப்பு வழிகள்

எப்போதும் HTTPS எனத்துவங்கிடும் இணைய முகவரியையே புதியதாக துவங்கிடும் நம்முடைய விரிவாக்க இணைய பக்கத்திற்கு அமைத்திடுக
இணையம் எனும் கடல்போன்ற தரவுகளில் நம்பிக்கைகுறிய தரவுகளை கையாளுவதற்காக Web of Trust என்பதைமட்டும் நம்முடைய தனிப்பட்ட விரிவாக்கத்திற்காக பயன்படுத்தி கொள்க
கானொளி படங்களை தெரிவுசெய்து கொண்டுவருவதற்காக . Adblock என்பதைமட்டும் நம்முடைய தனிப்பட்ட விரிவாக்கத்திற்காக பயன்படுத்தி கொள்க
நாம் தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டுவரும் இணையபக்கங்களில் ஏராளமான விளம்பரங்களும் சேர்ந்து வந்துசேராமல் இருப்பதற்காக Ghostery and Disconnect எனும் விரிவாக்கத்தை பயன்படுத்தி கொள்க
நாம் செல்லுமிடத்தில் எல்லாம் இணைய உலாவரும்போது நம்முடைய வொய்பி இணைப்பை கொண்டு நம்முடைய தரவுகளை அபகரித்து கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக Tunnelbear VPN (Virtual Private Network) என்பதைமட்டும் நம்முடைய தனிப்பட்ட விரிவாக்கத்திற்காக பயன்படுத்தி கொள்க
Bitly , TinyURL, என்றவாறு தற்போதைய அவசர யுகத்தில் பயன்படுத்தி இணைய முகவரியை உள்ளீடு செய்து இணைய உலாவரும்போது நம்முடைய தரவுகளை அபகரித்து கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக Unshorten.link என்பதைமட்டும் நம்முடைய தனிப்பட்ட விரிவாக்கத்திற்காக பயன்படுத்தி கொள்க
6

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஒன்நோட் எனும் பயன்பாட்டின் கணக்குகள் தீர்வுசெய்திடும் வசதியை அறிந்து கொள்க

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இந்த ஒன்நோட் எனும் பயன்பாட்டில் ஏரளமான பல்வேறு வசதிகளை பொதிந்து வைத்துள்ளது அவற்றுள் மிகமுக்கியாமாக இயல் கணித கணக்குகளை எளிதாக இதன்மூலம் படிப்படியாக எவ்வாறு தீர்வுசெய்வது என மிக அழகாக நமக்கு வழிகாட்டி நமக்கு அதற்கான தீர்வை வழங்குகின்றது அதற்காக முதலில் இந்த ஒன்நோட் எனும் பயன்பாட்டினை செயல்படச்செய்து திரையில் a new note என்பதை தோன்றிடச்செய்க பின்னர் இதில்Drawஎனும் தாவிப்பொத்தானின் திரையையும்அதில் Pen என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் அந்த Pen எனும் கருவியை கொண்டு தொடுதிரைஎனில் கைகளால் அல்லது சுட்டியின் உதவியால் தீர்வுசெய்திட விரும்பும் தேவையான கணித சமன்பாட்டினை எழுதிடுக உடன் நம்முடைய கையெழுத்தினை ஒன்நோட்டானது உரையாக மாற்றியமைத்துகொள்ளும் அதனைதொடர்ந்து திரையின் மேலே கருவிபட்டையில் எனும் Lasso எனும்உருவபொத்தானை தெரிவுசெய்துகொண்டு நாம் எழுதி உரையாக மாறிய கணித சமன்பாட்டினை தெரிவுசெய்து கொள்க பின்னர் solve. என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படிப்படியாக இந்த இயல்கணித கணக்கினை தீர்வுசெய்வதை காணலாம்
5

விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் கணக்கிடுவதற்கான கட்டற்ற பயன்பாடுகள்

கணக்கிடுதலும் அறிவியலடிப்படையில் கணக்கிடுதலும் பொறியியலின் அடிப்படையான செயலாகும் தற்போது அவ்வாறான கணக்கீடுகளுக்கான வியாபார பயன்பாடுகள் ஏராளமாக கட்டணத்துடன் நாம் பயன்படுத்துவதற்காக தயாராக உள்ளன அதற்கு பதிலாக அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகளும் தற்போது பயன்பாட்டில் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன அவைகளைபற்றிய ஒரு அறிமுகம் பின்வருமாறு
1.Scilab இது ஒரு கட்டற்ற கணக்கீடுகளை செய்வதற்கான ஜிபிஎல் எனும்அனுமதியின் அடிப்படையில் செயல்படும் ஒரு பயன்பாடாகும் இது விண்டோ,மேக், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கதாகும் இதுபுள்ளியியல், விண்வெளி ,பருவகால ஆகிய ஆய்வுகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக விளங்குகின்றது இது MATLABஎனும் தனியுரிமை பயன்பாட்டிற்கு மாற்றாக விளங்குகின்றது இது சி சி++ ஜாவா ஆகிய மொழிகளுடன் ஒத்தியங்குகின்றது மிகமுக்கியமாக இது linear algebra, trignamentry, calculaus, differentiation, genetic algorithmsஆகிய கணக்கீடுகளில் அதிக பயனுள்ளதாக அமைகின்றது இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்திடவும் http://scilab.org/download/latest/ எனும் இணையதள பக்கத்திற்கு செல்க

2.GNUOctave:இது linear and matrix algebra, geometry, polynominal manipulation ஆகிய கணக்கீடுகளில் அதிக பயனுள்ளதாக அமைகின்றது வரைபடத்திற்கான Gnuplot, Plplot ஆகியவற்றிற்கு இனையானதாக உள்ளது இதுவும் MATLABஎனும் தனியுரிமை பயன்பாட்டிற்கு மாற்றாக விளங்குகின்றது இது சி++ மொழியில் உருவாக்கப்பட்டு Open Gl அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்திடவும் http://gnu.org/softwre/octave/download.html/ எனும் இணையதள பக்கத்திற்கு செல்க

3.FreeMatஇது ஒரு முப்பரிமானகாட்சிக்கான படங்களை வரையஉதவும் கட்டற்ற பயன்பாடாகும் இது Matpolibஎனும் தனியுரிமை பயன்பாட்டிற்கு மாற்றாக பயன்படுகின்றது இது சி சி++,ஃபோர்ட்ரான் ஆகிய மொழிகளுடன் ஒத்தியங்குகின்றது இதனை பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ளவும் பதிவிறக்கம் செய்திடவும் http://freemat.sourceforge.net/download.html/ எனும் இணையதள பக்கத்திற்கு செல்க

விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் மெய்நிகர் பெட்டியை உருவாக்கமுடியும்

மெய்நிகர் பெட்டி என்பது கணினியில் ஏற்கனவே செயல்படும் இயக்க முறைமையின்-மீது மெய்நிகராக ஒரு கணினியை போன்று செயல்பட்டு அதனடிப்படையில் நாம் விரும்பும் மற்றொரு இயக்கமுறைமையை செயல்படஉதவும் மெய்நிகர்கணினியாகும் இதன்மீது விண்டோ, லினக்ஸ் மேக் சோலாரீஸ் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளையும் நிறுவுகைசெய்து இயக்கமுடியும் இது கணினியின் யூஎஸ்பி சாதனங்கள், அச்சுப்பொறிகள் ,கணினிதிரை போன்ற அனைத்து வன்பொருட்களையும் கட்டுப்படுத்தி செயல்படுத்திடும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற பயன்பாடாகும் இது GPL2. அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதனுடைய சமீபத்திய5.1.6 பதிப்பை https://www.virtualbox.org/wiki/download/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இதனை செயற்படுத்திடுக உடன்விரியும் திரையின் ஆலோசனைகளை பின்பற்றி அடுத்தடுத்த திரையில் next , next என்றவாறு தோன்றிடும் பொத்தானை அழுத்திகொண்டேவந்து பின்னர் இறுதியாக Install எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மெய்நிகர் கணினி பெட்டியானது நிறுவுகை செய்யப்பட்டு நம்முடைய விண்டோ10 இயக்கமுறைமையுள்ள கணினியில் நாம் பயன்படுத்திட தயாராக இருக்கும் பின்னர் இந்த மெய்நிகர் பெட்டியை செயல்படச்செய்து அதில்next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அடுத்து தோன்றிடும் திரையில் தற்காலிக நினைவகத்தின் அளவு ,வன்தட்டு நினை வகத்தின் அளவு , நிறுவுகை செய்யவிருக்கும இயக்கமுறைமை போன்ற விவரங்களை அடுத்தடுத்து தோன்றிடும் திரையில் உள்ளீடு செய்து வழக்கம்போன்று நம்முடைய கணினியில் இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதை போன்று நிறுவுகை செய்து கொள்க மேலும் விவரங்களுக்கு http://virtualbox.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Bluemix எனும் சேவையாளர் ஒரு அறிமுகம்

இது ஒரு திறமூல செந்தரமான மேககணினிஅடிப்படையில்செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கி பராமரித்திடஉதவும் Platform as a Service (PaaS) ஆக கருதப்படும் சேவையாளராகும் இது மேம்படுத்துநர்களுக்கு ஒரு முகப்பு பக்கத்தை வழங்கி அதன்வாயிலாக சேவைகளையும் பயன்பாடுகளைும் உருவாக்கி பராமரித்து கண்கானித்திட உதவுகின்றது இது ஜாவா, பைத்தான்,ரூபீஆன்ரெயில்,பிஹெச்பி, நோட்.ஜோஎஸ் ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்கின்றது இது ஐபிஎம் நிறுவனத்தின் மென்பொருள்தளத்தின்மீது Infrastructure as a Service(IaaS) என்றவாறு கட்டமைக்கப்-பட்டுள்ளது. இது Cloud Foundry ஐ திறமூல PaaS ஆக பயன்படுத்தி கொள்கின்றது அதனால் குறிமுறைவரிகளை Cloud Foundry வாயிலாக மிகப்பாதுகாப்பாக செயல்படச்செய்கின்றது இது பல்வேறுதளங்களையும் பல்வேறு கணினி-மொழிகளையும ஆதரிக்கின்றது இதில் குறைந்த பதிவு செயல்களைகொண்டே இதனைபயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை முதலில் 30 நாட்கள் மாதிரிசெயலாக பயன்படுத்தி கொள்ளலாம் அதன்பின்னர் ஒவ்வொரு சேவைக்கும் குறைந்த கட்டணைத்தையே கோருகின்றது இது செல்லிடத்து பேசிகளியே செயல்படும் திறன்மிக்கது மிகவிரைவாக கட்டமைவுசெய்வதையும் இயங்குவதையும் உறுதிபடுத்திடுகின்றது
இதனை பயன்படுத்தி கொள்ள https://console.ng.bluemix.net/registration/ எனும் தளத்திற்கு சென்று உங்களுக்கென தனியாக கணக்கு ஒன்றினை உருவாக்கிகொள்க பின்னர் இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்திடுக அதன்பின்னர் நம்முடைய பகுதியைEnvironment, dev,test,uat, pre-prod prod ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கிகொண்டு I am ready.Good to Go என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்நமக்கு ஒதுக்கப்பட்ட முகப்பு பக்கத்தில் Cloud Foundry 2GB,Virtual Server 0 ஆகிய அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில்Create app எனும் பொத்தானை சொடுக்குக . அதனை தொடர்ந்து நாம் இணையபக்கத்தினை உருவாக்கவிருப்பதால் ஜாவா என்பதை தெரிவுசெய்து கொண்டுContinue எனும் பொத்தானையும் பின்னர் மற்றவழிமுறைகளையும் பின்பற்றி இறுதியாக Finishஎனும் பொத்தானையும் சொடுக்குதல்செய்து இந்த பணியை முடிவிற்கு கொண்டுவருக . உடன் நாம்விரும்பிய நமக்கான இணைய பயன்பாடு ஒன்று உருவாகி நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராகிவிடும்

நம்முடைய தேவைக்கேற்ப மிகச்சரியான கட்டற்ற கணினி மொழியை தெரிவுசெய்திடுக

போட்டிமிகுந்த உலகில் நாமனைவரும் தற்போது வாழ்ந்து வருகின்றோம் அதிலும் தகவல்தொழில்நுட்பமானது அவ்வப்போது மிகவேகமாக மாறிக்கொண்டே வருவதால் தகவல்தொழில் நுட்ப சேவைநிறுவனங்கள் நிரல்தொடர்களை உருவாக்குதல் இணைய பக்கத்தை மேம்படுத்துதல் பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துதல் ஆகிய பல்வேறுபணிகளுக்கான மிகத்திறனுடைய நிரலாளர்களை தத்தமது நிறுவனங்களில் தக்கவைத்து தங்களுடைய நிறுவனத்தின் செயலை உறுதி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டற்ற அல்லது வியாபார கணினிமொழிகளை பயன்படுத்தி அவ்வப்போது புதியபுதிய பயன்பாடுகளையும் இணைய பக்கங்களையும் தேவையானவாறு உருவாக்குதலையும் மேம்படுத்துதலையும் செய்கின்றன இந்த மென்பொருட்களுக்கு முதுகெலும்பாகவும் அடிப்படையாகவும் அமைவது மூலக்குறிமுறைவரிகளாகும் இந்த மூலக்குறிமுறை-வரிகளை உருவாக்குவதற்காக ஏறத்தாழ 80 சதவிகிதம் நிறுவனங்கள் கட்டற்ற கணினி மொழிகளையே பயன்படுத்தி வருகின்றனர் என ஆய்வு ஒன்று கூறுகின்றது அவ்வாறான கட்டற்ற கணினிமொழிகளை பற்றிய ஒரு பறவை பார்வையாக இந்த கட்டுரையில் காண்போம்
1.1.கோ(Go) எனும் கட்டற்றமொழி இதனை கூகுள்நிறுவனம் வெளியிட்டு பராமரித்து-வருகின்றது இதில் குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும்போதும் பின்னர் செயற்படுத்திடும்போதும் மிகத்திறனுடனும் வெளிப்-படைத்தன்மையுடனும் செயல்படுகின்றது இது சி மொழியை போன்றதன்மையுடன் மிகச்சிறப்பாக நமக்கு உதவுகின்றது . இதனுடைய சமீபத்திய பதிப்பு 1.6.3 ஆகும் இதனை கொண்டு மிகவிரைவாக இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடலாம் அதனை தொடர்ந்து உருவாகும் செயலிகோப்பின் செயல்வேகமானது மிகவிரைவாக அமைகின்றது இதுஒரு மேம்பட்டமொழியாகும் இதனை பயன்படுத்திடும்போது நமக்கு ஏதேனும் பிரச்சினை உருவானால் அதனை உடனுக்குடன் சரிசெய்துஉதவுவதற்கு இணையத்தில் தனியாக குழுவொன்று எப்போதும் தயாராக உள்ளது
இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
package main
import “fmt”
func main(){
fmt.printIn(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.2 ஸ்விப்ட்(Swift) இது ஒரு பொதுநோக்கு IOS, OSX, Linuxபோன்ற பல்வேறு இயக்கமுறைகளிலும் பல்வேறு சூழலிலும் செயல்படும் திறன்கொண்ட கட்டற்ற கணினிமொழியாகும் இது ஆப்ஜெக்ட் சி, சி மொழிபோன்ற திறனுடன் செயல்படும் திறன்கொண்டது இதனுடைய சமீபத்திய பதிப்பு 3.2 ஆகும் இதனை மிகஎளிதாக கற்று இதில் நிரல்தொடர்கட்டளைவரிகளை மிகவிரைவாக எழுதிடமுடியும் ஏனெனில் இதில்மிககுறைந்த கட்டளைவரிகளே இருப்பதால் மிகவிரைவாக உருவாக்கமுடியும் இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்வதும் பிழைஇல்லாமல் உடனுக்குடன் சரிசெய்வதில் மிகஎளியதாக உள்ளது
இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
Import Cocoa
/* My first program in Swift*/
var mystring = “அனைவருக்கும் வணக்கம்!”
printIn(mystring)
1.3 ஹெக்(Hacke) இது ஒரு பொதுபயன்பாட்டு கட்டற்றகணினிமொழியாகும் இதனை முகநூல் நிறுவனத்தால் பிஹெச்பியின் மெய்நிகர் கணினிக்காக உருவாக்கப்பட்டதொரு கணினி மொழியாகும் இது ஹெச்டிஎம்எல்லுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனுடன் இணையமேம்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட கணினிமொழியாகும் இதனுடைய குறிமுறை வரிகளானது பிஹெச்பியின் குறிமுறை வரிகளுடன் கலந்து உருவாக்கப்படுவதாகும் இதுமிகசிக்கலான இணைய பக்கங்களையும் மிகவிரைவாக பாதுகாப்பாக செயல்பட செய்திடும் திறன்மிக்கது இதனுடைய மாதிரி நிரல்தொடர்-குறிமுறைவரிகள் பின்வருமாறு
Hhvm -m server -p 8080
<?hh
Echo “அனைவருக்கும் வணக்கம்!”;
1.4ரஸ்ட்(Rust) இதுவும் ஒரு பொதுபயன்பாட்டு பல்திறன்வாய்ந்த கட்டற்றகணினி மொழியாகும் இது மிகப்பாதுகாப்பாகவும் நிலைத்தன்மையுடனும் உள்ள பயன்பாடுகளை உருவாக்கபயன்படுகின்றது. இது மிகபுத்திசாலித்தனமுள்ள கணினிமொழியாகும் இது விண்டோ, ஆண்ட்ராய்டு போன்ற அனைத்து தளங்களிலும் செயல்படும் தன்மைகொண்ட பயன்பாடுகளை உருவாக்க உதவுகி்ன்றது இதனுடைய சமீபத்திய பதிப்பு 1.10 ஆகும் இதனுடைய மாதிரி நிரல்தொடர்-குறிமுறைவரிகள் பின்வருமாறு
fn main() {
printIn(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.5.ஸ்கேலா(Scala) இதுவும் ஒரு பொதுபயன்பாட்டு கட்டற்றகணினி மொழியாகும் இது ஜாவாவை போன்ற மிகமேம்ப்பட்ட திறனுடைய கணினிமொழியாகும் ஜாவாவைவிட குறைந்த கட்டளைவரிகளையும் நாம் படிப்பதற்கு எளிய நேரடி கட்டளை சொற்களை கொண்டதாகும் இதுமிகவிரைவாக செயல்படக்கூடியதாகும் இதனுடைய சமீபத்திய பதிப்பு 2.11.8 ஆகும்இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
object HelloWorld extends App{
printIn(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.6டார்ட்(Dart) இது ஒரு இனஅடிப்படையிலான பொருள்நோக்குபொதுப்பயன்பாட்டு கட்டற்ற மொழியாகும் இது புதியசமீபத்திய இணையபக்கங்களைஉருவாக்குவதற்கான மிகச்சிறந்த கணினிமொழியாகும் இது mixins, inplicit interfce, lexicalclosure, lexical this, named constructions, string interpolation, online fucntion ஆகியபல்வேறு வசதிகளை கொண்டதாகும் இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு

void main() {
print(“அனைவருக்கும் வணக்கம்!”)
}
1.7.ஹேஸ்கல்(Haskel) இதுஒரு புதிய செந்தர கடுமையற்ற செயலிநிரல் தொடர்கணினி மொழியாகும் இதுஒருமிகவலுவானநிலையான வகையைசேர்ந்ததாகும் இதுசமீபத்திய மேம்படுத்துதல்கள் அனைத்தும் தன்னகத்தே கொண்டுள்ளது இதனுடைய மாதிரி நிரல்தொடர்குறிமுறைவரிகள் பின்வருமாறு
module Main where
main : : IO ( )
main = pustrLn “அனைவருக்கும் வணக்கம்!”

Previous Older Entries